திருவாய்மொழி – -1-10- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அதாவது நிர்வ்ருத்தி என்று ஸூ கமாய் -ஸூகிக்கிறார் -என்றபடி
கீழ்ப் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷ த்தை அனுசந்தித்து பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு –
அதாவது -உச்சியுள்ளே நிற்கும் என்று இறே கீழே நின்றது
பேற்றில் இனி இதுக்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இல்லை
இனி இதினுடைய அவிச்சேதத்தையே பண்ணிக் கொடுக்கையே உள்ளது
பேறு கனத்து இருந்தது -இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார்
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாய் இருப்பதொரு நன்மை தம் தலையிலே இன்றிக்கே இருந்தது
இத்தலையிலும் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும் அத்வேஷம் ஆதல் ஆபிமுக்யம் ஆதல் இறே உள்ளது
அத்தை சாதனமாகச் சொல்லப் போராதே
இத்தலையில் பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இத்தை ஒரு சாதனமாகச் சொல்லப் போராதே
ஒருவன் ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றால் அது விலையாய் இராதே
சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஓர் அடி நிரூபிக்கலாய் இராதே
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் –பெரிய திருவந்தாதி -56-என்னும் படி இறே இருப்பது

இவனை முதலிலே சிருஷ்டிக்கிற போது-இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழியே போக வேணும் என்று
உபகரணங்களைக் கொடுத்து விடுகையாலே இவன் தலையிலே பிறந்த நன்மைக்கு அடி அவனாய் இருக்கும் இறே –
இனி புத்த்யாதி சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆகையாலே -அத்வேஷம் தொடக்கமாக பரிகணநை நடுவாக பரமபக்தி பர்யந்தமாக
தானே பிறப்பிப்பான் ஒருவன் -நித்ய ஸூரிகள் பேற்றை அநாதி காலம் சம்சரித்துப் போந்த நமக்குத் தந்தான் -ஒரு விஷயீ காரம்
இருக்கும் படி என் -என்று -கீழில் திருவாய் மொழியில் உன்மஸ்தகமாகப் பிறந்த சம்ச்லேஷ ரசத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று

————————

அவதாரிகை –

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை திரள அருளிச் செய்கிறார் -முதல் பாட்டில்
மஹா பலி தன் வரவை நினையாதே இருக்க அவன் பக்கலிலே தானே இரப்பாளனாக சென்று தன்னுடைமையை தன்னது
ஆக்கினால் போலே எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க தானே வந்து தன் வடிவு அழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்
-என்று அவன் படியை அனுசந்தித்து இனியராகிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொரு-
திரு உலகு அளந்து அருளுகிற போது -திவ்ய ஆயுதங்கள் நமுசி பிரப்ருதிகள் மேலே பொருத படியைச் சொல்லுதல்
திவ்ய ஆயுதங்கள் தான் ஒருவரை ஒருவர் அதி சங்கை பண்ணி பொருத படியைச் சொல்லுதல் -நமுசி பிரக்ருதிகளோடேபொரும் என்றது சேரும் இறே
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப -இரண்டாம் திருவந்தாதி -71-இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதப்போது
பிறந்த விஜயத்தை அனுசந்தித்து ஆர்த்துக் கொண்டது
அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே திரு வாழி நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்கப் பண்ணிற்று
விடம் காலும் தீ வாய் அரவணை –
திரு வநந்த ஆழ்வான் உகவாதார் மேலே கிடந்த இடத்தே கிடந்தது நெருப்பை உமிழ்ந்தான்
விரோதி பூயிஷ்டமான இத்தேசத்திலே அவன் இப்படிச் செய்ய சொல்ல வேணுமோ
அங்கே உட்பட இப்படி செய்ய கடவ அவன் -ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இறே
ஆங்கு -தேசம் அது
ஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்
அங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ -இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என் என்னில்
அரவணை மேல் தோன்றல்
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் காடு மேடையும் அளக்கைக்காக புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளை
நிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ
அவன் இப்படி வ்யாபரியா நின்றால் -தன்னில் தான் பொருது என்ற போது அஸ்த்தானே பய சங்கையாலே ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணிப் பொருகை
ராகவம் சரணம் கத -என்றவனை இறே வத்த்யதாம் -என்றது
பரதச்ய வதே தோஷம் நாஹம் பச்யாமி -என்றார் இறே இளைய பெருமாள்

மா
அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லவுமாம்-அன்றியே ஆஸ்ரித விஷயத்தில் அவனில் காட்டில் இவர்களுக்கு உண்டான
பஷபாதத்தைச் சொல்லவுமாம் அவ்யாஹதாதி கிருஷ்ணச்ய -சக்ர அதீன்ய ஆயுதானி தம் ரஷந்தி சகலா பத்ப்யோ யேன விஷ்ணு ருபாசித –
கவிகள் ஆசைப்படும் எல்லா லஷணங்களும் இதில் உள்ள படி பண்ணி அருள வேண்டும் -தபஸ் பண்ணி பெற்ற ஆற்றல் இல்லை -பாதுகை
தலையில் சூடி பெற்ற சக்தி என்கிறபடியே சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக் கொடாதே நோக்கும் மஹத்தையைச் சொல்கிறது
நீள் படை –
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக் கொள்ளும் -என்னுமா போலே சர்வேஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே –
அவன் தன்னிலும் முற்பட்டு இருக்கை
நீள் படையான ஆழி சங்கத்தொடு கூட
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
கதா புன -என்று நான் ஆசைப் பட்டுக் கிடக்கும் திருவடிகளைக் கொண்டு கிடீர் ஆசையில்லாதார் தலையிலே வைத்தது
திரு -ஐஸ்வர்ய ஸூசகமான த்விஜாராவிந்தாதிகளை யுடைத்தாய் இருக்கை
மா -பரம பூஜ்யமாய் இருக்கை
நீள் கழல் -ஆசாலேசம் உடையார் இருந்த விடம் எல்லையாக வளரும் திருவடிகள் –
ஏழ் உலகும் தொழ
ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழ
ஒரு
இவன் தானே இவ்வடிவை இன்னும் ஒரு கால் கொள்ள வேணும் -என்னிலும் வாயாதபடி அத்விதீயமாய் இருக்கை
மாணிக்
ஸ்ரீ யபதி என்று தோற்றாத படி இரப்பிலே தழும்பு ஏறுகை
குறளாகி
கோடியைக் காணி ஆக்கினால் போலே பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம் படி சுருக்கின படி
நிமிர்ந்த
அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி
வாஸூதேவ தரு விறே–
நெய்தல் காடு அலர்ந்தால் போலே ஆகாச அவகாசம் அடைய தன் வடிவு அழகாலே பாரித்தபடி
அக் கரு மாணிக்கம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற தம்மாலும் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை காணும்
என் கண் உளதாகுமே –
ஏழ் உலகத்தில் உள்ளார் வாசி அறிந்திலர்கள் இறே
அவ்வாசி அறியுமவர் ஆகையாலே -என் கண் உளதாகுமே-என்கிறார்
கண் -என்று இடமாய் -என்னிடத்தாகும் என்னவுமாம்
கரு மாணிக்கம் -என்கையாலே கண் உளதாகும் -என்கிறது –

——————————————————————————————

அவதாரிகை –

பரம பக்திக்கும் பரிகணநைக்கும்-எண்ணுதலுக்கும் — ஒக்க முகம் காட்டும் -என்கிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
பரம பக்தி உக்தராய்க் கொண்டு தொழில் -அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போக மாட்டாதே நிற்கும்
தன்னை ஒழியச் செல்லாமையை உடையராய்க் கொண்டு தொழில் -தானும் அவர்கள் ஒழியச் செல்லாமையை உடையனாய் அவர்கள்
கண் வட்டத்தின் நின்றும் கால் வாங்க மாட்டாதே நிற்கும்
எண்ணிலும் வரும் –
கடம் படம் ஈஸ்வரன் என்றால் -நம்மை இல்லை என்னாதே-இவற்றோடு ஒக்க பரிகணித்தான் இறே -என்று வரும்
சதுர் விம்சதி தத்துவமாய் இருக்கும் அசித்து -பஞ்ச விம்சகன் ஆத்மா -ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்றால்
நம்முடைய உண்மையையும் இவற்றோபாதி இசைந்தான் இறே என்று வந்து முகம் காட்டும் வரும்
வரும் -நிற்குமது இல்லை
இவன் போ என்ற போதும் அதுக்கு உடலாக வரும் அத்தனை
அன்றியே
எண்ணிலும் வரும்
இருபத்தொன்று -இருபத்திரண்டு ,இருபத்து மூன்று ,இருபத்து நான்கு ,இருபத்து அஞ்சு ,இருபத்தாறு -என்று எண்ணினால்
இருபத்தாறு நானே என்று வரும் -என்றுமாம் –

என்னினி வேண்டுவம்
பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுவானான பின்பு எனக்கு ஒரு குறை யுண்டோ –
அவன் இவன் பக்கல் அப்ரதிஷேதததுக்கு அவசரம் பார்த்து இருந்து முகம் காட்டுவானான பின்பு இவனுக்கு ஹித அம்சத்தில்
செய்ய வேண்டுவது உண்டோ -இப்படி இருக்கிற பகவத் ஸ்வரூபத்தை புத்தி பண்ணுகை இ றே இவன் பிரபன்னன் ஆகையாவது –
அவன் தன ஸ்வரூப உபதேசத்தைப் பண்ணி -உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா மாசுச -என்றால் போலே
இவரும் அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்து -என் இனி வேண்டுவம் -என்கிறார்
அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது -அதுக்குப் புறம்பான யோக்யதை அயோக்யதைகள் அகிஞ்சித்கரம்
வேல் வெட்டி நம்பியார் நம்பிள்ளையை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
ப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்காராய் இருந்தது -இவ்வுபாயம் இதர சாதனங்கள் போலே சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ
என்று கேட்க -பெருமாள் தமக்கு -சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லை
ஆக இத்தால் சொல்லிற்று யாயிற்று என் என்னில் -பெருமாள் இஷ்வாகு வம்சராய் ஆசார ப்ரதானர் ஆகையாலே சில நியமங்களோடே சரணம் புக்கார் –
ராஜச ஜாதியன் ஆகையாலே அவன் நின்ற நிலையிலே சரணம் புக்கான் -ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா -ஆகையால் சர்வாதிகாரம் இவ்வுபாயம் -என்று அருளிச் செய்தார்
பகவத் பிரபாவ ஜ்ஞானம் உடையாருக்கு இதுவே அர்த்தம் என்று தோற்றி இருக்கும்
கேவல கிரியா மாத்ரத்துக்கே பலப்ரதான சக்தி உள்ளது என்று இருப்பார்க்கு இவ்வர்த்தம் அனுபபந்தம் என்று தோற்றி இருக்கும் –

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே —
காரணமான பூத பஞ்சகத்துக்கும் உள்ளீடாய் -பஹூச்யாம் -என்கிறபடியே தன விகாசமேயாம் படி இருக்கிற உபகாரகன்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழும்–எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தன் சங்கல்பத்தை பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் தன் பக்கல் ஆசாலேசம் உடையார்
சங்கல்பத்தைப் பற்றி தான் உளனாம் படி இருப்பானான பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை யுண்டோ -என்கிறார்
நல் வாயுவும் -என்றது -தாரகத்வத்தைப் பற்ற
விண்ணுமாய் -இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கும் என்றபடி
விரியும் -பஹூச்யாம் என்றபடி விஸ்த்ருதனாகா நிற்கும்
எம்பிரான் -எனக்கு உபகாரகன் -பிரதமையை த்வதீயமாக்கி எம்பிரானை -என்று கிடக்கிறது

——————————————————————————————-

அவதாரிகை –

கண்டாயே -அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் நெஞ்சே -என்கிறார்

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

எம்பிரானை –
கீழில் பாட்டில் அவன் நீர்மையை அனுசந்தித்து -என் நாயகனானவனை என்கிறார்
எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் –
தம் அளவிலேயாய் அடி அற்று இருக்கை
அன்றிக்கே –
என் குடிக்கு நாயகன் ஆனவனை -என்கிறார்
இவர் இப்படி ஏத்தின வாறே -பிரயோஜனாந்தர பரருடைய அநந்ய பிரயோஜன பரருடைய பாசுரத்துக்கும் வாசி அறியுமவன் ஆகையாலே \
-இப்படி ஏத்துகிறவன் ஆர் -என்று குளிரக் கடாஷித்தான் –
தண் தாமரைக் கண்ணனை
தாநஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்னுமவன் இப்படி கடாஷிக்கைக்கு ஹேது வென்-என்று பார்த்தார்
அருகே கடாஷிப்பிக்கிறார் உண்டாய் இருந்தது
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
கொம்பு போலவும் அரவு போலவும் இருப்பதாய் -அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையை உடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை
அரவு -என்கிற இத்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது -நச்சராவணை -திருச்சந்த விருத்தம் -85- என்னக் கடவது இ றே
அன்றியே
கொம்பை லகூ கரிக்கிற-இடை என்றுமாம் –
எம்பிரானைத் –
அச் சேர்த்திக்கு ஒரு கால் -எம்பிரானை -என்கிறார்
தொழாய்
தொழப் படும் விஷயம் ஒரு மிதுனமாயிற்று இருப்பது
மட நெஞ்சமே —
தொழுது எழு என்னலாம் படி பாங்கான நெஞ்சு அன்றோ -நீ –

———————————————————————————-

அவதாரிகை –

தாம் சொன்ன போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி -நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
நான் விச்லேஷித்த சமயத்திலும் நீ விடாதே கொள் -என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன கார்யத்தை சடக்கென செய்த சத்புத்ரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் மாதா பிதாக்களைப் போலே
இவரும் மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார் -நெஞ்சை –
நெஞ்சமே நல்லை நல்லை —
நல்லை -என்ன அமையாதோ -நல்லை நல்லை என்கிற வீப்சைக்கு கருத்து என் -என்னில்
இவர் தாம் அவன் பக்கல் தூது விடுமா போலே தனக்கு இவர் தூது விடும்படி இவர் தம்மை விட்டு அவன் பக்கலிலே நிற்க வல்ல
நெஞ்சு ஆகையாலே -என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவருடை நீர் இன்னம் செல்லீரோ -திரு விருத்தம் -30—என்னும் படி
முந்துற்ற நெஞ்சு -பெரிய திருவந்தாதி -1–ஆகையாலே -நல்லை நல்லை -என்கிற மீமிசை –
என்னை இப்படி ச்லாகிக்கிறது தான் என்ன
உன்னைப் பெற்றால் என் செய்யோம் –
நீ என்னோடு ஒரு மிடறான பின்பு எனக்குச் செய்ய முடியாதது உண்டோ -நெஞ்சு ஒத்த பின்பு முடியாதது உண்டோ –
பலம் தருகைக்கு ஈஸ்வரன் உண்டு -விலக்காமைக்கு நீ உண்டு –இனிச் செய்ய முடியாதது உண்டோ –
இனி என்ன குறைவினம் –
உன்னைப் பற்றால் என் செய்யோம் -என்று சாத்யாம்சம் உண்டாகச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் –
உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் சாத்யாம்சம் தான் உண்டோ
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்யாம்சம் தான் உண்டோ
ஆனால் பின்னை க்ருத்யாம்சம் என் என்ன -சாத்யாம்சம் உண்டு கிடாய் என்கிறார்
மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
நான் அவனைக் கிட்டக் கொள்ள -வளவேழுலகு -தலை எடுத்து அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -நீ அப்போது அவனை விடாதே கிடாய்
மைந்தனை
இவ்விஷயத்தை -கெடுவாய் -சிலராலே விடப் போமோ –
மைந்து -இனிமை -அழகு -மிடுக்கு –
மலராள் மணவாளனைத்
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் -என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை விடாதே கிடாய் என்கிறது
துஞ்சும் போதும்
அயோக்யன் -என்று அகலும் போதும் -விச்லேஷம் விநாச பர்யாயம் -என்கை
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும் அது இறே-இவர்க்கு துஞ்சுகை யாகிறது
நான் அவனை அகன்று முடியும் அன்றும் -நீ அவனை விடாதே தொடரப் பார் கிடாய்
இவ்வேப்பங்குடி நீரை யன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்கிற விஷயத்தை அன்றோ நான் உன்னை அனுபவிக்கச் சொல்கிறது –
விடாது தொடர் கண்டாய் –

———————————————————————————

அவதாரிகை –

கீழ் எண்ணிலும் வரும் என்ற எண் தானும் மிகையானபடி கண்டாயே -என்று அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

கண்டாய் நெஞ்சே –
நான் சொன்ன படியே பலத்தோடு வ்யாப்தமான படி கண்டாயே
நெஞ்சே
ஜ்ஞான பிரசார த்வாரமான உனக்குச் சொல்ல வேண்டா விறே
கருமங்கள் வாய்க்கின்று
கார்யங்கள் பலிக்கும் இடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு கண்டாயே –
எண்ணிலும் வரும் -என்றது தான் மிகையாம்படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே
இயலுகை -பலிக்கை
பகவத் பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவல்ல காண்-
இத்தலையில் எண் இன்றிக்கே இருக்க பலிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் மேல்
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே —
பிரளயம் கொண்ட ஜகத்துக்கு -அவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்கும் -என்னும் நினைவு உண்டோ
உலகு ஏழும் என்கிற இடம் இரண்டு இடத்திலும் கூட்டிக் கொள்வது
அவன் ஜகத்தை அடைய அளக்கிற போது-நம் தலையிலே திருவடிகளை வைக்கப் புகா நின்றான் -என்னும் நினைவு உண்டோ
இதுக்கு உதாஹரணம் தேடித் போக வேணுமோ ஓன்று
கண்டு கொண்டனை நீயுமே
விலக்குகைக்கு பரிகரம் உடைய நீயே யன்றோ கண்டு கொண்டாயே
பிரளய ஆபத்தில் அவற்றுக்கு ப்ரதிகூலிக்க பரிகரம் இல்லையே -இங்கு அவசரம் இல்லை
அறியில் விலக்குவர்கள் இறே -அசங்கிதமாக வருகையாலே பேசாது இருந்தார்கள் அத்தனை

———————————————————————————————–

அவதாரிகை —

இப்படி ஸூலபனானவன் நம்மை விடான் இறே -என்ன நம் அயோக்யதையை அநு சந்தித்து அகலாது ஒழியில்
நம்மை ஒரு நாளும் விடான் என்று திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

நீயும் நானும் இந்நேர் நிற்கில் –
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் -3–நீயும் -உன்னைப் பரிகரமாக உடைய நானும் -பல அனுபவம் பண்ண விருக்கிற நாம்
இப்படி விலக்காதே இருக்கில் -ந நமேயம் -என்னும் பிராதிகூல்ய மநோரதம் இன்றிக்கே ஒழியில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் –
நிஷித்த அனுஷ்டானம் பண்ணி அகலவிடுதல்
தன்னை ஒழிய பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்
அயோக்ய அனுசந்தானம் பண்ணி அகல விடுதல்
வேறொரு சாதன பரிக்ரஹம் பண்ணி அகல விடுதல்
முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ணி அகலவிடுதல் -செய்ய விட்டுக் கொடான்
நெஞ்சமே சொன்னேன்
திருக் கோட்டியூர் நம்பியைப் போலே பிறர் வைத்து –இதம் தே நாத பஸ்காய—ஸ்ரீ கீதை -18-67—என்றவனைப் போலே படுகிறார்
சொன்னேன்
என்று -த்ரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியை பார்த்து செய்வது காணாமல் சொல்லிக் கொடு நின்றான்
அர்த்தத்தின் கனத்தைப் பார்த்து -கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம்-என்று பதண் பதண்-என்றான் இறே –
இனி பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை –

தாயும் தந்தையுமாய் –
மாதா பிதாக்களைப் போலே பரிவனாய் -அவர்கள் அளவன்றிக்கே
இவ்வுலகினில் வாயுமீசன்
பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் மாதாவைப் போலே -சம்சாரத்தில் ஒக்க விழுந்து எடுக்குமவன்
இங்கு வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
ஈசன்
பிராப்தன் ஆகையால்
அன்றிக்கே இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசன் ஆனான் என்னவுமாம் –
மணி வண்ணன் எந்தையே —
தன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயாந்தர பிரவணன் ஆகாத படி மீட்டு தன் சேஷித்வத்தைக் காட்டி
என்னுடைய சேஷத்வத்தை நிலை நிறுத்தினவன்
தாயும் தந்தையுமாய் -இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன் -நீயும் நானும் இந் நேர் நிற்கில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் -சத்யம் சத்யம் என்கிற படியே இது மெய் –

———————————————————————————–

அவதாரிகை –

கீழ் இவர் அஞ்சினால் போலே விடிந்தது -அயோக்யன் என்று அகலுகிறார் —

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

எந்தையே என்றும் –
எனக்கு பரிவனானவனே என்றும்
எம்பெருமான் என்றும்
எனக்கு வகுத்த ஸ்வாமியே என்றும்
சிந்தையுள் வைப்பன்
எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்த நெஞ்சிலே வைத்தது
நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்து தூஷித்த அளவேயோ
சொல்லுவன்
பிறர் அறியும் படி தூஷித்தேன்
இவ் வஸ்துவை அழிக்கைக்கு நான் ஒரு பாபகர்மா உண்டாவதா
பாவியேன்
சாத்விகனாய் இருப்பான் ஒருவன் தமோ குண அபிபூதனாய் ஒரு கிருஹத்தில் நெருப்பை வைத்து சத்வம் தலை எடுத்தவாறே
அனுதபிக்குமா போலே பாவியேன் -என்கிறார்
நீர் இங்கனே சொல்லுவான் என்
பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே விலஷணர் உடைய
போகய வஸ்துவை அழிக்கை பாப பலம் அன்றோ
எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே —
நினையாவிடில் அரை ஷணம் தரிக்க மாட்டாதே நித்ய ஸூரிகள் நினைத்து அனுபவித்த அவ்வனுபவம் வழிந்து
எங்களுக்கு பரிவன் ஆனவனே ஸ்வாமியானவனே -என்று தங்கள் நெஞ்சிலே வைத்து சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை உடையவனை
நான் என் சொன்னேன்
இவ்வஸ்துவை ஒருவர் நம்பாதபடி அழித்தேன் -என்கிறார் –

———————————————————————————–

அவதாரிகை –

நாம் இதுக்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம் -இனித் தவிரும் அத்தனை -என்று
அவன் குணங்கள் நடை யாடாதோர் இடத்திலே கிடக்க வேணும் -என்று போய்-ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிகிட்டுக் கொண்டு கிடந்தார்
அங்கே வழி போகிறவன் ஒருவன் சுமை கனத்து -ஸ்ரீ மன் நாராயணன் -என்றான்
அச் சொல்லைக் கேட்டு தம்முடைய கரணங்கள் அங்கே பிரவணம் ஆகிறபடியை கண்டு விஸ்மிதர் ஆகிறார்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன்-
ஆழ்வார் பரிசரத்தில் ப்ரஹ்மசாரி எம்பெருமான் பேர் சொல்லுவார் இல்லை
அதில் அர்த்த அனுசந்தானம் பண்ண வேண்டா வாயிற்று இவர் நோவு படுக்கைக்கு -என் போலே என்னில் -விஷ ஹரண மந்த்ரம் போலே
அச்சொல் செவிப்பட்ட அளவில் கண்ணானது என்னை ஒழியவே நீர் மல்கப் புக்கது -நெஞ்சும் அவ்வளவிலே -எங்குற்றாய் -என்று தேடப் புக்கது
மாயமே –
அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டிற்று
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையீ
ஈதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்
அவன் பின்னைச் செய்கிறது என் என்னில்

அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே —
தம் அபிசந்தி ஒழியவே தம்முடைய கரணங்களுக்கு பகவத் அனுபவமே யாத்ரையாம் படி அவன் மேல் விழுகிற காலம் ஆகையாலே
-நல்ல அல்லும் நல்ல பகலும் -என்கிறார் –
திவா ராத்ரம் விபாகம் அற எனக்கு ச்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன் என்னை சுவீகரித்து என்னை விட ஷமன் ஆகிறிலன்
அவன் பேர் மாதரம் கேட்ட அளவில் என் கண்ணானது பனி மல்கா நின்றது -நெஞ்சானது தேடா நின்றது -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்கிறார் –
இடைவீடின்றி
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ச்நேஹியா நின்றான்
என்னை விடான் நம்பி நம்பியே
அபூர்ணனான என்னைப் பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி
என்னை ஒரு மதிப்பனாக நினைத்து நம்பி அல்லும் நன் பகலும் இடைவீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே
நம்பியே
இவனையே பரி பூரணன் என்கிறது
சம்சாரி சேதனனைப் பெற்று பெறாப் பேறு பெற்றனாய் இருக்கிற இவனையே பரிபூரணன் என்கிறது லோகத்தார்

———————————————————————————-

அவதாரிகை –

நீர் தாம் இங்கனே கிடந்தது படா நில்லாதே -அவ்விஷயத்தை மறந்து சம்சாரிகளோ பாதி
உண்டு உடுத்து திரிய மாட்டீரோ என்ன நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பதோ என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

நம்பியைத்
கல்யாண பரிபூர்ணனை
பரம பதத்திலே குணங்களுக்கு சத்பாவமே இறே உள்ளது
இங்கே இறே குணங்களுக்குப் பூர்த்தி
தென் குறுங்குடி நின்ற
கலங்கா பெரு நகரை கலவிருக்கையாக உடையவன்
அத்தை விட்டு என்னைப் பற்ற திருக் குறுங்குடியிலே அவசர ப்ரதீஷனாய் கொண்டு ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றவன்
நம்பியைத் -தென் குறுங்குடி நின்ற
குணத்திலே குறை உண்டாதல்
தூரஸ்தன் என்னுதல் -செய்து நான் மறக்க வேணுமே
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
வடிவு அழகிலே குறை உண்டாய்த்தான் மறக்கவோ
அச் செம்பொன்
உபமான ரஹிதமாய்-ஓட்டற்ற செம்பொன் போலே நிரவதிக தேஜோ ரூபமாய் வாங்மனஸ்ஸூ க்களாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
அவ வடிவு அழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது
ஆக்கரான இவருகில் வானவரைப் போல் அன்றியே மேலான நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கும் தானே கடவனாய்
அவர்களுக்கு அனுபாவ்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை
எம்பிரானை
அவர்கள் அனுபவிக்கும் படியை எனக்கு உபகரித்தவனை
என் சொல்லி மறப்பேனோ –
அபூர்ணன் என்று மறக்கவோ
அசந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரகன் அன்று என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பன் -என்கிறார் –

————————————————————————-

அவதாரிகை

ஆனாலும் வருந்தியாகிலும் மறந்தாலோ வென்ன-நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு
நிரந்தர வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியே –1-10-10-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
நான் சேதனனாய் நினைத்தேனாகில் அன்றோ மறப்பது
நினைத்தேன் நானான வன்று இறே மறக்க இடம் உள்ளது
ஜ்ஞானத்திருக்கு ஆஸ்ரயமாமது இறே அஜ்ஞ்ஞானத்துக்கும் ஆஸ்ரயம் ஆவது
அசித் கல்பனாய் கிடீர் நான் இருந்தது –

மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற என்னுள்ளே-
இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும்
நினைவையும் என் தலையிலே ஏறிட்டு
பிறந்த ஜ்ஞானத்துக்கு விச்சேதம் ஏதும் வர ஒண்ணாது என்று பார்த்து
அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு
தன்னைப் பற்றி எனக்கு வரும் விச்ம்ருதி போம்படி என் ஹிருதயத்திலே நித்ய வாசம் பண்ணுகிறவனை
மன்னினான் தன்னை
புறம்பே அந்ய பரதை உண்டு என்று தோற்ற இருக்கிறிலன்
மறப்பனோ இனி யான் என் மணியே
பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ
மறப்பேனோ இனி
மறவாமைக்கு பரிகரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாப் போலே இறே மேல் உள்ள காலமும் மறக்க விரகு இல்லாத படியும் –
யான்
அநாதி காலம் -மறந்தேன் உன்னை முன்னம் –பெரிய திருமொழி -6-2-2-என்கிறபடியே விஸ்மரித்துப் போந்த நான்
என் மணியையே –
பெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கை புகுந்து புகரை உடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை
எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பனோ –

—————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இப்பத்திக் கற்றவர்கள் நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பெறுவார் -என்கிறார்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

மணியை
முந்தானையில் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து இருக்கும் சௌலப்யம் சொல்லுகிறது
தென் குறுங்குடி நின்ற -என்கிற விடத்தில் சௌலப்யம்
வானவர் கண்ணனைத்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதி -என்ற மேன்மையைச் சொல்லுகிறது
தன்னதோர் அணியை
அச் செம்பொன்னே திகழும் திருமூர்த்தி -என்கிற வடிவு அழகை நினைக்கிறது
இம் மூன்றும் கூடின பசும் கூட்டாயிற்று -பரதத்வம் ஆகிறது
தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரத்துள் இவை பத்து –
ஆழ்வார் அருளிச் செய்ததாய்
நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் என்று சொற்கள் தானே என்னைக் கொள் என்னைக் கொள் என்று
மிடைந்த சொல் 1-7-11–என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் -என்னுதல்
சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்று வாசிகமான அடிமையைச் சொல்லுதல்
உடன் தணிவிலர் கற்பரேல்
சாபிப்ராயமாக கற்பராகில் –
தணிவு ஆகிறது -மெத்தென்கை
வரில் பொகடேன் -கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே ஸ்ரத்தை மாறாதே கற்பராகில்
கல்வி வாயுமே
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஜ்ஞானமாகில் பகவத் விஷயத்தை பற்றி அல்லது இராமையால் -இத்தை அப்யசிக்க -இதுக்குப் பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும்
கல்வி வாயுமே
கல்வி தானே பிரயோஜனமாம் -என்றுமாம் –

இத் திருவாய் மொழியில் மேல் பரக்க அருளிச் செய்யப் புகுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண முதல் பாட்டிலே அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டும் என்றார்
மூன்றாம் பாட்டில் -கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் -என்றார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நெஞ்சு தொழுத வாறே நெஞ்சைக் கொண்டாடினார்
அஞ்சாம் பாட்டில் கீழ் எண்ணிலும் வரும் என்றது பலத்தோடு வ்யாப்தமான படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்
ஆறாம் பாட்டில் நாம் இருவரும் இப்படி இருக்கப் பெறில் நமக்கு ஒரு அனர்த்தமும் வாரா என்றார்
ஏழாம் பாட்டில் கீழ் இவர் அஞ்சினபடியே விடிந்த படி சொன்னார்
எட்டாம் பாட்டில் திரு நாம ஸ்ரவணத்தாலே தம்முடைய கரணங்களுக்கு பிறந்த விக்ருதியைச் சொன்னார்
ஒன்பதாம் பாட்டில் விக்ருதர் ஆகாதே மறந்தாலோ என்ன மறக்க ஒண்ணாது என்றார்
பத்தாம் பாட்டில் வருந்தியாகிலும் மறந்தாலோ என்ன என் ஹிருதயத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொன்னார்

————————————————————————————————-

சர்வ ஸ்மாத் பரன் என்றார்
பஜநீயன் என்றார்
அவன் தான் ஸூ லபன் என்றார்
ஸூலபனானவன் அபராத சஹன் என்றார்
அவன் சீலவான் என்றார்
ஸ்வாராதன் என்றார்
நிரதிசய போக்யன் என்றார்
அவனுடைய ஆர்ஜவ குணம் சொன்னார்
சாத்ம்ய போகப்ரதன் என்றார்
இப்படி ஏவம் பூதனானவன் நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பான் ஒருவன் என்றார்
ஆகையாலே அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார் –

————————————————————————-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளிலே சரணம் புக்கார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்தில்ய்ம் தக்தபட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணர் ஆகிறார்
எட்டாம் பத்தால் இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்தபட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை யறாத படியாலே என்று பார்த்து -அவற்றில் நசையில்லை என்கிறார்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை யற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் -என்று அதிசங்கை பண்ண -நான் நாராயணன் சர்வ சக்தி உக்தன்
-உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் -என்று அருளிச் செய்ய அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்
பத்தாம் பத்தால் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி -இவருக்கு
அர்ச்சிராதி கதியையும் காட்டி -இவருடைய அபேஷித்த சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார்

—————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: