திருப்பாவை உபன்யாசம் -2013 – – ஸ்ரீ உ வே நாவல்பாக்கம் வாசுதேவாச்சார்யர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ கிருஷ்ணன் பூ பாரம் நீக்க-திருவவதரிக்க-
ஐ ஐந்தும் அறியாதார் -வையம் சுமப்பதும் வம்பு
திருப்பாவை அனுசந்தாமே பாரம் போக்கி அருளும்
ஒருமகள் –திரு மகள் போலே வளர்த்தேன் -ஸ்ரீ விஷ்ணு சித்த குல கல்ப வல்லி -ஹரி சந்தன -அரங்கனுக்கே –
வைகுண்ட போகம் இகழ்ந்து எமக்காக அன்றோ திருவவதரித்தாள்-
தேஹி தேஹி -பறை கொடு -கைங்கர்யம் -தர வேண்டும் நிர்பந்தித்து
ஸ்வா பதேசம் உண்மையான அர்த்தம் –சரணா கதி பரமான அர்த்தங்கள் -அன்யாபதேசம் நோன்பு இத்யாதி –
ஏல -அசைச் சொல் ஓர் அத்விதீய பாவை நோன்பு -பல வித அர்த்தங்கள்
மதன கோபால கிருஷ்ணனை மன்மதன் என்கிறாள் தேசிகன் –
பெருமாள் பொன் முடி சூட கானகம் பூ முடி சூடிற்று -சித்தரை மாசம் -புஷ்பிதம் -கொண்டாடினால் போலே இங்கும்
காலத்தை கொண்டாடுகிறார்கள் -சபலம் ஜன்ம -அக்ரூரர் –மாசானாம் மார்க்க சீஷானாம்
இருள் விரி சோதி பெருமான் உறையும் – -அபூத உவமா -கதிர் மதியம் போல்
கூர் வேல் கொடும் தொழிலன் –ஆசார்யர் -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு -குமரன் -அவர்களது கைப் பிள்ளை -எம்பெருமான்
ஏரார்ந்த கண்ணி ஞானம் -சரம ஸ்லோஹத்தையே முதலில் நாராயணனே நமக்கே பறை தருவான் -எடுத்து சொன்ன பெருமை உண்டே
அகோ பாக்கியம் இந்த பிள்ளைகள் செய்த பாக்கியம் என்ன பிரம்மா ஸ்துதி —
தர்ம வார்த்தைகளை –கேட்டாலே புண்யம் -கேளீரோ -என்கிறாள் -நாமும் -தாயைப் போலே தம்மையும் சேர்த்துக் கொண்டு
பாடுவதே பறை —அங்கி இது மற்றவை அங்கம் -சரீர சிந்தை விட்டு ஆத்மசிந்தனையே நோன்பு
பையத் துயின்ற பரமன் –தெய்வக் குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை உந்தி தனிப் பெரும் நாயக -குழந்தை மழலைப் பேச்சு போலே இவர்கள் ஸ்துதி —
அவனை பாட மாட்டும் -திருவடி பாட -குழந்தை ஸ்தனத்தில் வாய் வைக்குமா போலே -சித்தாலம்பன சௌகர்ய –
கிருபையை தூண்டும் -திருவடியில் விழுந்தால்
ஆனுகூலச்ய சங்கல்பம் பிரதிகூலம் வர்ஜனம் –அக்ருத்த்ய கரணம் கிருத்ய அகரணம் –பகவத் பாகவத அசஹ்யா அபசாராம்
-நாநா வித அபசாரம் அசேஷண ஷமஸ்வ –
கண்ணனுக்கு மை ஞானம் -கர்ம ஞானம் பக்தி யோகம் இல்லை என்றுமாம்
ஆசார்யர் -ஞானம் அபேஷிக்க கொடுக்கிறார்கள் ஐயமும் பிச்சையும் கருணையால் கேட்காமல் அருளி –
உய்யுமாறு -உபாயம் -ஆறு விஷயம்
அடி பாடி -/நீராடி /கை காட்டி //எண்ணி –உகந்து -செயாதன செய்யாமல்
பிராப்ய பிராபக ஐக்கியம் முதலில் சொல்லி க்ருத்ய அக்ருத்ய விவேகம் இதில் சொல்லி –
ஓங்கி -என்பதாலே வாமன அவதாரம் -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
-மூன்றாவது அடியாள் மகா பலியை தாசனாக்கி-எல்லார் சிரசிலும் திருவடி வைத்து அங்கீதம் -seal வைத்து அடையாளம் சொத்துக்கு
-மண்ணைத் துழாவி வாமனன் மண் ஈது என்னும் –
நம்பிக்கை இல்லையாகவுமாம் -அபிசந்தி இல்லையாகவுமாம் -வேறு ஒன்றில் அபி சாந்தி கொண்டு இருந்தாலும் –
பிரயோஜநாந்தரம்-திரு நாம பிரபாவம் பணிப் பொன் போலே –
திரு வரங்கத்தில் ஓங்கிய நெல் களின் நடுவில் உண்டாகிய தாமரை பூ – கமலம் உத்தமன் கழல் போல காட்ட நெல் கதிர்கள்
தாழ் சாய்த்து தலை வணங்கும் -பெரியாழ்வார்
வாத்சல்யம் கண்ணன் இடம் கற்றுக் கொண்டதாம் பசுக்கள் -தேசிகன் –
வள்ளல் பெரும் பசுக்கள் –அவன் ஸ்பர்சம் பட்டு வேணு கானம் கேட்டு வளர்ந்த
உத்தமன் -ஆசார்யன் -புகழால் உலகம் அளந்து -ராமானுஜர் கீர்த்தி யால்-ஓங்கி -மஹா மகாதம்யங்கள் உடைய
–உருமோ பாவியேனுக்கு –அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –
தனியன் சொல்லி -சுரககும் –இரு வினை பற்றறவோடும் இராமானுச
உபதேசமே மழை-பகவத் சேஷத்வம் -பகவத் ஏக உபாயத்வம் -அனந்யார்ஹத்வம்–பகவத் போக்யத்வம் -அநந்ய போக்யத்வம் –
கயல் உகள -கைங்கர்யம் –ப்ரீதி கார்ய –பூம் குவளை ஞான விகாசம் -வண்டுகள் சிஷ்யர்கள் -ஆசார்யர்கள் ஞான மழையில்
மோஹித்து திளைத்து இருக்க -பதாம்புஜ பருங்க ராஜம் –திருவடி -பிரமேயம் -பிரமாணம் ஆசார்யர் ஸ்ரீ சூக்திகள் -நீங்காத செல்வம் இவையே
மழை-ஆசார்யர் காருண்ய வர்ஷம் -காரே ய் கருணை ராமானுஜா -வேதார்த்தங்களில் சாரமான ரசத்தை பொழியும் மேகங்கள் –
சார தமம் சாஸ்திரம் -ரகஸ்ய த்ரயம் -அர்த்த பஞ்சகம் -நித்ய முக்தாம் நிறைந்த ஹரி நீலம் -வேதமும் -பரம பதங்களும்
வேத மார்க்க பிரதிஷ்டாச்சார்யர் -ஆழி மழைக் கண்ணா -ஆழியுள் புக்கு முகந்து -ஆர்த்து ஏறி –ஆசார்ய ஸ்தானம் வகுத்து -சிம்ஹாசன அதிபதிகள் —
மின்னல் ஞான பிரகாசம் -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு இடி -கவிதார்கிக சிம்ஹ நாதம் -சதா தூஷிணி-

பெருமாள் முடி துறந்தது பாதுகை சுக்ரீவன் விபீஷணன் மூவரும் முடி சூட தானே சங்கல்பித்துக் கொண்டார்
தாமோதரன் -சேஷியின் திரு இலச்சினை மாயன் -ஆச்சர்யமான ஆசார்யர் -அவதாரம் தொடங்கியே ஆசார்யம் –
பார்த்தான் –புன்மையேன் மனத்தே புகுந்து தீர்த்தான் இரு வினை தீர்த்து -அரங்கன் திருத் தாளோடு -சேர்த்தான் இராமானுசன் செய்யும் அற்புதங்களே
மைந்தன் -யுவா ஆசார்யர்கள் ஞானத்தால் -பிறந்த இடத்துக்கும் குலத்துக்கும் திக்குக்கும் பெருமை சேர்ப்பார்கள் ஆசார்யர்கள்
சம்ப்ரதாயம் நதி துறை குரு சந்ததி பரிவார பரம்,பறை யமுனைத் துறைவன் தாயைக் குடல் விளக்கம் திரு முடி சம்பந்தத்தால் உஜ்ஜீவனம்
கருத்மானும் ஆதி சேஷனமும் சேர்ந்து அனுபவித்து பரத்வம் சாதித்த பெரியாழ்வார் உணர்த்தப் படுகிறார்
அஷர த்வயம் ஹரி -பாபங்களை அபஹரித்து -துஷ்ட சிந்தை மாற்றி –உள்ளம் புகுந்து -குளிர்ந்து -சொன்ன பலம் அவர்களுக்கு கேட்ட பலம் இவளுக்கு –
பரம் வ்யூஹம் விபவம் -மூன்று பாட்டால் அருளி
பத்ம நாபன் விபவம் அந்தர்யாமி —வட மதுரை அர்ச்சை இதிலும் புள்ளரையன் கோயில் -அர்ச்சாவதாரம் முனிவர்கள் -ஹரி ஹரி பேர் அரவம் அந்தர்யாமி
வேதாத்யானம் முதலில் -செய்து வேதாந்த விசாரம் -பிள்ளாய் எழுந்திராய் புள்ளும் சிலம்பின பாகவதர்கள் ஆசார்யர்கள் சந்தை
நடக்க -புள்ளரையன் கோயில் வேதாத்மா –வெள்ளை வெளி சங்கு -பிரணவம் -பேரரவம் –
பிரகிருதி -பூதனை —சகடம் -அஹங்காரம் மமகாரம் -மாதவன் பேர் ஓதுவதே வேதத்தின் சுருக்கு
நாராயணன் மூர்த்தி கேசவன் -திரு நாமங்கள் கேட்டு தேஜஸ் மிக்கதாம் -இவளுக்கு
சேவை நாரணன் என்ற சொல் கேட்டதும் மல்கு கண்ண நீர் -ஆழ்வாருக்கு
கேயே கிடத்தியோ -இதிலே திளைத்து எங்களை கண்டு கொள்ளாமல் கிடக்கிறாயே -பேய்ப் பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய் தேச முடையாய்
கால ஷேபத்துக்கு இதில் கூப்பிடுகிறார்கள் -முன் வேத அத்யயனம் –
வாச நறும் குழல் -ஆசார்யர்கள் அனுஷ்டானம் கமழுமே –
சம்ப்ரதாயம் தயிர் -சாரம் -ரகச்யத்ராயம் -தத்வ நவநீதம் – ரகஸ்ய நவநீதம் இரண்டையும் தேசிகன் அருளி உள்ளார்
உபநிஷத் கடலைக் கடைந்து ஸ்ரீ -ப்ரஹ்ம ஸூ தரம் அருளி

இச்சா மஹா -பெரிய ஆசை ஒன்றே நாம் பட வேண்டும் அபிமுக பாவமே சம்பத் -அதிலும் -குடைகளால் மறைத்து கண்டும்
காணாமல் சிறிசிறிதே-கடாஷம் வேண்டி —கீழ் வானம் வெள் என்று -தேஜஸ் கீழ் அகம் -என்ற பதிலாம்
போவான் போகின்றார் -அக்ரூரர் யாத்ரை திருவேங்கட யாத்ரை அர்ச்சிராதி கதி போலே இதுவும்
போவான் போகின்றாரை தடுத்து இல்லை காத்து -இதுவே பரம பிராப்யம் அன்றோ -வந்தோம் இல்லை வந்து நின்றோம் –
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் -கோதுகலமுடைய பாவாய் அன்றோ –
இரவு சம்சாரம் -விடியற் காலை சரணாகதி பகல் மோஷம் பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –கீழ் வானம் வெள்ளென்று
எருமை -சோம்பல் -சரணாகதி பண்ணி மார்பில் கை வைத்து உறங்கவே பிராப்தி – கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்ரை உகத்தி போலும்
சிறுவீடு இங்கேயே நித்ய அனுபவம் -வாதம் பண்ணி மா வாய் பிளந்தானை -மல்லரை மாட்டிய -பர மத பங்கம் –
பிறந்தார் உயர்ந்தே -இங்கேயே நித்யர் விட மேம் பட்டவர்கள் ஆவார் – திருவாய் மொழி -கற்றவர்கள் –
கர்மம் செய்வதே பரம பிரயோஜனம் -போவான் -கூவுவான் -வான் மிகுந்த திருப்பாவை
ஸ்ரீ வைஷ்ணவர் உடைய க்ருஹ யாத்ரை அனுசந்திக்க அமையும் உஜ்ஜீவனம் அடைய -கூரத் தாழ்வான்
கண் வளரும் -அந்தர்யாமி ஆராதனம் சாப்பிடுவதை -நோய் சாத்திக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷை
நம் தெருவின் நடுவே வந்திட்டு –கூடுமாகில் கூடலே ஆண்டாள் வடமதுரையில் தெருவையும் பந்துவையும் ஆசைப் படுகிறாள் ஆண்டாள்
மாமாயன் மாதவன் வைகுந்தன் –சௌலப்ய பரத்வங்கள் இரண்டுக்கும் குருகுல வாசம் செய்த இடம் பிராட்டி இடம்
ஆசார்யன் திரு மாளிகையை அனுபவிக்கிறாள்
ஞானம் விளக்கு தூபம் அனுஷ்டானம் -வேதம் கொண்டே வாழ்வு -தர்க்கத்துக்கு பிரசக்தி இல்லை -தூ மணி மாடத்தில் இருப்பவர்கள் –

மணிக்கதவம் -ரஹச்யார்த்தம் பிரகாசப் படுத்துவதே தாள் திறவாய்
வேத நிந்தை செய்யும் இடங்களில் செவிடாக இருக்க வேண்டுமே –
குட்ட நாட்டுத் திருப் புலியூர் -மாயப் பிரான் திருவருள் நேர் பட்டதே இவளுக்கு திரு மணம் -அம தண் துழாய் கமழ்கிறதே
கருத்மான் வந்து நாகாஸ்ரமம் விடுபட்ட -பெருமாள் ஆலிங்கனம் பண்ணிக் கொள்ள -அந்த வாசனை -நித்யர்கள் அனுபவிக்க
-பிராட்டி காதில் புஷ்பங்கள் பெருமாள் தோளுக்கு வர -அதனால் வந்த வாசனையாம்
குடமாடி –தண்ணம் துழாய் கொண்டு –சூட்டீரே –பூம் துழாய் தாராது ஒழியுமே -தன அடிச்சி அல்லளே -மற்று யாரானும் அல்லனே
-சீரார் திருத் துழாய் நமக்கு நல்கி –சிறிய திருமடல் கும்ப கர்ணன் தமோ குணம் –ராவணன் ரஜோ குணம் விபீஷணன் சத்வ குணம் –
பகவத் அனுபவம் பெரும் துயில் -நம்மாழ்வார் நிலை -ஸுய அனுபவம்
-வாய் திறந்து மதுரகவி ஆழ்வாருக்கு அருளியது போலே அருள வேணும் என்றபடி
கேடில் சீரானை -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகண் கல்யாணை கதானன்
உன் முற்றம் புகுந்து -முகில் வண்ணன் பேர் பாட -புன மயில் ஆட வேண்டாமோ –சிற்றாதே பேசாதே இருக்கலாமோ
எற்றுக்கு உறங்கும் பொருள் இங்கே கதவை திறக்க வேண்டாம் -கிருஷ்ணனையும் இவர்களையும் சேர்க்கும் முற்றம் அல்லவா —
முகம் காட்டி சிதைப்பானே கோவிந்தன் -இரக்கம் இல்லாதது என் பாபமே
இவரார் இது என் இது என் -பரகால நாயகி -முற்றம் முகுந்து முறுவல் செய்கின்றீர் இது என் இது என்
பசு -ஆசார்யன் -பால் உபதேச வர்ஷம் -சொல் அமுதம் -யுவாக்கள் ஆசார்யர் கற்றுக் கறவைகள்
கனைத்து நினைத்து -சங்கல்பத்தால் ரஷணம் கிருபா பரிபாலனம் உஜ்ஜீவனம் -ஆவா என்று ஆராய்ந்து அருள -பசுக்களும் சாம்யா பத்தி
-வாத்சல்யம் கண்ணன் இடம் கற்றுக் கொண்டன சர்வ குஹ்ய தமம் -மன மனா பவ சர்வ தர்மான் இரண்டும்-
கனைத்து இளம் கற்று எருமை கீதாசார்யன் போல்வார் —பனித்தலை வீழ குளிர்ந்து இருக்க -மனத்துக்கு இனியான் –
ஆசார்யரும் பெருமாளும் -கிருஷ்ணன் திரு நாமம் இல்லாத ஒரே பாசுரம்
பக்த பக்தேஷூ -அடியார் அடியாருக்கு அத்யந்த பிரியன் என்றவாறு -கள்ளம் தவிர்ந்து கலந்து -ததீய பர்யந்தம் –
பொல்லா அரக்கன் -காகாசூரன் என்றுமாம் கிள்ளிக் களைந்தான் பொருந்துமே ராவணனை விட
அரக்கர்களில் மிக்கவன் ஹிரண்யன் பக்தர்களில் மிக்கவன் பிரகலாதன் -பெருமாளில் மிக்கவர் நரசிம்ஹன் என்பர்
சர்வ பிரஹராணாயுதர் நரசிம்ஹர் என்பர்
பரமத பங்கம் –கீர்த்திமை பாடிப் போய்-ஆசார்ய பரம் -கிள்ளிக் கலந்தான் -அநாயாசேன செய்த கார்யங்கள்
போதரிக் கண்ணி ஞானம் -ஆத்மா அபஹாரம் கள்ளம் தவிர்ந்து -ததீய சேஷத்வ பர்யந்தம் அறிந்து
ஸ்தான விசேஷ அதிகாரம் –ஸ்வ பாவம் இருக்கும் இடத்தை பொறுத்தே –
திவ்ய தேசமே மகிமை விதுரர் தீர்த்த யாத்ரை பண்ணி வர -உத்தவர் கண்டு கிருஷ்ண அவதார சமாப்தம் -தர்மர் குசல பிரச்னம் –
எந்த தீர்த்தங்களில் நீர் சென்று தீர்த்தம் ஆக்கினீர் -பரம பாகவதர்களாலே புனிதம் என்றபடி
உங்கள் தங்கள் எங்கள் -மூன்றும் இந்த பாசுரம் -பிரதி கூலர் அனுகூலர்-அனுபயர் உதாசீனர் –
சேஷத்வம் மலர்ந்து ஸ்வா தந்த்ரம் மூட -செங்கழு நீர் ஆம்பல்
செங்கல் சிகப்பு ஆசை -ரஜோ குணம் வெள்ளம் மந்த ஸ்மிதம் -சத்வ குணம் கலந்த -உதாசீனமாக
நாவுடையாய் உபதேசம் பரமத கண்டனம் -ஹயக்ரீவன் நாவின் முழக்கில் வியன் கலைகள் மொய்த்திடும் கண்டநாதம்
வாய்மையும் மரபையும் காத்து தன்னுயிர் விட்ட தூயவன் தசரதன் -நானே தான் ஆயிடுக –
மந்தரை கைகேயி தசரதன் பெருமாள் இல்லை மத பாபமே காரணம் -பரதன்
கிடாம்பி அப்புள்ளார் கிளியை பழககுமா போலே பழக்கி வைக்க -தேசிகன் -மடப்பள்ளி வார்த்தை
வல்லை உன் கட்டுரைகள் வாக் சாதுர்யம் வல்லானை கொன்றானை அஹங்காரம் ஒழித்து
-மாயன் அற்புதன் ராமானுசன் -இவை எம் ராமானுசன் செய்யும் அற்புதங்களே
நேய நிலைக்கதவம் கிருஷ்ணன் நினைவை ஒட்டியே உள்ள கதவம் என்றபடி -கதவாக நித்ய சூரிகளே கைங்கர்யம் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
கடகர்கள் -நாயகர் -எம்பெருமானை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் ஆசார்யார்களே பரம உத்தேச்யம் -சம்சயம் இல்லாமல்
–வேறாக சேத்தி இருப்பாரை வெல்லுமே அவனை சாத்தி இருப்பார் தவம் -நாயகமாய் நிற்பவர் நந்த கோபன் ஸ்திரமாக நிற்பவர்
-குரு பரம்பரை நடுநாயகம் பகவத் ராமானுஜர் –ஸ்ரீ மதே ராமானுஜாய நம சொல்லி அசமத் ஆசார்யர் பர்யந்தமும்
முன்புள்ளார் திருமுடி சம்பந்தத்தால் உணர்த்தப் படுவார்களே -கோயில் காப்பார் -ராமானுஜ திவ்யாஜ்ஞ்ஞை எல்லா கோயில்களுக்கும் –
–வேத மார்க்கம் வாயில் காப்பார் -கொடி தோன்றும் –சித்தாந்தம் -விஜய சித்தி —
தாரகம் -சோறு -போஷகம் தண்ணீர் –போக்கியம் -அம்பரம் வஸ்த்ரம் -கேசவ பிரியதாம் -ஆறாம் செய்யும் -தோஷங்கள் நீங்க
-நந்த கோபன் -தர்மம் செய்தே ஆனந்தம் அடைந்தவன் -எடுத்த பேராளன் நந்த கோபன் –
கண்ணனே அம்பரம் தண்ணீர் சோறு -உண்ணும் சோறு -இத்யாதி எல்லாம் கண்ணன் -வா ஸூ தேவ சர்வம் இதி
மந்தரம் மாதா -ஆசார்யன் -பிதா -வைஷ்ணவ ஜன்மம் -கொடுத்து -அம்பரம் -சேஷத்வ ஜ்ஞானம் -சோறு -உபாயத்வம் அவனே –
தண்ணீர் அவனே போக்கியம் -சேஷத்வ உபாயத்வ போக்யத்வ ஞானம் -ஆனந்த வர்ஷம் -நந்த கோபர்
திரு அஷ்டாஷரம் -மந்தராய மஹதே-கீர்த்தி குலம் தரும் செல்வம் தரும் –பெரு நிலம் அழிக்கும் பெற்ற தாயினும்
ஆயன செய்யும் –நாராயணா என்னும் நாமம்
திரு அஷ்டாஷர-வ்யாபக – மந்த்ரார்த்தம் அடுத்து -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -விஷ்ணு காயத்ரி –
பரம தாத்பர்யம் ததீய சேஷத்வம் -பாகவத கைங்கர்யம் பகவத் கைங்கர்யம் சேர்ந்தே -உம்பியும் நீயும் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
பால கிரீடம் ஜலம் பந்து -அநாயாசேன லீலா வியாபாரம் பந்தார் விரலி –உண்டும் -உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் -கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்து –கண்டவாற்றால் தனதே உலகு -என்று நின்றான் தன்னை –அடியார்க்கு இன்ப மாரியே-பந்தார் விரலி –
ஸ்ரீ ராம கோஷ்டிக்கும் ஆகாத நமக்கு பிராட்டி ஒழிய வேறு தஞ்சம் இல்லையே -ராஷசிகள் கோஷ்டியில் உள்ளோமே
ஞான புத்ரர் திருக் குருகை பிரான் பிள்ளான் -திருமலை நம்பி திருக் குமாரர் என்பர் -ஓடாத தோள் வலியன்
-ஞானக் கை தா -ஞானமே தோள் -கந்தம் தேஜஸ் பரிமளிக்கும்
குயில் வந்தே வால்மீகி கோகுலம் சுகர் கிளி -கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ள கொடுப்பேன் குயிலே —
சீரார் வளை ஒலிப்ப -உபதேச முத்ரைகள் உடன் வரும் உபதேசமும் உத்தேச்யம் -சீரார் வளை போல் எம் ஆசரியர் வாக்கு –

ஞானம் -ஸ்ரீ தேவி -இதுவே பால் -நம் போன்ற குழைந்தகளுக்கு -கருணையே வடிவு கொண்டு
பொறுமைக்கு பூமா தேவி ஷமயா -நீளா தேவி -அபசாரம் குறைகள் பார்க்க கூடாது -என்னையே பார்த்து சரணாகதன்
என்ற ஒன்றையே கொண்டு போக மயக்குகளால் அவனை வசப்படுத்தி அத்யந்த சிநேகம் ப்ரேமம்
-நீளா தேவி மீண்டும் எழுப்ப ஆண்டாள் -அடுத்த சரணாகதனை அங்கீ கரிக்க -ஸ்வரூப நிரூபகம் பிராட்டி –
கனக வளைய முத்ரா உண்டே
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு நந்தா விளக்கு இருவரும் -அவனுக்கும் இவள் விளக்கு
-குத்து விளக்கு -எங்கும் சென்று கைங்கர்யம் -வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு அன்றோ அவனும் –
கோட்டுக்கால் -கந்தம் கமழும் குழல் -எல்லாம் அவனுக்கு கைங்கர்ய பரர -தடம் கண்ணி– அஸி தேஷணா
தத்துவம் அன்று தகேவேலோர் எம்பாவாய் –
ஆசார்யர் கருணா கடாஷம் -ஒன்றே உத்தாரக ஹேது -ஷத்ர பந்து மொய்த்த வல் வினையுள் நின்றும் நாரதர் கடாஷம்
-பராம் கதி பெற்றானே -ஒரு கண் கடாஷம் -ஆறு -எட்டு ஆயிரம் கண்களுக்கும் ஈடு இல்லையே -பர்யங்க வித்யை சொல்லும் பாசுரம்
நிக்ரஹம் அறியாத -ஸ்ரீ லஷ்மி ஆயுதங்களை கையில் கொள்ளாத -பத்மம் ஒன்றையே கொண்டு
-பத்ம நேமி -அதுவே புருஷகாரம் நமக்கு -மிதுனம் கூறாக விபஜித்துக் கொண்டவை இவை –
விமலா துயில் எழாய் –அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் -செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா —
உன் மணாளனை நீராட்டு நபபின்னைக்காக தானேமஞ்சனம் ஆடுவான் -கானில் சிரிக்கும் -என்றதும் வருவான் -எம்மை நீராட்டு
-உன் மணாளனையும் எம்மையும் நீராட்டு -ஜலத்தை கொண்டு எங்களை நீராட்டாதே உன் மணாளனைக் கொடுத்து
உன் மைத்துனன் -உன் மணாளன் -இவள் மூலமே அவனை பற்றி -தாயார் மடியில் ஒதுங்கி -மிதிலா ஜனங்கள் போல் நாம்
அயோத்யா ஜனங்கள் ஸூ ரியனுக்கும் ஸூ ரியன் அவன் –ஸூ லோசன லோசன சந்தரன் -ஸ்ரீ ராம சந்திரன் பேர் வைத்ததே
மிதிலா நகர மக்கள் –அழகிய மணவாளன் -ஸ்ரீ யபதி இவளை இட்டே –
ச்நானாசனம் -பாதுகா-சகஸ்ரம் -மணி பாதுகா -நீளா சஹிகள் –சித்தமாக இருக்க -இந்த பாசுரம் திரு உள்ளம் கொண்டு –
அமரர் -ஞான சங்கோசம் இல்லா ஆசார்யர்கள் –கவிதார்க்க சிம்ஹ நாதம் –திருவே -விச்லேஷம் தரிக்க முடியாத ஆசார்யர்கள்
-கிருஷ்ண அனுபவத்தில் நனைந்து –உக்கம் த்வயம் –தட்டொளி திருமந்தரம் ஸ்வரூபம் காட்டும் கண்ணாடி -உன் மணாளனையும் -சரம ஸ்லோஹம் தந்து
ஊற்றம் உடையாய் -இறந்தும் கூர்மமாயும் கார்யம் -தண்ட காரண்ய ரிஷி கலை ரஷிக்க -பெருமாள் பிரதிஜ்ஞ்ஞை விபீஷணன்
-சுக்ரீவன் திருவடி -தமது மதம் மித்ரா பாவேன தோஷம் உடன் வந்தாலும் –
சாஸ்திரம் மதியாத -பாகவதர் விரோதிகள் அவனுக்கு செற்றார் –
ஆசார்ய பரம் -சத்பாத்ரம் ஏற்ற கலங்கள் -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் ஸ்ரீ ராமானுஜர் -கண்டம் -போல்வார்
ஸ்ரீ தேசிகன் -யாதவ பிரகாசர் -யஜ்ஞ மூர்த்தி —சாஸ்திரம் மதியாத -பாகவதர் விரோதிகள் அவனுக்கு செற்றார் –
ஆசார்ய பரம் -சத்பாத்ரம் ஏற்ற கலங்கள் -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் ஸ்ரீ ராமானுஜர் -கண்டம் -போல்வார் -ஸ்ரீ தேசிகன்
சாஸ்திரம் மதியாத — செற்றார் –யாதவ பிரகாசர் -யஜ்ஞ மூர்த்தி -அஹங்காரம் மமகாரம் -செற்றார் -அபிமான பங்கம் இரண்டு பாசுரங்களால் –
ஆசார்ய கடாஷம் – ஜாயமான கடாஷம் -பாவனம் ஆக்கும்
நின்ற திருக்கோலம் பெருமாள் தாரை –அஷய கீர்த்தி யஸ்ய கொண்டாடி
விபீஷணன் கிடந்த திருக்கோலம் -மூன்று சேவையும் பிரார்த்திக்கிறாள் –
சீரிய சிம்மம் -நரசிம்ஹம் –ருக்மிணி -காலே நரசிம்ஹ -தூணில் திடீர் வந்தது போலே வரச் சொல்லி
ராகவ சிம்மம் -யாதவ சிம்மம் -ரெங்கேச சிம்மம்
சீரிய சிங்கம் கவிதார்க்கிக சிம்ஹம் –மாரி மாறாத தண்ணம் மலை திருவேங்கடம் மலை -அறிவுற்று -தீ விளித்து
நடதூர் அம்மாள் கடாஷம் ஹயக்ரீவர் அப்புள்ளார் கடாஷம் -அறிவுறாய் கண்ணனுக்கு -இவருக்கு அறிவுற்று -பெருமாள் ஆசார்யர் கடாஷம் –
கீர்த்தி எங்கும் பரந்து-போர்த்தான் பார் முழுதும் -புகழ் கொண்டு -காமம் குரோதம் -கன்று விளா மரம் -மாற்றி
பகவத் விஷயத்தில் செலுத்த வைக்கும் ஆச்சார்யர்களுக்கு பல்லாண்டு என்றபடி
அற்புதம் வந்து பிறந்தது அது குழந்தை அற்புதம் பாலகம் -லீலா ரசம் யசோதைக்கு அவதார ரசம் தேவகிக்கு
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வய நிஷ்டர்
சாலோக்யம் –பரமபதம் தானே கூட்டிச் சென்று அதற்கு மேலே -சாமீப்யம் -தன்னிடம் -சாரூப்யம் -சமானமான ரூபம் அளித்து
-அப்ராக்ருத திவ்ய –சாயுஜ்யம் தனக்கு உள்ள ஆனந்த ஸ்வரூபம் அபரிச்சின்னமான போக்கியம் -பரமம் சாம்யம் உபைதி
-மேலும் என்ன கொடுப்பது என்று இருப்பவன் அன்றோ –
சங்கம் பிரணவம் உபதேசித்து -முதலில் போல்வன சங்கங்கள் -சாலப் பெரும் பறை ஹரி என்ற பேரரவம் -நாராயண -பேசுமின் கூசம் இன்றி
-பல்லாண்டு இசைப்பார் சத்துக்கள் சஹவாசம் –சத் சங்காத் மூல காரணம் -வைராக்கியம் -குரு முகாத் ஸ்ரீ சம்பந்தம் கிட்டும்
-கோல விளக்கு ஜ்ஞானம் -ரகஸ்ய த்ரயார்த்தம் கொடி -கைங்கர்யம் செல்வம் விதானம் -புற விஷய பற்றுகளை விலக்கி
-வைராக்கியம் -கொடி பக்தி விளக்கு ஞானம் விதானம் வைராக்கியம் மூன்றும் பூஷணம் கொடுக்க சக்தன் ஆலின் நிலையாய்
சுக சாரணர் -ராவண தூதர் -வானர வேஷம் கொண்டு – மங்களா சாசகோவிந்தா உன்னுடன் சேர்ந்த பின்பு எல்லாம் வேண்டும்
-பகவத் அனுபவத்துக்கு உருப்பாகுமே -கோவிந்தா உன் தன்னைப் பாடி ஆடை உடுப்போம் பறை கொண்டு ஆடை உடுப்போம்
நாடு புகழும் பரிசினால் ஆடை உடுப்போம் –கண்ணன் சந்நிதியில் சோறு தொக்கில் அன்றோ நெய் தொக்கும் -முழம் கை வழியுமே –
சூடகம் கைக்காப்பு சங்கு சக்ர லாஞ்சனம் தோள் வளை –தோடு -திருமந்தரம் -செவிப்பூ த்வயம் -பாடகம் -சரணாகதி -சரம ச்லோஹம் –
ஆடை சேஷத்வ ஞானம் வஸ்த்ரம் போலே -ஸ்த்ரீத்வ அபிமானம் ஒழிக்க வஸ்த்ர அபஹாரம்
பால் -சோறு கைங்கர்யம் நெய் பாரதந்த்ர்யம் -அவன் பேற்றுக்காக -என்ற எண்ணம் –
நின் குறை கழற்கே அடைக்கலம் –குறையாத வினை அகற்றி அடிமை கொள்ள -கிருபாயபாலையா -சம்பந்தம் ஒன்றையே பரிபாலனம்
கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு ஒழியாது -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -இங்கேவந்து திருவவதரித்து கலந்த பின்பு
-கோவிந்த பட்டாபிஷேகம் செய்து அருளின பின்பு உன் தன்னோடு உறவேல் நமக்கு ஒழியாது –
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –மூன்று பதார்த்தம் -சேஷத்வ ஞானம் -கைங்கர்ய பலன் உனக்கே நாம் ஆட செய்வோம் -உன்னுடைய பிரயோஜனத்துக்கு -பல சமர்ப்பணம் – மற்றை நம் காமங்கள் மாற்று –

————————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே நாவல்பாக்கம் வாசுதேவாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: