திருவாய்மொழி – -2-3– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்ததைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
நடுவு ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான இத்தனை ஈஸ்வரத்வம்
தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்
அது தாம் அடியாக வந்ததாகில் இறே அளவு பட்டு இருப்பது -சர்வேஸ்வரன் அடியாக வந்ததாகையால் கனத்து இருக்கும் இறே
தாம் அனுபவித்த அனுபவத்துக்குள் எல்லா ரசங்களும் உண்டாய் அது தான் சமாப்யதிக வர்ஜிதமுமாய் இருந்தது
இப்படிப் பட்ட பேற்றுக்கு உசாத் துணை யாவார் யார் -என்று பார்த்த இடத்தில் சம்சாரத்தில் ஆள் இல்லாமையாலே
அவன் தன்னோடு ஒக்க பிராப்யருமாய் -அவனை நித்ய அனுபவம் பண்ணா நிர்பாருமாய் -பகவத் அனுபவத்துக்கு தேசிகருமாய்
இருக்கிற நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு -போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -3-11-பண்ணி அனுபவிக்கப் பெறுவது
எப்போதோ என்னும் அநவாப்தியோடே தலைக் கட்டுகிறார்
வாயும் திரையுகளியிலே ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் சேதனங்களையும் சேர்த்தார் அங்கு
இங்கு சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான -ஞானத்தை ஸ்வபாவமாகக் கொண்ட -நித்ய ஸூரிகளைத் தேடுகிறார் –

ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் –
பஹூன் ருதூன் -நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு -அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –

—————————————————–

அவதாரிகை –

ராஜ்யத்தை இழந்த ராஜபுத்ரனை ஒருவன் ராஜ்யத்தில் பிரவேசிப்பித்தால் -இவனாலே இப்பேறு பெற்றோம் -என்று
அவனைக் கொண்டாடுமா போலே கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாள் இழந்து கிடக்க
இந் நெஞ்சு இறே இத்தைத் தந்தது -என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே
ஊன் -என்று சரீரமாய் -வாழ்க்கையாவது -வர்த்திக்கையாய் -சரீரத்திலே வர்த்திக்கிற உயிர் -என்னுதல்
சரீரத்தைப் பற்றி அவ்வருகு ஓன்று அறியாதே வாழ்ந்து போன உயிர் -என்னுதல்
மாம்சளமான சரீரத்திலே இருந்து வைத்து வாழ்கிற உயிரே -பரம பதத்தைப் பெற்று அங்கே நாநாபவநத்தோடே அனுபவிக்கிற இடத்தையோ நீ உதவிற்று
மாம்சாஸ் ருக் பூய விண் மூத்ரஸ் நாயு மஜ்ஜாஸ்தி களான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது
இத்தால் -வாழுகையாவது-அனுபவிக்கையாய் -நெடு நாள் ப்ராக்ருத போகங்களைப் புஜித்து போந்த நீ அப்ராக்ருத போகத்திற்கு கை தர நிற்பதே -என்றபடி
மனசை உயிர் என்பான் என் என்னில் -ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம் நித்தியமாய் இருக்கச் செய்தே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்று பந்த மோஷங்களுக்கு ஹேது மனஸ்ஸூ என்கிற பிரதான்யத்தைப் பற்ற
உயிரே என்று ஆத்மாவை சம்போதிக்குமா போலே சம்போதிக்கிறார்
நல்லை போ
நல்லை வா -என்றபடி நல்லை நல்லை -என்று கொண்டாடுகிறார்
போ என்று சம்போதனம் ஆகவு மாம் -நல்லை போ என்று முழுச் சொல்லாய் நல்லை நல்லை என்னுதல் –
நடுவே என்னைக் கொண்டாடுகிறது என் -என்ன
உன்னைப் பெற்று
பந்த ஹேதுவாய்ப் போந்த நீ -மோஷ ஹேதுவாகப் பெற்று -ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்கவும் நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ நெடும் காலம் இழந்தது
இன்று நீ ஆபிமுக்யம் பண்ணி அன்றோ இப் பேறு பெற்றது –நீர் பெற்ற பேறு ஏது என்ன -சொல்லுகிறார் மேல்

வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான் தானும் யானும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து அவதரித்து -மதுவாகிற அஸூரனைப் போக்கினால் போலே
என்னோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கி -என்னைத் தோற்பித்து -தன் பக்கலிலே கைங்கர்யத்திலே மூட்டின தானும்
-கைங்கர்யத்துக்கு விஷய பூதனான நானும்
வாயும் திரைகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவுபடுகிறனவாக நினைத்து விடாய்த்த நானும் –
நெடுநாள் என்னைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும் -கிருஷி பண்ணின தானும் -கிருஷிக்கு விஷய பூதனான நானும்
எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
ஆயிரத்தில் ஒன்றும் -கடலில் குளப்படியும் போலே தானும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும் படி சம்ச்லேஷித்தோம்
ஒழிந்தோம்
நித்ய விபூதியிலே புக்காலும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமத்தனை -அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை
இதினுடைய அவிச்சேதமே அங்கு உள்ளது
இப்படி இங்கே கலந்து இருக்க இனிப் பரமபதத்து ஏறத் தேடுகிறது உசாத் துணைக்காகவும் இது தான் விச்சேதி யாமைக்கும் யாயிற்று
என் போலே கலந்தது என்றால்

தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
-ஏக ஜாதீய த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே என்று
-அதாவது -தேனும் தேனும் கலந்தால் போலவும் பாலும் பாலும் கலந்தால் போலவும்
நெய்யும் நெய்யும் கலந்தால் போலவும் கன்னலும் கன்னலும் கலந்தால் போலவும் அமுதும் அமுதும் கலந்தால் போலவும் -என்று
அங்கன் அன்றியே
எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவற்றை ரசவத பதார்த்தங்களுக்கு எல்லாம் உப லஷணமாக்கி-
தானும் நானுமான கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி சம்ச்லேஷித்தோம் என்கிறார் என்று –
சர்வ கந்தஸ் சர்வ ரச-என்கிற வஸ்துவோடே இறே கலக்கிறது
ஜ்ஞானாநந்த வஸ்துக்களுடைய சேர்த்தியிலே சர்வ ரசங்களும் பிறக்கும் படியாயிற்று கலந்தது
இவை எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லும் போது வருவது ஒரு பரிமாணாதிக்யம் உண்டு இறே -அது தானே இறே த்ரவ்ய சத்பாவத்தில் பிரமாணம் –

——————————————————————————————

அவதாரிகை –

இப்பாட்டு பிரஸ்துதமான அளவிலே எம்பார் கோஷ்டியில் -இவ்வாத்மாவுக்கு பிரதம குரு ஆர் -என்று பிறந்ததாய்-
இருந்த முதலிகளில் சிலர் ஆசார்யன் அன்றோ என்றார்கள் –
-சிலர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்கப் போரு-என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவன் பிரதம குரு என்றார்கள் –
அங்கன் அன்று காண் -அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாத படி -இசைவித்து என்னை -5-8-0–என்கிறபடியே
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு -என்று அருளிச் செய்தார் அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேர விட்டது
நெஞ்சு இறே என்று இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடப் புக்கவாறே நீர் வழி போவாரைக் கொண்டாடுகிறது என் அடி அறியாதே -என்ன
-ஆராய்ந்த வாறே -அதுக்கும் அடி அவனே இருந்தது -நடுவே நெஞ்சைக் கொண்டாடினோம் அத்தனை யாகாதே என்று அத்தை விட்டு
என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாடீர் என்ன -தம் திரு உள்ளத்தை விட்டு சர்வேஸ்வரனை கொண்டாடுகிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தார் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
என்னை இப்படி விஷயீ கரித்த நீ தான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ
ஸ்ரீ யபதிக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாத படி இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே –என்கிறபடியே சமாதிக தரித்ரனாய் இருக்கும்
இது என்ன ஆச்சர்யம் தான் –
ஒத்தார் எப் பொருட்கும்
நீ யாராய் -என் பட்டாய் –
சமாதிக தரித்ரனாய் இருக்கிற நீயே இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தாய்
எப்பொருட்கும் ஒத்தாய்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே விஷ்ணு நாமாவாயும் இந்திர அனுஜனாயும்-ராம கிருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணியும்
திர்யக்குகளோடே ஒக்க மஹா வராஹமாயும் -ஸ்தாவரஙகளோடு ஒக்க குப்ஜாம்ரமாயும் நிற்கும் நிலை
குப்ஜாம்ரமாய் நின்றதுக்கு கருத்து -செவ்வே நின்றாள் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லாருக்கும் ஒக்க ஸூலபன் ஆகைக்கு
இப்படி இருக்கிறது என் என்னில் -மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது -என்று அகலுவார்கள்
தாழ விட்டு வரில் காற்கடைக் கொள்ளுவார்கள் -ஆகையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்க வேணும்
ப்ரஹ்மேச மத்ய கணநா கண நார்க்க பங்க்தா விந்த்ரா நுஜத்வ மதிதேஸ்தநய த்வயோகாத் இஷ்வாகு வம்ச யதுவம்ச ஜ நிச்ச ஹந்த
ச்லாக்யான் யமூன்யநுபமஸ்ய பரஸ்ய தாம்ன –அதி மானுஷ ஸ்தவம் -15-என்னக் கடவது இறே
இப்படி அவதரித்து செய்தது என் என்னில்
உயிராய்
இச் சேதனன் தான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கடவனாய் இருக்கை -தாரகனாயும் -என்னவுமாம்
என்னைப் பெற்ற அத்தாயாய்
தான் உண்டாகில் இறே தான் தனக்கு ஹிதம் பார்ப்பது –
வளர்த்துக் கொண்ட தாய் அன்றிக்கே -பெற வேணும் என்று நோன்பு நோற்று தன் சரீரத்தை ஒறுத்துப் பெற்று
-இவன் பிரியத்தையே நடத்தக் கடவ தாயாய்
தந்தையாய்த் –
இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்தது பெற்ற தாயும் இட்டுவைக்கைக்கு ஒரு பை மாத்ரமாம் படி
இவனுக்கு உத்பாதனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாய்
அவ்வளவு அன்றிக்கே
அறியாதன யறிவித்து
சரீரமேவ மாதாபிதரௌ ஜனயத -என்னும் அளவன்றிக்கே -ஜ்ஞான விகாசத்தைப் பண்ணித் தரும் ஆசார்யனுமாய்
ச ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடியே -ஏதத் வ்ரதம் மம-மாமேகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே
அத்தா
மஹா உபகாரகன் ஆனவனே -இவ் உபகாரங்களை உடையவன் ஆகையாலே செய்தான் என்கிறார்
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிறார்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீயே மற்றையார் யாவாரும் நீயே –பெரிய திருவந்தாதி -5-என்றார் இறே
நீ செய்தன
ஓன்று இரண்டாகில் இறே இன்னது என்னாலாவது -ஆகையாலே நீ செய்தன -என்னும் இத்தனை
ஸ்வாமியான நீ சேஷபூதனான என் பக்கல் பண்ணின உபகாரங்கள்
அடியேன் அறியேனே –
உபகரித்த நீ அறியில் அறியும் அத்தனை
என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ அனுபவித்துக் குமிழி நீருண்டு போம் இத்தனை ஒழிய -என்கிறார்

——————————————————————————————-

அவதாரிகை –

ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை யாண்டான் பணிக்கும் படி
அறிவு நடையாடாத தசையிலே -சம்பந்த ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -பிறந்த ஜ்ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பத்தோடு
பின்னையும் வைத்தாய் என்கிற இழவாலே சொல்லுகிறார் -என்றாம்
இத்தை எம்பெருமானார் கேட்டருளி -முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் ப்ரீதியோடு நடவா நிற்க நடுவே அப்ரீதீ
தோற்றச் சொல்லுமது சேராது -ஆனபின்பு இங்கனே யாமித்தனை –
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே
அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால்-என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்தார்
அத்தா நீ செய்தன என்று நாம் பண்ணின உபகாரங்களைச் சொல்லா நின்றீர் அவற்றிலே நீர் மதித்து இருப்பதொரு
உபகாரத்தைச் சொல்லிக் காணீர் என்ன அத்தைச் சொல்லுகிறார் – கடந்த பாசுரத்தில் ஞான உபகாரத்தைச் சொல்லி
-இதில் பக்தி உபகாரத்தை உரைக்கிறார்

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறியாக் காலத்துள்ளே
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிகத -என்கிறபடியே அறிவு நடையாடாத பால்யத்திலே
அடிமைக் கண் அன்பு செய்வித்து
அடிமைக் கண் -அடிமையிலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அச்ப்ருஷ்டசம்சார கந்தரான நித்ய ஸூரிகளுடைய
பரிமாற்றத்தில் அன்றோ என்னை அன்வயிப்பித்தது
அன்பு செய்வித்து –
வரில் பொகடேன் -கெடல் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே -குருஷ்வ -என்னும்படி பெறா விடில் முடியும் படி யன்றோ பண்ணிற்று
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
பிள்ளாய் ஊமத் தங்காய் தின்று பிரமித்தாரைப் போலே அசித் சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற என்னைக் கிடீர் இப்படிப் பண்ணிற்று
அறிவு கேட்டைப் பண்ணக் கடவதான பிரகிருதி சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற அடியேனை -இது எங்கு சிறைப் பட்டாலும்
நல்லது நம் வஸ்து அன்றோ -என்று
வைத்தாயால்
இத் தண்ணீர் பந்தலை வைத்தாயால் -என்கிறார்
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்தாயால் -இதுக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
நெஞ்சு அறியாதபடி கார்யம் செய்வாரைப் போலே திரு மார்வில் இருக்கிற நாச்சியாரும் கூட அறியாமே வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
கொள்வன் நான் மாவலி -என்றால் போலே -நிலம் மாவலி மூவடி என்று அனந்வித பாஷணங்களைப் பண்ணி –
பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் இறே அந்வித பாஷணம் பண்ணுவது
அறியாமை வஞ்சித்தாய் –
சுக்ராதிகள் -இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -உன் சர்வஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் -என்றால்
அவர்கள் பாசுரம் செவிப் படாத படி தன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தான் யாயிற்று
எங்கு சிறைப் பட்டாலும் –தாமதாக கைக் கொள்வோம் என்று வெறுப்புடன் ஆளவந்தார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்து
தண்ணீர் பந்தல் -கைங்கர்யத்தில் அன்பை வளர்த்து அருளினாய் -என்று எம்பெருமானார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்கிறார் –
அப்படியே எனதாவியுள் கலந்து –
நான் இருக்கிற இடத்தளவும் வந்து -என்னோடு கலந்து -அத்யந்தம் அந்ய பரனான என் ஆத்மாவிலே புகுந்து உன் குண சேஷ்டிதங்களாலே வசீகரித்து
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தால் போல எனது ஆவியுள் கலந்து
அறியா மா மாயத்து அடியேனை அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் -என்று அந்வயம் –

—————————————————————————————–

அவதாரிகை –

வைத்தாயால் என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இங்கனே கிடந்து நெஞ்சாறல் படா நில்லாதே
பிரத்யுபகாரமாக உம்மதாய் இருப்பதொரு வஸ்துவைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ -என்ன
அப்படியே இறே செய்வது என்று அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அனுசயிக்கிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

எனதாவியுள் கலந்த
அநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்ம வஸ்துவிலே கிடீர் வந்து கலந்தது
எனதாவி
வசிஷ்டன் சண்டாள ஸ்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்
நீசனேன் என்று இறே தம்மை அனுசந்திப்பது
உள் கலந்த –
அது தன்னிலும் கடக்க நின்று சில போக மோஷங்களை தந்து போகை அன்றிக்கே -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -என்னும்படி கலப்பதே
பெரு நல்லுதவிக்
உதவி –யாவது -உபகரிக்கை
நல்லுதவி -யாவது -பச்சை கொள்ளாதே உபகரிக்கை
பெரு நல்லுதவி -யாவது தன் பேறாக உபகரிக்கை
கைம்மாறு
இம் மஹோ உபகாரத்துக்கு -பிரத்யுபகாரமாக
எனதாவி தந்து ஒழிந்தேன்
என்னுடைய ஆத்ம வஸ்துவை தேவர் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்
அழகிது இது தான் எத்தனை குளிக்கு நிற்கும் என்றான் ஈஸ்வரன் –
இனி மீள்வது என்பதுண்டே
சத்யோ தசாஹமாகத் தந்தேன்
அழகிது நீர் தாம் ஆரத்தை ஆருக்கு தந்தீர் என்று ஆராய்ந்து பார்த்துக் காணும் -என்றான் ஈஸ்வரன் -ஆராய்ந்தவாறே
அவனதை அவனுக்கு கொடுத்ததாய் இருந்தது
எனதாவியாவியும் நீ
எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக புகுந்து நிற்கிறாயும் நீயாய் இருந்தாய்
பகவத் அதீயமான வஸ்துவை நெடு நாள் நம்மது என்று இருந்து இத்தை இன்று அவன் பக்கலிலே
சமர்ப்பித்தோம் -சர்வஜ்ஞனாவன் என் நினைந்து இருக்கும் -என்று அத்தை அறிந்து அதுக்கு லஜ்ஜிக்கிறார்
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -திருமாலை -34-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணா விடில் சர்வ முக்தி பிரசங்கமாம் -சமர்ப்பிக்கில் அவனதான வஸ்துவை அவனுக்கு கொடுத்ததாம்
-ஆனால் செய்ய அடுப்பது என்-என்னில்
பிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேணும் -தெளிந்தால் கொடுத்தோம் என்று இருக்கக் கடவன் அல்லன் –
மயா சமர்ப்பித்த -அதவா கிந்து சமர்ப்பயாமி தே-என்றார் இறே
பொழில் எழும் உண்ட எந்தாய் –
ஸ்வா பாவிகமான சேஷித்வம் கொண்டு சொல்ல வேணுமோ
பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து நோக்கின அது போராதோ-நீ சேஷி என்கைக்கு –
எந்தாய் –
பிரளய ஆபத்தில் நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே பிரிந்து நசியாதபடி என்னோடு கலந்து அடிமை கொண்டவன் -என்னவுமாம்
எனதாவியார் யான் யார்
பிரதேயமான வஸ்து ஆரது-பிரதாதா ஆருடையவன் –நான் என் ஆத்மாவை சமர்ப்பித்தேன் -என்னக் கடவேனோ –
தந்த நீ கொண்டாக்கினையே
முதலிலே இத்தை உண்டாக்கின நீயே கொண்டாய் யானாய் -உண்டாக்குகை யாவது என் நித்ய வஸ்துவை என்னில்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்று அவனுடைய நித்ய இச்சையாலே இறே இதினுடைய நித்யத்வம் –

—————————————————————————————–

அவதாரிகை –

ஜ்ஞான லாபமே அமையுமோ -ப்ராப்தி வேண்டாவோ -என்ன -எனக்கு பிரதம ஸூக்ருதமும் நீயேயாய்-என்னை சம்சாரிகளிலே
வ்யாவ்ருத்தன் ஆக்கின அன்றே பெற்றேனே யன்றோ என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
இனி -மேலே அன்வயம்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரானவர்களுடைய ஜ்ஞான விசேஷங்களாலும் ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்க்கும் அன்று
பேர்க்கப் பேராது இருக்கிற என் நாயகனே –
அதாவது -துர்யோதனனாலே பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை
கனிவார் வீட்டின்பமே
நீ என்றால் உள் கனிந்து பக்வமாய் இருக்குமவர்களுக்கு மோஷ ஸூகமானவனே
அன்றியே -நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைக்குமவனே
அப்படி எங்கே கண்டோம் என்னில் -யசோதைப் பிராட்டி தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-

என் கடல் படா வமுதே
அவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாத படி இருக்கிற எனக்கு அயத்ன சித்த போக்யனானவனே
தனியேன் வாழ் முதலே
தனியேனான என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூக்ருதம் ஆனவனே
ஏகாஷீ-ஏக கரணிகள் நடுவே இருந்தால் போலே பிராட்டி -இவருக்கும் தனியாய் இருக்கும் இறே சம்சாரத்தில் இருப்பு
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் –
தனிமையில் வந்து உதவும் படியைச் சொல்லுகிறது
அத்விதீய மகா வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளயம் கொண்ட புவனங்கள் ஏழையும் எடுத்து
நுனியார் கோட்டில் வைத்தாய்
நுனி -என்று கூர்மை -ஆருகை மிகுதி -கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாய் என்றபடி -இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத
ரஷகனுடைய பாரிப்பைச் சொல்கிறது
யுனபாதம் சேர்ந்தேனே –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்த போதே -தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே யன்றோ
இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி அறிவை தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேன் அன்றோ

—————————————————————————————————-

அவதாரிகை –

இனி உன் பாதம் சேர்ந்தேனே என்றார் –இனி என்று விசேஷிக்க வேணுமோ -பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாஷம்
பண்ணின போதே கிட்டிற்றிலேனோ என்னுதல்-
அன்றிக்கே
-ஸ்வரூபத்தை அனுசந்தத்தவாறே ஸ்வாபாவிக சேஷத்வமேயாய் நிலை நின்ற ஆகாரம் -நடுவுள்ளது
வந்தேறியாகத் தோற்றுகையாலே சொல்லுகிறார் ஆகவுமாம் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

சேர்ந்தார் உண்டு
த்விதா பஜ்யேயமப்யேயம் ந நமேயம் து கஸ்யசித் -என்னும் நிர்பந்தம் இல்லாதவர்கள்
சேர்ந்தார் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல் இவனைக் கிட்டினவர்கள்
அநாதி காலம் சம்சரித்துப் போந்த ஆத்மா சர்வேஸ்வரனை கிட்டுகையாவது -கரை சேருகை இறே –
இக்கரை ஏறினார்கள் இறே அவர்கள் –
தீ வினைகட்கு அரு நஞ்சைத்
அவர்களுடைய பிராப்தி பிரதிபந்தக கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சானவனே
திண் மதியைத்
முன்பே சேர்ந்து இருக்குமவர்களுக்கு திண்ணியதான மதியை கொடுக்குமவனை
அம்பரீஷன் தமஸ்ஸூ பண்ணா நிற்க சர்வேஸ்வரன் இந்திர வேஷத்தைத் தரித்துக் கொண்டு சென்று உனக்கு வேண்டியவற்றை
வேண்டிக்கொள்என்ன -நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்-என்னை சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே
உன்னைக் கும்பிடுகிறேன் -என்றான் இறே
நாஹமா ராதயாமி த்வாம் தவ பத்ததோய மஞ்ஜலி -என்று தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாத படியான
திண்ணிய மதியைக் கொடுக்குமவனை –
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை
ஜலான் மத்ச்யாத் விவோத் த்ருதௌ-என்று தன்னைத் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதே
அவர்கள் உயிர் தன்னைப் பிரிந்து த்ரீவி பூதமாய் மங்கிப் போகக் கொடாதே -அது தன் பேறு-என்னும் இடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை
தீர்ந்தார் உண்டு -உபாயத்தில் துணிவுடையார்-அவர்களாகிறார்-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே எண்டு இருக்குமவர்கள்
அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் -என்றுமாம்
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை
பிராட்டியோட்டை அவர்கள் சம்ச்லேஷ விரோதியை போக்குமா போலே யாயிற்று -அவர்களுடைய விரோதிகளைப் போக்கும் படியும் –
ஆனால் இவனோ பின்னை மூக்கறுத்தான்-என்னில் -ஆம் கையால் அறுக்க வேணுமே -ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே —
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ –
அநாதி காலம் இழந்த இழவைமறக்கும் படி வந்து கலக்கையாலே -இன்றோ பெற்றது -இவ்வாத்மா உள்ளவன்றே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம்
வாயும் திரையுகளில் -கீழ் சம்ச்லேஷித்த தேற்றம் கலங்கி விச்லேஷமாய்ச் சென்றால் போலே -இங்கு கலவியின் மிகுதியாலே
அத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ-என்கிறார் என்றுமாம் -முதல் முன்னமே -பழையதாக -என்றபடி –

————————————————————————————-

அவதாரிகை

இப்படி தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் அனுசந்தித்து -இவ்விஷயத்தினுடைய போக்யதையும் அனுசந்தித்து
இது இருந்தபடி கண்டோமுக்கு தொங்காது போலே இருந்தது -என்று அதி சங்கை பண்ணி -தேவர் என்னைக் கைவிடில்
நான் உளேன் ஆகேன் என்னைக் கை விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் –
முன்னல் -என்கிற ஒற்றைப் போக்கி முனல் ஆக்கி முரல் ஆக்கி நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே -முன்னல் என்றது உன்னலாய் – நினைத்தலாய் இனிமையாலே அது அது என்று வாய் புலற்றும் படி இருக்கை
அன்றிக்கே -முன் -சாஸ்திரத்தின் உடைய பழைமையாய் -ஆதியிலே உண்டாய் -நல் -அது தான் நன்றாய்
யாழ் பயில் நூல் -யாழ் விஷயமாக அப்யசிக்கப்படுமதான நூல் உண்டு சாஸ்திரம் -அந்த சாஸ்திர உக்தமான படியே
நரம்பின் முதிர் சுவையே
நரம்பிலே தடவப் பட்ட -அதிலே பிறந்த பண் பட்ட ரசம் போலே போக்யனானவனே
மிடற்றைச் சொல்லாது ஒழிந்தது –கர்ம அனுகுணமாக போது செய்யுமது உண்டாகையாலே அதுக்கு
இப்படி போக்யதை குறைவற்றால் போக்தாக்கள் வேணுமே -அவர்களைச் சொல்லுகிறது மேல் –
பன்னலார் பயிலும் பரனே
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் என்கிறபடியே -தாங்கள் பலராய்-பகவத் குணங்களுக்கு தேசிகராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள்
சதா அனுபவம் பண்ணா நின்றாலும் அனுபூத அம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்கை
பவித்திரனே
நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சித்தரோபாதி உன்னை அனுபவிப்பைக்கு யோக்யராம் படியான சுத்தியை பிறப்பிக்குமவன்
அன்றிக்கே பன்னலார் என்று முமுஷூக்களை யாக்கி அவர்கள் எப்போதும் அனுபவியா நின்றாலும் தொலையாத போக்யதையை
யுடையவையாய்ப் அவர்களுக்கு தவ அனுபவ விரோதியைப் போக்கும் சுக்தி யோகத்தை உடையவனே என்றுமாம்

கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
கன்னலே -எனக்கு நிரதிசய போக்யனானவனே
அமுதே -என்னைச் சாவாமல் ஜீவிப்பித்துக் கொண்டு போருமவனே
கார் முகிலே -ஔதார்யத்தைப் பற்ற
என் கண்ணா -தன்னைக் கொடுத்தபடி
இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது

நின்னலால் இலேன் காண்
உன்னை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டேன்
உன்னை ஒழிய ரஷகரை உடையேன் அல்லேன் என்றுமாம்
என்னை நீ குறிக்கொள்ளே–
என்னைப் பார்த்து அருள வேணும் -என்னுதல்
என்னைத் திரு உள்ளம் பற்ற வேணும் என்னுதல்
என்னை
உன்னை ஒழிந்த வன்று அசித் பிராயனான என்னை
நீ
இதுக்கு தாரகனான நீ -என்றுமாம் –

—————————————————————————————————

அவதாரிகை –

என்னை நீ குறிக் கொள்ளே என்றவாறே அவன் குளிரக் கடாஷித்தான் -அத்தாலே
சகல வியசனங்களும் போய் அவனை அனுபவிக்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

குறிக் கொள் ஞானங்களால்
யம நியம த்யவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்க வேணும் -ஜ்ஞான விசேஷங்களாலே -அவை யாவன
வேதனத்யாநோபாஸ நாத்யவஸ்த்தா விசேஷங்கள்
எனை யூழி செய்தவமும்
அநேக கல்பங்கள் கூடி ஸ்ரவணமாய் மனநமாய் த்ருவ அநு ச்ம்ருதியாய் -இங்கனே வரக் கடவ தபஸ் பலத்தை
கிறிக் கொண்டு
ஒரு யத்னம் இன்றிக்கே இருப்பதொரு விரகைப்-பற்றி அதாவது அவன் தன்னையே கொண்டு என்றபடி
-கிறி என்று அவனைக் காட்டுமோ என்னில் –பெரும் கிறியான் -என்னக் கடவது இ றே
இது தான் எத்தனை ஜன்மம் கூடி என்னில்
இப்பிறப்பே
இஜ் ஜன்மத்திலே -இஜ் ஜன்மம் எல்லாம் கூடியோ என்னில்
சில நாளில்
அல்ப காலத்திலேயே
அழகிது ப்ராபிக்க கடவீராய் நின்றீரோ -என்ன –
எய்தினன்
பிராபித்தேன்
யான்
இப்பேற்றுக்கு யத்னம் பண்ணாத நான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான்
தவம் எய்தினன் -என்கிற பலத்தைச் சொல்லுகிறார் ஆதல்
கிறிக் கொண்டு என்கிற உபாயத்தைச் சொல்லுகிறார் ஆதல்
உறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் தெய்வம் கொண்டதோ என்னும்படி
மறைத்து அமுது செய்த -அச் செயலாலே ஜகத்தை எழுதிக் கொண்டவனுடைய
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப்
அவன் பின்னே -நெறிப்பட்ட நெஞ்சை உடையனாய் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
அன்றியே -பின் நெறிக் கொண்ட என்கிறது -பிரபத்தியை
பின் நெறி என்கிறது பின்னே சொன்ன நெறி என்றபடி -நெறி -வழி
பிறவித் துயர் கடிந்தே –
பலத்தைச் சொன்ன இடத்தில் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிக் கிடந்தது இறே -அத்தைச் சொல்லுகிறது
அன்றியே
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்
பாரத சமரத்திலே அர்ஜுனனுக்கு ஒரு அவஸ்தையைப் பிறப்பித்து இ றே உபாயத்தை உபதேசித்தது
இவர் வெண்ணெய் களவு காண போன இடத்திலே அடியொற்றிக் கொண்டு சென்று அவன் புக்க கிருஹத்திலே
படலைத் திருகி வைத்தாயிற்றுக் கேட்டுக் கொண்டது
பிறவித் துயர் கடிந்தே –
சர்வ பாபேப்யோமோஷயிஷ்யாமி-என்றே வைத்தான் இறே

———————————————————————————-

அவதாரிகை —
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே -என்னுடைய சகல துரிதங்களும்
போம் படி- சர்வேஸ்வரனை அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன்-
பரிமள பிரசுரமான திருத் துழாய் மாலையைஉடைய கிருஷ்ணன் -என்னுதல்
மது ச்யந்தியா நின்றுள்ள திருத் துழாயயை உடையவன் என்னுதல்
விண்ணவர் பெருமான்
இவ் வொப்பனை அழகாலே எழுதிக் கொள்வது -அனந்த வைனதேயாதிகளை யாயிற்று
படிவானம் இறந்த பரமன்
தன் படிக்கு வானில் உள்ளார் ஒப்பாகாத படியாக இருக்கும் பரமன்
பரம சாம்யா பன்னரான நித்ய ஸூரிகளும் தன் படிக்கு ஒப்பாகாத படியான மேன்மை உடையவன் என்னுதல்
தன் திருமேனிக்கு வானம் உண்டு மேகம் -அது ஒப்பாதாகாத படி இருக்கிறவன் என்னுதல் –
பவித்ரன்
இவ் வடிவு அழகை சம்சாரிகளுக்கும் அனுபவிக்கைக்கு யோக்யராம் படி பண்ணும் சுத்தியை உடையவனுடைய சீருண்டு–கல்யாண குணங்கள்
அவற்றை அடி காண ஒண்ணாத படி தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரிக சகல துரிதங்களும் போம்படி வந்து கிட்டி நாலு மூலையும் புக்கு அவஹாகித்து
அனந்யார்ஹனான நான் முழு மிடறு செய்து அனுபவித்து யமாதிகள் தலையிலேயும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்
படிந்து -கிட்டி /குடைந்து- எங்கும் புக்கு /-ஆடி அவஹாகித்து
அடியேன் வாய் மடித்து பருகி –
பெரு விடாயோடு அனுபவித்து
களித்தேனே
இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே பகவத் குண அனுபவம் களிப்பேயாகக் கடவது –

———————————————————————————–

அவதாரிகை –

களித்தேனே -என்னா–திரியட்டும் சம்சாரிகளோடே இருக்கை யன்றியே இவ்வனுபவத்துக்கு தேசிகரான நித்ய ஸூ ரிகள்
திரளிலே போய்ப் புகுவது எப்போதோ -என்கிறார் –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

களிப்பும் –
இதர விஷய அனுபவத்தாலே வரும் களிப்பும்
கவர்வும்
அவை பெறாத போது ஆசைப்பட்டு வரும் கிலேசமும்
-அற்றுப்
போய்
பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
இவை இரண்டுக்கும் அடியான ஜன்மம் -அது புக்க விடத்தில் புகக் கடவதான வியாதி -அநந்தரம் வரும் ஜரை-
இத்தோடு யாகிலும் இருந்தால் ஆகாதோ என்று நினைத்து இருக்கச் செய்தே வரும் நிரந்வய விநாசம் -இவை யடைய வற்று
ஒளிக் கொண்ட சோதியமாய்
ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலாசின இந்த சரீரம் போலே அன்றியே -சுத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமான சரீரத்தை யுடையோமாய்
உடன் கூடுவது என்று கொலோ
நான் எனக்கு என்று அகல வேண்டாத இவ்வுடம்பு உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்கப் பெறுவது என்றோ –
துளிக்கின்ற வான்நிலம்
வர்ஷிக்கையே ஸ்வபாவமாக உடைத்தான ஆகாசம் -அத்தாலே விளையக் கடவதான இந்த பூமி
இவற்றை கடற்கரை வெளியிலே நோக்கினால் போலே திவ்யாயுதங்களை தரித்து நோக்குகிற ஆச்சர்ய பூதன்
சுடர் ஆழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
பரம பதத்தில் ஆபரணமாகக் காட்சி தரும்
இங்கு ஆயுதமாய் இறே இருப்பது
இப்படி ரஷிக்கிறவனுடைய அந்த ரஷணத்தில் தோற்று இருப்பாராய்–அவன் தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய் பகவத் குணங்களுக்கு
தேசிகராய் இருப்பாருமாய் -போதயந்த பரஸ்பரத்துக்கு துணையாய் இருக்கிறவர்களுடைய குழாங்கள்
கலியர் -கலவரிசிச் சோறு உண்ண-என்னுமா போலே -அத்திரள்களிலே போய்ப் புகப் பெறுவது எப்போதோ -என்கிறார் –

—————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருமொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் -என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவியுங்கோள்-என்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
புத்ர புத்ராதிகளும் -பந்துக்களுமான இவர்களாலே குழாம் கொண்டு வர பல புஜ பலத்தாலே தழைத்து வேரூன்றின
ரஷச்சினுடைய ஜாதியாக கிழங்கு எடுத்த சக்ரவர்த்தி திருமகனை -கரீஷ்யே மைதலீ ஹேதோரபிசாசம ராஷசம் -என்கிறபடியே
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்
ஜனஸ்தானம் அடி யறுப்புண்ட பின்பு தண்ட காரண்யம் குடியேறினால் போலே
வாயும் திரை யுகளுக்குத் தப்பின ஆழ்வாரைக் காண வேணும் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டதாயிற்று
நல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-இறே -சத்ருக்கள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும் படியான தேசத்தில்
அத் தேசத்தில் உள்ளார் திரளச் சொல்ல வேண்டா விறே
தெரிந்துரைத்த
உள்ளபடி அனுசந்தித்துச் சொன்ன
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
இவை பத்தும் –
திரண்டவர்களுக்கு ஜீவனம் வேணுமே –
குழாங்கொள் ஆயிரம்
தொண்டர்க்கு அமுது உண்ண –9-4-9-என்கிறபடியே
பத்துப் பாட்டு ஒரு திருவாய் மொழி
பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்
இப்படி பத்து பத்தான ஆயிரம்
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜீவனம் வேணுமே
இவை பத்தும் உடன் பாடி
சாபிப்ராயமாக அப்யசித்து
குழாங்களாய்
என்னைப் போலே பருகிக் களித்தேனே -என்னா
குழாம் தேட இராதே
முற்படவே திரளாக இழியப் பாருங்கோள்
யடியீருடன் கூடி நின்றாடுமினே –
அவன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கு இருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான
அர்த்த காமங்களைப் பற்றி -சதுர்விதா பஜந்தே மாம் -ஸ்ரீ கீதை -7-16-
சிறு பாறு-என்னாதே-நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கோள்

முதல் பாட்டில் திரு உள்ளத்தைக் கொண்டாடினார்
இரண்டாம் பாட்டில் அத்தையும் இசைவித்து சர்வேஸ்வரனை கொண்டாடினார்
மூன்றாம் பாட்டில் தன நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தைச் சொன்னார்
நாலாம் பாட்டில் அதுக்கு பிரத்யுபகாரமாக ஆத்ம சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு அனுசயித்தார்
அஞ்சாம் பாட்டில் எனக்கு பிரதம ஸூக்ருதம் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ என்கிறார்
ஆறாம் பாட்டில் இன்றோ கிட்டிற்று தேவர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின வன்றே பெற்றேனே யல்லேனோ-என்றார்
ஏழாம் பாட்டில் அவனுடைய போக்யதையை அனுசந்தித்து -உன்னைப் பிரியில் தரியேன் -என்றார்
எட்டாம் பாட்டில் இப்படி நிரதிசய போக்யனானவன் எளியதொரு விரகாலே லபிக்கப் பெற்றேன் -என்றாராதல் -அன்றிக்கே –
அநேக காலம் கூடிப் பண்ணின லபிக்கக் கடவ தப பலத்தை அவனைப் பின் சென்று எளிதாக லபித்தேன் -என்னுதல்
ஒன்பதாம் பாட்டில் என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து களித்தேன் -என்றார்
பத்தாம் பாட்டில் இப்படி இவனை அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது எப்போதோ -என்றார்
நிகமத்தில் -இத் திருவாய் மொழியை சாபிப்ராயமாக அப்யசித்து நாலு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடி இருந்து அனுபவிக்கப் பாருங்கோள்-என்றார் –

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: