Archive for September, 2015

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -நான்காம் திருமொழி —

September 4, 2015

அவதாரிகை –

இவனும்
பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க
இவர்களும்
அநு வர்த்தித்தும் –
வைதும்-
இப்படி பஹூ பிரகாரங்களாலே
அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்து –
அவனும் கொடுக்க –
இவர்களும் பெற்றார்களாய் நின்றது –

இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று
சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும் அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே

சம்யோகா விபர யோகாந்தா -அயோத்யா -105-16-
சம்சாரத்தில் போகங்கள் நிலை நில்லாதாகையாலே –
அவனும் பேர நிற்க –
இவர்களும் இன்னமும் ஒரு கால் பரியட்டம் உரிய வல்லேனே –
என்று அதுக்கு கூடல் இழைக்கிறார்கள் இத்தனை-

இங்குத்தைப் பரிமாற்றம் பேறும் இழவுமாய்ச் செல்லும் அத்தனை இறே
இது தான் இதர விஷய லாபத்தில் காட்டில் நன்றாய் இருக்கும் இறே
பேறு இழவுகள் இவ் விஷயத்தில் ஆகப் பெறுவதே –

பரம சேதனனை விட்டு அசேதன க்ரியா கலாபங்களைக் கொண்டு பெறப் பார்ப்பாரைப் போலே
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு

அசேதனமான கூடலின் காலிலே விழுகிறாள்

வ்ருத்த ஹீனனான கிருஷ்ணனை -ஆசாரம் இல்லாத -கைம்முதல் எதிர்பாராத கிருஷ்ணனை –
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள்
காணும்

இத்தனை கலங்காத வன்று
பிரிந்த விஷய வைலஷண்யத்துக்கு நமச்காரமாம் இத்தனை இறே –

—————————————————————————–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பதவுரை

கூடலே–கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர்–தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும்–கைகளார வணங்கப் பெற்ற
தேவனார்–ஸ்வாமியாய்
வள்ளல்–பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார்–திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து-பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட–(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில்–(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு–நீ கூட வேணும்

காதாசித்க சம்ஸ்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்க வாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்

தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –

பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே

கைந்தொழும்-
நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே
இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்

வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே
திருமலை அளவும் வந்து –

தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது

நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு
ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –

-மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –

மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே
இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
பெரியாழ்வார் பெண் பிள்ளையை –
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –
பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –
கோத்ரம் -சாடு பர்வதம் –

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே –
அதாகிறது –கோயிலாய்த்து –

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-

கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி

நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே
பிராப்ய த்வரை-

—————————————————————————

அவன் என்னைப் பெறுகைக்கு சாதனானுஷ்டானம் பண்ணுகையிலே
உத்யுக்தரைப் போலே இருந்தான்
அதன் பலம் நான் பெறும்படி பண்ண வல்லையே -என்கிறாள் –

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

பதவுரை

கூடலே!-’-
காட்டில் வேங்கடம்–காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம்– நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி–மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
உறை–நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன்–வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து–ஓடி வந்து
என் கை பற்றி–என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும்–தன்னொடு
கூட்டும் ஆகில்–அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு–நீ கூடவேணும்

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
காட்டிலே உண்டான வேங்கடம் -என்னுதல்
காட்டை இல்லாக உடைய வேங்கடம் -என்னுதல்

ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளோடே இருந்து –
வனவாச ரசம் அனுபவித்தால் போலே யாய்த்து -திருமலையில் இருப்பு –
திரு அயோத்யையில் இருக்குமா போலே யாய்த்து
திருக் கண்ண புரத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அன்றியே
ஸ்ரீ பிருந்தாவனம் திருவாய்ப்பாடியும் போலே யாதல்
பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருக்குமவன் இறே
கானமும் வானரமும் வேடுமான -நான்முகன் திரு -47-
இவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு திரு மலையிலே வந்து நிற்கிறான்

வாட்டமின்றி –
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் அனுபவிக்கக் கடவ நாம் –
அவ்விடத்தை விட்டு இவர்கள் நடுவே இரா நின்றோம் என்று திரு உள்ளத்திலே ஒரு வாட்டமும் இன்றிக்கே

மகிழ்ந்துறை வாமனன்
அவர்கள் நடுவே நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்குமா போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் இருந்து
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாமவன்-

ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
ஓரடிக் கழஞ்சு மண்ணுக்கு பதறுமவன் இவளைப் பெற்றால் இரான் இறே
ஆசூரப் பிரக்ருதியான மகாபலி முன்னே கழஞ்சு மண்ணுக்கு பதறி நடக்குமவன்
இவள் ஒருதலையானால் ஆறி இரான் இறே

ந பிரமாணீ கருத பாணி பால்யே பாலேன பீடித -யுத்த – 119-16-என்கிறபடியே
அம் கண்ணன் உண்ட என்னாருயிர் கோது இது -திருவாய் -9-6-6-என்னுமா போலே
பிடித்த பிடியிலே அனன்யார்ஹமாம் படி பிடித்து –

தன்னோடும் கூட்டுமாகில்
நான் தன கர ச்பர்சத்தாலே துவண்டு ஸ்தப்தையாய் நிற்க –
அணைத்து ஏறிட்டுக் கொள்ளுமாகில்

நீ கூடிடு கூடலே—
அவன் பக்கல் குறையில்லை
உன் தலை துலுக்குகை கிடாய் வேண்டுவது

ஸ்வா பதேசத்தில் கூடல் மனஸ்சைக் குறிப்பதால் எம்பெருமான் எதிர் சூழல் புக்கு திரிந்தாலும்
பேற்றைப் பெறுகைக்கு இசைவு இச்சை வேணுமே –

தலை துலுக்கு -இசைவு -நீ கூடுகை -என்றபடி –

——————————————————————————–

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பதவுரை

பூ மகன்–பூலிற் பிறந்த பிரமனும்
வானவர்–நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு–கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம்–தகுந்த
மகன்–புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி–மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன்–சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம்–மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன்–மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில்–(என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே! கூடிடு-

பூ மகன்
இந்த விபூதி

புகழ் வானவர்
லஷ்மி சம்பன்ன -பால -18-28–போலே அங்குள்ளார்

போற்றுதற்கு ஆமகன் –
நாவேவ யாந்தம் உபயே ஹவந்தே
இரண்டு கரையில் உள்ளாறும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே

அணி வாணுதல் தேவகி-
அழகிய ஒளியை உடைத்தாய்
வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு

மாமகன்
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி –
மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –

மிகு  சீர் வசுதேவர் தம்- கோமகன்-
கோவான மகன் –
சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்

அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக்   கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை

வரில் –
இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்

கூடிடு கூடலே-
நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –

—————————————————————————

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

பதவுரை

ஆய்ச்சிமார்களும்–இடைச்சிகளும்
ஆயரும்–இடையரும்
அஞ்சிட–பயப்படும்படியாக,
பூத்த நீள் கடம்பு ஏறி–புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து–(அங்கு நின்றும் எழும்பிக் குதித்து)
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய–நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில்–பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான
கூடலே! கூடிடு-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
-12-7-

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

நீள் கடம்பு –
இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

புகப் பாய்ந்த –
கால் ஆழக் குதிக்க

வாய்த்த காளியன்
தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

மேல் நடமாடிய-
ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

கூத்தனார் வரில் –
ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

கூடிடு கூடலே-
உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

———————————————————————————–

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

பதவுரை

ஓடை–நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம்–மிக்க மதத்தை யுடைத்தான
யானை–(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்–உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி–மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி–(நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு–நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் -(நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே! நீ கூடிடு

ஓடை -நெற்றிப் பட்டத்தை உடையதாய்
நாடி -நம் வீட்டைத் தேடிக் கொண்டு –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி-நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
அவன் விழ விழவுக்கு என்று கோடித்தான்-
இவள் இவன் வரவுக்கு என்று இருந்தாள் -மாட மாளிகைகள் சமைத்து அலங்கரித்தது –

நாடி
நேர வந்து புகுர ஒண்ணாது
இன்னாள் வீடு எது -இன்னாள் வீடு எது என்று ஊர் இரியலிடத் தேடி விட்டு –
ஆரவாரம் பண்ணித் தேடி விட்டு –விடாய் எல்லாம் தோற்ற –
முதா யுக்தௌ மாலாகாரா க்ருஹம் கதௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-9-17-
மாலாகாரருக்கு முடுக்குத் தெருவிலே இறே அகம் –
பெரும் தெரு எல்லாம் தேடி முடுக்குத் தெருவிலே கண்டு கொண்டான் இறே

பிரசாத பரமௌ-பிரசாதமே விஞ்சி இருப்பது
நாதௌ-இது தர்மம் என்கைக்கு ஒரு தர்மி யுண்டித்தினை
மம கேஹம் உபாகதௌ-நாதத்வம் மிக்கு இருக்கில் அழைத்து அன்றோ காண்பது –
தன்யோஹம் -ஆரும் தேடித் பெறாத நதியை -இருந்த இடத்தே எடுத்துக் கொள்ளப் பெற்றேனே
அர்ச்சயிஷ்யாமி -ஸ்வரூப அநுகுணமாக பெற்ற நிதியை அழித்து புஜிப்பேன்-
தக்கவாறு மாற்றி அர்ச்சனம் வந்தனம் போன்றவற்றால் அனுபவிப்பேன் -என்றபடி
இதி -இப்பாசுரம் ஆர் சொன்னார் என்னில்
மால்யோபஜீவன -போக்யதை விற்று உண்கிறவன்-
பார்யையை விற்று உண்பாரைப் போலே –
முகத்தை திரிய வைத்து இறே மாலை கட்டுவது
இதிலே சாண் மாலை அழியாமைக்காக
ஆஹா -இவனை இவ்வரவு இப்படியாக்கி -சொல்லுவிப்பதும் செய்தது –என்கிறான்
இவள் தானும் ஒரு மாலாகாரர் மகள் இறே

நம் தெரு –
திருவாய்ப்பாடி அடைய தன்னது ஆனால் போலே இங்கும் –
வட மதுரை மா நகரிலும் -ஒரு திரு மாளிகை யுண்டு –
உகந்து அருளிய இடம் எங்கும்
தேவத்வேதேவ தே ஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -ஒரோ திரு மாளிகை யுண்டு –
இன்னாள் அகத்துக்கு என்று முகம் தெரியாதபடி அகத்தளவும் தெருவின் நடுவே வர வேணும்

ஓடை மா மதயானை யுதைத்தவன்-கூடுமாகில் நீ கூடிடு கூடலே–
ஓடை -முக படமுமாம் -பட்டமுமாம் –

மா மத யானை -களிப்பித்தார்கள் மத த்ரவ்யங்களாலே
மதத்தாலே செருக்கித் திமிர்த்து நின்றது –
திருவடிகளாலே உதைத்தவன் –

கூடுமாகில் –
விரோதி போய்த்து -நீ கூட்டித் தரும் இத்தனை –

—————————————————————————

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

பதவுரை

அற்றவன்–(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய–யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன்–தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை–கம்சனை
வஞ்சனையில்–வஞ்சனையிலே
செற்றவன்–கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன்–விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில்–வந்திடுவானாகில்
கூடலே! கூடிடு-.-

அற்றவன் மருத முறிய நடை
முன்பே தனக்கு அற்றவன்
அற்றுத் தீர்ந்தவன் -இவளுக்காகக் காணும் பிறந்தது –
பரித்ராணாய சாதூனாம் -என்று தானே அருளிச் செய்தான் அன்றோ

மருத முறிய நடை-கற்றவன்-
தன்னை அறியாத பருவத்தே விரோதியைப் போக்கின படி –
யமளார்ஜூநௌ
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-16-

கஞ்சனை வஞ்சனையில்  செற்றவன்
வஞ்சனையில் -தர்ம யுத்தமே வேணும் என்று பெருமாளைப் போலே இருந்தானாகில்
அவன் வஞ்சனமே தலைக் கட்டுமே –
அவன் நினைத்த வஞ்சனத்தை அவன் தன்னோடு போக்கின படி

திகழும் மதுரைப்பதி கொற்றவன் –
ராஜ்யத்துக்கு உக்ர சேனனை வைத்தானே யாகிலும்
இவனே ராஜா என்பதே இவள் பஷம் –

வரில் கூடிடு கூடலே-
ராஜாக்களுக்கு பிரேரகன் வேணுமோ –

————————————————————-

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே–4-7-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும்–வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும்–வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும்–ஏழு ரிஷபங்களும்
புள்ளும்–பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும்–வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன
(அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ–முடிந்து விழும்படியாக
முன்–எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன்–கொன்றொழித்த கண்ண பிரான்
வரில்–வரக்கூடுமாகில்
கூடலே! கூடிடு;

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
கூடல் கூடாத இன்று போலே ஸ்வயம் வரத்துக்கு பிரதிபந்தகமான –
அன்றும் இக்கூட்டரவுக்கு இன்னாதான செய் சிசுபாலனும்

நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
அவன் தனக்கே தனியே இன்னாதான செய்த இடங்கள் போராதே-
இவனை -இருவரைக் கண்டு நின்றது

நீள் மருதும் –
சாய்ந்தால் பிழைக்க விடாது –
பொய்ம்மாய மருதான அசுரரை
-பெரியாழ்வார் -3-1-3-

எருதும் –
இவனை நலிய நின்ற ஏழு எருதும்

புள்ளும் –
பகாசூரனும்-

வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே–
வென்றியை தருவதான வேலை யுடையனாய் -அதுவும் மிகையாம் படியான மிடுக்கை யுடையனான கம்சன் –

கஞ்சனும்
கீழ்ச் சொன்னவற்றுக்கு அடியான அவன் தன்னையும்

கொன்றவன்
ஏக பிரயோகத்தே விரோதிகளை அடையப் போக்கி அவசரப் பிரதீஷனாய்-
என்னை அடைய -சித்தமாய் – நின்றான்

இனி நீ கூடும் இத்தனை –

——————————————————————————————–

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்–ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன்–நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்–நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்–கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ண பிரான்
வரில் – வரக் கூடுமாகில்
கூடலே! கூடிடு.

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன்
ஆவல் –
ஆவலுடையார் தான் -குணாத்வசாயமும் கிடக்கச் செய்தே –
நோன்பு நோற்பது –
காமனை ஆராதிப்பது –
சிற்றில் இழைப்பது-
பனி நீராடுவது –
கூடல் இழைப்பதான -இவை ஆவலாவது

அன்பு –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்பது
உறகல் உறகல் -என்பதான தமப்பனாருடைய அன்பு –

தங்கள் குடியில் உள்ளார் மனத்தோடு அல்லது மேவான் -என்கிறாள்
விரை சூழ் துவராபதிக் காவலன் –
ஆவல் இல்லாதாரோடும் பொருந்து மவன் கிடீர் –

ஷோடச ஸ்திரீ சஹஸ்ராணி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -31-17-18-
அவ்வூரில் உள்ள மணம் போராமே ஸ்வர்க்கத்தில் உள்ள மணமும் கூட்டிக் கொடுத்தான் இறே –
அதனாலே விரை சூழ் -விசேஷணம் –
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டுவரை நட்டான் -பெரிய திருமொழி –6-8-7-என்னக் கடவது இறே

காவலன் –
ஜகத் வியாபார லீலை பண்ணி –

கன்று மேய்த்துவிளையாடும் கோவலன் வரில்
சர்வச்ய ஜகத பாலௌ வத்ஸ பாலௌ பபூவது -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-35-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய் -10-3-10-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-

கோவலன் –
ராஜ்யம் பண்ணாமைக்காகவும்–
கன்று மேய்த்து விளையாட -திருவாய்ப்பாடிக்கு வருவதற்காக-

அவனது ரஷகத்வ சௌசலப்யங்களுக்கு குறை இல்லை ‘
எனது ஆசை அன்பு அபி நிவேசங்களுக்கும் குறை இல்லை –

கூடிடு கூடலே-
ஆகையால் நீ கூடி எங்களைக் கூட்டுவாயாக –

—————————————————————————-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

பண்டு–முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய்–(முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான)
கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன்–பெரு வேள்வியில் சென்று
அண்டமும்–மேலுலகங்களையும்
நிலனும்–கீழுலகங்களையும்
அடி ஒன்றினால்–ஒவ்வோரடியாலே
கொண்டவன்–அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில்–வருவானாகில்
கூடலே!–கூடிடு

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
யஜ்ஞ்ஞோபவீதமும் -க்ருஷ்ணாஜினமும் -முஞ்சியும் -பவித்ரமும் -தண்டும்
பரமபதத்தில் ஒப்பனையிலும் அழகியதா இருந்தபடி –

பண்டு மா வலி தன்பெரு வேள்வியில்-
கூடல் தலைக் கட்டியும் பெறாது இருக்க
வேள்வியின் நடுவே இவனைக் காணப் பெற்ற வேள்வி –

அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே-
அண்டமும் ஓரடியும்
நிலம் ஓரடியும் –
அவன் தன்னுடைமையை விடான் -நீ கூடுகையே குறை –

த்ரீணி பதா விசக்ரமே –என்றும்
மூன்றடி நிமிர்த்து -பெரியாழ்வார் -4-7-10-என்றும் உண்டாய் இரா நின்றது –

இது-இரண்டு அடிகளாலே அளந்தான் என்ற இது – இருக்கிறபடி ஏன் -என்று நஞ்சீயர் -பட்டரைக் கேட்க –
பரோ மாதரயா தனுவா வருதான ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
-உபே தே வித்ம ரஜசீ ப்ருதிவ்யா -விஷ்ணு தேவ தவம் பரமச்ய வித்சே —என்றும்
த்வே இதஸ்ய க்ரமேண ச்வர்த்த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யாதி
-த்ருதீயமச்தி நகிரா ததர்ஷதி வயஸ்சன பதயந்த பதத்ரிண-என்றும்
வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும் –
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் அத்தனை -என்று காணாமல் விட்டான்-
அவன் அளந்தமை யுண்டு –அவனுக்கே தெரியும் அத்தனை -என்று
அருளிச் செய்தார் என்று ஜீயர் அருளிச் செய்வர் –

————————————————————————-

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய–அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த–மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்–எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்–அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ண பிரான்
வரில்–வரக் கூடுமாகில்
கூடலே! கூடலே

பழகு நான் மறையின் பொருளாய்
அபௌருஷேயமான வேதங்களின் அர்த்தம் இவனே இறே
அல்லாதவை ஏக விஜ்ஞான நியாய சித்தம் –

வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
யதா சோம்யை கேன மருத் பிண்டேன சர்வம் ம்ருண்மயம் விஞாதம் ஸ்யாத்-சாந்தோக்யம் -6-1-4-

மத மொழுகு வாரணம் உய்ய வளித்த
சம தமாத்யுபேதம் அன்று -அகப்பட்ட இடரில் நின்றும் உய்ய

எம் அழகனார் –
ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததான -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-59-

அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே
தங்குமேல்-என்று இருக்குமவர்கள்
இவர்களுக்கு அணி யாவது –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
-8-7-
அப்போதே இவன் உதவா விடில் இனிப் பிதற்ற அமையும்

எம் அழகனார் –
வரிலும் முகம் கொடுப்பது இல்லை என்று இருந்தவர்கள் நெஞ்சில்
மறம் மாறும்படி வாழ்வுகள் செய்தும்
தாழ்வுகள் சொல்லியும் கலந்தவர்களோடே கலக்க வல்லவன்-
கோலப் பாதத்தையும் -அணி மிகு தாமரைக் கையையும்

தலை மிசை வைத்து வாழ்வுகள் செய்தும்
அடியேன் குடியேன் குழைந்து கலந்து கலக்க வல்லவன்

தானும் குழைந்து -கலப்பவர்கள் உடைய
நெஞ்கை குழைய வைப்பவன் என்றுமாம் –

அப்படி என் இன்னாப்பை தீர்த்து கலக்குமாகில் கூடிடு –

——————————————————————————-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

பதவுரை

ஊடல் கூடல்–ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல்–குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல்–(பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன்–அநாதி காலமாக
நீடு நின்ற–நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை–நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை–அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய–அருளிச் செய்த
பாடல் பத்தும்–பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு –ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை-(எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –
ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன் குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் —
எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன்
என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே

முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில்
பெண்கள் இத்தனை வருடையவும் பாசுரத்தையும்

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –
கிருஷ்ணனை
இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்

-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -மூன்றாம் திருமொழி —

September 4, 2015

அவதாரிகை –

தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்னும் படியாக வந்து ஸ்பர்சித்து –
அநந்தரம் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -என்னும்படி
இருவரும் இரண்டு உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஓர் உடம்பு என்று பிரதிபத்தி பண்ணலாம் படி சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமாய் –
அப்படி வ்ருத்தமான சம்ஸ்லேஷம் தான் –
காய்ந்து பொருந்துமா போலே –பிரிந்து கூடாவிடில் இரண்டு தர்மியும் அழியும் அளவாக –
இத்தை அனுசந்தித்து -அதாவது –

பிரிந்து கூடினால் நன்றாக கூடி தரிப்பார்கள் என்று -அனுசந்தித்து
இவர்களுடைய பந்து வர்க்கமானது சிறு பெண்களை இழக்க ஒண்ணாது –
இப்படி பிறந்து நின்ற பின்பு இனி போக்கடி என் என்று
பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே அடைக்க –

அவர்களும் பிரிவாற்றாமே –உபவாச க்ருசாம் தீ நாம் -சுந்தர -15-19–என்று
சொல்லுகிறபடியே ஆற்றாமை எல்லாம் உடையராய்
இவனும் –ந மாம்சம் ராகவோ புங்க்தே -சுந்தர -36-41-என்றும்
நைவ தம்சான் நமசகான் -என்றும்
பெருமாள் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே இருந்தால் போலே இருந்தது –
அதுக்கு அடி என் என்னில் –

த்வத்கதே நாந்தராத்மநா–சுந்தர -36-42- என்று
பரகாய பிரவேசம் பண்ணி இருப்பாருக்கும் ஓன்று தெரியுமோ –
தமக்கு உணர்த்தி உண்டாகில் அன்றோ அவை அறிய வல்லராவது என்னும் படியாய் –
இவர்கள் ஒருகால் உறங்காது இருக்கில் –
அநித்ரஸ் சத்தம்
–சுந்தர -36-44-என்னும் படியாய்
இத்தலை –ஊர்த்வம் மாசாந்த ஜீவேயம் சத்யே நாஹம் ப்ரவீமி தே-சுந்தர -38-67-என்னில்
ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர 66-10-என்கிறபடியே
ஒரு ஷணமும் ஜீவிக்க மாட்டாத படி இறே அவன் படி

இப்படி இரண்டு தலைக்கும் ஆற்றாமை கரை புரண்டு இருக்க –
பெண்களுடைய தசையை அனுசந்தித்த பித்ராதிகள் -இவர்களை
நாம் முடிய நிரோதிக்கில் இழக்கும் அத்தனையாய் இருந்தது –
நாமே சேர்த்து விட்டோம் ஆக ஒண்ணாது –
இனி இங்கனே ஒரு வழி இடுவோம் –
பெண்கள் வர லாபத்திற்காக- பனி நீராட -என்று ஓன்று உண்டு செய்து போருவது –
அத்தை இவர்கள் செய்வார்கள் –
தங்கள் நினைவிலே அதுவும் பலிக்கிறது –

நாம் இது தன்னை அறிந்தோம் ஆகாது ஒழிகிறோம் -என்று இவர்கள் தாங்கள் தங்களிலே சமயம் பண்ணி இருக்க –
அவனும் பிரிந்த போது தொடங்கி –இவர்கள் இடையாட்டாம் ஆராயும் அதுவே இறே அவனுக்குப் பணி
ஆகையால் தான் பிரிந்த பின்பு பிறந்தவை அடைய பஞ்ச லஷம் குடிக் காட்டில் –தனித் தனியே ஆளிட்டு ஆராய்ந்து ஊரில்
பிறந்த விசேஷங்களும் -பிறக்கிறவையும் -பிறக்க புகுகிறவையும் -அறிந்து

பிறக்கிறவை-பித்ராதிகள் -நீராடப் போகச் சொன்னவை
பிறக்கப் போகிறவை பெண்கள் நீராடப் போகிறவை –
இப்படி பனி நீராட போவதாக அத்யவசித்து இருந்தார்கள் என்று கேட்டு
தானும் ஒக்கப் போவதாக கணிசித்து இருக்க

அவர்களும் -இவனோட்டை சம்ஸ்லேஷம் தான் பொறுக்கப் போகாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் தான் பாடாற்றப் போகாது –
சம்ஸ்லேஷமோ விஸ்லேஷந்தமாய் அல்லாது இராது
ஆன பின்பு அவனோடு சம்ஸ்லேஷித்து பின்னைப் பிரிந்து படும் வ்யசனத்தில்
முன்புற்றை விரஹ ஜ்வரத்துக்கு பரிகாரமாக நீரிலே போய் முழுகி அத்தால் வந்த ஆஸ்வாசத்தைப் பெற்று இருக்க அமையும்

அது செய்யும் இடத்தில் நாமும் அவனுமாய் முன்பு குளித்துப் போகும் பொய்கையில் போகில் அவன் அறிந்து வரும்
ஆன பின்பு அவன் அறியாத தொரு பொய்கை தேடித் போக வேணும் –
அது செய்யும் இடத்தில் திரளாகப் போகில் அவன் அறியும்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்–
போம் இடத்திலும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம் -என்று
எல்லாரும் போனார்கள் –

அவ்வளவிலே இவனும் அவர்களைப் பெறுகைக்கு
எதிர் சூழல் புக்கு திரிவான் ஒருவன -திருவாய்மொழி -2-7-6–இறே
இவர்கள் நினைவை அறிந்து இனித் தான் திருவயோத்யையில் உள்ளாரைப் போலே வழி மாறிப் போனால் அறிந்திலோம்
என்று மீளும் இளிம்பன் அன்றுஇ றே –
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணா சரிதே பதி -சுந்தர -1-1-என்கிறபடியே அடி ஒற்றினான்

இவன் தான் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-என்கிறபடியே
இருளோடு விகல்பிக்கலாய் இறே திரு மேனி இருப்பது –
ஆகையால் சாயாவானை சாயை பின் செல்லுமா போலே இவர்கள் நிழலிலே ஒதுங்கிப் போய்
முற்பட்டுக் கரையைப் பற்றினான்-

இவர்களும் இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் அடையக்
கரையிலே இட்டு வைத்துப் போய் ஜலத்திலே அவகாஹித்தார்கள் —

அவ்வளவிலே இவற்றை அடைய வாரிக் கொண்டு பெரிய வேகத்தோடு போய் குருந்தின் மேலே ஏறித்
தன்னைத் தெரியாத படி மறைய நின்றான் –

இவர்களும் கரையிலே ஏறிப் பார்த்த இடத்திலே அவை காணாமையாலே -இருந்த படி என் –
என்று துணுக்கென்று நம்மோடு கூட வந்தார் ஒருவரும் உண்டோ –
இது ஆகாசம் கொண்டதோ -திக்குகள் கொண்டதோ
இக்குளம் கொண்டதோ -கிருஷ்ணன் கொண்டானோ -என்று இங்கனே கலங்கி

கின்னுச்யாத் சித்த மோஹோஸ்யம்–சுந்தர -34-23-என்கிறபடியே
திருவடி முன்னே இருந்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இது இந்நிலத்தில் சம்பவிப்பது ஓன்று அல்ல -என்று இருந்த படியாலே -இது சித்தஸ்கலனம் பிறந்ததோ -என்றும்
உன்மாதஜோ விகாரோ வா ச்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா –என்கிறபடியே
இது உன்மாதாமோ -பிரகிருதி விகாரம் பிறந்ததோ
இது இருந்தபடி என் -என்று சங்கித்து பின்பு தெளிந்தால் போலே

இவர்களும் அநேகத்தை சங்கித்து -இவர்களும் எங்கும் பரகு பரகு-என்னப் பார்த்துக் கொண்டு வாரா நிற்க –
இவனைக் குருந்தின் மேலே கண்டார்கள்
கண்ட அநந்தரம் –
இவன் நம்மை மடி பிடித்து வந்தான் –புடவைக்காக வந்தான் -சாடு -நாமும் இவனை
மடி பிடித்து வாங்கினோமாம் விரகு ஏதோ -என்று பார்த்து
இவனை -இரப்பார்–தொழுதோம் -3-1–
ஏத்துவார் –மதுவின் துழாய் முடி மாலே -3-2–
வாழ்த்துவார் –கூத்தாட வல்ல எங்கோவே –3-6–
சீறுவாராய்-குரக்கரசு –3-4 -என்றும் –
மசுமையிலீ -3-9-என்றும் சீறி

இவனை இப்படி தீம்பு செய்யப் பெற்று விட்ட தாயும் ஒருத்தியே -என்று –
அஞ்ச உரப்பாள் -3-9-என்று அவளை வெறுப்பார்
தங்கள் ஆற்றாமையை அறிவிப்பாராய்-
தடத்தவிழ் தாமரை -3-6–

இப்படி பஹூ பிரகாரங்களாலும் அனுவர்த்திக்க
அவனும் பரியட்டங்களையும் கொடுத்து சம்ஸ்லேஷித்தானாய்த் தலைக் கட்டுகிறது –

மேலில் திருமொழி விஸ்லேஷித்து கூடல் இழைக்கையாலே
இங்கே சம்ஸ்லேஷம் அர்த்தாத் -சித்தம் –

————————————————————–

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

பதவுரை

அரவு அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய்–திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து–(குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான்–நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம்–கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம்–(இவ்விடம்) வந்தோம்;’ (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு–குளத்திற்கு
வாரோம்–நாங்கள் வருவதில்லை’
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
செல்வன்–(ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன்–ஸூர்யன்
எழுந்தான்–உதித்தான் ’
ஆற்றவும் ஏழமை பட்டோம்’ (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் ’
இனி–இனி மேல்
என்றும்–என்றைக்கும்
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்.

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே

கிருஷ்ணன் தான் ராத்ரி முற்கூற்று எல்லாம்
பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று –
அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –

இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –

அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே
கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –

குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே
உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் –
நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-

ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்

உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான்
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி
கடல் என்று கொண்டு
அன்றிக்கே –
மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் –
தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்

செல்வன்
ஸ்ரீ யபதியான நாராயணன்
தன் பக்கலிலே பிராட்டியிடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்

அது பின்னே ஆர்க்கு அழகு –
உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன

அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை  சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ்வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவு மாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன்
என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில்
உன்னுடைய ரஷணத்தை விச்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது –

இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் –
படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் –
உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் –
வேறு ஓன்று அறியார்கள் இ றே

நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –

அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே பட்டது எல்லாம்
ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –

ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ –
அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –

இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே
உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –

வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –

அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –

என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –

இனி –என்றும் பொய்கைக்கு வாரோம்

இவர்கள் வாரோம் இனி -என்றவாறே —
தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –

இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் –
நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –

அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் –
ஆனால் –

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்

தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே –
ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று
பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்

அந்த பிரணயித்வத்தை விடாய்-
அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-
எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –
திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –

அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –

————————————————————————

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

பதவுரை

இங்கு–இங்கே
புகுந்து இது என்–(நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு–இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய்–எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே–தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே–ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே–எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால்–விதி யில்லாமையாலே
அது மாட்டோம்–ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்’
வித்தகப் பிள்ளாய்–ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல்–அவஸரப் பட வேண்டா’
அரவில்–குதி கொண்டு காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு–குதித்துக் கொண்டு
நடித்தாய்–நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை–(அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய் – கொடுத்தருள்.

விதி இன்மையால் அது மாட்டோம்
விதி இல்லாமையால் சம்ஸ்லேஷத்துக்கு இசைய மாட்டோம் –

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
தங்கள் அபிமதம் பெற்றுப் போக பாரா நின்றார்கள் –
நம் அபிமதம் தான் நினைக்கிறிலர்கள்-
இவர்கள் போக்கு இருந்தபடி என் –

இங்கன் அல்ல செய்வது -என்று பார்த்து -குருந்தின் நின்றும் இழிந்து
சேஷித்த பரியட்டங்களை வாரிக் கொண்டு –
சுழல் காற்றுப் போலே எங்கும் வ்யாபரித்து கடுகப் போய்-குருந்தின் மேலே ஏறி மறைய இருந்தான் –

இவர்களும் கரையிலே போந்து ஏறி ஒன்றும் காணாமையாலே ஸ்தப்தைகளாய்-
இது என் புகுந்தது இங்கு-

மின்னாதே இடி விழுந்து நிற்கக் கண்டோம் –

இனி இங்குப் புகுந்தது தான் என்
நீ ஸ்தப்தனாய் இரா நின்றாய் –
அவ்விஷய ஸ்ரவணம் உனக்கு உண்டாய்த்தோ என்று கேட்கப் பண்ணும் விஷயம்
கண்ணால் கண்டால் பேசாது இருக்குமோ
ஸ்ரவண மாத்ரத்திலே அழிக்கும் விஷயம் சாஷாத் கரித்தால் கலங்காது இருக்க ஒட்டாது இறே –

பாலாழி நீ கிடக்கும் பண்பை நாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி –
குண ஸ்ரவணத்தாலே அழிக்கும் விஷயம் தீம்புக்கு இலக்கானால் பேசாது இருக்கப் போகாது இறே –

காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டலம்பும் தாரலங்கல் நீண் முடியான்
தன் பெயரே கேட்டிருந்து
அங்காரலங்கள் ஆனமையால் ஆய்ந்து -நான்முகன் -78-என்றபடி –
கேட்ட சிவனை ஈடுபடுத்திய விஷயம்
கண்ணனாய் பிறந்த பின்பு அவன் தீம்புக்கு இலக்கானவர்களால் பேசாது இருக்க முடியாது அன்றோ

அந்தோ –
நம் நினைவு அவனுக்கு உடலாவதே –
நாம் இவனுக்கு முன்பே வர வேணும் என்று போந்தோமானோம் –
இவன் நமக்கு முன்னே கோலி வந்து நிற்பதே –

நீங்கள் இழவாளராய் நோவு படுக்கைக்கு இப்போது விசேஷித்து வந்தது என்-
பண்டு தான் நான் உங்களோடு வாரேனோ -என்ன –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –
இது அறிந்து நீ வந்தபடி எங்கனே –
நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்-
இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை —
ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –
அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை –
பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை
நீ வந்த வழி என் –

அது கொடு கார்யம் என் –
வந்து கொடு நின்றோமே –
பலன் கைப்பட்டால் சாதனம் நிரூபிக்கக் கடவதோ -என்றான் –

இவர்கள் தோல்வியையும் தன் ஜெயத்தையும் அநுசந்தித்து மேணானித்தமை தோற்ற
மிகைத்து வார்த்தை சொல்லத் தொடங்கினான் –

பொகடு -இவன் கையிலே அகப்பட்டோம்
இங்கன் அன்று இது வாங்குவது -ஸ்தவ ப்ரியன் –
இவனை ஏத்திக் கொள்வோம் -என்று பார்த்து ஏத்தத் தொடங்கினார்கள் –

மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே-
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈச தேபி ஸூ நயன் கில மௌலி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-என்றபடி
ஆதி ராஜ்ய ஸூசகமாக வைத்த வளையத்தோடு கூட –
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் மேன்மை தோற்ற
பரம பதத்திலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

அவ்விருப்பை இவ்வருகு உள்ளாரும் பெற வேணும் என்னும் வாத்சல்யத்தால்
அகர்ம வச்யனான தான் கர்ம வச்யரோடு
சஜாதீயனாய் வந்து திருவவதரித்து
இடையருக்கு ஏவிக் கொள்ள லாம் படி பவ்யனாய் நின்ற
ஆச்சர்யத்தை சொல்லுகிறது -மாயனே -என்று

எங்கள் அமுதே –
அத்தனை பொதுவான நிலை அன்றிக்கே –
எங்களுக்கே ஸ்வம்மாய்-நிரவதிக போக்யதை உடையனாய் நிற்கிற நிலை –

தேவர்களுக்கு உப்புச் சாறு போல் அன்றிக்கே
எங்களுக்கு கூறான அமிர்தம் ஆயத்து

நீங்கள் தான் நம் மேன்மை அறிந்திகோளே-
உங்களுக்கே ஸ்வம்மானமை தோற்றச் சொன்னி கோளே –
தந்தாமது என்று அறிந்தால் –
தந்தாம் உடைமை மங்காமல் நோக்கி விநியோகம் கொள்ள வேண்டாவோ -என்றான் –

அது என் என்பது என்ன –
உங்கள் கண்களாலே என்னைக் கடாஷித்து –
என் சத்தையை உண்டாக்கி –
நீங்களும் நானுமாக அனுபவிக்க பார்க்க வாகாதோ -என்றான் –

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

ஆகிலும் நானும் என்னுடைய பாக்ய ஹானியாலே பரியட்டம் தர மாட்டு கிறிலேன்-என்னா –
இவற்றையும் கொண்டு அரும் கொம்பிலே போய் ஏறினான் –
இவனுக்கு பாக்ய ஹானியாவது -அவர்களுடன் கூடாமை -இறே

வித்தகப் பிள்ளாய் விரையேல்-
எங்கள் சத்தையும் அழிக்கப் பாராதே கிடாய் –
வித்தகன்
-சமர்த்தன் –
எங்கள் போகத்துக்கு விச்சேதம் பண்ணினாய் ஆகிலும்
எங்கள் சத்தையை அழிக்கப் பாராதே கொள் –

நான் விரைந்து எங்கே என்ன சாஹசம் செய்யக் கண்டிகோள்-என்றான் –

குதி கொண்டு அரவில் நடித்தாய் –
ஏக்தா து வி நா ராமம் -கிருஷ்ணோ பிருந்தாவனம் யயௌ விசசார வ்ருதோ
கோபைர் வன்ய புஷ்பஸ் ரகுஜ்ஜ்வல
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-7-என்கிறபடியே –
தமையனார் ஷணம் பேர நிற்கப் பாம்பின் வாயிலே விழக் கடவ உனக்கு
இவை சால அபூர்வமோ-அது கிடாய் -என்கிறார்கள் –

நம் கையிலே காணில் இறே இவர்கள் வேண்டுவது என்று பார்த்து
பரியட்டங்களை குருந்திலே இட்டு வைத்துக் கையைத் தட்டி
என் கையில் உண்டோ -நான் தர -என்றான்

குருந்திடைக் கூறை பணியாய்-
உன் கையில் இல்லை –
குருந்தின் மேல் கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

எங்கேனும் கிடக்கிலும் இவன் திரு உள்ளம் உண்டாகில் அல்லது சித்தியாது -என்றபடி –

————————————————————————————

எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3-

பதவுரை

வில்லால்–வில்லாலே
இலங்கை–லங்கையை
அழித்தாய்–நாசஞ் செய்தருளினவனே!
எல்லே–என்னே!
ஈது என்ன இளமை–இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார்–எங்களுடைய தாய்மார்கள்
காணில்–கண்டால்
ஒட்டார்–(மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்’
(நீயொவென்றால்)
ஈது–கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று–பொல்லாத காரியமென்று
கருதாய்–நினைக்கிறாயில்லை’
பூ குருந்து–புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி–ஏறி யிரா நின்றாய்’
நீ வேண்டியது எல்லாம்–நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம்–கொடுக்கிறோம்’
பல்லாரும்–(ஊரிலுள்ள) பலரும்
காணோமே–காணாதபடி
போவோம்–போகிறோம்’
பட்டை–(எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்

இவர்கள் நெடும் போது நீரிலே நின்று நோவு படச் செய்தே
இவர்கள் பரியட்டங்களை எல்லாம் வாரிக் கொண்டு குருந்தின் மேல் இட்டு வைத்து இருந்தான்
நாங்கள் நீரிலே நெடும் போது நின்று கிலேசப் பட நீ பேசாது இருக்கிறது என் –
பரியட்டங்களைத் தா -என்ன –
பரியட்டங்களைத் தர நீரில் நின்றும் கரையிலே போந்து ஏறுங்கோள்-என்றான் –
அத்தை மெய் என்று சிலர் கரையிலே போந்து ஏறினார்கள் –
ஏறின அவர்களுடைய அங்க பிரத் யங்கங்களை ஊன்றப் பார்த்து ஸ்மிதம் பண்ணி –
சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ண

எல்லே ஈது என்ன விளமை-
என்னே -இது ஒரு பாலிச பிரவ்ருத்திகள் இருக்கும் படி என் -என்கிறார்கள் –
நான் பாலனாக -நீங்களோ தான் பஞ்ச தச வார்ஷிக வயஸ்கராய் பரிமாறினிகோள் –
அதில் வந்தால் -உங்களோடு என்னோடு வாசி உண்டோ –
இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமான பின்பு பருவத்துக்கு ஈடாக பரிமாற நீங்கள் உடன்பட்டிலி கோள் -என்றான்

எம்மனைமார் காணில் ஒட்டார்-
நாங்கள் உடன்படாமை யுண்டோ —
எங்கள் பந்துக்கள் காணில் ஒட்டார்கள் -என்றத்தாலே காண் நாங்கள் மாட்டாது ஒழிகிறது -என்ன

எனக்கும் ஒரு தாயும் தமப்பனும் உறவுமுறை யாரும் இல்லையோ –
நான் ஏதேனும் காம்பற்று வானத்தில் நின்றும் விழுந்தேனோ
அவர்கள் உண்டாய் இருக்க அன்றோ நானும் இங்கனே இருக்கிறது –
உங்களுக்கு அது இல்லை யாய்த்தே -என்றான்

எங்களைப் போலேயோ நீ -என்றார்கள்

எனக்கு வாசி என் என்ன –

உனக்கு வாசி யுண்டு –

பொல்லாங்கு ஈது என்று கருதாய்-
நீ பழி என்னப் பணைப்புதி-
நாங்கள் பலிக்கு அஞ்சுவுதோம் –
இது காண் உனக்கும் எங்களுக்கும் வாசி –

பூங்குருந்தேறி யிருத்தி-
நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று
குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு
அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான் –

வில்லால் இலங்கை யழித்தாய் –
ஒருத்திக்காக ப்ரஹ்மாதிகளுடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாத படி
வர பலத்தாலே பூண் கட்டின ஊரை
மனிச்சுக்கு ஏகாந்தமான வில்லாலே மூலையடியே வழி போம்படி பண்ணின உனக்கு
இப்போது ஸ்வபாவம் வேறு பட்ட படி என் –

இப்போது என் ஸ்வ பாவம் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் அப்படியே இருக்க வேணும் –
நீங்கள் என் நினைவுக்கு ஈடாக வரில் அன்றோ நான் உங்கள் கார்யம் செய்வது -என்ன

அதிலும் ஒரு குறையும் இல்லை
உன் அபேஷிதம் எல்லாம் செய்யக் கடவோம் என்றார்கள் –
நீ வேண்டியது எல்லாம் தருவோம்-

ஆகில் தரலாகாதோ -என்று மடியை ஏற்றான் –
மடியிலே வந்து ஏறுங்கோள்– என்றுமாம் –

பல்லாரும் காணாமே போவோம்-
இங்கன் அன்று காண் இது செய்வது –
அதில் உருவ நடக்கும் படி செய்ய வேண்டும் காண்
பல்லாரும் காணாமே போவோம் -என்றார்கள் –

பலர் காணிலும் காண்கிறார்கள் -தவிரிலும் தவிருகிறார்கள்-
நான் முந்துற முன்னம் கண்டேனே -ஆகில் போங்கோள் -என்றான்

பட்டைப் பணித்து அருளாயே—-
பிறர் முன்னே நாங்கள் நிற்கும்படி எங்களை பண்ணி அருளாயே –

—————————————————————————–

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-

பதவுரை

இலங்கை அழித்த பிரானே!-’
பலர் குடைந்து ஆடும் சுனையில்–பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள்–கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா–அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற–ஆ தளும்புகிறபடியை
எங்கும்–நாற் புறத்திலும்
பரக்க விழித்து–நன்றாக விழித்து
நோக்கி பாராய்– உற்று நோக்கு’
ஒன்றும் இரக்கம் இலாதாய்–கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம்–நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்’
(ஆன பின்பு)
குருந்திடை கூறை–குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்-
இவர்களும் நான் சொன்னதுக்கு எல்லாம் மறுமாற்றம் சொல்லா நின்றார்கள் –
இங்கன் அன்று செய்வது –
அச்சமுறுத்திக் காரியம் கொள்ள வேணும் என்று பார்த்து –

சிலர் வருகிறார்களாகக் கொண்டு சுற்றிலே பார்த்து உடம்பை ஒடுக்குவது
திரியவும் சிலர் வருகிறார்களாகக் கொண்டு அதுக்கும் கூசினானாக அத்திக்கிலே சில தலைகளை இட்டு மறைப்பது –
தழைப் புரையே எட்டிப் பார்ப்பது -இப்படிகளைக் கொண்டு
சிலர் சிலருக்கு பயாவஹமாய் இருப்பன சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –

அவ்விடமும் தான் பலரும் வரும் இடமாய் –
இவன் செய்கிற செயலுக்கு சம்பாவனை யுள்ள விடமாய் இருந்தது –
சர்வ சாதாரணமான சுனை யாய்த்து —
இவனுடைய பயாவஹமான வ்யாபாரத்தாலும் –
சர்வ சாதாரண பிரதேசம் ஆகையாலும் துணுக் என்று கண்ண நீர் விழ விடப் புக்கது –

அது தான் நாம் இவன் முன்னே செய்தோம் ஆகிறது என் –
மறைக்க வேணும் என்று பார்த்து அமைப்பதாக கணிசித்தார்கள் –
இவர்கள் நியமிக்கப் பார்த்த இடத்திலும் நின்றது இல்லை –

அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
அநந்தரம்-யார் வருகிறார்களோ என்னுமத்தாலும் –
கண்ண நீர் நில்லாமையாலும் கிடந்தது துடிக்க புக்கார்கள் –
நீ பரியட்டம் தர வேண்டா –
அந்ய பரத்தை பாவிக்கிறதை தவிர்ந்து நாங்கள் படுகிற அலமாப்பைப் பாராய்
-என்கிறார்கள் –

இவர்கள் இப்படிச் சொல்லச் செய்தேயும்
நிர்த்தயரைப் போலே பாராதே
இருந்தான்

இரக்கமேல் ஒன்றும் இலாதாய் -இலங்கை அழித்த பிரானே-
இப்போது இரக்கம் இன்றிக்கே இருக்கிற நீ
முன்பு ஒருத்திக்காக இலங்கையை அழியச் செய்து உபகரித்தவன் –
தனக்கே ஒருகால் ஒருபடியும் மற்று ஒரு போது ஒரு படியுமாக வேறு படுமோ ஸ்வ பாவம் –

நமக்கு உள்ளது அதையும் இல்லை என்னா நின்றி கோளாகில்
இனி இல்லையாயே விட அமையாதோ என்னா
அவற்றையும் கொண்டு ஒரு கொம்பிலே தாவினான் –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—
நீ மரம் ஏற வல்லாருக்கு முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் காண்-
அன்றிக்கே
காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –
கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-
நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம்
மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்
ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –

எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய
சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் –

————————————————————————–

ஆந்தராளக் குடியிலே -இடைக்குலத்திலே-முக்தரும் பக்தரும் இல்லாத -குலத்திலே –
பிறந்தாள் ஒருத்தி உண்டு போலே காணும் –
ஈஸ்வர மர்மஞ்ஞையாய் இருப்பாளாய்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆபன்னனாக -தன் மேன்மை பாராதே அது இடர்பட்ட பொய்கையிலே
அரை குலையத் தலை குலைய வந்து உதவி அதின் ஆபத்தை பரிஹரித்து பின்னையும்
ஏற்கவே வந்து பரிஹரிக்கப் பெற்றிலோம் -நோவு பட்ட பின்பு வந்து பரிஹரித்தது இதுவும் ஒன்றாய்த்தோ என்று
திரு உள்ளம் புண் பட்டு இருக்கும் படியை அறிவாள் ஒருத்தி
நீ பண்டு உன்னை ஆஸ்ரயத்தித்த தொன்றை ஒரு நீர்ப் புழு நலிய –
ஒரு ஜலசர சத்வம் என்று பாராதே வந்து விழுந்த படி அறிதியே –
இன்று அவ்வளவு இன்றிக்கே இரண்டு கிடாய் எங்களை நலிகின்ற்றது -என்ன –
கயலும் வாளையும் சேர்ந்து நலிய –

பரியட்டங்களையும் கொண்டு வந்து விழும் என்று பார்த்து அத்தை முன்னிட்டுக் கொண்டு சொல்கிறாள் –

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-

பதவுரை

கரிய–கறுத்த
கோலம்–திருமேனியை யுடைய
பிரானே–கண்ண பிரானே!
கயலொடு–கயல் மீன்களும்
வாளை–வாளை மீன்களும்
விரவி–ஒன்றாய்க் கூடி
காலை–(எமது) கால்களை
கதுவிடுகின்ற–கடியா நின்றன’
(இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு)-
என் ஐமார்கள்–எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து–வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில்-உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு–அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ–நீ
கோலம்–அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு–சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது–(மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை–குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை–(எங்கள்) சேலைகளை
பணியாய்–தந்தருள்

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
கயலோடு வாளையானது கலந்து -காலைக் கதுவா நின்றது கிடாய் –
ஓன்று நலிய அன்று பட்ட பாடு அறிதியே நீ -இப்போது இரண்டு கிடாய் நலிகின்றன –
அதந்த்ரித சமூபதி பரஹித ஹஸ்த மச்வீக்ருத பரணீத மணி பாதுகம் கிமிதி சாகுலாந்தபுரம்-
அவாஹன -பரிஷ்க்ரியம் பதகராஜ மாரோஹத-கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் தவறாயி நாம
-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-57-
ஆஸ்ரிதன் கால் நொந்து கை எடுத்துக் கூப்பிட நம் கையும் காலும் பேணவோ என்று
சேனை முதலியாரையும் கை விட்டு
திருவடி நிலைகளையும் காற்கடைக் கொண்டு நீ பட்ட பாடு அறுதியே-

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று-

ஆழி தொட்டு இ றே
– ரஷித்தது-பெரிய திருமொழி -2-3-9-

இப்போது இரண்டு கிடாய் நலிகிறது
அது பிறராலே வந்த நலிவாகையாலே பரிஹரித்தோம் –
இது நீங்களே விளைத்துக் கொண்டது ஓன்று அன்றோ
அதுக்கு நான் என் என்னா மேன்மேலும் சில விலாச சேஷ்டிதங்களை பண்ணத் தொடங்கினான் –

வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ-
நாங்கள் நெடும் போது நின்று நோவு பட -நீ எங்கள் பரியட்டங்களை தாரா விட்டவாறே
பெண்கள் போய் உறவு முறையார் காலிலே விழுந்தவாறே
அவர்கள் பின்னை சாயுதராய்க் கொண்டு வந்து
உன்னை ஓடிப் பிடித்து கட்டி இட்டு வைப்பார்கள் –
அப்போது பின்னை அழகிய விளையாட்டாய் தலைக் கட்டும் இறே –

என் ஐமார் -தமையன்மார் –
இப்போது நாங்கள் உன் கையில் படுகிற பாடு அன்று கிடாய் நீ அவர்கள் கையில் படுவது –

அத்தனையே -எனக்கு பலித்தது பலிக்கிறது –
இப்போது கை புகுந்தவற்றைக் கொடுக்கிறது என் -என்று
அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக் கட்டுவது –
உத்தரியமாக ஒன்றை இடுவதாக
இப்படி தன் திரு மேனிக்கு பரபாகமாம் படி நாநா வர்ணம் ஆனவற்றைக் கொண்டு அலங்கரித்து –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்த படி –
இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்ட வேண்டி இருந்ததோ -என்றான் –

கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் அவற்றை –கோலச் சிற்றாடைகளை -வேண்டுகிறோம் அல்லோம் –
குருந்திலே கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

——————————————————————

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-

பதவுரை

தடம்–விசாலமாயும்
அவிழ் தாமரை–மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை–தடாகத்திலே
தாள்கள்–தாமரைத் தண்டுகளானவை
எம் காலை–எங்கள் கால்களை
கதுவ–கடிக்க,
விடம் தேள் எறிந்தால் போல–விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும்–மிகவும்
வேதனை பட்டோம்–வருத்தப் படா நின்றோம்’
குடத்தை–குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர வெறித்து
(இப்படி)-
கூத்து ஆட–குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே–எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து–(நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய்-.-படிற்றை எல்லாம் தவிர்ந்து-தீமைகளை எல்லாம் விட்டு நீ செய்கிற

தடம் அவிழ் தாமரை -விசாலமான -மலர்ந்த தாமரை
தாள்கள் -தண்டுகள்
படிற்றை -தீம்புகளை –

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –
துணுக்  என்னுமோ பாதி –
தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்
கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-

பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —
ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்
கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –

செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே
-திருவாய்மொழி -9-7-3-
தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே
-திருவாய்மொழி -8-5-1—
தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –

கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த
மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்-
விஷம் இல்லாத தேளும் உண்டு போலும் காணும் –
கரையில் உள்ள தாமரை தடம் விஷம் இல்லாத தேளாக இருந்து துன்புறுத்துகிறதே –
நாங்கள் மிகவும் கிலேசப் படா நின்றோம் –

நீங்கள் நீரிலே புக்க போது தொடங்கி நானும் மரத்திலே இருக்கிறேன் –
இம்மரத்திலே வர்த்திக்கிற பதார்த்தங்களுக்கு ஓர் எல்லை இல்லை –
நானும் இவற்றாலே படுகிற வேதனைக்கு ஓர் அவதி உண்டோ -என்றான் –
உங்கள் அளவேயோ நான் பட்டது -என்றான்

காலத்தின் நெடுமை அவனுக்கும் ஒத்து இருக்கச் செய்தே
அது தோற்றுகிறது இல்லை காணும் இவர்களுக்கு
இழந்து இருப்பார்க்கு இறே காலம் நெடுகித் தோற்றுவது-
நிரபேஷன் இறே அவன் -பரியட்டம் கைப்படுகையாலே -நிரபேஷதை–
இவர்களை ஒழியச் செல்லாத படியாய் காணும் அவனுடைய நைரபேஷ்யம் இருப்பது –
ஆஸ்ரீத விஷயத்தில் சாபேஷத்வம் நைர பேஷ்ய விரோதி யாகாது இறே
அந்தப்புரத்துக்கு தாழ நிற்கும் காட்டில் அபிஷிக்தனுக்கு குறையாகாது இறே –

வேதனை ஆற்றவும்  பட்டோம் -என்கிறார்கள்

நான் அன்றோ வேதனை ஆற்றவும் பட்டேன் -என்றான்

அது ஆராலே -நாங்கள் பரியட்டங்களை வாங்கிக் கொண்டு போய் குருந்தின் மேல் போய் ஏறினோமோ-
அது உன்னாலே வந்தது அன்றோ -என்றார்கள் –

அது என்னாலே வந்தது ஆனாலும்
இத் திரளைக் கலைக்கப் பார்த்திலோம் -என்றான் –

அத்தனையே -உனக்கு இங்கனே திரட்ட வேண்டி இருந்ததோ –
கூட்ட மாட்டாயோ பெண்கள் அடையத் திரளும் படி காண –

குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே-
மன்றிலே குடக் கூத்தை யாடி நிர் லஜ்ஜனாய் –
அவ் வழியாலே பெண்களை எல்லாம் திரட்டுமவன் அன்றோ நீ
இவர்கள் தங்கள் ஈடுபாடு தோற்ற வார்த்தை சொன்னார்கள் என்னா –
அதுவே அவகாசமாக -இன்னது செய்தான் என்று
பிறருக்கு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –

படிற்றை எல்லாம் தவிர்ந்து –
நீ பண்ணுகிற மிறுக்குகளை எல்லாம் தவிராய் -என்கிறார்கள் –

தவிரிகோள் ஆகில்-கொடு போங்கள் என்று
தன் பரியட்டத்தைக் கொடுக்கப் பார்த்தான் –

எங்கள் பட்டைப் பணித்து அருளாயே–
நாங்கள் இவற்றை உடுத்து கொடு போய் எங்கள் தாய்மார் முன்னே நிற்கப் புக்கால் –
இவை உங்களுக்கு வந்த வழி என் -என்று ஆராயார்களோ –
ஆன பின்பு எங்களுடைய பரியட்டத்தைத் தாராய் -என்கிறார்கள் –

பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கும் வேறு ஒரு பரியட்டம் கொடுக்கைக்கு
புடவைக் கட்டணம் எடுப்பித்துக் கொண்டு போனானோ என்னில்
த்ரௌபதி அரையில் துகிலோபாதி இவனும் ஒரு பேரிட்டு கொடுக்கிறான் –
வேணுமாகில்-
கோவிந்த கோவிந்த -என்கிறாள் வேணுமாகில் –

—————————————————————————————

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே——3-7-

பதவுரை

ஊழி எல்லாம்–கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே–(ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்–ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்’
நீதி அல்லாதன – அநீதியான செயல்களை
ஆல்–ஐயோ!’
(இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே–உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம்–நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்’
அம்மனைமார்–எங்கள் தாய்மார்
காணில்–நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய்–செய்யா நின்றாய்’
(உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்)
ஊர்–எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம்–மாளிகைகளும்
சாலவும்–மிகவும்
சேய்த்து–தூரத்தி லிரா நின்றன:
ஒட்டார்–இசைய மாட்டார்கள்’
எங்கள் பட்டை–எங்களுடைய சேலைகளை
போர விடாய்–தந்தருளாய்,
பூ குருந்து–பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே–ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே.

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்-
கோழி கூவுவதற்கு முன்னே -போது விடிந்து நீ உணர்வதற்கு முன்னே -வந்து
நீரிலே புகுந்து ஒருபடிப்பட நின்றத்தாலே அறிவு கலங்கிப் படுகிற க்லேசத்தைப் பாராய் –

நீங்கள் நீரிலே நின்று அறிவு கெட்டி கோளாகில்-
நான் மரத்திலே நின்று அயர்கிறது நெடும் போது இல்லையோ
நீங்கள் அன்றோ இது எல்லாம் பண்ணினி கோள் -என்னா
பரியட்டங்களையும் கொடாதே -சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ணினான் –

வாராய் -இங்கனே முறை கெட பரிமாறல் ஆகாது காண் -என்கிறார்கள்

இனி அது கொடு கார்யம் என் -என் செய்கை செய்தோம் இறே –
நான் ஸ்வ தந்த்ரன் அன்றோ –நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ
இனி நீங்கள் நம்மால் பட்ட இடரை ஊரிலே போய் முறைப்பட மாட்டி கோளோ-என்றான் –

அது செய்யலாய்த்து இறே –
ஊரகம் சாலவும் சேய்ததால் –
ஊர் தான் தூரிது-அவ்வளவும் வருந்திச் சென்றோமே யாகிலும் அதுக்கு மேலே
ஊரில் அகம் தான் சால தூரிது -காண் -என்கிறார்கள் –

நான் மிறுக்குப் பண்ணா நின்றேனாகில்-
ஊரகம் சாலவும் தூரிதாகில் –
இனி இதுக்கு மேல் போக்கடியாக நீங்கள் நினைத்து இருந்தது என் என்றான் –

ஊழி எல்லாம் உணர்வானே-
பிறரால் வந்த நலிவோடு -தந்தாமால் வந்த நலிவோடு வாசியற
உன்னைக் கொண்டு தீர்க்குமா போலே
உன்னால் வந்த நலிவுக்கும் நீயே போக்கடி சொல் -என்றார்கள் –

உன்னை ஒழிந்த காலோபலஷித சகல பதார்த்தங்களும் அழிந்த அன்று
அவற்றுக்கு போக்கடி தேட வல்ல நீயே போக்கடி தேடும் அத்தனை அன்றோ –
சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -6-2-1- என்னும் படியான அன்று
பஹூஸ்யாம் -என்று போக்கடி பார்க்க வல்ல நீ பார்க்கும் அத்தனை அன்றோ –உணர்வான்
சங்கல்ப ரூப ஜ்ஞானம் உடையவன் நீ அன்றோ

நாம் போக்கடி பார்த்து நல வழி போக்க்கலாய்த்து இறே அந்த ஜகத்துக்கு அப்ரதிஷேதம் உண்டாகையாலே
உங்கள் பக்கல் இது இல்லையே -என்றான்

அப்ரதிஷேதம் மாத்ரமே அன்று –
ஆர்வம் உனக்கே யுடையோம் –
எங்கள் பக்கலிலும் அதுக்கு ஒரு குறை இல்லை காண் –
நீ அது அறிந்திலை -இத்தனை உள்ளது -என்கிறார்கள் –

நான் அறிவேனோ இந்தக் கூட்டு எழுத்தை –
இல்லையாகில் அநிஷ்ட கார்யம் பலியா நிற்க ஆர்வம் உனக்கே உடையோம் -என்கையாவது என் –
ஒரு உக்தி அமையுமோ -அதின் கார்யம் பலிக்க வேண்டாவோ -என்றான்

அது நாங்கள் வேண்டாமோ
அம்மனைமார் காணில் ஒட்டார்-
பிறரை பரிஹரிக்க வேணும் என்று இருந்தோம் இத்தனை காண் -என்றார்கள்-

நானும் நீங்கள் பட்டுகளும் உடுத்து -மன ப்ரீதியோடு போய்
உங்கள் அகங்களில் புக்கிருந்து விளையாட அன்றோ வேண்டி இருப்பது
பட்டுத் தர நெஞ்சு இசைகிறது இல்லை -அத்தை இசைவித்து தர வேணும் -என்றான் –

நீ நெஞ்சு ஒழியத் தந்தாலும் அமையும் எங்களுக்கு -என்றார்கள் –

ஆகில் பிடியுங்கோள் -என்று பரியட்டத்தை எடுத்து செண்டிலே ஏறிட்டு
இவர்களுக்கு எட்டிற்று எட்டாதாக நாற்றி முகத்தை மாறிச்
சில பூக்களிலே கண்ணை வைத்து அந்ய பரரைப் போலே இருந்தான் –

போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி –
எங்களுக்கு எட்டும்படி தாராய் –
பரியட்டங்களை வாரிக் கொண்டு போய் இவர்களுக்கு எட்டாத படி இருந்ததுக்கு மேலே ஓன்று இறே இது –
படு கொலை அடிக்காதே -என்கிறார்கள் –

———————————————————————————————-

மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–3-8-

பதவுரை

தொல்லை இரா – பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர–பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே–பள்ளி கொள்பவனே!
(இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்)
மாமியார் மக்களே அல்லோம்–உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்’
மற்றும் எல்லோரும்–மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு–இவ் விடத்தில்
போந்தார்–வந்திருக்கின்றார்கள்’
இது–நீ செய்கிற இத் தீம்பானது
சால–மிகவும்
சேமம் அன்று–தகுதியானதன்று’
இது–இவ் வார்த்தையை
நாம் நாங்கள்
சிக்கன–திண்ணிதாக
சொன்னோம்–சொல்லுகின்றோம்’
ஆயர்–இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே–இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய்

இவன் ஒரு காலைக்கு ஒரு கால் மிகை செய்யப் புக்கவாறே –
ஊரில் இவை செய்யாதே இங்கே இவை செய்கிறதுக்கு கருத்து –
தனி இடத்தில் செய்ததுக்கு ஆராய்ச்சி இல்லை என்று இறே ‘
இவை அடைய ஊரிலேயும் வார்த்தையும் காண் -என்றார்கள்

ஊரில் வார்த்தை யாகிறது என் -நீங்களே யன்றோ இங்கே வந்திகோள்
நான் தான் தீம்பன் அன்றோ —

நீ தீம்பு செய்வான் என் என்றால்
மைதுனமையால் செய்தேன் என்று எனக்கு ஒரு மறுமாற்றம் உண்டு -என்ன

மாமியார் மக்களே யல்லோம் –
ஒருராக நோற்கப் போந்த இடத்தில் வெறும் மாமியார் மக்களாய் இருப்பார்களோ –

மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்-
அவர்களைப் பெற்ற வர்களும் உண்டாய் இராதோ –
நீ நினைத்தவர்கள் அல்ல காண் இங்குப் போந்தார்-
உனக்கு கூச்சு முறை உடையார் எல்லாரும் போந்தார்கள் காண் –
ஆகையால் இங்குப் பிறந்தவை ஊரிலும் வார்த்தை யாம் காண்-

நீங்கள் தான் நம்மை அறிவுதி கோள் –
நம்மை அறிந்தால் நாமும் நீங்களுமான பரிமாற்றத்துக்கு வேண்டாதாரை கொடு வரக் கடவுதி கோளோ -என்றான் –

தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே-
நன்றாக நித்தரை பண்ணுவாய் -மீமிசைச் சொல் -என்று இருந்தோம் –
நீ பண்டு போலேயே இப்போது என்று இருந்தோம் -இப்போதாக வேறு ஒரு படியாவது அறிந்தோமோ
பழைய ராத்ரிகளில் முற்கூறு எல்லாம் பெண்களோடு தீம்பு செய்து
பிற்கூறு உறங்கிப் போரக் கண்ட படியாலே இப்போதும் அப்படி என்று இருந்தோம் –
நீ எங்களுக்கு முன்னே உணர்ந்து வந்து முற்பாடனாய் வந்து நிற்பது நாங்கள் அறிந்திலோம் காண் –

இனி அது கொடு கார்யம் காண் –
முற்பாடராய் வந்து நின்றோமே -என்று அதுக்கு மேலே சில மிகைகளைச் செய்யப் புக்கான் –

சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்-
வாராய் -நீயும் நாங்களுமான பரிமாற்றம் உருவச் செல்ல வேணும் என்று இங்கன் சொல்லிப் போருவது உண்டு –
அதுக்கு உடல் அல்ல கிடாய் நீ இப்போது செய்கிறவை –
இவை ரஷை பெற்று போருவது ஓன்று அல்ல –
இவ்வளவிலே தலைக் கட்டும் கிடாய் என்ன –

இது ஆர் தான் சொன்னார் என்றான்

நாம் இது சொன்னோம் -என்றார்கள் –

அத்தைக் கேட்டு பயந்தது போலே நடித்து –
ஆகில் இவ்வாச்சார்யா வசனம் அதி லங்கிக்கல் ஆகாது -ஒக்கும் ஒக்கும் –
உங்கள் வார்த்தை அன்றோ -என்றான் –

அப்படி அல்ல காண் –
சிக்கென சொன்னோம் –
பிரதிபத்தி பண்ணாதார்க்கு குற்றத்தாலே வந்ததாம் அத்தனை கிடாய் இனி மேல் வரும் அநர்த்தம்-என்றார்கள் –

ஓம் இந்த குருகுல வசநாதி லங்கநம் பண்ணின நான் புக்க லோகத்திலே புகுகிறேன் என்று
அவற்றில்-திருவரைக்குத் தகுதியாய் இருப்பன சில பரியட்டங்களை திருவரையிலே சாத்தி –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து
கண்டி கோளே இவை நம் சௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருந்த படி -என்ன

கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் தான் அவற்றைத் தரச் சொன்னோமோ
மேன்மை இல்லாத மரத்திலே கிடக்கிற வற்றைத் தா -என்கிறார்கள் –

———————————————————————————–

இவனுக்கு ஆகார த்வ்யமும் உண்டு –
அதாவது ஏத்தினாருக்கும் கார்யம் செய்யும் –
வைதார்க்கும் கார்யம் செய்யும் –
அதில் ஏத்திப் பார்த்த இடத்தில் ஒன்றும் பலித்ததில்லை –
இனி வைதால் கார்யம் செய்யுமாகில் -அத்தை செய்து பார்க்கிறோம் என்று வைகிறார்கள் –

கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்--3-9-

பதவுரை

கஞ்சன்–கம்ஸனானவன்
வலை வைத்த அன்று–உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள்–மிக்க இருளை யுடையத்தான
எல்லில்–இரவில்
பிழைத்து–பிழைத்து,
நின்ற–(அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை–இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய–மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய்–வந்து பிறந்தாய்’
அசோதை–யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச–நீ பயப்படும்படி
உரப்பாள்–உன்னை அதட்ட மாட்டாள்’
ஆணாட விட்டிட்டிருக்கும்–தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்’
வஞ்சகம்–வஞ்சனை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–(அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ–லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய்–சேலைகளைத் தந்தருள்.

கஞ்சன் வலை வைத்த வன்று
அவன் உபய விபூதியையும் அழிக்கக் கோலின அன்று –
சத்தாயோகி -சகல பதார்த்தங்களையும் முடிக்க கோலின அன்று –
விபூதி அழிந்தால் அவன் உளனாக உண்டாக்கிக் கொள்ளலாம்
அவனுக்கு ஒரு நலிவு பிறந்ததால் பின்னை ஒன்றும் இல்லை இறே

ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத்குரோ —
விஷம் தானே தாரகமான பின்பு யாய்த்து ஜகத்துக்கு ஒரு சேஷி உண்டாய்த்து
விஷம் பாதகமாவது அம்ருதம் தாரகமாவது என்னும் மரியாதைகள் கட்டினவன் பக்கல் அது கார்யம் செய்ய மாட்டாதே –
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -திருவாய் -1-5-9-

காரிருள் எல்லில் பிழைத்து –
அவன் தப்பாத படி நலியக் கோலினான் —
அற்றை அளவிலே ரஷகமாகைக்கு ஓர் இருள் உண்டாவதே –
கொடு போகிற இடத்தில் பிறர்க்கு தெரியாத படி கொடு போகலாம் படி திருமேனி யோடு ஒத்த நிறமாகையும் –
காத்துக் கிடக்கிறவர்களுக்கு நித்ரா பாரவச்யத்துக்கு உடலாகையும் இரண்டும் உண்டு இறே

வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய்
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்
-திருவாய் -1-5-9-என்னக் கடவது இறே –

இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இவன் தான் பருவம் நிரம்பாமையாலே தன்னை நோக்கிக் கொள்ள மாட்ட்றிற்று இலன் –
புறம்பு தான் பரிந்து நோக்குகைக்கு ஒருத்தர் இல்லை –
கம்சாதிகள் தப்பாமல் அகப்படுத்த கோலி நின்றார்கள் –
அவ்வளவிலே உதவித் தந்தது இருள் அத்தைச் சரணம் புகும் அத்தனை இறே -என்று பணிப்பாராம் –

அத்தைப் பற்ற இறே இவர்கள் தான் அந்த இருளை வெறுக்கிறது இப்போது
ஸ்ரீ வஸூ தேவரையும் ஸ்ரீ தேவகியாரையும் அவதார காலத்திலேயே விட்டுப் போருகையாலே பண்ணின நலிவே அன்றிக்கே
தேவகியாரை ஒழிந்த சேஷித்த ஸ்திரீ வர்க்கத்தை நலியா நின்றாய் –

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை-
கம்சன் வலையில் அகப்படாதே தப்பின இது –
பெண் பிறந்தாரை ரஷிக்கைக்கு உடல் என்று இருந்தோம் –
இது எங்களை நலிகைக்கு உடலாய் விட்ட அத்தனை ஆகாதே

இனி அவனால் புண்பட்ட நம்முடைய நோவுபாட்டை அறிவித்தால் தானும் பெண் பிறந்தவள் ஆகையாலே அறிந்து
இரங்கக் கூடும் என்று அவளுக்கு அறிவிக்கில்
அங்கனம் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை -பெரிய திருமொழி -10-7-11-என்கிறபடியே –
இடைப் பெண்களை
நாயந்தே -நலியலாமோ -என்று அஹ்ருதயமாக ஒரு வார்த்தை சொல்லி
கண்ணஞ்சி நியமியாதே கை வாங்கி இருக்குமே –
அத்தைக் கேட்டு பொகடு பொகடு இவளில் இன்னமும் அவன் தானே நல்லான் காண் –

அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வந்த இவர்கள் எதிருக்கு ஒன்றைச் சொன்னாளாம் அத்தனை போக்கி அஞ்சும் படி பொடியாள் –

ஆணாட விட்டிட்டு இருக்கும்
இவர்கள் முறைப்படி நம்மை நலியப் பார்த்த -அதின் எல்லையும் கண்டு விட்டோம் -என்று முன்பே
தீம்பிலே கை வளருகிறவன் சஹகரிப்பாரையும் பெற்றவாறே சதசாகமாகப் பணைக்கும் ஆயத்து –

இருக்கும் –
தான் கண்ட படி இவனைத் தீம்பு செய்ய விட்டு –
நம் மகன் இப்படி பருவம் நிரம்பி தீமை செய்யப் பெற்றோம் என்று அத்தாலே –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8- என்கிறபடியே
ஆனந்த நிர்பரையாய் க்ருதக்ருதையாய் இருக்கும்

பிறரை இட்டு நெருக்கியோ என்னை நீங்கள் கார்யம் கொள்ளப் பார்த்தது -என்னாச் சிவிட்கு என்றான் –
நாங்கள் அங்கண் நினைத்திலோம் காண் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்–
நீ தான் தாய் முலைக்கும் பேய் முலைக்கும் வாசி அறியாதான் ஒருத்தன் இறே
பிறர் நோவு கண்டால் –ஹ்ரீரேஷா ஹி–ஆரண்ய -10-9-என்கிறபடியே
முற்பாடனாய் லஜ்ஜிக்கும் போது சக்கரவர்த்தி திருமகனாக வேண்டாவோ –
உனக்கு இவை தெரியுமோ -நீ லஜ்ஜா ஸூ நயன் அன்றோ —
மசிமை -சுணை

கூறை தாராய் –
நீ ஆனாராகிராய் -எங்கள் பரியட்டத்தை முதல் முன்னம் தா-

———————————————————

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

பதவுரை

எங்கள் நம்பி–எமக்கு ஸ்வாமியாய்
கரிய–கார் கலந்த மேனியனான
பிரான்–கண்ண பிரான்
கன்னிய ரோடு–ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை–திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல்–ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த–மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை–பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால் இனிய இசையாலே
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம்–கற்க வல்லவர்கள்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு–பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய–நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு–திருமாலோடு கூடி
இருப்பார்–நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.

இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
புதுமை மாறாதே இருக்கைக்கும் —
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது

எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூரணன் –

கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் –
மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –
திருவாய் -7-9-11-

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அமுதம் -அருளிச் செயலில்-அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்- பத /சப்த த்ரயம் –

September 3, 2015

சிந்தனையை தவ நெறியை திருமாலை–பிராப்யம் பிராபகம் திருமால் என்பதால்
இதுவே சம்ப்ரதாயம் ஆழ்வார்கள்–ரகஸ்ய த்ரயம் போலே சப்த த்ரயம் இவை

———————————————————————————————

ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்–

கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட

அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்–நாராயணனே நமக்கே பறை தருவான்

———————————————————————–

திருப்பல்லாண்டு –

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு –1
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு -3
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு -6
திருவோணத் திரு விழாவில் படுத்த பைன்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு –9

—————————————————————————
பெரியாழ்வார் திருமொழி –

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகித் தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் -1-9-4-
பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா வெண்ண உதவப் புள்ளூர்ந்து அங்குறு துயர் தீர்த்த அதகன் -2-1-9-
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னனை –2-5-1-
அம்மைத் தடம் கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்காழிக்கை எந்தை எடுத்த மலை –3-5-3-
அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஒ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே யதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3-10-6-
திருக் கோட்டியூர் நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4-4-4-
நாயகன் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்–சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய வீராணி தோள் புகழ் விட்டு சித்தன் –4-6-
மூன்று எழுத்ததனை மூன்று எழுத்த தனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு
இருப்பார்க்குக்கு இரக்க நன்குடைய எம் புருடோத்தமன் இருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான் –4-8-10-
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணற்கா மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு
அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவாரே –4-9-2-
நீ என்னைக் காக்க வேண்டும் —மாயவனை மது சூதணனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே–4-10-
கண்ணனே கரிகோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நானுன்னை நாடொரு மேத்தும் நன்மையே யருள் செய் எம்பிரானே –5-1-8-
எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5-2-3-
ஏதங்களாயின வெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும்
என் சென்னித் திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே –5-2-8-
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவிதவிரத் திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திருமால் இரும் சோலை எந்தாய் –5-3-6-
திருமாலிரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடிமேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டுசித்தன் -5-3-10-
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய்
என்று என்று உன் வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாக்கினையே –5-4-7-
————————————————————————————————
திருப்பாவை –

நாராயணனே நமக்கே பறை தருவான் —1-
தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –5-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ -8-
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் –21
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் -22
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் –27
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -29-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் -30-

—————————————————————————

நாச்சியார் திருமொழி

மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-1-
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே -3-2
பழகு நான் மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய வலித்த எம் அழகனார் –4-10-
மண்ணு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -5-1-
வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் –8-7-
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினைப் பெருமான் -9-8-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –10-10-
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே -11-6
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே –11-8-
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார் -11-10-
மன்னு வடமதுரை தொடக்கமாக வ ண் த்வராபகி தன்னளவும் தன்னைத் தமர் உய்துய்ப் பெய்ய வேண்டி -12-10-
கார்த்தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் –14-4-
பாரும் தாள் களிற்றுக்குக் கருள் செய்த பரமன் தன்னை -14-10
———————————————————————————————–
பெருமாள் திருமொழி –

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கு நாளே -1-1-
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார வென்று கொலோ வாழ்த்து நாளே -1-2-
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன அடி இணைக் கீழ் மலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –1-3-
கோவினை நாவுற வழுத்தி என் தன கைகள் கொய்ம்மலர் தூ என்று கொலோ கூப்பு நாளே -1-4-
மணி வண்ணன் எம்மானைக் கண்டு கொண்டு என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே –1-5-
கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும் ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ வுருகு நாளே – 1-6-
மாயோனைக் கண்டு என் கண்கள் நீர் மல்க வென்று கொலோ நிற்கு நாளே -1-7-
மாலோனைக் கண்டு இன்பக்கலவி எய்தி வல்வினையேன் என்று கொலோ வாழு நாளே -1-8-
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில் என்று கொலோ புரளு நாளே -1-9-
அணியரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கு நாளே -1-10-
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே-1-11
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -2-1-
ஆடிப் பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி யாட -நாம் பேரில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே -1-2-
டர் அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடிச் செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -1-3-
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தானாம் -1-10-
அங்கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் -2-9-
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-
எங்குப் போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் -5-4-
உன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -5-8-
வித்துவக் கோட்டம்மா நீ வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றிலேன் என்று அவனைத் தாள் நயந்த கொற்றேவல் தானைக் குலசேகரன் -5-10-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை யடியே இறைஞ்சி னேனே -10-3-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள்இனிது அமர்ந்த வம்மான் தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே-10-6-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றர சு தானே -10-7-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் உறைவானை மறவாத வுள்ளம் தன்னை யுடையோம் மற்றுறு துயரம் அடியோம் அன்றே -10-9-
—-நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்னுவாரே –10-10-

——————————————————————————————–
திருச்சந்த விருத்தம் –

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே –27
ஆதியாதியாதி நீ ஓரண்டமாதி யாதலால் சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே –34
ஆயனாகியாயர் மங்கை வேய தோள் விரும்பினாய் அய நின்னை யாவர் வல்லார் அம்பரத்தொடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -உன் மாயம் முற்றும் மாயமே –41
அற்புதன் அனந்த சயனன் ஆதிபூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதுவும் என்நெஞ்சுள்ளே –65
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை
ஆணமென்று அடைந்து வாழும் ஆதர்காள் எம்மாதிபால் பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றீரே –69-
மாது தங்கு கூறன் ஏற தூர்திஎன்று வேத நூல் ஓதுகின்றதுண்மையல்ல தில்லை மற்றுரைக்கிலே -72-
அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் செறிந்திடும் -74-
அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி வீட்டிலாது வைத்த காதல் இன்பமாகுமே -83-
கண்ணலா லோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன் எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91
கடல்கிடந்த நின்னலாலோர் கண்ணிலேன் எம்மண்ணலே -95
வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாழும் எனது சீர்க் கைய செய்ய போதில் மாது சேறு மார்ப நாதனே
ஐஇலா வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர்ச் சுழிக் கண் நின்று நீங்குமா மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98
மன்னு சீர் பரந்த சிந்தை யொன்றி நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
கருக்கலந்த காளமேக மேனியாய நின் பெயர் உருக்கலந்து ஒழி விலாது உரைக்குமாறு உரை செயே-103-
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் ஏத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே –115
இயக்கறாதபல் பிறப்பில் என்ன மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கெலா மறுத்து அறாத வின்ப வீ டு பெற்றதே -120-
——————————————————————————————-
திருமாலை –

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே –2
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனே பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பினாங்கு மாறே -4-
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே –5-
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே-6
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -7-
அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த வெந்தை கழல் இணை பணிமினீரே-9-
கெருட வாகனும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -10-
ஐயப் படு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே -15-
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -16-
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே -29-
திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை யாளுடைய கோவே -30-
உன்னை அன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே -36-
உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே -38-
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறாய் உன்னை என்னோ களை கணாக் கருதுமாறே -44-
—————————————————————————————-
அமலனாதி பிரான் –

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த விமலன் -1-
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே -9-
கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -10-
—————————————————
கண்ணி நுண் சிறுத் தாம்பு –

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே -1
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே -2
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -3-
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -4
திருக்குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே -5
திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகல்விலன் காண்மினே -6
எண் திசையும் அறிய வியம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே -7
தக்கசீர்ச் சடகோபன் நம்பிக்கு ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9
—————————————————————————-
பெரிய திருமொழி —

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்-நாவினால் நான் உய்ய – -நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின்-
நற்றுணையாகப் பாடினேன் அடியேன்-நலம் தரும் சொல்லை–நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு-நாராயணா வென்னும் நாமம் -1-1-
நாதனே –நம்பனே -நஞ்சனே –நானுடைத்தவத்தால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் -1-6
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிடம் –சிங்க வேள் குன்றமே -1-8-9-
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை யுய்ய வாங்கிப் பிறப்பு
அறுக்கும் பிரானிடம் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-9-9-
கண்ணா ஏழ் உலகுக்கு உயிராய வெம் கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை – திருவேங்கடவா
-என் ஆனாய் –என் அப்பா -அண்ணா -அரியே -நாயேன் -வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -1-9-
திருவேங்கட மா மலை மேய அண்ணா -அலங்கல் துளப முடியாய் -ஆராவமுதே -அண்டா -கோ நாகணையாய்-என்னானை -என்னப்பன் –
தேனே கோனே ஆயன் -நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி சிந்தா மணியே மணி வண்ணன் அம்மான் -இடரை களையாயே-அருள் புரியாயே -1-10-
மாண் குறளான வந்தணற்கு -அறவன் ஆயற்கு-வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு –
வானவர் ஆவியாய் இருப்பாற்கு-அமர ஆயர் நாயகற்கு வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு அன்னமாய் திகழ்ந்த
அமரர் பெருமானுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-
பவளத் தூணை -அமுதத்தை -சீரானை -எம்மானை -தீம் கரும்பினை பொற் குன்றினை காரானை இடர் கடிந்த கற்பகத்தை -கருமுகிலை
நித்திலத்தை -கடும் பரிமேல் கற்கியை-குடமாடு கூத்தன் தன்னை -புள்ளூர்தியை -இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை –
பட நாகத்திணைக் கிடந்தது துயில் அமர்ந்த தலைவர் தம்மை தொண்டனேன் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே -2-5-10
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே -2-6-2-
நினைவார் என் நாயகரே –2-6-3-
அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-1-
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் –தில்லைத் திருச் சித்திர கூடம் சென்று சேர்மின்களே -3-2-7-
நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்–தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே -3-2-8-
நக்கன் ஊன் முகமார் தலை யோட்டூண் ஒலித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் –காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே -3-4-2-
வந்து உணதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் -திருவே -என்னாருயிரே -3-5-1-
ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் -3-5-9-
ஒ மண்ணளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என் தனக்கு ஓர் துனையாளான் ஆகாயே -3-6-5-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய் –3-8-1-
களங்கனி வண்ணா கண்ணனே எந்தன் கார்முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள்
உள்ளத்துள் ஊறிய தேனை –வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-9-
நாங்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய் கலை கண் நீயே –4-6-5-
திரு வெள்ளக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே –4-7-1-
திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே–4-9-5-
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-6
ஆழி வண்ண நின்னடியிணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –5-8-1-
தென் திருப்பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-
ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
உன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே-6-3-2-
உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே –6-3-4-
திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-
செங்கமலக் கண்ணானை நாவாயுளானை நறையூரில் கண்டேனே -6-8-3-
மூ வுலகும் இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே அடை நெஞ்சே –6-9-1-
மெல்லியலை திரு மார்பில் மன்னத்தான் வைத்துகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே –6-9-6-
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திரு நாமம் நாங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயனமே –6-10-9-
அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே –7-1-2-
இனிய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-6-
மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே யன்று வாய் உரையாதே -7-3-7-
செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –7-4-1-
தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே -7-6-1-
சாம வேதியனே நெடுமாலே அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2-
சிறு புலியூர் சல சயனத்து அந்தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள் புரியே –7-9-5-
திருமா மகள் மருவும் சிறு புலியூர் அருமா கடல் அமுதே உனது அடியே சரணாமே –7-9-9-
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-
பின்னை மணாளனாகி முன் கரும் தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே –8-6-6-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3
கடிகைத் தடம் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -8-9-4-
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று எல்லாம் பேசிலும் நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் கண்ணபுரத்து உறை யம்மானே –8-10-3-
திருமால் இரும் சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-3-
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே -11-3-9
சிலைமலி செஞ்சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே –11-4-7-
இணை மறுத்து இற்று வீழ நடை கற்ற தேற்றால் வினை பற்று அறுக்கும் விதியே –11-4-9-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே–11-6-5-
ஆன்விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே –11-8-9-

——————————————————————————–

திருக் குறும் தாண்டகம் –
மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –1-
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே –18
உலகமேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

—————————————————————

திரு நெடும் தாண்டகம் –

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -1
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -4-
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே –24
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-
———————————————————————————–
முதல் திருவந்தாதி
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1-
ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பேனோ –அன்று கரு அரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமே யான் திசை -6
பேய் முலை நஞ்சு ஊணாக யுண்டான் உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி -11
தொழுதேன் கடலோதம் கால் அலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணர் அடி -16
என்றும் படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி -21-
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று எண்ணத் தான் ஆமோ இமை –31
அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ் –48
அரணாய பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு –60
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை –64
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த சீரான் திரு வேங்கடம் –76
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய்
மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

தழல் எடுத்த போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை ஓராழி நெஞ்சே உகந்து -7
கோல் தேடி யோடும் கொழுந்தே போன்றதே மால் தேடி யோடும் மனம் -27-
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால் இனி -34-
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து –38-
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39-
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு –41-
நாரணன் பேரோதி நரகத்து அருகு அணையா காரணமும் வல்லையேல் காண் –66
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம் -87
பொருந்தாதான் மார்பிடந்து பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே –94-
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான் -96-

—————————————————————————

மூன்றாம் திருவந்தாதி –

மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து –3
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான் சென்று -16-
அரவணையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு –80
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து –93
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் கோள்
முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு –99
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –100-

————————————————————————————-

நான்முகன் திருவந்தாதி

நன்றாக நானுன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இல்லை –7-
இல்லை துணை மற்று –ஈரைந்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் –14
எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா யான் உன்னைக் கண்டு கொள்கிற்குமாறு –26-
பொல்லாத் தேவரைத் தேவரல்லாரை திருவில்லாத் தேவரைத் தேறேல் மின் தேவு –53
பொன்பாவை கேள்வா -கிளர் ஒளி என் கேசவா கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் –59-
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –60-
நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64
நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானை சீரணைனை ஏத்தும் திறம் -67-
மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா –74
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை ‘
என்றும் திருவிருந்த மார்பன் சிறீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு –92
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

——————————————————————————-

திரு விருத்தம் –

ஈங்கு இவள் தன நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –62
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –69-
தென் பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –77
மை வரை போல் பொலியும் உருவில் பிரானார் புனை பூந்துழாய் மலர்க்கே மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே –78
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–79-
உலகளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே அடியேன் ஆவி அடைக்கலமே –85
ஆவினை மேய்க்கும் வல்லாயானை அன்று உலகு ஈரடியால் தாவின வெற்றி எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே –89
யாதானும் பற்றி நீங்கி விரதத்தை நல்வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே –95

——————————————————————————-
திருவாசிரியம் –

ஒராலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே –7

———————————————————-

பெரிய திருவந்தாதி –

வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தானோர் இருள் அன்ன மா மேனி எமமிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து –26-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின் –62
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு –65
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வால் வயிற்றான் பாம்பணையான்
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது –86-
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் –87

————————————————————————————

திரு ஏழு கூற்று இருக்கை –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடரவமளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின்னடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –

———————————————————————–

சிறிய திருமடல்

தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்

——————————————————————————-

பெரிய திருமடல் –

தன்னிகர் ஒன்றில்லாத் தாடகையை மா முநிக்காத் தன்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி யுலவா
வுலகறிய ஊர்வன் நான் –பூம் பெண்ணை மடல் –

————————————————————————-

திருவாய்மொழி –

எண் பெருக்கு அந் நலத்து ஒன பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே –1-3-8-
செடியார் ஆக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் இருமை வினை கடிவாரே-1-6-9-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -1-8-3-
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே –1-8-9-
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி யம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9-
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு –2-1-7-
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் உனபாதம் சேர்ந்தேனே -2-3-5-
கன்னலே அமுதே கார்முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-
என்னுள் புகுந்து தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம் கோதவமில் என் கன்னற்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே –2-7-6-
நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கேன் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
தீ வினை மாலை வின்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை இருடீ கேசனே –2-7-9-
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
கிளர் ஒளி இளமை கேடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை தளர்விலராகில் சார்வது சதிரே -2-10-1-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
ஓயும் மூப்புப் பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன்
நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –3-3-9-
தேவதேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனைப் பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ –3-6-2-
குடக் கூத்தனை விழுமிய வமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே –3-6-7-
அச்சுதன் தன்னை தயரதற்கும் மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3-6-8-
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே –3-6-10-
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே –3-7-9-
ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவி யம் புள்ளுடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை யாயனைப் பெற்ற சக்கரத் தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே -3-10-4-
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே –3-10-10-
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே –4-3-6-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோலத் தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே –4-5-2-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –4-5-7-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-
மாயத் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1-
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே –4-6-10-
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே –4-7-10-
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் நெடு மாயன் கவராத நிறைவினால் குறைவிலமே –4-8-10-
அடியேனை பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே –4-9-3-
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –4-9-10-
திருக் குருகூர் அதனுள் நின்ற வாதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –4-10-1-
திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே –4-10-5-
தேவர் கோலத்தோடும் திருச் சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே –5-1-9-
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -5-3-4-
அகப்பட்டேன் முன்னை யமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே –5-5-6-
என் கார்முகில் வண்ணா பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-5-7-3-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே முழு வேழ் உலகுமுண்டாய்
செந்தொழில் அவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய் அடியேனை யகற்றேலே-5-7-7-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே -5-7-10-
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-
செந்தாமரைக் கண்ணா தொழுவனேனை உன்தாள் சேரும் வகையே சூழ் கண்டாய் –5-8-5
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -5-8-8-
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-
த்ண் திருவல்ல வாழ நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே –5-9-3-
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே –5-10-6-
மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே –6-1-10-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -6-2-10-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே –6-3-8-
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –6-4-8-
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும் இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே –6-5-8-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் –6-5-11-
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள் விரைந்தோடி வந்தே -6-8-2-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6-9-9-
தேவாசுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தாலே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புனராயே –6-10-4-
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுதும் உனபாதம் காணா நோலா தாற்றேனே –6-10-7-
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே யருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே –7-1-8-
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே –7-2-3-
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை யாவியே என்னும் நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே –7-2-9-
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழி யானே -7-3-10-
ஓர் ஐவர்க்காய் தேசம் அறிய சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை –7-5-9-
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி –7-5-10-
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன்தமிழ் பாடிய வீசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ –7-9-1-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன் விளை யூரை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-
வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே –8-1-9-
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் –8-2-9-
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே –8-3-5-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே –8-3-9-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –8-5-1-
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே –8-7-8-
மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே –8-9-5-
தென்திசை திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –8-9-10-
குமரன் கோல வைங்கனை வேள் தாதை கோதில் அடியார் -8-10-9-
பொன்னாழிக் கை என்னம்மான் நீக்கமில்லா வடியார் –8-10-10-
வடமதுரை பிறந்தார்க்கு அருள் கொள் ஆளா உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே –9-1-3-
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே –9-1-9-
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-
திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-
திருப் புளிங்குடியாய் வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-
நாராயணன் நங்கள் பிரான் அவனே –9-3-1-
உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9-4-10-
என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே -9-6-10-
நாவாய் உறைகின்ற நாரண நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே –9-8-7-
திருக் கண்ண புரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே –9-10-2-
காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே -10-1-1-
திரு மோகூர் ஆத்தன் தாமரை யடி யன்றி மற்றிலம் அரணே -9-1-5-
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமராவார் –10-2-5-
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –9-2-8-
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -10-3-1-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -10-5-1-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10-5-7-
வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானே விரைகின்றான் விதி வகையே -10-6-3-
திருமால் இரும் சோலை கோனேயாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2-
திருப்பேர் நகரான் திருமால் இரும் சோலை பொருப்பே யுறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ –10-10-7-

——————————————————————

இராமானுச நூற்றந்தாதி –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகல் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –1
இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே -13
இராமானுசன் எம் உரு துணையே –18
இராமானுசன் எனக்கு ஆரமுதே –19-
இராமானுசன் என் தன் மா நிதியே –20
இராமானுசன் என்னைக் காத்தனனே –21
இராமானுசன் என் தன் சேம வைப்பே –22
இராமானுசன் என்னை யாண்டனனே –30-
அண்ணல் இராமானுசன் தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41
இராமானுசன் எம் குலக் கொழுந்தே -60
இராமானுசன் என்னும் சீர் முகிலே –82
இராமானுசன் மிக்க புண்ணியனே –91
இராமானுசன் என் செழும் கொண்டாலே –104-
இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே -105
இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்து உள்ளே தனக்கு இன்புறவே -105-
அங்கயல் பாய் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப்பு மன்னவே –108-

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -இரண்டாம் திருமொழி —

September 2, 2015

அவதாரிகை –

இப்படி இவர்கள் பண்ணின ஆஸ்ரயணத்தை அனுசந்தித்து –
தங்களைப் பெறுகைக்கு நாம் வருந்த வேண்டும்படி இருக்குமவர்களை
நம்மைப் பெறுகைக்கு தாங்கள் வருந்துகை யாவது என் –

அது தன்னிலும் நம் காலில் விழுகை அன்றிக்கே
நம்மைப் பெறுகைக்கு ஒரு தேவதாந்தரத்தின் காலிலே துவளும் படி நாம் பிற்பாடர் ஆனோமே –
அழகியதாகக் கார்யம் பார்த்தோமே -என்று தன் பிற்பாட்டை அநு சந்தித்து –
திரு உள்ளம் நொந்து –

திருவாய்ப்பாடியிலே பொதுவானார் வருஷார்த்தமாக இந்தரனுக்கு கொடு போய் இடுகிற சோற்றைக் கண்டு
நாம் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் ஒன்றை தேவதாந்தரத்துக்கு ஆக்குகை யாவது என் -என்று
அதுவும் பொறுக்க மாட்டாதே
மலையின் முன்னே கொடு போய் குவியுங்கோள் -என்று சொல்லி
தான் மலையாய் இருந்து ஜீவிக்குமவன் –

தனக்கு அசாதாரணைகளான இவர்கள் -தன்னைப் பெறுகைக்கு காம சமாஸ்ரயணம்
பண்ணும் போது பொறுக்க மாட்டான் இறே –

ஒரு சாதன அனுஷ்டானத்தாலே யாதல் -அன்றிக்கே –
இதர சமாஸ்ரயண முகத்தாலே யாதல் –
தன்னைப் பெற வருந்தும் அதுவும் பொறுக்க மாட்டாதவன் –
நேர் கொடு நேர் காமன் காலிலே விழுந்தால் பொறுக்க மாட்டான் இறே –

அத்தாலே திரு உள்ளம் தளும்பி ஆனைக்கு உதவினால் போலே கடுக வந்து முகம் காட்ட
அவர்களும் இருந்து -அந்ய பரத்தை பாவித்து சிற்றில் இழைக்க-
அது தான் ஆகிறது -காம சமாஸ்ரயணத்தில் ஒரு வகை இறே –

அத்தை அழிப்பதாக உத்யோகிக்க –
இவர்களும் பல வகையாலும் -வேண்டா -என்ன –
நடுவே இவனும் வேணும் -என்ன

இப்படிகளாலே நடுவே ஒரு மஹா பாரதம் பிரவ்ருத்தமாய் –

அநந்தரம் –
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்-

எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -2-9–
—விஸ்லேஷ அந்தமான படியைச
கோழி அழைப்பதன் முன்னம்
 -மேலில் திருவாய் மொழி -சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-

பதவுரை

நாமம் ஆயிரம்–ஸஹஸ்ர நாமத்தினால்
ஏத்த நின்ற–(நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா–நாராயணனே!
நரனே–(சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே!
உன்னை–(ஏற்கனவே தீம்பனான) உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால்–பர்த்தாவாகவும் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே–நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’
காமன் போதரு காலம் என்று–மன்மதன் வருங்கால மென்று
பங்குனி நாள்–பங்குனி மாதத்தில்-
கடை–(அவன் வரும்) வழியை
பாரித்தோம்–கோடித்தோம்’
தீமை செய்யும்–தீம்புகளைச் செய்கின்ற
சிரிதிரா–ச்ரிய:பதியான கண்ண பிரானே!
எங்கள் சிற்றில்–நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து–(நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல்–நீ அழிக்க வேண்டா.

கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடிநீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து
இச் சேதனருககாக தான் தபஸ்ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்

அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண
உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம்

நரனே –
ஏதத் இச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி
ஜ்ஞாது-
மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –
அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி
பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –

அங்கு நின்றும் போந்து  –
அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே
இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்கு தோற்று நெஞ்சு உளுக்கி

ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து
திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று

அவை போலே அன்றிக்கே —
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து
தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –

முன்பே தீம்பனாய் இருக்கிற நீ –
அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு

நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ —
நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –

எமக்கு
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே
வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –

நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-
நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்

அதுவோ –
அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-

காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–
காமன் வரும் காலம் என்று
அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்
ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் -ஆகிலும்

என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –

எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –
பிராட்டி பரிகரமான எங்கள்
பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –

அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று
அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –
அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-
என்கிறார்கள்

————————————————————————————-

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–2-2-

பதவுரை

இன்று முற்றும்–இன்றைய தினம் முழுவதும்
முதுகு நோவ–முதுகு நோம்படி
இருந்து–உட்கார்ந்து கொண்டு
இழைத்த–ஸ்ருஷ்டித்த
இச் சிற்றிலை–இந்தச் சிற்றிலை
நன்றும்–நன்றாக
கண் உற நோக்கி–(நீ) கண் பொருந்தும்படி பார்த்து,
நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய்–நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’
அன்று–மஹா ப்ரளயம் வந்த காலத்தில்
பாலகன் ஆகி–சிசு வடிவு கொண்டு
ஆல் இலை மேல்–ஆலந்தளிரின் மேல்
துயின்ற–கண் வளர்ந்தருளினவனும்
எம் ஆதியாய்–எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே!
என்றும்–எக் காலத்திலும்
உன் தனக்கு–உனக்கு
எங்கள் மேல்–எம்மிடத்தில்
இரக்கம் எழாதது–தயவு பிறவாமலிருப்பது
எம் பாவமே–நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம்.

இருந்து
ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து

இன்று முற்றும் –
ஒரு பகலாய் இருக்கச் செய்தேயும் அது தான் ஆயிரம் ஊழியாய் நெடுகித் தோற்றின படி
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் மொழி -10-3-1-

முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை-
உன்னைப் போலே —ததைஷத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜாதா –சாந்தோக்யம் -6-2-3-என்று
ஒரு வருத்தம் அற சிருஷ்டித்து –
இது தனக்கு நாம் நேர்ந்ததோ பெருத்துக் கிடக்கிறது -என்று தரித்து இருக்கலாவது

ஓன்று அல்ல காண் –
மெய்யே நொந்து சிருஷ்டித்தது காண் –
மெய்யாகவே -உண்மையாகவே –சரீரம் கொண்டு என்றுமாம்

முதுகு நோவ –
சிற்றிலை அழிக்கை தவிர்ந்து முதுகைப் பிடிக்கும் என்று பார்த்து
முதுகு நோவ
-என்கிறார்கள் ஆயத்து –

கடக்க நின்று காலாலே சிற்றிலை அழியாதே –
கிட்டி நின்று கையாலே தீண்டுமாகில் ஆகாதோ
-என்று இருக்கிறார்கள் –

முதல் தன்னிலே அபலைகள் –
அதுக்கு மேலே விரஹ துர்பலைகள் –
கிருஷ்ணன் திருக் கண்களால் நெஞ்சூடுருவ ஏவுண்டு நிலையம் தளர்ந்து-13-3- இருப்பார்கள் –
இனி வெண்ணெய் விழுங்கி வளர்ந்தவர்கள் ஆகையாலே பொறுக்க மாட்டார்கள் இறே

இருந்து –
காற்றைப் பிடித்து ஓர் இடத்திலே இருத்தினால் போலே இருப்பது ஓன்று இறே
இவர்களை ஓர் இடத்திலே இருத்துகை யாவது –

இழைத்த-
நெஞ்சு ஒழியப் பண்ணுகிற வியாபாரம் சால அரிது இறே –
நெஞ்சு கண்ணன் இடத்தில் இருக்கும் போது –இழைத்தது -செயற்கரிய செயல் அன்றோ-

இச் சிற்றிலை
இது தான் இருந்தபடி கண்டாயே –
நீ அழிப்பது இத்தைப் பார்த்து அன்றோ –
இது இருந்தபடியால் சேதனராய் இருப்பார் இத்தை அழியார்கள் இறே
முதலிலே பரம சேதனனான நீ தானே அழியாயே –

நான் இத்தை அழித்தால் உங்களுக்கு வருவது என் என்ன –

நாங்கள் இதில் பட்ட வருத்தம் கண்டாயே –
நாங்கள் இத்தை -ஒருகால் கண்ணால் பார்த்துக் கொள்ள கிடையாது -என்கிறார்கள் –

அது என் -நீங்கள் இழைக்கிற போதே பார்த்து அன்றோ இழைத்தது என்ன –

அவயவங்கள் தோறும் பார்த்தோம் இத்தனை அல்லது
அவயவியாகப் பார்க்கப் பெற்றிலோமே

நாங்கள் அழகிதாக கண்கள் தைக்கப் பார்த்திடுக –
நான் கண்டு த்ருப்தன் ஆனேனே என்ன

நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
நாங்களும் ஒரு கால் கண்டு எங்கள் அபிநிவேசம் கெடும் கிடாய் –

எனக்கு இத்தனை கருத்து உண்டோ –
பரம பிரயோஜனம் வேணும் என்று இருக்கைக்கு ஈடான அறிவு எனக்கு உண்டோ –
நான் பாலன் அல்லேனோ -என்றான்

அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய் என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–
உனக்கு பருவம் நிரம்புவதற்கு முன்னே பிடித்து பணி யாய்த்து இறே எங்களை முடிக்கை –
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற-

ஆலம் தளிருக்கு உள்ளே அடங்குவதொரு வடிவைக் கொண்டு அதிலே சகல லோகங்களையும் வைத்து
பவனான ஆலம் தளிரிலே கண் வளர்ந்து அருளி
யசோதை பிராட்டி தொட்டிலிலே பண்ணும் வியாபாரம் அடைய அதிலே பண்ணி
அங்கன் உணர்ந்து நோக்குகைக்கு ஒரு தாயும் இன்றிக்கே
துள்ளி விழில் ஒரு வெள்ளம் ஆபத்தாய் இருக்கிறதோர் இடத்தில்
சப்ரமாதமான செயலைச் செய்து அன்று எங்களை முடித்தாய் –

ஆதியாய் – 
எங்கள் சத்தா ஹேதுவை அன்றோ நீ அழிக்கப் புக்கது

என்றும்
உம்மைத்
தொகை கொண்டு இந்த வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்

சிறுவனாய் இருக்கும் இப் பொழுது
சிற்றிலை அழித்து முடிக்கப் பார்ப்பது வியப்பு அன்று –

என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே-
அன்று அங்கனே முடிக்கப் பார்த்தாய்
இன்று இங்கனே எங்கள் சிற்றிலை அழியா நின்றாய் –

ஆக –
நாங்கள் விஷயமானால் என்றும் ஒக்க இறே உனக்கு எங்கள் பக்கல் கிருபை பிறவாமைக்கு –
ஜகத் ரஷணத்திலே தீஷித்து இருக்கிற உனக்கு கிருபை இல்லை என்ன ஒண்ணாது இறே –
அதுக்கடி -எங்கள் பாபம் இ றே
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்-
சுந்தர -38-48-என்னும் பிராட்டி வசனம் போலேயும்
மத பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத் –அயோத்யா – என்னும் ஸ்ரீ பரத ஆழ்வான்   வசனம் போலேயும் –
இவர்களும் சொல்கிறார்கள் –

——————————————————————–

குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-–2-3-

பதவுரை

குண்டு–மிக்க ஆழத்தை யுடைத்தான
நீர்–கடலிலே
உறை–சாய்ந்தருள்பவனும்
கோள் அரி!–மிடுக்கை யுடைய சிங்கம் போன்றவனும்
மதம் யானை கோள் விடுத்தாய்–மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த)
துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே!
உன்னை–(அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை
கண்டு–பார்த்து
மால் உறுவோங்களை–ஆசைப் படுகின்ற எங்களை
கடைக் கண்களால் இட்டு–கடைக் கண்களால் பார்த்து
வாதியேல்–ஹிம்ஸிக்க வேண்டா’
யாம்–நாங்கள்
வண்டல்–வண்டலிலுள்ள
நுண் மணல்–சிறிய மணல்களை
வளை கைகளால்–வளையல்கள் அணிந்த கைகளினால்
தெள்ளி–புடைத்து
சிரமப்பட்டோம்–மிகவும் கஷ்டப் பட்டோம்’
தெண் திரை–தெளிந்த அலைகளை யுடைய
கடல்–திருப்பாற்கடலை
பள்ளியாய்–படுக்கையாக வுடையவனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்

உறை-கண் வளர்ந்து அருள்பவனாய்-

குண்டு நீர் உறை கோளரி
ஆழத்துக்கு எல்லை இல்லாத ஏகார்ணவத்தில் –
சிருஷ்டி உன்முகனாய்க் கொண்டு சாய்ந்து அருளி
ஸ்ருஷ்ய பதார்த்தங்களுக்கு ஒரு நலிவு வாராதபடி அநபிபவ நீயானாய் இருக்கிறவனே –

மத யானை கோள் விடுத்தாய் –
சிருஷ்டித்து விட்டால் வரும் பிரதிபந்தங்களைப் போக்கும் படி சொல்கிறது –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு முதலையால் வந்த நலிவைப் போக்கினவனே-

உன்னைக்- கண்டு மாலுறு வோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்-
என்றும் ஒக்க துக்க நிவர்த்தகனாய் போரும் நீ –
உன்னைக் கண்டு பிச்சேறி இருக்கும் எங்களை –
உன்னைக் காண வேண்டி இராதாருடைய துக்கத்தைப் போக்கினாய் –
ஸூஷ்ம நிலையில் இருந்து ஸ்தூல நிலைக்கு ஆக்கி அருளினாய்

உன்னைக் கண்ணாலே கண்டு பிச்சேறி இருக்கிற எங்களுக்கு கிலேசத்தை விளையா நின்றாய்
தங்களுக்கு அவன் பக்கல் உண்டான ப்ரேமம் தோற்ற தாங்களே சொன்னவாறே அவனும் தங்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் தோற்றும் படி கடைக் கண்ணால் பார்த்தான்
நீ உன்னுடைய அபாங்க வீஷணத்தாலே எங்களை நலியாதே —
முழுக்கப் பார்க்க வல்லையே
-என்றார்கள்

வந்த அநர்த்தம் என் உங்களுக்கு -என்ன –
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்-
நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் –
வண்டல் உள்ள இடம் தேடி —
அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி –
துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –

இவர்கள் இப்படி சொல்லச் செய்தேயும் -இத்தை அழிக்க ஒருப்பட்டான் –
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–
திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்தது உன்னுடைய சிற்றில் அழியாமைக்கே –
எங்கள் சிற்றிலை அழிக்கிறது என்

உன் சிற்றில் போலே நெருப்பும் காற்றுமாகக் கொண்டு இட்ட சிற்றில் அன்று காண்-
வாயோர் அக்னி –அக்னேராப
-தைத்ரியம் -1-2-
இது உபாதேயம் காண் –

எங்கள் சிற்றிலை அழியாதே
இன்னம் அங்கே போய் உன் சிற்றிலை நோக்கு கிடாய்
அந்த கடல் கரை அழியாத படி நோக்கிடுதல் –
அத்தைக் கரை கட்டுதல் –சேது கட்டுகை -போலே -செய்யப் பாராய் -என்கிறார்கள் –

—————————————————————–

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-

பதவுரை

பெய்யும்–வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா–காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன்–உன்னுடைய
பேச்சும் செய்கையும்–(தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை–எங்களை
மையல் ஏற்றி –பிச்சேறப் பண்ணி
மயக்க–அறிவு கெடுக்கைக்கு
உன் முகம்–உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ–சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு–‘அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள்–நாங்கள்
உன்னை–உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம்–நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை;’
செய்ய தாமரை கண்ணினாய்–புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.

பெய்யு மா முகில் போல் வண்ணா
ஒரு வர்ஷூக வலாஹகம் மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிக்குமா போலே யாய்த்து
பெண்கள் முன்னே ஸ்ரமஹரமான வடிவோடு சஞ்சரிக்கிற போது இருக்கிறது
இவர்கள் தன் வடிவிலே தோற்று ஈடுபட்டமை தோற்ற வார்த்தை சொன்னவாறே

அதுவே அவகாசமாக
அடியேன் குடியேன் என்றால் போலே சில தாழ்வுகள் சொல்வது

விரல் கவ்வுவதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான்-

அதிலே துவக்குண்டு அறிவு கெட்டு
உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை- மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ-
உன் தாழ்ந்த பேச்சுக்களும் வியாபாரங்களும் எங்களைப் பிச்சேற்றி அறிவு கெடுக்க
உன் முகம் அம்மான் பொடியோ -என்கிறார்கள்

அது எதாகில் என் -இனிச் செய்யலாவது உண்டோ என்றான் –

என் இனி செயல் அற்றுப் போக வேணுமோ –
நீ நெடுநாள் கூடி வ்யாபரித்து பண்ணினத்தை அடைய நாங்கள் ஒரு உக்தியாலே அழித்து
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாய்த்து இறே அது செய்கிறிலோம்-
அது செய்தால் என் என்னில் –

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
பாலனான இவன் தங்களை ஒழியச் செல்லாமை உடையனாய் தங்கள் திரளிலே வந்து புகுரப் புக்கால்
இவன் புகுந்திடுவானுக்கு -என்று இருந்தால் இவர்களுக்கு என்ன சேதமுண்டு
இவன் புகுர வேண்டா என்று இங்கனே விலக்குவதே-
இவர்கள் சாலப் புல்லியராய் இருந்தார்கள் -பாலராய் இருந்தார்கள் –
என்று நீ உள்ளே புகுந்து பண்ணும் மர்மம் அறியாதார் சொல்லா நிற்பர்கள்

நோவ உரைக்கிலோம்-
எங்களுக்கு ஒரு உக்தி மாதரம் –
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாம்
அது செய்கிறிலோம்
உன்னை நோவ உரைத்தால் எங்களை –பிள்ளைகள் நொய்யர் புல்லியர் என்பர் –
அதுக்காக நோவச் சொல்ல மாட்டோம் -என்று வாக்யார்த்தம்

பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் –
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –
அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்

—————————————————————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

பதவுரை

கள்ளம்–கபடச் செய்கைகளை யுடைய
மாதவா–கண்ண பிரானே!
கேசவா–கேசவனே!
நாங்கள்–
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய்–தெருவிலே
விசித்திரப்பட==(அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த–தெளிந்து கட்டின
சிற்றில்–சிற்றிலாகிற
கோலம்–கோலத்தை
அழித்தி ஆகிலும்–நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம்–(எங்களுடைய) நெஞ்சானது
ஓடி–உடைந்து
உருகல் அல்லால்–உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல்–உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம்–துளியும் கோபமுடையோமல்லோம்’
உன்முகத்தன–உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே–கண்களன்றோ!

உரோடம் ஓன்று இலோம் -சிறிதும் கோபம் -ரோஷம்-உடையோம் அல்லோம்-

வெள்ளை நுண் மணல் கொண்டு –
நிலவைப் பரப்பினால் போலே வெளுத்து
அது தன்னிலும் பருக்கைப் படில் பொகட்டுப்போம் துச் சீல தேவதையாகையாலே –
அச்சமான மணலைக் கொண்டு –
அது –தன்னை தெள்ளி –

சிற்றில் விசித்திரப்பட –
விசித்திர சிருஷ்டி பண்ண வல்லேன் நான் என்று இராதே கொள் –
நாங்களும் வல்லோம் காண்-

வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் -அழித்தி யாகிலும்
தெருவிலே நாங்கள் இழைத்த அழகிய சிற்றிலை அழித்தாய் ஆகில் –
இது இருந்தபடி கண்டாயே –
இத்தைக் கண்டால் அழிப்பார் இல்லை இறே-

நீ தான் அழியாய் -என்கிறார்கள் –

நான் அழித்தால் தான் நீங்கள் செய்வது என் என்றான் –

உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
நீ அழித்தாய் ஆகிலும் -ஒருவன் சிற்றிலை அழித்தபடி என் -என்று
அதற்கு ஹிருதயம் அழிந்து உடை குலைப்படுமது போக்கி
ரோஷம் என்று பேரிடலாவது ஒன்றும் இல்லை
நெஞ்சு வேவா நிற்கச் சொல்லும் வார்த்தை இறே இது

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

—————————————————————————-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்—-2-6-

பதவுரை

கடலை அடைத்து–ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும்–ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று–களைந்தொழித்து
இலங்கையை–லங்கையை
பூசல் ஆக்கிய–அமர்க்களப் படுத்தின
சேவகா–வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம்–முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை–முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும்–நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு–சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு–நீ செய்யுஞ் செய்திகள் சில உள’
அது திண்ணன நாம் கற்றிலோம்–அவற்றை நாங்கள் அழகிதாக அப்யஸித்தோமல்லோம்;’
எம்மை வாதியேல்–எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா.

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
இன்னது செய்தான் -என்று பிறருக்கு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான்
அத்தைக் கண்டு சில செய்தோம் இத்தனையோ வேண்டுவது –
அதுக்கு எதிர் தலையில் பருவம் அறிந்து கொள்ள வேண்டாவோ
உன் நினைவு அறிகைக்கு ஈடான பருவம் அல்ல
உள்ள பருவத்துக்கு தக்க அறிவும் அல்ல
ஆனாலும் போக யோக்யதை யுண்டாகப் பெறிலுமாம் இறே

சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்
அதுவும் இல்லை இறே –
ப்ராமாதிகமாகவும் ஒரு செயலைச் செய்து விடுகை யன்றிக்கே -என்றும் ஒக்க –
சிற்றில்
என்ற ஒரு வியாஜத்தை இட்டுக் கொண்டு நீ செய்கிறதுக்கு ஒரு கருத்து உண்டு

ஒரு ஸ்வாபதேசம் –சம்ச்லேஷம் -உண்டு –அது வாகாதே நாங்கள் அழகிதாக அப்யசித்திலோம்-
அறிந்த வற்றே இவர்கள் அறியாது இருந்த படி
நீ நினைக்கிறவை நாங்கள் அறிக்கைக்கு குருகுல வாஸம் பண்ணிற்று இலோம் –

நீங்கள் கற்றிலி கோள் ஆகிலும் நான் கற்றேன் இறே என்று மேலிட்டு நலியத் தொடங்கினான் –
அணைப்பது போன்ற சேஷ்டிதங்களை செய்யத் தொடங்கினான்
கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்-செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா
இதுக்கு முன்பு ஒருவர் தலை அழித்து அறியாக் கடலை அடைத்து
இதுக்கு முன்பு ஒருவர் மேலிட்டு அறியாத ராஷச ஜாதியாரை பக்க வேரோடு கிழங்கு எடுத்து
சிலர் எடுத்து விட்டு வந்து பொரக் கணிசியாத ஊரை பூசலாம்படி பண்ணி
அத்தால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை உடையையாய் இருக்கிறவனே

எம்மை வாதியேல்-
எங்கள் பக்கல் பூசலை விளையாதே கொள்
பிரதிகூலர் திரண்ட இடத்தே செய்யுமவற்றை
அனுகூலர்
திரண்ட இடத்தும் செய்யாதே கொள்
அது ஒருத்திக்காக செய்த செயல் அன்றோ —
அது இப்போது அவள் தன்னோடு ஆய்த்தோ –

——————————————————————————-

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-

பதவுரை

பேதம்–(உன் பேச்சின்) வாசியை
நன்கு அறிவார்களோடு–நன்றாக அறிய வல்லவரோடு
இவை–இப் பேச்சுக்களை
பேசினால்–பேசினால்
பெரிது இன் சுவை–மிகவும் போக்யமாயிருக்கும்’
யாது ஒன்றும் அறியாத–எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத
பிள்ளைகளோமை–சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன்–நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம்–திரைக் கிளப்பத்தை யுடைய
மா கடல்–பெரிய கடலை யொத்த
வண்ண–திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே!
சேது பந்தம் திருந்தினாய்–திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்-

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் –
சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய பலத்தைப் பலிப்பதாக
சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது
எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே
அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

இவர்கள் இப்படி தங்கள் ஈடுபாடு தோற்ற-நலிவு பட்டு தோற்ற –
வார்த்தை சொன்னவாறே வடிவு இட்டு மாறினால் போலே இரட்டித்தது
ஒதமா கடல் வண்ணா —
நம் வடிவிலே துவக்குண்டார்கள் -நாம் செய்தது விலக்க மாட்டார்கள் என்னாச் சிற்றிலை அழிக்கப் புக்கான் –

உன் மணவாட்டிமாரோடு சூழறும்-
உனக்கு நல்லாரோடு சூழறும் கிடாய் இத்தை அழிப்பாய் ஆகில் –
உனக்கு இது அழிக்க வேணுமோ –
புறம்பே எத்தனை இடம் கிடக்கிறது -இவர்களும் அவனுக்கு மர்மம் சொல்லுகிறார்கள் ஆயத்து
ஏக தார வ்ரதனாய் இருக்கிறவனை -உனக்கு எத்தனை பேர் கிடக்கிறது எங்களை ஒழிய -என்கை சால மர்மம் இறே
இப்படி இவர்கள் ஆணை இடச் செய்தேயும் அழிக்கப் புக்கான்

சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே—
மிடுக்குக்கு ஈடான பிறப்பை யுடையையுமாய் -பருவம் நிரம்பின பின்பு –
கான வெண்கும் குரங்கும் பரிகரமாகக் -பெரிய திரு மொழி -6-10-6-கொண்டு கடலிலே
இத்தனை மணல் ஒழுக்குப் பட்ட பாடு எல்லாம் அறிதியே
அவ்வோபாதி போராதோ அபலைகளான நாங்கள் இதில் பட்ட வருத்தம்
அவசியம் உனக்கு அழிக்க வேணுமாகில் உன்னுடைய சிற்றிலை போய் அழி என்கிறார்கள்-

—————————————————–

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-

பதவுரை

சுடர் சுக்கரம்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
கையில் ஏந்தினாய்–திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே! -’
வட்டம் வாய்–வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு–சிறிய பானையோடு
சிறு சுளகும்–சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு–மணலையும் கொண்டு வந்து
இட்டமா–இஷ்டப்படி
விளையாடுவோங்களை–விளையாடுகிற எங்களுடைய
சிற்றில்–சிற்றிலை
ஈடழித்து–மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்? -’
தொட்டு–கையால் தொட்டும்
உதைத்து–காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய்–ஹிம்ஸியாதொழி கிடாய்’
கைத்தால்–நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும்–கருப்புக் கட்டியும்
இன்னாமை–ருசியாது என்பதை
அறிதியே–அறிவா யன்றோ?

தூதை -பானை

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச்-
இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே
இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி
விளையாடுகிற எங்களை

சிற்றில் ஈடழித்து என் பயன்-
ஓர் அவயவி ஆக்கிக் காண  ஒண்ணாத படி –
மறுமுட்டுப் பெறாதபடி அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
இது தானே யன்றோ பிரயோஜனம் என்று வாராத் தொட்டான் –

தொட்டுதைத்து நலியேல் கண்டாய் –
வாராய் -எத்தனை பேரைத் தொட்டு வந்தாய் என்று தெரியாது
நீங்கள் என்னைத் தீண்டுவதே என்னா-சிவிட்கு என்றார்கள் –
ஆகில் சவியுங்கோள் என்னாக் காலாலே உதைத்தான்
அந்த ஸ்பர்சத்தாலே துவளா –நலியேல் -கண்டாய் -என்கிறார்கள் –

என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ –
நான் ஈஸ்வரன் அல்லேனோ-என்னா –

சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-
வைச்வரூப்யம் காட்டினால் போலே திவ்ய ஆயுதங்களைத் தரித்துக் காட்டி
கூராராழி வெண் சங்கு ஏந்தி வாராய் –திருவாய் மொழி -6-9-1–என்று
எல்லாரும் ஆசைப் பட்டு இருக்கிற இது உங்களுக்குப் பொல்லாதோ -என்றான் –

அழகிது -ஆனாலும்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே-
கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே –கடல் வண்ணனே –

கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –
கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை
ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –

——————————————————–

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-

பதவுரை

கோவிந்தா கண்ணபிரானே!
முற்ற மண் இடம் தாவி–(ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு–பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய்–(மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே!
முற்றத்தூடு–(நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து–நுழைந்து
நின் முகம் காட்டி–உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து
புன் முறுவல் செய்து–புன் சிரிப்புச் சிரித்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்–எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும்
சிதைக்கக் கடவையோ–அழிக்கக் கடவாயோ?
(அவ்வளவோடும் நில்லாமல்)-
எம்மைப் பற்றி–எங்களோடே
மெய் பிணக்கு இட்டக்கால்–கலவியும் ப்ரவருத்தமானால்
இந்த பக்கம் நின்றவர்–அருகில் நிற்பவர்கள்
என் சொல்லார்–என்ன சொல்ல மாட்டார்கள்?

மெய்ப் பிணக்கிட்டக்கால்-அணைத்துக் கொண்டால்

முற்றத்தூடு புகுந்து
இவன் கோலுகிறபடி சாலப் பொல்லாதாய் இருந்தது –
இவன் கண் வட்டத்தில் நிற்கில் தீம்பு செய்கை தவிரான் –
அதில் காட்டில் மறைய நிற்கை நன்று -என்று எல்லாரும் திரண்டு
சமேத்ய மந்த்ரயித்வா து சர்வே சங்கத புத்தய–ஊசுஸ்ச மநஸா ஜ்ஞாத்வா வ்ருத்தம்
தசரதம் ந்ருபம்
-அயோத்யா -2-20-என்கிறபடியே
சமயம் பண்ணி –
அது செய்யும் இடத்து எல்லாரும் திரளப் போவோமாகில் இவன் அடி ஒற்றிக் கொண்டு வரும் -என்று பார்த்து
ஒருவர் ஒருவராகப் போய்
பஞ்ச லஷம் குடியில் உள்ளார் எல்லாரையும் கொள்வதொரு முற்றத்திலே புக்கு
கதவுகளையும் -தலை வாசல் தொடங்கி அடைத்து கணையங்களையும் ஏறிட்டு
இவனுக்கு புகுர வழி இல்லாத படி பண்ணிக் கொண்டு இருந்தார்கள் –

இவனுக்கு புகுருகைக்கு வழி தேட வேண்டா இறே
இட்ட இலச்சினை அழியாது இருக்க வெண்ணெய் குடி போமா போலே
நினைவு இன்றிக்கே இருக்க தாங்கள் அவன் கையிலே அபஹ்ருதைகள் ஆனார்கள்

இம் முற்றத்திலே தங்கள் திரளின் நடுவில் வந்து நிற்கக் கண்டார்கள்

நாம் இவனை மறைத்துப் போந்தோம் என்று இருந்தோம் -அழகிதாய் இருந்தது
இவன் நமக்கு முற்பட்டுக் கொடு நின்றான் -என் செய்தோம் ஆனோம்
இவன் கையிலே அகப்பட்டோம் –
இனி இவனுக்கு தென்பட்டோம் ஆகாமல் கழியும் விரகு ஏதோ என்று பார்த்து
ஒரு போக்குக் காணாமல் லஜ்ஜித்து கவிழ் தலையிட்டார்கள்

நின் முகம் காட்டிப் –
எல்லாரையும் தனித் தனியே முகத்தை எடுத்து –
ஏன் வந்தோம் இறே பிற்பட்டோமே -கூட வரப் பெற்றிலோமே –
எவ்வழியே வந்தி கோள்-கால்கள் நொந்தது இறே -என்றால் போலே சிலவற்றைச் சொன்னான்
நம் நினைவு தப்புவதே -என்று தங்கள் தோல்வியை அனுசந்தித்து லஜ்ஜித்தார்கள்

புன் முறுவல் செய்து-
அத்தை அறிந்து -ஸ்மிதம் பண்ணினான் –
நாம் இவனுக்குத் தோற்று லஜ்ஜித்தோம் ஆனமை அவன் அறியல் ஆகாது –
புறம்பே அந்ய பரர ஆனோம் ஆவோம்
என்று அங்கேயே இருந்து சிற்றில் இழைக்கப் புக்கார்கள் –

இங்கேயே நம் சந்நிதியிலே இருந்து அந்ய பரதை பண்ணுவதே -என்று சிவிட்கு என்னா
நினைக்கைக்கு நெஞ்சும் கூடாதே –
வ்யாபரிக்கைக்கு கையும் கூடாத படியாகச் சிலவற்றைச் செய்தான் –

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
உனக்குத் தான் பசு மேய்க்கை அன்றோ பணி-
பெண்களை நலிகையும் பணியோ
சவாசனமாக அழிக்கக் கடவையோ –

முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்
ஒன்றை வாங்கப் புக்கால் கொடுத்தவர்களை குழியிலே தள்ளுமவன் அன்றோ ஷணத்திலே –
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்-பெரியாழ்வார் திருமொழி -4-9-7- இறே –
இனி என் பழி கேட்பது -கெட்டோம் -இதுக்கு மேல் கேட்பது இல்லை இறே -என்ன
பரியட்டங்களையும் கழித்து -பெண்களுக்கு உடம்பு கொண்டு -தாய்மார் முன்பு நிற்க ஒண்ணாத படி பண்ணினான் –

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்
உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ –
நம்மோடு அணைகை பொல்லாததோ –
எத்தனையேனும் யோகிகளும் நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது –
உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –

எங்களுக்கும் அழகிது -ஆனாலும்
இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் –
அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு  நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும்
வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
-பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து
வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று

நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ஸ்லேஷத்தில் உண்டான இசைவை
மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

————————————————————

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம்
-யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத
எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து –
ஸ்வைரமாக விளையாடுகிற பருவம் நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே
செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் –
வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –
என்னுதல் –

அன்றிக்கே –
காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே –
அணைத்த அநந்தரம் –
அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6-
நித்ய சித்தராய் யாம்படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -முதல் திருமொழி —

September 1, 2015

தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இறே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

அனங்க தேவா–காமதேவனே!
தை ஒரு திங்களும்–தை மாதம் முழுதும்
தரை விளக்கி–நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு–குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசிமுன் நாள்–மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில்
ஐய நுண் மணல் கொண்டு–அழகிய சிறிய மணல்களினால்
தெரு–(நீ எழுந்தருளும்) வீதிகளை
அழகினுக்கு அணிந்து அலங்கரித்து–அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து
உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி–(காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி
உன்னையும்–(காமனாகிய) உன்னையும்
உம்பியையும்–உன் தம்பியான சாமனையும்
தொழுதேன்–வணங்கா நின்றேன்
வெய்யது–(ப்ரதிகூலர் பக்கலில்) உக்கிரமானதும்
தழல் உமிழ்–நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான
ஓர் சக்கரம்–ஒப்பற்ற திரு வழி யாழ்வானை
கை–திருக் கையில் அணிந்துள்ள
வேங்கடவற்கு–திருவேங்கட முடையானுக்கு
என்னை–என்னை
விதிக்கிற்றி–கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும்
(ஏ-ஈற்றசை)

மண்டலம்-மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில் முதல் பக்ஷத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
உம்பி-சாமன்
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –

தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில்
கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே

இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இறே ஆற்றாமை –

மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே
அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –

தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் இறே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்

தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இறே இவள் செய்கிறது –

மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் –
அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து

இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –

உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இறே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –

ஆம் கொலோ –
சங்கை -பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இறே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –

என்று சொல்லி –
உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–
காமன் -தம்பி சாமன் -சாமனையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே

தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இறே
இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இறே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இறே அஞ்சலி

ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று
அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீத விரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு
திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

இப்போது -வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இறே இருப்பது –

ஏந்தி -திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –

——————————————-

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே–1-2-

காமதேவா–மன்மத தேவனே!
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு
முள்ளும் இல்லா சுள்ளி–(எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை
எரி மடுத்து–நெருப்பிலிட்டு
முயன்று–(இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து
உன்னை தோற்கின்றேன்–நோன்பு நோற்கா நின்றேன்’
(ஆன பின்பு,)
கள் அவிழ்–தேன் பெருகா நின்றுள்ள
பூ புஷ்பங்களாகிற கணை–அம்புகளை
தெரு அணிந்து–வீதிகளை அலங்கரித்து,
வெள் வரைப் பதன் முன்னம்–கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே
துறை படிந்து–நீர்த் துறைகளில் முழுகி,
தொடுத்துக்–கொண்டு (வில்லில்) தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி–கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை
(அம்பிலே) எழுதிக் கொண்டு
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில்–‘பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன்,
என்னும் ஓர் குறியாகிற அக் கடல் வண்ணன் பக்கலில்)
புக–(நான்) சென்று சேரும்படி என்னை என்னை
எய்கிற்றி (நீ) சேர்ப்பிக்கவேணும்.

வெள் வரைப்பதன் முன்னம் -கிழக்கு வெளுப்பதற்கு முன்னே
முள்ளும் -முள் எறும்பு முதலியவையும் –

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
சத்வ பிரசுரனான சர்வேஸ்வரனுடன் உடைய சம்பந்தத்தாலும்
தேவதையினுடைய சௌகுமார்யத்தாலும்-
ஆக –
வெளுத்து –
நுண்ணியதாய் இருந்துள்ள
மணலைக் கொண்டு அவன் வரும் வழியை அலங்கரித்து –

நாட்காலே நீராடி -என்று
அவனை நோக்கி குளித்த வாசனையாலே
கிழக்கு வெளுப்பதற்கு முன்பே நீர் நிலைகளிலே மூழ்கி –

கீழ் வானம் வெள்ளென்று -என்று
அவனைக் குறித்து நோற்கும் இடத்து
துணுக் துணுக் -என்னும் இத்தை இறே இவனை நோக்கிச் செய்கிறது

துறை படிந்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ரீ ராம விரஹம் ஆறுகைக்கு செய்யுமத்தை யாய்த்து
இவன் பக்கல் செய்கிறது –
அத்யந்த ஸூக சம்வ்ருத்த ஸூ குமார ஸூ கோசித-கதம் ந்வபரராத்ரேஷூ சரயூம் அவஹாகதே –ஆரண்ய -16-20-

முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து-
எறும்பும் மற்று ஓன்று உள்ளவை இல்லாமையே யன்றிக்கே –
முள்ளும் இன்றிக்கே இருக்கிற சுள்ளி உண்டு –இள விறகு-
அத்தை அக்னியிலே இட்டு —
சமித்தை அக்னியிலே போர மடுத்தனையும் கிருஷ்ணனை போர அணைக்கலாம் -என்று இருக்கிறாள்

பெரியாழ்வார் பகவத் சமாராதான ரூபமாகச் செல்லும் அக்னி ஹோத்ர ஹோமத்துக்கு –
ஸ்வயம் பிரயோஜனமான ஹோமத்துக்கு –
வேண்டுவன எடுத்து கை நீட்டக் கடவள் இறே இப்போது இது செய்கிறாள் –

முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா-
சரைஸ்து சங்குலம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தன -மாம் நயத்யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்த -39-30-
என்னும்படியே அவனே என்று அறுதி இட்டு இருக்கக் கடவ நான் இப்போது அவனைப் பெறுகைக்கு
உன் காலிலே விழுந்து படுகிற யத்னம் எல்லாம் கண்டாயே

உன்னை –
நான் பற்றி இருக்கும் விஷயம் தான் இன்னது என்னும் இடம் அறிதியே –
அவனைப் பற்றி இருக்கக் கடவ நான் அன்றோ -உன் காலிலே விழுந்து துவளுகிறேன்

அது உண்டு -அதுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன —
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு-கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி-
இனிச் சாணையில் ஏறிட வேண்டா வாய்த்து -சிதை -என்கிறபடியே –
மது விரியா நின்றுள்ள புஷ்ப பாணங்களை தொடுத்துக் கொண்டு –
கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை அம்பிலே எழுதிக் கொண்டு -என்னுதல்–
ஹிருதயத்திலே எழுதிக் கொண்டு என்னுதல்

புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே-
பகாசூரனுடைய வாயைக் கிழித்து விரோதி நிரசன சீலனாய் இருக்கிறவன் பக்கலிலே
நான் சென்று சேரும் படி பண்ண வல்லையே-
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷச்வஜே –ஆரண்ய -94-18-
நான் அவனை அணைக்கும் படி பண்ண வல்லையே –

————————————————————————–

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

(காமதேவா!’
நல்நறு மத்த மலர்—நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும்
முருக்க மலர் கொண்டு–முருக்க மலர்களையுங் கொண்டு
முப்போதும் மூன்று காலங்களிலும்
உன் அடி வணங்கி–உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான தெய்வம், என்று
சொல்லிமனங் கொதித்து அழித்து வாய் கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி
கொத்து அலர்ப்பூ கணை தொடுத்துக் கொண்டு–கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற
புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி–கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக–அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே
என்னை விதிக்கிற்றி–என்னை நீ செய்ய வேணும்.

மத்த நன்னறு மலர் —ஊமத்தையினுடைய நல்ல மலர்களையும்
முருக்க மலர் கொண்டு-பலாசம் புஷ்பங்களையும் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி-காலை மாலை உச்சி யாகிற மூன்று போதுகளிலும் உனது அடிகளிலே தண்டன் இட்டு –

மத்த நன்னறு மலர்முருக்க மலர் கொண்டு-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அதுக்கு அநுரூபமாம்படி மதகரமான புஷ்பங்களைக் கொண்டு –
மதமத்தையினுடைய நன்றான செவ்விப் பூ முருக்கம் பூ இவற்றைக் கொண்டு –
திருத் துழாய் பறிக்கும் குடியில் பிறந்தவள் இறே இப்போது இவனுக்கு இவை தேடுகிறாள் –

முப்போது முன்னடி வணங்கி-
ஒரு போது தொழுகை தானும் மிகையாம் படியான விஷயத்தை பற்றி வைத்து இறே இவனை த்ரி சந்தியும் ஆஸ்ரயிக்கிறது-
காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-2-
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் திரு -63–என்று
கால ஷேப அர்த்தமாகவும் –
ஸ்வயம் போக்யமாகவும் –
பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்தவள் கிடீர் இப்படி இவனை ஆஸ்ரயிக்கிறாள்-

தத்துவமிலி என்று நெஞ்செரிந்து-வாசகத்தழித்து உன்னை வைதிடாமே-
உன் ஸ்வரூபம் அழியாமே நோக்கிக் கொள்ளப் பார் கிடாய் –
இவனை ஆஸ்ரயித்தால் பெருவதொரு பலம் இல்லை என்று -இவன் பொய் சொல்லி -என்று நெஞ்சு கொதித்து –
அதுதான் நினைவு மாத்ரமாகை யன்றிக்கே வாயாலே அழித்து பலரும் அறியும் படி உன்னை வைதிடாமே
தருமம் அறியாக் குறும்பனை –பொருத்தமிலியை –-14-6- என்றும்
புறம்போல் உள்ளும் கரியானை -14-7-
ஏலாப் பொய்கள் உரைப்பானை -14-3-
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானை -13-1- என்று
அவனை வைவது போலே உன்னையும் வைய நேரும் என்று பயமுறுத்துகிறாள் –

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
ததோ ராமோ மகா தேஜா தநுராதாய வீர்ய வான்-பிரவிச்ய ராஷசம் சைன்யம் சர வர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த -94-18-
என்று கொண்டு நூறும் பத்தும் ஆயிரமுமாக பெருமாள் திருச் சரங்களைத் தொடுத்து விடுமா போலே-
நீயும் கொத்து கொத்தான புஷ்பங்களைத் தொடுத்துக் கொண்டு

கோவிந்தன் என்பதோர் பேரெழுதி-
எங்களுடைய ரஷணத்துக்கு முடி சூடி இருக்கிறவனுடைய திரு நாமத்தையும் நெஞ்சிலே எழுதிக் கொண்டு –

வித்தகன் வேங்கட வாணன் என்னும்-
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு-
கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47-
ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும்
திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –

சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21-
அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது

வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–
பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது –
திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து-
ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து –
குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே –
திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

——————————————————–

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

பதவுரை

புராண–நெடு நாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காம தேவா–மன்மதனே!
சுவரில்–சுவரிலே
நின் பேர் –உனது பெயர்களை
எழுதி–எழுதி
சுறவம் நல் கொடிகளும்–மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்
துரங்கங்களும்–குதிரைகளையும்
கவரி பிணாக்களும்–சாமரம் வீசுகின்ற பெண்களையும்
கரும்பு வில்லும்–கரும்பாகிற தநுஸ்ஸையும்
காட்டித் தந்தேன் கண்டாய்–உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன
அவரைப் பிராயம் தொடங்கி–இளம் பருவமே தொடங்கி
என்றும் ஆதரித்து–(அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி
எழுந்த–கிளர்ந்த
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளை
துவரைப் பிரானுக்கே–த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே
சங்கற்பித்து–(அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து
தொழுது வைத்தேன்–(உன்னை) தண்டனிடா நின்றேன்
(இந்த மநோரதத்தை)
ஒல்லை விதிக்கிற்றி–(நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும்.

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி –
கிருஷ்ணனை ஸ்மரித்தவாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –

எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –

புராண
பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –
மகரத்வஜனை
நினைக்கும்படியாய் வந்து விழுந்தது

சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து
இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-

கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –

பிணா -என்று பெண் பேர் –

கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது

காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
ச விபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –

காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –

அவரைப் பிராயம் தொடங்கி
அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன –
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச
-பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி

என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன்
வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –

தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-

இந்த முலைகளை தொழுது வைத்தேன்
இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –

ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5

பதவுரை

மன்மதனே!-
வானிடை–ஸ்வர்க்க லோகத்தில்
வாழும்–வாழுகின்ற
அவ் வானவர்க்கு–விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர்–ப்ராஹ்மணர்
வேள்வியில்–யாகத்தில்
வகுத்த அலி–கொடுத்த ஹவிஸ்ஸை
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து–காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளானவை
மானிடவர்க்கு என்று பேச்சு படில்–(அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப–கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல
ஊனிடை — (தனது) திருமேனியில்
ஆழி சங்கு–திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)
உத்தமற்கு என்று–புருஷோத்தமனுக்காக
உன்னித்து எழுந்த–ஆதரவுடன் கிளர்ந்த யவை) என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால்
வாழகில்லேன்–உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’
(கண்டாய்–முன்னிலையசை.)

கடப்பதும் -தனக்காக்கிக் கொள்வதும்
ஊனிடை -தன் திரு மேனியிலே –

வானிடை வாழும் அவ்வானவர்க்கு-
போக பூமியில் வர்த்திக்கக் கடவராய் -விலஷண ஜன்மாக்களாய் இருக்கிற தேவர்களுக்கு –
தேவான் பாவயதா நேன தே தேவா பாவயந்து வா –
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரம வாப்ச்யாத
-ஸ்ரீ கீதை -3-10/11-என்கிறபடியே

மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப-
இங்கு உள்ள பிராமணர் தேவர்களை உபாசிக்கக் கடவரகளாயும்-
அவர்கள் இவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணக் கடவர்களாகவும்
ஈஸ்வரன் அடியிலே பார்த்து வைத்த தொரு பார்வை யுண்டிறே-

ஆகையால் பிராமணர் தம்தாமுடைய யாகங்களில் உண்டாக்கின ஹவுஸ் சை-
மனுஷ்யர் இல்லாத காட்டிலே சஞ்சரிப்பதொரு ஷூத்ர பதார்த்தங்கள் –
அவர்களுக்கு அது யோக்யமாகாத படி தூஷிக்குமா போலே

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கிற அழகிய திரு மேனியிலே
திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தையும் தரித்து இருப்பானாய்-
அவ்வழகு தன்னைப் பிறருக்கு என்று இருக்கையாலே உத்தமனாய் இருக்கிறவனுக்கு என்று அனுசந்தித்து-
அவ்வனுசந்தானமே நீராக வளர்ந்த என் முலைகள் –

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய்-
நானும் அறியாது இருக்க –
அவனும் அறியாது இருக்க –
மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம்

பரிமாறும் ஆகில்-
அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –
என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —

உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு
கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க –
இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து –
அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை
அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

மன்மதனே –
வயிற்றில் பிறந்த உன் காலிலே விழ வேண்டும் படி யன்றோ என் ஆற்றாமை –

——————————————————————–

மச்சித்தா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9-என்கிறபடியே
சத்வ நிஷ்டர் பகவத் குண அனுபவம் பண்ணி
போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு சாத்விகரைக் கூடக் கொண்டு இழியுமா போலே –
ரஜோ குண பிரசுரமானவனை ஆஸ்ரியைக்கு
அதிலே தேசிகரைக் கொண்டு இழிகிறாள்-

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் –6-

காமதேவா–மன்மதனே!
உரு உடையார்–அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள்–யௌவன பருவமுடையராயும்
நல்லார்–காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள்–பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில்
திருந்தவே நோற்கின்றேன்–நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’
கரு உடை முகில் வண்ணன்–(நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்
காயா வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
ஒத்து வல்லார்களை கொண்டு–காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு
வைகல்–நாள்தோறும்
தெருவிடை–நீ வரும் வழியிலே
எதிர் கொண்டு–எதிரே சென்று
கருவிளை போல் வண்ணன்–காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான்
கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால்–செந்தாமரை மலரின் நிறம் போன்ற
காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்
எனக்கு–என் விஷயத்தில்
திருந்தவே நோக்க–விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி
அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

ஒத்து -காம சாஸ்த்ரத்தில்

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு
வடிவுடையாராய் –
யுவாக்களாய் –
வ்ருத்தவான்களாய்
காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு

வைகல் தெருவிடை எதிர் கொண்டு-
நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு

பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் –
பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –

செய்ய வேண்டுவது என் என்னில்
காம தேவா கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன்-
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
எல்லாம் பட்டும் பெற வேண்டும் படி அன்றோ அவன் வடிவு படைத்த படி –

நெஞ்சிலே இருள் படுகைக்கு-காயா வண்ணன்
கண்டார் கண்ணுக்கு நேத்து இருக்கைக்கு –கருவிளை போல் வண்ணன்

கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்-
கமலத்தினுடைய நிறம் போலே இருக்கிற காந்தியை யுடைத்தான திரு முகத்தில் உண்டான திருக் கண்களாலே
சோலை பார்ப்பாரைப் போலே பார்க்கை அன்றிக்கே
அவன் விசேஷ கடாஷம் பண்ணும் படியாக அருள் கிடாய்-

சோலை பார்வை -சமுதாயேன பார்வை அன்றிக்கே அவயவங்கள் தோறும் கடாஷித்து அருள வேணும்-
நம் ஆற்றாமைக்காக நோக்கினான் ஆகை அன்றிக்கே
தனது ஆற்றாமை தீரும்படி நோக்கினானாம் படியாய் பண்னுகிடாய்-

———————————————————————-

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே –1-7-

பதவுரை

மன்மதனே மன்மதனே!
காய் உடை நெல்லோடு–பசுங்காய் நெல்லும்
கரும்பு–கரும்பும்
அமைத்து–சமைத்து
(அதனோடு கூட)
கட்டி–கருப்புக் கட்டியும்
அரிசி–பச்சரிசியும்
அவல்–அவலும்
(ஆகிய இவற்றையும்)
அமைத்து–சமைத்து
அளந்தவன் -(திருவடிகளால்) அளந்தருளினவனும்
திருவிக்கிரமன்–திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்
என்னை–என்னுடைய
சாய் உடை–ஒளியை யுடைய
வயிறும்–வயிற்றையும்
மென் தடம் முலையும்–மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும்
வாய் உடை–நல்ல ஸ்வரத்தையுடையராயும்
மறையவர் -காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய
மந்திரத்தால்–மந்திரத்தினால்
உன்னை வணங்குகின்றேன்-’-
முன்–மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்
தேசம் ஸகல லோகங்களையும்
திருக் கைகளால்- (தனது) திருக்கையினால்
தீண்டும் வண்ணம்–ஸ்பர்சிக்கும்படி பண்ணி
தரணியில்–(இப்) பூமண்டலத்தில்-
தலைப் புகழ்–நிலை நின்ற கீர்த்தியை
தர கிற்றி–(நான்பெறும்படி) தந்தருள வேணும்.

காயுடை நெல் -பசுங்காய் நெல்
வாயுடை -நல்ல ஸ்வரத்தை யுடையவராய்
சாயுடை -ஒளியை யுடைய -அழகை உடைய –
தலைப் புகழ் -நிலை நின்ற புகழ் –

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அவனுக்கு ஆமவை தேடுகிறாள் யாய்த்து
பால் மாறாத பசுங்காய் நெல்லோடு கூட
கருப்புக் கட்டி -பச்சரிசி -அவள் -இவற்றைச் சமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்-
நல்ல ஸ்வரத்தை உடையராய் இருக்கிற மறையவர் உண்டு -அதில் தேசிகராய் இருக்குமவர்கள் –
அவர்களுடைய மந்திரத்தாலே –
வயிற்றில் பிறந்தவன் என்று பாராதே -உன்னை ஆஸ்ரயிக்கிறேன்-

தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்-
வரையாதே எல்லாரையும் அடியிலே விஷயீ கரித்தவன் திருக்கையாலே என்னை –

சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே —
ஒளியை உடைத்தான வயிற்றையும்-
அவன் தனக்கும் உண்டு அறுக்க ஒண்ணாத படியான முலையையும்

திருக்கைகளால் தீண்டும் வண்ணம் –
அவன் ஸ்பர்சிக்கும் படி பண்ணி –
லோகத்திலே சால நிற்பது ஒரு புகழ் இறே-அத்தை நாம் பெரும் படி தர வல்லையே
அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் –

——————————————————–

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பதவுரை

தேச உடை–(பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும்
திறல் உடை–மிடுக்கை யுடையவனும்
எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா–மன்மதனே!
மாசு உடை–அழுக்குப் படிந்த
உடம்பொடு–உடம்போடே கூட
தலை–தலை மயிரை
உலறி–விரித்துக் கொண்டு
வாய்ப் புறம் வெளுத்து–(தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று
ஒரு போது உண்டு–ஒரு வேளை புஜித்து
(இப்படிப்பட்ட வருத்தத்துடன்)
நோற்கின்ற நோன்பினை–(நான்) நோற்கின்ற நோன்பை
குறிக்கொள்–(நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’
இங்கு–இப்போது
பேசுவது ஒன்று உண்டு–சொல்ல வேண்டுவது ஒன்று உளது
(அதைச் சொல்லுகிறேன் கேள்’)
பெண்மையை–(என்னுடைய) ஸத்தையை
தலை யுடையத் தாக்கும் வண்ணம்–ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக
கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும்–கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற
இப் பேறு–இப் புருஷார்த்தத்தை
எனக்கு அருள்–எனக்கு அருளவேணும்.
(கண்டாய் – முன்னிலையசை.)

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு-
ஸ்நானத்தை ஒழிய செல்லாதபடியான உடம்பு மாசு ஏறும்படி பண்ணி
சுரும்பார் குழல் கோதை –9-10-என்னும்படியான
மயிர் முடியை உடையவள் அத்தைப் பேணாதே
போகய த்ரவ்யங்களைக் கொடுத்து –
இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் நசையாலே
சத்தை கிடக்க வேண்டும் அளவாய்த்து உஜ்ஜீவிப்பது -ஒரு போதும் உண்டு –

இவ் வழியாலே ஒரு கால் மீளாதே
நோற்கின்ற -நிகழ் கால பிரயோகம் –
இடை விடாமல் நோற்கின்ற நோன்பை குறிக் கொள் கிடாய்

ருணம் பிரவ்ருத்தம் இவ மே-என்று நெஞ்சிலே இது எப்போதும் பட்டுக் கிடக்க வேண்டும் கிடாய் –

தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்-
பிரிந்தாரைச் சேர்க்க வல்ல என்கிற பிரசித்தியாலே வந்த புகழையும் –
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு ஈடான மிடுக்கையும் உடையவன் அன்றோ நீ –

பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் –
நான் சொல்வது ஓன்று உண்டு –
எனக்கு ஸ்வாமி யானவனே –

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———————————————————–

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—1-9-

பதவுரை

முப்போதும்–(இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி–ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி–உன் பாதங்களில்
தூ மலர் தூய்–பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது–ஸேவித்து-
ஏத்துகின்றேன் நான்–ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்
பார் கடல் வண்ணனுக்கே– பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தை யுடைய கண்ணபிரானுக்கே
பழுது இன்றி–குற்றமொன்றுமில்லாமல்
பணி செய்து–கைங்கரியம் பண்ணி
வாழப் பெறா விடில்–உஜ்ஜீவியா தொழிவேனாகில்
அழுது அழுது–(பின்பு நான்) பல காலும் அழுது
அலமந்து–தடுமாறி
அம்மா வழங்க–‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய
வழங்க -சஞ்சரித்து –
அது–அப்படி என்னைத் துடிக்க விடுவது
ஆற்றவும்–மிகவும்
உனக்கு உறைக்கும்–உன் தலை மேல் ஏறும்’ (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது
உழுவது ஓர் எருத்தினை–ஏருழுகின்ற ஒரு எருதை
நுகம் கொடு பாய்ந்து–நுகத் தடியால் தள்ளி
ஊட்டம் இன்றி –தீனி யில்லாமல்
துரந்தால் ஒக்கும்–ஒட்டி விடுவதைப் போலாம்

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்-
சத்வ நிஷ்டராய் இருப்பார் சமாராதன காலங்களில் அவகாஹனம் பண்ணி
சமாராதனம் தலைக் கட்டின அநந்தரம்
திருவடிகளிலே விழுந்து –
நான் தொடங்கின சமாராதானம் தலைக் கட்டினேன்-

திரு உள்ளத்துக்கு பாங்கான படியே போது போக்கி அருள வேணும் -என்று
ஸ்தோத்ர ரூபமான வற்றை விண்ணப்பம் செய்யுமா போலே
அவற்றை எல்லாம் இவன் பக்கலிலே செய்கிறாள்

பழுதின்றிப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறவதில்
ஒரு பழுது இன்றிக்கே –

பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்-
பார் சூழ்ந்த கடல் போலே இருக்கிற வடிவை உடையவனுக்கே அடிமை செய்து வாழப் பெறாது ஒழியில்

அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்-
நான் அழுது அழுது -தடுமாறி –
இழவோடே சஞ்சரித்து
கால ஷேபம் பண்ணுமது உனக்கு உறைக்கும் கிடாய் –

ஆற்றவும் -மிகவும்

ஆதாய ஸூஹ்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -யுத்த -18-30-
சரணா கதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாப பலத்தை அவன் அநு பவித்து
அவனுடைய ஸூஹ்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக சொல்லா நின்றது இறே –

அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின ஆஸ்ரயணத்துக்கு பலம் இன்றிக்கே ஒழியுமாகில்
அது உனக்கு பொல்லாதமாம் கிடாய் –
அவன் தான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு அங்கக் காரனாய் நின்று இறே அவர்களைச் சேர்ப்பது –
நம்மையும் உம்மையும் சேர்த்தான்
இவன் நல்ல அங்கக் காரனாய் இருந்தான் -என்று அவன் -ருத்ரன் -கொண்டாட-
அவனுடைய திருஷ்டி தோஷத்தால் இறே இவன் அநங்கன் ஆயத்து –

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—
எருத்தைக் கொண்டு தன்  ஜீவனார்த்தமாக கார்யம் கொண்டு –
அனந்தரத்திலே அத்தை ஒன்றாலே தள்ளி
அதுக்கு ஜீவனம் இடாதே துரத்துமா போலே இருப்பது ஓன்று கிடாய்
நான் வருந்தினதுக்கு ஒரு பலம் இன்றிக்கே ஒழியுமாகில் –

————————————————————————

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

பதவுரை

கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை–கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய
கழல் இணை பணிந்து–இரண்டு பாதங்களையும் வணங்கி
அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று–
கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும்
பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று
பொருப்பு அன்ன –மலை போன்ற
மாடம்–மாடங்கள்
பொலிந்து தோன்றும்–மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற
புதுவையர் -ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு
கோன்–ஸ்வாமியான
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய (மகளாகிற-)
கோதை–ஆண்டாள் (அருளிச் செய்த)
விருப்புடை–விருப்பமடியாகப் பிறந்த
இன் தமிழ் மாலை–இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
விண்ணவர் கோன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
நண்ணுவர்–கிட்டப் பெறுவர்

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி
இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –

அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு
நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து
பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற

நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக –
வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .