ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதினொன்றாவது திருமொழி —

அவதாரிகை –

அவர் இரண்டு வார்த்தை சொல்லார் என்றும் –
அது தான் தப்பிற்று ஆகிலும் தப்பாத ஓன்று உண்டு –
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பானது -நம்மை பலத்தோடு சந்திப்பித்து அல்லது விடாது என்று
அத்யவசித்து இருக்கச் செய்தேயும்-அவன் தான் வந்து உதவக் கண்டிலள் –

அர்ஜூனன் கையில் அம்புகளால் உளைய ஏவுண்டு சர தல்ப்பத்தில் கிடந்த ஸ்ரீ பீஷ்மரைப் போலே
சமாராக பதார்த்தங்களால் போர நோவு பட்டுக் கிடக்கிற தசையைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிறது இன்னது என்று அறிய வேண்டும் -என்று
தாய்மார் -தோழிமார் -அந்ய பரைகளாய்-இருப்பார் அடையப் புகுந்து திரண்டு கிடக்க –

அவர்களைப் பார்த்து
நான் அத்யவசித்து இருந்த படி கண்டி கோளே-
என் தசை இருந்தபடி கண்டி கோளே
இவ்வளவிலே அவன் வந்து உதவின படி கண்டி கோளே
அவன் ஸ்வ பாவம் இருந்தபடி கண்டி கோளே –என்று இன்னாதாய்

பின்னையும் தன் திறத்தில் பெண்களில் சிலருக்கு -ஸ்ரீ ருக்மிணி பிராட்டிக்கு உதவினவன்
நமக்கு உதவாது ஒழிகிறான் அல்லன்

-என்று வருந்தி ஒருபடி தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறாள் –

———————————————————————-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ –
என்று சொல்ல நினைத்து இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ
என்று நினைத்து இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் -நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல
நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —
ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம்
-என்று அன்றோ இருப்பது-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே--11-1-

பதவுரை

ஏந்து இழையீர்!-ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!
யாம் உமக்கு என் கையில் சங்கமும்–நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்
தாம் உகக்கும் தம் கையில் சங்தம் போலாவோ–தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?
தீ முகத்து–க்ரூரமான முகங்களை யுடைய
நாக அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே
சேரும்–பள்ளி கொண்டருளா நின்ற
திரு அரங்கர்–ஸ்ரீரங்கநாதன்
முகத்தை–(என்னுடைய) முகத்தை
நோக்கார்–நோக்குகின்றாரில்லை
ஆ!–ஐயோ!
அம்மனே! அம்மனே!–அந்தோ! அந்தோ!

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இறே

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று
ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே

ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இறே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-
அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது

அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே
அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்

மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று
இருவராய் இருப்பாரை எல்லாம் பிரித்தான் என்று இருந்தார் இறே பெருமாள் –
அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்

அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இறே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இறே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
இவர்களை விடீர்
நம் தசையை அறிவான் ஒருவனாய் வைத்து அவனுக்கு உடம்பு கொடுக்கிறவனைச் சொல்லீர் -ஆதி சேஷனை –
விஸ்லேஷத்தால் வரும் வ்யசனம் அறியான் இத்தனை போக்கி சம்ஸ்லேஷ ரசம் அறியான் இல்லையே –
சம்ஸ்லேஷம் தான் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் பிரிந்தார் படுமது படுமவன் யாய்த்து
இப்படிப் பட்டவன் தான் அவனுக்கு முகம் கொடுக்கக் கடவனோ

என்னை ஒழிய அவன் போகத்தில் அனுபவிக்கப் புக்கால் –
போகம்
-சர்ப்ப சரீரம் -அனுபவம் -போகியான தான் உடம்பு கொடுக்கக் கடவனோ
பெரியாழ்வாரோ பாதியாக விறே நினைத்து இருப்பது

தான் வெறுத்து இருக்க
பிறந்தகத்து உற்றார் புக்ககத்து உற்றாரோடு கை வைத்தால் சொல்லுமா போலே சொல்லுகிறாள்
இறே
தங்கள் தேவரை என்றாள் இறே
பிதுர் நிதேசம் நியமேன க்ருத்வா -சுந்தர -28-84–
இவ்விடத்தில் வார்த்தையை சொல்லிக் கொள்வது –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
நொந்தாரை ஐயோ என்று தண்ணளி பண்ண வேண்டி இருக்க
எதிர் விழிக்க ஒண்ணாத படி நெருப்பை உமிழ்ந்தால் போலே இரா நின்றதாய்த்து
அவர் தமக்கும் இவனோடு ஒரு குருகுல வாசம் பண்ண வேண்டி இருந்தது வெட்டிமைக்கு

அன்றிக்கே
தான் படுக்கையிலே சாயப் புக்கால் விரோதி போக்குகைக்கு
வேறு ஒரு ஆயுதம் தேட வேண்டாத படி இருப்பான் ஒருவன் ஆய்த்து
உகவாதார்க்கு வந்து கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கை
கிட்டினார் உண்டாகில் –வாய்த்த மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் –மூன்றாம் திரு -66-என்று
முடிந்து போம் படி இருக்குமவன் -என்னுதல்

சேரும்
அவர் படி விசஜாதீயமாய் இரா நின்றது
இருவருக்கு படுத்த படுக்கையில் தனியே சாய வல்லவராவதே

திருவரங்கர்
ஆர்த்த ரஷணம் பண்ணப் போந்தவர்
அத்தை மறந்து
படுக்கை வாய்ப்புக் கொண்டாடி -சாய்ந்து கிடந்தது -உறங்கா நின்றார்
இவ்வளவில் பரம பதத்தில் இருந்தார் என்று தான் ஆறி இருக்கிறேனோ –

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–
-கெட்டேன்

முகத்து நோக்காரால்
பிரிந்தால் கழற்ற வேண்டுவது பிரணயித்வம் அன்றோ
கண் நோக்கமும் தவிர வேணுமோ –
கண்ணால் நோக்குவதையும் கருணையையும் விட வேணுமோ

அம்மனே அம்மனே
பிரிந்து ஆற்றாத சமயத்திலே -அனுசந்தித்தால் நா நீர் வரும்படி இருக்குமவர்
புலி சர்ப்பம் என்றாள் போலே நினைக்கவும் பயாவஹமாம் படி யாவதே
இவர் படி இருந்தபடி என்
இவர் ஸ்வ பாவம் போய் வேறுபட்ட படி என்

ப்ராப்த பலோ ஹி பீஷ்ம -சாந்தி -46-139-என்று
முடியும் அளவில் முகத்திலே விழிக்கலாவதும் ஆண்களுக்காய்க் கொள்ளீர் –

———————————————————————-

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

பதவுரை

எழில் உடைய–அழகை யுடைய
அம்மனைமீர்–தாய்மார்களே!
அரங்கத்து–திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற
என் இன் அமுதர்–என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர்–அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய்
வாய் அழகர்–அழகிய திரு வதரத்தை யுடையவராய்
கண் அழகர்–அழகிய திருக் கண்களை யுடையவராய்
கொப்பூமிழ் எழு கமலம் பூ அழகர்–திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய்
எம்மானார்–எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர்
என்னுடைய–என்னுடைய
கழல் வளையை–“கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை
தாமும்–அவர் தாம்
கழல் வளையை ஆக்கினர்–“கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார்.

எழில் உடைய அம்மனை மீர் –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டாரை கேட்கும் –ஏந்திழையீர் -என்றாளே முன் பாசுரத்தில் –
அத்தனை என்றால் போலே எழில் இழந்தார் எழில் இழவாதரைக் கேட்கும் அத்தனை இறே-எழில் உடைய -என்கிறாள்

அம்மனைமீர் –
எழில் உண்டாக்கி காட்ட வேண்டுமவர்களுக்கு இறே -எழில் இழந்தமை சொல்லுகிறது -தனது தசை இருந்தபடி
சௌமித்ரே சோபதே பம்பா -கிஷ்கிந்தா -1-3 என்னுமா போலே

என்னரங்கத்து இன்னமுதர்
என் –
தேவ ஜாதிக்கு பொதுவான அமிர்தம் போலே அன்று
இவளுக்கு ஸ்வம்மான அமிர்தம் ஆய்த்து

அரங்கத்து –
இது ஸ்வர்க்கத்திலே இருக்கும் அமிர்தம் அன்று

இன்னமுதர் –
சரீரத்துக்கு ஸ்தர்யத்தைப் பண்ணிக் கொடுக்கும் அமுதம் அன்று
உயிருக்கு உறுதியைப் பண்ணிக் கொடுக்கும் ஆனந்தாம்ருதம் இது –

குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –
கண் அழகர்
கண்ணாலே பருகும் அமிர்தம்

குழல் அழகர்
அம்புக்கு நேர் நிற்க ஒண்ணாதாப் போலே
நோக்குக்கு நேர் நிற்க ஒண்ணாமே திருக் குழலிலே ஒதுங்கினாள்

வாய் அழகர்
அது -திருக் குழலின் அலையானது -வாய்கரையிலே போய் வீசிற்று –
கரை போலே இருக்கும் வாயிலே -என்றவாறே

கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
அதுக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழப் புக்கவாறே நடுவே வயிறு பிடியாய்த்துக் காணும்
நடுவே வழி பறித்தது திரு நாபீ கமலம்

காமிநீ இறே –
ஸ்வரூப குணங்களிலே ஈடுபடாமல் திரு மேனி அழகிலே ஈடுபடுகிறாள்

எம்மானார் –
ஜிதந்தே -என்னுமா போலே
ஸ்வா பாவிகமான சேஷித்வத்துக்குத் தோற்றுச் சொல்லும் வார்த்தை அல்ல
இப்படி அழகு குவியலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவர் –

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே-
எழில் கொண்டார் என்று அவர்க்கு இத்தை எங்கனே நாம் குற்றமாகச் சொல்லும்படி
பிரணயித்வத்தில் ஏதேனும் தப்ப நின்றாராகில் அன்றோ நம்மால் அவர்க்கு குற்றம் சொல்லலாவது
ஏக கண்டரானவர்க்கு -நம்மோடு ஒத்த மனத்தராய் -நாம் என்ன குற்றம் சொல்லுவது

அவர் பிரிந்தாலும் கழலாத படி திண்ணிய வளை தேடி இட்டோம் ஆனோம் நாம்
அவர் இதினுடைய நாமத்தையே மெய்யாக்கினார்
விஸ்லேஷத்திலும் தொங்கும் வளையை தேடி இட்டோம் ஆனோம் நாம் –
அவர் ஒரு ஷணமும் தொங்காத படி ஆக்கினார்  -என்ற அழகு பாரீர்
இது அங்கும் ஏறப் பற்றது இல்லை
அவர் கையில் வளை கழன்றதாகில் இவள் கையில் வளை தொங்கும் இறே
அவர்க்கும் இச் செல்லாமை உண்டு என்று அறிந்தால் இவர் கையில் வளை கழலாதாயத்து -சலிக்கிற படி
நீ ஒருத்தியே இழந்ததாகச் சொல்லுகிறது என் –
இங்கனே யன்றோ எல்லாரும் இருப்பது -என்ன
என்னை ஒழிய ஆரேனும் வளை இழந்தார் உண்டோ -என்கிறாள் –
என்னுடைய கழல் வளையையே -என்ற ஏவகாரத்தால்

——————————————————————————

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

பதவுரை

பொங்கு–அலை யெறியா நின்றுள்ள
ஓதம்–கடலாலே
சூழ்ந்த–சூழப்பட்ட
புவனியும்–இப் பூ மண்டலமும்
விண் உலகும்–பரம பதமும்
ஆதும் சோராமே–சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற–நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான்–ஸ்வாமியாய்
செங்கோல் உடைய–செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார்–கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என்–என்னுடைய
கோல் வளையால்–கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே–தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ
(அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி.)

உன் பக்கல் உகப்பாலே அன்றோ அவன் உன் கையில் வளை கொண்டது என்ன –
தம்முடைய ஐஸ்வர்யத்திலே ஒரு குறை உண்டாய் –
அது பூரிக்க வேண்டி –
இது ஒழியச் செல்லாமை -இடர்ப்பட்டு -இது பெற்ற பின்னை- அது தீர்ந்தாராய் இருந்தாரோ-
என்னை இடர் விளைக்காகாச் செய்தார் இத்தனை அன்றோ -என்று வெறுக்கிறாள் 

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் –
ஓதம் கிளர்ந்த கடலை வெளியாக உடைய பூமியும்
மரியாதையில் ஒன்றும் குறைந்து இல்லை இறே அங்கு
பூமிக்கு மேலே விஞ்சி வாரா நிற்கச் செய்தேயும்- கரை ஏற மாட்டாதே கிடக்கிறது இறே கடல்

விண்ணுலகும்
ஒரு மரியாதை இல்லாத த்ரிபாத் விபூதியும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற –
உபய விபூதியிலும் ஒரு குறை பிறவாமே நிர்வஹித்துக் கொண்டு போருகிற-
அழிந்த வன்று தன மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்-
உண்டாக்கின வன்று தன் நிலையிலே நிறுத்தியும் -நடத்தியும் –
இவ் விபூதியை நித்ய சம்ஸ்லேஷத்தாலே சத்தியைக் கொடுத்து நோக்கும் அவ் விபூதியை –

வெம்பெருமான்-
என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளா நின்றான் –
சப்தாதிகளாலே களிக்கும் படி பண்ணி வைத்தான் இவ் விபூதியை
தன்னை அனுபவித்துக் களிக்கும் படி பண்ணி வைத்தான் அவ் விபூதியை

நான் இங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே –
அங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே
நடுவே நோவுப்படும்படி பண்ணி வைத்தான் என்னை ஒருத்தியையுமே –

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று
கோயிலிலே வந்து சாய்ந்தவர்

பெரிய பெருமாளோ பின்னை உபய விபூதியையும் ஆள்கிறார் -என்னில்
அல்ல –
அவர் இட்டதோர் ஏவல் ஆள் –
பெரிய பெருமாளும் அல்லர் காண் –
செங்கோல் தானே ஆள்கின்றது –
செங்கோல்
-ஆஜ்ஞை

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே —
தமக்கு ஒரு குறை உண்டாய் –
என் கையில் வளை ஒழியச் செல்லாமை குறைப்பட்டு அவ்விடர் தீருகைக்காக கொண்டாரோ-
எனக்கு கிலேசத்தை விளைக்கைக்காக செய்தார் அத்தனை அன்றோ
கழலாத படி திண்ணியதாக இட்ட வளையையும் கொண்டார் கீழ்ப் பாட்டில் சொன்னபடியே
கோல் வளையையும் கொண்டார் -இங்கே –

——————————————————————————————

அல்லாதார் எல்லாரும் வளையிட்டு இருக்கச் செய்தே
கையில் வளை கொண்டது உன் பக்கலிலே உகப்பாலே அன்றோ –
அது ஹர்ஷ ஹேது அத்தனை அல்லது சோக ஹேதுவாக வற்றோ என்ன
ஓம் -உகப்பு ஒன்றிலேயாய்-மற்றையதில் இன்றிக்கே யாகாதே இருப்பது -என்கிறாள் –
தாம் விரும்பி இருக்கும் வளை -என்று –
அது கொண்டாகிலும் -எங்கள் சத்தையை நோக்கிக் கொண்டு கிடக்க வேண்டும் என்று இருந்தோம்-
அது ஒழிய தம் சத்தை நோக்க அரிதாய் –
அதிலே விருப்பத்தைப் பண்ணி அத்தைக் கொண்டாராய் இருக்குமாகில்

எங்கள் சத்தை கிடக்க வேணும் என்று கண் வட்டத்தே இத் தெருவே யாகிலும் ஒரு கால் போகாரோ –

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத் தெருவே போதாரே—11-4-

பதவுரை

மச்சு–மேல் தளங்களாலே
அணி–அலங்கரிக்கப் பட்ட
மாடம்–மாடங்களையும்
மதிள்–மதிள்களையுமுடைய
அரங்கர்–திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய்
வாமனனார்–(முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய்
பச்சைப் பசுந்தேவர்–பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான்
தாம்–தாம்
பண்டு–முன்பு (மஹாபலி யிடத்தில்)
நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி–உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக)
என்னுடைய–என்னுடைய
பெய் வளை மேல்–(கையில்) இடப்பட்டுள்ள வளை மேல்
இச்சை உடையர் ஏல்–விருப்பமுடையவராகில்
இத் தெருவே–இத் தெரு வழியாக
போதாரே–எழுந்தருள மாட்டாரோ?

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்-பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற-
மச்சுக்களாலே அலங்க்ருதமான மாடங்களையும்-
அரணாகப் போரும்படியான மதிளையும் உடைத்தான கோயிலிலே வந்து
தம் உடைமை பெறுகைக்காக தாம் அர்த்திகளாய்க் கண் வளர்ந்து அருளுகிறவர்-

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்-பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
மாடம் எடுக்கவும் மாளிகைகள் எடுக்கவும் கற்றார் இத்தனை போக்கி
ஒரு காலும் பிரணயிதவத்தில் புதியது கண்டிலர் காணும்

வாமனனார் –
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்த் உத்தர வேதியில் நின்ற
ப்ரஹ்மசாரியை இறே
-பெரியாழ்வார் -1-9-6-இவள் தான் ஆசைப் படுகிறது

பச்சைப் பசும் தேவர் –
அழைத்து அனுபவித்திலர் -என்னா-
விட ஒண்ணாத படியாய் இருக்கை -வடிவு அழகு-
மேகஸ்யாம்
-அயோத்யா -83-8-

கைகேயி வயிற்றில் பிறப்பால் வந்த தாபம் ஆறும் கிடீர் –
அவ் வழகிய வடிவிலே விழிக்கப் பெற்றேன் ஆகில் -என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-

அன்றிக்கே
கலப்பற்ற பரம் தேவதை -என்றுமாம் –
அங்கு வைத்து இங்கு பிறந்த
–திருவாய் -3-5-5-என்னக் கடவது இறே-

தேவர்
த்யோதநாதி குண யோகத்தை உடையவர் –

தாம் பண்டு நீர் ஏற்ற
கொள்வன் நான் மாவலி –திருவாய் -3-8-9-என்று அது பெற்று அன்று தரியாதானாய்-
ஒண்டாரை நீரங்கை தோய நிமிர்ந்திலை -முதல் திரு -79-என்கிறபடியே
உதக பூர்வகமாகக் கொண்ட-

பிச்சைக் குறையாகி –
மகா பலி பக்கல் பெற்றுக் குறை உண்டாய்
அது என் கையால் பெற வேணும் என்னும் இச்சையாலே

என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் –
அம் மண்ணோ பாதி இச்சையும் என் வளையில் உடையராகில் -என்றுமாம்

தாம் இரந்த மண்ணில் வீறும்-
என் கையில் வளையில் வீறும் தாம் சொல்லக் கேட்டு இருக்கும் அத்தனை இறே நாம்
தாம் இரந்த பூமியாருக்கு ஆபரணமாக வற்று -இடப்பட்ட வளையின் மேல் –
ஸ்ரீ யபதியாய் கொடுத்து வளர்ந்த கையை உடையவராய் இருக்கிறவர்
தாம் கழஞ்சு மண் பெறுகைக்கு தம்மை இரப்பாளராக்கி
அதில் பண்ணின விருப்பம் என் பக்கலிலே பண்ணி இருந்தாராகில்
என் கையில் வளையாலே குறை தீர வேணும் என்னும் இச்சை உண்டாகில்
என் கையில் வளையாலே குறை நிரப்ப வேணும் என்னும் இச்சை உண்டாகில்

இத் தெருவே போதாரே—
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே
எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத் தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன் உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்

ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-
கொண்டானை யல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை குறை சொல்லுவார் இல்லை
தனக்குக் கொடுத்தவனுக்கு அபகாரத்தைப் பண்ணுவதே -இவன் தன்னில் க்ருதக்னர் இல்லை -என்னா நிற்பார்கள்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை அன்றோ நெல்லிலே வைத்துத் தெரிக்க வேண்டுவது -என்கிறார் –

என்னது -என்று இருந்த வன்று -அவனுக்கு -என்று கொடுக்க பிராப்தம்
பிரமித்த அன்றாய்க் கொடுக்க பிராப்தி உள்ளது
உணர்த்தி உண்டானவாறே –அதவா கிந்நு சமர்ப்பயாமி தே-என்னா நின்றார்களே இறே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் அவனுடைய ஸ்வரூப குணங்களோ பாதி அங்கே தோற்றக் கடவதாய்த்து இது
அவனுடைய ப்ராப்யத்வத்தில் ஏக தேசமாய் அந்வயிக்கும் அத்தனை
ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக பற்றினால்
அனுபவ சமயத்திலும் ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக விறே அனுபவிப்பது

-யதோபாசனம் பலம் ஆகையாலே

——————————————————————————————

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

பதவுரை

பொல்லா குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந ருபியாய்
பொன் கையில்–அழகிய கையாலே
நீர் ஏற்று–பிக்ஷை பெற்று
எல்லா உலகும்–ஸகல லோகங்களையும்
அளந்து கொண்ட–தன் வசப் படுத்திக் கொண்ட
எம் பெருமான்–ஸ்வாமியாய்
நல்லார்கள் வாழும்–நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற
நளிர் அரங்கம்–ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில்
நாக அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள்
இல்லாதோம்–அகிஞ்சநையான என்னுடைய
கைப் பொருளும்–கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)
எய்துவான் ஒத்து உளன்–கொள்ளை கொள்வான் போலிரா நின்றான்

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால் நீர் ஏற்று
கண் எச்சில் வாராமைக்காக கரி பூசுகிறார் ஆதல் –
அழகிலே விஜாதீயது ஆகையாலே -அழகிது -என்னில் –
நாட்டில் அழகோடு ஒக்க நினைக்கக் கூடும் என்று –பொல்லா -என்கிறார் ஆதல் –
உலகிலே நடையாடாத அழகு என்பதால் –

குறளுருவாய் –
கோடியைக் காணி யாக்கினால் போலே
பெரிய வடிவு அழகை எல்லாம் இவ் வடிவிலே அமைத்து அனுபவிக்கலாம் படி அடக்கின படி –
கோடி த்ரவ்யத்தால் ஒரு மாணிக்கம் வாங்கி மார்பில் இட்டு அனுபவிக்கலாம்படி அன்றோ இந்த மாணி உருவம்

பொற் கையால்நீர் ஏற்று
அழகிய கையில் நீர் ஏற்று
அவனுக்கு பொற் கலத்திலே பிஷை யாய்த்தே –
மகா பலி பெற்ற பாக்யமே -பொற் கலத்தில் பிஷை இடப் பெறுவது என்றவாறு –

எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்-
பர ஸ்வா பஹாரத்துக்கு -அடி இடுகிறபடி –
தொடங்குகிற படி -அடியால் அளந்த படி -சாடு
கைப்பொருளும் எய்துவான் ஒத்தும் உளன் -என்றபடி
ஒன்றைக் கொள்ளப் புக்கான் ஆகில் கொடுத்தவர்களுக்கு பாதாளமே கதியாம் படி இறே கொள்ளுவது
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்தவன் -பெரியாழ்வார் -4-9-7-இறே
தனக்கு இரப்பிட்டவர்களை குழியிலே தள்ளி ஹ்ருஷ்டனாமவன் இறே
இவன் இல்லாதோம் கைப் பொருளும் எய்துவான் போல் இருப்பது வியப்பு அல்லவே

எம்பெருமான் –
அச் செயலாலே என்னை அனந்யார்ஹை ஆக்கினவன்
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் –பெருமாள் திரு -9-4-2-
என்கிற படியே அச் செயலிலே காணும் இவள் ஈடுபட்டது –

நல்லார்கள் வாழும் நளிரரங்கம்
அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-
திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே

அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –

நளிர் அரங்கம்
நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்

நாகணையான்-
அனந்த சாயி
என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே-
இல்லாதோம்
அகப்படுகையிலே பாக்கியம் இல்லாத என் கையில் -என்னுதல்
மகா பலியைப் போலே தம் அபேஷிதம் பூரணமாக கொடுக்கைக்கு இல்லாத -என்னுதல்
தம்மை ஒழிய துணை இல்லாத -என்னுதல்

கைப்பொருளும் –
கைம் முதலும்

எய்துவான் ஒத்து உளனே-
இத்தைக் கைக் கொள்ளுவான் போலே இரா நின்றான் –

நளிரரங்கம்-
இத் தேசத்தில் வர்த்திக்கிறவன் கிடீர் ஸ்திரீ காதுகர் செய்வுத்தைச் செய்கிறான்
ஒரோ பிரதேசங்களிலே ஸூஹ்ருதிகள் அடங்கலும் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும்

நல்லார்கள் –
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனைவரும் மண்டி இருக்கும் தேசம்
அற்ற பற்றார் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே -திருச் சந்த -52-

சாதன அனுஷ்டானம் பண்ணி வர்த்திக்கை அன்றிக்கே
பல அனுபவம் பண்ணி வர்த்திக்கும் தேசமாய்த்து

பிராப்ய வஸ்து ஸூலபமாய் நித்ய சந்நிதி பண்ணுகையாலே அனுபவமாய்ச் செல்லா நிற்கும்
அத் தேசத்தில் வாசத்தை ஆசைப் பட்டாருக்கு அனுபவம் ஒழிய உண்டோ
பரமபதம் வரில் செய்வது என் என்று நடுங்குபவர்கள் போலே காணும் அத் தேசத்தில் வர்த்திக்கிறவர்கள்-
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்னும் படியே-

பட்டரை முதுகிலே புண்ணாலே நொந்து கிடக்கச் செய்தே அருள் பாடிட்டு –
பெருமாள் -வாராய் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –
நாயந்தே -எனக்குச் செய்து தந்து அருளாத தரம் இல்லை –
இங்கே இருக்கச் செய்தேயும் பரமபதம் என் சிறுமுறிப்படி செல்லும் படி பண்ணி அருளிற்று –
ஓலை எழுதி பரமபதம் வழங்கும் படி என்றவாறு –
அதில் ஒரு குறையும் இல்லை –
இங்கே குளிர்ந்த முகத்தையும் -திரு நாமத் தழும்பையும் – முறுவலையும் இழக்க வென்றால்
அடியேன் அஞ்சேனோ
-என்றார் –

ஆளவந்தார் திருமகனார் சொட்டை நம்பி -ஓர் அளவிலே
திருக் கோட்டியூர் நம்பியை நெகிழ ஒரு வார்த்தை சொன்னாராய்-
நீ கடக்க வர்த்தி -என்று அருளிச் செய்ய –
அவரும் படை வீட்டில் ராஜ சேவை பண்ணி திரிந்தாராய்
பின்பு இவருடைய சரம சமயத்திலே இவருடைய அத்யவசாயம் அறிய வேணும் என்று –
நீ நினைத்து கிடக்கிறது என் -என்று கேட்டார்களாய்-
ஆளவந்தார் ஸ்ரீ பாத சம்பந்தம் பரமபத பிராப்தி பண்ணித் தந்து அல்லது விடாது –
அங்கே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் நம் பெருமாள் திரு முக மண்டல போல்
குளிர்ந்து இருந்தது அல்லையாகில் முறிச்சுக் கொண்டு வருவதாக நினைத்து இருந்தேன் -என்றாராம்
ந ச புனராவர்த்ததே-என்கிற மரியாதை இடறிப் போர வேணுமே -என்றாராம் –

நளிர் அரங்கம்
தாப த்ரயம் ஆறுகைக்கு-பரம பதம் தேடித் போக வேண்டாம்

நாகணையான்
பிராப்ய வஸ்துவை அனுபவிக்கும் போது படுக்கையிலே கண்டு அனுபவிககைலாய் இருக்கை —
கிடந்ததோர் கிடக்கை
-திருமாலை -23-

இல்லாதோம் கைப்பொருளும்
வேணுமாகில்-அவன் பக்கல் உள்ளது கொள்ள பிராப்தம்
தன்னது -என்று இருக்கிற என்னை சர்வ ஸ்வா பகாரம் பண்ணுகிறது ஏதுக்காக
தம்மை ஒழிய ஆஸ்ரயம் இல்லாத எங்களுடைய கைப்பொருளும் உண்டு –உடம்பு
அது போலே காணும் சேஷித்தது
இல்லாதோம் -என்னா நிற்கச் செய்தே –கைப்பொருள் -என்பான் என் என்னில் –
அவன் விரும்பி இருக்கும் வழியாலே-

எய்துவான் ஒத்து உளனே –
தம் உடம்பை பிராப்யம் என்று நினைத்து இருப்பார் அது பெறுகைக்கு படும் பாடு அத்தனையும்
தாம் என்னுடம்பை பிராப்யம் என்று அது பெறுகைக்கு படா நின்றார் –
தம் தாமுக்கு இல்லாதது பெற்றால் போலே –

——————————————————————————————

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

பதவுரை

காவிரி நீர்–காவேரியின் தீர்த்தமானது
செய் புரள ஓடும்–பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த
திரு அரங்கம்–திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற
செல்வனார்–ஸ்ரீமானாயும்,
எப் பொருட்கும் நின்று–எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
ஆர்க்கும் எய்தாது–ஒருவர்க்கும் கைப் படாமல்
நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார்–நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள்
முன்னமே–ஏற்கனவே
கைப் பொருள்கள்–கையிலுள்ள பொருள்களை யெல்லாம்
கைக் கொண்டார்–கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)
என் மெய் பொருளும்–எனது சரீரமாகிற வஸ்துவையும்
கொண்டார்–கொள்ளை கொண்டார்

கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –
கைம் முதல் உள்ளவையும் –வளை நிறம் போன்ற அனைத்தையும் -முன்னே கொண்டார்
காவிரிநீர் செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்-
அசேதனமான ஜலமும் கூட ரஷ்ய வர்க்கத்தை ரஷிக்கும் தேசமாய்த்து –
தாம் பரம சேதனர்
தேசம் அது
அத் தேச வாசத்துக்கும் என்னை சர்வ ஸ்வஹரணம் பண்ணுகைக்கும்-தமக்கு என்ன சேர்த்தி உண்டு –

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
ஒரு வேடுவிச்சி குரங்கு இடைச்சி –சபரி சுக்ரீவன் யசோதை -இவர்களுக்கு ஸூலபனாய் நின்று –
இங்கு அந்தராத்மாவாய் நின்ற நிலை சொல்ல வில்லை –
மேலே ஆர்க்கும் எய்தாது என்று இருப்பதால்
அதற்கு பிரதி கோடியாக சௌலப்யம் காட்டி அருளியதையே சொல்லும்

ஆர்க்கும் எய்தாது –
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரே ஆகிலும் -ஸ்வ யத்னத்தால் பிராபிக்க நினைப்பார்க்கு துஷ் ப்ராபராய்-
யாரும் ஓர் நிலையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதைக சமதி கம்யராய் -ஸ்ரீ கீதை -15-15-நின்றார்
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு –பெரியாழ்வார் திருமொழி -4-3-11-என்னக் கடவது இறே
ஆத்மாத்மீயங்கள் இரண்டையும் கொண்டார் –

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார்
இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்தது இறே –
முலைப் பால் உண்ணும் குழந்தை பருவத்திலே -பகவத் சம்பந்தம்
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய –அயோத்யா -40-5-போலே –
பிறக்கிற போதே வளை இழந்து கொண்டே போலே காணும் பிறந்தது –
இத்தனையும் சொல்லத் தகும் படி யோக்ய வஸ்து விறே
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த
அன்வயத்திலே தரித்து வ்யதிரேகத்திலே தரியாமை-இவளுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து –

காவேரி செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்-
சாதனம் சாத்யத்தொடு தோள் தீண்டியாய் வ்யபிசாரியாத தேசத்திலே வர்த்திக்கிறவர்
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் விபலித்தல் –
பிரபல கர்ம பிரதிருத்தமாய் நிற்றல் செய்கை அன்றிக்கே
கைப்புகுந்து வர்த்திக்கிற தேசம்
விளையுமதிலே விளைவிக்குமது வவ்வால் நாற்றியாக வந்து விழா நிற்குமாய்த்து

உபாய ஸ்வீகாரம் பண்ணுகிறவனும் -ஸ்வீகாரமும் கிடக்கச் செய்தே தானே உபாயமாக வேண்டுகிறது –
பலத்தோடு வ்யபிசரியாத ஓன்று உபாயமாக வேண்டுகை இறே
உபாய புத்தி பண்ணுகிற இவன் பக்கல் உபாய பாவம் கிடையாதே
பலத்துக்கு பூர்வ ஷண வர்த்திகளான வற்றுக்கு எல்லாம் உபாய பாவம் இல்லையே
கரண சரீர அந்தர்கதம் ஆனதிலே இறே உபாய பாவம் கிடப்பது
அவ்வூரில் சம்பந்தத்தைச் சொல்லி வாழ்கிறவர்-திருவரங்க செல்வனார்
காவேரி நீர் செய் புரள ஓடுகிறது இத்தனையும் உணர்த்தி நிற்கிறது –

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி
–கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-

லோக நாத புரா பூத்வா
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே

இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்

ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
என்று அருளிச் செய்து அருளினாராம்

வானரேந்தச்ய பிரசாதம் அபி காங்ஷதே-கிஷ்கிந்தா -4-21-
ஏதத் வ்ரதம் மம- ந த்யஜேயம் கதஞ்சன -என்றதுக்கு
இருவரும் சரணாகத பரித்ராணம் பண்ணுகிறார்கள் -என்று பட்டர்
இவர் –ஸூ க்ரீவம் சரணம் கத -என்றார்
அவன் -ராகவம் சரணம் கத -என்றான்
இனி யாரை யார் விட

விபீஷணனை ஸ்வீகரிக்கை யாவது -பெருமாளை அவன் கையிலே காட்டிக் கொடுக்கை என்று இருக்கிறார் அவர்
அவர் முதிர நிற்க நமக்கு உடல் என்று இருக்கிறார் ஆய்த்து இவர்
நாம் முன்பே பிரதிஜ்ஞை பண்ணினோம் -இனி அத்தை தலைக் கட்டும் அத்தனை இறே என்கிறார் இவர்

ஆர்க்கும் எய்தாது
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரியனாய் இருக்கும்
பெண்ணுலாம் சடையினானும் -திருமாலை –44

ஆர்க்கும் எய்தாது
சர்வாந்தராத்மாவாய் நின்று எய்தான் என்றுமாம்

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு
தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை  விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது

திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –

மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

———————————————————————

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-

பதவுரை

திண் ஆர் மதிள் சூழ்–(மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம்–கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார்–ஸ்ரீய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை–(சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை–(திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து–இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற–(இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம்–பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது–மறந்து போய் (இப்போது)
தம்முடைய–தம்முடைய
நன்மைகளே–பெருமைகளையே
எண்ணுவர்–எண்ணா நின்றார்

உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே
பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –

உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே –
கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று
ஸூக்ரீவம் சரணம் கத –என்று
கண்ட காபேயர் கால்களிலே விழுந்து

ஒலி கடலை யூடறுத்து-
ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று
ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –

பெண்ணாக்கை யாப்புண்டு –
பிராட்டி வடிவிலே பத்தராய்-ஒரு பெண் கொடியாலே கட்டுண்டு –
ஆக்கை -சரீரம்-கொடி இரண்டு பொருளும்

தாமுற்றபேதெல்லாம்-
தாம் பட்ட எளிமை எல்லாம் பண்ணாதே

திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–
திருடமாய் ஓங்கி இருப்பதான மதிளாலே சூழப் பட்ட திருவரங்கத் திருப்பதியிலே வாசமாகிற செல்வத்தை உடையவர் —

தைர்யேண ஹிமவா நிவ -பால -1-17-என்னக் கடவ
தமக்கு தைர்யம் இல்லாமையை எண்ணாதே

தம்முடைய நன்மைகளையே எண்ணுவரே-
நம்மைப் பிரிந்தார்- நோன்பு நோற்பது -காமன் காலிலே விழுவது -கூடல் இழைப்பது-
இத்யாதிகளைச் செய்யா நிற்பார் –
என்று தம்முடைய வீறுகளை எண்ணா நிற்பார் –

உண்ணாது –
தேக யாத்ரை தான் பேணினாரோ-
தமக்கு உள்ளது பிறர்க்கு ஆக்குகைக்கு குற்றமோ

ஆக்கை ஆப்புண்டு –
உடம்பாராய்ந்து -அதுக்கு

தாமுற்ற –
வசிஷ்டர் சிஷ்யன் பட்ட படி பார்த்தால் அறிவு நுழையாத பெண் பிறந்தார்க்கு எத்தனை பட வேணும்
தம்பிக்கு அன்றோ சொல்லுவது அபிமதாலாபம் –

தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பாவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115–

எண்ணாதே –
ஊரும் மதிளுமாய் வாழப் புக்கால் பட்டது மறப்பார்களோ

திருவரங்கச் செல்வனார்
ஐஸ்வர்ய செருக்கு இறே

—————————————————————————

தாம் உற்ற பேது எல்லாம் எண்ணாதே தம்முடைய நன்மைகளையே எண்ணுவர் -என்று
நீ இங்கனே இன்னாதாகக் கடவையோ
இழந்தவை மறந்து வருந்தியாகிலும் குண ஜ்ஞானத்தாலே தரித்து இருக்க வேண்டாவோ -என்ன
நானும் மறந்து தரிக்கலாமோ என்று பார்த்து பாரா நின்றேன்
என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை
–என்கிறாள்

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

பதவுரை

பண்டு ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாசி தூர்த்து கிடந்த–பாசி படர்ந்து கிடந்த
பார் மகட்டு–ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம்–அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும்
ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட
தேசு உடைய தேவர்–தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய
திரு அரங்கம் செல்வனார்–ஸ்ரீரங்கநாதன்
பேசி இருப்பனகள்–(முன்பு)சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை
பேர்க்கவும் பேரா–(நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை.

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் –
பூமியானது பிரளயம் கொண்டு நீர்ச் செழும்பு ஏறிக் கிடந்ததாய்த்து -பாசி ஏறிக் கிடந்ததாய்த்து
இது தான் இதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பில் ஏறின அழுக்காய் இருக்கும் இறே –
இது அவளுக்கு பிரகாரம் ஆகையாலே
ரசிகராய் இருப்பார் பிரணயிநிகள் உடம்பு அழுக்கு ஏறி இருக்க தங்கள் உடம்பு பேணிக் குளித்திரார்கள் இறே
அப்படியே ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பு அழுக்கு ஏறின வாறே
தானும் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டான் யாய்த்து

பண்டு ஒரு நாள்
சம்ஸ்லேஷித்த -அன்றும் ஒரு நாள் –
விஸ்லேஷித்த -இன்றும் ஒரு நாளே தான் –

மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை –அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1–என்று சொல்லுமவர்கள்
உடம்பு அளவிலும் அன்றிக்கே தேஹாத்மா அபிமானம் பண்ணி
உடம்பையே விரும்பி இருக்குமவர்கள் உடம்புக்கும் அவ்வருகே யாம்படி ஆக்கினான் –

முமுஷூக்கள் படியும் அளவு அன்றிக்கே
சம்சாரிகளிலும் காட்டிலும் தாழ்வாய் -என்றபடி –
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்க வேண்டாத ஜென்மத்தை யாய்த்து ஏறிட்டுக் கொண்டது –

மானமிலா-
அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –
ஆத்மானம் மானுஷம் மன்யே
-என்றும் சொல்லும் அளவு அன்றிக்கே
தாரக த்ரவ்யங்களும் வேறுபட்டு -அஜ்ஜாதிக்கு அடைத்தவையே – தாரகமுமாய் -ஸ்வ பாவமுமாய்
யாம்படியாக வாய்த்து அவற்றோடு தன்னை சஜாதீயம் ஆக்கின படி

முத்தக் காசை -கோரைக் கிழங்கை -அமுது செய்யும் படி இறே தாழ விட்ட படி –
மாயா மிருகத்தைக் கண்டு -அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து வெருவி ஓடின-விறே –
அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் -நம்மினம் -என்று மருவும்படி யாய்த்து –

மானமிலா –
ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போனபடி

பன்றியாம் தேசுடை தேவர்
ஆஸ்ரீத அர்த்தமாக தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ்ஸூ
தனக்கு வேண்டு உருக் கொண்டு –திருவாய் மொழி -6-4-7-என்கிறபடியே
இச்சா க்ருஹீதமான வடிவாகையாலே எறித்து இருக்கும் இறே ரஷகத்வம் –

திருவரங்கச் செல்வனார்
அவ்வதாரத்துக்கு உதவினோம் இல்லை என்கிற இழவு தீரும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவர்
அடிமை கொள்ளுவதற்க்காக-என்றே பள்ளி கொண்டு அருளுகிறான்

செல்வனார் பேசி இருப்பனகள்-
செல்வர் சொல்லுக்கு அஞ்சாரே
விபூதி விஷயமாகவும்
ஆஸ்ரிதர் விஷயமாகவும்
சொல்லி இருக்குமவை –சரம ஸ்லோகங்கள் -என்னுதல்

அன்றிக்கே
நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே
கூடி இருந்த போது சொன்னவை என்னுதல்

பேர்க்கவும் பேராதே –
இவற்றை மறந்து பிழைக்க வென்று பார்த்தால் –
நெஞ்சில் நின்று பேர்க்கவும் பேருகிறது இல்லை

தாமுற்ற பேதம் எல்லாம் எண்ணாதே
தம்முடைய நன்மைகளையே எண்ணி

அவர் நம்மை மறந்தாலும்
கொடிய வென் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –திருவாய் -6-4-7-என்னும் படியே
நம்மால் மறந்து பிழைக்கப் போருகிறது இல்லை -என்கிறாள் –

————————————————————————————

ஆறு பாட்டுக்களாலே என் உடைமையைக் கைக் கொண்டான் என்றாள்-
பெண்ணாக்கை ஆப்புண்டு தான் படுமவற்றை பாராதே
பிறர் படுமவற்றையே பாரா நின்றான் என்றாள் ஏழாம் பாட்டில்

முந்திய பாட்டில் –
நான் அவனை மறக்க வென்று புக்க இடத்தில் –
எனக்கு அவன் குண சேஷ்டிதங்கள் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றன என்றாள்

ருக்மிணி பிராட்டியுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –
அவளுக்கு உதவின படியை அனுசந்தித்து

இவளுக்கு உதவின இது பெண் பிறந்தார் எல்லாருக்குமாக உதவின படி அன்றோ -என்று
அவ் வழியாலே தரிக்கிறாள்

அர்ஜுனனுக்கு சொன்ன வார்த்தையை நாம் எல்லாம் விஸ்வசித்து இருக்குமா போலே
சர்வ சாதாரணராய் இருப்பார் ஒருவனைக் குறித்து சொன்ன வார்த்தை
அவரோட்டை -அவனோட்டை யார்க்கு எல்லாம் பொது விறே –

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-

பதவுரை

கண்ணாலம் கோடித்து–கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து
கன்னி தன்னை–கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை
கை பிடிப்பான்–பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக
திண் ஆர்ந்து இருந்த–ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன்–சிசுபாலனானவன்
தேசு அழிந்து–அவமானப்பட்டு
அண்ணாந்திருக்க ஆங்கு–ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே
அவளை–அந்த ருக்மிணிப் பிராட்டியை
கை பிடித்த–பாணி க்ரஹணம் செய்தருளினவனாய்
பெண்ணாளன்–பெண் பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான்
பேணும்–விரும்பி எழுந்தருளி யிருக்கிற
ஊர்–திவ்ய தேசத்தினுடைய
பேரும்–திரு நாமமும்
அரங்கம்–திருவரங்கமாம்.

கண்ணாலம் கோடித்து –
முன்பு நெடு நாள் தேடிற்று எல்லாம் –
தோழிப் பொங்கலிலே நேரந்தான் ஆய்த்து-தோழர்களுக்கு வைக்கும் விருந்தில் –

கன்னி தன்னைக் கைபிடிப்பான்
புதுப் பூ மோக்க வேணும் என்னும் ஆசைப் படுமா போலே

திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் –
நாம் ஆத்மாபஹாரத்தை பண்ணி இருக்குமா போலே
சர்வேஸ்வரனுடைய உடைமையை தன்னது என்று புத்தி பண்ணி திருட சித்தனாய் இருந்தான் ஆய்த்து –

திண்ணார்ந்து இருந்து
திண்மை உடையவனாய்

தேசு அழிந்து  திண்ணார்ந்து இருக்கவே –
மணவாளப் பிள்ளையாய் இறுமாந்து பதர்க்கதிர் போலே கவிழ்ந்து பார்க்க மாட்டாதே இருந்த படி
கண்ணன் கை பிடித்த பின்பு நிலைமை மாறிற்றே –

அண்ணாந்து இருக்கவே –
தன தேஜஸ் எல்லாம் அழிந்து -கிருஷ்ணனாலே பரிபூதனாய் -ஒரு திக்கிலும் பார்க்க மாட்டாதே –
இவ்விருப்பிலே இருந்தான் ஆய்த்து –

ஆங்கு அவளைக் கை பிடித்த-
முன்புள்ள சடங்குகள் அவன் செய்தானாகில் புநரபி அனுஷ்டிக்க வேணுமோ -என்று
தான் பாணி க்ரஹணம் பண்ணினான் ஆய்த்து

பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–
அவள் ஒருத்திக்குச் செய்தது அன்றே –
அஜ்ஜாதிக்காகச் செய்த செயல் இறே

பேணுமூர் –
அவன் விரும்பி வர்த்திக்கும் தேசம்

பேரும் அரங்கமே
அவ் ஊரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் –

அவனும் பெண் ஆளன்
ஊரும் அரங்கம்

பெண்களுக்கு எல்லாம் பொது என்றபடி –

——————————————————————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

பதவுரை

செம்மை உடைய–(மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய
திரு அரங்கர்–ஸ்ரீரஙகநாதர்
தாம் பணித்த–(முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த
மெய்ம்மை–ஸத்யமானதும்
பெரு–பெருமை பொருந்தியதுமான
வார்த்தை–சரம ஸ்லோக ரூபமான வார்த்தையை
விட்டு சித்தர்–(என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர்–(குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல்–“தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே–தம்மிடத்திலேயே
பொய் ஆனால்–பொய்யாய்ப் போய் விட்டால்
இனி–அதற்கு மேல்
சாதிப்பார் ஆர்–(அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை)

நிகமத்தில் –
செம்மை யுடைய திருவரங்கர் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –
தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –

ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே –
சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –
ந த்யேஜ்யம்
-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –

தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –
மெய்மை
–சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் –
மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே –
உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை

பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில்
அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ் வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: