ஸ்ரீ வார்த்தா மாலாவில் முத்துக்கள் –

ரஷ்ய ரஷக சம்பந்தம் -பிதா புத்ர சம்பந்தம் -சேஷ சேஷி சம்பந்தம் -பர்த்ரு பார்யா சம்பந்தம் -ஞாத்ரு ஞேய சம்பந்தம்
-ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் -சரீர சரீரி சம்பந்தம் -ஆதார ஆதேய சம்பந்தம் -போக்த்ரு போகய சம்பந்தம்-

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -பாரதந்த்ர்யம் இருக்கும்படி என் என்று கேட்க -ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சர்வ சக்தியை அண்டை கொண்டு -உபாயத்தில் -கந்தல் அற்று -உபேயத்தில் த்வரை விஞ்சி இருக்கை –பாரதந்த்ர்யம் என்று அருளிச் செய்தார் –

பொன்னைப் புடமிடப்  புடமிட உருச் சிறுகி -ஒளி விஞ்சி -மாற்று எழுமா போலே -சங்கோசம் அற்று -ஞான விகாசம் உண்டானவாறே –
நாய்ச்சிமாருடனே சாம்யம் சொல்லலாய் இறே இருப்பது இத் ஆத்மாவுக்கு என்று -திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் .

அழுக்கு அடைந்த மாணிக்கத்தை நேர் சாணையிலே ஏறிட்டு கடைந்தால் பளபளக்கை வடிவாய் இருக்குமா போலே -அஞ்ஞனான சேதனனுக்கு
திரோதான நிவ்ருத்தியிலே அடியேன் என்கை வடிவாய் இருக்கும்-என்று முதலியாண்டான்-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான்-என்று -இறே -என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று –
ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் –
நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்

நாச்சிமாரை ஈஸ்வரனில் காட்டிலும் குறையச் சொல்லும் இடமும் -ஒக்கச் சொல்லும் இடமும் – எழச் சொல்லும் இடமுமாய் இருக்கும்
-இதுக்கு பிரமாணங்கள் -இவன் பிரபத்தி பண்ணும் படியைச் சொல்லும் இடத்தில் -இவள் ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும்
-ஒக்கச் சொல்லுகிற இடத்தில் -ஐகயம் சொல்லுகிறது என்றும் –
எழச் சொல்லும் இடத்தில் சௌலப்யம் சொல்லுகிறது என்றும் பிரபத்தி பண்ணக் கடவன்

உகந்து அருளின இடங்கள் பலவிடமாய் -திருப் போனகம் படைப்பது ஒன்றே யானால் அமுது செய்யப் பண்ணும்படி என் என்று
பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் நடுவே –
சர்வ மங்கள விக்ரஹாய -என்று விசேஷண சஹிதமாக உச்சரித்து அமுது செய்து அருளப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார் –

வஸ்துமான் வஸ்துவை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் —வஸ்து விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
விநியோகம் போகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – போகம் அபிமதத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
அபிமதம் அநு குணத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – அநு குணம் பரனுக்கு பாங்காய் இருக்கும் –

வயாக்ரா சிம்ஹங்களோ பாதி உபாய வேஷம் – யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
வ்யாமோஹம் உபாயம் – முக மலர்த்தி உபேயம் என்று எம்பார் அருளிச் செய்வர் –

திருக் கோட்டியூர் நம்பி பெரிய முதலியாரைப் பார்த்து -உபாய அம்சத்தில் தஞ்சமாக நினைத்து இருப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய
-இது நெடும் காலம் ஸ்வரூப நிரூபணம் பண்ணப் பெற்று வைத்து உபாய நிரூபணமே பண்ண தேடுவதே என்று -விஷண்ணராய் அருள –
ஆகில் உபாயம் வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
அபிரூபையான ஸ்திரீ அழகை மட்டிக்க மட்டிக்க -அபிரூபனாய் ஐஸ்வர்யர்ய வானுமான புருஷன் அந்தரங்கமாக
ஆழம் கால் படுமா போலே -அஞ்ஞனான சேதனன் -அழுக்கு அறுக்க அழுக்கு அறுக்க அவ் வீஸ்வரன்
திரு உள்ளம் அத்ய அசந்னமாய்ப் போரும் காணும் -என்று அருளிச் செய்தார் –

தேவகிப் பிராட்டியார் -திருக் கோட்டியூர் நம்பியின் குமாரத்தி -அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால் -தத் அநு ரூபமான பிரதான அநுபவ விசேஷத்தை அநுபவாந்தரத்துக்கு 
உறுப்பாக்குகையும் அநு பயுக்தம் –உக்தார்த்த ஸ்ரவணம் பண்ணினவனுக்கு உபாயாந்தர த்யாகம் உடம்போடே கூடாது –
ஆச்சார்ய -முக்ய -அனுபவம் கொண்டு பகவத்-அமுக்ய -அனுபவத்துக்கு உபாயம் ஆக்குவது ஒட்டாது-

பொன் நாச்சியார் கூரத் ஆண்டாளுக்கு பிரசாதித்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணவே –
ஸ்வரூப அநு ரூபமான உபாய உபேயாதிகள் உபபன்னமாய் போரும் காணும் -என்று அருளிச் செய்தார்–
ஆசார்ய சேஷத்வ பாரதந்த்ர்யங்களே ஸ்வரூப நிரூபக தர்மம் –
ஆசார்ய அபிமானமே உபாயம் –
ஆசார்யன் உகக்கும் கைங்கர்யமே உபேயம்

மருதூர் நம்பி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் -தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே அபராதம் பண்ணின சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான் -அநாதி காலம் திருவடிகளிலே
அபராதம் பண்ணின நான் பெறாது இருக்கை வழக்கோ -என்று அழ -அப்போதே பரமபதத தேற எழுந்து அருளினார் –

சிறியாண்டான் -எம்பெருமானாரின் சிஷ்யர் -கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை எம்பெருமானாருக்கு அறிவித்து –
அவரால் -மாறொன்று இல்லா மாருதி -என்று கொண்டாடப் பட்டவர் —தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
திருவேம்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் – பழைய நரகங்கள் ஒழிய வேறே எனக்கு
ஒரு நரகம் சிருஷ்டிக்க வேண்டும் —
அன்றிக்கே
என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் –
பழைய திருநாடு போராது எனக்கு என ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேணும் –

அத்துழாய் பெரிய நம்பி ஆபத் தசையிலே
-நாம் இங்கு நின்றும் கோயில் ஏறப் போனாலோ -என்ன –
நாம் அங்கு போய் பிரக்ருதியை விட்டால் நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிச் சாரும் போது –
நம்பி அகப்பட கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ -என்று பயப்படார்களோ -என்று அருளிச் செய்தார் –

ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -வருந்தி சண்டை இடும் —
சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் -பாரதந்த்ர்யம் சிலுகிடும் —
சித்தோ உபாய ச்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –

அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் –
அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் –
அநுபாதேய போகஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –
அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்
-அல்லாதவை -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்

எம்பார் வார்த்தை -ஸ்வரூபஞ்ஞன்-இதர விஷய ராக நிவ்ருத்தியும் -விகித விஷய ராக பிரவ்ருத்தியும் -இதர உபாய த்யாகமும் –
சித்தோ உபாய ச்வீகாரமும் –ஹிதபரன் பக்கல் யதா பிரதிபத்தியும் -உள்ளவனாய் இருப்பன்

சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே -தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

அமுதனார் சிறியாச்சானை -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி  இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ உம்முடைய அந்அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் -பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –
ஆசார்யர்களில் சிலர் -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே  யன்றோ -என்று அருளிச் செய்தார் –

நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால் சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் –பெரிய பிள்ளையையும் -பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் –
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் -இவள் சோகார்த்தையாக –ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே -ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் -உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ -அவதரிக்க வேண்டுமோ -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
-பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் -சம்பவாமி யுகே யுகே என்றும் – ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

ஞானப் பிரதன் ஆசார்யன் – ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் – ஞான விஷயம் -எம்பெருமான் – ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் – சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாதமாகவும் -அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

ஆசார்ய விஷயத்தில் -கிருதஜ்ஞதை -விஸ்வாசம் -ப்ரேமம் -விஸ்லேஷ பீருவாகை – சம்ச்லேஷ விஷயம் -மங்களா சாசனம் -கதி  சிந்தனை –
அனுபவ இச்சை -இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை – விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை – ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை -இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை – ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
-குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு -த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி -உதகம் பண்ணிக் கொடுத்தான் –

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு –
அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க – அருளிச் செய்த வார்த்தை
-போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து -போக காலம் வந்தவாறே –
குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி -சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு
-அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து –
தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே இவனுடைய
அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு -போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

எங்கள் ஆழ்வான் -ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு -அழிச்சாட்டத்தை விட்டு –அழிச்சாட்டம் =ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு –
அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் –அலமாப்பை விட்டு -அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று –
அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்
-அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க -லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான்
-பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்

நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க -நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –
எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க -ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –
ஏழையர் ஆவி உண்ணும் -சேட்டை தன மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க -சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–சில்வானர் -அற்பர்கள் –
ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க அஞ்ஞ்ரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –
மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க -மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் –
வடுக நம்பி -நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் –செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு
வழி இல்லை –ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால் எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் -தாரகமாவும் –
போஷகமாவும் -போக்யமாயும் இருப்பவன் ஆகிறான்-

தான் வைஷ்ணவனாய் அற்றால் தனக்கு தன் ஆசார்யானில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை -உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் -என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே -என்னை விஷயீகரித்து -அத்தலைக்கு
ஆக்கினவன் அன்றோ -என்று சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
ஆசார்யனும் -என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே-
விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே –
என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ -பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான
ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு அந்தக்கரணம் விதேயமாகும் –
அந்தக்கரணம் விதேயமான வாறே அந்தர்யாமி பிரசன்னனாம் -அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே –
அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –
இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் –
இவை கழிகிற அளவன்றிக்கே -அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

சத்ருக்களுக்கு கரைய வேண்டா -ஸ்வாமியுமாய் -ஸ்ரீ ய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் -ஞான ப்ரதன் -அனுஷ்டான ப்ரதன் -உபாய ப்ரதன் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் -உபாயத்துக்கு முற் பாடர் -உபேயத்துக்குஎல்லை நிலமாய் -இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை -புருஷகார பூதை -கைங்கர்ய வர்த்தகை -நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் -ருசி ஜநகன் -மோஷ ப்ரதன் -உபாய பூதன் -என்று –

ஸ்வபாவ அந்யதா ஞானம் -ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இ றே அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

ஈச்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங்கன்றை -விதை–சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி –
ததீய அபராதமும் -விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி -கைங்கர்ய அனுவர்த்தமாகிற -மடையாலே –
ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி -அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே –
பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து -விபரீத அங்கீகாரமாகிற மாடும் -சப்தாதி விஷயமாகிற
பேய்க் காற்றும் – புகுராமே -பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி -தளிரும் முறியும்
மொட்டும் செலுந்துமாய் -கொழுந்துமாய்-அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே
பரமை காந்தி-முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை

பரம சேதனனாகிற பசியன் -ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் -சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி –
வேதாந்தமாகிற உரலிலே -உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து -உடம்பாகிற உமி கழித்து -மனனமாகிற அடுக்கலிட்டு –
நிதித்யாசநமாகிற சுளகாலே -விவேகமாகிற கொழி கொழித்து -அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து –
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து -ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி –
சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி -அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து –
சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி -பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-
பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி – அனுபவமாகிற அடுப்பிலே -விச்லேஷமாகிற அடுப்பை இட்டு –
இருவினையாகிற விறகை மடுத்து -த்வரை யாகிற ஊத்தூதி -ஆற்றாமையாகிற கொதி கொதித்து –
பரமபக்தி யாகிற பொங்கினாலே -சூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு –
அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே –
அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் -முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை-

கலங்குகிறதும் -கலக்குகிறதும் -கலங்கிக் கிடக்கிறதும் –தெளிகிறவனும் -தெளிவிக்கிறவனும் -தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் – கலக்குகிறது -அசித் – கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் – தெளிவிக்கிறான் -ஆசார்யன் – தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் –
ஆகையால் கலங்குகிற தன்னையும் -கலக்குகிற அசித்தையும் – தெளிவிக்கிற ஆசார்யனையும் -தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ராகத் த்வேஷம் கொண்டாடி
அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட -பரிபவப் படுவாரும் தாமேயாம் -பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் –
அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர -இவர்களைச் சேர விட்டு அருள  என்று –
ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய – ஜகத்தில் ஈச்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் -அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன -ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் -த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் -நாம் இவர்களை சேர விடும்படி என
-என்று அருளிச் செய்ய –இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் –
ன்று விண்ணப்பம் செய்ய -ஆண்டான் அருளிச் செய்த படி –
ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் -பார்யா சமனுமாய் -சரீர சமனுமாய் -தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது -சொன்னத்தை செய்கையும் -நினைத்தத்தை செய்கையும் -நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி – சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன் பர்த்ரு சமனுமாய் -சரீரி சமனுமாய் -தரமி சமனுமாய் -இருக்கக் கடவன் –
அதாவது -ஏவிக் கொள்ளுகையும் -எடுத்து இடுவிக்கையும் -அதாவது அசேதனத்தைக் கொண்டு –
நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் -எடுத்துக் கொள்ளுகையும் -என்று அருளிச் செய்தார் –

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு ஹித காமனாய் இருக்குமவன் -சிஷ்யனாவான் -சர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் -எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன -பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி -தஸ்யா மன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –
உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன -அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து –
அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை-

ஸூக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டுக்கும் தலை -ஆத்ம சமர்ப்பணமும் -ஆத்ம அபஹாரமும் – இவற்றிலும் விஞ்சின ஸூ க்ருத துஷ்க்ருதங்கள் -ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞதையும் -க்ருதக்நதையும் –

தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி -தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி –
உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் -சுழற்றிப் பணி மாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று பின்பழகிய பெருமாள் ஜீயர் விண்ணப்பம் செய்தார் –
இதைக் கேட்டருளி நம்பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் -இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

அனந்தாழ்வான் -இடம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –என் பக்கலிலே ஹிதம்கேட்டால்
நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று -அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று – அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே -ஸ்ரீ பாதத்துக்கு அடிமை
என்னும் இடம் கண்டேன் -என்று விண்ணப்பம் செய்ய -இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து -நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக நாயந்தே
அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –
இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன -ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும்
பரம பதம் பெற வேணும் -என்ன -தந்தோம் -என்று திரு உள்ளமாக – இத்தை உடையவர் கேட்டருளி –
காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள -இது என் -என்ன –
நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாதரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –
ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை -குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய –
ஸ்ருதி பிரமாண பிரதிபண்ண வ்ருத்தய -அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் -ஞானப் பிரதானமும் -ஞான வர்த்தகத்வமும் ஆசார்ய  க்ருத்யம் –
புருஷகாரத்வமும் கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் – விரோதி நிவர்தகத்வமும் பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் -கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –

துக்க அனுபவம் பிரகிருதி–துக்க அநுபவிதா -ஆத்மா–துக்க அசஹை பிராட்டி–துக்க நிவாரகன் ஈஸ்வரன் –

ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம் பிள்ளை இன்றிக்கே இருந்து –
பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு –
அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று – அப்பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து –
வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் -என்று வினவுவர் –
ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் – இதுக்கு ஹேது என் -என்ன –
நான் அவனுக்கு ஒரு நல்வார்த்தை சொன்னேன் காண் -என்ன – அவன் எங்கே நீர் எங்கே –
இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன -ஒருவன் விலங்கிலே கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது –
விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் –
அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –
போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே ஆதரியாதே இருக்க –
முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில் உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய –
அவரும் அப்படியே செய்ய – பிற்றை நாள் அவ ஊரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் –
அதுக்கு பின் ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு சொல்லுவன் –
அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் –
அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம் பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் —
அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில்
அனர்த்தப் பட்டோம் இத்தனை இ றே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்-

திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –
இவை இத்தனையும் உண்டான போது
ஆய்த்து ஈடேற லாவது

பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் எல்லாரையும் அறிய வேண்டாவோ – என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க –
அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது -இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இ றே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார் –

ஆள வந்தார் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் வர்த்திக்கிறவர்கள் –
ஒரு நாள் இருவரும் -ஆற்றுக்கு எழுந்து அருளி ஒருவர் புறப்பட்டு வர -ஆள வந்தார் அருளிச் செய்த வார்த்தை –
அன்றிலினுடைய அவஸ்தை பிறந்த போது காண் ஆத்ம ஞானம் பிறந்தது ஆவது -என்று அருளிச் செய்தார் –

ஆளவந்தார் திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற போது -தெய்வ வாரி யாண்டானை மடத்துக்கு வைத்து –
திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற அளவிலே -சந்நிதியில் முதலிகளைப் பார்த்து –
குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கோள் –
என்று அருளிச் செய்து அருளி-திரு முகத்தைப் பார்த்து அருள -மாசமும் திவசமும் அன்று தானாய் இருந்த படியாலே
ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே என்று  போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க – தெய்வ வாரி யாண்டானுக்கு ஆளவந்தாருடைய
விச்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க – வைத்யர்கள் பலரும் பார்த்த இடத்தில் -விஷய ஸ்ப்ரூஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்று சொல்ல –
உமக்கு எந்த விஷயத்தில் ஸ்ப்ருஹை யாய் இருக்கிறது -என்று கேட்க –
அடியேனுக்கு ஆளவந்தார் விஷயம் ஒழிய வேறேயும் ஒரு விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகில் இவரை அங்கே கொண்டு போங்கள் என்று வைத்யர்கள் சொல்ல -இவரை கட்டணத்திலே கொண்டு போக -ஒருநாளைக்கு ஒரு நாள்
திருமேனி பெருத்து நடக்க வல்லராய் வருகிற அளவிலே -ஆளவந்தாரும் திருவனந்தபுரம் சேவித்து மீண்டு எழுந்து அருளா நிற்க –
தெய்வ வாரி யாண்டானும் தெண்டம் சமர்ப்பித்து எழுந்து இருக்க மாட்டாமல் இருந்தபடியைக் கண்டு –
பெருமாள் ஸ்வ தந்த்ரருமாய் ஸூ ரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரதாழ்வான் வைத்த இடத்தில் இருந்தார் –
நான் ஸ்வ தந்த்ரனும் அன்றிக்கே சூரனும் அன்றிக்கே இருக்கையாலே இறே நாம் வைத்த இடத்தில் இராதே நீர் வந்தது -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
இத்தைக் கேட்டு தெய்வ வாரி யாண்டான் -நாம் வந்து ஸ்வரூப ஹாநி பட்டோம் -என்று சத்தை குலைந்து கிடக்க –
என்னை -ஸ்வ தந்த்ரனுமாக்கி ஸூ ரனுமாக்கி எழுந்து இருக்கிறோம் என்று கிடக்கிறாயோ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
வைத்த இடத்தே இராதே வந்து ஸ்வரூப ஹாநி பட்டால் போலே – இதுவும் ஒரு ஸ்வரூப ஹாநியாய் ஆய்த்தோ -என்று
பர பர என எழுந்து இருந்து நிற்க – ஆளவந்தாரும் -இதொரு அதிகார  விசேஷம் இருந்தபடி இருந்தபடி என் -என்று உகந்து –
போர இளைத்தாயே -என்று கிருபை பண்ணி -திருவனந்தபுரத்து திருக் கோபுரம் தோன்றுகிறது –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாளை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது -என்று
ஸ்வ ஆசார்யரான ஆளவந்தார் திருவடிகளைக் காட்டி -கூட சேவித்துக் கொண்டு மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் –

அப்பன் என்பவர்-ஆழ்வான் உடைய அந்திம தசையிலே -ஸ்ரீ பாதத்திலே சேவிக்கப் பெற்றிலேன் எனக்கு 
ஹிதாம்சம் அருளிச் செய்ய வேணும் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய-
ஊரையும் ஸ்வாஸ்யத்தையும் விட்டுமேற்கு நோக்கி ஓரடி இட்ட போதே ஹிதாம்சம் அற்றது சொல்ல வேணுமோ என்று அருளிச் செய்தார்

முதலியாண்டான் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே மோஷம் -என்ன -கூரத் ஆழ்வான் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -என்ன –
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே -4-4-2-
ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே ஆகவேணும் -என்ன -ஆழ்வான் -அங்கன் அன்று –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப்பாட்டிலே நடக்கிற நமக்கு
எல்லாருக்கும் ஸ்வ அனுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -ஆகவேணும்
என்று அருளிச் செய்தார் -ஆண்டானும் அப்படியாம் என்று மிகவும் ப்ரீதரானார் –

ஈஸ்வரன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்யனை தஞ்சம் என்று இருப்பான் –
ஆசார்யன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்ய வைபவம் சொன்னவனை தஞ்சம் என்று இருப்பான் –

வைஷ்ணவனுக்கு கரண த்ரயத்தாலும் கால ஷேபம் ஏது என்னில் -ஆசார்ய கைங்கர்யம் – பகவத் கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் –
இவை மூன்றும் தன்னில் ஒக்குமோ -என்னில் ஸ்வரூபத்தை உணர்ந்தவன் ஆசார்ய கைங்கர்யமே பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும்
என்று இருக்கும் -ப்ரபாவஜ்ஞன் -சர்வேஸ்வரனுடைய பெருமையை மட்டுமே உணர்ந்தவன் -பகவத் கைங்கர்யமே பிரதானம் என்று இருக்கும் –
உபயத்திலும் உணர்வு இல்லாதான் -உபாய உபேய யாதாம்ய ஞானம் இலோலாதவன் -மூன்றையும் தத் சமம் என்று இருப்பான் –

ஆசார்ய கைங்கர்யம் -தனக்கு பசி விளைந்து உண்கை -பரம போக்யம்-பாகவத கைங்கர்யம் தாய்க்கு சோறு இடுகை -விலக்க ஒண்ணாத கடமை –
பகவத் கைங்கர்யம் -ஒப்பூண் உண்கையும் -பலரில் ஒருவனாக உண்கை – மூப்புக்கு சோறு இடுகையும் -வயசான ஏழை எளியவர்களுக்கு சோறு இடுகை –
என்று வடுக நம்பி அருளிச் செய்வர் –

ஆச்சான் பிள்ளை தேவியார் -மடத்தில் பிள்ளையோடே பிணங்கி -வாரு கோலே போய்க் கிட – என்ன -மடத்தில் பிள்ளையும் –
வாழும் மடத்துக்கு ஒரு வாரு கோலும் வேணும் காணும் – இவ்வார் கோல் தலைக் கடையை விளக்கி –
பஹிரங்க கைங்கர்யம் செய்து -திண்ணையிலே கிடக்கவோ –
திருப் பள்ளி யறையை விளக்கி -அந்தரங்க கைங்கர்யம் செய்து -உள்ளே கிடக்கவோ -என்று விண்ணப்பம் செய்தார் –

பகவத் பிரசாதம் பகவத் ருசியைப் பிறப்பிக்கும்–பகவத் ருசி ஆசார்ய அங்கீகாரத்தை பிறப்பிக்கும்–
ஆசார்ய அங்கீகாரம் ஸ்வீகார ஞானத்தை பிறப்பிக்கும் -எம்பெருமானை உபாயமாக பற்றும் அறிவு –
ஸ்வீகார ஞானம் பகவத் ப்ராப்தியை பிறப்பிக்கும் பகவத் ப்ராப்தி தத் கைங்கர்யத்தை பிறப்பிக்கும்-
தத் கைங்கர்யம் ததீய கைங்கர்யத்தை பிறப்பிக்கும் –

ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் -என்னில் -த்ருஷ்டத்திலே கர்மாதீனம் -அங்கு ஏதேனும் சுருங்கிற்று உண்டாகில் ஆசார்யனை
வெறுத்த போது எம்பெருமானைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – எம்பெருமானை வெறுத்தோம் ஆகில்
ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்

தான் அனுபவிக்கையாவது -அவன் அனுபவிக்கை —அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே
வருந்திப் பெறுவாரும் இரந்து பெறுவாருமாய் இருக்கும் –
செஞ்சொற் கவிகாள் -திருவாய்மொழி -10-7—மங்க ஒட்டு உன் மா மாயம் -10-7-10-
ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -போலே–ஆக பிராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

பகவத்பரர் த்விவிதர் -முமுஷுகள் என்றும் புபுஷுகள் என்றும்–முமுஷுக்கள் தான் த்விவிதர் -பகவத் சரணாகதர்களும் கைவல்யார்த்திகளும்
பகவத் சரணாகதர்கள் த்விவிதர் -உபாசகரும் பிரபன்னரும் –பிரபன்னர் த்விவிதர் -ஆர்த்தரும் த்ருப்தரும்
ஆர்த்த பிரபன்னர் த்விவிதர் -சம்சாரம் அடிக் கொதித்தவர்களும் -பகவத் அனுபவம் பெற்றால் ஒழிய தரிக்க மாட்டாதாரும் –

வ்யதிரிக்தங்களை விட்டு அவனைப் பற்றுகை வைஷ்ணவன் ஆகையாவது –தன்னை விட்டு அவனைப் பற்றுகை ஏகாந்தி யாகை யாவது –
அவனை விட்டு அவனை பற்றுகை பரமை காந்தியாகை யாவது -அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பற்றுதல் –

அம்மங்கி அம்மாள் வார்த்தை –
உடம்பை பற்றி சோறு தேடுவாரும்–உறவு முறை பற்றி சோறு தேடுவாரும்–உடம்பரைப் பற்றி சோறு தேடுவாரும் –
உடம்பர்களைப் பற்றி சோறு தேடுவாரும்–லோகத்தை பற்றி சோறு தேடுவாரும்–உயிரைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனைப் பற்றி சோறு தேடுவாரும்–அவளைப் பற்றி சோறு தேடுவாரும்–அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் பற்றி சோறு தேடுவாரும்–தன்னையும் அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாருமாய்- இறே இருப்பது –

கலக்கத்தோடு கூடின தேற்றம் ப்ரதம அதிகாரிக்கு–தேற்றத்தோடு கூடின கலக்கம் சரம அதிகாரிக்கு –

சர்வேஸ்வரனைப் பற்றுமவர் ஷட் விதர் -அவர்கள் ஆகிறார் -உத்தமன் -உத்தமப்ராயன் -மத்யமன் -மத்யமப்ராயன் -அதமன் -அதம ப்ராயன்
உத்தமன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமானே தனக்கு எல்லா உறவும் என்று இருக்குமவன் –
உத்தமப்ராயன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமான் பக்கல் உபஜீவாம்ச்யதுக்கு விரை கட்டுமவன்
மத்யமன் ஆகிறான் மாதவைஸ்வர்யதுக்கு மஹானான தபசு பண்ணுபவன்-மத்யம ப்ராயன் ஆவான் -மாதவனைப் பெற்றும் வகுத்த வாழ்வு அறியாதவன்
அதமன் ஆவான் -அம்மானைப் பெற்று அன்னத்தை பற்றுமவன்-அதம ப்ராயன் ஆவான் அம்மானைப் பெற்றும் அல்லாதாரை பற்றுமவன் –

கந்தாடை யாண்டான் வார்த்தை -பிரபத்தி நிஷ்டர் மூவர் –சப்த நிஷ்டரும் –அர்த்த நிஷ்டரும் –அபிமான நிஷ்டரும் –

சர்வயோக சந்நியாசி -திரு மழிசைப் பிரான்–சர்வ உபாய சூந்யன் -நம் ஆழ்வார்–உண்டு உபவாசி -திருமங்கை ஆழ்வார்–சர்வ சங்க பரித்யாகி -எம்பெருமானார்

அர்த்த லுப்தன் சம்சாரி–ஜ்ஞான லுப்தன் -ஸ்ரீ வைஷ்ணவன்–கைங்கர்ய லுப்தர் -முக்த நித்யர்–தாஸ்ய  லுப்தர் -எம்பெருமான் –

பக்தருக்கு சோறும் தண்ணீரும் தாரகம் -ஆஜ்ய ஷீராதிகள் போஷக த்ரவ்யம் –ஸ்ரக் சந்தநாதிகள் போக்கியம் –
முமுஷுவுக்கு ஜ்ஞானம் தாரகம் -ஆசார்ய வைபவம் போஷகம் —பகவத் குண அனுசந்தானம் போக்கியம் –
நித்ய முக்தருக்கு மிதுன அனுபவம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் —பகவன் முகோல்லாசம் போக்கியம்-

அஹங்காரம் கழிகை யாவது தேகத்தில் ஆத்ம புத்தி நிவ்ருத்தியும் -தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தி நிவ்ருத்தியும்
-தேஹாந்தர அனுபவத்தில் புருஷார்த்த நிவ்ருத்தியும் –
ஸ்வரூபத்தில் அஹங்காரம் ஆவது -தேஹத்தை அண்டை கொண்டு ஸ்வரூபத்தை உறுமுதல் –
ஸ்வரூபத்தை அண்டை கொண்டு தேகத்தை உறுமுதல் செய்கை -இது கழிகையாவது -அவன் வடிவே வடிவாகையாலே
பர ஸ்வரூபத்துக்கு உள்ளே ஸ்வ ஸ்வரூபம் விளங்குகை –
உபாயத்தில் அஹங்காரம் ஆவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணுகை –
இது கழிகையாவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத
ஸ்வீகாரத்துக்கு விஷயனாகை –
உபேயத்தில் அஹங்காரம் ஆவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை இது கழிகையாவது –
தன் கையாலே தன் மகிரை வகிர்ந்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி கொண்டாட வேண்டாதாப் போலே
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் -என்று இருக்கை .

எம்பெருமான் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்தில் ஈடேறலாம் –
ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்திலும் இல்லை

ஆண்டாள் வார்த்தை–ஆசார்யன் விஷயத்தில் அபராதம் பண்ணின நாலூரானும் ஈடேறினான் —
பகவத் விஷயத்தில் அபராதம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான்–
பாகவத விஷயத்தில் அபராதம் பண்ணினார் இன்னார் ஈடேறினார் என்று இதுக்கு முன்பு கேட்டு அறிவது இல்லை –

எல்லா வேதங்களையும் -எல்லா சாஸ்திரங்களையும் -எல்லா ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் -எல்லா ஆசார்யர்கள் பாசுரங்களைப் பார்த்த இடத்தில்
ஒரு வைஷ்ணவனுக்கு நிலை நின்ற ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை –
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதியும் இல்லை

நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாய் இற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்-சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க
மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

உடலை நெருக்கி உயிர் உடன் உறவு கொண்டாடுவாரைப் போலே காணும் நாரங்களை நெருக்கி நாராயணன் உடன் உறவு கொண்டாடுகை-

ஸ்ரீ வைஷ்ணவர்களை நெகிழ நினைத்தான் ஆகில் -நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதாப் போலேயும்
-மலை முறிந்தால் தாங்க ஒண்ணாதாப் போலேயும் -கடல் உடைந்தால் அடைக்க ஒண்ணாதாப் போலேயும் இதுவும்
அப்ரதி க்ரியமாய் இருப்பது ஓன்று –

நாட்டிலே இருந்து பெருமாளை சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் போருகிறவர்கள் –
ஒருகால் ராகத்வேஷம் கொண்டாடி ஒருவன் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தேற வந்து மற்றவருடைய குற்றங்களை விண்ணப்பம் செய்ய
சேவித்து இருந்தவர்களில் சிலர் -அப்படி சொல்லலாமோ என்ன -ஆச்சான் பிள்ளை -அவர் சொல்லு கிடீர் –
தண்டல் படையினான யமன் -பரிஹர என்றான்-பிராட்டி ந கச்சின் நாபராத்யாதி -யென்றாள் –
ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி –4-9-2-என்றான் –
ஆழ்வார்கள் -தமர் எவ்வினையர் ஆகிலும் – முதல் திருவந்தாதி -55-என்றார்கள் -இப்படி இருக்க
அவர் குற்றம் இவரை ஒழிய சொல்லுவார் யார் என்று அருளிச் செய்தார் –

சோமாசி யாண்டானுக்கு அப்பிள்ளை அருளிச்செய்தபடி -ஆண்டான் தேவரீர் ஞான வ்ருத் தருமாய் வயோ வ்ருத்தருமாய் -சீல வ்ருத்தருமாய் -ஸ்ரீபாஷ்யம்
திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகராய் -எல்லாவற்றாலும் பெரியவராய் இருந்தீர் –
ஆகிலும் சாத்தி இருக்கிற திருப்பரிவட்டத் தலையிலே பாகவத அபசார
நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும் -என்று அருளிச் செய்தார் –

ஒருவனுக்கு பாகவத சேஷத்வம் ஸ்வரூபம்–பாகவத பிரசாதம் உபாயம் பாகவத கைங்கர்யம் உபேயம் பாகவத அபாசாரம் விரோதி
ஔ பாதிக பாகவத விஷய ராகமும் -நிருபாதிக பாகவத த்வேஷமும்ஒருவனுக்கு நிலை நின்ற தோஷம் –

பிள்ளை வரம் தரும் பெருமாள் தாசர் வார்த்தை –
எம்பெருமான் வெறுக்கும் -மறக்கும் -பொறுக்கும் -ஒறுக்கும் –பிரயோஜனாந்த பரரை கண்டவாறே நம்முடைய ரஷகத்வத்தை
பறித்துக் கொண்டு போவதே என்று வெறுக்கும் -தன்னளவிலே பண்ணின அபசாரத்தை மறக்கும் –
ஆஜ்ஞ்ஞாதி லங்கனத்தை பொறுக்கும் -பாகவத அபசாரத்தை ஒறுக்கும் –

நடாதூர் ஆழ்வான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கையைப் பிடித்துக் கொண்டு போகா நிற்க-
நடுவில் திருவீதியில் ஒரு திருக்குலத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அணுகி வர கைக் கொடுத்து கொண்டு போகிற ஸ்ரீ வைஷ்ணவர்
அவரை ஜாதி நிரூபணம் பண்ணி -கடக்கப் போ – என்ன -ஆழ்வான் அத்தைக் கேட்டு மூர்ச்சித்தார் –
மூர்ச்சை தெளிந்த பின்பு அருகு நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இது என் -என்ன –
திருக் குலத்தில் திரு வவதரித்து இரண்டு ஆற்றுக்கும் நடுவே வர்த்திகப் பெற்ற மஹானுபாவனா பறையன் –
நெடும்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்  திரிந்த நான் அன்றோ பறையன் -என்று அருளினார் –
எம்பெருமானாரின் மருமகன் -நடாதூர் அம்மாளின் பாட்டனார்

ஸ்ரீ வைஷ்ணவனுக்குஅடும் சோறு மூன்று -அடாச் சோறு மூன்று
அடாச் சோறாவது -அனுகூலரை நெருக்கி ஜீவிக்கையும் பிரதி கூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கையும் –
சாதனாநதர புத்த்யா கைங்கர்யம் பண்ணி ஜீவிக்கையும்
அனுகூலரை நெருக்குகையாவது -சர்வேஸ்வரன் உயிர் நிலையிலே கோலிட்டடித்த மாத்ரம் -ஆயர் கொழுந்தாய் –திருவாய்மொழி -1-7-3–
பத்தராவியை –பெரிய திருமொழி -7-10-1-/10-1-8–
நாஹமாத்மா ந மாசசே மத் பக்தைஸ் சாது பிரவிநா -மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வடுக நம்பி வார்த்தை –
பகவத் அபசாரம் -எம்பெருமான் திருமேனியிலே தீங்கு நினைக்கை -பாகவத அபசாரம் -அவன் திரு மார்பிலே -திருக் கண் மலரிலே -கோலிட்டடித்த
மாத்ரம் -யே பிரபன்னா மகாத்மாநஸ் தே மே நயன சம்பத -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வானமாமலை யாண்டான் பணிக்கும் படி –
சாத்விகரை நெருக்குகையாவது -மிதுன போக்யமான ஸ்ரீ கௌ ஸ்துபத்தில் கரி இட்டுக் கீறின மாத்ரம்
வகுளாபரண சோமயாஜியார் -தெய்வ வாரி யாண்டானை -எம்பெருமான் இங்கே வந்து அவதரிகைக்கு ஹேது என் என்ன –
பாகவத அபசாரம் பொறாமை என்றார் -ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்க எம்பெருமான் நெஞ்சு உளுக்கும் –
பிரதிகூலர் பக்கல் சாபேஷன் ஆகையாவது -ராஜ மஹிஷி ராஜ சந்நிதியிலே அற்பன்காற் கடையிலே நின்ற மாத்ரம் –

போஜன விரோதி யாவது –
ஒரு வைஷ்ணவன் ஆதரத்தோடே சோறிடப் புக்கால் உண்ணுமவன்-ஆஹார சௌ ஷ்டம் நிரூபிக்கையும் –
இடுமவன் இவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும் —
போஜ்ய விரோதியாவது -இட்டுக் கணக்கு எண்ணும் சோறு
ஸ்வரூப அனுரூபமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் – எ
ன்னது நான் இடுகிறேன் என்கிற போஜனத்தை தவிர்ந்து–
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2-என்றும் -நல்லதோர் சோறு -திருப்
பல்லாண்டு -8-என்றும் -உண்ணும் சோறு -திருவாய்மொழி -6-7-1–என்றும் இவற்றைப் புஜிக்கை –

ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அமுது செய்ய பண்ணும் போது-இழவும் இரப்பும் இறுமாப்பும் -சாத்விக கர்வம் –
துணுக்கமும் சோகமும் வாழ்வும் உண்டாக வேணும்-என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

பிணச் சோறும் -மணச் சோறும் -விலைச் சோறும் -புகழ்ச் சோறும் -பொருள் சோறும்-எச்சில் சோறும் -ஆறும் த்யாஜ்யம் –
மற்றைச் சோறு இ றே வைஷ்ணவன் உண்ணும்சோறு -என்று திருக்குறுங்குடி ஜீயர் அருளிச் செய்வர் –

தேஹம் திறள் பொறாது -ஸ்வரூபம் தனி பொறாது -பகவத் விஷயத்துக்கு வெளியும்-திறளும் தேட்டமாய் இருக்கும் –
ஷூத்ர விஷயத்துக்கு இருளும் தனிமையும் தேட்டமாய் இருக்கும் –

பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை -இவ்வர்த்தைத்தை ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் –
எங்கனே என்னில் –
வாசுதேவன் வலையுள் அகப்படுதல் -திருவாய்மொழி -5-3-6-
மாதரார் கயற்கண் என்னும் வலையில் அகப்படுதல் -திருமாலை -16-
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளிலே அகப்படுதல் -நாச்சியார் திருமொழி -9-1-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -பெரிய திருவந்தாதி -6-3-4-
வானவர்க்கு வன் துணைஅரங்கத்து உறையும் இன் துணையான் -பெரிய திருவந்தாதி -3-7-6-
அவரவர் பணை முலை துணை யா -என்று இருத்தல் –பெரிய திருவந்தாதி 1-1-2-
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -திருவாய்மொழி -1-5-4-
பாவையர் வாய் அமுதத்தை பானம் பண்ணுதல் -பெரிய திருமொழி -1-3-5-
நால் வேதப் பயனை பேணுதல் -திருவாய்மொழி -3-4-6-
மாதரார் வனமுலைப் பயனை பேணுதல் -பெரிய திருமொழி -1-6-1-
ஓன்று இதுவாதல் ஓன்று அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு விதமாக
அருளிச் செய்தார்கள் –

ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் பத்து முகமாக விரோதிக்கும் –
அவை யாவன -ஸ்வா நர்த்தம் -பரா நர்த்தம் -சாஸ்திர விரோதம் -பகவன் நிக்ரஹம் -பாகவத நிக்ரஹம் –
ஆசார்ய நிக்ரஹம் -விரோதி வர்தகத்வம் -ஸ்வரூப விரோதம் -உபாய விரோதம் -உபேய விரோதம் -தேசாந்தர பாவம் –
தேவதாந்தர பரனுக்கு கலாந்தரேணு வாகிலும் பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு -விஷய ப்ரவணனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை -ஆகையால்
ஸ்ரீ வைஷ்ணவன் விஷய பிரவணன் ஆகையாவது -முதலை  முடியோடே விழுங்குமா போலே -என்று ஆச்சான் பிள்ளை –

முமுஷுவுக்கு விஷய ப்ராவண்யமும் தேவதாந்திர பஜனமும் சமாநம் -வெற்றிலையும் சந்தனமுமாய் புக்கு காமனை அர்ச்சிக்கிறதோடு
எருக்கும் தும்பையும் கொண்டு ருத்ரனை அர்ச்சிக்கிறதோடு வாசி இல்லாமையாலே தேவதாந்தரம் தான் இதுக்கு சத்தை –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் -பெருமாள் திருமொழி -3-3-..
தேவதாந்தர பரனுக்கு அனந்தர ஜன்மத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு யோக்யதை உண்டு –
விஷய பரனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை – ஆகையால் தேவதாந்தர பஜனத்திலும் க்ரூரம் -சௌ சாபேஷன் ஸ்நானம் பண்ணி
வருமா போலும் காண் -வ்ருத்தி ஆசௌம் போன்ற தீட்டு உள்ளவன் -விஷய பிரவணன் பகவத் சந்நிதி நுழைய தக்கவன் அல்லன் –

முமுஷுவுக்கு தேவதாந்தர ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் -மோஷ பிரதிபந்தகம் –
அதில் இரண்டு ப்ராவண்யம் உண்டானால் காலாந்தரத்திலே ஈடேறலாம்–ஒரு பிராவண்யம் பிரதிபந்தகமாகவே விடும் –

அநந்ய பிரயோஜணன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்ரம் அல்லேன் -ஆர்த்த பிரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்கு பாத்ரம் அல்லேன் –
ப்ராமாதிகம் அல்லாமையாலே ஷமைக்கு பாத்ரம் அல்லேன் -உபகாரகன் என்று உகந்தீர்-அனந்யன் என்று இரங்கினீர் அவர்ஜீயன் என்று பொறுத்தீர் –
-என்று ஆச்சான் பிள்ளை நைச்ய அனுசந்தானம் –

முதலியாண்டான் மிளகு ஆழ்வானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
கன்னக் கள்வர் நால்வர் -அவர்களை பரிஹரித்து வர்த்திக்க வேண்டும் —
அவர்கள் ஆர் என்னில் -ஆத்ம அபஹாரி -விபூத்ய அபஹாரி -குணித்வ அபஹாரி -பரதவ அபஹாரி —
ஆத்ம அபஹாரி யாகிறான் -திருமார்பில் கௌஸ்துபத்தை களவு கண்டவன் -எங்கனே என்னில் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கை –
விபூத்ய அபஹாரி யாகிறான் -ஏகாயநன் -எங்கனே என்னில் மாத்ரு ஹீனன் –குணித்வ அபஹாரி யாகிறான் -மாயாவாதி –
எங்கனே என்னில் நிர்க்குணம் என்கையாலே -பரதவ அபஹாரி யாகிறான் -ருத்ர பரத்வ பிரமாண நிஷ்டன் –
இவர்களுக்கு அஞ்ஞானமும் -அந்யதா ஞானமும் -விபரீத ஞானமும் விஞ்சி இருக்கும் –

அனந்தாழ்வான் நோவு சாத்திக் கிடந்தார் என்று கேட்டருளி திருவேம்கடமுடையான் – அனந்தாழ்வானை அறிந்து வாரும் கோள் -என்று
சில ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு அறிவிக்க -ஆளிட்டு அந்தி தொழுதா னோ என்ன –
திருவேம்கடமுடையான் எழுந்து அருளி வாசலிலே வந்து நிற்க பேசாதே கிடந்தார் –
அனந்தாழ்வான் நான் வர பேசாதே கிடந்தாயீ -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் வரப் பேசாதே யிருந்தேன் ஆகில் அன்றோ
எனக்கு குறை யாவது -என்ன -நாம் உம்மை இதனின்றும் போகச் சொல்லில் செய்வது என் என்ன –
நீர் ஒரு கிழமை முற்பட்டீர் இத்தனை யன்றோ -இருவரும்
திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் இத்தனை -யன்றோ -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமான் இடைச்சி கையிலே கட்டுண்டு இருந்தபடி -ராஜா-அந்தபுரத்திலே மாலையாலே கட்டுண்டு இருந்தால் போலே –

மூன்று வஸ்துவிலே பகவத் வஸ்து வளரும் என்று பணிக்கும்–திரு வனந்தாழ்வான் மடியிலும் -பெரிய திருவடி திரு முதுகிலும்
சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும் -ஜகந நிர்வஹணத்தை மறக்கிறானோ என்று நியமிக்கைகாக
சேனை முதலியார் எழுந்து அருளின வாறே -இந்தாணும் ஐயர் வந்தார் -என்று நாய்ச்சிமார் உள்ளே புக்கருளுவாராம் –

கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் -பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் -க்ரியா ப்ரதான்யம் –
சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று -பாவ ப்ரதான்யமே ப்ராதான்யம் –
நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று -நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே
வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் -நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும்
-நாடாவது -சம்சாரம் நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –

ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விச்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும் அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் -எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —
இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானேயாகிலும் – எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –

சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அதருஷ்ட சம்பந்தம் -த்ருஷ்ட சம்பந்தம் -இவை பார்த்து செய்ய வேண்டும் -தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு  குழைந்து  போரவும் -தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக்கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –

மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் – அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன
அர்த்தம் ஏது என்று கேட்க -சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான் இருவர் ஆவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் உடம்பு எடுக்கை பொல்ல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் -ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –
மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை – ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற
சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம் அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –

தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி -உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன் உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –

ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளாநிற்க -இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால்
பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் -பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் –

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் கிடக்க -ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் -திருவேம்கடமுடையான் செய்து அருளுகிறது என் –
என்று வெறுக்க -திருவேம்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க -பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே -இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ -நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க -திருவேம்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக்கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே –
நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக -தேவரீரைக் கொண்டு கார்யம் என்
கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன -ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ -தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று அருளப்பாடு என்றவாறே திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க -பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –
ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –
ஏவம் விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீ ந சங்கல்ப அந்தர்கதர் –

திருமாலையாண்டான் அருளிச் செய்யும்படி -நாம் பகவத் விஷயம் சொல்லிக்கிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அ
து எங்கனே என்னில் -ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் தலையாலே எரு சுமந்து ரஷித்து அதினருகே கூரை கட்டி –
பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால் கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –
அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை – பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும் க்ருதஜர் ஆகாத
சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

துறை அறிந்து இழிந்து–முகம் அறிந்து கோத்து–விலை அறிந்து பரிமாறி–நினைவு அறிந்து–அடிமை செய்ய வேண்டும் –

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் -அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் -அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

அன்ன சாங்கர்யம் –ஜ்ஞான சாங்கர்யம் –கால சாங்கர்யம் –தேச சாங்கர்யம் –போக சாங்கர்யம் –இவை த்யாஜ்யம் -சாங்கர்யம் =கலப்படம்

நடுவில் திருவீதிப் பிள்ளை -சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
-சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –
பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது -ஔ ஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும் அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

திருவேம்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட எழுந்து அருளா நிற்க –
ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட -பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன — அந்த செடியிலே என்ன –
அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி பிரபன்னர் எழுந்தருளின வாறே –
நீர் என்ன நினைத்து விஷம் விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –
பிரபன்னரும் கடித்த பாம்பு பலவானாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு பலவானாகில் திருக் கோனெரியிலெ தீர்த்தமாடி திருவேம்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று
நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –

ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று
எம்பாரை முதலிகள் கேட்க -எம்பாரும் -இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய சௌந்தர்யம்
இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ – எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும் பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன -நாங்கள் செய்வது என் –
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பச்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –

சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து
விழுந்தாராம் –

முலைகள் இல்லையான  யுவதியைப் போலே காணும் ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில்
அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –

எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே வேதங்களும் திருவாய்மொழி யாய் வந்து அவதரித்தன –

பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி-ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்-அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-அளவிலே -திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதிபங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே – கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –

எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் -அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இ றே -கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே
அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே இம் முத்ரையாலே அநாத்யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –

அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம் கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே 
அடைய எறும்பாய் இருந்தது – இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும்ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –
இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –

நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு -அறிவு நடையாடின போதோடு –சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே 
அநுவர்த்தநத்தோடு -வாசியற மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில்
-அறிவு கலங்கின போது-சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –
அறிவு நடை யாடின போது -திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள்
எம்பெருமான் தன்மையை யார் அறி கிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் -அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –
அநுவர்த்தநத்தில் -அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து -இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே
இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது -இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது ஆவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார் என்கிற இதுவே
பற்றாசாக நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் -அவருக்கு எல்லாம் பரத்வத்திலே யாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலே யாய் இருக்கும் -எங்கனே என்னில்
அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-
அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –
அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் –
சிறிய திருமடல் -72-77- என்றும் –
அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் –
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்குஇழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –
அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –
அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்
அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –
அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –
அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3–என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: