ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -பத்தாவது திருமொழி —

அவதாரிகை –

கீழ்த் திருமொழியில் தனது ஜீவனத்தில் உண்டான நசையாலே
புறம்பே சிலவற்றின் காலிலே விழுந்தாள்-
எனக்கோர் சரண் சாற்றுமினே -9-5-என்றாள்-முன்பு மேகங்களின் காலில் விழுந்தாள்
அது கார்யகரமாகப் பெற்றது இல்லை

அவன் தான் வந்து முகம் காட்டுதல் –
அவன் வரவுக்கு ஸூசகமாய் இருப்பன சில உண்டாதல் செய்யப் பெற்று
அத்தாலே தரிக்க வேண்டும்படி ஆற்றாமை கரை புரண்டது

இவளைத் தரிப்பிக்கைக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றிக்கே
அவன் வரவு குறித்துப் போன பருவமும் வந்தது

அப்பருவதுக்கு அடைத்த பதார்த்தங்களும் ஒரு முகம் செய்து –
அவனுடைய திரு மேனிக்கும் திவ்ய அவயவங்களுக்கும்
அவயவ சோபைக்கும் -பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு -எடுப்பும் சாய்ப்புமாய் மேல் விழுந்து நலிய –
அவற்றாலே நலிவு பட்டு ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இன்றிக்கே இருந்தது

இவற்றின் ஒருமைப்பாடு இருந்த படியால் நமக்கு இனி நாம் ஜீவிக்கைக்கு
முதலாக நினைத்து இருப்பது -இரண்டு

1-அவன் -ந த்யஜேயம்–யுத்த -18-3-என்றும் –
ஏதத் வ்ரதம் மம
-யுத்த -18-33-என்றும்
-நமே மோகம் வாசோ பவேத் –பார -உத்த -70-48-என்றும் சொல்லும் வார்த்தைகளும்

2-பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பும் யாய்த்து –

அவன் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு ஜீவிக்க நினைத்து இருந்தாலும்
ஸ்வ தந்த்ரனை இவை கொண்டு வளைக்க ஒண்ணாது இறே
அவன் ஒரோ வ்யக்திகளை உபேஷித்தால்-அதுக்கு நிவாரகர் இல்லை இறே -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே

இனி அது தப்பிற்று ஆகிலும் தப்பாது என்று இருக்கலாவது பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு –
அது தானும் தமக்கு பலிக்க புகா நின்றதோ –
அதுக்குத் தான் விஷய பூதர் நாம் அல்லோமோ -என்று அதிலேயும் அதி சங்கை பண்ணி –
பின்னையும்

அல்லாதவை எல்லாம் தப்பிற்று யாகிலும் பெரியாழ்வார் உடன் உண்டான சம்பந்தம் தப்பாது –
அவன் ஸ்வ தந்த்ரத்தையும் மாற்றி
நம்மையும் அவன் திருவடிகளில் சேர்த்து அல்லது விடாது -என்று

அத்யவசித்து -அத்தாலே தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறது –

அவன் ந த்யேஜ்யம் -என்றாலும் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட
-என்பர் வேணும் இறே

பட்டர் வாணவதரையனை காண எழுந்து அருளி -ஸ்ரீ தேவி மங்க லத்திலே இருக்கச் செய்தே –
அங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் சம்ப்ரமம் கண்டு அருளிச் செய்த வார்த்தை
பெருமாள் இருக்க உம்மிடத்தே ஈடுபடக் காரணம் என்ன என்ற கேட்டான்
எம்பெருமானை பெற அவன் அடியாரே கடவர் —

ஆழ்வான் சம்பந்தத்தாலே -என்னைப் பற்றுகிறார்கள் என்று அருளிச் செய்தாரே –

——————————————————————————————-

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

பதவுரை

கார் கோடல் பூங்காள்!–கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை–உங்களை
போர் கோலம் செய்து–யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல்–என் மேலே
போர விடுத்தவன்–அனுப்பினவானான
கார் கடல் வண்ணன்–கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான்–எங்கே யிருக்கிறான்?
நாம்–(உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி–இனி மேல்
ஆர்க்கு–யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ–முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி–அழகிய
துழாய் தார்க்கு–திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!–ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்தில் கோடல் பூக்காள் பூத்த பூக்களே -என்னுதல்
கார் -பெருமை -பெருத்த கோடல் பூக்காள் – என்னுதல்

அன்றிக்கே –
அவை தான் நாநா வர்ணமாய் இருக்கும் இறே –
அத்தாலே கறுத்த நிறத்தை உடைத்தன என்னுதல் –

கால பரமான போது -அவன் குறித்துப் போன காலத்துக்கு
ஸ்மாரகமாகா நின்றன -என்றாகிறது –

மற்றைப் போது -அவன் வடிவுக்கு ஸ்மாரகமாக நலிகிற படியாகிறது

கார்க்கோடல் பூக்காள் –போர விடுத்து
முதலிலே தன்னோடு கலந்து பிரியக் கடவனாக நினைத்த அளவிலே தன்னை நலியக் கடவதாக-
இப் பதார்த்தங்களை அவன் அடியிலே சிருஷ்டித்து விட்டான் என்று இருக்கிறாள்

ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் -என்று இருக்கை தவிர்ந்து –
தன்னை நலிகைக்கு உடலாக உண்டாக்கினான் என்று இருக்கிறாள்

ஒரு விஷயத்தை பிரிந்து நோவு படுவார்க்கு இத்தனை பதார்த்தங்கள் பகையாவதே –
பிராட்டியை பிரிந்த அநந்தரம்-ராஷச ஜாதியாக பகையானால் போலே
மூல பலத்தின் அன்று ராஷச ஜாதியாக சூழப் போந்தால் போலே
பார்த்த பார்த்த இடம் எங்கும் இவையேயாய்க் கிடவா நின்றன

விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்ற இடத்தில்
வாயு ப்ரேரிதமாக கொண்டாகிலும் சஞ்சரிக்கைக்கு யோக்யதை யுண்டு இறே மேகங்களுக்கு –
அங்கன் கால் வாங்க மாட்டாதே நிற்கிறவற்றுக்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே கலங்கின படியாலே

பூக்காள்
உங்களுடைய ஸ்வாபாவிகமான மென்மையைப் பொகட்டு
ஓர் அபலையை நலிகைக்கு இவ் வன்மையை ஏறிட்டுக் கொண்டு வருவதே –

கார்க் கடல் வண்ணன் –
கறுத்த நிறத்தை யுதைத்தான கடல் போன்ற நிறத்தை யுடையவன்
இதர பதார்த்தங்களினுடைய சத்பாவம் ஸ்வ இச்சாதீனமாய் இருக்குமா போலே
இவ் விக்ரஹ பரிக்ரஹமும் ஸ்வ இச்சாதீனமாய் இருக்கும் இறே
இவ் விக்ரஹத்தை ஏறிட்டுக் கொண்டதும் தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்

எம் மேல் –
கலக்கையும் கூட மிகையாம்படி –
ஆஸ்ரயமும் கூட இன்றிக்கே இருக்கிற என் மேல்

உம்மைப்-
நலிகைக்கு ஏகாந்தமான நிறத்தை ஏறிட்டுக் கொண்டு வந்து நிற்கிற உங்களை
விரஹத்தால் முன்பு தொட்டார் மேல் தோஷமாம் படி சென்று அற்று இருக்கிற என் மேல் –

உம்மை
மென்மை இன்றிக்கே வன்மை உடையாரையும் முடிக்க வல்ல உங்களை
நிர்ஜீவ சரீரத்திலேயும் உயிரைக் கொடுத்து நலிய வல்லவை என்று இருக்கிறாள் –
அவன் நிறத்தைக் காட்டி உயிரை உண்டு பண்ணி நலியவற்றவை -என்றபடி –

போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இறே இருக்கிறாள்

அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது

செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இறே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-

போர விடுத்து அவன்
இவற்றுக்கு த்வரை போராது என்று பார்த்து -நீங்கள் போங்கோள் -என்று அவன் தானே பின்னே நின்று
த்வரிப்பிக்கிறான் என்று இறே இருக்கிறாள்

ராஜாக்கள் எதிரிகள் அரண் அழியா விட்டால் தாங்கள் முகம் தோற்றாமே நின்று
தங்களுக்கு அசாதாரண சிஹ்னமான சத்ர சாமராதிகளை போக விடுமா போலே
இவற்றுக்குத் தன் நிறத்தைக் கொடுத்து போக விட்டான் அவன் என்று இறே இருக்கிறாள்
நம்மை நலிகைக்கு உடலாக இவற்றை உண்டாக்கினான் அன்றாகில் நம் கண் வட்டம் ஒழிய நிறுத்தவுமாமே-

எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

தன்னை முடிக்க நிற்கிற இவற்றை -எங்குற்றான் -என்கிறது என் என்னில்
இவை முடிக்கை தவிராதாகில் அவ்வடிவை ஒரு கால் கண்டு முடியலாம் என்னும் அத்தாலே
நம் அபிமதமும் பெற்றோமாகில் பெறுகிறோம்
அவன் நினைவும் தலைக் கட்டிற்று ஆகிறது
இவளுக்கு அபிமதம் அவன் வடிவைக் காண்கை
அவனுக்கு அபிமதம் இவளை முடிக்கை

எங்குற்றான் என்றால் இங்குற்றான் என்று அவற்றுக்கு
மறு மாற்றம் சொல்ல வேண்டும்படி இறே தன் அவஸ்தை தான்

ஷிப்ரம் ராமாய சம்சத்வம் –ஆரண்ய -49-32-

அவற்றுக்கு –கோதாவரிக்கு -அபிமானியான தேவதா முகத்தாலே யாகிலும்
வார்த்தை சொல்லுகைக்கு யோக்யதை உண்டு இறே அங்கு
அதுவும் இல்லை இறே இவற்றுக்கு
இவை ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிலள்
இவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என்று அறியாதே
அவன் வாராமையாலே இறே இவை பேசாதே நிற்கிறது -என்று பார்த்து

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –
என்கிறாள் –
அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து
இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்
அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–
அவனும் அவன் விபூதியும் ஒரு மிடறானால்-நானும் என் விபூதியும் ஒரு மிடறாகப் பெற்றேனோ
அதுவும் -அவன் திருமேனியில் சாத்தின திருத் துழாய் மாலை என்றவாறே உடை குலைப் படா நின்றது

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்னக் கடவது இறே
அதுவும் இப்போது பந்தகமாய் விட்டது அத்தனை –
நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் –
நெஞ்சு எனக்கு இல்லாவிட்டால் நானோ தான் எனக்கு உளனாய் இருக்கிறேன்
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தேக பரிக்ரஹத்துக்கு அடியான கர்மம் பண்ணினேன் நானே அன்றோ –

அந்தோ –
அவன் இல்லை யாய்த்து
அவன் விபூதி இல்லை யாய்த்து
தான் இல்லை யாய்த்து -ஸ்த்ரீத்வ ஸ்வரூபம் இல்லையே
தன் விபூதி இல்லை யாய்த்து
இத் தசை கண்டு இரங்கி கிருபை பண்ணுகைக்கு புறம்பு ஒருவரும் இல்லை யாய்த்து
தன் தசைக்கு தானே இரங்கி ஐயோ என்கிறாள் –

———————————————————————————————

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

பதவுரை

மேல் தோன்றி பூக்காள்–உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி–மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து
அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர்–வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும்–வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல்–திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது–தஹியாமல்
எம்மை–என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து–இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே–கொண்டு சேர்க்கவல்லீர்களோ?

திருஷ்டி விஷம் போலே கோடல் பூக்கள் பாதகமாய்ப் புக்கவாறே –
அவற்றுக்கு இறாய்த்து கண்ணை மேலே வைத்தாள்-
அங்கே மேல் தோன்றிப் பூக்களாகக் கிடந்தது –
அவற்றை நோக்கி
மேல் தோன்றி பூக்காள் -என்கிறாள் –
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோம் -என்று அதுக்கு ஒரு பேரும் பெற்று நீங்கள் மேலே புக்கு நிற்பதே –
பஹூஸ்யாம் -என்றும் –
அவன் அநேகங்களை சிருஷ்டிக்கும் என்று கேட்டிருந்தோம்
நாட்டில் கோடல் பூக்களும் இல்லையோ-
தேவாதி பேதங்கள் உண்டாகும் படி அன்றோ சிருஷ்டிப்பது

மேல் உலகங்களின் மீது போய்-
அண்டங்களையும் ஆவரண சப்தகத்தையும் கடந்து மேலே போய்-
அவ்யக்தம்  அஷரம் தம –
என்றால் போலே
சொல்லுகிறவற்றுக்கும் மேலே போய் –

மேல் தோன்றும் சோதி –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்று
சொல்லும்படியாய் இருக்கிற பரம பதத்திலே
தமஸ பரமோ தாத -யுத்த -114-15-என்றும்
தமஸ பரஸ்தாத் -என்கிறபடியே –

வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது
வேதைக -சமதிகம்யராய் இருக்கிறவருடைய
வலத் திருக்கையின் மேல் தோன்றுகிற திரு வாழியின் வெவ்விய சுடர் போல் சுடாதே

இவ்வருகு உண்டான ஆதித்யாதி களுடைய தேஜசைக் காட்டிலும் இந்த்ராதிகளுடைய தேஜஸ்ஸூ விஞ்சி இருக்கும்
அதில் காட்டில் ப்ரஹ்மாதி களுடைய தேஜஸ்ஸூ விஞ்சி இருக்கும்
அதில் காரணத்வ பிரயுக்தமாய் வருவதாகையாலே மூல பிரக்ருதியினுடைய தேஜஸ்ஸூ விஞ்சி இருக்கும்
அது தான் தமஸ்ஸூ என்னும் படி பரமபதத்தில் புகர் அதுக்கு பிரகாசத்தைப் பண்ணும்
திவ்ய மங்கள விக்ரஹம் அதுக்கு பிரகாசத்தைப் பண்ணும்
அதுக்கு மேலே இறே திரு வாழி ஆழ்வான் உடைய தேஜஸ் ஸூ

எம்மை ஆழியின் வெஞ்சுடர் போல் சுடாது
மஹா நசாதிகளிலே-மடப்பள்ளி போன்ற இடங்களில்  – அக்னிக்கும் தூமத்துக்கும் சாஹசர்யத்தைக் கண்டு
பின்னை இறே பர்வதத்தில் அநுமிப்பது
அப்படியே இங்கு உள்ளவற்றுக்கும் அவ் விபூதியில் உள்ளவற்றை திருஷ்டாந்தமாகச் சொல்லும் படி யாய்த்து
அவ்விடம் ஆண்டாளுக்கு விதேயமான படி
இவ் விடம் மேடாய் அவ்விடம் பள்ளமாய்த் தோற்றின படி –
பிரசித்தத்திலே இறே வ்யாப்தி க்ரஹிப்பது-

அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று முற்பட நித்ய விபூதியைச் சொல்லி பின்னை –
இலனது என்று
மூன்றாம் பாட்டிலே இ றே லீலா விபூதியை அனுசந்தானம் பண்ணிற்று

சுடாது எம்மை
அவன் உகவாதாரை இறே முடிப்பது –
நீ உகந்தாரை முடியா நின்றாய்
அருளார் திருச்சக்கரம் -திருவிருத்தம் –33- என்றும் –
அருளாழி
-திருவாய் -1-4-6- என்றும் இறே உகப்பாருக்கு அருளைப் பொழிவது-

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –
1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —
கைவல்ய கோஷ்டியில் –

மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார்
அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே
சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம்
என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –

———————————————————————————————

மேலில் கண்ணை மாற்றி  பக்கத்திலே கண்ணை வைத்தாள் –
அங்கே செடியிலே கோவை படர்ந்து பழுத்துக் கிடந்தது -அத்தைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்
கார்க்கோடல் நிறத்துக்கு ஸ்மாரகமாய் நலிந்தது —
மேல் தோன்றி திரு வாழிக்கு ஸ்மாரகமாய் நலிந்தது –
கோவைப் பழம் திரு அதரத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறது ஆய்த்து
(தொண்டை அம் கனி -கோவைக் கனி -போன்ற திரு அதரம் -கோவைச் செவ்வாய் -)

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–10-3-

பதவுரை

கோவை மாணாட்டி–அம்மா! கோவைக் கொடியே!
நீ–நீ
உன்–உன்னுடைய
கொழுங்கனி கொண்டு–அழகிய பழங்களாலே
எம்மை–என்னுடைய
ஆவி–உயிரை
தொலைவியேல்–போக்கலாகாது.
வாய் அழகர் தம்மை–அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே
அஞ்சுதும்–பயப்படா நின்றேன்!
பாவியேன்–பாவியானா நான்
தோன்றி–பிறந்த பின்பு
நாணிலியேனுக்கு–லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும்–சேஷ சாயியான பெருமாளுக்கும்
தம் பாம்பு போல்–தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல
நாவும் இரண்டு உள ஆயிற்று–இரண்டு நாக்குகள் உண்டாயின.

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
கொடியாகையாலே -இவளும் வேயர் தங்கள் குலக்கொடி அன்றோ –
சா பத்ன்யத்தாலே நலிந்தால் போலே இரா நின்றது

மணாட்டி
எம்பெருமானை இட்டு சொல்கிறாள்

அன்றிக்கே
மணம் உடைமையாலும்
என்றுமாம்

அது இங்கு உண்டோ பின்னை என்னில் -உபமேயத்தைப் பற்றச் சொல்கிறது
உபமேயமான திருப்பவளச் செவ்வாயுக்கு மணம் உண்டே
சர்வ கந்த -என்கிற வஸ்துவை இறே உபமேயமாகச் சொல்கிறது
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ என்று கேட்கவும் செய்தாளே

நீ –
கோடலும் –மேல் தோன்றியும்- அமையாதோ
ஒரு தூற்றிலே -புதரிலே -கிடந்தது – நலிகைக்கு என்று பழுப்பதே

உன்
பெண்ணான உனக்கு முன்னம் நலிவு இல்லையே
தன்னைத் தானே நலிந்து கொள்ள வேணும் என்னுமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தான் அறிந்ததாகில் பிறருக்கு நலிவு பண்ணக் கடவோம் அல்லோம் -என்று கண் வட்டத்தின் நின்றும்
கடக்க நிற்க வேண்டாவோ என்று இருக்கிறாள்

கொழும் கனி கொண்டு –
அதுக்கு செவ்வி உண்டாய் இருக்கும் இறே

எம்மை
இப் பாரிப்புக்கு எல்லாம் இங்கே விஷயம் உண்டோ –

ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
தோல் புரையே நலிந்து விடுகை அன்றிக்கே உயிர் நிலையிலே நலியா நின்றது
கோடலும் மேல் தோன்றியும் அலைத்த  ஆவியை நீ என் செய்யத் தொலைக்கிறாய்

தொலைவியேல்-என்கிறதுக்கு –
நான் தொலைகிறது உண்டோ என்ன -அதுக்கு வாயில்லையே -அசேதனத்வாத் –என்னுதல்
பாதகத்வம் உண்டாகையாலே -என்னுதல்
அது அவனுடைய பவளச் செவ்வாயாகவே நினைத்து கூறுகிறாள் –
வாய் அழகர் தம்மை அஞ்சுதும்-

கலக்கப் புக்காலும் அஞ்சி நான் கண் செம்பளித்த படியே கான் இருப்பது
முன்பு அஞ்சிக் காண் அதுக்கு இருப்பது -அஞ்சுதும் -என்றால் நீ அஞ்ச வேண்டா காண் –
மாஸூ ச
-என்று அஞ்சாதே என்று
என் கண் வட்டத்தின் நின்றும் கடக்க நிற்க விறே அடுப்பது -அது செய்தது இல்லை

பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–
இத்தைக் கால் கட்டும்படி அவன் ஸ்வபாவம் அந்யதாகரித்தது-என்னைத் தோற்றிக் கிடீர்
பெரியாழ்வாரும் சர்வேஸ்வரனுமாய் ரஹசயங்கள் உண்டாய் போருகிற காலங்களில் இவை எல்லாம் இல்லை கிடீர்-
அந்த பரிமாற்றம் குலைந்தது நான் பிறந்தததால் அன்றோ என்றபடி –

பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–
பெரியாழ்வார் காலத்தில் இரண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாதாய்த்து அவனுக்கு –
அதாவது இரண்டு வார்த்தை சொல்லில் அவரைக் கிடையாதே –
ஆகையால் ஒரு வார்த்தையே யாய்த்து அவர் காலத்தில் உள்ளது

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று-
(துரியோதனன் விஷயமாக -மா முனிகள் வியாக்யானம் -அங்கு -2-6-4–
எம்பெருமான் விஷயமாகவும் சொல்லலாம் என்பதே பெரியவாச்சான் பிள்ளை அபிப்ராயம் )
ஐயரை இடுவித்து கவி பாடுவித்திக் கொண்டது அத்தனை இறே
நடுவே -ஜீவிக்கிலும் ஜீவிக்கிறாள் -முடியிலும் முடிகிறாள் நாம் வேண்டிற்றுச் சொன்னால் -என்று
இருக்கலாவது எனக்கு இறே

பாவியேன் தோன்றி –
சங்கே மத்பாக்யே சங்ஷயாத்-சுந்தர -26-11–என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் -என்றும் –
மத்பாபமேவ
-என்னுமா போலே சொல்லுகிறாள்

பாம்பணையார்க்கும்-
இவனும் இரண்டு வார்த்தை சொல்லுவானாய்ச் சொன்னான் அல்லன் –
நடுவே பள்ளித் தோழமை பலித்தது-
ஒன்றாக படித்த நட்பு -படுக்கை நட்பு
அதுவே அன்றிக்கே ஒதிற்றும் -வாசித்ததும் பேசியதும் -அத்யயனம் பண்ணிற்றும் –
அவதாரங்களில் –ஒரு கிடையிலே இறே
(ஓதிற்றும் ஒரு கிடையிலே இறே
என்றது   சாடு –
படுக்கை வார்த்தை நம்பத் தக்கது இல்லை என்றபடி ))

பாம்பணையார்க்கும் –
தம் உடம்போடு அணைய வேணும் என்று ஆசைப் பட்டாருக்கு
உடம்பு கொடுத்து போருமவர்க்கு

தம் பாம்பு போலே –
அவனோடு உண்டான ரோஷம் திரு வனந்த வாழ்வான் அளவும் செல்ல அசலிட்டு –
தனது படுக்கையாய் இருக்கச் செய்தேயும் தம் பாம்பு என்று
அவனோடு சேர்த்து சொல்கிறாள் –
இப்போகத்தாலே -பாம்பின் உடம்பு இன்பம் -இறே நம்மை மறந்து தரிக்க வல்லனாய்த்து என்னுமத்தாலே
பிறரைக் கெடுக்க நினைத்தால் சேர்த்து சொல்லுவது அவனோடு யாய்த்து –

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடும் வாய்ந்த பெறும் சுற்றம் -7-10–என்று
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை அவனோடு சேர்த்து சொன்னால் போலே -இவனையும் அவனோடு சேர்த்து சொல்கிறாள்
தன்னோடு உறவு அறுக்கை இறே அவனைக் கெடுக்கையாவது -அவன் ஸ்வரூபத்தை அழிக்கிறாள்-

படுக்கை தன்னதே –
தனக்கு விஷயமாக விட்டத்தையும் -படுக்கைப் பற்று -ஸ்த்ரீ தனம் -என்று இறே சொல்லுவது –
பெரியாழ்வாரை அவனோடு சேர்த்து
தங்கள் தேவர் -சொன்னால் போலே இறே இவனையும் அவனோடு சேர்த்து சொல்லுகையாவது-

நாவும் இரண்டு உளவாய்த்து-
இரண்டு நாவுண்டால் -பிறக்கும் கார்யம் பிறக்கையாலே-நாவும் இரண்டுளவாய்த்து -என்கிறாள்
இரண்டு நா உடையார்க்கு அல்லது இரண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாது என்று இருக்கிறாள்

ராமோ த்விர் நாபிபாஷதே -என்றும்
ந மே மோகம் வசோ பவேத் -என்றவை எல்லாம் தமக்கு அன்றாய் விட்டது –
நின்னைப் பிரியேன் பிரியில் ஆற்றேன்-என்று சொல்லி வைத்து
பிரிந்தது தனக்கு இறே
இப்போதும் அவை எல்லாம் ஒரு வார்த்தையாய் இரா நின்றது இறே நாட்டார்க்கு

நாணிலே யேனுக்கே-
அவன் ஸ்வரூபம் அந்யதாபிவிக்கும் காட்டில் என் ஸ்வரூபம் அந்யதாபவிக்க வேணுமோ –
அவன் ரஷகத்வத்தில் சிறிதும் குறைய நிற்கும் காட்டில் –
அத்தை மறைக்கை அன்றிக்கே ஜீவிக்கைக்கு உறுப்பாக
அவன் குண ஹானியை விளைக்கும் படி லஜ்ஜா ஸூந்யையாக வேணுமோ நான்

தம்மைப் பேணாதே அத்தலைக்கு வரும் அவத்யத்தை பரிஹரித்து அவனைப் பேணும்
பெரியாழ்வார் வயிற்றில்
பிறப்புக்கும் இதுக்கும் என்ன சேர்த்தி உண்டு –

———————————————————————————–

கோவைப் பழமானது திரு வதரத்துக்கு ஸ்மாரகமாய் பாதகமாய் புக்கவாறே
அதுக்கு அவ்வருகாக கண்ணை வைத்தாள் –
அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக் கிடந்தது
உள்ளே வெண் பல் இலகு சுடரிலகு -திருவாய் -8-8-1–என்னக் கடவது இறே
அது ஸ்மிதத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி சொல்லுகிறது

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-

பதவுரை

முல்லைப் பிராட்டி!–அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!–கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ–நீ
உன் முறுவல்கள் கொண்டு–(எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை–என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல்–வருத்தத்தை உண்டாக்க வேண்டா,
உன் அடைக்கலம்-(இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்.
கொல்லை அரக்கியை–வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட–மூக்கறுத்துத் துரத்தின
குமரனார்–சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும்–வார்த்தையே
பொய் ஆனால்–பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று–நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ.

முல்லைப் பிராட்டி –
வழி பறிக்குமவனைக் கண்டால் ஸ்துதித்து பிரான் என்னுமா போலே —
ஒரு கோவையிலே -கோவைப் பழத்திலே –கொள்ளையர் கூட்டத்திலே–
கோடல் பூ மேல் தோன்றி பூ -கோவைக் கொடி -கூட்டம் –

அகப்பட்டு தப்பி உள்ளே புகுந்தாரையும் நலியக் கடவையோ

அக் கோவையைத் தப்பினோம் இறே என்று இருந்தோம்
திரியவும் நீ புகுந்து நலியா நிற்பதே
நொந்தாரை ஐயோ என்கை அன்றிக்கே
நலிகைக்கு ஒரு கொடியாய் இருந்தாய் நீயும் –

நீ யுன் முறுவல்கள் கொண்டு
உன் பூவில் விகாசத்தைக் கொண்டு

எம்மை
முன்பே முடிந்தாரை முடிக்கத் தேடுவார்களோ –

அல்லல் விளைவியேல் –
திரு அதரத்துக்கு உள்ளான திரு முத்து நிரைக்கு ஸ்மாரகமாய் –
வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் விலகு
-திருவாய் -8-8-1-என்றபடி
இது நலிகிற நலிவு பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே –அல்லல் -என்கிறாள் யாய்த்து –
அவனுடைய ஸ்மிதத்தை ஸ்மரிப்பித்து என்னைத் தடுமாறப் பண்ணாதே கொள் –

ஆழி நங்காய் –
மேலே கடலை சொல்லுகிறதொரு பாட்டு -10-9-உண்டாகையாலே
முல்லை தன்னையே சொல்லுகிறது –

காம்பீர்யத்தாலும் நிறைவுடைமையாலும் இரந்தார் கார்யம் செய்ய வேண்டாவோ –
வட்டமாகப் பூத்த பூக்களும் மதுவுமாய் சந்நிவேசம் தானே பிரியமாய் இருக்கும் இறே –

உன் அடைக்கலம்
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா -யுத்த -18-28-என்னக் கடவது இறே
சாத்ரவம் மாறாதே செல்லச் செய்தேயும் -சரணம் -என்கிற உக்தி உண்டாய் –
அது செவிப்பட்டால் சேதன அசேதன விபாகம் அற
இரங்க வேண்டி இருக்கும் தன வாசனையாலே சொல்லுகிறாள் –

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —
வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இறே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க –
அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –
இவளே இறே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –

மூக்கரிந்த –
தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ஸலேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை
அழியச் செய்யுமவர் கிடீர்

குமரனார் –
நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் –
தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள்
அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே –
தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக
நினைத்து இருந்தாள் யாய்த்து —
இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –

சொல்லும் பொய்யானால் –
ஆஸீத சம்ஸ்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்
இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-
தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –
அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள்
அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –

நானும் பிறந்தமை பொய்யன்றே-
இது வ்யபிசரித்தாலும் வ்ய்பிசரியாது என்று நாம் நினைத்து இருந்தது பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பே இறே
அதுக்கும் இலக்கு நாம் ஆன பின்பு இனி அது தான் நமக்கு கார்யகரமாய்ப் புகா நின்றதோ
பெரியாழ்வாரோட்டை சம்பந்தம் பகவல் லாபத்தோடு நம்மை சந்திப்பித்து விடும் என்று இருந்தோம்
இனி அதுவும் தப்பிற்று இறே

பொய்யன்றே -என்றது பொய்யாம் இறே -என்கை
பூதார்த்ததோடு-பவிஷ்யத்ரத்ததோடு வாசி என் இப்போது கார்ய கரம் ஆகா விட்டால்

———————————————————————————————————-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

பதவுரை

பாடும்–பாடுகின்ற
குயில்காள்!–குயில்களே!
ஈடு-(கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?–என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர்–விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு–என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால்–ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின்–(நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும்–ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன்–பெரிய திருவடியை
கொடி உடையார்–த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து–க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில்–(இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி–(அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள்–உங்களது பாட்டுக்களை
கேட்டுமே–கேட்போம்.

முல்லைப் பூவானது கண்ணுக்கு இலக்காய் நின்று பாதகமாய் புக்கவாறே அங்கு நின்றும் முகத்தை மாற வைத்து கண்ணைப் புதைத்தாள்-
செவி புதைக்க அறியாமையாலே அகப்பட்டாள்
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்-
சம்ஸ்லேஷ சமயத்திலும் உங்கள் பாட்டுக் கேட்டு அறிவுதோம் இறே-
இன்று தொடங்கி பாடுகிறி கோள் அன்றே
என்றும் ஒக்கப் பாடிப் போரா நிற்கச் செய்தே -செவி வழியே நெருப்பைச் சொரிந்தால் போலே –
இற்றைக்கு உதவ இது ஒரு பாட்டை எங்கே தேடினி கோள் –

பாடும் குயில்காள் –
ந து ராஷச சேஷ்டித-ஆரண்ய -17-24–என்கைக்கு ஒருவரையும் பெற்றிலோமீ –

ஈது என்ன பாடல்
இக் காலத்திலே பாடுவதே
இப் பாட்டைப் பாடுவதே
இரண்டருகும் நெருப்புப் பற்றி எரியா நிற்கச் செய்து நடுவே இருந்து சாந்து பூசுவாரைப் போலே இருந்து
பாட்டுக் கேட்கும் தசையோ என் தசை
நெருப்பு கிடந்த இடத்தே சுடுமா போலே அவற்றினுடைய ஆஸ்ரயத்தையும் அழிக்கும் என்று இருக்கிறாள்
கெடுவிகாள் உங்களுக்கு செவி இல்லையோ –

நல்வேங்கட நாடர்-
ஆற்றுப் பெருக்கில் முன்னே சினை யாறு படுமா போலே
அவன் வரவுக்கு உறுப்பான நல குறிகள் உண்டாய் இரா நின்றன-
அது பலித்தால் வந்து பாடப் பாரி கோள்-

நல்வேங்கட நாடர்-
ஆசீதருக்கு அருமைப் பட வேண்டாத படி வந்து நிற்கிறவர் யாய்த்து-
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார்-
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போலே இருந்தது பயணம் –

நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்–
உங்கள் பாட்டுக் கேட்கைக்கு செவி உண்டானால் வந்து பாடுங்கோள்-
இப்போது இவள் கரணங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்க மாட்டாதே இறே கிடக்கிறது
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு -பெரிய திருமொழி -7-5-9–என்கிறபடியே

வந்து பாடுமின்
இபொழுது உங்கள் சந்நிதி எனக்கு அசஹ்யமாய் இரா நின்றது –
போங்கோள்-
என்றபடி
உங்கள் சந்நிதி அபேஷிதமாய் இருப்பதும் ஒரு போது உண்டு இறே –
அப்போது வந்து பாடுங்கோள் –

ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே —
தாம் வருவதற்கு முன்னே -தம் வரவுக்கு ஸூ சகமான பரிகரத்தை உடையவர் –
அலாபத்தாலே துடிக்கைக்கு என்று ஒரு விபூதியைக் கண்டு விட்டால் போலே –
வாயும் திரை யுகளும்
-திருவாய் 2-1- போலே
லீலா விபூதி முழுவதும் தம்மைப் போலே அவனை பிரிந்து துடிப்பதாக ஆண்டாள் நினைக்கிறாள்

லாபத்தில் களிக்கைக்கு ஒரு விபூதி –
ஆடும்
-களித்து-சஞ்சரித்து – இருக்கும் -விபூதியைக் கண்டு விட்டார்

விடாயர் இருந்த விடத்தே சாய் கரத்தைக் கொடு வந்து சாய்ப்பாரைப் போலே ஆசைப் பட்டார் இருந்த இடத்தே
கொடு வந்து சாய்க்கும் பரிகரத்தை உடையவர் –

வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் –
கூட வேணும் என்று இருக்கிறவோபாதி-இங்கனேயும் ஒரு நியதி வேண்டுமாய்த்து இவளுக்கு –
தான் அவன் இருந்த இடத்தே சென்று தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து
பெரும் பேறு காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதியாக நினைத்து இருப்பது —
அத்தலையால் வந்து கூடவும் வேணும் –தன் ஆற்றாமை தோற்றவும் வந்து கூடவும் வேணும்

தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19-என்ன
வேண்டும்படி இருக்கும் என் வழியாலே பேறாகை யன்றிக்கே
ததாமி புத்தி யோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்னும் அவன் வழியாலே பேறாக வேணும்

சிஸூ பாலனும் எம்பெருமானைப் பெற்றான் இறே என்றார்களாய்  ஆளவந்தார் கோஷ்டியிலே –
அவன் பெற்றதைப் பேறாகச் சொல்ல ஒண்ணாது
ருசி முன்னாக பெரும் பேறாய்த்து பேறாவது
இவன் இருக்கில் நாடு அழியும் என்று
கொற்றவன் வாசலுக்கு உள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்-
என்றாராம்

பெரிய தேவப்பிள்ளை என்று பட்டர் ஸ்ரீ பாதத்திலே வர்த்திப்பான் ஒருவன் உண்டு
அவன் அகத்தில் உள்ளார் எல்லாரையும் அடர்த்து வார்த்தை சொல்லிக் கொண்டு போரும்
அவன் கிழக்கே கார்யம் உண்டாய் போன அளவிலே –
நஞ்சீயர் -அவன் போன படியாலே அகத்தில் உள்ளவர் சில நாளைக்கு பிழைத்தார்களே -என்றாராம்

அத்தைக் கேட்டருளி -நம்மோடு ஒரு சம்பந்தத்தை சொல்லி நாட்டை ஹிம்சிக்குமாகில்
நம்மைத் தேய்த்து தின்றாகிலும் இங்கே கிடக்கை அழகியது அன்றோ –

ப்ரீதி காரிதமாக அசேஷ அவஸ்தைகளும் உசிதமான கைங்கர்யத்தைப் பெறும் அன்று இறே-இது பேறாவது-
அவனே உபாயம் என்று அத்யவசித்து -சரணம் புகச் செய்தேயும் -பரம பக்தி பர்யந்தமாக பிரார்த்தித்தார் இறே
கைங்கர்யம் ரசிக்கைக்காக -எம்பெருமானார் கத்யத்தில்
பர பக்தி தொடங்கி-பரம பக்தி பர்யந்தமாக -நடுவு பிறக்கிறவை அடைய
பிராப்ய அந்தர்கதம் ஆகிறது இறே இவர்க்கு

ஓர் அதிகாரிக்கு உபாயத்தில் தலையடியாய் இருக்கும் -உபாசகனுக்கு –
ஓர் அதிகாரிக்கு ப்ராப்யத்தில் உபக்ரமமாய் இருக்கும்

கூவி –பிரபன்னனுக்கு –
உங்கள் பாட்டுக் கேட்கை அபேஷிதமாய் இருப்பதொரு போது உண்டு இறே –
அப்போது அழைத்துக் கேட்கிறோம்

பாட்டுக்கள் –
சிஷா பலத்தால் உள்ளவையும் -நீங்கள் கைவந்து பாடுமது வெல்லாம்
செவி தாழ்த்துக் கேட்டுத் தருகிறோம் –

———————————————————————————————————-

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6-

பதவுரை

கணம்–கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!–சிறந்த மயில்களே!
கண்ணபிரான்–கண்ணபிரானுடைய
திருக்கோலம் போன்று–அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று–அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு–ஆடுகின்ற உங்களுடைய
ஆடி–திருவடிகளிலே
வீழ்கின்றேன்–ஸேவிக்கின்றேன். (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை–படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும்–காலமுள்ளதனையும்
பள்ளி கொள்–பள்ளி கொண்டருளா நின்ற
மணவாளர்–அழகிய மணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு–எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின்–இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று.

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
கணமாய்-நினைத்த கார்யம் செய்து தலைக் கட்டும் தனையும் அளவுடையி கோளாய் இருக்கிற நீங்கள்
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே -10-2-என்று
அன்று அனுகூலமாய் இருப்பதொரு திரளிலே போய்ப் புக வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –

பிரதிகூலமான திரள் -கார்க்கோடல் -மேல் தோன்றி -கோவை முல்லை குயில்கள் மயில்கள் –
இவை கிடந்த வெள்ளம் என்-

நின்றாடு காண மயில் போல் நிறமுடைய நெடுமாலுக்கு-பெரியாழ்வார் -4-8-9- ஸ்மாரகமாய் நலிகிறபடி –

கண்ணபிரான் திருக் கோலம் போன்று –
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்கை மயில் தழைப் பீலி சூடி -பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணரப் பெய்து -பெருமாள் திருமொழி -6-9–
என்னும் படி இருக்கும் கிருஷ்ணனுடைய ஒப்பனை போலே இருந்ததீ-

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
கண்ணுக்கு அழகியதாய்
பரதத்திலே எழுதி அறியாமையாலே ஒருவர் ஆடி அறியாதே கிடக்கும் கூத்துக்கள் எல்லா வற்றையும் ஆடி

ஆடுகின்றீர்க்கு
ஒரு கால் ஆடிற்றாய்த் தலைக் கட்டுகை அன்றிக்கே இருக்கை

அடி வீழ்கின்றேன்
இக் கூத்து மாற வேணும் என்று உங்கள் காலிலே விழுகிறேன்

நாங்கள் உன் காலில் விழுமத்தனை போக்கி கூத்தை மாற வேணும் என்று எங்கள் காலிலே நீ விழக் கடவதாக
சொல்லக் கடவதோ -இதுவும் ஒரு வார்த்தையே -என்று அவற்றுக்குக் கருத்தாக –

பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–
செய்யலாவது உண்டோ –
எல்லாருக்கும் அவனைப் பின் செல்ல வேணுமே
தம்மைக் கிட்டினாரைத் தரிப்பிக்க கடவர்
நமக்கு சோகத்தை உண்டாக்கி உங்கள் காலிலே விழும்படி பண்ணினால் இனி நம்மால் செய்யலாவது உண்டோ –

தம்மோட்டை ஸ்பரசத்தாலே விகசிதமான பணங்களை உடையவனாய்
நித்ய அனுபவத்தாலே களித்து வர்த்திக்கிற திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவர்
தம் உடம்போடு அணைய ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுக்குமவர் –

பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் –
அவர் அநாதி காலம் கூடிப் பண்ணின கிருஷி பலம் அன்றோ நானுங்கள் காலைப் பிடிக்கிறது

மணவாளர் -என்கையாலே –
பெரிய பெருமாள்
போலே காணும் இவளை இப்பாடு படுத்தினார் –

நம்மை வைத்த பரிசிது காண்மினே–
கலக்க என்ற ஒரு பேரை இட்டு தாம் வந்து என் காலை முற்படப் பிடித்து -பின்னைப் பேர நின்று –
இப்போது நான் உங்கள் காலைப் பிடிக்கும் படி அவர் பண்ணி விட்டால் நம்மால் செய்யலாவது உண்டோ —
உங்களுக்கும் கால் தர வேண்டி
எனக்கும் கால் பிடிக்க வேண்டும் படி அன்றோ அவர் பண்ணிவிட்டது
இப்புத்தி இல்லையாகில் இவற்றின் கால் பிடியாளே-
அவற்றுக்கும் கால் கொடுக்க வேண்டுகிறது இறே பார தந்த்ரியத்தாலே

நித்யாபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77-என்னக் கடவது இறே
இங்கன் அன்றாகில் கால் கொடுக்க முறை உள்ளது ஒருவனுக்கே இறே
இவன் தன்னை இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்கி வைத்தால் பின்னை அவர்கள் வேண்டினபடி விநியோகம் கொள்ளும் அத்தனை இறே –

அம்மணி ஆழ்வான் -ஒருவனுக்கு ஹிதத்தைச் சொல்லி அவன் காலிலே தண்டனாகக் கிடைக்குமாம்
நாம் ஒருவனை வைஷ்ணவன் என்று அன்றோ ஆதரிக்கிறது -நம் நெஞ்சு அறிந்த வைஷ்ணவன் அன்றோ இவன் -என்று

அத்தை நஞ்சீயர் கேட்டருளி-அது அவன் செய்தானே யாகிலும் சிஷ்யனுக்கு அநர்த்தம் என்றாராம் –

இவன் தண்டன் இடாத வன்றாக அவன் இன்னாதாகத் தொடங்கும் இறே அவிவேகியாகையாலே –
அது என் –இவன் விவேகியாய் யன்றோ தன்னை அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்குகிறது –
அவனுடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் நமக்கு -என்று தன்னை அங்கே நிவேதித்து அன்றோ வைப்பது
என்றானாம் திருக் குருகைப் பிரான் பிள்ளான் –

மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் –14-என்னா நின்றது இறே –
அஹங்காரம் இல்லாததது என்று அறிந்து -திருமங்கை ஆழ்வார் வணங்கினாரே –

பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் சில வார்த்தை அருளிச் செய்யக் கேட்டு –
இற்றைக்கு முன்பு ஒரு ஆசார்யர் பக்கலிலும் இவை கேட்டு அறியோம் -என்றாராய்-
பிள்ளாய் -முன்பு இவ்வார்த்தை சொன்னார் உண்டு காணும் –
ஒரு திர்யக்கைத் திரு நாமத்தைக் கற்பித்து பின்னை

அதின் வாயிலே கேட்டு அதின் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தாராம் –

———————————————————————————————

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-

பதவுரை

நடம் ஆடி–கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற–தோகைகளை விரிக்கிற
மா மயில்காள்–சிறந்த மயில்களே!
உம்மை–உங்களுடைய
நடம் ஆட்டம் காண–கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான்–பாவியேன நான்
ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன்–குடக்கூத்தாடினவனான
கோவிந்தன்–கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து–கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை–என்னை
உடை மாடு கொண்டான்–ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி–இப்படி யிருக்க
ஒன்று–(என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு–உங்களுக்கு
போதுமே–தகுமோ?

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள்
தங்கள் காலிலே விழும்படி இவ் வெளிமை பட்டாள் என்று அறிந்தவாறே –அடி வீழ்கின்றேன் -என்றாளே-என்று-
நாம் நினைத்த கார்யம் செய்து தலைக் கட்டுகைக்கு ஒரு குறை இல்லை -என்று
வடிவைக் காட்டுவது
-ஆடுவது- ஆனவளவன்றிக்கே
மயில்கள் தோகையையும் விரிக்கத் தொடங்கின –
நடமாடி அத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக தோகையை விரிக்கின்ற மா மயில்காள்
என்னை நலிய உங்கள் உடம்பில் கிடக்கிற பாதக வெள்ளம் என் –
அவனது திருமேனியை நினைவுபடுத்தும் அம்சங்கள் தோகையில் வெள்ளம் இட்டு அன்றோ கிடக்கின்றன –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே

ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச
—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —
என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

குடமாடு கூத்தன் –
அவன் தன் ஸ்வரூபத்தை அந்யதாபாவிப்பித்து காணுங்கோள்-
என் ஸ்வரூபத்தை அந்யதாபாவிப்பித்ததுமன்றியிலே தன்னை எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி குடக் கூத்தாடினான்
கண்களையும் உண்டாக்கி விஷயத்தையும் காட்டினான்

தான் கூட நிற்கையாலே கண் உண்டாம் இறே
திவ்ய சஷூஸ்சையும் கொடுத்து வைச்வரூப்யத்தையும் காட்டினால் போலே
தன் அங்க பங்கிகளை எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி பண்ணினவன் –

கோவிந்தன் கோமிறை செய்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் கூட ஸூலபனானவன் –
ஸ்வ தந்த்ரன் பண்ணும் மிறுக்கைப் பண்ணி -கோக்கள் பண்ணக் கடவ மிறுக்குகளைப் பண்ணி –

எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–
என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்-
என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்
என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்

உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –
இனி –
அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது –
சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ
பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ
பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –

————————————————————————————————-

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே –
மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் –
அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்

இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து –
கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

பதவுரை

மழையே மழையே!–ஓ மேகமே!
புறம்–மேற் புறத்திலே
ஊற்றும்–என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்.
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை–விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி–மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல்–உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று–என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை–என்னை
ததைத்துக் கொண்டு–அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே–வர்ஷிக்க வல்லையோ?

மழையே மழையே
இவ் வீப்சைக்கு கருத்து -மேகங்கள் தூரப் போம் -அவற்றுக்குச் செவிப்படும்படி கூப்பிடுகிறாள் –

மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று –
மண்ணைப் புறம்பே பேசி மெழுகி உள்ளில் மொழுக்கை வெதுப்பி ஊற்றுமா போலே ஊற்றும் –
உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்த்து-

நல் வேங்கடத்துள் நின்ற-
உங்களுக்குச் சென்று கூடிக் கொள்ளலாம் படி அணித்தாக நிற்கிறவர் –

அழகப பிரானார் தம்மை –
என்ன இப்பாடு படுத்துகைக்கு ஈடான பரிகரத்தை உடையவர் –

யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று –
நெஞ்சிலே பிரகாசித்து –
அணைக்கக் கோலி கையை நீட்டி அகப்படக் காணாமையாலே நோவு படுகை அன்றிக்கே-
நெஞ்சிலே பிரதி பாசிக்கும் படியே நான் அணைக்கும் படி பண்ணி –
உஷையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே –

என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே-
என்னை நெருக்கிக் கொண்டு
அப்போது இது தான் தேட்டமாய் இருக்கும் இறே
அவனைக் கூட்டி வைத்து ஊற்றுவாயாக -என்றபடி –

——————————————————————————————

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

பதவுரை

கடலே கடலே!–ஓ கடலே!
உன்னை–(தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து–(மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து–கலக்கி
உடலுள் புகுந்து நின்று–(உனது) சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு–ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று–என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற–என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு–எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம்–என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே–அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று–நீ போய்
உரைத்தியே–சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)

அநந்தரம்-கடலானது ஓதம் கிளரத் தொடங்கிற்று –
கடலே கடலே –
இங்கே இரட்டிக்கிறது என் என்னில் –
இவள் ஒரு கால் வார்த்தை சொன்னால் –அது கேளாதே கோஷியா நிற்கும் ஆய்த்து-
அதன் த்வனி அபிபூதமாய் மேலே கேட்கும் படி கூப்பிடுமாய்த்து —

யுன்னைக் கடைந்து கலக்குறுத்து-
நீ தான் என் செய்தாய் –
தூசித் தலையிலே படை அறுப்பாரைப் போலே உன்னை அன்றோ நெருக்கிக் கடைந்து கலங்கப் பண்ணிற்று –
படுக்கை என்று பாராதே யன்றோ யன்றோ நெருக்கிற்று
இடம் கொடுத்தார் நெஞ்சிலே கல்லை இட்டு நெருக்கி சாறு பெறுத்து மவன் அன்றோ –

உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு-
உன்னைப் படுக்கையாகக் கொண்டு
உன்னோடு அணைந்து
பின்னையும் உன்னை நெருக்கிக் கடைந்து
பசை அறப் பண்ணினவன் அன்றோ –
அவன் இரந்தார் காரியமோ செய்தது –

என்னையும்- உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற
இவனையும் அணைத்து யாய்த்து அகவாயில் பசை அறுத்தது

மாயற்கு –
இப்படி நெருக்கினான் என்று பின்னையும் விட ஒண்ணாது இருக்கை –
கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
-திருவாய் -5-3-5-

என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–
நீ பட்டது எல்லாம் படா நின்றேன் காண் நானும்
போவது -வருவது
கண் உறங்காது ஒழிவது-
கூப்பிடுவது -விட மாட்டாதே ஒழிவதாய்-படா நின்றது இறே

இவளும் நிற்பது இருப்பதாய் விழுவது எழுவதாய் அரதியாய் இறே படுகிறது –
நீ அங்கே சென்று அறிவிக்கையில் உண்டான அருமையே –
பின்னை நம்மாள் -சிபார்சு செய்ய -திரு வநந்த ஆழ்வான் -அங்கே உண்டு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு –5-10-11-என்று இறே இருப்பது –

————————————————————————————————–

தோழியானவள் இவள் தன்னிலும் காட்டிலும் இழவு பட்டு –
இவள் தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது இரண்டை
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பையும்
அவன் -அனுகூல்யம் உடையாரை விடேன் -என்ற வார்த்தையும் யாய்த்து –
அது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இவள் ஜீவித்தாளாய்த் தலைக் கட்டுகைக்கு ஒரு வழியும் கண்டிலோம் –
எவ்வழியாலே இவளை தரிப்பிப்போம் -என்று இருந்தாள்
அவளைப் பார்த்து -நீ அஞ்ச வேண்டா காண் –
நமக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன்
-என்கிறாள் –

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

பதவுரை

என் நல்ல தோழி!–எனது உயிர்த் தோழியே,
நாக அணைமிசை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர்–நம் பெருமாள்
சிறு மானிடவர்–க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்)
என் செய்வது–என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர்–பெருஞ்செல்வம் படைத்தவர்
பெரியர்–எல்லாரினும் மேற்பட்டவர்
நாம்–நாமோ வென்றால்
தங்கள் தேவரை–தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை
வல்ல பரிசு–தம்மால் கூடின வகைகளாலே
வருவிப்பரேல்–அழைப்பராகில்
அது காண்டும்–அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம்

நல்ல வென் தோழீ –
என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை
அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர்
அதுக்கு உறுப்பாக –
அகலகில்லேன் இறையும்
 என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி
கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –

நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
நாகணை மிசை-
அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இ றே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு

நம் பரர் –
அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர
இத்யாதிகளில் -படியே

செல்வர் –
ஸ்ரீ யபதிகள்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1-
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே

பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்

சிறு மானிடவர் –
தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே
ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே
அதி ஷூத்ரரான மனுஷ்யர்
நாம் செய்வது என்
முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-

ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன
யவீயஸா
-யுத்த -41-4-என்றவனுக்குச்
சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்
நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –
விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும்
-5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்

சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து
பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்

பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே

அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்

வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்

பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று
சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர
நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: