ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம் –

இரண்டாம் பிரகரணம் –ஆசார்ய வைபவம்

அநந்தரம் -ஆசார்ய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது -எங்கனே என்னில் -ஆசரித்துக் காட்டுமவன் -ஆசார்யன் –
விசேஷ தர்மங்களைக் குறித்து உபதேசிக்கிறான் யாவன் ஒருவன் அவன் ஆசார்யன் ஆகிறான்
அஜ்ஞ்ஞானத்தை அகலும்படி பண்ணி -ஜ்ஞானத்தைப் புகுரும்படி பண்ணி -ருசியைக் கொழுந்தோடும் படி பண்ணுகை
ஆசார்யன் க்ருத்யம் என்று எம்பார் அருளிச் செய்வர்
ஆசார்ய பதம் என்று தனியே ஓன்று உண்டு -அது உள்ளது எம்பெருமானார்க்கே என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
சிஷ்யாசார்ய க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் தாழ்வான் எங்கனே என்னில்
-தம்மளவிலே உடையவர் நிக்ரஹம் பண்ணினார் என்று கேட்டு இவ்வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில் விநியோக
பிரகாரம் கொண்டு கார்யம் என் என்று அருளிச் செய்கையாலே சிஷ்யருக்கு சீமா பூமி –
சாபராதனான நாலூரானை நான் பெற்ற லோகம் நாலூரானும் பெற வேணும் என்கையாலே ஆச்சார்யர்களுக்கு சீமா பூமி
அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு ஐயோ என்னுமவன் ஆசார்யன்
அர்ச்சாவதாரத்தின் உடைய உபாதான த்ரவ்ய நிரூபணம் பண்ணுகையும் -ஆசார்யனை மனுஷ்ய ஜன்ம நிரூபணமும்
நரக ஹேது என்று சாஸ்திரம் சொல்லும் –
மந்த்ரத்திலும் -மந்திர ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும் மந்திர பிரதானான ஆசார்யன் பக்கலிலும் எப்போதும் ஒக்க பக்தியைப் போர பண்ண வேணும்
ஆசார்யனையும் எம்பெருமானையும் பார்த்தால் ஆசார்யன் அதிகன் -எங்கனே என்னில் ஈஸ்வரன் தானும் ஆசார்ய பதம் ஏற ஆசைப்பட்டான்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்தது என்றும் -சிஷ்யஸ் தே அஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் -என்று சொல்லும் படி
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கீதா உபதேச முகத்தாலே ஆசார்ய பதம் நிர்வஹித்தான் –
த்ருவனுக்கு ஸ்ரீ பாஞ்ச ஜன்ய முகத்தாலே ஜ்ஞான உபதேசம் பண்ணினான் -ஆகையால் ஆசார்ய பதம் நிர்வஹித்தான்
ஈஸ்வரன் அபிமானம் அன்றியே ஆசார்ய அபிமானத்தாலே மோஷ சந்தி உண்டு -இது கண்டா கர்ணன் பக்கலிலே காணலாம்
-ஆசார்ய அபிமானமே உத்தாரக ஹேது என்னும் இடம் பாபிஷ்டனுக்கு தலையான ஷத்ர பந்துவின் பக்கலிலே காணலாம்
புண்யோத்தமாருக்கு தலையான புண்டரீகன் உடன் ஒக்கப் பெறுகையாலே
சஷூஷ்மான் அந்தகனை அபிமத தேசத்திலே நடப்பிக்குமோ பாதியும் -பங்குவை நாவிகனானவன் ஓர் இடத்திலே வைத்து
அக்கரைப் படுத்துமோ பாதியும் ராஜ வல்லபனான புருஷன் அவன் பக்கல் பெற்ற ஐஸ்வர் யத்தை இவனை அறியாத புத்திர
மித்ராதிகளைப் புஜிக்குமா பாதியும் வைராக்யத்தில் விஞ்சின லாபம் இல்லை -ஜ்ஞானத்தில் விஞ்சின ஸூ கம் இல்லை –
சம்சாரத்தில் விஞ்சின துக்கம் இல்லை -அப்படியே ஆசார்யானில் விஞ்சின ரஷகர் இல்லை
-நவத்வார புரியான இலங்கையில் ராஷசிகளாலே ஈடுபடா நிற்க பிராட்டிக்குத் திருவடியினுடைய தோற்றரவு போலே
நவத்வார புரமான தேஹத்திலே தாபத் த்ரயங்களால் ஈடு படா நிற்க சேதனனுடைய ஆசார்யனுடைய தோற்றரவு என்று எம்பார் அருளிச் செய்வர்
அவன் கொடுத்த திரு வாழி மோதிரத்தைக் கொண்டவள் ஆச்வச்தையுமோ பாதி இவ்வாச்யார்யன் பிரதி பாதிக்கும்
மந்திர ரத்னத்தாலே இவ்வதிகாரியும் ஆச்வச்தனாகா நிற்கும்
விஞ்சின ஆபத்து வந்தாலும் ஆசார்யனுடைய வார்த்தையே தாரகமாகக் கடவது
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புரா கீதம் மஹாத்ம நா -மஹத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -என்று பிரமாணம் –
ஆழ்வார்கள் எல்லாரும் உத்தேச்யராய் இருக்க பிரதமாசார்யர் ஆகையாலே இ றே நம்மாழ்வார் என்று பேராகிறது
ஸ்ரீ பூமி ப்ரப்ருதிகளான நாய்ச்சிமார் எல்லாரும் ஒத்து இருக்க பிராட்டிக்கு ஏற்றம் குரு பரம்பரைக்குத் தலை யாகை இ றே
-ஆசார்ய பூர்த்தி உள்ளது பிராட்டிக்கு -எங்கனே என்னில் -பகவத் விமுகனாய் சாபராதனுமான ராவணனுக்கு பகவத் உபதேசம் பண்ணுகையாலே –
விதி தஸ் சஹி தர்மஜ்ஞ்ஞஸ் சரணாகத வத்சல-தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சசி -என்று பிரமாணம்
இப்படி தோஷம் பாராமல் ஹித ப்ரவர்த்தகத்வம் உள்ளது பிராட்டிக்கும் கூரத் ஆழ்வானுக்கும் இ றே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆச்சான் பிள்ளையை ஆசார்ய லஷணம் எது என்று கேட்க தத்தவ உபதேசத்தில் ஸூ த்த சம்ப்ரதாய
பிரவர்த்தகம் -அது உள்ளது நம்பிள்ளைக்கும் நஞ்சீயருக்கும் என்று அருளிச் செய்தார்
நம் பிள்ளை திருமாளிகைக்கு நடுவில் திரு வீதிப் பிள்ளை செங்கல் சுமந்து வர ஆசார்யர் ஆகும் போது ஆசரித்துக் காட்ட
வேண்டும் இ றே என்று அருளிச் செய்தார்
அஷர சிஷகன் ஆசார்யன் அன்று -ஆம்நாயாத்யாபகன் ஆசார்யன் அன்று -சாஸ்திர உபதேஷ்டா ஆசார்யன் அன்று
-மந்த்ரார்த்த உபதேஷ்டா ஆசார்யன் அன்று -சாதா நாந்தர உபதேஷ்டா ஆசார்யன் அன்று -த்வய உபதேஷ்டாவே ஆசார்யனாகக் கடவன்
பாஷ்ய காரரும் ஆழ்வான் தேசாந்தரத்திலே நின்றும் வரக்கண்ட ப்ரீதி யதிசயத்தாலே மீண்டும் த்வயத்தை உபதேசித்து அருளினார் –
நம்பிள்ளை புருஷகாரமாக ஒருத்தன் ஜீயரை ஆஸ்ரயிக்க வர அவனுக்கு பூர்வ வாக்யத்தை உபதேசிக்க -இடையன் எறிந்த மரமே
ஒத்திராமே யடைய அருளாய் என்று பிள்ளை விண்ணப்பம் செய்ய உத்தர வாக்யத்தை உபதேசித்து அருளினார்
திரு மந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வையேக நிஷ்டர் ஆவீர் என்று இ றே அனந்தாழ்வான் வார்த்தை
ஆழ்வாருக்கும் ஆசார்ய பூர்த்தி திருவாய் மொழியை வ்யாஜி கரித்து த்வயத்தை அருளிச் செய்கையாலே என்று இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர் -ஆகையால் இ றே திரு வாய் மொழி தீர்க்க சரணாகதி என்று பேராகிறது
விசேஷித்து பிரபத்தியினுடைய அர்த்தத்தை நோற்ற நோன்பு ஆராவமுது மானேய் நோக்கு பிறந்தவாறு இவற்றிலே வெளியிட்டார் இ றே
சரணாகதியும் திருவாய் மொழி யுமாகிய இரண்டும் இ றே த்வயம் என்று போருகிறது என்று பெரியாண்டார் அருளிச் செய்வர்
பிரபத்தியில் பூர்வ வாக்ய உத்தர வாக்ய பேதத்தோ பாதி இ றே த்வயத்துக்கும் திருவாய் மொழிக்கும் உள்ள வாசி என்று எம்பார் அருளிச் செய்வர்
திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன் அவன் த்வயார்த்த பிரதிபாதகன் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்
இவ்விரண்டு அர்த்தத்தையும் பிரதிபாதிக்கிறான் யாவன் ஒருவன் அவனுக்கு இ றே ஆசார்ய பூர்த்தி உள்ளது என்று ஜீயர் அருளிச் செய்வர்
பாஷ்யகாரருக்கு இவை இரண்டுக்கும் சப்த பிரதிபாதிகர் இருவரும் அர்த்த பிரதிபாதகர் இருவரும் -ஆர் என்னில் பெரிய நம்பி த்வயத்தை உபதேசித்து அருளினார் -த்வயார்த்தத்தை அருளிச் செய்தார் திருக் கோட்டியூர் நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திருவாய் மொழி ஓதுவித்து அருளினார்
திருவாய் மொழியினுடைய அர்த்தத்தை அருளிச் செய்தார் திருமாலை யாண்டான்
இவை இரண்டுக்கும் ப்ரவர்த்தகர் ஆவார்கள் இ றே ஆசார்ய பதம் ஏறிப் போந்தவர்கள்
அவர்கள் ஆர் என்னில் நாத முனிகள் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார் உடையவர் எம்பார் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை –
இவர்களில் வைத்துக் கொண்டு சப்த பிரதனான ஆசார்யனிலும் அர்த்த பிரதானவன் அதிகன் –
அவ்வாச்சார்யனுடைய ஏற்றம் இவன் பிரதிபாதிக்கையாலே ஆசார்யர்கள் எல்லாரும் சேர இருந்து எங்கள் சிஷ்யர்கள் உம்மை
சேவிக்கைக்கு அடி என் என்று ஆச்சான் பிள்ளையைக் கேட்டருள
-உங்களுக்கு போகாதே இருப்பது ஒன்றுமாய் இவர்களுக்கு அபேஷிதமாய் இருப்பதொரு அர்த்தம் எனக்கு போம்
எங்கனே என்னில் த்வயத்தை உபதேசித்து பெருமாளுடைய ஏற்றத்தையும் அருளிச் செய்தி கோள் நீங்கள்
-உங்களுடைய ஏற்றம் உங்களுக்குப் போகாது -அது நான் சொல்ல வல்லேன் என்று அருளிச் செய்தார் –
கரும் தறையிலே உபதேசிக்கிற ஆசார்யன் திரு விளையாட்டாமாம் படி திரு வாழிக் கல்லு நாட்டினானோ பாதி இவர்களைத் திருத்துகிற
ஆசார்யன் திரு விளையாட்டத்தை திரு நந்தவனமாக்கி அதிலுண்டான திருப்படித் தாமத்தை பகவத் ஏக போகமாம் படி
பண்ணுகிறவனோ பாதி என்று பெரியாண்டான் அருளிச் செய்வர் -கரும் தறையில் உபதேசிப்பவனே ஆசார்யன்
ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் உபகாரகன் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் –
-ஸ்வ ஆசார்ய வைபவத்தை வெளியிடுகையே ஆசார்ய க்ருத்யம் –எங்கனே என்னில் நடுவில் திருவீதிப் பிள்ளை
-உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இணையார் என்று எண்ணுவார் இல்லை காண்-என்கிற பாட்டை அருளிச் செய்த அளவிலே
-கூர குலத்தில் பல பிள்ளைகள் பிறந்து இருக்கச் செய்தேயும் பிள்ளையை சேவித்த ஏற்றம் எனக்கு உண்டானாப் போலே என்று அருளிச் செய்தார்
தெற்கு ஆழ்வான் -பட்டர் நம்பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தை கேட்டுப் பெருமாள் திரு ஓலக்கத்திலே வாசிக்கச் செய்தே பிள்ளை கொண்டாட
நட்டுவனார் தாமே கொண்டாடுமோ பாதி பிள்ளை என்னைக் கொண்டாடுகிறபடி என்று அருளிச் செய்தார்
ஒரு கிணற்றிலே விழுந்தான் ஒருத்தனை இரண்டு பேராக எடுக்குமோ பாதி இ றே- பாஷ்யகாரரும் எம்பாருமாக என்னை
உத்தரித்தபடி என்று பெரியாண்டான் அருளிச் செய்தார்
பாஷ்ய காரர் ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யனோபாதி என்று அருளிச் செய்வர் -எங்கனே என்னில்
பாஷ்ய காரர் திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழி கேட்கிற நாளிலே -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
-என்கிற பாட்டை அருளிச் செய்த அளவிலே யதான்வயமாக நிர்வஹிக்க –
பாஷ்யகாரர் இது அநுசிதம் என்று அன்வயித்துப் பொருள் உரைக்க உம்முடைய விச்வாமித்ர ஸ்ருஷ்டீ விடீர்
நாம் பெரிய முதலியார் பக்கல் கேட்ட அர்த்தம் இதுவே காணும் என்று இவர்க்கு திருவாய் மொழி அருளிச் செய்யாமல் இருக்க
பின்பு ஒரு காலத்திலே திருக் கோட்டியூர் நம்பி இளையாழ்வார் திருவாய் மொழி கேட்டுப் போரா நின்றாரோ என்று
திருமாலை யாண்டானைக் கேட்டருள -அங்குப் பிறந்த வ்ருத்தாந்தத்தை அவரும் அருளிச் செய்ய பெரிய முதலியார் திருவாய்மொழி
இரண்டாமுரு அருளிச் செய்கிற போது பாஷ்யகாரர் உக்தி க்ரமத்திலே என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்ய
பாஷ்யகாரரை அழைத்து ஆளவந்தார் திரு உள்ளத்திலே பிரகாசிக்கும் அதுவே ஒழிய இவர்க்கு பிரகாசிக்குமா வென்று
திருமாலையாண்டான் அருளிச் செய்ய பாஷ்ய காரர் ஆளவந்தார்க்கு நான் ஏகல்வயனோபாதி என்று அருளிச் செய்தார்
ப்ரவர்த்தகனை வலிய அழைத்தாகிலும் இவ்வர்த்தத்தை உபதேசிக்கை-ஆசார்ய க்ருத்யம் -எங்கனே என்னில்
குளப்படியில் நீரைத் தேக்கினால் நின்று வற்றிப் போம் -வீராணத் தேரியில் தேக்கினால் நாட்டுக்கு உபகாரகமாம்
ஆகையால் இவ்வர்த்தத்தை ஆளவந்தார் க்கு உபதேசியும் என்று உய்யக் கொண்டாரைப் பார்த்து நாதமுனிகள் அருளிச் செய்தார்
ஆளவந்தாரும் ஸ்தோத்ரத்தை அருளிச் செய்து பெரிய நம்பி கையிலே கொடுத்து பாஷ்யகாரர் பக்கல் ஏறப் போக விட்டு அருளினார்
ஆக ஆசார்யர்கள் பிரதம உபதேஷ்டமான ஆசார்யனிலும் ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அளவிலே நிரந்தர சேவை பண்ணிப் போருவர்கள்
அவர்கள் ஆர் என்னில் எம்பார் திருமலை நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து பாஷ்யகாரர் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்
நாலூராண்டான் ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து திருமாலை யாண்டான் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்
பெரியாண்டான் பாஷ்யகாரர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து எம்பார் பக்கலிலே ஜ்ஞான உபஜீவனம் பண்ணினார்
பெரிய பிள்ளை- இளைய ஆழ்வாரான திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்
ஸ்ரீ சேனாபதி ஜீயர் -நஞ்சீயர் பக்கலிலே ஆஸ்ரயித்து நம்பிள்ளை பக்கலிலே ஜ்ஞான உப ஜீவனம் பண்ணினார்
ஆகையாலே ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் பக்கலிலே விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்
ஆகை இ றே நம் ஆழ்வாரோ பாதி நம்பிள்ளை என்று பேராகிறது-அவரை பிரதம ஆசார்யர் என்னுமோ பாதி இவரை லோகாசார்யர் என்று போருகிறது
அவரை திரு நா வீறுடைய பிரான் என்னுமோ பாதி இவரை நா வீறுடைய பிரான் என்று போருகிறது
ஆகையாலே ஆசார்யன் இவ்வதிகாரியினுடைய ஆதம யாத்ரைக்கு கடவனாய்ப் போரும்-
ஆசார்யனுடைய தேக யாத்ரை சிஷ்யனுக்கு ஆத்ம யாத்ரையாய்ப் போரும்
இவ்வாச்சார்ய பரந்யாசம் பண்ணினவர்களுக்கு எல்லை நிலம் நாய்ச்சியாரும் -மதுர கவிகளும் -எங்கனே என்னில்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று நாய்ச்சியார் -ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டியது இல்லை
பெரியாழ்வார் தாளத்தை தட்டி அழைக்கவுமாம் -சாண் தொடையைத் கட்டி அழைக்கவுமாம் என்று அவர் பக்கலிலே பரந்யாசம் பண்ணினார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் ஆழ்வார் பக்கல் பரந்யாசம் பண்ணினார்
ஆசார்யரான ஆழ்வாரையே-சேஷி -சரண்யர் -ப்ராப்யர் -பிராபகர் -என்றே அனுசந்தித்தார்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்றும்
பண்டை வல் வினை பாற்றி அருளினான் என்றும்
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் என்றும்
பரம குரும் பகவந்தம் பிரணம்யம் என்றும்- பரமாச்சார்ய பூதரான ஈஸ்வரனில் காட்டிலும் ஆசார்யன் அதிகன்
ஆசார்யன் பாரம்பர்யத்தில் ஸ்வ ஆசார்யன் அதிகன்
அவ வாச்சார்யானில் காட்டில் தன வைபவ பிரதிகாதகனுமாய் இவனுக்கு பிரகாரனுமாய் ஸ்வரூப வர்த்தகனான ஆசார்யன் அதிகன்
ஆக ஏவம் ரூபமாய் இருக்கும் ஆசார்ய வைபவம் –

——————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: