ஸ்ரீ தேசிகர் அருளிய முதல் பிரபந்தம் -அம்ருத ரஞ்சனி /அதிகார சங்கிரகம் —

ஸ்ரீ தேசிகர் அருளிய முதல் பிரபந்தம் -அம்ருத ரஞ்சனி

உம்பர் தொழும் திருமால் உகந்தேற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஜ்ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நெறி -நிலை -சார்ந்தினமே –1-

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமாலடி காட்டிய நம் தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே -2-

முத்திக் கருள் சூட மூன்றைத் தெளி முன்னம் இத்திக்கால் ஏற்குமிதம்-3
முமுஷூவான சேதனனுக்கு மோஷம் உண்டானபோது தத்வத்ரய ஜ்ஞானம் உண்டாக வேணும் -3-

மூன்றில் ஒரு மூன்று மூவிரண்டு முன்நான்கும் தோன்றத் தொலையும் துயர் -4-

ஒரு மூன்று -மூன்று பதங்கள் கொண்ட திரு மந்த்ரம் -மூவிரண்டு -ஆறு பதங்கள் கொண்ட த்வயம் –
முன்நான்கும் -பன்னிரண்டு பதங்கள் கொண்ட சரம ச்லோஹம் -ரகச்த்ரய ஜ்ஞானமே இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –
உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் பயிரில்
களை போல் அசுரரை காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –5-

அலையற்ற வாரமுதக் கடல் அக்கடல் உண்ட முகில்
விலையற்ற நன் மணி வெற்பு வெயில் நிலவோங்கு பகல்
துலையுற்றன வென்பர் தூ மறை சூடும் துழாய் முடியாற்கு
இலையொத்தனவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்க்கே -6-

திருவாழி திருச் சங்கு களுக்கு -வெயில் நிலவோங்கு பகல்-
ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது-ஆங்கைத் திகிரி சுடர் என்றும்
வெண் சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து –பேயாழ்வார்
இல்லை -இல்லை ஒத்தன –பகவானுக்கு -கடல் மலை முகில் போலே பாகவதர்களுக்கு உவமை இல்லை என்றபடி
உத்தி திகழும் உரை மூன்றின் மும்மூன்றும்
சித்தம் உணரத் தெளிவித்தார் -முத்தி தரும்
மூல மறையின் முடி சேர் முகில் வண்ணர்
சீலம் அறிவார் சிலர் -7-

திருமந்த்ரத்தால் -சேஷத்வ ஜ்ஞானம் -உபாயம் இல்லாமையும் -கைங்கர்ய ரூபா புருஷார்த்தமும் –
த்வயத்தால் -புருஷகாரத்வம் -அவள் முன்னாக அவன் திருவடிகளை தஞ்சமாக பற்றி மிதுனத்தில் கைங்கர்யம்
சரம ஸ்லோஹத்தில் -சர்வ தர்ம பரித்யாகம் -அவன் ஒருவனையே சரணமாகப் பற்றுவதும் -அவன் செய்யும் சேமமும் சொல்லிற்றாம்
எனக்கு உரியன் எனது பரம் என் பேறு என்னாது
இவை யனைத்தும் இறையில்லா விறைக் கடைத்தோம்
தனக்கு இணை ஓன்று இல்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனும் எனச் சலங்கள் தீர்ந்தோம்
உனக்கிதம் என்று ஒரு பாகன் உரைத்தது உற்றோம்
உத்தமனாவன் உதவி எல்லாம் கண்டோம்
இனிக்கவருமவை கவரவிகந்தோம் சோகம்
இமையவரோடு ஒன்றி நான் இருக்கும் நாளே –8-

தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து
முத்தி வழி தந்தார் மொய் கழலே அத்திவத்தில்
ஆரமுதம் ஆறாம் இரு நிலத்தில் என்று உரைத்தார்
தார முதல் ஓதுவித்தார் தாம் -9-

திரு நாரணன் எனும் தெய்வமும் சித்தும் அசித்தும் என்று
பெரு நான் மறை முடி பேசிய தத்துவ மூன்றிவை கேட்டு
ஒரு நாள் உணர்ந்தவர் உய்யும் வகை யன்றி ஓன்று உகவார்
இரு நால் எழுத்தில் இதயங்கள் ஓதிய எண் குணரே-10-

காரணமாய் யுயிராகி யனைத்தும் காக்கும் கருணை முகில் கமலை யுடன் இலங்கும் மாறும்
நாரணனார் வடிவான யுயிர்கள் எல்லாம் நாம் என்று நல்லடிமைக்கு ஏற்குமாறும்
தாரணி நீர் முதலான மாயை காளம் தனி வான் என்றிவை யுருவாம் தன்மை தானும்
கூரணி சீர் மதியுடைய குருக்கள் காட்டக் குறிப்புடன் நாம் கண்டவை கூறினோமே –11-

அப்படி நின்ற அமலன் படி எல்லாம் இப்படி எம்முள்ளத்து எழுதினார்
எப்படியும் ஓரோர் சுருதி ஒளியால் இருள் நீக்கும் தாராபதி யனையார் தாம் -12-

செம் பொன் கழலிணை செய்யாள் அமரும் திருவரங்கர் அன்பர்க்கு அடியவராய் அடி சூடிய நாம் உரைத்தோம்
இன்பத் தொகை என வெண்ணிய மூன்றின் எழுத்தடைவே ஐம்பத்தொரு பொருள் ஆருயிர் காக்கும் அமுது எனவே –13

51 பொருள்கள் —
அகராத்தாலே -1–ஜகத் காரணத்வம் -2- சர்வ ரஷகத்வம் -3-நித்ய நிருபாதிக சர்வ சேஷித்வம் -4-ஜீவனுடைய நித்ய நிருபாதிக சேஷத்வம் –
உகாரத்தாலே –
5- ஜீவனுடைய அனன்யார்ஹ சேஷத்வம் –
மகாரத்தாலே –
6-ஜீவனுடைய தேக இந்த்ரியாதி வ்யாவ்ருத்தி -7- ஜ்ஞான ஸ்வரூபத்வம்-8- ஜ்ஞான ஆஸ்ரயத்வம் -9-ஆனந்த ஸ்வரூபத்வம் –
-10-ஸ்வஸ் மைஸ்வயம் பிரகாசத்வம் -11-அணுத்வம்
நம பதத்தாலே -12-இஜ்ஜீவன் எவ்விஷயத்திலும் தனக்கு நிருபாதிக சேஷித்வம் இல்லாமை -13- எவ்விஷயத்திலும் தனக்கு நிருபாதிக
சேஷித்வம் இல்லாமை -14-ஒரு கார்யத்திலும் நிர்பேஷ கர்த்ருத்வம் இல்லாமை -15- ஸ்வ தந்திர ஸ்வாமி யாலே பாகவத சேஷமாகவி
நியுக்தம் ஆனமை-16- அநந்ய உபாயத்வம் -17-உபாய விசேஷ பரிக்ரஹம்
நாராயண சப்தத்தில் –18 அசித்தினுடைய ஸ்வரூப அந்யதா பாவம் -19- ஜீவர்களுக்கு ஸ்வரூப அந்யதா பாவம் இல்லாமை
-20- ஷேத்ரஜ்ஞ்ஞர் உடைய சிருஷ்டி சம்ஹார விஷயத்வம் -21-சேதன வர்க்கத்தின் உடைய ஆனந்த்யம் –
22-சர்வ நியாமகனுடைய ஸ்வரூப ஸ்வ பாவ நித்யத்வ பிரகாரம் -23-நேத்ருத்வம் -24-சர்வ வ்யாபகத்வம் -25- சர்வ ஆதாரத்வம்
-26-சர்வவித பந்துத்வம் -27-சர்வவித புருஷார்த்த உபாயத்வம் -28-முக்த ப்ராப்யத்வம்
சதுர்தியாலே -29–நித்ய கைங்கர்யம் செய்ய வேண்டும் படி
த்வயத்தில் முதல் எழுத்தான -ஸ்ரீ சப்தத்தால் -30 -பிராட்டி வினை தீர்க்கும் படிகள் –
ஸ்ரீ சப்த மதுப்பாலே -31-நித்ய யோகத்வம்
நாராயண சப்தத்தாலே -32-புருஷகார பலத்தாலே தலையெடுத்த குண பௌஷ்கல்யம்
சரண சப்தத்தில் -திவ்ய மங்கள விக்ரஹ யோகம்
சரணம் என்னுமதில் -33- கழல் களையே சரணாகக் கொள்ளுமது
ப்ரபத்யே என்கிற பதத்தில் -35-அத்யவசாய ரூபமான புத்தி விசேஷம் -உத்தமனிலே -36- புகல் ஓன்று இல்லா அடியேன் என்று நிற்கிற நிலை
ஸ்ரீ மதே -37- கைங்கர்ய பிரதி சம்பந்திகளான திவ்ய தம்பதிகளின் சேர்த்தி
நாராயணாய -என்பதில் -38- பரம போக்யத்வம் -நம என்பதில் 39- கைங்கர்யத்தில் களை யற்ற படி
சரம ஸ்லோஹத்தில் -சர்வ தரமான் -என்பதில் –
அனுஷ்டேய தர்மங்களின் நாநா விதத்வம்
பரித்யஜ்ய என்பதில் -41- ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை
மாம் என்பதில் -அவனுடைய -42- சௌலப்யம் -43- காருணிகத்வம்
ஏகம் என்பதில் -44-உபாயத்தின் அசஹாயத்வம் –
சரணம் என்பதில் -45- அவனுடைய சரண்யத்வ பூர்த்தி
வ்ரஜ -என்பதில் 46-அத்யவசாயம்
அஹம் என்பதில் 47-சர்வ சக்த்த்வம் -தவா என்பதில் 48-சாதக வ்ருத்தி நிஷ்டை -சர்வ பாபேப்யோ -49-விரோதி பாஹூள்யம்-
மோஷயிஷ்யாமி-என்பதில் -50- முக்தி பிரதான சக்த்த்வம்
மா சுச -என்பதில் 51- இவன் நிர்ப்பரனாய் க்ருதார்த்தனாய் இருக்கும் படி -ஆக இவையாம் –

யான் அறியும் சுடராகி நின்றேன் மற்றும் யாதுமிலேன்
வானமரும் திருமால் அடியேன் மற்றோர் பற்றுமிலேன்
தானமுதுமாவன் தன் சரணே சரண் என்று அடைந்தேன்
மானமிலா வடிமைப் பணி பூண்ட மனத்தினனே–14-
சீலம் கவர்ந்திடும் தேசிகர் தேசின் பெருமையினால்
தூலங்கள் அன்ன துரிதங்கள் மாய்ந்தன துஞ்சல் தரும்
கோலம் கழிந்திடக் கூறிய காலம் குறித்து நின்றோம்
மேலிங்கு நாம் பிறவோம் மேலை வண்ணனை மேவுதுமே –15

வண்மை யுகந்த வருளால் வரம் தரு மாதவனார்
உண்மை யுணர்ந்தவரோதுவிக்கின்ற உரை வழியே
திண்மை தரும் தெளிவொன்றால் திணியிருள் நீங்கியநாம்
தண்மை கழிந்தனம் தத்துவம் காணும் தரத்தனமே -16-

நாராயணன் பரன் நாம் அவனுக்கு நிலையடியோம்
சோராது அனைத்தும் அவன் உடம்பு என்னும் சுருதிகளால்
சீரார் பெரும்தகை தேசிகர் எம்மைத் திருத்துதலால்
தீரா மயலகற்றும் திறம்பாத் தெளியுற்றனமே –17-

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணையடி சேர்ப்பார் இனிப் பிறவோம்
நன்றே வருவதெல்லாம் நமக்குப் பரம் ஒன்றிலதே –18-

சிறுபயனில் படியாத தகவோ ரெம்மைச் சேர்க்க வடைக்கலம் கொண்ட திருமால் தானே
மறு பிறவி யறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாதே யிருப்பது எண் கொல்
உறுவது எனக்கு உரைக்கேன் இங்கு இருந்த காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டி
பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே தென்று இகழேல் நீயே -19-

சாக்கியர் சைனர்கள் சார்வாகர் சாங்கியர் சைவர் மற்றும்
தாக்கியர் நூல்கள் சிதையத் தனி மறையின் கருத்தை
வாக்கியம் முப்பதினால் வகை செய்து வ்யாகரித்தோம்
தேக்கி மனத்தினில் இதனைத் திணி யிருள் நீங்குமினே –20

தள்ளத் துணியினும் தாய் போல் இரங்கும் தனித் தகவால்
உள்ளத் துறைகின்ற யுத்தமன் தன்மை யுணர்ந்து யுரைத்தோம்
முள்ளொத்த வாதிகள் முன்னே வரின் எங்கள் முக்கியர்பால்
வெள்ளத்திடையில் நரி போல் விழிக்கின்ற வீணர்களே -21-

செய்யேல் மறம் என்று தேசிகன் தாதை யவன் உரைத்த மெய்யே யருள் பொருள் சூடிய வெண் மதி காதலியாம்
பொய்யே பகைப் புலனை யிரண்டு ஓன்று பொரும் கருவி
கையேறு சக்கரக் காவலன் காவல் அடைந்தவர்க்கே –22

ஐந்தும் இரண்டும் ஒன்றும் -அஷ்டாஷரம் -இதுவே சக்கரப் படையுடையானுக்கு ரஷகத்துக்கு பரிகரமாம்-
ஐ இரண்டு ஓன்று -அதிசயாவஹமான ரஹச்யத்ரயம் என்றுமாம் –
அந்தமிலாதி தேவன் அழி செய்து அடைத்து அவலைவேலையோ தமடையச்
செந்தமிழ் நூல் வகுத்த சிறு மா மனிச்சர் சிறு கைச் சிறாங்கை யது போல்
சந்தமெலா முரைப்ப விவையொன்று தங்கள் இதயத் தடக்கி யடியோம்

பந்தமெலா மறுக்க வருள் தந்துகந்து பரவும் பொருள்கள் இவையே –23
சிறு மா மனிச்சர் தமிழ் மா முனி -அகஸ்த்யர் -இவை -தத்வ த்ரய களகத்தில் உரைத்த
முக்குண மாயையின் மூவெட்டின் கீழ் வரு மூவகையும்
இக்குணம் இன்றி இலங்கிய காலச் சுழியினமும்
நற்குணம் ஒன்றுடை நாகமும் நாராயணன் உடம்பாய்ச்
சிற்குண மற்றவை என்று உரைத்தார் எங்கள் தேசிகரே –24

மூவெட்டும் -24 தத்வங்கள் -மூவகை பிரகிருதி விக்ருதி பிரகிருதி-விக்ருதி –
எனது என்பதும் யான் என்பதும் இன்றித்
தனதென்று தன்னையும் காணாது உனதென்று
மாதவத்தால் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதினில்
கைதவத்தான் கை வளரான் காண்–25-

பல்வினை வன் கையிற்றால் பந்தம் உற்று உழல்கின்றனரும்
நல்வினை மூட்டிய நாரணனார் பதம் பெற்றவரும்
தொல்வினை என்றுமில்லாச் சோதி வானவரும் சுருதிச்
செல்வினை யோர்ந்தவர் சீவர் என்று ஓதச் சிறந்தனரே -26-

ஆரணங்கள் எல்லாம் அடி சூட மேல் நின்ற
காரணமாய் ஒன்றால் கலங்கா தான் -நாரணனே
நம்மேல் வினை கடியும் நல் வழியில் தான் நின்று
தன் மேனி தந்து அருளும் தான் –27-

குடல்மிசை ஒன்றியும் கூடியும் நின்ற கொடும் துயரும்
உடல் மிசை தோன்றும் உயிரும் உயிர்க்கு உயிராம் இறையும்
கடல் மிசைக் கண்டதரளத் திரளவை போர்த்த பொன்னூல்
மடல் மிசை வார்த்தை யதன் பொருள் என்ன வகுத்தனமே –28-

தத்துவம் தன்னில் விரித்திடத் தோன்றும் இரண்டு தன்னில்
பத்தி விலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார்
எத்திசையும் தொழுது ஏத்திய கீர்த்தியர் எண்டிசையார்
சுத்தர் உரைத்த சுளகம் அருந்திய தூயவரே –29-

வினைத்திரள் மாற்றிய வேதியர் தந்த நல் வாசகத்தால்
அனைத்தும் அறிந்த பினாறும் பயனும் எனவடைந்தோம்
மனத்தில் இருந்து மருந்து அமுதமாகிய மாதவனார்
நினைத்தன் மறத்தல் அரிதாய நன்னிழல் நீள் கழலே –30-

ஓதுமறை நான்கதனில் ஓங்கும் ஒரு மூன்றின் உள்ளே
நீதி நெறி வழுவா நிற்கின்றோம் போதமரும்
பேராயிரமும் திருவும் பிரியாத
நாராயணன் அருளால் நாம் —31-

போது -புஷ்பம் ஜ்ஞானம் போதில் கமல வன் நெஞ்சம்
ஊன் தந்து நிலை நின்ற யுயிரும் தந்தோர் உயிராகி உள் ஒளியோடு உறைந்த நாதன்
தான் தந்த வின்னுயிரை எனது என்னாமல் நல்லறிவும் தந்து அகலா நலமும் தந்து
தான் தந்த நல் வழியால் தாழ்ந்த வென்னைத் தன் தனக்கே பரமாகக் தானே எண்ணி
வான் தந்து மலர் அடியும் தந்து வானோர் வாழ்ச்சி தர மன்னருளால் வரித்திட்டானே –32

திருமால் அடி இணையே திண் சரணாகக் கொண்டு
திருமால் அடி இணையே சேர்வார் ஒரு மால்
அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி
அருளால் நமக்கு அளித்தார் ஆய்ந்து -33-

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரணத்தில் பற்றுதல் நன்னிலை நாம் பெரும் பேறு
ஏற்கும் அவற்றின் உள் எல்லாம் களை யற வெண்ணினமே–34-

சேர்க்கும் திருமகள் -ஸ்ரீ புருஷகார பூதை
சேர்த்தியில் மன்னுதல் மத் பிரத்யத்தின் அர்த்தம்
இலக்காம் வடிவில் இணை யடிகள் -இத்தால் பிராட்டிக்கு இருப்பிடமாய் குண பிரகாசகமுமாய் சிசுபாலனையும் அகப்பட
திருத்திச் சேர்த்துக் கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது –
ஏற்கின்ற எல்லைகள் -ஆசார்ய கைங்கர்ய பர்யந்தம்
எல்லாக் களை யறவு–கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
திருமால் அடி இணை சேர்ந்து திகழ்ந்த அடிமை பெற
திரு நாரணன் சரண் திண் சரணாகத் துணிந்து
அடைவோர்
ஒரு நாள் உரைக்க உயிர் தரு மந்த்ரம் ஓதிய நாம்
வரு நாள் பழுதற்று வாழும் வகையதில் மன்னுவமே –35

மற்றோர் பற்று இன்றி வந்து அடைந்தார்க்கு எல்லாம் குற்றம் அறியாத கோவலனார் முற்றும்
வினை விடுத்து விண்ணவர் உடன் ஒன்ற விரைகின்றார்
நினைவுடைத்தாய் நீ மனமே நில்லு –36
எல்லாத் தருமமும் என்னை இகழ்ந்திட தான் இகழாது
எல்லாம் தனது என எல்லாம் உகந்து அருள தந்த பிரான்
மல்லார் மதக் களிறு ஒத்த வினைத் திரள் மாய்ப்பன் என்ற
சொல்லால் இனி ஒருகால் சோகியாது துணிவு உற்றனமே -37-

வினைத்திரள் மாற்றிய வேதியர் தந்த நல் வாசகத்தால்
அனைத்தும் அறிந்த பினாறும் பயனும் எனவடைந்தோம்
மனத்தில் இருந்து மருந்து அமுதமாகிய மாதவனார்
நினைத்தன் மறத்தல் அரிதாய நன்னிழல் நீள் கழலே –38-

எட்டில் ஆறில் இரண்டில் ஒன்றில் எங்கும் மாறியம்புவார்
விட்டவாறு பற்றுமாறு வீடு கண்டு மேவுவார்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல்
எட்டு மூன்று மூடறுத்தது எந்தை மால் இரக்கமே –39-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை யுபகரித்தும் போருமவன் ஆசார்யன் ஆகையாலே ஈஸ்வர த்வயமும் விபூதி சதுஷ்ட்யமும் உண்டானால் தான்
ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது என்று சொல்லும்படியாய் இருந்தது -இங்கனே இருக்கச் செய்தேயும் உபகார்ய வஸ்து
கௌரவத்தாலே ஆசார்யானில் காட்டிலும் மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் என்றும் அறுதி இதழாய் இருந்தது
மோஷைக ஹேதுவான ஆசார்யனை உபகரித்தவன் ஈஸ்வரன் என்று அன்னவனுடைய திரு அருளுக்கு சிறப்புச் சொல்லி இப்பிரபந்தத்தை நிகமித்தார் ஆயிற்று –

————————————————————

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த அதிகார சங்கிரகம் –

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன் தொண்டர் அடிப் பொடி மழிசை வந்த சோதி
வையம் எலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -1-

தெளிந்த பொருள்கள் ஆவன –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -மற்று ஒரு தெய்வம் தொழாள்- மறந்தும் புறம் தொழா மாந்தர் -போன்றவையே

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில் இகழாத பல்லுருவில் இராகமாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில் – தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே யவதரிக்கு மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்புற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூரும் -இன்பம் எய்தினேன் -ஆனந்த ரூபமான அனுபவத்தில்
இறைஞ்சுதலில்-மேவினேன் அவன் பொன்னடி -சரண சமாஸ்ரயணத்தில்
இசையும் பேற்றில் -ஆழ்வாரே புருஷார்த்தம் -ஆழ்வார் உகந்தவர் என்பதால் திரி தந்தாகிலும் -கரிய கோலத் திரு உருவைக் காண்பான்
இகழாத பல்லுருவில் -அன்னையாய் அத்தனை -சிதையாத பந்துவத்தில்
இராகமாற்றில் -முன்பு எல்லாம் நம்பினேன் –இன்று சதிர்த்தேன் –
தன் பற்றில் -தானே தன் பற்றை உண்டாக்கி -இன்று தொட்டும் –தன் புகழ் ஏத்த அருளினான்
வினை விலக்கில் -பண்டை வல் வினை பாற்றி அருளினான்
தகவு ஒக்கத்தில் -அருள் கண்டீர் இவ்விலகினில் மிக்கதே
தத்துவத்தை யுணர்த்துதலில் -வேதத்தின் உட் பொருளை நிற்கப் பாடி
தன்மையாக்கில் -ஸ்வரூப விகாசம் -செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
இவை பத்தும் விஷய சப்தமிகள் இவை தோற்றக் காட்டும்
இவ்வர்த்தங்களை உட்கொண்டு மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த படி
அன்பர்க்கே யவதரிக்கு மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்புற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

மதுரகவி நிஷ்டையே நிலையாகப் பெற்றோம் என்றபடி –

என்னுயிர் தந்து அளித்தவரை சரணம் புக்கி யான் யடைவே யவர் குருக்கள் நிறை வணங்கிப்
பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்றியை யவர்க்கு உரைத்த யுய்யக் கொண்டார் நாத முனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திரு மகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே -3-

தம் ஆச்சார்யர் கிடாம்பியப்புள்ளாரை முன்னிட்டு ஆரோஹண க்ரமத்திலே குரு பரம்பரை அனுசந்தித்து ஆஸ்ரயிக்கிறார்

ஆரண நூல் வழிச் செவ்வை யழித்திடுமை துகர்க்கோர்
வாரணமா யவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணி கீர்த்தி இராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே –4

தத் குத-ஏதத் குத –என்று ஹேது பிரச்னம் செய்யும் விதண்டாவாதிகள் -ஐதுகர் -ஹைதுக வட சொல்லின் மாற்றம் –
இவர்களின் துர்வாதம் வாழை மரம் -அழிக்கும் யானை போன்ற நம் இராமானுஜர் –

நீள வந்து இன்று விதி வகையால் நினை வொன்றிய நாம்
மீள வந்து இன்னம் வினை யுடம்பில் ஒன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என வென்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோமினி இயல் வழக்கே –5-

காளம் வலம்புரி என்ன நல் காதல் அடியவர்க்கு
தாளம் வழங்கித் தமிழ் மறையின் இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே –6-
கீழையகத்தான் மேலையகத்தான் -இருவரையும் காளம் வலம்புரி என்கிறார் -கஹாளம் -திருச் சின்னம் -மதுர கம்பீர கண்டத் த்வனி யுடையவர்கள் –
பக்தியிலும் நிறைந்தவர்கள் என்பதால் நல் காதல் அடியவர் என்கிறார் –

ஆளும் அடைக்கலம் என்றமை அம்புயத்தாள் கணவன்
தாளினை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விழ முயன்றோதிய மூன்றின் உள்ளும்
நாளும் உகக்க இங்கே நமக்கோர் விதி வாய்க்கின்றதே –7

திருவுடன் வந்த செழுமணி போல் திருமால் இதயம்
மருவிட மென்ன மலரடி சூடும் வகை பெறு நாம்
கருவுடன் வந்த கடுவினை யாற்றில் விழுந்து உழலாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய வமைந்தனரே –8-
பரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்து அன்றோ திருமால்
அருவுடன் -உள்ளுறை பொருள்களுடன் அர்த்த பஞ்சகம் -ஸூ சமம் -ரூபி -அரூபி

அமையாவிவை எனு மாசையினால் அறு மூன்றுலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகையிவை என்று
இமையா விமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரீயர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே –9-
எட்டு -அஷ்டாஷரம் -இரண்டு -த்வயமும் சரம ஸ்லோஹமும் என்றவாறு -ரஹச்யத்ரயமே செம வைப்பு என்றபடி

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலா தொன்று இலா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலையின்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்ப்பொருளே –10-

பொருள் ஓன்று என்று நின்ற பூ மகள் நாதன் அவன் அடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்றிவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை எம் மனம் தேற இயம்பினரே –11-

தேற வியம்பினார் சித்தும் அசித்தும் இறையும் என
வேறு படும் வியன் தத்துவம் மூன்றும் வினையுடம்பில்
கூறு படும் கொடு மோகமும் தான் இறை யாம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த வாதியரே–12-

————————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: