திருவாய்மொழி – -2-6– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

ஆடியாடியிலே ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த படி சொல்லிற்று அந்தாமத்தன்பு –
அந்த சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது இத் திருவாய் மொழி
பிரணயி ப்ரீத்யநுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும் படி
ஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்
ஊனில் வாழ் உயிரிலே -ஆழ்வார் தாம் பகவத் அனுபவம் பண்ணி தமக்கு அவன் பக்கலில் உண்டான ப்ரேமம் அவன் அளவிலே பர்யவசியாதே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ததீயர் அளவும் சென்ற படி சொல்லிற்று –
இத்திருவாய் மொழியில் -சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவர் ஒருவர் அளவன்றிக்கே சம்பந்தி சம்பந்திகள்
அளவும் வெள்ளம் இடுகிறபடி சொல்லுகிறது
இரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவிலும் செல்லும் இறே
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்தல் மாறினர்-என்கிறார் இறே

உபய விபூதி உக்தனாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-சர்வ பிரகார பரி பூர்ணனான தான் தன் படிகள் ஒன்றும் குறையாதபடி
வந்து இவரோடு சம்ச்லேஷித்து –அந்த சம்ச்லேஷம் தான் தன் பேறு என்னும் இடம் தோற்ற ஹ்ருஷ்டனாய் -அநாதி காலம்
எதிர் சூழல் புக்கு திரிந்த வஸ்துவை -ஒருபடி பிராபிக்க பெறுவோமே –இவர் தாம் இனி நம்மை விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணி
அவன் அலமாக்குகிற படியைக் கண்டு -நீ இங்கன் பட வேண்டா என்று அவன் அதி சங்கையை பரிஹரித்து அவனை உளன் ஆக்குகிறார்
வைதேஹி ரமசே கிச்சித் சித்ர கூடே மயா சஹ -அயோத்யா -94-18-என்றால் போலே யாயிற்று இதில் ரசமும்
மைதிலி உன்னை அறிந்தாயே -நம்மை அறிந்தாயே -கலக்கிற தேசம் அறிந்தாயே -என்றார் இறே பெருமாள்

——————————–

அவதாரிகை —
அந்தாமத் தன்பிலே ஆழ்வார் உடனே வந்து கலந்து தான் பெறாப் பேறு பெற்றானே இருக்கச் செய்தே -இவர் –
அல்லாவியுள் கலந்து -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும் தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே
-வளவேழ் உலகு தலை எடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வது என் என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

வைகுந்தா –
நித்ய விபூதி உக்தன் தம்முடனே வந்து கலந்தான் -என்று ஹ்ருஷ்டராகிறார் என்னும் இடம் தொடருகிறது
அவனது முதல் பேரைச் சொல்லுகிறார்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-ஆர்ய புத்ர -என்னுமா போலேயும் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணா -என்னுமா போலேயும் -வைகுந்தா -என்கிறார் –
போகம் உத்கூலமானால் பரஸ்பரம் நாம க்ரஹணத்தாலே தரிப்பது என்று ஓன்று உண்டு இ றே
மணி வண்ணனே
அணைத்த போதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்கிறார் -நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே
என் பொல்லாத் திருக் குறளா –
மகா பலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றால் போலே காணும் இவரைப் பெறுகைக்கு சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை –
அழகிது -என்னில் நாட்டு ஒப்பம் என்று அழகில் விசஜாதியைச் சொல்லுதல்
கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார் என்னுதல்-
வைகுந்தா -என்று மென்மை சொல்லிற்று
மணி வண்ணனே -என்று வடிவு அழகு சொல்லிற்று –
என் பொல்லாத் திருக் குறளா -என்று சௌலப்யம் சொல்லிற்று –
இம் மூன்றும் கூடினதாயிற்று பரத்வமானது
என்னுள் மன்னி –
இந்த்ரன் ராஜ்ய லாபம் பெற்றுப் போனான்
மகா பலி ஔதார்ய லாபம் பெற்றுப் போனான்
அவ்வடிவு அழகுக்கு ஊற்று இருந்தது இவர் நெஞ்சிலே யாயிற்று
என்னுடைய ஹ்ருதயத்தே வந்து நித்ய வாசம் பண்ணி
வைகல் வைகல் தோறும் அமுதாய
கழிகிற காலம் தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போக்யனானவன் –
வானேறே –
நித்ய ஸூ ரிகளோடே கலந்து அவர்களை தோற்பித்து மேணானித்து இருக்குமா போலே யாயிற்று
இவரோடு கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு -ஏறு என்கிறது —பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கை –

தம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கின படி சொல்லுகிறார் –
செய்குந்தா வரும் தீமை –
செய்யப்பட்டு -குந்தாவாய் -தப்பாவே -இருக்கும் தீமை என்னுதல்
செய்கும் -செய்யப்பட்டு தாவரும் தீமை -கடக்க அரிதான தீமை-என்னுதல்
உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் —
உன் பக்கலிலே நிஷித்த பரராய் இருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து -ஆசூர பிரக்ருதிகள் மேலே போகும்படியான சுத்தியை உடையவனே
முன் பிரதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே பின்னை அவர்கள் சத்ருக்கள் மேலே பொகடுமாயிற்று
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியே கடலுக்கு தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே மருகாந்தரத்தில் அசுரர்கள் மேலே
விட்டால் போலே அங்கன் ஒரு போக்கடி கண்டிலனாகில்-உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்ஜாத்ய மாதவ -என்று பகதத்வன் விட்ட சத்தியை
அர்ஜுனனைத் தள்ளி தன் அந்தப்புரத்திலே ஏற்றால் போலே தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவித்தல் செய்யும் அத்தனை
பாபங்களாவன தான் -அசேதனமாய் இருப்பன சில க்ரியா விசேஷங்களாய்-அவை செய்த போதே நசிக்கும்
கர்த்தா அஜ்ஞன் ஆகையாலே மறக்கும்
சர்வஜ்ஞ்ஞன் உணர்ந்து இருந்து பல அனுபவம் பண்ணுவிக்க அனுபவிக்கும் அத்தனை இ றே
அவன் மார்விலே ஏற்றுக் கொள்ளுகையாவது -பொறுத்தேன் -என்னத் தீரும் அத்தனை இ றே
செய்குந்தா–
அபூர்வம் காண் -சக்தி காண் –பல அனுபவம் பண்ணுவிக்கிறது என்னில் ஒரு சர்வஜ்ஞ்ஞன் செய்விக்கிறான் என்கை -அழகு இது இ றே –
குந்தம் என்று -குருந்தம் என்றபடியாய்-அதன் பூ வெளுத்தா யாயிற்று இருப்பது -அவ்வழியாலே சுத்தியை நினைக்கிறது-
அன்றிக்கே –
குந்தா -என்று திரு நாமம் -குமுத குந்தர குந்த -என்கிறபடியே –
உன்னை
-ஆஸ்ரீதபஷபாதியான உன்னை
நான் –
ஆடியாடியிலே விடாய்த்த நான் -நீ உஜ்ஜீவிப்பிக்க உன்னாலே உளேனான நான்
பிடித்தேன் கொள்
பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்று
முன்பு சொல்லிப் போரும் வார்த்தை யன்றோ இது என்னா -அங்கன் அல்ல
சிக்கென பிடித்தேன் கொள்
என்னைப் பெறுகைக்கு பூர்வஜனான நீ விடிலும் விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்
அவனை மாஸூச -என்கிறார் –

———————————————————————————

அவதாரிகை –

அவன் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணின படியைச் சொல்லிற்று கீழில் பாட்டில்
இவர் விடேன் என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இப்பாட்டில்

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்
நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது-செருப்பு வைத்து தொழப் புக்கால் போலே ஆக ஒண்ணாது என்று பார்த்து
ஜகத் ரஷணத்துக்கு வேண்டும் சம்விதானம் எல்லாம் பண்ணி
அநந்ய பரனாய் அனுபவித்து போக மாட்டாதே இருந்தான் -ராஜாக்கள் அந்தப்புரத்தில் புகுவது நாட்டுக் கணக்கு அற்ற பின்பு இ றே
அத்யல்பமாய் இருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப்பட்டு நோவு படாத படியாகத் தன் சங்கல்ப்ப சஹச்ர
ஏக தேசத்தில் லோகங்களை ஒரு காலே வைத்து இனி போராதபடி புகுந்தான்
சிக்கெனப் புகுந்தான்
அநந்ய பிரயோஜனமாகப் புகுந்தான் என்றுமாம்
புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –
இவரோடு வந்து கலந்து -அக்கலவியில் அதி சங்கையும் தீர்ந்த பின்பாயிற்று -விகசித சஹஜ சார்வஜ்ஞனுமாய் விஜ்வரனுமாயாயிற்று
தனக்கு நித்ய தர்மமான ஜ்ஞானத்தை உடைத்தானே ஆத்மவஸ்து -கர்ம நிபந்தமாக ஒரு தேஹத்தை பரிஹரித்து இந்த்ரியத்வாரத்தை
அபேஷித்துக் கொண்டு பிரசரிக்க வேண்டும்படி போந்தது –
ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதமும் பிறந்து ஜ்ஞான சங்கோசமும் கழியக் கடவதாய் இருக்கும் இறே
அங்கன் ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்கிறவனும் இவரோடு வந்து கலப்பதற்கு முன்பு சங்கு சீதா ஜ்ஞானனாய் இவரோடு கலந்த பின்பு
விகசிதமான ஜ்ஞான வெள்ளத்தை யுடையவனானான் —திவ்ய மங்கள விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது
துளக்கற்ற –
ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான் –
விஜ்வர -எண்ணக் கடவது இறே
இவர்நம்மை விடில் செய்வது என் -என்கிற உள் நடுக்கமும் அற்றது இப்போது
அமுதமாய் –
ப்ரமுமோத ஹ -என்கிறபடியே அவன் தம்மை விரும்பி போக்யமாய் நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடி
எங்கும் – பக்க நோக்கு அறியான் –
ஆழ்வார் பக்கல் இவனுக்கு உண்டான அதிமாத்ரா ப்ராவண்யத்தைத் தவிர்க்க வேணும் -என்று நாய்ச்சிமார் திரு முலைத் தடத்தாலே
நெருக்கிலும் அவர்கள் பக்கலிலே கண் வைக்க மாட்டு கிறிலன்-
இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் வார்த்தை
-அப்பன் ஸ்ரீ பாதததிலே ஒரு ரகஸ்ய விசேஷம் உண்டு என்று மணக்கால் நம்பி அருளச் செய்ய -அது கேட்க வேணும் என்று
ஆளவந்தாரும் எழுந்து அருள -கங்கை கொண்ட சோழ புரத்தேற
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்து அருளி இருக்க -இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று சுவருக்கு புறம்பே பின்பே நிற்க
அப்பனும் யோகத்திலே எழுந்து அருளி இருக்கிறவர் திரும்பிப் பார்த்து இங்குக் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உண்டோ என்று கேட்டருள
அடியேன் -என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு -நாங்கள் பின்னே தெரியாத படி நிற்க இங்கனே அருளிச் செய்கைக்கு ஹேது என் என்னா
நானும் தானுமாக அனுபவியா நின்றால்-பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்-அவள் முகம் கூடப் பாராத
சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் சிலர் வந்தார் உண்டாக வேணும் என்று இருக்க வேண்டும் என்று இருந்தேன் காணும்
-என்று அருளிச் செய்தார் –
என் பைந்தாமரைக் கண்ணனே —
ஆடியாடியிலே வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்து –

———————————————————————————————

அவதாரிகை –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும் படி பண்ணின இதுவும் ஓர் ஔதார்யமே தான் என்கிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்
ஒரு கால் திருக் கண்களாலே நோக்கினால் -அதிலே தோற்று ஜ்வர சந்நிதபரைப் போலே அடைவு கெட ஏத்தா நிற்பார்கள் ஆயிற்று நித்ய ஸூரிகள் —
ஸ்ருதோயமர்த்தோ ராமஸ்ய ஜாமதக்நஸய ஜல்பத -என்கிறபடி
தலைமகனை
இவர்கள் ஏத்தா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே -என்று அவன் பரனாய் இருக்கும் –
துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நித்ய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்
இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான் –
மார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான் –
விரை -பரிமளம் –விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க் கண்ணி எம்பிரானை
பொன்மலையை –
என்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் -கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –
நான் ஏத்தப் பெற்ற படியாலே வளர்ந்தபடி என்னவுமாம் –
ஆக இத்தால் அவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி
நாம் மருவி –
அருவினையேன் என்று அகலக் கடவ நாம் கிட்டி
நன்கேத்தி –
நித்ய ஸூரிகள் ஏத்தக் கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி –
வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை எந்தையே என்பன் -என்று அகன்றவர் இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களும் கூட மீண்ட விஷயத்தை மாறுபாடு உருவ ஏத்தி என்றுமாம் –
யுள்ளி –
நினைந்து என்று அனுசந்தானத்துக்கு பிராயச் சித்தம் பண்ணத் தேடாதே அனுசந்தித்து
வணங்கி –
குணபலாத் க்ருதராய் நிர்மமராய் வணங்கி –
வணங்கினால் உன் பெருமை மாசூணோதோ-என்னும் நாம் வணங்கி
நாம் மகிழ்ந்தாட
பகவத் அனுபவத்தால் வந்து ப்ரீதித்வம் கனாக் கண்டு அறியாத நாம் ஹிருஷ்டராய் அதுக்கு போக்குவிட்டு ஆட
–நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே —
நாட்பூ அலருமா போலே ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள -சந்தஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாக தந்த இது தன்னை
ஸ்வபாவமாக உடையையே இருக்கிற பரம உதாரனே
நா வலர் பா –
மனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை –
தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் பொன் மலையாய் இருக்கிற தன்னை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே-என்று சொல்லுகிறார் ஆகவுமாம்-
அன்றிக்கே –
தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய் இருக்கிற நீ
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே –
இதுவும் ஒரு ஸ்வபாவமே -வள்ளலே-பரம உதாரனே -என்றுமாம் –

—————————————————————————————-

அவதாரிகை –

நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட -என்று தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே
இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவர் அதி சங்கை பண்ண நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகை நீ என்னை அனுபவிப்பிக்க
அனுபவித்து அத்தாலே சிதிலனான நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

வள்ளலே
நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே
மது சூதனா
நீ உன்னைத் தரும் இடத்தில் நாம் ச்வீகரியாதபடி பண்ணும் விரோதிகளை -மதுவாகிற அசுரனை நிரசித்தால் போலே நிரசித்தவனே
என் மரகத மலையே
உன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய் -ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு அழகை யன்றோ எனக்கு ஔதார்யம் பண்ணிற்று
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் -எள்கல் த்யாகம் ஈடுபாடு –
உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே
அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
உதாரன் அல்ல என்று விடுவோ
விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்

இனி மேல் எல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
கடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து நான் மறு நனைந்து
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு -அத்தாலே செருக்கி மிக்க ப்ரீதனாய்
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து
கர்ம நிபந்தமாக வருமவை
உன்னைப் பிரிந்து படுமவை
அயோக்யன் என்று அகன்று வருமவை –இத்யாதிகள் எல்லாவற்றையும் ஒட்டி
உய்ந்து போந்து இருந்தே —
உய்ந்து -சந்தமேனம்ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்
இருந்து -நிர்பரனாய் இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன் –

———————————————————————————————

அவதாரிகை –

ஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் உன்னை விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

உய்ந்து போந்து
நான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்
என்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே
அதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ
விடுவேனோ
விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு
ஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ
தாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ
எனக்குத் தேகுட்டி விடுகிறேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –
அடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது
பெரு வெள்ளத்துக்கு பல வாய்த்தலைகள் போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக பல தலைகளை உடையனாய்
மதுபானமத்தரைப் போலே ஆடா நிற்பானாய்–சைத்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களை உடையவனாய்
திரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே -சகல பிராணிகளும் கரை மரம் சேர்ந்ததாம் விரகு என் -என்று
யோக நித்ரையிலே திரு உள்ளம் செய்த என் நாயகனானவனே –
யோக நித்தரை –
ஆத்மாநாம் வாசு தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடி தன்னை அனுசந்தித்தல்
சிந்தை செய்த வெந்தாய்
நீர்மையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை
உன்னைச் சிந்தை செய்து செய்தே –
தான் நினைக்கக்கு கிருஷி பண்ணின உன்னை நினைத்து வைத்து விட பிரசங்கம் உண்டோ –

———————————————————————————–

அவதாரிகை –

ஆஸ்ரிதனுடைய பிரதிஜ்ஞ்ஞா சமகாலத்திலே தோற்றுவான் ஒருவானான பின்பு எனக்கு ஒரு கர்த்த்வ்யாம்சம் உண்டோ -என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தை செய்து செய்து –
இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாதே அனுசந்தித்து
உன்னை –
யோக்யனுமாய் -பிராப்தனுமான உன்னை –
சிந்தை செய்து செய்து –
நிதித்யாசிதவ்ய -என்கிற விதி ப்ரேரிதனாய் இன்றிக்கே போக்யதையாலே விட மாட்டாதே அநவரத பாவனை பண்ணி
உன் நெடுமா மொழியிசை பாடியாடி
நெடுமையும் மஹத்தையும் -மொழிக்கும் இசைக்கும் விசேஷணம்-
இயலில் பெருமையும் -இசையில் பெருமையும் சொல்லுகிறது
இயலும் இசையும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற மொழியைப் பாடி -அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமை ஆடி –
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் –
என்னுடைய ப்ராக்தனமான கர்மங்களை வாசனையோடு போக்கினேன்
முழு வேர் -வேர் முழுக்க -என்றபடி -பக்க வேரோடு என்றபடி —
அவன் விரோதியைப் போக்கச் செய்தேயும் பலான்வயம் தம்மதாகையாலே -அரிந்தனன் யான் -என்கிறார் -எனக்கு பண்டே உபகரித்தவனே –
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
உக்தி மாதரம் அன்றிக்கே நெஞ்சாலே இகழ்ந்தான் ஆயிற்று -இத்தால் அவன் விடுவது புத்தி பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை-
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும்
இரணியன் அகல் மார்வம் கீண்ட —
வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு வுகிர்க்கு இரை போராமையாலே -அநாயாசேன கிழித்துப் பொகட்டானாயிற்று
என் முன்னைக் கோளரியே
நர சிம்ஹமுமாய் உதவிற்றும் தமக்காக என்று இருக்கிறார்
கோள் என்று மிடுக்காதல் -தேஜஸ் ஆதல் -மஹா விஷ்ணும் -என்கிற மிடுக்காதல் -ஜ்வலந்தம் என்கிற தேஜஸ் ஆதல்
ஆஸ்ரிதனுக்கு ஒருவனுக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்திராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை
முடியாதது என் எனக்கே-
நீ பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றுவாயாயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ –

———————————————————————————————-

அவதாரிகை –

என்னளவில் விஷயீ காரம் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது கிடீர் -என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

முடியாதது என் எனக்கேல் இனி
எனக்காகில் இனி முடியாதது -உண்டோ –எனக்கு இனி அநவாய்ப்பதமாய் இருப்பது ஓன்று உண்டோ –
நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர் என்ன –
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து –
பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது
படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –
எனக்கு இனி முடியாதது உண்டோ
அடியேனுள் புகுந்தான் –
சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்
உட்கலந்தான் –
ஒரு நீராகக் கலந்தான்
தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –
இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு இவ்விஷயத்தில் தன்னேற்றம் –
அகல்வானும் அல்லன் இனி
அந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –
சேதனரைப் போலே -பாபத்தாலே அகன்று -ஒரு ஸூக்ருதத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு –

உம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில் பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டு விட அமையுமோ -என்ன
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து –
செடி -பாபம்
பாபத்தாலே பூரணமான துக்கங்கள் -தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து -விஷய பிராவண்யத்தாலே வந்த நோய்
அயோக்ய அனுசந்தானத்தாலே வந்த நோய்
பகவத் அனுபவ விச்லேஷத்தாலே வந்த நோய்
இவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து என்கிற இடத்தில் சொல்லிற்று இல்லையோ இது என்னில் -அங்குச் சொல்லிற்று -தம் அளவில்
-இங்கு தம் சம்பந்தி சம்பந்திகள் விஷயமாயிற்று
இப்படி இவர்கள் ஒட்டிற்று எத்தாலே என்னில்
எமர் –
வேறு ஒன்றால் அன்று -என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக
சம்பந்தம் எவ்வளவு என்னில்
கீழ் மேல் ஏழ் பிறப்பும்
கீழ் ஏழு படிகாலும் -மேல் ஏழு படிகாலும் தம்மோடு ஏழு படிகாலுமாக-இருபத்தொரு படிகால்
விடியா வென்னரகத்து –
ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே –
என்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

——————————————————————————————-

அவதாரிகை –

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூ க்ருதம் என் என்ன -ஒரு ஸூ க்ருதத்தால் வந்தது அல்ல
நான் பிறந்து படைத்தது என்கிறார் -அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து
சபரிகரமாக உம்மை விஷயீ கரிக்க நீர் செய்தது என் என்ன
கடலுக்கு உள்ளே கிடந்த தொரு துரும்பு திரை மேல் திரையாக தள்ள வந்து கரையிலே சேருமா போலே மாறி மாறி பிறந்து
வாரா நிற்க திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை
அனுபவித்து மீளுதல் -பிராயச் சித்தி பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று
அடியை யடைந்து உள்ளம் தேறி
உள்ளம் தேறி அடியை அடைந்தவர் அல்லர்
அடியை அடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று
உள்ளம் தேறி –
நெடுநாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்த கரண காலுஷ்யம் போய் ஹிருதயம் தெளிந்து
தெளிந்த அளவே அன்றியே
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
முடிவு இன்றிக்கே இருக்கிற பெரிய ஆனந்த சாகரத்திலே அவகாஹித்தேன்
திருவடி திரு வநந்த ஆழ்வான் இவர்கள் குமிழ் நீர் உண்கிற விஷயத்திலே இறே நான் அவகாஹிக்கப் பெற்றது –
ஆனால் உம்முடைய விரோதிகள் செய்தது என் என்ன அதுக்குக் கடவாரை கேளிகோள் என்கிறார்

பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய்
அசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக
பிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே –
பெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –
அவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனை
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் —
ஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்று பிரித்துக் கொண்டு போகாது ஒழிய வேணும்
உன்னை என்னுள் நீக்கல் –
என்னோடு இப்படிக் கலந்த உன்னை -உன்னுடைய கல்வியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்
தம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்
தன் உகப்பு அவனை எதிரிட்ட படி
எந்தாய்
விரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது –

———————————————————————————

அவதாரிகை –

முதலிலே உன்னை அறியாது இருக்க -என்னை உன்னையும் உன் போக்யதையும் அறிவித்து
உன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ இனி என்னை விட்டுப் போகாது ஒழிய வேணும் -என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –
ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தை காட்டி என்னை செஷத்வத்திலே நிறுத்தினவனே
இலங்கை செற்றாய் –
பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கினாப் போலே என்னுடைய சேஷத்வ விரோதியைப் போக்கினவனே
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு வேந்திக் கொடுத்து கார்யம் செய்யும் படி –
பரந்த அடியை உடைத்தான மராமரங்கள் ஏழும் மாறுபாடுருவும் படியாக
பண்டே தொளையுள்ளது ஒன்றிலே ஓட்டினால் போலே அம்பைக் கோத்த வில் வலியை உடையவனே
கொந்தார் தண் அம துழாயினாய்
வைத்த வளையத்தோடு நின்றாயிற்று மராமரம் எய்தது
அவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றால் வளையம் வைக்கிலும் திருத் துழாய் அல்லது தோற்றாது இவருக்கு
கொந்தார் -தழைத்து இருக்கை
அமுதே
மராமரம் எய்கிற போது இலக்கு குறித்து நின்ற நிலை இவருக்கு போக்யமாய் இருக்கிறபடி
-உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இனி போவேன் என்றால் போகப் போமோ -போகிலும் கூடப் போம் இத்தனை
மைந்தா –
என்னோடு கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவனத்தை உடையவனே
வானேறே
தன் போக்யதையை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து -அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமா போலே யாயிற்று
இவரை அனுபவிப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி
இனி எங்குப் போகின்றதே-
உன்னால் அல்லது சொல்லாத படியான என்னை விட்டு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண வல்லார் பக்கல் போகவோ —
நித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது
இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு உண்டான அதி சங்கையை பரிஹரியா நிற்க நீ என்னை விட்டுப் போகாதே கொள்
என்கிற இதுக்கு கருத்து என் -என்னில்
விலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —

1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரச்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7-உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ

—————————————————————————————

அவதாரிகை –

நாம் போகாது ஒழிகிறோம் -நீர் நம்மை விடாது ஒழிய வேணுமே -என்ன -நீ பண்ணின உபகாரங்களைக் கண்டு வைத்து
விட சம்பாவனை உண்டோ என்கிறார் -கால த்ரயத்தாலும் சர்வ வித பந்துவுமான உன்னை விட சம்பாவனை இல்லை என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
கால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து ச பித்ரா ச பரித்யக்த -என்று
அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் ஹிதமும் பார்க்கும்படி சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய்
உபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான் கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே
விதித என்கிறபடியே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாம்படி பரம்பி இருப்பதாய் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை
உடையையாய்-தரை லோக்யத்துக்கு நிர்வாஹகனானவனே
பரமா தண் வேங்கட மேகின்றாய்
குணங்களுக்கும் ரஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்கிருமவனே –
இப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்று அந்வயம்-
தண் துழாய் விரை நாறு கண்ணியனே —
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற
அதி சங்கையும் தீர்த்து தோளில் இட்ட மாலையும் பரிமளிதமாய் பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் தானுமாய் நின்றபடி

———————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் ஆரேனும் ஆகவுமாம் -அவர்களுக்கு குல சரண கோத்ராதிகள்
அப்ரயோஜகம் -இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்கிறார் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

கணனித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்
இப்போது யாயிற்று வளையம் செவ்வி பெற்றதும் -முடி நல தரித்ததும் -திருக் கண்கள் விகசிதம் ஆயிற்றும்
புகழ் நண்ணித்
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ குணத்திலே அவகாஹித்து
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஓன்று திரு நாமம்
ஓன்று சத்ரு வர்க்கத்துக்கு ம்ருத்யுவாய் உள்ளவர் -என்கிறது
சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி -ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ அதிசயத்தை அனுசந்தித்து -அவற்றில் ஒன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்து
இசையோடும் பண்ணில் பாட வல்லார்
இதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள் –
பண்ணாகிறது -கானம்
இசையாகிறது -குருத்வ லகுத்வாதிகள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை
அவர் கேசவன் தமரே –
அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்
குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்
விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் –

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் -அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் -நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: