ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -8–

மாரி மலை  –பூ பூவை அண்ணா -எம்பெருமானார்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி –
தாடீ பஞ்சகத்தில் -ஜை நேப கண்டீரவ –வலி மிக்க சீயம் –
-சம்சார துரத்தின மழை ஒழித்து -திவ்ய கடாஷா அமிருத மழை -உண்டாக்கக் கடவர் ஸ்ரீ ராமானுஜர்-
தர்ம ஸூ ஷ்மம் மலை முழிஞ்சு
வேரி மயிர் பொங்க–கம நீய சிகா நிவேசம் -சிகாய சேகரிணம் பதிம் யதீ நாம் -கன நற் சிகை முடியும் -சிகா பந்தம் பொங்கி இருக்கிறபடி
சீரிய சிங்காசனம் -பேத அபேத கடக ஸ்ருதி
உங்கள் புழக்கடை -நங்காய் நாணாதாய் நாவுடையாய்
பூர்ணர் -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவன்
நாவுடையாய் -சரணாகதி கத்யம் அருளி –சகல விதைகளும் கமழும் படி
தங்கள் திருக்கோயில் -தங்கள் இல் திரு இல் கோ இல்
திருமந்தரம் தங்கள் இல் த்வயம் திரு இல் -சரம ச்லோஹம் கோ இல்
சங்கு இடுவான் -ரஹச்ய த்ரயார்த்தங்கள்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசி –ஆசை உடையோர்க்கு எல்லாம் –பேசி வரம்பு அறுத்தார்
சங்கோடு சக்கரம் -அப்பனுக்கு சங்காழி அளித்து அருளும் பெருமாள் – வாழியே
பங்கயக் கண்ணானை –கப்யாசம் புண்டரீகாஷம் –

இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசன் –பெரிய திருமொழி –6-6-8-அஷ்ட புயகரத்தான் -கோ செங்கணான் சோழன் -திரு நறையூர் கட்டின ஐதிகம் –

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொல் இச் சொல்லில் வல்லான்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ —

தங்கள் அன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப –பெறுதற்கு அறிய பெரும் பாக்கியம் அன்றோ கோஷ்டிகளில் அன்வயிப்பது
வெண் சங்கு ஏந்திய கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம்
ஏதத் சாம காயன் நாஸ்தே -அங்கெ ஆழ்வார் அருளிச் செயல்கள் இங்கே –தெள்ளியீர் அனுபவம் இங்கே
-சீர் மலி பாடல் பத்தும் வல்லார் நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறும் அன்பர் ஈட்டங்கள் தோறும் இருக்க ஆசை மிக வளர வேண்டும்
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ

சௌமித்ரி ரேவதீ சௌ ஸ்ரீ ராமானுஜ வரோ பயன்த்ருமுநீ
இத்யவதாரான் சதுர க்ருதவான் பணீந்திர ஏவம் பரம் —
இளைய பெருமாள் -நம்பி மூத்த பிரான் -இராமானுஜர் -மா முனிகள் -சதுர்த்தி -திருவனந்த ஆழ்வான்- சதுரன் என்றவாறு
லஷ்மீ பதேர் நியோகாத் த்வாதச ஜாதாஹி திவ்ய ஸூரிவரா
அச்ச த்ரியோதசீயம் மூர்த்திர் வரயோகி ரூபிணீ ரேஜே –13வது திருக்கோலம் –
ஜேஜேது நாதமுநிதாஸ் சதிர்தசீமத்ர ஜகதி குருபீடீம்
யோலங்க்ருத்ய விலஷண கீர்த்திர் விரராஜ ச வரவர யோகி –14 குரு ஸ்தானம் நாதமுனிகள் தொடங்கி

அத்விதீயம் –ந த்விதீயம் -அத்விதீயம் -வ்யுத்பத்தி தத் புருஷ சமாசம் -ந வித்யதே த்விதீயம் யஸ்ய -யஸ்மின் -பஹூவ்ரீஹி சமாசம்
ந –தத்சாத்ருச்யம் அபாவச் -ச ததன்யத்வம் ததல்பதா அப்ராசச்த்யம் விரோதச் ச நஞ்சர்த்தாஷ் ஷட் பிரகீர்திதா
-வியாகரண சாஸ்திரம் -உவமை , இல்லாமை -வேற்றுமை -சிறுமை -சிறப்பின்னை ,பகைமை –
இங்கே வேறானது ஒப்பானது மாறானது -கொண்டால் ப்ரஹ்மம் தவிர வேறு ஓன்று இல்லை அர்த்தம் தேறுமோ
அபாவம் இல்லாமை அர்த்தம் கொண்டால் -இரண்டாவது பொருள் இல்லாமை என்றால் விசேஷண பதம் ஆகாதே
பஹூவ்ரீஹிசமாசத்தைக் கொண்டால் -ப்ரஹ்ம அத்விதீயம் -ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் உள்ள இரண்டாவது வஸ்து இல்லை என்றதாகும்
ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருச்யதே –ஒப்பார் மிக்கார் இல்லை என்றதாகும்
பாதோச்ய விஸ்வா பூதானி த்ரிபாதாச்யம்ருதம் தவி –சர்வ பூதங்களையும் ஈஸ்வரனுடைய விபூதியில் ஏக தேசமாகச் சொல்லுகிறது –

யஸ்மாத் ஷரம் அதீதோஹம்–அதோஸ்மி லோகே வேதேச பிரதித புருஷோத்தம –ஸ்ரீ கீதை -15-18–
லோகே வேதேசே -லோகத்திலும் சாஸ்திரத்திலும் -சாதாராண அர்த்தம்
எம்பெருமானார் -வேதார்த்தா வலோக நாத் லோக இதி ச்ம்ருதிரி ஹோச்யதே -சிறுத்து ச்ம்ருதௌ ச இதி அர்த்த –
லோகம் -கரேண வ்யுத்பத்தியினால் சாஸ்திரம்
எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –உலகு சாஸ்திரம் -சாஸ்திர மரியாதை அழிந்து விடும் -தத்தத் கர்ம அனுரூபம் பலவிதரணத-தேசிகன்
ஸ்தோத்ர ரத்னம் -23 -ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே –ஆயிர மடங்கு என்னால் பண்ணப் படாததது யாதொரு நிந்தித்த தர்மம் உண்டு
அதி பாதக மகா பாதகாதாதிகள் அது சாஸ்திரத்திலும் இல்லை –அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்தில் காணலாம் இ றே-
இங்கும் லோக சப்தம் சாஸ்திரம் என்றே கொண்டார்கள் –

அகில புவன ஜன்ம ச்தேம பங்கா தி லீலே –விநித விவித பூத வ்ராத ரஷைக தீஷே –
ஜகத் உத்பவஸ் திதி ப்ராணாச சம்சார விமோசன -ஸ்தோத்ர ரத்னம் -20-
பத்துடை யடிவர்க்கு எளியவன் –வீடாம் தெளிவரு நிலைமைய தொழிவிலன்–
அணைவது அரவணை மேல் -2-8- திருவாய் மொழியில் மோஷ பரதத்வம் தனியாக அருளிச் செய்தார்-

பிரமன் -மரீசி -கஸ்யபர் -விவஸ்வான் -மனுப்ரஜாபதி -இஷ்வாகு -குஷி -விருஷி -பாணர் -அனரண்யர் -ப்ருது -திரிசங்கு
-துந்துமாரன் -மாந்தாதா -ஸூ சந்து -துருவசந்தி ப்ரசேனசித்-பரதர் -அசிதர் -சகரன் -அசமஞ்சன் -திலீபன் -பகீரதர் -ககுத்ச்தர்
-ரகு -பிரவ்ருத்தன் -சங்கணன் -ஸூ தர்சனர் -அக்னி வர்ணர் -சீக்ரகர் -மரு -பிரசுஸ்ருகன் -அம்பரீஷன் -நஹூஷன் -யயாதி
-நாபாகர் -தசரதர் -சக்கரவர்த்தி திருமகன் -லவ குசர்கள் –

நிமி சக்ரவர்த்தி மூல புருஷர் –மிதி -மிதிலா -ஜனகர் -உதாவ ஸூ -நந்தி வர்த்தனர் -ஸூ கேது -தேவராதர் -ப்ருஹத் ரதர் -மஹா வீரர்
-ஸூ த்ருதி-த்ருஷ்ட கேது -ஹர்யச்வர் -மரு -பிரதிந்தகர் -தேவமீடர் -விபுதர் -மஹீத்ரகர் -கீர்த்திராதர் -மஹா ரோமர் -ஸ்வர்ண ரோமர்
-ஹரஸ்வ ரோமர் -ஜனகரும் குசத்வஜனும் திருக் குமாரர்கள் –
சாங்காச்யா நகர அரசன் ஸூ தன்வா போர் புரிய வர அவனை வென்று தம்பிக்கு அந்த அரசை கொடுத்தார் ஜனகர்
சீதா பிராட்டி -பெருமாள் /ஊர்மிளை தேவி ஸ்ரீ இளைய பெருமாளுக்கும் –குசத்வஜரின் பெண் -மாண்டவி தேவி -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
ஸ்ருத கீர்த்தி தேவியை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானுக்கும் -பங்குனி உத்தரம் திருக் கல்யாணம்
இயம் சீதா மம ஸூ தா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா —

குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத் நேன கோபயேத் அப்ரகாச பிரகாசாப்யாம் ஷீயதே சம்பாதயுஷீ
திருக் கோஷ்டியூரில் -தண் தாமரை உடன் பிறந்த தண் தேன் நுகரா மண்டூகம் போலே மக்கள் இருக்க
உடையவரோ -வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது உண்ணும் –
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்ளுவதும் சாற்றி வளர்ப்பதும் செய்து கொண்டு போந்தார்
யஸ்ய பதாம் போருஹ – பத அம்போருஹ-பதாம் போருஹ பஞ்ச ஆசார்யர்கள் -ஸ்ரீ -பராங்குச தாசாய நம-மற்ற பதங்கள் மற்ற ஆச்சார்யர்களைக் காட்டும்
வரவர முனியடி வணங்கும் ஆரியர் திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச -அவிரோபிதவான் ச்ருதேர பார்த்தான் நநு ராமா வரஜஸ் ச ஏஷ பூய
-கண்ணபிரானுக்கும் எம்பெருமானாருக்கும் மூன்று வகைகளில் சாம்யம்

தேவபாடையினில் கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி நான் தமிழ் பாவினால் இது பாடிய பண்பரோ -கம்பர்

செப்புகின்ற பரத்வம் யானே என்னச் செப்புதி வேறு
ஒப்பிலாதாய் தரிசனமும் பேதம் என்றே யுரைத்திடுக
தப்பிலாத யுபாயமதும் பிரபத்தி என்றே சாற்றிடுக
அப்பபுகல்கவிவை யன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
இந்தச் சரீர அவதானம் தன்னில் இசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினன் உனக்கு ஆசாரியனும் பெரிய நம்பி
சிந்தையுள்ளே இவை எல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போ என்றான்
அஹமேவ பரம் தத்வம் தர்சனம் பேத ஏவ ச
மோஷோபாய பிரபத்திஸ் சாத் அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
தேஹாவசா நே முக்திஸ் ஸ்யாத் பூர்ணாசார்யா சமாஸ்ரயா
வார்த்தா ஷட்கமிதம் லேபேகாஞ்சீ பூர்ண முகாத் குரு –உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய் —

சடரி புரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சடஜின் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரங்க ஸூ தாக விராட்
வரவரயோகி நோ வரதராஜ கவிச் ச ததா –
ஸ்ரீ யபதியை நம்மாழ்வார் கவி பாடி அருளியது போலேயும் -அந்த நம் ஆழ்வாரை மதுரகவி ஆழ்வார் கவி பாடியது போலேயும் –
எம்பெருமானாரை திருவரங்கத்து அமுதனார் கவி பாடி அருளியது போலேயும்
மணவாள மா முநிகளைக் கவி பாடியவர்களுள் எறும்பி அப்பா சிறப்புப் பெற்றவர்

ஸ்ரீ ரெங்கம் ருதக விராஹ ரங்கி ப்ருத்ய தச்சிஷ்யோ யதிபதி வைபவ நு பந்தம்
அந்தாதி த்ரமிட கிரா மஹா ப்ரபந்தம் காதா நாம் அம்ருதமுசாம் யுதம் சதேக–கருட வாகன பண்டிதர் பணித்த திவ்ய ஸூ ரி சரிதம் -18-51-

அருளிச் செயல்களில் கண்ணன் பற்றிய ஆறு வார்த்தைகள்
1-வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் மொழி –5-10-2-
2- நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -திருவாய் – 5-10-3-
3-ஆய்ச்சியாகிய வன்னையால் யன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்தப்பன் –6-2-11-
4-தேசம் அறிய வோர் சாரதியாய் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -நாச் திருமொழி -11-10-
6- கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

பரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த-
நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுநர் போல்வார் -ஒரு க்ரமம்
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமான துங்கனை நாடொறும் தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செங்கண் மால் திருக் கோட்டியூர்
-முதலில் செல்வ நம்பியை சொல்லி -அவர்க்கு சேஷ பூதரான –மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வாரைச் சொல்லி –
அவருக்கு சேஷ பூதரான நாத முனிகளையும் சொல்லி பின்னர் அவருக்கு சேஷபூதனரான யமுனைத் துறைவரை சொல்லிய க்ரமம்
இங்கே பரதனை விட அக்ரூரர் -அவரை விட மாருதி –உடன் பிறந்தவரை ஆலிங்கனம் செய்ததைச் சொல்லி
-அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -வெறும் பரிஷ்வங்கம்- சொல்லி
-பின்பு அக்ரூரரைச் சொல்லி –சம்ச்ப்ருச்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -ஆயிரம் மடங்கு சப்தத்தாலே உணரும் படி சொல்லி மேலே
வாதமா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி – ஏஷ சர்வஸ்வ பூதஸ் து பரிஷ்வங்கோ ஹ நூமத –பெருமாள் தாமே சொல்லிக் கொள்ளும் படி
-து சப்தம் திரு மேனியைக் கொடுத்த இது சர்வஸ் து பூதஸ்-அம்ருதாசிக்கு புல்லிட ஒண்ணாதே இ றே -சீரிய பரிஷ்வங்கம் -உத்தர உத்தர உத்கர்ஷம் சொல்லிற்று இத்தால்

கீழை யகத்து தீம்பு -கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை யகத்து தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்துப் புக்கு வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய்த் துடிப்ப தண்டயிர் நீ
கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே –பெருமாள் திருமொழி -6-2-
நானும் உரைத்திலன் நந்தன் பணிந்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் தானுமோர் கன்னியும் கீழையகத்து
தயிர் கடைகின்றான் போலும் -பெரிய திருமொழி -10-7-1—-கீழையகம் -கர்ம யோகத்துக்கு இட்ட சங்கேதம் —
பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல்வளையாள் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது
அங்கே பேசி நின்றேன் -பெரியாழ்வார் -2-9-5-
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் -பெரிய திருமொழி -10-7-2-
ஜ்ஞானாக் நிதக்த கர்மாணம் -ஸ்ரீ கீதை -4-19–ஜ்ஞானாக்நிஸ் சர்வ கர்மாணி பச்ம சாத்குருதே -ஸ்ரீ கீதை 4-37-
மேலையகம் ஞான யோகம் சம்ப்ரதாய சங்கேதம்
வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த அன்பா யுன்னை
தெரிந்து கொண்டேன் -பெரியாழ்வார் -3-1-2–வேற்று உருவம் செய்து வைத்த வகையை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன்
என் செய்கேனோ -பெரிய திருமொழி -10-7-6-
தேஹம் விகாரம் அடைவது பக்தி யோக கார்யம் –வடக்கிலகம் -பக்தி யோகம் சம்ப்ரதாய சங்கேதம்
தென்னகத்து அகம்
சித்திர குத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார் -பெரியாழ்வார் -5-2-2–
தெற்கு பிரஸ்தாபம் பிரபத்தி யோக நிஷ்டர் பெருமை -பரிஹர மது சூதன பிரபன்னான் –

தீமை செய்யும் சிரீதரா –இரக்கமேல் ஒன்றும் இலாதாய் –மானமிலாப் பன்றியாம் தேசுடைய குறும்பு செய்வானோர் மகன் –
-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் –அல்லல் விளைத்த பெருமான் –ஏலாப் பொய்கள் உரைப்பான் -தருமம் அறியாக் குறும்பன்
இவற்றைக் கேட்டதும் –செய்ய தாமரைக் கண்ணனாக ஆகிறான் -ஆயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

புரா ஸூ த்ரைர் வியாச ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் -விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுலதர தாமேத்ய ச புன –
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி ப்ரசௌ-பு நர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர –
ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோஹம்
வியாசர் ப்ரஹ்ம ஸூ தரம் அருளி வேதாந்தார்த்தம் விளக்கினார் -அவரே நம்மாழ்வாராக திருவவதரித்து செவிக்கு இனிய செஞ்சொல் சாதித்து அருளினார்
இந்த உபய வேதாந்தாங்களையும் ஏக சாஸ்த்ரமாக்கி அருள அவரே ஸ்ரீ ராமானுஜராக திருவவதரித்து அருளினார் –

பால் குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே யொரு கோபி பற்றி அடிக்கும் பொழுதில் பதினாலு உலகும் அடி பட்டவே-
சூட்டும் கோவை யாழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –
சௌலப்யத்தை கண்ட உக்தியாகவும் பரத்வத்தை வ்யங்க்யமாகவும் அருளிச் செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
எந்த நிலையிலும் சேதன அசேதன விசிஷ்டன் என்கிற விசிஷ்டாத்வதைத கொள்கையாலும் இங்கனம் அருளிச் செய்கிறார் –

வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய -துன்பமிகு துயர் அகல அயர்வு ஓன்று இல்லா சுகம் வளர
அகம் மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி யரங்கன் திரு முற்றத் தடியார் தங்கள் இன்பமிகு
பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே –
புவோ பூத்யைபூ பூஜாம் பூ ஸூ ராணாம் திவோ குப்தியை ஸ்ரேயசே தேவதா நாம் –ச்ரியை ராஜ்ஞாம் சோளவம்சோத் பவா நாம்
ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமா ஜகாம -புராண ஸ்லோஹம்

சதுர்முகனார் வேள்விதனைச் சதிர்கெடுக்கச் செறிந்தோடும் கதியுடைய வேகவதிக்கு அணையாக வந்துதித்தாய் -என்றும்
அணியாக வேகவதி அலையோடு கொண்டோடி ஆலிக்க அணையாக் கிடந்த களைப்போ  தானோ -என்றும் திரு வெக்கணை யதோத்தகாரி பெருமாள்

நௌமி நாத முனிம் நாம ஜீமுதம் பக்த்யவக்ரஹே -வைராக்ய பகவத் தத்வ ஜ்ஞான பக்த்யபி வர்ஷூகம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
நமோ சிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே-நாதாய முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே –ஸ்தோத்ர ரத்னம்
இதம் அகிலதம கர்சனம் ந தர்சனம் நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் -தேசிகன் –

நமாம்யஹம் திராவிட சாகரம் –என்ற படி திருவாய்மொழி ஒரு கடல் –ஜியாத் பராங்குச பயோதி –
நம்மாழ்வாரும் ஒரு கடல் -எம்பெருமானோ பெரும் புறக் கடல் -ஈடு -அப்ரமேய மஹோததி
பிரமாண ப்ரமாத்ரு பிரமேய வர்க்கம் எல்லாம் கடலாக உள்ளவையே –
சதுர்முக சமாக்க்யாபி சடகோப முநௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சகீளாசா ச வர்ண நாத் —நம் ஆழ்வாருக்கும் நான்கு தசைகள் உண்டே –

ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமிநோ குணா ஸ்வேப்யோ தாசத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயின –
தாசத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலே ஸ்த்ரீத்வமும் ஸ்வாபாவிகம் –

நெறி வாசல் தானேயாய் நின்றான் -உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குனௌ-பட்டர் -உபாய உபய பாவங்கள் குணங்கள் அல்ல ஸ்வரூபம்
-அசாதாராண லஷணம் -சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் என்கண் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் –

ஹே கோபாலகா -பசு பிராயர்களான நம்மையும் -கோ வாக் -ஸ்ருதி ப்ரஹ்ம சூத்ரம்-யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் – இவற்றையும் ரஷித்த ஸ்வாமி
ஹே க்ருபா ஜலந்தி -க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர் -பகவதோஸ்ய தயைக சிந்தோ
ஹே சிந்து கன்யாபதே -ஸ்ரீ யபதே -கைங்கர்ய ஸ்ரீ மிக்க ஸ்வாமி
ஹே கம்சாந்தக -கலியும் கெடும் –
ஹே கஜேந்திர கருணா பாரீண-ராமானுச முனி வேழம் -பெருகு மத வேழம் பாசுரம்
வாத்சல்யம் இரண்டு தடவை கத்யத்தில் அருளியது போலே இங்கும் கிருபா ஜலந்தி கருணா பாரீண
ஹே மாதவ –மது -சித்தரை மாசம் -மதுச் ச மாதவச் ச வாஸந்தி காவ்ருதூ -மதௌ ஜாத-மாதவ -சித்திரத் திங்களில் திருவவதரித்தவர்
ஹே ஜகத் த்ரய குரோ -தஸ்மின் ராமாநுஜார்ய குருரிதி ச பதம் பாதி நான்யத்ர
ஹே புண்டரீகாஷா -கம்பீராம்பஸ் -சமுத்பூத – ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித -புண்டரீக தளா மலாயதே ஷண-
ஹே கோபி ஜன நாத -ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வர் கோபி ஜன ஸ்தாநீயர்கள்
ஹே ராமானுஜ –ராமஸ்ய அனுஜ-இளைய பெருமாளைப் போலே கைங்கர்ய சாம்ராஜ்ய துரந்தரர்-
ராம அனுஜ யஸ்ய -பர பாஷா பிரதிஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவர் ஆக்குபவர்
ராமா அனுஜா யஸ்ய -பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே —

மா முனிகள் திருக் குமாரர் -இராமானுசப் பிள்ளை
இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார்
இதுவோ தான் தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான ஓங்கு புகழுடைய ஊர்
எந்தை எதிராசர் எம்மை எடுத்து அளிக்க வந்த பெரும் பூதூரில் வந்தோமோ
சிந்தை மருளோ தெருளோ மகிழ் மாலை மார்வன் அருளோ இப் பேற்றுக்கு அடி

திரு வெக்காவில் வியாக்யான முத்ரையோடே சேவை ஒரு சம்வத்சரம் ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதால்
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீர் ஏற ஒட்டி சிறந்த அடியேன் ஏதத்தை மாற்று
மணவாள யோகி இனிமை தரும் பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ பூ கமழும் தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ தூதூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனிவன் எந்தை இவர் மூவரிலும் யார்
மாறன் மடலும் வெறி விலக்கும் மா முனி தன் தேறல் கமலைத் திருத் துதியும் ஊழி வரும்
கோபால விம்சதியும் வண்டுவரைக் கோனான கோபாலனுக்கான கூற்று
தீர்ப்பாரை யாமினியில் மாசறு சோதிப் பத்தில் சேர்ப்பன் தென் துவரைச் சீமானை -ஒர்ப்பன் எனச்
சொன்ன மணவாள மா முனியே தொல்லுலகில் இன்னம் ஒரு நூற்றாண்டு இரும் –

கர்த்தா சாஸ்த்ரார் த்வத் த்வாத் -என்கிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமே யாகிலும் இது பராதீனமுமாய்
அல்ப விஷயமுமாய் பிரதிஹதி யோயமுமாய் இருக்கும் –ஆகையால் இவன் தான் உபாய அனுஷ்டானம் பண்ணிற்றும்
வரத தவ கலு பிரசாதாத்ருதே சரணமித வசோபி மே நோதியாத் -என்று சொல்லுகிறபடியே அவன் கடாஷம் அடியாக வருகையாலே
அவனாலே ப்ரேரிதனாய்-அவன் சஹகரியாத போது நீட்ட முடக்க மாட்டாதே அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு
அவன் காட்டின உபாயத்தை அவன் துணை செய்ய அனுஷ்டித்து அவனால் கொடுக்கப் படுகிற பலத்துக்கு சாதகம் போலே அண்ணாந்து இருக்கிற இவனை
ஸ்வாதீன சர்வ விஷய அப்ரதிஹத கர்த்ருத்வம் உடையவன் உடைய துல்யமாக இரண்டாம் சித்த உபாயமாக எண்ணுகை விவேகியான முமுஷுவுக்கு உசிதம் அன்று
என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே என்றும் -இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே என்றும்
சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜ மாதரத்தை அவனோடு ஒக்க உபாயமாக எண்ணுகை உசிதம் அன்று என்று
ஏக சப்தத்துக்கு தாத்பர்யம் என்றார் -தேசிகன் ரஹச்யத்ரய சாரம் -அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநினம் லப்த்வாத் -ஸ்ரீ பாஷ்ய திவ்ய ஸூக்திகள்-

கம்பீராம்பஸ் சமுத்பூத –
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் -சிறிய திருமடல் அழறலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -58-
தண் பெரு நீர்த் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய்மொழி -பாசுரங்களைக் கொண்டே
ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன-மெல்லிய கால் -மெல்லிய நாளத்திலே இருக்கின்ற
ரவிகர விகசித புண்டரீக
அஞ்சுடர வெய்யோன் ——செஞ்சுடர் தாமரைக் கண் செல்வன் -திருவாய் -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி
புண்டரீக தளா மலாய தேஷணே
தள –அமல –ஆய்த -மூன்றையும் ஸ்வாமி சேர்த்து வைத்து அருளிச் செய்தது
தாமரைத் தடம் கண்ணன் –கமலத் தடம் கண்ணன் -கமலத் தடம் பெரும் கண்ணன் —என்பதால் தள -பத பிரயோகம்
நீலத் தடவரை போல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்ணின் கோலங்களே –திருவிருத்தம்
கமலக் கண்கள் அமலங்களாக விழிக்கும்-சேர்த்து புண்டரீக தள அமல –ஈஷண
கரியாவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் –இதில் இருந்து ஆய —புண்டரீக ஆய தேஷண

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –விநத விவித பூத வ்ராக ரஷைக தீஷே
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -6-10-11-
விநத -வணங்கின –விவித -பல வகைப் பட்ட –பூத வ்ராத -பிராணி சமூகங்களை –
தத் ஏவ காரணாத் -அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ச்யதே — சம்பந்தி சம்பந்தி நிச்தரணம் அபி சர்வ சப்தா பிப்ரேதம்
ரஷா ஏக தீஷா-ரஷிப்பதையே முக்கியமான விரதமாகக் கொண்டவன்
எம்பெருமானார் சம்பந்தம் ஒன்றாலே நிர்ப்பரோ நிர்பயோஸ்மி
காக்கும் இயல்வினன் கண்ண பிரான் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -திருவடிகளை சேர்ந்தாரை காத்து அருளுவான் -ஸ்ரீ சடகோபனுக்கும் சேரும்
சுருதி சிரசி விதீப்தே -கங்குலும் பகலும் கண் துயிர் அறியாத ஆழ்வாருக்கும் சேருமே
சுருதி -திருவாய்மொழி -தீபத பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் விளங்குவதால் சுருதி சிரசி விதீப்தே
சுருதி சிரச் கண்ணி நுண் சிறுத் தாம்பு என்றுமாம் அதிலே விளங்கும் ஆழ்வார்
ப்ரஹ்மணி -யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் –
ஸ்ரீ நிவாசே -கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த ஆழ்வார்
பக்தி ரூபா சேமுஷீ பவது -பக்தி ரூபாபன்ன ஞானம் அருளப் பெற்ற
மம சர்வம் வா ஸூ தேவ -வா ஸூ தேவாஸ் சர்வமிதி ச மகாத்மா துர்லப இதி -ஆழ்வாரை ஸ்மரித்தே ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார்

யத்பதாம் போருஹ-ஆறு எழுத்துக்களுக்கு வர்ண க்ரமம்
14- யகார -அகார -தகார பகார -அகார தகார -ஆகார மகார பகார ஓகார ரேப உகார ஹகார அகார – நம்மாழ்வார் /ஆளவந்தார் /பஞ்ச ஆசார்யர்கள்
யஸ்ய பதாம் போருஹ-யத்பதாம் போருஹ -ஆளவந்தார் திருமேனியில் உள்ள நம்மாழ்வார் –திருப் பாதாரவிந்தங்கள் சென்னிக்கு அணியாக பரிஹரித்த –
பத -சிஷ்யர்கள் அம்போருஹ-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -போலே -மண் விண் முழுதும் அளந்த ஓண் தாமரை
பதாம்போருஹ-ஸ்ரீ மத பராங்குச தாசர் பெரிய நம்பியை முதலிலே சொல்லிற்று –

ஆண் பிள்ளைகள் பர்த்தாக்களாய் சந்நிஹிதராய் இருக்க தூரச்தனான கிருஷ்ணன் பேரை சொல்லுவான் என்
எம்பார் -முன்பே வசிட்டன் -மஹத் யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி –
பட்டர் -நாயகி கையைப் பிடித்து நாயகி செல்லும் கால் இடறினால் அம்மே-என்னக் கடவது காண்-என்று அருளிச் செய்தார்
த்ரௌபதி நூல் தங்கின படியும் மற்றையார் நூல் இழந்த படியும் -இவள் நூலுக்கு வாசி என் என்னில் –கோவிந்தா என்ற நாக்கு வேரூன்றின கழுத்துக்கு
ஓர் குண -நூல் -ஸூ த்ரம் -ஹானி இன்றிக்கே பிரதிஜ்ஞையாலே குழல் விரித்து இருக்கிற இவளை குழல் முடிப்பித்தவாறே அவர்கள் குழல் விரித்தார்கள்
நூல் வாசி இவளுக்கு உண்டாய்த்து கால் வாசி இருந்த படியாலே என்றபடி –அவன் காலைப் பற்றிய வாறே இவள் நூல் கழுத்திலே தங்கியது என்றபடி
இந்த்ரன் சிறுவன் தேர் முன்பு ரஷித்தான் கண்ணன் -பர்த்தாக்களும் பிதாவும் ரஷகர்கள் அல்ல என்கிறார்
சர்வ ரஷகன் அகார வாச்யன் -திருவல்லிக் கேணியிலே கண்டேன் என்கிறார்
ஆக இவள் நூலுக்கு வாசி கால் வாசியே -அவன் காலைப் பற்றி
நூல் -சாஸ்திரம் அதற்கு வாசி அவன் கால் வாசியே சரணாகதியே -திருவல்லிக் கேணியான் பிரமேய பூதன் -ஆழ்வார் பிரமாத -அருளிச் செயல் பிரமாணம்
இம் மூன்றுக்கும் பல்லாண்டு பாடுவதே ஸ்ரீ வைஷ்ணவ க்ருத்யம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: