ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-1-

ஸ்வ ஸ்வாமி ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேன நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –
ஸ்ரீ தேசிகன் நியாச சதகத்தில் ஸ்ரீ ஸூக்திகள் –ஒன்பதின் கால் ஸ்வ சப்த பிரயோகம் பண்ணி சித்த உபாயத்தின் சீர்மை காட்டி அருளி இருக்கிறார்

பகவத் பிரபத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி

வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்  மற்று -பூதத் தாழ்வார்

த்வமேவ உபாய பூதோ மேபவதி பிரார்த்தனா மதி சரணாகதி

இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா ஸ்வ ஹேதுத் வதியம் ருந்தே கிம்பு நஸ் சஹ காரிணாம்–தேசிகன் -நியாய சித்தாஞ்சனா ஸ்ரீ ஸூக்திகள்

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -இதர அநபேஷ உபாயத்வம்

பிரபத்தி உபாயத்துக்கு இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்றது வேறு ஒரு குற்றம் உண்டு -மா முனிகள்
அதாவது ஆபாத ப்ரதீதியில் உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹ்யமாம் படி இருக்கை

இதிஹ இதிஹ-இப்படியாம் இப்படியாம் என்ற வடசொல்லின் மேல் -ஸ்வார்த்தேயஞ்-பிரத்யாயம் ஏறி ஐதிக்யம் ஆயிற்று
இதி ஹஸ்ம ப்ராஹூ-அநாதி காலம் பரம்பரையாக சொல்லி வந்ததே இதிஹாசம்

பிரத்யாசந்தி பவ சஞ்சரணம் பிரஜா நாம் பக்த அனுகந்துரிஹ யஸ்ய கதா கதா நி –ஸ்ரீ தேசிகன் -வேகா சேது ஸ்தோத்ரம் -யதோத்த காரி பற்றிய ஐதிக்யம் –

அவிஜ்ஞ்ஞாதா —ந தே நிரச நீயா அபிது சோச நீயா –பட்டர்

ஆழ்வார் உடையவர் மணவாள மா முனி -பிரணவம் -அகாரம் உகாரம் மாகாரம் சேர்ந்த ஓங்காரம் பிரணவம்

நாணி இனி ஒரு கருமமும் இல்லை நாலயலாரும் அறிந்து ஒழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து கொண்டு பண்டு பண்டாக்க யுறுதிராகில் -ஆண்டாள்
கெண்டை ஒண் கணும் துயிலும் எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே-திருமங்கை ஆழ்வார்
இன்றைய தசை -விச்லேஷம் -பண்டைய தசை -சம்ச்லேஷ தசை –பண்டு பண்டைய தசை -சம்சாரிகள் தசை –சம்யோகா விப்ரயோகாந்தா அன்றோ

பூவரு மயனொடும் புகுந்து பொன்னகர் மூவுலகை உலகினும் அழகு முற்றுற ஏவினன் அயற்றினன் கணத்தில் என்பரால் தேவரும்
அருள் கொளத் தெய்வத் தச்சனே -என்றும் -பொன்னிலும் மணியினும் அமைந்த பொற்புடை நன்னகர் நோக்கினான் நாகம் முன்னையின்
அழகுடைத் தென்று மொய்கழல் மன்னனும் உவந்து அதன் நோக்கினன் முனிவும் மாறினன்-என்றும் கம்பர் அருளிச் செய்து
-திருவடி துவம்சம் ஆக்கிய இலங்கையை புனர் நிர்மாணம் பண்ணியதைக் காட்டி அருளுகிறார்-

தத்ர யத்தாவதுச்யதே யோசௌ நாராயண பிரசித்த பரமாத்மா சர்வாத்மா இதி தத் ந நிராக்ரியதே -யதபி தஸ்ய பகவத அபிகம நாதி லஷண மாராத நம் அஜஸ்ரம் அனன்ய சித்தயா அபிப்ரே யதே ததபி ந பிரதிஷித்யதே சுருதி சம்ருத்யோர் ரீச்வர பரணீ தா நஸய பிரசித்தத்வாத் –ஆதி சங்கர ஸ்ரீ ஸூக்திகள் -ஸ்ரீ மன் நாராயணனுக்கே பாரம்ய பிரதிஷ்டாபனம் –

யோகிநாம் அபி சர்வேஷாம் மத்கதேன அந்தராத்மா -ஸ்ரத்தாவான் பஜதே யோ மாம் ச மே யுக்ததமோ மத -ஸ்ரீ கீதை
இதுக்கு சங்கர பாஷ்யம் -யோகிநாமே சர்வேஷாம் ருத்ராதி த்யான பராணாம் -மத்கதேன மயி வா ஸூ தேவே சமாஹி தேன அந்தராத்ம நா -அந்த கரணன ஸ்ரத்தா வான் ஸ்ரத்ததா நஸ் சன்பஜதே சேவதேயோ மாம் சமே மம யுக்ததம அதிசயே ந யுகத மத அபிப்ரேத –

கேசவ நாம சங்கர பாஷ்யத்தில் –கோ ப்ரஹ்மே திசமாக்க்யாத ஈசோஹம் சர்வ தேஹி நாம் ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான்

அர்க்க திரு நாம-சங்கர பாஷ்யம் -ப்ரஹ்மாதிபி பூஜ்ய தமைரபி அர்ச்ச நீயத்வாத் அர்க்க –

அமிதாசன திரு நாம சங்கர பாஷ்யத்தில் -சம்ஹார சமயேவிச்வமச் நா நீதி அமிதாசன -சிவ பெருமானும் விஸ்வ பஹிர் பூதன் அல்லனே

அத்தாசரா சரக் ரஹணாத்-ஸூ தரத்தின் படியே அகில சேதன அசேதனங்களையும் உண்டவ நாராயணன் சிவ பெருமானையும் உண்டான் என்றபடி

சதுர்முக சமக்க்யாபி சடகோப முனௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சகீவாசா ச வர்ண நாத் –
ஆழ்வார் -தாமான -73 திருவாய் மொழிகள் –தலைமகள் 17 திருவாய் மொழிகள் -தாய் -7
திருவாய்மொழிகள் -தோழி -மூன்று திருவாய்மொழிகள் -நான்கு முகங்கள் உண்டே

ச்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமி நோ குணோ ஸ்வேபயோ தா சத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயி ந –
சர்வ ஸ்வாமி -சர்வ பூத அந்தராத்மா -சர்வ சேஷி புருஷோத்தமன் -ஸ்வாமி தாசர்-சேஷி சேஷ பூதர் -ஆத்மா சரீர பூதர் புருஷோத்தமன் பெண்மை –
தாசத்வ தேகத்வ சேஷத்வங்கள் போலே ஸ்த்ரீத்வத்மமும் இயல்பே -வந்தேறி இல்லை
அத்யந்த பாரதந்த்ர்யம் ஸ்திரீ தர்மம் -பத்ரு பார்யா பாவ சம்பந்தம் -உகாரார்த்தம் -பின்னை கொல் நிலமா மகள் கொல் திருமகள் கொல் –
தாய் அத்யவசாய நிஷ்டை -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை -தலை மகள் த்வரா நிஷ்டை பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே

வெற்றிலை -இலவசம் -கையடைக் காயும் -அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –அடை இலைக்கு பொதுச் சொல்- காய் -காய்களுக்கு பொதுச் சொல் -அடைக்காய் வெற்றிலை பாக்கு -அதனால் இலைவசம் வெற்றிலை வழியாக வந்த சொல் –மறுதாரை பாய்வதை மடிசா ர் பாய்கிறது மருவி சொல்லாயிற்று

ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -திருவாய் மொழி -1-1-4/5/6 பாசுரங்களை அடி ஒட்டியே ஸ்வாமி அருளிச் செய்கிறார்

பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இ றே -பண்டை நாளாலே நின் திருவருளும் – -9-2- திருவாய்மொழி-
நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்று முதல் பாசுரத்திலும்
உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற வடியர் என்று இரண்டாம் பாட்டிலும் தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டீர் என்று மூன்றாம் பாட்டிலும் அஹங்காரம் குடி புகாமல் கைங்கர்யத்துக்கு அனுரூபமான குடிப்பிறப்பு என்றபடி

தென்னகர் -நன்னகர் –மா நகர் -நீணகர் –பெரு நகர் –
தென்னகர் -ஆயிரத்துள் இவை பத்தும் திரு வல்லவாழ் சேமம் கொள்   தென்னகர் மேல்
நன்னகர் -தெண்டிரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே
மா நகர் -ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப் பேரெயில் மா நகரே
நீணகர் -இன்பம் பயக்க —திருவாறன் விளை என்னும் நீணகரம் அதுவே
பெரு நகர் -பெரு வரை மதில்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல் –திருமங்கை ஆழ்வார் அப்பக் குடத்தான் கையில் இலங்கு ஆழி சங்கு திருமொழி

உறையிலாடாத ஆழ்வார் -திருமழிசை ஆழ்வார் –

புஷ்ப த்யாக போக மண்டலங்கள் மூன்றையும் நம்மாழ்வார் திரு விருத்தத்தில் மங்களா சாசனம்

மன்மநா பவ மதபக்த —மயி -சர்வேஸ்வர நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நே சர்வஜ்ஞ்ஞே சத்ய சங்கல்பே
நிகில ஜகதேக காரண பரஸ்மின் ப்ரஹ்மணி புருஷோத்தமே புண்டரீகத லாமலா யதே ஷணே ஸ்வச்ச நீல ஜீமுத சங்கா சே
யுகபதிததி நகர சஹச்ர த்ருசதேஜசி லாவண்யா அம்ருத மஹோ ததௌ உதார பீவர சதுர் பாஹௌ அத்யுஜ்ஜ்வல பீதாம்பரே
அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதன நிவிஷ்ட ம நா பவ -ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் –18 விசேஷணங்கள் உள்ளன –
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன்
ஸ்வரூப வை லஷண்யம் -திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யம் -திவ்ய பூஷணாதி வைசிஷ்ட்யம் திருக் கல்யாண குண பௌஷ்கல்யம்
-எடுத்துக் காட்டியே பக்தியை வளர்ப்பவர்கள் அன்றோ

யாமி நயாமீதி தவேவததி புரஸ் தாத்த ஷநேன தன வங்க்யா களிதாநி புரோ வலயாநி அபராணி புநஸ் ததைவ தளிதா நி —யாமி போகிறேன்
என்றாலும் ந யாமி உன்னையும் கூட்டி போவேன் போக மாட்டேன் என்றாலும் வளையல்கள் போகுமே

கிருஷ்ணத் வைபாயநம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோஹ்யன்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பவேத் தேன வ்யச்தாயதா வேதா மத்புராணே மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5-
சஹோவாச வியாச பாராசர்ய–பாரத பஞ்சமோ வேதா –வேதான் அத்யாபயமாச மஹா பாரத பஞ்சமான் –

வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத் மஜே வேத ப்ராசேத சரதாசீத் சாஷாத் ராமாயணாத் ம்நா –
-இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -சாகரம் என்னக் கடவது இ றே

ஸ்ருதியில் அவதாரங்கள் -அஜாய மாநோ பஹூதா விஜாயதே –ச உஸ்ரேயான் பவதி ஜாயமான –பிதா புத்ரேண பித்ருமான் யோனி யோ நௌ-
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறப்பாய் இமையோர் தலைவா -ஆழ்வார் -பஹூ நி மே வ்யதாதீதி ஜன்மா நி தவ சார்ஜூன -ஸ்ரீ கீதை

வகுள பூஷண பாஸ்கர உதயமான இடத்திலே சூர்யோதயம் ஆன பின்போ த்வாதசி பாராயணம் -ஆழ்வார் திரு நகரி அம்மையார் பேச்சு

நீராட்டம் -ஏஷ   ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் –
கர சரண சரோஜே காந்திமன் நேத்ரே மீ நே ச்ரம முஷி புஜவிசீ வ்யாகுல ஆகாதே மார்க்கே ஹரி சரசி விகாஹனம் –
காலை நல் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -திரு விருத்தம்

சோழ நாட்டு திவ்ய தேசங்கள் மங்களாசாசனம் முடித்து திருவரங்கம் வர இருந்த திரு மங்கை ஆழ்வார் ஸ்வபனத்தில்
-திரு அரங்கன் -தோன்றி கூப்பிட்டு அருள -கூந்தம் கமழும் கூடலூரில் இருந்து திரு வெள்ளறை புண்டரீகாஷ பெருமாளை
மங்களா சாசனம் பண்ணி இங்கே வந்தாராம் -கோபுர பிரதிஷ்டைகள் எல்லாம் முடித்த பின்பே மேலே தொடர்ந்தாராம்
பின்பே அப்பக் கூடத்தான் நாதன் கோயில் திரு விண்ணகர் திரு நறையூர் திருச் சேறை திருவழுந்தூர் சிறு புலியூர்
திருக் கண்ண மங்கை திருக் கண்ண புரம் திருக் கண்ணங்குடி திரு நாகை மங்களா சாசனம் செய்து தலைக் கட்டி
பாண்டிய மலை நாட்டு திவ்ய தேச மங்களா சாசனம் செய்து அருளினார்
நம் ஆழ்வார் அவா அற்று வீடு பெற்ற அன்றே வைகுண்ட நீள் வாசல் திறக்கப் பட்டது என்பதால்
வைகுண்ட ஏகாதசி ஸ்வர்க்க வாசல் இன்றும் திறக்கப் படுகிறது

காளம் வலம்புரியன்ன நல் காதல் அடியவர்க்கு தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவ நெறி மூட்டிய
நாத முனி கழலே நாளும் தொழுது எழுவோம் நமக்கு யார் நிகர் நானிலத்தே

பொருவரும் சீர் ஆரியன் இராமானுசன் -3- மூன்று விசேஷணங்கள் -திருக் கல்யாண குணங்கள் அனுஷ்டானம் ஆர்ஜவம் -மூன்றும்
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ -என்பதே பொரு வரும் சீர் -ஆரியர் -ஆசார்ய சீலர்-

அறம் சீறும் உறு கலியை துறக்கும் பெருமை இராமானுசன் -ராமானுஜ முநிர் ஜியாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரிதாத்
கலி கோலாஹல க்ரீடா முதாக்ரஹ மபாஹரத் -பட்டர்

அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வாவயவஸ் ஸூகமாஸீத –ஸ்ரீ வைகுண்ட கத்ய  ஸ்ரீ ஸூக்திகள்
அம்ருத கடலுள் அழுந்திய சர்வ திவ்ய அவயவங்களையும் உடையேனாக இனிது இருக்கக் கடவன்
திருவாசிரியம் இரண்டாம் பாசுரம் -உலகு படைத்ததுண்ட–அறை கழல் சுடர்ப் பூம் தாமரை சூடுதற்கு –நேரிய காதல்
அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளம் -காதல் அன்பு இன்பு தேறல் அமுத வெள்ளம் -ஒரு பொருள் பன்மொழிகள்
கதா அஹம் பகவத் பாதா புஜத்வயம் சிரசா தாரயிஷ்யாமி -கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வத் பரிசர்யா சயா –
-கதா அஹம் பகவத் பஜத்வ்ய பரிசர்யா கரணயோக்யா –பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா —
முகில் வண்ண வானத் திமையவர் சூழ இருப்பார் பேரின்ப வெள்ளத்தே
அத்தை இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுது நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம் -மா முனிகள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றோ
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பெற்று வாய்க் கொண்டதே –ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை –
மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறைப் பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிழ்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றிச் சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே
அருமறை துணிந்த பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி யருளிய சடகோபர் சொல்
பெற்று உயர்ந்தன அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே -சீதேதி மதுராம் வாணீம் போலே அமுது ஒழுகுகின்ற தமிழ்
அமுதிலும் ஆற்ற இனியன் அன்றோ -பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
அமுதத்துக்கு அருளிச் செயல்களிலே எவ்வளவே உண்டே-

அகாரோவை சர்வ வாக் -அகர முதல்  எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு –அவ ரஷணே தாது -பிதா புத்திர –
ரஷ்ய ரஷக -சேஷ சேஷி பாவங்கள் மூன்றும் காட்டும் -லுப்த சதுர்த்தி அவனுக்கே சேஷன் என்று காட்டும் –
உகாரம் -பத்தி பத்நீ பாவம் -கொண்டானை யல்லால் அறியாக் குல மகள் போல்
மகாரம் -மன ஜ்ஞானே -ஜ்ஞாத்ரு-ஜ்ஞ்ஞேய பாவம் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
நம பதம் ஸ்வ-ஸ்வாமி பாவம் -நாராயண –தத் புருஷ சமாசம் –பஹூவ்ரீஹீ சமாசம்
–நாரணாம் அயனாம் -தத் புருஷன் -ஆதார ஆதேய பாவம் -நாரா அயனம் யஸ்ய ச பஹூவ்ரீஹீ -சரீர சரீர பாவம் ஆய -போக்த்ரு போகய பாவம் –
ஆக திருமந்தரம் நவவித சம்பந்தம் -பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம் அநுதித –

தோளிணை மேலும் தன மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலை
-தவம் மேஹம் மே-பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னதென்று கொண்டேன்

தூது மொழிந்து –தூது நடந்து –தூது வந்தவர்கள் -தூது மொழிந்து நடந்து வந்தவர்கள்
தூது மொழிந்தவர் -சக்கரவர்த்தி திருமகனார் -முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து
-தூது நடந்தவர் -பாண்டவ தூதப் பெருமாள் –கோதில் செங்கோல் குடை மன்னருடை நடந்த தூதா
தூது வந்தவர் -திருவடி -ஓத மா கடலைக் கடந்தேறி –தூது வந்த குரங்குக்கே –தூதோஹம் கோசலேந்திரஸ்ய-
மூவரும் முறையே –சமயக் போஜனம் –ச குண போஜனம் – சஹ போஜனம் -செய்து அருளினார்கள்
பெருமாள் -சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத்மஜ–சபர்யா சமயக் பூஜிதா
கண்ணபிரான் -விதுரான்நாதி புபுஜே சுசீ நி குண வந்தி ச —ச குண போஜனம் இது
திருவடி -பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் -உபகாராய ஸூ க்ரீவோ ராஜ்ய காங்ஷீ விபீஷண நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் –சமயக் போஜனம்
ஆக -தூது மொழிந்தவருடைய சமயக் போஜனமும் தூது நடந்தவருடைய ச குண போஜனமும் -தூது வந்தவரோடு சஹ போஜனமும் சொல்லிற்று ஆயிற்று

ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் -ஐவரில் முற்பட்டவர் தர்ம புத்ரர் –நால்வரில் முற்பட்டவர் பெருமாள்
-மூவரில் முற்பட்டவர் –பெரிய நம்பி -திருக் கோஷ்டியூர் நம்பிக்கும் பெரிய திருமலை நம்பிக்கும் முற்பட்டவர் அன்றோ
இவர்கள் சந்தேஹியாமல் சஹாஜரோடு புரோடோசமாகச் செய்த புத்ர கருத்தியம் பிரசித்தம் அன்றோ

நம பிரணவ சோபிதம் நவகஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட  பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹகம்
தயாஞ்சித த்ரு கஞ்சலம் தளிதவாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம் –ஆழ்வான் முக்தகம்

அர்வாஞ்சோ யத்பத சரசிஜ த்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ் யான்வய முபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முநிரபி ஸ் வீய முக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

அந்தமிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவொழகும் என்னாம் குருகூர் வந்த பண்ணவனே –சடகோபர் அந்தாதி
அநந்தா வை வேதா –

பூ மன்னு-இத்யாதி பூ -பூநிலாயா -பூமிக்கு -இங்கு புஷ்பம் -மூன்று வகைப் புஷ்பங்கள்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு -திரு விருத்தம்
திருமேனியில் சாத்திக் கொண்டவை –பூம் தண் மாலைத் தண் துழாயும் -தோளிணை மேலும் இத்யாதி
– நீரிலும் நிலத்திலும்–பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் கள்ளார் துழாயும் கணவலரும்
கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் –தாம் உளரே தாமரையின் பூ உளதே
பக்தர்கள் கைகளில்-இண்டை கொண்டு தொண்டர் ஏத்த -என்றும் வானவர் வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் – -இப்படி மூன்று வகை-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே சிந்தை
மற்று ஒன்றின் திறத் தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும் -ஆழ்வாரும் பரமபதம் பெயரை சொல்லாமல் மற்று ஓன்று என்று அருளிச் செய்கிறாரே

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே –8-5-11–சன்மம் பல பல -3-10-நானோர் குறைவிலனே –
-யான் என்றும் கேடிலனே பாசுரம் தோறும் களித்து அருளுகிறார்
குரவை ஆய்ச்சியரோடு -6-4-என்ன குறை நமக்கே –எனக்கார் பிறர் நாயகரே -இதிலும் பாசுரம் தோறும் களித்து அருளுகிறார்-
இறையவன் எங்கோனே உலகாரியன் தேன் மலர்ச் சேவடிசிந்தை செய்பவர் மா நிலத்தில் இன்பம் எய்தி வாழ்பவரே -ஸ்ரீ வசன பூஷண தனியன்
பிரமாண பிரமேய ப்ரமாத்ரு சேவா இன்பத்துக்கு ஈடு இணை இல்லையே எங்கும் என்றபடி

ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுரஷரீ
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா –முதலி யாண்டான் முக்தகம்

மஸ்தக மஸ்து மதியம் நிஸ்துல யதிராஜ பாத பத்மயாம்
வடினம் ஹ்ருத்யஞ்ச சதா தத்குண கீர்த்தன விசிந்தன பிரவணம்

பிங்கல சாமாக்க்ய வர்ஷே மேஷே சுபமாசி சூழ பஞ்சம்யாம்
ஆர்த்ரா நாம் நி சுபே பி ஸ்தவா நி ராமாநுஜார்ய மவ தீர்ணம் —

அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ ராமானுஜ ஸ்ம்ருத

அகம் –உட்புறம் -அகம் சிவந்த கண்ணினராய் –க்ருஹம் -ஓடி அகம் புக்கு –நான் -உன் பொன்னடிக் கீழ் வளைப்பகம்
அடை -இல்லை – அடையார் கமலத்து -அடைக்காய் திருத்தி -அடைந்திடு -சாளக்ராமம் அடை நெஞ்சு
அணை–படுக்கை -மெல்லணை மேல் துயின்றாய் /சேது மலை கொண்டு அலை நீர் அணை கட்டி -அணைத்துக் கொள் ஆரென்று நெஞ்சே அணை
அரி -சிங்கம் -அந்தியம் போதில் அரியுருவாகி /பகைவன் -அரியை அழித்தவனை பல்லாண்டு /ஹரி -மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் /
குரங்கு -மலையால் அரி குலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் /வண்டு போதரிக் கண்ணினாய் -பூவில் படிந்த வண்டு /
மான் போதரிக் கண்ணினாய் -சஞ்சரிக்கின்ற மானின் கண் /அறிந்து போகடுதல் -அரிசினத்தால் ஈன்ற தாய்
அற -அறும்படி -மயர்வற மதி நலம் -வினைகளை வேர் அறப் பாய்ந்து /மிகவும் -அற வினியன் -அறப் பதறி /அற்பமாம் படி என் அவா அறச் சூழ்ந்தாயே
ஆழி -கம்பீரத் தன்மை -ஆழி மழைக் கண்ணா /கடல் ஆழி சூழ் இலங்கை ஆழியுள் புக்கு /
/மண்டலாகாரம் -ஆழி திகழ் திருச் சக்கரத்தின் /சூ ர்யன் ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்

கற்றது கை மண் அளவு கல்லாதது மலை யளவு -பரத்வாஜோ ஹ த்ரிபி ராயுர்ப்பிர் ப்ரஹ்மார்ய முவாஸ-
ஏஹீமம் வித்தி அயம் வை சர்வ வித்யேக தஸ்மா ஏதம் சாவித்ரம் உவாச
சாவித்ரா வித்யை-வகுள பூஷன பாஸ்கரர் வித்யை -திருவாய் மொழி -பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்–சர்வார்த்தம் -என்றது இ றே
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசிஜா சன சந்நிவிஷ்டகேயூரவான் மகர குண்டல வான்
கிரீடி ஹாரீ ஹிரண்யமய வபுர் த்ருத சங்க சக்ர –ஸ்லோஹம்
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண்டவிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –
ஹிரண்மயவபு -ஸ்லோஹம் ஆழ்வார் -கொண்டல் வண்ணன் -வகுள பூஷண பாஸ்கரர் உள்ளத்திலே
குளிர்ந்த வண்ணம் இருக்கும் இருப்பை தானே சொல்லிக் கொண்டார்-
யுஜ்ஞ்ஞான ப்ரதமம் மனஸ் தத்வாய சவிதா திய
அக்னிம் ஜ்யோதிர் நி சாய்ய ப்ருதிவ்யா அத்யாபரத் —
மதுரகவி ஆழ்வார் தென் திசை ஜ்யோதிஸ் பார்த்தே வந்தார் -மனஸ் திய தத்வாய யுஜ்ஞ்ஞான -தொழுது எழு மனனே

அத்யாபகர் ஏற்றம் -வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே –முதல் அத்யபகர் -அதா பயந்தீ -கேளாய் என்கிறாள் ஆண்டாள்
-வேத வித்துக்கள் அத்யேதாக்கள் தான் அத்யாபகர் ஆக முடியாதே

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷூ ச பூரிச தாமர பரணீ நதீ யத்ர கிருதமாலா
பயஸ்வி நீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹா நதீ
ஐந்து நதிகள் -தாமரபரணி -கிருதமாலா பயஸ்வி நீ காவேரி ப்ரதீசீ –நம்மாழ்வார் மதுர கவி ஆழ்வார் -தாமர பரணி நதி தீரம்
கிருதமாலா -வைகை பெரியாழ்வார் ஆண்டாள் /பயஸ்வி நீ பாலாறு -முதல் ஆழ்வார்களும் திரு மழிசை ஆழ்வாரும்
காவேரி தீர்த்தத்தில் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் மூவரும்
ப்ரதீசீ மேலாறு -மலை நாடு -குலசேகர ஆழ்வார்

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபி நவமாக ஒரு தசாவதாரத்தை பண்ணி மேகங்கள் சமுத்திர ஜலத்தை வாங்கி
சர்வ உப ஜீவ்யமான தண்ணீராக உமிழுமா போலே –

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆராய்ந்து அருள் -8-யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –23-
நாமே வருவதை சஹியான் பரகத ச்வீகாரமே பாங்கு
மங்களா சாசனம் பண்ணவே வந்தோம் உன்னிடம் ஓன்று பெற வந்தோம் அல்லோம் உனக்கே நாம் ஆட செய்வோம்
-இத்தை நாங்கள் சொல்லியா நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றுமாம்
ஆர் என்னை ஆராய்வார் -திருவாய் -5-4-5–மாறன் திரு உள்ளத்து சென்ற துயர் ஓதுவது எங்கனயோ –
அந்தோ என் துயரை தீர்க்க ஆராய்வார் இல்லையே -ஒரு பொருள்
வீட்டின்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -ஆழ்வார் பிறவியையும் பேச்சையும் ஆராய்வார் ஆறும்
இல்லையே என்றபடி -பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள் -பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பானாம்

நத்வே வாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமேஜநா–திபா ந சைவ ந பவிஷ்யாஸ் சர்வே வயமத பரம் -ஸ்ரீ கீதை 2-12
-ஜீவாத்மா பரமாத்மா பேதமும் ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் காட்டி அருளினான்
தேஹி நோஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்திர ப்ராப்தி தீரஸ் தத்ர ந முஹ்யாதி –
ஸ்ரீ கீதை -2-13- பிரக்ருத யாத்ம விவேகம் காட்டி அருளினான்
அத்யந்த இமே தேஹா -ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் -வாஸாம்சி ஜீர்ணாநி யதா விஹாய –விசிஷ்டாத்வைதம் நிதி இவை
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு த்ருவம் ஜன்ம ம்ரு தஸ்ய ச தஸ்மா த பரிஹார் யேர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி-முதல் சோகம் தீர்த்து அருளி

ஸ்வாமித்வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமி நோ குணா ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ சாயின –
ஸ்வாமி -சொத்து /ஸ்வாமித்வம் தாசஸ்த்வம் /ஆத்மத்வம் தேஹத்வம் /சேஷித்வம் சேஷத்வம் /பும்ஸ்த்வம் ஸ்த்ரீத்வம் -என்றவாறே

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் -பெரியாழ்வார் -பர்வதம் பருப்பதம் -உருவு கரியதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல் 14-7- ஆண்டாள்
அரும் கலமேஅரும் கலவுருவினாயர் பெருமானவன் -பெரியாழ்வார் –ஆற்ற அனந்தலுடையாய் அரும் கலமே -ஆண்டாள்
இந்த்ரகோபம்-இந்த கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் –பெரியாழ்வார் –இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் -ஆண்டாள்
ஓட்டரா -ஓடி பொருளில் -என்னிடைக்கு ஓட்டரா அச்சோ -பெரியாழ்வார் -ஓட்டரா வந்து என்னைக் கைப்பற்றி -ஆண்டாள்
கண்ணாலம் -நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் -பெரியாழ்வார் –கண்ணாலம் கோடித்து கன்னி தன்னை -ஆண்டாள்
குப்பாயம் -சட்டை –குப்பாயம் என நின்று காட்சி தரும் -பெரியாழ்வார் -போர்த்தமுத்தின் குப்பாயப் புகர் மால் -ஆண்டாள்
கருப்பூரம் -பங்கயம் நல்ல கற்பூரமும் நாறி வர -பெரியாழ்வார் –கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -ஆண்டாள்
கோதுகலம்கோதுகலமுடைய குட்டனேயோ -பெரியாழ்வார் –கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் -ஆண்டாள்
புண்ணில் புளிப்பெய்தால்புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை -பெரியாழ்வார் –புண்ணில் புளிப்பெய்தால் போல் -ஆண்டாள்
பாஞ்ச சன்னியம்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே –பாஞ்ச சந்நியத்தை பத்ம நாபனோடும்
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் -பெரியாழ்வார் வில்லிபுத்தூர் உறைவான் தன பொன்னடி -ஆண்டாள்
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் -பெரியாழ்வார் –வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ -ஆண்டாள்
க்ருத்திகாஸ் வக்நிமாததீத —முகம் வா ஏதன் நஷத்ராணாம் யத் கிருத்திகா – கிருத்திகா நஷத்ரம் அக்நிர் தேவதா
-அக்நிர் ந பாது கிருத்திகா -வேதத்தில் கிருத்திகா நஷத்ரத்துக்கு பிரதான்யம்

அந்தஸ் தத்தர் மோபதேசாத்–1-1-21-அந்தரதிகரண ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்-சாதவோஹி உபாசக -தத் பரித்ராணம் ஏவ உத்தேச்யம்
-ஆநு ஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே -சாதவ -உகத லஷண தர்ம சீலா வைஷ்ணவ வாக்ரேசரா
-மத சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா -மன நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மநஸா கோசரதயா மத தர்சநாத் விநா ஸ்வாத் மதாரண
போஷணாதிக மல்பமா நா-ஷண மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா ப்ரசிதீல சர்வகாத்ரா பவேயுரிதி மத ஸ்வரூப சேஷ்டி
தாவலோகநாலா பாதி தாநேந தேஷாம் பரித்ராணாய-ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
தன்னுடைய திவ்ய சேஷ்டிதம் மாத்ரமேயோ எனக்கு போக்யமாகச் செய்து அருளிற்று -தன்னுடைய திவ்ய அவதாரங்கள் எல்லாம்
என் பக்கல் உள்ள சங்கல்ப்பத்தாலே எனக்கு போக்யமாகச் செய்து அருளினான் -ஆறாயிரப்படி -1-8-8-ஸ்ரீ ஸூ க்திகள்

திரு மழிசை பிரான் மட்டுமே மங்களாசாசனம் –திருக் கபிஸ்தலம் -அன்பில்
நம்மாழ்வார் ஒருவரே மங்களா சாசனம் —திருக் குருகூர்-திருப் புளிங்குடி -வர குண மங்கை -ஸ்ரீ வைகுண்டம் -துலை வில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதிகள் -திருக் கோளூர் -தென் திருப் பேரை -பெருங்குளம் -சிரீவர மங்கல நகர் -வான மா மலை
திரு வநந்த புரம் -திரு வண் பரிசாரம் -திரு வாட்டாறு -திருக் காட்கரை -திருச் சிற்றாறு -திருப் புலியூர் -திரு வண் வண்டூர்-
திருக் கடித்தானம் -திரு வாறன் விளை-ஆக 18 திவ்ய தேசங்கள் –
குலசேகர பெருமாள் -மட்டுமே மங்களாசாசனம் –திரு வித்துவக்கோடு
பெரியாழ்வார் மட்டுமே மங்களாசாசனம்–கண்டம் என்னும் கடி நகர்ஆண்டாள் உடன் சேர்ந்து ஸ்ரீ வில்லி புத்தூர்
ஆண்டாள் மட்டும் மங்களா சாசனம் –விருந்தாவனம்
திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களா சாசனம் –தொண்டை நாட்டில் –பரமேஸ்வர விண்ணகரம் –திருத் தண்கா -விளக்கொளி பெருமாள்
–பவள வண்ணன் -நீரகம் -காரகம் -கார்வானம் –நிலாத் துங்கள் துண்டம் -திருக் கள்வனூர் -திரு புட்குழி -திரு நின்றவூர் -திருவிட வெந்தை -ஆக 11 –
நடு நாட்டில் –திருவயிந்தபுரம்
சோழ நாட்டில் –காழிச் சீராம விண்ணகரம் –திரு நாங்கூர் திருப்பதிகள் 9-திரு இந்தளூர் -திரு வெள்ளியங்குடி -திருப் புள்ளம் பூதம் குடி
-கூந்தல் கமழும் கூடலூர் -நந்தி புர விண்ணகரம் நாதன் கோயில் -திரு நறையூர் -திருச்சேறை -திருவழுந்தூர் -சிறு புலியூர்
-திருக் கண்ண மங்கை -திருக்கண்ணங்குடி -திருநாகை -உறையூர் தலைச் சங்க நாண் மதியம் -திரு ஆதனூர் -ஆக 25
பாண்டி நாட்டில் –திருப் புல்லாணி -திரு மெய்யம்-திருக் கூடல் -தென் மதுரை -ஆக மூன்றும்
வட நாட்டில் –திருப் பிரிதி -நைமிசாரண்யம் -சிங்க வேழ் குன்றம் ஆக மூன்றும் –

——————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: