ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -இரண்டாம் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

இது சொல்லப் பட்டதாகிறது -நிரூபிக்கிறார் -ஒரே தேஜஸ் ஸ்வரூப த்ரவ்யமானது பிரபா ரூபமாகவும் பரப்பை உள்ளதாகவும் இருக்கிறது என்றாலும்
பிரபையானது பிறப்பை உள்ள த்ரவ்யத்துக்கு அதீனமாக இருக்கிறது -ஆயினும் அது தேஜோ மயமான த்ரவ்யமே –
சௌக்ல்யம் முதலியது போலே குணம் அல்ல –
தனக்கு ஆதாரமாய் இருக்கிற வஸ்துவை விட்டு விலகி வேறு இடத்திலும் இருப்பதாலும் ரூபம் உள்ளதாக இருப்பதாலும் சௌக்ல்யம் முதலிய குணங்களோடு வேற்றுமை உடையதாக இருப்பதாலும் -பிரகாசம் உள்ளதாக இருப்பதாலும் தேஜோ த்ரவ்யமே -வேறு வஸ்து அல்ல – தன் ஸ்வரூபத்துக்கும் மற்றவைகளுக்கும் பிரகாசமாக இருப்பதால் -பிரகாசவத்வமும் –
இந்த பிரபைக்கு குணத்வ்ய வ்யவஹாரம் ஆனது எப்பொழுதும் அதை ஆஸ்ரயித்து இருத்தல் -அதற்கு சேஷமாக இருத்தல் -இவைகள் அடியாக உண்டானது –
ஒளிக்கு ஆஸ்ரயமான மணி முதலியவைகளின் அவயவங்களே நாற்புறங்களிலும் சிதறி சஞ்சரியா நின்றவைகளாக
பிரபை என்று வழங்கப் படுகின்றன என்று சொல்வது சரியல்ல -மணி சூரியன் முதலியவைகளுக்கு நாசம் வர வேண்டி வருவதால் –

ஏகமேவ –பிரகாசவத்வாத் –பிரகர்சவதீத் வஞ்ச –அச்யா மணி –
ஸூ ர்யா சந்திர மசௌ தாத்தா யதா பூர்வ மகல்பயத் –ந அக்நீஷோ மௌ ந ஸூ ர்ய —

————————————————————————————–

தீபத்திலும் அவய விபிரதிபத்தி யானது ஒரு பொழுதும் உண்டாகாது -சிததுலை ஸ்வபாவமாகக் கொண்ட அவயவங்களுடன் கூடின
தீபங்கள் நான்கு அங்குலங்கள் அளவு தவறாமல் பிண்டா காரங்களாக இருந்து கொண்டு மேலே கிளம்பி அதற்குப் பிறகு ஒரே சமயத்திலேயே
குறுக்காகவும் மேலாகவும் கீழாகவும் ஒரே மாதிரியாக சித்ரா நின்று கொண்டு நால் புறங்களிலும் பரவுகின்றன என்று சொல்வதற்கு சகயம் இல்லை
ஆகையால் சிறந்த காரணங்கள் வரிசைக் க்ரமமாக தோன்றும் தருணத்தில் உண்டாவதாலும் அவைகள் நாசம் அடையும் சமயத்தில் நசிப்பதாலும் பிரபையோடு கூடியவைகளாகவே தீபங்கள் ஷணம் தோறும் தோன்றி விநாசம் அடைகின்றன வென்று அறியப் படுகின்றது —
அக்னி முதலியதற்கு ஔஷ்ண்யம் முதலியது போலே பிரபைக்கு தனக்கு ஆஸ்ரிய வஸ்து சமீபத்தில் -பிரகாசாதிக்யம் உஷ்ணாதிக்யம் இது முதலியது உப லப்தியினால் வ்யவஸ்தை செய்யத் தக்கது –
இவ்வண்ணம் ஆத்மா சித் ரூபனாகவே இருந்து கொண்டு சைதன்ய குணம் உள்ளவன் -சித் ரூபயத்தை யன்றோ ஸ்வயம் பிரகாசதை-

உப பாதக ஸ்ருதிகள் ஆவன -எவ்வாறு உப்புக் கட்டியானது உள்ளிலும் வெளியிலும் -ரசத்தில் அல்லது ருசியில் வ்யத்சாம் இன்றி எல்லாம் ரசகனமாய் இருக்கிறதோ இவ்வண்ணமே
இந்த ஆத்மா உள்ளங்கம் வெளியங்கம் இன்றியே முழுவதும் பிரஜ்ஞ்ஞான கனனே விஜ்ஞ்ஞான் கனனே –
இந்த இடத்தில் இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதிசாக இருக்கிறான் –
விஜ்ஞாதாவான ஆத்மாவின் ஜ்ஞானத்துக்கு அழிவில்லை -எவன் இதை முகர்கின்றேன் என்று எண்ணுகிறானோ அவன் ஆத்மா
எவன் ஆத்மா -யாதொருவன் விஜ்ஞான மயனாக பிராணன் களிலும் ஹிருதயத்தினுள்ளும் ஜ்யோதிர்மய புருஷனாக இருக்கிறானோ
இவன் அன்றோ பார்ப்பவன் கேழ்ப்பவன் ருசி பார்ப்பவன் முகற்கிறவன்-மனனம் செய்கிறவன் -அறிகிறவன் -செய்கை யுடையவன்
விஜ்ஞான ஸ்வரூபியான புருஷன் -விஜ்ஞாதாவானா ஆத்மாவை எதினால் அறியலாம் -இந்தப் புருஷன் அறியவே அறிகிறான் –
பரம புருஷனைப் பார்ப்பவன் -சம்சாரத்தைப் பார்க்கிறது இல்லை -ரோகத்தையும் துக்கத்தையும் பார்க்கிறது இல்லை
அவன் உத்தமமான புருஷன் உத்பத்தி ஸ்திதி வினாசங்கள் உள்ள இந்த சரீரத்தை நினைக்கிறது இல்லை
இவ்வண்ணமே பரம புருஷ சாஷாத்காரம் பெற்று இருப்பவனான இந்த முக்தாத்மாவுக்கு முக்தி தசையில் பரம புருஷனை அடைந்து ஜீவனுடைய சங்கல்ப்பத்தைச் சார்ந்த ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகளுடன் கூடின இந்த பதினாறு கலைகள் -அதாவது
பிராணன் –ஸ்ரத்தை–ஆகாயம் –வாயு -ஜ்யோதிஸ் –ஜாலம் –பூமி –இந்த்ரியம் -மனஸ் –அன்னம் -வீர்யம் -தபஸ் –
மந்திரங்கள் -கர்மங்கள் -உலகங்கள் -உலகத்தில் உள்ள பெயர்கள் –ஆகிய இந்த பதினாறும் நாசம் அடைகின்றன –
அந்த இந்த மநோ மயனைக் காட்டிலும் விஜ்ஞான மயனாகவும் ஹிருதயத்தில் மத்யத்தில் இருப்பவனுமான ஜீவாத்மா வேறாக இருக்கிறான்
இது முதலியவைகள் ஸூ த்ரகாரரே சொல்லப் போகிறார் -ஜ்ஞ்ஞோ அத ஏவ -என்று –

தீ பேபி –நஹி –நஹி விசரண –அதஸ் சப்ரபாக ஏவ தீபா பிரதி ஷணம் உத்பன்னா –புஷ்கல காரண கரமோ பநிபாதாத்
தத் விநாசே விநாசாச்ச –தத் விநாசே விநாசாச்ச —
ப்ரபாயா -அக்நய ஆதீனம் –சித்ரூப ஏவ –சித்ரூப தாஹி –ததாஹி ஸ்ருதய–க்ருத்சன –விஜ்ஞான கன ஏவ –நவிஜ்ஞாது —
அதய -கதம -விஜ்ஞாதாரம் -ஜ்ஞாநாத் யேவாயம் –ந பஸ்ய-ச உத்தமம் -ஏவம் — தஸ்மாத் வா -வகஷ்யதிச

——————————————————————————

ஆகையால் ஸ்வயம் பிரகாசனான இந்த ஆத்மா ஜ்ஞானாஸ்ரயனே பிரகாச மாதரம் அல்ல –பிரகாச ஸ்வரூபனாக இருப்பதினாலேயே
தீபம் முதலியவற்றின் பிரகாசம் போலே ஒரு வஸ்துவினுடையதாகவே பிரகாசம் இருக்க வேண்டும் –
ஆதலால் சம்வித்தானது ஆத்மாவாக இருப்பதற்குத் தகுதி உள்ளது அல்ல –
சம்வித் -அநு பூதி -ஜ்ஞானம் – முதலிய சப்தங்கள் சம்பந்தி சப்தங்கள் என்றும் சப்தார்த்தங்களை அறிந்தவர்கள் நிர்ணயித்து இருக்கிறார்கள் –
உலகத்திலும் வேதத்திலும் கர்ம கர்த்தாக்கள் இல்லாத ஜ்ஞாநாதி முதலிய தாதுக்களின் பிரயோகம் முன் காணப் பட்டது இல்லை

அத பிரகாசத்வா தேவ -சம்வித அநு பூதி –நஹி லோக வேதயோ —

——————————————————————-
அஜடம் ஆதலால் சம்வித்தே ஆத்மா வென்று எது சொல்லப் பட்டதோ அந்த விஷயத்தில் இது கேழ்க்கத் தக்கது -எது அஜடத்வம்
என்று எண்ணப் பட்டு இருக்கிறது –
தன்னுடைய சத்தையினால் உண்டு பண்ணப் பட்ட பிரகாசத்துடன் கூடி இருத்தல் என்று சொல்லப் படுமே யானால்
அப்பொழுது தீபம் முதலியவைகளில் வ்யபிசாரம் வரும் -சம்வித்தைக் காட்டிலும் வேறான பிரகாச தர்மத்தை ஒப்புக் கொள்ளாமையால் –
அசித்தியும் விரோதமும் தவறாத பிரகாசம் உள்ள சத்தையோடே கூட இருத்தலும் ஸூ கம் முதலியவைகளில் வ்யபிசாரம் வருவதால் நிரசிக்கப் பட்டது

யச் சொக்தம் –அஜடத்வம் -கிமபிப்ரேதம் –ஸ்வ சத்தா – ததா சதி -சம்விததிரிக்த -அவ்யபிசரித –

————————————————

ஸூ கம் முதலியது தவறாத பிரகாசத்துடன் கூடியதாக இருந்த போதிலும் அந்யனுக்கு பிரகாசிக்கிற ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதால்
கடம் முதலியது போல் ஜடமாதளால் ஆத்மா அல்ல என்று சொல்லப் படுமே யானால் -ஜ்ஞானம் தானாகட்டும் தனக்குப் பிரகாசிக்கிறதா –
அதுவும் நான் ஸூ கம் உள்ளவன் எனபது போலே நான் அறிவுள்ளவனாக இருக்கிறேன் என்று தன்னைக் காட்டிலும் வேறாக இருக்கிற அஹமர்த்தமான ஜ்ஞாதாவுக்கே பிரகாசிக்கிறது
ஆகயால் தனக்கு பிரகாசித்தல் என்கிற அஜடத்வமானது சம்வித்தில் அசித்தம் -ஆதலால் தன் ஆத்மாவைக் குறித்து தன் சத்தையினாலேயே சித்திக்கிற அஜடமான அஹமர்த்தமே ஆத்மா
ஜ்ஞானத்திற்கும் பிரகாசதையானது அந்த ஆத்மா சம்பந்தத்தைச் சார்ந்து இருக்கிறது
ஸூ கம் முதலியவற்றுக்குப் போலே ஜ்ஞானத்திற்கு தனக்கு ஆஸ்ரயமான சேதனனைக் குறித்து பிரகடத்வமும்
மற்றவனைக் குறித்து அபிரகடத்வமும் அந்த ஆத்மா சம்பந்தத்தால் அன்றோ உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது
அதனால் ஜ்ஞப்தி மாதரம் ஆத்மா வல்ல -பின்னியோ ஜ்ஞாதாவான அஹமர்த்தமே –

யத்யுச்சேத–ஜ்ஞானம் வா –ததபி –அஹம் –அத -தஸ்மாத் –
ஜ்ஞானச்யாபி –தத்க்ருதமே வஹி -அத

————————————————————————-

அதற்கு மேல் அநு பூத்தியானது உண்மையாகவே விஷயம் இல்லாததாகவும் ஆஸ்ரியம் இல்லாதாதவும் இருந்து கொண்டு
நிரதிஷ்டான ப்ரமம் பொருந்தாதலால்-சிப்பியானது வெள்ளியாகத் தோன்றுவது போலே ஜ்ஞாதாவாக தோன்றுகிறது என்று –
எது சொல்லப்பட்டதோ அது சரியல்ல –
அப்படியாகில் அனுபவத்தோடு சமாநாதிகரணமாக அனுபவிதாவான அஹமர்த்தமானது முன்னிலையில் இருக்கிற பிரகாசம் உள்ள
த்ரவ்ய ஸ்வரூபமாக வெள்ளி முதலியது போலே -அஹம் அநு பூதி -என்று அறியப் பட வேண்டி யதாக இருக்கும்
இவ்விடத்திலேயோ என்றால் இந்த அநு பூதியானது வேறாக தோன்றியதாகவே இருந்து கொண்டு
தண்டமானது தேவ தத்தனைப் போலே அர்த்தாந்தரமான அஹமர்த்தத்தை விசேஷிக்கிறது
இதை நிரூபிக்கிறார் -நான் அனுபவிக்கிறேன் என்று அன்றோ பிரதீதி உண்டாகிறது
ஆதலால் இவ்வண்ணம் அநு பூதி உடன் கூடியதாக அஸ்மாதர்த்தத்தை பிரகாசிப்பிக்கிற -நான் அனுபவிக்கிறேன் -என்ற ஜ்ஞானமானது
தண்ட மாதரத்தில் தண்டி தேவதத்த -என்கிற ஜ்ஞானம் போலே விசேஷணமாக இருக்கிற அநு பூதி மாதரத்தை அவலம்பித்து
எவ்வாறு பிரதிஜ்ஞை பண்ணப் படலாம்

அத யதுக்தம் -நிரதிஷ்டான -ததயுக்தம் -புரோவச்தித்த –அத்ர து -ததாஹி –ததேவம் -ப்ருதகவா பாச மா நா -அநு பூதி ரஹமிதி பிரதி ஏத-

—————————————————————————

நான் பருத்தவன் -என்கிற இது -என்கிற இது முதலிய வ்யவஹாரங்களில் தேஹத்தில் ஆத்மா அபிமானம் உள்ளவனுக்கே ஜ்ஞாத்ருத்வம் பிரதிபாசிப்பதால் ஜ்ஞாத்ருத்வம் கூட மிதியை என்று எது சொல்லப் பட்டதோ அது சரி யல்ல –
ஆத்மாவா அபிமானிக்கப் பட்டு இருக்கிற அநு பூதிக்கும் கூட மித்யத்வம் வர வேண்டியதாகும் -அநு பூதி உள்ளவனுக்கே பிரதீதி வருவதால்
தன்னைத் தவிர்த்த மற்ற எல்லா வற்றையும் நாசம் செய்கிற தத்வ ஜ்ஞானத்தால் பாதிக்கப் படாமல் இருப்பதால் அநு பூதிக்கு
மித்யாத்வம் இல்லை என்று சொல்லப்படுமே யாகில்
சந்தோஷம் இங்கனம் ஆகில் அதனால் பாதகம் இல்லாமையாலேயே ஜ்ஞாத்ருத்வமும் மித்யை யன்று
விக்கிரியை இல்லாத ஆத்மாவுக்கு ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வமான ஜ்ஞாத்ருத்வம் சம்பவிக்கிறது இல்லை
ஆதலால் ஜ்ஞாத்ருத்வம் -விக்ரியாத்மகம் ஜடம் விகாராச்பதமான அவ்யக்த பரிமாண அஹங்கார க்ரந்தியில் நிலை பெற்றது
ஆதலால் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லை –பின்னையோ அந்த கரண ரூபமான அஹன்காரத்துக்கு கர்த்ருத்வம் முதலியது ரூபம் முதலியது போலே த்ருச்ய தர்மம் அன்றோ –
ஆத்மாவுக்கு கர்த்ருத்வமும் அஹம் பிரத்திய கோசரத்வமும் ஒப்புக் கொள்ளப் படும் பஷத்தில் தேஹத்துக்கு போலே அநாத்மத்வமும்-பராக்த்வம்
-ஜடத்வம் -முதலியதும் பிரசங்கிக்கும் -என்று யாதொன்று கூறப் பட்டதோ இது பொருந்தாது
அந்தக் கரண ரூபமான அஹங்கார திற்கு தேஹத்திற்கு போலே அசேதனத்வம் பிரகிருதி பரிமாணத்வம் த்ருச்யத்வம் பராக்த்வம் பரார்த்தத்வம்
முதலிய வற்றின் சம்பந்தத்தாலும் -ஜ்ஞாத்ருத்வம் சேதன சாதாரண ஸ்வ பாவம் ஆதலாலும் –

இது சொல்லப் பட்டதாகிறது —எவ்வாறு தேஹம் முதலியவை த்ருச்யம் பராக்த்வம் முதலிய ஹேதுக்களால் அவைகளுக்கு விரோதியான
த்ருஷ்ட்ருத்வம் -பிரத்யகத்வம் முதலியவையைக் காட்டிலும் வேறான ஓன்று என்று அறியப் படுகிறதோ
இவ்வண்ணம் அந்த கரண ரூப அஹங்காராமும் அந்த த்ரவ்யமாகவே இருத்தலாலேயே அதே ஹேதுக்களால் அதைக் காட்டிலும்
வேறு பட்டது என்று -அறியப் படுகிறது என்று -ஆதலால் த்ருசித்வத்திற்கு போலே -காணத் தக்கதுக்கு போலே -அஹங்காரத்துக்கு விரோதத்தாலேயே ஜ்ஞாத்ருத்வம் இல்லை
எவ்வாறு த்ருசித்வமானது அதின் கர்மாவான அஹங்காரத்துக்கு ஒப்புக் கொள்ளப் படுகிறது இல்லையோ அவ்வாறே ஜ்ஞாத்ருத்வமும்
அதின் கர்மாவுக்கு ஒப்புக் கொள்ளத் தக்கது அல்ல –
ஜ்ஞாத்ருத்வம் விக்ரியாத்மகம் அல்ல -ஜ்ஞாத்ருத்வம் எனபது ஜ்ஞானகுணாஸ்ரயத்வம் அன்றோ
நித்யனான இந்த ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமான தர்மம் ஆதலால் ஜ்ஞானம் நித்யம் –
ஆத்மாவுக்கு நித்யத்வத்தை -நாதமா ஸ்ருதே -இது முதலிய ஸ்தலங்களிலே கூறப் போகிறார்
ஜ்ஞோதே ஏவ -என்கிற இடத்தில் ஜ்ஞ என்கிற வ்யபதேசத்தால் ஜ்ஞான ஆச்ரயத்வமும் ஸ்வா பாவிகம் என்று சொல்லப் போகிறார்
ஜ்ஞான ச்வரூபனாகவே இருக்கிற இந்த ஆத்மாவுக்கு மணி முதலியவைகளுக்கு பிரபாஸ்ரயத்வம் போலே
ஜ்ஞான ஆச்ரயத்வமும் அவிருத்தம் என்று உரைக்கப் பட்டது –

யதப்யுக்தம் –தத பாதாதே வேதி –யதப்யுக்தமவிக்ரி யஸ்ய –கர்த்ருத்வாதி -கர்த்ருத்வே –சந்தத் –தைரேவ ஹேதுபி தஸ்மாத் விவிச்யதே –த்ருசித்வவத் –யதா
நாசா ஜ்ஞாத்ருத்வம் ஹி–ஜ்க்னாஞ்சாச்ய –நித்யத்வஞ்ச –

——————————————————————————

ஸ்வயம் அபரிச்சின்னமாகவே இருக்கிற ஜ்ஞானமானது சங்கோச விநாசங்களுக்கு தகுதி உள்ளது என்று உபபாதிக்கப் போகிறோம்
ஆகையால் ஷேத்ரஜ்ஞா அவஸ்தையில் கர்மாவினால் ஸ்வரூபம் ஒடுங்கி அந்த அந்த கர்ம அனுகுணமான தரதம பாவத்தோடு இருக்கிறது –
அதுவும் இந்த்ரியங்கள் வாயிலாக வ்யவஸ்தை பண்ணப் பட்டு இருக்கிறது -அந்த அந்த இந்த்ரியங்கள் வழியாக உண்டாகிற ஜ்ஞான பிரசரத்தை அபேஷித்து உதயாச்தமைய வ்யபதேசம் பிரவர்த்திக்கிறது ஜ்ஞானப் பிரசரத்திலோ என்றால் கர்த்ருத்வம் இருக்கவே இருக்கிறது –
அதுவும் ஸ்வ பாவிகம் அல்ல -பின்னையோ கர்மாவினால் உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது
ஆதலால் ஆத்மா விகாரம் அற்ற ஸ்வரூபம் உள்ளவனே -இப்படிப்பட்ட ஸ்வரூபம் உள்ள விக்ரியாத்மகனான ஜ்ஞாத்ருவம் ஆனது ஜ்ஞான ச்வரூபனான ஆத்மாவுக்கே என்பதனால் ஒரு பொழுதும் ஜடமான அஹங்காரத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் சம்பவியாது –
அஹங்காரம் ஜட ஸ்வரூபமாக இருந்த போதிலும் கூட சித்தினுடைய சாமீப்யம் இருப்பது பற்றி அதின் சாயையானது இதில் தாக்குவதனால்
அந்த ஜ்ஞாத்ருத்வத்துக்கு சம்பவம் என்று கூறப்படுமே யானால் இந்த சிச்சயா பத்தி எனபது யாது -சம்வித்துக்கு அஹங்காரச் சாயாபத்தியா –அல்லது அஹங்காரத்துகு சம்வித் சாயாபத்தியாய் –சம்வித்துக்கு அஹங்காரச் சாயா பத்தி எனபது இல்லை -சம்வித்தில் ஜ்ஞாத்ருத்வம் ஒப்புக் கொள்ளாததால் அஹங்காரத்துக்கும் சம்விச் சாயா பத்தி இல்லை
முற்கூறப் பட்ட ஜடமான அதற்கு ஜ்ஞாத்ருத்வம் இல்லாமையாலும் -இரண்டும் சஷூர் இந்த்ரிய கோசரங்களாக இல்லாமையாலும்
அசரஷூ ஷங்களுக்கு சாயை காணப் பட்டது இல்லை யன்றோ
அப்படிக்கு அன்று அக்னியின் சேர்க்கையால் இரும்பு உண்டையில் ஔஷண்யம் போலே சித் சம்சர்க்கத்தால் ஜ்ஞாத்ருத்வத்துக்கு
உபலப்தி என்று சொல்லப் படுமே யாகில் இது சரி யல்ல
சம்வித்தில் வாச்தவ்யமான ஜ்ஞாத்ருத்வத்தை ஒப்புக் கொள்ளாததினாலேயே-அதின் சம்பந்தத்தால் அஹங்காரத்தில் ஜ்ஞாத்ருத்வமோ
அதின் உபலப்தியோ ஒன்றும் இல்லை
அசேதனமான அஹங்காரத்துக்கு ஜ்ஞாத்ருத்வ அசம்பாவத்தாலேயே அதன் சம்சர்க்கத்தால் சம்வித்தில் ஜ்ஞாத்ருத்வமோ அதின் உபலப்தியோ ஒன்றும் இல்லை –
இரண்டின் இடத்திலும் வாச்தவ்யத்தில் ஜ்ஞாத்ருத்வம் இல்லை -அஹங்காரமோ வென்றால் அநு பூதிக்கு அபிவயஞ்சநம் கண்ணாடி முதலியது
போல் அநு பூதியை தன்னிடத்திலே இருக்கிறதாகவ அபி வ்யஞ்சநம் செய்கிறது என்று எது உரைக்கப் பட்டதோ அது உக்தம் அல்ல –
ஸ்வயம் ஜ்யோதிசான ஆத்மாவுக்கு ஜட ரூபமான அஹங்கார அபி வ்யங்கயத்வம் பொருந்தாதலால் அது சொல்லப் பட்டு இருக்கிறது
சாந்தாங்கார-கரி – இவாதித்யம் அஹங்காரோ ஜடாத்மாக ஸ்வயம் ஜ்யோதிஷ மாத்மானம் வய நக்தீதி ந்யுக்திமத் –
எரிந்து தணிந்த தணல் ஆதித்யனைப் பிரகாசிப்பிக்கிறது எனபது போலே ஜட ஸ்வரூபியான அஹங்காரம் ஆனது ஸ்வயம் ஜ்யோதிசான
ஆத்மாவை பிரகாசிக்கச் செய்கிறது எனபது யுக்தி உள்ளது அல்ல –
எல்லா பதார்த்தங்களும் ஸ்வயம் பிரகாச அனுபவ ஆதீன சித்தி உள்ளவைகள் அன்றோ
அதில் அனுபவ ஆதீன பிரகாசம் உள்ள அசித்தான அஹங்காரம் ஆனது உதயாச்தமயம் அல்லாத பிரகாசம் உள்ளதும் அசேஷார்த்த சித்திக்கு
ஹேதுவாகவும் இருக்கிற அனுபவத்தை அபிவ யஞ்சனம் செய்கிறது என்பதை ஆத்மவித்துக்கள் பரிகசிக்கின்றார்கள்

ஸ்வயம் -அத ஷேத்ரஜ்ஞ- ஷேத்ரஜ்ஞ அவஸ்தாயாம் –தமீமம் –ஜ்ஞான பிரசரேது-தச்ச -அவீக்ரிய –ஏவம் ரூப விக்ரியாத்மகம் -ஜட –கேயம் –கிம் —
சம்விச்சாயா பத்தி ரஹாங்கா ரஸ்ய-ததாவத் –தாபி -த்யோரபி -நஹி -நைதத் சம்வித் -அஹங்காரஸ்யது –ஸூதராமிதி –
உபயத்ர வஸ்துத இதி -அஹங்கா ரஸ்து –ததயுக்தம் –ஆத்மா -ததுக்தம் –அநு திதா நஸ் தமித ஸ்வரூப பிரகாசம் -பரிஹசந்தி —

—————————————————————————————————
மேலும் அஹங்காரம் அனுபவம் இரண்டுக்கும் ஸ்வ பாவ விரோதித்தினாலும் அநு பூதிக்கு அநநுபூதித்வம் பிரசங்கிப்பதாலும்
வ்யங்க்ருத் வ்யங்க்ய பாவம் இல்லை —
இது சொல்லப் பட்டு இருக்கிறது -வ்யங்க்ருத் வ்யங்க்ய த்வம் அந்யோந்யம் நசஸ் யாத் ப்ராதிகூல்யதா -வ்யங்கத்வேன
அந அநுபூதித்வம் ஆத்மநி ஸ்யாத்யதா கடா –பிரதிகூல ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதால் பரஸ்பரம் வ்யங்க்ருத் வ்யங்க்ய பாவம் சம்பவியாது –
வ்யங்க் யத்வத்தை ஒப்புக் கொண்டால் கடத்தில் போலே ஆத்மாவினிடத்தில் அநநுபூதித்வம் ஏற்படும் –
ஸூ ர்ய கிரணங்களுக்கு தன்னால் அபிவ்யஞ்ஜிக்கத் தக்க கர தலத்தினால் அபிவ்யங்க்யத்வம் போலே
சம்வித்துக்கும் சம்வித்தினால் அபிவ்யங்க்யமான அஹங்கார அபிவ்யங்க்யதவம் -என்று சொல்வது சரியன்று
அங்கேயும் ஸூ ர்ய கிரண சமூஹங்களுக்கு கரதல அபியங்க்யத்வம் இல்லாமையாலே
கரதலத்தால் தடைபட்ட கதிர்களுடன் கூடியவைகளாக வன்றோ ஸூ ர்யாச்மிகள் பகுளங்களாக தானே அதி ஸ்பஷ்டமாக அறியப் படுகின்றன –
ஆதலால் கரதலம் அந்த கிரணங்களின் பாஹூள்ய மாத்ர ஹேதுவே ஒழிய கிரண அபிவ்யஞ்சகம் அல்ல –
மேலும் இந்த சம்வித் ஸ்வரூபமான ஆத்மாவுக்கு அஹங்காரத்தால் ஏற்படுத்தத் தக்க அபிவ்யக்தியானது எவ்விதமானது –
உத்பத்தியன்று ச்வதஸ் சித்தமாக இருப்பது பற்றி மற்று ஒன்றினால் உண்டு பண்ணத் தக்க தன்மையினது இன்மை ஒப்புக் கொள்ளப் பட்டு
இருப்பதால் அதின் பிரகாசனமும் இல்லை -அந்த சம்வித்தானது அனுபவாந்தரங்களால் அநு பாவ்யம் அல்லாதலால் –
அதனாலேயே அஹங்காரத்துக்கு சம்வித அனுபவ சாதனா அனுக்ரஹம் இல்லை -அந்த அனுக்ரஹம் இரண்டு விதம் அன்றோ –
ஜ்ஞேயத்துக்கு இந்த்ரிய சம்பந்தத்தில் ஹேதுவாக இருத்தலாவது எப்படி ஜாதி முகம் முதலியவற்றை கிரஹிக்கும் விஷயத்தில்
வ்யக்தி தாபணம் முதலியவைகளுக்கு நயனம் முதலிய இந்த்ரிய சம்பந்த ஹேதுத்வமோ போக்தாவின் இடத்தில் உள்ள கல்மஷைத்தைப்
போக்குதலாவது எவ்வாறு பரதத்வாவ போதனத்துக்கு சாதனமான சாஸ்தரத்துக்கு சமதமாதியினால் இப்படியே சொல்லப் பட்டு இருக்கிறது
கரணா நாம பூமித் வான்ன தத் சம்பந்த ஹேதுதா –இந்த்ரியங்களுக்கு விஷயம் இல்லாதலா அந்த இந்த்ரிய சம்பந்த ஹேதுத்வம் இல்லை –என்று –

கிஞ்ச -அநு பூதேர ந நு பூதித்வா பிரசங்காச்ச –யதோக்தம்–
தத்ராபி –கரதல –நதாவத் –ஸ்வ தஸ் சித்த தயேதி -நாபி –
ஜ்ஞேயஸ்ய -யதோக்தம்

———————————————————————————————-

மேலும் அநு பூதிக்கு அநு பாவ்யத்வத்தை ஒப்புக் கொண்ட போதிலும் அஹம் அர்த்தத்தினால் அதின் அனுபவ சாதனஎளிதில் சொல்ல முடியாது – அனுக்ரஹம்
அந்த அனுக்ரஹமோ என்றால் அநு பாவ்யமான வஸ்துவின் அனுபவத்தின் உத்பத்திக்கு பிரதிபந்தத்தை நிரசிப்பதனால் உண்டாக வேணும்
எப்படி தீபம் முதலியவற்றால் கண்ணுக்கு ரூபம் முதலியவற்றின் ஜ்ஞான உத்பத்திக்கு விரோதியான இருள் விலக்கத்தாலோ –
இந்த இடத்தில் விலக்கத் தக்க அப்படிப் பட்ட வஸ்து ஒன்றும் சம்பவிக்கிறது இல்லை
சம்விதாத்மாவை அடைந்து இருக்கிறதும் -அந்த ஜ்ஞான உத்பத்தியை தடுக்கிறதும் -அஹங்காரத்தால் போக்கடிக்கத் தக்கதுமான வஸ்து ஒன்றும் இல்லை –
அஜ்ஞ்ஞானம் இருக்கிறது அன்றோ என்று சொல்லப் படுமே யாகில் -இல்லை -அஜ்ஞ்ஞாநத்துக்கு அஹங்காரத்தால் விலக்கத் தக்க தன்மை
ஏற்றுக் கொள்ளப் படாதலால் -ஜ்ஞானம் அன்றோ அஜ்ஞ்ஞாத்தை விலக்கும் தன்மை வாய்ந்து உள்ளது –

நஹி –யதா ரூபாதி –ந சே ஹி –நதாவத் –அஸ்தி ஹி –ஜ்ஞான மேவஹி —

————————————————————————————-

அஜ்ஞ்ஞானத்துக்கு சம்வித்தை ஆச்ரயித்து இருத்தல் சம்பவியாது அன்றோ -ஜ்ஞானத்தோடு சமானமான ஆஸ்ரயம் உள்ளதாக இருப்பதாலும்
அந்த ஜ்ஞானத்தோடு சமானம் விஷயம் உள்ளதாக இருப்பதாலும் -ஜ்ஞாத்ரு பாவம் -விஷய பாவம் –இவ்விரண்டுகளால் விடுபட்டு
சாஷியாக இருக்கிற ஜ்ஞான மாதரத்தில் அஜ்ஞ்ஞானமாவது உண்டாவதற்கு தகுதி உள்ளதாகா தன்றோ
எவ்வாறு ஜ்ஞானாஸ்ரயத்வ பராசக்தி இல்லாமையால் கடம் முதலியவற்றுக்கு அஜ்ஞ்ஞானாஸ்ரயத்வம் இல்லையோ அவ்வாறே –
ஜ்ஞான மாத்ரத்திலும் ஜ்ஞான ஆச்ரயத்வம் இல்லாமையால் அஜ்ஞ்ஞான ஆச்ரயத்வம் சம்பவியாது –
சம்வித்துக்கு அஜ்ஞ்ஞான ஆச்ரயத்வத்தை ஒப்புக் கொண்ட போதிலும் ஆத்மாவாக ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற அந்த சம்விதிற்கு ஜ்ஞான விஷயத்வம் இல்லாமையாலே ஜ்ஞானத்தால் அதை அடைந்து இருக்கிற அஜ்ஞ்ஞாநத்திற்கு நிவ்ருத்தி இல்லை –
ஜ்ஞானமோ என்றால் தனக்கு எது விஷயமோ அதிலேயே அஜ்ஞ்ஞானத்தை நிவர்த்திப்பிக்கிறது -ரஜ்ஜூ முதலியதில் போலே
ஆகையால் சம்வித ஆச்ரயமான அஜ்ஞ்ஞானமானது ஒன்றினாலும் ஒருக்காலும் நாசம் செய்யப் படுகிறது இல்லை
சத் என்றும் அசத் என்றும் நிர்வசனம் செய்யத் தகாததான இந்த அஜ்ஞ்ஞானத்தினுடைய ஸ்வரூபமே நிரூபிக்க முடியாதது என்று மேலே சொல்லப் போகிறோம்
ஜ்ஞான ப்ராகபாவ ரூபமான அஜ்ஞ்ஞானத்துக்கு ஜ்ஞான உத்பத்தி விரோதித்வம் இல்லாமையாலே அதின் நிரசனத்தில்
அந்த அனுபவ சாதன அனுக்ரஹம் இல்லை -ஆகையால் ஒரு விதத்தாலும் அஹங்காரத்தால் அநு பூதிக்கு அபி வ்யக்தி இல்லை –

நாசா -ஜ்ஞான -ஜ்ஞாத்ரு பாவ –யதா –ஜ்ஞானாஸ்ரயத்வ ப்ரசந்தீதி–சம்வித –ஆத்மதயா–அப்யுபகதாயா –அசய –ஜ்ஞான பிராபக பாவ

—————————————————————————————–

அபிவ் யஞ்ஜ கங்களுக்கு தன்னிடத்தில் இருப்பதாக அபிவ் யங்க்யங்களை அபிவ் யஞ்ஜநம் செய்தல் ஸ்வ பாவம் அல்ல –
-ப்ரதீபம் முதலியவைகளில் காணப் படாமையால் –
ஜ்ஞானம் ஜ்ஞான ஸ்தானம் அனுக்ரஹகம் இம் மூன்றுக்கும் உள்ளபடி இருக்கிற பதார்த்த ஜ்ஞானதிற்கு அநு குணமான
ஸ்வ பாவம் இருப்பதால் அதுவும் ச்வத பிராமணிய நியாயத்தால் சித்தம்
கண்ணாடி முதலியது முகம் முதலியவற்றுக்கு அபிவ் யஞ்ஜகம் அல்ல -பின்னையோ சஷூஷதேஜசின் பிரதிபலன ரூப தோஷத்துக்கு ஹேது
அதில் விபரீதமான தோற்றமானது அந்த பிரதிபலன ரூப தோஷத்தால் உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது –
ஆலோகம் -ஸூ ர்ய பிரகாசம் முதலியவை அபிவ் யஞ்ஜகம் –
ஸ்வ பிரகாசையாக இருக்கிற இந்த சம்வித்தில் அவ்வண்ணம் அஹங்காரத்தால் அப்படிப் பட்ட தோஷத்தைப் போக்குதல் சம்பவிக்கிறது இல்லை
வ்யக்திக்கோ என்றால் ஜாதி யானது ஆகாரமாதலால் அந்த வ்யக்தியை ஆச்ரயித்ததாகவே ஜாதியானது அறியப் படுகிறது ஒழிய
வ்யக்தி வ்யன்க்யமாக ஆகிறது இல்லை
ஆகையால் வாச்தவத்தாலோ தோஷத்தாலோ அந்தக் கரண பூதமான அஹங்காரத்தில் இருப்பதாக சம்வித்தின் உபலப்திக்கு ஒரு காரணமும் இங்கு இல்லை
ஆகையால் அஹங்காரத் திற்கு ஜ்ஞாத்ருத்வமாவது அவ்வாறாக உபலப்தி யாவது இல்லை

தச -பிரதி பாதிஷூ –யதா வச்தித -தச்ச -அபிது –தன தோஷ –அபிவ் யஞ்ஜ கஸ்து –ந சே ஹ –வ்யக்தே -அத –
நஅஹங்காரஸ்ய ஜ்ஞாத்ருத்வம் ததோ பல திர்வேதி —

——————————————————————————————–

ஆகையால் தானாகவே ஜ்ஞாதாவாக சித்திக்கிற அஹம் அர்த்தமே பிரத்யகாத்மா -ஜ்ஞப்தி மாதரம் அன்று -அஹம் அபாவம் போய்
விடுமே ஆகில் ஜ்ஞப்திக்கும் கூட பிரத்யக்த சித்தி இல்லை என்று சொல்லப் பட்டது
தமோ குணம் அதிகரித்து ஆக்ரமிப்பதாலும் பிரகாரத்த அனுபவம் இல்லாமையாலும் அஹம் அர்த்தத்துக்கு தனித்து வ்யக்தமான பிரகாசம்
இல்லாமல் இருந்த போதிலும் விழிக்கிற வரையில் அஹம் என்று -ஒரே விதமாக ஆன்மாவுக்கு ச்பூர்த்தி இருப்பதால்
ஸூ ஷூப்தியில் கூட அஹம் பாவனை விலகுகிறது இல்லை –
உனக்கு அபிமதையான அநு பூதிக்கும் அவ்வாறே பிரசக்தி என்று சொல்லத் தக்கது
தூங்கி எழுந்து இருந்தவன் ஒருவனாவது அஹம் பாவத்தின் நின்றும் விடுபட்டதும் அர்த்தாந்தரங்களுக்கு விரோதியான ஆகாரத்துடன்
கூடியதுமான ஜ்ஞப்தி யாகிய நான் அஜ்ஞ்ஞான சாஷியாக இருக்கிறேன் என்று இவ்விதமான ஸ்வாப சமகாலையான அநு பூதியை
பராமர்சிக்கிறான் இல்லை – -ஸூ கமாக நான் தூங்கினேன் என்று இப்படி யல்லவோ தூங்கி எழுந்து இருந்தவனுக்கு பராமர்சம் வருகிறது
இந்த பராமர்சத்தால் அப்பொழுதும் கூட அஹம் அர்த்தமாகவே இருக்கிற ஆத்மாவுக்கே ஸூ கித்வமும் ஜ்ஞாத்ருத்வமும் அறியப் படுகிறது
எவ்வாறு இப்பொழுது ஸூ கம் உண்டாகிறதோ அவ்வாறு அப்பொழுது உறங்கினேன் எனபது இந்த பிரதிபத்தி என்று சொல்லத் தக்கதல்ல
-பிரதிபத்திக்கு அந்த ஸ்வரூபம் இல்லாமையாலே –

தஸ்மாத் –அஹம் பாவ விகமே -தம -அஹம் இத் ஏகா காரேண ஸ புரணாத்–பவதபிமாதாய அநு பூதோபி-
-நஹி –ஏவம் ஹி -அ நே ந—-நச -அதத்ருபாவாத் —

——————————————————————————
அஹம் அர்த்தமான ஆத்மா அஸ்திரம் ஆதலால் அப்பொழுது அஹம் அர்த்தத்துக்கு ஸூ கித்வ அனுசந்தானத்துக்கு அனுபபத்தி எனபது இல்லை
யாதொரு காரணத்தினால் ஸூ ஷுப்தி தசைக்கு முன் அனுபவிக்கப் பட்ட வஸ்துவை தூங்கி எழுந்து இருந்தவன்
என்னால் இது செய்யப் பட்டது -என்னால் இது அனுபவிக்கப் பட்டது நான் இதைச் சொன்னேன் என்று பராமர்சிக்கிறானோ
இவ்வளவு காலம் வரையில் நான் ஒன்றையும் அறிந்திலேன் என்று பராமர்சிக்கிறான் என்று கூறப் படுமே யானால் -அதினால் என்ன –
கிஞ்சித் என்று -எல்லாவற்றுக்கும் பிரதிஷேதம் என்று சொல்லப் படுமே யானால் -நான் அறிந்தேன் என்று வேதிதாவான
அஹம் அர்த்ததிற்கே அநு வ்ருத்தி இருப்பதால்
அறியத் தக்க வஸ்து விஷயம் அல்லவோ அந்த பிரதிஷேதம் – ந கிஞ்சித் என்கிற நிஷேதம் க்ருத்சன விஷயமாக இருக்குமே யானால்
உனக்கு அபிமதமான அநு பூதியும் நிஷேதிக்கப் பட்டதாக ஆகும்
ஸூ ஷுப்தி சமயத்திலோ என்றால் அனுசந்திக்கப் படா நின்ற அஹம் அர்த்தமாகவும் ஜ்ஞாதாவாகவும் இருக்கிற ஆத்மாவை அஹம் என்று
பராமர்சித்து -ந கிஞ்சித் வேதிஷம் -என்கிற இந்த பராமர்சித்தினாலேயே சாதிக்கிறவன்-அந்த இந்த அர்த்தத்தை தேவர்களுக்கே சாதிக்கட்டும்
என்னைக் கூட நான் அறிந்திலேன் என்று அஹம் அர்த்தத்துக்கு கூட அப்பொழுது அ நனுசந்தானம் அறியப் படுகிறது என்று சொல்லப் படுமே யாகில் தன அனுபவத்திற்கும் தன வசனத்துக்கும் உள்ள விரோதத்தைக் கூட நீங்கள் அறிகிறீர்கள் இல்லை –
அஹம் மாம் நஜ்ஞாதவான் -என்று அல்லவோ அனுபவ வசனங்கள் -மாம் என்பதனால் எது நிஷேதிக்கப் படுகிறது என்று
வினவப் படுகிறதே யானால் -உன்னால் நன்கு வினவப் பட்டது -அதற்கு உத்தரம் உரைக்கப் படுகிறது –
அஹம் அர்த்தாவான ஜ்ஞாதாவுக்கு அநு வ்ருத்தி இருப்பதனால் ஸ்வ ரூபம் நிஷேதிக்கப் படுகிறது இல்லை –
பின்னையோ விழித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் அநு சந்திக்கப் படா நின்ற அஹம் அர்த்தத்தினுடைய வர்ணாஸ்ரமம்
முதலியவைகளோடு கூடி இருத்தல்
அஹம் மாம் நஜ்ஞாதா வான -என்கிற வசனத்தில் விஷயம் விவேசிக்கத் தக்கது –
ஜாகரித்த அவஸ்தையில் அநு சந்திக்கப் பற்றிருகிற ஜாதி முதலியவைகளோடு கூடி இருக்கும் அஹம் அர்த்தம் ஆனது மாம் என்கிற அம்சத்துக்கு விஷயம் –
ஸ்வா ப்யயா அவஸ்தையில்பிரசித்தமானதும் அவிசதமான ஸ்வ அனுபவத்தையே முக்கியமாகக் கொண்டதுமான
அஹம் அர்த்தமானது அஹம் என்கிற அம்சத்துக்கு விஷயம்
இங்கு தூங்கினவன் -இப்படிப்பட்டவன் நான் -என்று என்னையும் நான் அறிந்திலேன் -இப்படியே யன்றோ அனுபவத்தின் மாதிரி —

நச -யத -ஏதா வந்தம் –தத கிம் -ந கிஞ்சித் –ந -ஸூ ஷுப்தி சம்யேது–தேவா நா மேவ சாத யது -மாம்பி -ஸ்வ ச்னுபவ –
அஹம்- மாமீதி –ததுச்யதே -அஹம் மாம் –ஜாகரித-அதர –

———————————————————————

மேலும் ஆன்மா ஸூ ஷூப்தியில் அஜ்ஞான சாஷியாக இருக்கிறான் என்று அல்லவோ உங்களுடைய பிரக்ரியை –
சாஷித்வம் ஆவது -சாஷாத் ஜ்ஞாத்ருத்வமே –
அறியாதவனுக்கு சாஷித்வம் இல்லை யன்றோ –ஜ்ஞாதாவே யன்றோ உலகத்திலும் வேதத்திலும் சாஷி என்று சொல்லப் படுகிறான்
-ஜ்ஞானம் மாதரம் அல்ல -பகவானான பாணினியும் கூறி இருக்கிறார் -அந்த இந்த சாஷி யானவன் ஜா நாமி என்று அறியப் படா நின்ற அஸ்மத் அர்த்தமே என்பதனால் –எதினால் எப்பொழுது அஹம் அர்த்தமானது அறியப் பட மாட்டாது -தனக்குத் தானாக பாசிக்கிற ஆத்மாவானது அஹம்
என்றே பாசிக்கிறது ஆதலால் ஸ்வா பம் முதலிய அவஸ்தைகளில் கூட பிரகாசிக்கிற ஆத்மா அஹம் என்றே பாசிக்கிறது எனபது சித்தம் —

கிஞ்ச -ஆத்மனே ஸ்வயம் -ஸ்வா பாதி —

———————————————————————————————–

மோஷ தசையில் அஹம் அர்த்தம் அனுவர்த்திகிறது இல்லை என்று எது கூறப் பட்டதோ அது அழகல்ல -அப்படியானால் ஆத்ம நாசமே
மோஷம் என்று வேறு விதத்தால் பிரதிஜ்ஞை செய்யப் பட்டதாகும் -அஹம் அர்த்தம் தர்ம மாதரம் அல்ல —
எதனால் அது போன போதிலும் அவித்யா நிவ்ருத்தியில் போலே ஸ்வரூபம் மிஞ்சி இருக்குமோ -விபரீதமாக அஹம் அர்த்தமானது
ஆத்மாவுக்கு ஸ்வரூபமே ஜ்ஞானமே என்றால் அதனுடைய தர்மம் –
நான் அறிகிறேன் ஜ்ஞானம் -எனக்கு உண்டாயிற்று என்றும் அஹம் அர்த்தத்துக்கு தர்மமாக ஜ்ஞான ப்ரதீதி வருவதாலேயே –
மேலும் எவன் பரமார்த்தமாகவோ ப்ராந்தியானாலேயோ ஆத்யாத்மிகம் முதலிய துக்கங்களால் தன்னை துக்கம் உள்ளவனாக
அஹம் துக்கி என்று அனுசந்தானம் செய்கிறானோ -அவனே இந்த எல்லா துக்க சமுதாயங்களையும் மறுபடி உண்டாகாமல் துலைத்து
எவ்வாறு நான் கவலை அற்றவனாகவும் ச்வச்தனாகவும் ஆவேன் என்று மோஷ இச்சை பிறந்தவனாக அதை சாதிப்பதில் பிரவர்த்திக்கிறான் –
அவன் சாதன அனுஷ்டானத்தால் நானே இருக்கப் போகிறது இல்லை என்று எண்ணுவானே யாகில் அவன் மோஷ கதா பிரச்தாவத்தின் நின்று விலகவே விலகுவான்
பிறகு அதிகாரி இல்லாமையாலேயே மோஷ சாஸ்திரம் முற்றிலும் அப்ரமாணமாக ஆகும்
அஹம் உபலஷிதமான பிரகாசம் மாதரம் மோஷத்தில் இருக்கிறது என்று சொல்லப் படுமே யாகில் இதனால் என்ன -நான் நஷ்டமாய் போன
போதிலும் கூட ஓரான் ஒரு பிரகாசம் மாதரம் இருக்கிறது என்று எண்ணி புத்தி பூர்வகமாக கார்யம் செய்பவன் ஒருவனாவது பிரயத்னம் செய்ய மாட்டான்
ஆகையால் ஜ்ஞாதாவாக சித்திக்கிற அஹம் அர்த்தமே பிரத்யகாத்மா –அந்த பிரத்யகாத்மா முக்தியிலும் அஹம் என்றே பிரகாசிக்கிறான்
தன பொருட்டு பிரகாசிப்பதால் எவன் எவன் தன பொருட்டு பிரகாசிக்கிறானோ அவன் எல்லாரும் அஹம் என்றே பிரகாசிக்கிறான்
சம்சாரியான ஆத்மா ஏதோ ஒரு விதமாக பிரகாசிப்பவனாக இருப்பதாக உபய வாதிகளாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறான்
எது நான் என்று பிரகாசிக்கிறது இல்லையோ அது தன பொருட்டு பிரகாசிக்கிறது இல்லை கடம் முதலியது போலே
இந்த முக்தாத்மா தன பொருட்டு பிரகாசிக்கிறான் -ஆகையால் அவன் அஹம் என்றே பிரகாசிக்கிறான் –

யத்து –ததா சதி —நச -அஹம் -அபிச -சர்வமேதத் –அ நாகுல ஸ்வ ஸ தோப வேய மிதி –ததஸ் அதிகாரி —
அஹம் உபலஷிதம் –அத -யோய –யா புன -ஸ்வச்மை –தஸ்மாத் –

————————————————————————————–

அஹம் என்று பிரகாசிப்பதனால் அவனுக்கு அஜ்ஞத்வம் சம்சாரித்வம் முதலிய ஹேய தர்மங்கள் பிரசங்கியாது-மோஷ விரோதத்தால்
அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத் வாதிகளுக்கு ஹேது வல்ல –
அஜ்ஞ்ஞானம் எனபது ஸ்வரூப அஜ்ஞ்ஞானம் -அந்யதாஜ்ஞானம்-அல்லது விபரீத ஜ்ஞானம்
அஹம் என்றே ஆத்ம ஸ்வரூபம் பாசிப்பதால் ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத்தை உண்டு பண்ணுகிறது இல்லை
அவ்வாறு இருக்க சம்சாரியாக இருக்கும் தன்மையை எவ்வண்ணம் உண்டாக்கும் -பின்னையோ இதற்கு விரோதியாக இருப்பதால்
அத்தை நாசம் செய்யும் அஹம் என்று பிரகாசிப்பதனால் அவனுக்கு அஜ்ஞத்வம் சம்சாரித்வம் முதலிய ஹேய தர்மங்கள் பிரசங்கியாது-
மோஷ விரோதத்தால் அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞாத்வாதிகளுக்கு ஹேது வல்ல —
அஜ்ஞ்ஞானம் எனபது ஸ்வரூப அஜ்ஞ்ஞானம் அன்யதாஜ்ஞ்ஞானம் விபரரீதஜ்ஞ்ஞானம் –
அஹம் என்றே ஆத்ம ஸ்வரூபம் பாசிப்பதால் ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அஹம் பிரத்யயமானது அஜ்ஞ்ஞத்தை உண்டு பண்ணுகிறது இல்லை –
அவ்வாறு இருக்க சம்சாரியாக இருக்கும் தன்மையை எவ்வாறு எவ்வண்ணம் உண்டாக்கும் –பின்னியோ அதற்கு விரோதியாக
இருப்பதால் அதை நாசம் செய்யும் –ப்ரஹ்மாத்மபாவ அபரோஷ்யத்தினால் விலக்கப் பட்ட மிச்சம் இல்லாத அவித்யை உடையவர்களான வாம தேவர் முதலியவர்களுக்கு அஹம் என்றே ஆத்ம அனுபவம் காணப் பட்டு இருப்பதாலும் -ஸ்ருதியை இது விஷயத்தில் பிரமாணமாக உபன்யசிக்கிறார் –
தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேதே —அஹம் மனுரபவம் ஸூ ர் யஸ்ய —அஹமேவச வர்தாமி பவிஷ்யாமி -இது முதலிய வசன சமூஹம் –
சமஸ்தமான இதர அஜ்ஞ்ஞான விரோதியும் -சத் என்கிற சப்தத்தால் உண்டாகிற ப்ரத்யய மாதரத்துக்கு கோசரமாகவும் இருக்கிற பரப்ரஹ்மத்தின் வ்யவஹாரமும் இவ்வண்ணமே –
ஹந்தா ஹாமி மாஸ் திஸ் ரோ தேவதா –சிருஷ்டியில் நோக்கம் உள்ளவனான நான் இந்த பிருத்வி அப்பு தேஜஸ் என்கிற மூன்று தேவதைகளை –
பஹூச்யாம் பிரஜாயேய -நான் உலகில் அநேக வஸ்துக்களாக பரிணமிக்கக் கடவேன் –
ச சஷ தா லோகான்னுஸ்ருஜா –உலகங்களை சிருஷ்டிக்கக் கடவேன் என்று சங்கல்ப்பித்தான் –
யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அஷராதபி சோத்தம — அதோ அஸ்மி லோகே வேதேச பிரதித – புருஷோத்தம -என்று
யாதொரு காரணத்தால் அசேதன பதார்த்தங்களை அதிக்ரமித்தவனாகவும் அசர சப்தத்தால் வாச்யர்களான ஜீவா வர்க்கங்களைக் காட்டிலும்
உத்தமனாகவும் இருக்கிறேனோ -அதனால் நான் உலகத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று பிரசித்தி பெற்று இருக்கிறேன் –
அஹமாத்மா குடாகேச -குடில குந்தலங்களை உடைய வனான ஹி அர்ஜுனா -நான் உலகம் அனைத்தையும் வியாபித்து இருக்கிறேன்
நத்வேவாஹம் ஜாத நாசம் — நான் ஒரு பொழுதும் இல்லாமல் இருந்தேன் எனபது இல்லை –
அஹம் க்ருதஸ் நஸய ஜகத பிரபவ பிரளயஸ் ததா அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே தேஷா மஹம்
ச மத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் -அஹம் பீஜ பரத பிதா வேதாஹம் சமாதி தானி –
அனைத்து உத்பத்தி லயத்துக்கு காரணமும் நானே -காரண பூதனான நானே சம்சார சாகரத்தில் இருந்து எடுத்து அருளுகிறேன்
விதை போடுகிற தகப்பன் -சென்றவைகளை அறிவேன் -இது முதலியவைகளிலே அஹம் என்றே ஆத்மாவினுடைய ஸ்வரூபம் ஆகில் எவ்வாறு அஹங்காரத்துக்கு ஷேத்ரத்தில் அந்தர்பாவமானது பகவானால் உபதேசிக்கப் படுகிறது
மஹா பூதான் யஹங்காரோ புத்திர வ்யக்தமேவச -ஐந்து மஹா பூதங்கள் அஹங்காரம் மஹத்தத்வம் மூலபிரக்ருதி -என்று சொல்லப் படுகிறது
ஸ்வரூப உபதேசங்கள் அனைத்திலும் அஹம் என்றே உபதேசித்தாலும் அப்படியே ஆத்ம ஸ்வரூப பிரத்பத்தியினாலும்
அஹம் என்ற பிரத்யகாத்மாவின் ஸ்வரூபம் –

நாசா –மோஷ –அஜ்ஞ்ஞான நாம –அஹமித்யேவ –அஜ்ஞத்வாத்ய ஹேதுத் வாச்ச–குத்ஸ் சம்சாரித்வம் -ப்ரஹ்மாத்மபாவ-
-சகல இதர –பஹூச்யாம் –அஹமாத்மா -நத்வே வாஹம் –கதம் தரீஹி –உச்யதே ஸ்வரூப உபதே சேஷு —

————————————————————————————–

மூலபிரக்ருதியின் பரிமாண பேதமாகிய அஹங்காரத்துக்கு ஷேத்ரத்தில் அந்தர்பாவமானது பகவானாலேயே உபதேசிக்கப் படுகிறது —
அது ஆத்மா அல்லாத தேஹத்தில் அஹம் பாவத்தைச் செய்வதற்கு ஹேதுவாக இருப்பதால் அஹங்காரம் என்று சொல்லப் படுகிறது
இந்த அஹங்கார சப்தத்திற்கோ வேந்தரில் அபூததத் பாவத்தில் -சவி -பிரத்யயத்தை கல்பித்து வ்யுத்புத்தி பண்ணத் தக்கது –
இதே அஹங்காரமானது மேன்மை தங்கிய பெரியோர்களின் அவமானத்துக்கு ஹேதுவாய்-கர்மம் -என்கிற வேறு பெயர் வாய்ந்ததாக
சாஸ்த்ரங்களில் பெரும்பான்மையாக விடத் தக்கதாக பிரதிபாதிக்கப் படுகிறது
ஆகையால் பாதகம் இல்லாத அஹம் புத்தியானது சாஷாத் ஆத்ம கோசரையாகவே இருக்கிறது –
சரீர கோசரையான அஹம் புத்தியோ என்றால் அவித்தையே -பராசர பகவானால் இது விஷயமான பிரமாணம் கூறப் பட்டு இருக்கிறது –
ஸ்ரூய தாஞ்சாப்ய வித்யாயாஸ் ஸ்வரூபம் குல நந்தன அநாத்ம அனாத்ம புத்திர்யா-வம்சத்துக்கு பெருமை உண்டு பண்ணுகிறவனே-
அவித்யையின் ஸ்வரூபம் கேழ்க்கப் படலாம் -ஆத்மா வல்லாத வஸ்துவில் ஆத்ம புத்தி யாதொன்று உண்டோ -என்று –
ஜ்ஞப்தி மாதரம் ஆத்மாவாக இருக்குமே யானால் அப்பொழுது ஆத்மா வல்லாத ஆத்ம அபிமான விஷயமான சரீரத்தில்
ஜ்ஞப்தி மாதரத்துக்கு பிரதிபாசம் உண்டாக வேணும் ஜ்ஞாதாவுக்கு பிரதிபாசம் கூடாது -ஆகையால் ஜ்ஞாதா வான
அஹம் அர்த்தமே ஆத்மா -இது சொல்லப் பட்டு இருக்கிறது –
அத பிரத்யஷ சித்தயா துக்த ந்யாயாகமான் வயாத் அவித்யா யோகதஸ் சாதமா ஜ்ஞாதா ஹமிதி பாசதே -என்று
ஆகையால் பிரத்யஷ சித்தமாக இருப்பதாலும் முற்கூறப் பட்டு இருக்கிற நியாய சம்பந்தத்தாலும் -சாஸ்திர சம்பந்தத்தாலும் அவித்யா சம்பந்தத்தாலும்
ஆத்மாவானது நான் -ஜ்ஞாதா -என்று பாசிக்கிறது என்று -அவ்வாறே பிரமாணங்களும்
-தேக இந்த்ரிய மன பிராண தீப்யோ அன்யோ அநந்ய சாதனா நித்யோ வ்யாபீ பிரதிஷேத்ரமாத்மா பின்னஸ் ஸ்வ தஸ் ஸூகி -என்று -அநந்ய சாதனா ஸ்வயம் பிரகாசன் -வ்யாபீ -அதி ஸூ ஷ்மமாக இருப்பதனால் எல்லா அசேதனங்களுக்கு உள்ளும் வியாபிக்கும் ஸ்வ பாவம் உள்ளவன் –

அவ்யக்த –சாது –அஹங்காரம் பலம் தர்பம் -அயமேவது -தஸ்மாத் –யதோக்தம் -யதி -அநாத்மநி– தஸ்மாத் –ததுக்தம் -அதன்ய -அதி ஸூ ஷ்ம

————————————————————————– –

தோஷ மூலமாக இருப்பது பற்றி அன்யதா சித்தி சம்பாவனையால் சகல பேதங்களையும் அவலம்பித்து வருகிற பிரத்யஷமானது சாஸ்த்ரத்தினால்
பாதிக்கத் தக்கது என்று எது சொல்லப் பட்டதோ அந்த தோஷம் எது என்று சொல்லத் தக்கது
எந்த தோஷத்தை நீ மூலமாக கொள்வதனால் பிரத்யஷத்துக்கு அன்யதா சித்தி -ஏற்படுகிறதோ -அநாதி பேத வாசனையே தோஷம்
என்று சொல்லப் படுமே யாகில் பேத வாசனைக்கு திமிரம் முதலிய தோஷங்களுக்கு போலே உள்ளபடி இருக்கிற வஸ்துக்களின் விபரீத ஜ்ஞான ஹேதுத்வமானது வேறு இடத்தில் இதற்கு முன் உன்னால் அறியப் பட்டு இருக்கிறதா –
இந்த சாஸ்திர விரோதத்தினாலேயே அறியப் படப் போகிறது என்று சொல்லப் படுமே யாகில் அது சரி யன்று –
அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் வருவதால் சாஸ்தரத்துக்கு ஒரு விசேஷமும் இல்லாத வஸ்துவை உணர்த்தும் தன்மை நிச்சயிக்கப் பட்டால்
பேத வாசனைக்கு தோஷத்வ நிச்சயம் ஏற்படுகிறது —பேத வாசனைக்கு தோஷத்வ நிச்சயம் ஏற்பட்டால் தான் சாஸ்தரத்துக்கு
எல்லா விசேஷங்களையும் இழந்து இருக்கிற வஸ்துவை உணர்த்தும் தன்மை நிச்சயிக்கப் படுகிறது –

யதுக்தம் -தோஷ மூலத்வேன –சகல பேதா வலம்பி பிரத்யஷ்யச்ய -கோயம் -கோயம் தோஷம் இதி -வ்க்தவ்யமிதி –
-யன் மூலதயா –அநாதி -பேத வாசநாயா —
ஆறு தாத்பர்ய லிங்கங்கள் -உபக்கிரம உப சம்ஹாரங்கள் அப்யாசம் அபூர்வதா பலம் அர்த்தவாதம் உபபத்தி –

—————————————————————————————-

மேலும் பேத வாசனையை காரணமாகக் கொண்டு இருப்பதனால் பிரத்யஷத்துக்கு விபரீத அர்த்தத்தோடு கூடி இருத்தல் கூறப் படுமே யாகில் –
-சாஸ்திரமும் அந்த பேத வாசனா மூலமாக இருப்பதால் அவ்வாறே யாகும் -அப்படிக்கின்றி சாஸ்திரம் தோஷ மூலமாக இருந்த போதிலும்
பிரத்யஷமாக அறியப் பட்டு இருக்கிற சகல பேத நிரசன ஜ்ஞானத்துக்கு ஹேதுவாக இருப்பது பற்றி பிந்தியதாய் இருப்பதனால்
அந்த சாஸ்திரம் பிரத்யஷத்துக்கு பாதகமாக ஆகக் கூடுமே என்று உரைக்கப் படுமே யாகில் -அது சரி யன்று –
தோஷ மூலத்வம் அறியப் பட்டு இருக்கையில் -பரத்வம் -பிற்பட்டு இருத்தல் -எனபது பயன் அற்றது -ரஜ்ஜூவில் சர்ப்ப ஜ்ஞானத்தால் பயம் உண்டாய் இருக்கையில் இவன் -இவன் பராந்தன் என்று நன்கு அறிந்தவனான ஒருவனால் இது சர்ப்பம் அல்ல பயப்படாதே -என்று சொல்லப் பட்டப் போதிலும்
பயத்தின் நீங்காமை காணப் படுவதால் -சாச்த்ரத்துக்கும் தோஷ மூலத்வமானது சரவண வேளையிலே அறியப் பட்டு இருக்கிறது
மனனம் முதலியது ஸ்ரவணத்தால் அறியப் பட்டு இருக்கிற சமஸ்த மான பேதங்களையும் போக்குகின்ற ப்ரஹ்மாத்மைகதவ
விஜ்ஞானத்தின் ஆவ்ருத்தி ரூபமாய் இருத்தல் –

கிஞ்ச –அத –தன்ன -ரஜ்ஜூ சர்ப்ப –சாச்த்ரச்ய –ஸ்ரவணாகத

————————————————————–

மேலும் இது சாஸ்திரம் -இது தோஷ சம்பாவனை அற்றது -பிரத்யஷமோ சம்பவிக்கத் தக்க தோஷத்துடன் கூடியது என்று உன்னால்
எந்த காரணத்தால் அறியப் பட்டது –ஸ்வ தஸ் சித்தையாயும்-சகல விசேஷங்களும் அற்றதான அநு பூதியானது இந்த அர்த்தத்தை உணர்த்தத் திறமை உள்ளதாக ஆகாது –ஏன் என்னில் அது விஷயங்களின் நின்றும் விலகி இருப்பதாலும் -சாஸ்திர பஷபாதம் இல்லாமையாலும் இந்திரியங்களால் உண்டாகிற பிரத்யஷமும் இந்த அர்த்தத்தை உணர்த்த திறமை உள்ளதாக ஆகாது -தோஷ மூலமாய் இருப்பது பற்றி விபரீத அர்த்தத்தை உடையதாகையால் -அந்த தோஷத்தை மூலமாகக் கொண்டு இருப்பதினாலேயே மற்றவைகளும் பிரமாணங்கள் ஆகா
ஆகையால் தன பஷத்தை சாதிக்கத் திறமை உள்ள பிரமாணத்தை ஒப்புக் கொள்ளாமையால் தனக்கு சம்பந்தமாக இருக்கிற அர்த்தம் சித்தி பெறுகிறது இல்லை-
அய்யா வ்ய்வஹாரிகமான பிரமாண பிரமேய வ்யவஹாரம் எங்களுக்கும் இருக்கவே இருக்கிறது -இந்த வ்யவஹாரிகம் எனபது யாது –
ஆபாத ப்ரதீதியினால் சித்தி பெற்றதும் யுக்திகளால் நிரூபிக்கப் படுமே யாகில் அவ்வாறு நிலை பெற்று இராதது என்றும் சொல்லப் படுமே யாகில் அதனால் யாது பயன் –
பிரமாணமாக ஒப்புக் கொள்ளப் பட்டாலும் யுக்தியினால் உண்டான பாதத்தாலேயே பிரமாண கார்யம் இல்லாமையால் –

அபிச -நா தாவத் இதி -தஸ்யா–சாஸ்திர பஷ பாத விரஹாச்ச –நாபி -அத -நநு கோயம் –ஆபாத –கிம் நே ந -பிரமாண தயா —

—————————————————————————————-

மேலும் அப்படிக்கன்று சாஸ்திரம் பிரத்யஷம் இரண்டுக்கும் அவித்யா மூலத்வம் இருந்த போதிலும் பிரதிஷ விஷயத்துக்கு சாஸ்திரத்தால்
பாதமானது காணப் படுகிறது -சாஸ்திர விஷயமான சத் ரூபமான அத்விதீய ப்ரஹ்மதுக்கு-பிந்தின சாச்த்ரத்தால் பாதம் காணப் படாமையினால்
நிர்விசேஷமான அநு பூதி மாத்ரமான ப்ரஹ்மமே பரமார்த்தம் என்று சொல்லப் படுமே யாகில் -அது சரியல்ல –
அபாதிதமாக இருந்த போதிலும் கூட தோஷ மூலமான சாஸ்தரத்துக்கு அபாரமார்த்யயம் நிச்சயிக்கப் பட்டு இருப்பதால் இது சொல்லப் பட்டதாகிறது –
எவ்வாறு காசம் முதலிய கண் ரோகம் அற்ற சகல இதர புருஷர்களுக்கு எட்டாத மலையினுடைய குஹைகளில் வாஸம் பண்ணுகிறவர்களும் தம் கண்ணில் உள்ள திமிர ரோகத்தை அறியாதவர்க்களுமான -திமிர ரோகம் உள்ள எல்லா ஜனங்களுக்கும் திமிர தோஷம் சமானமாக இருப்பதனால் சந்தரன்
இரண்டு என்கிற ஜ்ஞானமானது பேதம் இன்றி உண்டாகிறது –அந்த இடத்தில் பாதக ஜ்ஞானமானது இல்லை எனபது பற்றி அந்த த்விசந்திர ஜ்ஞானமானது மித்யை யல்லாமல் போகாது என்பதினால் அந்த பரமாத்மக ஜ்ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்விசந்த்ரத்வமும் மித்யையே-
தோஷம் அன்றோ யதார்த்த ஜ்ஞானத்துக்கு ஹேது –அவ்வாறு ப்ரஹ்ம ஜ்ஞானம் அவித்யயை மூலமாகக் கொண்டு இருப்பதனால் பாதக ஜ்ஞானம் இல்லாவிடிலும் தனக்கு விஷயமாய் இருக்கிற ப்ரஹ்மத்தோடே கூட மித்யையே என்று –
இந்த விஷயத்தில் அநு மானங்களும் இருக்கின்றன –விவாத விஷயமான ப்ரஹ்மம் மித்யை –அவித்யை உள்ளவனுக்கு உண்டாய் இருக்கிற
ஜ்ஞானத்துக்கு விஷயமாக இருப்பதால் பிரபஞ்சகம் போலே ப்ரஹ்மமானது மித்யை ஜ்ஞான விஷயமாக இருப்பதால் -பிரபஞ்சம் போலே –
ப்ரஹ்மமானது மித்த்யை அசத்திய ஹேதுக்களால் உண்டான ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருப்பதால் பிரபஞ்சம் போலவே —

அதோச்யேத–சாஸ்திர விஷயச்ய –தத் அயுக்தம் என்று -அபாதி தஸ்ய –ஏதத் உக்தம் -தோஷோஹி–ததா -பவந்தி —

————————————————————————————–

ஸ்வப்ன அவஸ்தையில் உண்டாகிற அசத்யமான கஜம் முதலியவற்றின் விஜ்ஞானத்துக்கு பரமார்த்தமான சுபாசுப பிரதிபத்தி ஹேதுத்வம் போலே –
அவித்யா மூலத்வம் இருப்பதால் அசத்யமான சாஸ்த்ரத்துக்கும் பரமார்த்தமான ப்ரஹ்ம விஷய பிரதிபத்தி ஹேதுத்வமானது விருத்தம் அல்ல
என்று உன்னால் சொல்லத் தக்கதல்ல –ஸ்வாப அஜ்ஞ்ஞானமானது அசத்தியம் இல்லாதலால் —
அந்த ஸ்வப்னத்தில் விஷயங்களுக்கு அன்றோ மித்த்யாத்வம் -அவைகளுக்கே அன்றோ பாதம் காணப் படுகிறது -ஜ்ஞானத்துக்கு பாதம்
காணப் படவில்லை -என்னால் ஸ்வப்ன வேளையில் அனுபவிக்கப் பட்ட ஜ்ஞானம் கூட இல்லை -என்று ஒருவனுக்காவது ஜ்ஞானம்
உண்டாகிறது அல்லை அன்றோ –தர்சனமோ இருக்கிறது -அர்த்தங்கள் இல்லை -என்று அல்லவோ பாதக பிரத்யயம்
மாயாவியினுடைய மந்த்ரம் ஔஷதம் முதலியவைகளால் சம்பவிக்கிற மாயாமயமான ஜ்ஞானமானது சத்தியமாகவே இருந்து கொண்டு
ப்ரீதிக்கும் பயத்துக்கும் காரணம் ஆகிறது–அவ்விடத்திலும் ஜ்ஞானத்துக்கு பாதகம் இல்லாமையால் -விஷயம் இந்த்ரியங்கள் முதலியவற்றின்
தோஷத்தால் உண்டாகிற –ரஜ்ஜூ முதலியவற்றில் சர்ப்பாதி விஜ்ஞானமானது சத்தியமாகவே இருந்து கொண்டு பயம் முதலியவற்றுக்கு ஹேதுவாக
இருக்கிறது -தான் சர்ப்பத்தால் கடிக்கப் படாமல் இருந்த போதிலும் கூட சர்ப்பத்தின் சந்நிதானத்தால் -நான் கடிக்கப் பட்டேன் -என்கிற புத்தியானது
சத்தியமாகவே உண்டாகிறது —சத்தியமாகவே இருக்கிற சங்கா விஷ புத்தியானது மரண ஹேது வாகிறது -ஜலம் முதலியவற்றில் வாஸ்தவமாகவே
இருக்கிற முகம் முதலியவற்றின் பிரதிபலனமானது வாஸ்தவமாய்–முகத்தை அடைந்து இருக்கிற விசேஷங்களை நிச்சயிப்பதற்கு ஹேதுவாகிறது
இந்த சம்வேதனங்கள் அனைத்தைக்கும் உத்பத்தி இருப்பதாலும் அர்த்தக்ரியா காரித்வம் இருப்பதாலும் சத்யத்வம் நிர்ணயிக்கப் படுகிறது –
ஸ்வப்னத்தில் அனுபவப்படுகிற யானை முதலியவைகள் இல்லாமல் இருந்த போதிலும் எவ்வண்ணம் அவைகளின் புத்திகளும் சத்தியங்களாக
ஆகின்றன வென்று வினவப் படுமே யாகில் அது அப்படி அன்று –புத்திகளுக்கு ஆலம்பன மாத்ரம் தவறாமல் இருக்க வேண்டிய தாதலால் –
அர்த்தத்தினுடைய பிரதிபாசமானத்வமே ஆலம்பன விஷயத்தில் அபேஷிக்கப் பட்டு இருக்கிறதன்றோ -தோற்றமோ எனில் தோஷ வசத்தால்
இருக்கவே இருக்கிறது -அது தத்வ ஜ்ஞானத்தால் பாதிக்கப் படும் காலத்தில் அசத்தியம் என்று நிச்சயிக்கப் படுகிறது
-அபாதிதையான புத்தியானது சத்யம் என்றே உரைக்கப் பட்டதன்றோ –

ச்வப்ன –தத்ர ஹி –தோஷாமேவ -நஹி –தர்ச நந்து –மாயாவி ந –விஷயேத்யாதி–வஸ்த்வீதி-ஏஷாம் -ஹச்த்ச்யாதீநாம் –
நை தத் அர்த்தச்ய –பிரதிபாசமா நத்வ மேவ ஹி ஆலம்ப நத்வே அபேஷிதம்–பிரதிபாச –தோஷவசாத் –சாது –அபாதிதா –

———————————————————————————————

மேலும் கோட்டினால் அஷர ஜ்ஞானம் வருகிற இடத்திலும் அசத்தியத்தினால் சத்ய புத்தி உண்டாகிறது இல்லை -ரேகையானது உண்மையாக இருப்பதால் –
ஐயா வர்ண ஸ்வரூபமாக அறியப் பட்டு இருக்கிற ரேகையானது வர்ண புத்திக்கு ஹேது வாக ஆகிறது -வர்ண ஸ்வரூபமாக இருக்கும் தன்மையோ என்னில் அசத்தியம் –இவ்வண்ணம் அல்ல அசாத்தியமாக இருக்கிற வர்ண ஸ்வரூபத்துக்கு உபாயத்வம் கூடாதலால் பிரமிதிக்கு அவிஷயமாக இருக்கிற
அசத்யத்துக்கு உபாயத்வம் ஆனது காணப் பட்டதும் இல்லை -பொருத்தம் உள்ளதும் அல்ல –அப்படிக்கின்றி -அதில் -ரேகையில் –
ஏறிடப் பட்டு இருக்கிற வர்ண புத்திக்கு உபாயத்வம் கூறப் படுமே யாகில் அப்பொழுது அசதியத்தினால் சத்ய புத்தி உண்டாகாது
ஏறிடப் பட்டு இருக்கிற புத்திக்கு சத்யத்வம் இருப்பதினாலேயே -உபாயம் உபேயம் இரண்டுக்கும் ஏகத்வமும் பிரசங்கிக்கும்
இரண்டுக்கும் வர்ண புத்தித்வம் விசேஷம் இன்றி இருப்பதால் -ரேகைக்கு அவித்யமானமான வர்ண ஸ்வரூபத்தால் உபாயத்வம் சொல்லும் பஷத்தில்
ஒரே ரேகையில் அவித்யமானமான சர்வ வர்ணாத் மகத்வம் ஸூ லபமாக இருப்பதால் ஒரு ரேகையின் தர்சனத்தினால் எல்லா வர்ணங்களின்
பிரதிபத்தியும் உண்டாகலாம் –அப்படிக்கின்றி பிண்ட விசேஷத்தில் தேவதத்தாதி சப்தங்களுக்கு சங்கேதம் ஏற்பட்டு இருப்பது போலே கண்ணால்
கிரஹிக்கத் தக்க வர்ண விசேஷ சங்கேச வசத்தால் ரேகா விசேஷம் வர்ண விசேஷ புத்திக்கு காரணம் என்று சொல்லப் படுமே யாகில் அப்பொழுது சத்யத்தினாலேயே சத்ய பிரதிபத்தி உண்டாகிறது –ரேகைக்கும் சங்கேதத்துக்கும் சத்யத்வம் இருப்பதால் சித்திரத்தில் வரையப் பட்டு இருக்கிற
ரேகா ரூபமான கவயத்தினால் கூட சத்யமான கவய மிருக புத்தி -பசு போன்ற மிருக புத்தி -உண்டாவதும் சாத்ருச்யத்தை காரணமாகக் கொண்டது -சாத்ருச்யமும் சத்தியமே –

ரேகயா–த நு –நைவம்–அனுபபன் நஞ்ச –அத -ஏவம் தர்ஹி – புத்தே –உபாய -உபயோ -ரேகாயா -அத –ரேகாயா –ரேகா கவயா தபி —

———————————————————————-

ஏக ரூபமான சப்தத்துக்கு நாத விசேஷத்தால் அர்த்த பேத புத்தி ஹேதுத்வம் கூறப் படும் பஷத்திலும் அசத்தியத்தினால் சத்ய பிரதிபத்தி உண்டாவது எனபது கிடையாது –
நாநாவித நாதங்களாலே பிரகாசிக்கின்ற ஒரே சப்தத்துக்கு அந்த அந்த நாதங்களால் அபிவ் யஞ்ஜனம்-ஸூ சனம் -செய்யத் தக்க ஸ்வரூபத்தால்
அர்த்த விசேஷங்களோடு கூட சம்பந்த காரணம் இருப்பதால் அர்த்த பேத விஷயகமான புத்தியின் உத்பத்திக்கு காரணத்வம் இருப்பதால்
சப்தத்துக்கு ஏக ரூபத்வமும் அவ்வளவு சிறந்தது அல்ல –ககாரம் முதலிய போதக வர்ணமே காதினால் கிரஹிக்கத் தக்கதாக இருப்பது பற்றி -சப்தமாகிற படியால் -ஆதலால் அசத்தியமான சாஸ்த்ரத்தினால் சத்ய ப்ரஹ்ம விஷய பிரதிபத்தியானது எவ்விதத்தாலும் உபபாதிக்க முடியாது

நசைக ரூபச்ய –நாநா நாத –ராமம் -ராமேண-ராமையா -ஹரயே-ஹரௌ-ஹரீன் –பாவம்
சப்தச்ய ஏகரூபத்வம் –

——————————————————————–

அய்யா சாஸ்த்ரமானது ஆகாயத் தாமரை மலர் போல் அசத்தியம் அல்ல -அத்வைத ஜ்ஞானம் உண்டாவதற்கு முன்பு சத் என்ற புத்தியினால்
அறியத் தக்கதாய் இருப்பதால் –தத்வ ஜ்ஞானம் உண்டானால் அன்றோ சாஸ்தரத்துக்கு அசத்யத்வம் -அப்போது சாஸ்த்ரமானது
–எல்லா பேதங்களும் நிரசிக்கப் பட்டு சின் மாத்ரமாய் இருக்கிற ப்ரஹ்ம ஜ்ஞானத்துக்கு உபாயம் அல்ல –
எப்பொழுது உபாயமோ அப்பொழுது சாஸ்திரம் உளதே -உண்டு என்கிற புத்தியினால் –
இவ்வண்ணம் அல்ல அசத்தான சாஸ்த்ரத்தில் -அஸ்தி சாஸ்திரம் -என்கிற புத்தியானது மித்யையாய் இருப்பதனால் அதனால் என்ன -அதனால் இது தான் –
மித்யா பூதமான சாஸ்த்ரத்தினால் உண்டாகிற ஜ்ஞானமும் மித்யை யானதால் அந்த ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருக்கிற ப்ரஹ்மத்துக்கு
மித்யா பாவம் சித்திக்கிறது -எவ்வாறு புகை என்கிற புத்தியினால் கிரஹிக்கப் பட்டு இருக்கிற பனிப் புகையினால் உண்டாகிற வஹ்நிஜ்ஞானம்
மித்யை யானதால் அந்த ஜ்ஞானத்துக்கு விஷயமாய் இருக்கிற அஹ்நிக்கும் மித்யாத்வம் சித்திக்கிறதோ அவ்வாறு என்றபடி –
பிற்காலத்திய பாதத்தின் அதர்சனமும் சித்தியாது -சூன்யமே தத்வம் என்கிற சில பௌத்தர்களின் வாக்யத்தாலே அதற்கும் பாதம் காணப் படுவதால் –
அது பிராந்தி யடியாக வருகிறது என்று கூறப் படுமேயாகில் -இதுவும் -நிர்விசேஷ ப்ரஹ்மாதமைகத்வ ஜ்ஞானமும் -பிராந்தி மூலம் என்று உன்னாலேயே உரைக்கப் பட்டது -பிற்காலத்தில் உண்டாகிற ஜ்ஞானத்தினால் பாதம் காணப்படாமல் இருந்தாலோ என்னில் -சூன்யம் தத்வம் என்று சொல்லுகிற –அந்த ஜ்ஞானத்திற்கே என்று நிலை பெறாத குதர்க்கங்களைக் கொண்டு பரிஹசிப்பது போதும் –

ககநகு ஸூ மவத் –சத்புத்தி போத்யத்வாத் –உத்பன்னன் – ந ததா –யதா -பாசாத்ய -சூன்யம் – தத்து -யேததபி –பாச்சாத்ய –பிரபஞ்ச -சூன்யவாதி –
ஆதித்யோ யூப —

————————————————————————————–

வேதாந்த வாக்யங்கள் விசேஷங்கள் அற்றதும் ஜ்ஞானத்தையே ஸ்வ பாவமாக கொண்டதுமான வஸ்து ஒன்றையே ப்ரதிபாதிப்பதில் நோக்குள்ளவைகள் —
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –இது முதலியவைகள் என்று எது சொல்லப் பட்டதோ அது பொருத்தம் உள்ளது அல்ல —
ஒரு வஸ்துவை அறிவதனால் எல்லா வஸ்துக்களும் அறியப் படுகின்றன என்கிற பிரதிஜ்ஞ உபபாதனம் அடியாக சத் என்கிற சப்தத்துக்கு வாச்யமான
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் உபா நத்வம் -ஜகன் நிமித்தத்வம் -சர்வஜ்ஞத்வம் -சர்வ சக்தியோகம் -சத்ய சங்கல்பத்வம் -சர்வாந்தரத்வம் —
சர்வாதரத்வம் -சர்வ நியந்த்ருத்வம் –இவை முதலிய அநேக கல்யாண குணங்களுடன் சேர்ந்து இருத்தலையும் உலகம் அனைத்துக்கும்
அந்த ப்ரஹ்மாத்மகத்வத்தையும் பிரதிபாதித்து இப்படிப்பட்ட ப்ரஹ்மாத்மகானாய் நீ இருக்கிறாய் என்று ச்வேதகேதுவைக் குறித்து உபதேசத்தின்
பொருட்டு பிரகரணம் பிரவ்ருத்தித்திருப்பதால் -இந்த அர்த்தம் வேதார்த்த சங்க்ரஹத்தில் விரித்து உரைக்கப் பட்டு இருக்கிறது
இந்த கிரந்தத்திலும் ஆரம்பணாதிகரணத்தில் நன்கு மிகத் தெளிவாக உபபாதிக்கப் படப் போகிறது –
அதபரா யயா-என்கிற சுருதியிலும் ப்ராதக்ருதங்களான ஹேய குணங்களை நிஷேதித்து பர ப்ரஹ்மதுக்கு நித்யத்வம் -விபூத்வம் -ஸூ ஷ்மத்வம்
-சர்வகதத்வம் -அவ்யயத்வம் -பூதயோ நித்வம் -சர்வஜ்ஞத்வம் முதலிய கல்யாண குணங்களின் சம்பந்தம் பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்கிற இடத்திலும் சாமா நாதி கரண்ய பதத்திற்கு அநேக விசேஷணங்கள் உடன் கூடின ஒரு அர்த்தத்தைக்
குறிப்பிட்டுச் சொல்லுதல் -என்கிற வ்யுத்புத்தியினால் நிர்விசேஷ வஸ்துவுக்கு சித்தி இல்லை -ஏன் எனில் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளின் பேதத்தால்
பதங்களுக்கு ஒரு அர்த்தத்தில் வ்ருதித்வம் அல்லவோ சாமா நாதி கரண்யம் -அதில் சத்ய ஜ்ஞான முதலிய பதங்களுக்கு முக்ய அர்த்தங்களான குணங்களாலேயோ அந்த அந்த குணங்களுக்கு விரோதிகளான -ஆகாரங்களுக்கு ப்ரத்ய நீகாரங்களாலே யே ஒரு அர்த்தத்தில் பதங்கள் பிரவர்த்திக்கும் பொழுது அவைகளுக்கு நிமித்த பேதம் அவசியம் ஆச்ரயிக்கத் தக்கது -இவ்வளவு மாத்ரம் விசேஷம் –ஒரு பஷத்திலே பதங்களுக்கு முக்யார்த்தத்வம் -வேறு பஷத்திலோ அவைகளுக்கு லஷணை —அஜ்ஞானம் முதலியவைகளைக் காட்டிலும் வேறாய் இருத்தல் வஸ்துவின் ஸ்வரூபமே யல்ல -ஒரே பதத்தால் ஸ்வரூபமானது அறியப் பட்டு இருப்பது பற்றி -பதார்த்தங்களின் பிரயோகத்துக்கு வையர்த்த்யம் வருவதால் -அப்படி யாகில் சாமா நாதி கரண்யத்துக்கு அசித்தி வருகிறது –
ஒரு வஸ்துவில் வர்த்திக்கின்ற பதங்களுக்கு நிமித்த பேத ஆஸ்ரயணம் இல்லாமையால் -ஒரே அர்த்தத்துக்கு விசேஷண பேதத்தால் விசிஷ்டதா பேதம் வருவதால் பதங்களுக்கு அநேகார்த்தத்வமானது சாமா நாதி கரண்யா விரோதி யல்ல –
சாமா நாதி கரண்யமானது ஒரு வஸ்துவுக்கே அநேக விசேஷணங்கள் உடன் கூடி இருத்தலை பிரதிபாதிப்பதில் நோக்கு உள்ளதாகையாலே
பின்ன பிரவ்ருத்தி நிமித்தா நாம் சப்தா நாம் ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்திஸ் சாமா நாதி கரண்யம் -என்று அல்லவோ சாப்திகர்கள் கூறுகின்றனர்

யதுக்தம் -இத்யேவமாதீதி –ஏக விஜ்ஞான நே ந –வாசா ரம்பணம் –சதேவ சோமயே தமக்ரே –பிரபஞ்சித -அத்ராபி -அத பராயயா–ப்ராக்ருதான் —
சத்யம் ஜ்ஞானம் -சோதக வாக்யம் -கண்ட முண்ட பூர்ண ஸ்ருங்க கௌ–பிரவ்ருத்தி –தத்ர -இயான் -நசை கஸ்ய –பின்ன ப்ரவ்ருத்தி –

———————————————————————————-

ஏக மேவ அத்விதீயம் -என்கிற இடத்தில் -அத்விதீய பதமானது குணத்தினாலும் கூட இரண்டாவது வஸ்து உடன் கூடி இருத்தல் என்கிற தன்மையை சஹிக்கிறது இல்லை -ஆகையால் சர்வ சாகா பிரத்யய நியாயத்தால் காரண வாக்யங்களுக்கு அத்விதீய வஸ்துவை பிரதிபாதிப்பதில் நோக்கு
ஒப்புக் கொள்ளத் தக்கது -காரணமாக உப லஷிக்கப் பட்டு இருக்கிற அத்விதீயமான ப்ரஹ்மத்துக்கு சத்யம் ஜ்ஞானம் அநந்தம் -என்கிற இது
லஷணமாகக் கூறப் படுகிறது -ஆகையால் உப லஷணத்தாலே குறிப்பிட வேணும் என்று விரும்பப் பட்டு இருக்கிற ப்ரஹ்மமானது நிர்குணமே-
அங்கனம் இல்லாவிடில் நிர்குணம் நிரஞ்ஜனம் இது முதலிய வாக்யங்களுடன் விரோதம் வரும் என்று -யாதொன்று கூறப் பட்டதோ -அது பொருத்தம் உள்ளதாகாது -அத்விதீய பதமானது ஜகத் உபாதனமான ப்ரஹ்மத்துக்கு தன்னைக் காட்டிலும் வேறான வேறு அதிஷ்டாதாவை -நிவாரணம் செய்வதினால் விசித்திர சக்தி யோகத்தை பிரதிபாதிப்பதில் நோக்கம் உள்ளதாய் இருப்பதால் –அவ்வண்ணமே -ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேய தத் தேஜோ அஸ்ருஜத -இது முதலிய சுருதி வாக்யங்கள் விசித்திர சக்தி யோகத்தையே உணர்த்தி வைக்கின்றன –
விசேஷம் இன்றி அத்விதீயம் என்று சொல்லப் பட்டால் நிமித்தாந்தர மாதரத்துக்கு நிஷேதம் எவ்வண்ணம் அறியப் படுகிறது என்று கேட்க்கப் படுமே யானால்
உலகத்தை படைக்க எண்ணம் கொண்டு இருக்கிற ப்ரஹ்மத்துக்கு உபாதான காரணத்வம் ஆனது –சதேவ சோமயே தமக்ர ஆஸீத் ஏகமேவ -என்பதினாலேயே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறது –கார்ய உத்பத்தி ஸ்வ பாவத்தால் நிமித்தாந்தரம் புத்தியில் நிலை பெற்று இருப்பது பற்றி அந்த நிமித்தாந்தரமே அத்விதீய பதத்தினால் நிஷேதிக்கப் படுகின்றது என்று அறியப் படுகிறது –எல்லாவற்றையும் நிஷேதிக்கிறது என்று சொல்லில் தன்னால் ஒப்புக் கொள்ளப் பட்டு இருப்பவைகளும் சாதிக்க வேண்டும் என்று விரும்பப் பட்டவைக்களுமான –நித்யத்வம் முதலியவைகளும் நிஷித்தங்களாகும்
இவ்விடத்தில் சர்வ சாகா பிரத்யய நியாயமும் உனக்கு விபரீத பலத்தையே தரும்
எல்லா சாகைகளிலும் காரணத்தில் அன்வடித்து இருக்கிற சர்வஜ்ஞத்வம் முதலிய குணங்களுக்கு இங்கு உப சம்ஹார ஹேதுத்வம் இருப்பதால்
ஆதலால் காரண வாக்ய ஸ்வ பாவத்தாலும் -சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்பதினால் ப்ரஹ்மம் ஆனது ச விசேஷம் என்றே
பிரதி பாதிக்கப் படுகின்றது என்று அறியப் படுகிறது –

யது உக்தம் –அத இதி –காரண தயா -உபலஷி தஸ்ய –அந்யதா -தத் அநு பபன்னம் –ஜகத் –ததைவ -விசித்திர சக்தி யோக மேவ –
-அவிசேஷேண–சிஸ்ருஷோ –சர்வசாகா -அத

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: