ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த் யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-
ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்ம ரூபமாயிருக்கும் கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
இதர விஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தி யொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம் ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதா ஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப் பட்டுள்ளான்.
ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில்
பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –
விசர்க்கம் இல்லாமல் இருந்தால் நாராயனைக் காட்டிலும் வேறே ஒருவர் சொல்ல இடம் உண்டே
இவன் ஏவ பாரம் ப்ரஹ்மம் என்று இங்கு காட்டி அருளுகிறார்
———————————-
ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-
ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.
ஜீவாத்ம சாஷாத்காரம் –
யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் இதர விஷய வைராக்யம் -இவற்றால்
அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன
———————————————————
மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்ய அவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-
மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம்
உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.
மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
-7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே
சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –
————————————————————————
பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு
பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி
—————————————————————-
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ரா வதரணம் க்ருதம் – கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.
காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –
———————-
நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே –6-
நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.
சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி –பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண –
மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி -கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி -உபதேசிக்கிறார்
————————
அசக்த்யா லோக ரஷயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-
லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.
உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-முக்குணங்களால் தூண்டப பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் –
பகவான் நியமிக்க -இவை தூண்ட
அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க –இவ்வாறு பல காரணங்கள் சொல்லி —
————————
பிரசங்காத் ஸ்வ ஸ்வ பாவோக்தி கர்மணோ அகர்மா தாஸ்ய ச
பேதா ஜ்ஞாநஸய மஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே –8-
சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்ம யோகம் ஞான யோகமாகவே யிருத்தல் சொல்லப் படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்ம யோகத்தில் அடங்கிய) ஞான பாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்க வேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.
அவதார ரஹஸ்யம் (-4-11-)
கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (4-24)
அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் –
பேதங்கள் -4-30-ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்-
———————
கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
பிராமஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே –9-
கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.
1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு
-விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-பிராமஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷபூதன்-ஒன்றே –
————————-
யோகாப்யாப்ஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –10-
யோகாப்யாஸ விதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தி யடையும் என்பதும்,
ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தி யோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.
1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் 6-10-/6-26
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் –6-29–6-32
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33-6-36
4–யோக சித்தி -தடை வந்தாலும் சித்திக்கும் –6-37–6-456-
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே -பக்தி யோகமே உயர்ந்தது 6-46-/6-47-ஸ்லோகங்களில் சொல்லி
-பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –
—————-
ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத் யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்த பேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-
ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மை நிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம் மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.
1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2– ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3—சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனை பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4—பக்தபேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5— ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –
———————————
ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –12-
ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்ம ஸ்வரூபத்தை
அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித் தாமரையைப் பெற விரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன
————————-
ஸ்வ மஹாத்ம்யம் மனுஷ்யத்வே பரத்வஞ்ச மஹாத்ம நாம்
விசேஷோ நவமே யோகோ பக்தி ரூப ப்ரகீர்த்தித –13-
ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும் போதும் மேன்மையை யுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்தி ரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.
பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து -9-10–
2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ
3-அநந்ய பக்தர்களின் ஏற்றம்
4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூ யாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் -ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –
———————
ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா–14-
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாண குணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.
ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி –
கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து –
பக்த்யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –
——————-
ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவலோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-
ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது.
ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காணப் போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -/அறிவதற்கும் -வேதனம் / அடைவதற்கும் –கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் /சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –
——————
பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –16-
பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.
1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் –
இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து-12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு –
கோதுகுலம் உடைய பாவாய் போலே
ஆத்ம அனுபவத்துக்கு பக்தி யோகம் வேண்டாம் -கர்ம ஞான யோகம் மட்டும் கொண்டு கைவல்ய அனுபவம் –
பக்தி பண்ண சேஷ பூதன்
பர ப்ரஹ்மம் மஹிமை தெரிந்து இருக்க வேண்டுமே —
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க சக்தி இல்லை என்றால் -ஆத்ம உபாசனம் பண்ணு –கர்ம யோகம் பண்ணு சொல்ல வில்லை-
கர்ம யோகம் பண்ணி சித்த சுத்தி அடைந்து ஞான யோகம் -பண்ணி -மேலே பக்தி யோகம் –என்றவாறு -குழம்ப கூடாது –
பிரித்து பிரித்து அலகு அலகாக வியாக்யானம் உண்டு -கர்ம யோகம் வார்த்தைக்கு ஆத்ம உபாசனம் வார்த்தை –
—————–
தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-
தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது
1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –
————————-
குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –18-
குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.
குண பந்த விதா -முக் குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –
——————-
அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–19-
அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டான்.
அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –
—————–
தேவா ஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –20-
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப் படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்தி பூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது
தேவா ஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராக வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்
அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே –
வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி –
அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் –
வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-
——————
அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்–21-
க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.
சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால்
பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்
1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2–சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே –
ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய–
ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்-
——————–
ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –22-
ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.
1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்ட செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே -18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா
அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து –
சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –
——————–
கர்ம யோகஸ்த பஸ் தீர்த்த தான யஜ்ஞாதி சேவனம்
ஜ்ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரி ஸூத்தாத்மநி ஸ்திதி –23-
கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்.
—————–
பக்தியோக பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதிஷூ ஸ்திதி
த்ராயாணாம்பி யோகா நாம் த்ரிபிரன் யோன்ய சங்கம –24-
பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.
——————–
நித்ய நைமித்திகா நாஞ்ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டே ஸ்த்ரயோ அப்யேதே தத் யோகத்வாரேண சாதகா –25-
பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.
——————–
நிரஸ்த நிகில அஜ்ஞாநோ த்ருஷ்டவாத்மாநம் பராநுகம்
பிரதி லப்ய பராம் பக்திம் தயைவாப் நோதி தத்பதம் –26-
நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.
———————
பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் சமைக்ரஸ்வர்ய சாதக
ஆத்மார்த்தீ சேத்த்ர்யோ அப்யேதே தத் கைவல்யஸ்ய சாதகா –27-
பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.
—————-
ஐ காந்த்யம் பகவத் யேஷாம் சமா நமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பாரார்த்தீ சேத்த தேவாத் யந்த மஸ் நுதே –28-
ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)
———————–
ஜ்ஞாநீ து பரமை காந்தி ததா யத்தாத் மஜீவன
தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ் தேகதீ –29-
பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.
———————–
பகவத் த்யான யோகோக்தி வந்தன ஸ்துதி கீரத்த நை
லப்தாத்மா தத்கத பிராண மநோ புத்தீந்த்ரிய யக்ரிய -30-
பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.
————————-
நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ –31-
நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.
————–
ஏகாந்தாத் யந்த தாஸ்யை கரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் பிரதான மிதம் சாஸ்திரம் இதி கீதார்த்த சங்க்ரஹ–32-
ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.
—————————————————————————————-
ஸ்ரீ மத் வேங்கட நாதேந யதா பாஷ்யம் வீதீயதே
பகவத் யாமுநே யோக்த கீதா சங்ரஹ ரக்ஷணம் –
————————————–
கட்டப் பொருளை விரித்த காசினியில் நான் மறையில்
இட்டப் பொருள் இயம்பும் இந்த பொருளை -சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
பாதாம் புயம் அடியேன் பற்று –தனியன் –
கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
பாதாரவிந்த மலர் பற்று –தனியன் –
கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் யரும் பரமன்
திரு மகளோடு வரும் திரு மால் என்று தான் உரைத்தான்
தர்மம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே–ஸ்ரீ கீதையின் ஸாரப் பொருள் –
—————————————————
ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –
மா நத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீ சா நத்தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —
ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு பிரமாணம் –ஆகம ப்ராமண்யம்–மஹா புருஷ நிர்ணயம் –
(-ஜீவன் –ஞானம் -மற்றும் ஈஸ்வரன் -ஐந்தும் -இவர்களை பற்றிய மூன்று சித்திகள் -)-
ஆத்மசித்தி-சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி -கீதார்த்த சங்க்ரஹம் –சதுஸ்லோகி –ஸ்தோத்ர ரத்னம் -ஆகிய எட்டும் ஆகும்
இவை அனைத்தையும் எம்பெருமானார் எந்த ஆளவந்தார் கிரந்தங்கள் என்று அனுதினம் அனுசந்தானம் செய்தாரோ –
அந்த ஆளவந்தாரை நாம் ஸ்தோத்ரம் செய்கிறோம் –
தத்வம்
ஜிஜிஞ்ஞாசமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை -தத்வமேகோ மஹா யோகீ ஹரீர் நாராயண பர –சாந்தி பர்வம் -347–83-
ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா –நரசிம்ஹ புராணம் -18–34-
சாரம் தத்வ ஹிதங்கள் -இரண்டிலும் தத்துவமே முக்கியம் —
ஸ்வ தர்மங்கள் –
சாஸ்திரம் சொல்லிய வர்ணாஸ்ரம தர்மம் –
ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரத சாம் சித்திம் லபதே நர -18-45-
ஞானம் -சேஷத்வ ஞானம் என்றபடி
வைராக்யம் –பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி இதை முமுஷோ–என்றும்
த்ருஷ்டா அநுச்ரவிக விஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார சம்ஞ்ஞா வைராக்யம் –
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –
உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்
இயாஜ சோ அபி ஸூ பஹூன் யஞ்ஞான் ஞான வ்யபாசர்ய ப்ரஹ்ம வித்யாம்
அதிஷ்டாய தர்தம் ம்ருத்யு மவித்யயா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12–
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்திரித்ய பிகீயதே–வேதனம் உபாசனம் த்யானம் -மூலம் பக்தி –
இதையே பக்தியேக கோசார -என்று பக்திக்கு மட்டுமே பலனாக உள்ளவன் என்கிறார் –
பக்தி ஏக லப்ய புருஷே புராணே -ஏக -பக்திக்கு அவன் ஒருவனே விஷயம் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா வேதாந்த உதிதம்
ஸ்வ விஷயம் ஞான கர்ம அநு க்ருஹீத பக்தி யோகம் அவதாரயாமாச -ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஐகாந்திகையாக இருப்பதையே ஏக -சப்தம் -ஆத்யந்திகை -அவனே புருஷார்த்தம் என்று இருக்கை
நாராயண பர ப்ரஹ்ம -விஸ்வமே வேதம் புருஷ –
ப்ராஹ்மணம் ஈசம் –
ஸ்வாபாவிக அனவதிக அதிசய ஏசித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக –க ப்ரஹ்ம சிவ
சதமக பரம கராடித்யேத அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ்தே -ஸ்தோத்ர ரத்னம் -11-
சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –
தத்வ ஹிதம் உண்மையாக சொல்வதால் ஸ்ரீ கீதா சாஸ்திரம் –
கீதா உபநிஷத் -பெண்பால் -அத்ர உபநிஷதம் புண்யம்
கிருஷ்ண த்வைபாயனோ அப்ரவீத் -ஆதி பர்வம் -1-279–
யஸ்மின் ப்ரஸாதே ஸூ முகே கவயோ அபி யே தே சாஸ்த்ராண்யசா ஸூரிஹ தான் மஹிமா ஆஸ்ரயாணி கிருஷ்னேந தேன
யதிஹ ஸ்வயம் ஏவ கீதம் சாஸ்த்ரஸ்ய தஸ்ய சத்ருசம் கிமி வாஸ்தி சாஸ்திரம் —
பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —
சமீரித-நன்றாக கூறப்பட்டான் –
மயர்வு அறுத்து -அஞ்ஞானம் சம்சயயம் விபர்யயம் -இல்லாமல் –
ப்ராப்யமும் ப்ராபகமாகவும் –
த்ரி வித காரணமாயும் –
ஸ்திதி சம்ஹாரம் ஸ்ருஷ்டி-அனைத்தையும் செய்து அருளி –
தாரகன் –
நியாமகன் –
சேஷி –
வேத ப்ரதிபாத்யன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்-
சர்வ பாப விமோசகனாய்
ஸர்வ ஆஸ்ரயணீயனாய்
அமலன் –
ஆதி பிரான் –
விமலன் –
நிமலன்
நிர்மலன் –
புருஷோத்தமன் –
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த –கர்ம யோகம் தபம் தீர்த்த யாத்திரை –
யோக லஷ்யே–ஞான யோகத்தின் பொருட்டு முதலில் கர்ம யோகம் –
யோகம் -ஆசனம் பிராணாயாமம் ஆத்ம அவலோகநாம் போல்வன அங்கங்கள் -ஆத்ம சாஷாத்காரம் பலம் –
ஸூ ஸம்ஸ்க்ருதே–சேஷத்வ ஞானத்துடனும் -தனக்கே யாக -என்றபடி
சேஷிக்கு அதிசயமும் ஆனந்தமும் பிரயோஜனம் என்ற உணர்வுடன்
ஸூ கம் ஆத்யந்திகம் யத்தத் -சிற்றின்பங்களை விட உயர்ந்தது என்றவாறு –
பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமன்வித -சப்தோ அயம் நோபசாரேண
த்வன் யத்ர ஹ்யுபசாரத –
பகவான் இவனுக்கே ஸ்வாபாவிகம்
யாதாத்ம்யாவாப்தி சித்தயே-என்கிற பதங்கள் –
தத்வேன பிரவேஷ்டும் -11-54-பக்திக்கு பலனாக அவனே உள்ளான் –
பரம ப்ராப்ய பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத் யஸ்ய மஹா விபூதே–
ஸ்ரீ மதோ நாராயணஸ்ய ப்ராப்தயுபாய பூதம்
தத் உபாசனம் வக்தும் தத் அங்க பூத ஆத்மஞான பூர்வக கர்ம அனுஷ்டான சாத்யம் ப்ராப்து –
பிரத்யகாத்மநோ யாதாம்ய தர்சனம்
யுக்தம் -என்று எம்பெருமானார் 7-அத்யாயம் ஆரம்பத்திலே அருளிச் செய்கிறார் –
பகவத் ஸ்வரூபமும் பக்தி உபாசனமும் மத்திய ஷட் அத்தியாயங்களில் சொல்வதையே –யத் ப்ரவ்ருத்திர் பூதானாம் -18-46
மத் பக்திம் லபதே பராம்–18-54- -என்கிறார் மேலே 18-அத்தியாயத்தில்
பிரகீர்த்திதே-பக்தி ஸ்வரூபம் அங்கம் விஷயம் பலன் அனைத்தும் உயர்வாகவே உள்ளன என்றவாறு –
சர்வேஸ்வரன் -அஜஸ் சர்வேஸ்வரச்சித்த -அவன் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் விலக்கப் படுகிறார்கள் —
விவேச நம்-பகுத்தறிவு –
கர்ம தீர் பக்திரித்யாதி–கர்ம ஞான பக்தி ஸ்வரூபங்கள் –
ஆதி சப்தத்தால் இவற்றை செய்யும் முறையும் சாஸ்த்ர விதி நிஷேதங்கள் எல்லாம் குறிக்கும்
பூர்வ சேஷ -எஞ்சியவை என்றவாறு –
பூர்வஸ்மின் ஷட்கே
பரம ப்ராப்யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ
பகவதோ வா ஸூ தேவஸ்ய ப்ராப்தயுபாய பூத பக்தி ரூப பகவத் உபாசனை
அங்க பூதம் ப்ராப்து -பிரத்யகாத்மநோ யாதாத்ம்ய தர்சனம் –
ஞான யோக கர்ம யோக லக்ஷண நிஷ்டாத்வய சாத்யம் யுக்தம் –
மத்யமே ச பரம ப்ராப்ய பூத பகவத் தத்துவ யாதாத்ம்ய தன் மாஹாத்ம்ய ஞான பூர்வக
ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக நிஷ்டா ப்ரதிபாதிதா-
அதிசய ஐஸ்வர்ய அபேக்ஷமாணாம் ஆத்ம கைவல்ய மாத்ர அபேக்ஷமாணாம்
ச பக்தி யோகஸ் தத்தத் அபேக்ஷித சாதனமிதி சோக்தம்-
இதா நீ முபரிதநே து ஷட்கே ப்ரக்ருதி புருஷ தத் சம்சர்க்க ரூப பிரபஞ்சேஸ்வர
தத் யாதாம்ய கர்ம ஞான பக்தி ஸ்வரூப தத் உபாதான பிரகாரச்ச
ஷத்கத்வ யோதிதா விசோத்யந்தே –என்று –13-அத்யாய ஆரம்பத்திலே எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே –
அதீதே நாத்யா யத்ரயேண ப்ரக்ருதி புருஷயோர் விவி பக்த்யோஸ் ஸம்ஸ்ருஷ்ட யோச்சி
யாதாம்யம் தத் சர்க்க வியோக யோச்ச
குண சங்க தத் விபர்யய ஹேது கரத்வம் –சர்வ பிரகாரேண அவஸ்திதயோ –
ப்ரக்ருதி புருஷயோர் பகவத் விபூதித்வம் விபூதி மதோ
பகவதோ விபூதி பூதாதசித்வஸ்துந–அசித் வஸ்து நச்ச பத்த முக்த உபாய ரூபா தவ்ய
யத்வ வ்யாப நப ரணஸ் வாம்யைரர்த் தாந்த ரதயா
புருஷோத்தமத்வே நச யாதாம்யம் ச வர்ணிதம் —என்று -16–அத்யாய ஆரம்பத்தில் அருளிச் செய்கிறார் எம்பெருமானார் –
முதல் மூன்று அத்தியாயங்கள் சித் அசித் ஈஸ்வரன் பற்றி ஆராய்ந்து –
பிரகிருதி ஜீவன் சேர்ந்த பொழுதும் பிரிந்த பொழுதும்
அவற்றின் தன்மைகள் -முக்குண பற்றுதலால் சேர்ந்தும் -முக்குணப் பற்று நீங்கி பிரிந்தும் –
எந்த நிலையிலும் பிரக்ருதியும் ஜீவனும் அவன் செல்வங்கள் என்றும் –
அவனே நியாமகன் -புருஷோத்தமன் என்றும்
அடுத்த மூன்றால் யோகம் செய்யும் முறைகளை அருளிச் செய்கிறான்
—————————————————————————————-
1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
2-தன் மோஹ சாந்தி -சமனம் –
3-கர்மயோக கர்தவ்யத்வம்
4-தத் அவாந்தர பேதம்
5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
6-யோக அப்யாஸ விதி
7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
9-பக்தி யோகம்
10-குணம் விபூதி பத்தாவதில்
11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
17-சாஸ்திரீய விவேகநம்
18-சாரம் உத்தேச்ய –
இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை யில்
—————————
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-
கண்ணா நீ பார்த்ததற்கு காத்தற்கு இனிதுரைத்த
திண்ணார் திறம் அருளும் சீர் கீதை எண்ணாரு
நன்பொருளை எங்கட்க்கு நாதா அருளுதலால்
புன் பொருளில் போகா புலன் -1-
மாதவனும் மா மாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடி கண் –மீதருள
வுச்சி மேல் கொண்டே யுயர் கீதை மெய்ப்பொருளை
நச்சி மேல் கொண்டு யுரைப்பன் நான் –2-
நாதன் அருள் புரியு நல் கீதையின் படியை
வேதம் வகுத்த வியன் முனிவன் –பூ தலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டு ஒத்தும் பகர்வேன்
சீர் தழைத்த வெண்பாத் தெரிந்து –3 —
வேதப் பொருளை விசயற்குத் தேர் மீது
போதப் புகன்ற புகழ் மாயன் -கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள் விரிப்பனன் தமிழால் தேர்ந்து –4-
தேயத்தோர் உய்யத் திருமால் அருள் கீதை
நேயத்தோர் எண்ணெய் நிறைவித்துத் –தூய
தெருள் நூலதே பெரிய தீபத்தை நெஞ்சில்
இருள் போக ஏற்றுகேன் யான் –5-
சுத்தியார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறந்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமணாம் நாரணனேநல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –
ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –
உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –
கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என்னதான் அன்று அந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –
———————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-