ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை பணித்த சப்த காதை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் –

அவதாரிகை –
கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி நஸ் சர்வ யோநிஷூ பிரத்யஷிதாத்மா நாதா நாம் தைஷாம் சின்த்யம் குலாதிகம் –
தொண்டைக்குலத்தின் சிறப்பு அறியக் கிடக்கின்றது –அவர்கள் பல யோநிகளிலும் பிறப்பார்கள் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -எம்பெருமானார் இடம் அந்தரங்க அன்பர்
ஏறு திரு உடைய தாசர் -நம் பிள்ளைக்கு அந்தரங்க அன்பர்
பிள்ளை வானமா மலை தாசர் -நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்க்கு அந்தரங்க அன்பர்
இவர்களைப் போலே விஞ்சிய பெருமை வாய்ந்த விளாஞ்சோலைப் பிள்ளை -பிள்ளை லோகாசாரியர் உடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்து
சகல ரஹச்யார்த்தங்களும் கேட்டு உஜ்ஜீவிக்கப் பெற்றவர் –
உன்னில் திகழ் வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை -இந்த திவ்ய சாஸ்த்ரத்திலே மிகவும் ஊன்றி யவராய் -வேறு ஒன்றும் அறியாமல்
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் -முக்கியமான அர்த்த விசேஷங்களையும் திரட்டி இலகுவானதொரு பிரபந்தம் பணிக்க திரு உள்ளம் பற்றி
பிரதம பர்வதற்கு திருவாசிரியம் போலே சரம பர்வம் –வெண்பாவில் அருளின ஏற்றமும் உண்டே –
ஸ்ரீ மதுரகவிகள் வடுக நம்பி போலே சரம பர்வ நிஷ்டையை உக்தி அனுஷ்டானங்களாலே காட்டி அருளுகிறார் –
—————————————————-
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-

சேர்ந்த நெறி -அனுரூபமான மார்க்கம் ஆகிய பிரபத்தி
நவவித சம்பந்தம் -பிதா புத்திர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி -பர்த்ரு பார்ய -ஜ்ஞாத்ரு ஜ்ஞ்ஞேய -ஸ்வ ஸ்வாமி -ஆதார ஆதேய -சரீராத்மா -போக்த்ரு போக்ய-பாவம் –
தடை -ஸ்வரூப உபாய ப்ராப்ய விரோதிகள்
உம்பர் திவம் என்னும் வாழ்வைக் காட்டும் -புருஷார்த்தம்
அந்த வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும் -பிராபகமான உபாயம்
இவற்றை நிஷ்கல்மஷமாகக் காட்டிக் கொடுப்பது தான் ஆசார்ய கருத்தியம் –
உம்பர் திவம் மன்னும் என்னும் -பாட பேதங்கள்
அந்தரங்க சம்பந்தம் -சரீராத்மா பாவ சம்பந்தம் -நம் தர்சனத்துக்கு அசாதாரண அந்தரங்கமாக கொள்ளப்படும் சம்பந்தம்

——————————————————————————–

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக் கொடியர் நாம் சொன்னோம் -நஞ்சு தான்
ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை –2-

ஆசார்ய ப்ரேமம் இல்லாதவர்கள் ஆத்ம நாசத்தை தாங்களே விளைத்துக் கொள்ளுமவர்கள் -என்கிறார் –
நஞ்சு கொடிது –நெஞ்சில் மிகக் கொடியர் -இவர்கள் மிகக் கொடியராய் இருப்பர்-
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -போலே இவரும் நாம் சொன்னோம் -என்கிறார் –
இவனுக்கு சரீரா வசானத்து அளவும் ஆசார்ய விஷயத்தில் என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் -ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -349-இங்கே அனுசந்தேயம் –
———————————————————–

பார்த்த குருவின் அளவில் பரிவின்றி
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் -கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு——-3-

பார்த்த குரு -பிரத்யஷை தைவமான ஆசார்யன் -நம் கண்களாலே பார்க்கப் படுகிற -என்றும் எம்பெருமான் தேடிப்பார்த்து வைத்த ஆசார்யன் -என்றுமாம்
ஞானம் –மிகு ஜ்ஞானம் -சீர்த்த மிகு ஜ்ஞானம் –சமஸ்க்ருத வேதாந்த ஜ்ஞானம் –திராவிட வேதாந்த ஜ்ஞானம் -ரஹஅச்யார்த்த ஜ்ஞானம்
மேலே எல்லாம் -சகலார்த்த ஜ்ஞானங்கள்
ஆசார்யர் பக்கல் பரிவின்றி இருந்தால் கரும் கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கும் கிலேசங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டு உழல்வான்
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லையும் காலையே -என்றதற்கு எதிராக
அத்யுத்கடை புண்ய பாபைவரிஹைக்கா பலம் அஸ்நுதே -சாஸ்த்ரார்த்தம்
நரக யாத நைகளையும் அனுபவிக்க நேரும் –தேங்காமல் நண்ணுமே கீழா நரகு -நித்ய சம்சாரியாய்க் கிடந்தது உழல்வான் என்றாகவுமாம் –

——————————————————————-

தன்னை யிறையைத் தடையைச் சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை யொரு மந்த்திரத்தின் இன்னருளால்
அஞ்சிலும் கேடோட வளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான்——4-

அஞ்சிலும் கேடு ஓட அளித்தவன் பால் –ஐந்து பொருள்களிலும் ஒரு வகையான கெடுதலும் இன்றியே உபதேசித்து அருளின ஆசார்யன் பக்கலிலே
அஜ்ஞ்ஞான சம்சய விபர்யயங்கள் அறும்படி உபதேசித்து அருளினவன் என்கை
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச –
பிரணவத்தில் மகாரத்தாலும் லுப்த சதுர்தியாலும் உகாரத்தாலும் ஸ்வ ஸ்வரூபம்
அகாரத்தாலே பர ஸ்வரூபம்
நமஸ் சில் நம என்பதால் விரோதி ஸ்வரூபம்
நமஸ் சாலே உபாய ஸ்வரூபம்
நாராயணாய -உபயே ஸ்வரூபம்
ஆசார்யன் பக்கலிலே பிரேமம் இல்லாதவர்கள் விஷத்தில் காட்டிலும் கொடியவர்கள் என்று நான் உறுதி கொண்டு இருப்ப்பேன் -என்கிறார் –

———————————————————

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் -மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு—-5-

இன்னார் என் பக்கல் ஓதினார் எனும் இயலவும்-இவர்கள் என்னிடத்தில் ஒத்து என்னை ஆசார்யனாகக் கொண்டவர்கள் என்று இருப்பதும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் -என் பக்கலிலே ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளது என்று இருப்பதும்
-மன் பக்கல்சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்-பகவத் பக்த பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடத்திலே ஜாதி நிரூபணம் பண்ணுகையும்
ஆகிற இவை –ஆவிக்கு நேரே அழுக்கு-ஆத்மாவுக்கு நிச்சயமாக நாசகம்
கீழ்ப் பாட்டுக்களிலே சிஷ்யனுக்கு ஆகும் குறைகளைப் பேசினார்
இப்பாட்டில் ஆசார்யனுக்கு நேரக் கூடிய அவத்யத்தைப் பேசுகிறார் –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை க்ரூர நிஷித்தம்
தன்னை மாறாடி நினைக்கை யாவது -தன்னை ஆசார்யன் என்று நினைக்கை -சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பாகவத அபசாரம் தான் அநேக விதம் -அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம் –
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்திகள்
தனது ஆசார்யனையே சிஷ்யனுக்கு உபதேச கர்த்தாவாகவும் தான் அவ்வாசார்யருக்கு கரண பூதனாகவும் பிரதிபத்தி பண்ண வேண்டும்
சிஷ்யனையும் தன்னைப் போலே தன்னுடைய ஆசார்யனுக்கு சிஷ்யனாக பிரதிபத்தி பண்ணி உபதேசிக்க வேண்டும் –
ஜன்ம நிரூபணம் மகாபசாரம் -ஆவிக்கு நேரே ஆளுக்கு என்கிறார் –

———————————————————–

அழுக்கு என்று இவை அறிந்தேன் அம் பொன் அரங்கா
ஒழித்து அருளாய் உள்ளில் வினையை -ப ழிப்பிலா
என் ஆரியர்க்காக எம்பெருமானார்க்காக
உன் ஆர் அருட்காக வுற்று —-6-

உள்ளில் வினையை ஒழித்து அருள்வாய் -என்னுள் உறையும் பாப சமூஹத்தைப் போக்கி யருள வேணும்
அழுக்கு என்று இவை அறிந்தேன் ஆகிலும் -அஸ்மத் ஆசார்யரான பிள்ளை லோகாசாரியர்க்காகவும்
உலகுக்கு ஓர் உயிரான எம்பெருமானாருக்கும் தேவரீர் உடைய திருவருள் பழுது படாமைக்காகவும்
இவ்வருள் செய்தே யாக வேணும் என்று ஸ்ரீ ரெங்க நாதன் இடம் பிரார்த்திக்கிறார் –

—————————————————-
தீங்கேதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் -ஓங்காரத்
தேரின் மேல் ஏறிச் செழும் கதிரினூடு போய்ச்
சேருவரே யந்தாமம் தான்—-7-

ஆசார்ய ப்ரேமம் கனத்து இருக்குமவனுக்கு –தீங்கு ஏதும் இல்லாமை யாவது -ஸ்வ ஆசார்யர் பக்கல் பிரேமம் அற்று இருக்கை
போன்ற அவத்யங்கள் இல்லாமை –
உண்டாகி கழிகை அன்றிக்கே இவற்றின் ஸ்பர்சம் அன்றிக்கே இருக்கை –
திருமேனியைப் பேணிக் கொண்டு ப்ரேமம் உடன் இருப்பார் -வைகுண்ட மா நகர் இவர்களுடைய கையதுவே –
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்னூடே -வ்யாவ்ருத்தி தோற்ற ஸ்வரூப அனுரூபமாகவும்
பரமபதம் கூட தங்கள் சிறு முறிக்குச் செல்லும் படியாகவும் உபய வேதாந்த கால ஷேப ஸ்ரீ உடன் ததீயாராதன ஸ்ரீ உடன்
உகந்து அருளின நிலங்களில் மங்களா சாசன ஸ்ரீ உடன் தத் கைங்கர்ய ஸ்ரீ உடன் எம்பெருமானாரைப் போலே
நெடும் காலம் வாழ்ந்து இருந்து சரீர அவசானத்தில் பரம பக்தி தலை எடுத்து அந்தமில் பேரின்பத்துடன் ஒரு கோவையாக இருக்க ப்ராப்ய த்வரை விஞ்சி
ஓங்கார ரதமாருஹ்ய -என்கிறபடியே மனஸ் ஸூ சாரத்த்யம் பண்ண
பிரணவம் ஆகிற தேரின் மேல் ஏறி தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி வாழ்ந்து இருக்கப் பெறுவார்
-என்று அருளி பிரபந்தம் தலைக் கட்டி அருளுகிறார் –

——————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: