ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதினான்காவது திருமொழி —

அவதாரிகை –

பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
-நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –-கறைவைகளில் பிராபகத்தையும்
சிற்றம் சிறுகாலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு
-என்றபடி –

அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம் சிற்றில் இழைத்து
பனிநீராடி
கூடல் இழைத்து
குயில் வார்த்தை கேட்டு
சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து –
அப்போதே கிடையாமையாலே –ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து

அது தான் விசதமாய் இராமையாலே
அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
மேக தர்சனத்தாலே நொந்து -அம்மேகங்களை வார்த்தை கேட்டு –
ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம்மேகங்கள் தன்னையே தூதுவிட்டு
அவ்வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி

பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும்
அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-

குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –-10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல்

அது காண்டுமே 11-10- பின்னையும் இழவோடே தலைக் கட்டி –
சாதிப்பார் யார் இனியே
-11-10-
அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு

தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு கால் நடை தருவாரை
என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில்
அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை ஸ்பரசிப்பித்து ஆச்வசிப்பியுங்கோள்–

என்றும் நின்றது கீழ் –

முதல் தன்னிலே -அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-
இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம்
பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –

இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது
இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –
பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து
முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க

அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –
என் அவா அறச் சூழ்ந்தாயே –
என்கிற படி வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க

பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் –
கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்

தனக்குப் பிறந்த விடாயையும்
பெற்ற பேற்றையும்
அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி
ஆசையையும் குறைக்க ஒண்ணாதே

ஆசை குறைந்ததாகில் முதலிலே பிராபக ஸ்வீகாரம் தான் பிறவாதே

இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும்
ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது
அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –

சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக்குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே –
அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இறே-

பிறந்த பக்தியும் –
அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே –
அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

———————————————————–

விண்ணாட்டவர் மூதுவர் -திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
-வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-
தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி

-அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

பதவுரை

ஓர் கார் ஏறு–(கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து–காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு–பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்–ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு–ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி–விளையாடிக் கொண்டு
இங்கே போத–இப்படி வர
கண்டீரே–பார்த்தீர்களோ?
இட்டம் ஆன–(தனக்கு) இஷ்டமான
பசுக்களை–பசுக்களை
இனிது–த்ருப்தியாக
மறித்து–மடக்கி மேயத்து
நீர் ஊட்டி–தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு–(இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட–(அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே–ப்ருந்தாவனத்திலே
கண்டோம்–ஸேவித்தோம்.

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதியாய் -கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து-

வானிளவரசு என்கிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத்தத்வம் வளருவது என்றாய்த்து பட்டர் அருளிச் செய்வது – –

ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி

ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வ நே த்ரய –பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆஸ்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –

இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் –
ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இறே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
ஏதத் சாமகாயன் நாஸ்தே –என்று
சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து

இப்பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு -என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி

அவாக்ய அநாதர-தத்வம்
இட்டீறிட்டு
-என்னும் படி இருப்பதே என்று சிறியாத்தான்
போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்

விளையாடி –
அச் செருக்குக்கு போக்குவிட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது –
இது தானே இறே பிரயோஜனம்

இங்கே போத –
அங்கே போனாலும் பெற வரிய பரிமாற்றத்தை அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –

கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாக்களானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது

ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால் பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-

இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவே –திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ்விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும்
கனாக் காண்பதுவும் இப்பசுக்களை வாய்த்து –

இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-
எதிர்த்தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால் அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும்
எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-

நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து
பின்னே கையைக் கட்டிக் குனிந்து நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து —
இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்

தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–
இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—
காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –

விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே -திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது -இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –

விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து
அபிமத விஷயங்களும் தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே
ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

—————————————————————————————

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

பதவுரை

அனுங்க–நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து–என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி–திருவாய்ப் பாடியை
கவர்ந்து–ஆக்ரமித்து
உண்ணும்– அநுபவிக்கின்றவனாய்
மின் மேகம்–மின்னலும் மேகமும்
கலந்தால் போல்–ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று–(கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
குணுங்கு நாளி–வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை–இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை–கண்ண பிரானை கண்டீரே?
கணங்களோடு–(தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட–விளையாடா நிற்க (விருந்தாவனத்தே கண்டோம்)

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
நான் ஜீவியாத படியாக -அழியும் படியாக -வருந்தும் படியாக பிரிவை விளைத்து
பிரியேன் -பிரியில் ஆற்றேன் என்று சொல்லி வைத்து இறே பிரிவது –
இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் ஆசையினால் ஜீவிக்கவும் வேண்டி முடியவும் பெறாதே நோவு படுகிற படி –

என்னை
பிரிவே எருவாகப் பணைக்கைக்கு தான் என்று இருந்தானோ என்னையும்

ஆயர்பாடிக் கவர்ந்துண்ணும்
பட்டி மேயும்படி தன்னைச் சொல்கிறது
அகங்களிலே சிறை செய்து வைத்து அவற்றையே யாய்த்து விரும்பி அமுது செய்வது-
தன்னை ஆசைப் பட்டாரை உபேஷித்துப் போந்தான்
இப்போது ஆசைப் பட்டு இறே நோவு படுகிறது

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –

தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி

வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்

வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்

ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்

தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பச்யந்தீ த்வாம் பஜாம்யஹம்
-அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )

இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே
— திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –

குட்டேற்றை
அபிமத லாபத்தாலே மேணானித்து இருக்கும் படி

கோவர்த்தனனை
பெண்களை வெறும் தரையாக்கி -பசுக்களை அபிவ்ருத்தமாக்கும்-
ஓன்று நூறாயிரம் ஆக்கும்-

கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு -பெரியாழ்வார் -3-1-1-
மின்னும் மேகமும் சேர்ந்தால் போலே யாய்த்து ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமாய்
உஜ்ஜ்வலமான வனமாலை அசைந்து வரும்படியாக –
மாலையிடுவான் -மாலா காரர் -இவனுக்கு பவ்யனாய்த்து இறே இருப்பது
கர்ப்ப தாசர் -என்னுமா போலே –
தானும் மாலா காரர் மகள் இறே –
தான் இட்ட மாலையையும் சாத்திக் கொண்டு விளையாடுமே

மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–
இம்மாலை யிட்டால் விக்ருதராய் இருக்கும் திரு ஆய்ப்பாடியிலே காண்கை அன்றிக்கே –
கண்ட பெண்கள் மயங்கி விழுவார்கள் –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி விளையாடக் கண்டோம் –

—————————————————————————

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-

பதவுரை

மால் ஆய் பிறந்த நம்பியை–பெண்கள் பக்கலுண்டான) வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்ததென்ன லாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை–வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை–பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?
மேலால்–மேலே
பரந்த–பரவின
வெயில்–வெய்யிலே
காப்பான்–(திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை–கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ்
எழுந்தருளா நின்ற அப் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்.)

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
பெண்கள் பக்கல் வ்யாமோஹம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே யாய்த்து இருப்பது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம்
ப்ரஹ்ம-யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் –

சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ் சிதேதி
-தை ஆ -1-1-என்னுமா போலே
தர்மியை தர்மமாக சொன்ன இடங்கள் உண்டே –
மாலே மணி வண்ணா-
போலே

நம்பியை –
இது ஒரு பல ஷண மாத்ரமாய் —
ஒரு குணமாய் –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூர்ணனாய் இருக்கை

மாலே செய்யும் –
தேன தே தம நுவ்ரதா–தேனதே தம் அநு வ்ரதா-என்னுமா போலே
தன்னுடைய வ்யாமோஹத்தைக் காட்டி யாய்த்து இத் தலைக்கு வ்யாமோஹத்தை விளைப்பித்தது

மணாளனை
தன்னுடைய செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தான் அவன் போலே காணும் –

ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால்
இது எல்லாம் எங்கிலும் பெற்றாய் என்று கேட்டால்
மற்று உண்டோ நான் புறம்பு அறிவேனோ -என்னும்

மெய் சொல்லுகை தேட்டமாகில் ராமாவதாரத்திலே போக அமையாதோ- –
(பொய் நம்பி– புள்ளுவம்--இவன் அன்றோ )
ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யா வாதி ச ராகவ -அயோத்யா -2-32-என்னக் கடவது இறே –
கண்டபடியே உரைக்கையும் மெய்யாகும் என்னக் கடவது இறே

உபாயமாய் பூத ஹிதமுமாய் இருக்கும்
இரண்டு வார்த்தை சொல்லாமையாலே அப்போதே மெய்யாய் இருக்கும் -பெருமாள் வார்த்தை-
இவன் வார்த்தை விழுக்காட்டில் மெய்யாய் இருக்கும் –
பொய் போலே தோற்றினாலும் நன்மையே விளைப்பதால் கார்ய காலத்தில் மெய்யாய் இருக்கும்

ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இ றே ஆஸ்ரிதர்க்குத் தஞ்சம்-

ஏக ரூபனாய்-இரண்டு வார்த்தை சொல்லாதே -ஆஸ்ரித ரஷணம் பண்ணும் அவன்
தன்னை அழிய மாறி பொய் சொல்லி ரஷிக்கும் இவன்
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுப்பது
எதிரிகள் மர்மங்களைக் காட்டிக் கொடுப்பதாய் இறே ரஷிப்பது

பொய்கள் உரைப்பானை
ஓன்று போலே இருப்பது –
நூறாயிரம் பொய்கள் யாய்த்து சொல்லுவது -இவன்
பொய் தேட்டமாய்
இறே -இங்கே போதக் கண்டீரே -என்கிறது –

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலே பரந்த வெய்யிலை நோக்குகைக்காக
வினதை
 சிறுவன் -என்றபடி – –

அவன் தனக்கும் சேஷபூதன்-என்பது தோற்ற –
என் தான் ஆண்டாள் அருளிச் செய்வர் –நஞ்சீயர் -வித்தராய்
சிறகாலே கவித்து தனது தாயாரை -கத்ருவானவள் வெய்யிலிலே வைத்த போது நோக்கி அருளினார் பெரிய திருவடி –
என்பதை உள்ளத்தே கொண்டு
வினதை
 சிறுவன் -பத பிரயோகம் என்று வித்தராவார் என்றபடி
அவனுக்கு குடையிடுவான் இவளுக்கு பவ்யனாய் இறே இருப்பது –
கர்ப்ப தாசர் –
என்னுமா போலே –

மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே-
பெரிய உடையார் மேல் வெயிலே படாத படி சம்பாதி மறைத்தால் போலே
இவனையும் பெரிய திருவடி சிறகின் கீழே நின்று விளையாடக் கண்டோம் –

———————————————————————————

காரத் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

பதவுரை

கார்–காள மேகத்திலே
தண்–குளிர்ந்த
கமலம்–தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும்–திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு–பெரிய பாசத்திலே
என்னை படுத்தி–என்னை அகப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு–(தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம–போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர்–தேஜஸ்ஸை யுடையதாய்
மால்–பெரிதான
யானை கன்று போல்–யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட–வேர்வை யுற்று நின்று விளையாட (விருந்தாவனத்தே கண்டோம்)

கார்த்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
மேகத்திலே ஸ்ரமஹரமான தாமரை பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது –
வடிவு தானே ஆகர்ஷகமாய் இருக்கச் செய்தே –
அதுக்கு மேலே அவயவ சோபையும்
ஸுந்தர்யமும்– துவக்க வற்று
மேக ஸ்யாம் என்னும் படி இறே வடிவு லாவண்யம் -தான் இருப்பது –

கைகேயி வயிற்றிலே பிறந்த தாபம் ஆறும் கிடீர் குளிர்ந்த வடிவிலே
விளிக்கப் பெற்றேனாகில் -என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

திருக் கண்கள் ஆகிற பாசத்திலே அகப்படுத்தி –

கமலக் கண் என்னும் –
விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் தொடக்க மானவற்றை உடைத்தாய்
அக வாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தைப் பண்ணுமதுவுமாய் யாய்த்து திருக்கண்கள் —

நெடும் கயிறு –
போன விடம் எங்கும் போய்த் தப்பாத படி அகப்படுத்த வற்றாய்த்து இருப்பது –
தப்பாத படி வளைத்து -குளிர நோக்கி
என்னை அனந்யார்ஹை யாம்படி பண்ணி –

ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
என் கார்யம் என் புத்தி அதீநம் இல்லாத படி என்னைத் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டு –
இதுவே லீலையாய் இருக்கும் நிரபேஷன்-

வடிவு அழகைக் காட்டி திருக் கண்களால் நோக்கிக் கொண்டு இறே இவன் திரிவது
என்னைக் கண் அழகாலே துவக்கி
நான் அது அது என்று வாய் வெருவும்படி பண்ணி
இது தானே தனக்குப் போது போக்காக கொண்டு நிரபேஷனாய் இரா நின்றான் –

போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
முத்துச் சட்டை இட்டால் போலே குரு வெயர்ப்பு அரும்பி —
புகரை உடைத்தான யானைக் கன்று போலே யாய்த்து-
வேர்த்து நின்று விளையாடும் போது இருப்பது –

குப்பாயம் -சட்டை (கபாயம் இதனாலே )

வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
முதலிலே வேர்க்கக் கடவது இன்றிக்கே இருக்கும் பரமபதத்திலும் இன்றிக்கே-
தாய் தமப்பனுக்கு அஞ்சி வேர்க்கவும் மாட்டாதே -பிரபுவாய் மாலையிட்டு இருக்கும் -திருவாய்ப்பாடியிலும்
ராஜ குமாரனாய் அன்றோ அங்கு இருக்கும் –
அங்கே காண்கை அன்றிக்கே -ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

பதவுரை

மாதவன்–ஸ்ரீய பதியாய்
என் மணியினை–எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல்–வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும்–(தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா–பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை–திருப் பீதாம்பரமாகிற
உடை–திருப் பரிவட்டமானது
தாழ–தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல் வீதி ஆர வருவானை–பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை–திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்)

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
மாதவன் என் மணியினை-
ஸ்ரீ தேவியை தனக்கு என உடையவன் ஆகையால் பரம ரசிகன் –
தன்னுடைய ரசிகத்வம் -எனக்கு முடிந்து ஆளலாம் படி பவ்யனாய் இருக்கிறவனை –

வலையில் பிழைத்த பன்றி போல்
முதலில் அகப்படாதத்தை அகப்படுத்தலாம் —
அகப்பட்டுத் தப்பினத்தை பின்னை அகப்படுத்தப் போகாது இறே –
ஆசைக்கு அகப்படாது ஒழிந்தால் பின்னை அகப்படுத்த பரிகரம் இல்லை
எட்டினோடு இரண்டு என்னும் கயிறு -திருச் சந்த -83-
பக்தியாகிய வலையில் அகப்படுபவன் –
பரம பக்தியாக வளர்க்க அகப்படாமல் இருப்பானே

ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ-
தன் பக்கல் உள்ளது ஒன்றும் தாராதே
இத் தலையில் உள்ளது எல்லாம் தன்னது -என்று இருப்பான் ஒருவன் –

பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
திருப் பீதாம்பரமானது தாழ்ந்து அலைந்து வர
பெருத்துக் கறுத்து அகவாயில் உள்ளது அடங்கலும் நீராலே நிறைந்து இருப்பதொரு மேகக் கன்று போலே –

வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –
அம் மேகமானது ஆகாசப் பரப்பு அடங்கலும் தனக்கு இடமாக்கிக் கொண்டு வருமா போலே யாய்த்து
வீதி எல்லாம் தனக்கு இடமாகப் பண்ணிக் கொண்டு வரும்படி

பஸ்சாத் கவாம் கோப ஸூ தை பரீதோ வேணு ஸ்வா நந்தி தா விசவ சேதா-
சம்பூர்ய வீதிம் ச விலாச மாயாத் -கோபால பால குலதைவதம் ந-கிருஷ்ண கர்ணாம்ருதம் –
ஸ்ரீ .உ. வே .பிரதி வாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச் செய்தது-
ஊர் ஒப்பாக காணும் இடத்தில் அன்றிக்கே –
நமக்கே யான இடத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பதவுரை

தருமம் அறியா–இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை–குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல்–தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம்–திருப் புருவ வட்டங்களாலே
அழகிய–அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை–(அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
உருது கரிது ஆய்–திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய்–திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை–உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற
சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை (விருந்தாவனத்தே கண்டோமே)

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–
நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –
அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-

இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –
நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –
பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்
இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –
நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –

இரக்கமே சிறந்த குணம் என்று மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது –
இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ
அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –

குறும்பனை –
துஷ்டன் -இடையன் –
ராஜ புத்ரர்கள் ஆக வேண்டாவோ –ஆன்ரு சம்சயம் உடையராய் இருக்கும் போது –

தன் கைச் சார்ங்கமதுவே போல்-புருவம் வட்ட மழகிய
புறம்பு ஒப்பு இல்லை
கையிலே வில் இருந்தால் -முகத்தில் இருக்கக் கடவது -கையிலே இருந்ததீ-என்னும் படி இருக்கும்
புருவத்தைக் கண்டால் -முகத்தில் இருக்கக் கடவதோ -வில் கையிலே அன்றோ இருப்பது -என்னும்படியாயிருக்கும்
சர்வதா சாத்ருச்யம் இருக்கிற படி –

பொருத்த மிலியைக் கண்டீரே-
இவ் வழகு உண்டானால் பிரயோஜனம் என் –
உகந்தார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கான்
வெளியிலே புருவ வட்டம் அழகியதாய் இருக்கை ஒழிய உள்ளே அன்பு இல்லாமையாலே பொருத்தம் இலி-என்கிறாள்

கண்டீரே –
அவன் நம்மோடு பொருந்திற்று இலன் என்னா-
நமக்கு அவன் பக்கல் ஆசை அற்று இராதே
தன்னோடு பொருந்தாமை காண வாய்த்து இவள் ஆசைப்படுகிறது –

வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை-
கண்டார் கண் குளிரும் படி -இருண்ட வடிவை உடைத்தாய்
யௌவனத்தால் வந்த புகராடுகையாலே முகம் செய்தாய்
உதய பர்வதத்திலே தோற்றுகிற ஆதித்யனைப் போலே இருக்கிறவனை

முகம் செய்து
தேஜஸ் ஸூ ஒரு முகமாய் இருக்கை –
உருவு கரிதாய்- முகம் செய்தாய்
-இரண்டு விசேஷணமும் கதிருக்கு விசேஷணங்கள்

ததாச நவரம் ப்ராப்ய வ்யதீ பயத ராகவ -ஸ்வ ஏவ பிரபா மேரு முதயே விமலோ ரவி -அயோத்யா -3-36–என்றபடி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக ஒப்புவித்து
சிம்ஹா சனத்திலே எழுந்து அருளி இருக்கிற சமயம் ஆகையாலே
எல்லாரோடும் நப்பிளித்து இன் சொல்லைச் சொல்லி தண்ணளி யோடு இருந்தபடி

இத்தால் —
ரூப சாம்யமும்
மட்டும் இன்றி
சௌலப்ய குண –
சாம்யமும் சொல்லிற்று –
தத்ர கோவிந்த மாஸீ நம் பிரசன்னாதித்ய வர்ச்சசம் –என்கிறபடியே

விருந்தாவனத்தே கண்டோமே —
திருவாய்ப்பாடியிலே மத்யாஹ் நத்தில் ஆதித்யனைப் போலே யாய்த்து இருப்பது –
காண ஒண்ணாத படி கண்ணைக் கூச வைக்குமே
பெண்களுக்கு கண் குளிரக் காட்சி அளிக்கும் ஸ்ரீ பிருந்தா வனத்திலே கண்டோமே

——————————————————————————-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-7-

பதவுரை

பொருத்தம் உடைய நம்பியை–பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை–உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற–நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலே–கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?
அருத்தி–விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால்–நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு–மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல்–ஆகாசம் போல்
விருத்தம் பெரிது ஆய்–பெருங்கூட்டமாய்
வருவானை–எழுந்தருளா நின்ற அப் பெருமானை

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
பொருத்தமிலி -எனபது நாட்டில் பொருந்தார் அளவில் நிற்குமது அன்றோ –
உள்ளுக்கும் வெளிக்கும் பொருத்தம் இல்லாத மற்றவர்களுக்கே பொருந்தும்
உள்ளும் வெளியும் ஒருபடிப் பட்டு இருக்கும் இவனுக்கு அல்ல என்றபடி

நம்பியை
பொருத்தத்திலும் ஒரு குறை சொல்லலாமோ அவனை

புறம் போல் உள்ளும் கரியானை
ஏக ரூபனாய் இருப்பான் ஒருவனாய்த்து
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே அகவாய் ஒருபடியாய் புறவாய் ஒருபடியாய் இருப்பவன் அல்லன் –
உள்ளே இரக்கம் கொண்டு வெளுத்த ஸ்வ பாவனாய் வெளியிலே கறுத்த திரு மேனி அன்றோ பெருமாளுக்கு –

கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
புறம்பும் உள்ளும் இருக்கிறபடி
கலக்கிற சமயத்தில் பிரியேன் பிரியில் தரியேன் என்று சொல்லி வைக்கும் இறே
நெஞ்சாலே பிரிவை நினைத்து இருக்கச் செய்தேயும்
அத்தை இவள் மெய் என்று அத்யவசித்து இருக்கச் செய்தேயும்
இவள் நினைவைத் தப்பிக் கொடு நிற்கும்

அக்கரு மா முகிலை
நினைவைத் தப்பினான் என்று விட ஒண்ணாத படி இருக்குமாய்த்து வடிவு அழகு –

அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
அர்த்தித்வத்தை விளைப்பதே
ஸ்ப்ருஹணீ யமாய் இருந்துள்ள தாரா கணங்களாலே மிகவும் நிறைந்து உள்ள ஆகாசம் போலே –
சேதனர் பிரயோஜன அர்த்தமாக நவக்ரஹங்களையும் அபேஷிக்கையாலே-
அர்த்தித்வத்தை விளைப்பதாய் -என்கிறது

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–
தேசன பதார்த்தங்களினுடைய திரள் போலே யாய்த்து
தன்னோடு ஒத்த தரத்தை உடைய தோழன் மாருடன் நடுவே வரும்படி

விருத்தம் -என்றது பிருந்தம் என்றபடியாய்
மனுஷ்ய சமூஹத்தை
சொன்னபடி –
தன்னேராயிரம் பிள்ளைகள்
-பெரியாழ்வார் -3-1-1-

அன்றியே –
ஆரப் பருகும் வானம் போல் -என்ற பாடமான போது –
மிக்க விருப்பத்தை யுடையராய்க் கொண்டு
மனுஷ்யர்களுடைய திரளாலே அபி நிவிஷ்டமாய்க் கொண்டு
பார்க்கப் படா நின்றுள்ள மேகம் போலே என்றாகிறது –

ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்யமா நோ நராதிப-அயோத்யா -3-30-என்னக் கடவது இறே –

விருந்தாவனத்தே கண்டோமே—
அத் திரளின் நடுவே சோலை பார்ப்பாரைப் போலே காண்கை அன்றிக்கே
ஏகாந்தமாகக் காணப் பெற்றோம் –
பெண்களுக்கு தனி இருப்பான ஸ்ரீ பிருந்தா வனத்திலே கண்டோமே –

—————————————————————————–

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

பதவுரை

வெளிய சங்கு ஒன்று உடையானை–வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய்
பீதகம் ஆடை உடையானை–பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய்
நன்கு அளி உடைய–நன்றாகக் கிருபை யுடையவனாய்
ஆழியானை–திருவாழி யாழ்வானை யுடையவனாய்
திருமாலை–ஸ்ரீய, பதியான கண்ணனை
களி வண்டு–(மது பானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை.
எங்கும்–எப் புறத்திலும்
கலந்தால்–பரம்பினாற்போலே
கமழ் பூங்குழல்கள்–பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை
தடதோள்மேல்-பெரிய திருத் தோள்களின் மேலே
மிளிர நின்று விளையாட–(தாழ்ந்து) விளங்க நின்று விளையாட

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
கடல் போலே ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமான வெண்மையை உடையதாய்
ஒப்பு இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் இருக்கிறவன் –

கையிலோர் சங்குடை மைந் நிறக் கடல் -பெரிய திரு -7-10-2-என்னக் கடவது இறே

திருப் பீதாம்பரமும் சிவப்பாலே
திரு மேனிக்கு பரபாகமாய் இருக்கும் இறே

அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
அக வாயில் தண்ணளி மிக்கு இருக்கும்
அதுக்கு நிபந்தனம் பிராட்டியோட்டை வாசனம்
பாஞ்ச ஜன்யத்தோடு சொல்லில் கண் எச்சில் படும் என்று பிரித்து அனுபவிக்கிறாள் –
கூராழி வெண் சங்கு ஏந்தி -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு சக்கரங்கள் -திருவாய் -7-2-1-என்பது போலே
சேர்த்து சொல்லாமல் பிரித்து அனுபவிக்கிறாள் –

களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மதுபான மத்தமான வண்டுகள் பரம்பினால் போலே பரிமளிதமாய் –
தர்ச நீயமாய் இருக்கிற
திருக் குழல்கள் ஆனவை திருத் தோள்களில் நின்று அலைய –

மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —
திருக் குழலைப் பேணி யிருக்கும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம்
அங்கே
யசோதைப் பிராட்டி கண்ணனுடைய திருக் குழலை வாரிப் பின்னி பூச்சூட்டி முடித்து இருப்பாளே
இங்கே
தானே திருக் குழல்கள் தோள்களிலே வண்டுகள் போலே ஒளி வீசி அலையும் –

——————————————————————————–

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பதவுரை

நாட்டை படை என்று–உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா–பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த–உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி–குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும்–இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை–பரம பாவனனான பெருமானை
தேனுகனும்–தேநுகாஸுரனும்
களிறும்–குவலயாபீட யானையும்
புரளும்–பகாஸுரனும்
உடன் மடிய–உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை–காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை.

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும்
சிறிதிடம் தானே கை தொட்டு சிருஷ்டித்து
இவ் வருகு உண்டானவற்றை சிருஷ்டி என்று சதுர்முகன் தொடக்கமான பிரஜாபதிகளை உண்டாக்கின –
ஸ்ரமஹரமாய் இவ்வருகு கார்ய வர்க்கத்து எல்லாம் காரணமாக போகும் பரப்பை யுடைத்தாய்
செவ்விப் பூவை உடைத்தான திரு வுந்தியிலே ப்ரஹ்மாவுக்கு இருப்பிடத்தை பண்ணிக் கொடுத்து
இது தானே தனக்கு பிரயோஜனமாகக் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கிற –

விமலன் தன்னைக் கண்டீரே
இது ஒழிய பிரயோஜ நாந்த பரதையை கணிசியாமல் வந்த ஸூத்தி –

படை -என்கிற ஏக வசனம்
தனியே
என்கிறது

அயன் தன்னைத் தந்த –பாடமான போது
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்தை அடைய நீ உண்டாக்கு -என்று சதுர்முகனைத் தந்த
என்றதாகப் பெரில் அழகிது -என்று போர விரும்பி
அருளிச் செய்வர் -நம்பிள்ளை –

தத்ர ஸூப்தஸ்ய தே வஸ்ய நாபௌ பத்ம மபூன் மஹத்-
தஸ்மின் பதமே மஹா பாக வேத வேதாங்க பாரக

ப்ரஹ்ம உத்பன்னஸ் ச தே நோகத பிரஜா ஸ்ருஜ மஹா மதே-ஸ்ரீ நரசிம்ஹ புராணம் –

அதன் தன்னைத் தந்த -பாட பேதம் –

சிருஷ்டித்து விட்டோமாகில் மேல் உள்ளது தானே செய்து கொள்ளுகிறன வென்று விடுகை யன்றிக்கே
தானே கை தொட்டு-வன்னியம் அறுத்து கொடுக்கும் படி சொல்கிறது
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை
பையல்கள் கிடந்த தூறுகள் எல்லாம் புக்கு தேடி
தேனுகன்
குவலயா பீடம்
பகா ஸூ ரன் –இவர்களடைய -ஏகோத்யோகத்திலே –உடன் மடிய
நிரஸ்தர் போலே இருக்க வாய்த்து அழியச் செய்தது –

விருந்தாவனத்தே கண்டோமே —
பர்த்தாரம் -என்கிற படியே
அணைக்கைக்கு ஏகாந்தமான இடத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

பதவுரை

பரு தாள் களிற்றுக்கு–பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த–க்ருபை பண்ணின
பரமன் தன்னை–திருமாலை
பாரின் மேல்–இந் நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை–ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல்–பெரியாழ்வார் திரு மகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை
மருந்து ஆம் என்று–(பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே–தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்–அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ்–பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும்–எந்நாளும்
பிரியாது இருப்பார்–பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்

நிகமத்தில்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப்
பருத்து பெரிய காலை உடைத்தாய்
சரீரம் பெருத்ததனையும் பாடாற்ற அரிதாய் இருக்கும் இறே

அப்படிப்பட்ட ஆனையானது-
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
முதலையின் வாயில் அகப்பட்டு இடர்ப்பட –
அதனுடைய  ஆர்த்த த்வனி செவிப்பட்ட அநந்தரம்

ஆயுத ஆபரணங்களை அக்ரமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து அது பட்ட புண் ஆறும் படி
முகம் கொடுத்து ரஷகத்வத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாதபடி இருக்கிறவனை-
(ஆனையின் நெஞ்சு இடம் தீர்த்த –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
ஆ –கத்தினால் அகார ரக்ஷகன் ஆதி மூலமே -நாராயணா மணி வண்ணா நாகணையாய் —
ஆ ஆ
என்று கத்திற்று -ஆர்த்த த்வனி ஒன்றுமே போதுமே –
முதலை முதலை -சொன்னாலும் முதலே ஆதி மூலமே -என்று கூப்பிட்டால் போலவே –
த்வாராய நம–ஆரோகதா -வாகனம் ஓடும் பொழுதே ஓடி -இறக்கையை தொங்கி போனானே – 
பாதம் பாராமசு -வேது கூட  கொடுத்தானே –

பரமன் —
ஆர்த்த ரக்ஷணத்தில் ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
-)
பரமபத ஆபன்நோ மநஸா அசிந்தயத் ஹரிம் ச து நாகவர ஸ்ரீ மான்
நாராயண பராயண
-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–என்னுமா போலே-
(இவனுக்கு வந்த ஆபத்து -எம்பார் -பிரகலாதன் திரௌபதி கஜேந்திரன் மூன்றும் -எம்பார் –
அதனாலே பரமா பாதம் ஆபன்ன)-
இதினுடைய விடாயடைய தனக்கு பூர்வ ஷணத்தில் உண்டான படியும்
அதின் இடரைப் பரிஹரித்தால் போலே தன்னிடரைப் பரிஹரித்த படியும் சொல்லுகிறது –
(கைம்மா துன்பம் கடிந்த பிரானே -அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –
ஐந்து முதலைகள் / சம்சார சாகரம் -/ அநாதி
-)

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும்
திருவாய்ப்பாடியில் அன்றிக்கே ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை –
(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம் முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று
முன்னே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்

பரம பிராப்யமாய் –
நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை –
உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று

பிரியாது என்றும் இருப்பரே–
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்

தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும்
சொல்லுகிறது –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: