ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -7–

பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது –திண் கழலாக இருக்கும் –எம்பெருமான் கை விட்டாலும் விடாது
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே
திருவாய் மொழி -9-7-9–தாம் அகல வேண்டில் தம்மை வைத்து அன்றோ போவது –இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று அறிய மாட்டாரோ
-தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறியாரோ -தம்மைப் பிறந்த தசைக்கு உதவுகைக்காக அன்றோ திரு மேனி உள்ளது –
திரு மேனியையும் கொண்டு அகலுகை தகாது என்று சொல்லுங்கோள் என்று சில புள்ளினங்களை இரக்கிறாள்
அலங்கார சாஸ்திரம் -தாத்பர்யத்தில் நோக்கு -என் நெஞ்சினாரும் ஒழிந்தார் போலே –
பொன்றச் சகடம் உதைத்தான் -கங்கை பிரவாஹம் வர உதவினான் -உத்தரை தன சிறுவனையும் உய்யக் கொண்டான்
தூது செல்லத் துணிந்தான் -என்று இது காறும் ஸ்ரீ பாதுகா தேவி பெருமாளைப் பிரியாமல் இருந்தாள்-
-ஸ்ரீ பரத ஆழ்வானை நிர் தாஷிண்யமாக வெறுத்து பிரிந்ததால் திருவடி உறவை வெட்டிப் போனாளாம் -தேசிகன்
மோஷ ப்ரதத்வம் அவனதே இருந்தாலும் கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் -என்று திருவாய் மொழிக்கு
ஏறிட்டு சொல்வதும் உண்டே -இதே போலே தான் திரௌபதிக்கு வஸ்த்ரம் வளரச் செய்தது திரு நாம சங்கீர்த்தனமே -எம்பெருமான் அன்று என்று சொல்வதும்

சங்கு சக்ர கதா பாணே -த்வாரக நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –
ரஷிக்கை யாவது விரோதியைப் போக்குகையும் அபேஷிதங்களைக் கொடுக்கையும் -இவளுக்கு வஸ்த்ர வர்த்தகமும் -சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்-
இதில் வஸ்த்ர வர்த்தகம் முதலில் நடந்தது சத்ரு சம்ஹாரம் –துர் வர்க்கங்கள் திரள வேண்டும் -இவன் பாண்டிய தூதன் பார்த்த சாரதி பெயர் பெற வேண்டுமே
அர்ஜுனன் தோஷங்களை எல்லாம் ஷமித்தது இவள் பக்கலில் பஷபாதமே தான் காரணம்
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
அப்பன் -சரணா கதையான திரௌபதிக்கு செய்த உபகாரம் தமக்குச் செய்ததாக நினைத்து அப்பன் -என்கிறார் ஆஸ்ரிதரிலே ஒருவருக்குச் செய்ததும்
தமக்குச் செய்ததாக நினைத்து இராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாகக் கடவது இ றே
சங்கு சக்ர கதா பாணிம் –
பின்பு இவளுக்காக இ றே -கலங்கச் சங்கம் வாய் வைத்ததும் -ஆழி கொண்டு அன்று இரவி மறைத்ததும்
-கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவித்ததும்

பிறந்தவாறும் -ஆறு மாசம் மோஹிப்பர் -மேலே பிறப்பிலி என்னவும் சொல்வர் –
மீனாய் ஆமையுமாய் –கற்கியாம் -என்று அருளிச் செய்த உடனே இன்னம் கார் வண்ணனே -என்பர்
வர்ஷூக வளாஹகம் போலே இருக்கிறான் இத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறான் அல்லன் -வண்ணன் -ஸ்வ பாவம்

கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான் -கழியின் பெருமையை கடலுக்கு சொல்லத் தொடங்கினான் –
வற் கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நல் கலையின் மதியென்ன நகை இழந்த முகத்தானை கற்கன்னியக் கனிகின்ற
துயரானை கண்ணுற்றான் விற்கையின்றிடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் —ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா
வால்மீகி -லஷ்மணன் மஹாத்மா -பரதன் அப்ரமேயன் –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் –வைதேஹி –ஐயர் வயிற்றில் பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இ றே –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே -இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு
இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே -தனுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக
எழுதிக் கொடுத்த ஐயர் இற்றை நாளை ஆகாரம் கண்டால் என்படுகிறாரோ -பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சர்வலோகா கர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதே என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள் –

மனு ஸ்ம்ருதி -8-92-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ
ஹ்ருதி ஸ்தித தேனஸேத் அவிவாதஸ் தே மாம் கங்காம் மா குரூன் கம –
சம்பந்தம் உணர்ந்தால் ஷேத்ரம் தீர்த்த வாசம் குருக்களை தேடி போக வேண்டாம்
த்வத் தாஸ்யம் அஸ்ய -சேஷ பூதன் -உன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே-மத் பக்த ஜன வாத்சல்யம் -அடியார் அடியார் –அடியோங்களே –

சடரிபு முனி ஸூ க்தி ஸ்ரீ மதாம் நாயவாசாம் அக்ருதகவநா நாஞ்ச அதி கல்யாண கோஷை -தென் மொழி வேத ஒலியும் வட மொழி வேத ஒலியும்
திருக் குடந்தை திரு மா மணி மண்டபத்திலே தான் அனுபவிக்க உரியதோ என்னில் -அன்று -இங்கு ஆராவமுதனை அனுபவித்து அங்கு திரு நாடு ஏறச் சென்றும் -ஆராவமுதம் அங்கு எய்தி -என்கிறபடி ஆராவமுதனின் அனுபவம் வாய்க்கும் போதும் இரு மொழி வேதங்களின் அனுபவமே-
ஆராவமுதமங்கு எய்தி -திரு நறையூர் இங்கே திருவாய்ப்பாடி இங்கேயாய் இருக்க ஆராவமுதம் அங்கே யாவது என்-என்கை-

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்
வணசமேவு முனிவனுக்கு மைந்தனானது இல்லையோ
செங்கையால் இரந்தவன்கபாலம் ஆர் அகற்றினார்
செய்ய தாளின் மலர் அரன் சிரத்திலானது இல்லையோ
வெங்கண் வேழம் மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ
வீறு வாணன் அமரில் அன்று விறல் அழித்தது இல்லையோ
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ
ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –

காசும் பிறப்பும் —கல கலப்ப கை பேர்த்து – -ஆபரணத் த்வனி சொல்ல வில்லை-
கீசு கீசு என்ற ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவமும் – தயிர் அரவம் —
உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ் ப்ருசத் த்வனி தத் நச்ச நிர்மந்தன சப்த
மிச்ரிதோ நிரச்யதே யேன திசாம் அமங்களம்-ஸ்ரீ மத் பாகவதம் -ஆபரண த்வனிகளையும் சொல்லும்
வ்யாக்யானத்திலும் கண்ணன் திருக்கண் அழகில் ஈடுபட்டு பாடுவதாக சொல்வ
காசமும் பிறப்பும் கல கலப்ப கேட்டிலையா -வாச நறும் குழல் ஆய்ச்சியர் அரவம் கேட்டிலையோ –
தயிர் அரவம் இல்லாமல் தயிர் அரவவும் -என்று திருத்தி சிலர் சொல்வர் பேச்சரவம் சொல்லாமல் பேச்சரவும் -என்று உம்மைத் தொகை வைத்து சொல்லுவர்
யோக விபாகாத் இஷ்ட சித்தி
பையுடை நாகப் பகைக் கொடி யானுக்கு பல்லாண்டு கூறுவனே -பையுடை நாகத்தானுக்கு பல்லாண்டு -என்றும் சொல்லலாமோ
காவலில் புலனை வைத்து -இந்த்ரியங்களை காவல் இல்லாத படி வைத்து

தஞ்சமாகிய தந்தை –
1- தந்தை -ஸ பித்ரா ஸ பரித்யக்த -ஆபத் காலங்களில் கை விடும் தந்தை
2-ஆகிய தந்தை -சம்வார பந்த ஸ்திதி மோஷ ஹேது
3- தஞ்சமாகிய தந்தை -ஆசார்யன்
ஸ்ரீ மன் நாராயணன் நம் போன்ற சேதனர்களை பரம கிருபையினாலே ரஷித்து அருளும் பொருட்டுத் திருப் பாற் கடலின் நின்றும்
வாஸூ தேவருடைய புதல்வராய் வட மதுரையிலே அவதரித்து அருளினான் -ஏழு வேற்றுமைகள்

காதல் அன்பு வேட்கை அவா -அவஸ்தா பேதம்
காதல் -கண்டதும் வந்த ஆசை -சங்கம்
சங்காத் சந்ஜாயதே காம -அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத ஆசை -அன்பு -வேட்கை அனுராகம்

முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாகவும் வெளியிட்ட சாஸ்திர தாத்பர்யங்கள் –சகல சாஸ்திர தாத்பர்யம் ரகஸ்ய த்ரயம்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே

ஸூக்ரீவம் சரணம் கத -என்றத்தை நடத்தப் பார்த்தார் மஹா ராஜர்
ராகவம் சரணம் கத என்றத்தை நடத்தப் பார்த்தார் பெருமாள் –பட்டர் -இத்தை அடி ஒற்றியே
ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம் ஈதலே கடப்பாடு எனபது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால் இனி வேறு என்னக்  கடவது என் கதிரோன் மைந்தா கோதிலாதவனை நீயே என் வில் கொணர்தி என்றான் -கம்பர்

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் -பெரிய திருமொழி -3-8-8- துளைகள் நிரந்த புல்லாங்குழல் –
குழல் சொல்லால் கூறப்படும் குழலை உடைய ஆய்ச்சியர் என்றபடி –

பத்மே தவன் நயனே ஸ்மராமி சததம் பாவோ பவத் குந்தலே
நீலே முஹ்யதி கிம் கரோமி மஹிதை க்ரீ தோஸ்மி தே விப்ரமை
இதயத் ஸ்வப் நவசோ நிசம்ய ஸ்ரூஷோ நிர்பர்த்சிதோ ராதயா
கிருஷ்ணஸ் தத் பரமேவ தத் வ்யபதிசன் க்ரீடாவிட பாது வ —

பத்மா நீலா மஹீ--ஸ்ரீ தேவி பூமா தேவி நீளா தேவி -சம்போதனமாக ராதையையே அருளிச் செய்த படி
பத்மே தவன் நயனே ஸ்மராமி -உன் கண்களை தாமரைகளாகவே எண்ணுகிறேன்
சததம் பாவோ பவத் குந்தலே நீலே முஹ்யதி -கரு நிறத்தான உனது கூந்தலிலேயே என் சிந்தனை
கிம் கரோமி மஹிதை க்ரீ தோஸ்மி தே விப்ரமை-உனது விலாசங்களால் நான் விலைக்கு வாங்கப் பட்டேன் -என்றபடி

உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீ கரிக்கக் கண்டு இருக்கக் கடவ
பரதந்த்ரனான இச் சேதனனானவன்-தான் பலியாய் தன சவீ காரத்தால் ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்குமாகில் அவன் நினைவு
கூடாதாகில் இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாதனம் ஆகாது என்றபடி –ஸ்வாமியே ஸ்வ தந்த்ரனான அவன்
ஸ்வ மமாய் பரதந்த்ரனனாய் இருக்கிற இவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் பாதகமும் ப்ரதிபந்தகம் ஆகமாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அனுபாயத்வமும் பரகத சவீ கார உபாயத்வமும் காட்டப் பட்டது
தத் வியோகம சஹமாக அஹமேவ தம் வ்ருணே –தானே வரிப்பதையும்
மத ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாகம் அஹமேவ ததாமீத்யர்த்த -ஸ்வ கத ச்வீகார பற்றாசை நன்றாக கழித்து
ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளையே மா முனிகள் தமிழில் அருளிச் செய்தவை –

அநந்த குண சாகரம் -அபரிமித குண உதார குண சாகரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்தம் -எம்பெருமான் குணங்களுக்கு கடலாகவும்
–குணங்களை கடலாகவும் மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தையேன் -பெரிய திருவந்தாதி -69-
பூண்ட நீள் சீர்க்கடலை யுட்கொண்டு –ஆகாத பகவத் பக்தி சிந்தவே –பக்திம் வா சிந்துன் வேத ரூபயித்வா பஹூ வ்ரீஹி –
அகாதகமான பகவத் பக்தி சாகரத்தை உடையவர் -காதல் கடல் புரைய விளைவித்த -5-3-4–பக்தியைக் கடலாக அருளிச் செய்தார் இறே

இலவசம்-இலைவசம் -வெற்றிலையில் வைத்து இனாமாகக் கொடுப்பது -கையடைக்காயும் -அடைக்காய் திருத்தி வைத்து நான் வைத்தேன் –
மறுதாரை -மடிசார் –

எம் பார் -எம்முடைய பார் –யாம் தங்கும் இடம் -மத விசரமஸ்தலீ -ராமானுஜ பதச்சாயை –என்பதால் -பட்டர் தனியன் சாத்தி அருளி உள்ளார்

முதல் நாள் காலை திருப்பல்லாண்டு தொடக்கம் கேட்டு அருள்வதாக வாகன ஆரோஹணம் தவிர்த்து -தேவ பெருமாள்-
சேவை சாதிக்கும் க்ரமம்
மாலை –என் தொண்டை வாய் சிங்கம் வா –சிம்ஹ வாஹனம்
இரண்டாம் நாள் காலை -ஹம்ச -வாஹனம் -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்-மறை யாங்கு என உரைத்த மாலை -பின்னுலகினில் பேர் இருள் நீங்க அன்னமதானானே
அன்று மாலை -சூர்ய பிரபை -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாய்–இன்னும் உச்சி கொண்டதாலோ –சூர்ய உதய பிரஸ்தாபம் உண்டே
மூன்றாம் நாள் காலை -மூன்றாம் திருவந்தாதி –பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே —கருட வாகன சேவை
அன்று இரவு -பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் -அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி –சீராரும் திறல் அனுமன்
தெரிந்து உரைத்த அடையாளம் –சிறிய திருவடி வாகன சேவை –
நான்காம் நாள் காலை -நான்முகன் திருவந்தாதி -ஆங்காரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணையான்-என்றும் -விரித்து உரைத்த வென் நாகத்துன்னை –வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் —சேஷ வாகன பரமபத நாதன் திருக்கோலம்
அன்று இரவு -பெரியாழ்வார் நான்காம் பத்து -நளிர் மா மதியைச் செஞ்சுடர் நாவளைக்கும் -சந்த்ரனுடைய பிரஸ்தாபம் சந்திர பிரபை வாகன சேவை
ஐந்தாம் நாள் காலை -திருவிருத்தம் -சேவை –நாச்சியார் தன்மையில் அருளிச் செய்தலால் –நாச்சியார் திருக் கோலம் அன்று இரவில்
-திரு விருத்தம் –நாச்சியார் திரு விருத்தம் என்றபடி -அன்று இரவில் யாளி வாகன சேவை -யாளி பற்றிய பாசுரங்கள்
-நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் –செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் —
இரவில் -கண்டம் என்னும் கடி நகர் பாசுரங்கள் திருமால் இரும் சோலை சென்னி யோங்கு திருவேங்கடமுடையான் பாசுரங்கள் சேவை –
இதனால் யாளி வாகன சேவை -அன்று இரவு
ஆறாம் நாள் காலை -திருச் சந்த விருத்தம் -ஆயனாய மாயனே -ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -ஆதியாகி ஆயனாய –
என்பதால் கோபால கிருஷ்ணன் திருக்கோலம்
அன்று இரவு யானை வாஹனம் -நாச்சார் திருமொழி -மங்கல வீதி வலம் செய்து –அங்கு ஆனை மேல் -குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
சூர்ணாபிஷேகம் -அன்று காலை வைதிகச் சடங்கு
ஏழாம் நாள் திருத் தேர் -திரு வெழு கூற்று இருக்கை -திருத் தேர் நிலைக்கு வந்த பின்பு சன்னதிக்கு எழுந்து அருளும் பொழுது திருமடல்
-நாச்சியார் திருமொழி சேஷம் சேவை -கற்பூரம் நாறுமோ -சேவித்து முடிப்பார்கள்
அதில் செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் –-அன்று இரவு திருப் பாய்ந்தாடித் திரு மஞ்சனம் -அன்று இரவு
பெரிய திருமொழி தொடக்கம் ஆடல் மா வலவன் கலிகன்றிக்காக அன்று குதிரை வாஹனம் –ஒன்பதாம் நாள் காலை மட்டையடி உத்சவம்
மறுநாள் திருவாய்மொழி கேட்டருள பன்னிரண்டு திருவாராதனங்கள் -இரவு ராமானுச நூற்றந்தாதி
தினப்படியே திவ்ய பிரபந்தம் சேவை சாதித்து அருளுவான் தேவப் பெருமாள்

பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷதே –சேறு பூசப் பெற்ற பரதன் -சடை புனைந்து ஸ்நானம் செய்யாததால் –
-மண் தரையிலே சயநிப்பவன் -கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல் கண்ண நீர் கைகளால் இறைப்பதால் தான்
கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்

தேவராய்த் தேவர்க்கும் தெரியாத ஒளி உருவாய் மூவராய் மூவர்க்குள் முதல்வனாய் நின்றோய் நீ
போற்றுவார் போற்றுவது உன் புகழ்ப் பொருளே யாதலினால் வேற்று வாசகம் அடியேன் விளம்புமாறு அறியேனால்
பணித்தடங்கா திமையவர்க்கும் பல பல நல முனிவர்க்கும் பணித்தடங்கா புகழ் அடியேன் பணித்தடம் கற்பாலதோ
யாம் கடவும் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பாமோ
கருதரிய யுயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் பெருமைக்கு அளவாகுமோ
அனைத்துலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்து துடைப்பது நீ நினைத்த விளையாட்டு என்றால் நின் பெருமைக்கு அளவாகுமோ —

அயோதியை மதுரை மாயை கச்சி காஞ்சி உஜ்ஜயினி த்வாராகை –

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை யறு சமயம் போனது பொன்றி யிறந்த்து வெங்கலி –பூம் கமலத் தேனதி பாய் வயல்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் இராமானுசன் இத்தலத்துதித்தே
வயலில் -ஜீவனுக்கு நெல் -ஜீவனத்துக்கு -வேதாந்தம் உஜ்ஜீவனத்துக்கு -எம்பெருமானார் நியமித்த சிம்ஹாசனாதிபதிகள் வயல் ஸ்தானம்
கோயிலைச் சுற்றி வாழ்பவர்கள் -தாமரைப் பூக்கள் மலிந்து இருப்பது போலே
-தஹரம் விபாப்மம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்யஸமஸ்தம்-என்றும் போதில் கமல வன்னெஞ்சம் -என்றும்
பக்தா நாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -என்றும்
சொல்லப்படும் ஹிருதய புண்டரீகம் மலர்ந்து திவ்யார்த்தங்கள் என்னும் தேன் அமுத வெள்ளம் பெருகா நிற்கும்
நம் போன்ற சிஷ்யர்கள் -கமலத்தேன் வெள்ளத்தை வண்டுகள் பருகிக் களிக்கும்-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –
-திவ்யார்த்த அமிருத பிரவாஹத்தை ஆச்வாதனம் பண்ணி ஆனந்திக்க குறை இல்லை –

ஸ்ரிய ஸ்ரியம் பக்த ஜநகை ஜீவிதம் – சமர்த்தம் -ஸ்தோத்ர ரத்னம் -45-அளவுடையரான நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் தன்னை
நித்ய சம்சாரிகள் அனுபவிக்கும் இடத்தில் ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -என்கிறபடியே சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கும்
சாமர்த்தியத்தை உடைய உன்னை -இவையும் அவையும் -1-9- திருவாய் மொழியில் காட்டி அருளிய குண விசேஷம்
விபு மனு புபஜே சாத்ம்ய போக ப்ரதா நாத் –
ஜான வைராக்ய ராசி -ஜான ராசி வைராக்ய ராசி -சமூஹங்கள்
பக்த ஜநகை ஜீவிதம் -ஆதமைக மே மதம் போலே இவனுக்கு ஜீவிதம் பக்தர்கள் பக்தர்களுக்கு ஜீவிதம் அவன் என்றுமாம்
தேசிகன் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் படியே அருளிச் செய்கிறார்

வசீ வதந்யோ குணவான் –12 திருக் கல்யாண குணங்களையும் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த படியே தேசிகனும் அருளிச் செய்கிறார்
அவ போதிதவான் இமாம் யதா -54– இமாம் -இந்த -அர்த்தம் சாதாரணமாம் – சேஷத்வத்திலே இனிமையாலே கொண்டாடுகிறார் –

இதி பகவத் ராமானுஜ விரசிதே சாரீரக மீமாம்ச பாஷ்யே சதுர்த்தஸ் யாத்யா யாஸ்ய சதுர்த்த பாத சமாப்தச் சாத்யாய சாஸ்த்ரஞ்ச பரி சமாப்தம் –ஸ்ரீ பாஷ்யம் –
ஸ்வாமி தம் பேரை சொல்லிக் கொள்ள மாட்டாரே -கூரத் ஆழ்வான்- ஏறி அருளப் பண்ணினது அன்றோ –
இதி சர்வம் சமஞ்சசம் -மட்டும் அனுசந்திக்காமல் கூரத் ஆழ்வான் பணித்தவை என்று முழுவதையுமே அனுசந்திக்க வேண்டும்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் -ஆசார்ய ஹிருதயம் -சிலர் வெற்பில் -என்ற பாட பேதம் கொள்வர் –தண்ணார் வேங்கட
விண்ணோர் வெற்பனே -என்ற பாசுரத்தை மனசில் கொண்டு –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
இரண்டு பாசுரங்களையும் மா முனிகள் காட்டி அருளியதால் வைப்பு பாடமே சேரும்
உபய விபூதிக்கும் நிதியான திருமலையிலே -என்று மூலத்தின் மீது அர்த்தமும் விளங்க அருளிச் செய்துள்ளார்
வைப்பு உயிரான வாசகம்
ஆழ்வார் 28 திவ்ய தேசம் மங்களா சாசனங்கள் –முதல் நான்கு கோயில் திருமலை திருக் குருகூர் திருக் குறுங்குடி பர வ்யூஹ விபவ அந்தர்யாமி
குணங்கள் காட்டுவதாகவும் மற்ற 24 திவ்ய தேசங்களும் சாதாரண குணங்கள் விளக்குவதாகவும் மூல காரர் திரு உள்ளம்
கோயில் -வ்யூஹ குணம் -/ திருமலை -அந்தர்யாமி குணம் / திருக் குருகூர் -பர வாஸூ தேவம் -/-திருக் குறுங்குடி விபவ குணம் –

கோயில் –இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி -திருக்கண்கள் வளர்கின்ற -என்பதால் வ்யூஹ ஸ்தாநீத்வம்-
வ்யூஹ குணமான சௌஹார்த்தம்திருக் குருகூர் -பரத்வ ஸ்தாநீயம்-ஆதிப்பிரானவன் மேவி யுறை கோயில் –பரே சப்தம் பொலியும்
திருக் குறுங்குடி -விபவ ஸ்தாநீயம் -வைஷ்ணவ வாமனத்தில் விபவ குணமான லாவண்யம் பூர்ணம் –
திருமலைஅந்தர்யாமி ஸ்தாநீயம் -நிதி -வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு –தோஷ பூயிஷ்டமான இடங்களில் எல்லாம் உள்ளிருந்து
கிடப்பது தோஷ போக்யத்வ கார்யம் –நிகரில் புகழாய வாத்சல்யம் ஜ்வலிக்கும் -இதனாலே வைப்பு என்ற சொல் உயிரானது-

ச்ரம மனம் சூழும் சுகுமார்யா பிரகாசம் ஆய்ச் சேரியிலே –173-பாடம் அச்சேரியிலே தப்பாக
ஆழ்வாருடைய திருத் தாயாரான உடைய நங்கையார்க்கு பிறந்தகம் ஆகையாலே ஆய்ச்சேரியான திரு வண் பரிசாரத்திலே -மா முனிகள்
துலை வில்லி மங்கலம்-அவ் ஊரிலே த்விகுணம்-அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே –
அங்குதான் அவ் ஊர்-அச்சேரி – பொருந்தும் இங்கு ஆய்ச்சேரி சரியான பாடம்

156- சூர்ணிகை –தம் பிழையும்நம் பிழையும் என்று தப்பாக பாடம் -ஆழ்வார் தூது விடும் பொழுது தம் பிழையை சொல்லிக் கொள்வதால் –
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு –

ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை –-இன்னார் என்று அறியேன் அன்னே–இவரார் கொல் –
அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இ றே விஷய ஸ்வ பாவம் –
முகம் பார்த்து நீர் யார் கொல் கேட்க முடியாமல் –அட்ட புயகரத்தேன் -அஷ்ட புஜ ஷேத்ரத்துக்கு அதிபதி -ஷேத்ரத்தில் கிடப்பான் ஒருவன் –

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ் யதே –அஸ்து தே -முதல் வாக்யமே போதுமே –மேலே தயைவ சம்பத்ஸ் யதே -என்றும் சர்வம் சம்பத்ஸ் யதே –
பேறு உமக்கு மாத்ரம் அன்று -உம்மோடு அவ்யஹித சம்பந்தம் பெற்ற சாஷாத் சிஷ்யர்களுக்கு மாத்ரம் அன்று -சம்பந்தி சம்பந்திகள் என்னும் படியான பரம்பரா சம்பந்திகளுக்குமாகக் கடவது -சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி —
இதையே மா முனிகள் -காலத்ரயேபி —ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்சிரிதா நாம் –
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் —பிடித்தார் பிடித்தார் பிடித்து இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
தேசிகன் -பாதுகா சஹஸ்ரத்தில் -திராவிட உபநிஷத் அந்நிவேச சூன்யான் அபி லஷ்மீ ரமணாய ரோசயிஷ்யன் –
தருவமாவிச திஸ்ம பாதுகாத்மா சடகோபஸ் ஸ்வ யமேவ மா நநீய
அனைவருக்கும் திருவாய்மொழியில் அந்வயம் ஆவதற்கே சடாரி யாகி கைக்கொண்டு அருளுகிறான் -என்கிறார்
விதீர்ணம் வரம் ச்ருத்வா -அரங்கன் லஷ்மண முனிக்கு கொடுத்த அனுக்ரஹம்
பத்யுஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரனௌ தத் பாத கோடீரயோ
சம்பந்தேன சமித்யமா நவிபாவன் தன்யான் ததான்யான் குரூன்
கோடீரம் திருமுடி சம்பந்தம் -தத் பாத கோடீரேயோ –திருவடி திருமுடி சம்பந்தத்தால் -ச்ருத்வா -கர்ண பரம்பரையாக வந்த விஷயம்
துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -கிடாம்பி யாச்சான் -முன்னோர்களே ஸ்ரீ ராமானுஜர்க்கு அரங்கன் கொடுத்த வரம் இப்படிப் பட்டது
என்பதை சொல்லிய பின்பு நாம் ஆராய வேண்டுமோ
சம்பந்த சம்பந்திகள் அளவும் பாடும் படி இருகரையும் அழிக்கும் படி கிருபா பிரவாகம் கொண்டவன் –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சாராதி லங்கனம் பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்னர் ஆவுதோம் -முதலியாண்டான் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச தயை கதாம் தோர் யோ சௌ புரா சமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் ப்ராச்யம் பிரகாசயது ந பரமம் ரஹச்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ரசார –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ்வுயிர்க்கும் –சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்
-வேறு வக்தவ்யம் இல்லாதபடி சம்ஷேபண ஆத்மா உஜ்ஜீவன உபாயத்தை எல்லார்க்கும் சொன்னோம் –
இதுக்கு அதிகாரி நியமமும் கால நியமமும் தேச நியமமும் இல்லை இவ் உபாயம் தானும் துஷ்கரம் என்று குறைவு பாடவும் வேண்டா -ஸ்ம்ருதி மாத்ரமே அமையும் –
அபராதங்களை செய்து கொண்டே போந்தவன் ஒரு நாளிலே கை சலித்து கை ஒழிந்து நின்றான் ஆகில் அந்த விராமம் தானே பற்றாசாக ஷமித்து அருளுகிறபடி
-வ்யாஜ மாத்திர சாபேஷனுக்கு இவ்வளவு போதும் அன்றோ —ஏவம் சதா சகல ஜன்ம ஸூ சாபராதம் ஷாம்யஸ்யஹோ திதபிசந்தி விராமமாத்ராத் —
மானஸ அனுஷ்டானமே வேண்டுவது -உபாய ச்வீகாரம் சொல்லுகிறது

விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷே —
வி நத ரஷா பதாப்யாம் த்ருதீய சதுர்த்தாத்யா யார்த்தௌ சம்ஷிப்தௌ -ஏவம் ஜகத் காரணத்வ மோஷ பிரதத்வே கதிதே
-ஏதே ஹி ராஜ்ஞஸ் சத்ரசாமரவத் ப்ரஹ்மண அசாதாரண சிஹ்னம் -சுருதி பிரகாசர் ஸ்ரீ ஸூ க்திகள்
சத்திர சாமராதிகள் போலே லஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ மோஷ ப்ரதத்வ சர்வ ஆதாரத்வ சர்வ நியந்த்ருத்வ சர்வ சேஷித்வ
சர்வ சரீரத்வ சர்வ சப்த வாச்யத்வ சர்வ வேத வேத்யத்ய சர்வ லோக சரண்யத்வ சர்வ முமுஷூ பாச்யத்வ சர்வ பல ப்ரதத்வ சர்வ வ்யாப்த
ஜ்ஞானந்த ஸ்வரூபத்வ லஷ்மீ சஹாயத்வாதிகள் -பிரதி நியதங்கள் –

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய்நின்று தூங்குகின்றேன்
தாமஸ புருஷர்கள் புகும் தேசம் அன்று –சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள் -பெரியாழ்வார் வயிற்றில் பிறந்து
பகவத் அர்ஹமான வஸ்து இங்கனே இழந்து இருந்து க்லேசப்படுவதே –

மென் மலர் மேல் களியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் -பெரியாழ்வார் திருமொழி -6-7-4-
அலர் தூற்றுதல் -புஷ்பம் தூற்றுதல் பலி தூற்றுதல் –வண்டு கள் உண்ண தென்றல் அலர் தூற்ற முல்லை முறுவலிக்க -என்றபடி –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆசார்யன் திரு நாமத்தைப் பாடி -ஆசார்யனே ஓங்கி உலகளந்த உத்தமன்
எம்பெருமானிலும் மேம்பட்டு -உலகங்களை எல்லாம் ச்வாதீனப் படுத்திக் கொண்ட சிறந்தவர்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து —அவஜா நந்தி மாம் மூடா –மாமேகம் சரணம் வ்ரஜ என்னாமல்
-திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –உபதேஷ்யந்தி –தத்வ தர்சன –
உலகளந்த -இரப்பாளன்-மனுஷ்ய சஜாதீயர் ஆசார்யர் -ரஹச்ய த்ரயம் தத்வத்ரயம் சாதக த்ரயம் தத்வ ஹித புருஷார்த்தம் -மூன்றை பற்றியே –
இரந்து -தனது ஸ்ரீ பாத தீர்த்தத்தால் உஜ்ஜீவிப்பார் ஆசார்யர்
ததஸ் ஸ்வ சரணாம் போஜ ஸ்பர்ச சௌ ரபை பாவநை ரர்த்திதஸ் தீர்த்தைர் பாவ யந்தம் பஜாமி தம் -ஸ்ரீ வர வர முனி தினசர்யை
உத்தமன் -அதம குரு-ஜைன புத்த –மத்யம -கர்ம காண்டம் உபதேசிக்கும் குரு -அனுவ்ருத்தி பிரசன்னாசார்யர் போலே அன்றிக்கே
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் -இத்யாதி நிர்ஹேதுகமாக தனது பேறாக-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆசார்யர்
நம்பாவை -கையில் கனியன்ன கண்ணனைக் காட்டித்
தரினும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –மதுரகவி நிஷ்டை
நீராடினால் -காலை நல் ஞானத்துறை படிந்து யாடி
தீங்கின்றி நாடெல்லாம் -தேஹாத்மா பிரமிப்பு -ஸ்வ ஸ்வா தந்திர நினைவு -அன்யா சேஷத்வம் கொண்டு –ஆபாச பந்துத்வ பிரியம் –
யத் அஷ்டாஷரம் சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்ப்பிஷா தஸ் கரா
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ் உலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார் –
திங்கள் மும்மாரி பெய்து –வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை-நீதி நன்னெறி மன்னவர்க்கோர் மழை -மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை –
ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளே மழை -செவியிலே திருமந்த்ரார்த்தம் –கிரந்த காலஷேபம் சாதிக்கை -சிந்தனை செய்விக்கை –
திங்கள் மும்மாரி -சந்தரன் போன்று குளிர்ந்த அர்த்தங்களை தருகை -முளைத்து எழுந்த திங்கள் தானாய்-நவோ நவோ பவதி ஜாயமான
-ஆராவமுதமான அர்த்த விசேஷங்கள்
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள –-செந்நெல் தேக விசிஷ்டன் -அஹம் அன்னம் -ஞானாதி குணங்களினால் ஓங்கிய செந்நெல் –
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே –தாசோஹம்-என்று இருப்பார்கள் இ றே
கயல் உகழுகை -மத்ஸ்யம் – தேஹத்திலும் ஆத்மாவிலும் கண் விக்கி வர்ணாஸ்ரமம் தர்மங்கள் மாறாமல் சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் வளர்க்கை
பூங்குவளைப் போதில் பொரு வண்டு கண் படுப்ப –
குவளையம் கண்ணி -ஸ்ரீ மகா லஷ்மி கடாஷம் -பங்கயத்தாள் திருவருளும் கொண்டு –
அழகிய வண்டு -சண்டை போடும் வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேன் –பிணங்கி அமரர் பிதற்றும் குணம் –
கண் பிடுப்ப -நிர் விசாரமாய் கிடக்க –
தேங்காதே புக்கிருந்து -நாசம் வதசரவஸீ நே ப்ரப்ரூயாத் –தத் வித்தி ப்ராணி பாதேன பரி ப்ரச் நேன சேவயா –
சீர்த்த முலை பற்றி வாங்க -சிஷ்ய உஜ்ஜீவனத்துக்கு -பகவத் ஆஜ்ஞ்ஞா பரிபாலனார்த்தமாக -சிஷ்யர்களை வருந்தி வேண்டி கொள்ளுதல் –
துர்க்கதியைக் கண்டு சாஹிக்காமல் உபதேசிப்பது -தரிக்க முடியாமல் உபதேசிப்பது -ஆக இந்த நான்கு ஹேதுக்களால்-
பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் -கீதாசார்யன் -அர்ஜுனன் /நாரதர் வால்மீகி /பராசரர் -மைத்ரேயர்
-கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்து ஏறி எங்கும் குடவாய்பட நின்று மழை பொழியும்-
ஆசார்ய தயாபாத்ரர்கள் குடம் -தம்மோடு ஒக்க அருள் செய்யும் ஆசார்யர்கள் -கைம்மாறு கருதாமல் அர்த்த பஞ்சகங்கள் பொழிந்த
நீங்காத செல்வம் -கைங்கர்ய செல்வம் நித்ய விபூதியில் நித்ய ஸூ ரிகள் உடன் ஒரு கோவையாக -என்றபடி

ஸ்ருத்வா அசுகுணான்-குணான்– புவன சுந்தர -அழகன் -கொடியன் -சுந்தர –வன சுந்தர –புவன சுந்தரா -ருக்மிணி 7 ச்லோஹங்கள்–த்வை அச்யுதா –
ருச்யசிங்கர் -பெருமையால் கொம்பு முளைத்து இருக்கோ -வசனம் -சந்தமாமா -தாய் உடன் பிறந்த சந்தரன் மாமா தானே

மாற்றாதே பால் சொரியும் -பாலே போரில் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
மாற்றாதே -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுவதே –
தாமே முன்பு பேசியைதை மாற்றிப்ம் பேசாமல் -நிலைகுலையாமல் சொல்லி -பிறர் தாம் சொன்னதை மாற்ற வேண்டாத படி குற்றம் இல்லாமல் என்றுமாம் -ஆசார்யாராய் மாற்ற வேண்டாத படி தாமே எல்லா அர்த்தங்களையும் தாமே அருளிச் செய்த என்றபடி
ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் என்றுமாம் -சததம் கீரத்தயந்தோ மாம் -இடைவிடாமல் -என்றுமாம் ஆக ஆறு பொருள்கள்

பாஞ்ச சன்யம் ஒலி -துளசி கந்தம் -கண்ணனே ரதம் செலுத்தி -வந்த பிராமணனே பெரிய திருவடி
கிரந்த சதுஷ்டயம் -ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் பகவத் விஷயம் ரஹச்யம் –

உபய விபூதி நாதன் இருக்க விரிதளையானை விரும்பி நின்றேனே
புதுக் கணிப்புடைய புண்டரீகன் இருக்க பொறி பறக்கும் கண்ணனைப் பூசித்தேனே
கடல் மண்ணுண்ட கண்டன் இருக்க கறை கொண்ட கண்டனைக் காமித்தேனே
கல்லெடுத்துக் கன்மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் காதலித்தேனே
திருவிருந்த மார்பன் சிரீதரன் இருக்க திருவில்லாத் தேவனைத் தொழுது நின்றேனே
பீதகவாடைப் பிரான் இருக்க இருக்க புலி யுரியானைப் பின் தொடர்ந்தேனே
சதிரான கங்கை யடியான் இருக்கச் சுடுகாடு காவலனைச் சுற்றி வளம் வந்தேனே
பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் பேய்ச் சுரைக்கு வார்த்தேனே –கோவிந்த பட்டர் புலம்பல்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: