திருவாய் மொழி நூற்றந்தாதி -31-40—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-

உலகுக்கு ஒரு நாயகமாய் உய்க்கும் இன்பம் – ஏகாதிபதிகளாய்க் கொண்டு அனுபவிக்கின்ற ஆனந்தமும்
வானோர் இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் -திரம் ஆகா –தேவர்களுடைய விசாலமான ஸ்வர்க்க போகத்தில் சென்று அனுபவிக்கும்
ஆனந்தமும் ஸ்திரம் -நிலை நிற்க மாட்டாது
மன்னுயிர்ப் போகம் தீது -நித்யமான ஆத்ம அனுபவம் ஆகிற கைவல்யமானது ஸ்வரூபத்துக்குச் சேராதது
பன்னி உரைப்பால் -விரிவாக அருளிச் செய்ததனால்
பகவத் விஷயத்தில் செய்யும் அடிமை ஒன்றே இனியதாகும் -என்று விரிவாக அருளிச் செய்த இந்த ஒரு நாயகம் -திருவாய் மொழி -என்றவாறு

—————————————————————————

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —————32-

கீழே முடியானே -திருவாய் மொழியிலே ஆழ்வாருக்கு பிறந்த அவஸ்தை ப்ராசான்கிகமான மூன்று திருவாய் மொழிகளால்
தலை மடிந்து கிடந்தது -அது இப்பொழுது தலையெடுத்து நிற்கின்றது
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராவணனுக்கு சொன்ன ஹிதம் அவனுக்கு பயன் இல்லாமல் தனது பக்திக்கு உறுப்பானது போலவும்
ஆழ்வார் செய்து அருளும் பர உபதேசங்கள் பிறருக்கு உறுப்பு இல்லாமல் தமது அபி நிவேசம் பெருக உருப்பாயிற்று
காலந்தர ஸேஷ்டிதங்களையும் காணும் படி -ஆற்றாமை மிக்கு பிராட்டி அவஸ்தை பெற்று திருத் தாயார் பேசும் திரு மொழியாய் தலைக் கட்டுகிறது
பீமசேனன் திருவடி இடம் முன்பு சாகரம் தர்த்து முத்யுக்தம் ரூபமப்ரதிமம் மஹத் த்ரஷ்டுமிச்சாமி தே வீர -என்று அபேஷித்து
மாருதியும் காட்டி அருள-அது -போலே ஆழ்வாரும் அபேஷிக்கிறார்

———————————————————————–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்துவாதி தனை மேவிக்
கழித்து அடையக் காட்டிக் கலந்த குண மாறன்
வாழ்த்துதலால் வாழ்ந்தது இந்த மண் -33-

கால சக்கரத்தான் என்பதால் பாலனாய் திருவாய் மொழியில் ஆசைப் பட்டபடியே காலாந்திர ஸேஷ்டிதங்கள் எல்லாம் நிகழ போலே காட்டிக் கொடுக்க
-பிரணயித்வ குணத்தை அனுபவிப்பிக்கவே எல்லாரும் பெற்றாராய் இந்த பிரணயித்வ குணத்தை பாராய்ட்டி அருளிச் செய்த இந்த திருவாய் மொழியால்
மண்ணுலகம் உய்வு பெற்றது -கலந்த குணம் -மாறன் குணம் என்றபடி
மூன்று நிர்வாஹம் பூர்வர்கள் இந்த திருவாய் மொழிக்கு -எம்பார் -சந்த்ரனைக் கேட்கும் குழந்தைக்கு தேங்காய் காட்டி -குண அனுபவம் செய்து தரிப்பித்தான்
திருமலை நம்பி -ஆழ்வீர் நீர் அபேஷித்தபடி செய்யக் கடவோம் -என்றதும் ஆழ்வார் க்ருதார்த்தர் ஆகிறார்
ஒரே போகியாகக் காட்டி அருளினான் பட்டர்

————————————————————————————–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடல் முன்
போலி முதலான பொருளை யவனே நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு –34-

புணர் தொரும் என்னக் கலந்து பிரிந்து ஜ்ஞான பக்திகளை வளர்த்தது கனம் குழை இடக் காது பெருக்குதலும் மாச உபவாசி போஜன
புறம் பூச்சு போலே ஆற்ற நல்ல மா போகச் சிரமமாக -என்றபடி
ஆனந்த ரசம் சாத்மிக்க எம்பெருமான் பிரிய ஆற்றாமை விளைந்து கண்ட பொருள்களை எல்லாம் அவனாகவே நினைத்து
மண்ணைத் துழாவி -திருவாய் மொழி -போலி முதலான -எம்பெருமான் சம்பந்தம் பெற்ற பொருள்கள் –
பரம வைஷ்ணத்வம் அல்லவா இந்த மாதிரி போலி கண்டு அவனே என்று நினைப்பது
கீழே கோவை வாயாளில் பிரணயித்வ குணத்தை பேசி ஹர்ஷம் பெற்றார் -அத்தை அரை யாறு படுத்த மறைந்து நின்றான்
ஆற்றாமை மீதூர்ந்தது -பிராட்டியைப் பிரிந்த அனந்தரம் ஆற்றாமையால் மேல் நோக்கிப் பார்த்து விலங்க சஞ்சரிப்பது –
அது தானும் மாட்டாது ஒழிவது-ஒரு வருஷத்தில் நின்றும் வ்ருஷாந்தரத்தில் சென்று கிட்டுவது மைதியைக் கண்டி கோளோ என்று கேட்பது
ஆணாறு பெண்ணாறு கள் ஓன்று இன்றிக்கே எங்கும் தேடுவதாய் பெருமாள் பட்ட பாடு எல்லாம் இவளும் பட
இவள் படுகிற பாடுகளையும் இவள் வார்த்தைகளையும் திருத் தாயார் சொல்ல இவள் கை வாங்கும் அளவாக அவன் வந்து முகம் காட்டி
ஆச்வாசிப்பிக்க தரித்ததாகத் தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –

——————————————————————————

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காக தன் பெருமை யானதெல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறுரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து –35-

கீழே மண்ணை இருந்து துழாவி யில் ஆழ்வார் உடைய அளவு கடந்த வ்யாமோஹத்தை தணியச் செய்ய திரு உள்ளம் கொண்டு
தன்னுடைய அசாதாரண ஆகாரத்தைக் காட்டிக் கொடுத்து சம்ச்லேஷிக்க அதனாலே உள்ளம் குளிர்ந்து துயர் நீங்கி உபய விபூதியிலும்
தமக்கு நிகர் இல்லாமையை வீற்று இருந்து ஏழு உலகு திருவாய் மொழியில் அருளிச் செய்கிறார்
ஆசையை வளர்க்க அவனே கிருஷிகன் முடிந்த அவா -முனியே நான் முகனே யிலே தான் -கீழே எல்லாம் கிருஷி பண்ணி
-ஆழ்வார் முடியாதவாறு காட்ஷி கொடுத்து -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் அருள வைக்க வேண்டுமே
-பகவத் குண ரசிகர்களுக்கு தண்ணீர் பந்தல் வைக்க -சம்ச்லேஷ விச்லேஷங்கள் மாறி மாறி பண்ணி அருளுகிறான்
இந்த திருவாய் மொழியில் ஆழ்வார் உடைய ஹர்ஷம் இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்று பேசும் படி
இத் திருவாய் மொழி சூழ் விசும்பு திருவாய் மொழிக்கு பின்பே பிறந்து இருக்க வேண்டும் என்று நஞ்சீயர் ரசோக்தியாக அருளிச் செய்வாராம்
ஆழ்வீர் நம் படி எல்லாம் கண்டீரே -நம் ஐஸ்வர்யம் எல்லாம் நிறம் பெரலாவது உமது திருவாக்கால் ஒழுங்கு பட பாடினால் அன்றோ என்று
திருக் கையில் தாளத்தைக் கொடுக்க -அந்த இருப்புக்கு பல்லாண்டு பாடி மகிழ்கிறார் –

———————————————————————————

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-

தீர்ப்பார் இலாத மயல் தீரக் -ஒருவராலும் தீர்க்க முடியாத பெரிய காதல் தீரும்படி
கலந்த மால்-கீழில் — திருவாய் மொழியிலே வந்து கூடின எம்பெருமான்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -ஆழ்வாருடைய பிரக்ருதியைச் சிறிதும் ஆராயாமல் உடனே பிரிந்த
அளவிலே
-நேர்க்க-முன்னிலும் காட்டில் விசேஷமாக
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க -சைதன்யம் அழிந்ததனால் தாய்மார் முதலிய உறவினரும் மிகவும் கலங்கி விபரீத பிரவ்ருதிகள் பண்ண
-அவ்வளவிலே –
பேர் கேட்டு-தோழிமார் சொன்ன திரு நாமங்களை யாத்ருச்சிகமாகக் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—மோஹம் தெளிந்து உணர்த்தி பெற்றார் -இது ஆழ்வாருடைய சீல குணம் இருந்தவாறு என்னே

——————————————————————————-

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு———–37-

மண்ணை இருந்து துழாவி -ஆழ்வாருக்கு உண்டான மயலானது தீரும் படியாக வீற்று இருந்து ஏழ் உலகில் வந்து கலந்த சர்வேஸ்வரன்
மீண்டும் பிரிய முன்னிலும் காட்டிலும் அதிகமாக வ்யாமோஹம் தலை எடுத்தது –
தாய்மார் முதலான உறவினர் யுக்தாயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே கலங்கி ஏதோ தவறான வழிகளில் பரிஹாரம் செய்ய முயல
ஆழ்வார் உடைய பிரகிருதி யறிந்த தோழியர் வந்து -குடி கேட்டதே -பகவத் பாகவத பஜனம் அன்றோ செய்ய அடுப்பது –
மாயப் போர்த் தேர்ப் பாகனார் -மதுவார் துழாய் முடி மாயப்பிரான் -உலகு ஏழும் விழுங்கி யுமிழ்ந்திட்ட பெரும் தேவன் –
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் -மணியினனி நிற மாயன் -மாயப்பிரான் -விண்ணோர் பெருமான் -கண்ணபிரான் -என்றும்
வண் துவராபதி மன்னன் -என்ற திருநாமங்களைச் சொன்னபடியாலே அந்தத் திரு நாமங்களைக் கேட்கப் பெற்றதனால்
ஆழ்வார் மயக்கம் தெளிந்து அறிவு பெற்றார் -என்றதாயிற்று
சீலன் மாறன் பேர் கேட்டு அறிவு பெற்றான் -என்று அந்வயம்-சதாசாரபரரான ஆழ்வார் என்றபடி

——————————————————————————–

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என்னுடைமை மிக்க யுயிர் தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனுமாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு–38-

சீலமில்லாச் சிறியேன் -திருவாய்மொழி யில் -கூவிக் கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்று எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு
ஆவி துவர்ந்து துவர்ந்து நள்ளிரவும் நண்பகலும் ஓலம் இட்டு அழைத்து கதறின இடத்திலும் எம்பெருமான் வந்து முகம் காட்டாமையாலே
பிராப்தனாய் சீலவானாய் விரோதி நிரசன சீலனாய் சர்வ சக்தனாய் இருந்தும்
முகம் காட்டாதது இத்தலையை வேண்டாமையால் அன்றோ -அவனுக்கு வேண்டாத ஆத்மாத்மீயங்கள் எனக்கு எதுக்கு என்று வெறுத்து
அவற்றில் நசை அற்றபடியை ஏறாளும் இறையோனில் அருளிய பராங்குசன் பாத இணைகளே நமக்கு பரம புருஷார்த்தம்
பெருமாளை பிரிந்து பிராட்டி அசோகா வணியில் ராஷசிகள் நடுவே இருக்க மாட்டாமல் தன்னை முடித்துக் கொள்ள முயன்றது போலே -ஆழ்வார் –
ந தேஹம் ந பிராணான்–தத் சத்யம் மது மதன -ஸ்தோத்ர ரத்னம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே
மணிமாமை குறைவிலமே -மேகஎன்று நாயகி பாவத்தால் அருளிச் செய்கிறார் என்னுடைய பெண்மையும் என்னலனும் என் முலையும்–என்னிவை
தான் வாளா வெனக்கு பொறையாகி -திரு மங்கை ஆழ்வார் -பெரிய திரு மடல் -என்று அருளிச் செய்கிறார்

—————————————————————————-

நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாரத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கு மாறன் அருள்
உண்டு நமக்குற்ற துணை யொன்று –39-

விமுகராய் இருக்கும் சம்சாரிகள் நடுவில் தாம் இருக்கப் பேராமல் நண்ணாதார் பதிகத்தில் கதறும் ஆழ்வார் திருவடிகளே நமக்குத் தஞ்சம்
ஏறாளும் இறையோன் பதிகத்தில் தமது ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்றார் -பேறு பெற அவன் கையை எதிர் பார்த்து இருப்பது போலே
இவற்றை முடிக்கைக்கும் அவன் கையையே எதிர் பார்த்து இருக்க வேண்டுமே
நீயே முடித்திடாய் என்கிறார் -ஆழ்வார் உடைய ஆர்ச்சி பேச்சுக்கு நிலம் இல்லை -மூன்று ஹேதுக்கள் ஆர்த்திக்கு
-அவன் உடன் சம்ச்லேஷிக்காமல் இருப்பு -சம்சாரிகள் உடன் சம்ச்லேஷிப்பதால் வரும் ஆர்த்தி
-இந்த்ரியங்கள் படுத்துவதால் -அனர்த்தங்கள் விளைவதால் வரும் ஆர்த்தி
கீழ் திருவாய் மொழியில் அவன் உடன் பிரிந்ததனால் வரும் ஆர்த்தி அருளினார் -சம்சாரிகள் உடன் இருப்பதால் வரும் ஆர்த்தி இதில் அருளிச் செய்கிறார்
-இந்த்ரியங்கள் நலிவதால் வருவதை மேலே உண்ணிலாய ஐவரால் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் உடன் சேருவதற்கு முன்பு ராவணனை விட்டு உத்பபாத கதா பாணி -சடக்கென எழுந்து சென்றால் போலே –
ஆழ்வார் எழுந்து செல்லத் துணிவு கொண்டாலும் அது தம்முடைய இஷ்டப்படி நடக்காதே -அவன் திரு உள்ளத்தால் மட்டுமே ஆகும்
ஆகையால் உன் கழற்கே வரும் பரிசு பணி கண்டாய் சாமாறே -கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக் கொண்டே -கோட்டையினில் கழித்து
என்னை உன் கொழும் சோதி உயரத்து கூட்டரிய திருவடிக் கண் எஜ்ஞ்ஞான்று கூட்டுதியே என்றும் அளவற்ற ஆர்த்த தோற்றப் பேசுகிறார்

———————————————————————————————

ஒன்றுமிலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே -நன்றாகவே
மூதலித்துப் பேசி யருள் மொய் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை –40-

மொய் மகிழோன் -பெருமை தங்கிய வகுளா பரணருடைய
கையிலங்கு நெல்லிக் கனியாக காட்டி அருளிய ஆழ்வார் திருவடிகளை தொழுவதே ஸ்வரூப அனுரூபம் என்கிறார்
சத் ஆத்மா ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப் படுபவனே நாராயணன் –
பரத்வம் -கண் காண வந்து -அர்ச்சயஸ் சர்வ சாஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -இப்படிப் பட்டவனை பணிந்து உஜ்ஜீவிக்காமல்
மற்றவர்களை பணிந்து அனர்த்தப் படுகிறீர்களே என்று தட்டி உணர்த்தி அருளிச் செய்கிறார்

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: