திருவாய்மொழி – -2-8– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –

சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு -சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை -ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி -பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது -ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –

இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில் அத்வேஷத்தைப் பிறப்பித்து –ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்
இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்

இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி திருவடி திரு வநந்த ஆழ்வானை பரிகரமாக யுடைத்தாய்
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூ ககைதாநமாய்-மங்களமாய் உத்தமமாய் அபரிச்சின்னமாய்
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

———————————————-

அவதாரிகை –

முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்
மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல் –
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி -பர்யங்க வித்யையிலே சொல்லுகிற படியே -சர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூட
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் இருக்கிற இருப்பிலே
இச் சேதனன் முக்தனாய் சென்று கிட்டினால் -அஹம் பிரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்திரன் ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்
ஆகில் இங்கனே போராய் -என்றால் அவன் அங்கீகாரம் பெற்று மாதா பிதாக்கள் இருந்த படுக்கையில் பிரஜை சென்று ஏறுமா போலே
தமேவம் வித்பாதே நாத்யா ரோஹாதி என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப் பேற்றைச் சொல்லுகிறது
அணைவது
தாபத்ரயங்களாலே நொந்த சம்சாரி சேதனன் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி-என்கிறபடியே -அப்பெரிய மடுவிலே விழுந்து
தன் தாபம் எல்லாம் ஆறுமா போலே யாயிற்று
முதலில் இவை இல்லாதவன் -திரு வநந்த ஆழ்வான் மேல் அணைந்து -இவை உண்டாய்க் கழிந்தாரைப் போலே இருக்கும் படி
-விடாயர் மடுவில் விழுமா போலே யாயிற்று அணைவது
அரவணை மேல்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை ஸ்வபாவகமாக உடைய திரு வநந்த ஆழ்வானோடே அணைவது –

புல்கும் அணையாம் -என்னக் கடவது இறே
அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி
பூம்பாவை யாகம் புணர்வது -என்கிறது இ றே மூவர்க்கும் போகம் ஒத்து இருக்கையாலே
போக்யதைக வேஷையாய்-நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பெரிய பிராட்டியாரோடு கலந்து வர்த்திப்பது
ஆகம் புணர்வது –
ஆத்ம குணங்கள் குமரிருந்து போம் அத்தனை
அணைவது புணர்வது
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

இருவரவர் முதலும் தானே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே -இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் நித்யமுமாய் இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -என்னா நின்றது இறே
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –
இணைவனாம் எப்பொருட்கும்
தேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிப்பது -உபேந்த்ரனாவது
-சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்
இப்படி தாழ விட்டு பிறக்கிறது எதுக்காக என்னில்
வீடு முதலாம்
மோஷ பிரதனாகைக்காக
அவதரித்த இடங்களிலே பஷிக்கு மோஷத்தைக் கொடுப்பது பிசாசுக்கு மோஷத்தைக் கொடுப்பதாகா நிற்கும்
அவன் வந்து அவதரிப்பது மோஷ பிரதன் ஆகைக்காக வாக்கில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ என்னில்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே —
சம்சாரம் என்ற ஒரு பெரும் கடல் -அது எங்களால் கடக்கக் போகாது பிரபலனான நீயே கழித்துத் தர வேண்டும் என்று
இருப்பார்க்கு பிரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்
புணையாம் அவன் என்றபடி -சர்வ பர நிர்வாஹகனாம் அவன் என்றபடி
சம்சார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜனம்-த்வாமேவ சரணம் பிராப்ய -என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும்
புணைவன் -என்று தெப்பமாவான் என்றுமாம் -விஷ்ணு போதம் -என்னக் கடவது இறே
ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று –

———————————————————————————

அவதாரிகை –

என் தனி நாயகன் புணர்ப்பு என்கையாலே எம்பெருமான் தான் வேணுமோ -அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம் -என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற அதினுடைய விவரணமாய் இருக்கிறது
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம்
அன்றிக்கே ஒன்றாக வீட்டு விசேஷணம் ஆக்கவுமாம்
நீந்தும் –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும்
துயரில்லா வீடு முதலாம்
துக்க கந்த ரஹிதமான மோஷத்துக்கும் ஹேதுவாம் -கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான ஜன்மம் தொடக்கமாக நீந்தும் துயரான
மற்று எவ்வெவையும் இல்லாத மோஷத்துக்கு ஹேதுவாம் என்னுதல்-
இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று -ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை
முக்திர் மோஷா மஹா நந்தா -என்னக் கடவது இறே-

இப்படி துக்கத்தைப் போக்கி வீடு முதலாக எங்கே கண்டோம் -என்னில் –
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த –
பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை உடைத்தான பொய்கையிலே போய்ப் போக்கு முதலையாலே இடர்ப்பட்ட ஆனையினுடைய
துக்கத்தை வாசனையோடு போக்கினவன் –
பூவில் செவ்வி அழியாமே-திருவடிகளிலே இட வேணும் என்று நினைத்து அது பெறாமையால் வந்த இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது –
திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது
ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
என் தனி நாயகன்-
ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது
புணர்ப்பே —
அவனோட்டை சம்பந்தம் –
அவன் திருவடிகளிலே சம்பந்தம்
துக்க நிவ்ருத்தியையும் பண்ணி -ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –
தனி நாயகன் புணர்ப்பு –வீடு முதலாம் -என்று அந்வயம்-

—————————————————————————————–

அவதாரிகை –

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவற்றை ஸ்ருஷ்டிக்கையே தொழிலாய் இருக்கிற ப்ரஹ்மாவும்-சுடுதடி போலே இவற்றை யடைய அழித்துக் கொண்டு நிற்கிற ருத்ரனுமாம் –
ததா தர்சித பந்தானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும் -ஸ்ருஷ்டிம் தாதா கரிஷ்யாமி த்வாம் ஆவிச்ய ப்ரஜாபதே -என்கிறபடியே
அவன் அந்தராத்மாவாய் நின்று பிரவர்த்திப்பிக்க -இவற்றைச் செய்கிறார்கள் –
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே –
இத்தால் சாமா நாதி கரண்யத்தால்-அந்தர்யாமித்வம் சொல்லிற்று
புணர்ந்த தன் உந்தி -என்கையாலே -காரணத்வம் சொல்லிற்று
ஆகத்து மன்னி -என்கையாலே திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபர்-என்னும் இடம் சொல்கிறது
புணர்ந்த திருவாகித் தன் மார்வில்
தன் திரு மார்வில் நித்ய சம்ச்லிஷ்டையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
இது இப்போது சொல்லுகிறது என் என்னில் -ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும்
ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே
தான் சேர் புணர்ப்பன் –
சிருஷ்டி யர்த்தமாக ஏகார்ணவத்திலே சாய்ந்து அருளினவன் -என்னுதல்
தனக்குத் தகுதியான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல்
பெரும் புணர்ப்பு எங்கும் புலனே —
ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும் -தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும்
போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –

———————————————————————

அவதாரிகை –

அவனுடைய ஈஸ்வரத்தில் கண்ணழிவு அற்று இருந்தது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்று
நன்மை பெற வேணும் என்று இருப்பார் அவனைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-
அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே சப்தாதிகளிலே
மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது
இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
நன்மைக்கு முடிவின்றிக்கே இருக்கிற நாட்டிலே புக வேண்டி இருப்பீர்
ஸ்வவிநாசம் காண் மோஷம் என்கை யன்றிக்கே ஆப்ததமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே
புகுவீர்
இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்
அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே என்னில்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
விரோதி போக்குகை நம் பணியோ-என்கிறார்
தடுமாறி முடிந்து போம் படி அசூர வர்க்கத்தை அழியச் செய்தான் –
அவனுடைய பலமுந்து சீரில் படிமின் –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களிலே ப்ரவணர் ஆகுங்கோள்
ஸூ ஸூகம் கர்த்துமவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2–என்னும்படி
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே-சாதனா தசையே தொடங்கி இனிதாய் இருக்கும் இறே
ஓவாதே –
அபர்வணி கடல் தீண்டலாகாது -என்னுமா போலே ஒரு நியதி இல்லை இதுக்கு –
தமக்கு ரசித்த படியாலே இடைவிடாமல் அனுபவிக்கப் பாருங்கோள் என்கிறார் -என்றுமாம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமா போலே மாறாதே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்

————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -இணைவனாம் எப்பொருட்கும் -என்றார் அத்தை உபபாதிக்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட-மற்று எவ்வெவையும்
கீழே நீந்தும் துயரப் பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல்
இதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை என்கிறார்
உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும் -அவற்றை உடைத்தான பதார்த்தங்களுக்கும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மூவா என்கிற இத்தை கீழோடு கூட்டுதல்
மூவா -தனி முதல் -என்று மேலே கூட்டுதல்
பிரவாஹ ரூபத்தாலே நித்தியமாய் போருகிற-இதுக்கு தனி முதல் -என்னுதல்
முசியாத அத்விதீய காரணமாய் என்னுதல் -முசியாத -சோம்பல் இல்லாமல்
தான் தன் பகலிலே வழி பட வேண்டும் என்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்து விட கொடுத்த உபகரணங்களைக் கொண்டு
வழி கெட நடவா நின்றால்-இப்போது இங்கனே போயிற்று யாகில் க்ரமத்திலே நம் பக்கல் ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்கிறோம்
என்று அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கும் -இப்படி தன் நினைவைத் தப்பிப் போரச் செய்தேயும் கர்ஷகனாய் இருக்குமவன்
-ஒரு கால் பார்த்தது இ றே என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமா போலே
ஒருகால் அல்லால் ஒருகால் ஆகிலும் ஆகிறது -என்று சிருஷ்டியா நிற்கும்
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18-என்னக் கடவது இறே –
இப்படி இவன் சிருஷ்டித்து ரஷிப்பது எவ்வளவு என்னில்
மூ வுலகும் காவலோன் –
சிருஷ்டிக்கு கர்மீபவிக்கும் எல்லை யளவும்
கீழும் மேலும் நடுவும் -என்னுதல்
க்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் -என்னுதல்
காவலோன்
சாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை -இப்படி ரஷிப்பது தன் மேன்மை குலையாதே நின்றோ என்னில்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று
மாவாகி –
ஹயக்ரீவ மூர்த்தியாய் அவதரித்த படி
யாமையாய் மீனாகி
வித்யா பிரகாசகமான அவதாரங்கள்
மானிடமாம்-
ராம கிருஷ்ணாதி யாவதாரங்கள் -அனுஷ்டேயார்த்த பிரகாசகமான அவதாரங்கள்
மர்யாதானாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -என்றும் சொல்லுகிறபடியே
இப்படி தாழ விட்டு அவதரிக்கிறவன் தான் ஆர் என்னில்
தேவாதி தேவ பெருமான்
மனுஷ்ய கந்தம் பொறாத தேவர்கள் கந்தம் பொறாத நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகானவன்
என் தீர்த்தனே —
நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே
தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை
அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்
அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –

—————————————————————————————

அவதாரிகை –

நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து
நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் –
பாதோ தகேன ஸ சிவ ஸ்வ சிரோதருதேன–ஸ்தோத்ர ரத்னம் -13-என்றும்
பாவனார்த்தம் ஜடாமத்யே யோக்யோஸ் மீத்யவதாரணாத் -என்றும் சொல்லுகிறபடியே
தன் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன்
இது எப்போது தான் செய்தது என்னும் அபேஷையில்
உலகளந்த சேவடி -என்று அத்தை ஸ்மர்ப்பிக்கிறார்-
குறை கொண்டு -நான்முகன் திருவந்தாதி -9—தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு -நான் முகன் குண்டிகை நீர் பெய்து –
அருகே நின்ற -தர்மதத்வம் இவன் நினைத்தவாறே ஜலமாய் இவன் குண்டிகையிலே பிரவேசித்தது
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான் –
யுக்த அயுக்த நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கை வளரா நின்றான் -அது போக வேணும் -என்று இவன் ஜடையிலே
ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு துஷ் புத்ரர்கள் தலையிலே தெளிக்குமா போலே –
இவ்விடம் தன்னில் கிருஷ்ணாவதாரத்துக்கும் வாமனாவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டாகையாலே சொல்லுகிறார் –
மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அர்ஜுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு அஸ்தரம் பெற வேண்டுவதாய் அவன் அதுக்கு உத்யுக்தனான சமயத்திலே இவன்
ஸ்ரமத்தை ஆற்றுகைக்காக புஷ்பங்களை நம் காலில் இட்டு ஜீவி என்று அருளிச் செய்ய அவனும் திருவடிகளிலே இட
அந்த தேவதை ராத்ரியிலே ச்வப்னத்திலே அந்தப் புஷ்பங்களை தன் தலையிலே தரித்துக் கொண்டு வந்து
அஸ்த்ர பிரதானம் பண்ணிற்றதாக சொல்லக் கடவது இறே
அத்தை அருளிச் செய்கிறார்
பூ மாலை என்னுதல் -அழகிய மாலை என்னுதல்
அவையே
அவற்றோடு சஜாதீயங்கள் அன்றிக்கே
சிவன் முடி மேல் தான் கண்டு
பாடே பார்ச்வத்தில் அன்றிக்கே அவன் தலை மேல் கண்டானாயிற்று
தான் கண்டு
ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றிக்கே ஸ்ருதி ஸ்ம்ருதிகளாதல்-அன்றிக்கே தானே கண்டான் ஆயிற்று
பிரத்யபிஜ்ஞார்ஹமாம் படி பிரத்யஷித்து
பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் அவனுடைய ஈஸ்வரத்திலே கலங்காதே -ஸ து பார்த்தோ மஹா மநோ என்கிறபடியே
பேரளவுடைய அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்து -நம புரஸ்தாத ப்ருஷ்ட தஸ்தே-என்று அனுவர்த்தித்த
பைந்துழாயன் பெருமை
சர்வாதிகத்வ த்யோதகமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரன் உடைய பரத்வம்
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
-இன்று சில அறிவு கேடர் செல்ல விட்டு வர விட்டு ஆராயும் அளவாய் இருந்ததோ —

———————————————————————————–

அவதாரிகை –

ஒருவன் அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ -அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ
இஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து –
திருப் பாற் கடலிலே கிடந்த படி யாதல் –
பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்த படி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும் படி
அரி ஸூ தன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –
இருந்து –
பரமபதத்திலே இருந்தபடி யாதல்
உடஜே ராம மாஸீ நம் -என்று ருஷிகள் ஆஸ்ரமத்திலே இருந்து
நின்று
திருமலையிலே நின்றபடி யாதல்
ராவணவத சம நந்தரத்திலே கையும் வில்லுமாய் லங்கத்வாரத்திலே நின்ற நிலை யாதல்
வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்
அவஷ்டப்ய ஸ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமானுஜம் சைவ பர்த்துச் சைவா நுஜம் சுபா -என்கிறபடியே
அவர்களுடைய ஸ்திரீகள் பக்கலிலே கேட்கும் இத்தனை இறே இவனுடைய பரத்வம்
தமஸ பரமோதாத சங்க சக்ர கதாதர -என்னுதல் –
த்வமேப்ரமேயச்ச -என்னுதல் -சொல்லா நிற்பார்கள் இறே

அளந்து
தன்னைதான பூமியை மஹா பலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள அத்தை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்
உமிழும்
இவை என்பட்டன -என்று பார்க்கைக்காக பின்னை வெளிநாடு காண உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-
மிகப் பணைத்த திருத் தோள்களாலே -ஆரும்படியாகத் தழுவும்
பார் என்னும் மடந்தையை
ஸ்ரீ பூமிப் பிராட்டியை
பூமியை பிரகாரமாக வுடையவள் ஆகையாலே தத் வாசக சப்தத்தாலே சொல்லுகிறது
தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்
மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –
மால் -சர்வாதிகனான சர்வேஸ்வரன்
செய்கின்ற மால் -அவன் ஏறுகிற பிச்சை
ஆர் காண்பாரே -ஒருவராலே இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

———————————————————————–

அவதாரிகை –

அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும்
திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை –
சர்வேச்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை
அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால்
காணப் போமோ -அது கிடக்க -காண்பார் சில உண்டாயிற்று
என் காணுமாறு
எவ்வளவைத் தான் காண்பது
அளவுடையார் சிலர் காண இழிந்தார்கள் என்னா-விஷயத்தைப் பரிச்சேதிக்கப் போகாதே –
ஏன் தான் பரிச்சேதிக்கப் போகாது ஒழிகிறது என்னில் -இது வன்றோ அவனுடைய அபதானம் இருக்கிறபடி
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-
அவனுடைய ஊண் ஆகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில் சர்வ லோகங்களும் ஒரு அவதானத்துக்குப் போராது-
அபதானம் -செயல் -அவதானம் பிடிக்கு
இவ்வபதானத்தை உடையவன் ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
அவனுடைய செயல் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கைக்கு ஸ்வரூபமோதான் பரிச்சேதிக்கலாய் இருக்கிறது என்கிறார்
சேண் பால் வீடோ -வுயிரோ மற்று எப்பொருட்கும் –
உயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான
தேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான
ஏண்பாலும் சோரான்
எண்ணப் பட்ட பிரதேசங்கள் என்னுதல்
எட்டுத் திக்கும் வியாபித்து விடாதே நிற்கும் என்னுதல்
பரந்துளான் எங்குமே —
இப்படி வியாபிக்கும் இடத்தில் ஒரு குறை உண்டாம் படி இருக்கை அன்றிக்கே குறைவற வியாபித்து இருக்கும்
ஆனபின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –

——————————————————————————-

அவதாரிகை –

நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்
இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன்-
இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான்
மயா இதம் சர்வம் ததம் -ஸ்ரீ கீதை -9-4-
ந ததஸ்தி விநா யத் ச்யான்மயா –ஸ்ரீ கீதை -10-39–என்று அவன் சொன்ன வார்த்தை யாயிற்று இவன் தான் சொல்லிற்று
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று
பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்
பருவத்தாலும் கொண்டாட வேண்டும்
பள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்தில் உள்ளவை அடைய கொண்டாட்டமாய் இருக்கும்
அதுக்கு மேலே தன் சிறுவன் -தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும்
வாயில் ஓர் ஆயிர நாமம் -அதுக்கு மேலே திரு நாமத்தைச் சொல்லிற்று
ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்
ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி -அசஹ்ய அபசாரம் இறே
பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன்
திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்
மகனைக் காய்ந்து –
வயிற்றிலே பிறந்தவனே இருக்கச் செய்தேயும் திரு நாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினான் யாயிற்று –
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
எங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையே இரானே என்று தூணை அடித்துக் காட்டினான்
அளந்திட்ட தூணை அவன் தட்ட -முன்பே நரசிம்ஹத்தை வைத்து நட்ட தூண் என்ன ஒண்ணாதே
தானே தனக்கு பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூண் ஆகையாலே
அவன் தட்ட -பெரியாழ்வார் திருமொழி -1-7-9-வேறே சிலர் தட்டினார்கள் ஆகில் கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் -என்னவுமாம் இறே -தானே யாயிற்று தட்டினானும்
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே அடித்த இடத்திலே -அவனுடைய பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலே
அவன் வீயத் தோன்றிய
தன் தோற்றரவிலே அவன் பிணமாம் படி தோற்றின
அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்
-உச்சியது புருவமுமாய்க் கொண்டு
தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே
என் சிங்கப்பிரான் பெருமை-
ஆஸ்ரித வர்க்கத்துக்காக நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம்
யாராயும் சீர்மைத்தே –
இன்று சிலரால் ஆராயும் படி இருந்ததோ –

—————————————————————————————

அவதாரிகை –

இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே -அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே
என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு சவர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் –
சர்வ பிரகாரத்தாலும் நன்றான பரம பதம் -பரிமித ஸூகமான ஸ்வர்க்கம் -நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
-இவை முடிவாக ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்
வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் -என்கிறபடியே முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று
தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –
இப்படி ஜகத் சரீரனாய் நின்ற அளவே யன்றிக்கே தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி
ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற அழகிய திருமேனியை யுடையனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய்
வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

————————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –
பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்
அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து -எவ்வகையாலும் விலஷணமான
மோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்
வீற்று இருந்து –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து
ஆள்வர் எம்மா வீடே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார்

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பாருக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் -அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ -அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்
ஒன்பதாம் பாட்டில் -அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் என்றார்
பத்தாம் பாட்டில் -ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: