ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -மூன்றாம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

நிர்குண வாக்யங்களுக்கும் விரோதம் இல்லை –நிர்க்குணம் -நிரஞ்ஜனம் -நிஷ்களம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -இது முதலான அந்த வாக்யங்கள்
ப்ராக்ருதங்களாயும் ஹேயங்களுமாயும் உள்ள குணங்களை விஷயமாகக் கொண்டு இருப்பதால் –
ஜ்ஞானம் மாத்ரம் ஸ்வரூபம் எனக் கூறுகின்ற ஸ்ருதிகளும் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான ஸ்வரூபதையைச் சொல்லுகின்றன-
அவ்வளவினால் நிர்விசேஷ ஜ்ஞானம் மாத்ரமே தத்வம் ஆகாது -ஜ்ஞானத்துக்கு ஆச்ரயமாய் இருப்பவனே ஜ்ஞான ஸ்வரூபனாய் இருப்பதால் –
ஜ்ஞானத்தையே ஸ்வரூபமாய்க் கொண்டு இருக்கிற அந்த ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான ஆச்ரயமானது ரத்னம் சூர்யன் தீபம் முதலிய வஸ்துக்களுக்கு
இருப்பது போலே உக்தமே என்று உரைக்கப் பட்டது –ஜ்ஞாத்ருத்வத்தையே யன்றோ எல்லா ஸ்ருதிகளும் கூறுகின்றன –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –என்றும் -ததை ஷத -என்றும் -சேயம் தேவதை ஷத -என்றும் -சாஷாத் லோகன் நுஸ்ருஜா இதி -என்றும்
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோவிததாதி காமான் -ஜ்ஞாஞ்ஜௌ த்வாவஜா வீச நீ சௌ–என்றும்
தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமஞ்ச தைவதம் பதிம் பதீ நாம் பரமம் பரஸ்தாத் விதாமதேவம் புவ நேச மீட்யம் -என்றும்
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் சமஸ் சாப்யதிகஸ் சத்ருச்யதே -என்றும் –
பராச்ய சக்திர் விவிதை வத்ருச்யதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப –இவை முதலிய ஸ்ருதிகள் –
ஜ்ஞான ஸ்வரூபமாகவே இருக்கிற பிராமதிற்கு ஜ்ஞாத்ருத்வம் முதலிய கல்யாண குணங்கள் ஸ்வ பாவ சித்தங்கள் என்று கூறுகின்றன –
சமஸ்த ஹேய குண ராஹித்யைத்தையும் சொல்லுகின்றன –
அபஹத பாபமா என்கிற பதத்தை முதலிலும் அபீபாச -என்கிற பதத்தை ஈற்றிலும் கொண்ட வாக்யத்தால் ஹேய குணங்களை நிஷேதித்து
சத்ய காம சத்ய சங்கல்ப என்று ப்ரஹ்மத்துக்கு கல்யாண குணங்களை விதிக்கிற இந்த சுருதியே நிர்குண வாக்யங்களுக்கும் ச குண வாக்யங்களுக்கும்
விஷயத்தை விவேசனம் செய்கிறது பற்றி ச குண நிர்குண வாக்யங்கள் இரண்டுக்கும் விரோதம் இல்லாமையால் இரண்டில் ஓன்று பொய்யான பொருளை உணர்த்துவதில் நோக்கு உள்ளது என்று சந்தேகப் படத் தக்கதல்ல –

ப்ராக்ருத –ஜ்ஞான மாத்ர –நதாவதா –ஜ்ஞாதுரே வஜ்ஞ்ஞா ந ஸ்வரூபத்வாத் –ஜ்ஞான ச்வரூபச்ய -ஜ்ஞாத்ருவ மேவஹி –
ஜ்ஞாதுரேவ ஜ்ஞான ஸ்வரூபத்வாத் இதி
ஜ்ஞான ஸ்வரூபச்யைவ–ஜ்ஞாத்ருமேவஹி –நதஸ்ய இதி –சமஸ்த ஹேய ரஹித தாஞ்ச –கல்யாண குணாத்
இதி சகுண நிர்குண வாக்யயோ ரீதி –அந்ய தரச்ய

——————————————————————————————- —

பீஷாஸ்மாத்-இத்யாதி ஸ்ருதிகளால் பிரம்மா குணங்களைத் தொடங்கி–தே யே சதம் -ஏக –என்று தொடர்ந்து க்ரமமாக ஷேத்ரஜ்ஞர்களுடைய
ஆனந்த அதிசயத்தைக் கூறி -யதோ வாசோ –வித்வான் — என்ற இந்த ஸ்ருதி ப்ரஹ்மத்தின் உடைய கல்யாண குணங்களின் அளவிறந்த
தன்மையை அதிக ஆதரத்துடன் கூறுகிறது –
அவன் சர்வஜ்ஞனனாய் இருக்கிற ப்ரஹ்மத்தோடு கூட எல்லா கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் —என்று ப்ரஹ்ம வேதன பலத்தை அறிவிக்கிற வாக்கியமானது சர்வஜ்ஞ்ஞனான பர ப்ரஹ்மத்தின் உடைய ஆனந்த்யத்தை சொல்லுகிறது -எல்லாம் அறிந்து ப்ரஹ்மத்தோடே கூட எல்லா காமங்களையும் நன்றாக அனுபவிக்கிறான் -காமங்கள் ஆவன -காமிக்கப் படுபவைகள் -கல்யாண குணங்கள் -ப்ரஹ்மத்துடன் கூட அதன் குணங்கள் அனைத்தையும் நன்றாய் அனுபவிக்கிறான் என்று அர்த்தம் – தஹர வித்யையில்–தஸ்மின் யதந்தா ததன் வேஷ்டவ்யம் -என்கிற வாக்யத்தைப் போலே குணா பிரதான்யத்தை சொல்லுவதற்க்காக -சஹ பிரகாரை கியம் –யதாக் ரதுரஸ் மின்லோக்கே புருஷோ பவதி ததேத பரேத்ய பவதி -என்கிற ஸ்ருதியினாலே சித்தம் –
எவனால் ப்ரஹ்மமானது புத்திக்கு விஷயம் ஆகாது என்று அறியப் பட்டு இருக்கிறதோ -அவனால் தான் ப்ரஹ்மம் அறியப் படுகிறது –
ப்ரஹ்மம் ஞான விஷயம் என்று அறிந்தவர்களால் அறியப் படுகிறது இல்லை எனப் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞான விஷயத்வம் கூறப் பட்டு இருக்கிறது என்று சொல்லப் படுமே யானால் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் உத்தமமான பதவியை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமே ஆகிறான் -என்ற ஜ்ஞானத்தினாலே மோஷ உபதேசமானது உண்டாகாமல் போகும் –ப்ரஹ்மம் இல்லை என்று அறிவானே யாகில் அவன் இல்லாதவனாகவே ஆகிறான் –ப்ரஹ்மம் இருக்கிறது என்று அறிவானே யாகில் அவனை அந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தினாலே சத்தை உள்ளவனாக அறிகிறார்கள் என்று ப்ரஹ்ம விஷய ஜ்ஞானத்தின் சத்பாவ அசத் பாவங்களால் ஆத்ம நாசத்தையும் ஆத்ம சத்தியையும் ஸ்ருதி கூறுகிறது
ஆதலால் ப்ரஹ்ம விஷயமான வேதனமே மோஷ உபாயம் என்று எல்லா ஸ்ருதிகளும் விதிக்கின்றன -ஜ்ஞானமும் உபாசன ரூபம் –
உபாசிக்கத் தக்க ப்ரஹ்மமும் ச குணம் என்று கூறப் பட்டு இருக்கிறது -யதாவாசோ நிவர்த்தந்தே –அப்ராப்ய மனசா சஹ –என்று
முடிவற்றதும் அபரிச்சின்னமான குணங்களோடு கூடியதுமான ப்ரஹ்மத்துக்கு இவ்வளவு தான் என்று வாக்காலும் மனசாலும் அளவிடத் தகைமை
கேட்க்கப் படுவதனால் -ப்ரஹ்மமானது இவ்வளவு என்று ப்ரஹ்ம விஷயகமான பரிச்சேத ஜ்ஞானம் உள்ளவர்களுக்கு ப்ரஹ்மமானது அறியப் படாததும்
எண்ணப் படாததுமாக ஆகின்றது என்று கூறப் பட்டது ப்ரஹ்மமானது அபரிச்சின்னமாய் இருப்பதால் –
அங்கனம் இல்லா விடில் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –விஜ்ஞாதம் அவிஜா நாதம் -என்று மத்த அவிஜ்ஞாதத்த வசனங்கள் அவ்விடத்திலே விரோதிக்கும் –
ந த்ருஷ்தேர்த்ருஷ்டாரம் ந்மேதேர் மந்தாரம் -என்கிற சுருதியானது திருஷ்டி மதி இவ்விரண்டைக் காட்டிலும் வேறான த்ரஷ்டாவையும் மந்தாவையும்
நிஷேதிக்கின்றது என்று யாது ஓன்று கூறப் பட்டதோ அது ஆகந்துகமான சைதன்ய குண சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு குதர்க்கத்தால் சித்திக்கிற அஜ்ஞ்ஞாத ஸ்வரூபதையை நினைத்து –அவ்வாறு ஆத்மாவை பாராதே எண்ணாதே பின்னியோ த்ரஷ்டாவாயும் மந்தாவாயுமாய் இருக்கிற ஆத்மாவை திருஷ்டி மதி ரூபமாகவே பார் நினை என்று சொல்லுகிறது என்று பரிஹரிக்கப் பட்டது -அல்லது —திருஷ்டியினால் பார்ப்பவனும் மதியினால் எண்ணுகிற வனுமான ஜீவாத்மாவை நிஷேதித்து சர்வ பூத அந்தராத்மாவான பரமாத்மாவையே உபாசிப்பாயாக என்று வாக்யார்த்தம்
அப்படிச் சொல்லாவிடில் விஜ்ஞா தாரம் அரேகேந விஜா நீயாத் -இது முதலிய ஜ்ஞாத்ருத்வ பிரதிபாதாக ஸ்ருதி விரோதமும் வரும் —
ஆனந்தோ ப்ரஹ்ம -என்கிற ஸ்ருதியினால் ஆனந்த மாத்ரமே ப்ரஹ்ம ஸ்வரூபமாக அறியப்படுகிறது என்று எது கூறப் பட்டதோ-அது ஜ்ஞானாஸ்ரயமான ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞானம் ஸ்வரூபம் என்று சொல்லுகிறது என்று பரிஹரிக்கப் பட்டது -அநுகூலமான ஜ்ஞானமே ஆனந்தம் என்று கூறப் படுகிறது –
விஜ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -என்கிற ஸ்ருதியினால் ஆனந்த ரூபமாகவே இருக்கின்ற ஜ்ஞானம் ப்ரஹ்மம் என்று அர்த்தம் –
அதனாலே தான் ஜ்ஞானம் ஆனந்தம் இரண்டுக்கும் விஷய ஐக்கியம் இருப்பதினாலேயே உங்களுக்கு ஏக ரசதை சித்திக்கிறது –
ஜ்ஞான ஸ்வரூபமான இந்த ப்ரஹ்மத்துக்கே ஜ்ஞாத்ருத்வமும் அநேக ஸ்ருதிகளாலே நன்று அறியப் பட்டு இருக்கிறது என்று கூறப் பட்டது –
அப்படிப் போலவே -ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த –ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் –என்கிற வ்யதிரேக நிர்தேசத்தாலும் ஆனந்தம் மாத்ரம்
ப்ரஹ்மம் அல்ல -பின்னியோ ஆனந்தம் உள்ளது ப்ரஹ்மம் -ஜ்ஞாத்ருத்வம் அன்றோ ஆனந்தித்வம் –

கல்யாண குணா ஆனந்தம் இதி —ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் —அத்யாதரேண — இயம் ஸ்ருதி
பரமே வ்யோமன் சோஸ்நுதே—-பிராப்தி சொல்லி -சர்வான் காமான் -பிராப்யம் சொல்லி —
பர சப்தம் என்பதைக் காட்ட பரஸ்ய விபஸ் சிதோ ப்ரஹ்மண-என்றும் — ப்ரஹ்ம விதாப் நோதிபரம –பல உபாசனயோ ஸ்ருத்யைவ –
யஸ்ய –ப்ரஹ்ம வித் –அசந்நேவ –அத -ஜ்ஞா நஞ்ச –உபாஸ் யஞ்ச –யதோ வாச –அனந்தசய –அபரிச்சின்ன குணச்ய —
அபரிச்சின்னத்வாத் ப்ரஹ்மண–அந்யதா –
யாத்து –நத்த்ருஷ்டே –தத்து –குதர்க்க -சித்தாம் -ஆகந்துக சைதன்ய குண யோகி தயா –அந்யதா —
ஆனந்த –தத் ஜ்ஞானாஸ்ரயச்ய –ஜ்ஞான மேவஹி–விஜ்ஞானம் -அசய -ஜ்ஞாத்ருத்வமேவஹி ஆனந்தித்வம் —

——————————————————————————————

எந்த நிலைமையில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பேதம் இருப்பது போலே ஏற்படுகிறதோ -இந்த பிரபஞ்சத்தில் -ப்ரஹ்மத்தைத் தவிர்ந்து வேறான
ஒரு வஸ்துவும் இல்லை —எவன் இந்த பிரபஞ்சத்தில் ப்ரஹ்மத்தை விட வேறாக வஸ்துக்கள் இருப்பது போல் காண்கிறானோ அவன்
அவித்யையின் நின்று அவித்யயை நாடுகிறான் –எப்பொழுது இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே ஆயிற்றோ அப்பொழுது எவன் எதனால் எதைப்
பார்ப்பான் -என்று பேத நிஷேதம் பலவாறாகக் காணப் படுகிறது என்று யாது ஓன்று கூறப் பட்டதோ -அது உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்ம காரயமாக இருப்பதாலும் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாக கொண்டு இருப்பதாலும் ப்ரஹ்மாத்மகமாக இருப்பது பற்றி
ஒன்றாக இருப்பதால் அதற்கு விருத்தமான நாநாத்வம் நிஷேதிக்கப் படுகிறது –
ஸூர நர திர்யக் ஸ்தாவர ரூபமாக பல வஸ்துக்களாக ஆகக் கடவேன் –அதற்காக ஆகாசாதி ரூபமாக நான் உண்டாக்கக் கடவேன் என்ற
பகு பவன சங்கல்பத்தை –முன்னிட்ட ஸ்ருதி சித்தமான ப்ரஹ்மத்தின் நாநா பாவமானது நிஷேதிக்கப் படுகிறது இல்லை என்று பரிஹரிக்கப் பட்டது
நாநாத்வ விசேஷத்தினால் இந்த சுருதியானது அபரமார்த்த விஷயை என்று சொல்லப் படுமே யாகில் -அல்ல –
பிரத்யஷம் முதலிய சகல பிரமாணங்களால் அறியப் படாததும் எவ்விதத்தாலும் ஏற முடியாததுமான நாநாத் வத்தை ப்ரஹ்மத்துக்கு பிரதிபாதித்து
அதே பாதிக்கப் படுகின்றது என்கிற இந்த வசனம் பரிஹசிக்கத் தக்கது –

ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப் நோதிய இஹ நா நேவ பஸ்யதி -யஸ்மாத் ஷரம் அதீதோஹம் –யோ மாமேவசம் மூடோஜா நாதி புருஷோத்தமம் —
ப்ருதகாத்மானம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டம் யதா பச்யத் அந்ய மீசம்
ப்ரஹ்ம கார்ய தயா -தத் அந்தர்யாமி கதயா –சோமயேமோ-சத்வா பிரஜா -சதா யதனா சந் மூலா சத் பிரதிஷ்டா —
மயிசர்வமிதம் ப்ரோதம் -ஸூ த்ரே மணி கணா—தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் — தஜ்ஜலான் —-தத் ப்ரத்ய நீக்க நாநாத்வமிதி -தத் ப்ரத்ய நீ கேதி-
நேஹ நா நாஸ்தி கிஞ்சன –ஏக தைவ அநுத் ரஷ்டவ்ய மிதி ஏகதா ஏக தயா —

—————————————————————————————-

யதாஹ் யேவைஷ ஏதஸ்மின் நுதர மந்தரம் -குருதே அத தஸ்ய பயம்பவதி –ப்ரஹ்மத்தின் இடம் கொஞ்சம் பேதத்தை பாராட்டுபவன் பயம் அடைவான் -என்று -ப்ரஹ்மத்தின் இடம் நாநா வத்தை பார்க்கிறவனுக்கு பயம் சம்பவிக்கும் -என்று உரைக்கப் பட்டது சரி அல்ல –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தாஜ்ஜலான் இதி சாந்த உபாசீத —ப்ரஹ்மத்தின் இடம் உண்டாகி லயித்து அவனால் ரஷிக்கப் படுகிறது என்று அறிபவன்
சாந்தனாக உபாசிக்கக் கடவன் -என்று சாந்திக்கு ஹேது -உபதேசிக்கப் படுவதால் அத்தை உபபாதிக்கிறார் -ததாஹி -என்று
உலகம் அனைத்தும் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்திதி சிருஷ்டி லயங்களுக்கு கர்மாவாக இருப்பதால் அந்த ப்ரஹ்மாத்மக அனுசந்தானத்தால் –
சாந்தி விதிக்கப் படுகிறது –அபய பிராப்திக்கு ஹேது -என்பதால் பய ஹேதுத்வத்துக்கு பிரசங்கம் இல்லை –
இங்கனம் ஆகில் அதற்குப் பிறகு அவனுக்கு பயம் உண்டாகிறது என்று ஏன் சொல்லப் படுகிறது -இதோ மறுமொழி உரைக்கப் படுகிறது –
கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கத் தகாதவனும் -சரீரம் இல்லாதவனும் -ஜாதி குணம் முதலியவைகளை சொல்லுகிற தேவாதி பதங்களால் வாச்யன் அல்லாதவனும் ஆதாரமும் இல்லாதவனுமான இந்த பரமாத்மாவின் இடத்தில் எப்பொழுது இவன் பயம் இல்லாமல் இருப்பதற்காக இடைவெளி இல்லாத சம்ருத்தி ரூபமான நிஷ்டையை அடைகிறானோ அப்பொழுது அபயத்தை பெற்றவனாக ஆகிறான் என்று
அபய பிராப்திக்கு ஹேதுவாக ப்ரஹ்மத்தின் இடத்தில் எந்த நிஷ்டை உரைக்கப் பட்டதோ அதற்கு விச்சேதம் வரில் பயம் உண்டாகிறது
என்று மகரிஷிகளால் இதற்கு சம்வாதம் கூறப் பட்டு இருக்கிறது -ஒரு முகூர்த்த காலமோ ஷண காலமோ வாஸூ தேவன் சிந்திக்கப் படாமல் போவானே யாகில் அது இஷ்ட ஹானி அது பெரிதான அநிஷ்ட பிராப்திக்கு அணுகி வருவதற்கு சந்து -அது அந்த பரமாத்மாவினால் உண்டு பண்ணப் பட்ட சித்த ஸ்தலனம்-
அந்த ஸ்வா தினத்தை இல்லாமையால் உள்ளபடி இராத அங்கங்களின் வியாபாரம் -இது முதலியவை -ப்ரஹ்மத்தின் இடத்தில் பிரதிஷ்டைக்கு அந்தரம் அவகாசம் விச்சேதமே – நஸ்தா நதோபி -என்கிற ஸூ த்ரத்தினில் ப்ரஹ்மமானது எல்லா விசேஷங்களாலும் விடுபட்டது என்று சொல்லப் போகிறார் -என்று யாதொன்று உரைக்கப் பட்டதோ -அது அப்படி அல்ல – ப்ரஹ்மமானது விசேஷங்களுடன் கூடியது என்றே அங்கு கூறப் போகிறார் -மாயா மாத்ரந்து–என்கிற ஸூ தரத்தினால் ஸ்வப்ன காலத்தில் அனுபவிக்கப் படுகிற பதார்த்தங்களுக்கு ஜாக்ரித அவஸ்தையில் அனுபவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்தங்களோடு ஒற்றுமை இல்லாமையால் மாயா மாத்ரத்வம் சொல்லப் படுகிறது என்பதனால் ஜாக்ரித அவஸ்தையில் அனுபவிக்கப் பட்ட பதார்த்தங்களுக்கு போலே பாரமார்த்திகத்வத்தையே சொல்லப் போகிறார் –
ஸ்ம்ருதி புராணங்களில் கூட நிர்விசேஷ ஜ்ஞான மாத்ரமே பரமார்த்தம் மற்றது அபார மார்த்திகம் -என்று அறியப் படுகின்றது என்று எது சொல்லப் பட்டதோ அது சரியல்ல —எவன் என்னை பிறப்பு இல்லாதவன் என்றும் ஆதி இல்லாதவன் என்றும் உலகங்களுக்கு மகேஸ்வரன் என்றும் அறிகிறானோ –
சராசரங்கள் அனைத்தும் என்னிடத்தில் நிலை பெற்று இருக்கின்றன -நான் அவைகளின் இடத்தில் அவைகளை ஆதாரமாக கொண்டு இருப்பவன் அல்ல
சரா சரங்கள் என் சங்கல்ப மாத்ரத்தாலே நிலை பெற்று இருக்கிறதே ஒழிய என்னிடத்தில் நிலை பெற்று இருக்க வில்லை
ஈஸ்வரனுக்கு அசாதாரணமாக இருக்கிற என்னுடைய சர்வ சக்தி யோகத்தைப் பார் -என் சங்கல்பமானது சராசரங்களை பரிக்கிறது -தாங்குகிறது -அவைகளில் நிலை பெற்று இருக்க வில்லை —பூதங்களுடைய சத்த அநு வர்த்தகம் -நான் எல்லா உலகங்களும் உண்டாவதற்கு காரணம் -அவ்வாறே நாசத்துக்கும் காரணம் -தனஞ்சய -என்னை விட மிக்க சிறப்புள்ள வேற வஸ்து ஒன்றும் கிடையாது —இவை அனைத்தும் நூலில் மணி கணங்கள் போலே என்னிடத்தில் இசைக்கப் பட்டு இருக்கிறது —நான் இந்த பிரபஞ்சகம் அனைத்தையும் சங்கல்பம் ஏக தேசத்தால் அதிஷ்டானாம் ஆக்கிக் கொண்டு நிலை பெற்று இருக்கிறேன் –
ஷர அஷர சப்த வாச்யங்களான சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறாக இருப்பவனான உத்தம புருஷனோ என்றால் பரமாத்மா வென்று சொல்லப் பட்டு இருக்கிறான் -குறைவற்றவனும் நியந்தாவாகவும் இருக்கிற எவன் மூ வுலகங்களையும் உள்ளே பிரவேசித்து தரிக்கிறானோ
யாதொரு காரணத்தினால் நான் அழிதலை ஸ்வ பாவமாகக் கொண்ட அசேதனங்களை தாண்டினவனாகவும் அழிவற்றவைகளான சேதன வர்க்கங்களைக்
காட்டிலும் உத்தமனாகவும் இருக்கிறேனோ அதனால் உலகத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி பெற்று இருக்கிறேன்

ததசத் –சர்வம் –ததாஹி –சர்வச்ய –அத யதோக்தம் -ப்ரஹ்மணி–யதுக்தம்

யோமா மீதி –யோகம் ஐஸ்வர்யம் –பூதபருத் –அஹம் -மயி -விஷ்டாப்யஹம் –உத்தம –

——————————————————————————————–

ரிஷியே அவன் சர்வ பூதங்களுக்கும் மூல காரணமாக இருக்கிற பிரதானத்தையும் மஹத் அஹந்காரங்க ளையும் சத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் உண்டாகிற தோஷங்களையும் -தாண்டினவனாகவும் -எல்லா வித ஜ்ஞான சங்கோச த்தைக் கடந்தவனாகவும் -எல்லா வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாகவும் இருக்கிற -உபவவிபூதி மத்யத்தில் எது இருக்கிறதோ அது எல்லாம் அவனால் வியாபிக்கப் பட்டு இருக்கிறது –
அந்த பரம புருஷன் சமஸ்த கல்யாண குணங்களை தரமி ஸ்வரூபமாக உடையவன் -தன்னுடைய சாமர்த்திய லேசத்தாலேயே தரிக்கப் பட்டு இருக்கிற கார்ய வஸ்து சமூஹத்தை உடையவன் –இச்சையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டும் தனக்கு அனுபவமுமாய் இருக்கிற பெரிதான தேஹங்களுடன் கூடியவன்
உலகங்களுக்கு ஹிதமான கார்யங்களைச் செய்து முடிப்பவன் தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் அபரிச்சின்ன மயமான ஜ்ஞானம் நல்ல வீர்யம் சக்தி முதலிய குணங்களின் குவியலாக இருப்பவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளிலும் மேம்பட்டவன் பராபர வஸ்துக்களுக்கு நியந்தாவாக இருக்கிற எந்த பரம புருஷன் இடத்தில் சமஸ்தங்களான கிலேசங்கள் முதலியவைகள் இல்லையோ -அவன் எல்லா உலகங்களுக்கும் நியந்தா -கார்ய காரண பாவ அவஸ்தை யுடன் கூடிய சேதன வர்க்கங்களை சரீரமாக உடையவன் -அவ்யக்தமான ஸ்வரூபத்துடன் உடையவன் பிரகாசிக்கிற ஸ்வரூபம் உடையவன் -எல்லா வற்றுக்கும் நியந்தா -ஸ்வரூபத்தாலும் பிரகாரத்தாலும் எல்லா வற்றையும் அறிந்தவன் -அவாப்த சமஸ்த காமன் –எல்லா வற்றையும் அப்ருதக் சித்த விசேஷணங்களாகக் கொண்டவன் -தனக்கு மேலாக ஒருவரும் இல்லாத ஈஸ்வரன் என்ற பெயர் உள்ளவன் -எந்த சாஸ்த்ர்யா ஜன்ய ஜ்ஞானத்தால் தோஷம் அற்றதும் சுத்தமாகவும் மிக்க நிர்மலமாயும் ஸ்திர ஸ்வ பாவமும் உள்ளது மான அந்த ப்ரஹ்மம் அறியப் படுகிறதோ -எந்த பரபக்தி ரூபமாயும் அனுபவ ரூபமாகவும் இருக்கிற ஜ்ஞானத்தால் அனுபவிக்கப் படுகிறதோ அது ஜ்ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஜ்ஞானம் என்று சொல்லப் பட்டு இருக்கிறது –

புராண வசனங்கள் -ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும் -சமஸ்த கல்யாண குணாத்மகத்தையும் -திவ்ய ஏக யோர்த்தவிவசனை கவச நே –சர்வேஸ்வர —

—————————————————————————

ஹே மைத்ரேய-சுத்தனாகவே இருப்பவனும் உபய விபூதி நாதன் என்று பெயர் உள்ளவனும் சர்வ காரணங்களுக்கும் காரணமாக இருப்பவனும்
பர ப்ரஹ்மம் என்று -சொல்லப் படுகிறவனுமான பரமாத்மாவினிடத்தில் பகவத் சப்தம் யோக ரூடமாக இருக்கிறது –
அகாரமானது பிரகிருதி புருஷ காலங்களை கார்ய உத்பத்தி யோக்யங்களாகச் செய்கிறான் -அப்படியே ஸ்வாமியுமாகவும் இருக்கிறான் என்கிற
இரண்டு அர்த்தங்களோடு கூடியதாக இருக்கிறது –ரிஷியே அவ்வாறாகவே ஸ்திதி கர்த்தா சம்ஹார கர்த்தா சிருஷ்டி கர்த்தா இந்த மூன்றும்
அகாரத்தின் அர்த்தம் –சமக்ரமான ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி ஸ்ரீ ஜ்ஞானம் வைராக்கியம் இந்த ஆறுக்கும் பகம் -என்று பெயர் –
பூதங்களுக்கு ஆத்மாவாக இருப்பவனும் எல்லாவற்றையும் சரீரமாக கொண்டவனுமான அந்த பரமாத்மாவின் இடத்தில் சேதனங்களும் அசேதனங்களும் வசிக்கின்றன -அவனும் எல்லா வஸ்துக்களிலும் வசிக்கிறான் -என்பதினால் குறைவற்றவான பரமாத்மா அகாரத்தால் உணர்த்தப் படுகிறான் –
ஹேய குணங்களின் சம்பந்தம் இல்லாத ஜ்ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் இவைகள் அனைத்தைக்கும் பகவத் சப்தத்துக்கு வாசகங்கள் –
ஹே மைத்ரேய -இவ்வித ஸ்வ பாவம் உள்ள பகவான் என்கிற இந்த மஹா சப்தமானது பர ப்ரஹ்மமாக இருக்கிற வாஸூ தேவனை தவிர்த்து வேறு ஒரு தேவதையும் அணுகா -பூஜ்யங்களான அவயவார்த்தங்களான சக்தி ரூடி -இவைகளோடு கூடிய இந்த சப்தமானது அந்த ப்ரஹ்மத்தின் இடத்தில் முக்கியமாக வழங்கப் படுகிறதே ஒழிய ஔபசாரிகம் அல்ல -அந்த ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்றவர்கள் பக்கலில் உபசாரத்தால் அன்றோ பிரயோகிக்கப் படுகிறது
ராஜனே -எந்த ரூபத்தின் இடத்தில் இந்த சக்திகள் அனைத்தும் நிலை பெற்று இருக்கின்றனவோ அது எல்லா ரூபங்களை விட வி லஷணமான சந்நிவேசத்துடன்
கூடியதும் வேறானதும் இவ்விதம் உள்ளது என்று அளவிட நிச்சயிக்க முடியாததுமான ஹரியின் ரூபம் –திவ்ய மங்கள விக்ரஹம் –ஜனங்களுக்கு நியந்தாவாக இருப்பவனே –அந்த பரம புருஷன் தேவன் திர்யக் மனுஷ்யன் என்கிற பெயர்களுடன் சேஷ்டைகளுடன் கூடிய சமஸ்த சக்தி ரூபங்களையும் லோக உபகாரத்துக்காக தன லீலையினால் செய்கிறான் -லௌகிக பிரமாணங்களால் கண்டு அறிவதற்கு அசக்யனாய் இருக்கிற அந்த பரமாத்வாவின் உடையதான தேச
நியதம் இல்லாததும் -ப்ரதிபந்தகம் இல்லாததுமான அந்த சேஷ்டையானது கர்ம ரூபமான ஹேதுவினால் உண்டாகிறது அன்று -இவ்விதமான ஸ்வ பாவத்தின் உடன் கூடினதும் -விஷ்ணு என்கிற பெயர் உள்ளதுமான திவ்ய ஆத்ம ஸ்வரூபமானது -மலத்திற்கு பிரதிபடமானது -அழிவு இல்லாதது -ஸ்வ ரூபத்தால் வியாபகமாய் இருக்கிறது -தன் படியாகவே தர்மத்திலானிலும் விகாரம் இல்லாதது -எல்லா ஹேயங்க ளாலும் விடுபட்டது -ப்ரஹ்மாதிகளைக் காட்டிலும் சிறப்பு உள்ளவன் -மிக்கார் ஒருவரும் இல்லாதவன் -எல்லா தேசங்களையும் வியாபித்து இருப்பவன் –எல்லா வஸ்துக்களுக்கும் ஆத்மாவாக இருந்து இணை பிரியாமல் இருப்பவன் –ஜாதி ரூபம் ரசம் கந்தம் சொல்லுகிற சப்த ரூப விசேஷத்தால் விடுபட்டவன் –உண்டாகிறது பரிணமிக்கிறது வ்ருத்தி அடைகிறது அவயவங்கள் குறைகிறது நசிக்கிறது போன்ற ஷட்விதபாவ விகாரங்கள் அற்று எப்பொழுதும் சத்தாச்ரயன் என்று சொல்வதற்கு மாதரம் சகயமாக இருக்கிறவன்-
யாதொரு காரணத்தினால் எல்லா இடத்திலும் வசிக்கிறானோ -எல்லா வஸ்துக்களும் இவன் இடத்தில் வசிக்கிறதோ –அதனால் வா ஸூ தேவன் என்று கற்று அறிந்தவர்களால் கூறப் படுபவன் -அவனே நிகரில்லாத -மேல்பட்ட வஸ்து இல்லாத –ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எல்லை இல்லாத மேன்மை வாய்ந்த -தாகவும் இருக்கிற ப்ரஹ்மம் -சாஸ்வதமாக இருப்பவன் -பிறப்பு அற்றவன் –அழிவற்றவன் -குறைவில்லாதவன் –வ்ருத்தி பரிமாணங்கள் இல்லாமல் ஒரே வித ஸ்வரூபத்துடன் கூடினவன் –ஹேய குணங்கள் இல்லாமல் நிர்மலமாய் இருப்பவன் -வ்யக்த அவ்யக்த ஸ்வரூபமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் அந்த ப்ரஹ்மமே-அவ்வாறே அந்த ப்ரஹ்மம் புருஷ ரூபமாகவும் கால ரூபமாகவும் இருக்கிறது –

சமஸ்த ஜகதாம் ஏவம் பிரகாரம் –பர பராணாம் –பரம –சர்வத்ர -தத் ப்ரஹ்ம –அஜம் அஷரம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் –ஹேயா பாவாச்ச நிர்மலம் —

—————————————————————

வ்யக்தமான பிரபஞ்ச ஸ்வரூபிணி யாகவும் -அவ்யக்தமான தமஸ் ஸ்வரூபிணி யாகவும் இருப்பதாக எந்த பிரகிருதி என்னால் முன்பு கூறப் பட்டதோ
அந்த பிரகிருதி புருஷம் இவ்விரண்டும் பரமாத்மாவின் இடத்தில் லயிக்கின்றன —பரமாத்மாவோ என்றால் எல்லா வஸ்துக்களுக்கும் ஆதாரமாய் இருப்பவன் –மேல் யாரும் இல்லாத சர்வேஸ்வரன் –வேதங்களிலும் வேதாந்தங்களிலும் விஷ்ணு என்று கோஷிக்கப் படுபவன் –
அவனுக்கு மூர்த்தம் அமூர்த்தம் இரண்டு ரூபங்கள் உண்டு -அவ்விரண்டு ரூபங்களும் எல்லா பூதங்கள் இடங்களிலும் ஷர அஷர ச்வரூபங்களாக நிலை பெற்று இருக்கின்றன -கர்ம பந்தத்தின் நின்றும் விடுபட்ட முக்தாத்மா ரூபம் அஷரம் என்று சொல்லப் படுகிறது -இவ்வுலகம் அனைத்தும் ஷரம் என்று சொல்லப் படுகிறது -அக்னியின் ஒளி நாலா பக்கமும் பரவுவது போலே ப்ரஹ்மத்தின் சக்தி உலகம் அனைத்தும் வ்யாபிக்கப் பட்டு -அந்த சக்தியே பரா எனப் படுகிறது
அவ்வாறே ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞை உள்ள சக்தி அபரா என்று சொல்லப் பட்டு இருக்கிறது -கர்மா என்ற பெயர் உள்ள அவித்யை மூன்றாவது சக்தி யாக இச்சிக்கப் படுகிறது -ராஜனே எல்லா வஸ்துக்களையும் அடைந்து இருக்கிற அந்த ஷேத்ரஜ்ஞ சக்தி எதனால் சுற்றப் பட்டு இருந்து கொண்டு மிகவும் தொடர்ச்சியாய் உள்ள சம்சார தாபங்களை அடைகிறதோ -பூமியைப் பாதுகாப்பவனே -அந்த ஷேத்ரஜ்ஞ சக்தி அவித்யையினால் மூடப் பட்டு கர்ம தாரதம்யத்துக்கு அனுகுணமாக ஜ்ஞான தார தம்யத்துடன் இருக்கிறது -மகா புத்தி உள்ளவனே -சர்வ பூதங்களையும் வியாபித்து இருக்கிற விஷ்ணு சக்தியினால் பகவானை விட்டு விலகி தனித்து இருத்தலை ஸ்வ பாவமாக கொண்டு இராதா பிரதானம் புருஷன் இவ்விரண்டும் கவரப் பட்டு இருக்கின்றன அந்த சக்தியே சம்சாரத்துக்கும் மோஷத்துக்கும்-காற்று ஜலபிந்துக்களை வஹிப்பது போலே விஷ்ணுவின் சக்தியும் பக்த முக்தாத்மாக்களை தாங்கிக் கொண்டு இருக்கிறது காரணம் -உலகம் அனைத்தும் ஜன்ம நாச விகல்பங்கள் உள்ளவை

இது முதலியதலால்-பர ப்ரஹ்மமானது ஸ்வ பாவத்தினாலேயே சமஸ்த தோஷங்களையும் நிரசித்தது என்றும் சமஸ்த கல்யாண குணாத்மகம் என்றும்
பிரபஞ்சத்தின் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் உள்ளுக்குள் பிரவேசம் நியமனம் இவைகள் முதலியவற்றை லீலையாகக் கொண்டது என்றும் -பிரதிபாதித்து -எல்லா நிலைமைகளுடன் கூடி நிலை பெற்று இருக்கிற சித் அசித் வஸ்துக்கள் அனைத்தும் பாராமார்த்திகம் என்றும்
அவைகளே பரமாத்மாவுக்கு சரீரமாக இருப்பதால் அவைகளுக்கு ரூபத்வத்தை சரீர ரூப தனு அம்ச சக்தி விபூதி முதலிய சப்தங்களாலும் தத் சப்த சாமா நாதி கரண்யத்தாலும் சொல்லி -அந்த பர ப்ரஹ்மத்துக்கு விபூதியாக இருக்கிற சித் பதார்த்தத்துக்கு ச்வரூபத்தோடு இருப்பையும் அசித்துடன் சேர்ந்து இருப்பதால் ஷேத்ரஜ்ஞ ரூபமாக இருப்பையும் சொல்லி ஷேத்ரஜ்ஞ அவஸ்தையில் புண்ய பாபாத்மக கர்மரூப வித்யையினால் சுத்தப் பட்டு இருப்பதால் ஸ்வா பாவிகமான ஜ்ஞான ரூபத்வ அனுசந்தானமும் அசித் ரூபாகார்த்தமாக அனுசந்தானமும் பிரதிபாதிக்கப் பட்டதனால்
பர ப்ரஹ்மமானது ச விசேஷம் என்றும் அதின் விபூதியாக இருக்கிற ஜகத்தும் பாரமார்த்திகம் என்றே அறியப் படுகிறது –

தவே ரூப -ஷர அஷர ரூபே -அகில புவன -த்ரிபாத் நித்ய விபூதியும் லீலா விபூதியும் -பூப மூர்த்த அமூர்த்தஞ்ச –விஷ்ணு சக்தி -ப்ரதா நஞ்ச –இத்யாதி நா -சரீர ரூப தன் வம்ச —

——————————————————————————

ப்ரத்யஸ்தமித பேதம் -என்கிற இடத்தில் தேவ மனுஷ்யாதி பிரகிருதி பரிமாண விசேஷங்களோடு சேர்ந்து இருந்த போதிலும் -ஆத்மாவின் ஸ்வரூபமானது அந்த பிரகிருதி -பரிமாண விசேஷங்களை அடைந்து இருக்கிற பேதம் இல்லாமையாலே -அந்த பேதத்தைச் சொல்லுகிற தேவாதி சப்தங்களுக்கு அகோசரம் ஜ்ஞான சத்தையையே லஷணமாகக் கொண்டது -தன்னாலேயே அறியத் தக்கது -பிரக்ராந்தர யோகம் உள்ளவனுடைய மனதிற்கு கோசரம் அன்று எனக் கூறப் படுகிறது என்கிற இந்த கிரந்த சந்தர்ப்பத்தால் ப்ரபஞ்சாப லாபமில்லை -இது எப்படி அறியப் படுகிறது என்று வினவப் படுமே யாகில் அது சொல்லப்படுகிறது -இந்த பிரகரணத்தில் சம்சாரம் ஆகிற ரோகத்திற்கு முக்கியமான மருந்தாக யோகத்தைச் சொல்லி ப்ரத்யாஹாரத்தை ஈறாகக் கொண்ட யோகாவயவங்களையும் சொல்லி தாரணை சித்திப்பத்தின் பொருட்டு சுபாஸ்ரயத்தை சொல்லுவதற்கு பர ப்ரஹ்மமான விஷ்ணுவுடைய சக்தி சப்தத்தால் சொல்லத்தக்க இரண்டு ரூபங்களையும் மூர்த்தம் அமூர்தம் என்ற இரண்டு பாகு பாட்டுடன் பிரதிபாதித்து -மூன்றாவதான அவித்யை கர்மா சக்தி யாழ் சுத்தப் பட்டு இருக்கும் அசித் விசிஷ்டனான மூர்த்தம் எனப் பெயர் உள்ள ஷேத்ரஜ்ஞ்ஞனை மூன்று பாவனைகளின் சம்பந்தத்தால் அசுபன் என்று சொல்லி -இரண்டாவதாக இருப்பதும் கர்மா என்னும் அவித்யை விட்டு விலகியதும் அசித் சம்பத்தை அற்றதும் ஜ்ஞானத்தையே ஸ்வரூபமாக கொண்டதுமான அமூர்தம் என்கிற விபாகமானது
நிஷ்பன்ன யோகம் உள்ளவர்களால் தியானிக்கத் தக்கதாக இருப்பதாலும் ப்ராக்ராந்த யோகனுடைய மனதிற்கு ஆலம்பனம் இல்லாததாலும் ச்வத சுத்தி இல்லாமையாலும் அதற்கு சுபாஸ்ரயத்வத்தை நிஷேதித்து பரசக்தி ரூபமான இந்த அமூர்தம் என்ன -அபரசக்தி ரூபமான ஷேத்ரஜ்ஞ்ஞன் எனப் பெயர் வாந்த மூர்த்தம் என்ன –பரசக்தி ரூபனான ஆத்மாவுக்கு ஷேதரஜ்ஞதா பிராப்திக்கு ஹேதுவாய் இருக்கிற த்ருதீய சக்தி என்ற பெயர் உள்ள கர்ம ரூபா வித்யை என்ன
இப்படிப்பட்ட இம் மூன்று சக்திகளுக்கும் ஆச்ரயமாக இருப்பதும் -ஆதித்ய வர்ணம் இது முதலிய வேதாந்த வாக்யங்களால் பிரதிபாதிக்கப் பட்டு சித்து பெற்று இருப்பதுமான மூர்த ரூபமானது சுபாஸ்ரயம் என்று கூறப் பட்டது –
இந்த இடத்தில் பரிசுத்தாத்மா ஸ்வரூபத்திற்கு சுபாஸ்ரயதா நர்ஹதையைச் சொல்லுவதற்க்காக -பரயச்தமித பேதம்யத் -என்று சொல்லப் படுகிறது -இதை நிரூபிக்கிறார் ததாஹி என்று தொடங்கும் கிரந்தத்தினால் –ராஜன் -யோகிகளால் சிந்திக்கத்தக்கதும் -அனைத்திலும் சிறந்த -எல்லாராலும் அடையத் தக்க விஷ்ணு என்ற பெயர் உடைய பரமாத்மாவின் இரண்டாவது ரூபம் -அதை யோகத்தில் இழிகிறவனால் சிந்திக்க சகயம் அல்ல –
ராஜன் எந்த ரூபத்தில் எல்லா சக்திகளும் நிலை பெற்று இருக்கின்றனவோ அது எல்லா ரூபங்களைக் காட்டிலும் விஜாதீயமானதும் வேறானதுமான ஹரியினுடைய மகத்தான ரூபம் என்றும் சொல்லுகிறது -அப்படியே சதுர்முகன் சனகன் சனந்தனன் முதலியவர்கள் அவித்யையினால் சுற்றப் பட்டு இருப்பதால்
அவர்களுக்கு சுபாஸ்ரயாத அனர்ஹதையைச் சொல்லி பக்தர்களாகாவே இருந்து பிறகு யோகத்தினால் போதம் உண்டாகி ஸ்வரூபத்தை அடைந்தவர்களுக்கும் ச்வத சக்தி இல்லாமையாலே சுபாஸ்ரயத்வம் சௌநக பகவானால் நிஷேதிக்கப் பட்டது -ஜகதிற்குள் இருக்கிற ப்ரஹ்ம தேவன் முதல் தருணம் ஈறாக இருக்கிற பிராணிகள் யாதொரு காரணத்தினால் கர்மாவினால் உண்டு பண்ணப் பட்ட சம்சாரத்தினால் வசப் பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தியான விஷயத்தில் உபகாரகர்கள் அல்ல -அவர்கள் அனைவரும் அவித்யைக்கு உட்பட்டவர்களாயும் சம்சார கோசரரர் களாயும் இருக்கிறார்கள் அன்றோ
பிற்காலத்தில் போதம் உள்ளவர்களாக இருந்த போதிலும் கூட தியான விஷயத்தில் உபகாரகர்கள் அல்ல – -ஸ்வ பாவ சித்தமான போதம் கிடையாது
இயற்கையான ஞானம் உள்ள பர ப்ரஹ்ம ஸ்வரூபியான விஷ்ணுவுக்கே-அவனது அசாதாராண ஸ்வரூபமே – சுபாஸ்ரத்வம் கொண்டது –ஆதலால் இங்கு பேதாபலாபமானது அறியப் படுகிறது இல்லை –
ஜ்ஞான ஸ்வரூபம் என்கிற இடத்திலும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறாக இருக்கிற அர்த்தங்கள் அனைத்துக்கும் மித்யாத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது இல்லை –
ஜ்ஞான ஸ்வரூபியான ஆத்மாவுக்கு தேவன் மனுஷ்யன் போன்ற தோற்றம் பிராந்தி என்று இவ்வளவு மாதரம் சொல்லப் பட்டு இருப்பதால் –
சிப்பி -ரஜதம் பிராந்தி தோற்றம் என்றதும் அனைத்து ரஜத சமூஹமும் மிதியை அல்லவே -ஜகத் ப்ரஹ்மம் இரண்டும் சாமா நாதி கரண்யத்தால் ஐக்யம் தோன்றுவதால் -ஜ்ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்துக்கு அர்த்தாகாரத்தை யானது பிராந்தி என்று சொன்னால் அர்த்த ஜாதம் அனைத்துக்கும் மித்யாத்வம் சொல்லப் பட்டதாகும் என்று வினவப் படுமாகில் அது சரியல்ல -பர ப்ரஹ்மமான விஷ்ணு அனைத்து அஜ்ஞ்ஞான சமூஹங்களையும் விலக்கி சமஸ்த கல்யாண குணாத் மகராகவும் மகா விபூதி உள்ளவர் என்றும் அறியப் படுவதால் -பிராந்தி தர்சனம் சம்பவியாதே –ஐக்ய பிரதி பாதனமும் பிராந்தி தர்சனம் சஹியாமையும் விருத்தம் அல்ல என்றே அடுத்து உபபாதிக்கப் படப் போகிறது -ஆகையால் இந்த ஸ்லோகமும் அர்த்த ஸ்வரூபத்துக்கு பாதகம் அன்று –
யதோவா இமானி பூதா நிஜயந்தே யேன ஜாதானி ஜீவநதி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ தத் ப்ரஹ்ம -சுருதி வசனம் -ஜஜாஜ் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மம்
இதிஹாச புராணாப்யாம் வதம் சமுபப்ரும்ஹயேத்- பிபேத் அல்ப ஸ்ருதாத் வேதோ மா மாயம் பிரதர்ஷயிதி –வேத வாக்யங்களை சம்சயம் தீர்க்கவே இதிஹாச புராணங்கள் -அநந்தாவை வேதா –அல்ப சுருதி செவிப்பட்டு அறிய அசக்யம் என்பதால் நிச்சயம் உண்டாக இவை உதவும்

சத்வ புராணங்களே கொள்ளத் தக்கது -ஸ்ரீ விஷ்ணு புராணமே புராண ரத்னம்-
-அதில் புலச்ய வசிஷ்ட மகரிஷிகளின் வர பிரதானத்தால் அடையப் பட்டு இருக்கிற பரதேவதா பாரமார்த்த்யா ஜ்ஞானம் உள்ளவரான பகவானான பராசரர்
இடம் இருந்து-தன்னால் அறியப் பட்டு இருக்கிற வேதார்த்தின் உப ப்ருஹ்மணத்தை விரும்புவதாக மைத்ரேயர்
இச்சதி –ச்ரோதும் தவத்தோ யதா ஜகத் பபூவ –பூயச்சயதா மஹா பாக பவிஷ்யதி -யன் மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன்யதச்சை தச்சராச்சரம் –
–லீ நமாசீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச — என்று கேட்டார் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப விசேஷம் -விபூதி பேதங்களின் பிரகாரங்கள் -ஆராதன ஸ்வரூபம் -பல விசேஷம் போன்றவை வினவப் பட்டன –
யதச்சை தச்சராசரம் –நிமித்தம் உபாதானம் இரண்டும் வினவப் பட்டன -யன் மயம் -சிருஷ்டி ஸ்திதி லயங்களுக்கு கர்மாவாக இருக்கிற ஜகத்தானது எதை ஆத்மாவாகக் கொண்டு இருக்கிறது என்று வினவப் பட்டது -ஜகச்சச -இதற்கு உத்தரம் -பொருந்தாதே –விஷ்ணு -தத் பிரக்ருத வசனே மயம் -பிரத்யயத்தால் -உலகம் அனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரம் –ஜகத்சச -ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் சரீராத்மா பாவத்தைக் கொண்ட சாமா நாதி கரண்யம்
நிர்விசேஷ வஸ்து என்று கொண்டால் எல்லா பிரச்ன பிரதி வசனங்களும் பொருந்தாது – ஜகத் ப்ரஹ்மம் இரண்டும் ஒரே த்ரவ்யம் என்று கொண்டால் சத்யா சங்கல்பாதி கல்யாண குணத்வமும் அகில ஹேய பிரத்ய நீகதையும் பாதிக்கப்படும் -ப்ரஹ்மம் அசுபங்களுக்கும் ஆஸ்பதமாகவும் ஆக வேண்டியதாகும் -எனவே இந்த சாமா நாதி கரண்யம் ஆத்ம சரீர பாவத்திலே முக்ய வ்ருத்தம் என்று ஸ்தாபிக்கப் படப் போகிறது –
ஆதலால் -விஷ்ணோஸ் சகா சாதுத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் ஸ்திதி சம்யமகர்தா சௌ ஜகதோச்ய ஜகச்சச —என்று சங்க்ரஹமாக அருளிச் செய்ததை -பர பராணாம்-என்று -தொடங்கி விஸ்தாரமாக சொல்ல –பர ப்ரஹ்மம் –ஆறு குணங்கள் நிறைந்த பகவான் – விஷ்ணு -அவிகாராய -இத்யாதி ஸ்லோகத்தால் பிரணாமம் சொல்லி -ஹிரண்ய கர்ப்பன் அவதாரமாக இருக்கும் மஹா விஷ்ணு சங்கரன் த்ரி மூர்த்தி ரூபமாகவும் -பிரதானம் காலம் ஷேத்ரஜ்ஞ்ஞர் களுடைய சமஷ்டி ரூபமாகவும் வ்யஷ்டி ரூபமாகவும் அவரையே நமஸ்கரிக்கிறார் –
நமஸ்கார விஷயமாக முதல் ஏழு ஸ்லோகங்கள் -ரஷார்த்தம் சர்வ பூதானாம் விஷ்ணுத்வ முபஜக்மிவான் –சஜாதீயஸ் தேஷாமிதி துவிப வாக்யமபி பஜன் –

அதில் ஜ்ஞான ஸ்வரூபம் என்கிற இந்த ஸ்லோகம் ஷேத்ரஜ்ஞ வ்யஷ்டி ரூபமாக இருக்கிற பரமாத்மாவினுடைய ஸ்வ பாவத்தைக் கூறுகிறது –ஆகையால் நிர்விசேஷ வஸ்துவுக்கு இவ்விடம் பிரதீதி இல்லையே -சாஸ்திரம் நிர்விசேஷ ஜ்ஞான ரூப ப்ரஹ்ம அதிஷ்டான ப்ரஹ்மத்தை பகர நோக்கு உள்ளதாகுமானால்
நிர் குணச்யா ப்ரேம யஸ்ய சுத்தஸ் யாப்ய மலாத் மன கதம் சர்காதி கர்த்ருத்வம் ப்ரஹ்மணோஹ் யுபகம்யதே -என்கிற சோத்யமும்-
சக்தயஸ் சர்வ பாவா நாம சிந்தய ஜ்ஞான கோசரா -யதோ அதோ ப்ரஹ்மணச் நாஸ்து சர்காத்யா பாவ சக்த்யா –பவந்தி தபதாம் ஸ்ரேஷ்ட பர்வ கண்யய தோஷ்ணதா -என்கிற பரிகாரமும் எவ்வாறு பொருந்தும் -நிர்குண ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு சர்க்கம் முதலியவற்றில் கர்த்ருத்வம் -ப்ரஹ்மத்துக்கு பாரமார்த்திக சர்க்கம் இல்லை பின்னையோ பிராந்தியினால் கல்பிக்கப் பட்டு இருக்கிறது என்று சோத்ய பரிஹாரங்கள் இரண்டும் இருந்து இருக்கும்
உத்பத்தி முதலிய கார்யமானது சத்வம் முதலிய குணங்களோடு கூடியவர்களும் அபரி பூர்ணர்களும் கர்ம வச்யர்களாக இருக்கும் சேதனர்கள் இடம் காணப் பட்டு இருப்பதால் சத்வாதி குணங்களால் விடுபட்டவனும் பரி பூர்ணனும் கர்ம வச்யனாக இராதவனும் கர்ம சம்பந்தத்துக்கு அனர்ஹனாயும் இருக்கிறவனுக்கு எவ்வாறு சர்காதி கர்த்தவ்யம் ஒப்புக் கொள்ளப் படுகிறது என்று சோத்யம் –
நேரில் காணப் படுகிற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் விஜாதீயமாக இருப்பதும் கூறப் பட்ட வண்ணமான ஸ்வ பாவத்துடன் கூடியதுமாகவே இருக்கிற ப்ரஹ்மத்துக்கு ஜலம்-விட வேறு பட்ட அக்னி முதலியவற்றுக்கு ஔஷண்யம் முதலிய சக்தி சம்பந்தம் போலே எல்லா சக்திகளோடும் சம்பந்தமானது விருத்தம் ஆகாது என்று பரிஹாரம் –
மேல் உள்ள நான்கு ஸ்லோகங்களுக்கும் வியாக்யானம் இனி மேல்
பரமார்த்தஸ் த்வமேவ வைக-இவை முதலியதும் கூட ப்ரஹ்மத்தை தவிர்த்த மற்ற அனைத்துக்கும் அபாரமார்த்யத்தைச் சொல்லுகிறது இல்லை
பின்னையோ எல்லாம் ப்ரஹ்மாத்மகமாக இருப்பதால் -ப்ரஹ்மாத்மகமாக இராமல் ப்ரஹ்மத்தை விட தனித்து இருக்கும் வஸ்துக்களுக்கு அபார மர்த்யத்தைச் சொல்லுகிறது -அதையே உப பாதிக்கிறார் -தவைஷ் மஹிமா யே நவ்யாப்த மேதச் சராசரம் – உனது மகிமையால் தானே –உன்னை ஆத்மாவாகக் கொண்டதே -உன்னைவிட வேறு ஒன்றும் கிடையாது -நீ ஒருவனே பரமாத்மாக இருப்பவன் -அதனால் இது கூறப் படுகிறது -அப்படி இல்லா விடில்
ஜகத பதே தவம் -முதலிய பதங்களுக்கு லஷணையும் வேண்டி வரும் -மஹா வராஹ பகவான் லீலையால் உத்தாரணம் -ஸ்துதி பிரகரணத்துக்கும் விரோதி வரும் -உம்மை ஆத்மாவாகக் கொண்டு சகலமும் த்வதாத்மகம் என்கிற அனுபவத்துக்கு சாதனமான யோகம் இல்லாதவர்கள் இதை கேவல தேவ மனுஷ்யாதி ரூபம் என்றே பார்க்கிறார்கள் -ஜ்ஞான ஆகாரர்களான ஆத்மாக்களை தேவாதி அர்த்தாகாரமாக உள்ளவர்களாக பார்ப்பதும் பிரமம் –யதேதத் த்ருச்யதே –ஜ்ஞான ஸ்வரூபம் அகிலம் —

ஏகா தாகி நிச்சா சஹாயே –ஸூ த்ரம்
த்ரிபிர் குண மயைர் பாவை ரேபிஸ் சர்வமிதம் ஜகத் மோஹிதம் நாபி ஜா நாதி மா மேப்ய –பரமவ்யயம் —

——————————————————————————–

யேதுஜ்ஞான வித -ஞான ச்வரூபமகமாகவும் ப்ரஹ்மத்தின் சரீரமாக்கவுமே பார்க்கிறார்கள் -அங்கனம் இல்லாவிடில் ஸ்லோகங்களுக்கு
பௌ நக்ருதயமும் பதங்களுக்கு லஷணையும் அர்த்த விரோதமும் பிரகரண விரோதமும் சம்பவிக்கும் –
தச்யாத்மபரதேக ஷூ சதோபயேகமயம் –என்று ஆத்மாக்கள் ஞானைகராக ரர்களாக இருக்க தேவாதி பிரகிருதி பரிமாண விசேஷ ரூபமான
பேத தர்சனம் அதத்யம் என்று கூறப் பட்டது
சு நி சைவ ச்வபாகேச பண்டிதாஸ் சம தர்சன —நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம –ஸ்ரீ கிருஷ்ணனே அருளினான் –
தச்யாத்மபரதேக ஷூ சதோபி -என்று தேஹத்தை விட வேறாக உள்ள வஸ்துவின் இடத்தில் தான் அணியன் என்று விபாகம் கூறப் பட்டு இருப்பதால் -யத்ன்யோச்தி பர சோபி -என்கிற இடத்தில் ஆத்ம ஐக்யம் அறியப் படுகிறது இல்லை -யதி மத்த பர கோப் அந்ய-இங்கு பர சப்தம் தன்னைத் தவிர்த்த ஆத்மாவைச் சொல்லுகிறது -ஒரே அர்த்தத்தில் பர அந்ய சப்தம் கூடாததால் —
அந்ய சப்தம் அதற்கும் ஜ்ஞானைகாகாரத்வம் இருப்பதால் வேறு ஆகாரத்தின் பிரதி சேதத்தை பலமாகக் கொண்டது –

ப்ரஹ்ம அத்வைதம் -உண்டே ஒழிய -ஜீவ அத்வைதம் இல்லை பஹூத்வம் சுருதி சித்தம் -பக்தர்கள் முக்தர்கள் வ்யவஸ்தை-ஏகோ வ்ரீஹி -ஏக சஜாதீய வச்துவைச் சொல்வதில் நோக்கு பொருந்தாதே -நித்யோ நித்யானாம் சேதநஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான் –

இது சொல்லப் பட்டதாகிறது -அனைத்து ஆத்மாக்களும் ஞானாகாரமாக இருப்பதால் -வேணு ரந்தர விபே தேன-வேறுபாடு ஸ்வரூபத்தால் அல்ல –தேவாதி சரீர பிரவேசத்தாலே -இத்தால் ஆத்ம ஐக்யம் உபதேசிக்கப் படவில்லை -அநேக துவாரம் வழிய புறப்படும் வாயுவுக்கு ஸ்வரூப ஐக்யம் இல்லை –ஆகாரங்களின் சாம்யமே -உண்டு –ஷட்ஜம் போன்ற பெயர்கள் ஏற்படுகின்றன
தேஜோ மயம் ஜலமயம் பிருத்வி மயம் -இவற்றுக்கு த்ரவ்யத் தன்மையால் ஐக்யம் உண்டு -ஸ்வரூபத் தன்மையால் இல்லை -அதே போலே வாயுவைச் சேர்ந்த அம்சங்களுக்கும் ஸ்வரூப பேதம் விடத்தகாதது -அஹம் தவம் -ஜ்ஞானமே ஆகாரம் -தேவாதி சரீரத்தால் வந்த பேதமே –சர்வ மேத தாத்ம ஸ்வரூபம் -தத்யாஜபேதம் பரமார்த்த சிருஷ்டி -பிண்ட ப்ருதக் யத பும்ச சிர பாண்யாதி லஷணா –

கடத்வம் சே கடாக ஸோன பின்னோ நபசோ யதா –ப்ரஹ்மணா ஹேய வித்வம் சே விஷ்ண வாக்ய ந ததா புமான் –என்று ஸ்ரீ சௌ நக பகவான் வசனம் –
கடம் உடைந்து கடாகாசம் ஆகாசதுடன் ஒன்றுவது போலே ஜீவர்கள் ஹேயங்கள் நாசம் அடைந்த பின்பு ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறார்கள்
யத அக்னிர் அக்னௌ சம்ஷிப்த சமானத்வம் அனுவ்ரஜேத்-நெருப்பில் போட்டதைக் கொண்டு சாம்யம் ஆவது போலே -ஏகம் சமஸ்தம் யதி ஹாஸ்தி கிஞ்சித் தத் அச்யுதொ நாஸ்தி பரந்ததோ அந்யத்-
சர்வமேததாத்மா ஸ்வரூபம் இத்யே நே ந –அஹம் -தவம் -சர்வம் –மூன்றும் பிரகார ஐக்யம் சொல்வதில் நோக்கு –
விபேத ஜனகே ஜ்ஞானே -ஆன்மாக்களின் ஸ்வரூப ஐக்யம் சொல்வதில் கருத்து அல்ல –தேக -ஆத்மா –ஆத்மா -பர ப்ரஹ்மம் -ஸ்வரூப ஐக்யம் சம்பவிக்கிறது இல்லை -தவா ஸூ பர்ணா சயுஜா சாகாயா சாமாநம் வருஷம் பரிஷஸ்வ ஜாத–தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்தி அனன்ச்ன் அனந்யோ அபி சாக தீதி –என்றும் -ருதம் பிபந்தௌ ஸூ க்ரு தஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்த்யே சாயாதபௌ ப்ரஹ்ம வயதோ வதந்தி பஞ்ச அக்நயோ யே ச திரிணா சிகேதா —என்றும் -அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்-ஸ்ருதி வாக்யங்கள் –
பர ப்ரஹ்மம் -சர்வத்துக்கும் காரணம் -அவயகதம் மஹத்வம் விகாரங்களையும் முக்குணங்களையும் அவற்றின் காரியங்களான ஸூ கம் ஞானம் இவற்றையும் தாண்டி -அவித்யா முதலிய ஆவரணங்களையும் தாண்டி -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவன் -எங்கும் வியாபித்து இருப்பவன் -அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்தவன் –பரா அவர தத்வங்களுக்கு நியந்தா –அவித்யை கர்மா -மூன்றாவது சக்தி -இது ஷேத்ரஜ்ஞ சக்தியை சுற்றப் பட்டு இருக்கிறது –
உபயே பிஹி பேதே நை ந மதீயதே —
பேத வ்யபதே சாச்சன்ய-
அதி கந்து பேதே நிர்தேசாத் —இது முதலிய ஸூத்ரங்களிலும்
ய ஆத்ம நிதிஷ்டன் நாத்ம நோந்த ரோய மாத்மா நவேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்த ரோயமாதி -என்று எவன் ஆத்மாவின் இடத்தில் இருக்கிறானோ
ஆத்மாவுக்குள் நிலை பெற்று இருக்கிறானோ -எவனை ஆத்மா அறிகிறான் இல்லையோ -எவனுக்கு ஆத்மா சரீரமோ -எவன் ஹிருதயகமலத்தில் இருந்து நியமிக்கிறானோ–ப்ராஜ்ஞே நாத்மநா சம்பரிஷ்வக்த -ஸூ ஷூப்தியில் ஆலிங்கனம் செய்து கொள்கிறான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை

————————————————————————————–

ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்ற எல்லா வஸ்துக்களும் மித்யை என்கிற ஜ்ஞானம் அஜ்ஞ்ஞான விரோதி என்று சொல்லப் படுமேயானால் அல்ல –இந்த ஜ்ஞானம் ப்ரஹ்மத்தின் யாதாம்ய ஜ்ஞான விரோதியா -பிரபஞ்ச சத்யத்வ ரூபமான அஜ்ஞானத்துக்கு விரோதியா –
ப்ரஹ்மம் அவித்யையினால் மறைக்கப் பட்டது என்றால் அஜடத்வதுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டாகும்
முக்தனுக்கு -இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மமசாதர்ம்யமாகதா–சர்கேபி நோபஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச –ஆத்மபாவம் நயத்யே நம் தத் ப்ரஹ்மத்யாவி நம்முனே விகார்ய மாதமான சக்த்யாலோக மாகர்ஷகோயதா –நெருப்பு போலே தனது ஸ்வ பாவத்தை அடையச் செய்யும் -இழுக்கப் படும் வஸ்து இழுக்கும் வஸ்து ஐக்கியம் இல்லையே
ஜகத்வ்யாபார வர்ஜனம் ப்ரகரணாத சந்நிஹிதத்வாச்ச —
போக மாத்ர சாம்ய லிங்காச்ச
முக்தோபஸ்ருப்ய -வ்யபதேசாச்ச –
ஜகத் வியாபார வர்ஜனம் சாமானோ ஜ்யோதிஷா –
தேவதா சாயுஜ்யாத சரீரஸ்யாபி தேவதாவத் சர்வார்த்தசித்திஸ் ஸ் யாத் —
ய இஹாத்மான மனுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்றும்
ஏதம் ஆனந்தமய மாதமா நமுப சங்க்ரம்ய-என்றும் -இமான் லோகன் காமான்ணீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்றும் ச தத்ர பர்யேதி -என்றும் -ரசோவைச ரசம்ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதீ -என்றும் -யதா நத்யசயந்தாமானாஸ் சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாமே ரூபே விகாயா ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –என்றும் சுருதி வசனனங்கள்

————————————————————————————–

பர வித்தைகளில் எல்லாவற்றிலும் சகுண ப்ரஹ்மமே உபாச்யம் என்று நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது -பலமும் ஒரு விதம் -ஆகையால் வித்யா விகல்பம் என்று ஸூ த்ர காரராலேயே-ஆனந்த தய பிரதானச்ய — விகல்போ விசிஷ்ட பலத்வாத் -இது முதலியவைகளால் சொல்லப் பட்டு இருக்கிறது –யுக்தம் தத் குண கோபாச நாத் –என்று பாஷ்யகாரர் வியாக்யானம்
யத்யபி சச்சித்த —என்றும் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும் -நாம ரூபா விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும் -கர்ம ப்ரஹ்ம உபய பாவனைகளையும் விட்டு ப்ராபநீயன் -பிரமத்தை அடைவிப்பிக்கத் தக்கவன் -ஷேத்ரஜ்ஞ கரணி ஜ்ஞானம் கரணம் தஸ்ய வைத்விஜ-நிஷ்பாத்ய முக்தி கார்யம் ஹி க்ருதக்ருத்யம் நிவர்த்த்தயேத்–சித்தி வரையில் அனுஷ்டிக்கத் தக்கது என்று சொல்லி தத்பாவ பாவமன்ன ஸ் ததா சௌ பரமாத்மனா பவத்ய பேதீ பேதச்ச தஸ்யா ஜ்ஞான க்ருதோபவத்–தத் பாவம் -ப்ரஹ்மத்தின் உடைய பாவம் -ஸ்வ பாவம் -ஸ்வரூப ஐக்யம் அல்ல – —
ஆனந்த தயா பிரதானச்ய -விகல்போஸ் விசிஷ்ட பலத்வாத் –தத்பாவ பாவித்வாத் அதிகரணம் -பக்த ஸ்வரூபம் சிந்திக்கத் தக்கது பூர்வ பாஷம் -முக்த ஸ்வரூபம் சிந்திக்கத் தக்கது சித்தாந்தம் -தத் பாவ பாவ சப்தத்தால் ப்ரஹ்ம சாம்யாபத்தி ஜ்ஞாபகதிற்காகவும்
விபேத ஜனகேஜ்ஞான –பேதம் இல்லாதவனாக ஆகிறான் ஒழிய தாதாம்யம் உள்ளவனாக ஆகிறான் அல்லன் –

ஞானத்தை வடிவாக கண்டு பரமாத்மா உடன் ஏக பிரகாரன் -தேவாதி ரூபங்களால் வேறுபாடு -அஜ்ஞ்ஞானம் அடியாகவே அன்றி ஸ்வரூபத்தால் இல்லை –
-ஏக ஸ்வரூப பேதஸ்து பாஹ்ய கர்மவ்ருதி ப்ரஜ–தேவாதி பேதஸ் பத்வச்தே நாஸ்த்ய நா வரணோ ஹி ச
விபேத -ஜனகே அஜ்ஞ்ஞான நாசமாத் யந்திகம் கதே -ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி —
சௌ நகரும் -சதுர்விதோ அபி பேதோ அயம் மித்யா ஜ்ஞான நிபந்தன —
அவித்யா கர்ம சம்ஜ்ஞான்ய –ஷேத்ரஜ்ஞ்ஞாபி மாம் வித்தி —
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹிருத்தேசேர் அர்ஜுனா திஷ்டதி -என்றும் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -என்றும் -அஹமாத்மா குடாகேசா சர்வ பூதா சயஸ் ஸ் தித —
பூத சப்தத்தால் ஆத்மா பர்யந்தமான தேஹம் —ந்த தஸ்தி வினாயஸ்த்யாத் -அவன் அன்றி எந்த வஸ்து உண்டோ அந்த வஸ்து எங்கும் இல்லை
யத்யத் விபூதி மத சத்வம் ஸ்ரீ மதூர்ஜித மேவவா தத்த தேவாவா கச்ச தவம் மம தேஜோம் ச சம்பவம் –நியமன சக்தியின் ஏக தேசத்தால் உண்டானது
விஷ்டப்யாஹமிதம் க்ருத்சன மேகாம் சேந ஸ்திதோ ஜகத் –ஆகையால் சாஸ்த்ரங்களில் நிர்விசேஷ வஸ்து பிரதிபாதனம் இல்லை -உலகில் உள்ள எல்லா பதார்ந்தங்களும் பிராந்தி சித்தங்கள் என்று சொல்லப் பட்டு இருக்க வில்லை -சித் அசித் ஈஸ்வர மூன்று தத்வங்களுக்கும் ஸ்வரூப பேத நிஷேதமும் இல்லை —
அவித்யா -சத் என்றும் அசத் என்றும் நிர்வசனம் செய்யத் தகாதது -அநாதி –அவசியம் ஒப்புக் கொள்ளத் தக்கது
சத் அல்ல -பிராந்தி பாதம் இரண்டும் பொருந்தாமல் போக வேண்டியதால் -அசத்தும் அல்ல கியாதி பாதம் இரண்டும் பொருந்தாமல் போக வேண்டியதால்
அவித்யை ஜீவனை ஆச்ரயித்து பரமம் உண்டு பண்ணுவது இல்லை -ஜீவ பாவம் அவித்யையினால் ஏற்படுத்தப் படுவதால்
ப்ரஹ்மத்தை ஆச்ரயித்தும் பிரமம் உண்டு பண்ணுவது இல்லை -ப்ரஹ்மம் தனக்குத் தானே பிரகாசிக்கும் ஞான ஸ்வரூபமாய்
அவித்யைக்கு விரோதியாக இருப்பதால் –
ஜ்ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தந் நிவர்த்யம் ம்ருஷாத்மகம் அஜ்ஞ்ஞா நஞ்சேத் திரஸ் குர்யாத் க பிரபுஸ் தந் நிவர்த்தன -ஜ்ஞானம் ப்ரஹ்மேதி சேத
ஜ்ஞானம் அஜ்ஞானச்ய நிவர்த்தகம் -ப்ரஹ்மவத் தத் பிரகாசத்வாத் ததபிஹ்ய நிவர்த்தகம் ஜ்ஞானம் ப்ரஹ்மேதி விஜ்ஞான மஸ்தி சேத ஸ்யாத்
ப்ரமேயதா பிராமநோஸ் நனுபூதித்வம் த்வதுக்த்யைவ பிரசஜ்யதே —
ப்ரஹ்மம் ஞான ஸ்வரூபம் என்கிற ஜ்ஞானமே அவித்யைக்கு பாதகம் -ப்ரஹ்ம ஸ்வரூப ஜ்ஞானம் ப்ரஹ்ம விஷய ஜ்ஞானம் இரண்டும் அவித்யா விரோதி
அதனால் அவித்யை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து இருக்க முடியாது சிப்பி போல்வன ஜ்ஞானாந்தரத்தை அபேஷிக்கும் -ப்ரஹ்மம் வேறு நிவர்த்தாக ஜ்ஞானத்தை அபேஷிக்கிறது இல்லை
அப்படிக்கின்றி ப்ரஹ்மத்தை தவிர்த்த மற்ற எல்லா வஸ்துக்களும் மித்தை என்ற ஜ்ஞானம் அஜ்ஞ்ஞா விரோதி என்றால் அல்ல –
இந்த ஜ்ஞானம் ப்ரஹ்மத்தின் யாதாம்ய ஞான விரோதியா -அல்லது பிரபஞ்சத்தின் சத்யத்வ ரூபமான அஜ்ஞானத்துக்கு விரோதியா –
இந்த ஜ்ஞானம் விஷயீ கரிக்காததால் ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் இரண்டுக்கும் விஷயம் ஒன்றாக இருந்தால் அல்லவோ விரோதம் ப்ரஹ்மம்
அவித்யையால் மறைக்கப் பட்டது என்பவனுக்கு ஸ்வரூப நாசமே ஏற்படும்–பிரகாசத்தின் திரோதானம் -பிரகாசத்தின் உத்பத்தியின் பிரதிபந்தம்

மேலும் விஷயம் இல்லாததும் ஆஸ்ரயம் இல்லாததும் தானாக பிரகாசிக்கும் ஸ்வ பாவம் உள்ளதுமான இந்த அநு பூதி தோஷ வசத்தினால் -இந்த தோஷம் உண்மையா அசத்த்யமா -உண்மையானது அல்ல -அப்படி ஒப்புக் கொள்ளாமையால் -அசத்தியமும் அல்ல -அப்படி ஒப்புக் கொண்டால் அது த்ர்ருஷ்ட்ரு-த்ருச்ய தருசி ரூபமாகவாவது -பார்ப்பவன் -பார்க்கத் தக்கது பார்வை -என்றபடி -மாத்யமிகன் சர்வ சூன்ய வாதி பஷம்-
அநிர்வசநீயத்வம் -சத் விலஷணம் -சத் அசத் ஆகாரமாக இருக்கும் வஸ்துவுக்கு சத் விலஷணம் விஷயம் ஆகாதே
ஆத்மக்யாதி -அசத்க்யாதி -அக்யாதி-அந்ய தாக்யாதி -அநிர்வச நீயக்யாதி -ஐந்து காதிகள் பூர்பஷி சொல்ல ராமானுஜ சித்தாந்தம் சக்யாதி ஒன்றையே சொல்லும்
ஆத்மக்யாதி -யோகாசாரன் வாதம் -ஆத்மாவுக்கு புத்திக்கு விஷய ரூபமான பிரதிபாசம் -இரசதம் புத்தியே ராஜாத ரூபமாக பாசிக்கிறது என்பர்
அசக்யாதி இல்லாததான ரஜதம்-மாத்யாமிகர் வாசஸ்பதி மிஸ்ரர் -வாதம் -சிப்பியில் வெள்ளி என்ற ஞானம் போலே
அக்யாதி மீமாம்சகன் -இதம் ரஜதம் என்றால் இதம் அம்சமே பிரத்யஷ பிரதீதிக்கு விஷயம்
அன்யதாக்யாதி -நையாயிக மதம் -ஒரு வஸ்து வேறு ஒன்றாக அறியப் படுவது
அநிர்வச நீயக்யாதி -மாயாவாதி வாதம் அபூதி -வாதம்
சத்க்யாதி வாதம் -ஜ்ஞான விஷயத்துக்கு சத்யத்வம் -இதுவே ராமானுஜ சித்தாந்தம்

அன்றிக்கே இவ்விதம் இருக்கலாம் -வஸ்துவின் ஸ்வரூபத்துக்கு திரோதானம் செய்கிறதும் -அனைத்துக்கும் உபாதான காரணம் சத் அசத் என்று நிர்வசனம் செய்யத் தகுதி அற்றதும் -அவித்யை அஜ்ஞ்ஞானம் போன்ற பதங்களால் சொல்லத் தக்கதும் -வஸ்துவின் உண்மையை அறிவதால் விலக்கத் தக்கதும் ஜ்ஞானத்தின் பிராக பாவத்தை விட வேறான பாவ ரூபமாக இருக்கிற வஸ்து பிரத்யஷம் அனுமானம் இவற்றால் அறியப் படுகிறது -அந்த வச்துவினால் மறைக்கப் பட்ட ப்ரஹ்மத்தை உபாதாநமாக உடையதும் விகாரம் இல்லாததும் தானே பிரகாசிக்கின்றதும் ஜ்ஞான மாதரத்தை உருவாகக் கொண்டதும் அந்த அத்யாச ஹேதுவாலே கல்பனையாலே மறைக்கப் பட்ட ச்வரூபத்துடன் கூடியதுமான பிரத்யகாத்மாவின் இடத்தில் தனித் தனியே பிரிக்கப் பட்டு இருக்கிற அஹங்காரம் ஜ்ஞானம் ஞேயம் என்கிற யாதொரு அத்யாசம் உண்டோ அந்த தோஷத்தின் உடையதாக இருக்கிற ஒரு சமயத்தில் உண்டாகும் அவஸ்தா விசேஷத்தினால் அத்யாச ரூபமான ஜகத்தில் ஜ்ஞானத்தினால் பாதிக்கப் பட்ட சர்ப்பம் ரஜதம் வஸ்துக்களும் அந்த அந்த வஸ்து விஷயக ஜ்ஞான ரூபமான அத்யாசமும் உண்டாகிறது
மித்யா ரூபமான அவை அனைத்துக்கும் தோஷமே உபாதானம் ஆத்மாவின் இடத்தில் ஜ்ஞான பாவத்தை விஷயீ கரிக்கிறது இல்லை –
இது சொல்லப் பட்டதாகிறது –
அஹம் அஜ்ஞ-என்ற இந்த அனுபவத்தில் -அஹம் -ஆத்மா அபாவ தர்மியாகவும் ஜ்ஞானம் பிரதியோகியாகவும் அறியப் படுகிறதா இல்லையா -அறியப் பட்டால் ஜ்ஞான அபாவ அனுபவம் சம்பவிக்கிறதில்லை-இல்லையானால் ஜ்ஞான அபாவ அனுபவம் மிகவும் சம்பவிக்கிறதில்லை-
அஜ்ஞ்ஞானம் பாவ ரூபமாகவே அறியப் படுகிறது
இந்த பாவ ரூபமான அஜ்ஞ்ஞானம் அனுமானத்தாலும் சித்திக்கிறது -இருட்டு பிரகாசத்தின் இன்மையே ரூப-தர்சனத்தின் இன்மையே
இரண்டுவித அபாவங்களைக் காட்டிலும் வேறு ஒரு த்ரவ்யம் இல்லை தமஸ் வேறு த்ரவ்யம் -தமஸ் த்ரவ்யம் என்பதே பாஷ்யகாரர் மதம்

—————————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: