திருவாய்மொழி – -1-5- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரனாகையாலே அவனை ஆஸ்ரயிப்பார்க்கு ஒரு குறையும் இல்லை -என்றார் –
அந்த ஆஸ்ரயணம் தான் புருஷோத்தமனை ஆஸ்ரயிக்கிறதாகையாலே-பலத்தோடு வ்யாப்தமாய் அல்லாது இராது என்றார் –
பஜிப்பார்க்குத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டில்லை என்றார் –
ஸூலபனானவன் தான் அபராத சஹன் ஆகையாலே பலத்தோடு வ்யாப்தம் அல்லாது இராது என்றார் –
அயோக்யத அநு சந்தானம் பண்ணி அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான் என்கிறார் இதில் –

கீழே கலங்கித் தூது விட்ட விடம் ப்ரேம கார்யம் –
இங்கே அகலப் பார்க்கிற இடம் ஜ்ஞான கார்யம் –
மயர்வற மதி நலம் அருளினன்-என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் இறே இவர் தாம் பெற்றது
தூத ப்ரேஷண வ்யாஜ்யத்தாலே தம்முடைய ஆற்றாமையை அறிவித்த அநந்தரம்-இவரை இங்கனே நோவு பட விட்டோம் ஆகாதே -என்று
பிற்பாட்டுக்கு நொந்து -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்
அவனுக்கு வைலஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டார்
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே நித்ய ஸூ ரிகளுக்கு அநு பாவ்யமான வஸ்துவை நாம் கிட்டி
தூஷிக்கப் பார்ப்போம் அல்லோம் -அகலும் இத்தனை என்று பார்த்தார் –
அகன்றால் ஜீவிக்க வல்லீரோ -என்னில் முடியும் அத்தனையே -சேஷிக்கு அதிசயத்தை விளைக்கத் தேடுமவர்கள் தந்தாம் விநாசம் பாரார்கள் இ றே
-பெருமாளுக்கும் தேவதூதனுக்கும் மந்த்ரம் பிரவ்ருத்தமான சமயத்திலே-
உத்தர காண்டம் -104-113-ஸ த்வம் மநோ மய புத்ர பூர்ணாயூர் மானுஷேஷ்விஹ கால அயம் தே நரஸ்ரேஷ்ட சமீபமுவர்த்திதம் -என்ற மந்த்ரம்
துர்வாசர் -என்னை உள்ளே புக விட வேணும் என்ன -ராமம் தர்சய மே சீக்ரம் -உத்தர -105-2–
-இவனைத் தகைந்து –பெருமாளுக்கு அவத்யத்தை விளைவிப்பதில் நாம் அகன்று முடிய அமையும் -என்று பார்த்து
-ஏகச்ய மரணம் மே அசத்து மா பூத் சர்வ வி நாசனம் -உத்தர -105-9—அவனைப் புக விட்டு -யதி ப்ரீதிர் மஹாராஜ யத்ய அநு ராஹ்யதா மயி
-ஜஹி மாம் நிர் விசங்கஸ் த்வம் பிரதிஜ்ஞ் அநு பாலய-உத்தர-106-4-என்று விடை கொண்டார் இறே இளைய பெருமாள்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாச்யதி-உத்தர-48-4-என்று விடை கொண்டாள் இறே பிராட்டி –

ஊருணி யிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலேயும் -அம்ருதத்தில் நஞ்சைக் கலந்தால் போலேயும் நித்ய ஸூரிகளுக்கு அநு பாவ்யமான
வஸ்துவை நாம் புக்கு அழிக்கையாவது என்-என்று இவர் அகலப் புக
-இவரை இழந்தோம் ஆகாதே -என்று ஈஸ்வரன் -ஆழ்வீர் அகலப் பார்த்தீர் –
அடியேன் அகலப் பார்த்தேன் என்ன –
நீர் நமக்கு அவத்யம் வரும் என்று அன்றோ அகலப் பார்த்தது -நீர் அகலவே இவ்விஷயம் அதிக்ருதா திகாரமாகாதே
-என்று நமக்கு ஆள் பற்றாது -இப்படி தண்ணியராக நினைத்து இருக்கிற நீர் ஒருவரும் நம்மைக் கிட்டவே -சர்வாதிகாரம் -என்று தோற்றும்
ஆனபின்பு நீர் அகலுமது காணும் நமக்கு அவத்யம் –இனித் தான் நமக்கு ஆகாதார் இல்லை என்னும் இடம் பண்டே அடிபட்டுக் காணும் கிடப்பது -என்று
நாம் குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் நம் காலை வைத்தோமே கண்டீரே -என்று
-தாம் திரு உலகு அளந்து அருளின சௌலப்யத்தைக் காட்ட -ஆகில் கிட்டுவோம் என்று பாரா –
ஒரு குணாதிக்யமேயோ வேண்டுவது -நம்மால் வரும் குணமும் அவனுக்கு வேண்டா என்று
அகலப் புக -உம்மால் வரும் நான் தானும் வேணுமோ வேண்டாவோ -என்று நீர் அயோக்யர் என்று அகலுமதிலும் சம்ச்லேஷிக்கிறது
திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோ பாதி நமக்குத் தாரகம் காண்-இனி நீர் அகலில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர்
-நீர் அகலுமது நமக்கு சத்தா ஹானி என்று –மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்று -அவன் பக்கல் உள்ளது போட்கனாகவுமாம் –
நாம் அவனை விடில் உளோம் ஆகிறோம் -என்று சேர்த்துக் கொண்டால் போலேயும்
பந்து வதம் பண்ணி ஜீவிக்கப் பார்க்கிறிலேன் -என்று அர்ஜூனனை- கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலேயும்
தம்மை வருந்தி இசைவித்து சம்ச்லேஷ உன்முகனாய் ஆனபடியே சம்ச்லேஷித்து தலைக் கட்டினான் -என்கிறார்-

———————————————————————————————

அவதாரிகை

நித்ய ஸூ ரிகளுக்கு அநு பாவ்யனானவனை என்னுடைய மநோ வாக் காயங்களாலே தூஷித்தேன் -என்கிறார்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
வளிவிதான ஏழ் உலகு -என்று லீலா விபூதியாய்
வானோர் இறை -என்கையாலே நித்ய விபூதியைச் சொல்லிற்றாய்
இப்படி உபய விபூதி நாதனைக் கிடீர் நான் அழிக்கப் பார்க்கிறது -என்கிறார் –
வளவியனாய் ஏழ் உலகுக்கும் முதலாய் -வானோர் இறையாய் இருக்குமவனை -என்று அவன் தனக்கே விசேஷணம் ஆகவுமாம்
வளவியராய் ஏழ் உலகுக்கும் முதலாய் இருக்கும் வானோர் -என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
இவர்கள் வளவியராகை யாவது -பகவத் அனுபவத்தில் குசலராகை
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே -ஸ்ரீ கௌச்துபத்தாலே ஜீவ சமஷ்டியைத் தரிக்கும் என்றும்
-ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும் சொல்லா நின்றது இறே
வானோர் இறையை –
தேசிகர் ஆகையாலே -துறை அறிந்தே இழிவார்கள் -ஸ்வாமி-என்று ஆயிற்றே இவர்களுக்கு பிரதிபத்தி
வானோர் இறையைக் கள்வா என்பன் -என்னவாயிற்று நினைத்தது
தொடங்கின வாக்கியம் பூரிப்பதற்கு முன்னே தன்மை அனுசந்தித்து -அரு வினையேன் -என்கிறார் –
தார்மிகனாய் இருப்பான் ஒருவன் ரஜஸ் தமஸ் ஸூக்களாலே அபி பூதனாய் கிருஹத்திலே அக்னி ப்ரஷேபத்தைப் பண்ணி
சத்வம் தலை எடுத்தவாறே அநு தபிக்குமா போலே அநு தபிகிறார்
அரு வினையேன் –
இப்போது அரு வினையேன் -என்கிறது -கள்வா என்கைக்கு அடியான பிரேமத்தை -அத்தை அருவினையேன் -என்கிறார்
அநிஷ்டா வஹம் பாபம் என்று இருக்குமவர் ஆகையாலே –

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்
களவிலேவேழ்க்கை யுடையவனாய்-அபி நிவிஷ்டனாய் -என்னவுமாம்
அன்றிக்கே -களவு எழும்படி -களவு பிரசித்தமாம் படி -என்னவுமாம்
களவு பிரசித்தமாம் படி -வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்பன்
இத்தால் பரிவுடைய யசோதைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தைக் கிடீர் சொல்லிற்று -என்கை-என்பன் -என்றது சொன்னேன் -என்றபடி

பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
அதுக்கு மேலே
பரிவுடைய யசோதை பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அபிமதையான நப்பின்னை பிராட்டி பாசுரத்தையும் சொன்னேன்
தளவேழ் முறுவல்-
நப்பின்னை பிராட்டி உடைய தந்த பங்க்தியை கண்டவாறே முல்லை யரும்பு ஸ்ம்ருதி விஷயமாகை நெஞ்சிலே
கவயத்தைக் கண்டவாறே கிருஹத்தில் கோ ஸ்ம்ருதி விஷயமாம் போலே
பல்லுக்குத் தோற்ற பனி முல்லை -என்னக் கடவது இ றே

பின்னைக்காய்
நப்பின்னை பிராட்டி உடைய ஸ்மிதத்திலே தோற்று அவளுக்கு தன்னை இஷ்ட விநியோக அர்ஹமாகினான்-
வல்லானாயர் தலைவனாய் —
கிருஷ்ணாஸ்ரைய க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -என்னுமா போலே அவனைப் பற்றி நாட்டை அழித்து திரியும் மிடுக்கைப் பற்ற -வல்லானாயர்-என்னவுமாம்
அன்றிக்கே -ஆனாயர் வலிய தலைவனாய் -அதாவது உடம்பு இருக்க தலை குளித்தும் தலை இருக்க உடம்பு குளித்தும் இறே திரிவது
கார்த்திகை புதியதுக்கு குளித்தார்கள் ஆகில் இவன் அதுவும் செய்யாதே இடைத் தனத்திலே ஊன்றி நிற்கும் படியைச் சொல்லுதல்
இப்படி இருக்கில் அல்லது பெண் கொடார்கள் இறே இடையர்
குலேந சத்ருசீ -ஸூ ந்தர பாஹூஸ் த்வம் -7-என்னக் கடவது இறே -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்று இரண்டு தலையும்
குறைவற்று இருக்க எருதுகளை முன்னிட்ட வன்னெஞ்சர் -என்னவுமாம்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
மிருத்யு சமமாய் இருந்துள்ள ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக ஒரு காலே தழுவினான் -அநந்தரம் அவளை லபிக்கையாலே
அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கையாலே தழுவி -என்கிறது
எந்தாய் என்பன் –
எருது ஏழும் அடர்த்த செயலுக்கு தோற்று நப்பின்னை பிராட்டி பிராட்டி சொல்லும் பாசுரத்தைச் சொன்னேன்
உக்தி மாத்ரமேயோ –
நினைந்து -நெஞ்சாலும் தூஷித்தேன் -அவ்வளவேயோ -நைந்தே -பிறர் அறியும் படி சிதிலனாய் -காயிகத்தாலும் தூஷித்தேன்
வள வேழ் உலகு -இத்யாதி க்கு
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றேன்
எத்திறம் -என்றேன்
பிராட்டிமார் தசையை பிராப்தனாய் தூது விட்டேன்
என்று அவற்றுக்கு அநுதபிக்கிறார்
நினைந்து நைந்து வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தோடு உண்ட கள்வா என்பன் -பின்னையும்-
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் -அருவினையேன் -என்று அந்வயம்

——————————————————————————

அவதாரிகை –

நெஞ்சாலே நினைந்தும் -வாயாலே பேசியும் -நைந்தும் -தப்பச் செய்தேன் -என்றார் கீழ்
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் -என்கிறார் இதில் சண்டாளன் -ஒத்துப் போகாது என்று தான் சொல்லப் பெறுமோ
-அப்படியே யன்றோ நான் அயோக்யன் என்று அகலுகையும் -ப்ரேம ஆர்த்தர சித்தரான ப்ரஹ்மாதிகள் அன்றோ அது தான் சொல்லப் பெறுவர்-
நான் தப்பச் செய்தேன் -என்று அகலுமத்தில் கிட்டி நின்று பரிமாறுவது நன்று அன்றோ -என்று கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
ப்ரஹ்மாதிகள் சமாராத நத்துக்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களை சமைத்துக் கொண்டாயிற்று இழிவது
நினைந்து –
நாம் இவற்றையும் கொண்டு சென்றால் நம்மைக் குளிரக் கடாஷிக்கக் கடவனே -மாமக்ரூரேதி வஷ்யதி -என்கிறபடியே
நம்மை அவன் வினவக் கடவனே -என்று இங்கனே முந்துற நினைப்பார்கள்
நைந்து –
அநந்தரம் தரித்து இருக்க மாட்டாதே சிதில அந்த கரணராவர்கள்
உள் கரைந்து
நையுமது ஸ்தூலம் என்னும்படி உள் கரைவர்கள் –
உருகி
பின்னை ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாத படி மங்கு வர்கள்
இப்படி படுகிறவர் தாங்கள் ஆர் -என்றால் -இமையோர் பலரும் முனிவரும்
ப்ரஹ்மாதிகளும் -சனகாதிகளும் –
இவர்கள் ரஜஸ் தமஸ் ஸூ க்கள் அபி பூதரான போது பண்ணும் துர்மானம் கனத்து இருக்குமா போலே யாயிற்று
-சத்வம் தலை எடுத்த போது பகவத் குண அனுபவம் பண்ணி சிதிலராம் படியும்
இப்படி ப்ரேம ஸ்வ பாவராகையாலே திருமாலை தொடுக்குப் போது தொடங்கி-அவன் இத்தைக் கண்டு அருளக் கடவனே சாத்தி யருளக் கடவனே
–என்று சாதாரமாக தொடுத்த மாலை சாமாராதன உன்முகனானவன் ஸ்ரமம் ஆறுகைக்கு அர்க்க்யம் கொடுக்கைக்காக உண்டாக்கின ஜலம்
-அநந்தரம் சாத்தி அருளுவதாக சமைத்த சந்த நாதிகள் -தூபம் கண்டருள உண்டாக்கின அகில் புகை -இவை தொடக்கமானவற்றை
தரித்துக் கொண்டு வந்து நிர்மமராய்த் திருவடிகளிலே விழுவார்கள்
ஏந்தி வணங்கினால்
அவன் இவை கொண்டு கார்யம் கொள்ளுமதிலும் -அவனுக்கு -என்று தரிக்குமதுவே பேறாய் இருக்கும் இவர்களுக்கு
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்னுமா போலே அவன் தான் இவை கொண்டு கார்யம் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு
நிற்கக் காணுமதுவே பேறாக நினைத்து இருக்கும் -பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு இறே
வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ -என்கை

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மேலே மனம் செய் ஞானம் –என்று சங்கல்ப ரூப ஞானத்தை சொல்லா நிற்கச் செய்தே -நினைந்த -என்கிற இதுக்கு கருத்து என் என்ன
தேவாதி கார்யமாகக் கொண்டு விஸ்த்ருதமான தடங்கலும் அழிந்து -சதேவ என்று வ்யாஹரிக்க வேண்டும்படியான அன்று
புத்ர பௌத்ராதிகளோடே கூட ஜீவித்தவன் அவர்களை இழந்து தனியனானால்-தன் தனிமையை அனுசந்தித்து வெறுக்குமா போலேவும்
-தேசாந்தரகதனான புத்ரனை மாதா பிதாக்கள் நினைக்குமா போலேயும் -இவற்றின் உடைய இழவை அனுசந்திப்பதொரு
அனுசந்தானம் உண்டு -அத்தைச் சொல்லுகிறது
நினைந்த எல்லா பொருட்கட்கும் வித்தாய்
நினைத்தல் -கலத்தலும் –கூடலுமாய் -சதவஸ்தமாய் தன்னுடனே கூடிக் கிடக்கிற சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய் என்று
பிள்ளை யமுதனார் நிர்வஹிப்பர் -அன்றியே இப்படி தன் திரு உள்ளத்தாலே விஷயீ கரிக்கப் பட்ட சக பதார்த்தங்களுக்கும் காரணமாய்
முதலில் சிதையாமே
அவற்றை உண்டாக்கச் செய்தே தானான தன்மையில் குறை வாராதபடி இருக்கும் -ம்ருத்பண்டம் கடசராவாதி கார்யமானவாறே விசிஷ்டாகாரம்
நசிக்கும் –இங்கு அது இல்லை– நாட்டில் கார்யங்கள் உண்டாக்குவதான காரணத்தின் படி யல்ல இவன் படி இருக்கிறது
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ
ஆனால் பின்னை சங்கல்பமோ ஜகத் காரணம் -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில் -ஆனாலும் காரணமாம் போது
சங்கல்ப பூர்வகமாக வேணும் -சங்கல்ப விசிஷ்டம் காரணம் ஆனாலும்
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப ப்ராதான்யத்திலே சொல்லுகிறது -இப்படி இருக்கிற சங்கல்ப ஞான ரூபத்தை உடைய உன் பெருமை உண்டு
-உன் வை லஷண்யம் அது -இவர்கள் வணங்கினால் மாசூணாதோ
தன் சங்கல்பத்தாலே சகல பதார்த்தங்களையும் உண்டாக்கும் படியான வைலஷண்யத்தை உடையவனுக்கு
அவனாலே ஸ்ருஜ்யரான நாம் ஸ்பர்சித்த த்ரவ்யம் அங்குத்தைக்கு அர்ஹமோ-என்று தம்தாமுடைய அயோக்யதையை அனுசந்தித்து
அகலுகைக்கு அதிகாரம் உள்ளது அவர்களுக்கு அன்றோ
அதுக்குத் தான் நான் ஆர்
மாயோனே —
ப்ரஹ்மாதிகளையும் ஷூத்ர மனுஷ்ய ஸ்தானத்தில் ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான வைலஷண்யம் இருந்த படி என் –

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை இமையோர் பலரும் முனிவரும்
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் மாசூணாதோ மாயோனே -என்று அந்வயம்

—————————————————————————————-

அவதாரிகை –

நினைத்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன் -என்றார் முதல் பாட்டில்
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் -என்றார் இரண்டாம் பாட்டில்
நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்கன் நெகிழப் போகாதே -தான் தாழ நின்று எல்லோரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர் -என்று
திரு உலகு அளந்து அருளின சீல குணத்தையும் காட்டிக் கொடுக்க -அத்தை அநு சந்தித்து அகல மாட்டாதே -அணுகவும் மாட்டாதே
நடுவே நின்று அணா வாய்த்துக் காலம் கழிக்கிறார் -அப்படி காலம் கழிக்க வல்லரோ அவனை ஒழிய -என்னில்
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே -சீல குண அனுசந்தானாதாலே போக்கலாம் இ றே –

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
மஹா யோநிகளாய் -விலஷணமான ஜன்மங்களை உடையராய்
தம்தாமுடைய அதிகார அநு ரூபமான மரியாதைகள் உண்டு -சிருஷ்டி யாதிகள் -அவற்றில் வந்தால் அறிவித்த சர்வேஸ்வரன் பக்கல்
இருகால் மட்டுச் சென்று கேள்வி கொள்ள வேண்டாத படி கற்று இருப்பாரான வானோர் பலரும் முனிவருமான யோனிகளை –
அவர்கள் ஆகிறார் சப்த ரிஷிகள் தச ப்ரஜாபதிகள் -ஏகாதச ருத்ரர்கள் -த்வாதச ஆதித்யர்கள் -அஷ்ட வஸூக்கள் -என்று இப்படி
சொல்லப் பட்டு இருந்துள்ள ஜன்மங்களை உடையரானவர்களை
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
நீ படை என்று முந்துற சதுர்முகனை உண்டாக்கினவன்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்கிறபடியே ப்ரஹ்மாவை சிருஷ்டித்து இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்தை உண்டாக்கு -என்று
விட்டால் சர்வேஸ்வரனை கேள்வி கொள்ள வேண்டாத படி துப்பரவுடையன் ஆகையாலே பூர்ணனான சதுர முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்
அவ்யவதாநேந தன் பக்கலிலே பிறந்து தான் ஓதுவிக்க ஓதி அவற்றாலே ஜ்ஞானத்தில் குறைவற்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுடைய
ஜ்ஞானத்துக்கும் தூரச்தனாய் இருக்கும்
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானாரானவர்களுடைய ஜ்ஞானத்துக்கு தூரச்தனாய் இருந்து வைத்து தான் தன்னைக் கொடு வந்து
காட்டும் அன்று வருத்தமற கொடு வந்து காட்டும்
திக்குகளோடு கூடின பூமிப் பரப்படைய திருவடிகளால் தாவி அளந்து கொண்டவன்
நாய்ச்சிமார் தொடும் போது பூ தொடுமா போலே கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும்
அளந்து கொண்டது -என்று ஆச்சர்யப் படுகிறார்
குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்கு நிபந்தனம் ஏன் என்னில்
எல்லா எவ்வுயிர்க்கு தாயோன்
சகல பிராணிகளுக்கும் தாய் போலே பரிவனாகை
எல்லா எவ்வுயிர்க்கும் என்கிறது உத்கர்ஷம் அபகர்ஷம் பாராதே பரிவனாகை
தான் ஓர் உருவனே
ஒருவருக்கும் நிலம் அல்லாத மேன்மையையும் அனுசந்தித்தார்
அப்படிப் பட்டவனுடைய நீர்மையையும் அனுசந்தித்தார்
இவனும் ஒரு படியை உடையவனாய் இருக்கிறானே -என்று வித்தராகிறார்
கடு நடையிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை அனுசந்தித்து கால் தாழ்த்துகிறார்

————————————————————————————-

அவதாரிகை –

அவன் படி இதுவாய் இருந்தது -இனி நீர் செய்யப் பார்த்தது என் -என்ன -நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ -என்கிறார்
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து -ஸ்ருஷ்டியாத் அநேக யத்னங்களைப் பண்ணி என்னை தனதாக்கிக் கொண்ட குணங்களாலே
என்னை விஷயீ கரித்தவன்–இனி நான் அல்லேன் என்னிலும் தன்னுடைய சௌசீல்ய குணத்தாலே என்னை விடான் -என்று சமாஹிதர் ஆகிறார்
தான் வித்து -ஓர் வித்து -தனி வித்து –உபாதான சஹகாரி நிமித்த மூவகைக் காரணங்களும் அவனே என்றவாறு

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

தானோர் உருவே தனிவித்தாய்த் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீதேகமேவாத்வதீயம் -இங்கே அத்விதீய பதங்கள் மூன்றும் உண்டாய் இருந்தது –
இவற்றால் கொள்ளுகிற விநியோகம் என் என்னில்
சிருஷ்டியைப் பிரசங்கிக்கையாலே-காரண விஷயமாகக் கிடக்கின்றன –
த்ரிவித காரணமும் தானே என்கை -தான் -என்கிற இத்தால் -உபாதா நாந்தரம் இல்லை -என்கை-
ஓர் -என்கிற இத்தால் சஹகார்யாந்தரம் இல்லை என்கை -தனி -என்கிற இத்தால் நிமித்தாந்தரம் இல்லை என்கை
உரு -என்று அழகு -அழகிய -த்ரிவித காரணமுமாய்
மூவகை காரணமுமாய் இருந்தும் ஸ்வரூப ஸ்வபாவங்களில் மாறுபாடு அடையாத அழகு உண்டே
தத் தேஜ அஸ்ருஜத ச ஈஷத லோகாந்து ஸ்ருஜா இதி –

தன்னில் மூவர் முதலாய
இஷ்வாகு வம்ச்யர் நடுவே வந்து -அவதரித்து அவர்களோடு எண்ணலாம் படி இருக்குமா போலேயும்
யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம்படி இருக்குமா போலேயும்
ப்ரஹ்மாதிகள் நடுவே அவர்களோடு ஒக்க சொல்லலாம் படி அவதரித்து -ஸ்வேந ரூபேண நின்று பாலநத்தைப் பண்ணி அவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணி போருகையாலே
தன்னோடு கூடின மூவர் தொடக்கமான -என்னுதல்
அன்றிக்கே
தன்னில் -என்றது தன் பக்கலிலே என்றபடியே தன்னுடைய சங்கல்ப ரூப ஜ்ஞானத்தாலே
மூவர் முதலாயா -சேந்திர-என்கிற இந்த்ரனையும் கூட்டிச் சொல்லுதல்
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
ப்ரஹ்மாதிகள் தொடக்கமான தேவர்களையும்-சனாதிகளையும் -ஸ்தாவரங்களையும் -ஜங்கமங்களையும் அநுக்தமான
-எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக

தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
இப்படி சிருஷ்டி உன்முகனான தான் தனக்கு கண்வளர்ந்து அருளுகைக்கு போரும்படியான பரப்பை உடைத்தான ஏகார்ணவத்தை
தன் பக்கலில் உண்டாக்கி அதனுள் கண் வளரும் –
இப்படி ஏகார்ணவத்தில் தனியே சாய்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே —
நித்ய ஸூரிகளுக்கு நாதனானவன் -ஆச்சரயங்களான குண
சேஷ்டிதங்களை உடையவன் -வைகுந்தம் கலவிருக்கையாக யுடையவன் -அவன் என் நாயகனே
பெறுகைக்கு ஈடாக ஏற்கவே நோன்பு நோற்று வருந்தி பிரஜையைப் பெற்ற தாயானவள் -அவன் நடக்க வல்லனான சமயத்தில் –
தேசாந்தரம் போவேன் -என்றால் விட்டு ஆறி இராள் இ றே
அப்படியே நெடுநாள் தன வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன் -தான் தந்த
அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால் அவன் விட்டு ஆறி இருக்குமோ –

—————————————————————————————————–

அவதாரிகை –

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம்-க்ரியதாம் இதி மாம் வத-போலே ஏவி அடிமை கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் -என்னுதல்
இவர் ஆபிமுக்யம் பண்ணச் செய்தே அவன் முகம் காட்டாதே அல்பம் விளம்பிக்க -அது பற்றாமை -அருளாய் -என்கிறார் என்னுதல் –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
அருளிவிப்பாரும் அருகே உண்டாயிருக்க -எனக்கு அருளாய் என்று பிரார்த்திக்க வேண்டுகிறது என்
மான் ஏய்ந்த நோக்கை யுடையளாய்- ஏய்கை-பொருந்துகை -மானோடு ஒத்த நோக்கை -கண்ணை உடையளாய்
மடவாளை -ஆத்ம குணோ பேதையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை –
காரியப் பாடற கண்ணாலே அவனை ஒரு கால் நோக்கினால் -ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே குளிரும்படி யாயிற்று நோக்கம் இருப்பது
அன்றிக்கே -மடவாள் -மடப்பமாவது துவட்சியாய் -அவன் தான் கண்ணாலே இவளை நோக்கினால்
-தெய்வ வண்டு துதைந்த எம் பெண்ணையம்பூ –9-9-4-என்கிறபடி வண்டாலே ஆத்தசாரமான பூ போலே யாயிற்று இவள் இருப்பது
புஷ்ப வாளி இவ ரசிக ப்ரமர உபபுக்த தவம் தேவி நித்ய அபி நந்தயசே முகுந்தம் -ஸ்ரீ குண ரத்ன கோசம் -45-என்றபடி
மார்பில் கொண்ட மாதவா
மாம்பழத்தோடே ஒரு சம்பந்தம் இன்றிக்கே இருக்கச் செய்தே -மாம்பழ உன்னி அப்பேரை தரிக்குமா போலே இறே
இவனை ஒழிய ஸ்ரீ மான் என்னும் பேரை தரிக்கிறவர்கள்
அங்கன் இன்றிக்கே -விஷ்ணு வஷஸ் ஸ்தலஸ் தயா -என்கிறபடியே அவள் திரு மார்பில் நித்ய வாசம் பண்ணுகையாலே
-மாதவன் என்னும் திரு நாமம் உடையவனே –
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
அவள் அருகு இன்றிக்கே ஒழியவன் ஆனால் தான் உன்னைக் கிட்டினார்க்கு அவத்யம் வருமோ -கூன் சிதைய -என்றது
இவளுடைய அல்லாத அவயவங்களுக்கு ஒரு வாட்டம் வாராத படி நிமிர்த்த அத்தைப் பற்றா
வன வாச ஹேது பூதையான குப்ஜையைச் சொல்லிற்றாய்-பால்யத்திலே சுண்டு வில் கொண்டு திரியா நிற்க பெருமாள் லீலா ரசம் அனுபவித்தார்
என்று உண்டு -அத்தைப் பற்றிச் சொல்லிற்று ஆகவுமாம்
அப்போது கோவிந்தா -என்றது பூமிக்கு ரஷகன் ஆனவன் என்கிறது
அன்றிக்கே தீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகையாலே போம் பழி எல்லாம் அமணன் தலையோடு -என்னுமா போலே அவன் தலையிலே ஏறிட்டு சொல்லுதல்
அதுவும் அன்றிக்கே சாந்து இட்ட கூனி தன்னை சொல்லிற்றாய் -வருத்தம் அற சுண்டு வில் நிமிர்க்குமா போலே நிமிர்த்தவன் -என்னுதல்
தெறிக்கை யாவது -க்ரியையாய் நிமிர்த்தாய் என்றபடி
கிருஷ்ணனுக்கு வில்லுண்டோ பின்னை என்னில் வேலிக் கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி திரியும் இறே
தருமம் அறியாக் குறும்பனை தன கைச் சார்ங்கம் அதுவே போலே -என்று வில் உண்டாகவே அருளிச் செய்தாள் இறே
கோவிந்தா -திர்யக்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ –

வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய்
அது கிடக்க -பக்தாநாம் என்னும் வடிவு படைத்தவன் அல்லையோ -குப்பியில் மாணிக்கம் போலே த்ரிபாத் விபூதியிலும் அடங்காதே
விம்மும் படியாயிற்று வடிவில் புகர் இருப்பது
மதி சூதா –
அவ்வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதைப் போக்குவாயும் நீ யன்றோ -மதுவாகிய அசுரனைப் போக்கினால் போலே என் விரோதியையும் போக்கினவனே
உன் தேனே மலரும் திருப்பாதம்-
இவை ஒன்றும் இல்லை யானாலும் அடியில் உன் போக்யதையை பார்த்தால் தான் விடப் போமோ
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்னக் கடவது இ றே
இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது இ றே ஆசைப் பட்டது -இவர் ஆசைப் பட்ட படியே திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்று
அந்த திருவடிகளையே காட்டிச் சேர விட்டான்
உன் தேனே மலரும் திருப்பாதம் –என்று அத்தையே அபேஷிக்கிறார்
சேருமாறு வினையேனே —
கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போலே நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாபத்தைப் பண்ணின நான் சேருமாறு
அருள வேணும் –தாம் இசைந்த பின்னும் கிடையாமையாலே -வினையேன் -என்கிறார் –

——————————————————————————————

அவதாரிகை

இவர் ஆபிமுக்யம் பண்ணினவாறே அவன் அல்பம் தாழ்த்தான் –இவர் என்னை இழந்தாய் கிடாய் என்கிறார்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
உன்னைப் பார்த்தல் என்னைப் பார்த்தல் -செய்ய வேண்டாவோ
வினையேன் வினை
சேதனர் எல்லாருக்கும் உள்ள வினை போலே வல்ல வாயிற்று இவரது –பகவத் சம்ச்லேஷம் பெற வேணும் என்று இறே அவர்கள் இருப்பது
-அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவருக்கும் இறே
தீர் மருந்தானாய்-
நான் கிட்டுகை அத்தலைக்கு அவத்யம் என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்தானவனே-
வினையைப் போக்கிற்று எங்கு நின்றும் வந்து-என்னில்
விண்ணோர் தலைவா
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே நான் அயோக்யன் என்று அகல வேண்டாதார்க்கு நியந்தாவாய் இருக்கும் இருப்பில் நின்றும் வந்தாயிற்று
கேசவா
அதுக்கு இவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான் -என்கிறபடியே

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
அந்நிலையில் நின்றும் இவ்வருகே போந்து கிட்டின படி
மனை -சேர் ஊர் கிருஷ்ணன் ஆயற்கு
இங்கே அவதாரம் செய்யாததால் சேர்த்தல் என்றது
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல் -ஆயர் மனைகளிலே வந்து சேர்ந்து அவர்கள் குலத்துக்கு முதலானவன் என்னுதல்
அன்றிக்கே நாலு மூங்கிலைக் கொண்டு போய்-தங்கும் இடத்தில் வளைத்து தங்குகையாலே சொல்லிற்று ஆதல்
மா மாயனே –
இடைக் குலத்திலே வந்து பிறந்து -அவர்கள் ஸ்பரசித்த த்ரவ்யமே தாரகமாய் -அது தான் களவு கண்டு புஜிக்கும் படியாய்
அது தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை
இவ் வெளிமைக்கு அடி சொல்கிறது
மாதவா
அவளோட்டைச் சேர்த்தி
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
மகா ராஜரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்த படி -சினை என்று பணை-ஏய்கை -நெருக்குகை-பணைகளோடு பணைகள் நெருங்கித் தழைத்து
நினைத்த படி இலக்கு குறிக்க ஒண்ணாத படி நின்ற மராமரங்கள் ஏழையும் எய்தவன்-
இத்தால் ஆஸ்ரிதர் தன்னுடைய ரஷணத்தில் சங்கித்தால்சங்கா நிராகரணம் பண்ணி ரஷிக்குமவன் -என்றபடி
சிரீதரா –
மரா மரங்கள் எய்குகைக்கு இலக்கு குறித்து நின்ற போதை வீர லஷ்மீயைச் சொல்லுகிறது
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே —
இனையாய் -ஏவம் விதமான குண சேஷ்டிதங்களை உடையவனே
இனைய பெயரினாய் –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகங்களான திரு நாமங்களை உடையவனே
என்று நைவன் –
காண வேணும் கேட்க வேணும் என்ன மாட்டாதே நையா நின்றேன்
அடியேனே
ஆர் உடைமை அழிகிறது -உடையவர்கள் தங்கள் வஸ்துவை வேணுமாகில் நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்கிறார்
இது ஏதேனும் ஸ்வ தந்திர வஸ்துவாய் படுகிறதோ
பிறர்க்கு உரித்தாய் அழிகிறதோ
உன்னால் ரஷிக்க ஒண்ணாமல் அழிகிறதோ
என்னால் ரஷிக்கலாய் அழிகிறதோ

—————————————————————————————-

அவதாரிகை –

நைவன் என்றார் -இவரை நையக் கொடுக்க மாட்டாமையாலே வந்து முகம் காட்டினான் -அவனைப் பார்த்து நம்மால் வரும்
குணாதியமும் இவனுக்கு வேண்டா -என்று அகலுகிறார் –

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
சம்சாரிகளில் அறிவு கேடர் சர்வஜ்ஞ்ஞர் என்னும் படி கிடீர் என் அறிவு கேடு –
அல்லேன் என்று அகலுகிற இவர் அடியேன் -என்கிறது வாசனையாலே
அன்றிக்கே அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று -ஜ்ஞான ஆனந்தகளோ பாதி நிரூபகமாக
சேஷத்வத்தை பிரதி பத்தி பண்ணி இருக்கையாலே அஹம் என்றவோ பாதி அடியேன் என்கிறார்
சிறிய ஞானத்தன்
அத்யல்ப ஞானத்தை உடையவன்
அறிதலார்க்கும் அரியானை-
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் யாயிற்று அவன்
சவதஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது
தனக்கும் தன தன்மை அறிவரியான் -8-8-6-இறே
தம் பிரகாசங்களுக்கு உள்ள சேர்த்தி போரும் கிடீர் எனக்கும் அவனுக்கும்
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
அறிவரிய வஸ்துவுக்கு அடையாளம் திருத் துழாய் மாலை
நாட் செல்ல நாட் செல்ல பரிமளம் ஏறி வாரா நின்றுள்ள திருத் துழாய் மாலையைப் புனைந்தவனே
கண்ணனை
அறிவரியவனாய் இருந்து வைத்து -இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் தன்னை எளியனாக்கி வைத்தவனை

செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
செடி -பாபம்–ஆர்தல் -மிகுதி -பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -நோய் எல்லாம் பெய்ததோர் யாக்கை இ றே
ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்று அவனையே உபாயமாகப் பற்றி தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும்
அடியார் உண்டு -கேவலர் -அவர்களுக்கு அத்தை அறுத்துக் கொடுக்கும் ஸ்ரீ மானை
அவர்கள் பின்னை அடியரோ என்னில் அடியார் ஆவார் அவர்களே -என்று இருக்கிறார் -சேஷிக்கு அதிசயத்தை விளைவிக்கும் அவரே சேஷ பூதர் ஆவார்
என்னைப் போலே கிட்டி அவனுக்கு அவத்யத்தை விளைவிக்கப் பாராதே சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கிறவர்கள் இ றே
உமக்கு இப்போது வந்தது என் -என்ன
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே —
அடியேன் -எனபது -காண வேணும் என்பதாகா நின்றேன்
சம்சாரியான நாளில் அறிவே நன்றாய் இருந்தது இ றே -அது நன்றானபடி என் என்னில்
அப்போது கடக்க நின்று பகவத் தத்வத்தையே குறி அழியாமே வைத்தேன்
இப்போது அன்றோ நான் கிட்டி நின்று அழிக்கப் பார்த்தது -இதில் காட்டில் அறிவு கேடு உண்டோ

——————————————————————————————–

அவதாரிகை —

இவர் இப்படி அகலப் புக்கவாறே -இவர் துணிவு பொல்லாதாய் இருந்தது -இவரைப் பொருந்த விட வேணும் என்று பார்த்து –
வாரீர் ஆழ்வீர்-திருவாய்ப்பாடியிலே வ்ருத்தாந்தம் கேட்டு அறியீரோ -என்ன
அடியேன் அறியேன் என்றார் -அது கேட்கையில் உண்டான ஸ்ரத்தையாலும் -அவன் தான் அருளிச் செய்ய கேட்க வேணும் என்கிற
ஸ்ரத்தையாலுமாக –முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம் -பின்பு அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்தோம்
அதில் ஏதேனும் சேஷித்தது உண்டதாகக் கருதி திருவாய்ப்பாடியிலே வெண்ணெயை விழுங்கினோம் காணும் -என்ன
அது இதுக்குப் பரிஹாரமாகச் செய்தாயோ -அது ஒரு கால விசேஷத்திலே இது ஒரு கால விசேஷத்திலே என்ன
ஆனால் இது நாம் ஏதுக்குச் செய்தோம் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் உனக்கு தாரகம் ஆகையாலே செய்தாய் அத்தனை என்ன
ஆனால் அவ் வெண்ணெயோ பாதி உம்மோட்டை சம்ச்லேஷமும் நமக்குத் தாரகம் காணும் –
ஆனபின்பு நீர் உம்மைக் கொண்டு அகலுவீர் யாகில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் -என்றான் –
அவன் கருத்தை தாம் அறிந்தமை தோற்ற அநு பாஷிக்கிறார் இப்பாட்டில்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து லோகங்கள் ஏழையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய் முன்பு ஒரு காலத்தில்
பின்னை அதுதன்னை வெளிநாடு காண உமிழ்ந்து
மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய்
மாயா வயுனம் ஜ்ஞானம் -என்கிறபடியே இச்சா பர்யாயமாய் இருக்கிற ஜ்ஞானத்தாலே புக்கு உண்டாய் வெண்ணெய் –
அது செய்யும் இடத்தில் சக்கரவர்த்தி திரு மகனாய்ப் புக்கு -வெண்ணெய் அமுது செய்ய -என்றால் கொடார்கள் இறே
சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
ஷூத்ரரான மனுஷ்யர்களுடைய ஹேயமான சரீரத்தினுடைய நிலையை-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு உண்டாக்கிக் கொண்டு
வந்தாயிற்று இப்படிச் செய்தது
கறையினார் துவருடுக்கை -என்கிறபடியே என்கிறபடியே இடையர் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி இறே வெண்ணெய் அமுது செய்தது
சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம் யத் தவோதராத் -என்னா நிற்கச் செய்தது இறே
நைஷ கர்ப்பத்வமாபேத ந யோன்யாம்வசத் பிரபு -என்கிறது
இஷ்வாகு வம்சயரில் ஒருவன் யாகம் பண்ணா நிற்க -பிபாசை வர்த்தித்தவாறே -மந்திர பூதமான ஜலத்தை பானம் பண்ண கர்ப்பம் உண்டாயிற்று
சுக்ல சோணீத ரூபத்தாலே பரிணதமாய் யன்று இறே -சக்த்யதிசயத்தாலே இப்படிக் கண்ட பின்பு -சர்வ சக்திக்கு கூடாதது இல்லை
-என்று கொள்ளத் தட்டில்லை இறே
மண்ணை அமுது செய்தது -அதின் சத்தைக்காக
வெண்ணெய் யை அமுது செய்தது உன் சத்தைக்காக –
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது சேஷித்தது ஏதேனும் மண் உண்டாகிலும் பிற்பட்ட மனுஷ்யர்க்கு அத்யல்பமும்
சேஷியாத படி நெய் அமுது செய்தது அதுக்கு ஓர் மருந்தோ
ஒன்றும் சேஷியாத படி அமுது செய்யிலோ மருந்தாவதோ
அன்றிக்கே பீர் –சோகை -என்று வைவர்ண்யமாய்-மண்ணிலே சிறிது சேஷித்தால் மனுஷ்யர்க்கு வரக் கடவதான
வைவர்ண்யம் சிறிதும் வாராத படி நெய்யூண் மருந்தோ
அன்று இ றே -ஆனால் ஏதுக்குச் செய்தோம் என்னில்
மாயோனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தாரணம் இல்லாத படியான ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே செய்தாய் அத்தனை அன்றோ –

——————————————————————————————

அவதாரிகை

திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோ பாதி தாரகம் காணும் நீர் தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு -என்றான்
பாவ பந்தம் உள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்கு தாரகம் -அது இல்லாத என்னோட்டை ஸ்பர்சம் உனக்கு நஞ்சு -என்றார்
நஞ்சோ தான் -நஞ்சானமை குறையில்லையே -என்றான் அவன் –இவரும்-இது நஞ்சே இதுக்கு ஒரு குறை இல்லை -என்றார்
ஆனால் பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும் -என்றான் –என்னை– பொருந்துகிறார்
அன்றிக்கே -பூதனையை முடித்தால் போலே நான் அல்லேன் –என்று அகலப் புக என் நிர்பந்தத்தைப் போக்கினான் என்பாரும் உண்டு

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

மாயோம் –
பிரிகையாவது விநாசம் என்று இருக்கையாலே இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம் -என்கிறார் –
நானும் என்னோடு சம்பந்தம் உடையாரும் முடியக் கடவோம் அல்லோம் –
அன்றியே இரண்டு தலையையும் அழித்துக் கொள்ள கடவோம் அல்லோம்
தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீத் ஜகத் குரோ -என்கிறபடியே ஜகத்துக்கு வேர் பற்றானவனை முடிக்கப் பார்த்த நெஞ்சில்
தீமையை உடையளாய்–யசோதைப் பிராட்டியைப் போலே பரிவு தோற்ற ஜல்ப்பித்துக் கொண்டு வருவாளாய்
ஸ்வதஸ் சர்வஜ்ஞனானவனும் தாய் என்று பிரமிக்கும் படி தோற்றின மகா வஞ்சகையான பூதனை முடியும்படியாக
தூய குழவியாய் –
ஐஸ்வரமான மேன்மையும் நடையாடா இருக்கச் செய்தே அது தோற்றாதபடி கலப்பற்ற பிள்ளைத் தனத்தை உடையனாய்
இவனுக்கு பிள்ளைத் தனத்தில் குறை இல்லை யாகில் அதின் கார்யம் காணாது ஒழிவான் என் என்னில்
விடப்பால் வமுதா –
விஷம் அமிர்தமாம் முஹூர்த்தத்திலே யாயிற்று பிறந்தது
தர்மியை வேறாக்க ஒண்ணாமையாலே விரோத்தித்த ஆசூர பிரக்ருதிகள் முடிய பிராப்தம்
வமுது செய்திட்ட மாயன்
விஷம் அமிர்தமாம் படி அமுது செய்து தன்னைத் தந்து நம்மை உண்டாக்கின ஆச்சர்ய பூதன் –
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அனந்யார்ஹம் ஆக்குகையாலே அமிர்தம் ஆயிற்று –
பூதனையுடைய விஷம் அமிர்தமாம் படி அமுது செய்தவன் தான் ஆர் -என்னில்
வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன்
அயர்வறும் அமரர்களுக்குத் தனித்தலைவன் ஆனவன் –
அவர்கள் பரிந்து பரிசர்யை பண்ண பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்குமவன்
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்கிறபடியே
மைந்தன்
அவளுக்கு மிடுக்கானவன் -அவளோட்டை சேர்த்தியாலே நித்தியமான நவ யௌவனத்தை உடையவன் -என்னுதல்
அவளோட்டை சேர்த்தியாலே அழகிய மணவாளப் பெருமாளாய் இருக்கிறவன் என்னுதல்
எவ்வுயிர்க்கும் தாயோன்
சகல ஆத்மாக்களுக்கும் தாய் போலே பரிவானவன்
தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே —
தம்மான் -சர்வேஸ்வரன்
என்னம்மான் -நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்
நித்ய ஸூரிகளும் மற்றும் உள்ள சகல ஆத்மாக்களும் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே
விசேஷ கடாஷத்தை பண்ணினவன் என்றுமாம்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே —
விலஷணமான திருமேனியை உடைய அம் மஹா புருஷனைக் கிட்டி மாயக் கடவோம் அல்லோம்
மூர்த்தி -அழகான திரு மேனி என்றும் மஹா புருஷன் என்றுமாம்

———————————————————————————————

அவதாரிகை –

இப்படி இவரை இசைவித்து வைத்து ஒரு புதுமை செய்ய வேண்டாதபடி யான பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினாள்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
திலதைலவத் தாருவஹ் நிவத் -என்கிறபடி பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் சரித்து
சர்வ சக்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாத படி சதசாகமாகப் பணைத்த வினைகளை
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே போக்கி
மாயப் பற்று அறுத்து
ருசி வாசனைகளையும் கழித்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
தீர்ந்து -தான் க்ருத்க்ருத்யனாய் -என்னுதல்
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி –
அல்லேன் என்று அகலாதே -தனக்கே தீர்ந்து -தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி –
வீடு திருத்துவான்
கலங்கா பெரு நகருக்கும் ஒரு புதுமை பிறப்பியா நின்றான்
ஆர்ந்த ஞானச் சுடராகி –
பரிபூர்ண ஞான பிரபனாய்
யகலம் கீழ் மேல் அளவிறந்து
பத்து திக்கிலும் வியாபித்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் –
அதி ஸூ ஷ்மமான சேதன அசேதனங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிற
அன்றிக்கே -நேர்ந்த -கிட்டின -அதாவது ப்ரத்யஷ பரித்ருஷ்டமான ப்ரக்ருத் யாத்மாக்களுக்கும் ஆத்மாவாய் -என்றுமாம்
நெடுமாலே —
இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவானான்
வ்யாப்தியும் இவரைப் பெற்ற பின்பு புதுக் கணித்தது -என்னுதல்
அன்றியே -ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரை போலே இவரைத் திருத்துகைக்காக வ்யாப்தனாய் இருந்தான் என்னுதல்
நெடுமாலே
முனியே நான் முகன் அளவும் அவன் பண்ணின உபகாரத்தைச் சொல்லுகிறது
அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமே கூப்பிடுகிறார் இறே நடுவு எல்லாம் –

————————————————————————————

அவதாரிகை

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்க்கு -அவன் வரக் கொள்ள -அயோக்ய அனுசந்தானம் பண்ணி
அகன்று இவர் பட்ட கிலேசம் பட வேண்டா -என்கிறார் –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –1-5-11-

மாலே –
ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் -வானோர் இறையை -1-5-1- என்றாரே
மாயப் பெருமானே
குணத்தால் வந்த விபூத்வம் -வெண்ணெய் தொடு வுண்ட -1-5-1- என்றாரே
மா மாயனே
சேஷ்டிதங்களால் வந்த ஆதிக்யம் -இள வேறு ஏழும் தழுவிய -1-5-1- என்றாரே
என்று என்று மாலே ஏறி –
ஏவம் விதமான வை லஷண்யத்தை அனுசந்தித்து -நான் அயோக்யன் -என்று அகலும்படி பிச்சேறி
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
தன்னை முடித்துக் கொள்வதாக கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை யறுத்து விழ விடுவாரைப் போலே
அகன்று முடியப் புக இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள -அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போலே நின்ற நின்ற நிலைகள் தோறும் அவன் அருள் ஒழிய நடக்க மாட்டார்
மயர்வற மதிநலம் அருளினான் -என்றும் அருளாத நீர் அருளி -போலே அருளிச் செய்தாரே
பாலேய் தமிழர் –
பால் போலே இனிய தமிழை உடையவர்கள்
இசைகாரர் –
இயலுக்கு இசைய இசை இட வல்லவர்கள் -ஸ்ரீ மதுர கவியும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்கள்
பத்தர் –
பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள்
ஆழ்வான் ஒரு உருவிலே -ஸ்ரீ பராங்குச நம்பியை -பாலேய் தமிழர் என்கிறார் –
இசைகாரர் என்கிறது ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரை-பத்தர் என்கிறது -பிள்ளை உறங்கா வல்லி தாசரை -என்று பணித்தானாம்
பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை -இசைகாரர் -என்று திருப் பாண் ஆழ்வாரை -பத்தர் -என்கிறது பெரிய ஆழ்வாரை -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
இயல் அறிவார் இசை அறிவார் பகவத் குண வித்தராய் இருப்பர்-
இவர்கள் பரவும் –
இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்கிறது
ஆயிரத்தின் பாலே பட்ட-
கடலிலே முத்துப் பட்டது -என்னுமா போலே -ச்லாக்கியமான ஆயிரத்தின் நடுவே பட்ட இத் திருவாய் மொழி வல்லார்க்கு
இல்லை பரிவதே —
பரிவது இல்லை
அஞ்சிறைய மட நாரையிலே தூது விட்டு
அவன் வந்து சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே
அயோக்யன் என்று அகன்று படும் துக்கம் இல்லை –

முதல் பாட்டிலே அயோக்யன் என்று அகன்றார்
இரண்டாம் பாட்டில் அகலுகைக்கு தானும் அதிகாரி அல்லேன் என்றார்
மூன்றாம் பாட்டில் சீல குணத்தைக் காட்டித் துவக்க துவக்குண்டார்
நாலாம் பாட்டில் அகல ஓட்டுவார்களோ உடையவர்கள் என்றார்
அஞ்சாம் பாட்டில் உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்து அருள வேணும் என்கிறார்
ஆறாம் பாட்டில் அவன் அரை ஷணம் தாழ்க்க முடியப் புகா நின்றேன் என்றார்
ஏழாம் பாட்டில் அப்படி அவன் வரக் கொள்ள அயோக்யன் என்று அகன்றார்
எட்டாம் பாட்டில் திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோபாதி உம்மோட்டை சம்ச்லேஷகமும் தாரகம் -என்றான் அவன்
ஒன்பதாம் பாட்டில் -அப்படி அல்ல இது நஞ்சு என்ன நஞ்சு தானே தமக்கு தாரகம் -என்றான்
பத்தாம் பாட்டில் தம்மை இசைவித்து பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினான் என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: