ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –
எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –
———————————————————————
போதக்கி வந்து பரிமளம் வீசிப் புத்திக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-
வேழக் குருத்தின் அழகைப் பறித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-
தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–
வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–
ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-
தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைந்தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–
மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-
பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–
பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-
வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..
Leave a Reply