திருவாய் மொழி நூற்றந்தாதி -51-60—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-

வைகல் வைகும்-எப் பொழுதும் எழுந்து அருளி இருக்கும்
கை கழிந்த காதலுடன் -மிகப் பெரிய பிரேமத்துடன்
பஷிகளை விளித்து நீங்கள் திரு வண் வண்டூரிலே சென்று அங்கு எழுந்து அருளி இருக்கின்ற விபவத் திருக் கோலமான
ஸ்ரீ ராமபிரானுக்கு என்னுடைய விரஹ வேதனையைத் தெரிவித்து அங்கிருந்து நல்ல சமாசாரம் கொண்டு வர வேணும் என்று
தூது போக விட்ட ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குவதே மா நிலத்தவர்களுக்கு நலம் என்றதாயிற்று

—————————————————————————————–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு——————52-

கீழில் தூது விட்டவாறே எம்பெருமான் ஓடி வர -இப்படி தூது விட்டு அழைக்க வேண்டும் படி தாமதித்தற்கு காரணம்
இவன் வேறு பெண்டிரோடு கலந்து இருந்து போது போக்கி இருந்தான் அத்தனை என்று கருதி ப்ரணய ரோஷத்தாலே
கதவடைத்து தள்ளி லீலா ரசம் கொண்டாடின ஆழ்வார் உடைய திருவடிகளே சரணம் என்கிறார்

—————————————————————————————–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் ——————–53-

நல்ல வலத்தால் -பந்து பறித்தல் -வாக்கு வாதங்கள் முதலிய நல்ல வன்மையால் –
பிரணய ரோஷம் தலையெடுத்த ஆழ்வாரை எம்பெருமான் சேர விட்டுக் கொண்டான்
மகா பலசாலிகளையும் வென்றவன் ஆதலால் அபலைகளான நம்மை வெல்லுதல் அவனுக்கு பணியோ என்று இருந்த ஆழ்வாருக்கு
தன்னுடைய விருத்த விபூதி யோகத்தைக் காட்டிக் கொடுத்து இதையும் பாரீர் என்ன -அங்கனே பார்த்து ஸ்தோத்ரம் பண்னி வாழ்த்தின
– நல் குரவு என்ற திருவாய் மொழியை ஓத வல்லவர்கள் வானவராலும் கொண்டாடப் பெறுவார்கள் -என்றதாயிற்று
வானவர்க்கு வாய்த்த குரவர்-நித்ய ஸூ ரிகளுக்கு பொருத்தமான குருக்கள் ஆவர் –

—————————————————————————

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் ————-54-

குரவை ஆய்ச்சி பதிகம் பேசின ஆழ்வார் ஆழ்வாருடைய ஸ்ரீ ஸூ க்திகளே நமக்கு பரம போக்யம்
கீழே -பிறந்தவாறும் திருவாய் மொழியில் எம்பெருமானுடைய சேஷ்டித விசேஷங்களைச் சிந்தித்து உருகி உள் குழிந்து தளர்ந்து பேசின
குறை தீர்கின்றது இத் திருவாய் மொழியில்
அவனது சேஷ்டிதங்களை வாயாராச் சொல்லி ஹர்ஷத்தை பெரு மிடறு செய்து வெளியிடுகிறார்
சேஷ்டிதங்களை முதல் இரண்டு அடிகளில் சொல்லி பின்பு எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -எனக்கார் பிறர் நாயகரே -மாறுளதோ இம் மண் மிசையே –
சாத்விக அஹங்காரம் தோற்ற அருளிச் செய்கிறார்
தேனே பாலே கன்னலே அமுதே -விலஷண பானம் பண்ணின ஆழ்வாருக்கு சொல்ல வேணுமோ –
இத் திருவாய் மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதார அனுபவமே யாக செல்லும் -அகல் கொள் வையம் யளந்த மாயன் -மாணியாய் நிலம் கொண்ட மாயன் –
இந்த அவதார சேஷ்டிதங்களும் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்கள் உடன் ஐக்கியம் என்பதால் –
சிறுமையின் வார்த்தையை மாவலயிடை சென்று கேள் -வருக வருக இங்கே வாமன நம்பி
இத் திருவாய் மொழியிலே ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பாவார் -அவனும் ராமவதாரம் அல்லது போக்கி யறியான் -அவனுடைய பிரபந்தமும் அப்படியே
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார் -இத் திருவாய் மொழி கிருஷ்ண விருத்தாந்தம் ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது
-பாவோ நான் யாத்ரா கச்சதி என்று கொண்ட பரத்வத்தையும் வேண்டாத திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஓன்று அறியாதபடி
பிறந்தவாற்றில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி ஸ்ரீ ப்ருந்தாவனந்த வ்ருத்தாந்தத்தை காட்டிக் கொடுக்கக் கண்டு
அது பூத காலமாய் தோற்றுகை யன்றிக்கே சமகாலம் போலே கிட்டி நின்று அனுபவிக்கிறார் –ஈடு

——————————————————————

துவளறு சீர் மால் திறத்து தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால் –55-

இந்த திருவாய் மொழி ஆழ்வார் தம் படிகளை தாமே தெரிவிப்பாது -ஈடு -மாறன் தன் சீலம் எல்லாம் சொன்னான்
அதற்குக் காரணம் கீழ் திருவாய் மொழியில் பிறந்த அனுபவம்
அடிடோமொடும் நின்னோடும் பிரிவின்றி பல்லாண்டு -திருமாலவன் கவி -என்றைக்கும் என்னை மேலே சொல்லிக் கொள்வார்
ஆழ்வார் உடைய தொலை வில்லி மங்கல பெருமாள் மேலே உள்ள பிராவண்யத்தை தாய்மாருக்கு தோழிமார்கள் சொல்வதாக செல்லும் இத் திருவாய் மொழி
மூன்றாம் பத்தும் ஆறாம் பத்தும் மகள் தோழி தாய் மூவர் பாசுரங்கள் உண்டே
தீர்ப்பாரை யாமினி -துவளில் மா மணி மாடம் -கரு மாணிக்க மாலை மூன்றும் தோழி பதிகங்கள்
இத் திருவாய் மொழிக்கு கீழும் மேலும் எல்லாம் எம்பெருமானைக் கவி பாடினார் -இத் திருவாய் மொழியிலே தம் படி சொல்கிறார் –
-தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யா அதிசயத்தை அன்யாபதேசமாக அருளிச் செய்கிறார்
-இத் திருவாய் மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாம் போர விரும்பி இருப்பார்கள் –
-தாமே வேணுமாகாதே தம் படி பேசும் போதும் -இத்யாதிகள் ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்

————————————————————————–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் கோலிய
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊன மறு சீர் நெஞ்சே யுண்–56-

தம்முடைய ஆத்மாத்மீயங்களை ஸ்வ பிரதான பூர்வகமாக விட வேண்டாமல் –கீழே ஏறாளும் இறையோனும் -பதிகத்தில் போலே அன்றிக்கே
இங்கு -தன்னடையே முற்கோலித்து தாம்மை கட்டடங்க விட்டு அகன்ற படியை அருளிச் செய்த
ஆழ்வார் உடைய கல்யாண குணங்களையே அனுபவிக்க மனசுக்கு உபதேசிக்கிறார்
கீழ் துவளில் மா மணி -தோழி பாசுரம் -இங்கு மாலுக்கு வையம் -தாய் பாசுரம்
சங்கை இழந்தாள்-மாமை இழந்தாள் -சாயை இழந்தாள் -மாண்பு இழந்தாள் -கற்பு இழந்தாள் கட்டு இழந்தாள்
-ஏறாளும் இறையோனும் -மணிமாமை குறைவிலமே -உயிரினால் குறைவிலமே -போலே இல்லையே
-எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்களையும் திவ்ய குணங்களையும் நினைக்க நினைக்க பரவசராய் மெலிந்து
ஆவி நீராய் உருகி இருக்கின்றமையை அன்யாபதேசத்தால் அருளுகிறார் –

———————————————————————–

உண்ணும் சோறாதி யொரு மூன்று எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நம் தமக்குப் பொன் –57–

வா ஸூ தேவாஸ் சர்வம் —
கீழ் திருவாய் மொழி போலே இதுவும் தாய் பாசுரம்
மகளின் விரஹ தாபங்களுக்கு உபசாரங்கள் பண்ணிக் கொண்டு இருந்த திருத் தாயார் கூடவே படுத்துக் கொண்டு இருந்தாலும்
-தலை மகளைக் காணாமல் திருக் கோளூருக்கு போய் இருக்க வேண்டும் என்று அருளிச் செய்யும் திருவாய் மொழி
பேற்றுக்கு த்வரிக்கையும் பேரு தப்பாது என்று இருக்க வேண்டிய அத்யாவசாயும் இரண்டு அவஸ்தைகளும் உண்டு இதில்
கள்வன் கொல்-இருவராய் போனதால் வயிறு எரிச்சல் அதிகம் -ஆளவந்தார் நிர்வாகம்
பரஸ்பரம் வ்யாமோஹம் உண்டே

———————————————————————————————

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்————-58-

உபய விபூதியையும் வழங்குவதாக வாக்கு அளித்துப் புள்ளினங்களை விளித்து திரு நாட்டிலோ அந்தர்யாமித்வத்திலோ -மன்னு திருநாடு முதல் –
எங்கே யாவது எம்பெருமானைக் கண்டு பிடித்து நீங்கள் எனது பிரிவாற்றாமையை அவனுக்கு அறிவிக்க வேணும் என்று சொல்லி –
பொன்னுலகு ஆளீரோ -திருவாய் மொழியில் தூதுவிட்ட ஆழ்வாரையே அனைவரும்
-நீடு உலகீர் -பெரிய உலகத்தீர்களே -நீர் போய் வணங்க வேணும் என்கிறார்

——————————————————————————————–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே உய்யும் உலகு –59-

பொன்னுலகு ஆளீரோ திருவாய் மொழியில் பறவைகளை தூது செல்லும்படி வேண்டினார் -மரங்களும் இரங்கும் வகை
மணி வண்ணவோ என்று கூவுமால் -என்கிறபடியே ஆழ்வார் உடைய ஆர்த்த த்வனிக்கு சைதன்யம் உள்ள பஷிகள் இரங்க சொல்ல வேணுமோ –
-இனி என் செய்வது என்ன என்று நினைந்து தம் கையில் பிரம்மாஸ்திரம் இருக்க -வேறு ஒருவர் இடமும் பல் காட்ட வேண்டாமல்
பரம பதத்து அளவும் கேட்கும் படி கூப்பிட்டார் -அவனோ பரம சேதனன் அன்றோ -தனது மிடற்று ஓசை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்
-தூது செல்லத் தானே தடை காலாலேயோ சிரகாலேயோ போக –
உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -அவஸ்தையிலும் தமது அபி நிவேசத்து விசேஷத்தாலே உரக்கக் கூப்பிடுகிறார்
பிராட்டி சிறை இருந்தது பரானுக்ரகத்தாலே யானால் போலே இவருடைய வியசனமும் பரானுக்ரகத்துக்கு உடலாயிற்று
அவள் சிறை இருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைத்து நாடெல்லாம் வாழ்வது போலே அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் லோகத்துக்கு தண்ணீர் பந்தல் ஆயிற்று -திருக் குழல் ஓசையாலே திரு வாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம்
பட்டதை தம் மிடற்று ஓசையாலே அவன் பண்ணும் படும் படி பண்ணுகிறார் –ஈடு
இப்படி தூத ப்ரேஷணம் பண்ணியும் ர்ம்பெருமான் வரக் காணாமையாலே அவனைத் தம்முடைய பெரிய ஆர்த்தியோடே கூடத் திரு நாட்டிலே
கேட்கும் படி கூப்பிட்டு அழைக்கிறார் -ஆறாயிரப்படி
இங்கனே -நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா ஆராதகாதலுடன் கூப்பிட்ட காரி மாறன்-பாசுரம் இட்டது பேரின்ப வெள்ளம்

——————————————————————————–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர்மகளை முன்னிட்டு அவன் தன மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்–60-

கானும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –அலர் மேல் மங்கை உறை மார்பன் -பின்னானாரும் இழக்க வேண்டாத படி திரு மலையிலே
நித்ய சந்நிதி பண்ணி அருள அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து சரணம் புகுகிறார்
அர்ச்சாவதாரம் பூர்ணம் என்பதால் -ஆழ்வார்கள் சரணம் புகுவது இங்கே இ றே -ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி
பத்தாம் பாட்டிலே சரணம் புகுகிறார்
பாட்டு தோறும் அடியை பிடித்து -குல தொல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -என்றும்
ஆறாவன்பின் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே -என்றும் -அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே -என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே என்றும் -திண்ணார் சார்ங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் எந்நாளே -என்றும் –
நோலாது ஆற்றேன் உனபாதம் காண -என்றும் அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே என்றும்
புகல் ஒன்றும் அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்றும் இப்படி பதிகம் முழுவதும் திருவடி சம்பந்தம் உண்டே
த்யார்த்தமாகவே பிராட்டியை முன்னிட்டு -அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா –
என்று அருளிச் செய்ததையே -அலர் மகளை முன்னிட்டு என்று அருளிச் செய்கிறார் –

—————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: