திருவாய் மொழி நூற்றந்தாதி –1-10-பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

இயற்பா வில் எட்டு பிரபந்தங்கள் அந்தாதிகளே -கண்ணி நுண் சிறுத் தாம்பும் திருவாய் மொழியும் அந்தாதிகளே
பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் தாம்தாம் திரு மொழிகளில் ஒரு பதிகம் அந்தாதியாக அருளிச் செய்து உள்ளார்கள்
-இருந்தாலும் இந்த திருவாய்மொழி நூற்று அந்தாதிக்கு உண்டான நிர்பந்தங்கள் இல்லையே

———————————————–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு——————–1-

உயர்வு ஏய்-உயர்வு பொருந்திய
பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு -பரன் -படி -உள்ளது -எல்லாம் தான் கண்டு
பரம புருஷனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களாய் இருப்பவற்றை யடங்கலும் தாம் சாஷாத்கரித்து
ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்
அளி பொறையாய் நின்ற பரன்-என்றும் -பரத்வமே யாயிற்று இந்த திருவாய் மொழியில் அருளிச் செய்தது –
மயர்வு ஏதும் வாராமல் -ஞானம் அநுதயம் – அந்யதா ஞானம் -விபர்யயா ஞானம் -மறத்தல் –
இவை ஒன்றும் நமக்கு வாராமல் அவன் ஆழ்வாருக்கு அருள -ஸ்ரீ ஸூகதிகள் அருளிச் செய்த ஆழ்வார் –
மாறன் சொல் வேராகவே விளையும் வீடு -வேர் இன்றி விருஷம் கிளம்பாதவாறு போலே
ஆழ்வார் அருளிச் செயல் இன்றி மோஷம் விளையாது என்று காட்டி அருளுகிறார்

——————————————————————————————————-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து———-2-

வீடு செய்து மற்றெவையும் -பகவத் விஷயம் தவிர்ந்த மற்று எல்லா வற்றையும் விட்டு ஒழிந்து
மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய -உலகத்தார் எல்லாரும் பக்தியுடன் ஆஸ்ரயிக்குமாறு
நன்குரைக்கும் -நன்றாக உபதேசிக்கும்
-நீடு புகழ்-உலகம் பரந்த புகளை யுடையவராய்
வண் குருகூர் மாறன்
இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே -பரம கிருபையுடனே
பாடி யருள் பத்து——-பாடி அருளிய வீடுமின் முற்றவும் என்கிற பதிகமானது

மோஷ சாஸ்த்ரமான வேதாந்தத்துக்கு மிக்கியமான பிரமேயங்கள் இரண்டாம் –பரத்வம் இன்னது என்று நிஷ்கரித்தலும் அதனை அடைந்து
உஜ்ஜீவிக்க உபாயம் உபாசனத்தை நிரூபித்தாலும் -இவையே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் விரிவாக நிரூபிக்கப் பட்டுள்ளவை
அதே போலே திருவாய்மொழியும் -முதல் இரண்டு பதிகங்களும் சங்க்ரஹமாக –
பரத்வம் முதலில் -உயர்வற உயர்நலம் திருவாய் மொழியிலும் –உபாசனம் அடுத்து இதிலும் அருளி யுள்ளார் என்பர் பூர்வர்
புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விட்டு எம்பெருமானே தஞ்சம் என்று பற்றும்படி பரோபதேசம் செய்வது இப்பதிகம்
சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளில் பக்தி செய்யும்படி உலகத்தாரை நோக்கி உபதேசிக்கும் பதிகம் இது
கீழே ஆழ்வாருக்கு நேர்ந்த பரதவ அனுபவம் பெரிய திருநாளைப் போலே இருக்க -இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து
பிறருக்கு உபதேசிக்கத் தொடக்கி விட்டாரே –
இது எங்கனே -பரதவ அனுபவ எல்லை கண்டு விட்டாரோ -அல்லது அனுபவித்தது போதும் என்று விரக்தி அடைந்து விட்டாரோ
என்னில் இரண்டும் சொல்ல முடியாது
தனக்கும் தன தன்மை அறிவரியான் என்கிறப்டியே தன்னாலும் எல்லை காண ஒண்ணாத விஷயத்தை ஆழ்வாராலும் எல்லை காண முடியாதே
கொள்ள மாளா இன்ப வெள்ளம் அன்றோ -பகவத் விஷயமும்
ஆழ்வாரின் -காதல் கடலின் மிகப் பெரியதால் -மண தினி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரியதால் –
-சூழ்ந்து அதனில் பெரிய அவா -என்று ஆழ்வார் தாமே
சொல்லிக் கொள்ளும்படி மிகவும் பெருகி இரா நின்றது
ஆக -அனுபவிக்கப்படும் பகவத் விஷயமும் சுருங்க மாட்டாதாய்-அனுபவிக்கும் தம்முடைய காதலும் அளவுபட மாட்டாதாய்
இருக்கையாலே இவர் மீளுவதற்கு பிரசக்தி இல்லை –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -தெவிட்டாத இன்பமாய் இருக்கும்
பகவத் விஷய அனுபவத்தில் இருந்து கை ஒழிந்து உபதேசித்தில் இறங்கினார் என்று கொள்ளல் ஆகாது
தான் அனுபவிக்கும் பகவத் விஷயம் தனித்து அனுபவிக்கக் கூடியது அல்லாமையாலே பிறருடன் உசாவியே போது போக்கி தரிக்க வேண்டி
அப்படிப்பட்ட அதிகாரிகளைப் பெற நாள் புறமும் கண்ணைச் செலுத்திப் பார்த்தார் -எல்லாரும் சம்சாரிகலாய்
-தாம் பகவத் விஷயம் ஒன்றிலே ஆழம் கால் பட்டால் போலே
இவர்கள் விஷயாந்தரங்களில் மட்டுமே கால் தாழ்த்தி இருக்கக் கண்டு அவர்களது அனர்த்தத்தை தவிர்க்காமல் நிற்க மாட்டிற்றிலர்
அவர்களை எப்படி மீட்கலாம் என்று பார்த்தார் –வர்கள் செதனர்கலாய் இருந்தார்கள் -விஷயாந்தரங்களில் தீயவற்றைக் கழித்து
நல்லவற்றைக் கைக் கொண்டு இருக்கக் கண்டார் -இவர்களுக்கு பகவத் விஷயத்தின் நன்மையையும் விஷயாந்தரங்களின்
தீமையையும் எடுத்துக் காட்டினால் உண்மையை ஆராய்ந்து பார்த்து ஹேய விஷயங்களை விட்டு உபாதேய விஷயத்தைப்
பற்றக் கூடுமே -ஆதலால் ஹேய விஷயத்தை உபதேசித்துப் பார்ப்போம் -என்று திரு உள்ளம் பற்றி பகவத் விஷயத்தின்
சீர்மையையும் விஷயாந்தரங்களின் தண்மையையும்-அல்ப அநித்யத்வாதிகளைஅருளிச் செய்யா நின்று கொண்டு
விஷயாந்தரங்களில் நசை அற்று பகவத் பக்தியை பண்ணுங்கோள் என்று உபதேசிக்கிறார் இதில்

ஒருவன் ஞான பக்தி விரக்திகளோடே ஆழ்வார் பக்கலிலே வந்து ஹிதோபதேசம் செய்து அருள வேணும் என்று
விநயத்துடன் கேட்க உபதேசிக்குமவர் அல்லரே ஆழ்வார்
சம்சார தாபம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே -ருசி பிறந்த போது யாரேனும் ஒருவருக்கு பலிக்கட்டும் என்று எல்லாருக்குமாக
உபதேசித்து அருளுகிறார் -என்பதை வீடுமுன் -பன்மையாலே போதரும்
அஹங்கார மமகாரங்க ளால் தூஷிக்கப் பட்டவற்றிலே சிலவற்றை வைத்துக் கொண்டு சிலவற்றை விடுவது
எனபது கூடாதாகையாலே -முற்றவும் -முழுவதையும் விட உபதேசிக்கிறார்

———————————————–

பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் மூண்டவன் பால் –பத்தி செயும்
என்று உரைத்த மாறன் தனின் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அம் சிறை –3-

எம்பெருமான் பக்திமான்களுக்காக அவதரித்து எளியனாய் முத்தி யும் அளிப்பவன் ஆகையால் –
அவன் திருவவதரிக்க உரிய இந்தப் பெரிய நில உலகத்தில் உள்ளவர்களுக்கு -கிளர்ந்து எழுந்த பிரேமத்துடன் அவன் பக்கலிலே
பக்தியைப் பண்ண உபதேசித்து அருளிய ஆழ்வாருடைய
இனிமையான அருளிச் செயலான இத் திருவாய் மொழியினால் நீளமாகத் தொடர்ந்து வந்த பிறவிச் யாகிய கடும் சிறை நீங்கும்
மூண்டு அன்பால்அவன் பால் -என்று பாட பேதம் –

———————————————————————————————————

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
ஏன் செயலைச் சொல்லும் என இறந்து -விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலன்கியதும் பத்தி வளம் –4-

ஆழியானுக்கு -ஷீராப்தி நாதன் பக்கலிலே சென்று
நலங்கியதும் -நலம் குலைந்ததும்
மலங்கியதும் -நிலை தளும்பியதும்
பத்தி வளம் -பத்தியின் பெருமையாகும் –

———————————————————————

வளமிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கு ஊடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து –5-

உளமுற்று -உளமுற -என்றபடி

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறை -என்கிறபடியே எம்பெருமானுக்கு அமைந்த அபாரமான பெருமையும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –என்றும் -சீலம் இல்லாச் சிறியன்-என்றும் இத்தலைக்கு உள்ள சிறுமையையும் தமது திரு உள்ளத்திலே ஸ்புரிக்க
இவ்விரண்டையும் நன்றாக ஆராய்ந்து பார்த்த அளவில்
பெருமையில் தலை நின்ற அப்பெருமானை சிறுமையில் தலை நின்ற நாமோ அணுகுவது -என்று தளர்ச்சி உண்டாகி
எம்பெருமானை விட்டு நீங்கப் பார்த்தார் ஆழ்வார்
அப்போது எம்பெருமான் தனது சிறந்த ஷீலா குணத்தைக் காட்டி –
ஆழ்வீர் என்னுடைய பெருமையையும் மட்டும் பார்த்து நீங்க நினைக்கின்ற நீர் எனது ஷீலா குணத்தையும் சிறிது பார்க்க வேண்டாவோ
எத்தனையேனும் சிறுமைப் பட்டவர்களோடும் கலந்து பழகுவது அன்றோ எனது இயல்பு என்று தெரிவிக்க
அந்த ஷீலா குணத்தில் ஈடுபட்டு ஆழ்வார் எம்பெருமானோடு பொருந்தின படியை பேசின திருவாய் மொழியின்
பிரமேயத்தை இப்பாட்டினால் வெளியிட்டார் யாயிற்று –

முதல் திருவாய் மொழி -பரத்வத்தை பேசினார்
அடுத்து பஜ நீயத்வம்
மேலே சௌலப்யம்
கீழே நான்காம் திருவாய் மொழியில் அபராத சஹத்வம் வெளியிட்டு அருளினார்
இதில் சீல குணத்தை வெளியிடுகிறார்
தன்னைத் தாள விட்டுக் கொண்டு புரையறக் கலந்து பழகும் தண்மை
மஹானாய் இருப்பவர் மந்தர்களோடு நெருங்கிப் பழகும் குணமே சீலம் –
கோன் வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச் ச வீர்யவான் -குணவான் -சௌசீல்யத்தையே குறிக்கும்
ஆளவந்தாரும் -வசீ வதான்யோ குணவான் ருஜூச் சுசி மிருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் சம கருதீ க்ருதஜ்ஞஸ்
த்வமஸி ஸ்வ பாவ தஸ் சமஸ்த கல்யாண குணாம்ருதோததி -என்று குணவான் -சீல குணத்தை அருளிச் செய்தார் –

குஹன் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் முதலியோர் இடம் பெருமாள் காட்டி அருளிய சீல குணம் –
ஏழை எதலன் இத்யாதி -நைந்து கரைந்து வாய் வெருவுவார்கள்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யானார் –
அளவு கடந்த ஆசையுடன் தழுவி முழிசிப் பரிமாற அபேஷிததார்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு-உடம்பும் கொண்ட நாம் கலந்தால்
அமலன் விமலன் நிமலன் நின்மலன் -பரஞ்சோதி உடம்புக்கு என்னாகுமோ -இறாய்த்து நெகிழப் புக
தன்னுடைய சீல குணத்தை காட்டி அருளி சேர்த்துக் கொண்டான் –

ஆள வந்தாரும் -திககசிமவ நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம் பரம புருஷ -யோஹம் யோகி வர்யாக்ர கண்யை –
விதி சிவ சனகாதியை த்யாது மத்யந்த தூரம் தவ பரிஜன பாவம் காமயே காம வ்ருத்தே -என்று
சம்சார நாற்றமே அறியாத நித்ய சூரிகள் பண்ணும் நித்ய கைங்கர்யத்தை நித்ய சம்சாரியான நான் ஆசைப்படுவதே –
ராஜ போக்யமான அன்னத்திலே விஷத்தைக் கலப்பது போலே -ஆகுமே ஹா ஹா என்ன சாஹாசச் செயல் என்று அருளிச் செய்தார்
கூரத் ஆழ்வானும்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அம்ஹ பிரசஹ்ய – விநிக்ருஹ்ய –இத்யாதி ச்லோகத்தாலே
தமது அயோக்யதயை நோக்கி -அகலப் பார்த்தார் –
பட்டரும் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தர ஸ்தவத்தில் இவ்வண்ணமே -கர்ப்ப ஜன்ம ஜராம்ருதி க்லேச கர்ம ஷடூர் மிக –
ச்வேவ தேவ வஷட்க்ருதம் த்வாம் ச்ரியோர் ஹம காமயே -என்று அருளிச் செய்தார் –
இத்தால்
பகவத் கைங்கர்யத்தை ஆசைப்படவும் வேணும் -உடனே அயோக்யதையை அனுசந்தித்து அனுதபிக்கவும் வேணும்
-என்கிற சாஸ்த்ரார்த்தமே சிஷிக்கப் பட்டதாகும்
அவனது சீல குணம் ஒளி பெற நம்முடைய நைச்சியம் அனுசந்தானம் வேணும் –

———————————————–

பரிவதில் ஈசன் படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒளிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு –6-

ஆராதன சௌகர்யத்தை அருளிச் செய்து நம் போன்ற அறிவிலிகளின் பிறவித் துன்பத்தை போக்கி அருளினார் மாறன்
ஸ்வாராதத்வம் -ஆராதனைக்கு எளியவன் -குணம் வெளியடப்படும் திருவாய் மொழி
அவாப்த சமஸ்த காமன் -நாம் இட்டது கொண்டு பூர்த்தி அடைய வேண்டாமே -கடலிலே மேகம் வர்ஷிப்பது கடலை நிரப்ப அள்ளியே
நமது ஸ்வரூபம் சத்தை நிறை பெறவே –
கள்ளார் துழாயும் கண வலரும் கூவிளையும்-முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் தன
பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே
ஏதேனும் ஒரு பூவாய் இருக்கலாம் -பக்தி பெரும் காதலே வேண்டுவது –
நீ இட்ட பூ எனக்கு கனத்து சுமக்க ஒண்ணாதே இருக்கிறதே – என்றானே ஸ்ரீ ஜகந்நாத பெருமாள்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருத மஸ் நாமி பிரயதாத்மான -ஸ்ரீ கீதை
அந்யத் பூர்ணா தபாம் கும்பாத் அந்யத் பாதா வனே ஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ் நாத் ந செச்சதி ஜனார்த்தனா -என்றும்
க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் ஸ்யு ஏகாந்த கத புத்திபி தாஸ் சர்வா சிரஸா தேவ பிரதிக்ருஹ்ணாதி வை ஸ்வயம் –
போன்ற பிரமாணங்களும் உண்டே
இந்த ஆராதனைக்கு எளியவன் என்ற திருக் குணத்தையே இங்கே ஆழ்வார் வெளியிட்டு அருளுகிறார்

———————————————–

பிறவியற்று நீள் விசும்பில் பேரின்பமுய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உளமே யோடு —7-

ஆஸ்ரயணத்தின் போக்யதையை வெளியிட்டு அருளும் ஆழ்வார் திருவடிகளே நமக்கு தஞ்சம்
பகவத் சமாஸ்ரயணம் ஆகிறது தான் இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும்ஆசைப் படும்படி
போக ரூபமாய் இருப்பது ஓன்று இ றே -நம்பிள்ளை –
அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயனே நாத்மநா பார்ச்வயோச் ச ஸ்ரீ பூமிப்யாம்
அத்ருப்த்யா நயன சுளக நைஸ் சேவ்யமா நாம் ருதௌகம் –பட்டர்
நம்பெருமாள் திவ்ய விக்ரஹம் பெரிய பெருமாளுக்கும் திரு மடந்தை மண் மடந்தை பெரிய திருவடிக்கும்
எவ்வளவு பார்த்தாலும் திருப்தி அடையாமல் ச்ப்ருஹநீயமாய் இருக்கும் –
அவன் படி அவன் தனக்கும் பரம போக்கியம் -என்றவாறு
தூய அமுதைப் பருகி பருகி -இத்யாதிகள் இத் திரு வாய் மொழிக்கு உயிர் நிலையாய் இருக்கும் –

———————————————–

ஓடு மனம் செய்கை யுரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளு நிலை –நாடறிய
ஓர்ந்து அவன் தன செம்பை உரை செய்த மாறன் என
எய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –8–

இவர்களுடைய செவ்வைக் கேடு தானே தனக்கு செவ்வையாம் படி அவர்களோடு கூடிப் பரிமாறும் ருஜூத்வ குணத்தை
ஓடும் புள்ளேறி—என்னும் -திருவாய் மொழி முகத்தாலே வெளியிட்டு அருளின நம் ஆழ்வாரை அனுசந்திக்கவே
நமது வாழ்ச்சி நிலை நிற்கும் என்றதாயிற்று
ஆர்ஜபம் -ருஜூவாய் இருக்கும் தன்மை –மனம் மொழி மெய்கள் மூன்றும் ஒருப்பட்டு -இருக்கும் தன்மை –செம்மை –எனபது -இதுவே –
உள்ளத்தை உள்ள படி சொல்லுகையும் செய்கையும் -கௌடில்யம்-கோணல் புத்தி இல்லாமல் –
ஆஸீத் தசரதோ நாம ராஜா -தொடங்கி–பெருமாள் அருளிச் செய்ததை வால்மீகி -ருஜூ புத்திதயா சர்வமாக்க்யாது முபசக்ரமே -என்று அருளிச் செய்கிறார்
ஆளவந்தாரும் -ஸ்தோத்ர ரத்னத்தில் -வசீ வதான்ய –ஸ்லோகத்தில் -ருஜூ பதத்தினால் இக்குணத்தை பேசி அருளுகிறார் –
ஆறாயிரப் படியில் திருக் குருகைப் பிரான் பிள்ளான் -திவ்ய ஐஸ்வர்யம் சொல்லுவதாக அருளிச் செய்கிறார்
பெரியவாச்சான் பிள்ளையும் வடக்குத் திரு வீதிப் பிள்ளையும் இதை பஷாந்தரமாக்கி -ஆர்ஜவ குணம் சொல்லுகிறது என்று அருளிச் செய்கிறார்கள்
தேசிகனும் -நிருபதிம் ருஜூ தாம் நீர வர்ணே ஜகாதா -என்றும் -பிரகிருதி ருஜூதயா -என்றும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலும்
ஸூசீலம் ஸ்வாராதாம் சரச பஜனம் ஸ்வா ர்ஜவ குணம் -என்று த்ரமிட உபநிஷத் சாரத்திலும் ஸ்லோகம் இட்டு அருளி உள்ளார்
இதற்கு ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –இத் திருவாய்மொழி தான் சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்தை சொல்லுகிறது என்பாரும் உண்டு
அன்றிக்கே -ஈஸ்வரத்வ லஷணம் சொல்லுகிறது என்பாரும் உண்டு
அன்றிக்கே
பாடி அனுபவிக்கிறார் என்பாரும் உண்டு
ஆர்ஜவ குணம் சொல்லுகிறது என்று பட்டர் அருளிச் செய்யும் படி
பத்தர் முத்தர் நித்யர் என்று சேதனருக்கு ஒரு த்ரை வித்யம் உண்டு இ றே-
த்ரிவித சேதனரோடும் பரிமாறும் இடத்தில் அவர்கள் தன்னினைவிலே வரும்படி பண்ணுகை அன்றிக்கே
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் எற்றுமா போலே தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும்
என்னும் அவ்வழியாலே ஆர்ஜவ குணம் சொல்லுகிறார் —

———————————————–

இவை அறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து வந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நஞ்சென்னி பொரும் –9

இவை -ஆழ்வார் கீழ் திருவாய் மொழி களில் அனுபவித்த குணங்களை
பரத்வம்
பஜநீயத்வம்
சௌலப்யம்
அபராத சஹத்வம்
சௌசீல்யம்
ஆராதனைக்கு எளிமை
பரம போக்யதை
ருஜூ த்வம்-
ஆகிய இக்குணங்களை என்றவாறு
இவற்றை அறிந்தவர்கள் திறத்தில் எம்பெருமான் சந்துஷ்டனாய்
ஆற்ற -பொறுக்க பொறுக்க
சகல அவயவங்களிலும் சம்ச்லேஷிப்பான்
அப்பேற்றை ஆழ்வார் பெற்று -அதனால் உண்டான ஆனந்தம் புற வெள்ளம் இட்ட சொல்லாகிய இத் திருவாய்மொழி
இதை ஓதுவார் சென்னித் திடரிலே சர்வேஸ்வரன் திருவடிகள் வந்து சேரும் என்றதாயிற்று
இவை அறிந்து ஓர் தம்மளவில் என்றும் பிரித்து -ஊர்கின்ற -ஆராய்ச்சி செய்கின்றவர்களுக்கு என்றுமாம் –

———————————————————————————-

பொருமாழி சந்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது வற தன்னை –திரமாகப்
பார்த்து உரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் –10-

ஓர் ஏது அர -நிர்ஹேதுகமாக
திரமாக பார்த்து உரை செய் -ஸ்திரமாக சாஷாத் கரித்து அருளிச் செய்த

எம்பெருமானுடைய அனுக்ரஹம் நிர்ஹேதுகம் எனபது -பொரு மா நீள் படைப் பதிகத்தில் அனுபவித்து அருளிச் செய்யப் படுகிறது
கீழ்த் திருவாய் மொழியிலே எம்பெருமான் தம்மோடு அவயவங்கள் தோறும் கலந்த கலவியை அருளிச் செய்த ஆழ்வார்
அந்த கல்வியால் தமக்கு பிறந்த அளவில்லாத ஆனந்தத்தை இத் திருவாய் மொழி முகத்தாலே
வெளியிடுகிறார் என்று இங்கனே சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பதும் உண்டு
பட்டர் விசேஷித்து நிர்வஹிப்பராம் –எங்கனே என்னில்
கீழ்த் திருவாய் மொழியில் -வந்து எனது உச்சி உள்ளானே -என்றும்
உச்சி உள்ளே நிற்கும் தேவ தேவர்க்கு -என்றும் தலைக் கொண்ட அனுபவம் தமக்குக் கிடைத்ததாக ஆழ்வார் அருளிச் செய்தார்
இனி அவ்வனுபவத்தில் காட்டிலும் ஏற்றமாக செய்து கொடுக்க கூடிய வேறு அனுபவம் என்ன இருக்கிறது -ஒன்றும் இல்லை
அவ்வனுபவம் இடையறாது தொடர்ந்து செல்ல வேண்டுமாறு செய்து கொடுக்க வேண்டும் அத்தனையே உள்ளது
அது எம்பெருமான் திரு உள்ளத்தை பொறுத்த விஷயம் -அது நிற்க –
ஆழ்வார் கீழ்த் திருவாய் மொழியில் தமக்கு கிடைத்த பேற்றை ஆராய்ந்து பார்த்து
இப்போது நமக்கு கிடைத்த பேறோ கனத்து இருக்கிறது
இதில் காட்டிலும் உத்தமமான பேறு வேறு ஒன்றும் இல்லை
இந்த பேறு நமக்கு வந்த வழி என்-என்று விமர்சிக்கத் தொடங்கினார் –
இப்பேற்றுக்கு தகுதியாய் இருப்பதொரு நன்மை –தக்க சாதனா அனுஷ்டானம் -தம்மிடத்தில் ஒன்றும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்
தம் தலையில் ஏதேனும் இருந்தாலும் -அத்வேஷமோ ஆபி முக்யமோ இருக்குமே யன்றி வேறு ஓன்று இருப்பதாக காணப் பட வில்லை
அவை சாதனமாக நினைக்க ஒண்ணாதவை

———————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: