திருவாய் மொழி நூற்றந்தாதி -81-90—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு ———–81-

அனைவர்க்கும் ஹிதமே சிந்திக்கிற யசஸ்வியான நம்மாழ்வார் -முன்பு மனைவி முதலாகச் சொல்லப்படுகிற பந்து வர்க்கம் எல்லாம்
கர்ம உபாதியாலே நெருங்குமவர்கள் இத்தனை என்று கொண்டு அந்த ஆபாச பந்துக்களை விட்டு நம்மை பாகவத கோஷ்டியிலே
சேர்க்க வல்லவனான சர்வேஸ்வரனை சேருங்கோள் என்று உபதேசித்தார்
தன்னைப் பற்றினாரை பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷித்து அருள வல்ல சர்வேஸ்வரனே சகலவித பந்துவுமாவான் –
ஆனபின்பு ஔ பாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக சகல வித பந்துவுமான சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து உஜ்ஜீவிக்க
ஹிதைஷியான ஆழ்வார் உபதேசித்து அருளின பதிகம் -கொண்ட பெண்டிர் –

———————————————————————————————-

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—————-82-

அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடையனான பரம புருஷனை -திருப் புளிங்குடியிலே சேவித்து -அடியேனுக்கு சகலவிதமான உறவினுடையவும் காரியங்களை
தண்டு அற நீ செய்து அருள் என்று இரந்த –தடை -கால தாமதம் -இல்லாமல் -தட்டில்லாமல் நீ செய்து அருள வேணும் என்று பிரார்த்தித்த
சீர் மாறன் தாளிணையே-உபய பாதங்களே நமக்கு உஜ்ஜீவன உபயமாம் என்று நெஞ்சே நினை –
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்று இப்படி பாசுரம் தோறும் ஒவ் ஒரு பாசுரங்களிலும் பிரார்த்தனை

—————————————————————————————–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை—————83-

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் -ஆழ்வீர் நீர் ஆராய்ந்து அபேஷித்தவை எல்லாவற்றையும்
செய்கின்றேன்-நான் தலைக் கட்டித் தருகின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று -நான் சர்வ சக்தனான நாராயணன் அன்றோ என்று எம்பெருமான்
-பேருரவைக் காட்ட -தனது சிறந்த உறவையும் நினைப்பூட்டின அளவிலே
அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்-
அப்பெருமானது சீல குணத்திலே ஆழம் கால் பட்ட ஆழ்வார் உடைய திருவருளானது
மாட்டி விடும் நம்மனத்து மை—நம் மனத்து மை மாட்டி விடும்
நமது நெஞ்சில் உள்ள அஜ்ஞ்ஞான இருளை மாலைச் செய்து விடும்

ஆழ்வீர் நீர் பிரார்த்திக்க வேண்டுமோ -நமக்கு உண்டான நாராயண பிரயுக்தமான உதிரத் தெறிப்பு உண்டே –
உமது சர்வ அபேஷிதங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கின்றேன் என்று எம்பெருமான் அருளிச் செய்ய
தன் பெருமை பாராதே என் சிறுமை பாராதே இப்படி அருளிச் செய்வதே -இது ஒரு சீல குணம் இருக்கும் படி என் -என்று
அவனுடைய சீல குணத்திலே ஈடுபட்டுப் பேசினது -ஓராயிரமாய் -பதிகம்

——————————————————————————-

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்——————–84-

மெய்யான காதலுடன் கூப்பிட்டு -உண்மையான அபிநிவேசத்துடன் கூவி அழைத்து
பேர் ஓத -திரு நாமங்களை அனுசந்திக்கவே
இன் உயிர் உய்யும் -விலஷணமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும்
திருமார்பிலே பிராட்டி திகழ நின்ற திருமாலைத் திருவாழி திருச் சங்குகள் உடனே சேவிக்க ஆசைப் பட்டு ஆழ்வார் கூப்பிட
தூணிலே தோன்றிச் சிறுக்கனுக்கு உதவினாப் போலே எம்பெருமான் மானசமாகத் தோன்றித் தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து உகந்த படியைக் கூறுவதாம் மையார் கரும் கண்ணி பதிகம் –

———————————————————————————-

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—————–85-

இன்னுயிர் மால் -எனக்கு தாரகமான எம்பெருமான்
தோற்றினது இங்கு -இப்போது சேவை சாதித்ததானது
என் நெஞ்சில் என்று -என் நெஞ்சிலே அன்றி ப்ரத்யஷமாக இல்லையே என்று வருந்தி
கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி -அப்போது அப்பெருமானைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்க விரும்பி
யாண் பெண்ணாய் -ஆண் தன்மை குலைந்து பெண் தன்மை யடைந்து
-பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் -மேலும் அப்பெருமானை நினைப்பூட்டுகின்ற மேகம் முதலியவற்றால்
தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—-தளர்ச்சி யடைந்த ஆழ்வார் உடைய கிருபையை அனுசந்திப்பவர்களுக்கு நெஞ்சு குழையும்
கீழே -மையார் கரும் கண்ணியிலே உண்டான அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க விரும்பி
அப்போதே அந்த விருப்பம் நிறைவேறப் பெறாமையாலே ஒரு பிராட்டி தசையை எய்தி ஸ்மாரக பதார்த்தங்களாலே –
பஷி சமூஹங்களாலும் மேக சமூஹங்களாலும் ஆழ்வார் தளர்ந்த படியைக் கூறுவதாம் -இன்னுயிர்ச் சேவலும் -பதிகம்

—————————————————————

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நா சொல்லாது இருப்பது எங்கு –86–எங்கும் இல்லை என்றவாறு

கீழ்த் திருவாய் மொழியில் -இன்னுயிர்க் சேவலிலே-ஸ்மாரக பதார்த்தங்களால் நோவு பட்டுச் செல்லா நிற்கச் செய்தே
கீழே இருத்தும் வியந்து என்கிற திருவாய் மொழியிலே
தடுமாறாக கலந்த கலவி நினைவுக்கு வந்து தரிப்பிக்க அதனை அருளிச் செய்த திருவாய் மொழி உருகுமால் நெஞ்சம்
இன்னுயிர்ச் சேவல் -பதிகத்தின் முடிவில் எழ நண்ணி நாமும் நம் வான நாட்டு ஒன்றினோம் -என்று அருளிச் செய்த
பாசுரத்தைப் பார்த்தால் திருவாய் மொழி யைத் தலைக் கட்டியதாக தோன்றா நிற்கும்
ஆனால் மேலும் பாசுரங்கள் வர வேண்டுமே –குருகூர் சடகோபன் சொல் ஆயிரம் -என்று சங்கல்பம் முதலிலே பண்ணி அருளினாரே
-ஆழ்வார் ஈரச் சொற்களை கேட்க அவனும் இன்னும் ஆவல் உடன் இருந்தான் –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் -சம்சாரி செதனர்கள் உடைய பாக்யமும் உண்டே
இருத்தும் வியந்து பதிகத்தில் மூ வுலகும் தன நெறியா வயற்றில் கொண்டு சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தான்
-என்ற முறை கெடப் பரிமாறிய கலவியை –பிராட்டி சித்ர கூடத்தில் பெருமாள் உடன் –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே புஞ்ஜானா அமானுஷான் போகான் சர்வகாம சம்வ்ருத்திநீ -என்று திருவடி இடம் வார்த்தை அருளினால் போலே சீல குணத்தை பேசி சிதிலர் ஆகிறார் -அந்த கலவியை நினைப்பூட்டி பேச வைக்கும் எம்பெருமான் திருக் காட்கரை எம்பெருமான் போலும் –

————————————————————-

எம் காதலுக்கு அடி மாலேய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் -எங்குமுள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போகவிடு மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும் –87-

தம் பிழையும் சிறந்த செல்வமும் —சௌந்தர்யங்களை யுணர்த்தும் வ்யூஹ விபவ பரதவ த்வயார்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம்
அஞ்சிறைய மட நாரையிலே -அபராத சஹாத்வம் பற்றாசாகவ்யூஹத்திலே தூது தூது
வைகல் பூங்கழிவாயில் -ஆஸ்ரித ஜன ரஷண தீஷிதத்வம் பற்றாசாக விபவத்திலே தூது
பொன்னுலகு ஆளீரோ-ஐக ரஸ்யம் பற்றாசாக பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
இத் திருவாய் மொழியிலே வடிவு அழகு பற்றாசாக அர்ச்சையிலே தூது விடுகிறார்
திரு மூழிக் களத்திலே தம் பரிஜன பரிவாரங்களோடு கூடிக் குலாவா நின்றார் அவர் -அதனாலே நம்மை மறந்தார் போலும்
செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அழகை நினைப்பூட்டி
இப்படி ஈடுபட்ட பராங்குச நாயகி உம்மைப் பிரிந்து தரித்து இருக்க வல்லளோ-என்று சொல்லச் சொல்லி பறவைகளைக் குறித்து
தூது விடுவதாகச் செல்லுகிறது எம் கானல் அகம் கழிவாய் -என்னும் இத் திருவாய்மொழி –

———————————————————

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல் –88-

எம் கானலில் விடப்பட்ட தூதர் மீண்டு வருவதற்கு முன்பே அறப் பதறி திரு நாவாயிலே சென்று அறுக்கும்
வினையாயின திருவாய் மொழி சாதித்து அருளுகிறார்
திருவடி தொழுது மீண்ட அனந்தரம் பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த மநோ ரதம் போலே
ஆழ்வாருக்குப் பிறந்த மநோ ரதம் -திரு நாவாயில் புக வல்லேனோ -புகும் நாள் என்றோ –அங்கே புக்கு கண்ணாரக் கண்டு
அடிமை செய்ய வல்லேனோ -என்கிற மநோ ரதம்
செய்வது அறியேனோ -தவறான பாடம் –செய்வறியாமல் -சரியான பாடம் -செய்வு எனினும் செய்வது எனினும் ஒக்கும் –

———————————————————-

செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் -செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால் –89-

மல்லடிமை செய்யும் நாள் -பரிபூர்ண கைங்கர்யம் செய்யப் பெரும் காலம் எப்போதோ என்று
தொன்னலத்தால் -இயற்கையான பக்தியினால்
போகும் என் தன் மால் –என் அஜ்ஞ்ஞானம் தொலையும்

கீழ் -அறுக்கும் வினை–பதிகத்தில் -அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ -என்றும்
ஓர் நாள் அறியேனே -என்றும்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே -என்றும் -பலகால் பேசின ஆழ்வார் ஆற்றாமை மிக்கு
அன்யாபதேசத்தாலே மல்லிகை கமல் தென்றல் திருவாய் மொழி பிறக்கின்றது
மாலைப்பூசல் பதிகம் இது -மேலே வேய் மரு தோளிணை -காலைப்பாசல் பதிகம்
காடுகளோடு போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரன் மாலைப் பொழுதில் சில நாள்களில்
பசுக்களை எல்லாம் பின்னே வர விட்டு தான் முன்னே குழலூதிக் கொண்டு வருவான் -சில நாள்கள் பின்னும் வருவான்
-முற் கொழுந்தில் காணாமல் திருவாய்ப்பாடி பெண்கள் படும் பாட்டை ஆழ்வார் அடைந்தார்
படை வீட்டில் இருந்தால் மாமியார் மாமனாருக்கு கூசி பெருமாளுடன் நினைத்தபடி பரிமாறப் போகாது என்று காட்டிலே ஏகாந்தமாய்
அனுபவிப்பதாக மநோ ரதித்துப் போந்த பிராட்டியை -காந்தர மத்யே விஜ நே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விளலாப சீதா -என்கிறபடியே
கூப்பிடப் பண்ணுமா போலே திரு நாவாயிலே புக்கு அனுபவிப்பதாக மநோ ரதித்த இவர்க்கு பாதக வர்க்கத்துக்காக
அஞ்சிக் கூப்பிட வேண்டும் படியாய் விளைந்தது -இது தான் இங்கு அன்யாபதேசப் பேச்சு-

—————————————————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் ——————90-

மால் உமது வாஞ்சை முற்றும் -எம்பெருமான் -ஆழ்வீர் உம்முடைய அபேஷிதங்கள் எல்லா வற்றையும்
மன்னு உடம்பின் முடிவில்-இந்த சரீரத்தின் முடிவிலே
சால நண்ணிச் செய்வன் எனத் -மிகவும் பொருத்தமாகத் தலைக் கட்டித் தருகிறேன் என்று அருளிச் செய்ய
தான் உகந்து -மேல் அவனைச்-தாம் மனம் மகிழ்ந்து அப்பறமா புருஷனை
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-திருக் கன்ன புரத்தில் சென்று ஆஸ்ரயுங்கோள் என்று அருளிச் செய்த நம்மாழ்வார்
தாரானோ நம்தமக்குத் தாள்-நமக்கு தமது திருவடிகளை பிரசாதித்து அருள மாட்டாரோ
நாளேல் அறியேன் என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் இந்த தேக அவசானத்தில் உம்மைப் பரம பதத்திலே கொண்டு போய்
அடிமை கொள்ளக் கொடுவோம் என்று நாளிட்டுக் கொடுக்க அத்தாலே திரு உள்ளம் உவந்து அப்பெருமானைத் திருக் கண்ண புரத்திலே
சென்று சேருங்கோலள் என்று பரோபதேசம் பண்ணின பதிகம் -மாலை நண்ணி -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்பதில் நோக்கு –
——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: