திருவாய்மொழி – -2-2– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே
கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை -என்னுமா போலே ஆற்றாமையோடு முடிந்து போம் அத்தனை என்று இருந்தார் -அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்கவிடம் கண்டிலர் -இதுக்கு அடி என் என்று பார்த்து ஆராய்ந்த வாறே
-இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவில்லாத விஷய வைலஷண்யமாய் இருந்தது -பிரிந்த போது தன்னை ஒழிய வேறு ஓன்று
தோன்றாத படியாய் -கலந்த போதும் தன்னை ஒழிய மற்று ஓன்று தோற்றாத படியான விஷய வைலஷண்யமாய் இருந்தது –
இதுக்கு அடி என் என்று பார்த்தார் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலேயாய் இருந்தது –
இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே சர்வேஸ்வரன் ஆகையாலேயே இருந்தது
உயர்வற உயர்நலம் உடையவன் என்றால் அயர்வறும் அமரரர்கள் அதிபதி என்று இறே தோற்றுவது-
ஆக இங்கனே பிராசங்கிகமாக பிரச்துதமான ஈஸ்வரத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –
கீழே –மூவா முதல்வா -2-1-10-என்று காரணத்வம் ப்ரஸ்துதம் ஆகையாலே அந்த காரணத்வத்தை உபபாதிக்கிறார் என்று பணிக்கும் பிள்ளான் –
முதல் திருவாய்மொழியிலும் சொல்லிற்று இல்லையோ ஈஸ்வரத்வம்-என்னில்
ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்
ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாய யாகாது -ஒரு குணத்தையே எல்லா காலமும் அனுபவிக்க வல்லார் ஒருவர் இவர்
ஒரு குணம் தன்னையே இதுக்கு முன்பு அனுபவிப்பத்தது இக்குணம் என்று தோற்றாத படி ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து
அனுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்
பயிலா நிற்கச் செய்தே பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் –பெரிய திருமொழி -8-1-9-எனபது
ஆகை இறே ஏக விஷயமே நித்ய ப்ராப்யம் ஆகிறது
இவர் தாமும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் –2-5-4-என்னா நின்றார்

ஆனாலும் இதுக்கு வாசி உண்டு
முதல் திருவாய் மொழியிலே பரத்வம் சொல்லா நிற்கச் செய்தே -அது ஸ்வ அனுபவமாய் இருக்கும்
அந்தப் பரத்வம் தன்னை எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பர உபதேசத்தாலே பரத்வ அனுபவம் பண்ணுகிறார் –
அங்கு அந்வய முகத்தாலே பரத்வம் சொன்னார் -அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் பரத்வம் சொல்லுகிறார் -இங்கு
அங்கு ஸ்ருதி சாயையாலே சொன்னார் -இங்கு இதிஹாச புராண பிரக்ரியையாலே சொல்லுகிறார்
அங்கு பரத்வத்திலே பரத்வம் -இங்கு அவதாரத்திலே பரத்வம் –

———————————————-

அவதாரிகை –

இந்தத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
திண்ணன் -என்றது திண்ணம் -என்றபடி -அதாவது -த்ருடம் -என்றபடி
த்ருடமான வீடு என்று நித்ய விபூதிக்கு விசேஷணமாய்-தார்ட்யமாவது-ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள்
-என்னுமவை இல்லாமையாலே கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை -என்கை
இச்சமாக வரும் விகாரங்கள் உண்டு -ஆனால் தோஷாயவும் அன்று -அது அழிவாயும் தோற்றாது இ றே
ஏதேனுமாக சம்சார விபூதியில் போலே கர்ம நிபந்தமாக வருமவை இல்லை -என்கை
திண்ணிதான நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் உடையனாய்
அன்றியே
திண்ணம் என்கிற இத்தை விட்டு வைத்து -வீடு முதல் முழுதுமாய் -மோஷ ப்ரப்ருத் யசேஷ புருஷார்த்த ப்ரதனாய் -என்னவுமாம் –

எண்ணின் மீதியன்
அசங்க்யேயமான கல்யாண குணத்தை உடையவன்
கீழ் விபூதி பரமான போது -எண்ணின் மீதியன் -என்றது குணபரமாகிறது
கீழ் குண பரமான போது எண்ணின் மீதியன் -என்றது விபூதி பரமாகிறது
வீடு முதல் முழுதுமாய் -என்ற போது மோஷ பிரதத்வத்தையே -நினைத்ததாகில் -எண்ணின் மீதியன் -என்றவிடம்
அனுக்தமான குணங்களைச் சொல்லுகிறது
எண்ணின் மீதியன் என்றவிடம் எண்ணுக்கு மேலாய் உள்ளான் என்றபடி
குணங்களாலே யாதல் விபூதியாலே யாதல் வந்த அபரிச்சேத்ய ஸ்வபாவதயைச் சொல்லுகிறது

எம்பெருமான்
குண விபூதிகளை யுடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்
மண்ணும் விண்ணும் எல்லாம்
இப்படி இவற்றை உடையனாய் உடைமை நோவுபட விட்டு இருக்கை யன்றிக்கே பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் -என்கிறார்
பூம் யந்தரிஷாதிகளை வெள்ளம் கொள்ளப் புக எடுத்து வயிற்றிலே வைக்கிற விடத்திலே ஒன்றும் பிரிகதிர்படாமே-ஏக காலத்திலே
வைத்து ரஷித்த நம் கண்ணன்
உடன் உண்ட –
ரஷணம் அவனுக்கு தாரகம் ஆகையாலே -உண்ட -என்கிறது -இல்லை யாகில் -காக்கும் என்ன அமையும் –
கிருஷ்ணனோ பின்னை ஜகத்தை விழுங்கினான் -என்னில் -ஆம் கிருஷ்ணனே –
அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் இ றே யசோதை -ஆகையாலே சர்வ ரஷகனான கிருஷ்ணனே ஜகத்துக்கு திருஷ்டி
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய கிருஷ்ணச்ய ஹி க்ருதே–பீஷ்ம பர்வ ராஜ ஸூயையாகம் என்கிற பிரமாண பிரசித்தி இருக்கிறபடி –
அல்லது இல்லை ஓர் கண்ணே –
இவ்வர்த்தத்தை ஒழிய சப்தத்தைக் கொண்டு போய் -பீலிக்கண் -என்று வ்யவஹரியா நின்றது இறே -அதுக்கும் கூச வேண்டும் படி இருக்கும்
மாலைக் கண் என்று இருப்பார்க்கு அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்த் தோற்றும் இறே
இது திண்ணம் த்ருடம் -சத்யம் சத்யம் என்னுமா போலே –
நம் கண்ணன் கண் -என்கையாலே அன்வயத்தாலே பரத்வம் சொன்னார்
அல்லது இல்லை -என்கையாலே வ்யதிரேகத்தாலே பரத்வம் சொன்னார்

———————————————————————————

அவதாரிகை –

அல்லது இல்லை என்று நீர் சொல்லுவான் என் -ப்ரஹ்ம ருத்ரர்கள் ஈச்வரர்களாக அவர்களுக்கும் சில பிரமாணங்கள் உண்டாய் அன்றோ
போருகிறது என்னில் -அவர்கள் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தலை யறுப்பார் சிலரும் அறுப்புண்டு நிற்பார் சிலருமாகா நின்றார்கள்
அவர்கள் ஆபத்தைப் போக்கி ரஷியா நின்றான் இவன் -அவர்களோ இவனோ ஈஸ்வரன் -என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

ஏ பாவம்
ஏ -என்றது ஒ என்றபடி -விஷதாதிசய ஸூ சகம் இருக்கிற படி
ஏ பாவம்
ரத்ன கரீஷங்களுக்கு –ரத்னத்துக்கும் காய்ந்த விராட்டிக்களுக்கும் -வைஷம்யம் சொல்ல வேண்டுவதே
சேதனர் மந்த மதிகளாய்-பகவத் பரத்வம் உபபாதிக்க வேண்டுவதே என்னும் இன்னாப்பாலே -என்னே பாவம் -என்கிறார்
பரமே
பகவத் குண அனுபவம் பண்ணுகை ஒழிய இது நமக்கு பரமாவதே –
இது நமக்கு சாத்தியமாய் விழுவதே
யேழுலகும்
ஏழ் உலகங்களிலும் உண்டான சேதனர் -இருந்ததே குடியாக பாபங்களைக் கூடு பூரிக்க
ஈ பாவம் செய்து
பாபமானது ஈயும்படியாகச் செய்து -அழியும்படியாகப் பண்ணி
இது தான் சேதனர் அர்த்திக்கச் செய்கை அன்றிக்கே
அருளால் –
நிர்ஹேதுக கிருபையாலே

அளிப்பாரார்
இவர்களை ஈரக் கையாலே தடவி ரஷிப்பார் ஆர்
இவர்கள் பண்ணின பாபம்-அவன் அருளாலே போக்கில் போம் எத்தனை யல்லது
தாங்கள் பிராயச் சித்தம் பண்ணிப் போக்குகையாவது அவற்றை வர்த்திப்பிக்கை இறே
அளிப்பான் இவன் என்னாதே-ஆர் என்கிறது -அவர்களுக்கும் சத்வம் தலை எடுத்த போது -நீர் சொல்லுகிறவனே -என்று
இசைய வேண்டும் பிரசித்தியாலே -பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -என்றும்
நஹி பாலான சாமர்த்தியம் ருதே -என்றும் சொல்லக் கடவது இறே
அவன் சர்வ விஷயமாகப் பண்ணின ரஷணம் கிடக்கிடீர் -தந்தாம் கால் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும்
ஓரோர் அளவிலே ஆபன்னரானால் அவற்றைப் போக்கி ரஷிக்கும் படியை பார்க்கலாகாதோ என்கிறார்
மா பாவம் விட
ஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் இறே
அல்லாதாரில் ஞான சக்த்யாதிகளாலே ஓர் ஆதிக்யம் உண்டு இறே அவர்களுக்கு
அவற்றைக் கொண்டு லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் –
வாமாங்குஷ்ட னகாக்ரேண சின்னம் தஸ்ய சிரோ மயா–மத்ஸ்ய புராணம் என்கிறபடியே மஹா பாபமானது விடும் படியாக
அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி யேறு-
அவன் தான் சம்ஹர்த்தாவான வேஷத்தோடு அதிகாரம் குலையாதே நின்று பாபத்தை விளைத்துக் கொள்ள இவன் அவனுக்கு
துக்க நிவர்த்தகன் ஆயிற்று -அங்கே இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடத்திலே யாயிற்று –
இவர்கள் எத்தனையேனும் உயர நின்றாலும் அனர்த்தத்தையே சூழ்த்துக் கொள்ளும் இத்தனை -அவன் எத்தனையேனும்
தன்னைத் தாழ விட்டாலும் ரஷகனாம் என்பதையும் சொல்லுகிறது
கோபாலருடைய மிடுக்கை உடைத்தான சிம்ஹ புங்கவம் -என்றபடி
கோபால கோளரி யேறு-
கோள் என்று மிடுக்காதல்
பிரதிபஷத்தைக் கொல்லும் என்னுதல்
நித்ய ஸூரிகளுக்கு நியந்தாவான இடையருக்கு நியாம்யனாய் பெற்ற மேணானிப்பு
கர்ம வச்யராய் ஆபன்னரான இவர்களை -ஈஸ்வரர்கள் என்போமா
ஆபத்துக்களைப் போக்கி ரஷிக்கிற இவன் ஈஸ்வரன் என்போமா
ஏறு அன்றி அருளால் அளிப்பாரார் -என்று அந்வயம்-

——————————————————————————

அவதாரிகை –

சௌசீல்யத்தாலும் த்ரிவிக்ரம க்ரமணம் ஆகிற அதி மானுஷ சேஷ்டிதத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2

ஏறனைப் –
சர்வேஸ்வரன் கருட வாஹணன் என்று இறுமாந்து இருக்குமா போலே ஒரு எருத்தைத் தேடி கைக்கொள்ளாண்டிகளைப் போலே இறுமாந்து இருக்கும்
பூவனைப்
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தவன் அன்றோ என்று இறுமாந்து இருக்கும் சதுர்முகனை –
அதாவது பத்ம யோ நித்வத்தாலே அஜந என்று அபிமானித்து இருக்கை
பூ மகள் தன்னை
தாமரைப் பூவில் பரிமளம் உபாதாநமாக பிறந்தவளாய் -போக்யதைக வேஷையாய்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை –10-10-6-
என்னும்படியான பிரதாந்யம் தோற்ற இருக்கிறவளை
தன்னை -என்று
அவர்களில் இவளுக்கு உண்டான பிரதாந்யம் இருக்கிறபடி –
ஏறனை -பூவனை -என்கிற அநாதார உக்தியாலும் இவள் பிரதாந்யம் தோற்றுகிறது-
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து –
விண் தொழ -வேறின்றி -தன்னுள் வைத்து -அந்ய பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் -அனந்யயையான – பெரிய பிராட்டியாருக்கும்
ஒக்க முகம் கொடுத்து வைக்கிற சீலத்தை அனுசந்தித்து விண்ணினுள்ளார் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் எப்போதும் திருமேனியை பற்றி இருப்பார்களோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஒரோ ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுக்கிறான் -அந்நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அத்தையே
புலற்றுகிரார்கள் அத்தனை இறே-என்று அருளிச் செய்தார்
வேறின்றி –
கூறாளும் தனியுடம்பன் -4-8-1–என்கிறபடியே வியவஸ்திதமாக உடம்பைக் கொடுக்கை
விண் தொழ –
மஞ்சா க்ரோசந்தி இதிவத் –
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் -அங்குள்ளார் சீலம் என்று தோற்றிருப்பார்கள்
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மேல் தன்னை -உபரிதந லோகங்களை –
அப்பால் மிக்கு -திரு நெடும் தாண்டகம் -5–என்கிறபடியே -விஞ்ச வளர்ந்த பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
மாறனில்-இவ்வதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய சர்வேஸ்வரனில் காட்டில் –
மிக்குமோர் தேவுமுளதே-ஒக்கப் பரிமாறா நிற்க -கட்டக்குடி -தாழ்ந்த குடி -என்று கழிக்கலாம் தெய்வம் தான் உண்டோ
-எல்லார் தலையிலும் காலை வைத்தவனை ஈஸ்வரன் என்னவோ -இவன் காலில் துகையுண்டவர்களை யீச்வரர்கள் என்னவோ –

————————————————————————————————-

அவதாரிகை –

சௌகுமார்யத்தாலும்-முதன்மையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த
தேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தேவன் –
க்ரீடா த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ன காந்தி கதிஷூ –பொருள்கள் உண்டே
சதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் –
இது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர் யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்
எம்பெருமானுக்கு அல்லால் –
ஸ்ருஷ்ட் யாத்யுபகாரத்தாலும்-சிருஷ்டிக்கு உறுப்பான குணங்களாலும் என்னை எழுதிக் கொண்டவனுக்கு அல்லது –
பூவும் பூசனையும் தகுமே —
சிக்குத் தலையனுக்கு பூத்தது ஆகாது
பிச்சை யுண்ணிக்கு பூசனை தகாது
பூத்தகுவது ஸூ குமாரனுக்கே
பூசனை தகுவது முதன்மை உடையவனுக்கே
இவனை ஒழிந்தவர்க்குத் தகாது -என்கிறார் –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தனா -என்று ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது அவன் பரத்வத்தை உபபாதித்துக் கொண்டு போந்து
ஸ்ருதி சித்தமான கண் அழகை உடையவன் காண் உங்களுக்கு மைத்துனனாய்ப் புகுந்து இருக்கிறான் -என்று பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்
அர்ச்சமர்ச்சிதும் இச்சாமஸ் சர்வே சம்மந்துமர்ஹத -என்ற சஹதேவன் தலையிலே புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணினார்கள் இறே
இத்தால் -பீஷ்மர் உடைய -ஜ்ஞானத்தில் காட்டில் -சஹதேவனுடைய -வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது

———————————————————————————-

அவதாரிகை –

புண்டரீகாஷன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

தகும் சீர்த்-
ஸ்ரஷ்ட்ருத்வத்துக்கு உபயோகியான ஜ்ஞான சக்தியாதிகளை யுடையனான
தன் தனி முதலினுள்ளே-
கார்ய வர்க்கத்துக்கு அடைய காரணமான மூல பிரக்ருதியைச் சொல்லுதல்
பஹூச்யாம் என்கிற என்கிற அதுக்கும் அடியான சங்கல்ப ஜ்ஞானத்தைச் சொல்லுதல்
தனி முதல்
ஏக காரணம் என்று பரமாணு காரண வாதிகள் வ்யாவர்த்திக்கிறது
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தன்னோடும் ஆசைக்குப் பரலிடலாம் படியான தேவ ஜாதியையும்
வில்லை வளைத்த போதாக -அதிகம் மே நிரே விஷ்ணும் -என்னும் படி இ றே இவர்கள் மிகை
எப்பொருளும்
மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான் ஒருவன் –என்னும் இடத்தை தெரிவிப்பதாய்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்மா குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே -அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே -சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
மிகும் சோதி மேலறிவார் யவரே
மிகும் சோதி –
பரஞ்சோதி ரூப சம்பாத்ய-நாராயண பரோ ஜ்யோதி -என்று நாராயண அநு வாகாதிகளிலே இவனே பரஞ்சோதிஸ்ஸூ -என்று ஓதப்படுகிறான்
மேலறிவார் யவரே
இவனை ஒழிய நாராயண அநுவாக சித்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டு என்று அறிவார் ஆரேனும் உண்டோ
யவரே –
வைதிக க -ஸ்தோத்ர ரத்னம் -11-என்னுமா போலே -அநந்ய பரமான நாராயண அநுவாகாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட
வைபவத்தை உடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டாடி இருப்பான் ஒரு வைதிகன் உண்டோ
-உண்டாகில் அவன் அவைதிகனாம் இத்தனை -தச்யோத் பத்திர் நிரூப்யதாம் -பத்மபுராணம் –

—————————————————————————————-

அவதாரிகை —
ஆபத் சகன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
சேதன வர்க்கத்தையும் -அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி -இப்படி இருக்கிற
சகல பதார்த்தங்களும் பிரளய ஆபத்தில் தன் வயிற்றிலே சேரும்படியான போது
கவர்வின்றித்
கவர்கையாவது -க்ரஹிக்கை-அதாவது ஹிம்சையாய் -ஒருவரை ஒருவர் நெருக்காத படி
தன்னுள் ஒடுங்க நின்ற
தத் பஸ்யமஹம் சர்வம் தஸ்ய குஷௌ மகாதமன -என்னக் கடவது இறே
தன்னுள் -தன் சங்கல்ப ஏக தேசத்திலே என்னவுமாம்
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
இவர்கள் ரஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை உடையனாய் -இப்படி ரஷிக்கப் பெற்றவிடம் தன் பேறு என்று
தோற்றும்படி இருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடையரான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே —
தாம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக் கொண்டு எங்களுடைய ரஷண அர்த்தமாக வந்த
ஏகார்ணவத்தை அழகிய படுக்கையை உடையரானார்
பயலும் பள்ளியும் பாழியும் படுக்கை -நிகண்டு –இப்படி ஆபத்சகனாய் அணியனாகையாலே இவனே ஈஸ்வரன் என்கிறார் –

——————————————————————————————-

அவதாரிகை –

அகதி தகடி நா சாமர்த்த்யத்தாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
பள்ளி -படுக்கை -பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர்
யாலிலை யேழுலகும் கொள்ளும் -இப்படுக்கையிலே சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண் வளரும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
வள்ளல் -புக்க லோகங்களுக்கு அவ்வருகே இன்னம் கொண்டு வா -என்னும்படி இடமுடைத்தாய் இருக்கை
வல் வயிற்றுப் பெருமான் -உட்புக்க பதார்த்தங்களுக்கு பய பிரசங்கம் இன்றியே ஒழியும்படி மிடுக்கை உடைத்தாய் இருக்கை
இவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் -பெரிய திருமொழி -11-5-2-
பெருமான் –
இப்படி ரஷிக்க வேண்டிற்று உடையவனாகை
அவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக் கருத்தை உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே
யார் அறிவார்
கண்டது ஒன்றைச் சொன்ன வித்தனை போக்கி
உள்ளுள் -இன்னம் உள்ளே உள்ளே உண்டாய்
கள்ளமாய் -ஒருவருக்கும் தெரியாதபடியாய்
மாயமாய் ஜ்ஞாதாம்சம் ஆச்சர்யமாய் இருக்கிற அவனுடைய மனக்கருத்து -மநோ வியாபாரத்தை ஒருவரால் அறியலாய் இருந்ததோ

——————————————————————————–

அவதாரிகை –

சிருஷ்டியும் பால நமம் ஸ்வ அதீனமாக உடையானாகையாலே இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
தன்னுடைய சங்கல்ப்பத்தில் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் வர்த்திப்பித்த -உண்டாக்கின -சிருஷ்டித்த
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை யன்றி
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் –
மூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்திதியை யுடைத்தாம் படியாக திருத்தி –தம்முள் இருத்தி
அவ்வோ பதார்த்தங்களுக்கு அனுரூபமான ரஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்துக் காக்கும்
நஹி பாலன சாமர்த்தியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-19–என்கிறபடியே ரஷணத்தைப் பண்ணும்
இயல்வினரே —
இத்தை இயல்வாக வுடையவர் –
ஸ்வபாவமாக யுடையவர் ஆர் –
மாயப்பிரானை அன்றி காக்கும் இயல்வினர் ஆர் -என்று அந்வயம்

——————————————————————————————–

அவதாரிகை —

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீநமாம்படி இருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
ந சம்பதாம் சமாஹாரே -என்கிறபடியே பாலன கர்மத்தை ஸ்வபாவமாக உடையவன் –
ரஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரன்
சேர்க்கை செய்து
சம்ஹார காலம் வந்தவாறே கார்ய ரூப பிரபஞ்சம் அடைய தன் பக்கலிலே சேர்க்கை யாகிற செயலைச் செய்து –
தன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே -தான் ஒரு கால் ஸ்ருஷ்டி என்று விட்டால் பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி
ஸ்ருஷ்டி ஷமனான சதுர்முகன் இந்திரன் மற்றும் உண்டானே தேவர்களோடு கூட இவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும்
கட்டளைப்பட உண்டாக்கினான் -தன் உந்தியுள்ளே ஆக்கினான் –

————————————————————————————

அவதாரிகை –

இவ்வளவும் வர நான் பிரதிபாதித்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கிறவர்கள்
மேல் எழுத்தைக் கொண்டு விஸ்வசியுங்கோள் என்கிறார்

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

கள்வா –
சர்வேஸ்வரன் பக்கலில் வந்து வரம் கொள்ளுகிற இடத்தில் தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தர வேணும் -நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி
என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்று போக வேணும் என்று ஆர்த்திக்க -அப்படியே செய்கிறோம் என்று விட்டு -ருக்மிணிப் பிராட்டிக்கு
ஒரு பிள்ளை வேணும் என்று சென்று -நமோ கண்டாய கர்ணாயா -என்னுமா போலே ஏத்த அவனும் -உமயா சார்த்தமீசாநா-என்கிறபடியே
புறப்பட்டு -நீ கறுப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இத்தை நாட்டார் மெய் என்று இருப்பார்களோ கள்வா -என்பர்கள்
தன் ஸ்வா தந்த்ர்யத்தை மறைத்து பர தந்த்ரனாய் நிற்கை இறே களவாகிறது
கைலாச யாத்ரையிலே நமோ கண்டாய கர்ணாய நம கடகடாயச –என்று ஸ்தோத்ரம் பண்ணின படியே கேட்ட பிராமணன்
-இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானாவாறே மீன் துடிக்கிற படி பாராய் -என்றான் நாத்தழும்ப நான்முகனும்
ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி நாத்தழும்பு பட்டுக் கிடக்கிறது அன்றே –
இவன் தாழ நின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் களவு -என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்
எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய –
நீ இவற்றை மனைகிற போது -எங்களையும் மனைந்து பின்னை யன்றோ திர்யக் ஜாதிகளை உண்டாக்கிற்று
இறைவ என்று
இறைவா என்னா நிற்பார்கள்
இங்கனே சொல்லுகிறவர்கள் தான் ஆர் என்னில்
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
ராஜ சேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே இவர்களும் தாம்தாம்
அடையாளங்கள் உடன் ஆயிற்று வந்து சேவிப்பது
இரவியர் மணி நெடும் தேரோடும் -இத்யாதி
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே திருப் பாற் கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்
இவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காக திருவடி திருத் தோளிலே ஏறிப் புறப்படும் ஆட்டத்து வெளியிலே ஆனைக்காலிலே துகை யுண்ணா நிற்பார்கள் –

————————————————————————————-

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்களுக்கு தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈச்வரத்வ புத்தி பண்ணுகை யாகிற ஊனம் இல்லை -என்கிறார்

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

ஏத்த வேழுலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே ஏத்த
அந்த ஹர்ஷத்தாலே சகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
கோலக் கூத்தனை –
திரு வுலகு அளந்து அருளின போது வல்லார் ஆடினால் போலே யாயிற்று இருப்பது
அப்போதை வடிவு அழகை அனுபவிக்குமது ஒழிய இந்திரனைப் போலே ராஜ்ய ஸ்ரத்தை இல்லையே இவர்க்கு
குருகூர்ச் சடகோபன் சொல்
ஆப்திக்கு இன்னார் சொல்லிற்று என்னக் கடவது இறே
சடகோபன்
வேதாந்தத்தில் காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபிஜாத்யம்
வாய்ந்த வாயிரத்துள் –
இத்தனை போது இவர் பிரதிபாதித்த பர வஸ்து நேர் பட்டால் போலே யாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி
வாச்யத்தில் காட்டில் வாசகம் நேர்பட்ட படி என்றுமாம்
அதாவது விஷயத்தை உள்ளபடி பேச வற்றாய் இருக்கை
இவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு
இத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக ஏத்த வல்லவர்களுக்கு
இல்லையோ ரூனமே —
இவ்வாத்மாவுக்கு ஊனமாவது அபர தேவதைகள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தி பண்ணுகையும்-பரதேவதை பக்கலிலே பரதவ புத்தி பண்ணாமையும்
இப்படி வரக் கடவதான ஊனம் இது கற்றார்க்கு இல்லை –

முதல் பாட்டில் -மேல் பரக்க அருளிச் செய்கிற இத் திருவாய் மொழியின் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டு முதல் துக்க நிவர்த்தகன் ஆகையாலும்
சீலவான் ஆகையாலும்
ஸூகுமாரன் ஆகையாலும்
புண்டரீகாஷன் ஆகையாலும்
ஆபத்சகன் ஆகையாலும் அகடிதகடநா சமர்த்தன் ஆகையாலும்
ஸ்ருஷ்டி ஸ்திதிகளைப் பண்ணுகையாலும்
சம்சாரம் ஆகிற செயலைச் செய்கையாலும்
ஈஸ்வர அபிமாநிகலாய் இருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி களாலும்
இப்படி பஹூ பிரகாரங்களாலே -அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: