திருவாய் மொழி நூற்றந்தாதி -21-30—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடி வழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன் –21-

கீழே திருமால் இரும் சோலையை அனுபவித்து அந்த திருமலையில் ஏக தேசம் என்னலாம் படி
கற்பகத் தரு கப்பும் கிளையும் பணைத்துப் பூத்தால் போலே நிற்கும் அழகர் உடைய திவ்ய அவயவ திவ்ய பூஷணங்களை
அனுபவித்து அருளிச் செய்த திரு வாய் மொழி
மருள் அஜ்ஞ்ஞானம் ஜ்ஞான உதயம் விபரீத ஜ்ஞானம் அந்யதா ஜ்ஞானம் நான்கு வகையும் இல்லை என்றார் ஆழ்வார்
இதில் முதலிலே சங்கையாக கேள்வி -இந்த அஜ்ஞ்ஞானம் புருஷார்த்த கோடியிலே சேரும் -ஜ்ஞான விபாக கார்யமான
அஜ்ஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்

————————————————————————–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து—————22-

முடிச் சோதியாய் என்கிற கீழ்த் திருவாய் மொழியில் திருமாலிரும் சோலை அழகர் உடைய வடிவழகில் ஆழம் கால் பட்ட ஆழ்வார் –
அந்தோ இவ்வழகு முதலியவற்றை நாம் பரிபூர்தியாக அனுபவிக்க முடியவில்லையே -இதற்கு என்ன காரணம் இருக்கும் நம்முடைய
கரண க்ராமங்கள் சங்குசிதங்களாய் இருக்கையாலே அது காரணமாக வன்றோ பூர்ண அனுபவம் செய்ய முடிய வில்லை –
அந்த கரண சங்கோசம் இல்லாது இருக்கிற நித்ய முக்தர்களிலே ஒருவனாக நான் இருந்தால் பரிபூர்ண அனுபவம் பண்ணலாமே -என்று அலமந்து இருக்க
அது கண்ட எம்பெருமான் -ஆழ்வீர் நம்மைப் பரிபூர்ண அனுபவம் செய்ய முடியாமைக்குக் காரணம் கரண சங்கோசம் அன்று காணும்
-அசங்குசிதமான காரணங்களை யுடையவர்கள் தாமும் நம்மைப் பரிபூர்ன்ன அனுபவம் செய்வது அருமையே -விஷயம் மகத்தாகையாலே
பூர்ண அனுபவம் செய்யப் போகிறது இல்லையே ஒழிய வேறு காரணம் அன்று -என்று தெரிவித்து
ஆழ்வாரைத் தேற்றுவித்த படியை முந்நீர் ஞாலத்து திருவாய் மொழி –

————————————————————-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்—————-23-

திருமலை அப்பனுக்கு அனவரதம் அத்தாணிச் சேவகம் செய்ய வேணும் என்று மிக்க மநோ ரதம் கொண்ட சிறந்த நற்குணங்கள்
நிரம்பிய ஆழ்வாரது திருவடித் தாமரைகளைத் துதிக்குமாறு நெஞ்சுக்கு உரைத்தார் யாயிற்று –
பாரித்த -பாரித்து -இரண்டும் பாட பேதங்கள்
————————————————————–

புகழ் ஓன்று மால் எப் பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்மால் –24-

மொய்ம்மால் -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற சீர்மையினால்
ஒழிவில் காலம் எல்லாமுடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய பாரித்த ஆழ்வாருக்கு தானே எல்லா பொருள்களுமாய் நிற்கிற
தன்மையைக் காட்டிக் கொடுக்க சர்வாத்ம பாவத்தை பேசி வாசிக கைங்கர்யம் புகழு நல் ஒருவன் -என்கோ-
அத்தைச் சொல்வேனோ இத்தைச் சொல்வேனோ அலமாந்து – திருவாய்மொழியில் அருளிச் செய்தார்
உடன் மிசை உயிர் எங்கும் கரந்து எங்கும் பரந்துள்ள அனந்தன் அன்றோ

————————————————————————

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செபவரை யாதரித்தும் அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய் –25-

வாசிகமான கைங்கர்யம் செய்யப் பெற்றதால் உண்டான களிப்பே மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை பதிகமாக வடிவு எடுத்தது
ஹர்ஷத்தால் ஆடியும் பாடியும் தாம் செய்து -தம்மைப் போலே ஈடுபாடு உடையாரைக் கொண்டாடியும் இல்லாதாரை நிந்தித்தும் அருளிச் செய்கிறார்
முந்நீர் ஞாலம் படைத்த -திருவாய் மொழியிலே அளவற்ற துயரம் அடைந்தார் புகழு நல் ஒருவன் -என்கோ வில் அளவற்ற ஹர்ஷம் அடைந்தார்
ஹர்ஷ சோகங்கள் மாரி மாரி வரும் -அநவசாதம்-துயர் உற்று இராமை
-அனுத்தர்ஷம் -ஹர்ஷா ஹேதுக்கள் இருந்தாலும் ஹர்ஷம் கொள்ளாது இருக்கை-இவை பிராக்ருத விஷயங்களைப் பற்றியவை -பகவத் விஷயத்தில்

———————————————————————————————-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—————-26-

பயின்று -ஆராய்ந்து
அர்ச்சாவதாரமாகக் காட்சி தந்து அருளும் நிலைமையே இவ்வுலகில் பக்தர்களுக்கு மிகவும் எளியது என்னும் இடத்தை
ஆராய்ந்து ஆழ்வார் அருளிச் செய்த இந்த திருவாய்மொழி –
அந்தர்யாமித்வம் -ஆஸ்ரயண ப்ரசக்தி இல்லாமை பற்றி இங்கே எடுத்து அருள வில்லை –
உபலஷணத்தால் அதுவும் இங்கே கொள்ளத் தக்கதும் என்றதுமாம்

—————————————————————–

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா————–27-

பயிலும் -அடியவர்களோடு கலந்து பழகும் தன்மையனான
பதம் தன்னில் -திருவடிகளிலே
நெஞ்சம் தயலுண்டு நிற்கும் -ததியர்க்கு -மனம் பதிந்து நிற்கிற பாகவதர்களுக்கு
இயலுடனே ஆள் ஆனார்க்கு -முறையே அடிமையாய் இருக்குமவர்களுக்கு
ஆள் ஆகார் –அடிமை செய்யப் பெறாதவர்களுடைய
எம்பெருமானது திருவடிகளில் ஹ்ருதயம் அவகாஹித்து இருக்கப் பெற்ற பாகவதர்களுக்கு -தாஸா நு தாஸராகத் தம்மை அனுசந்தித்து
பயிலும் சுடர் ஒளி பதிகம் அருளிய நம்மாழ்வார் உடைய திருவடிகளில் அடிமை பூண்டு இருக்கும் பாக்யம் அற்றவர்களுடைய
பிறவித் துயர் ஒரு நாளும் முடிவு பெற மாட்டாது -அவர்கள் நித்ய சம்சாரிகளாகவே நிகழ்வர்கள் என்றபடி

———————————————————————–

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தமை விட்டவன் பால் -படியா
ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல் –28-

செய்ய தாமரைக் கண்ணன் -3-6–திருவாய் மொழியில் –என்று கொல் கண்கள் காண்பதுவே -என்று
கிளர்ந்த ஆசை பயிலும் சுடர் ஒளி -3-7-திருவாய் மொழியில் தணியாதே அதிகரிக்க
பாஹ்யம் ஆப்யந்த்ரம் என்னும் வாசி யன்றிக்கே சகல கரணங்களும் எம்மை யாலும் பரமர் –எம் பெருமக்கள் -எம்மை அளிக்கும் பிராக்கள்
-எம்மை சன்மம் சன்மாந்தரம் காப்பர் -எம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பர் -எம் தொழு குலம் தாங்கள் -அடியார் எம் அடிகள்
-அடியார் தம் அடியார் அடியோங்கள் -என்று அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு எம்பெருமான் பக்கலிலே தாமும் கரணங்களும்
ஆசைப் பட்ட படியை அருளிச் செய்கிறார்
முடியாத ஆசை மிகு -பாட பேதம்
என் பசிக்கு என் செய்வேன் என் மக்கள் பசிக்கு என் செய்வேன் என்று பஹூ குடும்பி சொல்வது போல் தாமும் கரணங்களும் விடாய்த்த படி சொல்கிறது
அசேத்யம் என்னுமது ஈரும் வேம் யீரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயிலவை யாக
உடலம் ஆத்மா தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே –

———————————————————————————

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம் –29-

கீழில் திருவாய் மொழியில் தம்முடைய இழவுக்கு வருந்தினார் -இதில் சம்சாரிகளின் இழவுக்கு கிலேசிக்கிறார்
வகுத்த விஷயத்தில் வாக் வாக்கை விநியோகப் படுத்தாமல் ஷூத்ர நர ஸ்துதிகளில் விநியோகிப்பதே
நண்ணாதே மெய்யில்–அடைவு கெட அதபச்கர்க்கு உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்த புத்தியும் அனர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் இ றே
ஆழ்வார் தாம் அனுபவிக்கும் விஷயம் தனியே அனுபவிக்க கூடாதல்லாமையாலே -மச்சித்தா மத கதப்ரானா போதயந்த பரஸ்பர -என்பதால் உபதேசித்தார்
-இவர்கள் இழவைக் கண்டவர் தம் இழவை மறந்தார் -உபதேசித்த அளவிலும் திருந்தாமல் இருக்கவே நான் கவி பாடப் பெற்றேனே -என்று
தம்மைப் பற்றி உகப்புடன் தலைக் கட்டுகிறார்

——————————————————————

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்——————-30-

தானாகவே இச்சித்து பல திருவவதாரங்களை செய்து அருளி இவ் உலகத்தை காத்து அருளுகிறான் எனபது முதலான அவனுடைய
திருக் கல்யாண குண சம்ருத்தியை -இம்மையிலேயே வாயாரப் புகழ்ந்து பேசும் பாக்யத்தை நான் பெற்றேன் என்று
பேரானந்தம் பொலிய-சன்மம் பல பல -என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்த நம் ஆழ்வாரை
-சம்சாரிகளே நீங்கள் ஒரு நாளாகிலும் நன்கு துதிப்பது நன்று என்று அருளிச் செய்கிறார்

————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: