திருவாய்மொழி – -1-9- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

கீழில் திருவாய் மொழியில் -அவனுடைய ஆர்ஜவ குண அனுசந்தானம் பண்ணினார்
இப்படி அனுசந்தித்தார் விஷயத்தில் சர்வேஸ்வரன் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இதில்
சர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியாய் பரம ரசிகனாய் இருக்கிறவன் ஆழ்வார் பக்தியிலே துவக்குண்டு இவரோடு ஏக ரசனாய் இருந்தான் –
ஆழ்வார் ஆகிறார் -கீழில்ஆர்ஜவ குண அனுசந்தானத்தாலே அவன் பக்கலிலே பெரிய விடாயை உடையரானார் –
இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று பார்த்து -அர்ஜுனன் விபூதி ஸ்ரவணத்தாலே -விபூதிமானவானவனைக் காண வேணும் என்று
அபேஷிக்க-அதுக்கு உறுப்பாக -திவ்யம் ததாமி -சஷூ -என்கிறபடியே திவ்ய சஷூஸ்சைக் கொடுத்து வைச்வரூப்யத்தைக் காட்டினால் போலே
இவருக்கு தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடையைப் பிறப்பித்து தன்னை அனுபவிப்பிக்கிறான்
நித்ய விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் போலே பரிமாறக் கோலி-அதாவது – பிராட்டிமாரோடு பரிமாறுவது -மகிஷிகளான முறையாலே
-திருவடியோடு பரிமாறுவது -வாஹனமான முறையாலே -திரு வநந்த ஆழ்வானோடு பரிமாறுவது படுக்கை யான முறையாலே
-இப்படி அவர்களோடு ஒரோ முறையில் பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவர் ஒருவரோடு இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்-
அது தன்னை குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிக்கே பொறுக்கப் பொறுக்கப் பரிமாற-இவரும் அவனை
சர்வ இந்த்ரியத்தாலும் சர்வ ஆகாரத்தாலும் யதா மநோ ரதம் அனுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதியாலே அவனைப் பேசி அனுபவித்தார்

——————————-

அவதாரிகை –

ஸ்ருஷ்ட்யாதி-ஹேது பூதனுமாய் -சர்வ அந்தராத்மாவுமான
கிருஷ்ணனானவன் -என்னுடைய பர்யந்தத்தை விட்டுப் போகாதபடி யானான் -என்கிறார்
அவனுடைய குண அனுபவத்தோடு விபூதி அனுபவத்தோடு வாசி இல்லை இறே இவர்க்கு –
முதல் திருவாய் மொழியிலே பரக்க அனுபவித்த இத்தை விசதமாய் இருக்கையாலே திரள அனுபவிக்கிறார்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும் யவையும் யவரும் –
சித் வர்க்கத்தையும் அசித் வர்க்கத்தையும் திரளச் சொல்கிறது
தன்னுள்ளே ஆகியும் –
இவையும் அவையும் -என்று இங்கனே பிரித்து வ்யவஹரிக்க ஒண்ணாதபடி -சதேவ -என்கிறபடியே -தான் என்கிற சொல்லுக்கு
உள்ளேயாம்படி தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக்கியும் –
பஹூச்யாம் -என்கிறபடியே தன் பக்கலிலே நின்றும் பிரிந்து நாம ரூப விபாக அர்ஹமாம் படி பண்ணியும்
காக்கும்
ஸ்ருஷ்டமான பதார்த்தங்களை ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் படி
அவையுள் தனி முதல்
ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் -இவை பிரவ்ருத்தி நிவ்ருத் யாதிகளுக்கு யோக்யமாம் படி அந்தராத்மாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
இது பின்னை ஆக்கியும் என்று சிருஷ்டியைச் சொன்ன போதே சொல்லிற்று ஆகாதோ -என்னில்
தத் அநு பிரவச்ய -என்று இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக பண்ணும் அநு பிரவேசத்தைச் சொல்லுகிறது அங்கு
இங்கு இவற்றுக்குச் சொல்லும் வாசக சப்தம் தன்னளவிலே பர்யவசிக்கும் படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

எம்மான்
தன் விபூதி விஷயமாக தனக்கு உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன்
கண்ணபிரான்
இப்படி இருக்கிறவன் தானே கிருஷ்ணன் – என்கையும்
அவன் தானே கண்ணுக்கு தோற்றி நின்று உபகரிக்கும் என்கையும்
என்னமுதம்
தேவர்கள் அதிகாரிகளாம் அம்ருத்தத்தில் வ்யாவ்ருத்தி
சுவையன்
பரம ரசிகன்
இந்த ரசிகத்வத்துக்கு ஊற்று வாய் சொல்லுகிறது
திருவின் மணாளன்
இவருடைய அமிர்தம் ஒரு மிதுனமாயிற்று
என்னுடைச் சூழல் உளானே –
பெரிய பிராட்டியார் -அகலகில்லேன் இறையும் -என்னப் பிறந்தவன்
என் பரிசரத்தில் வர்த்திக்கை தன் பேறாக வர்த்தியா நின்றான்
இப்படி பரத்வ-சர்வேஸ்வரத்வ- சௌலப்யங்கள் காட்டிய இடம் முன்பே உண்டே –
யஸ்ய பிரசாதே சத்தம் ப்ரசீதே யுரிமா -பிரஜா ச ராமோ வான ரேந்த்ரஸ்ய பிரசாதம் அபி காங்ஷதே -என்கிறபடியே
லோக நாத புரா பூத்வா ஸூகிரீவம் நாதம் இச்சதி –
தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதரானவர் ஸூக்ரீவனை நாதனாக இச்சியா நின்றார்
கிடைப்பது கிடையாது ஒழிவது-தாம் முந்துற முன்னம் இச்சியா நின்றார் –

————————————————————————————

அவதாரிகை –

என் பரிசரத்தில் வர்த்தித்தவன் -அது சாத்மித்தவாறே என் அருகே வந்து நின்றான் -என்கிறார் –

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

சூழல் பல பல வல்லான் –
இப்போது சூழல் என்கிறது அவதாரத்தை -அவதாரத்தை சூழல் என்பான் என் -என்னில் -சேதனரை அகப்படுத்திக் கொள்ளுமதாகையாலே –
ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் பற்ற -பல பல -என்கிறது
வல்லான் –
கர்ம நிபந்தனமாக பிறக்கும் அவனுக்கும் முடியாத பிறவிகளை பிறக்க வல்லான்
கர்மம் செய்ய வல்லது அன்று இ றே -அனுக்ரஹம் செய்ய வல்லது -அவற்றிலே ஒரு சூழல் சொல்லுகிறார்
தொல்லை-
வராஹா கல்பத்தின் ஆதியிலே
யம் காலத்து
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின காலம் இறே -அத்தைப் பற்ற அம் காலம் -என்கிறார்
உலகை
ஒரு திருவடி ஒரு திரு வநந்த ஆழ்வானுக்காகத்தான் இப்படி படப் பெற்றதோ -சங்கல்ப்பத்துக்கும் பாந்தம் போராத பூமிக்காகக் கிடீர்

கேழல் ஒன்றாகி
தன் மேன்மையோடு அணைந்து இருப்பதொரு வடிவை தான் கொள்ளப் பெற்றதோ
ஒன்றாகி –
பின்பு சர்வ சக்தியான தானே -இவ்வடிவைக் கொள்ள -எந்நாளும் ஒண்ணாத படி அத்விதீயமாய் இருக்கிறபடி
பூமி பிரளயத்திலே அகப்பட்ட வாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்ட வித்தனை அவன் தான்
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவிக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கும்
பன்றியாம் தேசு -நாச்சியார் திருமொழி -11-8–இறே
இடந்த-
அஜ் ஜாதிக்காக உள்ளதொரு குணமாயிற்று செருக்கு
ஸ்ரீ யபதி அவ்வடிவைக் கொண்டால் சொல்ல வேண்டா விறே
அண்ட பித்தியில் சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறினான்
கேசவன் –
பிரசச்த கேசவன்
அப்போதை திருமயிரும் உளை மயிருமாய் நின்ற நிலை
என்னுடை யம்மான்
சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தவன் –
வேழ மருப்பை ஒசித்தான்
குவலயா பீடத்தினுடைய மருப்பை அநாயாசேன முறித்தவன்
அப்படியே என்னுடைய மத களிறு ஐந்தினையும் சேரி தெரியாமல் பண்ணினவன்-முதல் திருவந்தாதி -47- -விரோதி நிரசன சீலன் -என்றபடி
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
தனியே குவலயா பீடத்தோடு பொருதவன் -ப்ரஹ்ம ருத்ராதிகள் மநோ ரதத்துக்கும் அவ்வருகு ஆனவன்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான்
அந்த ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கத் திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் -ஆழம் -உறுத்தாமைக்கு-
நெடுமை -தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி வேண்டினபடி கண் வளர்ந்து அருளுகைக்கு
அவன் என் அருகில் இலானே
அவர்களைப் போலே எனக்கு அதூர விப்ரக்ருஷ்டமாகவும் நிற்கிறிலன்

———————————————————————————-

அவதாரிகை –

திருவடி -திரு வநந்த ஆழ்வான் -பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையில் பரிமாறுமவன்
-என்னளவில் ஒரோ வகையில் பரிமாறி விட மாட்டுகிறிலன்-என்கிறார் –

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
அருகல்–குறைகை-கேடு -இல் இல்லாமை -குறைவின்றிக்கே ஆய -ஆன-நன்றான
ஹேய ப்ரத்ய நீக முமாய் கல்யாணை கதா நமுமான -நிரவதிக குணங்களை யுடையனுமாய் -அவர்கள் சத்தாதிகள்
தன் அதீநமாம் படி இருக்கிறவன்
கருகிய நீல நன்மேனி வண்ணன்-கருகிய நீல நல் மூன்ன்று விசேஷணங்கள்

கறுத்து நெய்தது பேச்சுக்கு அவிஷயமாம் படி விலஷணமான திரு மேனியில் நிறத்தை யுடையவன்
அவர்களை சதா அனுபவம் பண்ணி வைக்கும் போது படி விடும்படி
செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்கு பிரகாசகங்களான திருக் கண்களை யுடையவன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும்
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து வா என்று அழைத்தால் அவனுடைய அங்கீ காரத்தால் உண்டான
ஹர்ஷத்தாலே பெருக்காறு சுளித்தால் போலே சுழித்துத் தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையனாய் கொண்டாயிற்றுத் தோற்றுவது-
அவனும் நாம் இவனை மேற் கொள்ளப் பெற்றோமே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடு யாயிற்று மேற் கொள்ளுவது –
பூ மகளார் தனிக் கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-போக்யதைக வேஷையான பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் என்றால்
இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியால் வந்த ரசத்தை
தந்து விடுகிறிலன் என்னளவில் –நித்ய ஸூ ரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்
உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன்-என்று தோற்ற இருக்கிறிலன்
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தே யாமித்தனை
தண்டாமம் செய்து -1-7-7–என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தை பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ் விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினான் என்கிறார் –

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் என்னோடு உடனே-ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் -என்று அந்வயம்

————————————————————————–

அவதாரிகை –

மேன்மை அது –அகடிதகட பா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே
என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் -என்கிறார் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

உடன் அமர் காதல் மகளிர் –
உடனே அமர வேண்டும்படியான காதலை உடைய பிராட்டிமார் -அகலகில்லேன் இறையும் -என்றாயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் ஆர் என்னில்
திருமகள்-
சர்வேஸ்வரனுக்கு பிரதான மஹிஷியாய்-பட்டத்துக்கு உரியவளாய் – ந கச்சித் ந அபராத்யதி -என்று இருக்கும் பிராட்டி யார்
மண் மகள்
முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய் -பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி
ஆயர் மடமகள்
அனுபவ ஸூகம் தானாய்-தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்தில் குற்றம் படாதபடி இருக்கும் நப்பின்னைப் பிராட்டி
திரு மகள் -அவன் ஐஸ்வர்யம் -மண் மகள் -அது விளையும் பூமி –ஆயர் மட மகள் -அத்தை புஜிக்கிற போக்தா வானவள் -என்றுமாம்
என்று இவர் மூவர் –
மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித் தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர் –
ஆளும் உலகமும் மூன்றே
அவர்களுடைய படுக்கைப் பற்று இருக்கிறபடி
த்ரிவித சேதனரையும் சொல்லுதல்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களைச் சொல்லுதல் –

உடன் அவை ஒக்க விழுங்கி-
அவற்றிலே ஒன்றும் பிரிகதிர் படாதபடி ஏக காலத்திலேயே தன் திரு வயிற்றிலே வைத்து
விபூதி த்வ்யமும் ரஷ்ய வர்க்கம் என்றால் திரு வயிற்றிலே வைக்குமது பிரளயத்துக்கு கர்மீபவிக்கும் எல்லையிலே யாகிறது
யாலிலைச் சேர்ந்தவன் –
சகல லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே சாய்ந்து அருளினவன் -அகதி தகட நா சாமர்த்தியத்தை உடையவன்
எம்மான்
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன்
பத்ரா லம்பனம் பண்ணிக் கிடீர் அடிமை கொண்டது
கீழில் அகதி தகட நா சாமர்த்தியத்துக்கு மேலே ஒரு அகடி தகட நா சாமர்த்தியமாயாயிற்று இது
ந நமேயம் என்று இருந்த என்னை அனந்யார்ஹம் ஆக்கின படி
கடல் மலி மாயப் பெருமான்
திருப் பாற் கடலிலே குறைவற வந்து வர்த்திப்பானாய் -ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடைய சர்வேஸ்வரன்
அன்றிக்கே
கடலில் காட்டில் மிக்க ஆச்சர்யத்தை யுடைய சர்வேஸ்வரன் -என்றுமாம்
கண்ணன் –
அந்த ஆச்சர்யங்கள் எல்லாம் தன் பக்கலில் காணலாம்படி இருக்கிற கிருஷ்ணன்
என் ஒக்கலையானே
யசோதைப் பிராட்டி -மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

—————————————————————————–

அவதாரிகை –

விரோதி நிரசன சீலனாய் சர்வ ஸ்ரஷ்டா வானவன் வந்து என்னுடைய ஹ்ருத்யச்தனானவன்-என்கிறார் –

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

ஒக்கலை வைத்து –
பரிவுடைய யசோதைப் பிராட்டியைப் போலே தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து
முலைப்பால் உண் என்று
முலைக் கண் நெறித்து-கிலேசப் படா நின்றேன்
உண் -என்று உறுக்கிக் கொடுக்க
தந்திட
அஸ்மான் ஹந்தும்-என்னுமா போலே அந்நஞ்சு தமக்குக் கொடுத்தால் போலே இருக்கையாலே -தந்திட -என்கிறார் ஆதல் –
தருகை -கொடுக்கையாய் வழங்குகையாலே-தந்திட என்கிறார் ஆதல் –
வாங்கி
அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் உண்ட படி
செக்கஞ்ச்செக –
செக்கம் என்று மரணமாய் -அவள் கோலின மரணம் அவள் தன்னோடு போம்படி -என்னுதல்
அன்றிக்கே -செக்கம்-என்று சிவப்பாய்-அத்தாலே நினைக்கிறது-சீற்றத்தை யாய்–அவள் சீறின சீற்றம் அவள் தன் பக்கலிலே பலிக்கும்படி -என்னுதல்
இலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து -என்று சிவப்பைச் சீற்றமாக பிரயோகித்தது இ றே
அன்றிக்கே -செக்கஞ்ச்செக –என்றது செக்கச் சிவக்க -என்றாய் -முலை கொடுத்த உபகார ச்ம்ருதியாலே திரு அதரத்திலே
பழுப்புத் தோற்ற ஸ்மிதம் பண்ணின படியாதல்-மழலை மென்னகை இடையிடை அருளா வாயிலே முலையிருக்க என் முகத்தே-பெருமாள்திருமொழி -7-7-
அன்று –
ஜகத் உபசம்ஹாரம் பிறக்கப் புக்க அன்று
தனி இடத்தில் இவள் நலிய வந்த அன்று
அவள் பாலுயிர்
அவள் பால் என்றது -அவள் இடத்து என்றபடி -அவளுடைய ஹேய சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர்
செகவுண்ட பெருமான்
செக -முடியும்படி –
அன்றிக்கே அவள் பாலையையும் உயிரையும் முடியும்படி என்னவுமாம் –
முலையூடுயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் -என்னக் கடவது இ றே
முலையால் நினைக்கிறது பாலை இ றே அங்கு
முலை யுண்டான் என்றால் முலைப்பால் உண்டான் என்றபடி இ றே
உண்ட பெருமான்
அவள் முலை உண்டு அவளை முடித்து ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்தவன்
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரச்யமாசீ ஜ்ஜ்கத் குரோ –என்கிறபடியே –
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஓக்கவும் தோற்றிய வீசன்
ஸ்வ கோஷ்டிக்கு உபகாரகனாக பிரசித்தனாய் இருக்கிற ருத்ரனோடு கூட -அவனுக்கு ஜனகனான சதுர்முகனும்
அவனுக்கு இவ்வருகான இந்த்ரனும் தொடக்கமாக இவ்வருகு உள்ளார் எல்லாரையும்
அத்திக்காயில் அறுமான் போலே ஒன்றாக அரும்பிக்கும் படியாக பண்ணின சர்வேஸ்வரன் –
-பல கொசுக்கள் ஒரே நேரத்தில் அத்திக்காயில் ஓசை எழுப்புவது போலே
மாயன் –
ஸ்ருஷ்டமான ஜகத்திலே அனுபிரவேசம் முதலான ஆச்சர்யத்தை உடையவன் -சர்வ சரீரியாய் இருக்கிற சர்வேஸ்வரன்
என் நெஞ்சின் உளானே –
என் சரீரத்திலே ஏக தேசத்தைப் பற்றி நின்றான் -நெஞ்சிடந்தான் –பெரிய திருமொழி –2-4-7-

————————————————————————————————–

அவதாரிகை –

சர்வ அந்தராத்மா வானவன் என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் -என்கிறார் –

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானும் காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

மாயன் என் நெஞ்சினுள்ளான் –
இது என்ன பெறாப் பேறு-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவன் -என்னுடைய ஹ்ருதயஸ்தனானான்
இது என்ன சேராச் சேர்த்தி
மற்றும் யவர்க்குமதுவே
மற்றும் ஆரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ
நீர் பெற்ற பேறு தான் என்னில்
காயமும் சீவனும் தானும்
இது என்கிறார் மேல் –
காயமும் சீவனும் தானே -தேவ மனுஷ்யாதி சரீரங்களும் அவ்வவ சரீரஸ்தமான ஆத்மாக்களும் அவன் இட்ட வழக்கு
காலும் எரியும் அவனே
காற்றும் தேஜஸ் தத்வமும் இரண்டுக்கும் அஞ்சுக்கும் உப லஷணமாய் பூத பஞ்சகமும் அவன் இட்ட வழக்கு –
சேயன் அணியன்
சேயன் -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு தூரச்தனாய் இருக்கும்
அணியன் -அவனாலே அவனைக் காண்பார்க்கு கை புகுந்து அணீயனாய் இருக்கும்
யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
தூரச்தனாம் படிக்கு எல்லை சொல்லுகிறது
எத்தனைஎனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் கண்ணுக்கு விஷயமாகி அன்றிக்கே மநோ ரத்தத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
தூயன் –
இப்படி இருக்கிறவன் யசோதாதிகளுக்கு-யதி சக் நோஷி -என்னலாம் படி இருக்கும்
துயக்கன் மயக்கன்
உகவாதார்க்கு சம்சய விபர்யங்களைப் பிறப்பிக்கும்
துயக்கு -மனம் திரிவு -அருவினையேன் -1-5-1–என்று அகன்ற என் மனசை திரிய விட்டு
உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -1-5-5-என்னும்படி திரிய விட்டு என்னுடன் கலந்தவன்
மயக்கம் -கலத்தலும் கூடலும்
ஐதிக்யம் -பட்டர் சாஸ்திர ஞானம் இல்லாத ஒரு வைஷ்ணவர் இடம் பரிந்தது -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் -எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று நீர் சொல்வதையே விச்வசித்து இருந்தேன் என்ற -ஒரு சாஸ்திர ஞானம் இல்லாத வைஷ்ணவர் இடம் பரிந்தது-
என்னுடைத் தோளிணை யானே
என் அளவிலே அங்கன் அன்றிக்கே திருவடி திருத் தோளிலே இருக்குமா போலே இரா நின்றான்

——————————————————————————————

அவதாரிகை –

நான் உகந்த படி அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான் -என்கிறார்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
அபிமத விஷயம் இருந்தவிடத்துக்குப் போவார் அவர்கள் உகந்தபடியே பூசி புலர்த்தி ஒப்பித்துக் கொண்டு போமா போலே
ஆழ்வார் உகந்தபடியே திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் வந்தானாயிற்று
இவர் உகப்பதும் அதுவே -அவன் கொடுப்பதுவும் அதுவே இ ரே
புள்ளூர்தி கள்ளூறும் துழாய் கொயல்வாய் மலர் மேல் -திருவிருத்தம் -24-மனத்தை உடையராய் இருப்பர்
திருத் தாயார் சொல்லும் போது-வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் –2-4-5-என்னும்
இவர் தாம் -விரை மட்டலர் தண் துழாய் –2-4-9-என்னும் -கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு -4-2-10-என்று மெலியும்-
அவனும் -தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் –6-8-6-என்று இவர்க்கு அல்லது கொடான்
தோளிணை மேலும்
ஸூ காடம் பரிஷச்வஜே -என்கிறபடியே அணைக்கக் கணிசிக்கிற திருத் தோள்களிலும் –

நன் மார்பின் மேலும்
அணிப்பிக்கும் அவள் இருக்கிற திரு மார்பிலும்
சுடர் முடி மேலும்
அணைத்துக் கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்த வாறே தன்னுடைய சேஷித்வ பிரகாசகமாய் இருக்கிற திரு அபிஷேகத்திலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
தன்னுடைய சேஷித்வத்தை ஸ்திதிப்பிக்கிற திருவடிகளிலும் சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன்
தோளிணை -இத்யாதிகளுக்கு பட்டர் -வீரராய் இருப்பர் முற்பட ஆயுதத்துக்கு இடுவார்கள் -அப்படியே திருத் தோள்களுக்கு இட்டான் –
பிரணயிகளாய் இருப்பார் அனந்தரம் அபிமத விஷயத்துக்கு இடுவார்கள் –அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கிற
கோயில் கட்டணத்துக்கு கொடுத்தான்
ஆயுதத்துக்கும் அபிமத விஷயத்துக்கும் இட்டால் பின்னைத் தந்தாம் விநியோகம் கொள்ளும் இத்தனை இ றே-ஆகையால் தான் சூடினான்
சேஷம் பின்னை அடியார் இ றே கொள்ளுவார் -ஆகையால் திருவடிகளுக்குச் சாத்தினான் -ஆபத்துக்கு உதவுவார் அடியார் இ றே
-தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் -6-9-4-அடியார் இ றே
நம்முடைய ஆபத்துக்களுக்கு திருவடிகளே துணை யானால் போலே காணும் அவனுடைய ஆபத்துக்களுக்கும் திருவடிகளே
துணையான படி -என்று அருளிச் செய்வர் –

கேளிணை ஒன்றும் இலாதான் –
கேள் -என்ற இத்தை கேழ் -என்றாக்கி அதாவது ஒப்பாய் -இணை என்றும் ஒப்பாய் -திரளவும் தனித்தனியும் ஒப்பில்லாதான் -என்னுதல்-
அன்றிக்கே -கேள் -என்று உறவாய் -சேர்ந்த ஒப்பில்லாதான் -என்னுதல்
கிளரும்
ஆற்றுப் பெருக்குப் போலே மேல் மேல் எனக் கிளரா நிற்பதாய் நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
சுடர் ஒளி மூர்த்தி
சுடர் என்றும் -ஒளி-என்றும் பர்யாயம்-இரண்டாலும் மிக்க ஒளி என்றபடி -ஒளி பேர் அழகு
மூர்த்தி
கீழ்ச் சொன்ன ஒப்பனை மிகையாம் படியான வடிவை உடையவன்
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –
நாள் தோறும் வந்து கிட்டும் அத்தனை அல்லது கால் வாங்க மாட்டுகிறிலன்
என்னுடைய ஸ்திதி விஷயம் ஆனான் -என்னுதல்
அன்றிக்கே வாசி திஷ்டன் என்கிறபடியே என்னுடைய வாக் இந்த்ரியத்துக்கு விஷயமானான் என்னுதல் –

———————————————————————————-

அவதாரிகை –

சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் பிரமாணங்களாலே-காணக் கடவ வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான் என்றார் –

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள ஜ்ஞான சாதனமான வித்யா விசேஷங்களுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
ஆவி -என்கிறது -அர்த்தத்தை -ஆக்கை என்கிறது சப்தத்தை
இவ்வர்த்தத்தை இச் சப்தம் காட்டக் கடவது -என்று நியமித்து விட்டான் அவனாயிற்று
ஆக சப்தார்த்த சம்பந்தம் அவனிட்ட வழக்காயிற்று
அழிப்போடு அளிப்பவன் தானே
மந்த மதிகளானச சேதனருடைய பிரதிபத்தி தோஷங்களாலும்-லேகக தோஷங்களாலும் பாட பேதங்களாலும் இவை உருமாயும் அளவிலே
சம்ஹரித்தும் அபேஷித்த சமயத்தில் ஸ்ருஷ்டித்தும் போருகிறான் தானே -அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைச் சொல்கிறது -என்பாரும் உண்டு

பூவியில் நால் தடம் தோளன்
பூவால் அல்லது செல்லாத படி ஸூ குமாரமாய் -கல்ப தரு பணைத்தால் போலே நாலாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களை உடையவன் –
பூவியல் -பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல் -பூவை ஒழியச் செல்லாத சௌகுமார்யத்தை உடையவன் என்னுதல்
பொரு படை
பணைத்து பூத்த கல்பக தரு போலே யாயிற்று -யுத்தத்துக்கு பரிகரமான திவ்ய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும் படி
-பொரு படை -யுத்த சாதனங்கள் ஆனவை
யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக்
அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிக்கும் வடிவு அழகு
நன் மேனி –
காவி வடிவு அழகுக்கு உபமானமாக நேர் நில்லாமையாலே -நன் மேனி -என்கிறார் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே —
இவர் கண் வட்டம் ஒழிய புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாமே
பெரு வெள்ளத்தில் ஒரு சுழி போலே திருக் கண்கள் –
என் கண்ணினுள் உளானே —
பிராக்ருத விஷயங்களை அனுபவித்துப் போந்த என் கண்ணுக்கு தன்னை விஷயம் ஆக்கினான் –

——————————————————————————————–

அவதாரிகை –

கண்ணில் நின்ற நிலை சாத்மித்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான் -என்கிறார்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் –
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான்
ந சஷூஷா க்ருஹ்யதே -என்கிற மரியாதை குலைந்தது
அவன் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயம் ஆக்கினான் ஆனால் நீர் பின்னைச் செய்தது என் என்னில்
காண்பன் –
நானும் கண்டு அனுபவியா நின்றான் -இவ் விலஷண விஷயத்தை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரான படி எங்கனே என்ன
அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்
அவன் தன் திருக் கண்களாலே என் தோஷம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம் படி குளிரக் கடாஷியா நின்றான்
ஆனாலும் இந்த்ரியங்கள் என்று சில உண்டே காட்சிக்கு பிரதி பந்தகங்கள் -அவை செய்தது என் என்ன
ஐம்புலனும் அவன் மூர்த்தி
காட்சிக்கு பிரதி பந்தகங்களான ச்ரோத்ராதிகளும் அவன் இட்ட வழக்காம் படி அவனுக்கு சரீரவத் விதேயமாய் அங்கே படை யற்றன
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி –
திரு நாபீ கமலத்தில் அவ்யவதா நே ந பிறந்து எல்லாரிலும் விசஜாதீயமான ஜென்மத்தை உடையனாய் தனக்கு இவ்வருக்கு உள்ளவற்றை
உண்டாக்கும் இடத்தில் சர்வேஸ்வரனை கேள்வி கொள்ள வேண்டாத படி நிரபேஷனான சதுர்முகனை லலாட நேத்ரனான
ருத்ரனோடே உண்டாக்கி-அவளவிலே பர்யவசியாதே சத்வ பிரசுரரான தேவதைகளோடு லோகங்களை உண்டாக்கினவன்
நெய்யுண்ணி-என்னுமா போலே ஆக்கி என்றது ஆக்கும் ஸ்வபாவன் -என்றபடி
என் நெற்றி உளானே —
கர்ம அனுகுணமாக ஜகத்தை சிருஷ்டித்து விட்டான் –
பிரயோஜன நிரபேஷமாக என் நெற்றியிலே புகுந்து நின்றான் –

—————————————————————————————-

அவதாரிகை –

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்கு அவசர ப்ரதீஷராய் தடுமாறும் படி இருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு
அவசரம் பார்த்து வந்து என் உச்சி உளானே -என்கிறார் –

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

நெற்றியுள் நின்று என்னை யாளும்
நெற்றியுள் நின்று என்னை அடிமை கொள்ளுகிற
நிரை மலர்ப்பாதங்கள் சூடி
மலரை நிரைத்தால் போலே இருக்கிற திருவடிகளை சிரசா வஹித்து
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியில் வைத்தாலும் திருக் குழலின் ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று தழையா நிற்கும்
தழைக்கும் துழாய் -பெரிய திருவந்தாதி -39–என்னுமா போலே செவ்வி பெற்று தழைக்கிற திருத் துழாய் உடன் கூடின
திரு அபிஷேகத்தை உடையனாய் -தர்ச நீயமான வடிவையும் உடைய உபகார சீலனான கிருஷ்ணனை நிரை மலர்ப்பாதங்கள் சூடித் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும்
ஒரு கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே தரித்து ஸூக ப்ரதனனாய் இருக்கிற ருத்ரனும்
நான்முகனும் இந்த்ரனும்
அவனுக்கு ஜனகனான சதுர்முகனும் தேவர்களை மெய்க்காட்டுக் -attendance- கொண்டு– இருக்கிற இந்த்ரனும்
மற்றை யமரரும்
மற்றும் உண்டான தேவர்கள் எல்லாம்
எல்லாம் வந்து என் உச்சி உளானே
இப்படி அவர்கள் தடுமாறா நிற்க தன்னைப் பெறுகைக்கு -அது எல்லாம் தான் என்னைப் பெறுகைக்கு பட்டு வந்து
என் உச்சி உளனாகா நிற்கிறான்
ராஜாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டில் நின்றும் மற்றைக் கட்டில் ஏறப் புகா நிற்க நடுவே -வஸ்த்ரம் மாற்றும் போது -அந்தரங்கர் முகம் காட்டி
தம் கார்யம் கொண்டு போமா போலே இவர் திரு நெற்றியில் நின்றும் திருமுடி ஏறப் போகா நின்றாள் ப்ரஹ்மாதிகள் நடுவே முகம் காட்டித்
தங்கள் கார்யம் கொண்டு போம் அத்தனை –

————————————————————————————–

அவதாரிகை —

நிகமத்தில் இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய அவர்கள் தலையிலே
எம்பெருமான் திருவடிகள் நாடொறும் சேரும் -என்கிறார் –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

இனி எங்கே போவதாக இருந்தான் என்னில்
உச்சியுள்ளே நிற்கும்
அமரர் சென்னிப் பூவான தான் -என் சென்னிக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை என்று என் உச்சி உள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியிலே நிற்கையாலே தேவதேவன் ஆனான் என்றுமாம்
உள்ளே நிற்கும்
இனி அவ்வருகு போக்கில்லை
தேவ தேவற்கு
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்
கண்ண பிராற்கு
உபகார சீலனான கிருஷ்ணனுக்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி
சர்வேஸ்வரனுக்கு தன பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
வண் குருகூர்ச் சடகோபன்
சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவே அன்றிக்கே -சம்சாரிகளுக்கும் அறியும் படி பண்ணின உதாரரான ஆழ்வார்
இச்சொன்ன-வாயிரத்துள் இவையுமோர் பத்து-
இப்பாவ வ்ருத்தியாலே சொன்ன ஆயிரத்திலும் இவையும் ஓர் பத்து
எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே —
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும்-
தனக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய -நாள்தோறும் ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
எம்பிரான் -என்றது -இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இழவு மறக்கவும் -அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே -என்ற பெற்ற பேறு-இது கற்றாற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது சேருகையாய்-சேரும் என்றபடி –
உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –

முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் -என்றார்
இரண்டாம் பாட்டில் -அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் நம்முடனே கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஒக்கலையில் வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டில் தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணினுள்ளே நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திரு முடியிலே நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடனே சாத்மிக்கும் படி கலக்கையாலே அவனை சிரஸா வஹித்தார் -பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: