திருவாய் மொழி நூற்றந்தாதி -11-20—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாதவற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –11-

செறிவாரை-தம்மைப் பணியுமவர்களை
திணிந்து நோக்கும் -திடமாக கடாஷித்து அருளுவார் –

மேன்மை நீர்மை வடிவு அழகு -ஆகிய மூன்றும் குறைவின்றியே உண்டாய்
அவதாரத்துக்கு பிற்பட்டவர்களும் இழக்க வேண்டாத படி முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதார ஸ்தலங்களுக்குள் சிறந்ததான திருக் குருங்குடியிலே
அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
சுழி
விளக்கு
முதலான உலகப் பொருள்களும் தம்மைப் போலே பகவத் விரஹத்தாலே நோவு படுகிறவனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டுச் செல்லுகிற படியை பேசுகிறது வாயும் திரையுகளும் -2-1- என்கிற திருவாய் மொழி –
இங்கனம் விலஷணமான நிலைமையை அடைந்த நம்மாழ்வார் அடியார்களை பகவத் விச்லேஷம் நேராத படி பரிபூர்ண கடாஷம் செய்து அருளுவர் என்றதாயிற்று –

திருவாய் மொழியிலே நம் ஆழ்வார் எம்பெருமானை அனுபவிப்பது மிகவும் விலஷணமாய் இருக்கும் –
கீழ் முதல் பத்தில் ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் எம்பெருமானுடைய ஒவ் ஒரு குணத்தைப் பேசி அனுபவித்தார் –
அவனுடைய பரத்வத்தைப் பேசினார் -முதல் பத்தில் –
அவன் பஜிக்கத் தக்கவன் -என்றார் இரண்டாம் பத்தில் –
அவன் அடியவர்களுக்கு எளியவன் என்றார் மூன்றாம் பத்தில்
அவன் அடியவர்கள் பிழைகளைப் பொறுக்கும் தன்மை உடையவன் என்றார் நான்காம் பத்தில்
பராத்பரனான தான் நம் போல்வாருடைய அற்பத் தனத்தை சிறிதும் கணிசியாது தன்னைத் தாழ விட்டுக் கொண்டு
நம்மோடு புரையறக் கலந்து பழகும் சீலகுணம் உடையவன் என்றார் ஐந்தாம் பத்தில்
நாம் இட்டது கொண்டு திருப்தி அடைபவன் என்றார் ஆறாம் பத்தில்
ஆஸ்ரயணத்தில் சாரஸ்யம் உடையவன் என்றார் ஏழாம் பத்தில்
மனம் மெய் மொழிகள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருத்தல் ஆகிற ஆர்ஜவ குணம் உடையவன் என்றார் எட்டாம் பத்தில்
அடியார்களுக்கு தன்னை அனுபவிக்க கொடுக்கும் இடத்தில் ஏக காலத்திலேயே பூர்ண அனுபவம் கொடுத்து விடுகை அன்றிக்கே
பொறுக்கப் பொறுக்க சிறிது சிறிதாக கொடுக்கும் தன்மையன் என்றார் ஒன்பதாம் பத்தில்
நிர்ஹேதுகமாக பரம உபகாரம் செய்து அருளுபவன் என்றார் பத்தாம் பத்தில் –

ஆக இப்படி பகவத் குணங்களில் ஆழம் கால் பட்ட ஆழ்வார்
இத் திருவாய் மொழியில் தம்முடைய பகவத் விஷய ஆவகாஹனம் லோக விலஷணம் என்பதைக் காட்டுகிறார்
சம்சாரிகள் உலகத்தில் உள்ளார் எல்லாரையும்
தங்களைப் போலவே உண்டியே உடையே உகந்து ஓடுபவர்களாக நினைத்தால் போலே
ஆழ்வாரும் உலகில் உள்ள சகல பதார்த்தங்களும் தம்மைப் போலவே எம்பெருமானை பிரிந்த வருத்தத்தினால் நோவு படுகின்றனவாகக் கொண்டு
நாரை அன்றில் கடல் காற்று சந்திரன் முதலிய பதார்த்தங்களை நோக்கி அவற்றுக்கு உண்டான சில தன்மைகளை இயற்கையாகவே கருதாது
பகவத் விஸ்லேஷ வ்யசனத்தால் உண்டானவையாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் அனுசோகிக்கிறார்

இவற்றையும் தம் இயல்பினவாகக் கொண்டு ஒவ் ஒன்றையும் நோக்கி நீயும் என்னைப் போலவே பகவத் விஷயத்தில்
ஆசை வைத்து விருப்பப்பட்ட படி கிடைக்கப் பெறாமையாலே நோவு பட்டாயோ என்று பேசுகிறபடியாய்ச் செல்லுகிறது இத் திருவாய்மொழி
அடியவர்களை இங்கனம் பிச்சேறப் பண்ணுமவன் எம்பெருமான் என்று
இதனால் அவனுடைய உன்மாதாவஹத்வம் -என்ற குணம் சொல்லப் பட்டதாகும் –

——————————————————————–

திண்ணிதா மாறன் திருமால் பரத்வத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவர் அவர் அடிக்கே யாங்கு யாவர் பால்
உற்றாரை மேலிடாதூன்–12-

திண்ணிதா -திடமாக
மேலிடாதூன்–ஊன் -தேக சம்பந்தம் மேலிடாது-சேராது
மாறனுக்கு திண்ணிதா -விசேஷணம் ஆக்கி பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்
பரத்வே பரத்வம் -உயர்வற உயர்நலம்
அவதாரத்தே நண்ணி -இதில்
அவர் அடிக்கே அற்றார்கள் யாவர் -என்று கூட்டிப் பொருள் கொள்க

வாயும் திரையுகளும் -ஆழ்வார் உடைய ஆற்றாமை பேச்சுக்கு நிலம் இல்லை -லோக விலஷணமாக இருந்தார்
எம்பெருமான் முகம் காட்டி ஆச்வசிப்பித்தான்
சிறிய தெரிய ஆழ்வார் சௌலப்யம் நமக்கு பேச்சுக்கு நிலம் அல்ல
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே -என்றார் இ றே
-மீண்டும் மோஹிப்போம் என்று மீண்டும் பரத்வத்தை பேசுகிறார் –
உயர்வற உயர்நலம் -பரத்வம் ஸ்வ அனுபவமாகவே சென்றது -இது உபதேச ரூபமாக உள்ளது
அங்கு அந்யவ முகத்தால் அருளிச் செய்யப் பட்டது
இங்கு அந்வய வ்யதிரேகங்கள் இரண்டினாலும் அருளிச் செய்யப் படுகிறது
அங்கு பெரும்பாலும் உபநிஷத்துக்களை அடி ஒற்றி அருளிச் செய்தார்
இங்கு இதிஹாச புராண பிரக்ரியையாலே அருளிச் செய்கிறார்
அங்கு பரத்வத்திலே பரத்வம்
இங்கே அவதாரத்தில் பரத்வம்
ஒரு குணத்தையே பல காலும் அனுபவித்தாலும் தெகுட்டும் விஷயம் அன்றே
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதமே
திவ்ய சேஷ்டிதங்கள்
திவ்ய அவயவங்கள்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணங்கள்
அனைத்தும் விலஷண விஷயங்கள் அன்றோ
ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் -ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லார் அல்லர் இவர்
ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று அது
இனித் தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷம் ஆவாகாது
ஒரு குணத்தையே எக்காலமும் அனுபவிக்க வல்லார் ஒருவர் இவரே
ஒரு குணம் தன்னையே இதுக்கு முன்பு அனுபவிப்பித்தது இக்குணம் என்று தோற்றாத படி ஷணம் தோறும்
புதுமை பிறப்பித்து அனுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்

——————————————————————–

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
யானது அனுபவித்தற்காம் துணையா வானில்
அடியார் குழாம் கூட ஆசையுற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே யாடு –13-

தம்முடன் ஏக தத்வம் என்னும் படி எம்பெருமான் கலக்க -பராத் பரன் இப்படி -வாயும் திரை யுகளில் பட்ட ஆற்றாமை தீர கலந்து அருளினான்
என்று திண்ணன் வீட்டில் அருளி -அந்த சம்ச்லேஷ ரசம் அனுபவிக்க உசாத் துணையாவார் இங்கு கிடையாமையாலே
நித்ய சூரிகள் திரளிலே புகுந்து ஒரு கோவையாக அனுபவிக்கப் பெறுவது என்றோ என்கிற குறையுடன் தலைக் கட்டி அருளுகிறார்

———————————————————————————————-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ –14-

அன்புற்றார் -மதுரகவி ஆழ்வார் போல்வார்
ஆய்ந்து உரைக்க -ஆராய்ந்து சொல்லும் படியாக -தமது வாயால் சொல்லும் படி அன்றிக்கே வேற்று வாயால் சொல்லுகிற பாசுரமாம் படியாக
கீழே ஊனில் வாழ் உயிரிலே –பரவன் பவித்ரன் சீர் –அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே –பரமானந்தம் அனுபவிக்க
-அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பாரித்த ஆழ்வார் -களிப்பும் கவரவும் அற்று -பாசுரத்திலே அந்த பாரிப்பைக் காட்டி அருளினார் –
அனுபவிக்கப் பெறாத குறையினால் முஹம அடைந்தார் -தாய் பாசுரமாக அருளிச் செய்யும் திருவாய் மொழி –
அஞ்சிறைய மட நாராயில் -தானே தூது விட்டாள்-வாயும் திரை உகளில் கண்ணால் கண்ட பொருள்கள் எல்லாம் நோவு படுவதாக கொண்டு
அவற்றுக்குமாக இவரும் நோவு பட்டு தானே அருளிச் செய்தார்
இதில் ஆற்றாமை கரை புரண்டு தம் வாயால் பேச முடியாதபடி திருத் தாயார் பாசுரமாகச் செல்கிறது
கரை புரண்ட காவேரி முடி கொண்டான் குடமுருட்டி போன்ற பெயர்களை கொண்டால் போலே
-தாய் மகள் தோழி பாசுரங்களும் ஆழ்வார் தாமே அருளுகிறார்
வெள்ளி பொன் ரத்னம் இழந்தால் ஆற்றாமை விஞ்சி இருக்குமே -பாகவத கோஷ்டியில் சேரப் பெறாத ஆற்றாமை மிக விஞ்சி
தாய் பாசுரமாக அமைந்தது -ரத்னம் பறி உண்டால் அரசன் இடம் சென்று முறை இடுவது போலே
பாகவத சஹவாசத்துக்கும் அவன் கடவன் ஆகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடும் பதிகம் –

———————————————————————–

அந்தாமத்து அன்பால் அடியோர்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால்-சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை –15-

கீழ் ஆடியாடியில் -ஆழ்வார் துக்கம் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் துக்கம் போலே இருக்க -வலம் கொள் புள்ளுயர்த்தாய்-என்ற கூக்குரலைக் கேட்டு
நித்ய சூரிகள் உடன் கலக்க மநோ ரதித்த ஆழ்வாருக்கு எம்பெருமான் தனக்கு பரமபதத்தில் உள்ள விருப்பத்தை ஆழ்வார் இடம் காட்டி அருள
திவ்ய ஆபரண திவ்ய ஆயுதங்கள் உடன் திரு நகரி எழுந்து அருளி சம்ச்லேஷித்து அருளின படியால் வருத்தம் தீரப் பெற்ற ஆழ்வார் திருவடிகளில்
பக்தியை வைக்க தமது திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார்
ஆழ்வார் சம்ச்லேஷ ரசத்தை தாம் அனுபவித்து அந்த ஹர்ஷ பரிவாஹ ரூபமாக இந்த திருவாய் மொழியை அருளிச் செய்கிறார்

—————————————————————-

வைகுந்தன் வந்து கலந்ததன் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து
நைகின்ற தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன் —-16-

ஆடியாடியில் ஆழ்வார் வ்யசனம் தீர
அந்தாமத்து அன்பில் சம்ச்லேஷித்து துயர் தீர்ந்து எல்லை கடந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார் ஆழ்வார்
ஆழ்வாருக்கு என்ன செய்வோம் என்று தடுமாறி நிற்பவனாய் எம்பெருமான் இருக்க
அல்லாவி -என்றும் என்முடிவு காணாதே -என்றும் நைச்ய அனுசந்தான பரசக்தி பண்ண -எம்பெருமான் அதி சங்கை பண்ணி யருள –
பிரானே நான் உன்னை பிடித்த பிடி சாமான்யம் அன்று -சிக்கெனெவே கொண்டேன் இனி விடேன் என்று தேற்றுகிறார்

—————————————————————————————————————————-

கேசவனால் என் தமர்கள் கீழ் மேல் ஏழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்து உரைத்த வீசு புகழ்
மாறன் மலர் அடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை –17-

கீழ் எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினார் -என்று எம்பெருமான் தம்மிடம் வைத்த காதல்
முன்னும் பின்னும் வெள்ளம் கோத்த படியை பிரஸ்தாபித்தார்
அத்தை பரக்க பேசி அருளுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்பந்த சம்பந்தம் பெற்றவர்கள் இடமும் அருள் பீய்ச்சி பாய்வதை செய்யும் இயல்வினன் என்று
இந்த கேசவாதி துவாதச நாமங்கள் கொண்ட திருவாய் மொழி யில் அருளிச் செய்கிறார்

——————————————————————————————————–

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்கு ஆளாம்
குணந்தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு -18–

ஆழ்வார் தம்முடைய சம்பந்த சம்பந்திகளும் எம்பெருமானுடைய விஷயீ காரத்துக்கு இலக்காகி உஜ்ஜீவிக்கப் பெற்ற படியைக் கண்டு
சம்சாரிகளையும் உஜ்ஜீவிக்க உபதேசித்து அருளுகிறார் அவருடைய திருவடிகளின் கீழ் வாழ்வதே நமக்கு புருஷார்த்தம் –
அவனது சர்வேஸ்வரத்வம் உபதேசிக்கும் திருவாய்மொழி என்பர் பூர்வர்
பட்டர் -மோஷ பிரதத்வம் அருளிச் செய்யும் திருவாய் மொழி என்பர்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே -வீடு முதலாம் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் –
கண்ணனை நான் கண்டேனே -பத்தாம் பாசுரத்தில் -நம்பிள்ளை அவதாரிகை -சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேண்டும்
என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்த அது கேட்ட பின்பும் பழைய நிலையிலே நின்றும் குலையாதே
ராவணனுக்கு ஹிதம் அருளிய விபீஷண ஆழ்வான் கை ஒழிந்து வழி பறிக்கும் நிலையில் கைப்பொருள் கொண்டு தப்பினார்
ஹ்ருஷ்டராம் போலே ஸ்வ லாபத்தைபேசி இனியராகிறார்
ஆக பர உபதேசமும் ஸ்வாத்மஹர்ஷமும் இத் திருவாய் மொழியில் பிரமேயம் –

——————————————————————————————

எம்மா வீடும் வேண்டா என் தனக்கு உன் தாள் இணையே
அம்மா அமையும் என வாய்ந்து உரைத்து நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த்தாள் இணை சூடிக்
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –19-

புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணி அருளும் திருவாய் மொழி
நலமானத மில்லதோர் நாடு புகுவீர் -என்று பிரஸ்தாபம் வந்ததால் மோஷ ருசி ஆகில் தந்து அருளுவோம் என்ன –
முக்தனாகி எல்லை இன்பம் அனுபவிக்கவுமாம் கைவல்யம் அனுபவம் பெறவுமாம் ஆத்மா வினாசமே யாகவுமாம் நரக அனுபவம் பண்ணவுமாம்
எனக்கு நிர்பந்தம் இல்லை உனது ருசிக்கு ஈடாக வருமாகில்
இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காக வருமாகில் மோஷமும் வேண்டா
எம்பார் கதவை அடைத்து இத் திருவாய் மொழி குஹ்ய தமமாக அருளிச் செய்வார் -இந்த திருவாய் மொழி பிரமேயம் அதிகாரிகள் துர்லபர்

——————————————————————————————————————————-

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி –20-

எம்மா வீட்டில் பரம புருஷார்த்தம் நிஷ்கர்ஷம் செய்த ஆழ்வாருக்கு கைங்கர்யம் இங்கேயே செய்ய திரு மால் இரும் சோலை காட்டிக் கொடுக்க
நமக்கும் அங்கே சென்று அனுபவிக்க உபதேசிக்கிறார்
பேற்றை பெற திருமால் இரும் சோலை மலையை ஆஸ்ரயிக்கிறார் என்பர் முன்புள்ள முதலிகள்
எம்பெருமானார் ஒல்லை ஒல்லை காலக் கழிவு செய்யேல் என்று பதறிய ஆழ்வாருக்கு இங்கேயே உடனே கைங்கர்யம் செய்ய ஏகாந்த ஸ்தலம் -என்று
தெற்குத் திருமலையை காட்டிக் கொடுத்து அருள ஆழ்வார் அனுபவித்து நாமும் அவனையும் திரு மலையையும் அயன் மலை போம் வழி
எல்லாம் உத்தேச்யம் என்று அனுசந்தித்து அத்யாவசயத்தோடே எல்லாமே பிராப்யம் என்று அருளி இனியராகிறார்

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: