வேய் மரு தோளிணை பதிகத்தில் – அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழியம் கண்ணா உன் கோலப் பாதம் -10-3-6-
கடல் போன்ற ஸ்ரமஹரமான திருக்கண்களை -உடையவனே -என்பதே எல்லா வ்யாக்யானங்களிலும்
சக்ராஜாயுத த்வாத் -திராவிட தாத்பர்ய ரத்னாவளி -என்கிறார்
ஹரிர் ஹரதி பாபானி துஷ்ட சித்ரைரபி ஸ்ம்ருத-அநிச்சயாபி சம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக –
வாராணஸ்யாம் குரு ஷேத்ரே நைமிசாரண்ய ஏவ ச தத்தம் ஸ்யாத் தேன யே நோக்தம் ஹரிரித்ய யஷர த்வயம்
ஆதியிலே அரவரசை அழைத்த அரங்கர் அவனியிலே இருநூறாண்டு இரு நீ என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரமபதம் நாடியவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் எனும் மா வருடம் தனில் தனித்துலா மூல நாள் வந்தார் தாமே
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
தத்வ முக்தா கலாப மங்கள ஸ்லோஹம்
லஷ்மீ நேத்ரோத் பல ஸ்ரீ சத்த பரிசயாத் ஏஷ சம்வர்த்தமான
நாபீ நாலீ கரிங்கநமதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
அஸ்மாகம் சம்பதோகான் அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா
காளிந்தீ காந்தி ஹாரீ கலையது வபுஷ காலிமா கைடபாரே
கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக்
கமல நல் யமுனைக் காந்தியால் மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே
கைடபாரே வபுஷ காலிமா அஸ்மாகம் சம்பதோகான் கலையது –
கண்ணபிரானின் கருமை நிறம் நமக்கு செல்வ மிகுதியை விளைத்திட பிரார்த்தனை –
-கண்ணனை விட கண்ணனார் கருமையே நம் காப்பே என்கிறது -அந்த கருமைக்கு நான்கு விசேஷணங்கள்
லஷ்மீ நேத்ரோத் பல-ஸ்ரீ சத்த பரிசயாத்-சம்வர்த்தமான
பிராட்டி குவளையம் கண்ணியும்-மையார் கரும் கண்ணியும் ஆவாள் -அவள் அனவரதம் உற்று நோக்குகையாலே -என்றவாறு
கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து என்றவாறு
நாபீ நாலீ கரிங்கந மதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
திரு நாபீ கமலத்தில் மது பானார்த்தமாக சுழலமிடா நின்றுள்ள வண்டுகள் கூட்டம் கொடுத்த கருமை என்றவாறு
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே -என்றவாறு
அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையன் ஆகையாலே -என்றுமாம்
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக் -என்றுமாம்
காளிந்தீ காந்தி ஹாரீ
தூய பெருநீர் யமுனைத் துறைவன் -கமல நல் யமுனைக் காந்தியால் -என்றுமாம் -மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் —அந்த பரமன் அடி காட்டும் வேதங்கள் –அந்த வேதங்கள் அனைத்துக்கும் வித்து கோதை தமிழ் –என்றவாறு
அபௌருஷேயமாய் இருக்கும் வேதங்களுக்கு வித்தா –
-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவ தர்வாணா திச
சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம் யச்ச அந்வய தபி வாங்மயம் -என்கிற பிரமாணத்தின் படியே
ஒரு விருஷத்தின் சாகை உபசாகைகள் எல்லாம் விதைக்குள் இருப்பது போலே
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டு என்றபடி -அதாவது தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்
எல்லாம் எளிதிலே காட்டி அருளுகிறாள் என்றவாறு
தத்வம் –பரமாத்மா தத்வம் ஜீவாத்மா தத்வம்
ஜகத் காரணன் -சர்வாத்ம ரஷகன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபன் இத்யாதி
ஏகோ ஹ வை நாராயணா ஆஸீத் –யதோ வா இமானி பூதானி ஜாயந்தே –அஜாயமானோ பஹூதா விஜாயதே –
-ச ச ஸ்ரேயான் பவதி ஜாயமான -பிதா புத்ரேண பித்ருமான் யோ நியோ நௌ-இத்யாதி வேத உபநிஷத் கட்டளையிலே
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் -நாராயணனே நமக்கே பறை தருவான் —நாற்றத் துழாய் முடி நாராயணன்
-நாரயனனனே -பாற் கடல் பையைத் துயின்ற பரமன் அடி பாடி -ஓங்கி உலகளந்த உத்தமன் –
-ஆழி மழைக் கண்ணா -ச ஆத்மா அங்காநி அந்யா தேவதா – என்று அந்தர்யாமித்வம்
புள்ளரையன் கோயில் -கோயில் காப்பானே -உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -அர்ச்சாவதாரம் –இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
சேஷத்வம் -அன்யார்ஹ சேஷத்வம் -அச்சித்வத் பாரதந்த்ர்யம் -ஆகிய ஜீவாத்மா ஸ்வரூபத்தை -உன் தன்னோடு உற்றோமேயாவோம்
-மாற்றார் உனக்கு வலி தொலைந்து -அபிமான பங்கமாய் வந்து -இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
ஹிதம் -உபாயம் -தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –உன்னை அருத்தித்து வந்தோம் -உன் பொற்றாமரை அடியே போற்றும் –
புருஷார்த்தத்தை உனக்கே நாம் ஆட்செய்வோம் –இதுவே ஜீவ நாடி என்பதை பாரார்த்த்யம் ஸ்வம் ஸ்ருதிசத சிரஸி சித்தம்
அத்யாபயந்தீ -என்பதை பட்டர் கை விளக்கு ஏற்றி காட்டி அருளினார்
உன் தன்னோடு உறவேல் –பல உறவுகள் உண்டே என்று காட்டி அருளும் வாக் சாமர்த்தியம்
-பிதாச ரஷகச் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மாச போக்தாச ஆதயம நூதித –
ஆத்ய ம நூ -மூல மந்த்ரம் -அதில் பிரதிபாதிக்கப் பட்ட ரமாபதி -இந்த நவவித சம்பந்தங்களையுமே உறவேல் என்று அருளிச் செய்கிறாள்
மிலேச்சனும் பக்தனானால் –தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சமயக் சகுண சபோஜனமும் –
உபகாராய ஸூ க்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷணா நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் -என்று திரு உள்ளம் பற்றி கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் என்ற பெருமாளோடு பண்ணின சஹ போஜனம் -ஒரு காலத்திலே உண்பாரைப் போலே உன்னுடனே
ஒரு நிகராக சுக துக்கங்களை அனுபவிக்கக் கடவேன் யான் என்று ஒற்றுமை நயம் தோற்ற கூறி ஹனுமானைத் தழுவிக் கொண்ட சிறந்த விஷயம் –
கோவிந்த சுவாமி விருத்தாந்தம் -இங்கு ஒழிந்து போகம் எய்தி பின்னும் நம்மிடைகே போதுவாய் என்ற பொன்னருள் –ஈஸ்வரன் நினைத்தால் விஷய பிரவணரையும் இவ்வசனை அறுத்துக் கொண்டு போகும் சர்வ சக்தன் என்னும் இடமும் -எத்தனைஎனும் பகவத் பிரவணரையும் தேக சம்பந்தத்தின்
வழியே கொண்டு போய் வி நாசத்தைப் பலிப்புக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -உவநியம் உப நயனம் சிதைந்து –த்விஜம் –
-முற்பட த்வயத்தை கேட்டு இதிஹாச புராணங்களையும் அதிகரித்து பரபஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளையும்
அதிகரித்து -போது போக்கும் அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளையை போலே அதிகரிப்பிக்க வல்லான் ஒருவன் -என்றவாறு
மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும் –ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி –பழியம் தோளுடைப் பத்ம நாபன் -திரு வநந்த புரம்
மாயனை -வடமதுரை அனுபவம் -மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத –
புள்ளும் சிலம்பின -திரு வண் வண்டூர் அனுபவம் –வைகல் பூங்கழிவாய்-விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர்
அடிகள் கை தொழுது -அகாரம் -உணர்தல் உடல் உணர்ந்து -உகாரம் -மின் கொள் சேர் புரி நூல் -மகாரம் போலே இங்கும் அரி–உங்கள் -முனிவர்கள்
கீசு கீசு -தயிர் ஒலி -உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே
யேன திசாம் அமங்கலம் -ஆய்சிகளின் பாட்டு ஒலி-மதத்தின் ஒலி -சகாரத்தால் ஆபரண த்வனி -இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானத்தில் தேவாதி தேவன் -திருவத்தியூர் அனுபவம் -நம்மாழ்வார் திருப்பள்ளி -உணர்த்தப் படுகிறார் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி
தூ மணி –திருக்கடிகை –மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
நோற்றுச் சுவர்க்கம் -திருக் காட்கரை -அனுபவம் -யமவைஷவ்ருணுதே தேன லப்ய -பரக்கத ச்வீகாரம் -செய்த வேள்வியர் வையத் தேவர் -தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை -இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும்
கற்றுக் கறவை –திரு மோகூர் –முகில் வண்ணன் பேர்பாட -தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே -நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே
கனைத்து இளம கன்று –சித்ரகூட அனுபவம் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
-மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -நாகத்தணைக் குடந்தை –
-திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இ றே
உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் –
நாவுடையாய் -செந்தமிழும் வடகளையும் திகழ்ந்த நாவர் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்
எல்லே இளம் கிளியே –திரு வல்லிக் கேணி அனுபவம் –வல்லானை கொன்றானை –விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப –
நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் -துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –விரதத்துக்கு
பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சபச்தன்களை செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –
அம்பரமே தண்ணீரே -காழிச் சீராம விண்ணகரம் -அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் -ஒரு குறளாய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன்
உந்து -திரு நறையூர் அனுபவம் -மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் —-ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
ஆங்கிடையே–அன்ன திருவுருவம் நின்றது –பந்தார் விரலி –பந்தார் விரலாள் – பெரிய திருமொழி -6-6-8-
குத்து விளக்கு -திருவிடவெந்தை -கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் -திவளும்
வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –
முப்பத்து மூவர் -திருப்பாடகம் -அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –
ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை திரு நாராயண புரம்–பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
-ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா
ஆற்றப் படைத்தான் மகனே -யதிராஜ சம்பத் குமாரனே –பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
-புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே
அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை –அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம் -உன் கோயில் நின்று இங்கனே -கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
–நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் -குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில
ஒருத்தி -திருக்கண்ணபுரம் -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு
உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்
மாலே -ஸ்ரீ வில்லி புத்தூர் -ஆலினிலையாய் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
கூடாரை திருவேங்கடம் —விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –குளிர் அருவி வேங்கடம் –
கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம் -கானம் சேர்ந்து உண்போம் –கானம் என்றும் வேணு காண கோஷ்டியில் என்றுமாம்
சிற்றம் சிறு காலை த்வாராபதி –உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –
வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -அணி புதுவை -மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –
மார்கழி -பாரோர் புகழ -என்றது மகிழ என்றபடி -க்யாதி லாப பூஜா அபேஷை இல்லாதவர்கள் –காரணே கார்ய உபசார
-புகழ்ச்சிக்கு காரணமான மகிழ்ச்சியே இங்கே விவஷிதம்
வையம் -செய்யாதன செய்யோம் -சாஸ்த்ரங்களில் விதித்தவையாக இருந்தாலும் மேலையார் செய்யாதன செய்யோம் -ஆசாரியர்கள்
அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -மனோ பூர்வ வாக் உத்தர -யன் மன சாத்யா எதி தாதி வாசா வத்தி –மனஸ் சஹகாரம் இல்லாமல் பித்தனாக பகவத் விஷயம் பேசினாலும் எம்பெருமானுக்கு உகப்பே என்றபடி
கீசு கீசு -கிருஷ்ண கிருஷ்ண -அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாகும்-பொழில் வாய் இருந்து
வாழ் குயில்கள் அரி அரி என்றவை அழைப்ப
பந்தார் விரலி –போகய போக உபகரண போக ஸ்தானங்கள் கை அடைப்பாக கொண்ட -உபய விபூதி நாயகர் -நிரவாஹகர் – உடையவர்
முப்பத்து மூவர் -நப்பின்னை நங்காய் திருவே –குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் -ஸ்ரீ தேவி பூ தேவி களுடன் ஒக்க பரிகணிதை-
ஏற்ற கலங்கள்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே விபவம் – -பெரியாய் -பரத்வம் -ஊற்றம் உடையாய் வ்யூஹம்
–உலகினில் தோற்றமாய் -அந்தர்யாமித்வம் –நின்ற சுடரே -அர்ச்சாவதாரம்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -ச யத் பிரமாணம் குருதே-
நல்குரவும் செல்வமும் –சம்பத் தாரித்ர்ய பாவாத் —-அகதி தகட நம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி -தேசிகன்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் -இதற்கு அகடிதகட நா சக்தி வேண்டியது இல்லையே
சர்வ நியந்த்ருத்வம் அனுபவிக்கப் படுகிறது -ஆறாயிரப் படியில் பிள்ளான் –
லஷ்மி நாதாக்க்ய சிந்தௌ சடரி புஜதல ப்ராப்ய காருண்ய நீரம்
நாதத்வாரா வப்ய ஷிஞ்சத் ததனு ரகுவராம் போஜ சஷூர் ஜராப்யாம்
கதவா தாம் யாமு நாக்க்யாம் சரிதமத யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம்
சம்பூர்யா பிராணி சச்யே பரவஹதி சத்தம் தேசிகேந்திர ப்ரமௌகை–
பரீவா தேஷு யே மூகா பதிராச் ச ச பரோக்தி ஷூ
பர ரந்த்ரேஷூ ஜாத்யந்தா தைர் ஜிதம் புவனத்ரயம் –
பிறரை தூற்றுவதில் ஊமைகளாயும் -பிறர் செய்யும் தூற்றைக் கேளாமையால் செவிடர்களாயும் -பிறர் குறைகளைக் காண்பதில்
பிறவிக் குருடர்கள் போலேயும் இருந்து மூவுலகையும் வெல்வார்கள் –
ஆராவமுதன் -என்பதைக் காட்டிலும் ஆராவமுது -அதி மநோஹர வ்யாபதேசம் -என் அமுதினைக் கண்ட கண்கள் போலே
-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -என்பதை விட மருந்தும் பொருளும் அமுதமும் தானே -எனபது அன்றோ மிக மிக ரசிப்பது
–பெரும் புறக் கடல் -ப்ருஹத் பஹிஸ் சிந்து –வான மா மலைத் தடாகம் -சேற்றுத் தாமரை -சோலை -தேனமாம் பொழில்
திரு மோகூர் ஏரி -தாள தாமரை –திருக் குறுங்குடி பொய்கை -கரண்ட மாடு பொய்கை
பிரமாணம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் -நல்ல வமுதம் பரகாலன் பனுவல்களே -பக்தாம்ருதம் –திராவிட வேத சாகரம்
பிரமாதாக்கள் -வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே
பிரமேயம் –அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது –அடியேன் மேவி அமர்கின்ற அமுதே திரு வேங்கடத்து எம்பெருமானே
–சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அமுதே -திரு மேய்த்து இன்னமுத வெள்ளத்தை –அமுதே திருமால் இரும் சோலைக் கோனே
-ஆரா வின்னமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற -அமுதினைக் கண்ண மங்கையுள் -என்றாலும்
ஆராவமுது திருக்குடந்தை எம்பெருமானுக்கே உபபத நிரபேஷமாய் இருக்கும்
பேர் அருளாளன் -தேவப் பெருமாளுக்கும் திருக் குறுங்குடிப் பெருமாளுக்கும் -திரு நாங்கூர் செம் பொன் செய் கோயில் பெருமாளுக்கும்
பத்தராவி -திரு நின்றவூர் பெருமாளுக்கும் திருக் கண்ண மங்கை பெருமாளுக்கும்
சூழ் விசும்பிலும் –குடந்தையன் கோவலன் குடி யார்க்கு –தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -பவிஷ்யத் ஜ்ஞானம் கொண்டே
நம்மாழ்வார் அருளிச் செயல் -திருமங்கை ஆழ்வாரும் -ஆரம்பத்தில் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும் -சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்- தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே என்று நிகமிக்கிறார்
-அடுத்த பாசுரத்தில் அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் -நாத யாமுன போல்வாரை அன்னம் என்னும் –
ஸ்ரீ நாத முனி களோடு கூட -அமரர் ஏத்த -திருக் குருகூரில் உள்ள நிலத்தேவர்கள் துதிக்க
-அருமறையை வெளிப்படுத்த அம்மான்–நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
ஆராவமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -சிறிய திருமடல் -இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
ரசோவை ச ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆ நந்தி பவதீ -தைத்ரியம் -ஏதத் அம்ருதம் ஏதத் அபயம் ஏதத் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -8-3-4-
ஆராவமுதே -பதிகம் தொடக்கத்திலே எம்பெருமான் திரு நாமம் இதில் ஒன்றிலே தான் யாருக்கு ஆராவமுதம் -பக்தர்களுக்கு –
-ஆறாயிரப்படி -உன்னோடு பிறரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க சர்வ காலமும் அனுபவித்தாலும் ஆராத போக்யம் -பிள்ளான் –
தானே அனுபவித்து குமிழ் நீர் உண்பானாம்ஆள் இட்டு அந்தி தொழாமல் பெருமாள் தானே
-ஸ்வயமத விபோ ஸ் வேன ஸ்ரீ ரெங்க தாம்னி மைதலீ ரமண வபுஷா ஸ்வார் ஹாண்யாராத நாநி அஸி லம்பித
அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயநேந ஆத்மநா பார்ச்ச்வ யோச்ச ஸ்ரீ பூமிப்யோ மத்ருப்த்யா நயன சுலகனைஸ் சேவ்யமா நாம் ருதௌகம்
அடியேன் உடலம் நின்பால் அன்பாயே–ஸ்வரூப சித்தமான அடியேன் -உடலமும் ஆத்ம தர்மம் கொண்டபடி
-ஆத்மதர்மம் சேஷத்வம் உடலினால் பிரகாசம் அடைவது போலே ஆத்மதர்மமான அன்பும் உடலிலே விளக்கமுற
-வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்குமாயிற்று ஆழ்வாருடைய அன்பு
பேசாது இருந்து பின்னைத் தேறித் தெளிந்து ஒருவாறு பேசுகிறபடி -நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற –
நெடுமாலே -கருமை பெருமை மையல் –கரியவன் பெரியவன் பித்தன் -அவன் கருமையே நமக்கு செல்வம் தந்திடும்
பெருமை ப்ரஹ்ம -சர்வத்ர ப்ருஹத்த்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த ப்ருஹத்வஞ்ச ஸ்வரூபேண
குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் சோஸ்ய முக்யோர்த்த
சீரார் செந்நெல் கவரி வீசும் –
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணக்கும்
தன்னரங்கமே -அஹம் அன்னம் -என்னுமவர்கள் சீரார் செந்நெல் –-பெருமாளுக்கு அமுதுபடியாகும் சீர்மை உண்டே
செழு நீர்த் திருக் குடந்தை -ஆழ்வார் நீராய் அலைய தேசம் எல்லாம் வெள்ளமிட்டு-பெருமானோ நீர் புரை வண்ணன்
-ஆழ்வார் நீராய் அலைந்து கரைபவர் -ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே –பாசுரம் ஒதுபவர்களோ -ஊற்றின் கண்
நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே-இத்தனையும் சேர்ந்தால் செழு நீர்த் திருக் குடந்தை யாக கேட்க வேணுமோ/இப்படி செந்நெலுக்கு சீர்மை திருக் குடந்தைக்கும் -திருவரங்கத்துக்கும் மட்டுமே -என்பர் /
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
கௌசல்யா -கிடை அழகில் ஈடுபட்ட முனிவர் உத்திஷ்ட நரசார்தூல -என்றவாறே எழுந்து இருந்ததில் வியப்பில்லை -திரு மழிசைப் பிரான்
எழுந்து இருந்து பேசு –என்றதும் அர்ச்சாவதார சமாதியையும் குலைத்து பேசி அருளினாயே வாழி-கேசனே
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் -அசைவு -திசைவில் வீசும் செழு மா மணிகளாக சொல்லப் பட்ட திரு மழிசைப் பிரானுக்காக
அசைந்து கொடுத்தது -அதிலே உலகம் பரவக் கிடந்தாய் -அந்த நீர்மைக்கு உலகு எல்லாம் ஈடுபடும் படி கிடந்தாயே
கண்டேன் அம்மானே -ச மயா போதித ஸ்ரீ மான் ஸூ க ஸூ பதா என்னும்படி உணர்த்தி விட்டுத் துடித்த பிராட்டி போலே
அன்றியே கண்ணாரக் கண்டு களிக்கின்றேன் -என்கிறார்
ப்ராப்யச்ச ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மன ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச வதந்தி
சகலா வேதாஸ் சேதிஹாசபுராணா கா முனயஸ் ச மஹாத்மநோ வேத வேதார்த்த தர்சின –
முனயஸ் ச மஹாத்மநோ -என்றது ஆழ்வார்களையே -மிக்க இறை நிலையும் இத்யாதி
எம்மாவுருவும் வேண்டு மாற்றாலாவாய் எழில் ஏறே -இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -ச உஸ்ரேயன் பவதி ஜாயமான
அடியேன் -அடியேன் அரு -அரூபி என்றபடி ஆத்மா உள்ள அளவும் திருவடிகளை பிரியாதே இருக்க பிரார்த்திக்கிறார்
-கன்னார் மதில் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரி -என்கிறார் – நானாகிய ஆத்மா என்றபடி -என்னுடைய ஆத்மா இல்லை
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை அரணாகக் கொள்ளாதார் அன்பு வாழி
என்னான் செய்கேன் -எந்த உபாயாந்தரத்தாலும் செய்வேன் அல்லேன் -நீ தந்து அருளின ஞானத்தால் ஸ்வரூபம் உணர்ந்து -பகத் ரூபாபன்ன ஞானம் அன்றோ -காலாழும் நெஞ்சு அழியும் –கழல்கள் அவையே -என்கிறார் -திருவடிக் கீழ் குற்றேவல் -உற்றேன் உகந்து பணி செய்து
என்னை யாண்டாய் –உனக்கு ஆட்பட்டும் -பிரியா அடிமை என்னைக் கொண்டே குடந்தை திருமாலே
உழலை என்பிற் பேய்ச்சி முலை யூடஅவளை உயிர் உண்டான் –மாயை யாகிற விரோதி நிரசன சீலன் –
ஸ்வ ரஷண ஸ்வ அந்வய விரோதியையும் களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
தான் ஆஸ்ரியிக்கை என்ற நினைவும் விரோதி என்பதால் –தந் நிவ்ருத்தியையும் இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மானே என்கிறார்
தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -கலக்கமான பொருள்கள் வேதம் சொல்லும் எனபது இல்லை
-உபய வேதங்களும் ஏகாரத்த பிரதிபாதகங்கள் தானே
மறை நிலங்கள் -வேதங்கள் மட்டும் அல்ல பஞ்சமோ வேதம் இதிகாசங்களும் உப ப்ருஹ்மணங்களும்
நாராயணன் முழு யேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனின் பரத்வமும் இதரர்கள்
அபரத்வமும் அருளிச் செயல்களாலே தெளியப் பெற்றோம் -மாயத் தோற்றம் என்பாரை பிறந்தவாறும் –
-மாயை -சங்கல்ப ரூபா ஜ்ஞானமே -எல்லையில் ஜ்ஞானத்தன் ஜ்ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்
–எல்லையில் மாயனைக் கண்ணனை -உயர் நலம் உடையவன் -சீர்த் தொடை யாயிரம் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல்-
-குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே —உடன் மிசை உயர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் -சரீரத்மா நிபந்தனம் -சுருதி -மிகு சுருதி
-சுடர் மிகு சுருதி -சுருதி பேத சுருதி -மிகு சுருதி அபேத சுருதி -சுடர் மிகு சுருதி -கடக சுருதி
யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ்
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
சூர்யன் -த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசிஜாச நசன்னிவிஷ்ட கேயூரவான்-
மகர குண்டலவான் கிரீடி ஹாரீ ஹிரண்யவயபுர் திருத்த சங்க சக்ர –
இந்த வகுள பூஷண பாஸ்கரரும்-கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு
மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –
யன் மண்டலம் -வேத பிரதி பாத்தியமான சூர்யா மண்டலம் -திரு வவதார ஸ்தலம் சுருதி வேதம் காது இரண்டுக்கும்
இன்றும் காதில் திருக் குருகூர் ஆழ்வார் என்றதும் கை கூப்பி வணங்குகின்றோம்
பவிஷ்யந்தி –தாம்ரபர்ணீ நதி தீர -என்று ஆழ்வார் ஜீயர் அவதாரங்கள் ஸூ சகம்
யுக க்ரமம் –கருத யுகத்தில் பிராமணராய் -தத்தாத்ரேயர் -பரசுராமன் -த்ரேதா யுகத்தில் சக்கரவர்த்தி திருமகன்
-த்வாபர யுகத்தில் வ ஸூ தேவ நந்தகோபன் குமாரனாகவும் -கலி யுகத்தில் -ஆழ்வார்
ரிஷிம் ஜுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்க்கு ஆரமுதம் ஆனான் தன்னை -பெரிய திருமொழி -2-10-4-
அடியவர் –-பேயாழ்வார் -திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் –இன்றே கழல் கண்டேன் -என்று ஆதியிலும்
பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி -என்றும்
-முயன்று தொழு நெஞ்சே –தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும்
கரியான் கழலே தெருள் தன மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை யறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்று மத்யத்திலும்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நம்கட்குச் சார்வு -என்று நிகமித்து
அடியைச் சிக்கென பிடித்து பேயாழ்வார் அடியவர் ஆகிறார்
அன்பு கூரும் அடியவர் –பூதத்தாழ்வார்
அன்பே தகளியாய் -என்று தொடங்கி -விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
நிகமித்து தனது அன்பை வாய் விட்டு உரைத்தார்
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் -பொய்கையாழ்வார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றபடி அரும்பிக் கண்ணீர் சோர்ந்தவர்
காசார பூர்வகவி முக்கய விமர்த்த ஜன்மா புண்யா
தடேஷூ ஸூபகஸ்ய ரஸோ பஹூஸ் தே–தேகளீச ஸ்துதி-
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனால் போலே தந் நிவ்ருதிக்கு பிரதானாரானார்
திருமழிசை பிரான் –பரத்வத்தை ஸ்தாபித்து அருளி -ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -என்கிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் ஆழ் பொருளை என்கிறார் சத்ய சங்கல்பன் மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
சதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -சத் சப்தத்தால் மூலப் பொருளையும்
வாஜசநேயகத்தில் -ப்ரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத் –ப்ரஹ்ம சப்தத்தால் மூலப் பொருளையும்
ஐதரேயத்தில் -ஆத்மா வா அயமேக ஏவாக்ரா ஆஸீத் –என்று ஆத்மா சப்தத்தால் அறிவுடைய மூலப் பொருள் என்கிறது
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான -மஹா உபநிஷத் வாக்யத்தால் அந்த சத் -ப்ரஹ்ம –ஆத்மா -போன்ற
சாமான்ய சப்தத்தால் சொல்லிய மூலப் பொருள் நாராயண -என்கிறார்
நீராட கிருஷ்ண சம்ச்லேஷம் -நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான் -தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதன் பின்
– வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக் குடத் தேனை ஒத்து -பிள்ளை பெருமாள் ஐயங்கார் நூற்று எட்டு திருப்பதி யந்தாதி –
பகல் பத்து -முதல் நாள் -திருப் பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -1-9 -அபிநயம் வியாக்யானம் முதல் இரண்டு திருப்பல்லாண்டு பாடல்கள்
இரண்டாம் நாள் -பெரியாழ்வார் திருமொழி -2-10-முதல் -5-3 -வரை -ஆற்றிலிருந்து –தன்னேராயிரம் இரண்டு பாடல்களுக்கும் அபிநயம் வியாக்யானம் -/மூன்றாம் நாள் பெரியாழ்வார் திருமொழி -5-4/திருப்பாவை நாச்சியார் திருமொழி 12 வரை -சென்னியோங்கு மார்கழி திங்கள் -இரண்டு பாட்டுக்கும்
அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி என் -சென்னியின் மேல் பொறித்தாய் -அரையர் தம் திருக் கையால் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கோஷ்டியாருக்கும் சாதிப்பார்
நான்காம் நாள் -நாச்சியார் திரு மொழி 13/14-பெருமாள் திருமொழி /திருச் சந்த விருத்தம் -சேவை -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
/இருளிரிய -இரண்டு பாட்டுக்கும் அபிநயம் வியாக்யானம் –
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -அழகிய மணவாளப் பெருமாள் கம்ச வதம் செய்து அருளின படி எவ்வண்ணமே என்ன -மூன்று தடவை கேள்வி கேட்டு
-பின்பு பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் -சேவை ஆனபின்பு இரண்டாம் பகல் பத்து சேவையில் தம்பிரான் படி
கம்ச வத விஷயமான வியாக்யானம் சேவித்து அழகிய மணவாளன் கம்ச வதம் செய்து அருளினது இங்கனே என்று சொல்லி
கிருஷ்ணாவதாரம் முதல் கம்ச வதம் வரை நடித்துக் காட்டி கடைக் கண் என்னும் சிறைக் கோலால் தொடங்கி -சேஷ பாசுரங்கள் சேவை யாகும்
ஐந்தாம் நாள் -திருமாலை அமலனாதிபிரான் -திருமாலை முதல் பாட்டுக்கு அபிநயம் -வியாக்யானம் –ஆறாம் பாட்டு மூன்றாம் அடி –
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே –என்ற இடத்தில் -திரு அத்யயன உத்சவ சேவை புறப்பாடு திருவாராதனம் வேத விண்ணப்பம் அருளிப்பாடு
அபிநயத்துக் காட்டி பின்பு சேஷ பாசுரங்கள் அமலனாதிபிரான்
ஆறாம் நாள் -கண்ணி/பெரிய திருமொழி -3-5- வரை கண்ணி நுண் சிறுத் தாம்பு வாடினேன் வாடி இரண்டுக்கும் அபிநயம் வியாக்யானம்
ஏழாம் நாள் -பெரிய திருமொழி -3-6-முதல் 5-6- தூவிரிய மலருழக்கி-அபிநயமமும் வியாக்யானமும் ஒ மண் அளந்த தாளாளா–
மூன்று முறை சேவித்து அழகிய மணவாளப் பெருமாள் திரு உலகு அளந்து அருளின படி எங்கனே என்ன -அத திரு மொழியில் மேல்
பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பிற்பகலில் இரண்டாம் சேவையில் வாமன அவதார விஷயமாக தம்பிரான் படி வியாக்யானம்
சேவித்து அவ்வவதார வ்ருத்தாந்தங்களை நடித்துக் காட்டி தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஆரம்பித்து அத்திருமொளியை முடிப்பார்கள்
எட்டாம் நாள் -பெரிய திருமொழி -5-7- முதல் 8-10–பண்டை நான்மறையும் பாசுர அபிநயம் வியாக்யானம் -அரங்க மா நகர் அமர்ந்தானே –
அவதார வைபவங்கள் -அரங்கம் என்று சேர்ந்து வரும் சந்தைகள் 70 மேல் சேவிக்கப்படும் -மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக ஆயிரம் தோளால்
அலைகடல் கடைந்தான்-அழகிய மணவாளப் பெருமாள் அம்ருத மதனம் செய்து அருளினபடி எவ்வண்ணமே என்ன -மூவிசை சொல்லி
அத்திரு மொழியில் மேல் பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பின்பு இரண்டாம் சேவையில் அம்ருத மதன விஷயமாக
தம்பிரான் படி வியாக்யானம் சேவித்து சேஷமான பாடல்களை சொல்லி அத திருமொழியை முடிப்பார்கள்
ஒன்பதாம் திருநாளில் -பெரிய திருமொழி -8-2-முதல் 10-1- தெள்ளியீர் பாசுர அபிநயம் சேவை -திரு நெடும் தாண்டகம் முதல் பாசுர அபிநயம் வியாக்யானம் -இரண்டாம் சேவையில் முத்துக் குறி -திரு நெடும் தாண்டகம் -11 பாட்டு கட்டுவிச்சி சொல்லும் கூடல் குறியை முத்துக் குறியாக அபிநயித்துக் காட்டுவார்கள்
முத்துக் குறிக்காக அரையர் பெருமாள் இடம் தீர்த்தம் சடாரி -ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் கோஷ்டிக்கும் சாதிப்பார்
திருப் பொலிந்த -சடாரி மட்டும் –இன்றும் நாளையும் தீர்த்தமும் சடாரியும் உண்டு
பத்தாம் திருநாள் -பெரிய திருமொழி -10-2 தொடங்கி திரு நெடும் தாண்டகம் முடிய சேவை -இரக்கமின்றி அபிநய வியாக்யானங்கள்
பிற்பகல் ராவண வதத்துக்கு அருளிப்பாடு -கொண்டாட்டம் -இன்றும் அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடாரி சாதிப்பார் -இன்று நாச்சியார் திருக் கோலம்
வைகுண்ட ஏகாதசி -ரத்னாங்கி சேவை -உயர்வற உயர்நலம் தொடங்கி ஆழ்வாரை திரு முன்பே அழைத்து அந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பக்தி உலா படி ஏத்தம் திருவந்திக்காப்பு -திவ்ய ஆஸ்தான மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திரளை இருந்தான் கண்டு கொண்டே
-மூன்றாம் ஸ்ரீ யபதி முதல் பாட்டுக்கும் ஈடு வாசிப்பார் -முதல் பத்து முடிய சேவை பெரிய பெருமாள் முத்தங்கி சேவை
ஏழாம் திருநாள் ஆழ்வாருக்கு நாச்சியார் திருக் கோலம் ஆல்வாரைக் கண்டு மோஹித்து கொட்டகை உத்சவம்
-ஆஸ்தானம் எழுந்து அருளும் முன்பு கைத்தல சேவை இவள் திறத்து என் செய்கின்றாயே கேட்பது நெஞ்சை உருக்கப் பண்ணும்
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி -ஆசார்ய ஹிருதயம் இரவில் கங்குலும் பகலும் அபிநயம் வியாக்யானம்
அந்திப் போதில் அவுணன் உடல் இடந்தானே -ஹிரண்ய வதம் வியாக்யானம் அபிநயம் பின்பு அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
பின்பே ஏழாம் பத்தை சேவித்து முடிப்பது
எட்டாம் நாள் -குதிரை நம்பிரான் மேல் வீற்று இருக்கும் -மல் வெளியில் நிலை வேடுபறி -வாடினேன் வாடி தொடங்கி
திரு மங்கை ஆழ்வார் உடன் திரு மா மணி மண்டபம் சேர்த்தல் இரவில் நெடுமாற்கு அடிமை அபிநய வியாக்யானம்
பத்தாம் நாள் -சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி ஆழ்வாருக்கு -திருவடி தொழ சித்தமாக தாள தாமரை வியாக்யானம்
திருவடி தொழ எழுந்து அருளும் போது சூழ் விசும்பும் திருவடி தொழும் போது முனியே நான்முகனும் அரையர் சேவை
முனியே நான்முகன் ஒவ் ஒருபாட்டையும் இரு முறை சேவிப்பது -அது முடியும் வரை வேர் அற்ற மரம் போலே
ஆழ்வார் திருவடி வாரத்தில் திருத் துழாயால் மூடப் பெற்று இருப்பார்
அடுத்த நாள் இயற்பா ஆஸ்தானத்திலே-அன்று தொடங்கி ஸ்ரீ ரெங்க நாச்சியார் சன்னதியிலே ஐந்து நாள் பகல் பத்தும்
ஐந்து நாள் இராப் பத்தும் -அதில் தொடக்கம் அரையர் சேவிப்பது அத்யாபகர்கள்
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்