ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -நான்காம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

இந்த விஷயத்தில் சித்தாந்தம் கூறப்படுகிறது –அஹம் அஜ்ஞ மாமா நியஞ்ச ந ஜா நாமி -என்கிற இடத்தில் பிரத்யஷத்தினால் பாவ ரூபமான அஜ்ஞானம் அறியப் படுகிறது இல்லை -இந்த வாக்ய ஜன்ய ஜ்ஞானத்துக்கு ஜ்ஞான பிராபக பாவம் விஷயம் என்கிற பஷத்தில் சொல்லப் பட்ட விரோதம் பாபா ரூபா ஜ்ஞானத்திலும் சமானம் -விஷயமாகவும் ஆச்ரயமாகவும் இருந்து கொண்டு அஜ்ஞானத்துக்கு வ்யாவர்த்தகமாக பிரத்யக் வஸ்து நன்கு பாசிக்கிறதா -பாசிக்க வில்லையா –பாசிக்கிறது என்றால் பிரத்யக் வஸ்துவினது ஸ்வரூப ஜ்ஞானத்தால் நிரசிக்கப் படும் அஜ்ஞானம் எவ்வாறு நிலத்து இருக்கும் -பாசிக்கப் படாமல் இருந்தால் ஜ்ஞான சூன்யமான அஜ்ஞ்ஞானம் எவ்வாறு அனுபவிக்கப் படலாம்
விசதமான ஸ்வரூபத்தின் பிரகாசமே அஜ்ஞ்ஞான விரோதி ஜ்ஞான பிராக பாவம் கூட விசத ஸ்வரூபத்தை விஷயமாக உடையது -பாவ ரூபமான அஜ்ஞ்ஞானத்துக்கும் ப்ராகபாவ சித்தியில் போலே சாபேஷத்வம் இருக்கவே இருக்கிறது –
யானையைக் கண்டிராதவனால் இந்த நால் சந்தில் யானை இல்லை என்று எவ்வாறு சொல்ல இயலும்
உபபாதிக்கப் படுகிறது -அஜ்ஞ்ஞானம் எனபது ஜ்ஞான அபாவமா -அத்தைக் காட்டிலும் வேறு ஒன்றா -அதற்கு விரோதியா -மூன்றுக்கும் அதன் ஸ்வரூப ஜ்ஞான அபேஷை அவசியம் ஆச்ரயிக்கத் தக்கது –என்றாலும் -தமஸ் ஸின் ஸ்வரூபத்தை அறியும் விஷயத்தில் பிரகாசத்தின் அபேஷை இல்லை -எனினும் பிரகாசத்துக்கு விரோதி என்கிற ஆகாரத்தால் அந்த பிரதிபத்தியில் பிரகாசத்தின் உடைய அபேஷை இருக்கவே இருக்கும் -ஜ்ஞான பிராக பாவமே அஹம் அஜ்ஞ்ஞன் -அறிவில்லாதவன் -பிரமத்துக்கு அஜ்ஞ்ஞான அனுபவம் சம்பாதிக்கிறது இல்லை
மறைக்கப் பட்ட தனது ஸ்வரூபத்துடன் கூடி இருப்பது என்றால் என்ன -அது பிரகாசப் படுத்தப் படாத ஸ்வரூபத்துடன் கூடி இருத்தல் பொருத்தம் உள்ளதாக ஆகும் என்றால் -ஸ்வரூப நாசமே ஏற்படும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மறைக்க காரணமாக உள்ள அஜ்ஞ்ஞானம் -தான் அனுபவிக்கப் பட்டதாக இருந்து கொண்டு பிரமத்தை மறைத்து தான் அதன் அனுபவ விஷம் ஆகிறது என்பதனால் அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் வருகிறது -மறைக்கப் படாத ஸ்வரூபத்துடன் அஜ்ஞ்ஞானத்தை ப்ரஹ்மம் அனுபவிப்பதாக கொண்டால் திரோதான கல்பனை பிரயோஜனம் அற்றதாக ஆகும்
அவித்யையால் மறைக்கப் பட்டால் கொஞ்சமாவது பிரகாசம் உண்டா ப்ரஹ்மத்துக்கு -ஆகையால் விஷயம் அல்லாததும் விசேஷங்கள் இல்லாததும் பிரகாசம் மாத்ரமாயும் இருக்கிற ப்ரஹ்மத்தின் இடத்தில் ஸ்வரூபம் பிரகாசிக்கும் பொழுது விசேஷங்களின் பிரதீதி ரூபமான அவைச்த்யம் என்கிற அஜ்ஞ்ஞான கார்யம் சம்பவிக்கிறது இல்லை –
மேலும் அவித்யையின் காரயமாக இருக்கிற அவைசத்யமானது தத்வ ஜ்ஞானத்தின் உதயத்தால் விலகுகிறதா இல்லையா –விலகுகிறது இல்லை என்று சொன்னால் மோஷம் இல்லை விலகுகிறது என்று சொல்வாயே யாகில் வஸ்து எவ்வித ஸ்வரூபம் உள்ளது என்று பகுத்து அறியத் தக்கது -விசத ஸ்வரூபம் என்று சொல்வாயே யானால் அது முன் இருக்கிறதா இல்லையா -இருக்கிறது என்றால் அவித்யைன் கார்யமான அவைசத்யமும் அதின் நிவ்ருத்தியும் உண்டாக மாட்டாது -இல்லை என்பாயாகில் மோஷத்துக்கு அநித்யத்வம் ஏற்படும் -இதனால் சர்வ சூன்யத்வமே உண்டாகும் –
தீபத்தின் ஒளிக்கு பிரகாசிக்கப் பட்டிராத வஸ்துவை பிரகாசப் படுத்துண் தன்மை இல்லை -இந்த்ரியங்களுக்கு ஜ்ஞான உத்பத்தியில் ஹேதுத்வம் மாத்ரமே பிரகாசத்வம் கிடையாதே -விரோதியின் நிரசனமே பிரகாசத்வம் –வ்யவஹார யோக்யதா பாதனமோ ஜ்ஞானத்திற்கே -இத்தால் அனுமானத்தை தூஷிக்கிறார்
அஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மத்தை மறைக்கும் திறமை கொண்டது அல்ல -விஷயத்தையே மறைக்கும் -ஆதலால் அனுமானத்தாலும் பாவ ரூபமான அஜ்ஞ்ஞானம் சித்தி பெறுகிறது இல்லை –
மித்யையாய் இருக்கும் வஸ்துவுக்கு மித்யையான வஸ்துவே உபாதாநமாக இருக்கத் தகுதி -என்பதை -ந விலஷணத் வாத -அதிகரணம் சொல்லும்
எல்லா ஜ்ஞானங்களும் யதார்த்தங்கள் -எனபது பகவத் போதாயதனர் நாதமுனி மிஸ்ரர் போன்ற தத்வ தர்சிகளின் அபிமதம் –பஹூச்யாம் –தாஸாம் த்ருவ்ருத மேகைகாம் -த்ருவ்ருத்த கரணம் பஞ்சீ காரணத்திற்கு உப லஷணம்-
பிரத்யஷத்தாலே அறியலாம் -அக்னி -சிகப்பு நிறம் -தேஜஸ் /தண்ணீர் -வெண்மை நிறம் /பிருத்வி கருமை நிறம் /எல்லா வஸ்து ச்வரூபங்களும் எல்லா வஸ்துக்களிலும் காணலாம் பஞ்சீ கரணத்தால் -எந்த த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தின் ஓர் அம்சம் அடைந்து உள்ளதோ அந்த த்ரவ்யமே அதற்கு சத்ருசம் -வெள்ளி சிப்பி போலே -இதனால் சிப்பியை வெளி என்று பிரமிப்பது யதார்த்தம்
சிப்பியினுடைய அதிக அம்சம் குறைவு நிறைவுகளை அறிந்ததும் பிரமம் நீங்கும் -வெள்ளி பொய் சிப்பி மெய் என்கிற ஞானத்தால் இல்லையே
யதார்த்த க்யாதியே நம் சித்தாந்தம் –
இதே போலேவே ஸ்வப்ன திசையிலும் -தானே சங்கல்பித்து விசித்ரமான பதார்த்தங்களை உண்டு பண்ணா நின்று கொண்டு தூங்காமல் விழித்து இருக்கும் பரம புருஷன் ஜ்யோதிர்மயன் -மோஷத்தை அளிப்பவன்
சந்த்யே சிருஷ்டி ராஹஹி -என்றும்
நிர்மாதா ரஞ்சைகே புத்ராத யஸ்ஸ-என்றும் ஸூத்ரகாரர்
இந்த விசித்திர சிருஷ்டி ஈச்வரனுடையதே —தஸ்மின் லோகாஸ்ரிதாஸ் சர்வே தது நாதயேதி கச்சன-
பித்தத்தால் சங்கு மஞ்சள் நிறம் போலே தோன்றுமே பித்தத்தால் கெடுக்கப் பட்ட திருஷ்டி -ஸ்படிக மணி அருகில் உள்ள செம்பருத்தி பூவும் சிகப்பாக தோன்றுமே இதே போலே -கானல் நீர் தோற்றமும் இது போலே -கண்ணாடி பிரதி பலிப்பும் -இட வலம் மாறு பாடும் -திக் பிரமையும் கூட இதே போலே தோற்றம் -சந்திர பிரதி பலிப்பு தோஷம் -ஒரே சந்தரன் உண்டு ஞானத்தினால் விலகும் -யதார்த்த க்யாதி சமர்த்திக்கப் பட்டது -ஆதலால் விஜ்ஞான சாதம் அனைத்தும் யதார்த்தம் எனபது சித்தித்தது –

—————————————————————————————–

சாஸ்த்ரத்தாலே அறியத் தக்கவனும் -அகில ஹேய பிரத்ய நீக -கல்யாண குணாத் மகனான பர ப்ரஹ்மம் ஷேத்ரஜ்ஞர்களின் புண்ய பாப அனுகுணமாக சிருஷ்டித்து -அதில் பாத்ய பாதக பாவமானது அனைவரின் அனுபவ விஷயமாகவும் ஆகாமலும் இருப்பதாலும் பொருத்தம் உள்ளதாகிறது என்பதால் எல்லாம் சமஞ்ச்ஞசம்–
அஜ்ஞ்ஞானம் -அந்ரு தேன ஹி பிரத்யூடா –சுருதி வசனம் -அநிர்வச நீயம் பொருளில் அல்ல -அந்ருத சப்தம் ருதேதர -விஷயம் ருதம் என்கிறது கர்மாவைச் சொல்லும் -ருதம் பிபந்தௌ-கர்மபலத்தில் அபிசந்தி இல்லாத பர ப்ரஹ்ம ஆராதநா ரூபம் -பரம புருஷ பிராப்தியை பலமாகக் கொண்டதே -ருதம் –இதற்கு விரோதியே அந்ருதம் –
ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அன்ருதே ந ஹி பிரத்யூடா –என்கிற வசனத்தினால் -சத் அசத் இரண்டுக்கும் பிரளடத்தில் ஸூ சமமாக இருப்பதால் இரண்டுக்கும் சத் அசத் அநிர்வச நீயத்வம் உண்டாகும் -மாயா -விசித்திர சிருஷ்டியைச் சொல்லும்
அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே விச்வமேதத் தச்மிம்ச சான்யோ மாயயா சந்நிருத்த –மாயா -விசித்திர ஆச்சர்யம் -அஜ்ஞ்ஞதை அல்ல -அநாதி மாயயா ஸூ ப்தோ யதாஜீவ ப்ரபுத்யதே -என்றும் -இந்த்ரோ மாயாபி புருரூப ஈயதே-என்கிற இடத்திலும் விசித்திர சக்தியே சொல்லப் பட்டது
அதனாலே பூரி த்வஷ்டேவ ராஜாதி -மித்யா பூதமான வஸ்து பிரகாசியாது அன்றோ -மம மாயா துரத்தயயா–குணமயீ -பிரகிருதி சொல்லப் பட்டது -அஜ்ஞ்ஞானம் பிரதிபாதிக்கப் பட வில்லை –தத்வமஸி–அநேன ஜீவே நாத்மநா நு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
எல்லா வஸ்துக்களும் பரமாத்மா ஈறாகவே நாம ரூபங்களை பெற்று இருத்தல் கூறப் படுகிறது -ஆதலால் ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞான பரிகல்பனம் இல்லை —
இதிஹாச புராணங்களிலும் ப்ரஹ்ம அஜ்ஞ்ஞான வாதம் ஓர் இடத்திலும் காண வில்லையே –ஜ்யோதீம்ஷி விஷ்ணு -ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் யதாசௌ-என்று ஜ்ஞான ஸ்வரூபம் அன்றோ ப்ரஹ்மம் -யதாது சுத்தம் நிஜரூபி –வஸ்த்வச்திகம் மஹீகடத்வம்–தாஸ்மான் ந -விஜ்ஞானம்ருதே -அஜ்ஞ்ஞானத்துக்கு மூலம் கர்மாவே என்று வெளிப்படுத்தி -ஜ்ஞானம் விசுத்தம் -என்று ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை விசோதித்து-சத்பாவ ஏவம் பவதோ மயோக்த –புவனம் முதலியவற்றுக்கு சத்யத்வம் வ்யவஹாரிகம் –
சித் அசித் இரண்டும் வா ஸூ தேவனுக்கு சரீரம் -யதம் பு வைஷ்ணவ –காய ததோ விபரவ ஸூ நதரா பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்யாதி –சம்யுதா -என்றபடி சரீராத்மா பாவமே காரணம் தானி சர்வாணி தத்வபு தத் சர்வம் வை ஹரேஸ் தநு ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோவ்யய-சரீராத்மா பாவமான தாதாம்யமே ஜ்யோதீம்ஷி விஷ்ணு -என்கிற சாமா நாதி கரண்யத்தால் சொல்லப் படுகிறது –
ஜ்யோதி என்று சம்ஸ்ருஷ்ட ஜீவனையே உணர்த்தப் படுகிறது

அஸ்த்யாத்மகமாகவும் நாஸ்த்யாத்மகமாகவும் இருக்கிற வஸ்துக்கள் அனைத்தும் விஷ்ணுவின் சரீரம் என்பதால் விஷ்ண்வாத்மகம் -என்று கூறப் பட்டது -ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் யாதோ சௌ–சத் சப்தமாகவும் ப்ரஹ்மமே–கருமங்கள் நாசத்தால் தோஷம் அற்றதாகவும் -பரி சுத்தமாகவும் ஆனபின்பு -போகார்த்தங்களாக இருக்கும் வஸ்து பேதங்கள் வஸ்துக்களில் உண்டாகிறது இல்லை –
போக்தா போக்யம் ப்ரேரிதா–ரஞ்ச மத்வா –
அசித் நாஸ்தி சப்தத்தாலும் சித் அஸ்தி சப்தத்தாலும் சொல்லப்படுகிறது -தஸ்மாத் ந விஜ்ஞானம்ருதே —
ஆத்மாவோ என்றால் ஜ்ஞானத்தையே வடிவாக கொண்டு -கர்மத்தால் தேவாதி ரூபத்தால் தான் -ஸ்வரூபத்தால் இல்லை என்பதை -விஜ்ஞான மேகம் –சோகம் மோஹம் லோபம் சம்பந்தம் இல்லாதது -வருத்தி ஷயங்களுக்கு அநர்ஹமாய் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது -வா ஸூதேவாத்மகமாயும் இருக்கும்
ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு பிரயோஜனம் மோஷ உபாயத்தில் யத்னம் -ஜ்ஞான ஸ்வரூபமான ஆத்ம வஸ்து ஆதி மத்யம் அந்தம் இல்லாத ஒரே ஸ்வரூபத்துடன் கூடி இருப்பதால் ஸ்வரூபத்தாலேயே அஸ்தி சப்தத்தால் சொல்லப்பட்டது –

ஜ்யோதீம்ஷி விஷ்ணு -இது முதலிய சாமா நாதி கரண்யத்துக்கு நிர்தேசத்துக்கு -சரீராத்மா பாவமே –
ப்ரஹ்ம விஜ்ஞ்ஞானத்தாலேயே ஸ்ருதிகள் அவித்யையின் நிவ்ருத்தியைச் சொல்லுகின்றன –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் தமேவம் விதவா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதேய நாய சர்வே
நிமேஷா ஜஞ்ஜிரே வித்யுத புருஷா தாதி ந தச்யே சே கச்சன தஸ்ய நாம மஹத் யச யா ஏவம் விதுரம் ருதாஸ்தே பவந்தி –
ஆகாயத்துடன் கூடின புருஷனை அறிவதால் உபாசனம் என்றதாயிற்று -ச விசேஷ ப்ரஹ்ம ஜ்ஞானத்தாலே மோஷம் -தத் தவம் அஸி-என்பதிலும்
தத் தவம் இரண்டுமே விசேஷணங்கள் -தத் -சர்வஜ்ஞ்ஞன் –சத்ய சங்கல்பன் -ஜகத் காரணன் –ததைஷத பஹூச்யாம் -ப்ரஹ்மம்
த்வம் -அசித்துடன் கூடிய ஆத்மா –
சோயம் தேவதத்த -இவன் தான் முன்பு கண்ட அந்த தேவ தத்தன் -இதிலும் லஷணை இல்லை
பிரகாரத்வ்யா வஸ்திதம் -இரண்டு பிரகாரங்களுடன் கூடியது -ஜ்ஞான ச்வரூபச்ய சர்வஜ்ஞச்ய –இரண்டு விசேஷணங்களால் தர்ம பூதி ஜ்ஞானமும்
தர்ம பூத ஜ்ஞானமும் விலஷிக்கப் பட்டு இருக்கின்றன –

சிப்பி வெள்ளி -போலே வேடன் -என்ற பிரமம் அரசன் -என்ற ஆப்த வசனத்தால் போகும் -பிரகாசித்துக் கொண்டு உபதேசிக்கத் தக்கதாக இருப்பதால் பிரமத்தை நாசம் செயக் கூடிய தன்மை உள்ளதாக இல்லாததும் ஜீவனை சரீரமாகக் கொண்ட பிரமத்தையும் -ஜகத்துக்கு காரணமாக இருக்கும் ப்ரஹ்மத்தையும்முக்கிய வ்ருத்தியினால் இரண்டு பதங்களும் உணர்த்து கின்றன –இரண்டு பிரகாரங்கள் உடன் கூடிய வஸ்துவை பிரதிபாதிப்பதால் சாமா நாதி கரண்யமும் சித்தித்தது -ப்ரஹ்மத்துக்கு ஜீவாந்தர்யாமியாக இருக்கும் ஐஸ்வர்யமும் பிரதிபாதிக்கப் பட்டதாகிறது
ஏக விஜ்ஞானத்தால் சர்வ விஜ்ஞான பிரதிஜ்ஞையும்-ஸூ ஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமாகிய காரணமே ஸ்தூல சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு ஜகத் ரூபா காரயமாக இருப்பதால் உபபன்னம் ஆகிறது –

தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் மகேஸ்வரன் -ஒத்தார் மிக்கார் இல்லாத தேவாதி தேவனை
பராஸ்ய சக்திர் விவிதைவச்ரூயதே -சர்வசக்தனது சக்தி ஸ்ருதியால் அறியப் படுகிறது –
அபஹத பாப்மா–சத்ய காம –சத்ய சங்கல்ப —
ஐததாம்ய மிதம் சர்வம் -உலகம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம்
சந் மூலாஸ் சோம்யே மாஸ் சர்வே பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா -சத் எனப்படும் ப்ரஹ்மத்தை மூலமாக கொண்டவை –
அவனால் உண்டாக்கப் பட்டு -காப்பாற்றப் பட்டு -பிரளயத்தில் அவன் இடமே லயிக்கப் படுகின்றன –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாசீதா -இத்தை அறிந்து சாந்தமாக அந்த ப்ரஹ்மத்தையே உபாசிக்கக் கடவன்
அந்தப் பிரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –
யா பிருதிவ்யாம் திஷ்டன் பிரதிவா அந்தர யம் பிருத்வீ நவேத யஸ்ய பிருத்வி சரீரம் யா ப்ருத்வீ மந்த்ரோ யமயதி தை ஆத்மாந்த்ர்யாம்ம்ய யம்ருத —என்றும் –ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தரோ யமாத்ம ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமதி சதா ஆத்மாந்தர் யாம்ருத -என்றும்
ய பிருதிவி மாந்தரே சஞ்சரன் —யஸ்ய மறுத்துச் சரீரம் –யம் ம்ருத்யூர் ந வேத ஏஷ சர்வாந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ ஏக தேவ நாராயணா தத் ஸ்ருஷ்ட்வா ததேவா நு பிராவிசத் -தத நு பிரவிச்ய -சச்சத்யச் சாபவத் –
போன்ற ஸ்ருதிகள் ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் களுக்கும் சரீராத்மா பாவத்தையே தாதாம்யம் என்று கூறுகின்றன –
இந்த இடத்திலும் -அநேக ஜீவேன ஆத்மா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகராணி -உள்ளுக்குள் பிரவேசித்து வஸ்துத்வமும் அந்த வாசக சப்தத்தினாலே ப்ரஹ்மம் உணர்த்தப் பட்டதே -சரீரமாக இருப்பதாலேயே வஸ்துத்வம் சித்த்ஹிக்கும் -ஐத தாத்ம்யம் இதம் சர்வம் -தத்வமஸி —
எனவே நிர்விசேஷ வஸ்துவுக்கு ஐக்யத்தை சொல்பவனுக்கும் ஔபாதிகமாகவும் ஸ்வா பாவிகமாயும் இருக்கிற பேத அபேத வாதிக்கும் பேதத்தை மாதரம் சொல்பவனுக்கும் -வையதி கரண்யத்தாலும்-சாமா நாதி கரண்யத்தாலும் ப்ரஹ்மாத்ம பாவ உபதேசங்கள் அனைத்தும் இழக்கப் பட்டவைகள் ஆகும் –
வசஸாம் வாச்யமுத்தமம் -ஹரிரகிலாபி ருதீர்யதே ததைக நதாச்ச்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டாயாத்ர சாஸ்வதீ–அதஸ் சர்வ சப்தா நாம் —

—————————————————-

ஜாதி குணங்கள் போலே த்ரவ்யங்களும் ப்ரஹ்மத்துக்கு சரீர பாவத்தால் விசேஷணம் ஆதலால் சாமா நாதி கரண்யம் முக்கியம் -பிரகாரத்வமே காரணம்
தண்டம் உள்ளவன் தண்டீ குண்டலம் உள்ளவன் குண்டலீ -தனித்து இருக்கவோ அறியவோ தகுதி அற்றவைகளுக்கு விசேஷத்வம் சாமா நாதி கரன்யத்தில் பர்யவசிக்கத் தக்கதே –
ஆன்மா வினைகளால் பசு மனிதன் தேவன் புருஷன் ஸ்திரீ நபும்சகன் -கோ கண்டம் முண்டம் சுக்ல பட கிருஷ்ண பட -ஜாதி குண வாசக சப்தங்கள் போலே –
மனுஷ்யன் ஆத்மா என்கிற சாமா நாதி கரண பிரயோகம் லா ஷணிகம் -முக்கியம் இல்லாதது -இது இவ் வண்ணம் அல்ல -சரீரங்கள் ஆத்மாவை ஆச்ரயித்து ஆஅத்மாவுக்கு பிரயோஜனமாகவும் ஆத்மாவுக்கு பிரகாரமாக இருப்பதும் -இதனால் தண்டம் குண்டலம் இவை போலே இல்லாமல் விசேஷணம் -மத்வர்த்தீய பிரத்யாயம் அபேஷை -மது பிரத்யாயம் இன் இக முதலியவை –ஆத்மா சஷூர் பிரத்யஷத்துக்கு விஷயம் அல்ல -சரீரத்தை கிரஹிக்கும் கண்ணால் ஆத்மா கிரஹிக்கப் படுகிறது இல்லை
பூமி -கந்தம் ரசம் -ஸ்வ பாவிக்க சம்பந்தம் உண்டானாலும் கண்ணால் கிரஹிக்கப் படுவது இல்லையே
ஆத்மாவுக்கு பிரகாரமாக இருப்பதே ஸ்வ பாவம் சரீரத்துக்கு -அப்ருதக் சித்த விசேஷணம் -மனுஷ்யாதி சப்தங்கள் ஆத்ம பர்யந்தமாக அர்த்தம் உணர்த்தும் திறமை வாய்ந்தவை -இதே போலே பரமாத்மா பர்யந்தமாக சப்தார்த்தம்
-ஆந் மேதி தூப கச்சந்தி க்ராஹய நதிச -என்று மேலே சொல்லப் போகிறார் –ஆத்மேத்ய வதுக்ருஹ்ணீயாத் -என்பர் வாக்யகாரர்
கங்கா யாம் கோஷ -கங்கை கரை -பிள்ளையை அழைத்து வா -என் பிள்ளை தொக்கி நிற்கும் –

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விச்வமேதத் தச்மிம்ச்சான்யோ மாயயா சந்நிருத்த -மாயை -கர்ம பந்தத்தால் கட்டுப் பட்டு
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி யந்து மகேஸ்வரம் ஷரம் பிரதானம் ம்ருதாஷரம் -ஹர ஷராத்மான வீசதே தேவ ஏக –
அம்ருதாஷரம் ஹர -என்று -போக்தா நிர்தேசிக்கப் படுகிறான்
பிரதானத்தை போகய வஸ்துவாக சுவீகரிக்கும் ஜீவாத்மா ஹரன்
ச காரணம் கரணாதி பாதி பாதி போ ந சாஸ்ய கச்ஜிஜ்ஜனிதா ந சாதிப –
பிரதான ஷேத்ரஜ்ஞ்க்ன பதிர் குணேச –
பதிம் விச்வச்யாத்மேச்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம் –
ஜஞாஜ்ஜௌ த்வாவஜாவீ ச நீ ஷு-
நித்யோநித்யாநாம் சேதனஸ் சேத நா நாம் ஏகோ பஹூ நாம் யோ விதாதி காமான்
போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்சமத்வா –
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அனச்னன் அநந்யோ அபிசாக தீதி
ப்ருதகாத்மானம் பிரேரி தாரஞ்ச மத்வா ஜூஷ்டச் ததச்தே நாம் ருததவ மேதி
அஜா மேகாகம் லோகித சுக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் ஸ்வரூபாம் அஜோ -ஹ்யேகோ ஜூஷமாணோ நுசேத
ஜஹாத் யே நாம் புக்த போகாம ஜோன்ய
சாமானே வ்ருஷே புருஷோ நிமக்னோ அநீசயா சோசதி முஹ்யமான ஜூஷ்டம் யதா பசயத் யன்ய மீசமச்ய மஹிமா நமிதி வீத சோக
பகவத் கீதையிலும்
அஹங்கார இதே யம்மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரேய மிதஸ்தவ நயாம் பிரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவா பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத் -சர்வ பூதானி கௌந்தேய பிரக்ருதிம் யாந்தி மாமிகாம் —
கல்பஷயே புனச்தானி கல்பாதௌ விஸ்ருஜாம் யஹம் ப்ராக்ருதீம் ஸ்வா மவஷ்டப்ய விஸ்ருஜாமி புன புன –
பூதக்ராமம் மிமம் க்ருதஸ் நமவசம் பிரக்ருதேர்வசாத்
மயாத்த்ய ஷேண பிரக்ருதிஸ் ஸூ யதே சசராசரமா –
ஹேது நா நே ந கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்த்யாநாதீ உபாவபி மமயோ நிர்மஹத் ப்ரஹ்ம தஸ்மின்
கர்ப்பம் ததாம் யஹம் சம்பவஸ் சர்வ பூதா நாம் ததோபவதி பாரத –என்று அருளிச் செய்கிறான்
அவயகதம் அஷரம் லீயதே அஷரந்தம் அஸி லீயதே –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி தத் தேஜோ ஸ்ருஜத —சந்மூலாஸ் சோம்யே
மாஸ் சர்வா பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா -ஐததாத்மியதம் சர்வம் தத் சத்யம் ச ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ —
சோகாமயத பஹூச்யாம் பிரஜா யே யே தி சன போதப்யத சதபச்தப்த்வா இதம் சர்வமஸ்ருஜத–சத்யஞ்சா நருதஞ்சா சத்யமபவத் –
ஹந்தா ஹமி மாச்திஸ்ரோ தேவதா அநேன ஜீவே நாத்மானா நுபிரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி —
தத் த்ருஷ்ட்வா ததேவா நுப்ரவசத்
தத நுபிரவச்ய சச்சத் யச்சாபவத் விஜ்ஞா நஞ்சா விஜ்ஞா நஞ்சா சத்யஞ்சா நருதஞ்சா சத்யமபவத் –
அநேன ஜீவே நாத்ம நனனுபிரவிச்ய
தத்தேதம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் தந் நாம ரூபாப்யயாம் வ்யாக்ரியத
காரணத்தைக் காட்டிலும் காரணமானது வேறான வஸ்து இல்லாதது பற்றி காரண ஜ்ஞானத்தால் கார்யம் ஆரியப் பட்டு இருப்பதால்
தனக்கு அபிமதமான ஏக விஜ்ஞானத்தால் சர்வ விஜ்ஞானம் எனபது நன்கு பொருந்தும் –

நான் இந்த எல்லா அசித் வஸ்துக்களுக்குள் என்னை ஆத்மாவாகக் கொண்ட ஜீவன் வாயிலாக பிரவேசித்து நாம ரூப வியாகரணம் செய்கிறேன் -திஸ்ரோ தேவதா -என்று எல்லா வஸ்துக்களையும் சொல்லி –அவைகளில் தன்னை ஆத்மாவாகக் கொண்ட ஜீவனுடைய அனுபிரவேசத்தால் -நாம ரூப வியாகரணம் சொல்லி இருப்பதால் -வாசக சப்தங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்கே வாசகங்கள் ஆதலால் -சாமா நாதி கரண்யமானது முக்கிய வருத்தம் –
ப்ரஹ்மமே காரியமும் காரனமுமாய் இருப்பதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -ஆனாலும் போக்த்ருத்வம் போக்யத்வம் நியந்த்ருத்வம் சாங்கர்யம் இல்லை
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச விஜ்ஞாதாரமரே கே ந விஜா நீயாத் -இது முதலிய ஸ்ருதிகள் ஜ்ஞாத்ருத்வத்தை அறிவிகின்றன -ப்ரஹ்மாத்மகவாக இல்லாத வஸ்துக்கள் இல்லை -ப்ரஹ்மாத்மகவாக உள்ள வஸ்துக்களின் நாநா பிராகாரத்வமும் நிஷேதிக்கப் பட வில்லை

இவ்வண்ணம் சித் அசித் ஈஸ்வரன் மூன்றுக்கும் ஸ்வரூப பேதத்தையும் -ஸ்வ பாவ பேதத்தையும் சொல்லுகிறவைகளும்-
கார்ய காரண பாவத்தையும் –கார்ய காரணங்கள் இரண்டுக்கும் அனந்யத்வத்தை -அபேதத்தை சொல்லுகிறவைக்களுமான எல்லா ஸ்ருதிகளுக்கும் அவிரோதமானது -சரீராத்மா பாவத்தையும் -சித் அசித் இரண்டுக்கும் காரண அவஸ்தையில் நாம ரூப விபாகங்களுக்கு அநர்ஹமான ஸூ ஷ்ம தசா பிராப்தியையும் -கார்ய தசையில் நாம ரூப விபாகங்களுக்கு தக்கதான ஸ்தூல தசா பிராப்தியையும் சொல்லுகிற ஸ்ருதிகளாலே அறியப் படுவதால்
ப்ரஹ்ம அஜ்ஞ்ஞான வாதம் -ஔபாதிகமான ப்ரஹ்ம பேத வாதம் -இவற்றுக்கு எவ்விததாலும் அவகாசம் காணப்படவில்லை -ஐக்கிய பிரதிபாதனமும் விருத்தம் அன்றோ –
ஆக்நேய யாகம் முதலிய ஆறு யாகங்களை -தர்ச பூர்ண மாசாப்யாம் -அதிகார வாக்கியம் பல காமனை உள்ளவனுக்கு செய்யத் தக்கதாக விதிக்கிறதோ -அப்படி வெவ்வேறு ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ள சித் அசித் ஈச்வரர்களை
ஷரம்-பிரதான மம்ருதாஷரம் ஹர -ஷராத்மா நாவீ சதே தேவ ஏக -பதிம் விச்வச்யாத்மேச்வரம் ஆத்மா நாராயணா பர -இது முதலிய வாக்யங்களால்
தனித் தனியாக பிரதிபாதித்து — யஸ்ய பிருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -யஸ்ய அவயகதம் சரீரம் யஸ்ய அசரம் சரீரம் ஏஷ சர்வபூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்ய தேவ ஏகோ நாராயணா -இது முதலிய வாக்யங்களால் சித் அசித் இரண்டும் பரமாத்மாவுக்கு சரீரம் என்றும் பரமாத்மா அவற்றுக்கு ஆத்மா எனபதையும் பிரதிபாதித்து பரமாத்மாவைச் சொல்லும் சத் ப்ரஹ்ம முதலிய காரண அவஸ்தையுடன் கார்ய அவஸ்தையுடன் கூடிய பரமாத்மா ஒருவனே என்றும் வெவ்வேறாக அறியப் பட்டு இருக்கிற மூன்று வஸ்துக்களையும் –சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஐததாத்மியதம் சர்வம் –சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –இது முதலிய வாக்கியம் பிரதிபாதிக்கிறது –மனுஷ்ய பிண்ட சரீரம் உள்ள ஆத்ம விசேஷத்தை இந்த ஆத்மா சுகம் உள்ளவன் என்று சொல்லுவது போலே -இவற்றை சரீரமாக கொண்ட பரமாத்மாவை பரமாத்மா சப்தத்தால் சொன்னால் விரோதம் இல்லையே –
ப்ருஹத்த்வ குணம் உள்ள ஆத்மா ஓன்று என்கிற ஜ்ஞானத்தாலே அவித்யையின் அழிவு என்று சொல்வது பொருத்தம் அல்ல -கர்மங்களால் உண்டாகும் தேவாதி சரீரங்களில் பிரவேசம் -அதனால் பண்ணப்படும் சுக துக்க அனுபவம் -இப்படிப் பட்ட பந்தத்துக்கு எவ்வாறு மித்யத்வம் சொல்ல முடியும் –இப்படிப் பட்ட பந்த நிவ்ருத்தி பக்தி ரூபம் அடைந்த உபாசனத்தால் ப்ரீதி அடைந்த பர ப்ரஹ்மம் பிரசாதத்தினாலே அடையத் தக்கது என்று முன்பே சொல்லப் பட்டது
ஐக்ய ஞானம் மித்யாரூபம் -பந்தத்தின் விவ்ருத்தியே பலம்
ப்ரஹ்ம விஷயக ஞானமே மோஷ சாதனம்
உனக்கு அபிமதமாக இருக்கும் நிவர்த்தாக ஜ்ஞானமும் மித்யா ரூபமாதலால் அதற்கு நிவர்த்தகமாக வேறு ஒரு ஜ்ஞானம் உன்னால் தேடத் தக்கது -அதன் விநாசம் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமே என்று சொல்லப் படுமேயானால் நிவர்த்தாக ஜ்ஞானத்தின் உத்பத்தியே ஏற்படாது -அதன் விநாசம் இருக்கும் பொழுது உத்பத்தி சம்பவியாதாதலால் –
ஜ்ஞானதிற்கு ஜ்ஞாதா யார் -ப்ரஹ்ம ஸ்வரூபமே ஜ்ஞானா என்றால் நமது பஷமே ஆகுமே
தேவதத்தனால் சேதிக்கப் பட்டது -என்றால் -சேத்தாவுக்கும் -வெட்டுகிறவனுக்கும் -சேதனக் கிரியைக்கும் சேதிக்கப் படாத வஸ்துவின் இடம் அனுபிரவேசத்தை சொல்லும் வசனம் போலே பரிஹசிக்கத் தக்கதாகும்
ஆகையால் பந்தம் -அநாதி கர்ம பிரவாஹ ரூபமான அஜ்ஞ்ஞானத்தின் அடியாக உண்டாய் இருப்பதால் அதன் நாசமானது கூறப் பட்டுள்ள ஜ்ஞானத்தினாலேயே -அந்த ஜ்ஞானத்தின் உத்பத்தி வர்ணாஸ்ரம தக்க கர்மங்களால் –
பலத்தை நோக்கி செய்யும் கர்மங்கள் அல்பம் அஸ்தரம் பலன்களையே கொடுக்கும் -பலத்தை கருதாமல் பரம புருஷனுடைய ஆராதன வேஷம் பூண்ட கர்மங்கள் உபாசன ரூபமான ஜ்ஞான உத்பத்தியின் வாயிலாக ப்ரஹ்ம யாதாம்ய அனுபவ ரூபமான அந்தமில் பேரின்பம் -சாஸ்வத பலன்களுடன் கூடியது என்பதும்
கர்ம ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாமல் அறியப் படுவது இல்லையே
கர்ம விசாரத்துக்கு பிறகு கர்மங்கள் அல்ப அஸ்த்ர பலன்கள் உள்ளவைகள் என்று நிச்சயிக்கப் பட்டு விட்ட படியால் ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது என்று -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்கிற ஸூ தரத்தினால் கூறப் பட்டது –

———————————————————————————-

பூர்வ பஷி நினைக்கிறான் -சப்தத்துக்கு போதகத்வ சக்தி நிச்சயம் சம்பவியாததால் -வ்யவஹாரம் கார்ய புத்தியை முன்னிட்டே இருப்பதால்
-வேதார்த்தம் கார்ய ரூபமே
சர்ப்பத்தின் இடம் பயந்தவனுக்கு இது சர்ப்பம் அல்ல கயிறு என்று கேட்டதும் பய நிவ்ருத்தியை காண்பதனால் சர்ப்பத்தின் அபாவ புத்தி ஹேதுத்வம்
நிச்சயம் அல்ல -அசைவு அற்று இருக்கிறது -விஷம் இல்லாதது -அசேதனம் -இது முதலிய அர்த்த ஜ்ஞானங்களே பய நிவ்ருத்திக்கு ஹேதுக்கள்-
கார்ய புத்தி பிரவ்ருத்தி இவ்விரண்டுக்கும் உள்ள வ்யாப்தி பலத்தினால் -எல்லா பதங்களும் கார்யார்த்த போதனத்திலே நோக்கு
இஷ்ட உபாயம் என்னுடைய பிரத்யத்னாதாலே சித்தி பெறப்படும் -சாதுர்மாஸ்ய யாஜினா ஸூ க்ருதம் பவதி முதலியவைகளால்
கர்மங்களுக்கே ஸ்திர பலன்கள் கிட்டும் எனவே ப்ரஹ்ம விசாரம் ஆரம்பமானது உக்தம் அல்ல -என்பர்
மாதா பிதா சந்தரன் பசு மிருகம் -சுட்டிக் காட்டி இதை அறிந்து கொள் பல தடவை சிஷிக்கப் பட்டே புத்தியின் உத்பத்தியைக் கொண்டு
சப்த பிரயோக போதகத்வ சக்தி காரணம் என்று நிச்சயிக்கிறார்கள்
ஆத்மாவாரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய சோன் வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவய விஜ்ஞாயா பிரஜ்ஞாம் குர்வீத தஹோரோஸ் மினனந்தர-ஆகாச தசமின்ய தந்தச்த தன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசிதவ்யம் தத்ராபி தஹ்ரம் ககனம் விசோகஸ் தச்மின்ய தந்தச்த துபாசிதவ்ய —
உபாசன விஷய கார்யத்தில் அதிகாரம் உள்ளவனுக்கு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பலமாக சொல்வதால் -கார்யத்துக்கு
உபயோகியாய் இருப்பதால் சித்தி ஏற்படுவதால் உபாசன விஷய கார்யத்துக்கு உபயோகியாக இருப்பதால் -பலமாய் இருக்கிற ப்ரஹ்ம ஸ்வரூபத்திலும்-அதற்கு விசேஷமான குணம் முதலியதிலும்
விதி விரோதியான பலத்திலும் சம்சார ஹேதுத்வம் முதலியதிலும் விவஷையானது செய்யத் தக்கது என்று அர்த்தம் –
கார்யத்துக்கு க்ருதி சாத்யத்வம் இஷ்டத்வம் க்ருத்யுதேச்யத்வம் மூன்றும் அவன் மதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறது
பரகத அதிசய அதானேச்சாய உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச் சேஷி -ஸ்ரீ பாஷ்யகாரர்
சேஷ -பராதர்த்தவாத் -அந்யனனுடைய பிரயோஜனமே எவனுக்கு பரம பிரயோஜனமோ அவன் செஷன் -அந்யன் சேஷி
இச்சை ச்வீகாரம் -இரண்டும் உண்டே
பலமத உபபத்தே -ஸூ தரம் -பரம புருஷனே பல சித்தி அளிப்பவன்
-கர்ம பலன்கள் அல்பம் அஸ்திரம் –ப்ரஹ்ம ஜ்ஞானமே அபரிமிதம் ஸ்திரபலம் அளிக்கும் -எனவே ப்ரஹ்ம விசாராம்பம் தக்கதே –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: