திருவாய் மொழி நூற்றந்தாதி -61-70—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

உண்ணிலா வைவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நிலைய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல் –61-

ஒ என்று ஓலமிட்டார் -ஆழ்வார் திரு நாமம் சொல்ல சம்சார பந்தம் தொலையும்
மாயப் பிறவி அறுத்து கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற பிராட்டி முன்னிலையாக திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
ஆழ்வாருக்கு முன்பே சம்சாரிகள் சரணம் புக்கு திருவாய் மொழி வளர பிரார்த்தித்தார்கள் போலே
எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடலின் கவிகள் யானாய் தன்னைத் தான் பாடி –
இன்னும் சில குணங்கள் வேண்டுமே -சில விபூதிகளும் வேண்டும் என்றார்களாம் –எதோ வாசோ நிவர்த்தந்தே -வேதங்கள் மீள –
அதனால் ஆழ்வாரை இங்கே இன்னும் வைத்தானாம் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்யும் சேரும் ஐம்புலன் இவை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வா -மாற்றம் உள -இரண்டு திருமொழி களும் இத் திருவாய் மொழியை விவரியா நிற்கும்
முடியானே யில் கரணங்களை உடைய இவர்க்கு இந்த்ரிய விசயத்தை உண்டு எண்ணும் இடம் கீழோடு விருத்தம் அன்றோ என்னில்
அசல் அகம் நெருப்புப் பட்டு வேகா நிற்க தாம்தாம் அஹம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே-புற்றின் அருகே
பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதாய் இருக்கும் இ றே -அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான
உடம்போடு இருக்கிற படியைக் கண்டார் -நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் நோவு படுகிற படியையும்
கண்டார் -இது நம்மளவில் வந்தால் செய்வது என் என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் என்ன அனர்த்தம் விளையுமோ என்ற அச்சம் மேலிட்டு ஓலமிடுகிறார்

————————————————————————————-

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அம் சொல் உற நெஞ்சு வெள்ளையாம் –62-

உண்ணிலாய பதிகத்தில் உண்டான தளர்ச்சி அதிகரித்து உணர்த்தி அழிந்து மூர்ச்சை அடையும் படியான நிலைமை நேர்ந்த அளவிலே
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி திருத்தாயார் பெரிய பெருமாள் இடம் -கேட்பதாக –
கீழே பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கு இருந்த அளவிலும் –
-இன்னும் பிரக்ருதிமண்டலத்திலே இருக்கக் கண்டார் -புலியின் வாயிலே அகப்பட்டால்போலே கூப்பிட்டார் உண்ணிலாய பதிகத்தில்
இவருக்கு பேறு திண்ணம் -இவர் ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டு வாழ்விக்க -திருத் தாயார் -இவள் அழுவது தொழுவது மோஹிப்பது பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது நெடு மூச்சு எறிவது அதுவும் மாட்டாது ஸ்தப்தையாய் இருப்பது போன்றவற்றை சொல்லி பெரிய பெருமாள் இடம் முறை இடுகிறாள்
இத் திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள் இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத் வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு ஒரு கால நியதி யாதல் ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் இன்றிக்கே -சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிறபடியை அனுசந்தித்து தன பெண் பிள்ளையினுடைய தசையை
திரு உள்ளத்துள்ளே படுத்துகிறாள் இத் திரு வாய் மொழியிலே
பட்டர் -ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே இருக்கிற நாம் என்ன சொல்லுகிறோம் என்று
திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பாராம் இத் திருவாய் மொழி அருளிச் செய்யும் பொழுது எல்லாம்

———————————————————————————-

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —-63-

ஆழியார் -கம்பீர ஹ்ருதயர்கள் என்றவாறு
கங்குலும் பகலும் -திருவாய் மொழியில் திருத்தாயார் வாக்கில் தோன்றிய திரு நாமங்களைக் கேட்க பெற்ற -ஆழ்வார்
தென் திருப்பேரெயில் சென்று புக ஆர்த்தி மிக்கு -என்னை மகர நெடும் குழைக் காதனிடம் சென்று சேர்க்க பாருங்கோள்-என்கிறாள்
ஆறாயிரப்படி அவதாரிகை -இபிராட்டியோடே பெரிய பெருமாள் சம்ச்லேஷ ரசத்தை அனுபவித்து -அந்த சம்ச்லேஷ ரசம் உள்ளடங்காத படி பெருகினவாறே
அது சாத்மிக்கைக்காகவும் ஆஸ்ரித பிரதிகூல விரோதி நிரசனார்த்த மாகவும் தென் திருப் பேரெயில் எழுந்து அருள திரு உள்ளத்தே கோலி யருளி இவளுடைய சம்வாதார்த்தமாக இவள் இடத்திலே அதி மாத்திர சம்மானத்தை பண்ணி அருளி தென் திருப் பேரெயிலிலே வேட்டைக்குப் போய் வருகிறோம் என்று
அருளிச் செய்ய இப்படி பதி சம்மாநிதையான இவள் அவ்யுத்த பன்ன விஸ்லேஷ யாகையாலும் இவன் எழுந்து அருளுகை இவளைக் காணாது ஒழிகைக்கு
ஹேது என்னும் இடம் அறியாமையாலும் எழுந்து அருள சம்வதித்து விஜயத்தை ஆசாசித்து திவ்யாயுதங்களை கொடுத்து அருளி –
ஆத்வாதாரம் அநு வராஜ மங்கள அந்ய பிதத் யுஷீ -என்னும் பிரக்ரியை யாலே திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு
திரு வணுக்கன் திரு வாசல் அளவும் பின்னே எழுந்து அருள -பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி அருள ஒரு தாமரைத் தடாகம் மலர்ந்தால் போலே
திருக் கண்களால் இவளைப் புரிந்து பார்த்து அருளி அவளாலே அநு ஜ்ஞாதனாய் தென் திருப் பேரெயிலிலே எழுந்து அருள இவள்
அவனைக் காணாமையாலே அத்யந்தம் அவசன்நையாய் அவன் எழுந்து அருளிய தென் திருப் பேரெயிலிலே எழுந்து அருள உத்யோகிக்க
இவளுடைய திருத் தாயாரும் தோழி மாறும் மற்றும் பந்துக்களும் இவளைப் பிரதி பந்திக்க -நான் போகை தவிரேன் -தனியே போனாள் என்னும் பழி
உங்களுக்கு வாராமே நீங்கள் என்னை தென் திருப் பேரரெயிலிலே ஈண்டு என்னைக் கொண்டு போய் விடுங்கோள் என்கிறாள்

————————————————————————————————————————–

ஆழி வண்ணன் தன விசயமானவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க –ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார் –64–

வெள்ளைச் சுரிசங்கு -மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரியதான காதல் கொண்டு இங்கே இருக்க கில்லேன்
தென் திருப் பேரெயில் சென்று சேர்வேன் என்று சொல்ல
தோழிமார் தாய் மார் இது ஸ்வரூப ஹானி என்று தடுத்த அளவிலும் கேட்க மாட்டாதவராய் பதறியே நின்றார்
தென் திருப் பேரெயில் சேர்வன் நானே சேர்வன் சென்றே -திண்ணமாக அருளி புறப்பட்டுச் செல்ல பார்க்க –
காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -வாய் கொண்டு பேச கூட முடியாமல் பலம் இழந்து இருக்க
இவருக்கு பலம் உண்டாக்க தம்முடைய விஜய பரம்பரைகளை காட்டிக் கொடுக்க -கண்டு அனுபவித்து அருளிச் செய்தார் ஆழி எழ திருவாய் மொழியில்
மூவுலகு அளத்தல் -கடல் கடைதல் -நிலம் இடத்தல் -பிரளயம் காத்தல் பாரதம் கை செய்தல் -முதலிய சரிதங்களைக் காட்டிக் கொடுத்து
ஆழ்வீர் இவற்றை பேசி அனுபவித்து வாழும் என்று காட்டி அருள ஆழ்வாரும் தத்காலத்திலே கண்டால் போலே களித்து
பேசி அனுபவித்தார் ஆழி எழ -திருவாய்மொழியிலே-
நல்லது கற்பார் மாறன் சொல் பன்னுவரே -நல்ல ஸ்ரீ ஸூ க்திகளை கற்க விருப்பம் உடையவர் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை கற்பார்கள்
மாறன் சொல் பன்னுவரே நல்லது கற்பார் –ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை கற்பவர்களே நல்ல நூல்களை கற்பவர் ஆவார் என்றுமாம்

——————————————————————————–
கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம்மிழவை வாய்ந்து யுரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப்பா –65-

கீழ் திருவாய் மொழியில் ஆழி எழ -அனுசந்தித்த விஜய பரம்பரைக்கு அடியான விபவ அவதார குண ஸ்வ பாவங்களை அனுசந்தித்து
-படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே இப்படிப் பட்ட மகா நிதி உண்டாய் இருக்க இவ்வுலகத்தார் இத்தை
இழந்து அனர்த்தப் படுவதே என்று சம்சாரிகளின் இழவுக்கு வெறுத்து உரைத்த பதிகம் -கற்பார் இராமபிரானை -எனபது
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார் க்கே-என்றதில் நோக்காக விசயங்களுக்கு எல்லாம் என்று அருளிச் செய்த படி

———————————————————————————————-

பாமருவு வேதம் பகர்மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டப்பாடு ஆம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நன்னாரே ஏழையர்–66-

சந்தங்கள் பொருந்திய வேதம் என்றவாறு –
கற்பார் இராம பிரானில் அனுசந்தித்த வடிவு அழகையும் மேன்மையையும் திரு உள்ளத்தில் விஷயமாக கொண்டு
கண்ணாரக் காண அபிநிவேசம் கிளர்ந்து கூப்பிட்ட ஆழ்வாரை ஆஸ்ரியாதவர்கள் நீசர்களே
வேண்டப்பாடு ஆம் அவற்றை -என்றது -சர்வாதிகத்வம் -பா மரு மூவுலகும் படைத்த -பா மரு மூவுலகும் அளந்த
-அழகும் தாமரைக் கண்ணாவோ தாமரைக் கையாவோ இத்யாதிகள்
கற்பார் இராமபிரானை -பரோபதேசம் -பிறர் இழந்து இருப்பது நாஸ்திக்கத்தாலே-அது இல்லாமல் அபி நிவேசம் கரை புரண்டு இருந்தாலும்
கிட்டாததால் தமது ஆர்த்தி பரமபதம் அளவும் கேட்கும் படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார் பா மரு மூவுலகு -திருவாய் மொழியில்

————————————————————————————————-

ஏழை யர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

கீழே பாமரு மூவுலகில் -வந்தெய்து மாறறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று அருளிச் செய்த பாவனா பிரகர்ஷத்தாலே பிரத்யத்யஷ சமமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் தோற்றி நலிவு செய்ய உரு வெளிப்பாட்டாலே நலிவு படுகிற படியை பிராட்டி பாசுரமாக அருளிச் செய்கிறார் ஏழை யராவி-பதிகத்தில்
கீழே இவர் கூப்பீடு பரம பதத்து அளவும் சென்று உரு வெளிப்பாடு தோன்றச் செய்து அருளினான்
இந்த நலிவுக்கு எங்கனே ஆற்றுவேன் என்று தாய்மார்களையும் தோழி மார்களையும் நோக்கி பேசுகிறாள் பராங்குச நாயகி –

—————————————————————————————-

மாயாமல் தன்னை வைத்த வைசித்ரியாலே
தீயா விசித்திரமாய் சேர் பொருளோடு ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழும் நாள் என்று –68-

கீழே ஏழையர் ஆவியில் -உரு வெளிப்பாட்டாலே நோவு பட்டு பட்ட நலிவுக்கு ஆழ்வார் முடிந்து போகாத படி வைத்து நோக்கிக் கொண்டு
போகும் ஆச்சர்யத்தைக் கண்டு தாம் விசித்த்ரப் பட
ஆழ்வீர் நம்முடைய விசித்திர விபூதி யோகத்தை பாரீர் என்று ஆச்சர்ய ஜகதாகாரத்வத்தை காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து
விச்மிதர் ஆகிறார் -மாய வாமனனே -என்னும் இத் திருவாய் மொழியிலே-
விருத்த விபூதித்வத்தை -வளம் உரைத்த ஆழ்வாரை நாம் அணுகித் துதித்து வாழ்வது என்றைக்கோ -என்றவாறு

——————————————————————————————–

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் என் தமர்க்கும் இன்பம்தா -நன்றுகவி
பாட என கைம்மாறு இல்லாமை பகர் மாறன்
பாடு அனைவார்க்கு உண்டாம் இன்பம் –69-

வியாச பரசராதி முனிவர்களும் இருக்க
முதல் ஆழ்வார்களும் இருக்க
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத அடியேனைக் கொண்டு இக்கார்யம் செய்து அருளிய இந்த மகா உபகாரகத்து நன்றி பாராட்டி தடுமாறுகிறார்
மாயா வாமனன் கீழே -எம்பெருமான் ஆச்சர்ய சாதுர்ய குணம் காட்டும் திருவாய்மொழி -குண ஆவிஷ்காரத்தைப் பண்ணி மறப்பிக்கிறான்
அவனை மடி பிடித்து உத்தரம் பெற்றே யாக வேணும் என்னும் தீவிர ருசி உண்டாயிற்று
எனது ஆற்றாமையில் குறை கண்டாயா -உன் சக்தியில் குறை உண்டா இப்படி நலிவு பண்ணி வைத்து உள்ளேயே
பொய் நின்ற இத்யாதியில் போலே -அருவருப்புக் கொண்ட என்னை இங்கே வைத்துக் குமைப்பது பரம காருணிகனான உனக்கு பொருந்துமோ -என்று கேட்க
எம்பெருமான் தனக்கும் அடியார்க்கும் அமுதம் போன்ற திருவாய்மொழி கேட்க திரு உள்ளம் என்ன
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் இருக்க அடியேனைக் கொண்டு இக்காரியம் பண்ணுவித்து அருளும் நீர்மை வாத்சல்யம் என்னே
என்று நன்றி பாராட்டி தடுமாறுகிறார் கைம்மாறு தர இயலாமல் –

—————————————————————

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
தின் திறலோர் யாவர்க்கும் தேவு —————70-

ஆழ்வார் தாம் பாடின திருவாய் மொழியக் கேட்கைக்காகப் பெரிய பிராட்டியார் உடனே-இந்திரையோடு –
பேர் ஓலக்கமாகத் திரு வாறன் விளையிலே எம்பெருமான் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று அச் சேர்த்தியிலே திருவாய் மொழியைக் கேட்பித்த் அடிமை செய்யப் பெறுவது எப்போதோ வென்று
மநோ ரதிக்கிறபடியைக் கூறும் இன்பம் பயக்க -என்கிற திருவாய் மொழி -அருளிச் செய்த ஆழ்வார் உடைய திருவடிகளே
திடமான அத்யவசாயம் உடையார் எல்லார்க்கும் தெய்வமாகும்

——————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: