ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -2-

அணி திருவரங்கத்துக்கு அடை மொழிகள் -வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை —வண்டு -மயில் -கொண்டல் -குயில் –
வண்டு -லஷ்மி கல்பல தோத் துங்க ஸ்தன ஸ்தபக சஞ்சல ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-10–
-ஸ்தபக சஞ்சல அம்புஜே ரமதாம் –தாமரை மலரில் உள் புகுந்து படிந்து ரம்யா நிற்குமே வண்டு
-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன் அன்றோ –
மயில் -பிரலய சமய ஸூ ப்தம் ஸ்வம் சரீரைக தேசம் –ச்வெச்சயா விச்த்ருணாந கசிதமிவ கலாபம் சித்ரமாதத்ய தூந்வன்
அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –ஸ்ரீ ரெங்க கலாபம் –ஆண் மயில் தோகை விரித்து விளையாடுவது போலே -சிருஷ்டி –
கொண்டல் –சிஞ்சேத் இமஞ்ச ஜனம் -மேட்டு பள்ள நிலம் பார்க்காமல் -இந்திரயா —-ஸ்ரீ ரங்க தாமனி தயா –ராசா நிர்ப்பரத்வாத் –சீதள காள மேக -1-82
குயில் -வனப்ரியா பரப்ருத அமர கோசம் -அர்ராமம் சூழ்ந்த அரங்கம் -அண்டர் கோன் அமரும் சோலை -அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி

மார்க்க சீர்ஷம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
கதிர்மதியம் போல் முகத்தான் -ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள் சூர்யன் போலே பரமத நிரசனம் -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ வசன பூஷணம் பகவத் விஷயம் திருமந்த்ரார்த்தம் -அருளிச் செய்யும் பொழுது சௌம்ய முகராய் ஆஹ்லாத சீத நேத்ராம்பு வராய் இருப்பார்
நாராயணன் நமக்கே பறை தருவான் -சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மகனான் உத்தரதே லோகன் -அனுசந்தேயம்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -உனது பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் –பரமன் -ஆசார்யன் -அடி பாடுகை –மாறன் அடி
பணிந்து உய்ந்தவன் அடி பணிந்த முதலியாண்டான் –குரு பரம்பரை சொல்வது
ஓங்கி உலகளந்த உத்தமன் –ரஹச்ய த்ரயம் -ஷட்த்ரயம் -ஸ்ரீ கீதை -தத்வத்ரயம் -பௌத்த ஜைனமத குரு அதம குரு
-அநு வருத்தி நிர்பந்தம் செய்து உபதேசிப்பார் -மத்யம குரு
பயல் நன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்பவன் உத்தம குரு
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -கலயாமி கலித்வம்சம் கவும் லோக திவாகரம் -ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –
மச்சித்தா மத்கத போதயந்த பரஸ்பரம் -கலந்து பேசின பேச்சரவம்
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் சச மம பிரியா -கோதுகலமுடைய பாவாய் -மொய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரான் என் மேலானே
-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷதஸ்கரா –கொன்று உயிர் உண்ணும்
விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
அம்பரம் தண்ணீர் சோறு -பரமபதம் -விரஜை -அஹம் அன்னம் அஹம் அந்நாதா -மந்த்ரோ மாதா குரு பிதா -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றோர் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை யசோதை =திருமந்தரம் –
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த திருமந்த்ரார்த்தம் சர்வ வ்யாபகத்வம் -மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் என்ற அநந்தரம் ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் –
செம் பொற் கழல் அடி செல்வா பல தேவா -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
உம்பியும் நீயும் -பாகவத சேஷத்வமும் பகவத் சேஷத்வமும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிந்து இராதே
மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் -உந்து மத களிற்றின் -ஓடாத தோள் வலியன் -ஜ்ஞானக் கை தா –
ஏழு ரிஷபங்கள் -காம குரோத லோப மோஹ மதம் மாத்சர்ய அஸூயை -கந்தம் கமழும் குழலி -செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் விசேஷித-த்யானம் புஷ்பம் தப புஷ்பம்
ஜ்ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிசரம் பவேத்
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் –கோட்டுக்கால் கட்டில் -சதுர்விதமான தேஹ வர்ண ஆஸ்ரம அதிகாரி பல மோஷசாதன கதி
யுக தர்ம யுஊஹ ரூபா க்ரியாதிகள் –கோப்புடைய சீரிய சிங்காசனம் -அத்வைத -அபேத -ஸ்ருதி /பேத த்வைத  ஸ்ருதி-/கடக ஸ்ருதி –
நின் கையில் வேல் போற்றி -ஆழி -கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று –சாரித்ரோத்தார தண்டம் வஜ்ரா தண்டம் த்ரி தண்டம்
-விஷ்வக் சேனா யதிபதிரபூத் வேதர சாரஸ் த்ரிதண்ட
ஒருத்தி -திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து ஓர் இரவில் ஒளித்து -சத்யவ்ரத ஷேத்ரம் கூட்டி வந்த தேவபிரான் –

நெறி வாசல் தானேயாய் நின்றானை –தேவோ நாமோ சகஸ்ரவான் -திரு நாமம் சாதிக்கிறார் பொய்கையார் -பிராபக பிராப்ய
ஐக்யமும் போக்யத்வமும் தனக்கே -உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குனௌ-பட்டர் -அசாதாரண லஷணம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பபோற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ் இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

வரவர முனி சதகம் -துக்தோ தன வத்தவளமதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணீந்த்ராவதாரம் –

ஹாரோபி –நார்ப்பிதா கண்டே ஸ்பர்சே சம்ரோத பீருணா ஆவயோரந்திர சாதா பர்வதாஸ் ஹரிதோ தருமா -ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்-
இங்கே பீருணா சீதயா மயா என்று லிங்க த்வயத்திலும் அந்வயம் –

மத சித்தா மத்கதபிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமநதி ச –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
வக்தாரஸ் தத் வசநேன அநந்ய பிரயோஜநேந துஷ்யந்தி ச்ரோதரச்ச தத் சரவணநேந அநவதிக அதிசய பிரியேண ராமந்தே -ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்
தெரித்து -தெரிவிக்கை -பிரவசனம் பண்ணுகை-பின்பு பிறர் சொல்ல கேட்டும் -என்பதால் துஷ்யந்தி ரமந்தி இரண்டு பத பிரயோகங்கள்

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் -நூற்றெட்டு திருப்பதி அந்தாதி காப்புச் செய்யுள்கள் –
பொய்கை பூதன பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் -வையகம் எண்
பட்டர்பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
காட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு

பிறவாத பேறு பெறுதற்கு எஜ்ஞ்ஞான்றும்
மறவாது இறைஞ்சேன் மனனே -துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வள நாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி

முக்காலம் எல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் -தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு

நான் கூட்டில் வந்தவன்றே நான் அறியா தன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலத்தான் கண்டீர் -ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக்கு ஆட்பட்ட பயன்

ஈரிருபதாம், சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு ஓர் இரண்டாம் சீர் நடுநாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்

தேவப் பெருமாள் மங்களா சாசனம் —என் நெஞ்சமேயான் –உலகம் ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் –
அத்தி யூரான் புள்ளை யூரான் –இரண்டு பாசுரங்கள் பூதத் தாழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மணியை வானவர் கண்ணனை -நம்மாழ்வார்
வரம் தரும் மா மணி வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி –திருமங்கை ஆழ்வார்

ஆறும் ஆறும் ஆறுமாய்-திருச்சந்த விருத்தம் -2- திருவாய்மொழி -6-6-6-கற்பகக் காவான நற்பல தோளற்கு பொற் சுடர்க் குன்றன்ன
பூம் தண் முடியற்கு நற் பல தாமரை நாள் மலர்க் கையற்கு எண் விற் புருவக் கொடி தோற்றது மெய்யே-
இதற்கு ஈடு -தோற்றது மெய்யே -ஊர்த்வம் மாசாத் ண் ஜீவஷ்ய -என்னப் பண்ணும் வடிவைக் காட்டி
-ந ஜீவேயம் ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது
வி நா தாம் அஸி தேஷிணாம்–மையார் கண்ணிகமல மலர்மேல் செய்யாள் -கண்டனன் கற்பனுக்கு அணியைக் கண்களால்
தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் –சீதா பிராட்டி கண்களால் கண்டேன் என்கிறார் திருவடி

நால்வர் கூடி நான்கு பிள்ளைகளை பெற்றனர் -பெருமாள்
நால்வர் கூடி ஒரு  பிள்ளையைப் பெற்றனர் -கண்ணன்
அறுவர் கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப்பெற்றனர் –
ஞான பலம் இத்யாதியால் தயை ஷாந்தி ஔதார்யாதிகள் திருக் கல்யாண குணங்கள் –
தேவும் தன்னையும் பாடி யாடத் திருத்தி -2-7-4–தேவு -ஐஸ்வர்யம் தன்னை -ஆஸ்ரித பாரதந்த்ரம்

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி -பெரியாழ்வார்
ஆசாயா யே தாசாஸ் தே தாஸா ஹந்த சர்வ லோகஸ்ய
ஆஸா தாஸீ யேஷாம் தேஷாம் தாஸா யதே ஜகத் சர்வம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
ஆசைக்கு வசப்பட்டவர்கள் உலகு அனைத்துக்கும் வசப்படும் ஆசை யாருக்கு வசப் பட்டதோ அவர்களுக்கு உலகம் வசப்படும் என்றவாறு –

ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் –அட்ட புயகரத்தேன் என்றாரே -திரு மங்கை ஆழ்வார்
கோவில் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம் -ஓவியத்து எழுத ஒண்ணா வுருவத்தாய் -கம்பர்
சித்ரே நிவேச்ய பரிகல்பித சத்வயோகா -காளிதாசர்
எழுதாப் பெரிய பெருமாளை எழுத வரிய பெருமான் என்று எண்ணாதே எழுதி இருந்தேனே -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

1-1-5- ஈஷத்யதிகரணம் –
தந் நிஷ்டஸய மோஷோபதேசாத்
கதி சாமான்யாத் –
இரண்டு ஸூ த்ரங்கள்
தச் -சப்தத்தினால் -சச் சப்த வாச்யனான -சத்தை உபாசிப்பவனுக்கு -சத் வித்யா பிரகரணம் ஆசார்யவான் புருஷோ வேத தஸ்ய
தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத சம்பத்ஸயே -நாராயணனே சச் சப்த வாச்யன்-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -தச் சப்த வாச்யம் சொல்லும் தேவதா விசேஷத்தையே இங்கே தந் சப்தம் சொல்லுகிறது
வா ஸூ தேவ மநாராத்ய கோ மோஷம் சமவாப்ஸ்யதி–போன்ற பிரமாணங்களால்
மோஷ ஹேதுத்வ லிங்கத்தால் சச் வப்த வாச்யன் நாராயணனே என்றதாகும்
சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே-என்பதனால் நாம ரூப வ்யாகர்த்தா வாகவே இருக்கும் தன்மை சொல்லப் பட்டது
இனி கதி சாமான்யாத் -கதி யாவது ப்ரவ்ருத்தி -அர்த்த போதகத்வம் -சாமான்யமாக இருப்பதாவது ஆவசியம் ஆகையாலே
-காரண வாக்யங்கள் எல்லாம் ஒரு மிடறாக இருக்க வேண்டுகையாலே
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத் -பரஜாஸ் ஸ்ருஜ்யேதி -என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நேமே த்யாவாப்ருதீவி -என்றும் திருவவதாரங்கள் எல்லாம் குணா பரிவாஹ ரூபங்களே
பேத ஸ்ருதிகள் -ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவீசதே தேவ ஏக -போல்வன
நேஹ நா நாஸ்தி கிஞ்சன —சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
தத்வமஸி-போல்வன அபேத ஸ்ருதிகள்
யஸயாத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ஆத்மனி திஷ்டம் -போல்வன கடக ஸ்ருதிகள்

யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -மநு சொன்னது எல்லாம் மருந்து –
வேதேஷூ பௌருஷம் ஸூ க்தம் புராணே ஷூ வைஷ்ணவம் பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மா நவம்
– ஸம்ருத்யதிகரண ஸ்ரீ பாஷ்யத்திலும் இதுவே காட்டி அருளுகிறார்

பூவில் வாழ் மகளாய் தௌவையாய் புகழாய் பழியாய் -திருவாய்மொழி –6-3-6—தௌவையாய் மூதேவி யாய் -வ்ருத்த விபூதி சமுச்சயம் -பிரணயரோஷத்தால் ஊடி இருந்த தன்னையும் கூட்டிக் கொண்ட சாமர்த்தியத்தால்

நாவகாரியம் சொல்லிலாதவர் -நாவுக்கு அக்காரியம் -திருக் கோட்டியூர் நம்பி போல்வார் -அர்த்த கௌரவத்தால்
அடுத்த பாசுரம் குற்றம் இன்றி குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய் செற்றம் ஒன்றிலாதவர்-எம்பெருமானாரை ஸூசகப் படுத்தும்

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்தம்மா வரம் தரும் திருக் குறிப்பில் வைத்ததாகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –101-
இரட்டித்து சொல்லும் பாசுரம் -வரத தவ கலு பிரசாதா தருதே சரணமிதி வாசோபி மே நோதியாத் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-

யாதவாப்யுதம் -நான்காவது அத்யாயம் -ஆறாவது ஸ்லோஹம்
நந்தச் ஸ தீவ்ரேண பயேன சத்யஸ் சமேத்ய பஸ்யன் அநகம் குமாரம்
தேநைவ தஸ்ய த்ரி ஜகன் நியந்து ப்ராயுங்க்த ரஷாம் பரமார்த்த வேதி —
அப்பைய தீஷிதர் -பரமார்த்த வேதி –எம்பெருமானே சர்வ ரஷகன் என்ற உண்மையை உணர்ந்தவர்
உண்மையில் -தத்தே பவது மங்களம்-குசல பிரச்னம் -பல்லாண்டு போற்றி என்று அடியவர் சொல்வதையே தனக்கு ரஷையாக கொண்டவன் அன்றோ
காப்பாரும் இல்லை கடல் வண்ணா உன்னை தனியே போய்- எங்கும் திரிதி -காக்கும் இயல்வினன் கண்ணன் என்று அறிந்தும் -சொல்பவர்கள் அன்றோ
அவ்விடத்திலே -11 ஸ்லோஹம் -விச்வாதி விச்வாதிக சக்தி ரேகா நாமானி ரூபாணி ஸ நிர்மி மாண-நாமைகதேச க்ரஹணேபி
மாதர் பபூவ க்ருஷ்ணோ பஹூமான பத்ரம் –குழந்தை மழலைப் பேச்சு பஹூமானம் தானே தாய்க்கு
34-ஸ்லோஹம் -ஆநீத மக்ரே நிஜ பந்த நார்த்தம் தாமாகிலம் சம்ஹித மபய பூர்ணம் -விலோக்ய நிர்விண்ணதி யோ
ஜனன்யாஸ் சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய-சுருக்குவாரை இன்றியே சுருக்கி -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
– சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய–என்னும் அழகு -வேதத்தில் சம்ஹிதை -பதம் க்ரமம்-மூன்று உண்டு -நெடுக தண்டாகாரமாக
போகும் சம்ஹிதை -துண்டு துண்டாக ஓதுவது பதம் -பதங்களை பிணைத்து ஓதுவது க்ரமம் -யசோதை நீளமாக வைத்த கயிறு சம்ஹிதை
போலே துண்டு துண்டு ஆக்கினது பத அவஸ்தை சேர்த்து பிணைத்தது க்ரம அவஸ்தை -தாமாகிலம் சம்ஹிதமாபி -என்று அருளிச் செய்த அழகு
விவித முநி கணோப ஜீவ்ய தீர்த்தா விகமித சர்ப்பகணா பரேண பும்ச
அபஜத யமுநா விசுத்தி மக்ர்யாம் சமித பஹிர் மத சம்ப்லவா த்ரயீவ –4-126
கண்ணபிரான் ஸ்வாமி ராமானுஜர் -ஒப்புமை -யமுனை -வேதம் -காளியன் -குதர்க்க வாதிகள் -ஐந்து துர்வாதங்கள்
-ஈஸ்வரன் இல்லை -அனுமான சித்தன் -குணங்கள் விபூதிகள் இல்லை -ஒருவன் இல்லை பல ஈஸ்வரன் -சர்வ ஸூ ந்யவாதம் போல்வன
-வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
இத்தை புரியாமல் -வேத மூர்த்தியான ஸூ ர்யனின் பெண்ணான யமுனை என்கிறார் அப்பைய தீஷிதர் –
ஆச்வாச்ய வாகம்ருத வ்ருஷ்டி பிராதி தேயாத்
தைதேய பார நமிதாம் தரணீஞ்ச தேவீம்
ஆவிர்ப்பு பூ ஷூரநகோ வ ஸூ தேவ பத்ன்யாம்
பத்மாபதி ப்ரணிததே சமயம் தாயா —முதல் அத்யாயம் முடிவு ஸ்லோஹம்
ஆவிர்புபூ ஷூ சொன்னதுமே அ நக -தோஷம் இல்லாதவன் -பரிகார அலங்காரம் -கர்ம வச்யன் போலே தோற்றம் அற்றவன் என்றபடி
த்ரச்யன் முகுந்தே நவநீத சௌர்யாத் நிரப்புக் ந்காத்ரோ நிப்ருதம் சயான
நிஜா நி நிச்சப்த சாம் யயாசே பத்த்வாஞ்ஜலிம் பாவ விபூஷாணா நி -4-28
கை கூப்பி யாசித்தான் -அஞ்சி உடலை ஒடுக்கிக் கொண்டு அசையாமல் ஓர் இடத்தில் கைகளைக் குவித்துக் கொண்டு
கவிழ்ந்து படுத்தவனாவான் என்று நேராக எழுதுகிறார் -சிறிய திருமடல் அனுபவம் இல்லாமல்

சங்க தமிழ் மாலை முப்பதும் -சங்கம் சங்கமாகக் குழாங்கள் கூடி அனுபவிக்கும் பிரபந்தம் என்றபடி
-குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -திருவாய் -2-3-11-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலின் திருவருள் பெருக்காலே தானே இந்த அனுபவம்

ஜீவக் ஸூ தாத பாதேஷூ நூதநே தார சங்க்ரஹே மத்ருபிச் சிந்த்யமாநாநாம் தேஹிநோ திவசா கதா -உத்தர ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்
அப்பா பிழைத்து இருந்த காலம் -மிதிலையில் பிராட்டி கைப் பிடித்த காலம் மீண்டு வந்து அயோத்தியில் தாய்மார்களுடன் மகிழ்வாக
இருந்த காலம் அப்பப்பா -அந்த நல்ல நாட்கள் மீண்டு வாராவோ —
ஸ்மரசி ஸூதநு தஸ்மின் பர்வதே லஷ்மணேந பிரதி விஹித சபர்யா ஸூப்தயோஸ் தான்ய ஹானி ஸ்மரசி சரச நீராம்
தத்ர கோதாவரீம் வா ஸ்மரசி ச ததுபாந்தேஷூ ஆவயோ வரத்த நா நி –
கர்ப்பிணி பிராட்டி உடன் பெருமாள் பேசும் பேச்சுக்கள் -சித்ர கூடத்தில் இருப்பை நினைவு கூறி அருளுகிறார்

போத மணவாள மா முனிவன் ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப் பூதலத்தே மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புழி யல்லவோ தமிழ் ஆராணமே
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தோல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்-பெரிய திருவந்தாதி

தம் பெரிய போதமுடன் –ஆச்சார்யா கடாஷ அதீனமான ஞானம் இல்லாமல் –இலக்கணப் பிழைகள் காண முடியாத படி
என்பதால் ஏதமில் பன்னீராயிரம் என்று சாதித்து அருளுகிறார் மா முனிகள்
வள வேழ் உலகு -ஈற்றடியில் எந்தாய் என்பான் நினைந்து நைந்தே என்பதை இவர் மட்டுமே –இனைந்து நைந்தே -என்கிறார்

எறும்புக்கு அருளிச் செயல்கள் -புற்பா முதலா புல் எரும்பாதி ஓன்று இன்றியே —நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போலே
—இருபாடி எரி கொள்ளியின் உல் எறும்பு போலே
இரும்புக்கு -இரும்பு போல் வலிய நெஞ்சம் –இரும்பு அனன்று உண்ட நீர் —
நாய்க்கு –நாய் கூலை வாலால்–மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே –கவ்வு நாயும் களுக்கும்
நரிக்கு -ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் –நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே

தண்டேனுகரா மண்டூகம் தண் தாமரையுடன் பிறந்தே
வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் அறியார் பொல்லார் நல்லோரைக்
கண்டே களிப்பர் உறவாடிக் கற்றோர் நல்லோர் பெற்றக்கால் –வினோத ரச மஞ்சரி

பெரியாழ்வார் திருமொழி தாய் பாசுர பதிகங்கள் இரண்டு -ஐய புழுதி உடம்பு அலைந்த –நல்லதோர் தாமரைப் பொய்கை
நம் ஆழ்வார் ஆடி ஆடி -2-4- தொடக்கி -கங்குலும் பகலும் -7-2- உடன் தாய் பாசுரம் தலைக் கட்டி அருளுகிறார் -7 பதிகங்கள்
திருமங்கை ஆழ்வார் -2-7- திவளும் வெண் மதி போல் -தொடங்கி-9 பத்தில் மூவரில் முன் முதல்வன் திருமால் இரும் சோலை பதிகதுடன் தலைக் கட்டுகிறார்
தலைவி பாசுரம் -2 பத்து அட்ட புயகரம் பதிகம் தொடங்கி 11 பத்து மன்னிலங்கு பாரத பதிகத்துடன் தலைக் கட்டுகிறார்
திருமங்கை ஆழ்வார் -தாய் பேச்சு பதிகங்கள் -8 தலை மகள் பதிகங்கள் -15-
தோழி பதிகம் இல்லை என்றாலும் தோழி உடன் பேசுவது போலே அவ்வன்னதவர் நிலைமை கண்டும் தோழி –
-கோழி கூவு என்னுமால் தோழி நான் ஏன் செய்கேன் -போன்றவை உண்டு

நாயகனாய் நின்ற நந்த கோபன் -உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன்
-சர்வேஸ்வரனுக்கும் சர்வ ஸ்வாமி என்கிறார்கள்
இரு கரையும் அழிக்கும் நிர்ஹேதுக கிருபா பிரவாஹம் திருவாய்ப் பாடியிலே கண்டோம் இ றே-
அந்னவான் பவதிக்கு வஸூ தேவர் இலக்கு -அந்நாதோ பகவதிக்கு நந்தகோபர்
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜா நாத் -அன்னமாகிய பர பிரமத்தை தவம் செய்து ஸுய யத்னத்தால் பெற்றாரே ஒழிய
புஜிக்க பெற வில்லையே -எல்லாம் நந்த கோபன் பெற்றானே
நாசௌ புருஷ காரேண ந சாபி அன்யேன ஹேது நா கேவலம் ஸ்வேச்சையா வஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கீதை
கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் எண்ணக் கண்டோம் –

ஷீரம் சர்க்கர ஏவ யாபிரப்ருதக்பூதா ப்ரபூதைர் குணை
ஆகௌமாரகம ஸ்வதந்த சக்தே கிருஷ்ணச்ய தார கேளைய -பாலும் சக்கரையும் போலே ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ பலராமனும்
யத் விஸ்லேஷ லவோபி காலியபுவ கோலாஹலாயா பவத் –
தமையன் ஒரு நாள் பேர நிற்க தம்பி பாம்பின் வாயில் புகும்படி ஆயிற்றே
வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்து அறியான் –
அண்ணற்கு அண்ணானோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் -அண்ணல் கண்ணான் -சர்வ ஸ்வாமி என்று சொல்லும்
திருக்கண்கள் உடையவன் -அண்ணற்கு அன்னான் இவன் தீம்பிலே தகண் ஏறி அவன் தீம்பே அறியாதவன் என்றவாறு
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவேர்கோர் கீழ்க் கன்றாய்

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -அஹிம்சா சமதா -ஸ்ரீ கீதை -10-5-
சமதா ஆத்மநி ஸூ ஹ்ருத் ஸூ விபஷே ஸூ ச சம மதித்வம் -ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூ கதிகள்
சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம் இஹ தத்தத் பதை ஸ்மாரிதம் -ஸ்ரீ தேசிகன்
தாத்பர்ய சந்த்ரிகை ஸ்ரீ ஸூ க்திகள் -நசலதி நிஜவர்ண தர்மதோ ய -சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே நஹரதி
நச ஹந்தி கிஞ்சி துச்சை சிதமநசம் தமவேஹி விஷ்ணு பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-7-20-
தன்னைப் போலே நண்பர் பகைவர் இடம் இருக்கும் தன்மை என்றவாறு
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன
நிறையி வினியுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனேதிரு விருத்தம் -62-
கங்குலும் பகலும் -7-2- திருவாய்மொழிக்கு சங்க்ரஹணம்-முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து
இப்பத்தும் வல்லார் முகில் வண்ணம் வானத்து இமையவர் சூழ பேர் இன்ப வெள்ளத்தே இருப்பார்

தேஷாம் சத்த யுக்தாநாம் பஜனாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயாந்தி தி –
ப்ரீதி பூர்வகம் பஜதாம் -சங்கரர் பாஷ்யம் -நம் ஸ்வாமி ப்ரீதி பூர்வகம் ததாமி –பகவத் குணாதிசய பிரகாசனமே பரம பிரயோஜனம் தேசிகன்
நமஸ்காரம் ஒரு தடவை பிரதஷினம் பல தடவை -என்பதற்கு பல பிரமாணங்கள் உண்டே
அவன் கடாஷம் நிர்ஹேதுகம் -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே-என் உணர்வினில் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன்னருளே -வெறிதே அருள் செய்வர் –அஜ்ஞ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ரா சாங்கிக சாமான்ய புத்தி மூல
ஸூகருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாஷம் பண்ணி -தேசிகன் -மருவித் தொழும் மனமே தந்து –தீ மனம் கெடுத்து

இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா -ஸ்வ ஹேதுத்வத்யம் ருந்தே கிம் புநஸ் சஹ காரிணாம்–நியாய சித்தான்ஜனம்
பிரபத்திக்கே உபாயத்வம் இல்லாத பொது அதன் சஹாகாரிக்களுக்கு இல்ல என்று சொல்ல வேண்டுமோ என்றபடி
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -சவீ காரம் தானும் அவனாலே வந்தது சிருஷ்டி அவதார முகத்தாலே பண்ணி அருளிய கிருஷி பலம்
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண —தேசிகன் -வரத தவ கலு பிரசாதாத்ருதே சரணமித வசோபி மேநோதியாத் -கூரத் ஆழ்வான்
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்யேன நிம்ப்ரம் ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வாரத்தம் ஸ்வ ஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்
-ஒன்பதின்கால் ஸ்வ சப்த பிரயோகம் ஈஸ்வரனுக்குத் தானே சேதன லாபம் புருஷார்த்தம் -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே –
-ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -கதாஹைமை காந்திக நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷயிஷ்யாமி -ஆளவந்தார்
-தன்னுடைய அனுவ்ருத்தியால் ஈஸ்வரனுக்கு பிறக்கும் ஹர்ஷமே இ றே சேதனனுக்கு பிராப்யம்
அனாவ்ருத்தி ஸ்ரீ பாஷ்யத்தில் எம்பெருமானார் -அவதாரிகையில் யதி பரம புருஷாயத்தம்
முக்தைச்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வ தந்த்ரத்வேன தத் சங்கல்பாத் முக்தஸ்ய புநாவ்ருத்தி சம்பவா சங்கேத் யத் ராஹ -என்று அருளி
ந ச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்தபிரியம் ஜ்ஞாநினம் லப்த்வா கதாசிதா வர்தயிஷ்யதி -என்று சாதிக்கிறார்
ஜீவாத்மா வாகிற சொத்தோ சைதன்யம் ஆகிற கல்மஷத்தோடும் கூடி இருக்கையாலே சிறிது தலையாட்டவும்
வாலாட்டவும் பெறுகிறது -தன்னை நன்றாக உணரும் போதுதலை மடிந்து நிற்கிறது

ஸ்வ கத -ச்வீகாரம் –மார்க்கடகிசோர நியாயம் –நித்ய யுக்தஸ்ய யோகிநா —தஸ்யாஹம் ஸூ லபம் –பரகத ச்வீகாரம் -மார்ஜாரகி சோர நியாயம் –
தஸ்ய நித்ய யுக் தஸ்ய நித்ய யோகம் காங்ஷாமாணஸய யோகின -அஹம் ஸூ லப -அஹமேவ பிராப்ய -ந மத்பாவ ஐஸ்வர்யாதிக ஸூ பிராபச்ச -தத்வியோ கமசஹமாந அஹமேவ தவம் வருணே மத பிராப்த்ய அநு குணோபாசன விபாக -தத் விரோதி நிரசனம் அத்யர்த்தமத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த -யமேவேஷ வ்ருணுதே தேன லப்ய -இதி ஹி ஸ்ருயதே -வஹ்யதே ச தேஷாம் சத்த ய்க்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேனமாம் உபயாந்திதே தேஷாமேவா நுகம்பார்த்த மஹா மஜ்ஞ்ஞா நஜம் தம நாசயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேன பாச்வதா இது -ஸ்வாமி ஸ்ரீ கீதா பாஷ்யம் ஸூக்திகள்
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் வில க்கு அன்று —உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமி யான அவன் தானே வந்து அங்கீ கரிக்கக் கண்டிருக்க பரதந்த்ரனான இச் சேதனன் ஆனவன் தான் பலியாய் தன ச்வீகாரத்தாலே ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் அவன் நினைவு கூடாதாகில் இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாதனம் ஆகாது என்றபடி –ஸ்வாமி யாய் ஸ்வ தந்த்ரனான அவன் ஸ்வமமாய் பர தந்த்ரனாய் இருக்கிற இருக்கிற இவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது என்கை-இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அனுபாயத்வமும் பரகத ச்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது -மா முனிகள் ஸ்ரீ சூக்திகள்

சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமான பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாபணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது இ றே
நெடுநாள் அந்ய பரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே பர்த்ரு சகாசத்திலே வந்து நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று
அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி
கைங்கர்ய பிரபத்தியும் பண்ண வேணும் -சார்வ பௌவனை நீசப் பெண் ஆசைப் படுமா போலே ஐயோ என்ன ஆசைப் பட்டோம்
இது தகுமோ -என்று நெஞ்சாறல் பாடவும் வேணும்
புகழ்வெல்லாம் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -ஒப்பாகச் சொல்வது இழிவு என்பர் கடல் வண்ணா
கொண்டல் வண்ணா காயா வண்ணா என்னவும் அருளிச் செய்வர்
ஆவியுள் கலந்த ஹர்ஷம் உந்த அறிவு இழந்து கைம்மாறாக ஆத்மாவை மீளா அடிமையாகக் கொடுத்து பின்னையும்
தனது ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -அனுதபிக்கவும் வேணும்
த்வய உச்சாரண அநுச்சாரணத்தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்த பின்பு -பழுத்த ஆத்ம சமர்ப்பணமாகத் தலைக் கட்டும்
நெறி காட்டி நீக்குதியோ -பர தந்த்ரமான வஸ்துவை ஸ்வ தந்த்ர க்ருத்யமான உபாய அனுஷ்டானத்திலே மூட்டித் தனக்கு அசலாக்குகை
மதிராபிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத்த தீர்த்த சலிலம் போலே அஹங்கார மிஸ்ரமான உபாயான்தரம் -என்று பிள்ளான் பணிப்பாராம் –
தானே கர்த்தா தானே போக்தா என்னும் அஹங்காரம் -ஸ்வ யதன நிவ்ருத்தி பார தந்த்ர்ய பலம்
நயாச திலகத்தில் தேசிகன் இத்தை அருளிச் செய்கிறார் –ஆர்த்தேஷூ ஆசுபலா தத் அந்ய விஷயேப் யுச்சின்ன தேஹாந்திர
வஹ்ன்யாதே அந பேஷணாத் தநுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நீ ஸ்ரீ ரஜ்கேச்வர யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ர்யோ சிதா
த்வவ்யேவ த்வத் பாராதீர பிஹித ஸ்வ உபாய பாவஸ்து மே –என்று அருளிச் செய்கிறார்

பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே –சர்வ சக்தி யுக்தன் -விசித்திர சக்தி உக்தன் -விலஷண சக்தி உக்தன் -அத்புத சக்தி உக்தன்
-ஆச்சர்ய சக்தி உக்தன் -அகடிதகட நா சக்தி உக்தன்
ஸ்ருதேச்து சப்த மூலத்வாத் —அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் — வ்யாப்ய நாராயண ஸ்தீத –அணோரணீயான்
சகல வஸ்து விலஷணஸ்ய சாஸ்த்ரைக சமதிகமஸ்ய அசிந்த்ய அப்ரமேய அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -சமம் -அந்த கரண நியமனம் -தமம் பாஹ்ய கரண நியமனம் –
ஸ்ரீ கீதை 10-4/16-1.2- ஸ்வாமி மாற்றிச் சொல்லும் இடங்களும் உண்டு
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஒன்றே அமையாதோ
தாரணியில் வாழ்வாருக்கு வான் ஏறப் போகும் வாழ்வு

யதீந்த்ரர் அபிமாநித்தது திரு நாராயணபுரம் -யதீந்திர பிரவணர் அபிமாநித்தது -இராஜ மன்னார் கோயில்
வண துவாராபதி மன்னன் –மணி வண்ணன் –வாசு தேவன் –மணியில் அணி நிற மாயன் -நான்கு அர்ச்சா ரூபங்கள் -அசாதாராண திரு நாமங்கள் -நம்மாழ்வார் சாத்தியவை -தீர்ப்பாரை யாமினி மாசறு சோதி -இரண்டு திருவாய் மொழி களும் நித்ய அனுசந்தானம் இங்கே —
மாறன் மடலும் வெறி விலக்கும் மா முனி தன் தேறல் கமலைத் திருத் துதியும்
ஊழி வரும் கோபால விம்சதியும்  வண் துவரைக் கோனான கோபாலனுக்கு ஆன கூற்று
தீர்ப்பாரை யாமினியில் மாசறு சோதிப் பதிகத்தில் சேர்ப்பன் தென் துவரைச் சீமானை ஒர்ப்பன் என்னச்
சொன்ன மணவாள மா முனியே தொல்லுலகில் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
நாம் யார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக எம்மைத் தனித்து அழைத்து நீ  மாறன்
செந்தமிழ் வேதத்தின் செம்பொருளை நாடோறும் வந்து உரையாய் என்று ஏவுவதே வாய்ந்து –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி –புற மதங்களை நிரசிக்கலாமோ -அமிர்தம் விஷம் இரண்டையும் அவன் தான் ஆக்கினான்
-ஆனந்த ரூபமாகை யாவது -ஜ்ஞானம் பிரகாசிக்கும் பொழுது அநு கூலமாய் இருக்கை-விஷ சஸ்த்ராதிகளைக் காட்டும் பொழுது
பிரதிகூலமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா பிரமாதிகள் -ஈச்வராத்மகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் பிராதிகூல்யம் வந்தேறி

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
தவன் மௌலி கந்த ஸூ பகாம் உபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத்தர பத அநு குணம் பிரசாதம் –ஸ்ரீ கோதா ஸ்துதி
மஹத்தர பத -பெரியாழ்வார் திருவடி என்றபடி
யாம் ஔ திமித ஆயுஷ்மான் அன்வேஷசி மஹா வனே -என்றாரே பெரிய வுடையாரான ஜடாயு மகா ராஜரும்

ப்ரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் ப்ரஜாநாம் பக்த அநு கந்துரிஹா யஸ்ய கதாகதா நி -வேகா சேது ஸ்தோத்ரம் –
-பக்தனை பின் சென்ற யதோத்தகாரி சஞ்சாரம் அனுசந்திக்க நமது சம்சார சஞ்சாரம் தொலையுமே –
யஸ்ய பிரசாத கலயா பதிர -ஸ்ருணேதே பங்கு -பிரதாவதி ஜவேன ச வக்தி மூக-அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி -ஆளவந்தார் சரணாகதி பண்ணி -ஆ முதல்வன் -தர்சன ஸ்தாபகர் ஆக்கி அருள
–தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்டவர் அன்றோ
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போலே -துளங்கி நின்று வழி திகைத்து அலமந்து நிற்கும்
தசையிலே காத்து அருளின மிதுனம் அன்றோ -யஜ்ஞ மூர்த்தி விருத்தாந்தத்தாலும் உண்டே

கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -நம்மாழ்வார் -முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன்
அகல்வதுவோ விதியினமே -என்று அருளி -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் –
என்று பிரார்த்தித்து உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று நிகமிக்கிறார்
பெரியாழ்வார் -நியதமும் அத்தாணிச் சேவகமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று அருளி
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன்
ஆண்டாள் -குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உனக்கே நாம் ஆட்செய்வோம் –கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு
எனக்கு அருள் கண்டாய் –என்றும் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ  கூடிடு கூடலே -என்று அருளிச் செய்கிறார்
ஆளவந்தார் -கதா அஹம் ஐ காந்திக நித்ய கிங்கர பிரகர்ஷயிஷ்யாமி என்று அருளிச் செய்தார்
எம்பெருமானார் கத்யத்தில் நித்ய கிங்கரோ பவா நி என்று பிரார்த்தித்து நித்ய கிங்கரோ பவ என்று அரங்கனால் அருளப் பெற்றார்

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி- மணி  -விளக்கு -ஆயர் பாடிக்கு ஒரு அணி விளக்கு-இவை விபவத்தில்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -முனியே திரு மூழிக் களத்து விளக்கே –இத்யாதிகள் அர்ச்சிராதி விளக்கு
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –வேதாந்த விழுப் பொருளின் மேல் விளக்கு -பொதுவான விளக்கு –
முந்நீர் வாழ்ந்த சூட்டும் கோவை ஆழ என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பான் அவன் கண்களாலே -ஸ்வ பர பிரகாசத்வங்கள் அவனாலே தான் என்றதாயிற்று
அந்த விளக்கை காண -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி
மானம் ப்ரதீபவமிவ காருணிகோ ததாதி பட்டர் -மானம் -பிரமாணம் –ஆதௌ வேதா பிரமாணம் -வேதமே முதல் விளக்கு
-அதில் இருந்து ஞான விளக்கு ஏற்றி நந்தா விளக்கைக் காண வேண்டும் –

பெரிய திருமொழி -4-2-வண் புருடோத்தம பதிகம் நிகமான பாசுரத்தில் -உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே
-இச்சுவை தவிர யான் போய் யான் பெரும் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -பரமபதத்தையும் த் ருணீ கரித்து
இருப்பவர்களுக்கு எண்ணில்லாத -எண்ணவும் முடியாத என்றும் அசங்க்யேதமான என்றும் இங்கேயே கிட்டும் இன்பம் என்றுமாம்

———————————————————————————

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: