ஸ்ரீ பாஷ்யம்– 1-1-1– மஹா சித்தாந்தம் -முதல் பாகம் — -ஸ்ருத பிரகாசிக சுருக்கம் –

கீழே கூறப் பட்ட இவ்விஷயம்
உப நிஷத்துக்களால் பிரதி பாதிக்கப் பட்டு இருக்கிற பரம புருஷனால்
வரிக்கத் தக்க தன்மைக்கு ஹேதுவான குண விசேஷங்கள் இல்லாதவர்களாயும்
அநாதியான பாப வாசனையினால் கெடுக்கப் பட்ட முழு அறிவுடையவர்களாயும்
பத வாக்யங்கள் உடைய ஸ்வரூபத்தையும்
அவைகளால் உணர்த்தப் பட்ட அர்த்தங்களின் உண்மையையும்
பிரத்யஷம் முதலான சகல பிரமாணங்களின் போதன ஸ்வரூபத்தையும்
அவைகளுக்கு அங்கங்களான சிறந்த நியாய மார்க்கங்களையும்
அறியாதவர்க்களுமான சில துர்வாதிகள் உடைய விகல்பத்தை
சஹியாததும் சாரம் அற்றதாக இருப்பதுமான பற்பல குதர்கங்களால் கல்பிதம் என்று
நியாயங்களால் உதவி புரியப் பட்டு இருக்கிற பிரத்யஷம் முதலிய எல்லா
பிரமாணங்கள் உடைய போதன க்ரமத்தையும்
உண்மையையும் அறிந்தவர்களால் ஆதரிக்கத் தக்கது அல்ல –

—————————————————————————————-

வரணீயதா ஹேது குண விசேஷ விரஹிணீம் -என்பதனால்
யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய -இஷ்டமான உபாய விசேஷம் கூறுதல் பலித்தது
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேன் மது சூதன
சாத்விகஸ் சது விஜஞ்ஞேயசசவை மோஷார்த்த சிந்தக
பச்யத்யேனம் ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ரோ தவா புன
ரஜசா தமஸா சாஸ்யமாநஸம் சமபிப்லுதம் –
இத்தால் தத்தவார்த்த ஜ்ஞானம் பகவத் கடாஷத்தை அபேஷித்து இருக்கும் -என்று அறியப் படுகிறது –
த்வமபிஜானாசி பக்த்யா வேதமி –
பக்தி ரூபையான விதியை மோஷத்துக்கு சாதனம்
பக்தி சாஸ்திர ஜ்ஞானத்தை மூலமாகக் கொண்டது –
சாஸ்திர ஞானம் பக்தியை மூலமாக கொண்டது –
அன்யோன் யாச்ரயம் -வருமோ என்னில் அவ்வண்ணம் அல்ல
சரவணம் -பரமாத்மாவின் குணாதிகள் அறியப் படும் அளவில்
அனுகூல புத்தியை-வித்யா சப்தமும் -பக்தி சப்தமும் சொல்லும் –
அந்த அனுகூல புத்தியால் வாக்யார்த்தம் நன்கு புலப்படும்
பகவத் குணங்கள் சித்தத்துக்கு முதலில் அனுராகம் உண்டாக்குகிறது
இது சாஷாத்கார துல்யமான நிரந்தர த்யான ரூபையான பக்தி இல்லை
இதனால் அந்யோந்ய ஆஸ்ரயம் இல்லை –
சேமுஷீ -மோஷத்துக்கு உபயோகமான ஜ்ஞானம்

அர்த்தாபத்தி
பிரத்யஷம் முதலிய எட்டு பிரமாணங்களில் ஓன்று இது
அர்த்தத்தின் ஆப தாதி அர்த்தாபத்தி –
பீனோ தேவததத திவா ந புங்க்தே -தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் சாப்பிடுகிறது இல்லை –
அர்த்தாபத்தி பிரமாணத்தால் ராத்திரி போஜனம் சித்திக்கிறது –
அசேஷ விசேஷ பிரத்யநீக–சர்வே வேதாந்த ஆரப்யந்தே —

———————————————————————————————–

இந்த அர்த்தம் நிரூபிக்கப் படுகிறது –
நிர்விசேஷ வஸ்துவாதிகளால்-நிர்விசேஷ வஸ்து விஷயத்தில் -இது பிரமாணம் என்று
ஒன்றும் சொல்வதற்கு சக்யம் ஆகாது -எல்லா பிரமாணங்களும் விசேஷம் உள்ள வஸ்துக்களை விஷயீ கரிப்பதால் –
தன அனுபவத்தினால் சித்தம் என்று தன்னுடைய கோஷ்டியில் நிலை பெற்று இருக்கிற யாதொரு சங்கேதம் உண்டோ
அதுவும் ஆத்மா சாஷிகமான சவிசேஷ அனுபவத்தினாலேயே நிராகரிக்கப் பட்டது –
எல்லா அனுபவங்களும் –நான் இதைக் கண்டேன் -என்று யாதானும் ஒரு விசேஷத்தாலே விசிஷ்ட விஷயம்
உள்ளவைகளாகவே இருப்பதால்
அனுபவிக்கப் படுகிற அனுபவம் ஆனது சவிசேஷமாக இருந்த போதிலும்
ஏதோ ஒரு உக்தி ஆபாசத்தால் நிர்விசேஷம் என்று நிஷ்கர்ஷிக்கப் பட வேண்டுமாகில்
சத்தையை விட வேறாக இருப்பதும் தனக்கு அசாதாரனங்களாகவும் இருக்கிற ஸ்வபாவ விசெஷங்களால்
அது சவிசெஷமாகவே நிலை பெறுகிறது
ஆகையால் சில விசெஷங்களோடு கூடின தாகவே இருக்கிற வஸ்துவுக்கு
மற்ற விசேஷங்கள் நிரசிக்கப் படுகின்றன என்பதால்
ஓர் இடத்திலும் நிர்விசேஷ வஸ்து சித்தி பெறாது –

———————————————————————————————–

ஜ்ஞானதுக்கு விஷயங்களை பிரகாசப் படுத்தும் தன்மையும்
மற்று ஒன்றினால் பிரகாசிக்கப் படாமல் தனக்குத் தானே
பிரகாசிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது-ஏன் என்னில் –
அது தனக்கு ஆஸ்ரயமாக இருக்கும் ஆத்மாவுக்கு விஷயங்களை பிரகாசப் படுத்தும் ஸ்வபாவம் உள்ள தாகவே அறியப் படுவதால் –
நித்திரை மதம் மூர்ச்சைகளிலும் அனுபவம் சவிசெஷம் என்றே
அதை நிரூபிக்கும் தருணத்தில்
மிக்கத் தெளிவாக உபபாதிக்கப் போகிறோம்
தங்களால் ஒத்துக் கொள்ளப் பட்ட நித்யத்வம் முதலிய அநேக விசேஷங்கள் நிச்சயமாக இருக்கின்றன –
அவைகளும் வஸ்து மாதரம் என்று உபபாதிப்பதர்கு சாத்தியப் படாது
வஸ்து மாதரம் என்று ஒத்துக் கொண்டாலும் கூட அதன் பிரகார பதத்திலே விவாதம் காணப் படுவதாலும்
தனக்கு அபிமதமான அந்த பிரகார பேதங்களால் தன மதத்தை உபபாதனம் செய்ய வேண்டியதாக இருப்பதாலும்
ஆதலால் பிரமாணிகங்களான விசெஷங்களால் வஸ்து விசிஷ்டம் என்றே சொல்லத் தக்கது –

———————————————————————————————-

சப்ததிற்கோ என்றால் -விசேஷித்து சவிசேஷமான வஸ்துவின் இடத்திலேயே அபிதான சாமர்த்தியம்
பத வாக்ய ரூபமாக ப்ரவ்ருத்திப்பதால் பிரகிருதி பிரத்யய சம்பந்தத்தால் அன்றோ பதத்வம் சித்தி பெறுகிறது –
பிரகிருதி பிரத்யயம் இரண்டுக்கும் அர்த்தங்களின் வேற்றுமையினால் பதத்திற்கே விசிஷ்டார்த பிரதிபாதனம் விடத் தக்கது அன்று
பத பேதமும் அர்த்த பேதத்தைக் காரணமாகக் கொண்டது –
பத சங்காத ரூபமான வாக்யத்துக்கு அநேக பதார்த்த சம்சர்க்க விசேஷத்தை சொல்லுகிற
ஸ்வபாவம் இருப்பதால் நிர்விசேஷ வஸ்து பிரதிபாதனத்தில்
சாமர்த்தியம் இல்லாமையால்
நிர்விசேஷ வஸ்துவில் சப்தம் பிரமாணம் ஆகா –

———————————————————————————————–

அதிகரணத்தின் லஷணம்
விஷயோ விசயஸ் சைவ பூர்வ பஷ ஸ்ததோத்ரம் நிர்ணயசேதி
பஞ்சாங்கம் ப்ராஞ்ச அதிகரணம் விது –
பிரதிபாதிக்கத் தக்க விஷயம் –சம்சயம் –பூர்வ பஷம் –நிரசன மறுமொழி -சித்தாந்தம் –
பஹூ வ்ரீஹி சமாசம் -பீதாம்பர -பீதாம்பர ஆடை உடுத்தியவன்
-தத் புருஷ சமாசம் -பூர்வ காய -சரீரத்தின் முந்தின பாகம்

———————————————————————————————-

நிர்விகல்பம் -சவிகல்பம் -என்று வேறு பட்டு இருக்கிற பிரத்யஷதிற்கு நிர்விசேஷ வஸ்து விஷயத்தில் பிராமணியம் இல்லை –
சவிகல்பம் ஆனது ஜாதி முதலிய அநேக பதார்த்தங்கள் உடன் கூடிய வஸ்துக்களை விஷயீகரிப்பதினாலேயே
சவிசேஷ விஷயம் நிர்விகல்பமும் சவிசேஷ விஷயமும் தான்
சவிகல்பத்தில் தன்னிடத்தில் அனுபவவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்த விசிஷ்ட பிரதி சந்தானத்திற்கு ஹேதுவாக இருப்பதால்
நிர்விகல்பமாவது யாதோ சில விசேஷத்தால் விடுபட்டு இருக்கிற வஸ்து விஷயமான ஜ்ஞானம் –
சர்வ விசேஷங்களாலும் விடு பட்டு இருக்கிற வஸ்துவின் கிரஹணம் எனபது அல்ல –
அப்படிப் பட்ட வஸ்துவுக்கு ஒரு பொழுதும் கிரஹணம் காணப் படாததாலும்
அனுபபத்தி இருப்பதனாலும் எல்லா பிரதீதியும் ஏதோ ஒரு விசேஷத்தொடெ -இதம் இத்தம் -என்று அல்லவோ உண்டாகிறது
முக்கோண வடிவும் கழுத்தின் கீழாக தொங்கும் கம்பளம் போன்ற சதை முதலிய
அவயவங்களின் சமஸ்தான விசேஷம் இல்லாமல்
ஒரு பதார்த்ததுக்கும் க்ரஹனம் வாராதலால்
ஆகையால் நிர்விகல்பம் ஆவது ஏக ஜாதீய த்ரவ்யங்களில்
முதலாவாதான பிண்டத்தின் கிரஹணம்
இரண்டாவது தொடக்கமான பிண்டங்களின் கிரஹணம் ஆனது சவிகல்பம் என்று கூறப் படுகிறது

————————————————————————————————–

இனி -பிரத்யஷஸ்ய –நிர்விகல்பம் அபி –ச விகல்பக —
கோ -வ்யக்தியைப் பார்த்து –கோ என்ற ஞானம் உண்டாவது நிர்விகல்பகம் –இந்த ஞானத்தில் கோத்வ ஜாதி –
-கோ ரூபமான வ்யக்தி -இரண்டுக்கும் உள்ள பிரிக்க முடியாத சம்பந்தம் -இந்த மூன்றும் விஷயங்கள் –
நிர்விகல்பம் நாம -என்று எல்லா விசேஷங்களாலும் விடு பட்டு இருத்தலின்மையை உபபாதிக்கிறார் -ததா பூதஸ்ய -என்று
விகல்பித்து தர்சனம் சகல விசேஷ சூன்ய க்ரஹனத்துக்கு ஹேது வல்ல -என்று கதாசிதபி -என்று
கல்ப நத்தை நிரசிக்கிறார் -அனுப பத்தே -என்று
அனுப பத்தி என்றது நிர் விசேஷ ஜ்ஞானத்துக்கு பாதகமாகவே காணப் படுகிறது
அனுபபத்தியை விவரிக்கிறார் கிருகண யோகாத் என்று
முதலாவதான இந்த்ரிய சந்நிஹர்ஷத்தால் உண்டான -இந்த்ரிய விஷய சம்பந்த ஞானம் -ச விசேஷ விஷயம் உள்ளது
-ஜ்ஞானம் நிர்விகல்பிகம் எனபது சித்தம் -இதனால் நிர்விகல்பக சப்தத்துக்கு வருத்தி சங்கோசம் பலித்தது
இந்த சங்கோசம் எந்த விஷயத்தில் என்றால் சொல்லுகிறார் -அத -என்று –
சொல்லப்பட்ட அதற்சனம் அனுபபத்தி இவ்விரண்டுகளால் என்று அர்த்தம்
அங்கு முதலாவதான பிண்ட க்ரஹணத்தாலே கோத்வம் முதலியவைகள் அனுவ்ருத்தமான ஆகாரங்கள் உள்ளவைகளாக அறியப் படுகின்றன இல்லை –
இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணங்க ளிலேயே அனுவ்ருத்தி ப்ரதீதி உண்டாகிறது
முதலாவதான ப்ரதீதியாலே அனுசந்திக்கப் பட்ட கோ முதலிய வஸ்துக்களின் அவயவ சமஸ்தான ரூபமான கோத்வம் முதலியவற்றுக்கு
அனுவ்ருத்தி தர்ம விசிஷ்டத்வமானது இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணத்தாலே நிச்சயிக்கத் தக்கது என்பதனால்
இரண்டாவது தொடக்கமான பிண்ட க்ரஹணம் சவிகல்பகம்
வஸ்து இவ்வண்ணம் உள்ளது என்றே க்ரஹிக்கப் படுகிறது
ஆகையால் பிரத்யஷத்துக்கு ஒரு பொழுதும் நிர்விசேஷ விஷயத்வம் இல்லை
இத்தையே -தத்ர பிரதம ப்ரதீதி –நபுனஸ் சம்ஸ்தா நா க்ரஹணாத்- சமஸ்தான ரூப ஜாத்யாதே ரபி -ஐன்த்ரிய கதவா விசேஷாத்
–சம்ஸ்தா நே ந –பூமி -கந்தம் போலே பிரிக்க முடியாதது
பிரகார பிரகாரி பாவத்தால் க்ரஹணத்துக்கு உபபத்தி இருப்பதால்
தண்டம் குண்டலம் -விசேஷண விசேஷ்யங்கள் இரண்டுக்கும் தனித் தனியே க்ரஹணம் காணப் படுவதால்
அத த்வீத்யாதி -என்கிறார் -இரண்டு விதமான பிரத்யஷத்துக்கும் ச விசேஷ விஷயத்வத்தை நிகமனம் செய்கின்றார் -அத -என்று
அதனாலே எல்லா இடத்திலும் பின்னாபின்னத்வமும் நிரசிக்கப் பட்டது -இதம் இத்தம் என்கிற ப்ரதீதியில் இதம் இத்தம் பாவம்
இரண்டுக்கும் ஐக்கியம் எவ்வாறு அறிவதற்கு சகயம் ஆகும்
இத்தம் பாவம் -சாஸ் நாதி சமஸ்தான விசேஷம் -அதற்கு விசேஷ த்ரவ்யம் இதம் அம்சம் என்பதனால் இவ்விரண்டுக்கும் ஐக்கியம்
ப்ரதீதியினால் பாதிக்கப் பட்டதே
இதை உபபாதிக்கிறார் -முதலிலே வஸ்து ப்ரதீதி விஷயமாகும் தருணத்தில் சகலமான இதர வஸ்துக்களைக் காட்டிலும்
பேதம் உள்ளதாகவே அறியப் படுகிறது
வ்யாவ்ருத்தியும் கோத்வாதி சமஸ்தான விசேஷத்தொடு கூடியதாக -இவ்வண்ணம் -என்று ப்ரதீதி வருவதால் -நிச்சயிக்கப் படுகிறது
விசேஷண விசேஷ்ய பாவ ப்ரதீதியில் இரண்டுக்கும் அத்யந்த பேதம் மிக ஸ்பஷ்டம் -தண்டம் குண்டலம் –
தனித் தனியே சமஸ்தானங்கள் உடன் கூடி இருந்தும் தன்னிடம் பர்வசானம் உள்ளவைகள்
ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் வேறு த்ரவ்யங்களுக்கு விசேணங்களாக இருக்கும்
தண்டாதிகள் கோத்வாதிகள்–நைகஸ் மின்ன சம்பவாத்
அத ஏவ இதம் இத்தமிவ –
ஜாதி வ்யக்தி -ஒரே சப்தத்தால் இரண்டையும் சேர்த்தே அறிதல் –சாமா நாதி கரண பதங்களின் பிரயோகம் -சஹோபலம்ப நியமம் –
பேத அபேத சாதகங்கள் -சாமா நாதி கரண பதங்களின் பிரயோகம் -சஹோபலம்ப நியமம் –இவை இரண்டும்
ஜாதி வ்யக்தி -இவை இரண்டும் அபேத சாதகங்கள்
ததாஹி -பிரதமம் -சகல இதர வ்யாவ்ருத்தி -இத்தம் அர்த்தம்
சர்வத்ர விசேஷண விசேஷ்ய பர்வேதி
தத்ர உபயத்ர –ப்ரதீதி பிரகாரோஹி –ததே தத்
ஆகையால் பிரத்யஷம் ச விசேஷ விஷயம் உள்ளதாதலால் அனுமானமும் பிரத்யஷம் முதலியவற்றால் காணப் படுகிற
சம்பந்தத்தோடு கூடின விஷயம் உள்ளதாக இருப்பதால் ச விசேஷ விஷயம் உள்ளதே
ஒரு பிரமாணத்தாலும் நிர்விசேஷ வஸ்து சித்தியாது
வஸ்துவினுடைய ஸ்வ பாவ விசேஷங்களால் அதே வஸ்து நிர்விசேஷம் என்று சொல்பவன் தனது தாயார் மலடி என்கிற
சொல் விரோதத்தையும் அறிந்தவன் இல்லையே -இத்தையே -அத பிரமாண சங்க்யா வஸ்து கத -என்கிறார் –

————————————————————————-

பிரத்யஷம் சன்மாத்ரத்தை க்ரஹிக்கிற ஸ்வபாவம் உள்ளதாக இருப்பதால் பேதத்தை விஷயீ கரிக்கிறது இல்லை -பேதமும்
விகல்பத்தை சஹியாமல் இருப்பதால் -எவ்விதத்தாலும் நிரூபிக்க முடியாதது என்று எது உரைக்கப் பட்டதோ அதுவும் –
ஜாதி முதலியவைகளோடு கூடின தாகவே இருக்கிற வஸ்துவானது
பிரத்யஷ விஷயமாக ஆவதால் ஜாதி முதலியதே பிரதியோகியை அபேஷித்துக் கொண்டு வஸ்துவுக்கும் தனக்கும்
பேத வ்யவஹார ஹேதுவாக இருப்பதால் தூரத்தில் ஓட்டப் பட்டது
சம்வேதனம் போலவும் -ரூபம் முதலியது போலவும் தன்னை ஒழிய வேறு வஸ்துவினிடத்தில் வ்யவஹார விசேஷத்துக்கு
ஹேதுவாக இருக்கிற ஒரு வஸ்துவுக்கு -தன்னிடத்திலும் அப்படிப்பட்ட வ்யவஹார ஹேதுத்வம் உண்டு எனபது உங்களாலும்
ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறது -அது பேதத்துக்கும் நிச்சயமாக சம்பவிக்கிறது -அதனாலே தான் அநவச்தையாவது
அந்யோந்ய ஆஸ்ரயமாவது இல்லை-பிரத்யஷ ஜ்ஞானம் ஒரு ஷணம் இருக்கிறதாக இருந்த போதிலும் -அதே ஷணத்தில்
வஸ்து பேத ரூபமான அதன் சமஸ்தான ஸ்வரூபமான கோத்வாதிகள் க்ரஹிக்கப் படுவதால் வேறு ஷணத்தில் கிரஹிக்கத்
தக்கது ஒன்றும் இங்கு இல்லை –

யத்து -முதலிய இரண்டு கிரந்தங்களால்-பிரமாண பிரமேய அனுபபத்திகள் அனுவதிக்கப் படுகின்றன —
தத் அபீதி -ஜாத்யா இதரே வேதி –தூரோத் சாரீதம் –சாமவேதநவத் -ரூபாதிவச்ச -அத ஏவ ஏக ஷண வர்த்தித்வேபி –
அவித்யைக் காட்டிலும் ப்ரஹ்மத்துக்கு பேதம் இருக்கிறதா இல்லையா -இல்லையாகில் ப்ரஹ்மத்துக்கு ஜடத்வம் முதலியது பிரசங்கிக்கும் –
இருக்கிரதானால் அந்த பேதம் ஸ்வரூபமா தர்மமா என்கிற விகல்பத்தில் தூஷண பரிஹார சாம்யம் காணத் தக்கது –
மேலும் ஸ்வரூப தர்ம விகல்ப தூஷண பரிஹாரங்கள் அபேதத்திலும் துல்யங்கள் –
அபேதமானது ஸ்வரூபம் ஆகில் பிரதியோகியை அபேஷியாத அபேத வ்யவஹாரம் பிரசங்கிக்கும் –
பரமாத்மா நா பவத்யபேதீ கடத்வம் சே கடாகாசோ ந்பின்னோ நபசாயதா -பரமாத்மாவோடு பேதம் இல்லாதவனாகிறான்
குடம் உடைந்து போனால் குடத்தில் இருந்த ஆகாயமானது -ஆகாயத்தோடு எவ்வாறு அபின்னமாகிறதோ -அது போலே
இது முதலிய இடங்களில் அபேதமானது பிரதியோகியுடன் கூடியது என்று அல்லவோ தீர்மானிக்கப் படுகிறது
ப்ரஹ்ம அத்விதீயம் இது முதலிய பதங்கள் பர்யாயங்களாக ஆக வேண்டியதாகும்
தர்மம் என்று கூறப் படுமே யாகில் ச விசேஷத்வம் ஏற்படும்-ஆதலால் அபசித்தாந்தம் –

——–

மேலும் பிரத்யஷம் சத் ஒன்றையே கிரஹிக்கிறது என்று சொல்லில் -குடம் இருக்கிறது -வஸ்த்ரம் இருக்கிறது -என்கிற விசிஷ்ட
விஷயமான ப்ரதீதியானது விரோதிக்கிறது -சத் ஒன்றைத் தவிர வேறான வஸ்துவின் சமஸ்தான ரூப ஜாத்யாதி ஸ்வரூபமான
பேதமானது ப்ரத்யஷத்தால் கிரஹிக்கப் படாமல் போமேயாகில் குதிரையில் விருப்பம் உள்ளவன் ஏன் எருமைக் கடாவைக் கண்டவுடன் விலகுகிறான் –
எல்லா ஜ்ஞானங்களிலும் சத் ஒன்றே விஷயம் என்று கூறப் படுமே யாகில் -அந்த அந்த பிரதிபத்தியானது -விஷயங்களோடு சேர்ந்து
கூடி இருக்கின்ற எல்லா சப்தங்களும் ஒவ்வொரு பிரதிபத்தியிலும் ஏன் நினைக்கப் படுகிறது இல்லை –
மேலும் குதிரையையும் யானையையும் விஷயீ கருத்துக் கொண்டு இருக்கிற இரண்டு ஞானங்களிலும் விஷயம் ஒன்றாகப் போனபடியால்
மேல் வருகிற ஜ்ஞானமானது ஏற்கனவே க்ரஹித்தத்தையே கிரஹிப்பதாக இருப்பதாலும் -விசேஷம் இல்லாமையாலும் ஸ்ம்ருதியில்
வேறுபாடு உண்டாகாது -சம்வேதனம் தோறும் விசேஷம் ஒப்புக் கொள்ளப் படுமே யாகில் பிரத்யஷத்துக்கு விசிஷ்டார்த்த விஷயத்வமே
ஒப்புக் கொள்ளப் பட்டதாக ஆகிறது -எல்லா சம்வேதனங்களுக்கும் விஷயம் ஒன்றே -என்று கூறப் படுமே யாகில் ஒரு
சம்வேதத்தினாலேயே எல்லாம் கிரஹிக்கப் படுவதால் -குருடன் செவிடன் முதலிய வ்யவஹார பேதங்கள் இல்லாமல் போக வேண்டி வரும்
அதற்கு ரூபத்தையும் ரூபம் உள்ள வஸ்துக்களையும் ரூபத்துடன் கூட ஒரு வஸ்துவினிடம் பிரிக்க முடியாத சம்பந்தத்தால் நிலை பெற்று இருக்கிற பதார்த்தங்களையும் கிரஹிக்கும் தன்மை இருப்பதால் -தவக் இந்த்ரியத்தாலும் சத் க்ரஹிக்கப் படுகிறது இல்லை -அது ச்பர்சமுள்ள வஸ்துக்களை விஷயமாகக் கொண்டு இருப்பதால் ச்ரோத்ரம் முதலிய இந்த்ரியங்களும் சன்மாத்ரத்தை விஷயீ கரிக்கிறது இல்லை
பின்னை சப்தம் ரசம் கந்தம் என்கிற விசேஷ விஷயங்கள் உள்ளவைகளே -ஆகையால் சத் ஒன்றை மாதரம் கிரஹிக்கிற பிரமாணம் இங்கு ஒன்றும் காணப்படுவது இல்லை -நிர்விசேஷமான சன்மாத்ரத்துக்கு பிரத்யஷத்தினாலேயே க்ரஹணம் வருமேயாகில் அந்த சன்மாத்ரத்தை விஷயமாகக் கொண்ட
சாஸ்த்ரமானது பிராப்த விஷயம் ஆதலால் அனுவாதமாகவே ஆகும் -சன்மாத்ர ப்ரஹ்மத்துக்கு ப்ரமேயத்வமும் வந்து விடும்
ஆகையால் ப்ரஹ்மத்துக்கு ஜடத்வம் நாசம் முதலியவைகள் சம்பவிக்கும் என்று உன்னாலேயே உரைக்கப் பட்டு இருக்கின்றன
ஸ்ம்ருதி வை லஷண்யம் நச்யாதிதி–பிரதிசம்வேதமிதி –ரூபைகார்த்த சம்வேதேதி -அத நிர்விசேஷ சன்மாத்ர ப்ரஹ்மண -தத

ஆகையால் பிரத்யஷம் ஆனது வஸ்துக்களின் சமஸ்தான ரூபமான ஜாத்யாதி ஸ்வரூப பேதங்களோடு கூடிய வஸ்துக்களையே விஷயீ கரிக்கிறது –
சம்ஸ்தானத்தைக் காட்டிலும் வேறாய் அநேகங்களிலே ஏக ஆகார புத்தியினால் அறியத் தக்க வஸ்து காணப் படாமையாலும்
அவ்வளவினாலேயே கோத்வாதி ஜாதி வ்யவஹாரம் பொருத்தமுள்ளதாக ஆவதாலும் இவை வேறே என்கிற வாதத்திலும் கூட
சமஸ்தானம் எல்லாராலும் நன்கு அறியப் பட்டு இருப்பதாலும் சம்ஸ்தானமே ஜாதி -சமஸ்தானம் ஆவது வ்யக்தியின் ஸ்வ அசாதாரண ரூபம் –
வஸ்துவுக்குத் தக்கபடி சமஸ்தானம் அனுசந்திக்கத் தக்கது –ஜாதி க்ரஹணத்தினாலேயே -பின்ன -என்கிற வ்யவஹாரம் சம்பவிப்பதாலும்
வேறு பதார்த்தம் காணப் படாமையாலும் அர்த்தாந்தரத்தைச் சொல்லுகிற வாதியினாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருப்பதானாலும்
-கோத்வம் முதலியவைகளே பேதம் –
ஜாதி ரூபம் சமஸ்தானம் -நிறம் -காடின்யம் மார்த்வம் –எண்ணிக்கை -பரிமாணம் –
ஜாதி க்ரஹணே நைவ பின்ன இதி வ்யவஹார சம்பவாத் –பதார்த்தாந்தரா தர்சநாத் -அர்த்தாந்தர —
ஜாதி முதலியவைகளே பேதமாகில் -அவைகள் கிரஹிக்கப் பட்டால் -அந்த ஜாதி வ்யவஹாரம் போலே பேத வ்யவஹாரமும் வர வேண்டும் -சத்தியமே
கோத்வம் முதலியத்தின் வ்யவஹாரத்தால் பேதமும் வ்யவகரிக்கவே படுகிறது -கோத்வம் முதலியதே அன்றோ சகல இதர வஸ்து வ்யாவ்ருத்தி –
-கோத்வம் முதலியது கிரஹிக்கப் பட்டால் சகல இதர சஜாதீய புத்தி வ்யவஹாரம் இரண்டும் நிவ்ருத்தி அடைவதால்
பேத கிரஹணத்தாலே யன்றோ அபேத நிவ்ருத்தி வருகிறது -இது இதைக் காட்டிலும் வேறு பட்டது -பின்ன -என்கிற வ்யவஹாரத்திலோ என்றால் பிரதியோகியின் நிர்தேசமானது அந்த வேத வ்யவஹாரத்தை ஆபேஷித்து இருப்பதால் பிரதியோகியின் அபேஷையினால்-பின்ன
என்கிற வ்யவஹாரம் சொல்லப் பட்டது -பிரமாண பிரமேய அனுபபத்திகள் பரிஹரிக்கப் பட்டன –

———————

கடம் முதலிய விசேஷங்கள் வ்யாவர்தமானங்கள் ஆதலால் மீளவும் அவைகளுக்கு அபாரமார்த்யம் சொல்லப் பட்டது எனபது யாது ஓன்று உண்டோ
அது பாத்ய பாவக பாவத்தையும் -வ்யாவ்ருத்தி அனுவ்ருத்தி விசேஷங்களையும் ஆலோசியாதவனுடைய பிராந்தி ஜ்ஞானத்தால் கல்ப்பிக்கப் பட்டுள்ளது

அனுமானத்தை அனுவாதம் செய்து தூஷிக்கிறார் -யத்புன -இத்யாதியால்

இரண்டு ஜ்ஞானங்களுக்கும் விரோதம் வந்தால் அன்றோ பாத்ய பாதக பாவம் பாதிக்கப் பட்டது ஏதோ அதற்கே வ்யாவ்ருத்தி –
இந்த இடத்தில் கடபடாதிகளில் தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் விரோதம் இல்லை
எந்த இடத்தில் எந்த காலத்தில் எந்த வஸ்துவின் இருப்பு அறியப் பட்டு இருக்கிறதோ அந்த இடத்தில் அந்த காலத்தில் அந்த வஸ்துவின் இன்மை
அறியப் படுமே யாகில் அங்கு விரோதம் ஏற்படுவதால் பலம் உள்ளதற்கு பாதகத்வமும் பாதிக்கப் பட்டதற்கு நிவ்ருத்தியும் வருகிறது –
வேறு இடத்திலும் வேறு காலத்திலும் சம்பந்தித்ததாக அனுபவிக்கப் பட்டு இருக்கிற வஸ்துவுக்கு
அதைக் காட்டிலும் வேறான இடத்திலும் காலத்திலும் அதன் இன்மை அறியப் படுமே யாகில் விரோதம் கிடையாது –
ஆதலால் எவ்வாறு இவ்விடத்தில் பாத்ய பாதக பாவம் –
விரோத பாத ஸ்தலத்தில் நிவ்ருத்தமான வஸ்துவுக்கு விரோத பாதங்கள் இல்லாத இடத்தில் எவ்வாறு நிவ்ருத்தி சொல்லக் கூடும்
ரஜ்ஜூ சர்பாதிகளோ என்றால் எந்த தேசத்தில் எந்த காலத்தில் எந்த வஸ்துவின் இருப்பு அறியப் பட்டு இருக்கிறதோ
அந்த தேசத்தில் அந்த காலத்தில் அந்த வஸ்துவின் அபாவமே ஜ்ஞான விஷயம் ஆதலால்
விரோதமும் பாதகத்வமும் வ்யாவ்ருத்தியும் சம்பவிப்பது பற்றி தேச காலாந்தர வ்யாவர்த்தமா நத்வம் மித்யாத்வ வ்யாப்தமாக காணப் படாமையால்
வ்யாவர்த்தமாநத்வம் மாதரம் அபாரமாத்யத்தில் ஹேது வாகாது –
அநுவர்த்த மானமாக இருப்பதால் சத் பரமார்த்தம் என்று எது சொல்லப் பட்டதோ அது சித்தமாகவே இருப்பதால் சாதிப்பதற்கு த்ச்குதி உள்ளது அல்ல –
ஆதலால் சந் மாத்ரமே வஸ்து அல்ல –
அநு பூதிக்கும் சத்ரூபமான விசேஷத்துக்கும் விஷய விஷி பாவத்தால் பேதம் பிரத்யஷ சித்தமாக இருப்பதாலும் -பாதிக்கப் படாமல் இருப்பதாலும்
-அநு பூதியே சதி என்பதும் நிரசிக்கப் பட்டது

தவயோ பாதிதஸ் யைவ வ்யாவ்ருத்தி ரிதி –அதர –யஸ்மின் –தி சாந்த்ர –அன்யத்ர –ரஜ்ஜூ சர்பாதி ஷூ –இதி தேச காலாந்திர –
-யத் புன –தவயோ -ரித்யாதி —
அதர அன்யத்ர –ரஜ்ஜூ இதி தேச காலாந்திர –அத -அநு பூதி –

அநு பூதிக்கு ஸ்வயம் பிரகாசத்வம் சொல்லப் பட்டது எனபது யாது ஓன்று உண்டு அது விஷய பிரகாசன வேளையில்
ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு அப்படியே ஒழிய எல்லாருக்கும் எப்பொழுதும் அப்படியே என்கிற நியமம் இல்லை –
பர அனுபவம் ஆனது ஹாநம் உபாதானம் முதலியவற்றை லிங்கமாகக் கொண்ட அநு மான ஜ்ஞான விஷயம் ஆவதால்
சென்று போன ஸ்வ அநு பவத்துக்கும்-அறிந்தேன் -என்று ஜ்ஞான விஷயத்வம் காணப் படுவதாலும் –
ஆகையால் அநு பூதியாயே இருக்குமாகில் அது ஸ்வ தஸ் சித்தை என்று சொல்லுவதற்கு சகயம் ஆகாது

யத் தவ அநு பூதே–தத் விஷய பிரகாசன வேளாயாம் –பர அநு பவச்ய –சர்வ அநு பவச்யாபி

அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் வரும் பஷத்தில் அநு பூதித்வம் இல்லாமல் போக வேண்டி வரும் என்பதுவும் துஷ்டோக்தி –
தன்னை அடைந்துள்ள அனுபவங்களுக்கும் அனயர்களை அடைந்து இருக்கிற அனுபவங்களுக்கும் அநு பாவ்யத்வம் இருப்பது
பற்றி அனநு பூதித்வம் பிரசங்கிப்பதால் –
பர அநு பவ அநு மானத்தை ஒப்புக் கொள்ளாத பஷத்தில் சப்தார்த்தங்கள் உடைய சம்பந்த க்ரஹணம் இல்லாமையாலே
சமஸ்த சப்த வ்யவஹாரங்களுக்கும் அழிவு வர வேண்டியதாகும் –
ஆச்சார்யன் இடத்தில் இருக்கும் சிறந்த ஜ்ஞானத்தை அநு மானத்தால் கண்டு அறிந்து அவர்களுடைய பக்கலிலே சிஷ்யர்கள்
அணுகுகிறார்கள் -அதுவும் பொருந்தாது –
மற்று ஒன்றுக்கு விஷயமாக ஆனதினாலேயே அநு பூதிக்கு அனநு பூதித்வம் வந்து விடுகிறது என்பதுவும் சரி இல்லை –
அநு பூதித்வம் ஆவது வர்த்தமான தசையிலே தன சத்தையினாலேயே தனக்கு ஆச்ரயமான ஆத்மாவுக்கு பிரகாசித்தல் -அல்லது
தன சத்தையினாலேயே தன்னுடைய விஷயத்தை சாதித்தல் -வேறு அனுபவத்தால் அநு பாவ்யத்வம் இருந்த போதிலும் கூட
ஸ்வ அனுபவ சிந்தங்களான அவைகள் இரண்டும் அகலுகிறது இல்லை -ஆதலால் அநு பூதித்வம் போகாது
கடாதிகளுக்கோ என்றால் இந்த ஸ்வ பாவம் இல்லாமையாலே அனநுபூதத்வமே ஒழிய அநு பாவ்யத்தால் அல்ல –
அவ்வாறே அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் இல்லாமல் இருந்த போதிலும் கூட அனநுபூதத்வ பிரசங்கம் தடுக்க முடியாதது –
அனநுபாவ்யமான க்கான கு ஸூமாதிகளுக்கு அனநுபூதத்வம் ஆனது அசத்வத்தாலே ஏற்படுகிறதே ஒழிய அனநுபாவ்யத்தால்
அல்ல வென்று சொல்லப் படுமே யானால் -இவ்வண்ணமாகில் கடம் முதலியவைகளுக்கு அஜ்ஞ்ஞான விரோதித்வமே
அனநு பூதத்துக்கு ஹேது வே ஒழிய அனுபாவ்யத்வம் அல்ல என்று நிச்சயித்துக் கொள்ளலாம்
அநு பூதிக்கு அநு பாவ்யத்வம் வரும் பஷத்தில் அதற்குக் கடாதிகளுக்கு போலே அஜ்ஞ்ஞான விரோதித்வம் பிரசங்கிக்கும் என்று
சொல்லப் படுமே யானால் அனநுபாவ்யத்வம் இருந்த போதிலும் கூட க்கன குஸூமம் முதலியவைகளுக்கு போலே
அஜ்ஞ்ஞான விரோதித்வமும் தவறாமல் பிரசங்கிக்கும் ஆதலால் அநு பாவ்யத்வம் வரின் அனநுபூதித்வம் வரும் எனபது பரிஹசிக்கத் தக்கது

அநு பூதே -ஸ்வ கத -ஆசார்யச்ய –நச அந்ய–அநு பூதித்வம் –தேச –கடா தேஸ்து–தத் அநு பூதே — ஏவந்தர்ஹி -அநு பூதே -அநு பாவ்யத்வேபி –

ஸ்வதஸ் சித்தையாய் இருக்கிற சம்வித்துக்கு பிராகபாவம் முதலியது இல்லாமையாலே உத்பத்தியானது நிராகரிக்கப் படுகிறது எனபது
யாதொன்று உண்டோ -அது குருடனுக்கு பிறவிக் குருடனால் கோல் கொடுக்கப் படுவது போலே –
பராக பாவத்தை கிரஹிக்கிற பிரமாணம் இல்லாமையாலே அபாவமானது சொல்வதற்கு சகயம் ஆகாது என்று கூறப் படுமே யாகில் -அல்ல –
அநு பூதியினாலேயே கிரஹிக்கப் படுவதால் -அநு பூதியானது தான் இருந்து கொண்டு அப் பொழுதே தனக்கு விருத்தமான தன்னுடைய
அபாவத்தை எவ்வாறு அறிவிப்பிக்கும் என்று சொல்லப் படுமே யானால்
அநு பூதியானது தன்னோடு சம காலத்தில் இருக்கிற பதார்த்தத்தையையே விஷயீ கரிக்கிறது என்கிற நியமம் இல்லை அன்றோ –
அங்கனமாகில் சென்றதும் இனி வரப் போகிறதுமான அனுபவங்களுக்கு அவிஷயத்வம் பிரசங்கிக்கும்

யத்து– அந்தச்ய ஜாத்யந்தேன யஷ்டி ப்ரதீயதே –இதி –ப்ராக பாவச்ய –நஹ்ய நு பூதி –நஹி —

———-
சித்திக்கிற அநு பூதி பிராபக பாவம் முதலியதற்கு அந்த அநு பூதியின் ஸ்திதி காலத்துக்கு சமமான காலத்தில் சதி நியமம் இருக்க வேணும் என்று எண்ணுகிறாயோ
உன்னால் எந்த இடத்திலாவது இவ்வண்ணம் காணப் பட்டு இருக்கிறதா -எதனால் நியமமத்தைக் கூறுகிறாயோ -சந்தோசம்
அங்கனம் ஆகில் அந்த அநு பூதி காலத்தில் ஸ்திதி தர்சனத்தினாலேயே பிராபக பாவம் முதலியவை சித்திப்பதால் அதற்கு அலாபம் கூடாது –
அதின் பிராபக பாவம் அதோடு சம காலத்தில் இருக்கிறது என்று பைத்தியம் இல்லாதவன் எவன் தான் சொல்லுவான்
சமகால வர்த்தியான பதார்த்தை கிரஹித்தல்-என்கிற யாதொன்மை தன்மை உண்டோ
இந்த ஸ்வபாவ நியமமானது இந்த்ரியங்க ளால் உண்டாகுகிற பிரத்யஷத்துக்கு அல்லவோ -எல்லா ஞானங்களுக்கும்
பிரமாணங்களுக்கும் இந்த ஸ்வ பாவம் இல்லை –
ஸ்மரணம் அநு மானம் ஆகமம் பிரயோகம் யோகி பிரத்யஷம் முதலியவைகளில் காலாந்தரங்களில் இருப்பதையும் கூட கிரஹிக்கும்
திறமை காணப்படுவதால் -இதனாலே தானே பிரமாணங்களுக்கு ப்ரமேயங்களுடன் சேர்க்கை
பிரமாணத்துக்கு தனக்கு சம காலத்தில் இருக்கிற ப்ரமேயத்தொடு விலகாமல் சேர்ந்து இருத்தல் அர்த்த சம்பந்தம் அல்ல
பின்னையோ எந்த தேசம் காலம் முதலியதோடு சம்பந்தம் உள்ளதாக எந்த அர்த்தம் தோன் கிறதோ
அந்த அர்த்தத்தினுடைய அப்படிப்பட்ட ஆகாரத்தின் மித்யாத்வத்துக்கு ப்ரத்ய நீகை தான் அர்த்த சம்பந்தம் ஆதலால் இதுவும் நிரசிக்கப் பட்டது
ஸ்ம்ருதியானது பாஹ்ய விஷயங்களுக்கு உள்ளதல்ல அர்த்தம் நஷ்டமாக இருக்கும் பொழுது கூட ஸ்ம்ருதி காணப் படுவதால் –

அப்படிக்கின்றி சம்வித்ப்ராபக பாவமானது பிரத்யஷத்தினால் நிச்சயிக்கத் தக்கது அல்ல –நிகழ காலத்தில் இல்லாமையால்
வேறு பிரமாணங்களாலும் நிச்சயிக்க தக்கதல்ல -லிங்கம் முதலியவைகள் இல்லாமையாலே
சம்வித பிராபக பாவவ்யாப்தமான லிங்கம் இங்கே அறியப் படுகிறது இல்லை யன்றோ
அதுக்கு பிராபக பாவ விஷயமான சப்த பிரமாணமும் இதற்கு முன் காணப் பட்டு இருக்க வில்லை –
ஆகையால் அந்த அநு பூதியின் பிராபக பாவமானது பிரமாணம் இல்லாமையாலே சித்தி பெறாது என்று சொல்லப் படுமே யாகில்
இவ்வண்ணம் ச்வதஸ் சித்தத்தவ விபவத்தை விட்டு விட்டு பிரமாண அபாவத்தில் இரங்கு வாயே யாகில்
யோக்ய அநு பலப்தியினாலேயே அபாவம் சமர்த்திக்கப் பட்ட படியால் நீ தணிதலை அடைவாயாக –

அத மன்யசே–கிம் த்வயா –ஹந்த தர்ஹி -தத் பராக பாவஞ்ச -இந்த்ரிய ஜன்மன –
ந சர்வேஷாம் ஜ்ஞானானாம் பிரமாணா நாஞ்ச–ஸ்மரண அநு மான –அத ஏவ – ந ஹி பிரமாணச்ய –அபிது -மித்யரத்வ ப்ரத்ய நீகதா -ந ஹீத்யாதி
அத இதமபி–அதோச்யேத–நஹி அத இதி -யோக்ய அநு பல பத யைவ –

—————————————————–

மேலும் பிரத்யஷ ஜ்ஞானமானது தனக்கு விஷயமான கடம் முதலியவற்றை தான் இருக்கும் சமயத்தில் இருப்பு உள்ளதாக சாதியா நின்று கொண்டு
அதினுடைய சத்தையை எப்பொழுதும் அறிவிக்கின்றதாக காணப் படுகின்றது இல்லை என்பதனால்
கடாதிகளுடைய பூர்வ உத்தர கால சத்தை யானது அறியப் படுகிறது இல்லை –
அதின் அப்ரதீதியும் சம்வேதனத்துக்கு கால பரிச்சின்னமாக ப்ரதீதீ வருவதால் கடாதிகளை விஷயமாகக் கொண்ட சம்வேதனமே
காலா நவச்சின்னமாக அறியப் படுமே யானால்
சம்வேதனத்துக்கு விஷயமான கடம் முதளியதும் கால நவச்சின்னமாக அறியப் பட வேணும்
ஆகவே கடம் முதலியவை நித்யமாக ஆக வேண்டி வரும்
ச்வதஸ் சித்தமான சம்வேதனம் நித்யமாக இருக்குமே யாகில் நித்யம் என்றே அறியப் பட வேணும் -அப்படி அறியப் படுகிறது இல்லை
இவ்வண்ணமாக அநு மா நாதி சம்வித்துக்களும் காலா நவச்சின்னங்களாக அறியப் படுமே யாகில் தன விஷயங்களையும்
காலா நவச்சின்னங்களாக பிரகாசிப்பிக்கும் என்பதனால் -அவைகள் எல்லாம் காலா நவச்சின்னங்களாயும் நித்யங்களாயும் ஆக வேண்டி வரும் –
விஷயங்கள் சம்வித்துக்கு அநு ரூபமான ஸ்வரூபம் உள்ளவைகளாக இருப்பதால் நிர்விஷையான ஒரு சம்வித்தும் இல்லை
உபலப்தி இல்லாமையால் விஷய பிரகாசன ஸ்வ பாவம் உள்ளதாகவே உபலப்தி வருவதினாலேயே யன்றோ சம்வித்துக்கு ஸ்வயம்
பிரகாசத்வம் சமர்த்திக்கப் பட்டது –
சம்வித்துக்கு விஷய பிரகாசன ஸ்வ பாவம் இல்லாவிடில் ஸ்வயம் பிரகாசத்வம் சித்தியாதாலாலும்
அநு பூத்தியானது அநு பவ அந்தரத்தால் அனுபவிக்கத் தக்கதாக இல்லாததாலும் சம்வித்துக்கு துச்சத்துவமே சம்பவிக்கும்
நித்திரம் மதம் மூர்ச்சை முதலியவைகளில் சர்வ விஷய சூன்யையான தனித்த சம்வித்தே ச்புரிக்கிறது என்று சொல்லக் கூடாது –
யோக்ய அநு பலப்தியினால் பாதிக்கப் பட்டு இருப்பதால் அந்த தசைகளிலும் கூட அனுபவிக்கப் பட்டு இருக்குமே யானால்
அதற்கு பிரபோத சமயத்தில் அநு சந்தானம் வர வேணும் -அப்படி அநு சந்தானம் வரக் கண்டிலோம் –

கிஞ்ச –பிரத்யஷ –தத ப்ரதீதிஸ்ஸ –கடாதிவிஷயமேவ —-நித்யஞ்ச –எவம் சம்வித அநு ரூப -ஏவம் தச -அநு பலப்தே -சம்விதோவிஷய —
அநு பூத அநு பவாந்தர அனநுபாவ்யத் வாச்ச –யோக்யா – தாஸ்வபி-நச ததஸ்தி —

—————————————————————————————-
அய்யா -அனுபவிக்கப் பட்டு இருக்கிற பதார்த்தங்களுக்கு தவறாமல் ஸ்மரணம் காணப் பட்டு இருக்க வில்லை –
ஆதலால் ஸமரணத்தினது இன்மை எவ்வாறு அனுபவத்தின் இன்மையை சாதிக்கத் திறமை உள்ளதாகும்
உத்தரம் கூறப்படுகிறது –
எல்லா சம்ச்காரங்களுக்கும் நாசத்தை உண்டு பண்ணுகிற தேஹாபாயம் முதலிய பிரபலமான ஹேதுக்கள் இல்லாமல் இருக்கும் சமயத்தில்
கூட தவறாமல் இருக்கும் அச்மரணமானது அனுபவத்தின் அபாவத்தையே சாதிக்கிறது
அச்மரண நியமத்தினால் மாதரம் அனுபவ அபாவம் எனபது இல்லை -இவ்வளவு காலம் நான் ஒன்றும் அறிந்திலேன் -என்கிற
தூங்கி எழுந்து இருந்தவனுடைய பிரத்யவமர்சசித்தினாலேயே சித்திப்பதால் –
அனுபவம் இருந்த போதிலும் விஷய சம்பந்தம் இல்லாமையாலாவது அஹங்காரம் நீங்குதலால் ஆவது அந்த அச்மரண நியமம்
என்று சொல்வதற்கு சக்யமாகாது
அர்த்தாந்தர அநனுபவமும் அர்த்தாந்திர அபாவமும் அனுபவிக்கப் பட்டிருக்கிற அர்த்தாந்தரத்தின் அச்மரணத்துக்கு ஹேதுக்கள் ஆதலால்
அந்த தசைகளில் கூட அஹம் அர்த்தமானது தொடர்ந்து வருகிறது என்று சொல்லப் போகிறோம் –

தனு –உச்யேத–ந கேவலம் –சித்திரேதி–தாஸ்வபி —

—————————————————————————————-

ஐயா ஸ்வப்னம் முதலிய தசைகளிலும் கூட ச விசேஷ அனுபவம் இருக்கிறது என்று முந்தி சொல்லப் பட்டது -உரைத்தது உண்மை -அதுவோ ஆத்ம அனுபவம்
அதுவும் ச விசேஷம் என்றே ஸ்தாபிக்கப் படப் போகிறது
இவ்விடத்திலோ என்னில் -சகல விஷயங்களாலும் விடு பட்டதும் நிராஸ்ரயமாகவும் இருக்கிற சம்வித்தானது நிஷேதிக்கப் படுகிறது
தனித்த சம்வித்தே ஆத்ம அனுபவம் என்று கூறப் படுமானால் -அல்ல -அதுவும் ஆஸ்ரயத்தோடு கூடியது என்று உப பாதிக்கப் படப் போகிறது
ஆகையால் அநு பூதியானது தான் இருந்து கொண்டு தான் தன்னுடைய பிரகா பாவத்தை சாதிக்கிறது இல்லை என்பதனால் பிரகா பாவத்தின் அசித்தியானது சொல்வதற்கு சக்யம் ஆகாது
அநு பூதிக்கு அனுபவிக்கத் தக்க தன்மையின் சம்பவத்தை உப பாதித்ததினால் மற்றதினாலும் அசித்தியானது நிரசிக்க்கப் பட்டது
ஆகையாலே பிராக பாவாதிகளின் அசித்தியினால் சம்விதத்தினுடைய அனுத்பத்தியானது உபபத்தி உள்ளதாகாவாகாது –

தனு –சத்யமுக்தம் –கேவலைவ சம்வித ஆத்ம அனுபவ இதி சேத —சாச -அத அநு பூதே –

————————————————————————

இந்த அனுபூதிக்கு உத்பத்தி இல்லாமையால் ஒரு விதமான விகாரமும் இல்லை எனபது யாது ஓன்று உண்டோ அதுவும் பொருந்தாது
பிராபக பாவத்தில் வ்யபிசாரம் வருவதால் அந்த பிராபக பாவத்துக்கு உத்பத்தி இல்லாமல் இருந்த போதிலும் கூட விநாசம் காணப் படுகிறதன்றே
பாவேஷூ என்கிற விசேஷணம் கொடுக்கும் பஷத்தில் தர்க்க பாண்டித்தியம் வெளிப்படுத்தப் பட்ட தாக ஆகிறது
அப்பொழுது உன்னால் அபிமானப் பட்டு இருக்கிற அவித்யையானது உத்பத்தி இல்லாததாகவே பற்பல விகாரங்களுக்கு ஆஸ்பதமாகவும்
தத்வ ஜ்ஞானத்தின் உதயத்தினால் நாசம் உடையதாகவும் இருக்கிறது பற்றி அந்த அவித்தையில் வ்யபிசாரம் வருகிறது
அதின் விகாரங்கள் அனைத்தும் மித்யா பூதங்கள் என்று சொல்லப் படுமே யாகில் உனக்கு பரமார்த்த பூதமாகவும் ஓர் விகாரம் இருக்கிறதா
எதனால் இந்த விசேஷணம் பிரயோஜனம் உள்ளதாக ஆகுமோ அது ஒப்புக் கொள்ளப் படுகிறது இல்லை அன்றோ –

யதபி பராக பாவி –பாவேஷ் விதி –ததாச –தத் விகாரா –கிம் பவத —

————————————————————–

அநு பூதியானது உத்பத்தி இல்லாமையாலே தன்னிடத்தே வேறு பாட்டை சாஹிக்கிறது இல்லை என்று யாதொன்று கூறப் பட்டதோ அதுவும் பொருந்தாது –
உத்பத்தி இல்லாதாதவே இருக்கிற ஆன்மாவானது தேஹம் இந்த்ரியங்களைக் காட்டிலும் வேற்பட்டதாக இருப்பதால் அநாதி
என்று ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற அவித்யைக்கு
ஆத்மாவைக் காட்டிலும் வேறுபாடு அவசியம் ஆஸ்ரயிக்க தக்கதாக இருப்பதால் -அந்த வேறுபாடானது மித்யா ரூபம் என்று
சொல்லப் படுமே யானால்
உத்பத்தி வ்யாப்தமான உண்மையான விபாகமானது உன்னால் காணப் பட்டு இருக்கிறதா
அவித்யைக் காட்டிலும் ஆத்மாவுக்கு உண்மையாக விபாகம் இல்லா விடில் உள்ளபடியே அவித்தையே ஆத்மாவாக ஆகும்
பாதிக்கப் படாத பிரதிபத்தியினால் சித்தமான த்ருச்ய பேதங்களின் சமர்த்தனத்தால் தர்சன பேதமும் நிச்சயமாக
சமர்த்திக்கப் பட்டது சேதிக்கத் தகுந்த வஸ்துக்களின் பேதத்தால் சேதன பேதம் போலே

யதபி –அஜச்யைவ -அவித்யாயா –ச விபாக -அவித்யாயா -அபாதித -ஹேத்ய பேதாத்

—————————————————————————————–

த்ருசி ரூபையான இந்த சம்வித்துக்கு த்ருச்ய தர்மம் ஒன்றும் இல்லை –த்ருச்யங்களாயே இருப்பதினாலேயே அவைகளுக்கு த்ருசி தர்மம் இல்லை என்று யாதொன்று கூறப்பட்டதோ
அந்த இரண்டும் தம்மால் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிறதும் பிரமாண சித்தங்களுமான நித்யத்வ ஸ்வயம் பிரகாசத்வம் முதலிய தர்மங்களால் வ்யாப்தி சூன்யம் –
அவைகள் சம்வேதனம் மாதரம் அல்ல -ஸ்வரூப பேதம் இருப்பதால்
தன்னுடைய சத்தையினாலேயே தனக்கு ஆச்ரயமாக இருக்கிற ஆத்மாவைக் குறித்து ஒரு விஷயத்தை பிரகாசிக்கச் செய்வது அன்றோ சம்வேதனம்
ஸ்வயம் பிரகாசதையோ வென்றால் ஸ்வ சத்தையினாலேயே ஸ்வ ஆஸ்ரயத்தின் பொருட்டு பிரகாசித்தல்
பிரகாசம் எனபது சேதன அசேதன ரூபங்களான பதார்த்தங்கள் அனைத்துக்கும் சாதாரணமான வ்யவஹார அநு குண்யம்

யதபி -அநை காந்தி கமிதி –ஸ்வரூப பேதாத் –பிரகாசச்ச –

——————————————————————————————–

எக்காலத்திலும் இருத்தல் அன்றோ நித்யத்வம்
ஏகத்வம் ஓன்று என்ற எண்ணிக்கையினால் ஒரு வஸ்துவைக் குறித்தல்
அவைகள் ஜடத் வாத்ய பாவ ரூபங்களாக இருந்த போதிலும் கூட அப்படிப்பட்ட சைதன்ய தர்ம பூதங்களான
அவைகளால் அ நை காந்த்யம் பரிஹரிக்கத் தகாதது –
சம்வித்திலோ என்றால் ஸ்வரூபத்தை தவிர்த்து வேறாக ஜடத்வாதி ப்ரத்ய நீகத்வம் என்கிற அபாவ ரூபமாகவோ பாவ ரூபமாகவோ உள்ள தர்மம்
ஒப்புக் கொள்ளப் படா விட்டால் அந்த அந்த வஸ்துக்களின் நிஷேத வசனத்தினால் ஒன்றும் சொல்லப் பட்டதாக ஆகாது –

சர்வ –தேஷாம் –சம்விதுது –

————————————————————————

மேலும் சம்வித் சித்திக்கிறதா இல்லையா –சித்திக்கிறதே யானால் ச தர்மத்வம் வரும் -இல்லா விடில் ஆகாச புஷ்பம்
முதலியவைகளுக்கு போலே துச்சதை ஏற்படும்
சித்தியே சம்வித் என்றால் அது யாருக்கு எதைப் பற்றி என்று சொல்லத் தக்கது –ஒருவனுக்கும் ஒன்றைப் பற்றியும் இல்லை என்று
சொல்லப் படுமே யாகில் அப்பொழுது அது சித்தியாகாது –
சித்தியோ வென்றால் புத்ரத்வம் போலே ஒருத்தனுக்கு ஒருவனைக் குறித்து உண்டாகிறது
ஆத்மாவுக்கு என்று சொல்லப் படுமே யானால் இந்த ஆத்மா யார்
ஐயா சம்வித்தே ஆத்மா வென்று உரைக்கப் பட்டது அன்றோ –உண்மை உரைக்கப் பட்டது –
ஆனால் அந்த வசனம் தோஷம் உள்ளது -அதை உபபாதிக்கிறார்
ஒரு புருஷனுக்கு ஒரு அர்த்தத்தைக் குறித்து சித்தி ரூபையாக இருப்பதால் அந்த புருஷ சம்பந்தம் உள்ள அந்த சம்வித்தானது
தானே எவ்வாறாக ஆத்ம பாவத்தை அனுபவிக்கும்
இது சொல்லப் பட்டதாக ஆகிறது -அநு பூதி எனபது தனக்கு ஆஸ்ரயமான ஆத்மாவைக் குறித்து தன்னுடைய சத் பாவத்தினாலேயே
ஒரு வஸ்துவின் வ்யவஹார -அநு குணிய ஆபாதன ஸ்வ பாவம் உள்ளதாகவும்
ஜ்ஞானம் அவசதி சம்வித் என்று வழங்கப்படுவதுவும் கர்மாவோடு கூடியதும்
கடமஹம்- ஜாநாமி -இமமர்த்தம் -அவகச்சாமி — படமஹம் -சம்வேத்மி -என்று
எல்லாருக்கும் ஆத்மா சாஷிகமாகவும் பிரசித்த மாகவும் இருக்கிற அநு பவிதாவான ஆத்மாவின் தர்ம விசேஷம் –
இந்த ஸ்வ பாவம் உள்ளதாக இருப்பதினால் அன்றோ அதுக்கு ஸ்வயம் பிரகாசத்வம் உன்னாலும் உப பாதிக்கப் பட்டது
கர்மாக்களோடு கூடியதான இந்த கர்த்ரு தர்ம விசேஷத்திற்கு கர்மத்வம் போலே கர்த்ருத்வம் இசையாது

அபிச -சம்வித் -சித்திய திவா நவா –சித்தி ரேவ–கஸ்ய –யதி–சித்தா –ஆத்மன இதிசேத்–கோயமாத்மா
ந்னு சத்யமுக்தம் -தயாஹி –அர்த்த ஜாதம் –ஏதத் உக்தம் பவதி -ஏதத் ஸ்வா பவதயா

——————————————————————————————–
உபபாதிக்கிறார் – இந்த கர்த்தாவுக்கு ஸ்திரத்வமும் -கர்த்தாவின் தர்மமான சம்வேதனத்துக்கு ஸூக துக்காதி களுக்குப் போலே
உத்பத்தி ஸ்திதி விநாசங்களும் நேரில் காணப் படுகின்றன –
கர்த்தாவின் ச்தைர்யமோ வென்றால் -அதே இந்த வஸ்து முன்னால் என்னால் அனுபவிக்கப் பட்டு இருக்கிறது என்கிற பிரத்யபி
ஜ்ஞாப்ரத்யஷத்தால் -சித்தம்
நான் அறிகிறேன் -நான் அறிந்தேன் -ஜ்ஞாதா வாகவே இருக்கிற எனக்கு இப்பொழுது ஜ்ஞானம் நஷ்டமாகப் போயிற்று என்றும்
சம்வித்துக்கு உத்பத்தி முதலியவைகள் ப்ரத்யஷ சித்தங்களாக இருப்பதால் எதினால் அவைகளுக்கு ஐக்யம்-
இவ்வண்ணம் கரண பங்குரமான சம்வித்தை ஆத்மா வென்று ஒப்புக் கொள்ளும் பஷத்தில் -முதல் தினத்தில் இது என்னால் பார்க்கப் பட்டது
மறு தினத்திலும் இதை நான் கண்டேன் என்கிற பிரத்ய பிஜ்ஞையும் இசையாது
அன்யனால் அனுபவிக்கப் பட்ட வஸ்துவுக்கு வேறு ஒருவனுடைய ப்ரத்ய பிஜ்ஞா கோசரத்வம் சம்பவியா தன்றோ –

ததா கர்த்ரு ச்தைர்யம் தாவத் –அஹம் ஜாநாமி –அன்யேன –

———————————————————————-
மேலும் அநு பூதிக்கு ஆத்மத்வம் ஒப்புக் கொண்டால் -அது நித்யமாக இருந்த போதிலும் பிரதிசந்தானத்தின் -ஸ்மரண்த்தின் -இன்மை
அந்த நிலைமை உள்ளதே
பிரதிசந்தானமோ எனில் முற் காலத்திலும் பிற்காலத்திலும் ஸ்திரமாக இருக்கிற அநு பவிதாவை உறுதிப் படுத்து கிறது -நானே இதை
முந்தியும் அனுபவித்தேன் என்று அநு பூதி மாத்ரத்தை உப ஸ்தாபிக்கிறது இல்லை –
உனக்குக் கூட அநு பூதிக்கு அநு பவிதாவாக இருத்தல் இஷ்டம் அல்ல –அநு பூதி அநு பூதி மாத்ரமே –
நிராஸ்ரையாகவும் நிர்விஷயையாகவும் இருக்கிற சம்வித் என்கிற ஒரு பதார்த்தம் அத்யந்த அநு பலப்தியினால் சம்பவியாது என்று உரைக்கப் பட்டது
இருவர்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற சம்வித்தே ஆத்மா என்கிற விஷயம் உபலப்தியினால் அடிக்கப் பட்டு விட்டது
அநு பூதி மாத்ரமே யதார்த்தம் என்பதற்கு நிஷ்கர்ஷங்களா ஹேத்வாபாசங்களும் நிராகரிக்கப் பட்டன –

கிஞ்ச –பிரதிசந்தானம் -அஹம் பவத -அநு பூதி -சம்வின்நாம-உபய -அநு பூதி மாதரம் —

———————————————————-
அஹம் ஜாநாமி என்கிற அஸ்மத் பிரத்யத்தில் யாதொரு அநிதமம்சம் உண்டோ பிரகாசத்தையே ஸ்வ பாவமாகக் கொண்ட சித் பதார்த்தம் -அது ஆத்மா –
அதில் ஜ்ஞான பலத்தால் பிரகாசிக்கப் பட்டு இருப்பதால் யுஷ்ம ததர்த்த லஷணமான-அஹம் ஜாநாமி -என்று சித்திக்கிற அஹம்
அர்த்தமானது சின் மாத்ரத்தை விட அதிகமாக இருப்பதால் யுஷ்மததர்த்தமே
இது இவ்வண்ணம் அல்ல –அஹம் ஜாநாமி என்கிற தரமி ஸ்வரூபமான பிரத்யஷ ப்ரதீதியின் விரோதத்தாலேயே –

தநுச–அ நிதமம்ச –பிரகாசை காச -தத்பல –நை ததே –அஹம் ஜாநாமி —

————————————————————————————–

மேலும் அஹம் அர்த்தமானது ஆத்மாவாக இல்லா விடில் ஆத்மாவுக்கு பிரத்யக்தவம் சம்பவியாது –
அஹம் புத்தியினால் பிரத்யகர்த்தமானது ப்ராகர்த்தத்தின் நின்றும் வேடு படுத்தப் படுகிறது அன்றோ
நான் விலக்கப்பட்டு இருக்கிறது சமஸ்த துக்கங்களுடன் கூடியனாகவும் முடிவில்லாத ஆனந்தத்தை அடைந்தவனாகவும் கர்மத்துக்கு வசப் படாதவனாகவும்
ஆகக் கடவேன் என்று மோஷத்தில் விருப்பம் உள்ளவன் ஸ்ரவணம் முதலியவற்றில் பிரவர்த்திக்கிறான்
அஹம் அர்த்த வி நாசமே மோஷம் என்று ஒருவன் எண்ணுவானே யாகில் அவன் மோஷகதா பிரஸ்தாவ கந்தத்தின் நின்றும் விலகி விடுவான்
நான் நாசம் அடைந்த போதிலும் என்னைக் காட்டிலும் வேறாக ஜ்ஞப்தி என்று ஒரு வஸ்து இருக்கிறது என்று எண்ணி அதை அடைவதின் பொருட்டு ஒருவனுக்கு முயற்சி உண்டாகாது –
இந்த ஜ்ஞப்திக்கு தன சம்பந்தினாலே அன்றோ சத்தையும் விஜ்ஞப்திதை முதலியதும்
தன் சம்பந்தமே விலகி விடுமே யாகில் ஜ்ஞப்தியே சித்தியாது –
வெட்டுகிறவன் வெட்டத் தக்க வஸ்து இவ்விரண்டும் இல்லா விடில் வெட்டுதல் முதலியது எவ்வாறு சித்தியாதோ அவ்வாறாக ஆகையால்
அஹம் அர்த்தமான ஜ்ஞாதாவே பிரத்யகாத்மா வென்று நிச்சயிக்கப் பட்டது
அரே விஜ்ஞாதாவை எதனால் நிச்சயமாக அறிகிறான் என்று சுருதி -இதை எவன் அறிகிறானோ அவனை ஷேத்ரஜ்ஞன்
என்று அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் -என்று பகவத் கீதை
ஸூ த்ரகாரரும் -நாத்மாஸ்ருதே -என்று தொடங்கி-ஜ்ஞாத ஏவ –என்று ஜ்ஞான ஆச்ரயன் தான் ஆத்மா என்று சொல்லப் போகிறார்
ஆகையால் ஜ்ஞப்தி மாதரம் ஆத்மா அல்ல என்று நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது

கிஞ்ச –நிரஸ்த –அஹம் அர்த்த விநாச–மயி நஷ்டேபி-ஸ்வ சம்பந்தி தயா -ஸ்வ சம்பந்த -சேத்து
அத விஜ்ஞ்ஞா தாரம் -ஞாநாத் ஏவ —

————————————————————————————–
அஸ்மத் தர்க்கதமானது அஹம் பிரத்யயத்தால் சித்தம் அன்றோ —
யுஷ்மத்தர்த்தம் யுஷ்மத் ப்ரத்யய விஷயம் அதில் அஹம் ஜாநாமி என்கிற வ்யவஹார பலத்தால் சித்திக்கிற
ஜ்ஞாதாவானவன் யஷ்மதர்த்தம் என்று சொல்லலுகிற வசனமானது –என் தாயார் மலடி -எனபது போலே வ்யாஹதமான அர்த்தம் உள்ளது
இந்த ஜ்ஞாதாவான அஹமர்த்தம் அன்யாதீன பிரகாசம் உள்ளது அன்று
ஸ்வயம் பிரகாசமாக இருப்பதால் சைதன்ய ஸ்வ பாவகை அன்றோ ஸ்வயம் பிரகாசதை எது பிரகாச ஸ்வ பாவம் உள்ளதோ
அது தீபம் போலே அனந்யாதீன பிரகாசம் உள்ளது –
தீபம் முதலியவற்றுக்கு தன்னுடைய ஒளியின் பலத்தினாலே பிரகாசிப்பிக்கப் பட்டு இருத்தலால் அப்பிரகாசத்வம் ஆவது
அன்யாதீன பிரகாசத்வம் ஆவது இல்லை யன்றோ
பினனையோ பிரகாச ஸ்வ பாவம் உள்ள தீபம் தானாகவே பிரகாசிக்கிறது –மற்றவைகளையும் தன்னுடைய ஒளியினால் பிரகாசிக்கச் செய்கிறது –

அஹம் பிரத்யய–நசா சௌ –ஸ்வயம் பிரகாசத்வாத் –சைதன்ய ஸ்வ பாவாஹி ஸ்வயம் பிரகாசதா –
யா பிரகாச ஸ்வ பாவ -நஹி அபிரகாசத்வம் அன்யாதீன பிரகாசவத் வஞ்சேதி–கிந்தர்ஹி தீப -அந்யா நபி
சைதன்ய ஸ்வ பாவ தாஹி
நஹி அந்யா நபி –

———————————————————————————————————-

366
—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: