ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -6–

திருவாய்மொழி -5-3-5-கடியன் -கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
சாது சனத்தை கலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு வைத்த –மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரைப் பிறந்தான் –
கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் -இவ்வாயர் குலத்தை வீடுய்த்த தோன்றிய கரு மாணிக்கச் சுடரை
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
-இவை எல்லாம் திருவவதார பிரயோஜனங்கள் –
சூட்டு நன்மாலைகள் –இத்யாதி -முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை யாழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தற்கு

மூவாயிரப்படி குரு பரம்பரை –
பொய்கை யாழ்வார் -த்வாபர யுகம் -862901-B.C-கி மு –4202– சித்தார்த்தி வருஷம் -ஐப்பசி மாசம் -சுக்ல அஷ்டமி -செவ்வாய் கிழமை -திருவோணம்
பூதத் தாழ்வார் -சுக்ல நவமி புதன் கிழமை -அவிட்டம்
பேயாழ்வார் -சுக்ல தசமி வியாழக் கிழமை சதயம்
திரு மழிசை பிரான் -ஈதே வருஷம் தை கிருஷ்ண பிரதமை ஞாயிற்றுக் கிழமை மகம் –
மதுர கவிகள் -863879-கி மு 3224-ஈஸ்வர வருஷம் சித்திரை மாசம் சுக்ல சதுர்த்தி வெள்ளிக் கிழமை சித்திரை நஷத்ரம்
நம்மாழ்வார் -கலி யுகம் -43 நாள் -கி மு 3102-பிரமாதி வருஷம் -வைகாசி பௌர்ணமி-வெள்ளிக் கிழமை விசாகம்
குலசேகர ஆழ்வார் -கலி 28 கி மு -3075–பராபவ வருஷம் மாசி மாசம் சுக்ல த்வாதசி வெள்ளிக் கிழமை புனர்பூசம்
பெரியாழ்வார் கி மு 47 கி மு 3056-குரோதன வருஷம் ஆனி  மாசம் சுக்ல ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை -சுவாதி
ஆண்டாள் கலி 98 -கி மு 3005-நள வருஷம் ஆடி மாசம் சுக்ல சதுர்த்தி செவ்வாய் கிழமை பூரம்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் -கலி 289-கி மு 2814 பிரபவ வருஷம் மார்கழி மாசம் கிருஷ்ண சதுர்த்தசி செவ்வாய் கிழமை கேட்டை
திருப் பாண் ஆழ்வார் கலி 343-கி மு 2760-துர்மதி வருஷம் கார்த்திகை கிருஷ்ண துவிதியை புதன் கிழமை ரோஹிணி
திருமங்கை யாழ்வார் -கலி -398-கி மு 2714-நள வருஷம் கார்த்திகை மாசம் பௌர்ணமி வியாழக் கிழமை கிருத்திகை நஷத்ரம்
கோயில் ஒழுகு -கலி 50 க்குமேலே சோழ வல்லி நாச்சியார் திருமணம் -மூன்றாம் ஆவரணம் தென் மேற்கில் சேனை வென்றான் திரு மண்டபம்
கலி-105 மேலே ஸ்ரீ வில்லி புத்தூரில் அழகிய மணவாளன் திருக் கல்யாணம்
திருமங்கை யாழ்வார் கலியப்தம் -445 மேல் திருவரங்கத்தில் இருந்து திருப்பணிகள் செய்தவையும் சொல்லும்

வேத நூல் இரும் தமிழ் நூல் நூல் ஆஜ்ஞை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல்
பண்டை நிற்கும் முந்தை யழி வில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும் –
வேத நூல் பிராயம் நூறு -வடமொழி வேத சாஸ்திரம் –இரும் தமிழ் நூல் புலவன் நூல் திராவிட சாஸ்திரம்
ஆஜ்ஞை -ஸ்ருதிஸ் ச்ம்ர்திர் மமை வாஜ்ஞா
ஆணை –குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை யாயிரம்
வசையில் -நான்மறை -சடகோபன் உரைத்த ஏதமில் ஆயிரம்
சுடர் மிகு சுருதி செவிக்கு இனிதாக சொல்வது போலே வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு
ஆரார வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே
உண்மை -வேத நூல் ஓதுகின்றது உண்மை
பொய்யில் பாடல் -குருகூர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரம்
பண்டை நான் மறை -நிற்கும் நான்முறை
வண் குருகூர் சடகோபன் முந்தை யாயிரம் -சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவில்லா வாயிரம்
சொல்லப்பட்ட வென்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே –படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனமாமே –
அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -ஒன்றி ஒன்றி யுலகம் படைத்தான் கவியாயினேற்கு

சதம் சப்த ச -107 திவ்ய தேசங்கள் -பரமபதம் தனியாக –வட நாட்டில் பகவத் ஸ்வரூபங்கள் விபவத்தில் உலாவின திவ்ய தேசம் என்று காட்ட தனியாக ஏழு –
சாளக்ராமம் நைமிசாரண்யம் ஸ்வரூபங்கள் ஸ்தலங்கள்
அயோதியை வடமதுரை த்வாரகை திருவாய்ப்பாடி ஸ்ரீ பிருந்தாவனம் ( திருப்பாற்கடல் ) பகவான் உலாவின ஸ்தலங்கள்
இவை ஔஷதய யா ஜாதா – பிணியைத் தீர்க்கும் மருந்து
தேவேப்யே -மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்
த்ரியுகம் புரா-க்ருத யுக ஸ்தலங்கள் என்றபடி
பப்ரூணாம் -சகல ஜகதாதார பூதர்களான பகவான்கள் உடையவை
மந்தாமி -சந்தோஷிக்கிறேன் –இந்த ருக்கு நாலாவது காண்டம் இரண்டாம் பிரச்னம்

அத்தாணிச் சேவகம் -ஆஸ்தான -சொல் -எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடங்கள் எல்லாம் சென்று
அந்தரங்க சேவை -அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளிங்கு இருந்தாய்

அக்நௌ திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி திஷ்டதி யோகி நாம் ப்ரதிமா ஸூ அப்ரபுத்தா நாம் சர்வத்ர சமதர்சி நாம் –
பகவான் அந்தணர்களுக்கு அக்னியில் உள்ளான் –குளித்து மூன்று அனலை ஓம்பும்
யோகிகளுக்கு ஹிருதயத்தில் –மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
அறிவிலிகளுக்கு பிரதிமையில் உள்ளான் -உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் அன்பில் மலை என்று மண்டினார்க்கு அல்லால்
சம தர்சிகளுக்கு சர்வத்ர உள்ளான் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வாருக்கு

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் அஸ் நாமி பிரயதாத்மான -மநோ ரதபத தூரவர்த்தி ப்ரியம் ப்ராபயேவ அஸ் நாமி -ஸ்ரீ கீதா பாஷ்யம்
-இதி முஷ்டிம் சக்ருஜ் ஜகத்வா த்விதீயம் முஷ்டிமாதேத -இன்னும் ஒரு முஷ்டி அவளாக பெருகிற்றாம்-

மண்டலம் எல்லாம் விளங்கவே மாண் உருவாய் மாவலியை வஞ்சித்து நெஞ்சுருக்கி மண்ணளந்த பெருமாள்
தெண்டிரைக் கடல் கடைந்து தெள்ளமுதில் வரும் திருவை மார்பில் வைத்தரும் தேவு எங்கள் பெருமாள்
வண்டணியும் மகிழ் மாறன் ஒண் தமிழின் இசை கொண்டு வரி யரவிலே துயிலும் மணவாளப் பெருமாள்
கொண்டல் தவழ் சோலை சூழ் கோயில் வாழும் நம்பெருமாள் தெய்வ சிகாமணி
பொய்கையார் பரவும் பெருமாள் பூதத்தார் போற்றும் பெருமாள்
பேயாழ்வார் பாடும் பெருமாள் பக்தி சாரர் ஏத்தும் பெருமாள்
பராங்குசன் பணியும் பெருமாள் போதமிகு குலசேகரன் ஏத்தும் பெருமாள்
பட்டர்பிரான் பரவும் பெருமாள் பட்டன் கோதை ஏத்தும் பெருமாள்
பத்தரடிப் பொடி பாடும் பெருமாள் பணனார் பரவி ஏத்தும் பெருமாள்
பரகாலன் பொங்கிப் போற்றும் பெருமாள் பதின்மர் பாடும் பெருமாள்

ஓன்று மறந்து அறியேன் –அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமேயான் திசை –6-
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுசூதன சாத்விகஸ் ச து விஜ்ஞேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக –
வனசமலர்க் கருவதனில் வந்த மைந்தான் வாழியே
மனத்துள்ளான் —நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான் –28- எத்தை நினைப்பது -திருவரங்கனுக்கும் திருவரங்கத்துக்கும் விசேஷணம்-
கங்கையில் புனிதமான காவேரியையா -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தையா -வண்டினம் முரலும் சோலை –குயிலினம் கூவும் சோலைகளை நினைப்பதா
சப்த பிரகார திவ்ய வீதி கோபுர மண்டபாதிகளை நினைப்பதா –
தேனார் திருவரங்கம் -60–உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-அசௌ வா ஆதித்யோ தேவமது –
எனக்கு தேனே பாலே கண்ணாலே யமுதே -எம்பெருமானே தேன் –
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நான் நின்னருள் அல்லது எனக்கு -நிகமித்தார் -பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே -என்று அருளிய திரு மங்கை ஆழ்வார்

தம் பிழையும் சிறந்த செல்வமும் -தூது நாலுக்கும் விஷயம்
முதல் தூது -பிழை –ஷமை -வ்யூஹம் -என் பிழையே நினைந்து அருளி –-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –கடலாழி நீர் தோற்றி
என் குற்றத்தை பார்த்து தமிக்க நினைத்தீர் ஆகில் –சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ என்னுங்கோள் -என்கிறாள்
கிம் கோப மூலம் மனுஜேந்திர புத்ர -தாரை போலே -அருளாத திருமாலார்க்கு -ந கச்சின் ந அபராதியத் கூட இருக்க-
இரண்டாம் தூது -சிறந்த செல்வம் -ரஷா தீஷை விபவம் -மாறில் போர் அரக்கன்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு -கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர்
-கறங்கு சக்கரக் கை கனிவாய்ப் பெருமானைக் கண்டு இரங்கி நீர் தொழுது பணியீர் -திருவாழி ஆழ்வானும் ஜகத் ரஷண தீஷிதன்
சிறந்த செல்வம் மல்கு திரு வண்டூறையும்-ஐஸ்வர்யம் சிறப்பைக் கண்டு கால் தாழ்ந்து –
வேத வேள்வி ஒலி முழங்கும் திரு வண் வண்டூர்-விடலில் வேத ஒலி முழங்கும் திரு வண் வண்டூர் -ரஷண தீஷை மறந்து இருப்பார்
மூன்றாம் தூது -படைத்த பரப்பு -சாரஸ்யம் -பரத்வம் -முன்னுலகங்கள் எல்லாம் படைத்த -தன் மன்னு நீள் கழல் மேல் –வானவர் கோனைக் கண்டு
நான்காம் தூதில் -தமரோட்டை வாசம் -சௌந்தர்யம் -அர்ச்சை -தமரோடு அங்கு உறைவார்க்கு -செக்கமலத் தலர் போலும் -திரு மூழிக் களத்தார்க்கு
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீர -தேவிமார் அவரில் ஆழ்வார் கலங்கினார் சங்கித்தார் அஞ்சினார்
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்திலும் சர்வ பிரகாரித்வ ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –

வையம் குருடன்றோ மா மறை நூல் பொய்யன்றோ
அய்யனுரைத்த தமிழ் யார் அறிவர் வையத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன் –

காளி தாசன் மேக சந்தேச-தூ மஜ்யோதிஸ் சலில மருதாம் சந்நிபாத க்வ மேகஸ்
சந்தேசார்த்தா க்வ படு கரணை ப்ராணிபி ப்ராபணீயா
இத் யௌத் ஸூ க்யாத் அபரிகணயன் குஹ்யகஸ் தம் யயாசே
காமார்த்தா ஹி பிரகிருதி க்ருபணாச் சேதனா சேத நே ஷூ —
விவேகம் அற்று மேகம் தூது விடுகிறான் என்கிறான்

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் -நவ நிதி சொரிந்த ராமானுஜ முனி -முத்து போன்ற ஆசார்யர்களை ஸ்தாபித்தவர்
சித்த சாத்விகர்கள் முத்தாக சொல்லப் படுவார்கள்
அளியத்த மேகங்காள் -தாய்க்கும் மானுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் -மின் போன்ற யஜ்ஞ சூத்ரம் விளங்கும் =-இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே –
காஷாயம் காட்சி தருவதையும் மின் எழுகின்ற -என்னலாம்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த -வான் -அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் பரமபதம் கரச்தம் என்றவரே –
சலம் கொண்டு –யாதவ பிரகாசர் கபடம் தீர்த்து ஜலம் -தீர்த்த கைங்கர்யம் சாலக் கிணறு
சங்கமா கடல் கடைந்தான்-மறைப்பால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பராங்குச பாத பக்தம்
மதயானை போல் எழுத -முனி வேழம்

க ஸ்ரீ ஸ்ரிய–திருவுக்கும் திருவாகிய செல்வா -ஸ்ரிய ஸ்ரியம்-
நிராஸ கஸ்யாபி ந தாவதுத் ச ஹே-தரு துயரம் -பாசுரார்த்தம்
ஸ்வ வைஸ்வ – குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ் சதாதவை வோசிதயா தவச்ரியா-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா -பாசுரார்த்தம்
நிவாச சய்யா ஆசன -சென்றால் குடையாம் –
திகசுகிம வி நீதம் -வள வேழு லகம் பதிகார்த்தம்
வபுராதிஷூ மம நாத -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே –எனது யாவியார் யாம் யார் தந்த நீ கொண்டாக்கினாயே
சக்ருத்த்வத்தாகாரா -ஒரு நாள் காண வாராயே -நம்மை ஒரு நாள் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே -எம்மா வீட்டுத் திறம் -இதில் மஹாத்மபி என்றது ஆழ்வாரையே
ந தேஹான் ந பிரானான் -ஏறாளும் இறையோனும் பதிகார்த்தம்

பக்தி பிரபாவ பவதத்புத பரவபந்த சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்யதாம ஜீயாத் பராங்குச பயோதி ர சீமா பூமா
பக்தி பிரபாவ -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்றும் கொண்ட வென் காதல் உரைக்கில் தோழி மண்டினி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும் சூழ்ந்து அதனில் பெரிய என் அவா –
பவத் அத்புத பாவ பந்த -பக்தி ஸ்ருங்காரமாக பரிணமித்து தலைமகள் தாய் தோழி போன்ற ஆச்சர்ய பாவ பந்தங்கள் உண்டே
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண -பிரணய ரசத்தை விளைக்கச் செய்ததே இந்த பாவ பந்தங்கள் –சிருங்காரம் வீரம் காருண்யம் அத்புதம் பயா நகம் சாந்தி பக்தி
வீடுமின் முற்றவும் -சார்வே தவ நெறிக்கு -கண்ணன் கழலினை –பக்தி ரச திருவாய் மொழிகள்
மின்னிடை மடவார்கள் –நங்கள் வரிவளை -வேய் மரு தோளிணை –ஸ்ருங்கார ரசம்
மாயா வாமனனே -புகழு நல ஒரூவன் -நல் குரவும் செல்வமும் –அத்புத ரசம்
உண்ணிலாய ஐவரால் –பயா நக ரசம்
ஊர் எல்லாம் துஞ்சி வாயும் திரை உகளும் -ஆடியாடி அகம் கரைந்து –கருணா ரசம்
குரவை ஆய்ச்சியரோடு -வீற்று இருந்து ஏழ் உலகம் –வீர ரசம்-
வேதார்த்த ரத்ன நிதி –ஓதம் போல் கிளர் வேதம் -சுருதி சாகரம் -சார தமம் –
த்ரை குண்ய விஷயா வேதா -அச்யுத திவ்ய தாம -ஆழ்வாரும் கடல் போலே எம்பெருமானுக்கு இடம் -உள்புகுந்து நீங்கான்
அசீம பூமா -ப்ருஹத் வஞ்ச ஸ்வரூபேண குணைச்ச –ஆகாரத்தாலும் குணத்தாலும் சீமா -அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

ரிஷிம் ஜுஷூ மஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்
சஹச்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
வரவர முனியடி வணங்கும் வேதியர் திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி
சம்பாத்திய ஆவிர்பாதிகரணம் -4-4-1- சம்பாத்திய ஆவிர்ப்பாவ ஸ்வேந சப்தாத் –
சம்பாத்திய -பரஞ்சோதியை அணுகி
ஆவிர்பாவ –முதி தசையில் அபஹதபாப்மாதிகள்
ஏற்கனவே இருந்த ஸ்வரூபம் அடைந்து -ஸ்வேந ரூபேண
சம்சாரத்தில் திரோஹிதம் கர்மம் அடியாக
ஞான விகாசம் -சர்வம் ஹ பசய பச்யதி

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குணா அனுசந்தானம் அபய ஹேது -பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞதையே சித்திக்கும்
ஆனால் –நலிவான் இன்னும் எண்ணு கின்என்கிற பாசுரங்களுக்கு அடி என் என்னில் -பந்த அனுசந்தானம் –
பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே நிருபாதிக பந்துவாய் சக்தனாய் இருக்கிறவன் விலக்காது ஒழிந்தால் அப்படிச் சொல்லலாம் இறே-
பிரஜையைக் கிணற்றில் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் என்னக் கடவது இ றே
இப்பாட்டுக்களில் முன்னடிகள் எல்லாம் புலியின் வாயிலே அகப்பட்ட பிரஜை தாய் முகத்தில் விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்தது
நோவு படுமா போலே இருக்கிறது எண்ணிலா பெரு மாயன் -எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே -எண்ணிறந்த செயல்களை செய்ய
வல்லதான பிரகிருதி யைப் பரிகாரமாக உடையவன் அன்றோ -பேறும் இழவும் அவனாலே என்று சம்பந்தம் உணர்ந்தவர்கள் பாசுரம்

அஸ்தி ப்ரஹ்மேதி சேத வேத -அன்று னான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –அசித் சம்பந்தம் -அசந்நேவ பவதி
-இவை கிட்டமும் வெட்டு வேளானும் போலே -சத்தா ஹானியை உண்டாக்கும் -விலஷண ஜ்ஞான குணகமாய் ஸ்வயம் பிரகாசகமான வஸ்து என்று
இதின் சீர்மை பாராதே ஜ்ஞானம் லேசம் அறத்த தின்று சத்தா ஹானியைப் பண்ணும்
அணைய ஊரப் புனைய -பெரு மக்கள் உள்ளவர் –அசந்நேவ –சந்தமேதம் தத-என்பதாக வேண்டாத படி என்றும் ஒக்க உளராய் உள்ள நித்ய சூரிகள்
தன்னை ரஷிக்கை -தன்னைத் தானே முடிப்பான் -அசந்நேவ -சர்வேஸ்வரன் இவனை உஜ்ஜீவிப்பைக்கு அவசர தீஷனாய்ப் போருகையாலே
இவனுடைய வினாசத்துக்கு அவன் ஹேது வன்று
தன ஸ்வரூபம் ஸ்வ தந்த்ரம் என்கிற நினைவால் அசந்நேவ என்றபடி ஸ்வரூபம் இல்லையே விடும் –
ஆகையால் சேஷத்வம் இல்லாத பொழுது ஸ்வரூபம் இல்லை என்னத் தட்டில்லை இ றே

நும்மைத் தொழுதோம் –
தேவதாந்த்ரங்கள் அந்தர்யாமித்வம் தொழுதோம் அல்லோம் -அசாதாரண விக்ரஹ விசிஷ்டன் அன்றோ
விஷயாந்தரங்களை விட்டு உம்மை யன்றோ தொழுதோம்
உம்மைப் பிரிந்து ஆற்றி இருக்க வழி இல்லையே
நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம் -கைங்கர்யம் செய்யப் பிறந்த குடியில் அன்றோ நாம் உள்ளோம் -நியமிக்க வேண்டாமா -என்றவாறு
இம்மைக்கு இன்பம் பெற்றோம் –ந போதாத் அபரம் ஸூ கம் -என்றபடி சேஷி சேஷ பூதன் ஞானம் பெற்ற நான்-முறை அறியப்  பெற்றவன் அன்றோ துடிக்கிறேன் என்றவாறு –
எதிர்மறை விபரீத லஷணை யாகவுமாம்
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கிற எங்களுக்கு விடாய்த்த இடத்தே அழகியதாய் தண்ணீர் வார்த்தீர் என்று நொந்து சொல்லுகிறபடி
எந்தாய் இந்தளூரீரே-பரமபதத்தை விட்டு படு கொலை அடிக்கவா இங்கே எழுந்து அருளினீர்
எம்மைக் கடிதாக் கருமம் அருளி -சேஷத்வ ஜ்ஞானத்தை பிறப்பித்து அருளின தேவரீரே சேஷத்வத்துக்கு தகுதியான குற்றேவலிலே நியமித்து அருள வேணும்
பிரானே உன்னைக் காணவே அருமையாக இருக்க கைங்கர்ய பிரார்த்தனையும் செய்யும் அடியேன் பேதைமை தான் என்னே
ஆவா வென்று இரங்கி நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே
இரக்கமே கார்யகரம் என்றவாறு
தொழுதோம் என்று வளைப்பிட ஒண்ணாது காணும் -அபிமதம் பெருகைக்கு இரக்கமே வேணும்
ஈற்றடியில் -நம்மை என்றது தேவரீரை
காட்டி நடந்தால்புறப்பாடு சேவையில் அபிமதம் விளங்கும்

அஜச்ர சஹச்ர கீதீ ஸே கோத்த திவ்ய நிஜ சௌரபம்-திருப் புன்னை -தீர்த்தங்கள் ஆயிரம் – சஹச்ர கீதீ-எனபது திருவாய் மொழி –

தொழுதுயர் கையினன் துவண்ட மேனியன் அழுதழி கண்ணினன் அவலமீதென –
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவையென முறையில் சூடினான்
படித்தலம் இறைஞ்சினன் பரதன் போயினான் பொடித்தலம் இலங்குறு பொலம் கொண் மேனியான் –

என்னடியார் நன்று செய்தார் என்பர் போலும் —போலும் என்பதை நன்றே –என்பர் இரண்டிலும் அன்வயம் கொண்டு-
அணியார் வீதி யழுந்தூர் எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
என் அடியார் அது செய்யார் -முதல் வார்த்தை -செய்தாரேல் நன்று செய்தார் -இரண்டாம் வார்த்தை
பகவத் அடியார்கள் பாவம் செய்யக் கூசுவார் -முதல் வார்த்தை -ப்ராமாதிகமாக செய்தாலும் வாத்சல்யத்தால் நன்றாக கொள்வான் என்றபடி

கருணா காகுத்ஸ்த -குண பரிவாஹாத்மானம் ஜன்மானம்-பரதுக்க அசஹிஷ்ணுதா தயா -அடியார்க்கு ஆஆ என்று இரங்கி –
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய்
குற்றம் செய்பவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -ஐந்து விஷயங்கள்
அபராதத்தை சஹித்துபிரதிகிரியை பண்ண நினையாமலும் நெஞ்சு கன்றாமலும் இருக்க வேணும் –
நாம் பொறுத்து இருந்தோமே யாகிலும் எம்பெருமான் உசித தண்டம் பண்ண வன்றோ புகுகிறான் இதுக்கு என் செய்வோம் என்று
பர துக்க அசஹிஷ்ணுத்வம் -என்பதே கிருபை
சிரிப்பு -அதருஷ்ட விரோதமாக இவர்களால் செய்யலாவது ஓன்று இல்லை இ றே -பாருஷ்யாதி முகத்தாலே க்யாதி லாபாதி திருஷ்ட விரோதங்கள் இறே
இவர்களால் செய்யலாவது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றிலே சபலராய் இவற்றினுடைய ஹானியைப் பற்ற
நெஞ்சாரல்  பட்டுத் தளர்வுதோம் என்று இருந்தார்கள் அன்றோ -இவர்களின் அறிவிலித் தனம் இருந்தபடி என் என்று பண்ணும் ஹாஸ்யம்
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலத்தோடும் கூடுவது இல்லை யான் -என்ற உறுதி திடமாக இவர்கள் தூஷணங்கள் ஹேதுவானத்தை
இந்த ஜடங்கள் அறிய வில்லையே என்ற ஹாஸ்யம் உண்டே
உகப்பு -தன்னைக் கண்டால் சத்ருவை போலே -சத்ருக்கள் மேலே பரிபவத்தை பண்ணினால் உகப்பு வரும் -தூஷிப்பவர்கள் தமது பிரதி கூலங்களான
சரீரம் போக்கினால் உகப்பு உண்டாகுமே
உபகார ஸ்ம்ருதி -அமர்யாத சூத்திர சலமதி -சொல்ல வேண்டி இருக்க நமது கார்யம் இவர்கள் செய்தார்களே என்கிற உபகார ஸ்ம்ருதி வேண்டுமே

துவளில் மா மணி –பதிகத்தில் உரை கொள் இன் மொழியாள் –எவ்வளவு வியாக்யானங்களும் கொள்ளும் படியான திருவாய் மொழி என்றபடி
விட்டிலங்கு செஞ்சோதி-அவயவ சௌந்தர்யத்தாலே என்னை தனதாக்கிக் கொண்டார் -காரண கோடியில்
பட்டர் -ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகாரத்தையும் விஷய கரித்த பின்பு பிறந்த ஔஜ்வல்யம் சொல்கிறார் -காரிய கோடியில் –

கிருஷ்ணன் -திருப் பாண் ஆழ்வார்
நஷத்ர ஐக்யம் முநீந்த்ரஸ்துதவி பவதயா நத்யு பாந்த ப்ரியத்வாத்
ரங்கா வாசோத் ஸூ கத்வாத் அமல விமல வாக்தா நதோ வாஹ்ய பாவாத்
கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் வடதள சயன ப்ராஜ்ய கவ்யோ பபோக
ப்ராவண்யாத் பான ஸூ ரிர் விலசதி வா ஸூ தேவாத் மஜே நோப மேய –
ரோஹிணி –அத்தத்தின் பத்தா நாள் -நீ பிறந்த திரு வோணம்-திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரி யுருவாகி -ரோஹிணியே திருவவதார நஷத்ரம் –

முனி ஸ்துதி விஷயததா -இந்திர ஸ்துதி விஷயததா –
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து -கோவிந்த பட்டாபிஷேகம்
லோக சாரங்க முனிவர் -முநீந்த்ரர் வந்து ஸ்துதி செய்த சாம்யம்
காளீந் தீர சீசாய -யமுனை கரையிலே வாசம் செய்வதில் ஆசை கொண்டவன் –விரஜா தீரம் சரயு தீரம் -காவேரி தீரத்தில் ஆழ்வார் குடில் உண்டே
ரங்க வாச உத்சாகத்வாத் -ரங்கம் கூத்தாடும் இடம் –கூத்தாட வல்ல எம் கோவே –அண்டர் கோன் அரங்கன் –மற்று ஒன்றினைக் காணாவே
அமல விமல வாக்தா நத-அத்யந்த நிர்மலன் -அமோக வாக்குகளை அருளினவர் அமலன் விலஅமலன் நிமலன் நிர்மலன் -அருளினவர்
வாஹ்ய பாவாத் -வஹிக்கப் படுபவர்கள் பறவை ஏறும் பரம் புருடன் –உரியில் உள்ள வெண்ணெய் கொள்ள பிள்ளைகளால் வஹிப்பப் பட்டவன் –
முனி ஏறித் தனி புகுந்து -பாட்டினால் கண்டு வாழும் பாணர்
கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் -கீதா சாஸ்திரம் -நம் பாடுவான் போலே இசையால் பாடி அருளி
வடதள சயன ப்ராஜ்ய கவ்யோப போக ப்ராவண்யாத் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் -வெண்ணெய் உண்ண அபி நிவேசம் கொண்டவன்
ஆல மா -கொண்டால் வண்ணன் -பாசுரங்கள் அருளி –இப்படி எட்டு சாம்யங்கள்

கலௌ வேங்கட நாயக -உறுகின்ற கன்மங்கள் மேலன வோர்ப்பிலராய் இவளைப் பெறுகின்ற தாயார் மெய்ந்நொந்து பெறார் கொல்
துழாய் குழல் வாய் துறுகின்றிலர் தொல் வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் இறுகின்ற தாளிவளாகம் மெல்லாவி யெரி கொள்ளவே
திருத் துழாய் கொணர்ந்து சூட்டினால் நோய் தீருமே –
வேங்கடம் ஆட்டவும் -நீராட்டவும் பொய்கையாக நினைத்து -வேண்டிக் கொண்டு மஞ்சள் துணியில் முடிந்தாவது வைக்கலாமே -என்றவாறு

பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய
பெருவடி யுயர்ந்த மாயோன் மேக்குறப் பெயர்ந்த தாள் போல்
உருவறி வடிவின் உம்பர் ஓங்கின அவன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் –கம்பர் ஸ்ரீ வைஷ்ண திருவடி உபயோகித்தால் பட்டர் காலத்தவர் என்பர்
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறும் அன்பர் ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றோம் -என்று சடகோபர் அந்தாதியில் அருளி இருப்பதால்
ஆகையால் பட்டர் காலம் கி பி 12 நூற்றாண்டில் கம்பர் காலம் என்று நிர்ணயிப்பார்

சதுர முகனார் வேள்வி தனிச் சதிர் கெடுக்கச் செறிந்து ஓடும் கதியுடைய வேகவதிக்கு அணியாக வந்து உதித்தோய்-
ஸ்ரீ யதோத்தகாரி ஸ்தோத்ரம் -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்தது –
ஏவம் வேகவதீ மத்யே ஹஸ்தி சைலெ ச த்ருச்யதே உபாய பல பாவேந ஸ்வயம் வ்யக்தம் பரம் மஹ–1-
ஈஷ்டே காமயிதும் பாரம் ஏஷ சேதுர பங்குர யத்ர சாரஸ்வதம் ஸ்ரோதோ விஸ்ராம்யதி வீஸ்ருங்கலம் -2-
அம்ருதாஸ் யைஷ சேது -பாரம் கமயிதம் ஈஷ்டே -சம்சாரம் உத்தரிப்பிக்க வல்லது
ஜயது ஜகதேக ஸேதுர் வேகவதீ மத்திய லஷிதோ தேவ
பிரசமயதி யா பிரஜா நாம் பிரதிதான் சம்சார ஜலதி கல்லோலான் –3-
சதுராநந சப்த தந்து கோப்தா சரிதம் வேகவதீ மசௌ நிருத்தன்
பரிபுஷ்யதி மங்களா நி பும்ஸாம் புகவான் பக்தி மதாம் யதோத்தகாரீ-5-
விபாது மே சேதசி விஷ்ணு சேது வேகாபகா வேகவிகாத ஹேது
அம்போஜ யோ நேர் யது பஞ்ஞ மாஸீத் அபங்க ரஷர ஹயமேத தீஷா–6-
ஸ்ரீ மான் பிதாமஹ வதூ பரிசர்ய மாண சேதே புஜங்க சயனே ச மகா புஜங்க
பிரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் பிரஜா நாம் பக்த அநு கந்த்ரிஹ யஸ்ய கதா கதா நி –6-
ப்ரசமித ஹயமேவ தவ்யாபதம் பத்ம யோ ந ஸ்ரீத ஜன பரதந்த்ரம் சேஷ போகே சயானம்
சரணமுபக தாஸ் ஸ்ம சாந்த நிச்சேஷ தோஷம் சதமகமணி சேதும் சாஸ்வதம் வேகவத்யா –7-
சரணமுபகதா நாம் சோயமாதே சகாரீ சமயதி பரிதாபம் சம்முகஸ் சர்வ ஜந்தோ
சத்தகுண பரிணாம சன்னிதௌ யஸ்ய நித்யம் வர விதரணபூமா வாரணாத் ரீஸ்வரஸ்ய-8
காஞ்சி பாக்கியம் கமல நிலையா சேத சோ பீஷ்ட சித்தி கல்யாணா நாம் நிதிர விகல கோபி காருண்ய ராசி
புண்யா நாம் ந பரிண திரசௌ பூஷயன் போகி சப்யாம் வேகா சேதுர ஜயதி விபுலோ வீச்வர ஷைகஹேது–9-
வேகா ஸே தோரிதம் ஸ்தோத்ரம் வேங்கடேஸேந நிர்மிதம்
யே படந்தி ஜ நாஸ் தேஷாம் யதோக்தம் குருதே ஹரி –10-

பொய்யிலாத மணவாள மா முனி —பொய்யிலாத பொன் முடிகள் எய்த வெந்தை –பொய்ம்மொழி ஓன்று இலாத மெய்ம்மையாளன் -திருமங்கை யாழ்வார்
பொய்யா நாவின் மறையாளர் வாழும் இடம் புள்ளம் பூதம் குடி -பொய்யில் பாடல் திருவாய்மொழி –
—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: