வார்த்தா மாலாவில் பிரபத்தி பற்றிய வார்த்தை முத்துக்கள் –

வருணன் விஷயத்தில் பெருமாள் பண்ணின பிரபத்தி பலியாது ஒழிந்தது -சரணாகதியின் சீர்மையை அறியும் சரணாகதன் அல்லாமையாலே –
பெருமாள் வருணனை சரணம் புகுகிற போது ப்ரான்முகத்வாதி நியம சஹிதர் ஆனபடியாலே சரணாகதர் ஆவார்க்கு எல்லாம் நியம அபேஷை
உண்டா என்று வேலவெட்டி நாராயண பிள்ளை-நம்பிள்ளையைக் கேட்க -சரணாகதிக்கு நியம அபேஷை உண்டாய் செய்தார் அல்லர் –
இஷ்வாக்குகள் ஏதேனும் ஓன்று செய்யிலும் நியமத்தோடு அல்லது செய்ய மாட்டாத வாசனையாலே-செய்தார் -என்று அருளிச் செய்தார் –

பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி —விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுகை பிரபத்தி –

ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் பீஜ பூதமான சம்சாரத்தில் -அருசியும் – ஸ்வ பாரதந்த்ர்ய மூலமான உசித கைங்கர்யத்தில் ருசியும் –
தன்னுடைய ஞான அனுஷ்டானங்களில் பிராவண்ய புத்தியும் – இதுக்கு அடியான முமுஷூக்களின் சஹவாசத்தில் கர்த்தவ்ய புத்தியும் –
இதைனுடைய விபாக தசையான நித்ய முக்தர் பரம பதத்தில் உத்தேச்ய புத்தியும் —இவை பிரபன்ன நிஷ்டை –
ஸ்வரூபம் ஒரு மிதுனம் என்று இருக்கையும் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் மிதுன விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கையும் –
ஸ்வரூப விரோதி ஸ்வா தந்த்ர்யம் என்று இருக்கையும் – இவை பரமைகாந்தி நிஷ்டை –
இவை இரண்டு வார்த்தையும் ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் -செய்தவை –

பட்டர் ஒருவருக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது  நம் ஜீயர் -பிராட்டி முன்னிலையாக பற்றுகிற இதுக்கு பிரயோஜனம் என் என்று கேட்க
இவள் சந்நிதியாலே -மிகவும் சாபராதியான காகம் தலை கொண்டு தப்பிற்று – அத்தனைக்கு அபராதம் இன்றியிலே இருக்க இவள்சந்நிதி
இல்லாமையாலே-ராவணன் தலை யறுப்பு உண்டான் -இளைய பெருமாள் பிராட்டி முன்னிலையாக பெருமாள் திருவடிகளைப் பற்றி
தம்மை நில் என்ற சங்கல்ப்பத்தையும் -அழித்துப் பெருமாளையும் பெற்று விட்டார் -மற்றும் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஸ்ரீ குஹப் பெருமாள்
தொடக்கமானவர் பிராட்டி முன்னிலையாகப் பெற்றார் ஆய்த்து –
முமுஷுப்படி -சூரணை -135-

பிரபன்னன் ஆகையாவது -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -நமக்கு எம்பெருமான் பண்ணித் தந்து அருளும் என்று த்வய அனுசந்தான
முகத்தாலே ஒருகால் விஸ்வசித்து இருக்கை –
பிரபத்தி நிஷ்டை யாவது -பிரபத்தி பிரகாரமும் -பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை –
பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகை யாவது -பிரபத்தாவினுடைய க்ருத்யமான பிரபதநத்தை பிராபகம் என்று நினையாது ஒழிகையும் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வா தினம் என்று நினையாது ஒழிகையும் –
பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது -பிரபத்தி பண்ணினவனுடைய பிரக்ருதியில் பிராக்ருத நிரூபணம் பண்ணாது ஒழிகை
பிரக்ருத் யாதம விவேகம் உடையவன் ஆகில் -பிரபன்னனை பிரபாவத்தை இட்டுக் காணாதே பிரக்ருதியை இட்டுக்  கண்டான் ஆகில் 
பழைய ப்ராக்ருதனாயே விடும் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –

திருக் கோட்டியூர் நம்பி அந்திம தசையில் -திரு உள்ளக் கருத்தேது -என்று முதலிகள் கேட்க –
சக்கரவர்த்தி திருமகனார் திரு உள்ளக் கருத்தை ஒரு பஷி புண் படுத்திற்று -என்றார் –
ஈட்டில் 6-8-6- இந்த புறா கதை அருளாள பெருமாள் எம்பெருமானார் வார்த்தையாக அருளி இருக்கிறார் -இருவரும்
அந்திம தசையில் இந்த வார்த்தை அருளி இருக்கலாம் –

திருக்கச்சி நம்பி ஸ்ரீ பாதத்திலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆஸ்ரயித்து -அடியேனை அங்கீகரித்து அருள வேணும் -என்ன
-நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் -நம்மை அவனுக்கு சொல்லும் என்ன -நம்பியும் பெருமாள் பிரபத்தியை அருளிச் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவரும் க்ருதார்த்தராய் ஷண காலமும் பிரியாதே சேவிக்க -இவருடைய பிரகிருதி பந்துக்கள் இது கண்டு பொறுக்க மாட்டாமல்
இவரைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண வேணும் என்ன -இவரும் ஆகில் அநந்த சரஸ்சில் தீர்த்தமாடி -வாரா நின்றேன் என்று போந்து
-நம்பி ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நிற்க -நீர் போகா விட்டதென் அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே -என்ன –
அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்க மாட்டாமல் -சோகார்த்தராய் பரம பதத்துக்கு எழுந்து அருளினார் –

சம்சார பீதியும் -ப்ராப்ய ருசியும் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -ஸ்வ தோஷ ஞாபனமும் – -ஸ்வரூப பிரகாசமும் -ஸ்வரூப ஞானமும் –
இவை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம் –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வரூப நிரூபணம் பண்ணுகையாவது -ஸ்வதஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான நித்ய கைங்கர்ய அந்விச்சா விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி –

உபாசகனை ஈஸ்வரன் புஜிப்பிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –பிரபன்னரை ஈஸ்வரன் புஜிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –

பிரபன்ன அதிகாரிக்கு கார்யம் ஒன்றாய் இருக்க -மூன்று அவஸ்தை கூடிக் கார்யம் ஆக வேணும் -அவை யாவன –
ஆஸ்ரயண அதிகாரம் -பல அதிகாரம் -போக அதிகாரம் –
இவற்றுக்கு வேஷம் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -அத்யாவச்யமும் -பரபக்தி பரஞான பரம பக்தியும் –
இவற்றுக்கு விஷயம் -சீலாதி குண விசிஷ்டனுமாய் -ஞான சக்தியாதி குண விசிஷ்டனுமாய் – ஆனந்தாதி குண விசிஷ்டனுமாய் -இருந்துள்ள ஸ்ரீ ய பதி –
இவன் தன் ஆகிஞ்சன்யத்தையும் -அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு -ஆச்ரயண அபேஷை பண்ண –
அவனும் தன்  சீலாதி குணங்களை முன்னிட்டு ஆஸ்ரயணீ யனாம் –
இவன் அத்யாவச்யத்தை முன்னிட்டு பல அபேஷை பண்ண -அவன் ஞான சக்தியாதி குணங்களை முன்னிட்டு பல பிரதனாம் –
இவன் பரபக்தி பரஞான பரமபக்தி களை முன்னிட்டு போக அபேஷை பண்ண -அவன் ஆனந்தாதி குணங்களை முன்னிட்டு போக்தாவாம் –

சோமாசி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை —பகவத் பிரவ்ருத்தி விரோதி -ஸ்வப் பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி –
பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று – பிரபத்தவ்யனே உபாயம் –

பிரபன்னனுக்கு புத்தி பூர்வ அபசாரம் புகுருகைக்கு வழி இல்லை –பிரமாதத்தாலே புகுந்தது ஆகில் -ஞானமும் அனுதாபமும் -ஒரு தலையாக
அபுத்தி பூர்வமாம் இத்தனை –அநுதாபம் பிறந்தது இல்லை யாகில் ஞானம் பிறந்தது இல்லையாகக் கடவது என்று ஜீயர் அருளிச் செய்தார் –

நம் பிள்ளை நம் ஜீயரை -இதர உபாயங்களுக்கு பிரமாணங்களும் பாஹூள்யமாய் அனுஷ்டானங்களும் பாஹூள்யமாய் இருக்க –
இதுக்கு பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி யிரா நின்றது -இதுக்கு -பிரபத்திக்கு -அடி என் -என்று – கேட்க –
நான் நினைத்து இருக்கும் அதுக்கு அவ்வருகு உமக்கு வேண்டுவது ஓன்று உண்டோ -இருவர் கூடி ஓர் ஆற்றில் இழிந்து போகா நின்றால்
-முந்தினவன் முந்தாதவன் கையைப் பிடிக்கும் போது -இதுக்கு ஒரு பிரமாண அபேஷை உண்டோ -வேண்டில் பிரமாணங்களாலும் ஒரு குறை இல்லை –
இனி பிரமாணங்கள் காண வேணும் என்று நினைத்து இரேன் – இருந்ததே குடியாக சம்சாரிகளாய் -நாலத்திரண்டு உத்தம அதிகாரிகளாய் இருந்தால்
அவர்களுக்கு ஒரு உத்கர்ஷைதையும் இவர்களுக்கு ஒரு அபகர்ஷைதையும் உண்டோ -ஸ்வரூப பிராப்தம் என்னும் அத்தனை ஒழிய –
ஸ்வர்க காமோ யஜேத- என்கிறபடியே ஸ்வர்க்க பலத்தை அனுபவிக்க சாதனமாக இதுக்கோ உமக்கு ஆள் பற்றப் புகுகிறது -என்று அருளிச் செய்ய
பிள்ளையும் க்ருதார்த்தரானார் –

பட்டர் திருவணையாட எழுந்து அருளா நிற்க -சேது ஸ்நானம் செய்தல் -பாதிரிக் கொடியிலே -போது வைகி வந்து -அஸ்தனமாக
-ஒரு வேடன் அகத்திலே புக-அவன் தான் இருந்த ஆசனத்தையும் வாங்கிப் பொகட்டு -ஒரு கட்டிலையும் கொடுக்க -அதிலே எழுந்து அருளி இருந்து
-இவன் நம்முடைய வைபவத்தை அறிந்து செய்தான் அல்லன் -க்யாதி பரனாய் செய்தான் அல்லன் -நம்மாலே உபக்ருதனாய்ச் செய்தான் அல்லன் –
தன்னுடைய கிருஹத்திலே புகுந்தோம் என்கிற அபிமானம் இ றே அவன் இது செய்ய வேண்டிற்று –
ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என் நினைந்து இருக்கிறானோ -என்று அநு சந்தித்து அருளி – ஐயா இற்றைக்கு விசேஷம் என் என்று கேட்டருள -நாயன்தே காட்டுக்கு வேட்டைக்கு போனேன் – அங்கே ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன் -அதனுடைய தாயானது பின்னே முடுகி வந்து -ஒரு எரி
வெளி யானவாறே -பொட்டை வெளி -முன்னே வந்து கும்பிட்டு கிடந்தது -எனக்கு அத்தைக் கண்டு வ்யசனமாய்க் குட்டியை விட்டேன் -என்றான் –
இத்தைக் கேட்டு -இது சேதனனுக்கு இல்லாத ஓன்று -பரம சேதனனுக்கு உள்ளது ஓன்று -மாமேகம் சரணம் வ்ரஜ என்று
-இம் முசலுக்கு உபதேசித்தார் இல்லை – அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மனா -என்று வேடனுக்கு உபதேசித்தார் இல்லை –
அவ்யவதாநேன சரணாகதி பலித்ததே -இதொரு பிரமாண பிரசித்தி என் -என்று அருளிச் செய்தார் –

முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை
பிரபன்னன்  யாவச் சரீரம் கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில்
தேகத்தில் ஆத்ம புத்தி தவிர்கையும்-தேக அனுபந்திகள்ளான பதார்தங்களிலே மமதா புத்தி தவிர்கையும் –
தேகாத்பரனான ஆத்மாவை தானாக நினைத்து இருக்கையும் -ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இருக்கையும் –
பாரதந்த்ர்யத்துக்கு எல்லை ஏது எனில் -ததீய சேஷத்வ பர்யந்தம் என்று இருக்கையும் ,–உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் –
கரண த்ரயத்தாலும் ஆனவளவும் அநு கூலராய் போரவும் -வருந்தியும் பிரதி கூல்யம் தவிரவும் -ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான த்வயார்தம் நெஞ்சில் பட அனுசந்திகையும் -உகந்து அருளின நிலங்களிலே பலகாலம் புக்கு முகம் காட்டவும் -அருளிச் செயலைக் கொண்டு போது போக்கையும் -ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தாலே ஷூந நிவ்ருத்தி மாத்ரத்திலே பர்யாப்தி பிறக்கவும் -தேகாத்ம அபிமான நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாய வ்யவஸ்தையும் -இவை இத்தனையும் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீ காரத்தாலும் ஸித்திக்கும் என்று அத்யவசித்து இருக்கையும் –
ஆசார்ய சந்நிதி இல்லாத போது விடாய்த்தவன் தண்ணீர் பெற்றான் ஆகிலோ என்னுமா போலே யிருக்கவும் -பகவத் சந்நிதி இல்லாதபோது -நடு வழியிலே பசித்தவன் ஊரைச் சேரப் போமா போலே இருக்கவும் – இவ்வதிகாரிக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஜாதமான பிரஜைக்கு தாய் முலைப் பாலைப் போலே -எம்பெருமானுடைய தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போலே -ஆழ்வார்கள் அருளிச் செயல் அமிர்த பானம் போலே -சாமான்ய சாஸ்திர ஸ்ரவணம் அநபிமத போஜனம் போலே -விவித பலங்களான நாநாவித பகவத் மந்திர ஜபாதிகள் வாஸனா பலத்தாலே வந்ததாகில் சம்சார தர்ம அனுவர்தனம் போலே -த்வயர்த்த அனுசந்தானம் ப்ராப்ய தேச வாஸ ஸூ க சமானம் என்னலாம் இத்தனை இறே -மற்றுச் சொலலாவது இல்லை –

பத்தன் தன்னை பிரகிருதி என்று இருக்கும்–விஷயீ தன்னை காமுகன் என்று இருக்கும்–கேவலன் தன்னை ஸ்வ தந்த்ரன் என்று இருக்கும்
சாஸ்த்ரி தன்னை சர்வஞ்ஞன் என்று இருக்கும்–கர்மீ தன்னை போக்தா என்று இருக்கும்–ஜ்ஞானி தன்னை வ்ரக்தன் என்று இருக்கும்
பக்திமான் தன்னை மோஷ சாதனன் என்று இருக்கும்–பிரபன்னன் தன்னை அசித் என்று இருக்கும் –

ஓர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே இரண்டு பேர் ஆஸ்ரயிக்க -ஒருவர் ஜ்ஞாநாதிகராக ஒருவர் சம்பந்த மாத்ரமே யாய் இருப்பான் என் -என்னில்
பாபம் ஷீணம் ஆகாமை–அப்படியானால் ஆஸ்ரயிக்க கூடுமோ என்னில் யாலே
பாபம் தான் த்ரிவித மாகையாலே கூடும் -எங்கனே என்னில் -ஒரு ஸ்திரீக்கு மூன்று பிரதிபந்தகம் உண்டாமா போலே –
அவையாவன -பானிக்ரஹனம் பண்ண ஒட்டாத பாபமும் பர்த்தாவோடு சம்ச்லேஷிக ஒட்டாத பாபமும் -புத்திரன் இன்றிகே இருக்கிற பாபமும் –
இவை பர்வ க்ரமத்தாலே போமா போலே அதிகாரிக்கும் சமர்பண விரோதி ஷயமும் சாதன விரோதி ஷயமும் -ப்ராப்தி விரோதி ஷயமும் என்ற
இவை மூன்றும் பர்வ க்ரமத்திலே போக வேண்டுமாகையாலே –

வைஷ்ணவன் என்றும் -ஏகாந்தி என்றும் -பரமைகாந்தி என்றும் -ஆகாரம் மூன்று –
வைஷ்ணவன் ஆகிறான் -தேவதாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் சேஷத்வ ஜ்ஞானம் பிறந்தவன் –
ஏகாந்தி யாகிறான் -சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்த ஸாதனம் ஸ்வீகாரம் பண்ணினவன் –
பாரமை காந்தி யாகிறான் -பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக பரம ப்ராப்ய ருசி பிறந்தவன் –

வைஷ்ணவன் அக்ருத்யத்தை பாபம் என்று தவிரும் —ஏகாந்தி அக்ருத்யத்தை ஸ்வரூப ஹானி என்று தவிரும் – பரமை காந்தி அக்ருத்யத்தை ருசி இல்லாமையாலே தவிரும் – அன்னமென்ன நடையினார் கலவியை அருவருத்த அஞ்சினாயேல் -பெரிய திருமொழி -9-7-2- என்னக் கடவது இ றே –

வைஷ்ணவன் க்ருத்யத்தை அதிகாரி சம்பத்திக்காக செய்யும் – ஏகாந்தி க்ருத்யத்தை லோக சங்க்ரஹதயா கர்த்தவ்யம் என்று செய்யும் –
பரமை காந்தி க்ருத்யத்தை கிருபையாலே செய்யும் –

வைஷ்ணவன் கைங்கர்யத்தை சாதனம் என்று செய்யும் -ஏகாந்தி கைங்கர்யத்தை கால ஷேபம் என்று செய்யும் –
பரமை காந்தி கைங்கர்யத்தை ராக ப்ராப்தி என்று செய்யும் –

சாந்தனுக்கு சத்வோத்ரேக ஹேது -சத்வோத்தரருடைய சரீராஹார நிரூபணம் பண்ணி சருகு திரட்டாத சம்யக்ஜ்ஞான நிஷ்டை –
ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்வ வர்ண அநு கூல மான ஸூஹ்ருத் தர்சனமே சர்வ அபேஷிதம் -ஸ்வ ரஷணத்துக்கு பரேச்ச அநு கூலமான ஸ்வ சேஷத்வமே ஸ்வரூப உபாய உக்தம் –சத்வஸ்தனுக்கு ஸ லஷ்மீ காநுபவ சாதனம் சத்வச்த விஷய லஷ்மீ கத சம்பந்த ஸார ஜ்ஞானமே –

சாந்தன் ஆகிறான் சதுர்வித அஹங்காரம் கழித்தவன் -அவை யாவன தேகத்தில் அஹங்காரமும் – ஸ்வரூபத்தில் அஹங்காரமும் –
உபாயத்தில் அஹங்காரமும் – உபேயத்தில் அஹங்காரமும் – தேகத்தில் அஹங்காரம் ஆவது -தேகத்தை தானாக நினைக்கையும் –
தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி பண்ணுகையும் – தேகாந்தர அனுபவத்தில் புருஷார்த்த புத்தி பண்ணுகையும் –

பத்தன் அவித்யா தீநன்–சாஸ்த்ரி புண்ய பாபாதீநன்–கேவலன் ஸ்வ ஸ்வரூப அதீநன்
முமுஷு பகவத தீநன்–பிரபன்னன் ஆசார்ய அதீநன்–பிரபத்தி நிஷ்டன் ததீய அதீநன் .

பிரபன்னத்வம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்மொழி -5-8-8-என்றும் —
வங்கத்தின் கூம்பே றும் மாப்பறவை போன்றேன் -பெருமாள் திருமொழி -5-5-என்றும் –
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே -பெருமாள் திருமொழி -5-1-என்றும்
அருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் –
கடைத்தலை இருந்து வாழும் -திருமலை -38 என்றும் –
படியாய் கிடந்தது -பெருமாள் திருமொழி -4-9-என்றும்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -திருவாய்மொழி -9-9-6-என்றும் —
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15-என்றும் –
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3-என்றும்
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27 என்றும்
அவன் செய்யும் சேமம் -திருவாய்மொழி -7-5-10 என்றும் –
அவன் செய்வது செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும்– இருக்கை

முமுஷுத்வம் ஆவது –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்வது -பெரிய திருமொழி -6-3-8-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6-9-3-என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7-என்றும் –
செந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்வாய் -திருவாய்மொழி -8-5–7-என்றும் –
உனக்கு ஆட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -திருவாய்மொழி -5-8-10–என்றும் –
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -3-2-2-என்றும்
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-என்றும் இருக்கை –

காட்டுத் தீ சூழின் போக்கடியற்ற ம்ருகாதிகளைப் போலே -தாபத்ரயாத்மகமான சம்சார அனுபவ பீதரான முமுஷுகளுக்கு ஆசார்யன் முன்னிலை யாக பிரபத்தி
அநுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனை குறித்து ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -என்று கொண்டு பெருமாள் திருவடிகளில் பிராட்டியை சமர்ப்பி -என்று அருளிச் செய்தால் போலே –
ஆசார்யனும் முமுஷுவை குறித்து -இவ்வாத்மாவை எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பி -என்றும் – ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – கதம் நு ராமாத் பவிதா பயம் ந -என்று கொண்டு ப்ரஹச்தாதி வாக்ய தோஷ தூஷிதமான ராவணன் ஹிருதயம் போலே –
ஆசார்யன் பிரசாதித்த வார்த்தையும் பிராக்ருத சஹ வாஸ தோஷ தூஷிதமான முமுஷுவின் ஹிருதயத்தில் தொங்காது –
-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு-வத்யதா மேஷ தீவ்ரேண தண்டேன சசிவைஸ் சஹ -என்று கொண்டு
மகாராஜர் சொன்ன வார்த்தைக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஹ்ருஷ்டராய் நின்றாப் போலே
முமுஷுவும் ஒரு ஞாநாதிகர் நெருக்கிச் சொன்ன வார்த்தைக்கு அதி ப்ரீதனாய் இருப்பான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு –பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச -என்று பரிக்ரஹமானவற்றை விட்டால் போலே முமுஷுவும் பகவத் விஷயம் சொல்லப் போகாத தேசத்தை விட்டுப் போவான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு
கச்த ஏவ வ்யதிஷ்டத-என்று நிராலம்பனாய் நின்றாப் போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு உபாயாந்தர சூன்யமாய் இருப்பான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று அனுபாதேயங்களை விட்டு போந்தாப்
போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு விலங்கான விரோதிகளை விடுவான் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை
அடைகைக்கு -ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராமஸ் ஸ லஷ்மண -என்று கொண்டு பெருமாள் எழுந்து அருளி இருந்த தேசமே உகந்து வந்தாப் போலே முமுஷுவும் எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசமே தனக்கு தஞ்சமாக பற்றுவான் – ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு -நிவேதயத மாம் ஷிப்ரம் – ஆனைய நம் ஹரிஸ் ஸ்ரேஷ்ட -என்கிற இடங்களில் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஒருவனுமே ப்ரஸ்துதனாக கூட வந்த முதலிகளுக்கு இழவு பேறு ஒத்தாப் போலே முமுஷுக்களுக்கு எம்பெருமான் திருவடிகளிலே ஆசார்யன் பண்ணின பிரபத்தியே அமையும் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு ததஸ்து  ஸூ க்ரீவ வசோ நிசம்ய தத் ஹரிஸ் வரேணாபி ஹிதம் நரேஸ்வர விபீஷனே நாசூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர -என்று மகாராஜர் முன்னிலையாகபெருமாள் விபீஷண ஆழ்வானை கைக் கொண்டு அருளினால் போலே
முமுஷுவையும் ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான் கைக்கொண்டு அருளும்

இப்படி கைக் கொண்டு அருளப் பட்ட பிரபன்னன் -சம்சார மண்டலத்திலே இருக்கும்
இருப்பை -பிராட்டி ராவண பவனத்திலே அசோக வநிஹையிலே இருந்து காட்டினாள் –
1-பிராட்டிக்கு ராவண சம்பந்தம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உடம்போடே சம்பந்தம் –
2-பிராட்டிக்கு ஏகாஷீ ஏக கரணிகளைப் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
3-பிராட்டியை பெருமாள் திருவடிகளில் நின்றும் பிரிக்கைக்கு தோற்றின மாரீசனைப் போலே -முடிகைக்கு தோற்றின -விஷய ப்ராவண்யம்
4-பிராட்டியை தர்ஜன பர்த்ச்நாதிகளைப் பண்ணின ராஷசிகளோடே சம்பந்தம்-ஸ்ரீ வைஷ்ணவனுக்கு புத்ர மித்ராதிகளோடே சம்பந்தம் –
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு போலே ஸ்ரீ வைஷ்ணனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி வர்ஷித்த ராம குணம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் அருளிச் செயல்
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரவு போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் ஆசார்யன் உபதேசித்த குரு பரம்பரை
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆசார்யன் பிரசாதித்த திருமந்தரம்
9-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தைப் பார்த்து -அவ்வழியாலே அணி விரலைக் குறித்து -அவ்வழியாலே திருக்கை தொடக்கமாக அணைத்த திருத்தோள்
திருமேனி எல்லாம் அணைத்து தரித்தால் போலே ஸ்ரீ வைஷ்ணவனும் ஆசார்யன் பிரசாதித திருமந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானதொடு தரித்து இருப்பன்
10-பிராட்டிக்கு இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள் திருவடிகளை அகற்றினால் போலே -ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் பாகவத அபசாரம்
11-பிராட்டிக்கு விரோதிகளான ராவணாதிகளை துணித்து பெருமாள் பிராட்டியை திரு அயோதியை ஏறக் கொண்டு எழுந்து அருளினால் போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை சவாசனமாக அறுத்து இந்த ஆத்மாவை எம்பெருமான் பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடு ஒக்க நித்யகைங்கர்யத்தை கொண்டு அருளும் – இப்பத்து வார்த்தையும் அனுஷ்டானபர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு
இவ்விடம் தான் பரமபதம் –

தேவகிப் பிராட்டி வார்த்தை –
ந கஸ்சிநன்அபராத்யதி -என்னுமவள் ஆகையாலே பிராட்டியும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்
-மித்ர பாவேன -என்னுமவன் ஆகையாலே ஈஸ்வரனும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்
-பாகவத விஷயத்தில் அபசாரம் இவர்கள் தங்களுக்கே ஆகிலும் உயிரும் உடலும் பிரியும்படி இ றே இருப்பது –
புருஷகார பூதையான பிராட்டி ஒரு கையும் -பிரபத்தி உபதேசம் பண்ணின ஆசார்யன் ஒருகையுமாக பிராப்ய ஸ்தலம் ஏறப் பிடித்துக் கொண்டு போகிலும்
பிரதிபந்தகமாயே விடும் -பிரபன்ன விஷய அபசாரம் -இதுக்கு உதாஹரணம் விண்ணப்பம் செய்வார் திறத்தில் அபசாரம் பண்ணின ஸ்ரீ வைஷ்ணவர் கதை –

அடும் சோறாவன -அனுகூலர் ஆதரத்தோடு இடுமதும் -சிஷ்யன் இழவாளானாக கொடுக்குமதுவும் -முஷ்டிபுக்கு ஜீவிக்குமதும் –
இவ்வர்த்தத்தில் பிரபன்னர் அருளிச் செய்யும்படி –
போக்ய புத்தயா  கைங்கர்யம் பண்ணி ஜீவிக்குமதுவும் -அனுகூலர் ஆதரத்தோடு கொடுக்குமதுவும் -அவன் திருக்கை சிறப்பு -ஸிஷ்யன் கொடுக்குமது கருவூலத்தார் கொடுக்கக் கொள்ளுகை -முஷ்டி புகுந்தது அவன் பிறந்த -பிரித்த -பேரளவிலே தண்டிக் கொண்ட மாத்ரம் -அதிலும்
பேர் இழிவிலே ப்ரீதி விஷாதம் பிறவாதோ என்ன – பெறுவதும் ஒரு முஷ்டி இழப்பதும் ஒரு முஷ்டி யாகையாலே -அப்போது உச்சரிக்கிற
பகவத் நாமத்தோடே ஷமிக்கும் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

சோமாசி யாண்டான் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் தன்னை உணர்ந்தாலும் கூடாது தன் சத்தையை உணர்ந்தாலும் கூடாது
சம்பந்தத்தை உணர்ந்தாலும் கூடாது சரீரத்தை உணர்ந்தாலும் கூடாது -என்று அருளினார் –

ஸ்ரீ வைஷ்ணவனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடப் புக்கால்–ஆசார்ய வைபவம் இருக்கும் படியே –
உடையவர்கள் செய்யுமதுக்கு கேள்வி உண்டோ-என்றும் அவர்கள் அருளிச் செய்கையாலே உண்டாகக் கடவது என்றும் -நினைக்கக் கடவன் –

ஸ்ரீ வைஷ்ணவர் பரிபவத்தில் அனுசந்திக்கும் படி -இவர் நமக்கு கழுத்துக்கு மேலாக உறவு பண்ணி விடாதே -அபிமாநித்த
இத்தாலே சிஷா ரூபமாக சொல்லப் பெற்றோமே -என்று -இவருக்கு அடிமையான ஸ்வரூபம் உஜ்ஜீவித்தது -என்று க்ருதார்த்தனாவான் –

ஸ்ரீ வைஷ்ணவன் ஸ்தோத்ரம் பண்ணினால் நமக்குள்ள குணங்களைச் சொன்னான் என்று -உகக்கக் கடவன் அல்லன் -இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொன்னான்
என்று வெறுக்கக் கடவன் அல்லன் -சீற்றத்துக்கு விஷயமான நம்மைக் குறித்து – நிர்ஹேதுகமான பிரசாதித்த படியால் உகந்து -இவர் சொன்ன குணங்கள் நமக்கு
முன்பு இல்லையாகிலும் -இவர் பிரசாதத்தாலே மேல் உண்டாகக் கடவது -என்று விச்வசித்து இருப்பன் -சம்சாரி ஸ்தோத்ரம் பண்ணினால் -அடியானவனுடைய
ஸ்தோத்ரதுக்கு உகப்பான் நாயன் அன்றோ -என்று தான் அதில் அந்வயம் அற்று சாந்தனாய் இருப்பன் -இவனுடைய ஸ்தோத்ரம் தேக ஸ்பர்சியாய் தோன்றின போது தேகத்தில் இக்குணங்கள் இல்லை -இவன் தன வாசனையாலே பிரமித்தான் இத்தனை – இக்குணங்கள் ஆத்ம ஸ்பர்சி அன்று -என்று இருப்பன் –

ஒருவனுக்கு பாரதந்த்ர்யமும் வ்யவசாயமும் வ்ருத்தியும் வேண்டும் –பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொண்டு பாரதந்த்ர்யத்தை அழித்தான் –
வ்யாபாரத்தை ஏறிட்டுக் கொண்டு வ்யவசாயத்தை அழித்தான் –விஷயாந்தர அனுவ்ருத்தியை ஏறிட்டுக் கொண்டு வ்ருத்தியை அழித்தான் –

ஆத்ம சாஷாத்காரஞானம் பிறவாமையாலே ஸ்வ தேகாத்ம அபிமானம் போகிறதில்லை –பகவத் பாரதந்த்ர்ய சாஷாத்காரஞானம் பிறவாமையாலே ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் போகிறதில்லை –பகவத போக்யதா விஷய சாஷாத்காரஞானம் பிறவாமையாலே விஷய ப்ராவண்யம் போகிறதில்லை –

உடையவன் உடைமையை முன்னிட்டுக் கொண்டு கிடந்தான்–உடைமை விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு கிடந்தது
-ப்ரீதி உபாயத்தை முன்னிட்டுக் கிடந்தது-பர ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஸ்வ ஸ்வரூபத்தை அறிந்திலன் –
ஸ்வ ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஜீவனத்தை அறிந்திலன் –

நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினான் -திருவாய்மொழி -10-6-2–ஒருவன் -நாட்டாரோடு வார்த்தை சொல்லக் கடவன் அல்லன் -ஆரோடு சொல்லுவது என்னில் –நாராயணனுக்கு வார்த்தை சொல்லுதல் –நாராயண பரமான நெஞ்சுக்கு சொல்லுதல் –நாராயண பரரோடே சொல்லுதல் –
நாராயண பரமாக வேண்டும் என்பாருக்கு சொல்லுதல் செய்யக் கடவன் –

முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அஞ்சுகோடி த்யாஜ்யமாய்–மூன்று கோடி உபாதேயமாய் இருக்கும் -அதென் என்னில் என்போலே என்னில் –
பதி வ்ரதையாய் இருப்பாள் இரு ஸ்திரீக்கு அஞ்சு கோடி-த்யாஜ்யமாய் மூன்று கோடி உபாதேயமாய் ஆனால் போலே –
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள் -வேச்யைகள் -வேச்யாபதிகள் -ஒருவனுக்கு கைகொடுத்து வைத்து எழுந்து போனவள் -உள்ளே இருந்து மயக்குகிறவள்
இனி உபாதேயர் ஆவார் -மாதா பிதாக்கள் -தன் பர்த்தாவுக்கு அவர்ஜநீயரான பந்துக்கள் –தன்னோட்டை பதி வ்ரதைகள் –
இவனுக்கு த்யாஜ்யர் -சம்சாரிகள் -தேவதாந்தரங்கள் -தேவதாந்திர பரதந்த்ரர்கள் –தர்சனத்தில் புகுந்து நின்று தர்ச நாந்திரியாய் போனவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய பிரயோஜனர் உடன் மசக்கு-பரலிட்டு திரிகிறவர்கள் –
இனி உபாதேயர் -ஆசார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சபிரமசாரிகள்

ஒரு வைஷ்ணவனோடே சஹ வாஸம் பண்ணும் போது அவனுடைய குண தோஷங்கள் இரண்டையும் நிரூபிக்க வேண்டும் -நிரூபிக்கிறது குணம் கண்டு
ஸ்துதிக்கவும் -தோஷம் கண்டு தூஷிக்கவும் அன்று -நாமே செறுகைக்கும் பற்றுகைக்கும் -என்று ஆச்சான் பிள்ளை –

ஸ்வரூப நாசகரோடு செறிகையும் அநர்த்தம் -ஸ்வரூப வர்த்தகரோடு செறியாது இருக்கையும் அநர்த்தம் –
என்றும் அசத் சங்கதி அனர்த்தத்தில் தலைக்கட்டும் சத் சங்கதி சதா பச்யந்தியில் தலைக்கட்டும் -என்று ஆச்சான் பிள்ளை வார்த்தை

பகவத் சேஷத்வம் சர்வ சாதாரண முமாய் -சேதனனுக்கு சர்வ அசாதாரணமுமாய் இருக்கும் -பகவத் சேஷ வ்ருத்தி சர்வ ஜன சாதாரணமுமாய் இருக்கும் –
பாகவத சேஷத்வமும் பாகவத கைங்கர்யமும் பரமை காந்திக்கே அசாதாரணம் –

பாகவத வைபவம் சொல்லா நிற்க செய்தே -ஒருவர் பகவத் விஷயம் சொல்ல இப்போது விசேஷம் சொல்லுகிற இடத்தில் சாமாந்யம் என் –
என்று ஆச்சான் பிள்ளை –

பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே பொல்லாது என்று முதலி யாண்டான் –
திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –
நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-
பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் –
என்ன -இவர் திருச்சேறையிலே எழுந்து அருள -இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –
மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக -அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
-உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன
அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –
ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –
கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –
அவர்கள் எங்கே உளர் என்ன –
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி -2-6-4- என்று அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல
-கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன
-வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன
ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –
எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –
ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் -உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் -இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் -பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –
ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –
இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –
ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும் குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை -ததீய விஷயமே
உத்தேச்யம் என்ன -ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன -பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இ றே -திவ்ய மங்கள விக்ரஹத்தை விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –
என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து -இவ் வாழ்வாருக்கு தோற்றம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

ஒரு தேசவிசேஷத்து ஏறப் போய் அனுபவிக்கும் அநுபவம் சாத்மிக்கைக்காகாவும் – உபகார ஸ்ம்ருதிக்காகவும் -பிரபத்தி பண்ணின போது -பரம பதத்து ஏறப் போக்கில் – நச்சுப் பொய்கை என்று சம்சாரிகள் இத்துறையில் இழிவார் இல்லாமையாலும் – இவன் சம்சாரிகளைத் திருத்த வேண்டுகையாலும் -பிரபன்னனுடைய சரீரம் சரம சரீரம் ஆகையாலும் -சர்வேஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும் -இத்தேசத்தில் பகவத் அனுபவம் தான் இவனுக்கு அபூர்வம் ஆகையாலும் -ஆசை கிளரவும் – இவன் தன் இசைவாலும் இவ்வர்தங்களைப் பற்ற வாய்த்து சரீர அவசாநத்திலே மோஷம் ஆகைக்கு அடி –

ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிறான் சம்சாரத்தில் நசை யற்று -பரம பதத்திலே ஆசை பிறந்தவன் -இவனுக்கு பரிஹரிக்க வேண்டுவது என் என்னில் –
உடம்பில் ருசி விளையாது ஒழிகையும் -உறவு முறையார் பக்கல் ஆசை வளராது ஒழிகையும் –
உடம்படியாக உகக்கும அவர்களோடு உறவு கொண்டாடாது ஒழிகையும் – லோகம் சிலுகிடாமல் ஒதுங்கி வர்திக்கையும் –
உடம்புக்கு இரை தேடி ஒருவனுக்கு ஏவல் தொழிலை ஒருபடியாலும் செய்யாது ஒழிகையும்
-உள்ளத்துக்கு உள்ளே நிற்கும்ஒருவன் பக்கல் ஒருபடிப்பட்ட ருசி உண்டாய்ப் போரவும்
தலை அறுப்புண்டவனையும் தலை அறுத்து அத்தாலே சந்நிதியிலே தலையோடு ஏந்தினவனையும் -இவர்களுக்கு கீழான சந்திர ஆதித்யர்களையும் சரணம் என்று புகாது ஒழிகையும் -இவர்களை சரீரம் ஆகவும் அடிமையாகவும் உடைய எம்பெருமான் பக்கல் ஆன அடிமை செய்து பொறவும் –
எம்பெருமானே தஞ்சம் என்று சரணம் புக்கவர்களைத் தனக்குத் துணையாகவும் உயிராகவும் நினைத்துப் பொறவும் -இவர்களோடு விளையாடியும் பொல்லாங்கு சொல்லாது ஒழியவும் -இவர்களைப் பொல்லாங்கு சொல்லுவார் உடனே கூடினர் ஆகில் அவர்களை வாயைக் கிழித்தல் -தான் செவியைப் புதைத்துக் கொண்டு கடக்கப் போதல் செய்யவும் – எம்பெருமான் திரு வாசலுக்கு உள்ளேயே மயிர் விரித்தல் உமிழ்தல் கால் நீட்டுதல் தொடக்கமானவை வருந்தியும் தவிரவும் -ஆபத்துகளாலே புகுந்து ஒதுங்க வேண்டிற்று ஆகில் -அனர்த்தப் படா நின்றோமே -என்று அஞ்சிப் போரவும் -இப்படிப்பட்ட போதுபோக்கு சம்சாரத்தில்
இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது -மூன்று பிரகாரமாய் இருக்கும் -எங்கனே என்னில் – சத்கார யோக்யர் என்றும் -சஹ வாஸ யோக்யர் என்றும் -சத அநுபவ யோக்யர் -என்றும் – சத் கார யோக்யர் -ரூப நாம ப்ரதானர் -உச்சாரண ப்ரதானர் -அபிமான ப்ரதானர் – சஹ வாஸ யோக்யர் -ஜ்ஞான ப்ரதானர் -அனுஷ்டான ப்ரதானர் -அங்கீகார ப்ரதானர் – சத அநுபவ யோக்யர் ஆர்த்தி பிரதானர் -அபி நிவேச பிரதானர் -அபி ருசி பிரதானர் -என்று ஆட் கொண்ட வில்லி ஜீயர் –

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது சர்வ உபாய சூன்யதையோ -இதர விஷய வ்ரக்தியோ -சித்த உபாய ச்வீகாரமோ -பகவத் பிரேமமோ -என்று கேட்க -சர்வ உபாய சூன்யதை சம்சாரிக்கும் உண்டு -இதர விஷய விரக்தி ஷபணனுக்கும் உண்டு – சித்த  உபாய ச்வீகாரம் கேவலனுக்கும் உண்டு -பகவத் ப்ரேமம் ஏகாயநனுக்கும் உண்டு -ஆகையால் இவை இத்தனையும் அன்று -இவற்றோடே கூட பகவத் அனந்யார்ஹ
சேஷத்வ ஜ்ஞானத்தாலே பிறப்பதொரு தாந்தி விசேஷம் -அதாவது பரிபவத்தில் நிர்தோஷ அநுசந்தானம் -நிர்பரத்வ அநுசந்தானம் -உபகார ஸ்ம்ருதி -இரக்கம் என்று அருளிச் செய்தார்-

வடக்குத் திரு வீதிப் பிள்ளை -அடுக்கு குலையாத முஷ்டியும்ஆஸ்திக்யம் குலையாத ஸ்ரீ வைஷ்ணத்வமும்-

திருநகரிப் பிள்ளை -ஆழ்வார்கள் அருளிச் செயலிலே அந்வயம் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தன் உயிராக நினைத்து இருப்பன் -ஆசார்யர்கள் பாசுரங்களிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை தன்னுடைய சத்தை யாக நினைத்து இருப்பன் -இரண்டோடும் அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை அல்லது ஸ்ரீ வைஷ்ணவன் என்று அறுதி இட ஒண்ணாது-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இவர்களுக்கு பேராகைக்கு அடி ஏது என்று கேட்க -ஸ்ரீ மத் புத்ரர் ஆகையாலும் -ஸ்ரீ மான் பிதா வாகையாலும் -ஸ்ரீ புருஷகாரம்
ஆகையாலும் -ஸ்ரீ மான் வைபவத்தை அறிகையாலும் -இவர்கள் ஸ்ரீ மத் பதத்தே பிறக்கையாலும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் -என்று பெரிய கோயில் வள்ளலார் அருளிச் செய்வர்-

ஸ்ரீ வைஷ்ணவனுடைய தின சரிதம் –
1-குரு பரம்பரையும் -திரு மந்த்ரத்தினுடைய விசத அநுசந்தானமான தவத்தையும்
சதா அநுசந்தானம் பண்ணுகை –
2-த்வய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சஹ வாஸம் பண்ணுகை
3-அஹங்கார அக்ரச்தரான சம்சாரிகளோடு அணுகி வர்த்தியாது ஒழிகை
4-சாத்விக சமாசாரம் ஒழிய நாட்டாருடைய பரிமாற்றங்களை நேராக நிவர்திக்கை –
5-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களை உதாசீனம் பண்ணாது ஒழிகை –
6-த்யாஜ்யரான சம்சாரிகளை த்ருஷ்டம் அடியாக அனுவர்த்தியாது ஒழிகை –
7-ஆசூர பிரக்ருதிகளுக்கு அதருஷ்ட வார்த்தை சொல்லாது ஒழிகை –
8-சாது பரிக்ரஹமும் சதாசார்ய பிரசாதமும் ஸ்வரூப வர்த்தகம் என்று இருக்கை –
9-பகவத் பாகவத விஷயங்களில் அநுகூல வ்ருத்தியை தேக யாத்ரா சேஷம் ஆக்காது ஒழிகை
10-ஸ்துதி நிந்தைகளில் அவிக்ருதனாய் இருக்கை –
11-ஸ்வ தோஷ தர்சனம் பண்ணுகை –
12-ஸ்வ ப்ரசம்சை பண்ணாது ஒழிகை –
13-ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பாரதந்த்ர்ய பராகாஷ்டை
பாகவத பாரதந்த்ர்யம் என்று இருக்கை –
14-இவ்வோ அர்த்தங்களை அனுசந்தித்து உண்டான அம்சத்துக்கு உபய பூதனான
எம்பெருமான் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணுகை –
15-இல்லாத அம்சத்துக்கு அநுதாப பூர்வகமாக ஈஸ்வரனை இரக்கை –
16-இவ்வர்த்த நிஷ்டை தனக்கு உண்டான போது நிஷ்டை இல்லாத வேஷ தாரிகளை நெஞ்சாலே நெகிழ நினையாதே பகவத் ப்ரபாவத்தை இட்டு ஆதரிக்கை –
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -இவ்வர்த்த நிஷ்டை தான் பகவத் பிரசதத்தாலே பலிக்கும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தாலே வருமதன்று -அக்ரூர மாலாகார அதீன் பரம பாகவதான் க்ருத்வா என்று பிரமாணம் -இவ்வோ அர்த்தங்கள் தங்களுக்கு உறுப்பாக அதிகரிக்குமவை அல்லது பிறருக்கு சொல்லுகைக்கு கற்க்குமவை அன்று –

கடக்கத்தப் பிள்ளையைக் கடக்கத்தனொரு பிராமணன் -உமக்கு தேக யாத்ரை நடக்கிறபடி என் -என்று  கேட்க -ஸ்வ ரஷண விஷயமாக
சித்திரை மாசத்திலே மூக்கு நீர் முன்னடியிலே விழ ஏற்றம் இறைக்கிற உனக்கு இடுகிற எம்பெருமான் ந்யச்த பரனாய் அணையிலே
சாய்ந்து -சார்ந்து -கிடக்கிற எனக்கு இடச்சொல்ல வேண்டுனோ -என்றார் –

ஒரு பிராமணன் இறப்பில் நின்றும் விழ -அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள பிராமணன் -ஆச்சான் -பெருமான் என்னைத் தள்ளினபடி கண்டீரே -என்ன – அங்கன் அன்று காண் -கர்மத்தாலே நாம் விழுந்தோம் -பெருமாள் எடுத்தார் -என்று நினைத்து  இராய் -என்று அருளினார் –

எம்பெருமான் சாபேஷன்–பிராட்டியும் ஆசார்யனும் பிரபன்னர்களும் சாபேஷ நிரபேஷர்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர் யார்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில் அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும் ஸ்த்ரி அன்ன
பாநாதிகளோடே இருக்கிறாப் போலே -அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்-

ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -சேலை யுமாய் -பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி -பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள – இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய -பெருமாள் சன்னதியே யாகிலும் பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும் பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

தேஹாத்ம விவேகம் -பரமாத்ம விவேகம் -த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் -புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -விரோதி அவிரோதி விவேகம் –
உபாய அநுபாய விவேகம் -வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -துஷ்கர ஸூகர விவேகம் -ஆசார அநாசார விவேகம் -சிஷ்ய ஆச்சர்ய விவேகம் –
இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –

முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு -ப்ராப்ய விஷயமும் -பிராபக விஷயமும் -ஆசார்ய விஷயமும் -போஜன விஷயமும் -ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் – இதில் அத்யாவச்யம் ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் – மோஷத்தில் கைவல்யம் முதலாக உள்ள புரஷார்தங்களிலும் கால் தாழாதே இக்கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை – பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டன முமாய் உள்ள ஈஸ்வரன் -இதில் அத்யாவசியம் ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பகதிகளில் கால் தாழாமல் இருக்கை – ஆசார்ய விஷயமாவது -இவ்வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் -மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்திக்கை – அதாவது -உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை – இதில் அத்யாவச்யம் ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி  லாப பூஜைகளைப் பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம்
என்று இருக்கை – போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே என்று ஜீவிக்கை – இதில் அத்யாவச்யம் ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே உடம்பை வருத்தி யாதல் அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை –

பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் -இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் – அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் -நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி -இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் -இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன -இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம் அருளிச் செய்யா நிற்க -இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள -எனக்கு சேஷத்வ அனுசந்தானமே
அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன -இவரும் அங்கே செல்ல – அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி -அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க -பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –

ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு -ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இ றே-என்று பெரியவாச்சான் பிள்ளை –

ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –அவையாவன –
சைவ ஸ்பர்சம்-மாயாவாத ஸ்பர்சம்-ஏகாயன  ஸ்பர்சம்-உபாயாந்தர ஸ்பர்சம்-விஷயாந்தர ஸ்பர்சம் –இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்
எம்பெருமானுடைய சர்வ ஸமாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்-சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீ ய பதித்வதை அனுசந்திக்க ஏகாயன  ஸ்பர்சம் அறும்-உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –

முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரன் விஷயமாகவும் -அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி விஷயமாகவும்- மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் -த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் -ஸ்வ சரீர விஷயமாகவும் – சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் -தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் -தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் -சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் -இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் – இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும் அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது – இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் -இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது – சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்யாந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –
பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ச்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது -பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும் தன்  பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது – பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள் என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது – ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூ நிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது – இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் -எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் – கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும் உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே -என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –

விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் -0உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் – ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் என்கிற-அத்யவசாயத்தை சொல்லுகிறது –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-
என்று இருக்கும் இருப்பு

ஆசார்ய விஷயீகாரமோ -ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ -பகவத் பாகவதவிஷயத்தில் கைங்கர்யமோ -தன்னுடைய அனுசந்தானமோ -சம்சார நிவ்ருத்திக்கும்
பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் -இவை நாளும் அன்று -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி
நழுவாது ஒழிகை -ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் – ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் தன்னுடைய அநுசந்தானமும் தன்னுடைய காலஷேமம் –

ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை -கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –

வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள -வாசியும் மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உலா வாசியும் – தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் – உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் – சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள  வாசியும் – பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் – சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் – ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் – புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –
அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும் சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை – தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் – பரதேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சகதியுமாய் இருக்கும்  என்று அறிகை – மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும் மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை -தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய் ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை-உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை-சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய் நிர் உபாயுமாய் இருக்கும் என்று அறிகை பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆசீத பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை-சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்ய ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்-சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை-புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை-ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –

ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் -ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் -ஸ்வரூப அனுகூலமான சேவை -ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் -ஸ்வரூப அனுகூலமான இருப்பு -ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் -ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் -ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது -தேச ரஷகன் என்றும்-தேக ரஷகன் என்றும் -பதார்த்த ரஷகன் என்றும் -பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற
ரஷகத்வங்களைத் தவிர்ந்து – தேச நிவர்தகன் என்றும் -தேக நிவர்தகன் என்றும் -விஷய நிவர்தகன் என்றும் பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –
அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே -கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு
அருள் செய்யும் பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே -செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2- நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே -நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இ றே

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது -இதர சேஷம் என்றும் -க்ருஹ சேஷம் என்றும் -பித்ரு சேஷம் என்றும் -தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து சர்வேஸ்வரனே தாரகன் என்றும் -வியாபகன் என்றும் -சரீரி என்றும் -சேஷி என்றும் பற்றுகை -அதாவது –
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது -சேதனாந்தர சேவையையும் -தேவதாந்தர சேவையையும் -பகவத் சேவையையும் -த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் -அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து -ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை -அதாவது
சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -என்றும் -உன்னை சேவித்து -புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் -தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் -தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை -அதாவது – தஞ்சை மா மணிக்-திருவாய்மொழி -9-6-7-என்றும் – கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் – விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
என்றும் இருக்கை

6-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ச்வீகரிக்கையும் பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ச்வீகரிக்கையும்-ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ச்வீகரிக்கையும் – அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து – க்ருஷி பண்ணுதல் -அதாவது
மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6- முஷ்டி புகுதல் -அதாவது -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3- சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் -அதாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -வருவிருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 பரிகிரஹிக்கை -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ச்வீகரிக்கை

7-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் – என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து – நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும் நல்லதோர் சோறு -திருவாய்மொழி -6-7-1-
என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

8-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது -இவ்வருகு உண்டான ரசாக ச்வீகாரங்கள் அன்றியே ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் -நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் – நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

9-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது -புத்ர பச்வன்னாதி பதார்த்தத்தையும் ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் -கைவல்ய புருஷார்த்தத்தையும் -பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-அடியார்கள் குழாம் -களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் – காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும் வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

தெண்மை -திறமை-சதிர் -இளிம்பு இவை நாலும் ஒரு அதிகாரிக்கு அவசியம் அனுசந்தேயம்-தெண்மை -தெளிவு -யாவது -தத்வ த்ரய விஷய ஜ்ஞானமும் -பிராப்ய பிராபக விஷய ஜ்ஞானமும்–சதிராவது -நெஞ்சில் நினைத்தது ஒழிய வாயால் -வாக்கு-சொல்லுகை -அதாவது
சம்சாரத்தில் இருக்கும் நாள் பிரகிருதி வந்து விட்டு ஆள் விட்டு நலியா நின்றால்தனக்கு இவ்விருப்பில் நசையாலே போகமாட்டான்
ராஜ மனுஷ்யன் ஆகையாலே புறப்பட விடமாட்டான் -இனி உள்ளது அகவாயில் அவன் போகைக்கு திரு விளக்கு பிரதிபலியா நிற்க புறவாயிலிலே பிரதிவசனம்
பண்ணுமா போலே -பிரகிருதி பந்துக்களும் நாராயணன் வரவிட வந்தவர்கள் ஆகையாலே -இவர்கள் அளவில் யதா பரகதா நாரீ -என்றும் -பத்ம பத்ர மிவாம் பஸி -என்றும் -கண்டதோடு பட்டதல்லால் -காதல் மற்று யாதும் இல்லை -திருவாய்மொழி -9-1-1-என்றும் இருக்கும் அத்தனை அல்லது வேறு செய்யல் ஆவது இல்லை -இளிம்பு யாவது -உத்தேச்யர் சொன்ன வார்த்தைக்கு உடன் படுகை –

பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் -ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான்
அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
நருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜல தேர பாராது த் ததீர்ண –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்–ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
உபாயத்தளவிலே அத்யாவஸாய  பிரதிபத்தியும் உபேயத்தளவில் த்வரா  பிரதிபத்தியும் சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும் இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும் ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்
விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் – ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

இவற்றிலே ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –

ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும்அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் – – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே –
பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –

உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை

உபேயத்தளவில் தவரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –
சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை  விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை

சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே  தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –

இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை
ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை

விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் -அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-

உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-
பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
இப்படிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும் பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு -அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் –
பகவத் பாகவதரும் -த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -பெறாததிலே செல்லாமை -பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –
இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்றினும் ஆவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர் தல தனரு குஞ்சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –
எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் -காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு  சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-பெறாததில் செல்லாமை பிறக்கையும் – பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதி பத்தி சொல்லிற்று –

ஒரு குல ஸ்திரீக்கு பாதிவ்ரத்ய ஹாநி என்றும் -ஸ்த்ரீத்வ ஹாநி என்றும் – பந்து ஹாநி என்றும் -மூன்று உண்டு –
இவளுக்கு இவை பரிஹார்யம் ஆனவோபாதி அதிகாரிக்கும் இவை பரிஹார்யம் – அதிகாரிக்கு பாதிவ்ரத்ய ஹாநி யாவது -த்ருஷ்டார்தமாக இதரரை அநுவர்திக்கை -ஸ்த்ரீத்வ ஹாநி யாவது -த்ருஷ்டத்தை ஈஸ்வரன் பக்கலிலே அபேஷிக்கை –
பந்து ஹாநி யாவது -த்ருஷ்டத்தில் இல்லாமையை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொல்லுகை –

அதிகாரிக்கு ரூபம் நாமம் உக்தி வ்ருத்தி புத்தி -என்கிற இவை ஐஞ்சும் வேண்டும் –இவற்றில் புத்தியே பிரதானம் –
அது இல்லையாகில் மற்றை நாலும் அசத் கல்பம் -ஆகை யிறே ஆழ்வார்களும் அதிலே உறைக்கைக்கு அடி -எங்கனே என்னில் –
எட்டு பாசுரங்களில் அறிவில்லை என்றால் அனரத்தம் விளையும் என்றும்
அடுத்த எட்டு பாசுரங்களால் -அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சு அனுகூலமாய் இருந்தால்
உயர் கதிக்கு செல்வான் என்றும் -அடுத்த ஒன்பது பாசுரங்களால் -இத்தகைய நெஞ்சையும்
அறிவையும் உடையவனை எம்பெருமான் ஒருகாலும் பிரிய மாட்டான் -என்று அருளினார்கள் –

சித்தமும் செவ்வை நில்லாது -திருக்குறும் தாண்டகம் -10 என்றும் –
நெஞ்சமும் நீயம் பாங்கல்லையே -திருவாய்மொழி -5-4-2- என்றும் –
சிந்தித்து அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8- என்றும்
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4- என்றும்
மறந்தேன் இறந்தேன் -பெரிய திருமொழி -6-2-2- என்றும் –
உணர்வு ஒன்றில்லா -திருமாலை -34 என்றும் –
மனத்திலோர் தூய்மை இல்லை -திருமாலை -30 என்றும் –
உள்ளமே ஓன்று நீ உணர மாட்டாய் -திருமாலை -24 -என்றும் –
இது அவிதேயமானால் அநர்த்தம் என்னும் ஆகாரத்தை அருளிச் செய்தார்கள் –

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் -பெரிய திருவந்தாதி -76 என்றும் –
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி -மூன்றாம் திருவந்தாதி -94-என்றும் –
நினைக்கும் கால் -மூன்றாம் திருவந்தாதி -81-என்றும் –
சிந்தையை செந்நிறுத்தி -திருவாய்மொழி -5-2-6- என்றும் –
தொழுமின் தூய மனத்தராய் -திருவாய்மொழி -3-6-7- என்றும் –
கூடு மனமுடையீர் -திருப்பல்லாண்டு -4 என்றும் –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர் -திருப்பல்லாண்டு -7 என்றும் –
சிந்தித்து இருப்பார்க்கு -நான்முகன் திருவந்தாதி -65 என்றும் சொல்லுகையாலே
இது அனுகூலித்தால் உத்தராகம் என்னுமிடத்தை அருளிச் செய்தார்கள் –

இப்படி அனுகூலித்த நெஞ்சுடையவனை ஈஸ்வரன் விச்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லுகிறது –
மாசற்றார் மனத்துளான் -திருமாலை -22 என்றும் –
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமான் -மூன்றாம் திருவந்தாதி -81- என்றும் –
சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பு -பெரிய திருமொழி -2-5-1- என்றும் –
அந்தாமத்து அன்புசெய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
நெஞ்சமே நீணகராக இருந்த -திருவாய்மொழி -3-8-2- என்றும் –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -3-5-1- என்றும் –
வந்தாய் என் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -1-10-9- என்றும் –
உள்ளம் புகுந்த ஒருவர் -பெரிய திருமொழி -5-2-3- என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என்நெஞ்சுள் -திருச்சந்த விருத்தம் -65- என்றும்
சொல்லுகையாலே அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஈஸ்வரன் விச்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லிற்று –

தான் அறுகை–சைதன்யம் அறுகை–சாராந்தரம் அறுகை–வேர் அறுகை–வ்யாபாரம் அறுகை விஷயாந்தரம் அறுகை
என்று ஸ்ரீ வகுளாபரண தாசர் பிள்ளை வார்த்தை –
தான் அறுகை யாவது -பிரகார பிரகாரி பாவம் அறிந்து –
யானும் தானாய்  ஒழிந்தான் -திருவாய்மொழி -8-8-4- என்றும் –
யானும் நீ தானே -திருவாய்மொழி -8-1-9- என்றும் –
யானே நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
தானே யாகி நிறைந்து -திருவாய்மொழி -10-7-2- என்றும்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -திருவாய்மொழி -2-3-1- என்றும் -இருக்கை
சைதன்யம் அறுகை யாவது -தான் கர்த்தா போக்தா என்னும் நினைவு போவது
செய்த்தலை எழு நாற்றுப் போலே -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும் –
கடைத் தலை யிருந்து -திருமாலை -38-என்றும் –
படியாய்க் கிடந்தது -பெருமாள் திருமொழி -4-9- என்றும் –
பூம் பட்டாம் புல்கும் அணையாம் -முதல் திருவந்தாதி -53-என்றும் இருக்கை –
சாராந்தரம்  அறுகை யாவது -எம்பெருமான் முக மலர்த்தி தவிர வேறு ஓன்று உண்டு என்கிற நினைவு போவது –
அஹம் அன்னம் -என்றும் -உருவமுமார் உயிரும் உடனே உண்டான் -திருவாய்மொழி -9-6-5- என்றும் –
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தான் -திருவாய்மொழி -10-7-1- என்றும் –
தான் என்னை முற்றப் பருகினான் -திருவாய்மொழி -9-6-10 -என்றும் இருக்கை
வேர் அறுகை யாவது -எம்பெருமான் உடன் சம்பந்தம் இல்லாதவன் என்னும் நினைவு போகை
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை -நான்முகன் திருவந்தாதி -7 என்றும் –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-என்றும் இருக்கை
மண்நீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றினால் -மண்ணானது கீழே படிந்து தெளிந்த நீரானது மேலே நிற்குமா போலே -அஞ்ஞான மிஸ்ரமான சரீரத்தில் இருக்கிற ஆத்மாவை ஆசார்யன் ஆகிற மகா உபகாரகன் -திருமந்தரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்ற – அஞ்ஞானம் பதிந்து ஜ்ஞானம் -பிரகாசிக்கும் -தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்கும் தனையும் கை பட்ட போதெல்லாம் கலங்குமா போலே -கலங்கும் என்று அஞ்சி -கலங்காமல் நோக்குவான் ஒருவன் கண் வட்டத்திலே வர்திக்கை ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

சேதனனுடைய பர்வ த்ரயம் -அதாவது -ஸ்வரூப விரோதி நிவ்ருத்தி -சாதனா விரோதி நிவ்ருத்தி -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தி –
தீர்த்தனுக்கு அற்றபின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தார்த மனத்தனாகி -திருவாய்மொழி -7-10-11- என்றும் –
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார் -பெருமாள் திருமொழி -10-5-என்றும்
தாளும்  தடக்கையும் கூப்பி பணியுமவர் -திருவாய்மொழி -3-7-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டேன் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -பெரிய திருமொழி -8-10-9- என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு -உன் கடைத்தலை யிருந்து -திருமாலை -38- என்றும் –
இத்யாதிகளாலே சேதனனுடைய பர்வ  த்ரயத்தை அனுசந்திப்பான் –

முமுஷுவாய் பிரபன்னனானவன் தன்னை சிறையனாகவும் -பெரும் கடல் பட்டானாகவும் -அந்தகனாகவும் –
விஷ தஷ்டகனாகவும் அனுசந்திப்பான் -அனுசந்திக்கும்படி எங்கனே என்னில் –
தேகம் சிறைக்கூடாகவும்-தேக அனுபந்திகளான பார்யா புத்ராதிகள் சிறைக் கூட்டராகவும் –அஹங்கார மமகாரங்கள் வளையலாகவும்
நாசமான பாசம்-பெரிய திருமொழி -1-3-8- நாலியாகவும்-அவிவேகம் மூட்டாணியாகவும்-இந்திரியங்கள் பிரிவாளராகவும்-விஷயங்கள் பிரியலாகவும்
மனஸ்ஸு மேல் தண்டலாகவும்-தான் சிறையனாகவும் எம்பெருமான் விமோசகனாகவும் அனுசந்திப்பான் –

சம்சாரம் சமுத்ரமாகவும் -ஆசை பெரு நீராகவும்-மநோ விகாரம் வாயு ஷோபமாகவும் -அநுராகம் பெரும் சுழி யாகவும் –
அஹங்கார மமகாரங்கள் க்ரஹ சங்கங்களாகவும் ஆத்யாத்மிகாதிகள் அலை யொழுங்காகவும் உடம்பு ஒழுகல் ஒடமாகவும்
தத் ரஷணாதிகள் வன் பாரமாகவும் தான் பெரும் கடல் பட்டானாகவும்எம்பெருமான் உத்தாரகனாகவும் அனுசந்திப்பான்

மனஸ்ஸு கண்ணாகவும் -ஜ்ஞானம் பார்வையாகவும் -காமம் காசமாகவும் –லோபம் காமிநி யாகவும் -உப போகம் புருஷார்தமாகவும் –
அக்ருத கரணம் வழியாகவும் -அஞ்ஞானம் கோல்காட்டாகாவும் நரகம் படு குழி ஊன்று கோலாகவும் அனுசந்திப்பான் –

சம்சாரம் செடியாகவும் உடம்பு புற்றாகவும் இந்திரியங்கள் விவரங்களாகவும் விஷயங்கள் பாம்பாகவும் அவற்றின் சேர்த்தி விஷமாகவும் –
அவற்றின் சந்நிதி தம்சம் ஆகவும் அனுபவம் வ்யாப்தி யாகவும் -மோஹம மூர்ச்சையாகவும்
தான் விஷ தஷ்டனாகவும் எம்பெருமான் தீர் மருந்தாகவும்-திருவாய்மொழி -1-7-4- அனுசந்திப்பான் —

எல்லாம் வேண்டுவதும் பிரபன்னனுக்கு – ஒன்றும் வேண்டாததும் பிரபன்னனுக்கு –
படுக்கை சேர்த்திக்கு முன்பு இவை எல்லாமும் வேண்டும் – படுக்கையில் ஏறினால் இவை எல்லாம் மிகை –
பிணம் கிடக்க மணம் செய்ய ஒண்ணாதாப் போலே காண் இவ்வுடம்பு கிடக்க-வகுத்த கைங்கர்யம் விளையாதபடி -ஆயிட்டு எம்பெருமானைப் பெறுகைக்கு இவ்வுடம்பே அல்ல விரோதம் தான் செய்யும் நன்மைகளும் விரோதம் -எங்கனே என்னில் அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு
விரோதி யாமா போலே முன்பு பூஷணத்தை அனுபவிக்க வேணும் சம்பந்தம் சம்பாத்தியம் அன்று -தடை விடுகை சம்பாத்தியம் –
அதாவது பகவத் ப்ராப்திக்கு விரோதியான இச்சா பிரவ்ருத்திகளை சொன்னபடி –

பகவத் சேஷமாய் வைத்து அகன்று போன ஆத்மாவை எம்பருமானோடே சேர்க்கைக்கு பற்றாசாக பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கை –
தொண்டனூர் நம்பி தம்முடைய அந்திம தசையிலே மருதூர் நம்பி நடக்க –
இவ்வாத்மா எம்பெருமானைப் பற்றி கரை மரம் சேரும் படி ஒரு வார்த்தை சொல்ல வல்லையே -என்று கேட்க
எம்பெருமானுக்கு இல்லாததுமாய் -இவ்வாத்மாவுக்கு உள்ளது ஒன்றுமாய்-எம்பெருமானை பெருகைக்கு பொருள் விலையும் தானேயாய் இருப்பதொரு
அஞ்சலியே காண் என்று அருளிச் செய்தார் –
அது எங்கனே என்னில்
-அடித்துப் பறிக்கும் தசையிலே ஓர் அறிமுகம் பெற்றால் போலேயும்-கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலேயும்
நமக்கு புருஷகார பூதையான பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கையே வேண்டுவது
இவ்வதிகாரிக்கு பிரகிருதி உடன் இருக்கும் நாள் இத்தனையும் நினைத்து இருக்க வேண்டும் படி எங்கனே என்னில்
எம்பெருமானும் நித்யன் -ஆத்மாவும் நித்யமாயிருக்க இது இற்றை வரை இழப்பதே என்று இழவு பட்டு இருக்கையும்
நெடும்காலம் இழப்பித்த உடம்போடு எம்பெருமான் தன்னை ரஷகன் என்று அநுசந்திக்க வைப்பதே என்று இருக்கையும் –
இற்றைவரை இழப்பித்த உடம்பு இருந்தது -இன்னம் இழக்கிலோ -என்று பயம் பிறந்து இருக்கையும் –
பெறுகைக்கு நாம் பண்ணுவது ஒரு நற்றம் உண்டோ -இழக்கைக்கு பயப்பட இரண்டும் அவனே ஆனபின்பு -தன்னை அனுசந்தித்துத் தளருகையும் –
அவனை அனுசந்தத்திது பெரும் தேற்றமும் -இவ்வாகார த்வயமும் பிரகிருதி சம்பந்தம் அறும் அளவும் இப்படி அநுசந்திக்குமவன் அதிகாரி யாகிறான் –

இவ்வதிகாரிக்கு உபாயத்துக்கு செய்ய வேண்டுவது  ஒன்றும் இல்லை –
த்வயத்தில் பூர்வ கண்டத்தை அனுசந்தித்தால் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை – உத்தர கண்டத்தை அநுசந்தித்தால் தலை சொரிய அவசரம் இல்லை
ஜ்ஞானப் பிரதன் ஆசார்யன் –ஜ்ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –ஜ்ஞான விஷயம் எம்பெருமான்
-ஜ்ஞான பலம் பகவத் கைங்கர்யம் – பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: