திருவாய்மொழி – -2-4– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வகீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
முன் அஞ்சிறைய மடனாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவ அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே -ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-ஸ்திதி கமன சயநாதிகளிலே
ஒரு நியதி இன்றியிலே அரதியாய் நோவு பட -இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்
-ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி -ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர் உம்மை ஆசைப்பட்ட இவள்
நோவு படப் பார்த்து இருப்பதே -என்று எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்
காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் –காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் -செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் –செழு மா மணிகள் சேரும் -5-8-9-
அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -அஞ்சிறைய மடநாரையிலே
நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -வாயும் திரைகளில்
இதில் -அவன் தனக்கும் பிராண பூதரான நித்ய ஸூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே
அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் -எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது -அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது
கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன -ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும்
கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே-கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-
குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே
இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து
பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

—————————————-

அவதாரிகை –

முதல் பாட்டில் ஆபத்தே செப்பேடாக -ஆஸ்ரிதன் பிரதிஜ்ஞா சமகாலத்திலேயே வந்து உதவும் ஸ்வபாவனானவனை
சொல்லிக் கூப்பிடா நின்றால் என்கிறாள்-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடி –
ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று
ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளை பிரிந்து துடிக்கிற துடிப்பை -ந்ருத் யந்தீமிவ மாதரம் –அயோத்யா -40-25-என்றான் இறே
வடிவு அழகியார் வியாபாரங்கள் எல்லாம் இனிதாய் இருக்கும் இறே -பிரிந்து அழகு அழிந்து இருக்கிற சமயத்திலே இறே -சுபாம் -சுந்தர -29-1–என்றது –
முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –
முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணா திக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே -ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்
முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி -தாளம் கொண்டு அறியும் அத்தனை –
யகம் கரைந்து
சஞ்சாரம் செல்லா நிற்கச் செய்தே சஞ்சாரம் அடி அற்று இருக்கும் –
இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானால் போலே அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்கை இருக்கிறபடி
மனஸ் தத்வம் நீராய் உருகிப் போயிற்று என்கிறாள்
இசை பாடிப்பாடி –
மநோ பூர்வோ வாக் உத்தர -என்கிற க்ரம நியமம் இல்லை
ஆற்றாமையால் கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் தலைக் கட்டுகிறது அத்தனை
பண்ணை வென்ற இன் சொல் மங்கை இறே இவள் தான்
மதுரா மதுரா லாபா
ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனால் போலே -ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் விழா நின்றது
முதல் கூப்பீடு போல் அன்றிக்கே இரண்டாம் கூப்பீடு தளர்ந்து இருக்கும் இறே
கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
மல்கி -மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது ஆர்குடி வேர் அற -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே -பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் -இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது
இத்தால் என்ன பயன் -என்றவாறே –இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –
பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வ தந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –
பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் -கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்
எங்கும் நாடி நாடி –
தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து -கண்ணன் என் ஒக்கலையானே-என்று
அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே
நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம் இல்லாதபடி இருக்கையாலே வாடும்
மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
வாடிவாடும்
கொம்பை இழந்த தளிர் போலே வாடும்
முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்
வாடும்
தர்மிலோபம் பிறந்தது இல்லை -வரும் என்னும் ஆசையாலே முடியப் பெறுகிறிலள்
இவ்வாணுதலே
ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே
இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ
தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

———————————————————————————

அவதாரிகை –

நடுவே வாடும் இத்தனையோ வேண்டுவது -விரோதி கிடக்கச் செய்தே என்ன -பாணனுடைய பாஹூ வனத்திலும்
பிரபலமோ இவள் விரோதி -என்கிறாள் –

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

வாணுதல்
இவ்வவயவ சோபை போக ஹேதுவாகை யன்றிக்கே -நைகைக்கு உறுப்பாவதே-பெற்ற எனக்கு ஆகர்ஷண ஹேதுவான இது –
கைப்பிடித்த உமக்கு அநாதர ஹேதுவாவதே-
இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம் – பத்ரம் -தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா –
இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
பிரபு -ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது
-பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்
உம்மைக்
இவள் படி யன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது -உம்மை நீர் அறியாமை அல்லையே-நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ
வாணுதல் இம்மடவரல் உம்மை –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்னும்படி காணும் இருக்கிறது
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
விஷய அனுபவ ரூபமாய் இறே ஆசையும் இருப்பது
காணும் ஆசையுள்
உம்மோடு அணைய ஆசைப் பட்டாளோ-காட்சியிலும் அருமைப் படுத்துவீரோ
நைகின்றாள்
இவளை தரிப்பிக்க வேண்டா –
அடியில் நிலையிலே நிறுத்த அமையும்
உம்மை காணும் ஆசையுள் நைகின்றாள்
கடலிலே அழுந்தா நின்றாள்
ஆசை என்னும் கடல் இறே
வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்
நையும் இதுவேயோ வேண்டுவது பிரதிபந்தகம் கிடக்க -என்றே நீர் சொல்லுவது
பாணனுடைய பஹூ வனத்தில் பரப்புண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்
உஷா அநிருத்த கடகர் அன்றோ நீர்
பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது -உம்மோடு கலந்த அபலைக்கு உதவலாகாதோ
உம்மைக் காண
கருமுகை மாலை தேடுவார் சூட வி றே தேடுவது -சும்மாட்டைக் கொள்ள வல்ல இறே
இவ்வஸ்துவை ஆசைப்படுவார் படுவது காட்சிக்காக யாயிற்று
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண -நான்முகன் -39
காரார் திருமேனி காணும் அளவும் -சிறிய திருமடல்
இவர் தாமும் -கண்களால் காண வரும் கொல் -3-8-8-என்று
நீர் இரக்கமிலீரே–
உம்மை இவள் காண்கைக்கு ஈடாக நீர் இரக்கத்தை உடையீர் ஆகிறிலீர்
நைவ தம்சான் என்கிற படியே நீர் நோவு படுக்கை தவிர்ந்தால் சாமான்யமான இரக்கமும் போக வேணுமோ
இவள் நைவு பேற்றுக்கு உபாயம் அல்ல -அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று காணும் திருத் தாயார் இருக்கிறது
இவள் நைவு அவன் இரக்கத்துக்கு பரிகரம்-அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று இருக்கிறாள்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் – -என்று தானே காட்டக் காணும் இத்தனை இ றே –

————————————————————————————-

அவதாரிகை –

இன்று இச் செயலை செய்யக் கடவதாக நினைத்த நீர் அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-
உண்ணாது -ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி சேவதே -சுந்தர -36-42-
உறங்காது -அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-அச்செயலை என்றிய செய்தீர் என்கிறாள் –

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் -நெஞ்சில் நெகிழ்ச்சியாதல்–ஈடுபாடாதல் –ஈரிப்பாதல் –
இரங்கின நெஞ்சை உடைய இவள் -எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்
அரக்கும் மெழுகும் -என்கிற இரண்டையும் -நெஞ்சுக்கு ஒன்றும் இவள் தனக்கும் ஒன்றுமாக்கி நிர்வஹிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்
நெஞ்சம் இவள் தனக்கு கையடைப்பாகையாலே இவள் தனக்கே இரண்டையும் ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்
விஷ்ணு நா சத்ருசோ வீர்ய -என்கிறபடியே
எல்லாம் இவள் தன் படிக்கு திருஷ்டாந்தமாக வேண்டும்படி இறே இவள் தன் நிலை
அக்னிக்கு உள்ளே புகில் கரிந்து போம் –கடக்க விருக்கில் வலிக்கும் -அக்னி சகாசத்தில் உருகா நிற்கும் இறே –
முடிந்து பிழைக்கவும் பெறாதே -தரித்து இருக்கவும் பெறாதே நோவுபடும் படி பண்ணுவீரே-இவள் தசை இது –
இரக்கம் எழீர் –
நீரும் இவளைப் போலே உருக வேணும் என்று வளைக்கிறோமோ-
நொந்தார் பக்கல் பண்ணும் கிருபையும் பண்ணி கிறிலீர்
இரக்க மனத்தை உடையாளாக நின்றாள் இவள்
நீர் இரக்கம் எழு கிறிலீர்
நீர் இரங்கா விடில் உம்மைப் போலே இருப்பதொரு நெஞ்சை இவளுக்கு கொடுத்தால் ஆகாதோ
இதற்கு என் செய்கேன்
உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் உபாயாந்தர சாத்தியமோ இப்பேறு
என் செய்கேன்
உம்மை இரங்கப் பண்ணவோ -இவளை இரங்காமல் பண்ணவோ
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –
உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் -இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேணுமோ
ஒரு பிரணயி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ -என்று ஈடுபடா நின்றாள்
புழுக் குறித்து எழுத்தானால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு -அது அன்யார்த்தம் -என்று இராதே நோவு படா நின்றாள்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இரக்க மனத்தோடு- இவள் -எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்று அந்வயம்

————————————————————————————

அவதாரிகை –

அரக்கன் இலங்கை செற்றீர் என்கிற இது நியத ஸ்வபாவம் அன்று காண்-காதா சித்கம் காண் -என்றாள் திருத் தாயார் –
அது பொறுக்க மாட்டாமை அது தன்னையே சொல்கிறாள்-

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இலங்கை செற்றவனே யென்னும்
எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே -என்னா நின்றாள் –
முன்பு தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாது ஒழிந்தால் போலே கூப்பிடா நின்றாள்
கடல் அடைத்தல்-மலை எடுத்தல் -அம்பு ஏற்றல் செய்ய வேணுமோ –என் பக்கல் வரும் போது என்ன பிரதிபந்தகம் உண்டு –
திருத் தாயார் இவள் விடுகைக்குச் சொன்னது தானே அவளுக்கு பற்றுகைக்கு உடலாய் விட்டது –

பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்
அதுக்கு மேலே -விடாய் இருந்த விடத்தே சாய்கரம் போலே உயர வைத்துக் கொண்டு வந்து காட்டும் பரிகரம் உடையவனே -என்னா நின்றாள்
மிடுக்கை உடைய புள்ளை த்வஜமாக உடையவன் என்னுதல்
அன்றியே -புள்ளால் வஹிக்கப் பட்டவன் -என்னுதல்
கொண்டு வருகைக்கு பரிகரம் உண்டாய் இருக்கச் செய்தே வரக் காணாமையாலே -மனஸ் தத்வம் வேர் பறியும் படி நெடு மூச்சு எறியா நிற்கும்
தஹந்தீவமிவ நிச்வாசைர் வ்ருஷான் பல்லவ தாரிண -என்னுமா போலே
கண்ணீர் மிகக்
நெடு மூச்சாய்ப் புறப்பட்டு -புறப்படாதது கண்ணீராய் புறப்படா நின்றது
கலங்கிக் கை தொழும் –
தெளிந்து இருந்து தொழுமது இல்லை இறே பிரணயிநி
நின்றிவளே —
அவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள் –

———————————————————————————

அவதாரிகை –

அவள் இப்படி கிலேசிக்கிற இடத்திலும் வரக் காணாமையாலே நிர்த்தயர் என்கிறார் –

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து -ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –
நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கிஇவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –

தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ச்ரு பிரவஹிக்கக் கடவ -கண் -சோக ச்ரு பிரவஹியா நின்றது
இக் கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக் கடவ கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்
தன்னுடையவாய்-குவளைப் பூ போலே இருக்கிற அழகிய கண்களிலே கொண்டாள்
நம்மைச் செய்யச் சொல்கிறது என் –
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் –
விரஹ ஜ்வரத்தாலே வாடின இவள் மாறவில் மாலையை வாங்கி உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கிறிலீர்
அவ்வண்டுகளுக்கு என்ன கண்ண நீரைக் கண்டு கொடுக்கிறீர்
திவளுகை -படுகை-அசைகை -ஒளி விடுகை – இவை இத்தனையும் சொல்லக் கடவது
என
இவை என் என்பின
தவள வண்ணர் தகவுகளே —
ஸூ த்த ஸ்வ பாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயிற்றன -என்று எம்பார் அருளிச் செய்யும் படி
அன்றிக்கே -பட்டர் -உம்மைப் போல் நாலு சிஷ்டர்கள் அமையும் இ றே அபலைகள் குடி கெட -என்றார் –

————————————————————————————————

அவதாரிகை –

இவள் அவசாதத்தைக் கண்ட திருத்தாயார் -நிர்த்தயர் -என்றாள் -இவள் அது பொறாதே-தகவுடையவனே என்று
அத்தை நிரூபகமாகச் சொல்லா நின்றாள் -என்கிறார் –

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

தகவுடையவனே யென்னும்
கெடுவாய் ஆகாரத்தில் தகவு மறுக்குமோ -நம் குற்றம் காண்-என்னா நின்றாள்
தகவில்லை என்றவள் வாயைப் புதைத்தால் போலே வந்து தோற்றுவதே-என்று
அவன் வந்தால் பண்ணும் விருப்பத்தைப் பண்ணா நிற்கும் -அவன் வந்தால் செய்யும் உபகாரங்கள் -பூசும் சாந்தும் புனையும் கண்ணியும்-போல்வன –
பின்னும் மிக விரும்பும் –
பாவனா பிரகர்ஷம் இருக்கும் படி -உரு வெளிப்பாட்டாலே வந்தானாக எண்ணி உபசரிப்புகளை எண்ணுகிறாள்
பிரான் என்னும்
பெற்ற தாய்க்கு அவகாசம் வையாதே வந்து தோற்றுவதே -இது என்ன உபகாரம் தான் என்னும்
என தகவுயிர்க்கு அமுதே என்னும்
என்னுடைய பிரத்யகாத்மாவாவுக்கு போக்யனாவனே -என்னும்
நித்ய வஸ்து அழியாமல் நோக்கும் அமிர்தமாயிற்று இது
போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்
உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே-
உள் எனபது -மேல்
அமூர்த்தமானது மூர்த்தி பாவித்து உருகி த்ரவீ பூதமாய் மங்கிப் போகா நின்றது
உள்ளம் மிக உருகி நின்று தகவுடையவனே யென்னும் -பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் -என தகவுயிர்க்கு அமுதே என்னும் –
இது நாம் பேச்சுக் கொண்டு அறிந்த அம்சம் உள்ளம்
உள்ளோடுகிறது -உள்ளுளே–வாசா மகோசரம்
உள்ளுளே-உருகி நின்று -என்பாரும் உண்டு –

————————————————————————————–

அவதாரிகை –

தன் நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாதபடி அடக்கமுடைய இவள் வாய் விட்டுக் கூப்பிடும்படி இவளை வஞ்சித்தான் -என்கிறாள்-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து
ஆந்தரமான மனஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாய் வருகிறபடி -அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய
அசோஷ்ய ஏவ ச –ஸ்ரீ கீதை -2-24-என்று அசோஷ்யம் என்று சொல்லுகிற இதுவும் போயிற்று -என்கிறாள் –
பாவபந்தம் அடியாக வருகிற நோய் ஆகையாலே அகவாயே பிடித்து வெந்து கொண்டு வருமாயிற்று
விடாயர் கற்பூர நிகரம் வாயிலே இடுமா போலே
என் வள்ளலே கண்ணனே என்னும் –
இவ்வளவான ஆர்த்திகளிலே வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னா நின்றாள்
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்
அதுக்கு மேலே -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்று என் விடாய்க்கு உதவ திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளிற்றே -என்னும்
இக்கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே -அருகாமையில் -சாய்ந்தால் போலே இருக்கிறது காணும் –
என் கள்வி தான் பட்ட வஞ்சனையே —
தன் ஹிருதயத்தில் ஓடுகிறது பிறர் அறியாதபடி மறைத்துப் பரிமாறக் கடவ இவள் படும் பாடே இது
தான் பட்ட
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிற தான் அவிக்ருதனாய் -இவள் விக்ருதையாவதே
வஞ்சனை –
அளவு படைக்கு பெரும் படை தோற்பது வஞ்சனையாலே இறே
பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று எடுத்தும் செய்த செயல் போலே இவளை வஞ்சித்தீர் இத்தனை –

———————————————————————-

அவதாரிகை –

உம்மை அனுபவித்து -ஸூகிக்க வைத்தீர் அல்லீர் -கம்சனைப் போலே முடித்து விட்டீர் அல்லீர்
உம்மை ரஷகர் என்று இருந்த இவள் படும் பாடே இது என்கிறாள் –

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

வஞ்சனே என்னும் –
தாயார் வஞ்சித்தான் -என்னப் பொறுத்து இலள்-நான் அல்லேன் -என்றாலும் தவிர ஒண்ணாத படி வஞ்சித்து உன் திருவடிகளிலே
சேர்த்துக் கொண்ட உபகாரகனே -என்னா நின்றாள்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என் உயிரில் கலந்து இயலுமவன் –1-7-7-அன்றோ
இப்படி என்னையும் அறியாதே வஞ்சித்து உன் திருவடிகளில் சேர்த்த உபகாரகனே என்னா நின்றாள்
கை தொழும் –
வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுத் தொழும்
தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்
தாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிஹாரம் பண்ணினவாறே ஆற்றாமை போகாதே -தன் நெஞ்சம் வேவ நெடு மூச்சு எறியா நிற்கும்
ததோ மலின சம்வீதாம் ராஷசீ பிஸ் சமாவ்ருதாம் உபாவாசக்ருசாம் தீநாம் நிச்வசந்தீம் புன புன —
உள்ளம் மலங்க -2-7-4–என்று வெட்டி விழுந்தபடி சொல்லிற்று
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7-என்கிற இடத்திலே உலர்ந்த படி சொல்லிற்று
இங்கே தன் நெஞ்சம் வேவ -என்கையாலே -நெருப்புக் கொளுத்தினால் போலே சொல்லுகிறது –

விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர்
மிடுக்கனான கம்சனை அழியச் செய்தீர்
உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற-உமக்கு இரண்டு இடத்திலும் கார்யம் ஒன்றேயோ
உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –
தஞ்சம் அல்லாரை தஞ்சம் என்று இருந்தால் சொல்லுமது போலே சொல்லுவதே
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -3-6-9-என்னும் சர்வ ரஷகனை காதுகரை சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே-
மகள் தசையைப் பார்த்து இவள் பட்டனவே
ஒரு மகா பாரதத்துக்கு போரும் போலே -சம்சாரிகளைப்போலே உண்டு உடுத்து திரிய வைத்தீர் அல்லீர்
எங்களைப் போலே தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்
கம்சனைப் போலே முடித்தீர் அல்லீர்
என் வழி வாராதே -உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் –

—————————————————————————————–

அவதாரிகை –

இவள் பட்டன -என்கைக்கு என் பட்டாள்-என்ன படுவது எல்லாம் பட்டாளாகிலில் இவள் இனி என் படுவாள் -என்கிறாள் –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

பட்டபோது எழுபோது அறியாள்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ என்னில்
விரை மட்டலர் தண் துழாய் என்னும்
விரை -இது ஒரு பரிமளமே
மட்டு -இது ஒரு தேனே
அலர் -இது ஒரு பூவே
தண் இது இரு குளிர்த்தியே
என்று திருத் துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்
உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள் -என்கிறாள்
என்றவாறே -நம்மை ஆசைப் பட்டு இப்படிப் படப் பெற்றோமே -என்று அலாப்ய லாபத்தாலே கையிலே திரு வாலியை விதிர்த்தான்
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்
சுடரையும்
வட்டமான வாயையும்
கூர்மையையும் உடைய திரு வாழியைக் கையிலே உடையீர்
இப்போது சுடர் வட்ட வாய் நுதி -என்கிற விசேஷணம்-என் என்னில்
பெண் பிள்ளையைக் காட்டில் திருத் தாயார் கையும் திரு வாழியுமான அழகிலே ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற உமக்கு அழிகைக்கு பரிகாரம் ஒன்றேயோ
ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே-1-7-1- என்று இறே இவர் தம்முடைய வார்த்தையும்
கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இறே
நும் திட்டமென் கொல்
ராவண ஹிரண்யாதிகளைப் போலே முடிக்க நினைக்கிறீரோ
நித்ய ஸூரிகளைப் போலே கையும் திருவாழியுமான அழகை அனுபவிக்கிறீரோ
தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போலே உண்டு உடுத்து திரிய வைக்கிறீரோ
இவள் பேற்றில் நீர் நினைத்து இருக்கிறது என்
இவ்வேழைக்கே–
அத்யந்த சபலையான இவள் விஷயத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————————————————————————–

அவதாரிகை –

இவள் நோக்கும் ஒன்றும் ஒழிய அல்லாதது எல்லாம் ஒழித்தான் -இந் நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர் -என்கிறாள் –

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

ஏழை-
கிடையாது என்ற பிரமாண பிரசித்த மானதிலே-கிடைக்குமதில் பண்ணும் சாபலத்தை பண்ணுகை
பேதை
கிடையாது என்று அறிந்து மீளும் பருவம் அல்ல
நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்
இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ஸ்ருவுக்குத் தகுதியாய்
கேழில் -கேழ் என்று ஒப்பாய் -இல் என்று இல்லாமையாய்-ஒப்பின்றிக்கே இருப்பதாய்
ஒண் கண் –
கண்ண நீர் இல்லாவிடிலும் கண்டார்க்கு ஆலத்தி வழிக்க வேண்டும் படியான கண் -சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று
தாமரையில் முத்துப் பட்டால் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை காட்டில் எறிந்த நிலா வாக்குவதே
இவ்விருப்புக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இழப்பதே
பொன்னும் முத்தும் விளையும் படி இறே கிருஷி பண்ணிற்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே அவன் இழவுக்கு யாயிற்று இவள் கரைகிறது

கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர்
நடுவே கண்ணீர் விழ விடும் அத்தனையோ விரோதி கனத்து இருக்க -என்ன -ராவணனிலும் வழிதோ இவளுடைய விரோதி வர்க்கம்
உதீர்ணச்ய ராவணச்ய -என்கிறபடியே -தாயும் தமப்பனும் சேர இருக்கப் பெறாத ஐஸ்வர்யம் இறே
கிளர்ந்த ஐஸ்வர்யம் ஆனது வேம்படி இலங்கையை நிரசித்தீர்
ஒன்றை அழிக்க நினைத்தால் முதல் கிடவாமே அழிக்குமவராய் நின்றீர்
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் கிடக்கும் படி கார்யம் பார்க்க வேணும்
மாழை -என்று இளமை
நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவள் தானே முடிந்து போகிறாள்
நாங்கள் தானே இழக்கிறோம்
ஜீவிக்க இருக்கிற நீர் வேணுமாகில்-உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும்
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -8-10-1-

——————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் இவர் பிரார்த்த படியே நித்ய ஸூ ரிகள் திரளிலே போய்ப் புக்கு
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சூட்டு நன் மாலைப் படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள் -என்கிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

வாட்டமில் புகழ் வாமனனை –
இவ்வளவில் வந்து முகம் காட்டிற்றிலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வந்தது இறே
வாமனனை -தன் உடமை பெறுகைக்கு இரப்பாளனாமவனிறே
இசை கூட்டி
பரிமளத்தோடே பூ அலருமா போலே இசையோடு புணர்ப்புண்டாயிற்று
வண் சடகோபன் சொல்
உதாரதீர் முனி -என்னுமா போலே மானஸ அனுபவ மாதரம் அன்றிக்கே -வாசகமாக்கி நாட்டை வாழ்வித்த ஔதார்யம்
அமை பாட்டோராயிரத்து –
அமைவு -சமைவாய் -சப்தார்த்தங்கள் நிறைந்து இருக்கை
இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்களுக்கு -செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாம்
கைங்கர்யம் பண்ண வேணும் என்று ஆசைப்பட்டு -அதி பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் பிறந்தது
பித்ருதனம் புத்ரனுக்கு பிராப்தமானால் போலே இவ்வாற்றாமையால் வந்த கிலேசம் இது
கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாதே அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப்பட்ட படியே
அத்திரளிலே போயப்புக்கு அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

முதல் பாட்டில் ஆஸ்ரித ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவனாவான் –இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகிறிலன்-என்றாள்
இரண்டாம் பாட்டில் விரோதி உண்டே -என்று நினைவாக பாணனுடைய பஹூ வனத்திலும் வலிதோ இவள் விரோதி என்றாள்
மூன்றாம் பாட்டில் இப்படி செய்த நீர் முன்பு அச் செயலை என்றிய செய்தீர் என்றாள்
நாலாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள் -என்கிறாள்
ஐந்தாம் பாட்டில் அவ்வளவிலும் வாராமையாலே நிர்த்தயன் என்றாள் திருத் தாயார்
ஆறாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் -கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ -அது நம் குறை காண் -என்றாள்
ஏழாம் பாட்டில் அவன் குண ஹானி தன்னையே குணமாகக் கொள்ளும் படி இவளை வஞ்சித்தான் என்கிறாள்
எட்டாம் பாட்டில் உம்மை அபாஸ்ரயமாக பற்றின இவள் படும் பாடே இது என்றாள்
ஒன்பதாம் பாட்டில் இவள் பேற்றில் நீர் செய்து அருள நினைக்கிறது என் என்றாள்
பத்தாம் பாட்டில் -சேஷித்தது நோக்கு ஒன்றுமே யாயிற்று -இது ஒன்றையுமே நோக்கிக் கொள்ளீர் -என்றாள்
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: