திருப்பாவை ஜீயர் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

1-மார்கழி திங்கள் –
அநபாய விஷ்ணு பத சம்ச்ராயம் பஜே –யதிராஜ சப்தத்தி -எம்பெருமானார் விலஷண சந்தரன் -யதிராஜ சந்தரன் -என்றபடி –
ஞானம் நிறையப் போகும் நல் நாள் -என்றபடி -தேவர்கள் முதல் மாதம் – மார்கழி -மனுஷ்யர்கள் முதல் மாதம் சித்தரை –
——————————–
2- வையத்து வாழ்வீர்காள் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
உனது பாலே போல் சீரிலே பழுத்து ஒழிந்தேன் -பகவத் குணங்களே பால் –
சீர் கடலை உள் பொதிந்த –அநந்த குண சாகரம் -அக் குணங்களே கடல் –
இவற்றையே வாய் வெருவி -பகவத் குண சாகரத்தில் அஸ்தமி தான்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் -என்கை –
——————————————————
3- ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —
-அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து -தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர்
-உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண்முன்னோர் – வழியாய் உபதேசித்தார் –ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –
————————————————————
4- ஆழி மழைக் கண்ணா –
ஆழி மழைக் கண்ணா -ஓன்று நீ கை கரவேல் –ஆழி சங்கு சார்ங்கம் -அடையார் கமலத்து அலர்மகள்
-வவ்ருதே பஞ்ச பிராயுதைர் முராரே -பஞ்சாயுத ஆழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷ திருவவதாரம்-
ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோர்த்ருதம்
ஒன்றும் நீ கை கரவேல் -இராமானுசன் என்னும் சீர் முகிலே –
ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம் –
———————————————–
5- மாயனை மன்னு வடமதுரை மாயனை –
ஆயர் பாடிக்கு அணி விளக்கு
ந்ருபசு–வ்ருத்த்யா பசுர் நரவபு-பசி ப்ராயர்கள் அச்மதாதிகள் வர்த்திக்கும் இருள் தரும் மா ஞாலம் -தோன்றிய ராமானுஜ திவாகரர் -அச்யுத பானு போலே
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –என்னக் கடவது இ றே
————————————————————————–
6-புள்ளும் சிலம்பின காண் –
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு -பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே –
எம்பெருமானாரும் -துத்தோ தந்வத் தவள மதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராமாயம் பணீந்த்ரவதாரம் -என்றபடி பால் போன்ற நிறத்தவர் –
இந்த சங்கு வாழ்ந்த இடம் புள்ளரையன் கோயில் -பூ மருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனர் அரங்கமே -திருவரங்கத்திலே வாழ்ந்து அருளியவர் –
கருதிமிடம் பொருது -அருளிச் செயலின் படியே -காசீ விப்லொஷதி நாநா -கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய சஞ்சாரங்கள் செய்து கொண்டே இருக்கும்
அப்படி அன்றிக்கே திருச் சங்கம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே -என்னும் படியே இருக்கும்
ஸ்வாமியும் அப்படியே யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரெங்கே ஸூக மாஸ்வ- என்றபடி -கோயில் சங்கு எம்பெருமானாருக்கு மிகப் பொருந்தும்
————————————————————————–
7–கீசுகீசு என்று எங்கும் –
கலந்து பேசின பேச்சரவம் -பூர்வாசார்யர் திவ்ய ஸூ க்திகள் உடன் கலந்து ஸ்ரீ ஸூ க்திகள் அருளிச் செய்தார் ஸ்வாமி –
பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூ த்ர வ்ருத்திம் பூர்வா சார்யாஸ் சஞ்திஷூபு தன்மதாநு சாரேண-ஷூத்திரஅஷராணி வ்யாக்யாஸ் யந்தே –
வடமொழி தென்மொழி கலந்து அருளிய ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம் –
எதிராசர் பேர் அருளால் திரு ஆறாயிரப்படி பிள்ளான் அருளியது மணிப்பிரவாளம் –
————————————————————————–
8-கீழ் வானம் வெள்ளென்று –
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்து –
அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வயமுபத்தா தேசிகா முக்திமாபு -என்றும்
பாத கோடீ யோஸ் சம்பந்தேனே சமித்யமானே விபவான் -என்றும்
திருவடி சம்பந்தத்தால் பின்னுள்ளாரையும் திருமுடி சம்பந்தத்தால் முன்னோர்களையும் வாழ்வித்தவர் எம்பெருமானார்
மிக்குள்ள பிள்ளைகள் -பூஜ்யர்கள் முன்னோ -அவர்களைப் போகாமல் காத்து -அருளினார் என்றபடி
——————————
9- தூ மணி மாடத்து –
மணிக்கதவம் தாள் திறவாய் –
மணி -ரத்னம் -நவ ரத்னம் -நவ கிரந்தங்கள் அருளி அர்த்த விசேஷங்களை அருள வேணும் என்றபடி
—————————————-
10-நோற்றுச் ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய்
அரும் கலமே -இரண்டு விளிகளும்
நோற்று -மஹா பாக்ய விசேஷத்தால் -ஸூ வர்க்கம் -உயர்ந்த வகுப்பு என்றபடி
பேர் அருளாளன் கிருபையாலே யாதவ பிரகாசர் இடம் நீங்கி உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பிலே புகுந்து ஸ்வாமி யானார்
யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா வி நா-என்றபடி
வேடனும் வேடுவிச்சியுமாக வந்து ரஷித்து அருளினான் –அரும் கலமே கலனே
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந்யத்ர-என்றபடி -உத்தம சத்பாத்ரம் -மஹா பூஷணம் –என்கிறார்கள்
————————————————————————–
11–கற்றுக் கறவை –
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறியாவும் தெரிந்தவன் -எல்லா கல்விகளையும் கற்று
கறவைக் கணங்கள் பல கறந்த -பஞ்சாச்சார்ய பதாஸ்ரித்த -யதிராஜ வைபவம்
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -பாஹ்ய குத்ருஷ்டிகளை -பரசமய வாதிகளை நிரசித்து -சித்தாந்த ரஷணம் -என்பதால் குற்றம் ஓன்று இல்லாத
கோவலர் தம் பொற் கோடி -யத் கோ சஹச்ர மபஹந்தி தமாம்சி பும்ஸாம் -மகா வித்வான்கள் கோ -அவர்களின் பொற் கோடி ஸ்வாமி -என்றபடி
-கோ அல்லர் ஸ்வ தந்த்ரர் அல்லர் -என்றுமாம் –
———————————————
12- கனைத்திளம் கற்று எருமை –
நற்செல்வன் -ஸ்வாமி -ஸ்ரீ பெரும்பூதூரில் இரட்டிப்பாக சேவிக்கும் பாசுரம் –
லஷ்மீ சம்பன்னர் -லஷ்மனோ லஷ்மி சம்பன்னன் -போலே அஹம் சர்வம் கரிஷ்யாமி -நித்ய கின்கரோ பவானி —
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -அர்ச்சா ஸ்தலங்களில் ஒப்புயர்வற்ற அடிமை செய்யப் பெற்றவர் -என்றபடி
————————————————————–
13-புள்ளின் வாய் கீண்டானை –
கள்ளம் தவிர்ந்து கலந்து -சோரேண ஆத்ம அபஹாரிணா-பிறர் நன்பொருள் -கள்ளம் தவிர்ந்து –
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத பஹூ பிஸ் சஹ -இன் கனி தனி அருந்தேல்-
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார் -பாவைக் களம் -கால ஷேபம் மண்டபம் -ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று வரம்பு அறுத்தவர்
——————————————-
14-உங்கள் புழைக்கடை தோட்டத்து
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –ஐ ததாத்ம்யமிதம் சர்வம் –தத்த்வமசி -போன்றவற்றுக்கு ஸ்வாமி செங்கழு நீர் மலர்ந்தால் போல் அர்த்தங்களை அருள
ஆம்பல் வாய் மூடிற்றே -செங்கல் பொடிக்கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசதா –
வெண் பல் -அச்யுத பதாம் புஜ யுக்மருக் மவ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-எனும்படி-
மஹா விரகத சார்வ பௌம்யர் ஆகையாலே பிறர் பாட்டே பல்லக் காட்டப் பெறாதவர்
தவத்தவர் -தவ தவ -என்றே -மம மம -என்னாதே -சேஷத்வமே பரிமளிக்கும் படி இருப்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் இடம் பெற்ற கோயில் தம் அதீன்மாக பெற்று சங்கு -திறவுகோல் இடுவான் -போந்தந்தார் –
———————————————

15- எல்லே இளம் கிளியே –
உனக்கு என்ன வேறுடையை -எம்பெருமானார் தர்சனம் -அசாதாரணமான பெருமை ஸ்வாமிக்கு உண்டே –
மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹனச் சார்வாக சைலாச நி பௌத்த த்வாந்த நிராஸ
வாசர பதிர்ந ஜைநேப கண்டீரவ மாயாவாதி புஜங்க பங்க கருட –
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் –நீசரும் மாண்டனர் –சாறுவாக மத நீறு செய்த -இத்யாதிகள் உண்டே
—————————————————-
16-நாயகனாய் நின்ற நந்தகோபன் –
அமுநா தப நாதி சாயி பூம்நா யதிராஜேன நிபத்த நாயக ஸ்ரீ மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி -நாயக ரத்னம் குரு பரம்பரா ஹாரத்தில்
நந்த கோபன் -ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –யதிராஜ சம்பத் குமாரர் -செல்லப் பிள்ளை -செல்வப் பிள்ளையைப் பெற்றவர்
உடைய -உடையவர் ஸூ சிப்பிக்கிற படி
கோயில் காப்பான் -ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யம் அனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்த்ய -என்னும் படி
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யைக் காத்து அருளினவர்-தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே-திவ்ய தேசங்களை உத்தரிப்பித்தவர் அன்றோ
கோயில் காப்பானே -என்று லீலா விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-
உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா -என்கிறபடி இங்கு நித்ய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லுகிறது
நெடு வரைத் தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே -என்னும்படி -பிறர் புகாதபடி காத்து அருளும் ஸ்வாமி -என்றபடி

மணிக்கதவம் தாள் திறவாய் நவ ரத்னம் -நவ கிரந்தங்கள்
முன்னமே வாய் நேரந்தான் -கலவ் ராமாநுஜஸ் சம்ருதவ் -கலவ் கச்சித பவிஷ்யதி -உபதேஷ்யந்தி தே ஞானம்
ஞானி நஸ் -தத்வ தர்சின -கலியும் கெடும் கண்டு கொண்மின்
—————————————————-
17-அம்பரமே தண்ணீரே –
அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ-நிகண்டு -அம்பரம் ஆகாசம் -பரம ஆகாசம் -பரம பதம் –
தண்ணீர் -விரஜை –
அன்னம் ப்ரஹ்மேதி வ்யாஜ நாத் -அன்னம் பர ப்ரஹ்ம அனுபவம்
அறம் செய்யும் எம்பெருமான் -க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யார்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த யும்பர் கோமான் -ஆளவந்தார் உடன் சேர்ந்து வாழப் பெற்றேனாகில் பரம பதத்துக்கு படி கட்டி இருப்பேனே –
யத் பதாம் போருஹ தான -ஸ்லோஹம் படியும் ஏக லவ்யன்-விலஷண அனுக்ரஹ பாத்ரனாய் இருந்தவர் ஸ்வாமி
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே – அம்பரத்தை பரம ஆகாசத்தை ஊடறுத்தவர் என்றபடி
—————————————————————
18-உந்து மத களிற்றன் –
கந்தம் கமழும் குழலி -காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும் -கம நீயா சிகா நிவேசம்-சிகாய சேகரிணம் பதிம் யதீ நாம் –
திருப்பாவை ஜீயர் -இந்த பாசுர ஐ திக்யம் பிரசித்தம்
———————————————-
19-குத்து விளக்கு
தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும் –திருக் கோஷ்டியூர் நம்பி -குத்து விளக்கு -சங்கமம் -எம்பெருமானார்
எரிய -நம்பி பக்கல் அர்த்த விசேஷங்கள் கேட்டு ஜ்வலிக்க
கோட்டு -கோட்டி கோஷ்டி புரம் –
கால் கட்டு -நம்பியை கால் கட்டி ரஹச்யார்த்தம் பெற்றார் அன்றோ
மேல் ஏறி-நம்பி தவிய ஆஜ்ஞ்ஞை மீறி ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்து
மலர் மார்பா -இப்படி விகஸித ஹ்ருதயம் உள்ள ஸ்வாமி
————————————-
20-முப்பத்து மூவர் அமரர்க்கு –
செப்பமுடையார் -ஆர்ஜவம் -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளில் காணலாம்
திறலுடையார் -பராபிபாவன சாமர்த்தியம்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -குண நமபி குணைஸ் தம் தரித்ராணாம் ஆஹூ -எம்பெருமானை சர்வ தரித்ரனாக
-குணம் இல்லை இத்யாதி -பேசி வைத்தவர்கள் -அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர்
வெப்பம் ஜ்வரம் -பீதி -ஜ்வரம்-தஸ்மை ராமானுஜார்யாய நம -பரம யோகி நே ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீ சமத் –
அந்த ஜ்வரத்தை செற்றார் உள்ளத்திலே போக விட்டார் ஸ்வாமி
சோக வஹ்நிம் ஜனகாத்மஜாயா ஆதாய ததாஹா லங்காம் -பிராட்டி திரு வயிற்றிலே சோக அக்னியை வைத்து இலங்கையை கொளுத்தினால் போலே
ஸ்வாமி யும் ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜ்வரத்தை எடுத்து செற்றார் வயிற்றில் எறிந்த படி
——————————————————
21- ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப –
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
ஏகாந்திபிர் த்வாதச பிஸ் சஹஸ்ரை சம்சேவிதஷ சம்யமி
சப்த சத்யா -உடன் இருந்தவர்கள் பேசும்படியாய் இருக்கும்
மஹா ஜ்ஞான நிதிகளான 74 சிம்ஹாசனாதிபதிகள் உடையவர் என்றுமாசம்
இவர்கள் ஏற்ற கலங்கள் -சார்வ பௌமர் ஏற்று இருக்கும் தன்மை உடைய சத்பாத்ரர்கள்
எதிர் பொங்கி மீதளிப்ப -சிஷ்யா திச்சேத் பராஜயம் -என்னும்படி ஆச்சார்யர்களையும் விஞ்சி – -இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ –
மாற்றாதே பால் சொரியும் -குரு பரம்பரை வளர்ந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களை சொரிந்து
ஆற்ற -அபரிமிதமாக
மாற்றார் வலி தொலைந்து -யாதவ பிரகாசர் விருத்தாந்தம்
———————————————————————-
22-அம்கண் மா ஞாலத்து அரசர் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -ஸ்வாமி உடைய உபய வேதாந்த கிரந்த பிரவசன -தீஷணதியும் தண்ணளியும்
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்
செவிக்கு இனிய செஞ்சொல் -சீர் கலந்த ஈரச் சொல் –
உபய வேதாங்கங்களும் ஸ்வாமிக்கு இரண்டு கண்கள் -அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
ஒன்றில் ஆதாரமும் மற்று ஒன்றில் அநாதரமும் சாபம் -அத்தை தொலைக்க வேணும் என்ற பிரார்த்தனை –
————————————————
22-மாரி மலை முழஞ்சில் –
யதி சார்வ பௌம சிம்ஹம் -கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைபெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் -தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்
-தர்ம சூஷ்மங்கள் பொதிந்து இருக்கும் இடம் – -பரத்வாஜர் -இந்திரன் –
லௌகிக விஷயங்களில் திருக் கண் வைக்காமல் -ஆத்மன்யேவ ஆத்மானம் பஸ்யன் -ஸூ கித்து இருப்பவர் ஸ்வாமி
அறிவுற்று -தாம் திருவவதரித்த பிரயோஜனம் குறிக் கொண்டு
தீ விழித்து -புத்திர் மனீஷா தீஷணா தீ -அமர கோசம் -புத்திர் பர்யாயமாகப் படிக்கப் பட்ட தீ –அது விழித்து இருப்பதாவது விகசித்து
எப்பாடும் பேர்ந்து ஸ்ரீ ரெங்கம் -கரி சைலம் -அஞ்சனகிரிம் -தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச பத்ரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாரா தீவ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமேத ராமானுஜோயம் முனி -என்கிறபடி
உதறி -ஆங்காங்கு விபர்ஷகர்கள் உண்டாகில் அவர்களை உதறி அருளினவர் ஸ்வாமி –
—————————————————————–
24-அன்று இவ்வுலகம் அளந்தாய் –
வென்றி பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி –
கொல்வது கோல் வெல்வது வேல் -எம்பெருமானுக்கு திரு வாழி ஆழ்வான் போலே ஸ்வாமிக்கு த்ரிதண்டம்
விஷ்வக் சேனோ யதிபதிர் ஆவிர்பூத் வேத்ர சாரஸ் த்ரிதண்ட -திருப்பிரம்பே த்ரிதண்டம் -பாஷண்ட ஷண்ட கிரி கண்ட ந-
தத்தே ராமாநுஜார்ய பிரதிகத சுசிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் -ஸ்வாமி உடைய முக்கோலுக்கு மங்களா சாசனம் –
——————————————————————
25-ஒருத்தி மகனாய் பிறந்து –
வித்யா அடவி எங்கே -சத்ய வ்ரத ஷேத்ரம் எங்கே
ஆசூர பிரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பாக நின்றவர்
பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹன–பாஷண்ட சாகர மஹா பட பாமுகாக்னி –என்று நெருப்பாகவே பேசப்பட்டவர்
நெடுமால் -அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம ச்யாமோஹத-வ்யா மோஹம் கொண்டவர் என்றபடி

————————————————————————-
26-மாலே மணி வண்ணா –
ஆலின் இலையாய் -ஆலின் இலையதன் மேல் பையயுயோகு துயில் கொண்ட பரம் பரன் கண்ணன்
ஆலின் நிலையாய் -பாஹூச் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன-ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்து தாபம் தீர்ப்பவன் –
ஸ்வாமி -ப்ராப்தா நாம் பாத மூலம் பிரகிருதி மதுரயாச் சாயயா தாபஹ்ருத்வா –
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம் –
ஆலமரம் பஹூபாத் -சுவாமிக்கும் சிஷ்யர்கள் அநேகர்
சங்கம் -ஞானம் -ஆழ்வான் ஆண்டான் எம்பார் பிள்ளான் போல்வாருக்கு ஞானம் அருளி
பறை -பகவத் குணங்களை பறை சாற்றியவர்
பல்லாண்டு -தாமும் அருளி மற்றும் பலரையும் பாடு வித்து அருளி
கோல விளக்கு ஸ்ரீ வைஷ்ணவ குல பிரதீபம்
கொடி -ஸ்ரீ மல்லஷ்மண யோகீந்திர சித்தாந்த விஜயத்வஜம் -விசிஷ்டாத்வைத சித்தாந்த விஜயத்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய பௌ வநீர் அரவணை -ஆதி சேஷனே விதானம் -அவரே ஸ்வாமி
————————————————————
27-கூடாரை வெல்லும் சீர் –
திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும் -திவ்ய ஆத்ம குணங்களும் -கோவிந்தா ஸ்ரீ ஸூ க்திகளுக்கும் கோ சப்தம்
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதர்ஷயதி -பீதியைப் போக்கி ரஷித்தார் -பசு ப்ராயர்கள் -நம்மை ரஷித்து அருளினார்
—————————————————–

28-கறைவைகள் பின் சென்று –
ஞானம் அனுஷ்டானம் பரசம்ருத்தியே பிரயோஜனத்வம் -மூன்றும் நன்கு நிறைந்தவர் ஸ்வாமி-தயைக சிந்தோ –
உன் தன்னை -உன் தன்னைக் கொண்டு -உன் தன்னால் -என்றபடி
ஸ்ரேஷ்ட வித்யா ஜன்மம் இராமானுஜர் திருவடி சம்பந்தம் பெற்ற புண்ணியம் உடையோம் என்றவாறு –
————————————————————————–
29-சிற்றம் சிறு காலே –
இனி பிறவி யான் வேண்டேன் வெறுத்து பேச வேண்டாத படி
இராமானுசன் அடியார் என்பதை ஆசைப் பட்டு உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கு நாம் ஆட்செய்வோம்
-வாழி எதிராசன் -என்று வாழ்த்துவோம் இரு கரையர் அல்லாமல் ஸ்வாமி மட்டுமே பற்றி
கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் –இத்யாதி -ஏரார் முயல் விட்டு காக்கைப் பின் போவதே
————————————————————————-
30-வங்கக் கடல் கடைந்த மாதவனை
நிர்மத்த்ய ஸ்ருதி சாகராத் -நமாம்யஹம் திராவிட சாகரம் -திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
வசஸ் ஸூ தாம் –ஸூ மனசோ பௌ மா பிபந்த்வன்வஹம் -நிலத்தேவர்கள் நித்ய அனுபவம் பண்ண அமுதம் அருளிய ஸ்வாமி
மாதவனை மகத்தான தபஸை உடையவர் –
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து -என்றபடி திருப்பாவை முப்பதும் எம்பெருமானார் விஷயம் என்று அனுசந்தித்து
அம்ருத சாகர அந்தர் நிமக்ன சர்வ அவயாஸ் ஸூ கம் ஆசீரன்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
—————————————————————-

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: