தத்வத்ரயம் -ஈஸ்வர பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

சூர்ணிகை -141-
ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் – சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்
சூர்ணிகை -142-
அகில ஹேய பிரத்ய நீகன் ஆகையாவது
தமஸ் ஸூ க்கு தேஜஸ் போலேயும்-சர்ப்பத்துக்கு-கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடனாய் இருக்கை –
சூர்ணிகை -143-
அநந்தன் ஆகையாவது நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை –
சூர்ணிகை -144-
அந்தர்யாமி ஆனால் தோஷங்கள் வாராதோ வென்னில் —
சூர்ணிகை -145-
சரீர கதங்களான பால்யாதிகள் ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன தோஷமும் ஈஸ்வரனுக்கு வாராது –
சூர்ணிகை -146-
ஞானானநதைக ஸ்வரூபன் ஆகையாவது ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை –
சூர்ணிகை -147-
அதாவது கட்டடங்க அனுகூலமாய் பிரகாசமுமாய் இருக்கை
சூர்ணிகை -148-
இவனுடைய ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
நித்யங்களாய் நிஸ்ஸீமங்களாய்-நிஸ் சங்கயங்களாய்-நிருபாதி கங்களாய்
நிர்த் தோஷங்களாய்-சமா நாதிக ரஹீதங்களாய்-இருக்கும் –
சூர்ணிகை -149-
இவற்றில் வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகளுக்கு எல்லாரும் விஷயம் –
சூர்ணிகை -150-
ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு சக்தி அசக்தர்க்கு ஷமை சாபராதர்க்கு கிருபை துக்கிகளுக்கு வாத்சல்யம்
சதோஷர்க்கு சீலம் மந்தர்க்கு ஆர்ஜவம் குடிலர்க்கு சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு மார்த்த்வம்
விஸ்லேஷ பீருககளுக்கு சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு-இப்படி எங்கும் கண்டு கொள்வது-
சூர்ணிகை -150
இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே – நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் அவர்களுக்கு தருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருதத்வத்தையே நினைத்து அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய் பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-

சூர்ணிகை -151-
இவனே சகல ஜகத்துக்கும் காரண பூதன் –
சூர்ணிகை -153-
சிலர் பரமாணுவைக் காரணம் என்றார்கள்-
சூர்ணிகை -154-
பரமாணுவில்-பிரமாணம் இல்லாமையாலே ஸ்ருதி விரோதத்தாலும் அது சேராது
சூர்ணிகை -155-
காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள்
சூர்ணிகை -156-
பிரதானம் அசேதனம் ஆகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும்
சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை கூடாமையாலும் அதுவும் சேராது –
சூர்ணிகை -157-
சேதனனும் காரணம் ஆகமாட்டான்
சூர்ணிகை -158-
கர்ம பரதந்தனுமாய் துக்கியுமாய் இருக்கையாலே –
சூர்ணிகை -159-
ஆகையால் ஈச்வரனே ஜகத்துக்கு காரணம்
சூர்ணிகை -160
இவன் காரணம் ஆகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகளால் அன்றிக்கே ஸ்வ இச்சையாலே –
சூர்ணிகை -161-
ஸ்வ சங்கல்பத்தாலே செய்கையாலே இது தான் வருத்தம் அற்று இருக்கும் –
நினைத்த எல்லா பொருள்களுக்கும் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
சூர்ணிகை -162-
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –
சூர்ணிகை -163-
ஆனால் சம்ஹாரத்தில் லீலை ‘ குலையாதோ என்னில் –
சூர்ணிகை -164-
சம்ஹாரம் தானும் லீலை -யாகையால் குலையாது –
சூர்ணிகை -165-
இவன் தானே ஐகத தாயப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும் –
சூர்ணிகை -166-
ஆனால் நிர்விகாரன் என்னும்படி என் என்னில்-
சூர்ணிகை -167–
ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே –
சூர்ணிகை -168-
அதில் பரிணாமம் உண்டாம்படி என் என்னில் –
சூர்ணிகை -169-
விசிஷ்ட விசேஷண சத்வாரகமாக –
சூர்ணிகை -170-
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே
சூர்ணிகை -171-
ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது அசித்தை பரிணமிப்பிக்கையும் சேதனனுக்கு சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப் பண்ணுகையும் –
சூர்ணிகை -172-
ஸ்திதிப்பிக்கை யாவது – ஸ்ருஷ்டமான வஸ்துக்களில் பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று சர்வ ரஷைகளையும் பண்ணுகை –
சூர்ணிகை -173-
சம்ஹரிக்கை யாவது அவி நீதனான புத்ரனை பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற கரணங்களை குலைத்திட்டு வைக்கை –
சூர்ணிகை -174-
இம் மூன்றும் தனித் தனியே நாலு பிரகாரமாய் இருக்கும் –
சூர்ணிகை -175–
ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மாவுக்கும் பிரஜாபதிகளுக்கும் காலத்திற்கும் சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய் ரஜோ குணத்தோடு கூட சிருஷ்டிக்கும் –
சூர்ணிகை -176-
ஸ்திதியில் விஷணவாதி ரூபேணஅவதரித்து மன வாதி முகேன சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி காலத்துக்கும் சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் சத்வ குணத்தோடு கூடி ஸ்திதிப்பிக்கும்-
சூர்ணிகை -177-
சம்ஹாரத்தில் ருத்ரனுக்கும் அக்னி அநதகாதிகளுக்கும் காலத்துக்கும் சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய் தமோ குணத்தோடு கூடி சம்ஹரிக்கும் –
சூர்ணிகை -178-
சிலரை ஸூ கிகளாகவும் சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர் கருண்யங்கள் வாராதோ -என்னில்
சூர்ணிகை -179–
கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே ஹித பரனாய்ச் செய்கையாலும் வாராது –
சூர்ணிகை -180-
இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப்பண்ணும் –
சூர்ணிகை -181-
விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதமாய் ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய் ஏக ரூபமாய் ஸூ த்த சத்வாத்மகமாய் சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய் யோகித்யேயமாய் சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் நித்ய முக்த அனுபாவ்யமாய் வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார காந்தமாய் சர்வ ரஷகமாய் சர்வாபாஸ்ரயமாய் அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்-
கத்யோதம் மின் மினி –
சூர்ணிகை -182-
ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
சூர்ணிகை -183-
அதில் பரத்வமாவது அகால கால்யமான நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
சூர்ணிகை -184-
வ்யூஹமாவது ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும் சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும் உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –
சூர்ணிகை -185-
பரத்வத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘ இவ்விரண்டு குணம் பரகடமாய் இருக்கும் –
சூர்ணிகை -186-
அதில் சங்கர்ஷணர் ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது
சாஸ்திர பிரவர்த்தனத்தையும் ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பார் –
சூர்ணிகை -187
பிரத்யும்னர் ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும் மனு சதுஷ்டயம் தொடக்கமான சுத்த வர்க்க சிருஷ்டியையும் பண்ணக் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -188-
அநிருத்தர் சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும் கால ஸ்ருஷடிக்கும் மிசர ஸ்ருஷடிக்கும் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -189-
விபவம் அனந்தமாய் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் –
சூர்ணிகை -190-
மனுஷ்யத்வம் திர்யக்த்வம் ஸ்த்தாவ்ரத்வம் போலே கௌணத்வமும் இச்சையாலே வந்தது ஸ்வ ரூபேண அன்று –
தண்ட காரண்யத்தில் குப்ஜா மா மரமாகவும் திருவவதரித்தான்
சூர்ணிகை -191-
அதில் அப்ராக்ருத விக்ரஹங்களுமாய் அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே யிருக்கக் கடவதான முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -192-
விதி சிவ–வியாச ஜாமதக்ன யார்ஜூன விததே சாதிகள் ஆகிற
கௌண பரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷூக்களுக்கு அனுபாச்யங்கள் –
சூர்ணிகை -193-
நிதயோதித-சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான-சாதுராதமயமும்-கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான-பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத-ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண-மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்களும் துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-
சூர்ணிகை -194-
அவதாரங்களுக்கு ஹேது இச்சை –
சூர்ணிகை -195-
பலம் சாது பரித்ராணாதி த்ரயம் –
சூர்ணிகை -196-
பல பிரமாணங்களிலும் ப்ருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது கர்மம் ஆக வேண்டாவோ என்னில்
சூர்ணிகை -197-
அவை தன்னிலே–சாபம் வியாஜ்யம்-அவதாரம் இச்சம் என்று பரிஹரித்தது-
சூர்ணிகை -198-
அந்தர்யாமித்வம் ஆவது அந்த பிரவிசய நியந்தாவாய் இருக்கை –
சூர்ணிகை -199-
ஸ்வர்க்க நரக பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்-சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே-சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்-அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு-ஹ்ருதய கமலத்திலே-எழுந்து அருளி இருக்கும் இருப்பு —
சூர்ணிகை -200-
அர்ச்சாவதாரம் -ஆவது தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி சந்நிதி பண்ணி அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும் கிருஹங்களிலும் எழுந்து அருளி நிற்கும் நிலை –
சூர்ணிகை -201-
ருசி ஜனகத்வமும் சுபாஸ்ரயமும் அசேஷ லோக சரண்யதவமும் அனுபாவ்யத்வமும்
எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரி பூர்ணம் –
இது தான் சாஸ்த்ரங்களாலே திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப் போரும் சேதனர்க்கு வைமுக்க்யத்தை மாற்றி
ருசியை விளைக்கக் கடவதாய் -இருக்கும்
சூர்ணிகை -202-
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும் அசவந்தரைப் போலேயும் இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் –

———————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: