ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -5–

ஸ்ரீ மனு ஸ்ம்ருதி –யாமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்தித -தேன சேத அவிவாதஸ் தி மாம் கங்காம் மா குரூன் கம –
அவன் சம்பந்தம் உணர்த்து -அஹம் மே நினைவு இல்லாமல் த்வம் மே-என்றால் கங்கா தீர்த்தம் குரு ஷேத்ரம் போக வேண்டாமே
தவம் மே அஹம் மே குத்ஸ் தத் ததபி குத இதம் வேத மூல பிரமாணாத்-ஏதச் சாநிதி சித்தாத அனுபவ விபவாத் சோபி சாக்ரோச ஏவ
க்வாக்ரோச கஸ்ய கீதா திஷூ மம விதித கொத்ர சாஷி ஸூதீ ஸ்யாத்-ஹந்த த்வத் பஷபாதீ ச இதி நருகலஹே ம்ருக்ய மத்யச்தவத் தவம் –
த்வம் மே தாச த்வம் மே பிரபு -என்றபடி -வேத மூல பிரமாணாத் -பதிம் விஸ்வஸ் யாத்மேச்வரம் -ஷரம் பிரதானம் அம்ருதாஷரம்
ஹர ஷராத்மா வீசதே தேவ ஏக -பிரமாணங்கள் உண்டே
கீதா மூலம் சேதனன் ஸ்வாதந்த்ரம் ஆஷேபத்தோடே கூடியது என்று சொல்லியது உலக பிரசித்தம் அன்றோ
-சாஷி ஸூ தீச் ஸ்யாத் உண்டே என்கிறார் –
த்வத் பஷபாதீ -ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் சொல்லி உள்ளேயே -பிரமாணம் பண்ணிக் கொடுக்கிறான்
–சொத்து தன்னது என்ற திண்ணமான நம்பிக்கை கொடுக்க –

என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையே –கண்ணபிரான் தானே சோதி வாய் திறந்து அருளி அடித்ததும் அன்புற்றதனால் –அனைவர்க்கும் காட்டினதும் அன்புற்றதனால் -யசோதை செய்தது எல்லாம் ப்ரேமம் அடியாகவே என்றவாறு
கையைப் பிடித்து கறை உரலோடு என்னை காணவே கட்டிற்று இலையே -காண -என்னுடைய சௌலப்யத்தை அனைவரும் காண வேண்டும் என்றபடி

மதியில் நீசரவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே —மதி இல்லாத நீசரவர்கள் சென்று அடையக் கூடாதவனுக்கு
மதியில் நீசரவர் சென்றடை யாதவனுக்கு இடம் -நீசர்கள் சென்று அடையும்படியான யாதவனுக்கு இடம் -யது குலோத்பவனுக்கு —
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் -இரண்டாம் திரு -50-

சந்திர காந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
–ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமா நோ நராதிப —
ரூபம் என்ன ஔதார்யம் என்ன -சாதாராண அர்த்தம் -நம் பூர்வர்கள் -ரூபம் என்கிறது வடிவு அழகை-ஔதார்யம் –
அத்தை எல்லாரும் அனுபவிக்கும் படி சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டு திருவவதரிக்கை
அதுக்கும் மேலே -ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தை –
-தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மகா பலௌ புண்டரீக விலாசாஷௌ-
உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-
ஞாலத்து புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை

இந்நீணிலத்தே எனையாள வந்த இராமானுசனை இரும் கவிகள் புனையார் –ஸ்ரீ சைல தயா பாத்ரம் -தனியன் பெற்ற மகாத்மயம்
முதல் சைலம் ரிஷ்யமுக பர்வதம் –அதற்கு ஈசர் மதங்க முனிவர் அவர் தயைக்கு பாத்ரம் ஸூ க்ரீவன் -ஸூ க்ரீவன் நாதம் இச்சதி
ஸூ க்ரீவம் சரணம் கத என்று பெருமாள் பற்றினாலும் நான்கு மாதம் -கோபிக்கவும் நேர்ந்ததே
அக்குறை தீர திருமலை ஆழ்வார் இன்னருளுக்கு இலக்கான மா முனிகள்
தீபக்த்யாதி குணார்ணவம் –சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –சாப மாநய சௌமித்ரரே — சாகரம் சோஷயிஷ்யாமி-
அந்தக் குறை தீர லவனார்ணவத்தை விட்டு தீ பக்த்யாதி குணார்ணவம் –ஞான பக்தி வைராக்யங்களுக்கு கடலான மா முனிகள் -என்றபடி
யதீந்திர பிரவணம் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமான் -தன்னை உற்றாட் செய்வதில் காட்டிலும் தன்னை உற்றாட் செய்யும்
தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை உற்று ஆட செய்வாரே சிறந்தவர் -அந்த யதீந்திர பிரவணரை இறைஞ்சுவோம்
வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -ராமன் விஸ்வாமித்ரர் -கிருஷ்ணன் சாந்தீபன் -பற்றிய குறை தீர சமஸ்த கல்யாண குணக் கடலாய்
விரகத அக்ரேசரான ரம்யா ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்த்துகிறேன் -என்ற தெய்வ வாக்கு

ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கு பிரயோஜனம் கேவல லீலை
லோகவத்து லீலா கைவல்யம் –ஜகத் சர்க்கே லீலைவ கேவ்லா பிரயோஜனம் –பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ பிரயோஜனம்
லீலையாவது தாதாத் விகாசம் ஒழிய காலாந்தரத்தில் வருவதொரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் இதுக்குப் பிரயோஜனம்
என்று சிருஷ்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனமாக ததாத் விகரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –என்றும் -ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம்
இதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை இது கேவல லீலையே –விசதவாக் சிகாமணி ஸ்ரீ ஸூ க்திகள்-

சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீயுக்மரஷா ப்ரவ்ருத்த -ஸ்ரீ மத் ரம்ய வரஜா  முனி நாம் சௌம்ய ஜாமாத்ரு தாஞ்ச
விந்தத் த்ருப்யத்விமத படலீபாட நோத்தாம ஸூ க்தி-பூயாத் பவ்ய பிரதித மஹிமா ஸ்ரேயசே பூயசே ந

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது என்றீரே
-திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் என்று கலக்கம் தீர்ந்தார்
உண்டாய் உலகு ஏழும் முன்னமே -மண்ணும் கரைந்து வெளிவிட உண்டேன் –நெய்யூண் மருந்தோ
ஆஸ்ரித ஸ்பர்சம் த்ரவ்யத்தால் அல்லாது தரியேன்
நீர் உம்மைக் கொண்டு அகல்வீர் ஆகில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் யூண் விலக்கினார் புக்க லோகம் புகுவீர்

பயிலும் சுடர் ஒளி-ஸ்வ ஸ்வரூப பிரதிபாதன பரம்
என்றும் -நெடுமாற்கு அடிமை புருஷார்த்த ஸ்வரூப பிரதிபாதனம் –
பகவத் சேஷத்வத்திலும்தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே உத்தேச்யம் என்று பிரதிபாதித்த பயிலும் சுடர் ஒளியும்
–பாகவத கைகர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த நெடுமாற்கு அடிமையும் -மா முனிகள்

ஸ்ரீ தேவப் பெருமாள் மணவாள மா முநி திருமஞ்சனக் கட்டியம்
காஷாய சோபி கம நீய சிகோ நிவேசம் -தண்டத்ரய உஜ்ஜ்வலகரம் விமல உபவீதம்
-உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்வ புண்டரீம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே —
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீர் ஏற ஓட்டிச் சிறந்தடியேன்
ஏதத்தை மாற்றும் மணவாளி யோகி இனிமை தரும் பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ
ஸ்ரீ பூப்யாம் ரங்க நாத சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோஷ யிஷ்வான் வரவர முநி தாம் ப்ராப்ய யோ வர்த்ததேக்ரே
காஷாய ஸ்ரீ துலஸ்யம்புஜ மணி ஸூ சிகா யஜ்ஞ ஸூ த்ர த்ரிதண்டை
பாந்தம் சுப்ரேர்த்வ புண்டரம் ஸ்மர ஹ்ருதய சதா கோச முதராங்க ஹஸ்தம் –
அரங்க நகரீடு தனை யளித்து அருளும் பெருமாள் -அழகான குருகூரில் அவதரித்த பெருமாள் -அரவரசப் பெரும் சோதி யநந்தன் என்னும் பெருமாள்
அருள் அரங்கர் ஸ்ரீ சைலம் ஏத்த வந்த பெருமாள் -இரவு பகல் எதிராசர் அடி மகிழும் பெருமாள் -இந்நிலத்தில் பிறவிதன்னை இகழ்ந்து உரைக்கும் பெருமாள்
திரமாக திக் கஜங்கள் இட்டருளும் பெருமாள் தேவபிரான் அடி இணையில் அன்பு பூண்ட பெருமாள் நம் மணவாள முனிப் பெருமாள்
தேவரீருடைய திருவடித் தாமரைகளின் போக்யாதிசயத்துக்கு ஒரு போலியாக -கம்பீராம்பஸ் சமுத்பூத ஸூ ம் ருஷ்ட நாள ரவிகர
விகசிதமான தோர் செந்தாமரைப் பூவை அதனுடைய கர்வ சர்வஸ்வ நிர்வாண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி
அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும்
பங்கஜ ரஜசும் பாதாருந்ததுமாம் படி சேடீ ஜன லோசன சர்ச்சாசஹ சௌகுமார்ய சாலி நிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும்படி
புஷ்ப ஹாச ஸூ குமாரரான பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய் அத்யந்த ஸூ குமாரரான தேவரீருக்கு
ஆசனமாய்க் கொண்டு தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு ஸ்வ தாஸ்ய அர்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுகைக்காக தத் தாச்யாந்தரத்திலே
சொருகியிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடத் திருவடிகளும்
–அன்புடனே அண்ணலுக்கு அடிமை பூண்ட வேர்வை ஆறவோ-அழல் சரத்தால் இந்திரசித்தை அளித்த வேர்வை ஆறவோ
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ அரவரசர் அடியிணையில் அன்பு பூண்ட வேர்வை யாறவோ
-அருளாலே அடியார்க்கு ஈடு அளித்த வேர்வை யாறவோ அடிக் கொதிப்பால் இந்நிலத்தில் ஆர்த்தி யுரைத்த வேர்வை யாறவோ
அருளாளர் கச்சிதனில் அடியோங்களை அளித்த வேர்வை யாறவோ அனவரதம் வ்யாக்கியைகள் அளித்த களைப்பு ஆறவோ
-தேவரீர் திருமஞ்சனம் ஆடி அருளுவதே

தேவப்பெருமாள் சந்நிதி நம்மாழ்வார் திரு மஞ்சன கட்டியம்
மறைப்பால் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறைப் பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே
நல்லார் நவில்கின்ற நன் குருகை மா நரிலே நலமாக நாம் உய்ய வந்துதுத்த பெருமாள்
நன்னார் அரண் நீங்க மற்ற ஆறும் உற்ற துணை யன்றே நமக்கு என்று உரைத்த பெருமாள்
கல்லாத வாதிகளும் அல்லாத மாயிகளும் நில்லாது நீக்கி யருள் நல்ல பெருமாள்
கலை வலவர் பலர் வாழும் கச்சியில் கரிகிரி கீழ் கோயில் கொண்டு அடியாரை யருளும் பெருமாள்
எல்லாரும் உய்ய என நல்லான நான் மறையைச் சொல்லால் தொகுத்து அருள வல்ல பெருமாள்
ஏரார்ந்த மதுர கவி தாரார்ந்த மணி முடி மேல் சீரார்ந்த அடியிணையை அருளும் பெருமாள்
நல்லான நாத முனிக்கு எல்லாப் பொருள்களையும் சொல்லார வாழ்த்தவே சொன்ன பெருமாள்
நாதனுக்கு நாலாயிரம் உரைத்த குரு வென்று நால் திசையும் நலமாக போற்ற நின்ற பெருமாள்
கருவிருத்தக் குழி நீத்து காமக் கடும் குழி வீழ்ந்து ஒரு விருத்தம் புகாமல் திரு விருத்தம் உரைத்த பிரான்
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்த ஆச்ரியப்பா அதனால் அருமறை நூல் விரித்த பிரான்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சுடனே நயப்புடைய யந்தாதி நா வீன்ற நா வலவா
அவாவறச் சூழ் அரியாடி மேல் அவாவில் அந்தாதி களால் அவாவில் ஆயிரம் உரை செய்து அவா வற்று வீடு பெற்றாய்
அல்லலன்ன குழலும் அகன்ற முகமும் வில்லன்ன புருவமும் விசால நயனமும்-எள்ளுப்பூ நாசியும் இணை வள்ளக் காதும் சொல் பிரணவ மொழியும்
சிவந்த அதரமும் வெள்ளன்ன வேஷ்டியும் விளங்கு திரு முத்ரையும் நேரான புண்ட்ரமும் நிறைந்த மணி வடமும்
கதித்த துடையும் கணை முழம் தாளும் -பல்லவப் பழத்தை பழித்த விரலடியுமாய்
தேவரீர் திரு மஞ்சனம் கொண்டு அருள வீற்று இருக்கும் இவ்வழகு ஏதேனும் ஜகன் மோகனமோ -ஸ்ரீ வைஷ்ணவ சரவஸ்மோ
-வேள்வியின் பயனோ வேதாந்த விழுப் பொருளோ நாங்கள் ஈதொன்றும் அறியா இவ்வழகுடன்
அத்ரி ஜமதக்னி பங்க்திரத வ ஸூ நந்த ஸூ நுவானவனுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதி வதாவேசமோ முதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ
முன்னம் நோற்ற வனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று சங்கிக்கைக்கு உறுப்பான சிறப்புடன்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுக முநி சார்வ பௌமனெ

கஸ் தவம் பால பலா நுஜ-பயலே நீ யார் –பலா நுஜ அஹம் வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கு
இங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான் -பெரியாழ்வார் -10-7-4-
கிமஹி தே-மண் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவ நீத்த பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதம்
மா கா விஷாதம் பிரபோ
இத்யேவம் வனவல்ல வீ நிகதித கிருஷ்ணஸ் ச புஷ்ணுது ந
ஏலாப் பொய்கள் உரைப்பானே

நம்மாழ்வார் -இளைய பெருமாள் சாம்யம் –பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்தராய் இருப்பவர் –அறியாக் காலத்து அடிமைக் கண்
அன்புபெற்றவர் -பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நு ஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்தார் -ப்ராதா பர்த்தா ச பந்துஸ் ஸ் பிதா ச மம ராகவ -சேலேய் கண்ணியரும்
பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே என்று இருந்தவர்
நம்மாழ்வார் பரத ஆழ்வான் சாம்யம் -ஹன்யா மஹிமாம் பாபாம் கைகேயீம் துஷ்ட சாரிணீம் -உபேஷித்தால் போலே
-அன்னை என் சொல்லில் என் –உங்களோடு எங்களிடை இல்லையே -ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய போலே யானே நீ
என்னுடைமையும் நீயே என்று இருந்தார் கொள் என்ற கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு என்று திக்கரித்தார்
சித்ர கூடம் சென்றது போலே வேங்கட வாணனை வேண்டிச் சென்றார் -காமுற்ற கையறவோடு -மனோ ரதம் நிரம்பாமல் இருந்தார்
திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக்கண் கூட்டினை நான் கண்டேனே போலே அவரும் அடி சூடும் அரசு பெற்றார்
பங்க திக்தஸ் து ஜடிலோ பரத -போலே -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் –
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமை குற்றேவல் செய்து பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியாராய் தன்னை அனுசந்தித்தார்கள் இருவரும்
ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்-கச்சதா மாதுல குலம் -ப்ரதேன–நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமேவார்யம் விசிந்தயன்
-பரத ஆழ்வானுக்கு உகப்பு என்பதால் -இவரும் பாகவத சேஷத்வ நிஷ்டராய் இருந்தும் புலன் கொள் வடிவு என் மனதததாய் – என்னும்படி இருந்தார்
தசரத சக்ரவர்த்தி -ந ததர்ப்ப சமாயந்தம் பஸ்யம நோ நராதிப -போலே எப்பொழுதும் நாள் திங்கள் –ஆராவமுதமே என்று திருப்தி பெறாமல் அனுபவித்தார்
யசோதைப் பிராட்டி -யமளார்ஜுனோர் மத்யே ஜகாம கமலேஷண-போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
-அதீத காலிகங்களும் சம காலங்களைப் போலே அவள் பாவனையிலே பேசினார்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் -நாக்நிர் தஹதி நைவாயம் சஸ்த்ரைச் சின்னோ மகோரகை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-69-போலே
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் –அவன் எங்கும் உளன் பிரதிஜ்ஞ்ஞை போலே
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் –எண் பாலும் சோரான் பரந்துளன் எங்குமே என்கிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச –பரித்யக்த மயா லங்கா -போலே இவரும் பாதம் அடைவதன் பாசத்தாலே
மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு – -தயரதன் மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்று இருந்தார்
திருவடி ச்நேஹோ மே பரமோ ராஜன் –பாவோ நான்யத்ர கச்சதி –பேர் சொல்லவும் அசஹ்யமாய் போலே -இவரும் மற்று ஒன்றின்
திறத்து அல்லாத் தன்மை தேவபிரான் அறியும் -சுனை நாண் இல் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை ஓவாத ஊணாக உண்பவராய் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று இருந்தார்
அர்ஜுனன் -பஸ்யாமி தேவான் தவ தேவ தேக-விஸ்வரூபம் கண்டு வெறுப்புற்று கிரீடி நம் கதினம் சக்ர ஹஸ்த மிச்சாமி த்வாம்
–இவரும் -நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –அத்ருப்தராய் –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -அசாதாராண விக்ரஹ அனுபவ குதூகலத்தை காட்டி அருளினார்

இமாம் கன்யாம் தர்ம பிரஜார்த்தம் வ்ருணீமஹே -நாம் கன்கியை வரிக்கிறோம் -பெருமாள் சக தர்ம சரீதவ –
விதிதஸ் ச ஹாய் தர்மஜ்ஞஸ் சரணாகத வத்சலா —சர்வ அவஸ்த சக்ருத் பிரபன்ன ஜனதா சம்ரஷணைகவ்ரதீ தர்மோ விக்ரஹவான் \
சஹ தர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் –லஷ்ம்யா சஹ
ஹ்ருஷீகேசா தேவயா காருண்யா ரூபா ரஷக – -ராகவத்வேபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மிநீ அன்யேஷூ சவவதாரேஷூ
விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷி விஷ்ணோர் தேக அனுரூபம் வை கரோத்யேஷாத் மனஸ் தநூம்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர் -தக்கார் பலர் தேவிமார் சால வுடையீர் –

ஸ்ரீ கீதை முதல் அத்யாயம் முடிவு ஸ்லோஹம் -எவம் உக்த்வா அர்ஜுனஸ் சங்க்யே ரதோபஸ்த உபாவிசத் விஸ்ருஜ்ய ச சரம் சாபம் சோக சம்விக் நமா நச-
18-73-நஷ்டோ மோஹா ச்ம்ருதிர் லப்த்வா த்வத் பிரசாதான் மயாச்யுத ஸ்தி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -இதுவே கீதை

அலங்கார ததியாரதனை –இல்லை தளிகை -அலம் போதும் என்னும் வரை சாதிப்பது -விதியை கற்க –பணிந்து -என்பதை கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கி -கற்றவர் போலே என்னாமல் -வித்யைக்கு அழகு விநயம் என்று அறிந்தவர்கள் – என்றவாறு –வித்யை வினயத்தை தரும் -விநயம் சத்பாத்ரத்வத்தை தரும் -சத்பாத்ரம் ஆனவாறே சத்காரங்கள் பெறலாகும் -அதனால் தர்ம ருசி உண்டாகும் –அதனால் பேரின்ப வெள்ளம் பெருகும்

தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
நைமி சாரணியத்துள் எந்தாய் -1-6-9- போலே –அல்லி மாதர் புளக நின்ற ஆயிரம் தோழன் இடம் –சிங்க வேள் குன்றமே –1-7-10
-மிதுனத்தை மங்களா சாசனம் பண்ணி அனுபவிக்கிறார்
வேள்-யாவராலும் விரும்பப் படும் -என்றும் வேழ் -ஏழு குன்றங்கள் உடைய ஸ்தலம் என்றுமாம்

1-ஸ்ரீ யதே -கர்மணி வ்யுத்பத்தி -ஈஸ்வரனை தவிர அனைவராலும் சேவிக்கப் படுபவள் -ஈச்வரீம் சர்வ பூதானாம் –
மற்ற ஐந்தும் கர்த்தரி வ்யுத்பத்திகள் –2-ஸ்ரேயதே-தனது ஸ்வரூபம் நிறம் பெறவும் கர்ம அநு பத்த பலதான ரதச்ய பர்த்து
-சேதனர் அபராத பாஹூள்யத்தைக் கண்டு தான் இல்லாமல் இருந்தால் அனர்த்தம் விளையும் என்றும்
3-ஸ்ர்ணோதி -அடியார் விண்ணப்பங்களை செவி சாத்துக்கிறாள் -புருஷகார பிரபத்தி -ஸ்ரயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத்ர்த்தே
-4- ஸ்ராயவதி -உசித சமய்ம் பார்த்து -ரமயா விநிவேத்யமாநே -இங்கு மணவாள மா முனிகள் ஸ்ரீ ஸூ கதிகள்
-இச் சேதனனுடைய அபராதங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ
-உமக்கும் இவனுக்கும் உண்டான சம்பந்த விசேஷத்தைப் பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது என்கிற படியே
குடநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமி யான உம்முடைய பேறாய் யன்றோ இருப்பது
-எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான்  சொல்ல வேணுமோ -ரஷண சாபேஷனாய் வந்த இவனை ரஷியாத போது உம்முடைய
சர்வ ரஷகத்வம் விகலமாகாதோ-அநாதி காலம் நம்முடைய ஆஜ்ஞ்ஞாதி லங்கணம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காகப் போன
இவனை அபராத உசித தண்டம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீ கரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ என்று அன்றோ
திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால் உம்முடைய கிருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-
அவை ஜீவித்ததாவது இவனை ரஷித்தால் அன்றோ -நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது கிருபாதிகள் ஜீவியாது
என் செய்வோம் என்று தளர வேண்டா சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி கிருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால்
இரண்டுமே ஜீவிக்குமே ஆன பின்பு இவனை ரஷித்து அருளுவீர் என்று உபதேசிப்பாள் ஆயிற்று
ஸ்ராவயதீதி ஸ்ரீ -ஸ்ராவயித்ருத்வம் உபதேச கர்த்ருத்வம் -சேதனனை நோக்கி உபதேசத்தால் திருத்துகிறாள் என்றுமாம்
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை

நந்தகோபன் குமரன் –காக்கும் இயல்வினன் கண்ணனுக்கும் ஒரு ரஷகன் -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் –
-உயிர் அளிப்பான் என்நின்ற இனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து -அவதார கந்தம் என்பதால் வித்து —ஷீர சாகர தரங்க சீகரா சாரதா ரகித சாரு மூர்த்தயே
போகி போக சய நீய சாயிநே மாதவாய மதுவித் விஷே நம-இந்த ஸ்லோகத்தை இரவில் சயனிக்கும் பொழுது அனுசந்திப்பர்-
காலையில் எழுந்து இருக்கும் பொழுது -பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினாயே -என்ற பாசுரத்தை அனுசந்திப்பர்
இத்தையே -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை – முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து -என்று அருளிச் செய்கிறாள் –

ஏஷ சர்வச்ய பூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத மயா காலமிமம் பிராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1-14-திருவடிக்கு கிடைத்த ஆலிங்கனம்
தம் சமுத்தாப்ய காகுத்ச்தஸ் சிரச் யாஷி பதம் கதம் அங்கே பரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -யுத்த -130-38- பரத ஆழ்வானுக்கு கிடைத்த ஆலிங்கனம்
சோப்யே நம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருதசிஹ் நேந பாணி நா சம்ச்புருச்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-18-2-
க்ரூரருக்கு கிடைத்த ஆலிங்கனம் –பரத அக்ருர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே -ஆசார்ய ஹிருதயம்

தொண்டை வாய்க் கேகேயன் தோகை கோயின் மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்-பண்டை நாள் இராகவன் பாணி வில்
உமிழ் உண்டை உண்டதனைத் தன உள்ளத்து உள்ளுவாள் -கம்பர் -அயோத்யா காண்டம் மந்தரை சூழ்ச்சிப் படலம்
கூனே சிதைய யுண்டை வின்னிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யேல் மற்றின் நெறியிகந்து யானோர் தீமை இழைத்தால்
உணர்ச்சி நீண்டு -குறியதா மேனியாய கூனியால் குலவுத் தோளாய் வெறியன வெய்தி நோய்தின் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன் -கிஷ்கிந்தா -அரசியல் படலம்
ஸூக்ரீவனுக்கு முடி சூட்டி ஹித உபதேசம் செய்த பெருமாள் வார்த்தை –வால்மீகி ஸ்ரீ ராமாயணம் இதிஹாச புராணங்களில் இல்லாத
அருளிச் செயல்களில் உள்ளதையே கொண்டு கம்பர் அருளிச் செய்கிறார்

ஆழ்வார்கள் கண்ட பஞ்சாமிர்தம் –
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தையில் ஆராவமுதே -ஆராவமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
-கொண்டல் வண்ணன் கோவலனாய் வென்னி உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தான் அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுது –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே திருவேங்கடத்து எம்பெருமானே
-எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே
மன்னு குரும்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே -கண்ணபுரத்து அமுதே –

மோஷம் -கதாஹமை காந்திக நித்ய கிங்கர பிரகர்ஷயிஷ்யாமி -ஒழிவிலா காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்வதே
-வருத்தமும் தீர்ந்து மகிழ்வதே –போர்த்த பிறப்போடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கி —
தன் தாளின் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி -என்று அருளிச் செய்தார்கள் இ றே-

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள் -உபய வேதாந்திகள் -மா முனிகள் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களினால் மகிழ்ந்தமை
-விசதவாக் சிகாமத்வம் வீறு பெற அருளிச் செய்த வ்யாக்யானங்கள் -இவரது தேஜசால் தேஜஸ் பெற்றவை
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள் -நித்ய சூ ரிகளில் காட்டிலும் -என்றவாறு யத் அவதரண மூலம் முக்தி மூலம் பிரஜானாம்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள் –எம்பெருமானார் திரு உள்ளப்படி பிரமாண பிரமேய பிரமாதாக்கள் விஷயத்திலே
பிரதிஷ்டமாக்கி அருளினார் இதனால் எம்பெருமானார் வாழ்வு இன்றே முளைத்திட்டது –
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபர் கலைகள் விளங்கிடு நாள் நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே-சுடரிபு முனி சிருஷ்ட ஆம் நாயா சாம்ராஜ்ய மூலம்
காரமர் மேனி அரங்கர் நகர்க்கு இறை கண்கள் களித்திடு நாள் –ஆசார்ய பூர்த்தி என்று சிஷ்ய வ்ருத்தியை வஹித்து இவர்
திருமேனியைக் கண்ணாரக் கண்டு களித்தான் கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அரங்கன்

சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச அவிரோபிதவான் ஸ்ருதேரபார்த்தான் ந நு ராமா வரஜஸ் எஷ பூத –யதிராஜ சப்தத்தி
சிறைக்கூட அவதாரம் சம்சார மண்டல அவதாரம் -ஜ்ஞான சுடர் வெள்ள விளக்கு -சங்கு சக்ர கதாதரர் -வடமதுரை ஆய்ப்பாடி த்வாரகை –
ஸ்ரீ பெரும்பூதூர் ஸ்ரீ காஞ்சி -ஸ்ரீ ரெங்கம் திருநாராயணபுரம் -திருமந்தரம் த்வயம்
ஜானுமாத்ரோ தகோ யயௌ-யமுனை முலம் தாள் வற்றிக் காட்டியது போலே இவரால் பிறவிக் கடல் வற்றுமே
திருவடி சம்பதத்தால் சகட பங்கம் -சகடம் வழி அர்ச்சிராதி கதி அருளி -த்வந்த்வைர் விமுக்தாஸ் ஸூ க துக்க சம்ஜ்ஞை
ஏழு உலகம் கண்டால் வாயுளே -சுருதி ஸ்ம்ருதி இதிகாசங்கள் புராணங்கள் பாஞ்சராத்ரங்கள் ஆகமங்கள் அருளிச் செயல்கள் ஆசார்ய திவ்ய ஸூ க்திகள்-
இப்படி பல ஒற்றுமைகள் பலராமானுஜனுக்கும் ராமானுஜருக்கும் –

ஸ்ரீ தேசிகன் -திருவவதாரம் -திருத் தண்கா -திருத் தகப்பனார் சோமயாஜிகள் -திருத்தாயார் -தோதாத்ரி யம்மை
ஆசார்யர் மாதுலர் கிடாம்பி அ-ஸ்ரீ வேங்கட நாதன் -திருக்கண்டம்-திரு மணி அம்சம் –1268-சாலி வாகன வர்ஷம் -விபவ சம்வத்சரம்
நடதூரம்மாள் ஆம் முதல்வன் கடாஷித்து அருளினார் –

அஞ்சலீம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ நதே-கருணை யம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி
-ஒரு கடல் ஒரு கடலோடு ஸ்பர்சித்தித்து கிடந்தால் போலே இருக்கை –

பண்டு பண்டு –சம்ச்லேஷிப்பதற்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாகப் பார்த்தி கோளாகில்-கலக்கப் புக்க வன்று தொடங்கி
மெலிவுக்கே இறே கிருஷி பண்ணிற்று -அவன் வாய் புலற்றும் நிறம் அறப் பண்டு போலேயாம் -கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இ றே
கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாதே பூர்ணையாய் இருந்த நிறம் போலேயாம் –

ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம் ஈதலே கடப்பாடு எனபது இயம்பினீர் என்பால் வைத்த காதலான்
இனி வேறு எண்ணக் கடவது என் கதிரோன் மைந்த கோதிலாதானை நீயே என் வயிற் கொணர்தி என்றான் -கம்பர்
அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையாலர செய்திய மைந்தரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ யுமிழ்கின்றன
செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ -ஆழ நெடும் திரை யாறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழைமை வேடன் நிறத்திலன் என்றனை ஏசாரோ –பகவத் விஷயத்தில் காதல் கொண்டார் அதி சங்கை பண்ணுவதை குகன் பரத ஆழ்வான் பக்கலிலும் கண்டோமே
தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத் அகர்ஹிதம் -பெருமாள்

திருக் கோவலூர் -தப்பாக திருக் கோவிலூர்/திரு இந்தளூர் -தப்பாக திரு விழந்தூர்-திருவை இழந்த ஊர்
திருத் தண் கால் -தப்பாக -திருத் தங்கல் – விளக்கொளி பெருமாள் திருத் தண்கா –

பகவான் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே கீதைக்கு உத்கர்ஷம் -அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்து அவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு-

போக்தும் தவ ப்ரிய தமம் பவதீவ கோதே -ஸ்ரீ கோதா ஸ்துதி -ஆண்டாள் மற்ற ஆழ்வார்களுக்கும் வழி காட்டி –தாய் மகள் தோழி அநு காரங்கள் இவளைப் பின் பற்றி ஆழ்வார்கள் அருளிச் செயல்
மின்னனைய நுண்ணிடையார் இன்னிசைக்கும் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய்

அஞ்சிலே ஓன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஓன்று ஆறாறாக ஆரியர்க்காக அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு
அயலார் ஊரில் அஞ்சிலே ஓன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் –கம்பர்
கடலை தாவி–பூமி மாதா வைக் கண்டு தீயை வைத்து வாயு பெற்ற பிள்ளை –
உள்ளுறை பொருள் –பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாதம வஸ்துவை ஜனிப்பித்து
இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி
-மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்
ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்
ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை சேறார் வயல் தென் குருகூர்ச் சடகோபன் -வயல் வளத்துக்கும் குவலயா பீடத்துக்கும் சேர்த்தி
-சேறு மிக்கு இருப்பதால் வயல் வளம் தமிழர்கள்
பிரதி பஷம் போனவாறே சம்ருத்தமான திரு நகரி -குவலயா பீடமோ திரு நகரியில் உழுவது நடுவது ஒட்டாதாக கிடந்தது
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் -கம்ச விஜயத்துக்கு திரு நகரியிலே கொடி கட்டி யாயிற்று
கொடி யணி நெடு மதிள் கோபுரம் ஆழ்வார் போல்வார் எழுந்து அருள கொடி கட்டியதாக வியாக்யானம்
மீன் நோக்கு நீள் வயல் சூழ் வித்துவக் கோடு-கடலில் மத்ச்யங்கள் கடல் வற்றினால் நமக்கு புகலிடம் என்று நினைத்து இருக்கும் தேசம்

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -1-9-8-ஆவி என்று ஆத்மா -ஆக்கை என்று சரீரம்
-அர்த்தத்தையும் சப்தத்தையும் சொல்லுகிறது -ஆக சப்தார்த்த சம்பந்த நியமம் அவன் இட்ட வழக்கு என்கிறது
அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும் -வாச்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம்வாச்யன் திரு நாமத்தை விட்டு பிரிந்திலன்
-பிரபாவன் ஆகச்தனாய் இருந்தாலும் பிரபை நம்முடைய கிருஹாங்கணத்திலே இருந்து வெளிச்சம் தரும் -புஷ்பம் பரோஷமாய்
இருந்தாலும் பரிமளம் பிரத்யஷமாய் இருந்து கழலும் -பிரபத்தவ்யன் கண் காணாமல் நின்றாலும் பிரபத்தி கரச்தமாய் இருந்து கார்யம் செய்யும்
-த்யேயன் சிந்தைக்கு கோசரம் அல்லாமல் இருந்தாலும் த்யானம் கைப்பட நின்று கார்யம் செய்யும் -ஸ்துத்யன்வாசமா பூமியாக இருந்தாலும் ஸ்துதி நாவினுள்
நின்று மலர்ந்து கார்யம் செய்யும் -நமஸ்கார்யன் கை விட்டாலும் நமஸ்காரம் கை விடாதே -பிஷக் வாராதே இருந்தாலும் பேஷஷம் வந்து கார்யம் செய்யும்

தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவு என்று உரையீரே -ஒரு குருகைக் குறித்து நிரதிசய போக்யரான தாம் போம் போது தம்மை வைத்துப் போக
வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்யுங்கோள்-தமக்கு அகல வேண்டில் இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று தம்மை வைத்து அன்றோ போவது
தம்மைக் கண்ணாடிப் புறத்திலே கண்டு அறிவரே -தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம் கைக் கொண்டது-

முந்துற்ற நெஞ்சே நயப்புடைய நாவீன் தொடை கிளவியுட் பொதிவோம் – நெஞ்சை நோக்கி நீயும் வேண்டா என்கிறார்
-உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா -நெஞ்சிலே ஊன்றி அனுபவிப்பைக்கு நீ உண்டாக அமையும்
-நெஞ்சு இன்றிக்கே கவி பாடப் போமோ என்னில் நெஞ்சினுடைய ஸ்தானத்திலே சர்வேஸ்வரன் நின்று கவி பாடுவிக்கும் என்று கருத்து

சங்கு சக்ர கதா பாணே -என்கையாலே –ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் சொல்லித்வாகரகா நிலய அச்யுத புண்டரீகாஷ-என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் சொல்லி -ரஷமாம் -என்கையாலே அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி
ரணாகதாம் என்கையாலே உபாய அத்யாவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது -இத்தால் லஜ்ஜா புரஸ் சரமாக
இதர உபாய த்யாகம் சொல்லி சித்த உபாயம் ச்வீகாரம் பண்ணுகைஅதிகாரி கிருத்தியம் என்றதாயிற்று-
சாஹம் –இவ்வருகு உள்ளவை ஒன்றும் தஞ்சம் அல்ல -நீயே ரஷகன் என்று இருக்கிற நான்
கேசக்ரஹம் ப்ராப்தா -சத்ருக்கள் வந்து என் தலை மயிரைப் பிடிக்கை யாகிற இப்பரி பாவத்தை அனுபவிக்கிறேன்
த்வயி ஜீவத்யபி பிரபோ -உன் சத்திக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தி இல்லை
பிரபோ -என்னைப் போல் கையும் வளையுமாய் இருந்து நான் இப்படி படுகிறேனோ -உன்னுடைய புருஷோத்தமத்வத்துக்கும்
சரணாகதையான நான் நோவு படுகிற இதுக்கும் என்ன சேர்த்தி உண்டு –ரஷமாம் சரணாம் கத –என்றவள் இ றே
சங்க -எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது நின் கைக்கு ஆபரணமாய் இருக்கவோ -என் மேல் வினை கடிகைக்கு அன்றோ
த்வாரகா நிலய -சங்க சக்ர கதா திவ்யாயுதங்களும் நானும் பரம பதத்திலே என்று சொல்லலாமோ -அவதரித்து அண்ணியையான நீ மீளவும் பரம பதத்துக்கு போனாயோ
அச்யுத -நீ இங்கே சந்நிஹிதனாய் வைத்து ஆஸ்ரிதரை எங்கே நழுவ விட்டாய்
கோவிந்த -பசுக்களை ரஷியேன் -வசிஷ்டாதிகளையே காண் ரஷிப்பேன் என்று சொல்ல வல்லையே -குறைய நின்றாருடைய ரஷணத்துக்கு
அபிஷேகம் பண்ணி இருக்கிறவன் அல்லையோ
புண்டரீகாஷ -குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே அக் கடாஷம் கொண்டு
நித்ய சூரிகளை நோக்க இருக்கிறாயோ -ஆனால் இப் பரிகரங்களைக் கொண்டு செய்யச் சொல்லுகிறது என் என்ன
மாம் ரஷ -நீ ஒருவனுமே ரஷகன் -என்னுடைய ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவர்களும் என்னோபாதி குழைச் சரக்கு என்று இருக்கிற என்னை ரஷி
சரணாகதாம் -நம்மை ரஷகன் என்று இருந்தாயோ -அவன் உரிகிற துகிலை நீயும் ஒரு கை பற்றா நின்றாயே என்ன -ஆகில் அதனை விட்டேன் என்கிறாள்
மாம் -அல்லாதாரை வ்யாவர்த்திக்கிறது -சரணாகதாம் என்கையால் தன்னை வ்யாவர்த்திக்கிறது
இவற்றால் திரௌபதிக்கு உபாயாந்தர சம்பந்தம் இல்லை -அவள் பிரபத்தி பலித்ததும் அறிந்தோம்

இத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் -இத்தை -திருமந்தரம்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர –திவ்யோ தேவ ஏகோ நாராயண -வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித —
சங்கீர்த்த்ய நாராயண சப்த மாதரம் -நாராயணேதி சப்தோஸ்தி- வண் புகழ் நாரணன் -செல்வ நாரணன் –வாழ் புகழ் நாரணன் –

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -என்கிறபடியே ச விக்ரஹனாய் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணும் -முகில் வண்ணன் என்கிற இது
ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள் பலரும் வியாக்யானம் பண்ணினார்களே யாகிலும் விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனம் ஒரு யோஜனை உண்டு என்று கொள்ள வேண்டும் -ஒன்றுக்கு பல யோஜனைகளும் உண்டாய் அன்றோ இருப்பது-மா முனிகள்
பத்ம நாபாதி விபவங்கள் -36 என்கிறது -விஷ்வக்சேன சம்ஹிதையில்
அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் 39 -கபில தத்தத்ராய பரசுராமர் -அவதாரங்களை சேர்த்து -மா முனிகள் காட்டி அருளுகிறார் –

ஒரு நாலு முகத்தவனோடு உலகீன்றாய் என்பர் -அது உன் திரு நாபி மலர்ந்தது அல்லால் திரு உள்ளத்தால் உணராயேல் —
மேரு கிரி அவுணன் உடல் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே அறிந்தது அல்லால் கோவே நீ அறியாயால் –
இரண்டும் அவலீலையாக செய்தவை என்றவாறு

பெருவாயா -த்ரௌபதி சரணம் என்கிற உக்தி இத்தனையும் திரு உள்ளத்தே கிடந்தது சதச்சில் அவன் பரிபவித்த பரிபவத்தையும் பரிஹரித்து
துர்யோ நாதிகளையும் நிரசித்து தர்ம புத்திரன் தலையிலே முடியையும் வைத்து இவள் குழலையும் முடிப்பித்து பின்னும் குறைவாளனாய்
பரம பதத்துக்கு எழுந்து அருளிகிற போதும் திரு உள்ளத்திலே புண்ணோடு இ றே எழுந்து அருளிற்று

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: