திருப்பாவை உபன்யாசம் -1-15—2014–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் –

ஸ்ரீ தச உபநிஷத்-ஸ்ரீ கீதோ உபநிஷத் — –ஸ்ரீ கோதோ உபநிஷத் –
சேஷத்வம் பாரதந்த்ர்யம் -ஸ்வரூபம் பெறுவதே உத்தேச்யம்
ஆடவர் பெண்ணின் தன்மையை அளாவும் தோளினார் -பிராப்த விஷயத்துக்கு இது திருஷ்டாந்தம் -தள்ளத் தக்கதுக்கு சாகுந்தலை திருஷ்டாந்தம் –
காம் ததாதி பூமி கொடுத்து அருளு பவள் -ஸ்ரீ பூமா தேவி வாக் கொடுத்து அருளுபவள் கோதை -கோ இந்த்ரியம் இந்த்ரிய வசம் கொடுப்பவள் –
ஆண்டாள் -பக்தியால் பிரேமத்தாலே ஆண்டாள் கட்டுப்படுத்தி கண்ணனுக்கு ஆக்கிக் கொடுப்பவள்
ஸ்வரூபம் உணர்ந்தே -நாயகி பாவம் -இவளுக்கு ஸ்வா பாவிகம் –
நீளா துங்க ஸ்தன கிரி தடி ஸூ ப்தம் கிருஷ்ணம்-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மாராபா
-உத்போக்த -பாரார்த்தயம் –பிறரின் பொருட்டு இருத்தல் –இது ஒன்றே தாத்பர்யம் -பரரான பகவான் பரரர்களான பாகவதர்கள் –
பிறர்க்கு -தொண்டு செய்வதை விட்டு பரனுக்கு தொண்டு செய்வதை கொள்ள வேண்டும் -பக்த பராதீனன் -அழகிய மணவாளன் -முறுக்கி இருக்க
-நாம் சுணங்கி இருக்க -சேர்த்து வைக்கிறாள் –ஸ்வதந்தரமாக சிந்தித்து பரதந்த்ரனாக ஆக வேணும்
சுருதி சத சிரஸ் சித்தம் -இந்த கருத்து -அத்யாபயந்தி -கையில் பிரம்பு வைத்து -விண்ணப்பம் செய்ய வில்லை -மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -வலுக்கட்டாயமாக அனுபவிக்கிறாள் —ஸ்வ உச்சிஷ்டம் வாய் மிச்சம் திருப்பாவை -போனகம் செய்த சேடம் தருவரேல் –
பா மாலை – யா பலாத்க்ருத்யே புங்க்தே கோதா –சிரஜி நிகளிதம்
கிருஷ்ணம் ஸூக்தம் -கண்ணனாக இருந்து தூங்கலாமா -ஓன்று ஒன்றுடன் சேர்த்து -நிர்வியாபாரமானால் தூங்கலாம்
கிருஷ்ண பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் என்ற பேர் வைத்துக் கொண்டு தூங்கலாமா -கிருஷ்ணம் ஸூ க்தம்-அத்யாபயந்தி ஸூக்தம் -உபாத்யாயர் இருக்க தூங்கலாமோ
கண்ணன் என்னும் கரும் தெய்வம் தூங்கலாமா -நாங்கள் தவிக்கும் படி -கருமைக் கண்ணன் -கரியான் ஒரு காளை -நிறைய அருளிச் செயல்களை வாங்கின பின்பு
நம் கண்ணன் அல்லது இல்லை ஓர் கண் -ரஷகன் அன்றோ தூங்கலாமா -கோதை வந்து இருக்க தூங்கலாமோ -ஆழ்வார்கள் தூங்க நீ எழுப்பினாய் –
அடியேன் பெண் ஐந்து வயசு -நீர் தூங்கலாமோ -தேன் பால் -கண்ணன் சீர்-பெரியாழ்வார் வழங்க -குடித்தே வாழ்ந்தாள் ஆண்டாள்
வேங்கடவற்கு விதி என்று நீர் அருளிய வண்ணம் நாம் கடவா வண்ணம் நல்கி அருள வேண்டும் -பாரார்த்த்யம் நாம் அனுசந்திக்க அவள் அருளை பிரார்த்திக்கிறோம் –
ஆற்று நுண் மணல் கொண்டு கார்த்யாயனி மகா மாயே -பால் சோறு ஒரு வேளை மட்டும் உண்டு -நந்த கோபர் திருக்குமாரனை பதியாக ஆக்கித் தர பிரார்த்தனை

வேதம் -வேதாந்தம் -உபநிஷத் -தச உபநிஷத் -கீதா உபநிஷத் -கோதோ உபநிஷத் -. படி -32-எழுத்துக்கள் / பார தந்தர்யம் சேஷத்வம்-ஸ்வரூபம் ஸ்வாபாவிக ஸ்த்ரீத்வம் /
பர-னுக்காகவே -பரனுடைய சரீரமே பாகவதர்கள் —

நீளா துங்க ஸ்தன கிரி ஸூக்தம் –கைங்கர்யம் வர்த்தகை இருக்க
கிருஷ்ணம் ஸூ கதம் –கிருஷ் பூ வாசக சப்தம் -பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவனாய் இருந்து தூங்கலாமோ -அனுபவம் –
ஆனந்தம் -கருமையாக இருந்து கண்ணன் என்னும் கரும் தெய்வம் -எங்களை தூங்க விடாமல் தவிக்கிறோம் –
கரியான் ஒரு காளை/ நம் கண்ணன் அல்லது இல்லை ஓர் கண் -ரக்ஷகன் தூங்கலாமோ
பாரார்த்தியம் — ஸூக்தம் –அடிமை அறிவை கொடுத்த பின் தூங்கலாமா –
அத்யா பயந்தி- ஸூ கதம் -அடிமை என்று சொல்வதைக் கேட்டுக் கொள்–உபாத்தியாயர் இருக்க தூங்கலாமோ
ஸ்வம் ஸ்ருதி சதஸ் சித்த அத்யாபயந்தி -வேதம் உன்னை -அனைவரும் தூங்கும் பொழுது முழுத்து நீ உள்ளாய் -என்கிறதே –
சோ உச்சிஷ்டம் -வாய் மிச்சம் -சிரஸி நிகளிதம்-ஸூக்தம்
-யா பலாத் க்ருத்ய புங்க்தே—மாலை சாத்தி நிர்பந்தித்து அனுபவிக்க வந்தபின் தூங்கலாமோ
கைங்கர்யம் பண்ண வரும் பொழுது மறைந்து நின்றால் பரம பக்தன் தவிப்பானே –
கோதா ஸூ க்தம் -வந்து இருக்க தூங்கலாமோ /
பூய பூய நமோ –நிழலில் ஒதுங்கி இருப்போம்
கோதா -கோ– வாக்கு– பூமி– இந்திரிய வசம் அருளுபவள் -/ பக்தி ப்ரேமத்தாலே நம்மை கட்டுப்படுத்து ஆண்டு கண்ணனுக்கு ஆக்கி கொடுத்தவள்

பேதை –5-7-/ பெதும்பை -7-12-/ மங்கை -13-மட்டும் -/ மடந்தை -14–19-/ அறிவை -20 –25-/ தெரிவை -26-32-/ பேர் இளம் பெண் –32-மேலே —
அபிலாஷா -சங்கம் -window shopping -வை முக்கியம் / சிந்தனம் / அனு ஸ்ம்ருதி / இச்சா / ருசி / பர பக்தி / பர ஞானம்-ஆகிய ஏழு நிலைகள் –
பக்தி பரபாக ஏழு தசைகளை போலே பெண்களுக்கும் -இதே போலே ஆண்களுக்கு இல்லையே –
ஒரு மகள் தன்னை உடையேன் -உலகம் நிறைந்த புகழால்-திரு மகள் போல் வளர்த்தேன் -செங்கண் மால் தான் கொண்டு போனான் –
அனைவரும் பெண்களே சம்பிரதாயத்தில் -அவன் பார்த்தா புருஷோத்தமன் -பெண் என்ற நினைவாலே பக்தி -பார தந்தர்யம் -ஆண் ஸ்வா தந்தர்யம் –
வெண்ணெய் போலே பெண் சிறுமிகள் -மோர் குடத்தை உருட்டி விடுவானே -தன் நிலையில் இருந்து மாறினால் பிடிக்காதே –
ஆத்மா சரீரம் எடுத்து -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -தயிரில் தண்ணீர் விட்டால் பிடிக்காதே அவனுக்கு –
ஷட்விதா சரணாகதி அஹிர்புத்த்யா சம்ஹிதை சொல்லுமே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் / பிராதி கூலஸ்ய வர்ஜனம் / ரஷிஷ்யதி விச்வாஸா /
கோப்த்ருத்வ வரணம் ததா -பகவத் சரண வாரணம் / கார்ப்பண்யம் -கை முதல் ஒன்றும் இல்லை க்ருபணன்/ ஆத்ம நிஷ்ஷேபம் -சமர்ப்பணம் –
அதிகாரி ஸ்வரூபம் -தன்னடையே ஏற்படும் இந்த ஆறு அவஸ்தைகளும் – பேதைக்கு தானே எளிதாக வரும் -/
கரும்பின் நடுப்பகுதி -கண்ணி நுண் திருத் தாம்பினால் கட்டுண்ட பெரு மா மாயனுக்கு அனுரூபம் –
முலையோ முழு முற்றும் போந்தில–கலையோ அரையில்லை –நாவோ குளறும் -கடல் மண் எல்லாம், விலையோ என -மிளிரும் கண் –
ஒரே பார்வையால் சமோஹம் பார்க்கும் -விஷம புத்தி இருக்காதே -வைஷம்யம் இல்லாத பிரகலாதன் –
தன் நேர் ஆயிரம் பிள்ளைகள் -சாம்யா பத்தி இங்கேயே அருளி —
கிரஹண தாரண சக்திகள் நிறைய இருக்கும் பருவம் -/ ஸ்ரீ வராஹ பெருமாள் அருளியவற்றை கிரஹித்து தரித்து-பிரபத்தி சாஸ்திரத்தை
நமக்கு ஸூ லபமாக அருளிச் செய்கிறாள் -விஞ்சி நிற்கும் தன்மை -பேதை பிராயத்தில் -பிஞ்சாய் பழுத்ததால் தானே –

பத்து பேர் பூதனா-கேசி வரை சென்று திரும்பாமல் -அக்ரூரர் மட்டுமே சென்று திரும்பி வந்தார் –
————————————————————————-
சிறிமியராக இருப்பதே செல்வம் –கண்ணனை செல்வமாக கொண்டவர்கள் –
போதுமினோ -ஒவ் ஒன்றிலும் அன்வயித்து -அர்த்தம் -ஏலோர் எம்பாவாய் -சங்கேத பாஷை –
ஏகாந்தம் -கயிறு -ஊசி -ஆண்டாள் வழக்குச் சொல் -உத்சவர் அலங்காரத்துக்கு -உபயோகிப்பர் –
நாராயணா -அனுவாகம் -வ்யூஹ -வா ஸூ தேவ –பாற் கடலுள் பையத் துயின்ற –பாஞ்சராத்ர ஆகமம் –
விஷ்ணு தான் விபவ அவதாரம் -ஜகத்தாதிஜா –ஓங்கி உலகு அளந்த உத்தமன் -முதல் மூன்று பாடல்கள்
செல்வச் சிறுமீர்காள் -பாகவதர் -பிரஸ்தாபம் –அவர்களாலே தான் பகவான் -மதுரகவி -கண்ணி நுண் சிறுத் தாம்பு -கண்ணன் இழுத்துக் கொண்டான் இவரையும்
நாராயணனே நமக்கே பறை தருவான் -தோள் மாறி விட்டாளா -திருமந்தரம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –பறை -பாகவத கைங்கர்யமே லஷ்யம்
-அத்தை கொடுத்து அருளுவது நாராயணன் -கைகேயி கூனி /தசரதர் /வசிஷ்டர் /இளைய பெருமாள் /பரதன் /லஷ்மணன் -ஆறு படிகள் –
தேகாத்ம பிரமம் /ஆத்ம ஞானம் /ஆத்ம ஞாதாம்ய ஞானம் /பகவத் சேஷ பூதன் /பகவத் பாரதந்த்ரன் /பாகவத சேஷ பூதன் /ஆறுக்கும் –
லஷ்மணன் -மற்ற ஆழ்வார்கள் /பரதன் பெரியாழ்வார் /ஆண்டாள் சத்ருனன் -உன்னை ஒழிய மற்று அறியா வடுக நம்பி தன் நிலையை எனக்கு அருள்
மதுரகவி தன நிலையை நிலையாகப் பெற்றோம் -செல்வச் சிறுமீர்காள் -நேரிழையீர் –
பாவனத்வம் –பின் பற்ற -போக்யத்வம் -உகந்து பின் பற்ற இரண்டு ஆகாரங்கள் அனைத்திலும் -மார்கழி திங்கள் -மதி நிறைந்த
-பத்ரி நாராயணன் தாமோதர நாராயணன் -திருக்கண்ணங்குடி -இன்றும் சேவை -சாம மா மேனி பெருமான் -சியாமள நாராயணன் -புண்ய புஷ்பித்த காலம்-சித்ரா மாசம்

மூன்று வியாபக மந்த்ரம் -வித்து மூன்று பாசுரங்கள் / வியூஹ வாசுதேவன் பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் –
வேத சாரா உபநிஷத் சாராதர அணுவாக சாரதம காயத்ரியின் முதலொத்துகிற பொருள் தானே நாராயணன் –
செல்வச் சிறுமீர்காள் -சொல்லி நாராயணன் -அப்புறம் இதுவே லஷ்யம் ஆண்டாளுக்கு /பாகவத கைங்கர்யம் தருபவனும் நாராயணனே /
ஆறு படிக்கட்டுக்கள் -கூனி முதல் சத்ருகன் -இத்தையே — ம்-அசேதனம் / ம-சேதனம் விலக்ஷணம் / அ / அ -ம சேர்த்து -வசிஷ்டர் படி /
அ ஆய ம -லஷ்மணன்-தாதார்த்ய சதுர்த்தி சேஷத்வம் / ஆய ஏவ ம -அவனுக்காகாக /
தாத்பர்யம் -சத்ருக்கனன் படி -சாரம் நமஸ் நாராயணாயா -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை /
கோல் விழுக்காட்டாலே பாவன போக்யமான நல்ல நாளாயிற்று -நாராயணனே தானே அருளுவதால்/
சைத்ர ஸ்ரீமான் அயம் மாச-போலே மார்கழித் திங்கள் மதி நிறைந்த -பாவானத்வமும் போக்யத்வமும் / பாவனமும் போக்யமும் ஒவ் ஒரு சொல்லும் -/
பதரி நாராயணன் -தாமோதர நாராயணன் -திரு நாராயண புரம்-

நாராயணனுக்கு -ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதிகளை சொல்லுமா போலே ஐந்து விசேஷணங்களையும் அருளிச் செய்து
கார் மேனி செங்கண் -சமுதாய அவயவ சோபைகளை சொல்லி நீராட்டம் -தாப த்ரயம் தீர்த்து அனுபவிக்கப் பண்ண

——————————————
உய்யுமாறு எண்ணி உகந்து —எண்ணுதலே உகப்பு -புருஷார்த்தம் சொல்லி கிரிசைகள் சொல்லி அன்வயப்படுத்தி -மனஸ் கல்மஷம் போக்க
-த்யாகம்-மோஷம் -அம்ருதத்வம் த்யாகத்தாலே -கர்த்ருத்வம் பல மமதா புத்தி தவிர்ந்து -இதுவே தபஸ் உபவாசம் -உபாசனம் -நெய் உண்ணோம் -இத்யாதி
ஆகார நியமம் -நெய் உண்ணோம் பால் உண்ணோம்
ஆசார நியமாம் -நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்—–பிரயோஜனாந்த பரர்கள் இல்லாமல் -போக பொருள்களின் அன்வயம் இல்லாமல் விஷயாந்தரம்-வசப்படாமல் –
உத்தர கிருத்யங்கள் இவை –நாம் -செய்யோம் அவன் செய்தால் தடுக்க மாட்டோம் பரதந்த்ரர்கள்
செய்யாதன செய்யோம் ஆத்மகுணங்கள் வேண்டும் -தான தர்ம புண்ய கார்யங்கள் –
நோன்பு கைங்கர்ய ரூபமான -உத்தர கிருத்தியம் -நித்ய அனுஷ்டானம் நித்ய அனுசந்தானம் பெற்றதற்காக செய்வான -பெறுவதற்காக இல்லை –
ஆந்தனையும் -முடிந்த அளவு உத்தர கிருத்தியம் -அவன் கொடுத்த சலுகை -நிஷித்த அனுஷ்டானம் தள்ளி விஹித அனுஷ்டானம்
சங்கல்பமாக கொண்டு செய்ய முயல வேண்டும் -பிதரான்-இத்யாதி -விட்டு -காமான் -ஆசை களை விட்டு —சொல்லிக் கொள்ள வேண்டும் –
நோற்ற நோன்பிலேன் –ஆகிலும் -அடைய ஆசை உண்டே -அது ஒன்றே வேணும் -மாற்றத்தில் ஆசை இல்லை இங்கு மட்டும் ஆசை -என்பதே அர்த்தம் –
இடையில்லை நான் வளர்த்த கிளிகாள்–அடையும் வைகுந்தமும் -பாற் கடலும் அஞ்சன வெற்பும் -அவை நணிய-கிட்டே வந்தன – –
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவை காண் கொடான் -பாதம் அடைவது அவன் பாதத்திலே மற்றவன் பாசங்கள் விட்ட பின்பு -ஆந்தனையும்
-விஷயாந்தரங்கள் பாசம் விட்டு அவன் மேல் ஆசை வைக்க சங்கல்பம் ஆவது வேண்டுமே -பாலைக் குடிக்க காலைப் பிடிக்க வேண்டி இருக்கிறதே —

உய்யுமாறு எண்ணி– உகக்க வேணும் -நினைவே மகிழ்ச்சி இவ்விஷயத்தில் -/ ஆந்தர தியாகமும் பாஹ்ய தியாகமும் /
கேளீரோ -உத்தர கிருத்யம் விதி இல்லை -ராக பிராப்தம் -ஆசை யுடன் செய்யும் கைங்கர்யம் –
ராமானுஜர் சரம உபதேசம் -உபாயத்திலே கண் வைக்காமல் உபேயத்திலே ஊன்றி கால ஷேபம்-செய்யும் கிரிசைகள் இவையே –
ஆச்சாரம் -விஷயாந்தர ப்ராவண்யம் இல்லாமல் — ஆத்மகுணங்கள் பெருக்கி -ஆகார நியமம் -ஜாதி துஷ்ட-ஆஸ்ரய துஷ்ட-நிமித்த துஷ்ட -ஆகாரம் கூடாதே –
நித்ய ஆராதனம்–நித்ய அனுஷ்டானம்–நித்ய அனுசந்தானம் -நிஷித்த அனுஷ்டானம் இல்லாமல் விஹிதம் செய்ய சங்கல்பம் செய்து –
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய -கிட்டே வந்தன –கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி காண் கொடான்-
பாலக் குடிக்க கால் பிடிப்பார் உண்டோ –
————————————–
நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -கீழே சொல்லி -நம் பாவைக்கு -சாற்றி நீராடினால் -இங்கே —
விபீஷணன் சரண் அடைய தன்னடையே இலங்கை அரசு பட்டம் கிடைத்தால் போலே நாட்டுக்கு சுபிஷம்
உத்தமன் -உலகளந்தான் -உத் -உத்தர உத்தமன் ஒத்தார் மிக்கார் இல்லாதவன் -விச்வச நீயன் –தன்னை அழித்துக் கொண்டு ரஷிப்பார்
-தன் பேறாக-செய்பவன் நின்னது ஓர் பாதம் நிலம் புதைப்ப -நீண்டதோர் தோள் சென்று அளந்தது திசை அளப்ப -அன்று
-கரு மாணியாய் இரந்த கள்வனே -உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு -விஸ்வசித்தார் பெற்ற பேறு என்றவாறு –
கொண்டானை அல்லால் கொடுத்தானை யார் பழிப்பார் –கொண்டான் -தன்னது அல்லாததை தனதாக கொடுத்தவன் தண்ணீர் விட்டுக் கொடுக்க
இவன் வாங்கிக் கொண்டு -தூது நடந்தது-தேர் ஒட்டியாது — இத்யாதி கண்ணன் -உகவாதார் இடம் உத்தமன் -திருவடி வைத்தால்
-உகந்தார் தலையில் வைக்கச் சொல்ல வேணுமோ –உலகமாக தொட்டது –அது ஊராகத் தொட்டது இது –
மரம் -இரண்டு பறவைகள் -த்வா ஸ்பர்ணா சமானம் வருஷம் -சரீரம் -தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாது-அனச்னன் அந்ய -ஒளியுடன் இருக்க -அந்தர்யாமித்வம்
உத்தமன் -அகர்மவச்யன் –தானே திருவடி வைத்து -அளந்து -உத்தமன் -மணல் வெளியில் நம்பெருமாள் நம்மை நோக்கி வந்து உத்தமன் -அணைக்கும் படி –
விச்வச நீயன் -உத்தமனைப் பற்றி உத்தம தேசம் போக -அதமார்கள் இருக்கும் இடம் வந்து -சேவை சாதித்து –
உத்தம ஷேத்ரம் சீர்காழி -பாடலிக வனம் -இடது திருவடி மேலே தூக்கி –தாடாளன் -காழிச் சீராம விண்ணகரம் —
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் -வியாதி துர்பிஷை தத்கரா -வியாதி பஞ்சம் திருட்டு
தேங்காதே –நீங்காத செல்வம் -சிஷ்யர்கள் குருகுல வாசம் -இடையன் -சிஷ்யன் -புக்கு -இருந்து –
பத த்ரயம் -பாத த்ரயம் -மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -மந்த்ரம் காட்ட உத்தமன் -பூம் கோவல் தொழுதும் போ நெஞ்சே
-வலது திருவடி மாற்றி -இதுவும் மாற்றம் -சங்கு சக்கரம் மாற்றி -உத்தமன் -மிருகண்டு மகரிஷி -அரை குலைய தலை குலைய -அவசரமாக வந்து சேவை சாதித்தான்
பரதத்வம் -ச பூமிம் விச்வதோ -புருஷ ஸூக்தம் அளந்தவனே புருஷோத்தமன் -ஸ்ரீ கீதை 15 அத்யாயம் -கண்ணன் தன்னை சொல்லி -சாம்யம் -இதிலும் -மேம்பட்டவர் இல்லாதவன்
சர்வாதிகத்வம் -அனைவரிலும் மேம்பட்டவர் -சங்கீத வித்வான் நீச்சல் -பல துறைகளிலும் –கமண்டல நீர் -சென்னியில் தாங்கி -சாஷி வேத அபகார குரு பாதக
-சது முகன் கையில் சதுர புஜன் தாளில் சங்கரன் ஜடையினில் தங்கி -சர்வ சேஷித்வம் -திருமந்த்ரத்தில் பிரகாசிக்கும் -மூன்றும் –
ரஷகத்வம் -இந்த்ரன் -நாங்கள் இத்தைக் கேட்டு விச்வசிக்க இரந்து வந்தாயே -பிரமாணித்தார் பெற்ற பேறு
வாத்சல்யம் -தாய் அகவாயிலே அணைத்துக் கொண்டு -செப்பிடு வித்தை காரன் போலே -திருவடி ஸ்பர்சம்
பிராப்யம் -திருவடியை தாங்கி –இதனால் அடைகிறோம் உபாயம் -நின் செம்மா பாத பர்பு தலை மேல் ஒல்லை
சடாரி தரிக்கும் பொழுது உபாயம் நினைவு வர வேண்டும் பிராபகத்வம் இதை அடைகிறோம்
குருகுலம் சென்று ஆசார்யர் சீர்த்த முலை -புக்கு இருந்து -திருமந்த்ரார்த்தம் கற்றுக் கொண்டு -குடம் ஜீவன் ஞானம் நிறைக்கும் -நீங்காத செல்வம் நிறையும் –

அவல் வாங்கி ஐஸ்வர்யம் வியாஜ்யம் மாத்திரை அஞ்ஞாத ஸூ ஹ்ருதமும் அவனே கல்பித்து -சர்வ முக்தி பிரசங்கம் -நோற்றால் நீராடினால் பேர் பாடினால் பேறு
திரு விக்ரமன் ஸ்பஷ்டம் / ஸ்ரீ ராமாவதாரம் ஸூ சகம் -சார்ங்கம் உதைத்த சர மழை/
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்-இங்கும் அஸ்பஷ்டம் / மனத்துக்கு இனியான் ஸ்பஷ்டம்
உத்தவன் -விச்வஸ நீயன்– தன்நிகர் அற்ற — அழிய மாறி -தன் பேறாக ரஷிப்பவன்-
தன்னது அல்லாததை தன்னதாக கொடுத்த மகா பாலி -அதமன் -கரு மாணியாய்- பிரமாணித்தார்-விசுவசித்தவர்கள் – பெற்ற பேறு –
உகவாதார் இடம் உத்தமனாக இருக்க உகந்தார் இடம் உத்தமனாக இருக்கக் கேட்க வேணுமோ -கண்ணன் கோபிகள் —
உத்தமனைப் பற்ற அதமர்கள் இருக்கும் இடத்தில் வந்து தானே தழுவி உத்தமனாக- விச்வாஸ நீயனாக காட்டி அருளி
-உத்தம க்ஷேத்ரம் என்றே ஸ்ரீ காழிச் சீராமா விண்ணகரத்தை சொல்கிறார்கள் -தாடாளன் -தாள் வைத்தே ஆள்கிறான் -போல் உள்ள
அர்ச்சையில் அன்றோ சரணாகதி பண்ணினார்கள் ஆழ்வார்கள் / புருஷோத்தமன் -ஸ்ரீ -பூரி –
திருமந்த்ரார்த்தம் மூன்று சப்தார்த்தங்களை காட்டவே திரு விக்ரமன் -பத த்ரயம் -பாத த்ரயமே –
ரக்ஷகத்வம் -ப்ராபகத்வம் -ப்ராப்யத்வம் -சர்வாதிகாத்வம் -சர்வ சேஷித்வம் -வாத்சல்யம்-பரத்வம்-அனைத்தையும் காட்டுமே உத்தம சப்தம் –
இதை அடைகிறோம் இதனால் அடைகிறோம் -ஸ்ரீ சடாரி தரிக்கும் பொழுது ப்ராப்யம் என்ற எண்ணம் வேண்டுமே
தேங்காதே புக்கு இருந்து–சீர்த்த முலை பற்றி – -சம்சார நிவர்த்தகமான திருமந்த்ரார்த்தம் அறிய வேண்டுமே-
————————————————————————–
பாகவதர்களுக்கு கிஞ்சித்காரம் செய்ய –அவன் கையையே எதிர்பார்த்து இருக்கும் நிஷ்டர்கள் என்ற உகப்பால் -கிம் கரோ கிம்கரோ -என்று கேட்க –
ஸ்ரீ ராமாவதாரம் ஸூ சகம் -சார்ங்கம் உதைத்த சர மழை போல் –கிள்ளிக் களைந்தானை -நரசிம்ஹ அஸ்பஷ்டமாக-என்பர் –
பகவான் பாகவான் ஆசார்யர் மூவருக்கும் மூன்று கரணங்களாலும் முக்காலத்தாலும் மூன்று வித அபசாரங்கள் இல்லாமல் கைங்கர்யம் செய்ய வேண்டும் –
வருண தேவனுக்கு கட்டளை -மேகம் ஜல வர்ஷம் -சர வர்ஷம் இந்திர தனுஸ் -வானவில் -நீல மேகப் பெருமாள்-மூலவர் -கணபுர நாயகியை தானம் பெரும் திருக்கைகள் – சரசந்த்ரன் திருமுகம் -போலே புண்டரீக-கண்கள் –உத்பலா -விமானம் உத்சவர் -சௌரி ராஜர் -மாசிமகம் தீர்த்தவாரி –திருமலை ராயன் பட்டணம் கதம்பம் பிரசாதம் மாப்பிள்ளை சுவாமி -12 மைல் தூரம் புறப்பாடு -7 மதிள்கள்–அரையர் -சொல்ல -சர மழை பொழிந்த ஐதிகம் -கருவரை போல் நின்றான் நீலாத்ரி -த்யான ஸ்லோஹம் —சார்ங்கம் உதைத்த சர மழை -நமக்கு கருணை அம்புதான் வேண்டும் -விசேஷ கைங்கர்யம் கேட்காமல் மழை பொழிய -நித்ய நைமித்திய கர்மாக்களை விடக் கூடாது
-நியத கர்ம குரு த்வம்-ஸ்ரீ கீதை -கர்மத்தை விதிப்படி செய் இல்லை -விதித்த கர்மத்தை செய் -தாத்பர்ய சந்த்ரை –கர்மத்தை செய்வதே விதிப்படி தான் செய்ய வேண்டும் –நியதமான கர்மம் ஞானவான்களும் செய்ய வேண்டும் -வருண தேவனுக்கு அத்தையே நியமிக்கிறாள் -கர்மத்தில் ஞானமும் முக்கியம் எதற்காக மழை பெய்ய வேண்டும் -வாழ உலகினில் -நாங்களும் மகிழ்ந்து நீராட -பாகவத கைங்கர்யம் -நாங்களும் மகிழ -பரஸ்பரம் பாவ யந்த-நித்ய நைமித்திய கர்மங்களை பாகவத கைங்கர்யமாக ஆக்கி – –அர்ஜுனன் ஷத்ரியன் யுத்தம் செய்து பக்தி யோகம் போவான் -சு தர்ம ஞான வைராக்கியம் -உசித கர்ம -தானே பரிமாணம் அடைந்து -முக்தியே கொடுக்கும்
–ஸ்ரீ கீதை -3–10-18 ச்லோஹங்கள்- கேதோ உபநிஷத் அர்த்தங்களே இந்த பாசுரம் -அன்னம் -மழை -கொடுக்க தேவதைகள் -ஏற்பாடு உண்டே -லோக மரியாதை
கர்த்தா செய்து செய்விக்கிறார் –பார்த்த சாரதி -குதிரைக்கு நீரூட்டி -கர்மங்களை விடாமல் –அதற்கே சரீரம் -யஞ்ஞம் -செய்யவே -சக்கரம் -வைத்து –

வருண தேவன் -மூன்று கரண கைங்கர்யம் -நித்ய நைமித்திக்க கர்மம் விடக் கூடாதே–மூன்று வித தியாகங்கள் உடன் -மூன்று அபசாரங்கள் இல்லாமல் -வான வில் –
நீலாத்ரி த்ருஷ்டாந்தம் -தான ஹஸ்தம் -திருக் கண்ணபுரம் -கருவரை போல் நின்றானை -மேகம் அம்பு விட்ட ஐதிக்யம் –
நியதி கர்மம் குரு -கர்மம் நியதம் குரு -நியதிப்படி செய்யாத கர்மமே இல்லையே – விதிக்கப்பட்ட கர்மங்களை செய்ய கீதாச்சார்யன் –
கைங்கர்ய புத்தியால் செய்ய வேண்டும் -உலகம் வாழ -நாங்களும் மார்கழி நீராட -பரம பிரயோஜனத்துக்காக செய்ய வேண்டுமே –
——————————————————————-
க்ருத யுக ஓங்கி உலகளந்த – த்ரேத யுக சார்ங்கம் உதைத்த -பெருமாள் – விபவம் துவாபர யுக கிருஷ்ணன் -வடமதுரை மைந்தன்
-அவதாரம் அடைவு கெடாமல் அருளி -ஓர் இரவில் போனவன் மன்னு-வடமதுரை மைந்தன் -மதுரையார் மன்னன் -பெயரில் அதி விருப்பம் –
அவன் வந்த பின்பு நாம் தூயோமாய் வந்து தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –
நமது பாவை நோன்புக்கு விக்னம் வாராது மாயனே நடத்தி வைப்பதால் -பகவத் ஞானம் உள்ளவள் சொல்லும் சமாதானம்
சௌலப்யம் அனுபவிக்க முடியாமல் கால் ஆளும் கண் சுழலும் -மாயனை –வைகுண்ட நாதனை அனுபவிக்க -இழிந்து -ஆண்டாள் நிலைமை –
உடனே கீழே மனஸ் இறங்கி அவரா இவன் -என்று தாங்காமல் மீண்டும் -கீழே இறங்கி -மன்னு வட மதுரை மைந்தனை –
ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ரமயா ரமமாணாயா இங்கே வந்தானே -ஆனந்த நிலய விமானத்துடன் –
பால கிருஷ்ண லீலைகளையே அனுபவிக்கிறாள் இங்கே –நதியைத் தாண்டும் பழக்கம் மாறாத -மாயன் -விரஜா /யமுனை /
சரயு -ஆற்றங்கரையிலே வாசம் -பக்தர்கள் உடன் அனுபவம் -பாதேயம் -பக்தர்கள் உணவு –காவேரி -நாமும் தாண்டி சென்று சேவித்து வரும்படி வைத்தான்
யமுனை வசுதேவருக்கு வற்றி வா ஸூ தேவனுக்கு கடலே வற்றி த்வாரகை –
சரீரம் ரதம் புத்தி சாரதி ஆத்மா ரதி -இந்த்ரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –பார்த்தசாரதி இடம் ஒப்புவித்து அன்று தேர் கடாவிய கனை கழல் கடவது எந்நாள் –
காலால் காளியன் -கையால் கருடன் -சுமுகன் -மாயன் -வெண்ணெய்-களவு -சுமந்தக மணி விருத்தாந்தம் -ஜாம்பவி திருக்கல்யாணம்
கோல் ஆநிரை -மேய்க்க பால கிருஷ்ணன் -கொல்லா மாக் கோல் -பார்த்த சாரதி -கன்றுகளுக்கு நீரூட்டி பால பருவத்தில் -குதிரைகளுக்கு நீரூட்டி –
ஆனை காத்து ஆனை கொன்று -மாயன் –தூயோமாய் வந்தோம் -தூய்மை மேலும் 15 வரும் -இரண்டு தூய்மை –
தசரதன் -ஆபாச தர்மங்கள் -விடச் சொன்னதை பற்றி – மாம் ஏகம் -என்னைப் பற்று -என்றதை விட்டான் -மோஷம் பலம் இழந்து ஸ்வர்க்கம் -போனான்
இதுவா தூய்மை –அடைய புண்யம் ஹேதுவாகாதாப் போலே பாபமும் விலக்கு அன்று -அவன் சம்பந்தமே ஏற்றம்

மன்னு வடமதுரை -மதுரையார் மன்னன் -யுகங்கள் தோறும் பகவத் சம்பந்தம் / ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் ஆகதாம் மதுராம் புரிம்
வட மதுரை சொல்ல வந்தவள் தானே வாமனன் சத்ருக்கனன் கண்ணன் அவதரித்த க்ரமத்தில் மூன்று பாசுரங்கள் க்ரமத்தில்

————————————————————————–
வேதம் வல்லார்களைக் கொண்டு –இத்யாதி -அரவணையாய் -ஷீராப்தி நாதனே -துயில் எழுந்து ஆயர் ஏறு ஆனார்
-அம்மம் உண்ண துயில் எழாய் -நீராட வேண்டாமோ ஆண்டாள் பாகவத திருப் பள்ளி எழுச்சி பிரகரணம் –
ஐந்து பாசுரங்களில் விடிந்த அடையாளம் உண்டு -ஐந்தில் இல்லை –
பேய் முலை -வெளியில் –உள்ளார் சொல்ல உண்டு –உள்ளே உள்ளவள் சொல்ல -கள்ளச் சகடம் -இவர்கள் சொல்ல காலோச்சி உள்ளவள் சொல்ல
பாகவத சம்ச்லேஷம் அறியாதாவர்களுக்கு பகவத் சம்ச்லேஷம் கிட்டாதே – பிள்ளாய் –பாகவத கைங்கர்யம் பகவத் கைங்கரமும் ஆகும்
பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான் -அவர்கள் திருவடிகளில் விழுந்து அவர்கள் இடமே தான் ஷாமணம் கொள்ள வேண்டும் -அம்பரீஷர் -துர்வாசர்
நரகத்திலே தள்ளுவேன் -அங்கு இருந்து அவனால் எழுந்து வரவே முடியாது -ஸ்ரீ கீதை
ஆஸ்திகர் சஹவாசம் ஒன்றே கொள்ள வேணும் -நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் சஹவாசம் -கூடாது –யார் இடமும் அபசாரமே படக் கூடாது –
ஆஸ்திகர் களுக்கு உபசாரம் பண்ண வேணும் -மேம்பொருள் மேலுள்ள 7 பாசுரங்கள் -சாண்டிலி -பெரிய திருவடி -வ்ருத்தாந்தம் –
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் சொன்ன வார்த்தை -பாகவத அபசாரம் -தானம் வாங்கிக் கொண்டு மனஸ் வாக் காகிக-மூன்று வித அபசாரம்
-பிள்ளாய் -கூப்பிட்டு க்ரௌர்யம் காட்டி -மீண்டும் அபசாரம் -வெட்கி இருக்க -தவறு உணர்ந்து -வெட்கியதால் –மனசால் நினைப்பதே பெரிய அபசாரம்
–உள்ளே உள்ளவன் அறிவான் -உணர்ந்து கொள் -ராமானுஜர் மேல் ஆனை இட்டு வாங்கிக் கொண்டார்
நஞ்சீயர் நம்பிள்ளை -இடம் கால ஷேபம்-கதை -சேவிக்க வெட்கி -திருவாய்மொழி தெரியாமல் வெட்கி -திருவாய் மொழி கேட்டு உணர்வான் என்ற விஸ்வாசம் வந்து -நம்பிள்ளை சொல்ல -பயிலும் சுடர் ஒளி -கேட்டு -திருந்திய கதை -பயிலும் பிறப்பினை தோறும் -பாகவத சம்ச்லேஷம் பெற்றால் பிறவிகள் வேண்டும்
–பகவத் அனுபவம் கிடைத்தால் பிறவி வேண்டாம் -பாகவத சம்ச்லேஷம் என்றால் பல பிறவிகள் கேசவ பக்தி -பக்தர்பக்தி வாசி எம்பெருமானார் –
பாற்கடல் -பரமனை -பயிலும் பிறப்பினை தோறும் எம்மை ஆளும் பரமரே -கிருஷ்ண பக்தர் பரமர் சொல்லவே ஆழ்வாருக்கும் பெருமாள் திரு உள்ளம் உகக்கும்
நம்பர்கள் இவரே -என்கிறார் அடுத்து -கைவிடாதவர்கள் -தட்டித் திருத்துவார்கள் -அவன் சாஸ்திரம் பார்க்க இவர்கள் பெருமாள் கிருபை பார்த்து –
பிதாசொன்ன படி பெருமாள் –நேரே பிதா சொன்ன படி லஷ்மணன் –நேரே பிதா நினைவின் படி -பரத ஆழ்வான் -அதன் எல்லை அளவும் –
பெருமாளுக்கு உகந்த கைங்கர்யம் -பரத ஆழ்வானுக்கு செய்வதே -சத்ருகன ஆழ்வான் -உண்மையில் ராம கைங்கர்யம் செய்தவன் சத்ருகன ஆழ்வான் என்பதால்
-பாகவதர் -பாரதந்த்ரர் பரம பாவானர் பரம போக்யர்-பரம சேஷி -அநகக –இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து அவருக்கு கைங்கர்யம் செய்வது
-அதி துர்லபம் –பாகவத பிரபாவம் தெரிந்து இருந்தும் மறந்து இருப்பவளை பள்ளி உணர்த்துகிறார்கள்
———————————————————————————————————–
பேய்ப்பெண்ணே -இங்கே -ததீய சேஷத்வம் உணர்ந்து மறந்து கிடப்பவள் பிள்ளாய் -தெரியாதவள் –உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்தி அருள வேண்டும்
-ஆட் படுத்திய விமலன் -25-நெடுமாலே -பாகவத சம்ச்லேஷம் வேண்டும் என்று சொல்லாமல் உன்னை அர்தித்து வந்தோம் –கொடுப்பது இவர் தானே
-ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் பாகவத அனுபவம் எல்லாவற்றையும் –நாடி நாடி நரசிங்கா -முறை இட்டாள் பராங்குச நாயகி -ஆடி ஆடி –
அரசன் காலில் தானே திருட்டு போனதை முறையிட வேண்டும் -பேய்ப்பெண்ணே -நிந்தையா -பாகவத அபசாரம் இல்லையோ –
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய் -வாசி இல்லை -ஒரு வ்யக்தி மேல் விருப்பும் வெறுப்பும் இல்லை -இவர்களுக்கு
சோகம் மோகம்- பசி தாகம்- ராக த்வேஷம் காம குரோதம், -அஹங்காரம் மமகாரம் -நிந்தை ஸ்துதி இல்லையே
அடைய சகாயம் செய்தால் -நாயகப் பெண் பிள்ளை -தடை செய்தால் பேய்ப் பெண்ணே –
பலராமன் -கிருஷ்ணன் ஒரே இரட்டையில் நோக்கு அன்பால் வந்த கோபம் பாவ பந்தம் -பிராப்த விஷயத்தில் மட்டுமே
பேய்ப் பெண்ணே -சொல்லி -அடையாளம் சொன்னதும் -அரவம் கேட்டேன் வந்தேன் -என்றதும் -நல்ல எண்ணம் வந்த உடன் -நாயகப் பெண் பிள்ளாய்
மாறுதல் வந்த உடனே இந்த விளிச் சொல் -அரைப்பாட்டில் –ச்நேஹத்தால் வந்த கோபம் -பிரணய ரோஷம் போலே கதவை அடைக்கவும் செய்வாள் –
கடியன் கொடியன் -ஆகிலும் கொடிய வான் நெஞ்சம் அவன் யென்றே கிடக்குமே –
சுந்தரி ரகு நாதஸ்ய –சுந்தர காண்டம் -ஆரம்பம் -என்னுடைய பந்தும் கழலும் -தந்து போ -அதனாலே மேலே வந்தான்
-ஞானாதிக்யத்தால் வந்தவை எல்லாம் அடிக் கலஞ்சு பெரும்
ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் -கண்ணன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் -ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாமை உண்டே –
அருள் என்னும் தண்டால் அடித்தவணை -மயர்வற மதி நலம் அருளினவனை -அருளாதே நீர் -திரு நாமம் சாத்துகிறார் -பேர் அருளாளன் –
-திருக் குருகூர் இருந்து வந்து இருக்க வேண்டும் உணர்ந்தான் -அருளி -அவர் ஆவி துவரா முன் -கவாட்ஷம் மூலம் உம்மை பார்ப்பார் –
அருளாழி புட் கடவி அவர் வீதி ஒரு நாள் என்று -அருளாழி அம்மான் -கருட வாகனம் ஏறினதும் இந்த திரு நாமம் –
அவர் முன்னிட்டவரை நாம் முன்னிட வேண்டும் -குருகு பின்னே புட் கடாவி வந்து அருளினான்
என் பிழையே நினைந்து -அருளாத திருமாலார் -மிதுனத்துக்கு திரு நாமம் –
சேர்ந்தால் -அம் தாமத்து அன்பு ஆரம் உள -பிரிந்தால் தம்முடைய நிறை வளை எல்லாம் கொண்டு போனான் என்பர் –
ஐவர் திசை திசை வலித்து -என்றும் சொல்வர் -ஒரே கரணத்தால் எல்லா செயல்களையும் விரும்புவார் -இப்படி மாறி மாறி வரும்
-சம்சார பீதியாலும் அவர் உடைய வை லஷண்யத்தாலும் -தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ -இரண்டு கூற்றங்கள் -தாமரைக் கண்கள் உடன் அமர்ந்தான்
-காட்டிய பொழுது -காட்டேமின் உன் உரு என் உயிரிக்கு அது காலனே -இல்லாத பொழுது -பேரமர் காதல் -கழிய மிக்க ஒரு காதல் வளர்த்து -இரண்டும் மாறி மாறி வரும்
நீர் மலி வையத்து நீடு நிற்பார் -என்றும் சொல்வார் -நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள் – இவை என்ன உலகு இயற்க்கை என்றும் சொல்வார்
————————————————————————–
எருமை சிறுவீடு -எங்கும் கோழி அழைத்தன -மெய்ய்ப்பாடு -இடைச்சி பாவத்தில் -கண்ணனுக்கு இவள் மேல் பிரேமம் -கோதுகலமுடைய பாவாய்
-நாயகப் பெண் பிள்ளாய் முன் பாசுரம் -கண்ணன் மேல் அதீத ப்ரேமம் கொண்டவள் –பாடிப்பறை கொண்டு -பாடுவதே பறை-
சுந்தர பாண்டியன் -கண்ணாடி -கைங்கர்யம் இட்டே பெயர் -அஹம் என்ற ஆர்ப்பைத் தொலைத்தால் நிலை நின்ற பெயர் தாஸ்யம் இ றே
அடியேன் சொல்லி இந்த அர்த்தம் பதிய –ஸுவ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்த இவனுக்கு ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் -கோதுகலமுடைய பாவாய் -பெருமாள் குகன் –தீமையே நன்மை அவன் இவனை பெற நினைக்கும் பொழுது
-பரதன் நேராக பெருமாள்-நன்மையே தீமை -அவன் இவனை பெற நினைத்தால் –சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியில் -திரு வண் பரிசாரம்
திருவல்லா அருகில் ஆறு திவ்ய தேசம் -சம்பந்தம் சொல்லும் பதிகம் -கோனாரை அடியேன் -அனன்யார்ஹ சேஷத்வம் கோ -ஸ்வாமி-
சேஷத்வம் அறிந்த பின்பு கைங்கர்யம் செய்ய திரு வண் பரிசாரம் -வருவார் செல்வார் -சுகுமாரமான அவனே சுமக்க வேண்டுமா –
கையிலே வைத்த திவ்யாயுதங்கள்–என் திறம சொல்லார் செய்வது என் -ஆழ்வார் நிலையை -ஒரு பாடு உழல்வான் ஒரு அடியான் உளன்
-தெரிவிக்க -வாளும் வில்லும் கொண்டு செல்வார் மற்று இல்லை –ஏவ மற்று ஆட்செய்வார் தேவிமாராவார் -முன்பு சொல்லி இங்கு மற்று இல்லை -இதுவும் ஒரு மாற்றம் -20 பாசுரங்களில் –உனக்காக அடிமை செய்ய இளைய பெருமாளை போலே மற்று இல்லை என்கிறேன் -மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே -திருப் புளிங்குடி காய்சின வேந்தன் -இந்த கோதுகலம் -நமக்கு அவன் பால் -நாம் பக்தர்கள் மூலம் அவனிடம் கொள்ளும் கோதுகலம் -இறுதி படிக்கட்டு
பெருமாள் -ராமானுஜர் -நம் சம்பந்திகள் அளவிலும் கேட்டு வாங்கி கொடுத்தார் –என்று கொலோ இல்லாமல் இன்று -ஆக்க ஆசார்யர் மூலம் –
ராமானுஜ தாசன் -என்றதே கொண்டு அவர் -கமலா ரமணீயன் சரண் செய்து பெற்ற பேற்றை பெறுவோம் -செய் நீர் நிரம்பி பொசிந்து காட்டுமா போலே –
தெளிந்த என் சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம் போக்யத்வரை -த்யாஜ்ய தேக வ்யாமோஹம் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்
-மார்க்க பந்து சைத்யம் திரு மோகூர் ஆத்தன் -போகத்தில் தட்டு மாறி -அவன் இவனை பெற நினைக்கும் பொழுது
பக்தர்கள் -பக்தர்கள் -தேட்டறும் திறல் –ஈட்டம் கண்டிடக் கூடுமேல் –பொன்னாச்சியார் -பிள்ளை உறங்கா வல்லி
தாசர் -பாகவத பிரபாவம் அறிந்து -பாரதந்த்ர்யம் கல் போலே கட்டை போலே இருந்து இருக்க வேண்டும் –
அஷ்ட சகஸ்ரம் கிராமம் பருத்திக் கொல்லை நாச்சியார் -எச்சான் திரு மாளிகை –வந்த அடியவர்கள் கௌரவிக்காமல் –
ஆறு மாதம் துணி துவைத்து பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ள உபதேசித்தார் -பக்த ஜன வாத்சல்யம் -பாகவத சமாராதானம் -மூன்றாவது படி
பெருமாள் பக்தர்களுக்காக பக்தர்களை ஏற்று-கேசவன் தமர் -அடுத்த படி -சொட்டை குலத்தில் வந்தார் உளரோ -அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாட்டாறு -ஆதி கேசவன் பெருமாள் அடியார் தம் அடியேற்கு அருள் தருவான் அமைகின்றான் ஆழியான் -நண்ணினம் நாரணனை -விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் அதுவும் நம் விதி வகையே  பெரியார்க்கு ஆட்பட்டக்கால் -பெறாத பயன் பெறுமாறு -நான்காவது படி -குரு பரம்பரை –
கரிய கோலத் திரு உரு காண்பன் நான் -திரி தந்தாகிலும் -அலங்காரம் பண்ணிக் கொண்டு பின்னே வந்து அருளினான் -திரு உடன்
-திருக் காண்பன் -உரு காண்பன் -கரிய கோலத் திரு உரு -கண்ணன் என்னும் கரும் தெய்வம் —பக்த பக்தேஷு -பிரகடனம் -செய்த பின்பு
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் –மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -காண்பன் -அவ்வளவு மெனக்கட்டும்-கும்பிடு ஆழ்வாருக்காக-
-என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னிடைய ஆவியே என்னும் -நேர் தொடர்பு இல்லை -தாயார் மூலம் –
————————————————————————–
9/10/11/12/15 -விடிந்த அடையாளங்கள் இல்லை –6/7/8/13/14 -விடிந்த அடையாளங்கள் உண்டு –தூ மணி மாடத்து —
தேக பந்தம் -பாகவதர்கள் உடன் -உடையவர் -முதலியாண்டான் போலே -உறி அடி உத்சவம் பட்டர் கோஷ்டி மாறி கிருஷ்ண அனுபவம் பெற்றால் போலே
பிரபத்தி நிஷ்டையில் உள்ள அதிகாரிகளை இந்த பாசுரத்திலும் அடுத்த பாசுரத்திலும் -துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி -அத்வேஷம் அப்ரதிஷேதம் ஒன்றே வேணும் -விலக்காமை ஒன்றே வேண்டும் –
கண் வளரும் மாமான் மகளே -தூங்கும் -உறங்கும் -கள்ள நித்தரை -யோக நித்தரை -முனியே -மனன சீலனே –அரவின் அணை மிசை -அவனை ஆழ்வார்கள் பாட பாகவதர்களை ஆண்டாள் இப்படி அருளிச் செய்ய –மாலாகாரர் -மாமன் -மகா மகான் -என்றுமாம் -மடி தடவாத சோறு -சுண்ணாம்பு கலவாத சந்தனம் -சுருள் நாறாத பூ -பிரதிபலன் ஸுய பிரயோஜனம் ஸுய போக்யம் இல்லாத தூய்மை- -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி – தேக பந்துத்வம் -எதற்கு
ஹே கிருஷ்ண -விஸ்வரூபம் பார்த்த அர்ஜுனன் -பயந்து –போர் பாகு -மோதிரம் கடலை தாவப் பண்ணிற்று -திருவடி புரிந்து கொண்டார் -நிமித்த மாதரம் –
ஹே கிருஷ்ண யாதவ கூப்பிட்டேன் பிரமாதா அன்பினால் சிறு பிள்ளை தனத்தால் உறவால் -ஷமிக்க பிரார்த்தித்தான் –
குற்றம் இருந்தாலும் -அஸ்தான-மூன்று குற்றங்கள் இருந்தாலும் -பார்த்தம் பிரபன்ன -மன்னித்தார் -முதலில் பார்த்தம் -அப்புறம் பிரபன்ன –
மாமீர் -அடங்கிய பெண் -அன்னையும் அத்தனும் -என்று அடியோமுக்கு இரங்கிற்று இலள்–பெரிய திருமொழி -3-3-7- பூம் கழலி அணியாலி புகுவர் கொலோ
-கள்வன் கொல் யான் அறியேன் -மாமீர் -ஜனகன் மம சுதா -அம்மாவாக நினைக்கவில்லை என்று இருக்கும் மாமீர் இவள் –
தன் வீடு போலே வந்தான் -கரியான் -வெள்ளி வளை கைப் பற்ற -எல்லாம் வெண்ணெய் பால் போலே வெளுப்பாக வேணும் இவளுக்கு –
வல்லி மருங்குல் -ஒரே வார்த்தை -கரியான் ஒரு காளை -அவனுக்கு அத்தனையும் வேணும் இவளுக்கு இதுவும் வேண்டா –
பெருமாள் போத என்று கூட்டிப் போகலாம் –அவன் சொத்தை அவன் கொண்டு போக -வேறு என்ன வேணும் -கைப்பிடியிலே ஸ்வாமி சொத்து உணரலாம்
-நாம் கர்மாதிகள் பண்ணியே காத்து இருக்க வேண்டும் -கைத்தலம் பற்ற கனாக் கண்ட -அங்கு வாழ்வு
விட்டு தானே பற்ற வேண்டும் பிதரான் சாஸ்திரம் அன்றோ –
அடியோமுக்கு -என் அபிப்ராயம் இவளுக்கு அடியேன் என்பதே -கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று என்னப் பெறுவரே -சேஷி அன்றோ அவள் –
முலையோ –திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -பராங்குச நாயகி -அன்னை அத்தன் மற்றவர் பேச -தாசர்களை விடச் சொல்ல வில்லையே சாஸ்திரம் –
பிராதா -சிஷ்யன் -தாஸ்யன்–பரத ஆழ்வான் பிரார்த்திக்க -தாஸ்யம் -பிரஹ்மாஸ்திரம் –அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரிரே
நீணிலா முற்றம் -திருமங்கை ஆழ்வார் எதிரிலே உள்ள முற்றம் -இவளை மகள் என்று கொள்ள வில்லை -அதுபோலே இங்கே மாமியும் –
ஆசார்யன் சொல்லி சிஷ்யனை தான் சேர்த்த பின்பு சொத்தை ஸ்வாமி அனுபவிக்க இவர் தள்ளி இருந்து சேர்த்தியை அனுபவிக்க வேணும்
ஆண்டாள் மணவாளன் உத்சவம் -பெரியாழ்வார் -மங்களா சாசனம் செய்வது போலே -பாகவதருக்கு உள்ள ஏற்றம் –
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன் –காரார் திருமேனி காணும் அளவும் போய் –ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் –
மகள் -அவனே உபாயம் உபேயம்-உறுதியாக இருக்க -தாய் அநந்ய உபாயத்வம் –வேறு உபாயம் கூடாது –சேய் –
தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு -இருந்தமை காட்டினீர் -மழை போல் பொழியும் திருக் கண்கள் – நுழையும் –
ததேக உபாயத்வம் -அவனே உபாயம் -வாசி இல்லையே –வேறு ஒருவருக்கு ஆட்படக் கூடாது என்றது அவனே உபாயம் -அவன் வேறு ஒருவரில் சேர்த்தி இல்லையே –
முன்பு பார்த்த அஞ்சையும் தாண்டி -ஆறாவது கோஷ்டி -இது பக்தர்களுக்கா பக்தர் சம்பந்திகளை பிடிப்பது
மதுரகவி ஆழ்வார் நம் பெருமாளுக்காக கரிய கோல திரு உரு கண்டார் -அது ஐந்தாம் நிலை -அதற்கும் மேல் இங்கே – விஞ்சி நிற்கும் நிலை –
ஒரு பக்தன் -மகள் மாமீர் -மகளுக்காக மாமீர் பிடிக்கும் -சம்பந்தி அளவும் சென்றதே இவள் கோதுகலம் இல்லை கண் வளரும் – அது முக்தர் படி இது நித்யர் படி –
இளைய பெருமாள் படி அது -சீதை மூலம் பெருமாள் பின் சென்று கைங்கர்யம் -பரபரப்பு -இது பரதன் நிலை -காலம் கொடுத்து தானே வந்து காட்சி கொடுத்தானே
—————————————————————————–
வாசல் திறவாதார் மாற்றமும் தாராரோ -வாயையாவது திறக்கக் கூடாதோ –போற்றப் பட்டு -கீழே மாதவன் வைகுந்தன் என்று என்று –
முக்தர் -புண்ணியம் -அனுகூலர்க்கும் பாபம் பிரதிகூலருக்கும் -உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
துயில் அணை மேல் கண் வளரும் -அவள் துயில் இவள் பெரும் துயில் -அரும் கலன் -ஆபரணம் -அரும் கலமே-முதன்மையானவள் –
மூன்றாவது நாராயணன் -இதில் -நாம் போற்ற அவர் பறை கொடுக்கிறார் -போற்றுவதால் இல்லை -போய்ருவதர்க்காக இல்லை
-நாராயணன் என்பதால் போற்றுகிறோம் -நா படைத்த பயன் -புண்ணியன் -தார்மிகன் -தண்ணீர் போலே பொதுவானவன் -ஜல ஸ்தல வாசி இல்லாமல் –
போற்றப் பறை தரும் புண்ணியன் நாராயாண -ஆப -தண்ணீரை படைத்து -மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -பெரிய நீர்படைத்து –
சப்தமே தண்ணீரிலே இருந்து வந்த -பொதுவாக இருக்கும் ஸ்வ பாவம் -சமோஹம் சர்வ பூதேஷு -சமமாக இருக்கும் தன்மையே யோகம் -யோகேஸ்வரன் –
தண்ணீர் போலே பொதுவானால் ராவணன் -விபீஷணன் ஆஸ்திக நாஸ்திக வாசி இல்லாமல் -தத் புருஷ சமாசம்
குணங்கள் இருப்பிடமாககொண்டது போலே நியத பிரகாரமாக அனைத்தையும் கொண்டு -தனித்து இருக்காதே
பஹூர் வ்யாப்தி -ஸ்வாமி -அறிவோம் -புண்ணியன் –
நாராயணன் மூர்த்தி கேசவன் -வாத்சல்யம் உடையவன் -அங்கு –நாரங்களை அயனமாக உடையவன் –பஹூ வ்ரீஹி சமாசம் –
-அந்தர் வ்யாப்தி –வாத்சல்யன் -அந்தர்யாமி அனைவருக்கும் -உண்டே –
தண்ணீர் போலே சமமாக -ராவணன் குற்றத்தையும் குணமாக கொண்டு -யதிவா ராவணஸ் -திருந்த நாள் பார்த்து இருக்கும் –
தர்மம் -வேத போதித இஷ்ட -சாதனம் -அனுஷ்டித்து வேத போதித புருஷார்த்தம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் அவனே புண்ணியம் –
அவனாலே அவனை அடைவதே தர்மம் –புண்ணியம் -தண்ணீர் போலே பொதுவானவன் -ஸ்வாமி அந்தர்யாமி -புண்ணியன் -உபாயம் உபேயம்
-தார்மிகம் -அவனே -அயனம் ஆஸ்ரயம் இருப்பிடம் வாசம் -அயனம் உபாயம் உபேய அர்த்தங்களும் உண்டே -நாராயணனே நமக்கே பறை தருவான்
-நாராயணனே தருவான் உபாயம் -ஞானம் இருப்பார்களுக்கு -நாராயணனே பறை உபேயம் -புருஷனால் அர்த்திக்கப் பட வேண்டும்
-இவை சேதனர்களுக்கு-வியாபித்தல் அசேதனர்களுக்கும் உண்டே -உபாய உபேயம் அறிவுள்ள ஜீவர்களுக்கு –
போற்றினதால் பறை தருவான் இல்லை -முதலிலே நாராயணனே நமக்கே பறை தருவான் -உபாய உபேயம் -நாம் அருகில் நாராயணன் -பறை அப்புறம் -புருஷார்த்தம் -சொல்லி -அப்புறம் தருவான் -உபாயம் –
ஸ்தாபித்த பின்பு -வாத்சல்யம் உணர்ந்து போற்ற வேண்டாமோ -போற்றும் பொழுது குற்றம் வந்தால் -வாத்சல்யன் குணமாக கொள்ளுவான் -தாரை ஷமையில் பொறுமை -பூமியை ஒப்பான் -சகாரம் விட்டு சொல்லி -இந்த தப்பையும் மன்னித்து கனிவாக திருமுகம் -மனமுடையீர் -ஸ்ரத்தையே அமையும் —
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -சுருக்கி -அதுக்கும் திண்ணம் –
வ்யாபகத்வம் அந்தர்யாமி வாத்சல்யம் -சிருஷ்டி தண்ணீர் -சங்கல்பித்து சிருஷ்டி -அனுக்ரஹ கார்யம் -அசத் சமமாக இருக்க -பிராட்டி கடாஷம் பெற்று அமிர்ததில் நனைந்து –தயாவானாகக் கொண்டு -படைத்தான் -பிரார்த்திக்காமல் இருக்கவே -ஆகவே பெற்றுக் கொண்டதால் போற்றுகிறோம்
அத்வேஷம் அப்ரதிஷேதம் விலக்காமை பிள்ளை தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதே ஒற்றுதல் போலே -தூற்றாமல் இருப்பதே போற்றி -நன்றி இல்லாமல் இருப்பதே –
போற்றார் பக்கலிலே விடாமல் கிடக்குமே -அந்தர்யாமித்வம் -போற்றுவாரை விடுவானோ -அகவையில் அணைத்துக் கொண்டு தன் பேறாக கிடக்கும் –
கைங்கர்ய ரூபமாக -செய்வதே -அனைத்து வியாபாரங்களும் -பெரும் துயில் -வாழும் சோம்பர் -செய்த வேள்வியர் –பிரபன்னர் –
பிராப்யாந்தரதுக்கும் இவனே அருள வேண்டும் -பெருமாள் புண்ணியத்திலே நடந்தது -வாய் வார்த்தை -உபாயமாக தர்மமாக சமமாக குற்றம் பார்க்காமல் அருளுகிறான் –
அக்னி ஆதித்யன் அந்தர்யாமியாக அவற்றையும் கொடுப்பார் -இவனை புருஷார்தமாகக் கொண்டால் உபாயமாக இருக்கச் சொல்ல வேண்டுமோ -சோம்பல் உபாய பாவத்தில் கைங்கர்யத்தில் உத்சாகம் -இரண்டு பாவனையும் காட்டி அருளுகிறாள் -துயில் பெரும் துயில் கோதுகல பாவை மூன்றாலும் அமைத்து வைத்து காட்டி அருளுகிறாள் ஆண்டாள் -மேலே வேலை செய்யும் பாசுரம் -கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து -சட்டு என்று கறந்த கோவலன் ராக பிராப்தம் ஆசையுடன் செய்கிறான் –
————————————————————————————————————
கற்றுக்கறவை ஆண்டாள் போலே கன்றுகளாக இருக்கும் பொழுதே கறவை கிருஷ்ண ஸ்பர்சம் -கன்றுகள் உடன் கூடிய கறவை என்றுமாம் –
கறந்து –அனைத்தையும் வேகமாக கறக்கும் ஒருவன் என்றபடி கறக்கும் இல்லை -கறந்து முடித்தான் -எல்லாம் கண்ணன் பிரசாதத்தால்
லாவண்யம் சௌந்தர்யம் மிக்க -பெண்மணி -நீ பேசினால் தான் எங்களுக்கு செல்வம் -கண்ணன் கிடைப்பான் –
குற்றம் இல்லாத கோவலர் –சென்று செருச் செய்யும் -நிராயுத பாணி கொல்லாதவர் –
கறந்து குற்றம் ஓன்று இல்லாத -வர்ணாஸ்ரம தர்மம் அனுஷ்டித்து குற்றம் இல்லாத -சர்வ தர்மான் பரித்யஜ்ய -விட்டே பற்ற வேணும் -உபாய புத்தா அனுஷ்டிக்க கூடாது -இதுவே குற்றம் இல்லாத கோவலன் -வர்ணாஸ்ரம தர்மம் செய்தே -பரம புருஷனை த்யானம் அர்ச்சனை -செய்ய வேண்டும்
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி –இவள் அவனே உபாயம் உபேயம் உணர்த்தி -அவன் உகந்த வர்ணாஸ்ரமம் செய்த கோவலன் -இரண்டு கதாபாத்ரம் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -நன்றாக தூங்கி -ஒன்றும் பண்ணாமல் இருக்கக் கூடாது – தப்பும் பண்ணக் கூடாது
மன் மனாப –மாம் நமஸ்குரு –சர்வ தர்மான் -இரண்டுக்கும் இந்த பாசுரம் –கறந்த கோவலன் –சிற்றாதே பேசாதே -இரண்டும் வேண்டும்
-விதித்து இருப்பதால் செய்யாமல் ராக பிராப்தமாக செய்ய வேண்டும் —
பகவத் விஷயமே தேக விஷயமாக இருக்கிறவன் –பூவை இத்யாதி – எல்லாம் அவனே–பெருமாள் உகக்கும் –பரம பக்தன் –
அவனுக்கு எம்பெருமான் எல்லாம் நான் -என்று இருப்பான் -இவன் பக்கல் செய்யும் சிறிய அபராதத்தையும் பொறுக்க மாட்டான் –
தேக ஆத்ம யாத்ரை -செய்த குற்றம் பொறுக்கும் -செய்தாரேல் நன்று செய்தார் -அடியார் திறத்தகத்து -என்றது தேக யாத்ரை ஆத்ம யாத்ரை
ஒன்றாக உள்ளவனுக்கு –இந்த கோவலன் போல்வான் -குற்றத்தை நாற்றமாக கொள்வான் -அக்ரூரர் மாலாகார விதுரர் போல்வார் –
இவர்கள் குற்றமே செய்வது இல்லையே -சாதுறேவ சமந்தா -சாது கோஷ்டியுள் கொள்ளப் படுவார் –
தேக யாத்ரை பார்த்து கொஞ்சம் பகவத் கைங்கர்யம் -கொஞ்சம் சேர்ந்ததும் மற்றவற்றை விலக்குவார் பத்ம நாபோ மர பிரபு –குற்றத்தை பொறுக்கும் இவனுக்கு
-பீஷ்மர் அர்ஜுனன் போல்வார் -தேக யாத்ரை மட்டுமே -குற்றம் அசக்யம்-பொறுத்துக்க மாட்டான் -மூன்றாவது கோஷ்டி –
அன்று அதனை ஈன்று உகந்த ஆ -இடம் வாத்சல்யம் போலே -சரணம் செய்வதற்கு முன்பு செய்த குற்றம் பொறுக்கிறார்
-தோஷோ யத்யபி -தோஷோவான் ஆகிலும்-விபீஷணஸ்து தர்மாத்மா –சரணம் செய்த பின்பு குற்றம் செய்யக் கூடாதே –
தோஷோ யத்யபி -தஸ்ய -அது அவன் அபிப்ராயம் படி தோஷம் -சரணாகதி சாஸ்திரம் –என் அபிப்ராயத்தால் குற்றம் இல்லை
-தஸ்ய -தேக யாத்ரையே ஆத்ம யாத்ரையாக கொண்ட அவன் குற்றம் -தஸ்ய -என்கிறார்
தஸ்ய ஸ்யாத்–நத்யஜேயம் -விட முடியாதே -இயலாதே கெஞ்சு கிறாராம் – பெருமாள் –புறா கதை அடுத்து –
அவன் அனைத்தையும் விட்டு வந்தானே -என்னால் விடப் போமோ –தேக யாத்ரையே பகவத் விஷயமாக இருப்பவன் அன்றோ
——————————————————————-
கோவலர் தம் பொற் கொடியே -முன்பு –நற் செல்வன் தங்கை இளம் கன்றாக இருக்கும் பொழுதே எருமை -கன்று உடன் கூடிய எருமை
மகளோடு தங்கையோடு வாசி அற சம்பந்தம் உத்தேச்யம் -மேலே பனி வெள்ளம் கீழே பால் வெள்ளம் நடுவிலே மால் வெள்ளம் –
சினத்தினால் – தென்னிலங்கை கோமானை செற்றான் –அபிமானத்தை அழித்து- பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான் என்று ஸூ சிப்பித்துக் காட்டுகிறாள்
இனியானையும் பாட -நீ வாய் திறவாய் –பேர் உறக்கம் -புள்ளும்-ஆரம்பித்து -உறக்கம் -மேலே –துயில் –பெரும் துயில் இங்கே பேர் உறக்கம் -வளர்ந்து போகின்றதே
அனைத்து இல்லாதாரும் அறிந்து -பகவத் குணங்கள் அனைவரும் அறிந்தது போலே -ராமானுஜர் -மண் மிசை யோனிகள் –மாதவனே கண்ணுற நிற்கிலும்
–காணகில்லா உலகோர் எல்லாம் –நாரணர்க்கு -அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே -அது போலே இந்த பெண் –
மால் வெள்ளம் -தேக யாத்ரை பகவத் விஷயம் -மண்ணை துழாவி வாமனன் மண் இது என்னும் –தரமி தர்மம் ஐக்கியம் -சரீராத்மா -ஞானம் அறிந்து -நியத பிரகாரம் -நின்ற குன்றம் -நெடு மாலே வா என்னும் -சந்த்ரனை பார்த்து ஒளி மணி வண்ணா என்னும் -நன்று பெய்யும் மழை காணில் நாரனான் வந்தான் என்று ஆலும் என்னும் -செந்தீயை தழுவி அச்சுதன் என்னும் -மழை என்றாலே மால் -பனி வெள்ளம் பால் வெள்ளம் மால் வெள்ளம் -வாலி மாண்ட பின் நண்பன் அண்ணன் என்று அழுதாரே பெருமாள் –கர்மாதீன மழை -கிருபா மழை நாம் சிக்கிக் கொண்டு இருக்க -அவிவேக துக்க வர்ஷிணி-திக்கு தெரியாத காட்டில் –குண வெள்ளம் அனுபவித்து வாழ வேண்டும் -சீர் பாடி பேர் பாடி -மிளிர்ந்து -பக்தனைப் பார்த்து -ஸ்வா தந்த்ரம் தடுக்க -கருணை பொழியட்டும் அதிலே எங்களை நனைப்பாய் -குளிர் அருவி வேங்கடம் -சௌந்தர்யம் மழை ஆனந்தம் மழை கிருபா மழை -ஐந்தருவி -ஐந்தறிவு வேணும் -விதி வாய்க்கின்றது காப்பார்யார் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அடி பணிந்து மழை சாரலை அனுபவிக்கலாம் –
பரத்வம் -கங்கோத்ரி போலே கிரீடம் இருந்து பொலிய ஆரம்பிக்க -கிருபா நதி நிறைய பொழிய -முத்துப்பல் ஸ்மிதா வெள்ளம் சேர்ந்து -வஷச்தல கருணை வெள்ளம் -பிராட்டியால் -இரட்டிக்க -ஸ்வா தந்த்ரம் கலவாத குளிர் அருவி வேங்கடம் -வெற்பு என்று வேங்கடம் பாட வீடாகி நிற்கின்றேன் –ஹார வர்ணங்கள் –வெள்ளை மாலை -ரம்பா ஸ்தம்பா-10 மதகுகள் திருவடி விரல்கள் -கண்டு உபதேசித்த நம்மாழ்வார் -நம்மிடம் சேர்ப்பிப்பார் –
கருணைக் கடல் நம்மாழ்வார் மேகம் -ஸ்வா தந்த்ரம் கழித்து -சடரிபு ஜலதி –ஹம்ச வாகனம் -பரங்கி நாற்காலி மதுரகவி -கொற்றப்புள் பரத்வன் – நாத முனி -மலை-அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -ஆளவந்தார் காட்டாறு -ஐந்து கிளை ஆறுகள் -ராமானுஜர் ஏரி-74 மதகுகள் -நம்மிடம் –
மழை பெய்தால் ஒக்கும் -கண்ண நீரோடும் –கரும் தடம் கண்ணி -அரவிந்த லோசனன் -கை தொழுத அந்நாள் முதல் இந்நாள் வரை -விடை கொடுத்து -ஆழ்வாரை
அழவைத்து நம்மை உஜீவிக்க -மாரி மாறாத –தண்ணம்-வாரி மாறாத குருகூர் –வேங்கடம் -அனுக்ரஹத்தால் கருணை மழை திருவாய்மொழியாக-
மழை கொலோ வருகிறதோ என்று கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு -மங்கைமார் சாலக வாசல் பற்றி -இங்கும் கடைத்தலை வாசல் பற்றி –
மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா -மழை தவழும் வேங்கடம் –கர்ம வெள்ளம் -தாபத்ரய துக்க வர்ஷிணி -போக்க கிருபா வெள்ளம் -தரித்து நிற்க திருமணத் தூணை பற்றி நின்று மாயோனை -ஹ ரி -இரண்டு எழுத்துக்களும் திரு மணத் தூண் –
கோவலன் -வீட்டில் மூன்று வெள்ளம் -ஆழ்வார் பாசுரம் பரதவ அனுபவம் அழகு -மேல் பனி வெள்ளம் -பாகவத அனுபவம் -நடுவில் கீழே ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள்
-வாசு தேவம் சர்வம் இதி மகாத்மா ஸூ துர் லபம் -இதிலே பகவத் பாகவத பிரபாவங்கள் உண்டே –சேர்ந்தே இருக்கும் இரண்டும் –
ஸ்ரீ வைகுண்டம் நத்தம் பெரும் குளம் ஒரே பாசுரம் –பெறுவதற்கு வந்து -பெற்று அருளினார்கள் -தொழும் அத்திசை உற்று நோக்கியே
வேடன் வேடுவச்சி பஷி குரங்கு சராசரம் –அவன் தம்பி இடைச்சி-சிந்தயந்தி – இடையன் -ததி பாண்டன் -கூனி மாலாகாரர் -பிண விருந்து இட்டவர்
-வேண்டிய அடிசில் இட்டவர் அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெத்த மைந்தன் -மார்கண்டேயர் –18 நாடார் பெரும் கூட்டம்
பாகவதர்கள் –பகவத் பாகவத் பிரபாபம் மால் பால் மனம் சுழித்த பாகவதர்கள் பிரபாபவம் -மால் வெள்ளம் பால் வெள்ளம் –
நம் பெருமாள் -திருவரங்கம் ஆளிகைகார் -நம் பெருமாள் –நம்மாழ்வார் –நஞ்சீயர் -நம் பிள்ளை -பகவத் பாகவத பிரபாவம் கலந்தே இருக்கும்
-கள்ளம் தவிர்ந்து கலந்து இருக்க திருப்பள்ளி உணர்த்துகிறார்கள்
————————————————
கண் அழகு இன்று போதரிக் கண்ணினாய் -பேச்சழகு நாளைக்கு நாவுடையாய் -ஆச்சார்யர்களுக்கு இரண்டும் உண்டே –
ராமனையும் சொல்வோம் கண்ணனையும் சொல்வோம் –புள்ளும் சிலம்பின -மீண்டும் அடையாளம் -கூட்டை விட்டுப் புறப்படும் போது முன்பு –
அணி வகுத்து போகும் பொழுது இறை தேடிக் கொண்டு இருக்கும் சிலம்பின சப்தம் இங்கே
தனி அனுபவம் -கள்ளத்தனம் -போதரிக்கண்ணினாய் ஞானம் உடைய -கண் அழகுக்காக கிருஷ்ணன் இவள் இடம் ஈடுபட்டு –
நல் செல்வன் தங்கை -ராமானுஜர் -கள்ளத் தனம் அறுத்த பின்பும் கள்ளத்தனமா
கருத்தில் புகுந்து -உள்ளில் கள்ளம் கழற்றி -கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து -வாமனன் வஞ்சிக்கலாம் கள்ளக் குறள் உருவாய் –
-கள்ளத்தனம் அவனுக்கு –இடையால் அளந்து கொண்ட முக்கியம் -ராமானுஜர் வஞ்சிக்கலாமா -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்பு –
பொய்ப் பொருள் வாராதே -கட்டப் பொருளை மறைப் பொருள் என்று நினைத்த பொய்ப் பொருள்கள் –
சாஸ்திர நியமம் படி வர்ணாஸ்ரமம் செய்யாத கள்ளத்தனம் -கண்டு அருளாமல் சாப்பிடுவது பெரிய கள்ளத்தனம்
சூதனாய் கள்வனாய் -தூர்தரோடு -தன் பால் ஆதாரம் பெருக வைத்த -உள்ளத்தே –கள்ளத்தே
-வெள்ளத்தை -அரங்கம் தன்னில் -கள்வனார் கிடந்தவாரும் –கள்ளமே காதல் செய்து -கள்ளம்
அஜ்ஞ்ஞானம் இத்யாதி -வாமனர் ராமானுஜர் -வாமனன் சீலன் ராமானுசன் –அதே கல்யாண குணங்கள் -வஞ்சித்தல் -இருவருக்கும் –
ஆத்ம சமர்ப்பணம் ஆத்ம அபஹாரத்தோடு ஒக்கும் -கள்ளப்பிரான் ஸ்ரீ வைகுண்டம் -நின்ற திருக் கோலம் -சோர நாதன் –சூட்டு நன் மாலைகள் –
-ஆங்கு ஓர் மாயையினால் -சோர நாதன் -திரு விருத்தம் பாசுரம் படி –
அஜ்ஞ்ஞான விபரீத ஜ்ஞான அந்யதா ஜ்ஞானம் -கள்ளத்தே நானும் தொண்டு செய்த -கள்ளத்தே நானும் தொண்டாய் தொண்டுக்கே பூண்டு
-கள்ள மாயனே -அவன் கொடுத்த ஞானத்தால் அறிந்து மாயன் என்கிறார் -பொய் கலவாது மெய் கலந்தானே
மயர்வற -அஜ்ஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் மறப்பு போன்றவற்றை தொலைத்ததால் -உண்மையை அறிந்தார் –
கள்ள வேடத்தை கொண்டு புறம் புக்கவாறும் —அசுரர் உள்ள பேதம் -பேச்சு பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் அரு மூன்றும்-கள்ள பொய் நூல்களும் -க்ராஹ்யம் –
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே -சூதன் -நாஸ்திகன்- பிறரை ஏமாற்றுவது – கள்வன் நாஸ்திகம் தூண்டுவது -அவனையே ஏமாற்றுவது –
ஸ்ரீ வைகுண்டம் -திருமலை -திருப்பாற்கடல் -ஸ்ரீ ரெங்கம் -அரங்கம் தன்னுள் கள்வனார் -சம்சாரிகளை ரஷிக்க இங்கே வந்து கிடந்தார்
-என்ற கள்ளத்தனம் -சத்ய லோகம் -அயோத்யை விட்டு இங்கே வந்தார் -திருமகள் கேள்வனுக்கு -ஆக்கி –
இதனால் தான் பெரிய பிராட்டியார் வேகமாக கடாஷம் அருளுகிறாள் –யதிபதி ரங்கபதி சம்பாஷணம் -அரங்கம் தன்னுள் கள்வனார்
-ராமானுஜரை திருவவதரிப்பித்து -தும்பையூர் கொண்டிக்கும் திருவேங்கடமுடையான் இவர் கொடுத்த சீட்டு படி –
இனி பொய்ப்பொருள் நிக்காதே –ஆத்மா –காரணம் குணம் விபூதி அனைத்தையும் -அபஹரிப்பார்கள் -ஈர வஸ்த்ரம் உடுத்தி சத்யம் பண்ணிக் காட்டுகிறான் –
கள்வா-எம்மையும் ஏழ் உலகும் — இறைவா –பிள்ளைக்கு பிள்ளை இடம் பிள்ளை வரம் கேட்ட கள்ளத்தனம் –
கள்ளப் படையே துணையாக்கி -பெரியாழ்வார் -படையைத் துணையாக்கி கள்ள பாரதம் போர் என்று அந்வயம் –
கண்ணுக்கு விஷயம் இல்லாமல் -கள்ள மாயவனே -மானஸ விஷயம் ஆக்கி –
————————————————————
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட – எழுந்திராய்
செங்கழு நீர் -ஆம்பல் -சூர்யோதயம் திருக்கையிலே சங்கோடு சக்கரம் -நாவுடையாய் -இதில் முன்பு போதரிக் கண்ணினாய்
ஞானத்தின் அழகு -நேற்று -உபதேசித்தின் அழகு இன்று –
பொய்யிலா ஆழ்வார்கள் பொய்யில் பாடல்கள் அருளிச் செயல்கள் -கரண த்ரய சாயுஜ்யம் -நாணாதாய் நாவுடையாய் –
சிங்கம் பல்லிடுக்கில் மாம்ச -சாகாசம் செயல்கள் செய்யாதே -சொல்லும் பஷி போலே இல்லையே நம் ஆசார்யர்கள் -இந்த பெண் அப்படி செய்ய வில்லையே –
பெருமாள் கொண்டாடின திருவடி வாக் வைபவம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசுவதே நா வன்மை
பகவத் விஷயம் தொடங்கினதும் உள்ளே இழுத்துக் கொண்டு முழுவதும் அனுபவிக்கப் பண்ணுவான் –
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் -வாள் வலியால் மந்த்ரம் -நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -நாராயணா என்னும் நாமம் -கலியன் -முதல் பொறி -வாடினேன் தெரிந்ததும் கூடுவது உறுதி
மலர தொடங்கினால் மலர்ந்தே தேரரும் -பொய் நின்ற ஞானம் சம்சாரம் அடிக் கொத்திப்பு அறிந்ததும் -இனி -20 தடவை -முகில் வண்ணன் அடி
பெற்று உயர்ந்தார் மதி நலம் அருளப் பெற்றதுமே -தொழுதேன் எழுதேன் -என்கிறார் நம்மாழ்வார் -நடுவில் -நாடு திருந்த நச்சு பொய்கை ஆகாமைக்கு
பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக –நீர் நுமது -என்று இவை வேர் முதல் மாய்த்து –தேகாத்மா அபிமானம் தொலைவதே முதல் அடி
-திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய் -முதல் அடியால்-அத்தை மாய்த்து -வேரை கிள்ளி எடுத்தால் செடி நிற்காதே
வித்யா -ததாதி -விநயம் –நெல் கதிர் வாங்க சாயுமா போலே -தலை வணங்க -மதி நலம் அருளி -தொழுது -விநயம் -பாத்ரதாம் -சிஷ்யனாவான்
-சத்பாத்ரம் ஆவான் -காலஷேபம் வித்வான் ஆக -கால் வாசி சொல்லி முக்கால் வாசி கடாஷத்தால்
பணம் சேரும் -தர்மேச அர்த்தேச காமேச -தர்மத்துடன் சேர்ந்து நிற்கும் -சுகம் படிக்கட்டுகள் –
கள்ள நித்தரை-யீச்வரச்ய சௌஹார்த்தம் –யத்ருச்யா ஸூ ஹ்ருதம் -கிருபை -கடாஷம் -சத்வ குணம் வளர்ந்து -அர்த்த பஞ்சகம் ஞானம் வந்து -பகவத் சம்பந்தம் —
அசித் சம்பந்தம் -அவித்யை -கர்மம் -ஜன்ம -ரஜோ தமோ குணங்கள் மிகுந்து –அர்த்த பஞ்சக ஞானம் இல்லை -அனந்த கிலேசம் -சுழல்
-ஸ்ரீ கீதை -2-55/56/57/58 படிக்கட்டுக்கள் -கோவிலுக்கு வா மோஷம் போகலாம் -அயன சம்பந்தம் உணர்வாய் -மேலே மேலே படிக்கட்டுக்கள்
-திருமேனி த்யானம் பண்ண பண்ண இந்த்ரியங்கள் அடங்க -ஸ்ரீ கீதை -இந்த்ரியங்கள் வசப்படுத்தி -சுகம் துக்கம் கண்டு கலங்காமல்
-அதற்க்கு காரணங்களாலும் கலங்காமல் பீத ராகம் -ஆசை ஒழிந்து–விஷய சுகங்களை விலக்கி இந்த்ரியங்களை அடக்கி -பொறி கிளப்பி –
வெடி வெடிப்பது போலே –நினைமின் நெடியானை – சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் முதல் படியில் கால் வைத்தாலே போதும்
————————————————–
எல்லே -ஏலே -பிராந்திய பாஷை -உக்தி பிரத்யுக்தி வ்யக்தமாக உள்ள பாசுரம் -போதயந்த பரஸ்பரம் -செய்யவே திருப்பள்ளி எழுச்சி
-மோகனாஸ்த்ரம்-மோஹித்து இருப்பாரும் உண்டே இட்டகால் இட்ட கால்களாக இருக்கும் -ஜ்ரும்பநாஸ்த்ரம் தவிக்க வைக்கும் –
பங்கயக் கண்ணானைப் பாட -முன் பாசுரத்தில் -கேட்டு இவளும் சொல்லிப் பார்க்க -அத்தைக் கேட்டு -இளம் கிளியே
-பண்டே -வல்லமை /வாய் /கட்டுரைகள் -மூன்றும் அறிவோம் –மாயனை -தொடங்கி-மாயனை -பாடேலோ -முடிந்த பிரகரணம்
பாகவதர்களை பள்ளி உணர்த்த -விஸ்வாமித்ரர் பெரியாழ்வார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -போல்வார் அன்றிக்கே –
எல்லாரும் போந்தாரோ -ஒல்லை நீ போதாய்-கைங்கர்யத்துக்கு யாதானும் சொல்லி தாமதம் செய்யாமல் எதுவே என் பணி செய்யாது அதுவே ஆட் செய்யும் வீடே -ஆராதனைக்கு எளியவன் -புரிவதுவும் புகை பூவே -மதுவார் -தண்ணம் துழாயான் -பொருள் இசை அந்தாதி
சங்கோடு சக்கரம் ஏந்தி பங்கயக் கண்ணனுக்கு –சதுர் புஜன் -பஞ்சாயுதம் –நாங்கள் அசங்கேயர்கள் -அவன் திவ்ய ஆயுதங்கள் திரு தோள்கள்
திருக் கல்யாண குணங்களை எண்ண முடிந்தாலும் எங்களை எண்ண முடியுமா -எண்ணிக் கொள் -எங்களை எண்ணினாலும் பாகவத குணங்களை எண்ண முடியுமோ –
பங்கயக் கண்ணன் -ஆசார்யர் ஒரு கண்ணுக்கு -ஆயிரம் கண்ணன் -அஷ்ட கண்ணன் முக்கண்ணன் -சமானம் இல்லையே –
பெரிய பெருமாள் திரு மேனி முழுவதும் கண்களாக -மாற முயன்றதே -காதுகளை முதலில் பிடித்து –பெருமாள் 16 குணங்கள் -வால்மீகி –
போந்து எண்ணிக் கொள் -எண்ணிலும் வரும் -நினைமின் நெடியானை -சித்ரா வேண்டாம் சிந்திப்பே அமையும் -26 எண்ணிலும் வருவான் –
இங்கே போந்து எண்ணிக் கொள் -எண்ணவும் வேண்டாமே -இன்னும் தூங்குகிறோம் எண்ணிக் கொள் -பாகவத உத்தமர்களை காக்க வைக்கலாமோ பகவானை -அனந்தாழ்வான் –தொட்டு -ஸ்பர்சம் -அனுபவிக்க எண்ணிக் கொள் -சிபி -வராஹ -திருவெள்ளறை -3700-ஒருவர் குறைய தானும் ஒருவராக எண்ணிக் கொள்ள ஆசைப்பட்டான்- புண்டரீகாஷன் –புலவர் நெருக்கு உகந்த பெருமாள் அன்றோ -சுற்றம் எல்லாம் பின் தொடர -ஒரே இளைய பெருமாள் உடன் -மனத்துக்கு இனியான் –
போந்தார் போந்து எண்ணிக் கொள் -போந்து போந்தார் ராமாயணத்தில் -பெருமாள் வந்த பின்பே விபீஷணன் வந்தான் கடல் கரையில் –
இட்ட கால் இட்ட கால்களாக உள்ளார் போந்தார் -பாகவதர்கள் கூட்டத்தால் தரித்து -போந்தார் -வந்து என் கண்ணினுள் –சென்றதாம் என் சிந்தனையே –வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய் -நீ தான் முதலில் வந்து இருக்க வேண்டும் –
போந்தார் போந்து -ராகம் அடியாக வந்துள்ளோம் -விதியால் இல்லையே -நான்கு வினைச் சொல் -இந்த பெண்ணுக்கு -இன்னம் உறங்குதியோ -போதாய் –போந்து -எண்ணிக் கொள் -பிள்ளாய் எழுந்திராய் –தேசமுடையாய் திற -கோதுகலமுடையாய் பாவாய் எழுந்திராய் -முன்பு எல்லாம் ஒரே வினைச் சொல் –
மெய்க்காட்டு கொள்ள ஆசைப் பட்டு அனைவரையும் வரச் சொல்லி இருந்தாய் -வந்துள்ளோம் -மாயவனை பாட கூப்பிடுகிறோம் -பாசுரங்கள் தோறும் திருநாம சங்கீர்த்தனம் –
————————————————————————-
ராமானுஜரே நாயகர் -ஆசார்யர் மூலமே பெறுவது ஸ்ரேஷ்டம் -கையைப் பிடித்து கார்யம் கொள்வது அவனைப் பற்றுதல் திருவடி பற்றி அவனை பெறுவது
ஆசார்யர் மூலம் -பிரதான சேஷி அவன் த்வார சேஷிகள்-ஆச்சார்யர்கள் -வேதம் வல்லார்களை பற்றிய பின்பு –
விண்ணோர் களைப் பற்ற வேண்டுமே -ஷேத்திர பாலர்கள் மணிக் கதவம் -நித்ய ஸூ ரிகள் -வந்து -பிரமன் விடுதந்தான்
-கிருஷ்ணன் -திருவவதாரத்தில் நிறைய நித்ய ஸூ ரிகள் வந்து உதவுவார்கள் -தூயோமாய் வந்தோம் -5/16/உபாயாந்தரம் தவிர்ந்து
பிரயோஜனான்தரம் -அவனாலேயே அவனையே பெற வேண்டும் -அருளிச் செயல்களின் திரண்ட பொருள்
என்னான் செய்கேன் ஆரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –
தூயோமாய் வந்தோம் துயில் எழ பாடுவான் வந்தோம் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -உன்னை ஒழிய மற்று தெய்வம் அறியாத வடுக நம்பி
நிலையை தந்து அருள் உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகள் –
தூயோமாய் –ஆயர் -சிறிமியரோம்-மூன்று சொற்கள் –பிராமணர்கள் இல்லாத தூய்மை -பெண்களான தூய்மை -சிறிமியர்களான தூய்மை
-துயில் எழப் பாடுவான் -இது ஒன்றே பிரயோஜனம் -அறை பறை இத்தை அறிவிக்கவே – த்வதீய கம்பீர -மன அநு சாரிண– வாக்கை பின் தொடருமே சாஸ்திரம் –
கோல் விழுக்காட்டாலே-முறைப்படி பற்ற அமைந்தது –ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் -திருப்புல்லாணி -நீ தான் அனுக்ரஹம் பண்ண வேண்டும் -அஞ்சலி ப்ராஹ்முக க்ருத்வா -பெருமாள் –ராஷசன் -ஆயர் சிறுமியரோம் -இவை தான் தகுதி -ராம சரணாகதி நிஷ்பலம் -இவர்கள் சரணாகதி பலித்ததே
-கர்மமும் கைங்கர்யத்திலே புகும் –பல நீ காட்டிப் படுப்பாயோ -மருவித் தொழும் மனமே தந்தாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய்
சரீஸ- என்கிறபடி பய ஜனகம் -உத்க்ருஷ்ட ஜன்மத்தால் வரும் ஆபத்து -இவை ஒன்றும் தகுதி இல்லையே -தகுதி ஒன்றுமே இல்லை எனபது இதற்குத் தகுதி –
உத்க்ருஷ்டமான ஜன்மம் என்று அஹங்கரித்தலும் அபக்ருஷ்ட ஜன்மம் என்று தாழ்ந்த மனப்பான்மை கொள்வதும் கூடாதே -நம்பாடுவான் குகன் விதுரர் -அது போலே தூயோமாய் ஆயர் சிறுமியரோம் -ஒரே பிரயோஜனம் துயில் எழப் பாடுவான் வந்தோம் –
ஆரூரடா பதிதன் -உத்கர்ஷ்ட ஜன்மம் –அபிமானம் மிக்கு இருக்கும் -விபீஷண ஆழ்வான் கஜேந்திர ஆழ்வான் போலே இல்லையே
-தகுதி இல்லாதவன் சம்பாதிக்க வேண்டாம் –யோனி வித்யா கர்மா முக்குறும்பு வாராதே -இடையர்கள் இடக்கை வலக்கை அறியாதவர்கள்
பூ பிரதஷினம் சிவன் முடி மேல் தான் கண்டு தெளிந்து ஒழிந்தான் -சம்பந்தம் -உணராமல் அர்ஜுனன் -ஆக்னி அஸ்தரம் -இறங்காமல்
-குற்றங்கள் இருந்தாலும் கை விடாத -ஷத்ரியன் நான் முதலில் இறங்கவா -என்று இருந்தானே –
-கோயில் காப்பான் வாசல் காப்பான் போலே இவர்களும் துயில் எழப் பாடுவார்கள் -கைங்கர்யம் நித்யம் -எடுத்த பிறவி அநித்தியம் -நம் பாடுவான் -போலே பாடுவதற்காக -பாடுவான் பெயர் சொல் -கைங்கர்ய கருத்தை காரணப்பெயர் -பாடுவான் -ஆண் பெண் -வாசி இல்லையே அடியேன் இராமானுஜ தாசன்
ஆணோ பெண்ணோ -விசாரம் கூடாது -சரீர தொடர்பு இல்லையே –
ஆசார்யர் கோயில் காப்பான் -வாசல் காப்பான் -கதவு -ஆத்மா -மணி ஞானாந்த ஸ்வரூபம் -தாழ்ப்பாள் -ஸ்வ ஸ்வா தந்த்ரயம் -ஸ்வ அனுபவம் -தாழ்ப்பாள் கெட்டியாக -இரும்பு போலே -பிரயோஜனம் இல்லாத -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் –ஆயர் -உபாய உபேயம் நீ என்று அறிந்த குலம் -அவர்களுக்கு சேஷ பூதர் -இவர்கள் செய்வது சாஸ்த்ரார்த்தம் ஆகும் -வஸ்து நிர்த்தேசம் -ஆசீர் நமஸ்துக்கள் திருவாய் மொழியில் உண்டு -கோல் விழுக்காட்டால் வந்தன -எழுத்து சீர் தொடை- தானாகவே அமைந்ததே –
—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
———————————————————————-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: