திருவாய்மொழி – 1-3–ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

பிரவேசம் –

சர்வ ஸ்மாத் பரன் என்றார் முதல் திருவாய் மொழியில் –
பரனாகையாலே பஜ நீயன் என்றார் இரண்டாம் திருவாய் மொழியில்
பஜியுங்கோள் என்று பலகாலும் அருளிச் செய்யா நின்றீர் -இருகை முடவனை ஆனை ஏறு என்றால் அவனாலே ஏறப் போமோ –
அப்படியே சர்வேஸ்வரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற அவனை இந்த ஷூத்ரனான சம்சாரி சேதனனாலே பற்றப் போமோ என்ன
அவ்வானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம் படி படிந்து கொடுக்கும் அன்று ஏறத் தட்டிலையே -அப்படியே இஸ் சம்சாரி சேதனனுக்கு
பஜிக்கலாம் படி அவன் தன்னைக் கொடு வந்து தாழ விட்டு ஸூலபனாகில் இவனுக்கு பஜிக்கத் தட்டில்லையே -என்கிறார் –
அவதாரம் தன்னில் வந்தால் பாக்ய ஹீனருக்கு சஜாதீய பிரதி புத்தி பண்ணி அனர்த்தப் பட்டு போகவுமாய் –
பாக்யாதிகர்க்கு -அரியன் எளியனாகப் பெற்றோமே என்று ஆஸ்ரயிக்கலாம் படி இரண்டுக்கும் பொதுவாய் இ றே இருப்பது –
சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை உபபாதித்திக் கொண்டு போந்தோம் –
அது தானே இவர்களுக்கு இத்தனை எளியானோ-என்று விடுகைக்கு உடலாயிற்று
அவ்வெளிமை தானே ஆதரிகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே இ றே -என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்து அருளினாராம் –
சில தார்மிகர் ஏரி கல்லினால் சேற்றிலே தலையை நொழுந்தி பட்டுப் போகா நிற்பார் சிலர் –விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் என்று சில பதார்த்தங்கள் விழுந்து முடிந்து போம் -சிலர் அதன் ஒளியாலே ஜீவியா நிற்பார்கள்
வேத நல் விளக்கு-பெரிய திருமொழி -4-3-8- இ றே
இவன் தான் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -திருப்பாவை -5-இ றே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு-பெருமாள் திருமொழி -10-1-இ றே
அவன் தான் அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும் -பெரிய திருமொழி -4-3-8-இப்படி வந்து
அவதரித்து ஸூலபனான நிலை தன்னிலே இ றே
அப்படியே சிசுபாலாதிகள் பூதனா சகட யமளார்ஜூன நாதிகளுக்கு எதிரிட்டு முடியவுமாய்
அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாய் யாயிற்று அவதாரம் தான் இருப்பது –
பலகாலும் அவனை பஜியுங்கோள் -என்னா நின்றீர் -கண்ணால் கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை
-ஆனபின்பு ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்ன
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -முண்டக உபநிஷத் -என்றும் விசதே தத நந்தரம்–ஸ்ரீ கீதை -18-55-என்னும் சொல்லுகிறபடியே
சில வருத்ததோடு காட்சியாய்த் தலைக் கட்டும் சாதன பக்தியை அன்று இங்குச் சொல்லுகிறது
காண வேணும் என்னும் ஆசா லேசம் உடையாருக்கு அவன் எளியனாம் படி யாயிற்று
-சர்வாதிகன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் இல்லை

-பஹூ நி மே வ்யாதீதா நீ -என்கையாலே அவதாரம் தன்னில் புரை இல்லை -இச்சை தானே யுண்டே –
இது தன்னை அவதார ரஹச்யத்திலே தானும் அருளிச் செய்தான் இ றே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் –என்று -என்னுடைய ஜன்மங்கள்
கர்மம் அடியாக அன்று -இச்சை வடியாக இருக்கும் -நாம் பிறவா நிற்கச் செய்தேயும் பிறவாமையும் கிடக்கும்
தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும் -அப்ராக்ருத சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்புதோம்-இவற்றிலே
ஒன்றை அறிந்தவர்களுக்கு பின்னை ஜன்மம் இல்லை
நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ -ஈரிறை யுண்டோ -என்று அவன் சதுர்த்யத்யாயத்தில் அருளிச் செய்த படிகளை உப ஜீவித்துக்
கொண்டு -ராம கிருஷ்ணாத் யாவதாரங்களை பண்ணிக் கொண்டு ஸூலபனாம் -ஆனபின்பு ஆஸ்ரயணம் கூடும் ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
அவதாரங்களை முன்னோட்டுக் கொண்டு
அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லையான கிருஷ்ணாவதாரத்தில் இழிந்து
அது தன்னிலும் பரத்வத்தோடு ஒக்கச் சொல்லலான நிலைகளைக் கழித்து
நவநீத சௌர்ய நகர ஷோபத்திலே அகப்பட்டு -இள மணல் பாய்ந்து
பரத்வத்தை அனுசந்தித்தார் -தெளிந்து இருந்து பரோபதேசம் பண்ணினார் -எத்திறம் -என்று மோஹித்துக் கிடக்கிறார் –

————————————————————————-

அவதாரிகை –

முதல்பாட்டில் எம்பெருமானுடைய சௌலப்யத்தை உபதேசிக்கப் புக்கு அவனுடைய நவநீத சௌர்ய சரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார்

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை
பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ என்னில்
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திருச் சந்த விருத்தம் -83-என்னக் கடவது இ றே
ஆகையால் பத்து என்று பக்தியைச் சொல்லுகிறதாய்-அது தன்னிலும் பரபக்தியை அன்று இங்குச் சொலுகிறது -பக்தி உபக்ரமாத்ரத்தை –
உபக்கிரம மாத்ரம் என்று இத்தை நியமிப்பார் யார் -அதினுடைய சரம அவஸ்தையை காட்டினாலோ -என்னில் -அது ஒண்ணாது –
இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது குண பிரகரணம் ஆகையாலும்
சர்வேஸ்வரனுக்கு ஒரு உத்கர்ஷம் சொல்லுகை இப்போது இவர்க்கு அபேஷிதம் அல்லாமையாலும்
தம்தாமை ஒழியச் செல்லாதார்க்கு ச்நேஹிக்குமது அல்லாதார்க்கும் உண்டாகையாலும்
மித்ர பாவேன சம்ப்ராப்தம்
ந த்யஜேயம் கதஞ்சன -என்னுமவன் ஆகையாலும் -உபக்கிரம மாதரத்தையே சொல்லிற்றாகக் கடவது
ஆசாலேசம் உடையார்க்கு தன்னைக் கொடுப்பதாக பகவத் உக்தி உண்டாய் இருந்தது இ றே
எதிர் சூழல் புக்கு -2-7-6–என்றும் -என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்றும் விலக்காமை தேடித் திரிகிறவன் இ றே
உடை –
இந்த அப்ரதிஷேதாத்வேஷ மாதரத்தை கனத்த உடைமையாகச் சொல்லுகிறது –
விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம் பண்ணுவாரை நித்ய ஸூரிகளில் காட்டில் கனக்க நினைத்து இருக்கும்
பகவத் அபிப்ப்ராயத்தால் சொல்லுகிறது
இவர்கள் பக்கலில் இம்மாத்ரம் உண்டானால் பின்னை இவர்களுடைய பரத்துக்கு எல்லாம் நானே கடவன் என்று இருக்குமவன் யாயிற்று
இவன் ராவண பவனத்தை விட்டு ஆகாசத்திலே கிளம்பின போதே ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மீ குடி கொண்ட படி இறே அந்தரிஷத கத ஸ்ரீ மான் -என்றது
லஷ்மணா லஷ்மி சம்பன்ன -என்றது இறே இளைய பெருமாளை
இது இறே இவனுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் -இத்தைப் பற்ற -உடை -என்கிறது

யடியவர்க்கு –
இதுவும் பகவத் அபிப்ராயத்தாலே -த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-என்று
இன்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்யாஸ்ரிதையான பிராட்டிக்கு அவ்வருகாக நினைத்தான் இறே
ஒரு திருவடி திரு வநந்த ஆழ்வான் அல்ல -இவனுக்கு சேஷபூதராய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் –
இவ்விலக்காமை உடையவர்கள் யாயிற்று
உள்ள குணத்தை அனுபவித்து இருக்குமவர் அத்தனை இ றே அவர்கள் -குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலிலே இறே –

எளியவன் –
அவர்கள் பாபத்தை போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தன்னைக் கிட்டலாம் படி இருத்தல் செய்கை யன்றிக்கே
தன்னை அவர்களுக்க் இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும்
தன்னை ஒழிந்தவற்றைக் கொடுத்தல் -தன்னை அழித்துக் கொடுத்தல் செய்யான் –அழைத்து கொடுத்தல் செய்யான்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ-என்கிறபடியே
நான் உங்கள் அடியான் –என்னை வேண்டினபடி ஏவிக் கார்யம் கொள்ளுங்கோள் -என்று நிற்கும் –
பக்த்யா தவ நன்யா சக்ய அஹ்மேவம் விதோர்ஜூனா-பீஷ்மாதிகள் சொல்ல பரம் ப்ரஹ்ம பரம் தாம -என்று கனக்க கேட்டு இருந்தபடியாலே
நீ ஒருவன் பக்திக்கு எளியவன் எளியன் யாவது என் என்ன
ஒருவன் கருத்துக்கு ஒருவன் சிவந்து இருக்கிற படி கண்டாயே -அப்படியே எனக்கு இது நிலை நின்ற ஸ்வ பாவம் என்றான் இறே
பக்தி க்ரீதோ ஜனார்த்தன -சார்வ பௌமனான ராஜ புத்திரன் ஷாம காலத்திலே அல்ப த்ரவ்யத்துக்கு தன்னை எழுதிக் கொடுத்தால்
பின்னை தன செல்வக் கிடப்புக் காட்டி மீட்க ஒண்ணா தாப் போலே சர்வேஸ்வரனும் பக்தி நிஷ்டனுக்கு தன்னை அறவிலை செய்து கொடுத்தால்
பின்னை மேன்மை காட்டி அகல மாட்டான் -கழுத்திலே ஓலையைக் காட்டி தூது போ என்னலாம் படி தன்னைக் கையாளாக ஆக்கி வைக்கும் –

இவ் வெளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ என்னும் இத்தை பரிஹரிக்கிறது மேல்
பிறர்களுக்கு அரிய வித்தகன் –
பிறர்கள் ஆகிறார் -இவனைக் கொண்டு கார்யம் கொள்ளோம் என்று இருக்குமவர்கள்
வித்தகன் –
விஸ்மய நீயன்
இங்கு விஸ்மய நீயம் என் என்னில் -யசோதாதிகளுக்கு பவ்யனான நிலை தன்னிலே பூதனா சகட யமளார்ஜூ நாதிகளுக்கு அநபிபவநீயனாய் இருக்கை –
இன்னமும் பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே அர்ஜுனனும் துரியோதனனும் கூட வர அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு
பங்களத்தைக் கொடுத்து விட்டான் இறே
நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாக பற்றா நிற்க அல்லாதார் அசேதன க்ரியாக லாபங்களை பற்றுகிறார் போலே இறே துர்யோதனன் நிலை
ராமாவதாரத்திலும் ஹிமவான் மந்தரோ மேரு -இத்யாதி
சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று -வஸ்து ஸ்வ பாவம் இருக்கும் படி யாயிற்று இது –

மலர்மகள் விரும்பும் –
இவ்விரண்டுக்கும் அடி –இவளுடைய சேர்த்தி இ றே
புஷ்பத்தில் பரிமளம் போலே -புஷ்பத்தை இருப்பிடமாக உடையளாய்-அதில் பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
நாட்டார் பரிமளத்தை விரும்புவர்களாகில்-பரிமளம் தான் தண்ணீர் தண்ணீர் என்னப் பிறந்தவன் –

நம் –
உளன் சுடர் மிகு சுருதியுள் என்கிற பிரமான பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறது -நாராயண அனுவாதிகளோடேசேர
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-எண்ணக் கடவது இ றே
உளன் சுடர் மிகு சுருதியுள் என்று சுருதி வழியால் அங்கீ கருத்த லஷ்மீ சம்பந்தத்தை வெளியிடுகிறார்

அரும் பெறல் அடிகள் –
பெறுதற்கு அரிய சுவாமிகள் –

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
பெரிய பிராட்டியார் விரும்பும் படி இருக்கை போலே காணும் சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்
அப்ரமேயம் ஹி தத்தேஜ -என்னக் கடவது இ றே

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
கீழ்ச் சொன்ன எளிமையை உபபாதிக்கிறார் மேல்
மந்தரத்தைப் பிடுங்கி -கடலிலே நடு நெஞ்சிலே நட்டு -நெருக்கிக் கடைந்து வெளி கொடு வெளியே தேவர்களுக்கு அமிர்தத்தை
கொடுத்து விட்ட மகா பாஹூ கிடீர் இப்போது
இடைச் சேரியிலே வந்து பிறந்து
வெண்ணெய் களவு காணப் புக்கு
கட்டுண்டு
அடியுண்டு
நின்றான் என்கிறார் –

மத்துறு கடை வெண்ணெய்-
தயிர்ச் செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப் பட்ட வெண்ணெய்
கடை வெண்ணெய் -என்றால் கால த்ரயத்தில் உள்ளதனையும் காட்டும்
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் -என்னக் கடவது இ றே
இங்கே வர்த்த மானத்தாலே ஒரு சௌகர்யம் உண்டாகையாலே கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாது வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் படி
களவினில்
கடைகிற பராக்கில் நிழலிலே ஒதுங்கி சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான் போலே காணும்
களவினில்
களவிடையாட்டத்தில்-
உபக்ர சமயத்திலே கிடீர் அகப்பட்டது
உரவிடை ஆப்புண்டு
உரம் -என்று மார்வு
மார்விடையிலே என்றபடி
பொன் பெயரோன் தனது உரம் பிளந்து -என்னக் கடவது இ றே
பெரிய பிராட்டியார் நெருக்க அணைக்கும் மார்வைக் கிடீர் கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டது
அன்றியே
மிடுக்கை உடைய ருஷபம் போலே இருக்கிறவன் கிடீர் கட்டுண்டான் –

உரலிடை ஆப்புண்டு
உதரவிடை ஆப்புண்டு -உதரம் -என்கிற இத்தை -உரம் என்று இடைக் குறைத்தலாய் கிடக்கிறது
தாமோதரன் என்று பிள்ளை பெற்று பேரிடும் படி இ றே கட்டுண்டது
தாம் நா சைவோ தரே பத்த்வா பிரத்யபத்னாது லூகலே -என்றும்
யதி சக நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகாரா குடும்பி நீ -என்றும் சொல்லுகிறபடி இ றே எளியனாம் இருக்கும் படி –
தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே ஓர் உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
துருதுக்கைத்தனம் அடித்தித் திரிந்த நீ வல்லையாகில் போய்க் காணாய் -என்று உருக்கி விட்டால் போக மாட்டாதாய் இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ சரூயதே -என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளியனனா படி இ றே இங்கனே சொல்லலாகிறது
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான தானே இ றே இப்படி கட்டுண்டு இருக்கிறான்
ப்ரஹ்மாதிகளை தன சங்கல்பத்தாலே கட்டுவது விடுவது ஆகிற இவனே இப்போது அபலை கையிலே கட்டுண்டு இருக்கிறான்
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி -என்கிறபடி நம்முடைய கட்டை அவிழ்க்க இ றே தான் கட்டுண்டு இருக்கிறது
உரலோனோடு இணைந்து இருந்து
உரலுக்கு ஒரு வியாபார ஷமதை உண்டான வன்று தனக்கு ஒரு வியாபார ஷமதை உள்ளது -என்று தோற்ற இருந்தபடி
ஏங்கிய
உரலில் காட்டில் வ்யாவ்ருத்தி இத்தனையே காணும்
அழப் புக்கவாறே -வாய் வாய் -என்னுமே
பின்னை அழ மாட்டாதே ஏங்கி இருக்கும் அத்தனை
எளிவுண்டு -எளிவந்தபடி
எத்திறம்
பிரானே
இது என்ன பிரகாசம் –
இன்னம் மேன்மை தரை காணலாம்
நீர்மை தரை காண ஒண்ணாதே இருந்ததீ-
உயர்வற உயர் நலம் உடையவன் என்கிற மேன்மையிலே போவேன் -என்கிறார்
ந்யாம்யனாய் இருக்கிற இருப்பிலே நியந்தாவாய் இருக்கிற இருப்பு பேசலாய் இருந்ததீ
பேசப் புக்க வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றதும் மேன்மையிலே இ றே
நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று இ றே நீர்மை
இத்தனை தாழ நில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது
பரத்வத்தில் இந் நீர்மை இல்லை
இது என்ன பிரகாரம் -என்கிறார்
பெரியவன் தாழ்ச்சி யாகையாலே பொறுக்க மாட்டு கிறிலர்-

—————————————————————————————–

அவதாரிகை –

எத்திறம் என்று ஆறு மாசம் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தம் இ றே -இவர் மோஹித்துக் கிடக்க -பெருமாளும் பிராட்டியும்
பள்ளி கொண்டு அருளும் இடத்தை ஸ்ரீ குஹப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தால் போலே
ஸ்ரீ மதுரகவி பிரகிருதி சஜ்ஜனங்கள் அடங்கலும் பலிதமான வ்ருஷத்தை பஷி ஜாதங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்
மன்யே சா பரணா ஸூ ப்த சீதா அஸ்மின் சாயா நோத்தமே -என்று
வழி நடந்த விடாயாலே ஆபரணங்கள் கழற்றாதே யாயிற்றுப் பள்ளி கொண்டது
தத்ர தத்ர ஹி த்ருச்யந்தி சக்தா க நக பிந்தவ –பசியருகுத் தந்தாம் ஜீவனத்தைப் பகுந்து இடுவாரைப் போலே அந்த பாரத ஆழ்வானுக்கு
தான் நோக்கிக் கொண்டு கிடந்த இடத்தை காட்டுகிறான் இ றே
அவ்விடத்தைக் கண்டவாறே -சத்ருக்நோ அனந்தர ஸ்திதி -என்னும் படி அவ்விடத்தைக் காணா மோஹித்து கிடந்தான் யாயிற்று ஸ்ரீ பரதாழ்வான்
அப்படியே மோஹித்துக் கிடந்த இவர் –சிரேண-சம்ஜ்ஞ்ஞாம் பிரதிலப்ய சைவ விசிந்த்யமாசா விசால நேத்ரா -என்கிறபடியே
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே காலம் உணர்த்த உணர்ந்தார் –
நல்லார் நவில் குருகூர் இ றே -சத்துக்கள் அடங்கலும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தது
உணர்ந்த அநந்தரம் -நான் இங்குச் சொல்லிற்று என் -என்று கேட்டார்
பத்துடை யடியவர்க்கு எளியவன் -என்று ப்ராசக்த அனுபிரசக்தமாக சிலவற்றைச் சொல்லா
எத்திறம் என்று மோஹித்துக் கிடந்தீர்
தப்பச் சொன்னோம் -அழித்து பிரதிஜ்ஞை பண்ண வேணும் -என்கிறார் இரண்டாம் பாட்டில்
ஆவது என் என்னில் -பரோபதேசம் பண்ணப் புக்கு தாம் அனுபவித்தார் முதல் பாட்டில்
இப்பாட்டுத் தொடங்கி பரோபதேசம் பண்ணுகிறார்
கீழே ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக அருளிச் செய்கிறார் இதில் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன் –
எளிமையை இயல்வாக -ஸ்வ பாவமாக உடையவன்
ச்நேஹிகளுக்கு ச்நேஹியாய் இருக்கும் என்னுமிது குற்றம் அன்றோ
எல்லார்க்கும் காதாசித்கமாக எளிமை கூடும் -இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்கிறார் –

நிலை வரம்பில –
இன்ன அவதாரம் இன்ன சேஷ்டிதம்-என்று இல்லை எனபது பூர்வாச்சார்யர்கள் நிர்வாஹம்
பட்டர் -ஈவிரண்டையும் நிலை இல்லாமையிலே கொண்டு -இனி வரம்பு இல்லாமை யாவது –
அவதரித்து எளியனாய் நின்று நிலை தன்னிலே பரத்வம் தோற்ற நிற்கிலும் நிற்கும் என்று
சாரத்திய வேஷத்தோடு தாழ நிற்கச் செய்தே விஸ்வ ரூபத்தைக் காட்டியும்
தான் புத்ராத்ரமாக போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோஷத்தைக் கொடுத்தும்
ஏழு திரு நஷத்த்ரத்திலே கோவர்த்தன கிரியை தரித்துக் கொண்டு நின்றும் செய்தவை
இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ஒன்றிலும் ஒரு நியதி இல்லை –
ரஷணத்துக்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது -ஏதேனுமாக வமையும் இவனுக்கு என்கை –

பல பிறப்பாய் –
தெளிவுடைய தான் சொல்லும் போது -பஹூ நி –18-55-என்னும்
யதாபூதவாதியான வேதம் -பஹூதா விஜாயதே -என்னும்
அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார் -பல பிறப்பு -என்பார்கள்
பிறப்பாய் –
பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தன் பக்கலிலே புரை இன்றிக்கே இருக்கை
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும்
அஹம் வோ பாந்தவோ ஜாத –

ஒளி வரு முழு நலம் –
அபஹதபாப்மத்வாதிகள் ஜீவாத்மாவுக்கும் உண்டு இ றே
இங்கனே இருக்கச் செய்தே ஜன்ம நிபந்தனமான திரோதானம் பிறவா நின்றது இ றே ஸ்வரூபத்துக்கு

அவனுக்கு ஜன்மத்தால் வரும் விகாராதிகள் உண்டு
இவன் தன்னைத் தாழ விட்டு பிறக்கப் பிறக்க கல்யாண குணங்கள் புகர் பெற்று வாரா நிற்கும்
ச வு ஸ்ரேயான் பவதி ஜாயமான –கர்ம நிபந்தன ஜன்மமாகில் இ றே பிறக்கப் பிறக்க புகர் அழிவது
அனுக்ரஹம் அடியாக வருகிற ஜன்மம் ஆகையாலே புகர் பெற்று வாரா நிற்கும் -ச ஏவ ஸ்ரேயான் -என்றபடி –

அக் குணங்கள் தான் இருக்கும் படி என் என்னில்
முதலில கேடில –
ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை யன்றே -சூர்யன் போல்வாருக்கு தான் இது
–ஸ்வரூப அந்தர்கதமாய் உள்ளன –

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
இக் குணம் ஒளி வரும் முழு நலம் -என்ற இதில் புகாதோ என்னில் -மோஷ பிரதத்வமும் தனியே சொல்ல வேண்டுவது
ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்
அவதாரத்துக்கு பிரயோஜனம் இதுவே இ றே

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷம் ஆகிற தெளிவு -பரமபதம் -அத்தைத் தரும் ஸ்வ பாவம் என்றும் ஒத்து இருக்குமவன்
அவன் இங்கே வந்து அவதரிக்க்கிலும் சோக மோஹங்களை பண்ணும் இவ்விடம்
இவன் அங்குச் செல்லிலும் தெளிவைப் பண்ணும் அவ்விடம் தெளி விசும்பு -என்னக் கடவது இ றே –

முழுவதும் ஒழிவிலன் –
கீழ்ச் சொன்ன இரண்டையும் கூட்டிச் சொல்கிறார்

இறையோன் –
மோஷ பரதத்வம் ஈஸ்வரனுக்கே உள்ளது ஓன்று இ றே
அவதரிக்கச் செய்தே ஈச்வரத்வத்தில் குறையாதே நிற்கை

அளிவரும் அருளினோடு –
குளிர்ந்த பக்வமான அருளோடு -நிர் ஹேதுகமான அருளோடு

அகத்தனன் புறத்தனன் அமைந்தே –
அகத்தனன் –
ஆஸ்ரிதற்கு கழுத்திலே ஓலை கட்டி தூது போ என்னலாம் படி இருக்கும் –
புறத்தனன்-
அநாஸ்ரிதர்க்கு அந்நிலை தன்னிலே கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கும்
அமைந்தே
இப்படி சமைந்து — இறையோன் -அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே முதலில கேடில ஒளி வரு முழு நலம் வீடாம்
தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய் நிலை வரம்பில பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -என்று அந்வயம்-

—————————————————————————

அவதாரிகை –

எளியன் என்றார்
எளிமையை சப்ரகாரமாக அருளிச் செய்தார்
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் என்கிறார் இதில்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
ஒரு தர்மத்தை அனுஷ்டியா நிற்கச் செய்தே -இப்போதே பலம் பெறாதே ஒழியிலும் ஒழியும் –
இடையிலே சில விக்னங்கள் வரிலும் வரும்
அங்கன் அன்றிக்கே -சக்ரவர்த்தி நாலு ஆஹூதி பண்ணி நாலு ரத்னத்தை எடுத்துக் கொண்டால் போலே பலத்தோடு சந்திப்பக் கடவ
தர்ம மார்க்கம் எல்லா வற்றாலும்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்து இருக்குமா போலே -இதுக்கு இவனுக்கு அவ்வருகு
ஒருவரும் இல்லை -என்றபடி சமைந்து இருக்கை

அமைவுடை முதல் கெடல் ஓடிவு -இடை
பிரம்மா ஜகத் சிருஷ்டி பண்ணினால் -சர்வேஸ்வரனோ என்று சங்கிக்கும் படி இருக்கை
இப்படி சமைவை உடைத்தான சிருஷ்டி என்ன -அப்படியே இருந்துள்ள சம்ஹாரம் என்ன -இடை ஒடிவு என்ன –
இடை இடையிலே நடுவு -ஒடிவு -சம்ஹாரம் -அவாந்தர சம்ஹாரம் -என்றபடி –

யறநில மதுவாம் -அமையுடைய யமரரும்-
இவை தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த சர்வேஸ்வரனையும் மறுத்து கேள்வி கொள்ள வேண்டாத படி
மிகவும் விதேயாம் படி சமைந்த ப்ரஹ்மாதிகளும்-

யாவரும் யாவையும்
சேதனங்களும் அசேனங்களும்

தானாம் அமைவுடை நாரணன் –
சேதன அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கும் படியான சமவை யுடையவனாகையாலே
நாராயணன் -என்னும் திரு நாமத்தை உடையவனுடைய

மாயையை அறிபவர் யாரே
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல -என்கிறார்
பிரகாரியான தான் பிரகாரமான வச்துவிலே ஓன்று என் மகன் என்று அபிமாநிக்கும் படி வந்து பிறந்த இவ்வாச்சர்யம்
ஒருவருக்கும் நிலம் அல்ல -என்கிறார் –

தானாம் அமைவுடை நாரணன் –
ஒருவன் ஒருவனை உனக்கு ஜீவனம் என்ன வேணும் என்றால் தன் புத்ராதிகளையும் கூட்டிக் கொண்டு எனக்கு
கல நெல்லு வேணும் என்னா நின்றான் இ றே-
அப்படியே இவை அடங்கலும் தன் அஹம் சப்தத்துக்கு உள்ளே அடங்கி தான் இவற்றுக்கு அபிமானியாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது

அறிபவர் யாரே –
நித்ய ஸூ ரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையால் அறியார்கள்
சம்சாரிகள் நாஸ்திகர்கள் ஆகையாலே அறியார்கள்
ப்ரஹ்மாதிகள் தாம்தாம் அறிவாலே அறிய இருக்கிறார்கள் ஆகையால் அறியார்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் மோஹித்துக் கிடப்பார்கள்
ச்வதஸ் சர்வஜ்ஞனான தானும் -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்னுமாகையாலே ஒருவருக்கும் நிலம் அல்ல என்கிறார்

—————————————————————————————

அவதாரிகை –

அப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அன்றோ என்னில் -ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய்
அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் இருக்கும் -என்கிறார்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் -எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களே யாகிலும் -ஸ்வ யத்னத்தாலே காணும் அன்று
இன்னபடிப்பட்டதொரு ஸ்வ பாவத்தை உடையவன் -என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமி யானவன்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
யாரும் -இந்த யச் சப்தம் தாழ்ச்சிக்கு எல்லையில் நிற்கிறது -ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் ஒரு அளவில்லை யாகிலும்
தானே காட்டக் காணுமவர்களுக்கு தன் படிகள் எல்லாம் அறியலாய் இருக்கும்
எங்கே கண்டோம் என்னில் -ஒரு குரங்கு வேடச்சி இடைச்சி இவர்களுக்கு எளியவனாய் இருக்கக் கண்டோம் இ றே
எம்பெருமான் –
ஆஸ்ரிதர்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு அரியனான என் நாயன் நிலை இருந்தபடி என் என்று எழுதிக் கொடுக்கிறார்
நமோ நமோ வாங்மநஸாதிபூமயே நமோ நமோ வாங்மநசைகபூமயே –ஸ்தோத்ர ரத்னம் -என்றால் போலே-

பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
அனுபவிதாக்களுக்கு இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி அநேகம் திரு நாமங்களை உடையனாய் இருக்கை –
குணத்துக்கு வாசகமாயும் ஸ்வரூபத்துக்கு வாசகமாயும் வருமவற்றுக்கு ஓர் எல்லை இல்லை இ றே
தேவோ நாம சஹஸ்ரவான் –என்கிறபடியே –
பிறபலவுடைய-
அந்த நாமத்வாரா காணும் அநேகம் திருமேனிகளை உடையனாய் இருக்கை
பிற -என்ன திருமேனியைக் காட்டுமோ என்னில் -நாம ரூபஞ்ச பூதா நாம் -என்றும்
நாம ரூபே வ்யாக்ரவாணி -என்று நாமத்தோடு சேர ரூபத்தையும் சொல்லக் கடவது
அவ்வளவே யல்ல -இவர் தாமும் இத்தை அனுபாஷிக்கிற இடத்தில் -பேரும் ஓர் உருவமும் –என்று அருளிச் செய்து வைத்தார்

பேருமோர் உருவமும் –
இவற்றில் ஒரு திரு நாமமும் ஒரு விக்ரஹமும்

உளதில்லை-
அநாஸ்ரிதற்கு ஸ்தூல பிரதிபத்தியும் அரியதாய் இருக்கும்

இலதில்லை –
ஆஸ்ரிதற்கு எல்லாம் காண்கையாலே இலது இல்லையே

பிணக்கே —
ஆஸ்ரிதர் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள்
அநாஸ்ரிதர் இதை இல்லை என்று இருக்கையாலே முதலிலே கிட்டார்கள்
இரண்டுக்கும் நடுவே வஸ்து நித்யமாகப் பெற்றோமே என்று தாம் இனியராகிறார்
அன்றியே
பேரும் ஒரு உருவமும் உளது
திருநாமமும் -திரு நாமத்துக்கு வாச்யமான திருமேனியும் நித்யம்
இலது இல்லை -இல்லை பிணக்கே –
இவ்விடையாட்டத்தில் விவாதம் வேண்டா என்கிறார் –

————————————————————————————-

அவதாரிகை –

பலகாலும் பஜியுங்கோள் என்னா நின்றீர் -பஜன உபாயம்
இருக்கும் படியை அருளிச் செய்யீர் -என்ன
இனி நான் உபதேசிக்க வேணுமோ –
அவன் தான் ஸ்ரீ கீதையிலே அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்றார் –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும் –
வைதிக சமயத்துக்கும் -பாஹ்ய ஷட் சமயங்களுக்கும் தன்னில் தான் உண்டான பிணக்கு அறும்படியாக

நெறியுள்ளி யுரைத்த
தான் சொல்லிற்று அடைய வேதார்த்தமாக இருக்கச் செய்தே தந்தாமுக்கு என்ன ஓர் அர்த்தம் போதியாதார்
ஆராய்ந்து சொல்லுமா போலே விசாரித்து அருளிச் செய்தான்
அதுக்கு நினைவு என் என்னில் அஹ்ருதயமாக சொல்லிலும் நன்று
சடக்கெனச் சொன்னால் -வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று ஆராய்ந்து சொன்னானாக சொன்னபடி –

கணக்கற நலத்தனன் –
எல்லையில்லாத குணத்தை உடையவன் -என்னுதல் -எல்லையில்லாத ச்நேஹத்தை உடையவன் என்னுதல் –
ஆர் இரக்கச் செய்தான் –
தன் வாத்சல்யத்தால் அருளிச் செய்தான் அத்தனை இறே

வாத்சல்யத்தாலே சொல்லிற்று எல்லாம் அர்த்தமாம் அத்தனையோ என்னில்
அந்தமில் ஆதி –
ஆப்த தமன் –
எல்லாருக்கும் உத்பத்தி விநாசங்களால் இறே ஜ்ஞான சங்கோசம் பிறப்பது
இவனுக்கு அவை இல்லாமையாலே அர்ரம வச்யன் -என்கிறது –

யம் பகவன்
ஜ்ஞானாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச் சப்தம் வர்த்தியா நின்றது இறே –
அந்யத்ர ஹ்யுபசாரத -பகவச் சப்தம் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே -அல்லாதார் பக்கலிலே ஔபசாரிகம்

அம் பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா –ஸ்ரீ கீதை -9-14-என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தான் இறே
அங்கனா பர்ஷ்வங்கம் போலே போக ரூபமாய் இ றே இது இருப்பது –

வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை உடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நின்று
பக்தி சரீரத்திலே மாம் நமஸ்குரு-ஸ்ரீ கீதை -9-34- என்கையாலே -வணக்குடை -என்கிறது –
தபஸ் -சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று -பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே -யஸ்ய ஜ்ஞானமயம் தப -என்கிற நியாயத்தாலே என்னுதல்
இவனுடைய ப்ரேம மாதரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ப்ராயத்தாலே யாதல் –

புறநெறி களை கட்டு –
புற நெறி யாகிற களையைக் கடிந்து -பறித்து
கட்டு -களைதல்
பக்தி விஷயமான போது -பலாந்தரத்திலே போய் விலக்கடிகளைத் தள்ளி -என்கிறதாகிறது
பிரபத்தி விஷயமான போது இதர சாதனங்களைத் தள்ளி -என்கிறது –

உணக்குமின் பசையற –
ரச வர்ஜம் என்கிறபடியே -பாஹ்ய விஷய பிராவண்யத்தை ருசி வாசனைகளோடு விடுங்கோள் –

இது எல்லாம் என் கொண்டு தான் -என்னில்
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே-
தத் விஷய ஜ்ஞானத்தைக் கொண்டு -என்னுதல்
தத் உக்த ஜ்ஞானத்தைக் கொண்டு என்னுதல்
பக்தி மார்க்கத்தைக் கொண்டு என்னுதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று என்னுதல்

——————————————————————————————–

அவதாரிகை –

அவதாரத்திலே ஆஸ்ரயிங்கோள் -என்று நின்றீர் -மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதமாவதார -என்கிறபடியே
-ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே அவதீர்ணனாய் நிற்கிற நிலையாய் இருந்தது பிரதம அவதாரம்
அதில் மூவரும் ஒத்த கார்யத்திலே அதிகரித்து நின்றார்கள் -இப்படி நிற்கையாலே மூவரும் பிரதானாரோ- மூவரில் ஒருவன் பிரதானனோ
மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானனோ -என்று எங்களால் விவேகிக்கப் போகாமையாலே ஆஸ்ரயணத்தில் அருமை கூடும்படியாய் இருந்தது –
ஆஸ்ரயணீய வஸ்துவை நிரூபித்து தரலாகாதோ நாங்கள் ஆஸ்ரயிக்கும் படி என்ன —
காண்கிற தேஹமே ஆத்மா வென்று இருக்கும் நிலை தவிர்ந்து தேக அதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்மா வஸ்து உண்டு என்று அறிகை தான் அரிது
வருந்தி அத்தை அறிந்தானே யாகிலும் -ப்ரஹ்மா ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாக நிற்கிற சர்வேஸ்வரன் படி தானே அறியப் போகாது
ஆனபின்பு இவ்வழியே இழிந்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்று ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்
ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
உணர்வு -என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரமே உள்ளது ஜ்ஞாத்ராம்சம் இல்லை -என்கிற பஷத்தை தவிர்க்கிறது -யோகாசாரன் நிரசனம் –
உணர்ந்து உணர்ந்து -என்ற வீப்சைக்கு கருத்து -சைதன்யம் -ஆகந்துகம் முக்த்ய அவஸ்தையிலும் பாஷண கல்பமாய் இருக்கும் என்கிற பஷத்தை தவிர்த்து சைதன்யம் நித்தியமாய் இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது -நையாயிக வைசேஷிகர்கள் வாதம் நிரசனம்
ஜ்ஞாத்ருத்வம் நித்தியமாய் இருக்கையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் அது தான் அநித்தியம் -என்கிற க்ரியா வாதியையும் நிரசிக்கிறது

இழிந்து அகன்று உயர்ந்து –
இச் சேதனன் தான் அணு பரிமாணனாய் இருக்கச் செய்தேயும் -ஈஸ்வர ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்து இருக்குமா போலே-
ஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்து இருக்கும் என்கிறது
பாதே மே வேத நா சிரஸி மே வேத நா – என்று இருக்கும் படியைச் சொல்கிறது –

உருவியந்த இந்நிலைமை –
உருவில் காட்டில் வியந்து -வேறு பட்டு இருக்கிற இந்நிலைமை உண்டு –இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
அன்றியே
உருவு இயந்த –என்ற பதபேத மான போது -யாத்தல் -கடத்தலாய்-உருவில் காட்டிலும் கடந்து இருக்கும் -வேறுபட்டு இருக்கும் -என்றுமாம்

உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஆக இரண்டாலும் ஜடமான சரீரத்தில் காட்டில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை கேவல சரவண மனநாதிகளாலே சாஷாத் கரிக்கக் கூடிலும்
தேக அதிரிக்தமாய் இருக்கிற ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற க்ரமத்தாலே இழிந்து வருந்தி ஒருபடி அறிந்தானாகிலும்

இறை நிலை உணர்வு வரிது –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -அவர்களை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது –

உயிர்காள்-
சைதன்ய யோக்கியம் அன்றிக்கே இருப்பது ஒன்றாய் தான் இழக்கப் பெற்றதோ
சேதனரான பின்பு அதன் கார்யம் பிறக்கப் பெற்றது இல்லையே -அறிவுகேடராய் நீங்கள் பட்டது என் –

எங்கள் அறிவும் அறியாமையும் கிடக்க கிடீர் -அறிந்த நீர் அருளிச் செய்யீர் -நாங்கள் அப்படி ஆஸ்ரயிக்க என்ன -அருளிச் செய்கிறார் மேல் –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-அரி அயன் அரன் என்னும் இவரை — உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
ஒரு உணர்த்தி -ஸ்வரூப பரம் –
ஒரு உணர்த்தி ஸ்வபாவ பரம்
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும் ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்
விரோதி நிரசன சீலனாய் -ரஷகனாய் இருக்கும் ஒருவன்
ஒருவன் திரு நாபீ கமலத்திலே அவயவதாநேந பிறந்தவனாய் இருக்கும் –
ஒருவன் சம்ஹாரம் ஒன்றுக்கே கடவனாய் இருக்கும்
இவர்களை பிரதிபாதிக்கிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து
அவை தன்னை பலகாலும் சொல்லிப் பார்த்து
லிங்கத்துக்கே உத்கர்ஷம் தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் பண்ணித் தர வேணும் -என்பாரைப் போலே ஒரு வ்யக்தியிலே பஷபதிக்கப் பாராதே
இவர்கள் ஸ்வரூப ஸ்வபாவங்களை பலகாலும் ஆராய்ந்து பார்த்து கோல் விழுக்காட்டாலே உத்கர்ஷம் கிடந்த வ்யக்தியைப் பற்றப் பார்ப்பது
இப்படி ஆராய்ந்தவாறே ஒரு வஸ்துவே பிரதானம் என்று உங்கள் நெஞ்சிலே தோற்றும்
அவ் வஸ்துவை சரவண மன நாதிகளால் கைபுகுந்தது-என்று விஸ்வசிக்கலாம் அளவும் ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்

————————————————————————————

அவதாரிகை –

அப்படியே செய்கிறோம் -என்று ஆறி இருந்தார்கள்
ஐயோ நீங்கள் உங்களுடைய ஆயுஸ் சினுடைய ஸ்திதியும் இழக்கிற விஷயத்தின் நன்மையையும் அறியாமை இறே ஆறி இருக்கிறது –
நீங்கள் முடிந்து போவதற்கு முன்பே நிர்ணய உபாயங்களால் வஸ்து இன்னது என்று நிர்ணயித்து -நிர்ணீதனானவன் பக்கலிலே
கடுக பக்தியைப் பண்ணப் பாருங்கோள் -என்று கீழ்ப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கிறது இப்பாட்டும் –
நீங்கள் மந்தாயுஸ்ஸூக்களாகையாலே-கடுகச் செய்து கொடு நின்று -செய்கிறோம் -என்ன வேணும்
செய்கிறோம் என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே விசேஷம் கீழில் பாட்டில் காட்டில் –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –1-3-7-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
மூவர் பிரதானராய் -மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே-மூன்று சரீரத்திலும் ஒருவனே
அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறானோ
அன்றியே
மூன்றிலும் மூன்று சேதனர் அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறார்களோ என்று அறிய அரிய வடிவுகளை உடையராய் நிற்கிற –
ஏக ஆத்ம அதிஷ்டிதமோ -அநேக ஆத்ம அதிஷ்டிதமோ -என்று அறிய அரிதான வடிவை உடையராய் நின்ற

நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
அநந்ய பரமான நாராயண அனுவாதிகளை நினைக்கிறார்
எழில் என்று அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிற புகரை நினைக்கிறது
நன்று எழில்
ரூப ஸ்ரீ யைப் பார்த்தவாறே -கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -4-5-10-என்கிறபடியே சர்வ ரஷகன் இவனே என்னலாம்
நாரணன் –
திரு நாமத்தைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக கொண்டு தான் பிரகாரியாக இருப்பான் ஒருவன் என்று தோற்றி இருக்கும்
நான் முகன்
ஒருவன் சிருஷ்டி காலத்தில் வந்தால் நாலு வேதங்களையும் உச்சரிக்கைக்கு நாலு முகத்தை உடையனாய் சிருஷ்டி கார்யம் ஒன்றிலும் அந்விதன்-என்று தோற்றி இருக்கும்
அரன்
ஒருவன் சம்ஹர்த்ருத்வம் ஒன்றிலும் அந்விதன் என்று தோற்றி இருக்கும் –
சிருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சம்ஜ்ஞாம் யாதி பகவா நேக ஏவ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-என்கிறபடியே
சம்ஜ்ஞைகளில் வந்தால் ஒக்க ஒடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பர்யாயமான ஜனார்த்தன சப்தத்தை இட்டுத் தலைக் கட்டுகையாலே தானே பிரதானன் என்று தோற்றும்படியாய் இருக்கும் –

இப்படி வி சத்ருச-மாறுபட்ட – ஸ்வபாவராய் இருக்கிற இவர்களை
ஒன்ற நும் மனத்து வைத்து –
அவனை ஒழிந்த இருவரில் ஒருவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல்
நிர்ணயிப்பதற்கு முன்னே இவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல் பாராதே ஒருபடிப்பட உங்கள் நெஞ்சிலே வைப்பது
உள்ளி –
உள்ளுவது -சுருதி நியாயங்களாலே ஆராய்வது
அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை இப்படி ஆராய்ந்த வாறே ஒரு வஸ்து பிரதானமாய் இரண்டு அப்ரதானமாய் தோற்றும்

தோற்றினவாறே –
நும் இரு பசை அறுத்து –
அவ்விரண்டிலும் நீங்கள் பண்ணுகிற நசையைத் தவிருவது -பேச நின்ற சிவனுக்கும் —
வஸ்துகதமாய் வருவது உத்கர்ஷம் இல்லை -நீங்கள் ஏறிடுகிற இவற்றைத் தவிருவது –

நன்றென நலம் செய்வது அவனிடை –
இப்படி நிர்ணீதனவான பக்கலிலே -இவன் நமக்கு கை புகுந்தான் -என்று உங்களுக்கு ஏறத் தேற்றம் பிறக்கும் படி
அநந்ய பிரயோஜனமான பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-

க்ரமத்திலே செய்கிறோம் என்று இருந்தார்கள்
நம்முடைய நாளே —
கெடுவிகாள் நம்முடைய ஆயுஸின் நிலை அருவி கோளே-கடுக ஆஸ்ரயிகப் பாருங்கோள்
நம்முடை நாள் -என்னும் காட்டில் -ஆயுஸின் நிலையை அறிந்தபடி என் என்னில்
முன்பே மின்னின் நிலையில என்று அருளிச் செய்தார் இறே
ஒருவன் இரண்டு கதவையும் அடைத்துக் கொண்டு கிடந்து உறங்கா நின்றால்-நெருப்பு பற்றி எரியா நின்றால் -அவிக்கிறோம் -என்று ஆறி இருக்கலாமோ –
நந்த்தன்யுதிதே ஆதித்யே நந்தத்யச்தமித ரவௌ ஆத்மநோ நாவபுத்யந்தே மனுஷ்யா ஜீவிதஷயம் -ஆதித்ய உதயத்திலே வந்தவாறே
-த்ரவ்ய அர்ஜன காலம் வந்தது -என்று உகப்பார்கள் –அவன் அச்தமித்தவாறே-அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது -என்று
உகப்பார்கள் -சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ குறைகிறது என்று அறியாது இரா நின்றார்கள் என்னா நின்றது இறே

—————————————————————————————–

அவதாரிகை –

ஒரு நாளாகிலும் முற்பட்டது உடலாக ஆஸ்ரயிக்கச் சொல்லா நின்றீர்
அநாதி காலம் நாங்கள் பண்ணின பாபங்கள் விலக்கவோ-இனி காலம் தான் உண்டோ -என்ன –
நீங்கள் ஆஸ்ரயணத்திலே ஒருப்படவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும்
ஸ்ரீ யபதி சமாஸ்ரயணம் ஆகையாலே காலம் கழிந்தது என்று இருக்கவும் வேண்டா
நீங்கள் தண்டு காலா-பெரிய திருமொழி -1-3-5- ஊன்றி ஊன்றி தள்ளி நடக்கும் போது அக்கோலோடே சாயவும் அமையும் -என்கிறார்

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

நாளும் நின்று அடும் –
நாள்தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கக் கடவதான
பரமாணு கதமான பாரிமாண்டல்யாதிகள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும்
பகவத் ஸ்வரூபத்தோ பாதி குணங்கள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும் நித்ய வஸ்துவாய்
நித்ய பரதந்த்ரமாய் போரா நிற்கச் செய்தே அசித் சம்பந்தமும் நித்தியமாய் போருகிறது இறே

நம் பழமை அம் கொடு வினை
நம் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி பிறரதாய்-அசல் பிளந்து ஏறிட வந்தது அல்ல –நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை
அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று
எனக்கு முன்பு அனுபவியாததாய் மேல் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ –
சர்வம் சஹே -எல்லாம் பொறுக்க வல்லேன்
மே சஹஜம் ஹி துக்கம் – தன காய் பொறாத கொம்பு உண்டோ -என்று சொல்லலாம் படி இறே நாம் பண்ணி வைக்குமாவை இருப்பது
பழமை
அது தான் இன்று நேற்று அன்றியே பழையதாய் இருக்கை
அம –
என்று க்ரைர்யத்தைப் பற்றச் சொல்கிறது
கொடு வினை
அனுபவ விநாசயமாய் இருக்கை –

உடனே மாளும்
ஆச்ரயண காலத்திலே நசிக்கும்
யதேஷீ கதூல மக்னௌ ப்ரோதும் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாபமான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -5-25-
மேரு மந்திர மாத்ரோபி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று சொல்லுகிறபடியே விரோதி போம் அளவேயோ

ஒரு குறைவில்லை –
மேலும் ஒரு விரோதங்கள் வாராது -என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் -என்னுதல்
கௌந்தேய பிரதிஜா நீஹி ந மே பக்த ப்ரணச்யதி அர்ஜூன -இவ் வர்த்தத்தில் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞ்ஞை பண்ணு
-நம்மைப் பற்றினவர்களுக்கு அநர்த்தம் வாராது காண்
பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகைக்கும் வினை -கிடக்கைக்கும் -அக்னி நா சிஞ்சேத் போலே -என்ன சேர்த்தி உண்டு -அசங்கதம்
துராசாரோபி –செய்யக் கடவது அல்லாதவற்றைச் செய்து போருவது
சர்வாசீ -அபோஜ்ய போஜனங்களைப் பண்ணுவது -க்ருதக்ன -உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுவது
நாஸ்திக -வைதிக மரியாதையை இல்லை என்று போருவது -புரா -இது தான் பழையதாய் போருவது –
சமா ஸ்ர யேதித்யாதி-இவன் அனுகூலிப்பது எப்போதோ என்று ஏற்கவே அவசரம் பார்த்து இருக்கிறவனை பற்றி அனுகூலிக்குமாகில்
பின்பு அவன் நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ணுவது என் தான் -என்னில் -ப்ரபாவாத் பரமாத்மன -இவனைக் குறைய நினைக்கையாவது
பகவத் பிரபாவத்தை குறைய நினைக்கை இ றே
ந வா ஸூ தேவ பக்தா நாம் அஸூபம் வித்யதே க்வசித் -என்னுமா போலே

இனி செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
மனனக மலமறக் கழுவி –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே கலசி நின்றால் -இவனோ கடவான் -மற்றையவர்களோ -என்று சம்சயிக்குமது தவிர்ந்து
சர்வேஸ்வரனே கடவான் என்கிற அந்த கரண ஸூத்தி உண்டாக வேணும்
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழாது ஒழியும் இத்தனையே வேண்டுவது

நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
நாளும்
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே ஒரு நியதி இல்லை
நம் திருவுடையடிகள் தம்-
ஸ்ரீ மானான ஸ்வாமி யானவனுடைய
இத்தால் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது
சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்தான் ஆகில் அவன் பலப்ரதனாகிறான் –
பிராட்டியை புருஷகாரமாக பற்ற வேண்டுகிறது என் -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று அவள் முன்னாக ஆஸ்ரயிக்க வேணும் என்னா நின்றது கண்டீரே
என்று அருளிச் செய்து -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து அவன் பக்கல்
முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்ற வேணும்
நலம் கழல் –
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக் கொள்ளும் திருவடிகள்
வணங்கி -என்றது வணங்க என்றபடி
வணங்கி என்கிற இது வினை எச்சமாய் -வணங்க என்னும்
அர்த்தமாய் இருக்கும்

வணங்க நாளும் நின்றாடும் நம் பழமை யாம் கொடு வினை உடனே மாளும் -ஒரு குறை இல்லை –
ஆனாலும் ஆஸ்ரயணத்துக்கு காலம் தப்பி நின்றதே என்ன –
மாளும் ஓர் இடத்திலும் –
முடிகிற ஒரு ஷணத்திலும்
வணக்கொடு மாள்வது வலமே —
த்விதா பஜ்யேயமப் யேவம் ந நமேயம் -என்னாதே கிடக்கிற சீரைப் பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும்
வலமே
வரமே -என்னுதல் -ஸ்ரேஷ்டம் என்னுதல் -பலவத்தரம் என்னுதல்
அவனையும் ஆஸ்ரயித்து வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராதே
முடிகிற சமயத்திலே ஆஸ்ரயிக்கவே-பின்னைப் பேற்றோடு தலைக் கட்டும்
இத்தால் -ஜன்ம ப்ரப்ருத்தி ஆஸ்ரயத்தாலும் பலமில்லை பகவத் வ்யதிரிக்தர் பக்கலில்
ஆஸ்ரயணத்தில் உபக்ரமித்து முடிந்தாலும் பலம் தப்பாது பகவத் விஷயத்திலே என்கை-

———————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -ப்ரஹ்மாதிகளுடைய அபரத்வமும் -சர்வேஸ்வரனுடைய பரத்வமும் சொன்னார் –
இப்பாட்டில் அவர்கள் தாங்கள் இவனைப் பற்றிய லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியே அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் அவர்களுக்கு ரஷகனான சர்வேஸ்வரன் -அவர்கள் தாங்களும் காலிடமாட்டாத பூமியிலே வந்து
அவதரிக்கைக்கு ஹேது என் என்னில் -அவன் தானே அருளிச் செய்ததுவே ஹேது -பரித்ராணாம் சாதுநாம் -என்றான் இ றே
ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு இதிலே த்வரை பிறக்கைக்காகவும்-ருசி ஜனகனாகைக்கும் வந்து பிறப்பான்
அதிலே பலமாய் வருமது இறே துஷ்க்ருதுக்களுடைய விநாசம் -என்று அருளிச் செய்ததுவே ஹேது -என்கிறார் –

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன்-
கீழில் பாட்டுக்கு கீழ் இரண்டு பாட்டாலும் -6/7 பாட்டுக்களிலும் சொன்ன அர்த்தத்தை அனுபாஷிக்கிறார்
திரிபுர தஹனத்தாலே சஞ்ஜாத அபிமானியான ருத்ரன் திருமேனியிலே வலவருகை பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
பச்யைகாதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வ மாஸ்ரிதான் -என்கிறபடியே –

இடம் பெறத்துந்தித் தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும் –
எழுச்சியை உடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக திரு நாபி கமலத்திலே இருக்கும்
ப்ரஹ்மாணமீசம் கமலாசநச்தம்-என்கிறபடியே இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷணத்துக்கும் உப லஷணம்
எழுச்சியாவதி-சதுர்தச புவனத்துக்கும் நிர்வாஹகனான அளவுடைமை -ஈஸ்வரன் விரும்பி வந்து அவதரிக்கையாலே -நல்லுலகம் -என்கிறது
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- என்கிறபடியே
பிராட்டிக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் ஒக்கத் திருமேனியில் இடம் கொடுத்து வைத்தால் அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று
அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாத படி கூறாகக் கொடுத்து வைக்கும்
சர்வ அபாஸ்ரயமாய் இறே திருமேனி தான் இருப்பது
இடம் பெற
சவிகாசமாய் இருக்கும்
ருத்ரனுக்கும் இவ்வருக்கு உள்ளாருக்கும் நிர்வாஹகனாய் -சதுர்தச புவன ஸ்ரஷ்டாவான சதுர்முகன் -தான் உண்டாக்கின நன்றான லோகமும்
தானும் திருநாபி கமலத்தைப் பற்ற லப்த ஸ்வரூபனாய் இருக்கும்
உந்தி என்றும் துந்தி என்றும் திரு நாபிக்கு பெயர்
இடம்பெறத் துந்தி
இடம் பெற அத்து உந்தித்தலம்-என்றாய் பதம் -அதில் அத்து என்கிற பதம் -சாரியைச் சொல்லாய் பொருள் இன்றியே போய்
-இடம் பெற உந்தித் தலம் -என்கிறது -பூதலம் -என்னுமா போலே
திசைமகன் படைத்த நல்லுலகம் தானும் உந்தித் தலத்தனன்
ஸ்த நந்தய பிரஜை தாய் முலையை அகலில் நாக்கு ஒட்டுமா போலே திரு நாபீ கமலத்தை விடில் தன் சத்தை இல்லையாம் படி இருக்கை
இப்படிப் பின்னை சர்வ காலமும் இவர்கள் இருப்பார்களோ என்னில் ஆபத்துக்களிலே திரு மேனியிலே இடம் கொடுக்கும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவார்கள்
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும் மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி யரிசியை தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இ றே
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இ றே
ஒரு கலகங்களில் அடைய வளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து காலம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னார் பற்று
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

புலப்படப் பின்னும்
ப்ரஹ்மாதிகளுக்கு தன திருமேனியிலே இடம் கொடுத்ததுக்கு மேலே
தன்னுலகத்தில் அகத்தனன் –
தான் உண்டாக்கின ப்ரஹ்மாவால் உண்டான லோகங்களிலே வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் தன திரு மேனியிலே ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபராம் படி இருக்கிறவன்
அவர்களுக்கும் கூட காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
புலப்பட
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்குமவர்களுக்கு தன் சங்கல்பித்தினாலே சம்விதானம் பண்ண ஒண்ணாதே
அவர்கள் சஷூராதி கரணங்களுக்கு விஷயமாக வேணும் என்று -ஏன் சங்கல்ப்பித்தினால் சம்விதானம் பண்ணினால் என் செய்யும் என்னில்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையும் -என்பார்கள்
இது தனக்குத் தான் அடி என் என்னில்
தானே
ஆத்மமாயயா
ஆத்மேச்சாயா
ஒரு கர்மம் பிரேரிக்க அன்று -இச்சையாலே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–
அவன் இப்படி அவதரித்துப் பண்ணும் ரஷணங்களில் ஏக தேசம் சொல்லில் சொல்லும் அத்தனை
எல்லாம் சொல்லில் தலைக் கட்டப் போகாது
சொலப்புகில் உள்ளே உள்ளே யாம் இத்தனை
அன்றியே
தன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளால் ஸ்ருஷ்டரானவர்களுக்கு -என் மகன் -என்று அபிமாநிக்கலாம் படி வந்து பிறந்து
உனக்கு ராஜ்யத்தைத் தந்தேன் -அது தன்னை வாங்கினேன் போ என்றும்
கையிலே கோலைக் கொடுத்து பசுக்கள் பின்னே போ என்று சொல்லலாம் படி எளியனாய் இருக்கிற தான்
இவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியைச் சொல்லிற்று ஆகவு மாம்
இப்படி இதுவே அர்த்தம் என்னும் இடம் நீர் அருளிச் செய்த போது தெரிந்து அல்லாத போது எங்களுக்கு தெரியாத படி இரா நின்றதீ என்ன
இவை அவன் துவக்கே
மம மாயா துரத்தயா-என்றபடி அவன் தானே பிரக்ருதியாகிற விலங்கை இட்ட பாக்ய ஹீனர்கள் தன் பக்கல் அணுகாதபடி பண்ணி
உங்கள் பக்கல் அவன் உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்
துயக்கம் -சம்சயம்

——————————————————————————–

அவதாரிகை –

அவன் விமுகர் பக்கல் பண்ணுமவை கிடக்கிடீர் -அவன் காட்டின வழியே காணப்புக்க நாம் மநோ வாக் காயங்களாலே நம் விடாய் கெடத்
திரு உலகு அளந்து அருளின திருவடிகளை அனுபவிப்போம் என்று பாரிகிறார் –

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் –
துயக்கற்ற மதியை உடைய -சம்சய விபர்யய மதியையுடையராகையாலே
உள் -மனமும் இடமும் மேலும் -இங்கே மேலான அமரர் என்றபடி -நன்றான ஞானத்தை உடைய அமரரையும் கூட

துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
துயக்கு -மனம் திரிவு -அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணக் கடவதான குண சேஷ்டிதங்களை கூடின அவதாரங்கள் -மாயைகள் –
ஆகாசத்தைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாது
அமரர் -என்கிறது இந்த்ராதிகளை
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மிக்கு இருக்கச் செய்தே சத்யம் தலை எடுத்தாலும் அப்படியே கனத்து இருக்கும் இ றே அவர்கள் தங்களுக்கு –
அப்போது நம் கார்யம் நம்மால் செய்யப் போகாது -அவனே நம் கார்யத்துக் கடவன் என்று இரா அந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பார்கள்
தங்கள் இருப்பிடமும் இழந்து -ஸ்திரீகளும் பிடியுண்டு எளிமைப் பட்ட அளவிலே அத்தைப் பரிஹரித்து தர வேணும் என்று இரந்து-
பின்னை இவனும் போய் நரக வதம் பண்ணி -சிறை கிடந்த ஸ்திரீகளையும் மீட்டுக் கொடுத்து போரா நிற்கச் செய்தே புழக்கடைக்கே
நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர-வஜ்ரத்தைக் கொண்டு தொடந்தான் இ றே
அன்றிக்கே
நல் ஞானத்து உள் அமரர் -என்கிறது நித்ய ஸூரிகளையாய்-ஜ்ஞானாதிகனான பெரிய திருவடியும் -தேவரீரையும் நாய்ச்சிமாரையும்
வஹித்தேன் நான் அன்றோ என்றால் போலே சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் இறே

அவனுடைய ஆச்சர்யங்கள் நம்மால் பரிச்சேதிக்கப் போமோ -அது கிடக்கிடீர் –
அவன் அனுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்
புயற்கரு நிறத்தனன் –
வர்ஷூக வளாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவன் –
மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் -என்று பிள்ளான் பணிக்கும் படி
இவற்றாலே அனுபவிக்கப் பாரிக்கிறார் -என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
பரப்பை உடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் -வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்
இவர்கள் நன்மை தீமை பாராதே தன்னுடைய சுத்தியே இவர்களுக்காம் படி பண்ணினான்
நல்லடிப் போது -படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2–என்று ஆசைப்பட வேண்டும் படி இ றே இருப்பது
கதா புன -என்று பிரார்த்தித்து கிடக்குமது இ றே -செவ்விப்பூ சூட ஆசைப்படுவாரைப் போலே

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –
மறக்கக் கடவேன் அல்லேன் –
அக்ரமமாக பேசக் கடவேன் –
ஸூ காடம் பரிஷச்வஜே -என்னுமா போலே கட்டிக் கொள்ளக் கடவேன்
நிர்மமனாய் திருவடிகளிலே விழக் கடவேன்
அநந்ய பிரயோஜனனாய் இப்படி செய்யக் கடவேன்

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் -இத்திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் முற்பட நித்ய ஸூ ரிகள் வரிசையைப் பெற்று -பின்னை
சம்சாரம் ஆகிற அறவைச் சிறை வெட்டி விடப் பெறுவார்கள் -என்கிறார்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
கவிழ்ந்து -உப்புச் சாறு கிளறுவது எப்போதோ -என்று கிடக்கிற தேவ ஜாதியானது -எழுத்து வாங்கும் படியாக வாயிற்று
தோளும் தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமா போலே கடைந்த படி
குணங்களுக்குத் தோற்று -தொழுது எழு -என்கிற தம் பாசுரமேயாய் விட்டது -அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் என்கிறார் –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில்
வளப்பத்தை உடைத்தாய் சம்பத்தை உடைத்தான திரு நகரி -இத் திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் வாசிகமான அடிமை செய்த படியாயிற்று இது தான்
பூர்ண விஷயத்தில் வாசிகமான வ்ருத்திக்கு மேற்பட செய்யலாவது இல்லையே
தத் விப்ராசோ விபன்யவ -என்று நித்ய ஸூ ரிகளுக்கும் இதுவே இ றே வருத்தி

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
ரசகனமாய் யாயிற்று ஆயிரம் தான் இருப்பது
இத்தால் வாசிகமான அடிமை முறை என்று கார்ய புத்த்யா செய்ய வேண்டா -என்றபடி
அவற்றினுள் இவை பத்தும் –
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட -என்னுமா போல அவை தன்னிலே ரசகனமாய் இருக்குமாயிற்று
இத் திருவாய் மொழி –இவற்றை அப்யசிக்க வல்லார்

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
நித்ய ஸூரிகளோடு ஒத்த உச்ச்ராயத்தை உடையராய் தங்களுடைய ஜன்மம் ஆகிற விலங்கு அறப் பெறுவார்கள்
இப்பத்தை கற்ற போதே இவனை நித்ய ஸூரிகளிலே ஒருவனாக நினைப்பிடும்
சரீர விச்லேஷம் பிறந்தால் போய்ப் புகும் இத்தனை
ராஜா ஒருவனுக்கு நாடிட்டால் க்ரமத்தில் போய்ப் புகும் அத்தனை இறே
ராஜபுத்திரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே
நித்ய ஸூரிகளில் ஒருவராம் படியான தரத்தைப் பெற்று பின்னை சம்சார நிகள விச்சேதத்தை பெறுவார்கள்
அன்றியே
அமரரோடு உயர்வில் சென்று
ஆதி வாஹிகரோடு விரஜையிலே சென்று
அறுவர் தம் பிறவி யஞ்சிறையே -ஸூஷ்ம சரீரம் விதூநனம் பெறுவார்
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி–ஸ்ரீ கீதை -4-9-என்று அருளிச் செய்த அதுவே பலமாகக் கடவது

முதல் பாட்டில் சுலபன் என்கிறார் –
இரண்டாம் பாட்டில் கீழ் பிரஸ்துதமான சௌலப்யத்தை சபிரகாரமாக அருளிச் செய்தார்
மூன்றாம் பாட்டில் -அவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல என்றார்
நாலாம் பாட்டில் -அப்படிகள் ஆஸ்ரிதற்கு அறியலாம் அநாஸ்ரிதற்கு அறியப் போகாது என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படிப்பட்டவனை அவன் அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
ஆறாம் பாட்டில் -ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும் ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்தார்
ஏழாம் பாட்டில் -நீங்கள் மந்த ஆயுஸ் ஸூ க்களாகையாலே விளம்பிக்க ஒண்ணாது -கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
எட்டாம் பாட்டில் -ஆஸ்ரயிக்கவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் ப்ரஹ்ம ஈசா நாதிகளுக்கும் காரண பூதனானவான் வந்து அவதரிக்கைக்கு ஹேது அருளிச் செய்தார்
பத்தாம் பாட்டில் -இப்படி ஸூ லபனானவனை த்ரிவித கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்
இத்தை அப்யசித்தார்க்கு பலம் சொன்னார் நிகமத்தில்

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: