ஸ்ரீ யதிராஜ விம்சதி – தனியன் / பிரவேசம் -/முதல் ஸ்லோஹம் –ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையே சேஷி உபாயம் பிராப்யம் என்ற பற்ற -அவர் உத்தாராக ஆசார்யர் –
க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் உடையவர் திருவடிகளைக் காட்டிக் கொடுத்து அருள
ஸ்ரீ மத யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-ஸ்ரீ சைல நாத கருணா -பரிணாமத்தாம் -என்றும்
தேசம் திகழும் திரு வாய் மொழிப் பிள்ளை மாசில் திருமலை யாழ்வார் என்னை நேசத்தால் எப்படி எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா -என்றும்
தாமே அருளிச் செய்த படி தஞ்சமாக காட்டிக் கொடுத்த உடையவர் மேலே அதிக பிராபண்யம் மிக்கு யதிராஜ விம்சதி அருளிச் செய்தார் –
வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்து
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே -என்று அங்கே இருந்த முதலிகள் அனுசந்தித்தார்கள்
ரகஸ்ய த்ரயம் -65 அஷரங்கள் என்பதால் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகங்கள் அருளிச் செய்தது போல்
அதில் உள்ள 20 பதங்கள் என்பதால் 20 ஸ்லோகங்கள் கொண்டு மணவாள மா முனிகள் இந்த பிரபந்தம் அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

ய-
யதிவரதத்த்வவிதே …-வரவரமுனி சதகம் -2-என்றும் -கருணைக சிந்தோ -வரவர முனி சதகம் -100-என்றும் சொல்லுகிறபடியே
எம்பெருமானாருடைய அவதார விசேஷமாகவும் -அவர் தம்முடைய யாதாம்ய தர்சியாகவும் தயாம்பு ராசியாகவும்
பிரசித்தரான யாதொரு மணவாள மா முனிகள் யச்சப்தம் பிரசித்த பராமர்சி இறே-
யதிபதி பிரசாதிதீம்
யதிதாம் பதி -யத்பதி / யதிபதே பிரசாத அஸ்யாம்-அஸ்தீதி-யதிபதி பிரசாதிதீம் என்ற வ்யுத்பத்தியாய் –
ஜிதேந்த்ரியர்களுக்கு உத்தர உத்தர இந்த்ரிய நிக்ரஹம் வாராமல் பண்ணியும் மென்மேலும் இந்த்ரிய நிக்ரஹம் அபிச்சின்னமாக
அபிவிருத்தமாம் படி பண்ணியும் ரஷகரான எம்பெருமானாருடைய ப்ரீதி விஷயம் என்னுதல் –
யதிபதி பிரசாத் யதீதி -யதிபதி பிரசாதி தீ தாம் -என்று வ்யுத்பத்தியாய் தன்னை அனுசந்தித்தவர்கள் பக்கல்
எம்பெருமானாரை அனுக்ரஹ சீலராம்படி பண்ண வற்றன என்னுதல்
இத்தால் இவர் எம்பெருமானாருடைய நிரபேஷ உபாயத்வத்தையும் -சம்சாரிகளுடைய சர்வ பிரகாராதிதாயித்வத்தையும் –
அத்வதாயிபி சைவ கஸ்ய சம்யந்த்யஸ்தாத் மநோஹரௌ சர்வ ஏவ ப்ரமுச்யேரந்த்ர பூர்வே பரே ததா -பாரத்வாஜ சம்ஹித -1-1-31-என்கிறபடியே
இவர் சம்பந்தமே சர்வ உத்தாரகம் ஆகிறபடியும் திரு உள்ளம் பற்றி -இப்பிரபந்தம் அனுசந்தானத்தால் மாத்ரமே யாகிலும் எம்பெருமானார்
சம்பந்தம் உண்டாக அமையும் -என்று அவர் தமக்கு பிரசாத ஜனகமான இப்பிரபந்தத்தை அருளிச் செய்தார் என்கிறது –
இரண்டு யோஜனையிலும் இப்பிரபந்தம் எம்பெருமானார்க்கு அத்யந்த அபிமதம் ஆகையாலும் அத்தை அனுசந்தித்தவர் பக்கல்
எம்பெருமானார் தன்னடையே பிரசாதத்தை பண்ணி அருளுவார் என்கிறது –
பிரசாதிதீம்
தாமரையாள் ஆகிலும் சிதகுலைக்கும் -என்னுமா போலே இச் சேதனனை தான் கடாஷிப்பது இல்லை என்று இருக்கும்
எம்பெருமானாரையும் இப்பிரபந்தம் ஸ்வ ஸ்மரண மாத்ரத்தாலே அவன் தன்னிடத்தே பிரசாதத்தை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத படி பண்ணுவிக்கும் என்கிறது -இவர்த்தமிராமானுஷாட்ஷ்டகத்தில் பிரசித்தம் இறே -இது தன்னை சுரக்கும் திருவும் உணர்வும் -43 என்று அமுதனார் அருளிச் செய்தார் இறே
யதிராஜ விம்சதிம்
பிரதி ச்லோஹம் யதிராஜ சப்தத்தை இட்டுச் சொல்லுகையாலே -யதிராஜ விம்சதி -என்கிற திரு நாமத்தை உடையது என்னுதல்
இதில் ஒரு ஸ்லோக்ஹத்தை அனுசந்திக்கவே அனுசந்தாத்ரு விஷயத்தில் ப்ரேமம் கரை புரண்டு ஓர் ஆயிரத்தில் படியே
இருபடியாய்த்து எம்பெருமானார் இவர் தனக்கு ரஷகராம் படியும் என்கிறது -இதில் படி என்று திருமேனி
ஸ்துதிம்
ஸ்தோத்ரத்தை -ஸ்தூ யத இதி ஸ்துதி -எம்பெருமானாருடைய குண அனுபவ ரூபமான இப்பிரபந்தத்தை
வ்யாஜஹார-
இஸ் சப்தம் -ஜகார -ஆஜஹார -வ்யாஜஹார -என்று த்ரிபிரிகார பிரகாரமாய் இருக்கையாலே -எந்தை திருவாய் மொழிப் பிள்ளை
இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தை –என்கிறபடியே -பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பர ராப்தமான அர்த்தத்தை
சம்சாரிகளுடைய துர்க்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாதே இப்பிரபந்த ரூபேண அருளிச் செய்தார் என்கிறது –
அவ்வழியாலேஉபகாரராய் -அத ஏவ -பிரபன்ன ஜன சாதகாம்புதம்-பிரபன்ன ஜனங்கள் உண்டு -பர அபிமானமே உத்தாரகம் என்று இருக்கும்
அவர்களாகிற சாதகங்களுக்கு வர்ஷூ கலாவஹரான பிரபன்ன ஜனங்களை சாதகங்கள் ஆகவும் -இவரை அம்புதமாகவும் நிரூபிக்கையாலே
சாதகங்களுக்கு -சாதகங்களுக்கு வர்ஷபிந்து அன்றிக்கே தாரகம் இல்லாதாப் போலே யாய்த்து பிரபன்ன ஜனங்களுக்கு பராபிமானம்
அன்றுயே உஜ்ஜீவன உபாயம் இல்லை என்கையும் அம்புதமாவது -சமுத்ரோதத்தை தாம் பருகி ஸ்வ சம்பாதத்தாலே
அதன் லாவண்யத்தைப் போக்கி மாதுர்யத்தை உண்டாக்கி அத்தை
சர்வ உபாய போக்யமாம் ஆக்குமா போலே யதீந்த்ராக்ய பத்மாக்ரதமான பகவத் காருண்ய ரசத்தை தாம் அனுபவித்து
அதில் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் அவைரச்யத்தை மாற்றி சாபராத சேதன ரஷண உபயோகியாக்கி அத்தை சர்வர்க்கும் கொடுக்குமவர்
நிரபேஷ உபகாரகர் யென்கையும் -பர சம்ருத்தியே ஸ்வ ச்ம்ருத்தியாய் இருக்குமவர் யென்கையும் தாம் தாமாக ஓர் அர்த்தத்தை கல்ப்பித்து
உபதேசிக்கை யன்றிக்கே உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தத்தையே உபதேசித்தார் யென்கையும் தோற்றுகிறது-அன்றிக்கே சம்பந்திகளான ஜனங்கள் ஆகிற
சாதகங்களுக்கு வர்ஷூ கலாவஹர் என்றுமாம் -அப்போது எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை தாம் அனுபவித்து அவைகளை
தத் சம்பந்திகளுக்கு போக்யமாக உபதேசிக்குமவர் என்கிறது -பகவத் வந்தன கார்யம் குரு வந்தன பூர்வகம் –என்று ததீய விஷயத்தில் ஒக்கும் இறே
சௌம்ய வர யோகி புங்கவம் –
மகா உபாகரகர் ஆகையாலே -சதா தர்ச நீயராய் -மங்கள அவாஹமாய் -இவ் விரண்டு ஆகாரத்தாலே பெரு மதிப்புத் தம் திரு உள்ளத்திலே
தட்டாதவராய் -பர சம்ருதியே பிரயோஜனமாய் இருக்கிற அழகிய மணவாள மா முனிகளை
தௌமி-
பெரிய ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து-அதிகத பரமார்த்தரான எறும்பியிலப்பா-யதிவர பிரசாத ஜனகமான இப்பிரபந்தத்தை உபகரித்து
அருளி மஹா உபகாரகத்துக்குத் தோற்று தம்மை அத்தலைக்கு சேஷமாக்கிக் கொடுக்கிறார் -ரேணுஸ்தௌ – இ றே
இத்தால் அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -அதாவது -ஸ்வஸ்மித ஸ்வா ர்ஹதா நிவ்ருத்தி –
சரண உல்லிடமான மணிக்கு ஒளி ஸ்வபாவகம் இறே

—————————
பிரவேசம் –

ஸ்ரீ யபதியாய் -பரம காருணிகரான-சர்வேஸ்வரன் அந்தமில் பேரின்பமான த்ரிபாத் விபூதியிலே ஸ்ரீ வைகுண்டாக்ய திவ்ய நகரத்திலே சஹஸ்ரஸ்தம்ப
சோபிதமான திரு மா மணி மண்டபத்திலே -சஹஸ்ர பணா மண்டல மண்டிதமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற கோப்புடைய சீரிய
சிங்காசனத்திலே -திருமகள் மணமகள் ஆயர் மகள் -திருவாய் -1-9-4 -லஷ்மீ பூமி நீளா சமேதனாய் ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து
-க்ருஹீத்ய அனந்த பரிசார சாதநைர்தி ஷேவ்யமாணாம் சசிவைர்ய சோசிதம்-என்கிறபடியே
சத்ர சாமர தாஸ வ்ருத்தாத்ய ஏக கைங்கர்ய உபகரண சோபித ஹஸ்தரான-அயர்வறும் அமரர்களாலே அனைவரத பரிசர்யமாண
சரண விதனாய்க் கொண்டு -ஏதத் சாம காயத் நாஸ்தே -சாம வேத கீதனாய –திருச் சந்த -14-
தன்னை இன்கவி பாடின ஈசனை -திருவாய் -7-9-1- என்றும்
யானாய் தன்னைத் தான் பாடி தென்னா வென்னும் என்னம்மான் -திருவாய் -10-7-5-என்கிறபடியே
சஹஸ்ர சாக உபநிஷத் மயமான திருவாய் மொழி கேட்டு அருளா நிற்க
-ச ஏகாகி ந ரமேதே -என்றும் ஆற்றல் மிக்காளும்-4-5-4- நாதிஸ் வஸத மகா -என்கிறபடியே
தேசாந்தர கதனான புத்ரன் இடத்தில் பித்ரு ஹிருதயம் செல்லுமா போலே சம்சாரி சேதனன் இடத்தில் திரு உள்ளம் குடி புகுந்து
உண்டது உருக்காட்டாதே சம்பந்தம் ஒத்து இருக்க இவர்கள் இவ்வனுபவத்தை இழந்து இருக்கிறது
தம் தாமை யறியாமையால் யன்றோ போற நொந்து திரு உள்ளம் இரங்கி
-இனியாகிலும் இவர்கள் உஜ்ஜீவிக்கும் விரகு யாம்படி என்-என்று விசாரித்து
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் –நிவாசாய சய்யா ஆசன பாதுகா -இத்யாதிப்படியே
தம் திருவடிகளிலே ஒழிவில் காலத்தில் படியே எல்லா அடிமைகளும் தாம் ஒருவருமே செய்வதாகப் பாரித்துக் கொண்டு இருக்கிற
திரு வனந்த ஆழ்வானைக் கடாஷித்து அருள
அவனும் ததஸ்த இங்கிதம் தஸ்ய ஜாதன் நேஷம்ஜகத்திதே -என்றும் தஸ்மின் தாம்நி புரே பு நராவாத் -பூத்வோ பூயோவர வர முனிர் யோகி நாம்
-சார்வ பௌம-என்கிறபடியே பாவஜ்ஞ்ஞன் ஆகையாலே சம்சாரிகள் இருக்கும் இவ்விடத்திலேயே மாறன் மறை பயிலுமவர் ஆகையாலே
ஆழ்வார் திருவவதார ஸ்தலமான திரு நகரியிலே அழகிய மணவாள மா முநிகளாய் திருவவதரித்து திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளாலே
யதிவரதத்த்வ வித்தமராய் சம்சாரிகள் துர்கதியைக் கண்டு திரு உள்ளம் இரங்கி இவர்கள் ரஷ்யம் அபேஷம் ப்ரதீஷதே -என்கிறபடியே
ரஷ்ய அபேஷ ப்ரதீஷரான பகவத் விஷயத்துக்கு ஆளாகாமையைத் திரு உள்ளம் பற்றி
இனி இவர்களுக்கு காரேய் கருணை இராமானுசா -25-என்கிறபடியே கிருபா மாத்ர பிரசன்னாசார்யாரான எம்பெருமானார் சம்பந்தம் இன்றி
மற்று ஒரு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று அறுதியிட்டு உபதேசாதிகளாலே அறிவிக்கப் பார்க்கில் ஸ்வ உத்கர்ஷாதிகளையிட்டு அத்யவசிப்பார்கள் என்று
-யத் யதாசரதி ஸ்ரேஷ்ட –என்கிற நியாயத்தை திரு உள்ளம் பற்றி ஸ்வ அனுஷ்டானத்தாலே திருத்தப் பார்க்கிறார் இப்பிரபந்தத்தில்
-அனுசந்தார்த்தரு விஷயத்தில் எம்பெருமானார்க்கு கிருபை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத படியான இபிரபந்தத்தை அருளிச் செய்கிறார் என்னவுமாம் –
எம்பெருமானாருடைய உபாயத்வமாய்த்து பிரதிபாதிக்கப் படுகிறது உபக்கிரம உபசம்ஹாரங்களில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
இஷ்ட பிராபகத்வம் பர்யந்தமாகத் தோற்றுகையாலே-எங்கனே என்னில் –
-உபக்ரமத்தில் -ஸ்ரீ மாதவாங்கரி ஜலஜத்வய நித்ய சேவா -பிரேமா விலாசய பராங்குச பாத பக்தம் -என்று ததீய பர்யந்தமான
பகவத் கைங்கர்யத்தை பிரசக்தி பண்ணி -மேல் காமாதி தோஷ ஹர மாத்மபதார்ஸ்ரிதா நாம் -என்று
தத் விருத்தங்களான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்கையாலும்-
முடிவில் -தாமன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தய த்வம்–என்கையாலும் உபாயம் எம்பெருமானாரே -என்கிறது
த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களாலே உபாய உபேயங்களுடைய ஐக்யம் சொல்லப் படா நிற்க -இங்கு
உபாயம் எம்பெருமானாரும் உபேயம் எம்பெருமான் என்கையும் சேருமோ என்னில் சேரும்
-அங்கும் திருவடிகளை உபாயமாகவும் ஸ்ரீ யபதியை உபேயமாகவும் சொல்லிற்று இறே-
அங்கு திருவடிகள் அதத் யங்கள் யன்றோ என்னில் -இவர் தாமும் திருவடிகள் ஆகையாலே அதத் யங்கராகக் குறையில்லை -ஆகையாலே இறே –
விஷ்ணுஸ் சேஷதீ -என்று பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப் பட்ட ஸ்லோஹம் திருவவதரித்தது
அன்றிக்கே இவர் தாமே உபாயமும் உபேயமாகவும் -ஐக்யம் என்னவுமாம்
–சரம உபாய உபேயங்கள்-பிரதம உபாய உபேயங்களுக்கு சேஷங்கள்ஆகையாலே பிரபத்தி சாஸ்திர விரோதம் இல்லை

இனி உபாயத்துக்கு வேண்டுவது விஷய பூர்த்தியும் -அபராத பூயஸ்தவமும் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -உபாய உபேய பிராத்தனையும் ஆகையாலே
-அதில் முதல் இரண்டு ஸ்லோஹத்தாலே விஷய பூர்த்தியையும் –
மேல் ஸ்லோஹ த்ரயத்தாலே பிராப்ய பிரார்த்தனையும் –
மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -தம்முடைய தோஷ பூயஸ்தவத்தையும்-
மேல் ஒரு ஸ்லோஹத்தாலே விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையையும் –
மேல் இரண்டு ஸ்லோகங்களாலே தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
மேல் ஒரு ஸ்லோஹத்தாலே விரோதி நிவ்ருத்தி பூர்வக பிராப்ய சரமாவதி பிரார்த்தனையையும் –
மேல் ஒரு ஸ்லோஹத்தாலே அத்தலையில் கார்யகரத்வ உபயோகியான சக்தி விசேஷத்தையும் –
மேல் ஒரு ஸ்லோஹத்தாலே எம்பெருமானாருடைய ஸ்வ சம்பந்தி பரம்பரா விஷயமாக பிரவ்ருத்தமான
பகவத் ஏக உபாயத்வ பிரார்த்தனையே தத் சம்பந்திகளுக்கு ரஷகம் என்னுமத்தையும் –
மேல் ஒரு ஸ்லோஹத்தாலே ஆச்சார்ய ருசி பரிக்ரக்ருஹீதமாமதுவே தத் சம்பந்திகளுக்கு பிராப்யம் என்னுமத்தையும் அருளிச் செய்து –
நிகமத்தில் அடியேனுடைய அஜ்ஞாநாதிகளைக் கடாஷித்து இவன் அநந்ய கதிகன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து தலைக் கட்டுகிறார் –

இதில் பிரதி ஸ்லோஹமும்-எம்பெருமானாரை -யதிராஜ -யதீந்திர -என்று சம்போதிக்கிறது-யத்த இதி -யச்சதீதி யதி -என்கிற வ்யுத்பத்தி
த்வயத்தாலும் சொல்லப் படுகிற ப்ரஹ்ம பிராப்தி பர்யந்தமும் -இதர விஷய வைராக்யமுமே இவருக்கு பிராப்ய ஹேதுவாகையாலே என்றாதல்
-ஸ்வா ர்த்த பிரயத்யத்தையும் இதர விஷயத்தோடு சேர்த்து அதில் நின்றும் வ்யாவ்ருத்தராய் -பரார்த்த ஏக பிரயத்தராய் இருக்குமதுவே
தத் சம்பந்திகளுக்கு பற்றாசு என்று இருக்குமவர் யாகையாலே என்றாதல் -இதுவே இங்குத்தைக்கு அசாதாரணமான குணம் –

திருவாய் மொழி நூற்றந்தாதி திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாம் போலேயும் -உபதேச ரத்ன மாலை குரு பரம்பரா சங்க்ரஹமாம்
போலேயும்-இப்பிரபந்தம் பிரபன்ன காயத்ரி சங்க்ரஹமாக இருக்கும் –

———–

முதல் ஸ்லோஹம் –
அவதாரிகை –
எம்பெருமானாருடைய ஜ்ஞான பூர்த்தியையும் -அதினுடைய சம்ப்ரதாய ப்ராப்தியையும் -அத்தால் இவர் பெற்ற நன்மையையும்
அருளிச் செய்யா நின்று கொண்டு -ப்ராரீப்சிதக்ரத்ன பரிசமாப்த்யர்த்தம் ஆசார்ய அபிவாதரூப மங்களத்தை செய்து அருளுகிறார் –

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேமா விசாஸய பராங்குஸ பாதபக்தம்
காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
ஸ்ரீ –
ஸ்ரீ மாயாதவ -மாதவ -என்கிற வ்யுத்பத்தியாலே ஸ்ரீ யபதிக்கு வாசகமான மாதவ சப்தத்துக்கு விசேஷணம் ஆகையாலே -ஸ்ரீ சப்தம் ஸ்ரீ யபதியினுடைய -திருவுக்கும் திருவாகிய செல்வா -கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய– ஸ்ரியஸ் ஸ்ரியம்-என்றும் சொல்லுகிறபடியே சர்வ மங்கள அவஹையான பெரிய பிராட்டிக்கும்
மங்களா வஹம் என்கிற மேன்மையைச் சொல்லுகிறது
அன்றிக்கே -ஸ்ரீ சப்தம் லஷணையாக ஸ்ரீ மத் வாசகமாய் மேல் சொல்லப் படுகிற பிராட்டி சம்பந்தத்தாலே தலை எடுத்த
வாத்சல்யாதி குண சம்ருத்தம் ஸ்ரீ யபதி என்னுமத்தைச் சொல்லுகிறது –
அதுவும் அன்றிக்கே ஸ்ரீ சப்தம் மா சப்தத்துக்கு விசேஷணமாய் ஸ்ரீ மான் மா என்று பிராட்டியுடைய பிராப்யத்வ புருஷகாரத்வ
உபயோகிகளான சேவ்ய சேவதாதி பாவங்களையும் ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகத் வாதிகளையும் சொல்லுகிறது –
அங்கனும் அன்றிக்கே -ஸ்ரியா மாதவா -என்ற வ்யுத்பத்தியாய் -ஸ்ரீ சப்தத்தாலே -யதிதம் சௌந்தர்ய லாவண்யா யோ -ஸ்ரீ ஸ்தவம் -7- என்கிறபடியே சௌந்தர்ய சௌகுமார்யாதி குண சம்ருத்தியைச் சொல்லி அத்தாலே பிராட்டிக்கு வல்லபன் என்னுமத்தைச் சொல்லுகிறது
அங்கனும் அன்றிக்கே -மாதவ சப்தம் ரூட்யா பகவத் வாசகமாய் -ஸ்ரியா யுக்தோ மாதவ -என்று மத்யம பத லோப சமாசமாய்
ஸ்ரீ யபதியினுடைய –என்றுமாம் -அங்கனும் அன்றியே ஸ்ரீ சப்தம் அங்க்ரி த்வய சப்தத்துக்கு விசேஷணமாய் -திருவடிகளுடைய பரஸ்பர
சாஹித்யத்வத்தால் வந்த போக்யதாசிசயத்தைச் சொல்லவுமாம்
மாதவ –
மாதவ -சப்தத்தாலே த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் ஸ்ரீ மச் சப்தார்த்தமும் குண சம்ருத்தி வாசகமான ஸ்ரீ சப்தத்தாலே
பூர்வ உத்தர கண்டங்களில் நாராயண சப்தார்த்தமும் சொல்லப் பட்டது –
ஆக சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீயபதியினுடைய என்கையாலே பிராப்யமும் பிராபகமும் ஒரு மிதுனம் என்கிறது –
அங்க்ரி ஜல்ஜ-
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதி களாலே தாமரைக்கு ஒரு போலியான திருவடிகளுடைய
மாதவங்க்ரி -என்கையாலே -திருவடிகளினுடைய உத்தேச்யத்வமும்
ஜலஜ சாம்யத்தாலே அனுத்தேச்யமாய் இருந்ததே யாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயமும் சொல்லப் படுகிறது –
த்வய –
த்வய-இரண்டினுடைய -இத்தால் -சஹாயாந்தர நைரபேஷயமும் சத்ருசாந்தர ராஹித்யமும்
பரஸ்பர ராஹித்யத்தால் வந்த சோபாதிசயமும் சொல்லப்படுகிறது
அங்க்ரி ஜலஜத்வயம் என்கையாலே சரண சப்தமும் த்வி வசநார்த்தமும் சொல்லப்படுகிறது –
நித்ய
நித்ய -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தாச சாஸயுத கிங்கரோஸ்மி-என்கிறபடியே
சர்வ தேச சர்வகால சர்வ அவஸ்தைகளிலும் உளதான –நித்யோ நித்யானாம் -ஒண் பொருள் ஈறில-என்கிறபடியே
ஸ்வரூபம் நித்யமானால தன நிரூபக தர்மமும் நித்தியமாய் செல்லும் இ றே
சேவா
சேவா -தாஸ்ய பர்யாயமான சேவா சப்தத்தாலே -வழு விலா வடிமை -என்கிறபடியே ஸ்வ போக்த்ருத்வ கந்த ரஹிதமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது
இது தான் சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ யபதி விஷயத்திலே செய்யுமதாகையாலே ஸூக ரூபமாயும் ஸ்வரூப அநு ரூபமாயும் இருக்கும் –
இத்தால் த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சரணம் பிரபத்யே என்கிற பதங்களினுடைய அர்த்தமும் உத்தர கண்டத்தில் நமஸ் சப்தார்த்தோடு கூடின சதுர்த்தி யர்த்தமும் சொல்லப் படுகிறது -பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே -இது தானும் ஈஸ்வர கிருஷி பலமாகையாலே ப்ராப்ய யந்தர்கதமாய்
இறே இருப்பது –
ஆக இவ்வளவால் த்வயார்த்தம் சொல்லப் படுகையாலே -உபாசகனுக்கு ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே உபாசனம் அத்யந்த பிரியம் ஆகிறாப் போலே பிரபன்ன அதிகாரிகளுக்கு த்வயம் அத்யந்த பிரியம் என்கிறது -பிரபன்ன ஜன கூடஸ்தர் இறே ஆழ்வார்
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இ றே -இது தானும் ஈஸ்வர கிருஷி பலமாகையாலே ப்ராப்ய யந்தர்கதமாய் இ றே இருப்பது –
ஆக இவ்வளவால் த்வயார்த்தம் சொல்லப் படுகையாலே -உபாசகனுக்கு ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே உபாசனம் அத்யந்த பிரியம் ஆகிறாப் போலே பிரபன்ன அதிகாரிகளுக்கு த்வயம் அத்யந்த பிரியம் என்கிறது -பிரபன்ன ஜன கூடஸ்தர் இ றே ஆழ்வார்
பிரேம
பிரேம-சப்தத்தாலே -பிராப்தமுமாய் -போக்யமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமான நித்ய கைங்கர்யத்திலே பிரேமை இல்லாவிடில் தரிக்க மாட்டாத படியான பிரேமத்தைச் சொல்லுகிறது -இத்தால் ப்ராப்ய த்வராதிசயத்தைச் சொல்லுகிறது
ஆவிசாஸய –
ஆவிசாஸய -ஆசயமாவது -அபிப்ராயம் -அதாவது திவ்யாத்மாக ஜ்ஞானம் -இத்தால் ஈச்வரனே உபாய உபேயங்கள் என்கிற அத்யாவசாயத்தைச் சொல்கிறது
ஆவிலமாவது -பிராப்ய த்வரை அதிசயத்தாலே அநந்ய உபாயத்வ விரோதியான மடலேடுக்கை முதலிய ஸ்வ யத்னத்திலே அன்வயிக்கை –
ஆனால் இது கூடுமோ என்னில் -ஸ்வ ஸ்வரூபத்தைப் பற்றி வரும் கலக்கமாய்த்து த்யாஜ்யம் ஆகிறது -அத்தலையில் வை லஷண்யம் அடியாக வருமவை எல்லாம் பிராப்யாந்தர்கதமாகையாலே கூடும் -ஆக இப்படி கலங்கின ஆசயததை உடையரான
பராங்குஸ
பராங்குஸ-பரர்கள் உண்டு -ஈஸ்வரனுக்கு குணம் இல்லை -விக்ரஹமும் இல்லை -விபூதி இல்லை -முதலிலே அவன் தானும் இல்லை என்னும் குத்ருஷ்டிகளும் ஸூந்யவாதிகளும் -அவர்களுக்கு அங்குசம் ஆகையாவது -மத்த கஜத்தின் தலையிலே அங்குசத்தை நாட்டி -மதத்தை நிரசித்து -அத்தை ஸ்வ வசமாக்கிக் கொள்வாரைப் போலே ஈஸ்வரனை இவரை இட்டு குமதிகளுடைய துர்மதத்தைப் போக்கி ஸ்வ வசமாகக் கொள்ளுகைக்கு சாதனமாய் இருக்கை-
இவர்தாம் உயர்வற உயர் நலம் -என்று தொடங்கி-குண விக்ரஹ விபூதி விசிஷ்ட ஈஸ்வரனை அவன் மயர்வற மதி நலம் அருளக் கண்டு அனுபவித்து பிறர்க்கும் உபதேசித்து -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கினார் இ றே -ஆகையால் அங்குசம் என்னக் குறையில்லை –
அன்றிக்கே -பரன் -என்று -ஈஸ்வரன் -அவனுக்கு அங்குசமானவர்-என்றுமாம் -அப்போதைக்கு அங்குசம் ஆவது -ஆனையின் தலை மேலே தான் இருந்து தன துதியாலே அத்தை ச்வீகரிக்குமா போலே இவரும் தம்முடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே ஈஸ்வரனை தலை துலுக்கும் படி -எமர் கீழ் மேல் எழு பிறப்பும் கேசவன் தமர் –என்று தம் வாயாலே சொல்ல வல்லராம் படி பண்ணி வசீகரித்தவர் என்கிறது
ஆக ஈஸ்வர சேதனர் இருவரையும் வசீகரித்த ஆழ்வாருடைய –
ஈஸ்வரர் சேதனர் இருவரையும் வசீகரித்து ஒருவரோடு ஒருவர் சேர விடுபவர் இ றே ஆசார்யர் -இவர் தாம் பரமாச்சார்யார் இறே
பாதபக்தம்
பாத பக்தம் -திருவடிகள் விஷயமான பக்தியே தமக்கு நிரூபகமாய் இருக்குமவராய் -இத்தால் பரமாச்சார்யரான ஆழ்வாருக்கு
பகவத் பிரேமம் நிரூபகமாம் போலேயும் எம்பெருமானாருக்கு ஆழ்வார் திருவடிகளிலே பக்தி யாய்த்து நிரூபகம் என்கிறது
பக்தம் -என்று சாமான்யமாகச் சொல்லுகையாலே ஈஸ்வர விஷயத்தில் ஆழ்வாருக்கு உண்டான பர பக்தி பர ஞானம் பரம பக்தி
ரூப அவஸ்தய த்ரய விசிஷ்டையான பக்தி இவர் தமக்கு ஆழ்வார் விஷயத்திலே என்கிறது –இவர் தான் மாறன் அடி பணிந்து உய்ந்தவர் இறே
ஆக பூர்வார்த்தத்தாலே ஆச்சார்யஸ்ய ஜ்ஞாத வத்தாதுமாய -என்றும் -ஜ்ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –என்றும் சொல்லுகிறபடியே சஹேதுகமாக இவனுடைய ஜ்ஞான பூர்த்தியையும் அதினுடைய சம்ப்ரதாய பரம்பரா பிராப்தியையும் அருளிச் செய்தாராய்த்து
ஸ்வ ஆஸ்ரித விஷயத்தில் இவர் செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறது மேல்
காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –
காமமாவது -அபேஷ்யக ஜ்ஞானம் -அதாவது -விஷயாந்தர ஸ்ப்ருஹை-அத்தை ஆதியாக உடைத்ததான தோஷங்கள் உண்டு
-அதாவது குரோத லோப மோஹ மத ஆஸ்ரயங்கள்-அவைகளைப் போக்குமவர் என்னுதல்-
காமத்தை ஸ்வ காரணமாக உடைத்தான தோஷங்கள் உண்டு குரோத லோபாதிகள் -அவற்றைப் போக்குமவர் என்னுதல் –
காமம் அடியாக வி றே குரோத லோபாதிகள் உண்டாகுவது -அவற்றுக்கு அடியான காமத்தைப் போக்கவே அவை எல்லாம் தன்னடியே போக்கினவையாம் இறே
காமம் உப லஷணமாய்-அத்தாலே அபிஷட் வர்க்கத்தைச் சொல்லி ஆதி தோஷ சப்தங்களாலே அஹங்காரத்தை சொல்லி –
ஹரம் என்று அத்தை போக்குமவர் -என்னுதல் -இவை எல்லாவற்றாலும் அஹங்கார மமகார நிவர்த்தகர் -என்கிறது
கீழ் நித்ய சேவா -என்று பகவத் கைங்கர்யத்தைச் சொல்லி
பராங்குச பாத பக்தம் -என்று அதின் வ்ருத்தி ரூபமான ததீய கைங்கர்யத்தைச் சொல்லி
காமாதி தோஷ ஹரம் என்று தத் பிரதிபந்தக நிவர்த்தகர் என்கையாலே
கீழ்ச் சொன்ன ததீய பர்யந்தமான பகவத் கைங்கர்யத்துக்கு இவரே பிராபகர் -என்கிறது –
இப்படிச் செய்கிறது தான் ஆருக்கு என்னில்
ஆதமபதாஸ் ரிதாநாம் –
தம் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்கிறார் –
பதாஸ்ரிதாம் -என்று திருவடிகள் சம்பந்தத்தையே நிரூபகமாகச் சொல்லுகையாலே -வர்ணாஸ்ரமாதி நியதிகள் இல்லை -என்கிறது
இத்தால் -பிரதம பர்வமோபாதி சரம பர்வமும் சர்வாதிகாரம் என்கிறது -ஆத்மபத -தம் திருவடிகளை –
ஆஸ்ரிததாம் -மாதா பிதா இத்யாதிப் படியே சர்வ பிரகார ப்ராப்யமாய்ப் பற்றினவர்களுக்கு –
ததேவ லோகாந்தமனனம் -அயோத்யா -32-5–இத்யாதிப்படியே தத் விருத்தமான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்னவுமாம் –
அப்போது சேவையும் பக்தியும் இவருக்கு நிரூபகங்கள் -இத்தால் இவர் தாமே உபாயமும் உபேயமும் -என்கிறது –
இவ்விடத்தில் எம்பெருமானார் சம்பந்தம் ஆகிறது -எம்பெருமானாருடன் சாஷாத் சம்பந்தமும் -அவராலே ஆசார்ய பதத்திலே நியுக்தரான எழுபத்து நாலு சிம்ஹாசனஸ்தர் உடைய சம்பந்த பரம்பரையிலே தானும் ஒருவனாகை-இத்தாலே நியுக்தருடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே கார்யகரம் என்கிறது –
இவர் தமக்கு வாசகமான திரு நாமம் ஏது என்ன
ராமானுஜம் –
கிருஷ்ணாவதாரத்துக்கு அல்லாத திரு நாமங்களும் கிடக்க கோவிந்தன் -என்கிற திரு நாமம் -கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிதம் என்கிறபடியே- பிரதானாம் ஆனாப் போலே -ந சேத ராமானுஜேத் யேஷா -என்னும்படி
இவ்வதாரத்துக்கு பிரதானமாய்க் காணும் ராமானுஜன் என்கிற திரு நாமம் இருப்பது
யதிபதிம் –
ஜிதேந்த்ரியரில் தலைவரான எம்பெருமானாரை –ஜிதேந்த்ரியராவார் -சஷூராதி இந்த்ரியங்களை ரூபாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே சேர்க்குமவர்கள்-அவர்களில் தலைவராகை யாவது -சர்வ இந்த்ரியாப்யாயகமான பகவத் அனுபவமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை யன்றிக்கே
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தால் உண்டான அத்தலையில் முக விலாசமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை –
யதிபதிம் –
ஆஸ்ரித பிரத்யஸா அபேஷர் அன்றிக்கே தாமே மேல் விழுந்து ரஷிக்கும் ஸ்வ பாவரான எம்பெருமானாரை -என்னுமாம்
ராமானுஜம் யதிபதிம்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே சர்வாங்க ஸூ த்தரான பெருமான் இடத்தில் திரு உள்ளத்தை
வைத்து திருவவதரித்தவர் ஆகையாலே இதர விஷய விரக்தரான எம்பெருமானாரை என்னவுமாம் –
த்வயி கிஞ்சித் சமா பத்தே கிம் கார்யம் சீதயா மம–என்றும் அபிஷிச்ய ச லங்கா யம் ராஷசேந்த்ரம் விபீஷணம் க்ருத்க்ருத்யயஸ்தத
-ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ – என்று அவன் ஸ்வா ர்த்த நிரபேஷனாய் பரார்த்த ஏக பரனே இருக்குமா போலே யாய்த்து அவனை
அனுசரித்து திருவவதரித்த இவர் ஸ்வார்த்த நிரபேஷராய் பரார்த்த ஏக பரராய் இருக்கும் படி என்னவுமாம் –
அன்றிக்கே இவர் ஆஸ்ரிதர்க்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களை செய்யும் படி எங்கனே என்ன –
ராமானுஜம் –
-அதுவோ திரு நாமத்தாலே அறியலாம் -என்கிறார் -ராமம் அநு ஸ்ருத்ய ராமானுஜ -என்று வ்யுத்பத்தியால் அத்தால் நாரீணாம் உத்தமியான பிராட்டியை அனுசரித்து திருவவதரித்தவர் ஆகையாலே -பிராட்டி ராவணனுக்கு ஹிதம் சொல்லியும் ஏகாஷீ ஏக கரணி முதலான எழுநூறு ராஷசிகளுக்கு தம் கிருபையாலே தாமே பவேயம் சரணம் ஹி வ -என்றால்போலே -ஐவரும் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு போருக்க மாட்டாதே தாமே மேல் விழுந்து இவர்களுக்கு ஹிதம் செய்வது தம் கார்யத்துக்காக வன்றி அவர்கள் உஜ்ஜீவிக்கையெ பிரயோஜனமாகை எங்கை –
ராமானுஜ யதிபதிம்
இராமானுஜன் என்னும் மா முனியே -16-என்கிறபடியே ராமானுசன் என்னும் திரு நாமம் உடைய எம்பெருமானாரை
யதி பதிம் –
ஸ்வ அனுஷ்டானத்தாலே ஸ்வ ஆஸ்ரித ரஷகரான எம்பெருமானாரை -என்னவுமாம்
கீழே பாத பக்தம் -என்று சொல்லி வைத்து -இங்கே யதிபதிம் -என்கையாலே இவருடைய ஞான பக்தி வைராக்யங்கள் சொல்லப் பட்டன –
பிரணமாமி மூர்த்த்நா-
கீழ்ச் சொன்ன படியே இவர் செய்து அருளிய மகா உபகாரகங்களைக் கண்டு பெருமாள் விஷயத்தில் பிராட்டி சிரஸா சாபி வதாயா -என்றாப் போலே
தாமும் இவ்விஷயத்தில் தலையால் வணங்குகிறார் –
மூர்த்த்நா-பிரணமாமி –
க்ருதஜ்ஞ்ஞாதிசயம் இருந்த படி என் தான் -நினைவும் சொல்லும் பிற்படும்படி காயம் தானும் முற்பட்டபடி –
அன்றிக்கே -மூர்த்த்நா–என்று காயிகத்தை முற்படச் சொல்லி மேல் பிரணமாமி -என்றதுக்கு பூர்வ பாவியான வாசகத்தைச் சொல்லி உப லஷணதயா இரண்டுக்கும் அடியான மானசிகத்தைத் சொல்லுவதாகவுமாம் -ஆக காரண த்ரயத்தாலும் சேவிக்கிறார் என்னவுமாம் –
அன்றிக்கே தத் விஜ்ஞாதார்த்தம் குருமேவ அபி கச்சேத்-என்றும் -அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும் சொல்லுகிறபடி சிஷ்யனுக்கு ஜ்ஞான லாபம் ஆசார்யனாகையாலே ததார்த்தமாக அவர் தம்மையே சரணமாகப் பற்றுகிறார் என்றுமாம்
நமாமி -என்று ந நமேயம் -என்று இருக்கும்படி பண்ணுகிற அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லி பர -என்ற உபசர்க்கத்தாலே
அதினுடைய நிச்சேஷ நிவ்ருதியை சொல்லுகிறது
இத்தால் ஆத்ம ரஷணத்தில் தனக்கு ஒரு அன்வயம் இன்றிக்கே அவன் இட்ட வழக்காய் இருக்கும் படியைச் சொல்லுகிறது
சிஷ்ய லாபம் ஆசார்யனுக்கு புருஷார்த்தம் இ றே-ஆத்ம லாபாத் பரம்கிஞ்சித் அத்யத்தாஸ்தீதி நிச்சயாத் அங்கீ கர்த்தும் இவ பிராப்தம்
அகிஞ்சதமிமம் ஜதம்ய -என்று ஸ்வ அங்கீ காரத்தை அத்தலைக்கு புருஷார்த்தமாக வி றே அருளிச் செய்தது –
யதிபதிம் மூர்த்நா ப்ரணமாமி
அவர் மேன்மைக்கு எல்லை நிலமானவோ பாதி இவர் தாழ்மைக்கு எல்லை நிலமாகிறார் -அவர் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
-இவர் யதீந்திர -இத்தால் ஆச்சார்யா அபிவாதரூப மங்களத்தைச் செய்து அருளுகிறார் –

————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: