திருவாய் மொழி நூற்றந்தாதி -91-100—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
கால மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –91-

கீழே மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று நாள் இட்டுக் கொடுக்கையாலே புறப்பட ஒருப்பட்டார் ஆழ்வார் –
முந்துற முன்னம் வழித் துணையாக திரு மோகூர் காள மேகப் பெருமாளைப் பற்றுகிறார்
ததஸ்தம் ம்ரியமாணாம் து காஷ்ட பாஷாண சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
வழித்துணையாம் இடத்தில் சர்வ சக்தனாகவும் விரோதி நிரசன சீலனாகவும் சர்வஜ்ஞ்ஞானாக இருக்க வேணுமே
இவை எல்லாம் குறைவற்று இருக்கும் படியை இந்த பதிகத்தில் அருளிச் செய்கிறார்
மார்க்க பந்து சைத்யம் மோகனத்தே மடுவிடும் -ஆச்சர்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி –

—————————————-

கெடும் இடர் வை குந்தத்தைக் கிட்டினால் போலத்
தடமுடை யனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மாலுக்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தன்னில் உள்ளோர் வியப்பவே –92-

மாலை நண்ணியில் ஆழ்வார் திரு நாட்டுக்கு நாளிடப் பெற்றவர் ஆகையாலே -அங்கே கிட்டினதாகவே பாவிக்கலானார்
நித்ய ஸூ ரிகளும் கூட வியக்கும் படி இந்நிலத்திலே அடிமை செய்யக் குதூஹலம் கொண்ட படியை இப்பதிகத்தில் அருளிச் செய்கிறார்

—————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு ——————-93-

தாம் மநோ ரதித்த படியே அப்போதே அத்தேசத்திலே போய் அடிமை செய்யப் பெறாமையாலே கலங்கி -பழையபடியே
நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ என்று
பிரகிருதி சம்பந்தத்தின் கொடுமையாலும் ஈஸ்வர ஸ்வா தந்த்ரியத்தைப் பற்றவும் தமக்கு உண்டான அதிசன்கையை
வேய் மரு தோளிணை-பதிகத்தில் அருளிச் செய்தார்
இந்த அதிசங்கையை முக பேதத்தால் அருளிச் செய்யப் பட்டு இருக்கிறது –
-அக்காலத்துக்கு ஏற்ற குயில் மயில் காதல் ஆடல் அடையாளங்கள் கண்டு -அவற்றையே கொண்டு கண்ணன் பசு மேய்க்கப் போனான் என்று
அதிசங்கை பண்ணி நோவுபடுகிற அந்த இடைப் பெண் பேச்சாலே -அருளிச் செய்த திருவாய் மொழி –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே -என்று ஆழ்வார் அருளிச் செய்ததால்
மால் தெளிவிக்க தெளிந்த என்று பூருவர்கள் நிர்வஹித்த படியைத் தழுவி அருளிச் செய்கிறார்

——————————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பக்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை–சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண் –94-

அடியில் -ஆரம்பத்தில் வீடுமின் முற்றத்திலே -உபாதேயமாக அருளிச் செய்த பக்தியானது
-சேர்ந்த பலனோடு சேர்ந்த படியை அறிந்து ஒன்றும் குறையாமல் அருளிச் செய்த ஆழ்வார் உடைய உபய பாதங்களையே
எப்போதும் எனது கண்கள் சேவித்துக் களிக்கும்
பிணக்கறவை சார்வாக நிகமித்து -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி
சாத்திய பக்தியா சாதனா பக்தியா -ஆழ்வாருக்கு சஹஜ பக்தி

—————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ண வர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன் புகழ் சேர் தன்னருள்——————-95-

காதல் உருவார் செயலை -பக்தி உடையவர்களின் செய்கையை
திண்ணம் உற -திடமாக
ஆன புகழ் சேர் தன் அருள -சிறந்த கீர்த்தியோடு சேர்ந்த தமது கிருபையினாலே
சுருங்க செப்பி -சுருக்கமாக அருளிச் செய்து
தான் உபதேசிக்கி தலைக் கட்டினான் -தாம் உபதேசிக்கும் தொழிலை முடித்துக் கொண்டார்
எம்பெருமான் தம்மைப் பரமபதத்தில் கொண்டு போகப் பதறுகிற படியைக் கண்டு சரம தசையில் புதைத்துக் கிடக்கும்
மகா நிதிகளைப் புத்திரன் முதலானார்க்குக் காட்டுமா போலே
ஆழ்வாரும் ஒருவரும் இழவாத படி எல்லார்க்கும் ஹிதங்களைச் சுருக்கமாக உபதேசிக்க வேண்டி கண்ணன் கழலிணை-பதிகத்தில்
நாள் வாய் மலரிட்டு நாள் வாய் நாடீரே -என்றும்
பாடீர் அவன் நாமம் -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே என்றும் இப்படி மநோ வாக் காயங்கள் ஆகிற கரண த்ரயத்தாலும் ஆகும்
வ்ருத்தியை யுபதேசித்துத் தலைக் கட்டினார் ஆயிற்று –

————————————————————————–

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –96-

அடியில் எடுத்த -சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்து அருளின
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –விண்ணுலகம் தருவானாய் விரைகின்றானே
–மங்க வொட்டு உன் மாயை -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் ஆழ்வார் ஈஸ்வரனை பின் தொடர
-இது தொடங்கி ஈஸ்வரன் ஆழ்வாரை பின் தொடரும் படி சொல்கிறது -ஆழ்வார் பக்கல் யாசகனாய் நிற்கை முனியே நான் முகன் வரையிலும் –
சரம சரீரம் ஆகையால் தமக்கு உண்டான வ்யாமோஹம் -இத்துடன் கொண்டு போக விரைந்த மாதரம் இல்லை
-இதிலே மயங்கி -பதினாறாயிரம் தேவிமார்களை அனுபவிக்க அநேக விக்ரஹங்கள் கொண்டால் போலே கொண்டு மயங்கி கிடக்கிறான்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றும் பருகினான்
தொண்டர்க்கு அமுது உன்ன சொல் மாலைகள் நிகமிக்கும் தருவாய் அன்றோ -ஆறி இருக்க மாட்டானே திரு வாட்டாற்றில் வேட்டையாட வந்து நிற்கிறான் –
இங்கேயே அனுபவிக்கலாகாதோ என்றால் இருள் தரும் மா ஞாலம் -அனுபவம் அவிச்சின்னம் ஆகாதே அவனுக்கும்
அதுவும் கிடந்தானை கண்டு ஏறுமா போல் அன்றிக்கே -ஆழ்வார் நியமித்து அருள காத்து இருக்கிறான்
அவனை அனுபவிக்க -சம்சாரிகள் அந்ய பரராய் இருக்க -தமது நெஞ்சை கூட்டிக் கொள்கிறார் -யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்கிறார்

——————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு————–97-

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்-செஞ்சொற்களால் பிரதிபாதிக்கப் படுகின்ற பரம புருஷன் தம்முடைய சிறந்த திருமேனியிலே
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு -வஞ்சனையாகச் செய்கிற விருப்ப மிகுதியைக் கண்டு
அவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட-அவன் திருவடிகளைக் கட்டிக் கொண்டு -அவனது மாய வலையினுள் தாம் அகப்படாதபடி தம்மை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—–திடமான சக்தியை உடையரான ஆழ்வார் நமக்குச் செல்வம்
தம்மோடு வந்து கலந்து தமக்கு விதேயனாய்த் தம் திருமேனியிலே மிகுந்த அபி நிவேசம் உடையனாய்த் திருமேனி உடன்
தம்மைத் திரு நாட்டிலே கொண்டு போக வேணும் என்று எம்பெருமான் காட்டுகிற குதுஹலத்தைக் கண்ட ஆழ்வார்
-ஐயோ இவ் வழுக்கு உடம்பின் தோஷ மிகுதியை அறியாமல் ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு இதின் தோஷத்தை உணர்த்தினோம் ஆகில்
இத்தத் தவிர்வன் -என்று நினைத்து இதின் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக– பிரானே இந்த வீண் ஆசையை நீ கழித்துக் கொள்ளவே வேண்டும் என்று
அவனைக் கால் கட்டி அந்த வாஞ்சையை விடுவித்துக் கொண்டார் ஆழ்வார் -செஞ்சொல் கவிகாள் -என்கிற திருவாய் மொழியில் –
சர்வ சக்தனான இவனுடைய பிடிவாதத்தையும் ஆழ்வார் சர்வ சக்தியாலே மாற்றினார் ஆதலால் -திண் திறல் மாறன் -என்று மா முனிகள் விருத்தி பெற்றார்
மங்க வொட்டு உன் மா மாயை -உயிரான பாசுரம்
-வேர் சூடும் அவர்கள் மண் பற்றுக் கழற்றாதாப் போலே ஜ்ஞாநியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –ஸ்ரீ வசன பூஷன ஸ்ரீ ஸூ கதிகள்
-வேர் சூடுவார் மண் பற்றுப் போலே ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ கதிகள்

—————————————————————

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து ————-98-

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு-சர்வேஸ்வரன் தம்மிடத்து அதிகமான ஆதாரம் செய்யும் படியைக் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -எம்பெருமானே இதற்கு முன்பு எல்லாம் என்னை பிரக்ருதியிலே இட்டுவைத்து அகற்றி விடுவான் என்
பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என்-இப்பொழுது என்னிடத்தில் நீ மிக்க வியாமோஹத்தைச் செய்வான் என்
என்ன இடருற்று நின்றான்-துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து-என்று ஆழ்வார் கேட்க -அப்போது எம்பெருமான் தான்
-மிக்க புகழை யுடையரான அவ் வாழ்வாரை வளைத்துக் கொண்டு -அவர் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல மாட்டாமல் தடுமாறி நின்றான்

——————————————————————

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி —————99-

முடி மகிழ் சேர் ஞான முனி-திரு முடியிலே வகுள மாலை யணிந்த ஞான முனிவராகிய ஆழ்வார்
சூழ்ந்து நின்ற மால் -தம்மைச் சூழ்ந்து நின்ற எம்பெருமான்
விசும்பில் தொல்லை வழி காட்ட-பரம பதத்தில் அநாதி மார்க்கமான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -அங்குள்ள அனுபவங்களை எல்லாம் ஆழ்ந்து அனுபவித்து
-வாழ்ந்து அங்கு-அவ்விடத்தே வாசம் பண்ணி
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்-நித்ய முக்தர்கள் உடனே கூடி இருந்த படியை அருளிச் செய்தார்
எம்பெருமான் ஆழ்வாரைத் திரு நாட்டிலே கொண்டு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதே மநோ ரதித்து இவர்க்கு
அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும் பரமபத ப்ராப்தியையும் அங்கு
நடை பெரும் விசேஷங்களையும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் விசதமாக இவர் கண்டு அனுபவிக்கலாம் படி
பர ஜ்ஞான தசையைப் பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க இவரும் அவற்றை அழகிதாகத் திருப் புளி யாழ்வார் அடியில் இருந்து கொண்டே
கண்டு அனுபவித்து -அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்து தாம் பெற்ற அப் பேற்றை- சூழ் விசும்பு பதிகத்தில் அருளிச் செய்தார் -என்கிறார்

———————————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரமபத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100

சூழ் விசும்பு -அர்ச்சிராதி கதியைப் பரக்க பேசி -பரமதத்திலே புக்கு பரிபூர்ண ஆனந்த சாலியாய் நித்ய ஸூ ரிகள் உடைய திரளிலே
-அந்தமில் பேரின்பத்து அடியரொடு – இருக்கிறபடியாக தம்மை அனுசந்தித்து
-இது ஜ்ஞான அனுமேரு மலை உச்சியில் இன்பம் தலை சிறப்ப இருந்தவன் படு குழியிலே விழுமா போலே இருள் தரும் மா ஞாலத்திலே
இருக்கும் இருப்பைக் கண்டு -ஆற்றாமை தலை எடுத்து பெரு மிடறு செய்து கூப்பிட்டு-தம்முடைய ஆகிஞ்சன்யத்வத்தையும் அநந்ய கதித்வத்தையும் நன்கு உணர்த்த -மாதா பிதாக்கள் அருகே இருக்க பசியாலும் தாஹத்தாலும் நோவு படுகிற ஸ்தநந்த்ய பிரஜை தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே
-ஈர நெஞ்சு இல்லாதார் ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் -அவனுக்கு தம்மை அணைத்து அல்லது பரம பதத்தில் இருப்பு தரிக்க மாட்டாதபடி -காட்டுத் தீயில் அகப் பட்டாரைப் போலே பெரிய மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தி உடன் திருவடிகளிலே சரணம் புக
-பெரிய திருவடி திருத் தோள்களிலே பெரிய பிராட்டியாரோடு இவர் அபேஷித்த படியே வந்து தோன்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தை
அறுத்து திரு நாட்டிலே கொண்டு பொய் நித்ய சூரிகள் நடுவே இருத்தி நித்ய கைங்கர்யமும் கொள்ளப் பெற்றான் –
இவர் இங்கனம் தாம் க்ருதக்ருதராய் அவா அற்று வீடு பெற்ற படியை முனியே நான் முகனே திருவாய் மொழியில் அருளித் தலைக் கட்டுகிறார்

—————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: