திருவாய் மொழி நூற்றந்தாதி -71-80—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நங்கள் மனம் –71-

தேவனுறை பதியில் -கீழ்ச் சொன்ன திவ்ய தேசமாகிய திருவாறன் விளையிலே
சேரப் பெறாமையால் -சேர்ந்து கூடி அடிமை செய்யப் பெறாமையாலே
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் –
அவனது ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற நிலைமையிலும்
யாவையும் தானாம் நிலையும்
சகல சேதன அசேதன பிரகாரத்வ ரூபமானை நிலைமையிலும்
சங்கித்து அவை தெளிந்த –
இந்த இரண்டு வித அதி சங்கைகள் தீர்ந்து இரண்டு குணங்களிலும் தெளிவு பெற்ற
மாறன் பால் மா நிலத்தீர் நங்கள் மனம் —
ஆழ்வார் பக்கலிலே என் நெஞ்சு பொருந்தி நின்றது –

இன்பம் பயக்க -திருவாய் மொழியில் -மநோ ரதம்
அவன் ஸ்வரூபம் குணங்களிலும் அதி சங்கை பண்ணி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்பதால் அதி சங்கை விளைந்தமை தோன்றும்
பிராடிமாரும் அருகே இருக்க -நித்ய ஸூரிகளும் உடன் இருக்க அவனும் சர்வ சக்தனாய் இருக்க -அடியார் உகந்த திருமேனி பரிஹரிக்குமவனாயும் இருக்க
-தமக்கும் அபி நிவேசத்தில் குறை இல்லாமலும் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாது ஒலோயவே அதி சங்கை வந்தது
நான் ஒருவன் தோன்றி இவை எல்லாம் உனக்கு பொய்யாகப் போகவோ
பிராட்டி -பிராஜ்ஞ க்ருதஜ்ஞ ச சானுக்ரோசஸ் ச ராகவோ சத்விருத்தோ நிரநுக்ரோச சங்கே மத்பாக்ய சம்ஷயாத்-என்று அதி சங்கை பண்ணினால் போலே
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே என்பவர் இப்படி அதி சங்கை பண்ண -இழக்க ஒண்ணாது என்று எம்பருமான் இவ்வளவு செய்த நாம் மேலும் செய்வோம் வீணாக அதி சங்கை கொள்ள வேண்டா என்று சமாதானம் பண்ணி அருள
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப் பலரடியார் முன்பு அருளிய -ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசிப்பிக்க அத்தை
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதரானமையால் சங்கை தெளிந்தமை தோற்றும்

————————————————————————————-

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு ————–72-

தன் உயிரில் -ஆத்மாத்மீயங்களில்
கீழ்த் திருவாய் மொழியான தேவிமாரவரில் அதிசன்கை யுன்டாகித் தீர்ந்த அளவே யல்லது தமக்கு அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் நேர வில்லை –
அதனால் ஆழ்வாருக்கு ஒரு சங்கை உண்டாயிற்று –சம்சாரத்திலே நமக்கு நசை இல்லை என்று நாம் எண்ணி இருக்கிறோம் –
ஆகிலும் உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் சர்வேஸ்வரனுடைய திரு உள்ளம் அறிந்ததாக நமக்கு சம்சார ருசி இருக்கிறது போலும்
-இல்லையாகில் எம்பெருமான் உபேஷிக்க ப்ரசக்தி இராதே -உபேஷிக்க காண்கையாலே நமக்கு சம்சார ருசி இன்னமும் அற வில்லை
என்று எம்பெருமான் திரு உள்ளம் பற்றி இருக்கக் கூடும் -அங்கனம் ஆகில் அது பொய்யாக இருக்க மாட்டாதே
-நம்மை அறியாமல் நமக்கு சம்சார ருசி உள்ளத்தின் உள்ளே உறைகின்றதோ என்னவோ -என்ற ஒரு அதிசங்கை உண்டாயிற்று
ஆதாலால் நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே -காலம் பல சென்றும் காண்வது ஆணை உங்களோடு எங்களிடை இல்லையே -என்றும்
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -இத்யாதி பாசுரங்களால் அருளிச் செய்கிறார்

————————————————————————–

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவர் இல்லை என்று அஞ்ச
எங்கும் பரிவர் உளன் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரி கழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –73-

கீழில் திருவாய் மொழியில் -நங்கள் வரி வளையில்-ஓர் கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று அனுசந்தித்து
திவ்ய மங்கள விக்ரஹத்து வை லஷண்யம்-திரு உள்ளத்தில் பட்டு இப்படி சௌகுமார்ய சௌந்தர்யாதிகள் உடைய நீ
பிரயோஜனாந்த பரர்கள் கார்யம் செய்து அருள பிரதிகூலர் மலிந்த இங்கே வர வேண்டுமோ -என்ன தீங்கு நேரிடுமோ என்று பயந்து வயிறு எரிய
அங்கும் இங்கும் பதிகத்தில் -ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -ஆழ்வார் அஞ்சினமை தோற்றும்
மேலே -ஆழ்வீர் நமக்கு நித்ய பக்தர்கள் உண்டே -கலக்கமில்லா நல தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமில்லா வானவர்
எல்லாம் தொழுவார்கள்–என்று அருள அச்சம் தீர்ந்தா-

————————————————————————————————-

வாராமல் அச்சம் இனி மால் தன வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—————74-

இனி அச்சம் வாராமல் -மால் -தன் வலியினையும்-சீர் ஆர் பரிவருடன் சேர்த்தியையும்-பாரும் என தான்
உகந்த மாறன் தாள் நெஞ்சே சார் -சாராயேல் மானிடவரை சார்ந்து மாய்-
கீழே அங்கும் இங்கும் பதிகத்தில் ஆழ்வார்க்கு உண்டான அச்சத்தை எம்பெருமான் ஒருவாறு தீர்த்து இருக்கச் செய்தேயும்
இன்னமும் இவர்க்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே அச்சம் மறுவலிடக் கூடும் என்று எண்ணி
பிரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான திருச் செங்குன்றூரிலே மகா சக்திமான்களான மூவாயிரம் வேதியர்கள்
பரிந்து நோக்க அவர்களுடன் தான் சேர்ந்து வாழ்கிறபடியையும் தனக்கு அசாதாரணமாக யுள்ள வீர்ய பராக்ரமாதி குண சமிருத்தியையும்
காட்டிக் கொடுக்க அதனால் அச்சம் கெட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து உக
இல்லையேல் சம்சாரிகளோடே சேர்ந்து பாழாய் போக வேண்டியது தான் என்றார் யாயிற்று

—————————————————————————-

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது .அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்—————75-

மாயன் வடிவு அழகை காணாத வல் விடாயாயது அற விஞ்சி அழுது அலற்றும் தூய புகழ் உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லி ஆம் -காள ராத்ரியாகும்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானஸ அனுபவ மாத்திரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே மிகவும் நோவுபட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே சாலவும் பரிதபித்து அவனது வடிவு அழகைப் பல படியாக வருணித்துக் கொண்டு பெரும்
கூப்பீடாகக் கூப்பிடுகிற திருவாய் மொழி மாயக் கூத்தா வாமனா -எனபது

—————————————————————————–

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து———-76-

நல்லவர்கள் மன்னு -நற் புகழ் வேதியர்கள் நிலை பெற்று வாழ்கிற
கீழே அநவரதமாக நிகழ்ந்த தம்முடைய பெரு விடை கெடும்படி தம்மோடு வந்து சம்ச்லேஷிக்க விரும்பி அடுத்து
அணித்தாகத் திருக் கடித்தானம் என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே வந்து இருந்து தம் பக்கலிலே மிகவும்
ஆவல் கொண்டு இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ஆழ்வார் தாம் ஹ்ருஷ்டராகிற
படியைத் தெரிவிக்கும் -எல்லியும் காலையும் -பதிகம் –

—————————————————————————–

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு ————-77-

எல்லியும் காலையும் -திருவாய் மொழியில் இருப்பைக் காட்டிக் கொடுத்த திருக் கடிதானத்தில் இருந்த சர்வேஸ்வரன்
-தானே இவ்விடம் தேற வந்து -இவ் வாழ்வார் உடைய மநோ ரதம் முழுவதும் முற்றுப் பெற இவர் இடத்தே அருள் செய்து
ஒரு நீராகக் கலந்து-அத்தாலே -இனிமையோடு இருக்கும் படியை சேவித்த ஆழ்வார் அவன் தம்மோடு சம்ச்லேஷித்த படியை
திரு உள்ளத்தாலே கண்டு -இருத்தும் வியந்து -திருவாய் மொழி பதிகம் அருளிச் செய்கிறார்

———————————————————

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலை யா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து ——————78-

இருத்தும் வியந்து என்கிற கீழ்த் திருவாய் மொழியிலே பேர் உவகை உடன்-அனுபவிக்கிற அளவில் ஆழ்வார்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று தம்முடைய சிறுமையை அனுசந்தித்தார் -அதனால் இவர் நிச்சய அனுசந்தானம் பண்னி அகலக் கூடும் என்று எண்ணின எம்பெருமான் இந்த சம்ச்லேஷம் இடையறாது செல்ல வேணும் என்று கருதி
ஆழ்வீர் மிக உயர்ந்ததான ஆத்ம வஸ்துவை நீர் தண்ணியதாக நினைப்பது தகுதி யன்று -இதன் ஏற்றத்தைக் காணீர் -என்று ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைக் காட்டிக் கொடுக்க இனி நைச்ய அனுசந்தானம் பண்ணி அகல மாட்டாமை யாகிற தமது திரு உள்ளத்தை வெளியிட்டார் ஆழ்வார் -கண்கள் சிவந்து -பதிகத்தில்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்ற ஆழ்வார் அருளிச் செயலை காரி மாறன் தன் கருத்து ஆய்ந்து உரைத்தான் -என்கிறார் இதில் –

————————————————————-

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திரமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா ———79-

திரம் ஆக உயிர் அன்னியருக்கு ஆகாது —-ஸ்திரமாக ஆத்மா அந்ய சேஷப்படாமல்
நெடிது ஆ ஒரும் -தீர்க்கமாக ஆராய்மின்
ஆழ்வார் தம்முடைய அனந்யார்ஹத்வத்தைத் தோழி பாசுரத்தாலே வெகு சமத்காரமாக அருளிச் செய்த பதிகம் -கரு மாணிக்க மலை –
அவளுக்கு விவாஹம் நடத்த வேணும் என்று மாதா பிதாக்கள் எண்ணி ஸ்வயம் வர சன்னாஹம் பண்ணின அளவிலே
அன்றிப்பின் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம்மாயற்கு அல்லால் -என்றும்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்னும் படியான தண்மை வாய்ந்து இருக்கிற தலைவி அந்த விவாஹ
சன்னாஹத்தைத் தவிர்க்க வேண்டி ஏற்கனவே தனக்கு எம்பெருமான் உடன் விவாஹமாய் விட்டது என்பததைத் தன் வாக்காலே
சொல்லிக் கொள்ள இயலாதாகையாலே தோழி ஊஹமாகச் சொல்லுகிற பாசுரத்தாலே -அனன்யார்ஹத்வம் வெளியிட்ட படி

————————————————————–

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர்க்கு அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு ———80-

அது கொல்லை நிலம் ஆன நிலை கொண்டு –அந்த பாகவத சேஷத்வமே இதற்கு மேல் இல்லை என்னலாம் படியான
உத்தம புருஷார்த்தம் என்று கொண்டு -கீழ்த் திருவாய் மொழி யாகிற கரு மாணிக்க மலையில் ஆத்மாவுக்குச் சொன்ன
பகவத் அனன்யார்ஹத்வம் ஆனது நிலை நிற்பது பாகவத சேஷத்வ பர்யந்தமானால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளில் தோற்று அடிமை புக்கு இருக்கும் பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம்
என்று அறுதியிட்டு அந்தப் பரமார்த்தத்தை நெடுமாற்கு அடிமை எனும் பதிகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார்
கொல்லை நிலம் -சரமாவதியான நிலம்
பத்தர் -பாட பேதம் -பத்தர்க்கு -அழகிய பாடம்

———————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: