நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -முதல் திருமொழி —

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மண்டலம் -மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய முதல் பஷத்தில்
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –

தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இ றே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –
தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில் காலத்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இ றே
இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இ றே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இ றே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இ றே இது

தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இ றே ஆற்றாமை –
மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –

தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் இ றே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்
தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இ றே இவள் செய்கிறது –
மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் -அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து

இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –

உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இ றே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –ஆம் கொலோ -சங்கை -பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இ றே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –
என்று ஆசையாலே சொல்லி -உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–காமன் -தம்பி சாமான் -சாமானையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே
தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இ றே இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இ றே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இ றே அஞ்சலி

ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூ ரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீதவிரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-
அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை அவனுடனே சேர்த்து விடச் வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-
இப்போது –வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இ றே இருப்பது –ஏந்தி -திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –

——————————————-

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே–1-2-

வெள் வரைப்பதன் முன்னம் -கிழக்கு வெளுப்பதற்கு முன்னே
முள்ளும் -முள் எறும்பு முதலியவையும் –

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
சத்வ பிரசுரனான சர்வேஸ்வரனுடன் உடைய சம்பந்தத்தாலும்
தேவதையினுடைய சௌகுமார்யத்தாலும்-ஆக –
வெளுத்து -நுண்ணியதாய் இருந்துள்ள மணலைக் கொண்டு அவன் வரும் வழியை அலங்கரித்து –
நாட்காலே நீராடி -என்று அவனை நோக்கி குளித்த வாசனையாலே கிழக்கு வெளுப்பதற்கு முன்பே நீர் நிலைகளிலே மூழ்கி –
கீழ் வானம் வெள்ளென்று -என்று அவனைக் குறித்து நோற்கும் இடத்து துணுக துணுக -என்னும் இத்தை இ றே இவனை நோக்கிச் செய்கிறது
துறை படிந்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ரீ ராம விரஹம் ஆறுகைக்கு செய்யுமத்தை யாய்த்து இவன் பக்கல் செய்கிறது –
அத்யந்த ஸூக சம்வ்ருத்த ஸூ குமார ஸூ கோசித-கதம் ந்வபரராத்ரேஷூ சரயூம் அவஹாகதே –ஆரண்ய -16-20-

முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து-
எறும்பும் மற்று ஓன்று உள்ளவை இல்லாமையே யன்றிக்கே -முள்ளும் இன்றிக்கே இருக்கிற சுள்ளி உண்டு –இளவிறகு-
அத்தை அக்னியிலே இட்டு —சமித்தை அக்னியிலே போர மடுத்தனையும் கிருஷ்ணனை போர அணைக்கலாம் -என்று இருக்கிறாள்
பெரியாழ்வார் பகவத் சமாராதான ரூபமாகச் செல்லும் அக்னி ஹோத்ர ஹோமத்துக்கு -ஸ்வயம் பிரயோஜனமான ஹோமத்துக்கு –
வேண்டுவன எடுத்து கை நீட்டக் கடவள் இ றே இப்போது இது செய்கிறாள் –

முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா-
சரைஸ்து சங்குலம் க்ருத்வா லங்கா ம் பரபலார்த்தன -மாம் நயத்யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்த -39-30-
என்னும்படியே அவனே என்று அறுதி இட்டு இருக்கக் கடவ நான் இப்போது அவனைப் பெறுகைக்கு
உன் காலிலே விழுந்து படுகிற யத்னம் எல்லாம் கண்டாயே
உன்னை –
நான் பற்றி இருக்கும் விஷயம் தான் இன்னது என்னும் இடம் அறிதியே –
அவனைப் பற்றி இருக்கக் கடவ நான் அன்றோ -உன் காலிலே விழுந்து துவளுகிறேன்

அது உண்டு -அதுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன —கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு-கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி-
இனிச் சாணையில் ஏறிட வேண்டா வாய்த்து -சிதை -என்கிறபடியே –
மது விரியா நின்றுள்ள புஷ்ப பாணங்களை தொடுத்துக் கொண்டு -கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய-திரு நாமத்தை அம்பிலே எழுதிக் கொண்டு -என்னுதல்–ஹிருதயத்திலே எழுதிக் கொண்டு என்னுதல்

புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே-
பகாசூரனுடைய வாயைக் கிழித்து விரோதி நிரசன சீலனாய் இருக்கிறவன் பக்கலிலே நான் சென்று சேரும் படி பண்ண வல்லையே-
தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷச்வஜே –ஆரண்ய -94-18-நான் அவனை அணைக்கும் படி பண்ண வல்லையே –

————————————————————————–

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

மத்த நன்னறு மலர் —ஊமத்தையினுடைய நல்ல மலர்களையும்
முருக்க மலர் கொண்டு-பலாசம் புஷ்பங்களையும் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி-காலை மாலை உச்சி யாகிற மூன்று போதுகளிலும் உனது அடிகளிலே தண்டன் இட்டு –

மத்த நன்னறு மலர்முருக்க மலர் கொண்டு-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அதுக்கு அநுரூபமாம்படி மதகரமான புஷ்பங்களைக் கொண்டு –
மதமத்தையினுடைய நன்றான செவ்விப் பூ முருக்கம் பூ இவற்றைக் கொண்டு –
திருத் துழாய் பறிக்கும் குடியில் பிறந்தவள் இ றே இப்போது இவனுக்கு இவை தேடுகிறாள் –

முப்போது முன்னடி வணங்கி-
ஒரு போது தொழுகை தானும் மிகையாம் படியான விஷயத்தை பற்றி வைத்து இ றே இவனை த்ரி சந்தியும் ஆஸ்ரயிக்கிறது-
காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-2-
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் –9-10-3-
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் திரு -63–என்று
கால ஷேப அர்த்தமாகவும் -ஸ்வயம் போக்யமாகவும் -பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்தவள் கிடீர் இப்படி இவனை ஆஸ்ரயிக்கிறாள்-

தத்துவமிலி என்று நெஞ்செரிந்து-வாசகத்தழித்து உன்னை வைதிடாமே-
உன் ஸ்வரூபம் அழியாமே நோக்கிக் கொள்ளப் பார் கிடாய் –
இவனை ஆஸ்ரயித்தால் பெருவதொரு பலம் இல்லை என்று -இவன் பொய் சொல்லி -என்று நெஞ்சு கொதித்து –
அதுதான் நினைவு மாத்ரமாகை யன்றிக்கே வாயாலே அழித்து பலரும் அறியும் படி உன்னை வைதிடாமே
தருமம் அறியாக் குறும்பனை –பொருத்தமிலியை –-14-6- என்றும்
புறம்போல் உள்ளும் கரியானை -14-7-
ஏலாப் பொய்கள் உரைப்பானை -14-3-
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானை -13-1- என்று அவனை வைவது போலே உன்னையும் வைய நேரும் என்று பயமுறுத்துகிறாள் –

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
ததோ ராமோ மகா தேஜா தநுராதாய வீர்ய வான்-பிரவிச்ய ராஷசம் சைன்யம் சர வர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த -94-18-
என்று கொண்டு நூறும் பத்தும் ஆயிரமுமாக பெருமாள் திருச் சரங்களைத் தொடுத்து விடுமா போலே-
நீயும் கொத்து கொத்தான புஷ்பங்களைத் தொடுத்துக் கொண்டு

கோவிந்தன் என்பதோர் பேரெழுதி-
எங்களுடைய ரஷணத்துக்கு முடி சூடி இருக்கிறவனுடைய திரு நாமத்தையும் நெஞ்சிலே எழுதிக் கொண்டு –

வித்தகன் வேங்கட வாணன் என்னும்-
பரம பதத்தில் நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு-
கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47-ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும்
திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும்இவை இ றே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21-
அதில் காட்டில் இது போக்யமாய் இ றே இங்கு வந்து அவன் நிற்கிறது

வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–
பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது –
திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து-
ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து –
குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இ றே –
திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

——————————————————–

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5

கடப்பதும் -தனக்காக்கிக் கொள்வதும்
ஊனிடை -தன் திரு மேனியிலே –

வானிடை வாழும் அவ்வானவர்க்கு-
போக பூமியில் வர்த்திக்கக் கடவராய் -விலஷண ஜன்மாக்களாய் இருக்கிற தேவர்களுக்கு –
தேவான் பாவயதா நேன தே தேவா பாவயந்து வா -பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரம வாப்ச்யாத -ஸ்ரீ கீதை -3-10/11-என்கிறபடியே

மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப-
இங்கு உள்ள பிராமணர் தேவர்களை உபாசிக்கக் கடவரகளாயும்-அவர்கள் இவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணக் கடவர்களாகவும்
ஈஸ்வரன் அடியிலே பார்த்து வைத்த தொரு பார்வை யுண்டிறே-
ஆகையால் பிராமணர் தம்தாமுடைய யாகங்களில் உண்டாக்கின ஹவுஸ் சை-மனுஷ்யர் இல்லாத
காட்டிலே சஞ்சரிப்பதொரு ஷூத்ர பதார்த்தங்கள் – அவர்களுக்கு அது யோக்யமாகாத படி தூஷிக்குமா போலே

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கிற அழகிய திரு மேனியிலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தையும் தரித்து இருப்பானாய்-
அவ்வழகு தன்னைப் பிறருக்கு என்று இருக்கையாலே உத்தமனாய் இருக்கிறவனுக்கு என்று அனுசந்தித்து-
அவ்வனுசந்தானமே நீராக வளர்ந்த என் முலைகள் –

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய்-
நானும் அறியாது இருக்க -அவனும் அறியாது இருக்க -மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம்
பரிமாறும் ஆகில்-அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க –
இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து –
அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

மன்மதனே –
வயிற்றில் பிறந்த உன் காலிலே விழ வேண்டும் படி யன்றோ என் ஆற்றாமை –

——————————————————————–

மச்சித்தா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9-என்கிறபடியே சத்வ நிஷ்டர் பகவத் குண அனுபவம் பண்ணி
போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு சாத்விகரைக் கூடக் கொண்டு இழியுமா போலே -ரஜோ குண பிரசுரமானவனை ஆஸ்ரியைக்கு
அதிலே தேசிகரைக் கொண்டு இழிகிறாள்-

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் –6-

ஒத்து -காம சாஸ்த்ரத்தில்

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு
வடிவுடையாராய் -யுவாக்களாய் -வ்ருத்தவான்களாய்
காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு

வைகல் தெருவிடை எதிர் கொண்டு-
நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு

பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் –
பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –

செய்ய வேண்டுவது என் என்னில்
காம தேவா கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன்-
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
எல்லாம் பட்டும் பெற வேண்டும் படி அன்றோ அவன் வடிவு படைத்த படி –
நெஞ்சிலே இருள் படுகைக்கு-காயா வண்ணன்
கண்டார் கண்ணுக்கு நேத்து இருக்கைக்கு –கருவிளை போல் வண்ணன்

கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்-
கமலத்தினுடைய நிறம் போலே இருக்கிற காந்தியை யுடைத்தான திரு முகத்தில் உண்டான திருக் கண்களாலே
சோலை பார்ப்பாரைப் போலே பார்க்கை அன்றிக்கே அவன் விசேஷ கடாஷம் பண்ணும் படியாக அருள் கிடாய்-
சோலை பார்வை -சமுதாயேன பார்வை அன்றிக்கே அவயவங்கள் தோறும் கடாஷித்து அருள வேணும்-
நம் ஆற்றாமைக்காக நோக்கினான் ஆகை அன்றிக்கே தனது ஆற்றாமை தீரும்படி நோக்கினானாம் படியாய் பண்னுகிடாய்-

———————————————————————-

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே –1-7-

காயுடை நெல் -பசுங்காய் நெல்
வாயுடை -நல்ல ஸ்வரத்தை யுடையவராய்
சாயுடை -ஒளியை யுடைய -அழகை உடைய –
தலைப் புகழ் -நிலை நின்ற புகழ் –

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அவனுக்கு ஆமவை தேடுகிறாள் யாய்த்து
பால் மாறாத பசுங்காய் நெல்லோடு கூட
கருப்புக் கட்டி -பச்சரிசி -அவள் -இவற்றைச் சமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்-
நல்ல ஸ்வரத்தை உடையராய் இருக்கிற மறையவர் உண்டு -அதில் தேசிகராய் இருக்குமவர்கள் –
அவர்களுடைய மந்திரத்தாலே -வயிற்றில் பிறந்தவன் என்று பாராதே -உன்னை ஆஸ்ரயிக்கிறேன்-

தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்-
வரையாதே எல்லாரையும் அடியிலே விஷயீ கரித்தவன் திருக்கையாலே என்னை –

சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே —
ஒளியை உடைத்தான வயிற்றையும்-
அவன் தனக்கும் உண்டு அறுக்க ஒண்ணாத படியான முலையையும்
திருக்கைகளால் தீண்டும் வண்ணம் –அவன் ஸ்பர்சிக்கும் படி பண்ணி –
லோகத்திலே சால நிற்பது ஒரு புகழ் இ றே-அத்தை நாம் பெரும் படி தர வல்லையே
அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் –

——————————————————–

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு-
ஸ்நானத்தை ஒழிய செல்லாதபடியான உடம்பு மாசு ஏறும்படி பண்ணி
சுரும்பார் குழல் கோதை –9-10-என்னும்படியான மயிர் முடியை உடையவள் அத்தைப் பேணாதே
போகய த்ரவ்யங்களைக் கொடுத்து -இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் நசையாலே சத்தை கிடக்க வேண்டும்
அளவாய்த்து உஜ்ஜீவிப்பது -ஒரு போதும் உண்டு –
இவ்வழியாலே ஒரு கால் மீளாதே நோற்கின்ற -நிகழ் கால பிரயோகம் -இடை விடாமல் நோற்கின்ற நோன்பை குறிக் கொள் கிடாய்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே-என்று நெஞ்சிலே இது எப்போதும் பட்டுக் கிடக்க வேண்டும் கிடாய் –

தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்-
பிரிந்தாரைச் சேர்க்க வல்ல என்கிற பிரசித்தியாலே வந்த புகழையும் –
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு ஈடான மிடுக்கையும் உடையவன் அன்றோ நீ –

பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் –
நான் சொல்வது ஓன்று உண்டு -எனக்கு ஸ்வாமி யானவனே –

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் -என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் -கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்
முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது -முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —
முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———————————————————–

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—1-9-

வழங்க -சஞ்சரித்து –

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்-
சத்வ நிஷ்டராய் இருப்பார் சமாராதன காலங்களில் அவகாஹனம் பண்ணி
சமாராதனம் தலைக் கட்டின அநந்தரம் திருவடிகளிலே விழுந்து -நான் தொடங்கின சமாராதானம் தலைக் கட்டினேன்-
திரு உள்ளத்துக்கு பாங்கான படியே போது போக்கி அருள வேணும் -என்று
ஸ்தோத்ர ரூபமான வற்றை விண்ணப்பம் செய்யுமா போலே அவற்றை எல்லாம் இவன் பக்கலிலே செய்கிறாள்

பழுதின்றிப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறவதில் ஒரு பழுது இன்றிக்கே –

பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்-
பார் சூழ்ந்த கடல் போலே இருக்கிற வடிவை உடையவனுக்கே அடிமை செய்து வாழப் பெறாது ஒழியில்

அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்-
நான் அழுது அழுது -தடுமாறி -இழவோடே சஞ்சரித்து கால ஷேபம் பண்ணுமது உனக்கு உறைக்கும் கிடாய் –
ஆற்றவும் -மிகவும்
ஆதாய ஸூ க்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -யுத்த -18-30-சரணா கதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாப பலத்தை அவன் அநு பவித்து அவனுடைய ஸூக்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக சொல்லா நின்றது இ றே –
அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின ஆஸ்ரயணத்துக்கு பலம் இன்றிக்கே ஒழியுமாகில் அது உனக்கு பொல்லாதமாம் கிடாய் –
அவன் தான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு அங்கக் காரனாய் நின்று இ றே அவர்களைச் சேர்ப்பது –
நம்மையும் உம்மையும் சேர்த்தான் -இவன் நல்ல அங்கக் காரனாய் இருந்தான் -என்று அவன் -ருத்ரன் -கொண்டாட-
அவனுடைய திருஷ்டி தோஷத்தால் இ றே இவன் அநங்கன் ஆயத்து –

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—
எருத்தைக் கொண்டு தன்  ஜீவனார்த்தமாக கார்யம் கொண்டு -அனந்தரத்திலே அத்தை ஒன்றாலே தள்ளி
அதுக்கு ஜீவனம் இடாதே துரத்துமா போலே இருப்பது ஓன்று கிடாய் நான் வருந்தினதுக்கு ஒரு பலம் இன்றிக்கே ஒழியுமாகில் –

————————————————————————

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –

அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே -இப்பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக -வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: