திருவாய்மொழி – -1-7- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம்

கீழில் திருவாய் மொழியில் ஸ்வாராதன் -என்றார்
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் இதில் –
பகவத் சமாஸ்ரயணம் தான் இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனுக்கும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே –
அச்ரத்தா நா புருஷா ஸ்ரீ கீதை -9-3—-விஸ்வாச பூர்வாக த்வாரா ரஹீதரானவர்கள் –அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை உதற வல்லாய் நீ யன்றோ
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே -செய்த குற்றங்களை அடையப் பொறுத்து தங்களை நல வழிப் போக்கும் என்னை விட்டு தம்தாமுடைய
விநாசத்தை சூழ்ப்பதான சம்சாரத்தை விரும்பி அவ வழியே போகா நிற்பார்கள் -இது தான் இருந்த படி பாராய் -என்கிறான் –
பிரத்யஷாவகமம் –ந மாம்ச சஷூர் அபி வீஷதே தம் -என்கிற நான் பிரத்யஷ பூதன் ஆனேன்
தர்ம்யம் -நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யமானாலும் மேல் விழ வேணும்
இது அங்கன் அன்றிக்கே தர்மாதநபேதமுமாய் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தவ்யம் -ஸ்மர்த்தவ்ய விஷயம் சாரச்யத்தாலே தானும் போக ரூபமாய் இருக்கும்
அவ்யயம் -கோலின பலங்களை கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும்
ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயான்லாப சர்ப்பத்தி -என்றான் இறே

ஸ்ரீ யபதியாய் –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -நிகரில் அவன் புகழ்
சகல ஆத்மாக்களுக்கும் சேஷியாய்-நாதனை –எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன்
நிரதிசய ஆனந்த யுக்தனாய்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடி தன்னைக் கிட்டினாரையும் ஆனந்தபிக்கக் கடவனாய் மோஷ தசையிலே அனுபவம்
இனிதாகிறதும் அவனைப் பற்றி வருகையால் இறே
அப்படியே ஆஸ்ரயணமும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும் இறே
இப்படி சாதன சமயமே தொடங்கி இனிய விஷயத்தை பற்றா நிற்கச் செய்தே அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவதே
-என்று கேவலரை நிந்தியா நின்று இருந்து கொண்டு இத்தை ஒழியில் நாம் உளராகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தின் உடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————-

அவதாரிகை –

இப்படி நிரதிசய போக்யனானவனை விட்டு பிரயோஜ நாந்தரத்தை கொண்டு அகலுவதே என்று கேவலரை நிந்திக்கிறார்

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற —
ஜரா மரண மோஷாயா தே ப்ரஹ்ம தத் விது மாம் ஆஸ்ரித — ஸ்ரீ கீதை -7-29-என்று இருப்பாரும் உண்டு -கேவலர் -அவர்களைச் சொல்லுகிறது
ஐஸ்வர் யார்த்திக்கும் -ஆத்ம பிராப்தி காமனுக்கும் -பகவத் பிராப்தி காமனுக்கும் ஒக்குமாயிற்று -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் அந்திம ச்ம்ர்தியும்-
இனி பேற்றில் தார தம்யம் வருகிறபடி என் என்னில் -உபாசன சமயத்தில் சிறுகக கோலுகையாலே -அதாவது அவன் அளவும் செல்லாதே
நடுவே வரம்பிட்டுக் கொள்ளுகை
அத்தை இ றே வரம்பொழி வந்து -திருப்பல்லாண்டு -4–என்கிறது -அது தனக்கு அடி அவர்கள் ஸூக்ருத தாரதம்யம்
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூக்ருதி ந அர்ஜூனா -ஸ்ரீ கீதை-7-16–என்று அருளிச் செய்தான் இறே
ஸூக்ருததுக்கு அனுரூபமாக வாயிற்று புருஷார்த்தங்களில் ருசி பிறப்பது -ருச்ய அனுகுணமாக வாயிற்று உபாசிப்பது
-உபாசன அனுகுணமாக இருக்கக் கடவது பலம் –
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
இவனைப் பற்றி இப் பேற்றை பெற்றுப் போவதே -என்கிறார்
பிறவி என்கிற இத்தால் ஜன்மம் தொடக்கமாக உண்டான மற்ற ஐந்து விகாரங்களையும் நினைக்கிறது
ஆக ஜன்ம ஜரா மரணாதி சம்சாரிக சகல துரிதங்களும் போம் படியாக -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
இவர் தாமும் கழிக்கிறதாய் இரா நிற்கச் செய்தே இவர்களை நிந்திக்கிறதுக்குக் கருத்து என் என்னில்
இவருக்கு விரோதி போமது ஆநு ஷங்கிகமாய்-பகவத் அனுபவம் உத்தேச்யமாய் இருக்கும் –
அவர்களுக்கு துக்க நிவ்ருத்தி தானே உத்தேச்யமாய் இருக்கும்

ஞானத்துள் நின்று
இவ்வனுசந்தானம் அவ்வருகே போகா நிற்கச் செய்தேயும் ஆத்ம ஞான மாத்ரத்திலே கால் ஊன்ற அடி இட்டாயிற்று நிற்பது
துறவி என்கிற இது துறக்கையைச் சொன்ன படி
பிறவித் துயர் அற -என்றதனுடைய பலரூபமான பிரகிருதி விநிர்முக்த வேஷத்தை -சுடர் விளக்கம் தலைப் பெய்வார் என்கிற இது
ஞானத்துள் நின்று அதனுடைய பலரூபமாய் இருக்கிறது
சம்சார தசையில் கர்மம் அடியாக வரக் கடவ சங்கோசம் இல்லை இறே -மோஷ தசையில் விகசிதமாய் இருக்கும் இறே
ஜ்ஞான குணகமுமாய்-ஜ்ஞாதாவாயும் இறே வஸ்து தான் இருப்பது
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று -என்றது உபாசனமானால் துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்கை பலமாய் இருக்கும் இறே
சம்சாரிக சகல துக்கங்களும் போக வேணும் என்று ஆத்ம ஞானத்தில் ஊன்ற நின்று பிரகிருதி விநிர்முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தை
பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே —
அவர்கள் படியையும் பலம் கொடுக்கிறவன் படியையும் பாரா -என்ன பரம உதாரனோ -என்கிறார்
ஏதேனும் ஒரு பிரயோஜனத்துக்கும் தன்னையே அபேஷிக்கும் அத்தனை யாகாதே வேண்டுவது
எங்களுக்கு நீ வேண்டா ஷூத்ர பிரயோஜனமே அமையும் என்று இருக்கிறவர்களுக்கும் அத்தைக் கொடுத்து விடுவதே என்ன தார்மிகனோ -என்கிறார் –
ஆழிப் படை அந்தணனை
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்குகைக்கு பரிகரமான திரு ஆழியை கையிலே உடையவன்
அந்தணன் என்று சாணிச் சாற்றோ பாதி -சுத்தன் -என்று கொண்டாடுகிறார்கள் இத்தனை
போக்யதையில் நெஞ்சு சென்றது இல்லை
சுத்தி குண விசிஷ்டன் என்று ஆயிற்று அவர்கள் அனுசந்திப்பது
கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாது தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாதரத்தைப் பற்றுவதே -என்கிறார்
மறவியையின்றி-
இவருக்கு கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் முன்னடி தோற்றாது -சக்கரத் தண்ணலே–4-7-10-என்றால்
-பின்னைத் தரைப் படும் அத்தனை இறே-இவர்
திரு மங்கை ஆழ்வாரும் -ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
உத்தேச்ய வஸ்துவையையும் மறக்கும் படி கலங்குவர் –
பிள்ளாய் -நல்லத்தைப் மறக்கப் பண்ணா நிற்க -இவ்விஷயம் தீயத்தை மறவாது ஒழிவதே
மறவியையின்றி –
அவனுடைய போக்யதையும் கண்டு வைத்து -தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே ஆஸ்ரயியா நிற்பார்கள்
மறவியை -மறப்பை
மறப்பின்றிக்கே மறவாதே மனத்து வைப்பாரே
உபாசக பரமானால் -சுடர் விளக்கம் –குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது -அவனுடைய போக்யதையை அனுசந்தித்து வைத்தும்
பின்னையும் இந்நிலை குலையாதே நிற்பதே -இவ்வரிய செயலை செய்கைக்கு திண்ணியர் ஆவதே இவர்கள்
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் -மறவியை இன்றி அறவனை
ஆழிப் படை அந்தணனை மனத்து வைப்பாரே-இத் அந்வயம்

—————————————————————————————————-

அவதாரிகை –

சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர பிரயோஜனத்தை கொண்டு போவதே என்று கேவலரை நிந்தித்தான் –
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படி சொல்லுகிறார் இப்பாட்டில்

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

வைப்பாம் –
ஆடறுத்துப் பலியிட்டு -அரப்பையாக்கி -இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி ஷேமித்து வைக்கும் நிதி போலே
இவனுக்கு நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி தன்னை இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி வைக்கும் என்றிட்டு -பிராப்யத்வம் சொல்லுகிறது –
மருந்தாம் –
ஆனாலும் ஷூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாதே சம்சாரி சேதனனுக்கு இ றே சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறது
இவன் தன்னை அனுபவிக்கும் படி என் என்னில் -அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கி தன்னை
அனுபவிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் கொடுத்து -தன்னையும் கொடுக்கும் என்று -அவனுடைய பிராபகத்வம் சொல்லுகிறது
ய ஆத்மதா பலதா -என்கிறபடியே
ஆக பிராப்யத்வமும் பிராபகத்வமும் சொல்லிற்று
இப்படி சொல்வது ஆர்க்கு என்னில்
அடியாரை
ந நமேயம் -என்னும் நிர்பந்தம் தவிர்ந்தார்க்கு
அவனைப் பற்றி ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு அகலாதே -அவன் தன்னையே பற்றி அவன் படி விட ஜீவித்து இருப்பாரை
வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
வலிய வினைகளிலே கொண்டு போய் மூட்டுகைக்கு ஈடான சாமர்த்தியத்தை யுடைத்தான இந்த்ரியங்கள் ஐந்தாலும் துஞ்சக் கொடான் -என்னுதல்
அஞ்சிலும் புக்குத் துஞ்சக் கொடான் -என்னுதல்
துப்பு என்று -சாமர்த்தியம்
அவன் என்கிறது -எவனைப் பற்ற -அவன் தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம் -என்னில் -அத்தை உபபாதிக்கிறது மேல்

எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் –
ஸ்தான விசேஷங்களாலும் மனுஷ்யாதி பேதங்களாலும் வரக் கடவன சில உயர்த்திகள் உண்டு இறே
பூமி போல் அன்று இறே ஸ்வர்க்கம்
மனுஷ்யர்களைப் போல் அல்ல விறே தேவர்கள் –
எப்பால் -எல்லா விதத்திலும் என்றபடி -பால் என்று இடம் -அப்பால் இப்பால் என்னக் கடவது இறே -அவ்விடம் இவ்விடம் -என்றபடி இறே
எல்லா விதத்திலும் உண்டான எல்லார்க்கும்
நலத்தால்
ஆனந்தத்தாலே மேலே மேலே போய்
பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீள வேண்டும்படியான ஆனந்த ப்ராசுர்யத்தை உடையவன்
சதகுணி தோத்தர க்ரமத்தாலே அப்யச்யமானமாகா நின்றுள்ள நிரதிசய ஆனந்த யுக்தன்
ஆனந்த மய -என்னக் கடவது இறே

எங்கள் ஆயர் கொழுந்தே —
இப்படி சர்வாதிகனானவன் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து தன்னை ஆச்ரயித்தார் விஷய பிரவணராய் முடியும் படி விட்டுக் கொடுக்கவோ
தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது -தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ
மேன்மைக்கு எல்லை யானவன் தாழ்வுக்கு எல்லை யாயிற்று அது இவர்களை அனர்த்தப் பட விடவோ —
எங்கள் ஆயர் கொழுந்தே
கிருஷ்ணன் திரு வவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு ப்ராக்ருத சம்பந்தம் தேட்டமாய் இருக்கிற படி
அன்றியே
எங்கள்
அவதாரம் தான் ஆஸ்ரிதார்த்தமாய் இருக்கும் இ றே
நவநீத சௌர்ய நகர ஷோபம் பழையதாக எழுதிக் கிடக்கச் செய்தேயும் -எத்திறம் -என்றார் இ வரே இ றே
ஆயர் கொழுந்தே
இடையர் தங்களுக்கு தான் ப்ரஹ்மாதிகள் கோடியிலேயாம் படி அவர்களில் பிரதானனானவன் துஞ்சக் கொடான் –

———————————————————————————————-

அவதாரிகை –

பிரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார்
அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படி சொன்னார்
நீர் இவ்விரண்டு கோடியிலே ஆர் என்ன
நான் பிரயோஜனாந்தர பரன் அல்லேன் -அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன் -என்று நேர் கொடு நேர் சொல்லவும் மாட்டாரே
அவனை அனுபவியா நிற்க விரோதி தன்னடையே போய்க் கொடு நின்றவன் நான் -என்கிறார் –

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆயர் கொழுந்தாய் –
இடையருக்குப் பிரதானனாய் இருக்கும் இருப்புச் சொல்லிற்று கீழ் –
இங்கு அவர்களில் ஏக தேசஸ்தனாய் இருக்கும் படி சொல்லுகிறது
அதாவது அவர்கள் வேராக-தான் கொழுந்தாய் இருக்குமவன் -என்கிறது
இடையர் காட்டில் பசுக்களின் பின்னே திரிந்து -அவர்களுக்கு அடிகொதித்தால் வாடுவது கிருஷ்ணன் முகமாய் இருக்கை –
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து இறே முற்பட வாடுவது
அவரால் படை யுண்ணும்
அவனால் என்னுதல் -அவளால் என்னுதல் -செய்யாமையாலே திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியிலும் இவனை நியமிக்க உரியர் அல்லாதார் இல்லை
மத்தாலே ஓர் அடி அடிப்பார்கள் போலே காணும் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
மாயப்பிரானை
அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரன்
தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து திருவவதரித்து
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய்
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே வாயதுகையதாக
அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை அனுசந்தித்து -மாயப் பிரானை -என்கிறார்
என் மாணிக்கச் சோதியை
ஆஸ்ரிதர் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அற கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி
கட்டின அளவுக்கு வெட்டு என்று இருக்குமவன்
கட்டியடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்ல வேணுமோ
கண்ணியார் குறும் கயிற்றால் கட்டவெட்ட என்று இருந்தானே
என்
அப்புகரை எனக்கு முற்றூட்டு ஆக்கினவன்
தூய வமுதைப் பருகிப் பருகி
தேவர்கள் அதிகாரிகளாய் ப்ரஹ்மச்சர்யாதி நியமங்கள் வேண்டி சக்ருத் சேவ்யமாய் இருக்கும் இறே அது
சர்வாதிகாரமுமாய் ஒரு நியதியும் வேண்டாதே சதா சேவ்யமான அம்ருதமிறே இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
ஆச்சர்யமான ஜன்மம் அடியாக உண்டான அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கினேன்
ஜென்மத்துக்கு ஆச்சர்யமாவது ஒருபடிப் பட்டு இராமை
மயர்வறுத்தேன்-என்கிறது -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேஷித்த படியே பல அனுபவம் தம்மதாகையாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

அவதாரிகை –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அடியிலே நீர் அபேஷித்த படியே உம்முடைய அபேஷிதம் தலைக் கட்டிற்றே
இனி இவ்விஷயத்தை விட்டுப் பிடிக்கும் அத்தனை அன்றோ -என்ன நான் என்ன ஹேதுவாலே விடுவேன் -என்கிறார்

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-3-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை –
அஜ்ஞ்ஞானம் வாசனையோடு போக்க
இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது -என்று என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஸ்த்தாவர பிரதிஷ்டையாக இருந்தவனை
செடி சீய்த்துக் குடியேற்றின படை வீடுகள் விடாதே இருக்கும் ராஜாக்களைப் போலே -புறம்பேயும் ஒரு கந்தவ்ய பூமி யுண்டு -என்று தோற்ற இராமை
இப்படி இருந்து செய்கிறது என் என்னில்
உயர்வினையே தரும்
ஜ்ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான் -என்னுதல்
யமாதிகள் தலையிலே அடியிடும்படியான உத்கர்ஷத்தைத் தாரா நின்றான் -என்னுதல்
தரும்
தந்து சமைந்தானாய் இருக்கிறன் அல்லன்
காதல் கடல் புரைய
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீள் விசும்பும் கழியப் பெரிதால்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -என்றால் போலே

ஒண் சுடர்க் கற்றையை
இத்தால் எனக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே -தான் உபகாரம் கொண்டான் -என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்ற இரா நின்றான் -என்னுதல்
தம்மை வசீகரித்த அழகைச் சொல்லிற்றாகவுமாம்
தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்னுமா போலே
இப்படி தன் பேறாக உபகரித்தவன் தான் உபகாரம் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில்
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
தான் உபகரியாத அன்று தங்கள் சத்தை கொண்டு ஆற்ற மாட்டாதாரை ஒரு நாடாக உடையவன்
பகவத் அனுபவ விச்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை உடையராய்
அவ்வனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே தாங்கள் பலராய் இருக்கிறவர்களுக்கு தாரகாதிகள் எல்லாம் தானாய் இருக்கிறவனை
என் இசைவினை
நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை
என் சொல்லி யான் விடுவேனோ —
சிறிது மயர்வு கிடந்தது -என்று விடவோ
மயர்வைப் போக்கி தான் கடக்க இருந்தான் என்று விடவோ
எனக்கு மேல் மேல் என நன்மைகளைப் பண்ணித் தந்திலன் -என்று விடவோ
வடிவு அழகு இல்லை -என்று விடவோ
மேன்மை போராது என்று விடவோ
இப்பேற்றுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ
எத்தைச் சொல்லி நான் விடுவது -என்கிறார்

——————————————————————————————-

அவதாரிகை

திருவாய்ப்பாடியிலே இடைப்பெண்கள் கிருஷ்ணனை விட்டு பரமபதத்தை விரும்பின் அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவது -என்கிறார்

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

விடுவேனோ என் விளக்கை –
ஸ்வ விஷயமான அஜ்ஞ்ஞான அந்தகாரம் போம்படி நிர்ஹேதுகமாக தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரகாசிப்பித்தவனை
என் விளைக்கை என்பான் -என்-அல்லாதார்க்கும் ஒவ்வாதோ என்னில் –இவரைப் போல் அல்லாதார்க்கு ச்நேஹம் இல்லையே
ச்நேஹம் உண்டாகில் இறே இவ்விளக்கு பிரகாசிப்பது
விளக்காவது தன்னையும் காட்டி -பதார்த்தங்களையும் காட்டுவது ஓன்று இறே
இவருக்குத் தன்னையும் காட்டி -ஸ்வ ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டிக் கொடுத்தது –
என் ஆவியை —
தான் ஒருவன் உளன் என்னும் அறிவாதல் -தன் பக்கல் அபேஷையாதல் -இன்றிக்கே பிரகிருதி வச்யனாய் உருமாய்ந்து போந்த என் ஆத்மாவை
நடுவே வந்து
நிர்ஹேதுகமாக வந்து –
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து மீட்டவித்தனை
உய்யக் கொள்கின்ற –
கொண்டு விட்டிலன் –
மேன் மேல் என கொள்ளா நிற்கிற வித்தனை
அசந்நேவ ச பவதி -என்கிறபடியே -அசத் கல்பனான என்னை -சந்த மேநம் ததோ வித்து -என்னப் பண்ணினான்
என் ஆவி -என்று உம்மதாகச் சொன்னீர் -உம்முடைய ஆத்மாவை அவன் வந்து உய்யக் கொள்ள நிபந்தனம் என்ன –
நாதனை –
ஆருடைய வஸ்து அழியப் புக்கது
நான் -என்று ஒருவன் உண்டோ
உடையவன் ஆகையாலே செய்தான்
ஆரேனும் பேற்றுக்கு ஆரேனும் யத்னம் பண்ணுவார்களோ -என்ன -திருவாய்ப் பாதியிலே பெண்கள் பேற்றுக்கு யத்னம் பண்ணினார் யார் –
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
ஆராய்ச்சிப்படும் செயல்களை செய்து ஓர் இடத்திலே போய்களவு கண்டு அங்கே அகப்படுமே
கள்ளனைக் காண வேணும் என்று இருப்பாரும் உண்டே
இவனாலே புண்பட்டவர்கள் எல்லாரும் காண வருவார்களே –
புருஷர்களுக்கும் வ்ருத்தைகளுக்கும் ஒரு பயமும் இல்லையே
அருகே நின்றார்க்குத் தெரியாமே பருவம் நிரம்பின இடைப் பெண்கள் கண்ணுக்குள்ளே விடும்படியை செய்து விழிக்கும் -தூது விடும்படியைச் செய்து விழிக்கும்
தூது விடுகை யாகிற செயலைச் செய்து -என்னுதல்
விடருடைய செயலைச் செய்து -என்னுதல்
தூது செய் கண்கள் -என்னக் கடவது இ றே -அதாவது தூர்த்தருடைய வ்யாபாரங்களைப் பண்ணுதல்
தா வாஸ்மி தா சோஸ்மி-என்றால் போலே சொல்லுகை –
பிரானையே
அந்நோக்காலே இடைப்பென்கள் அனந்யார்ஹைகள் ஆக்கினால் போலே என்னையும் அனந்யார்ஹை
ஆக்கி விட்டவனை விடுவேனோ —

———————————————————————————-

அவதாரிகை –

இப்போது விடோம் என்கிறீர் அத்தனை போக்கி -பின்னையும் நீர் அல்லீரோ -உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ -என்ன
அவனாலே அங்கீ க்ருதனான நான் அவனை விடுவேனோ -என்றார் கீழில் பாட்டில்
உம்மை அவன் தான் விடில் செய்வது என் -என்ன -தன் குண சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்ப்பித்து என்னோடு கலந்தவனை
நான் விட சம்வதிப்போனோ -என்கிறார் இதில் –

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னையான் ஒட்டுவேனோ –1-7-6-

பிரான் –
நிலா தென்றல் சந்தனம்-பிறர்க்கே யாயிருக்குமா போலே தன் படிகளை யடைய பிறருக்கு ஆக்கி வைக்குமவன்
சர்வ விஷயமாகவும் ஆஸ்ரித விஷயமாகவும் பண்ணும் உபகாரத்தை நினைத்து -பிரான் என்கிறது
அத்தை உபபாதிக்கிறது மேல்
பெரு நிலம் கீண்டவன்
சர்வ விஷயமாக பண்ணும் உபகாரம் -பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தால் போலே
சம்சார பிரளயம் கொண்டு என்னை எடுத்தவன் –
பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
ஒப்பனையோடு யாயிற்று பிரளயத்திலே முழுகிற்று
நெருங்கத் தொடையுண்டு -பரிமள பிரசுரமாய் -செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே சூழப் பட்ட திரு அபிஷேகத்தை உடையவன்
விரையை -விராய் என்று நீட்டிக் கிடக்கிறது -அன்றிக்கே மலர் விரவின திருத் துழாய் என்றுமாம்
மராமரம் எய்த மாயவன் –
ஆஸ்ரித விஷயமாக உபகரிக்கும் படி மகா ராஜர் வாலி மிடுக்கையும் பெருமாள் சௌகுமார்யத்தையும் அனுசந்தித்து -நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன
நான் வல்லேன் -என்று மழு வேந்திக் கொடுத்துக் கார்யம் செய்யும் வ்யாமோஹத்தை யுடையவன்
என்னுள் இரான் எனில் –
இப்படி ஆஸ்ரிதரை விஷயீ கரித்து-அவர்கள் பேற்றுக்கு
தான் கிருஷி பண்ணுமவன்-என்னுள் இரான் எனில்
எனில் -என்கையாலே விட சம்பாவனை இல்லை -என்கை
பின்னையான் ஒட்டுவேனோ —
எப்பிரகாரத்தாலும் இரேன் -என்னுமாகில் பின்னை நான் அவன் போக்கை இசைவேனோ —
என்னுடைய கர்ம பாரதந்த்ர்யம் போலே அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்துக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ
என் இசைவு இன்றிக்கே இருக்க அவனாலே போகப் போமோ
அன்றியே -நான் தொங்குவேனோ-என்று பிள்ளான் பணிக்கும் படி —

————————————————————————————-

அவதாரிகை –

குணத்ரய வச்யராய் போந்தீர்-காதா சித்கமாக -அவனை விடேன் -என்கிறார் -உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ என்ன
நான் அவனை விட்டாலும் அவன் தான் என்னை விடான்-என்கிறார் –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் –
இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னாலே வந்ததாவது
ஆழ்வீர்-நாம் உம்முடைய பாடே இருப்போம் -என்றால் -ஒட்டேன் -என்பரே –
ஆகில் இங்கே இருக்கக் கடவோம் -என்று பிரதிஜ்ஞை பண்ணியாயிற்று வந்து இருப்பது –
நான் இசைந்து -என்னுடைய ஹிருதயத்திலே இருக்க வேணும் -என்று இலேன் –
தான் ஒட்டி வந்து –
அத்ய மே மரணம் வாபி தரணம் சாகரஸ்ய வா -என்று
இத்தை முடித்தல் கடத்தல் செய்யுமதுக்கு மேற்பட இல்லை -என்றால் போலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணி யாயிற்றுப் புகுந்தது –
என் தனி நெஞ்சை –
தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ்வதந்த்ரமாய்
அவிதேயமான நெஞ்சை
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் தனக்கு விதேயமாம் படி பண்ணி
பின்னைச் செய்தது என் என்னில்
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து –
சரீரத்தைப் பற்றி நிற்கிற என்னுயிரிலே கலந்து -என்கிறார் என்பாரும் உண்டு
அன்றிக்கே
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே -என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று பின்னை என்பக்கலிலே விலக்காமை பெற்றவாறே
என் ஆத்மாவோடு வந்து கலந்தான் -என்று ஜீயர் அருளிச் செய்யும் படி
இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இயல்வான் –
இப்படியை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்
இப்படி எதிர் சூழல் புக்கு உத்சஹித்தவன் -என்னுதல்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இப்படி நிர்ஹேதுகமாக என்னை விஷயீ கரித்தவன்-நான் தன் பக்கலிலும் நின்று நெகிழ்ந்து போவேன் -என்றால் அவன் இசையுமோ
எனக்கு ஜ்ஞானம் பிறக்கைக்கு கிருஷி பண்ணி
பிறந்த ஜ்ஞானம் பலிக்கும் அளவாக கொண்டு நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ –

————————————————————————–

அவதாரிகை –

நான் விடேன் அவன் விடான் என்றால் போலே சொல்லுகிறது என் -இனி அவன் தான் பிரிப்பேன் என்னிலும்
தன்னுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது -என்கிறார் –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

என்னை நெகிழ்க்கிலும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்னைத் தானே அகற்ற அரிது –
இவ்வரிய செயலைச் செய்யிலும்
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத்
நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்றும்
தொழுது எழு என் மனனே -என்றும் சொல்லலாம் படி தன் பக்கலிலே அவகாஹித்த நெஞ்சம் தன்னை அகல்விக்க
தானும் கில்லான்
சர்வ சக்தி என்னா -எல்லாம் செய்யப் போமோ -என் செய்து போந்திலனோ இது நெடும் காலம் என்னா
இனி
அவனும் இனி மேல் உள்ள காலம் மாட்டான் -இனி என்கிற உரப்பு எத்தைப் பற்ற என்னில் -அத்தைச் சொல்லுகிறது மேல்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே —
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
நித்ய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புர பரிகரமான வஸ்துவை அகற்றப் போமோ –
நப்பின்னை பிராட்டியுடைய நெடிதாய்ச் சுற்று உடைத்தாய் பசுமையை உடைத்தான மூங்கில் போலே இருக்கிற
தோளோடு அணைக்கை யாலே வந்த பெருமையை உடையனாய்
யத்ரர்ஷய-பிரதமஜா யே புராணா -என்கிறபடியே -பழையராய் இருந்துள்ள நித்ய ஸூரிகளுடைய ஸ்வரூப ஸ்தித் யாதிகள்
தன் அதீநமாம் படி இருக்கிறவன் -தானும் கில்லான்
ஹர்யருஷகண சன்னிதௌ-என்கிறபடியே அவர்கள் சந்நிதியிலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணிற்று
நப்பின்னை பிராட்டி புருஷகாரம் எங்கனே அகற்றும் படி

————————————————————————–

அவதாரிகை –

தானும் கில்லான் -என்கிற பிரசங்கம் தான் என் -ஏக த்ரவ்யம் என்னலாம் படி யான இத்தை எங்கனே பிரிக்கும் படி -என்கிறார்

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை –
நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் தன அதீநமாம் படி இருக்கிறவனை
இது தொடங்கி லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது
தன் பக்கல் பாவ பந்தம் சத்தா பிரயுக்தம் இன்றிக்கே இருக்கிறவர்களுக்கும் தன்னை வழி படுக்கைக்கு
உறுப்பாக கரண களேபரங்களைக் கொடுக்குமவனை
அமரர்க்கு அமுதீந்த –
அவன் கொடுத்த கரணங்களைக் கொண்டு -எங்களுக்கு நீ வேண்டா உப்புச் சாறு அமையும்
என்பார்க்குக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுக்குமவனை
ஆயர் கொழுந்தை
அவ்வம்ருதம் வேண்டா -நீ அமையும் என்பாருக்காக வந்து திருவவதரித்து தன்னைக் கொடுக்குமவனை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று
இப்படி உபய விபூதி உக்தனாய் இருக்கிறவனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து
என்னுடைய ஆத்மாவானது ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது
இனி யகலுமோ —
இரண்டு வஸ்துக்களாகில் அன்றோ பிரிக்கலாவது
பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்வ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ
ஜாதி குணங்களோ பாதி த்ரவ்யமானதுக்கும் நித்யதாஸ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப் போமோ

——————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்து எம்பெருமானுடைய குணங்களை கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் த்ருப்தன் ஆகிறிலன்-என்கிறார்

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

அகலில் அகலும் –
இவன் அகன்ற படியே நிற்கில் -யதி வா ராவணஸ் வயம் -என்கிற சாபல்யமும் கிடக்கச் செய்தே கண்ண நீரோடு கை வாங்கும் –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்னும் நிர்பந்தத்தோடு நிற்கில் முடித்தே விடும்
அணுகில் அணுகும்
தன் பக்கலிலே ஆபிமுக்க்யம் பண்ணினால் -ஆக்யாஹி மம தத்த்வேன-என்னும்
இளைய பெருமாள் நிற்க -நாலடி வர நின்ற வனையிறே -ராஜ கார்யம் செய்யும் படி சொல்லீரோ -என்றது
ராஷசா நாம் பலாபலம் -இவனை ராஷச ஜாதியனாக நினைக்கை அன்றிக்கே -இஷ்வாகு வம்ச்யனாகவே புத்தி பண்ணி
-ராஷசருடைய பலாபலம் சொல்லீரோ -என்றார் இ றே
இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு -அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது
இரண்டாம் பாட்டு -அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –

புகலும் அரியன்-
அர்ஜுனனும் துரியோதனனும் கூட வரச் செய்தே -அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு தன்னை ஒழிந்த
பங்களத்தைக் கொடுத்து விட்டான் இறே
உகவாதார்க்கு கிட்ட அரியனாய் இருக்கும்
பொருவல்லன் –
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்
யாத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணா ச சத்யா பாமா ச பாமிநீ –புத்ரர்களுக்கும் புக ஒண்ணாத சமயத்தில் இ றே சஞ்ஜயனை அழைத்துக் காட்சி கொடுத்தது
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை
எம்மான்
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்
இப்படி விடுகைக்கு ஷமன் இன்றிக்கே ஒழிகிறது-காலம் சாவாதியோ என்னில்
பகலும் இரவும்
சர்வ காலமும் .
ஆனால் விஷயத்தை குறைய அனுபவித்தோ என்னில்
படிந்து குடைந்தே
எங்கும் கிட்டு அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிறிலேன்-

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி தானே கற்றவர்களுடைய ப்ராப்தி பிரதிபந்தகங்களை உன்மூலிதமாக்கும் -என்கிறார்-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை
மது பானம் பண்ண இழிந்த வண்டுகளானவை-பெரும் கடலிலே இழிந்தாரைப் போலே -உள்ளே உள்ளே இடம் கொண்டு புஜியா நிற்கும்
அத்தனை போக்கி மது வற்றிக் கை வாங்க ஒண்ணாத படியாய் இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் இருக்கிற
திரு அபிஷேகத்தை உடையவனைக் கவி பாடிற்று
-அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
அம்மதுவிலே படிந்த வண்டுகள் விட மாட்டாதாப் போலே -பகவத் விஷயத்தை விட மாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார் –
மிடைந்த சொல்தொடை –
அனுபவ ஜனித ப்ரீதியாலே பிறந்து இருக்கச் செய்தேயும் -சொற்கள் தான் -நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் -என்று மேல் விழுந்தன –
ஆயிரத்து இப்பத்து-
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்களுக்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே
ஐஸ்வர்ய கைவல்யங்கள் -புருஷார்த்தம் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம்
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே-
இவனை விட்டுப் போம் போது திரளாகப் போகப் பெறாது
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடி இருவர் ஒரு வழி போகப் பெறார்கள்
இப்பாபங்கள் ஆஸ்ரய அந்தரத்தில் கிடந்தாலும் மறுமுட்டுப் பெறாத படி உடைந்தோடும் –

முதல் பாட்டில் -கேவலரை நிந்தித்தார்
இரண்டாம் பாட்டில் -அநந்ய பிரயோஜனர் திறத்தில் இருக்கும் படியைச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் -இவ்விரண்டு கோடியிலும் நீர் ஆர் என்ன -உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான் -என்கிறார் –
நாலாம் பாட்டில் -என்னை இவ்வளவாக புகுர நிருத்தினவனை என்ன ஹேதுவாலே விடுவது -என்கிறார்
அஞ்சாம் பாட்டில் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ நான் அவனை விடுவது -என்றார்
ஆறாம் பாட்டில் -அவன் தான் விடிலோ -என்ன அவன் போக்கை இசையேன் -என்றார்
ஏழாம் பாட்டில் -நீர் தாம் விடிலோ என்ன -அவன் என்னைப் போக ஒட்டான் -என்றார்
எட்டாம் பாட்டில் -இந்நாள் வரை போக விட்டிலனோ என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை இனி அவனாலும் விட ஒண்ணாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் -இப்பிரசங்கம் தான் ஏன் -ஒரு நீராக கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது -என்றார்
பத்தாம் பாட்டில் -அவனுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுபவித்து ச்ரமமுடையேன் அல்லேன் என்றார்
நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

———————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: