ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஒன்பதாவது திருமொழி —

அவதாரிகை –

பிராணாநாமபி சந்தேஹோ மம ஸ்யாத்--சுந்தர -39-22-என்னும் தசையாய்த்து -கீழ் -நின்றது –
அத் தசை தன்னை அங்குச் சென்று அறிவைக்கு ஆள் பெற்றது இறே -அங்கு

அங்கன் போய் அறிவிக்கைக்கும் ஒருவரும் இன்றிக்கே –
போய் அறிவிக்க வேணும் -என்று சொன்ன மேகங்களும் போகாதே
நின்ற இடத்திலே நின்று வர்ஷித்தன –

அத்தாலே அக் காலத்துக்கு அடைத்த பதார்த்தங்கள் அடங்கலும் அரும்பிற்று
அலர உபக்ரமிப்பனவும் –
கழிய அலர்வனவுமாய்-
அவை தான் செவ்வி பெற்று –
திருமேனிக்கும்

அவயவ சோபைக்கும்

ஸ்மாரகமாகக் கொண்டு -கண்டது அடங்கலும் பாதகம் ஆகிறதாய்-
சில பாதிக்கைக்கு ஒருப்பட்ட படி யாய்த்து இத் திருமொழி

அது தான் போய் முறுகி
பிராணன்கள் கொண்டு ஜீவிக்க அரிதாம் படியான அளவாய்த்து மேலில் -பத்தாம் –திருமொழி

ஆக -இரண்டும் கூட –
இன்னுயிர்ச் சேவலினுடைய
-திருவாய்மொழி -9-5-அவஸ்தையாய்ச் செல்லுகிறது –

—————————————————————-

திருமலையைக் கண்ணாலே கண்டாகிலும் தரிப்போம் என்றால் அதுவும் கூட அரிதாம்படி யாவதே –
நம் தசை இருந்த படி -என் என்கிறாள் –
அவன் நாட்டில் குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா -என்பார்கள் இறே
அவன் தன்னைக் காணப் பெறாவிடில்
நாட்டில் மலைகளும் தோன்றாது ஒழிய வேணுமோ -என்னா நிற்பார்கள் ஆயத்து –
அவன் வடிவுக்கு போலியான திருமலையைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்த்தால்
அதுவும் அரிதாம் படி யாவதே

இந்திர கோபங்கள் மறைக்கையாலே –

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

பதவுரை

திரு மாலிருஞ்சோலை எங்கும்–திருமாலிருஞ்சோலையில் பார்த்த பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள்–பட்டுப் பூச்சிகளானவை
செம்–சிவந்த
சிந்துரம் பொடி போல்–ஸிந்தூரப் பொடி போல
எழுந்து-மேலெழுந்து
பரந்திட்டன–பரவிக் கிடக்கின்றன
ஆல்–அந்தோ!
அன்று–(கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே
மந்தரம்–மந்தர மலை
நாட்டி–(பாற் கடலில் மத்தாத) நாட்டி
(கடல் கடைந்து)
கொழு மதுரம்–மிகவும் மதுரமான
சாறு–அம்ருத ரஸத்தை
கொண்ட–எடுத்துக் கொண்ட
சுந்தரம் தோள் உடையான்–ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய
சுழலையில் நின்று–சூழ் வலையில் நின்றும்
உய்தும் கொல்–பிழைப்போமோ?

சிந்துரச் செம்பொடிப் போல்-
சிந்துரம் -சாதி லிங்கம் —செம்மை
ஒரு மத்த கஜம் போலே யாய்த்து திருமலை –
அது சிந்துரிதமானாப் போலே இரா நின்றதாய்த்து இவை வந்து பரம்பின போது –
மத்த கஜத்துக்கு துவரூட்டினால் போல் இரா நின்றதாய்த்து –
சிந்துரம்
-சிவப்பு நிறம் -செம் -அழகு
சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் -பெரியாழ்வார் -3-4-6-

திரு மால் இருஞ்சோலை எங்கும்
ஜகத் எல்லாம் -என்றபடி
ஜகத்தாவது -கண்ணுக்கு விஷயமாய் இருப்பது ஓன்று இறே
இவள் கண்ணுக்கு விஷயம் திருமலையை ஒழிய இல்லை யாய்த்து –

இந்திர கோபங்களே –
பிரகாரம் வானரீக்ருதம்-யுத்த -41-99–என்னப் பெற்றது இல்லை –
இலங்கை அடங்க ராஷசரேயாய் இருக்குமா போலே யாய்த்து –

எழுந்தும் பரந்திட்டனவால்-
ஏஷை வாசம் –சதே லங்காம் -யுத்த 26–20/22-என்னுமா போலே
பூமியிலே தோன்றுவன சிலவும் –
ஆகாசத்திலே எழும்புவன சிலவும் –
நாலடியிட்டு மேலே விழுந்தால் போலே இருப்பன சிலவுமாய் இரா நின்றன வாய்த்து –

இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் –பெரியாழ்வார் -4-2-9-என்கிறபடியே
திரு வதரத்தில் பழுப்புக்கு ஸ்மாரகமாய் நின்றது யாய்த்து –

மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
ஒருவர் பக்கலிலே ஓன்று கொள்ளப் புக்கால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் தொங்காத படி கொள்வான் ஒருவன் யாய்த்து
மந்திர பர்வத்தைக் கொடு வந்து -கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கி –
தானே அகவாயில் உள்ளது காட்டிக் கொடுக்கும் படி கடைந்தாய்த்து வாங்கிற்று –
மந்திர மூட வாத -இத்யாதி

ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்வங்களையும் கலக்கி அவர்கள் பக்கல் உள்ளது கொள்வான் ஒருவன்
ஸ்த்ரீத்வ அபிமானத்தாலே –
நம்மை வந்து மேலிட்டு அழிக்கை யாவது என் -என்று இருந்தாள் போலே காணும் இவள் தானும் –

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட-
தான் கொண்ட பிரயோஜனத்தைக் குறித்து –
அல்லாதார் கொண்ட பிரயோஜனமாக நினைத்த உப்புச் சாறு கடலில் ஜலத்தோபாதி இறே –
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவனாய்த்து –பெரிய திருமொழி -6-1-2–

சுந்தரத் தோளுடையான் –
நெருக்கினானே யாகிலும் கை விட ஒண்ணாதாய் யாய்த்து தோள் அழகு இருப்பது

சுழலையில் நின்றுய்தும் கொலோ–
அவன் நம்மைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளப் பார்த்த சுழலை யாய்த்து இம் மேக சிருஷ்டி –
அத்தைத் தப்பி உஜ்ஜீவிக்க வல்லோம் ஆவோமோ –
மேகோதா யஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்னக் கடவது இறே –

எல்லாம் அவனது விசித்ரமான மாயைகள் தானே –
ஒரு மஹா பாஹூ நம்மை அகப்படுத்துக்கைக்கு பார்த்து வைத்த வலையைத் தப்பி
நாம் உஜ்ஜ்ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ
இனி முடிந்தே போம் அத்தனையே அன்றோ –
சுழலை -சூழ் வலை –

———————————————————————————————————————-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2-

பதவுரை

போர் களிறு–போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள்
பொரும்–பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூம் புறவில்–மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும்–அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும்
தவளம் நகை–(அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை
காட்டுகின்ற–நினைப்பூட்டா நின்றன, (அன்றியும்)
கார் கொள்–சினை கொண்ட
படாக்கள்–படா என்னுங் கொடிகள்
நின்று–பூத்து நின்று
கழறி சிரிக்க–‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க
தரியேன்–(அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன்
தோழீ–எனது உயிர்த் தோழியே!
அவன் தார்–(நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது
செய்த–உண்டு பண்ணின
பூசலை–பரிபவத்தை
ஆர்க்கு இடுகோ–யாரிடத்து முறையிட்டுக் கொள்வது?

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
களிறுகள் களிக்கும் ஊராய்த்து —
பிடியே யாய்த்து உறாவுகிறது-
அவன் களித்து இருக்க நான் பிரிந்து துன்புறுவது போலே
ஆனைகள் திருமலையிலே கரை பொருது திரியா நிற்குமாய்த்து
அழகியதாகப் பூத்த பர்யந்தங்களிலே -தாழ் வரைகளிலே

தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற-
அழகிதாகப் பூத்த முல்லைக் கொடியானது சம்போகத்தினுடைய உபோத்காதத்தில்
அவனுடைய மந்த ஸ்மிதத்துக்கு ஸ்மாரகமாக நின்றதாய்த்து –
விஜாதீயராய் நம்மை நலியப் பெற்றோமோ –
பெண் கொடியான என்னை முல்லைக் கொடி நலியலாமா –

கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
சினை கொண்ட படாக்களானவை எங்கும் ஒக்க முட்டாக்கிடப் பூத்துக் கிடந்த போது
சம்ஸ்லேஷம் போய் உன்மஸ்தக ரசமாய் –
பின்னை ஒரு தலையில் பேற்றுக்கு விட்டுச் சிரிக்குமதுக்கு ஸ்மாரகமாகா நின்றது யாய்த்து –

ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–
நாம் அவன் தோளில் இட்ட மாலையை ஆசைப் பட்டு –
அது விளைத்த மஹா பாரதத்தை யாருக்குச் சொல்லுவோம்

தோழி
தோழி தான் இவளுக்கு முன்னே மோஹித்துக் கிடந்தாள்-
இவள் இழவுக்கு இவளுக்கு முன்பே தரைப் பட்டாள் யாய்த்து அவள்
எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ-–திருவாய் மொழி -9-9-5-என்னுமா போலே
‘லாப அலாபங்கள் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கையாலே நீ எனக்கு முன்னே நோவு படா நின்றாய்
என் ஆற்றாமையை உனக்குச் சொல்லி தரிக்கப் பெறுகிறிலேன்-
இனி இது கொடு கார்யம் இன்றிக்கே புறம்பே அந்ய பரராய் இருக்கிறவர்களுக்கு சொல்லவோ நான் –

———————————————————————————————————————

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பதவுரை

ஒண்–அழகிய
கருவிளை மலர்காள்–காக்கணம் பூக்களே!
காயா மலர்காள்–காயாம் பூக்களே! (நீங்கள்)
திருமால்–எம்பெருமானுடைய
உரு ஒளி–திருமேனியின் நிறத்தை
காட்டுகின்றீர்–நீனைப்பூட்டாநின்றீர்கள்
எனக்கு–(அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு
உய் வழக்கு ஒன்று–பிழைக்கும் வகை யொன்றை
உரையீர்–சொல்லுங்கள்
திரு விளையாடு–பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான
திண் தோள்–திண்ணிய திருத் தோளை யுடையரான
திருமாலிருஞ் சோலை நம்பி–அழகர்
இல் புகுந்து–(எனது) வீட்டினுள் புகுந்து
வரி வளை–(எனது) அழகிய வளைகளை
வந்தி பற்றுமு வழக்கு உளதே–பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?

கருவிளை யொண் மலர்காள்–கருவிளையினுடைய அழகிய மலர்காள்
கருவிளை -காக்கணம் –

காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர் –
பெரிய பிராட்டியாரும் அவனுமாய் கலந்து இருந்த போது
தன்னிறம் பெற்று இருக்கும் போதை புகரைக் காட்டா நின்றி கோள்

யெனக்குய் வழக்கொன்று உரையீர்
என்றும் அவன் ஆளாய் அவன் கார்யமே செய்து தலைக் கட்டப் பார்க்கும் அத்தனையோ
நானும் அவனுமாய் இருவரானால் நொந்தாரை ஐயோ -என்ன வேண்டாவோ –
சர்வேஸ்வரன் கருத்தை பின் செல்ல வேண்டாவோ -எல்லாருக்கும் என்று இரா நின்றன வாய்த்து அவை –

நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம
-அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி

சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்

ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பிரசங்கித்தவாறே -விபீஷணனோ அழகிதாகச் செய்தான் –
ஆபத் சமயத்தில் பிராதாவை விட்டுப் போந்தானே -என்றானாம்
எல்லா வற்றையும் விட்டுக் கொடுக்க ஒண்ணாது என்று
பிதாவும் ஜ்யேஷ்டனான பிராதாவும் சேரப் போந்த வன்று பிராதாவை அனுவர்த்திக்கக் கடவன்
பிதாவோடு அவன் விரோதித்த வன்று ஜ்யேஷ்டன் என்று பாராதே
பிதாவை அனுவர்த்திக்கக் கடவன் -என்று அருளிச் செய்தாராம் –

சர்வேஷா மேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ
லோகத்துக்கு உள்ளே அந்தர்பூதன் இறே ராவணனும்
இதே ரீதியிலே இந்த பூக்களும் சர்வேஸ்வரன் கருத்தை பின் செல்கின்றன –

உய வழக்கு
முடிக்கும் வழக்கயோ நீங்கள் கற்றது
உஜ்ஜீவிக்கும் வழக்கு சொன்னால் ஆகாதோ
நீ அஞ்சாதே கொள் -நாங்கள் மறைய நிற்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ
பூப் போலே வந்து புலி யானி கோளீ-

ஓன்று உரையீர் –
இவையே சைதன்யம் பெற்று ஒரு வார்த்தை சொன்னால் அது கேட்டு பின்பு
அவற்றைக் கொண்டு தரிக்க வேண்டும் தசை காணும் இவளுக்கு

திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
பிரணயி இல்லாதான் ஒருவன் அல்லன்
ஒரு நத்தத்தில் பிறவாதான் ஒருவன் அல்லன்
ஒரூரிலே பிறந்து வளர்ந்தார் வந்தியிடார்கள் இறே -பிறர் துன்புரும்படி சண்டையிட மாட்டார்களே

திரு விளையாடு திண் தோள்
பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமாக
சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது

திருமால் இரும் சோலை நம்பி-
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு ஸூலபனானவன்
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் -5-3-3-
அதுக்கு உள்ளே உண்டு இறே சீலமும்

நம்பி –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூரணன் ஆயத்து –

வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –
தாம் இருந்த இடத்தில் நாங்கள் சென்றோம் ஆகில் எங்களை நலிய பிராப்தம்
நாங்கள் இருந்த இருப்பிலே தாமே வந்து எங்களுடைய உயிர் நிலை அறிந்து -வளையை அறிந்து

வந்தி பற்றும்
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க -எங்கள் வளை கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
தாம் விரும்பின வளை என்று நாங்கள் இத்தைக் கொண்டு தரிப்போமானால்
இத்தையும் கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
வழக்கு உள்ள இடத்தில் அன்றோ கைக் கூலி கொள்ளுவது -கைக்கூலி -கையில் வளையை -கையில் உள்ள பொருளை –
ஆன பின்பு எனக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு சொல்லி கோளே

இல் புகுந்து –வரி வளை வந்தி பற்றும் -வழக்குளது -என்று அந்வயம்

————————————————————————————————————–

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

பதவுரை

பைம் பொழில் வாழ்–பரந்த சோலையில் வாழ்கின்ற
குயில்காள்–குயில்களே!
மயில்காள்–மயில்களே!
ஒண் கருவிளைகாள்–அழகிய காக்கணம் பூக்களே!
வம்பக் களங்கனிகாள்–புதிய களாப்பழங்களே!
வண்ணம் நறு பூவை மலர்காள்–பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே!
ஐபெரு பாதகர்காள்–(ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே!
உங்களுக்கு–உங்களுக்கு
அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது–திருமாலிருஞ் சோலையிலுள்ள
அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக?
(அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை)

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்-வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்-ஐம் பெரும் பாதகர்காள்
பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ

காதாசித்கமாக பழுத்த காளாப் பழங்கள் நலிகிற படி
அழகிய நிறத்தை உடைய பூவைகாள்
பஞ்ச மஹா பாதகரைப் போலே யாய்த்து நலிகிறது –
ப்ரஹ்மஹத்தி-ஸூரா பானம் -ஸ்வர்ணஸ் தேயம் முதலானவை சாஸ்த்ரங்களில் சொல்லும் பஞ்ச மஹா பாதகங்கள்

அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —
பாதகனானவன் வடிவைக் கொண்டு ரஷகரான நீங்கள் என் செய்ய நலிகிறி கோள்
சேஷ சேஷிகள் ஆனால் சேஷ பூதர் தங்களில் ஒரு மிடறாய் நின்று பிழைக்க வேண்டாவோ
திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டி என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய நிறத்தை
நீங்கள் என் செய்ய ஏறிட்டுக் கொண்டி கோள் –

பரம சேதனனோடு-சைதன்யம் மாத்ரம் உடையரோடு அசேதனங்களோடு வாசியற
எல்லாரும் ஒக்க பாதகரானால் எங்கனே பிழைக்கும் படி
பிரிந்தார் ஒருவனாய் பாதகர் பலர் உண்டானால் எங்கனே பிழைக்கும் படி

கலந்தார் பாதகர் ஆகை அன்றிக்கே -அவ்வளவிலே அவன் பிரிந்த சமயத்திலே முகம் காட்டி
ஆஸ்வாசத்தைப் பண்ணக் கடவ நீங்கள் பாதகரானால் எங்கனே பிழைக்கும் படி

பிரிந்தார் ஒருவனாய் பாதக கோடி பலவானாலும் பிழைக்கப் போமோ

நலியா நிற்கிறவன் நிறத்தை ரஷகரான நீங்கள் என் செய்ய ஏறிட்டுக் கொண்டி கோள்
அவன் நிறத்தை தரப் புக்கால் –
எங்களுக்கு இந் நிறம் வேண்டா -என்ன வேண்டாவோ

——————————————————————————————-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

பதவுரை

துங்கம் மலர் பொழில் சூழ்–ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலையில்
நின்ற–நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய
திருவுருப் போல்–அழகிய வடிவம் போலே
மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள்–மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே!
தொகு–நெருங்கி யிருக்கின்ற
பூஞ்சுனைகாள்–அழகிய சுனைகளே!
சுனையில் தங்கு–அச் சுனைகளில் உள்ள
செம் தாமரைகாள்–செந்தாமரை மலர்களே!
எனக்கு–(உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு
ஓர் சரண் சாற்றுமின்–ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள்

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
ஓங்கின மலரை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திருமால் இரும் சோலையில் நின்ற –
ஒருவரால் சென்று பிரவேசிக்க அரியதாய் இருக்கை –
ந கோத்தமம் புஷ்பித மாசசாத -சுந்தர -28-17-
ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமான் புஷ்ப பலத்ருமான் –என்னும்படி யாய் இறே இவளுக்கு இருக்கிறது
ராஷசீ தர்சனத்தோ பாதி கொடிதாய் இரா நின்றதாயிற்று இவளுக்கு இவற்றினுடைய தர்சனமும்

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்
துங்க மலர்ப் பொழில்கள் ஆகிற இன் நெருப்பைக் கடந்து புக வேணும் காணும் அனுபவிக்க
அக வாயில் நீர்மை அடங்கலும் தெரியுமாய்த்து கண்ணில் தண்ணளி யிலே

மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள்
நெருப்பில் கால் பொருந்துமா போலே இருக்கிறது இறே இவளுக்கு
குறைவற்றார் குறைவாளர் குறை தீர்க்க வேண்டாவோ

தொகு –
அதின் கீழில் நீர் திரும் மேனிக்கு ஸ்மாரகமாகா நின்றது

சுனையில் தங்கு செந்தாமரைகாள்
அதில் பூத்த பூக்கள் திவ்ய அவயவாதிகளுக்கு ஸ்மாரகமாகா நின்றன –

எனக்கோர் சரண் சாற்றுமினே–
தர்ம புத்திரன் பீஷ்மத்ரோணாதிகள் பக்கலிலே சென்று –
உங்களை நான் கொல்லும் விரகு நீங்களே சொல்ல வேணும் என்றால் போலே
பாதிக்க ஒருப்பட்டு நிற்கிற இவற்றைப் பார்த்து
நான் உங்களை தப்பி ஜீவிப்பதற்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்று கேட்கிறாள் –

சிகண்டியை முன்னே நிறுத்துவது –
வில்லைப் பொகடுகிறோம்-கொன்று கொள்-என்றால் போலே ஒரு விரகு சொல்ல வல்லி கோளே
அஸ்வத்தாமா ஹத -என்றது துரோணன் வில்லை பொகட காரணம்-

நாங்கள் இல்லாதவிடம் இன்ன இடம் அங்கே போய் நீ ஜீவி -என்று ஒரு புகல் சொல்ல வல்லி கோளே –
இவை தனக்கு ஒரு புகல் சொல்ல வேண்டும் படி காணும் இவள் தான் புகல் அற்ற படி –

——————————————————————————————-

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

பதவுரை

நறு பொழில் நாறும்–பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு–எம்பெருமானுக்கு
நான்–அடியேன்
நூறு தடாவில்–நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய்–வெண்ணெயை
வாய் நேர்ந்து–வாயாலே சொல்லி
பராவி வைத்தேன்–ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த–நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில்–அக்கார வடிசிலும்
சொன்னேன்–வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை–இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான்–(நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து–இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல்–திருவுள்ளம் பற்றுவரோ?

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
சோலையிலே பரிமளம் தன்னுடைய -கந்தவதியான பூமாதேவி -ஆண்டாளுடைய -நாற்றத்தோடு
கூடினால் போலே காணும் பூர்ணம் ஆவது
குறைவற்றாரை வசீகரிக்கும் போது வெண்ணெயாலே வசீகரிக்க வேணும் போலே காணும்

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
இடைச்சிகள் பிரார்த்திப்பது வெண்ணெய் யாய் இருக்கும் இறே

வாய் நேர்ந்து
க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்யம் -15-7–என்னுமா போலே இரா நின்றதாய்த்து இத் தலைக்கு
நினைவில் மட்டும் போதாது வாயாலும் சொல்லி வைத்தேன் -என்றபடி –

நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
பெண் பிள்ளை பிரார்த்தித்து வைத்தாள்
கொடுத்தாளாகச் சொல்லக் கேட்டிலோம்
பிரார்த்தித்த வற்றை இறுக்கை அச் சந்தான ஜாதர்க்கு பரம் இறே -என்று தாம் அமுது செய்வித்து அருளினாராம்

அந்யத் பூர்ணாதபாம் கும்பாத அன்யாத் பாதாவ நே ஜனாத் -என்கிற வஸ்துவுக்கு
நூறு தடா நிறைந்த -என்று இங்கனே போரச் சொல்லுவான் என் -என்று நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன்

திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர் யத்துக்கு இது எல்லாம் கூடினாலும் ஒரு பூர்ண கும்ப ஸ்தாநீயம் -என்று
அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –

பூர்வார்த்த நிஷ்டர்க்கு இட்ட வடி மாற்றி இட பிராப்தி இல்லை
உத்த்ரார்த்த நிஷ்டர்க்கு -அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25–என்கிறபடியே இருக்க வேணும் –

பூர்வார்த்தத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று பிராட்டி இருந்தால் போலே இருக்க வேணும்
உத்த்ரார்த்தை அனுசந்தித்தால் இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்க அவசரம் இல்லை –

ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை ஸ்வீகரிக்க வல்லனேயோ

ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ –
இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்

வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-
போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பணிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாரும் ஒரு வஸ்துவைக் கொண்டு
அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் –
ஸ்ரீ யபதி ஆஸ்ரயணீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –

நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு

ஆகையால் இறே நாம் இரண்டு இடத்திலும்
அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் –
காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே –
திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —

———————————————————————————————–

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7-

பதவுரை

தென்றல்–தென்றல் காற்றானது
மணம் கமழும்–மணத்தைக் கொண்டு வீசுகின்ற
திரு மாலிருஞ் சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையிலே
நின்ற–எழுந்தருளி யிருக்கிற
பிரான்–ஸ்வாமியான அழகர்
இன்று–இன்றைக்கு
வந்து–இவ்விட மெழுந்தருளி
இத்தனையும்–நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
அமுது செய் திட பெறில்–அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி)
அடியேன் மனத்தே வந்து நேர் படில்–அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
நான்–அடியேன்
ஒன்று–ஒரு தடாவுக்கு
நூறு ஆயிரம் ஆ கொடுத்து–நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து
பின்னும்–அதற்கு மேலும்
ஆளும் செய்வன்–ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன்

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்
இன்று வந்து -இன்று உவந்து –
நான் பிரார்த்திக்கிற இன்று வந்து உவந்து —
என் இரப்பு மாறாமைக்கு ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
தனக்கு இது ஒழியச் செல்லாமை உடையானாய்க் கொண்டு உவந்து அமுது செய்திடப் பெறில்

இத்தனையும் –
நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலையும்-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்ம் பொட்டத் துற்று -பெரியாழ்வார் -3-5-1-

அமுது செய்திடப் பெறில்
இதுவே இவளுக்கு பேறு
பின்னையும் அவனுக்குக் கொடுக்கும் அத்தனை –
அவன் அமுது செய்தால் கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்

நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
இது எனக்கு பிரயோஜனம் –

நான் –
பிராப்ய த்வரையாலே கைங்கர்யம் செய்யத் துடிக்கும் நான்
அவன் ஆசைப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிற நான்

ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து –
நூறு தடாவுக்கும் நூறாயிரம் தடாவாகக் கொடுத்து

பின்னும் ஆளும் செய்வன் –
அவன் உகந்து கொடுக்கிற நான் ஆசைப் பட்டத்தை விடுவேனோ

தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –பின்னும் ஆளும் செய்வன் –
வேறு ஓன்று பெறுமதில் காட்டிலும் அடிமை செய்யும் இத்தனை யாகாதே தான் அவன் விரும்பி இருப்பது –
புதியது ஓன்று பெறுமதில் காட்டிலும் -பழையதாய் இழந்தது பெற்றால் அன்றோ அவன் உகப்பது

ஆளும் செய்வன்
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்று
தமப்பனார் பாரித்து இருக்குமதே காணும் -இவளும் ஆசைப் படுகிறது

தென்றல் மணம் கமழும்
அவன் பக்கல் குறை இல்லை இறே
அத் தேச வாசம் தட்டாதாகில் அவன் உபகரிக்கையிலே ஒருப்பட்டான் –
தென்றல் பாதகம் ஆகையாலே தட்டாதாகில் என்கிறது
அது தலைக் கட்டுமாகில்

அடியேன் மனத்தே வந்து நேர் படிலே–பின்னும் ஆளும் செய்வன் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் என்று மநோ ரதித்து இருந்தபடியே வந்து
கிட்டப் பெறில் பின்னும் ஆளும் செய்வன்

அடியேன் –
புதியது ஒன்றைப் பிரார்த்திக்கிறேனோ –

——————————————————————————————–

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

பதவுரை

கரிய குருவி கணங்கள்–கரிய குருவிக் கூட்டங்கள்
காலை–விடியற்காலத்திலே
எழுந்திருந்து–எழுந்து,
சோலைமலை பெருமான்–திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராவதி எம்பெருமான்–துவராபுரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன்–ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய
வார்த்தை–வார்த்தைகளை
உரைக்கின்ற–சொல்லா நின்றன. (இப்படி)
மாலின்–எம்பெருமானுடைய
வரவு–வருகையை
சொல்லி–சொல்லிக் கொண்டு
மருள் பாடுதல்–மருளென்கிற பண்ணைப் பாடுவதானது
மெய்ம்மை கொல்–மெய்யாகத் தலைக் கட்டுமா

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-விறே பண்ணிக் கொண்டு இருப்பது –

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-

ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –என்னுமா போலே யாய்த்து

கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –

மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி

மருள்
இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் –
சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

பதவுரை

கோங்கு அலரும் பொழில்–கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில்–திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல்–கொன்றை மரங்களின் மேல்
தூங்கு–தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று–பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன்–வாளா கிடக்கின்றேன்
பூ கொள்–அழகு பொருந்திய
திரு முகத்து–திருப் பவளத்திலே
மடுத்து–வைத்து
ஊதிய–ஊதப் படுகிற
சங்கு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும்–த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும்–சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது–ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல்–என்றைக்கோ?

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில்
கோங்கு அலரா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருமால் இரும் சோலையிலே

கொன்றைகள் மேல் தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்-
தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று –
சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்-
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –

பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ —
இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை

சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை

ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு
தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்-
அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –

———————————————————————————————–

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

பதவுரை

சந்தொடு–சந்தனக் கட்டைகளையம்
கார் அகிலும்–காரகிற் கட்டைகளையும்
சுமந்து–அடித்துக் கொண்டு
தடங்கள் பொருது வந்து–பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து
இழியும்–பெருகுகின்ற
சிலம்பாறு உடை–நூபுர கங்கையையுடைத்தான
மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை–திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து
சுரும்பு ஆர் குழல் கோதை–வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள்
தொகுத்து உரைத்த–அழகாக அருளிச் செய்த
செம் தமிழ் பத்தும் வல்லார்–செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள்
திருமால் அடி–ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை
சேர்வர்கள்–அடையப் பெறுவர்கள்

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் ஸ்திரீகள் தனம் கொண்டு போம் போலே யாய்த்து

தடங்கள் பொருது –
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே

சிலம்பாறுடை –
பரமபதத்துக்கு விரஜை போலே யாய்த்து
திருமலைக்கு -திருச் சிலம்பாறு

சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –
சுந்தரனை -சர்வாங்க ஸூந்தரனை யாய்த்து கவி பாடிற்று

சுரும்பார் குழல் கோதை-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே –
இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்

தொகுத்து உரைத்த –
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன

செந்தமிழ்
செவ்வியதமிழ் -பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –

திருமாலடி சேர்வர்களே –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து
இவள் ஆசைப் பட்டது –
அப் பேறு பெறுவார்கள்

அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் –
ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச –
பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால்
அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –

ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த் தலைகளாலும்-கை வாய்க்கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இறே –

அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: