Archive for August, 2015

திருப்பாவை — முப்பத்து மூவர் — வியாக்யானம் .தொகுப்பு –

August 22, 2015

அவதாரிகை –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டு வுதி என்று கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியையும்
கூட எழுப்புகிறார்கள் –
இப்பாட்டில்–மீளவும் எம்பெருமானை எழுப்பி–அங்கு மறுமாற்றம் பிறவாமையாலே–நப்பின்னை பிராட்டியை எழுப்பி
வந்த கார்யத்தை அறிவிக்கிறார்கள் —
திரு உள்ளம் பார்த்து உணர்த்த சமயம்–இவள் தன்னையும் –பற்றினாலும் கார்யம் செய்யக்  கடவன்–போக -பரவசன் -வார்த்தை கோபம் வருமோ
நீ முன்பு ஆர்த்த ரஷணம் பண்ணி ஆர்ஜித்த குணங்கள் இழக்கப் போகிறாய் சொன்ன இடத்திலும் வாய் திறவாமையாலே
நப்பின்னை பிராட்டி இடம் -தத்துவம் அன்று தகவு -என்று சொன்னதும் அசஹ்யமாய் போனதே
தேக ஆத்ம குணங்கள் சொல்லி ஏத்தி–அவன் பரதந்த்ரன் —எங்களுக்கும் அவனுக்கும் கடவையான நீ -கடகர் சேர்த்து -இருவருக்கும் எஜமானி நீ –
உன் மணாளனையும் தந்து எங்களை நீராட்டு என்கிறார்கள்-

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

முப்பத்து மூவர் -இத்தால் துர்லபத்வம் சொல்லுகிறது –
ரஷணத்துக்கு சங்க்யா நியதி உண்டோ –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் ஆனால் ரஷிக்கல் ஆகாதோ -ஆர்த்தியே கைம்முதலாக ரஷிக்குமவன் அல்லையோ –
அபரிமித சாங்க்யாகரான –
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் 33 -பொய்கை ஆழ்வார்
இரு நால்வர் ஈர் ஐந்தின் மேல் ஒருவர் -எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் –யாம் ஆர் வணக்கமாறு பெரிய திருவந்தாதி –
மூவர் -ப்ரஹ்ம ருத்ரன் இந்த்ரன் -முன் சென்று கப்பம் தீர்த்தான்-
முப்பத்தி மூன்று வித பக்தி -மூவர் அதிகாரிகள் மூவர் -மூன்று வித பக்தி பிரபத்தி
அஜஞாநத்தாலே ஞானாதிக்த்தாலே பக்தி பாரவச்யத்தால் பிரபத்தி
ஸ்தான த்ரயோதி பக்தி கத்யம் -கர்ம யோகம் -ஞான யோகம் -பகவத் அனுபவம் –
ஜனக சக்கரவர்த்தி -கர்ம யோகி –

அமரர்க்கு-ஜ்ஞான சங்கோசம் இல்லாதவர்களுக்கு –
எல்லா அளவிலும் சாவாதார்க்கோ உதவல் ஆவது –உன் நோக்குப் பெறாவிடில் சாகும் எங்களுக்கு உதவலாகாதோ –
முகாந்தரத்தாலே ஜீவிப்பார்க்கோ உதவலாவது – உன்முகத்தாலே ஜீவிப்பாருக்கு உதவலாகாதோ –
பிரயோஜனாந்த பரருமாய் மிடுக்கரும் ஆனார்க்கோ உதவலாவது–அநந்ய பிரயோஜநைகளுமாய் அபலைகளுமாய் இருப்பார்க்கு உதவலாகாதோ –
சமிதி பாதி -சாவித்திரி பாதி –ஸுய ரஷணம் செய்தால் தான் ரஷிப்பாயா-வியதிரேகத்தில் பிழையாத நாங்கள் இருக்க

முன் சென்று -அவர்களுக்கு பிரகிருதி சம்சர்க்கத்தாலே சங்கோசம் வருவதற்கு முன்பே ரஷகனான தான் அவதரித்து நின்று
நோவு வருவதற்கு முன்னே சென்று–ஏற்கவே ரஷிக்க கடவ நீ–நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –
நினைவில் குற்றம் ஆக்கி நினைவுக்கு முன்னே வரை முன் ஏந்தும் மைந்தனே
முன் இடமும் காலமும் முன்
பார்த்தன் தன் முன்–வரைக்கு –முன் சென்று- ஒவ் ஒன்றுக்கும் பாவம் காட்டி அருளுகிறார்-ஆதி மூலமே என்று அழைத்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு நீ வந்த த்வரைக்கு நமஸ்காரம் என்றார் அன்றோ ஸ்ரீ பராசர பட்டர் –

சென்று –
நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ –
உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ -எழுதும் என்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-

கப்பம் தவிர்க்கும் –
கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துச் சொல்கிறது – அதாவது நடுக்கும்
கம்பம் தவிர்க்கையாவது –
அசுர ரஷசாதிகளாலே குடி இருப்பும் அகப்பட இழந்து கிலேசித்த அத்தை தவிர்க்கை –
நாட்டார் நடுக்கத்தை தடுக்கக் கடவ நீ எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய் –
துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்ட தேவர்களுக்கோ உதவலாவது – நீ உணரும்படியைக் காண ஆசைப்பாட்டாருக்கு உதவலாகாதோ –

கலியே –
மிடுக்கை உடையவனே -சாமர்த்தியத்தை உடையவனே –
அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -என்றுமாம் –

செப்பமுடையாய் –
ஆஸ்ரிதர்க்கு செவ்வை அழியாது இருக்குமவனே —எங்களுக்கு செவ்வை அழியாது இருக்க வேண்டாவோ-
செப்பம் -ரஷை -என்றுமாம் —செப்பம் -ஆர்ஜவம்-ஆஸ்ரிதர் தம்மை அனுபவிக்கும்படி தான் பாங்காய் இருக்குமவனே
எங்கள் செவ்வை கெடும் உன்னுடைய செவ்வியால் நிரப்புவாய் என்று இருந்தோம்
நாங்கள் வர நீ உணராமால் அசத்சமம்–விரகாலே நீரை மேட்டிலே ஏற்றி–வாத்சல்யம் ஏறிப் பாய வேண்டாமா-

திறலுடையாய் -அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணா தவனே –
திறல் -பராபி பவன சாமர்த்யம்-அநாஸ்ரிதர்க்கு அன்றிகே எங்களுக்கு அணுக ஒண்ணாது இருக்கைக்கோ –

செப்பமுடையாய் திறலுடையாய் –
பாண்டவர்களுக்கு செவ்வியனாய்–துரியோதனாதிகளுக்கு அனபி பவநீயனான வனே
திறல் -மிடுக்காகவும்-

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் -செய்குந்தா வரும் தீமை -இத்யாதி–இப்போது அனுகூலர் பக்கலில் ஆய்த்ததோ –
விமலா -என்றது
சம்பந்தம் ஒத்து இருக்க–ஆஸ்ரிதர்க்காக கண்ணற்று அழிக்க வல்ல சுத்தி –
பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இத்தால்
பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –
பாஞ்சாலி பட்ட துக்கம் நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்தான் -பெருக்கி ஒருத்திக்கும் நூறு பங்கு
நூற்றுவர் தம் பெண்டிரும் அலக்கண் எய்தி நூல் இழப்ப —நூல் வஸ்த்ரம் திருமாங்கல்யம்

துயில் எழாய்-
அம்பு எய்ய வேணுமோ எங்களுக்கு —எழுந்திருந்து நோக்க அமையாதோ –

செப்பன்ன மென்முலை –
அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே–புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
மேல் அவன் அகப்படும் சுழிகள் சொல்லுகிறது –
நிதி இட்டு வைக்கும் செப்புப் போலே அவன் கிடைக்குமிடம் —மலராள் தனத்துள்ளான் -என்னக் கடவது இ றே-
செப்புப் போலே சந்நிவேசம் என்னவுமாம் –
அம்முலையில் வர்த்திக்குக்ம் மலையில் உள்ளார் உகந்து உண்ணும் கனியும் தேனும்–செவ்வாய் கோவை வாயாள் பொருட்டு
முறுவலுக்காய் வல் தலைவன்

மென்முலை
விரஹசகம் அன்றிக்கே இருக்கை-

செவ்வாய்
அவனைத் தனக்காகிக் கொள்ளும் ஸ்மிதம் -அந்த முலையிலே இருந்து அனுபவிக்கும் ஜீவனம் –

சிறு மருங்குல் –
மேலும் கீழும் கொண்டு-இடை உண்டு -என்று அறியும்படி–பய ஸ்தானமாய் இருக்கை

நப்பின்னை நங்காய் –
பூர்ணை ஆனவளே–பூர்த்தி ஆகிறது —அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –

திருவே
ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே —சம்ச்லேஷத்தால் வந்த துவட்சி -சம்போக ஸ்ரீ உடையவள் –

துயில் எழாய் –
நீ உணர்ந்து எங்கள் சத்தையை உண்டாக்காய் –

திருவே துயில் எழாய் –
பிராட்டியைப் போலே ஆஸ்ரிதைகளான எங்களுக்காக உணர வேண்டாவோ —ஆஸ்ரிதர்காக அன்றோ பத்து மாசம் உறங்காது இருந்தது –

விஷய க்ராஹகமாய்–விஷய விரஹ அசஹிஷ்ணு வாய்–பகவத் விஷய பக்தியையும்–விஷயாந்தர வைராக்யத்தையும்-உடையையாய்-
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்–பிராப்யத்வ–புருஷகாரத்வோப யுக்த–கல்யாணகுண பூர்னையான பெரிய பிராட்டியாரே
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –

எழுந்திருந்து உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
உக்கமும் தட்டொளியும் தந்து–உக்கம் -ஆலவட்டம்–தட்டொளி -கண்ணாடி–பறை என்றுமாம் –

உன் மணாளனை –
புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை–உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –
உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு -என்றுமாம் –
உக்கம் ஸ்ரமம் ஆற்ற–கண்ணாடி எங்கள் வைலஷண்யம் காண–வாசத் தடத்தில் அவஹாகிக்கும் படி பண்ணி அருள வேணும்
ஞான -உக்கம்–தர்சன -கண்ணாடி–பிராப்தி -உன் மணாளன்–மூன்றுமே செய்து அருள வேண்டும் .

ஈஸ்வரனை அழகாலே திருத்தும்–அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் இருக்கும் அம்மான் -யானோர் துக்கம் இலேனே
நப்பின்னை நங்காய்–திருவே -சாஷாத் மகா லஷ்மி தானே –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -பிராட்டி அனுபவிக்க விஸ்வ ரூபம் எடுத்தான் –

இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –

எம்மை
-பஸ்யதி என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள் –

எம்மை –
பேய்ப் பெண்ணே -என்றும்–நாயகப் பெண் பிள்ளாய் -என்றும்–தங்களில் தாங்கள் சொல்லும் இத்தனை –
பேற்றில் வந்தால் எல்லாரும் ஒத்து இருப்பார்கள் -என்றுமாம் –
எம்மை –
எங்களையும் அவனையும் கூட–முழுக்காட்ட வேண்டும் -என்றுமாம் –

நீராட்டு
இவர்கள் உகப்பது இவள் தந்த கிருஷ்ணன் -என்று —பெருமாள் பிராட்டி உடைய சௌந்த்ர்யாதிகள் கிடக்க
ஐயர் பண்ணி வைத்த விவாஹம் என்று உகப்பர்—அது போல் கிருஷ்ணன் பக்கல்–பிராப்தியும் போக்யதையும் கிடக்க –
இவள் தந்த கிருஷ்ணன் என்று உகப்பர்கள் –

ஸ்வா பதேசத்தில்
கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும்–யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும்--இவ்விரண்டையும் கொடுத்து –
உனக்கு பவ்யனான–ஈஸ்வரனை இந்த ஷணத்திலே–பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை–சம்ச்லேஷிப்பி -என்கிறார்கள் –
உன் மணாளனையும் தந்து–நீராட்டு என்கிறார்கள் -ஆகவுமாம் —இந்த யோஜனையில்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –

நீராட்டு மாலை–சாற்றி அருளுகிறாள்
இப்போதே எம்மை நீராட்டு -தாபத் த்ரயம் தீர
எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்– எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான்
ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-
ஷூத்ருட் பீடித நிறதநரைப் போலே கண்டு கொண்டு பருகி -ஆச்சார்யஹிருதயம்-

செப்பம் உடையாய் ஆர்ஜவம் -மநோ வாக் காயம் கரண த்ரய சாரூப்யம்
திறலுடையாய் -பராபிபவன சாமர்த்தியம்-செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே-
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூ தராணாம் அந்தர் ஜுவரமசி சமத்–அத்தை செற்றார் உள்ளத்திலே போக்க விட்டார்-
சோக வஹ்நிகம் ஜனகாத்மஜாயா ஆதாய தேநைவ ததாஹா லங்காம் -என்று
பிராட்டி திரு வயிற்றில் இருந்த சோக அக்னியை கிளப்பி இலங்கையை கொளுத்தின திருவடி போலே-சுருதி அந்தர் ஜுரங்களை எடுத்து செற்றார் வயிற்றில் எறிந்த படி-

நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஒரு கார்யம்
நாரணனை காட்டிய வேதங்கள் களிப்புற்றது -இரண்டாவது
தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மூன்றாவது
எதிராசர் பேர் அருளால் வியாக்யானம் பகவத் விஷயம்
விமலா துயில் எழாய் -கலியன் ஸ்வாமி –
பசி தாகம் இருக்கும் நினையாமல் -விமலா அகில ஹேய பிரத்யநீகன் –கல்யாண -ஞான ஆனந்த-வி ம லா மூன்று எழுத்து-ஆளவந்தார் கப்பம் தவிர்த்த கதை

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — குத்து விளக்கு எரிய — வியாக்யானம் .தொகுப்பு –

August 21, 2015

 அவதாரிகை –

இவள் திறக்கப் புக–நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி —அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்
அவளை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு–என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்–ந கச்சின் ந அபராதி -என்னுமவளும்
இருவரும் உண்டு என்கை-மிதுனமே தஞ்சம்-
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே நமக்கு தஞ்சமாய் இருப்பதொரு மிதுனம் உண்டு என்கிறது –
தனித் தனியே பற்றுமவர்கள் தங்கையும் தமையனும் பட்ட பாடு படுவார்கள்
தனியன் -பட்டர் -இத்தைக் கொண்டே–நீளா துங்க —பாரார்த்த்யம் -சிற்றம் சிறு காலை பாசுரம் —இரண்டும் சாரமான பாசுரங்கள்
எம்பெருமான் கை கீழே கீழ் பாசுரம்--இங்கே மேல் ஓங்கி அவன் மார்பு விசாலம் என்று–கிருபை மிக்கு என்பதை காட்ட-சேர்ப்பதற்கு முன் அவள் மன்னாடும் – சேர்த்த பின் இவள் மன்னாடும்–நாம் இப்படி பட்டவர்களை தஞ்சமாக
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கோயில் சீய்த்து–ஆள்கின்றான் ஆழியான்–அம்பின் கூர்மையையும்-கூர் அம்பன் அல்லால் குறை -இல்லை துணை -கூர்மையையும் புகரையும் நினைத்து பகவத் நிஷ்டர்
மை தடம் கண்ணினாய் -கண்ணின் கூர்மை புகர் -அவன் அம்பையும் ஏவுமே- நமக்கு தஞ்சம் –

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்-
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே–கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே–பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக்கொண்டு–படுக்கையிலே கிடக்கப் பெறுவதே–இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க ஓர் நிலை விளக்கு உண்டாவதே –
ஞானம் பிரகாசிக்க
கிருஷ்ணனும் நாங்களும் விளக்கும் படுக்கையும் ஆக வேண்டாமா–உன்னுடைய அனுபவத்துக்கு இது தான் பிரயோஜனம்
உண்ணாதார்க்கு உண்டார் -கொடுக்க வேண்டாவோ–குத்து விளக்கு வேண்டிய இடத்தில் பேர்த்து-நிலை விளக்கு போலே இல்லை–வேண்டிய இடம் வைத்து கைங்கர்யம் செய்ய நாங்கள் வேண்டாவோ
புறம்பே ஒரு கொடி விளக்கு தோரண விளக்கு பிரகாசிக்காமல்–உள்ளே குத்து விளக்கு பிரகாசிக்க
கோபிகள் துக்கம் நப்பின்னை மட்டும்–குத்து விளக்கு நப்பின்னை–கொடி விளக்கு கோபிகள்-
ஆயர் பாடிக்கு அணி விளக்கு பிரகாசிக்கைக்கு இட்ட நிலா விளக்கு இவள் இ றே
இவள் தன்னை காட்டுகையலே ஸ்வயம் பிரகாசகம்–பாரதந்த்ர்யம் கொண்டு அவன் தன்னை காட்டாமல்
ராமன் -ஜனகாத்மஜா அப்ரமேயம்–திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும்
கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இ றே —வீர பத்னி ஆகையாலே
இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –
சதுர்வித கர்த்ருத்வ மூலமான–அஹங்கார கார்யமான–சேஷத்வே கர்த்ருத்வம்–ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வம்-கர்த்ருத்வே கர்த்ருத்வம்–போக்த்ருத்வே கர்த்ருத்வம்–ஆகிற கால்களை உடைத்தாய்
அந்த கர்த்ருத்வ விஷயமான–தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற–பட்டங்களை உடைத்தாய்-தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற-கட்டில் மேல் என்கிறது –

மெத்தென்ற –
மெத்தை ஆகிலும்–கட்டில் -ஜாதி பேச்சு–கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே —கண் உறங்குவதே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி —அதாவது–அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை
மெத்தென்ன பஞ்ச சயனம் -அழகு குளிர்ந்தி மென்மை பரிமளம் வெண்மை–மென்மை-விசேஷித்து
துளிர் மலர் பஞ்சு மெல்லிய கம்பளம் பட்டு -இவற்றால் என்றுமாம்–பஞ்சால் ஆன என்றுமாம்
இவர்களுக்கு மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இ றே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் —பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –
சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே–மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற–படுக்கையின் மேலேறி –

மேலேறி –
நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ–நீ படுக்கையிலே ஏறுவது என்கை –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக–அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்
காலம் அலர்த்துமா போலே–அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை —வாசம் செய் பூம் குழலாள் இ றே –

கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை —கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் -கொங்கை மேல் வைத்து கிடந்த -அவளை இழுத்து தன மேல் கொண்ட அவதாரிகை படி
பிரணயம் இருக்குமாறு —மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே —மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இ றே —
மலர்மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே–அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ-என்னில் விரோதியாது–அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இ றே –
வர்க்கம் வர்க்கம் ஆகிற–விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய
பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற–அளகபாரத்தை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு–அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
மலர் மார்பா -மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது -இது ஸ்வரூபம் பற்றி –அபிமத ஜன லாபத்தாலே அவிகாராயா இருப்பவனும் விகாரம்
யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தன பந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
அடைக்கலத்து ஓங்கும் –புடைகலர்ந்தானை –திருவிருத்தம் புடைக்க அலர்ந்தானை –அலந்தானை இல்லை –

நாண் தழும்பால் சரசரப்பை -பார்த்தாராம் பரிஷச்வஜே -ஆண் என்று அணைத்து
ச்த்ரீயம் புருஷ விக்ரஹம் என்று மற்றை பொழுது ஆண் உடை உடைத்த பெண்ணோ நீ தமப்பன் நினைப்பார்-
மாதங்கம் -ராவணனை பிடித்த சிங்கம் போலே ராமன்–லோக நாதச்ய புஜம் -பதிம் விச்வச்ய–பிரபன்னர் -ப்ரஹ்மத்தை உணர்ந்தவர் பயம் விட்டு -பிராட்டியோபாதி–தம்தாமுக்கு கைம்முதல் இல்லாதார் அவன் கை முதல் பாஹூ பலமாக வேண்டாவோ
தாரதம்யம் பார்க்காமல் -பரிபூர்ணன் —விலக்காமை ஒன்றே வேண்டுவது–அபுத்தி பூர்வகமாக செய்த பிரபத்தி காக்காசுரன் –
சரண்யன் நீர்மையே —பலத்துடன் சந்திப்பிக்கும் அதுவே உபாயம் —கிருபை -தான் சாதனம் தத்வார்தம்
சர்வ ஸ்தானம் -மகா பலி தானம் -யாகம் உள்ளது எல்லாம் தானம் கொடுத்த வெருவியனுக்கு வரும் ஐஸ்வர்யம் அவன் கிருபையால்
ஆர்த்தோவா யதிவா திருப்த -பரேஷாம் -ஹரி —ஆர்த்தான் துக்கத்துடன்–திருப்தன் அரை மனசுடன் நம் போல் வரும் பிரபன்னர்
பிராணான் பரித்யஷம் பிராணனை விட்டு கூட ரஷிக்க வேண்டும்
இரண்டு கிரியையால் பலம் இல்லை–பலம் நீர்மையால் பிரபத்தி எதற்கு ஏன் என்னில்
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே–ஸ்வரூப நிஷ்டை சாதானம் இல்லை-ச்வீகாரம் பற்றவும் வேண்டும் உபாய நைரபேஷ்யம்-
பற்றும் பற்றுதலில் உபாய பாவம் தவிர்க்கிறது-மிதுனத்தின் காலில் விழுவத்தின் காட்டிலும்–மிதுனத்தை சுமைக்கு-கோட்டுக்கு கால் கட்டிலின் – காலை கட்டி கொள்கிறார்கள்
கேசவனையும்-கவரும் குழல்-பின்னை மணாளனை குழல் வாராய் அக்காக்காக்காய் கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –

வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே–ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே–உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு–ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது–மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –
நீ வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்றவாறே -அவன் வாய் திறக்கப் புக –
அவனை நீ க்ரமம் தப்பி நடப்பதே -என்று கண்ணாலே அதட்ட–அவனை எழுப்புகைக்காக–மீளவும் அவளை எழுப்புகிறார்கள்
பிரிக்க ஒண்ணாது இ றே -மிடற்று ஓசையே வாழ்விக்குமே
கூவுதல் வருதல் செய்யாதே -என்று ஆழ்வாரும் கூவுதலையே முதலில் அபேக்ஷிக்கிறார் மிதுனத்தை பிரிக்கக் கூடாது என்று
பின்னர் வந்தாலும் மிதுனம் உடனே வருவான் என்று தேறி வருதல் என்றும் அருளிச் செய்கிறார் –உன்னால் அல்லாது செல்லாது இருக்க எங்களுக்கு–வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என்
திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே–நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்–கிடந்த இடத்தே கிடந்து- மாசுசா என்னவும் அரிதோ
உன் மார்பை நப்பின்னைக்கு தந்தாய் ஆகிலும் வாயையாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
நாங்களும் உன்னைப் போலே மைத் தடம் கண்ணிகளாக வேண்டாவோ
பொதுவாக உண்பதனை நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே

மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக —நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று–கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்–அக்கடலை கரை கண்டால் இ றே நம்மைப் பார்ப்பது-
மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும்மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்–எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —அது இழவுக்கு உடலாவதே –
சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே–விஸ்ருங்கமான–ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –
அஸி தேஷிணாம்–இக்கடலை கரை கண்டாலே இ றே நம்மை பார்க்க முடியும்
நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ–அவனை விலக்கக் கடவையோ –
ஸ்வரூப யாதாம்ய தர்சியான நீ –

உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய–உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு–எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே–இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –

எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ —அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத–உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விச்லேஷமும்–பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு–உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –
சம்ச்லேஷ அர்த்தமான விச்லேஷமும் நீ பொறுக்குகிறிலை-அது உன் குற்றமோ-உன் பல ஹானியின் குறை
அத்யல்ப காலமும்–நித்ராப்ரதமான படுக்கையின் நின்றும்–எழுந்திருக்க ஒட்டுகிறது இல்லை
ஒட்டுதல் -சம்மதித்தல்–ஏன் என்னில் –
சம்போக வ்ய்சதமாக கட்டின கை நெகிழ்கிலும் உடம்பு வெளுப்புதீ
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய்–புணர்ச்சிக்காக பிரியிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி

தத்வம் அன்று தகவு –
தத்வம் -சத்யம்–தகவன்று -தர்மம் அன்று–எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று —தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்
அதவா
தத்வமன்று–தத்வம் -ஸ்வரூபம் —உன் ஸ்வரூபத்துக்கும் போராது –
தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது–உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது கிருபைக்கும் போராது –
தத்துவமன்று தகவு
ஆகிலும் புருஷகார பூதையான உனக்கு-எம்பெருமானை நம்மோடு சேர ஒட்டாமல்-பண்ணுகை ஸ்வரூபம் அன்று-
தத்துவம் அன்று தகவு
தத்துவம் -நாங்கள் சொன்னது ஆற்றாமையால் கண்ணாம் சுழலை இட்டு சொன்னது அன்று உண்மையே சொன்னோம் இத்தனை காண்
அன்று தகவு -எங்கள் பக்கலிலும் நீ இங்கன் உபேஷை தோற்ற இருப்பது தருமம் அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவு -உனக்கு நீர்மை உண்டு எனபது உண்மை அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்றி தகவும் அன்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை-
தகவு உண்டு என்று சொன்னது உண்மை இல்லை
தத்தவம் உண்மை இல்லை கிருபை
கிருபை உண்டு சொன்னது உண்மை இல்லை
ந கச்சின் ந அபராதி அவன் -திருவடி பரிகரம் நலியும் பொழுது தான்
உன் பரிகரம் அவனால் நோவு படும் பொழுது சொல்ல வேண்டாமா —பார்த்து இருக்கும்–ஷிபாமி என்றவன் உடன் உன்னோடு வாசி இல்லை
தத்துவம் -இன்றியமையாமை -உயிர் நிலையாய் இருப்பவன் தத்துவனை வரக் கூவி-தலை யல்லால் கை மாறு இல்லை -தலையை அறுத்து கொடுப்பது இல்லை
நாயகன் வந்தால் கூட வேண்டுமே பெற்றி -நம்பிள்ளை -தலையை காலில் வைத்து வணங்கி காலம் எல்லாம் பணி செய்து கிடப்பேன் –
இட்ட கைங்கர்யங்களை உகந்து பணி செய்வேன் என்றபடி -ஆசார்யர் அடிகளில் பணிந்து கால ஷேபம் கேட்டே அறிய வேண்டும் உணர்ந்தேன் என்றாராம்

குத்து விளக்கு -நப்பின்னையே கொண்டு வியாக்யானம்–ஜீவாத்மா பரமாத்மா இருவரும் சுயம் பிரகாசம் -அஜடம் –
அசேதனம் ஜடம் -அறிந்து கொள்ள வேறு ஓன்று வேண்டும்–அந்ய அதீன பிரகாச வஸ்து
நான் சொப்பணம் கண்டேன் -நான் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்–இப்பொழுது நப்பின்னை பிராட்டியால் கண்ணனை காட்டிக் கொடுக்க –
அபிரகாசமுமாய் அந்ய அதீன பிரகாசமுமாய் -நின்று எறியும் ஆயர் குலத்து அணி விளக்கு இருக்கிறது நன்றாகதெரியும் படி
சுயாயம் பிரகாசமுமாய் பர பிரகாசமுமாய் நப்பின்னை பிராட்டி ஆகிய குத்து விளக்கு காட்டிக் கொடுக்கிறதே –
தன்னையும் காட்டாதே தன்னுடைய புருஷகாரத்தால் அவனையும் காட்டிக் கொடுக்காதே இருப்பதே
பாஸ்கரன் பிரபை போலே சீதை பிராட்டி -தன்னையும் காட்டி ஆதித்யனையும் காட்டிக் கொடுக்கும் படி –
ஆயர் பாடிக்கு அணி விளக்கு பிரகாசிக்க இட்ட நிலை விளக்கு இ றே இவள் தான் –

தன்னை தான் காட்டாமையாலே அபிரகாசகம்–பாரதந்த்ர்யத்தால் அந்ய அதீன பிரகாசம் ஆனதே
இவள் தன்னை காட்டுகையாலே சுயம் பிரகாசம் ஆகிறாள் —ஸுய ஆஸ்ரயம் விலக்குகையாலே பர பிரகாசகம் ஆகிறாள் –

பிராட்டி பற்ற புருஷகாரம் வேண்டாமே ஸுய பிரகாசகம்–கண்ணனை காட்டி தருவதால் பர பிரகாசகம்
அவனுக்கு விளக்கு இ றே இவள்–ஔ ஜ்ஜ்வல்யம் பிரபை
திகழ்கின்ற தன்னோடும் திகழ்கின்ற திருமால் —வைஷ்ணவ சாத்தம் இல்லை அவனாலே இவளுக்கு ஏற்றம்
பூவுக்கு மணம் போலேயும் ரத்னத்துக்கு ஒளியை போலேயும்–மணம் வஸ்து இல்லை விசேஷணம் இத்தால் தான் வஸ்துவுக்கு ஏற்றம்
அடங்கி கீழ்பட்டு அவனுக்கு ஏற்றம் கொடுக்கிறாள்–கபோதம் -ஒப்பு சொல்லி -கபோதி பெண் பறவை -பிராணனை விட்டு ரஷித்தது-
அரை ஷணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமல்–பஷி பெருமாள் திரு உள்ளம் புண் படுத்திற்றே -அமுதனார்
தகவு மாலை -சாற்றி அருளுகிறாள்
தத்துவம் அன்று தகவன்று –தத்வமஸி வாக்யார்த்தம் பிறர் சொல்வது தகவு அன்று
தத் -பிரமம் தவம் ஜீவாத்மா ஒன்றே என்னும் தத்வம் தகவன்று
தத்வமஸ் யேவமாத்யா வ்யாக்யாதா ரங்கதாம ப்ரவண விஜயபிர் வைதிகை சார்வ பௌமை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -24-
மைத்தடம் கண்ணினாய் –சித்தாஞ்சனம்-ஞான விகாசம்பெற்ற
எத்தனையேலும் பிரிவு ஆற்ற கில்லாத -ஆச்சார்யனை பிரிந்து இருக்க மாட்டாத சிஷ்யன்

தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும-குத்து விளக்கு -ஜங்கமம் இருக்கும்
குத்து விளக்கு எரிய -நம்பி பக்கலில் அர்த்த விசேஷம் கேட்டு அறிய
கோட்டு -கோட்டி
கால் கட்டு -திருவடி தொட்டு சபதம் செய்து கொடுத்த பின் அர்த்த விசேஷம் அருளியது ஸூ சகம்
மேல் ஏறி -சன்னதியின் மேல் ஏறி
ஆச்சார்யர் திவ்ய ஆஞ்ஞையைக் கடந்து–இத்தாலே மலர்மார்பா ஹிருதய வைசால்யம்

நாத முனிகள் தனியன் திருவாய்மொழி -1000 -கேட்டவர் கொண்ட வார்த்தை -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
பக்தாம்ருதம் —-திராவிட வேத சாகரம் -திருத்திலனேல் நிலத்தேவர் தம் தாம் விழாவும் அழகும் என்னாகும் -சடகோபர் அந்தாதி
பட்டர் -குத்து விளக்கு பாசுரம் கொண்டே -கொங்கை மெல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -நீளாதுங்க ஸ்தன -தனியன்
அத்யாபனம் ப்ரஹ்மாவுக்கு வேதம்–இங்கே ஆண்டாள் தூங்கு மூச்சி கண்ணனுக்கு கேளாய் -வைத்து கிடந்த மலர் மார்பா –
அத்யாபயந்தி -ஸ்ருதி சிரஸ் சத-
தோரண விளக்கு திருக் கோஷ்டியூர் நம்பி
திருமாலை ஆண்டான் -கிடாம்பி ஆச்சான் 2/3 இடங்களில் தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி –
அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால்-எம்பெருமானார் நிர்வாகம்
குத்து விளக்கு எம்பெருமானார் -எங்கும் கொண்டு போகலாம்
கீதா பாஷ்யம் -த்யானம் செய்து வஸ்து பதாம் போஜம் அசேஷ கல்மிஷம் போக பெற்று
த்ரோணாசார்யர் ஏகலைவன் -இவ அஹம் யாமுனாசார்யா -தேசிகன் –
நேரான சிஷ்யர் பண்ணின தனியன் நம் இடம் இல்லை–உடையவர் செய்து அருளிய தனியனை அனுசந்தித்து வருகிறோம்
த்யானம் சப்தம் -சரம திருமேனி சேவிக்கப் பெற்றாலும் -அத்தை சொல்ல வில்லை —ஸ்மர்த்வயம் த்வயமும் குரு பரம்பரையும் –

கோட்டுக்கால் கட்டில் கால் நான்கு–13 விஷயங்கள் -நான்கு வித ஆசார்ய ஹிருதயம்–தேக -ஆஸ்ரய இத்யாதி
சாஸ்திரம்
மெத்தன்ன சயனம் ஐஞ்சு லஷனங்கள் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதற்க்கு உள்ளே உண்டு அர்த்த பஞ்சகம்
மேல் ஏறி
கட்டில் மேல்
மேல்
மறுபடியும் மேல் ஏறி
திரு கோஷ்டியூர் நம்பி அர்த்தம் கேட்க மேல் ஏறி
பலம் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட செய்வோம் –
மலர்ந்த மார்பு -ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று –
மைத்தடம் கண்ணினாய் —தோஷம் போனால் தான் கண்–பக்தி சித்தாஞ்சனம் –
வந்து திறவாய் மணக்கால் நம்பி பச்சை இட்டு–கொள்ள வந்தேன் அல்லேன் கொடுக்க வந்தேன் –
குருகை காவல் அப்பன் -சன்னதி காட்டு மன்னார் கோயில் 10 மைல் தூரம் –
தை மாசம் குரு புஷ்யம் 12 மணிக்கு வரச் சொல்லி —சொட்டை குலத்தார் யாரேனும் வந்தார் உண்டோ
நாதமுனிகள் -ஆழ்வாரை சாஷாத் கரிதததால் வந்த ஸ்ரேஷ்டம்
நடமினோ நமர்கள் உள்ளீர் -ஆழ்வார் சம்பந்தம் வேண்டுமானால்
நாமும் உமக்கு அறிய சொன்னோம் ஆளவந்தார் இடம் அரையர் -அத்யயன உத்சவம் சேவித்து கொண்டு இருக்கும் பொழுது
புஷ்பக விமானம் பெற்றிலோமே —எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத் தவம் அஸி -தத்துவம் அன்று -தகவேலோ
சர்வம் கல்மிதம் ப்ரஹ்மா
ஐகதாத்மாம்யம் இதம் சர்வம்
தத் தவம் அஸி
நீர்மையினால் அருள் செய்தான் கலைகளும் –
காருணிகனான சர்வேஸ்வரன்–நந்தா வேதா விளக்கை கண்டு–மறையாய் -சாஸ்திர பிரதானம் –
சரீர லஷணம் –தார்யம் நியாம்யம் சேஷத்வம் ஸ்வரூபம்–யஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் ஏகோ நாராயணா
தத் தவம் அன்று –
பிரிவு நமக்கு எம்பெருமான் இடம் உண்டா
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் இன்றாகா நாளையாக –நான் உன்னை அன்றி லேன் நீ என்னை அன்றி இலேன் -கண்டாய் நாரணனே –

சீரிய சிங்காசனம் -ஆசனம் சிங்காசனம் சீரிய மூன்று
மூன்றும் உண்டே பேத அபேத கடக ஸ்ருதி
சீரார் வளை ஒலிப்ப மூன்றும்
செந்தாமரைக் கை மூன்றும் இத்தையே குறிக்கும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — உந்து மத களிற்றன் — வியாக்யானம் .தொகுப்பு –

August 21, 2015

அவதாரிகை –

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே தங்களுக்கு புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்பு கிறார்கள் –
அவள் புருஷகாரமாக அவனைப் பற்றுவதே பல வ்யாப்தம் ஆவது- இதுதான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம் –
அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்பணகை அனர்த்தப் பட்டாள் இ றே பெருமாளை ஒழிய பிராட்டியைப் பற்றின ராவணனும் அனர்த்தப் பட்டான்
இருவரையும் பற்றினால் இ றே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழ்வது அபிநிவேச ப்ரேரிதர்கள் ஆகையால் முந்துறவே கிருஷ்ணன்
பக்கலிலே மேல் விழுந்தார்கள் இவர்கள் . அங்கு கார்யம் பலியாமையாலே வழியே போக வேணும் என்று புருஷகாரத்தில் இழிந்தார்கள் –
ஆஸ்ரயண வேளையிலே இ றே க்ரமம் பார்ப்பது -போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாது இ றே-

பிராட்டிக்கு வேற புருஷகாரம் வேண்டாமே அவளுடைய கருணையே-வெந்நீரை ஆற்ற தானே தண்ணீர் வேணும்
பரதசையில் நாய்ச்சியார் மூவரையும் வ்யூஹ தசையில் இருவரையும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையும்
ஸ்ரீ வரஹாவதாரத்தில் ஸ்ரீ பூமி பிராட்டி ஒருவரையும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியையும்,முன்னிடிவது சம்ப்ரதாயம்

மா சதிர் இது பெற்று–சு பிரயத்னம் அடைவது இழிவு இழிம்பு-எளிவரவு தாழ்வு
கிருபையாலே பெறுவது சதிர்–பிராட்டி முன்னிட்டு பெறுவது மா சதிர்
எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்தது -செய்த கார்யம் –
மாதவன் என்றதே கொண்டு —தீதவம் கெடுக்கும்–உபாயம் -உக்தி மாதரம் இவர் மட்டும் பலன் சம்பந்தி எமர் யெழ் எழு பிறப்பும் வெள்ளம் இட்டது
திருக்கண்டேன் —சார்வு பூ மேல் அமர்ந்த திரு -பேய் ஆழ்வார் மட்டும் தேன் அமரும் பூ மேல் திரு —சார்வு நமக்கு என்றும்
சக்கரத்தானும் முயங்கும் திரு மகதா பெரிய பெயர் பெற்றார் –
எம்பெருமானாரும் -கத்ய த்ரயத்தில் -த்வய நிஷ்டை உண்டாக பிராட்டி-

நப்பின்னை சரணம் புக்கு இதில் அனந்தரம்
அடுத்து இரண்டு சேர்த்து -உபாய சித்திக்கு உடலாகா மலர் மார்பா -அவனை பற்றி -புருஷகாரமாக அவளை பூர்வ வாக்கியம்
அடுத்த பாசுரம் உபாய சித்திக்கு இருவரையும் பற்றி -கலியே -திருவே துயில் எழாய்-உத்தர வாக்கியம்–அப்புறம் கண்ணனை மட்டும் -அடைய –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

உந்து மத களிற்றன்-
மதத்தை உந்தா நின்றுள்ள களிறு –
மத்த கஜம் போலே இருக்கும் பலத்தை உடையவன் – ஆனைகளுடன் பொரும்படியான மிடுக்கை உடையவன் -என்கை –
உன்மச்தகமான அஹங்காரத்தை வெல்லும் பலத்தை உடைய –
ஸ்ரீ வசூதேவரும் இவரும் ஒரு மிடறு அங்கு இருக்கும் களிறுகள் இங்கே இருக்க தட்டில்லை வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
மிடுக்கு -வாரணம் பைய நின்று ஊர்வது போலே இவன் வயிற்றில் பிறந்ததால்
உந்து -தள்ளுகின்ற -யானையை விட -தள்ளும் மிடுக்கு--யானை உடையவர் கண்ணனே யானை
கிருஷ்ணன் யானை கொன்றது சர்வ சக்தித்வத்தால் இல்லை இவர் பிள்ளை

ஓடாத தோள் வலியன் –
பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் –
நாட்டில் நடையாடாத தோள் வலியன் -என்னவுமாம் -இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று
தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –
அங்கோர் ஆய்க் குலம் -என்று கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இ றே –
ஜகத் விலஷணமான ஞானபலத்தை உடையவனாய் –
ஞானக் கை -என்னக் கடவது இ றே –
அஹங்காரத்துக்கு பிற்காலியாத ஞான பலத்தை உடையவன் என்றுமாம் –

தோள் வலியன் –
நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே –
கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாய் இருக்கை –
கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்லமிடுக்கை உடையவர் இ றே –
அஞ்சினான் புகல் இடம் -அசைலம் -போலே–கிஷ்கிந்தை சுக்ரீவன் -வாலி சாபம்
திருவாய்ப்பாடி அஞ்சினான் புகல் இடம்–அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்–அச்சம் கெடுவது இடைச் சேரி என்று இறே-

நந்தகோபாலன் மருமகளே –
ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று -அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே
ஆனந்த நிர்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆச்சார்யன் உடைய -மருமகள்
ஆசார்யனுக்கு எம்பெருமான் புத்ரவத் விதேயன் ஆனால் – பிராட்டி மருமகள் ஆகக் குறை இல்லைஇ றே –
நந்தகோபன் குமரன் போல் இவளுக்கும் அவனை இட்டே
நந்த கோபாலா எழுந்திராய் இவர்கள் சொல்லும் படி நீர்மையும் உடையவன் தாழ விட்டு கொண்டு மருமகளே -ஆசைப்பட்ட
கிருஷ்ணன் -மச்சினி பால்யத்தில் இங்கே வளர -பிறந்த அன்றே இங்கே இருக்க இங்கே வளர – இவள் உகக்கும் கும்பனே அறியாள்
முக்தனுக்கு சம்சாரம் போலே இவளுக்கு பிறந்தகம்
கிருபை வேணும்–அறம் செய்யும் நந்த கோபாலன் மருமகளாக இருந்தால் தான் கிருபை இருக்கும்
மாமனார் இருந்தார் ஆகில் -இவ்வார்த்தை அசோக வனம் சிறை இருப்பேனா —மிதிலை நினைக்க வில்லையே –
பிரம்மாஸ்திரம்-புழுதி அலைந்த பொன் மேனி காண நானும் பெரிதும் உகப்பேன்-கண்டார் பழிப்பர் லோகத்தார்
நாண் இத்தனையும் இலாதாய் –நப்பின்னை காணில் சிரிக்கும் –
வரப் போகிறவள் -அப்புறம் தான் வந்தான் -மஞ்சனமாட்டிய வாற்றை -அப்புறம் -அவ்வளவு லஜ்ஜை அந்த பருவத்திலே

நப்பின்னாய் –
திரு ஆய்ப்பாடியிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு ஸ்ரீ நந்த கோபருக்கு மருமகள் இல்லாதார் உண்டோ –
நமக்கென்-என்று பேசாதே கிடக்க – நப்பின்னாய் -என்கிறார்கள் -திரு நாமம்
பின்னல் கூந்தல் அழகு–பின் அழகு–ஸ்ரீ தேவி பூமா தேவி பின் பட்டவள்–ந பின்னா பிரியாதவள் -நப்பின்னை
கம்பு -கொம்பு வளைந்து நிற்க ஒண்ணாத தடி -கற்றை -கதிர் மயிர் தொகுதி வளைந்து நிற்கக் கூடிய பொருள்கள்
இவற்றால் முரட்டு ஆண்களும் கில நாரிகளும் சூசிக்கப் படுகிறார்கள்

கந்தம் கமழும் குழலீ –
குழலின் கந்தம் கடுக வந்து மறு மொழி தர –கந்தம் கமழும் குழலீ-என்கிறார்கள்
பரிமளம் தான் நிறம் பெறுவது இவள் திருக் குழலிலே சேர்ந்த வன்று -என்கிறது –
வாசம் செய் பூம் குழலாள் இ றே –
சர்வ கந்தா -என்கிறவனுக்கும் நாற்றம் கொடுக்கும்படி பரிமளம் மிக்க திருக் குழல் –
சர்வ கந்தா -என்னும் அவனுக்கும் வாசனையை கொடா நிற்கிற பகவத் விஷய வ்யாமோகத்தை உடையவரே –
இத்தால் –
ஸ்வ வ்யாமோகத்தாலே ஈஸ்வரனை வசீகரித்து – ஆஸ்ரித ரஷனத்திலே மூட்டி அவனை எல்லாரும் கொண்டாடும்படி
பண்ணுகிறாள் என்னும் இடம் தோற்றுகிறது –

கடை திறவாய் –
கிருஷ்ணன் உடைய பரிமளமும் உன்னுடைய பரிமளமுமாகி தேங்கி நிற்கிற வெள்ளத்தை –
கதவை திறந்து புறப்பட விட்டு எங்கள் விடாயைத் தீராய் -என்கிறார்கள் –
கிண்ணகத்தை அணை செய்தாப் போலே அடைத்துக் கொண்டு கிடவாதேவெட்டி விடாய் -நாங்களும் கண்ணன் என்னும் சென்னிப் பூவை சூடுமாறு கதவை திற என்கிறார்கள்
அவனுடைய பரிமளமும் உன்னுடைய பரிமளமும் காட்டில் எறித்த நிலா வாகாமே நாங்கள் அனுபவிக்கும் படி –
தத் விரோதியான எங்களுடைய அஞ்ஞானத்தை நீக்காய்
அனுபவிப்பார் அவயவம் சந்தனம் பூ வேண்டுமே–நாங்களும் வேண்டாமா-மத்திய ராத்ரியில் எழுப்புகிறது என் என்ன போது விடிந்தது -என்ன விடிந்ததுக்கு அடையாளம் என்-என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
கோழி கூவா நின்றது என்ன – ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும்பின்னை உறங்குமது தான்சாமக் கோழி -என்ன –
கோழி கூவும் என்னுமால் -தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் திருத்தாய் செம்போத்தே – திருமங்கை ஆழ்வார்
முதல் சந்தோஷ வார்த்தை அப்புறம் துக்கம் வார்த்தை
ஜாமம் பிரித்து -கோழி கூவின உடன் வருவேன் அடுத்த கூவலுக்கு போவானாம்
கோழி கூவும் -என்னுமால் -ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்றுவந்ததும் -கோழி கூவும் என்னுமால் தோழி நான் என் செய்கேன் -பாதம் மாற்றி –
கண்ணன் கோழி மடியிலே இட்டுக் கொண்டு வருவானாம்
கோழி வயிறு எரிச்சல் திரு வாய்ப்பாடி உனக்கு அது இல்லையே -எங்களைப் போலே – கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே உனக்கு
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்-ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –

மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவினகாண் –
சுக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில் விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்ற குயில் இனங்கள் கூவின காண் –இனம் இனமாக குயில்கள் பலகாலும் கூவின –
சத்வோத்தரமான காலம் ஆனவாறே–சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து
பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –என்ன அவர்களை உறங்க ஒட்டாமைக்கு நீங்கள் உண்டே -என்ன –
வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்–பரம பாகவத சமூஹங்கள்-
சத்வம் தலை எடுத்த பின்பும்–உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப் பலகாலும் கூவா நின்றன காண் –
குயில் இனங்கள் ஓன்று இல்லை–ஒரு குரல் இல்லை–பல் கால் கூவின–உறக்கத்தால் அலர்த்தி
மாதவி பந்தல் இஷ்டமான பந்தல்–நோ பஜனம் ஸ்மரம் படுக்கை வாய்ப்பால் —உன் நோக்கும் உன் பேச்சும் தாரகமாக இருக்கும்
தயிர் பழம் சோறு பல் அடிசில் –கோல கிளியே நாராயணனை வரக் கூவாயால் துரத்துவேன்
மேல் ஒரு திரள்–கீழே நாங்கள்

புன்னை மேல் உறை பூம் குயில்காள் -போற்றி யான் இரந்தேன்-திரு வண் வண்டூர் உறையும் -மாற்றம் கொண்டு
குயில் த்வனி பஞ்சமம் த்வனி ஐந்தாவது வேதம் பாரதம் பஞ்சம வேதம்
புள்ளம் பூதங்குடி -புன்னை பொன் வேய் -தாது உதிர்த்து -இன்றும் காப்பாற்றி
திருக்குறுங்குடி பனை மரம் கறந்த மாடு பொய்கையுள் -நீர்க்காக்கை ஆடும்
பனை மரத்துக்கு மங்களாசாசனம் இன்றும் சேவிக்கலாம்

இப்படி எழுப்பின விதத்திலும் எழுந்தி ராமையால் ஜாலகரந்த்ரத்தாலே பார்த்து –
பந்தார் விரலி –
பந்தும் கையும் பொருந்தி இருக்கிறபடி – நாங்கள் சைதன்யத்தைவிட்டு அசேதனமாக பெற்றிலோமே -அது என் -என்னில்
உன் கைக்குள்ளே கிடக்கலாமே
இப்போது பந்தின் பிரசங்கம் என் என்றால் – கிருஷ்ணன் உடன் பந்தடித்து -அவனைத் தோற்பித்து
அவனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் அனைத்துக் கொண்டு கிடக்கை –
அவன் இவளுக்கு போக உபகரணம் பந்து லீல உபகரணம் –
ஒரு கையில் நாரம் ஆய்த்து – ஒரு கையில் நாராயணன் ஆய்த்து –
ஒரு கையில் விபூதி ஆய்த்து ஒரு கையிலே விபூதிமான் ஆய்த்து –
இத்தால்
உபய சம்பந்தத்தால் வந்த புருஷகார பாவம் தோற்றுகிறது – நீங்கள் வந்தது என் என்ன -சத்வம்தலை எடுக்கும் தனையும் சேதனரைக் கொண்டு லீலா ரசம் அனுபவித்து
சத்வம்தலை எடுத்தவாறே ஒரு கையாலே லீலா உபகரண பூதரான சேதன வர்க்கத்தையும்
ஒரு கையால் இத்தைக் கொண்டு தன்னை லீலா ரசம் அனுபவிப்பித்த ஈஸ்வரனையும் அணைத்துக் கொண்டு கிடப்பதே -இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள்
பந்தார் விரலி
பந்து இருக்கும் மெல் விரலாள்-திரு எவ்வுள்ளூர் பாட்டு–பந்தார் விரலாள் பாஞ்சாலி குழல் முடிக்க –
எழில் கொள் பந்தடிப்போர் நாங்கூர் வெளுப்பு சிகப்பு கருப்பு நூல்கள் பந்து முக்குணங்கள் -சத்வம் ரஜஸ் தமஸ் – பந்துகள் பாவை -குணத்ரயம்-அல்ப சாரம்-

உன் மைத்துனன் பேர்பாடச் –
நீயும் அவனும் மைத்துனமை யாடி –ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது
உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட–அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும் பிரிந்தால் தாய் பஷத்தில் இ றே பிரஜைகள் நிற்பது –
நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட –
உபகரிக்க–மட்டை அடி உத்சவம்–ஆசார்யர் தாயார் கோஷ்டி–தயிர் பழம் போட்டு அடிப்பார் பெருமாள் மேலே
அவன் தோல்விக்கு சகஸ்ர நாமம் சொல்வோம்–இளைய பெருமாள் சீதை உடன் சிரித்தால் போலே–நீச்சல் போட்டி
-அவள் இங்கனே ஆகில் திறந்து கொண்டு புகுருங்கோள் -என்ன
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும் செந்தாமரைக் கையால் – அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –
சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலாய் இருக்கை – சங்கு தங்கு முன்கை நங்கை -இ றே – நாங்களும் அத்  த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இ றே இருப்பது -சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இ றே இவர்களுக்கு உள்ளது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
செந்தாமரைக் கை–மாசுசா கை பார்த்து இருப்பாரோ நாங்கள்–சரணம் பற்றாத உங்களுக்கும் நான் இருப்பேன் ராஷசி –
லகுதரா ராமஸ்ய கோஷ்டி கிருதா -பட்டர்–நீங்கள் செய்த பாபத்துக்கு அஞ்ச வேண்டாம்
அவன் ஸ்வா தந்த்ர்யம் அஞ்ச வேண்டாம் வைத்த அஞ்சல் கை செந்தாமரைக் கை
அவனும் ஆசைப் படும் கை -கை மேல் என் கை வைத்து–பெண் கை மேலே —அணி மிகு தாமரைக் கை மேலே செந்தாமாரைக் கை
பந்து பிடித்து சிவந்த கை

மேகம் முழங்கி சீரார் வளை ஒலிப்ப–பசியர் சோற்றை வர்ணிப்பது போலே–கையிலோ நின்றும் கழலாத சீர்மை
சங்கு தங்கு முன்கை நங்கை–ஒண் டொடியாள் திரு மகள்–இரு கையில் சங்கு இவை நில்லா வெளியில்
கழல் வளையை கழல் வளை யாக ஆக்கினையே–சூடகமே தோள் வளையே -இவர்கள் சூட்ட சூடிக் கொள்வோம்

வளை ஒலி கண்ணன் எழ வேண்டும்–நாங்களும் ஒலி கேட்டு வாழ–கிடந்த இடத்தே இருந்து–நாலடி நடந்து வந்து -அவனும் நாங்களும் நடை அழகு காண
மகிழ்ந்து திறவாய்-தலை விதி என்று வராமல்–ஆர்த்தி சாஸ்திரம் அர்த்தம் பரிதாபம்
உகந்து வந்து–மகிழ்ந்து மார்கழி நீராட–எதோ உபாசனம் ததோ பலம்–நாங்கள் நோற்ற நோன்பு நீ மகிழ தான்
உன்னுடைய மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி–இதுவே பலம்–தர்மத்துக்கு திறவாமல்–மகிழ்ந்து–பேறு உன்னதாக வேண்டும்
அவன் உடையார் பக்கல் அவனை விட–முக விகாசத்தில் தோற்றும்படி–கண்ணுக்கு இறை வந்து
வளை செவி பட்டினி தீர–பேர் பாட நாக்கு பட்டினி–செந்தாமாரைக் கை ஸ்பர்சம்–கந்தம் நுகரும்–சர்வ இந்த்ரியங்கள் விடாய் தீர்க்க
மனஸ் மகிழ்வு உன்னதாக இருக்க

சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே–தாமரை போன்ற திருக் கையாலே – இவ்விடத்தில் -கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் – ஆழ்வார் –
ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன இதர விஷய நிவ்ருத்தி -சௌந்தர்யம்-ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி -சௌகுமார்யம் -நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-சௌகந்த்யம் -இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –
சீரார் வளை ஒலிப்ப—நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-பகவத் சம்பந்த சூசகங்களான-ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

வந்து திறவாய் –
யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –
வந்து திறவாய் –
நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்–நீயே வந்து ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய விரோதியான தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-
மகிழ்ந்து –
புருஷார்த்தம் உன்னதாக வேணும்-

மகிழ்ந்து –
அர்த்திகள் வாசலிலே நிற்க வேறு அனுபவம் உண்டோ -என்று தர்மத்துக்கு திறக்கை அன்றிக்கே -பேறும் உன்னதாக வேணும் –
மகிழ்ந்து –
கிருஷ்ண சம்ச்லேஷத்தால் வந்த -ஹர்ஷ பிரகர்ஷம் முகத்திலே தோற்றும்படி என்னவுமாம் –

மகிழ்ச்சி மாலை -சாத்தி அருளுகிறாள்
உந்து –வந்து திறவாய் மகிழ்ந்து
பந்தார் விரலி -லீலா உபகரணம் -கைப்படுத்தி பொழுது போக்கும் ஆச்சார்யர்
பந்து கழல் பாவை – பொங்கைம் புலனில் போக்யாதி சமூஹம் -நாயனார் -149-லீலா விபூதி முழுவதும்
உபய விபூதியும் தம் கையில் உடையவர் இ றே
செந்தாமரைக்கையால் -உபதேச முத்தரை
சீரார் வளை ஒலிப்ப -த்வனிப் பொருள்கள் மல்கும் படி உபதேசித்து அருளி
மகிழ்ந்து -தம் பேறாக
தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர் -பல்லாயிரம் தேவிமாரோடு -நப்பின்னை பிராட்டி பிரதானம் போலே
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதிசபதம் பாதி நான்யத்ர –
ஏழு காளைகள் -அறு சமயச் செடி யதனை அறுத்தான் வாழியே -செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
கந்தம் கமழும் குழலீ-கமநீய சிகாய நிவேசம் –
சிகயா சே கரிணம் பதிம் யதி நாம் -என்றும்
காரிசுதன் குழல் சூடிய முடியும் கன நல சிகை முடியும் –
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள்
பூர்ண அதிகாரிகளாகக் கொண்டு மகிழ்ச்சியில் குறைவின்றி–பரம திருப்தியோடு நெஞ்சு திறந்து வாய் திறந்து உபதேசித்து அருள வேணும் –

இப்பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு -பெரிய நம்பி திரு கிரஹம்-திருப்பாவை ஜீயர் ஐதீகம் பிரசித்தம்-
பெரிய நம்பி திருக் குமாரத்தி அத் துழாய்–ஜீயா உந்து மத களிறு அனுசந்தானமோ
திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரத்தி தேவகி பிராட்டி -சிலர் சொல்லி —நித்ய வாசம் திருவரங்கம் தான்-இதுவே
மாது தன்னுடைய கரத்தால் மாதுகரம் —ஸ்ரீ பெரும்புதூர் விசேஷ தளிகை இன்று உண்டே-திருப்பாவை ஜீயர்–திரு நெடும் தாண்டகம் அபிமானம் பட்டருக்கு

தாழ்வு ஓன்று இல்லா -தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுச மா முனி
உந்து மத களிறு -ஐந்து யானைகள் நம் இடம் -வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும்–அடக்கியவர் எம்பெருமானார்
தோள் வலி ஞானக்கை தா -காருண்யா சாஸ்த்ரா பாணினா
வாதம் செய்தவர்கள் பலர் பலர் ஸ்வாமி இடம் —சாறு வாத -ஆர்த்தி பிரபந்தம் -நாளும் மிக வாழியே
கந்தம் கமழும் குழலி –அத்வைதிகள் தலை மொட்டை பூணூல் இல்லை–காஷாய சோபி கமநீய சிகாசாய வேஷம் – -கூரத் ஆழ்வான் –
தண்டத்ரய–ரூபம் தவாஸ்மி—முப்புரி நூலோடு –கமலக் கண் அழகும் காரி சுதன் கழல் சூடிய முடியும் -கன நல சிகை முடியும் இல்லை எனக்கு எதிரே
குயில் இனங்கள் கூவின–குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -மதுர கவி
வசந்த காலே–சித்தரை வைகாசி -நம் ஆழ்வார் எம்பெருமானார் இரண்டு குயில்கள்
மாதவ பந்தல்–வசந்த ருது மாசம் -சித்தரை மாசம் வைகாசி
வந்து திறவாய் –
இவரே வந்து உபதேசித்து–தாம் வந்து திறவாய் -உஜ்ஜீவிக்க இருக்கும் இடம் வந்து-

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — அம்பரமே தண்ணீரே சோறே — வியாக்யானம் .தொகுப்பு –

August 21, 2015

அவதாரிகை –
இவர்களைத் திருக் காப்பு நீக்கி உள்ளே புகுர விட – ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
முற்பட கிருஷ்ணனை பெண்கள் களவு காண்கிறார்களோ -என்று நினைத்து காவலாக புறக் கட்டிலே கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்பு கிறார்கள் –
அநிருத்த ஆழ்வானை அகப்பட களவு காணக் கடவ பெண்கள் அவன் அழகுக்கும் வாய்த்தலையாய்
சாஷாத் மன்மத -என்கிற கிருஷ்ணனைக் களவு காண சொல்ல வேணுமோ –
இப்பாட்டில்
கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால் திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் திருப்பாதம் பணிய-வேதம் -முதல் ஐந்து பாசுரம்-வல்லார்களை கொண்டு -10-விண்ணோர்பெருமான் -ஏற்ற கலங்கள் தொடங்கி-திருப்பாதம் -உன் பொற் தாமரை பணிந்து போற்றும் பொருள் ஐந்து பாசுரம்
விவரணம் தான் திருப்பாவை –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

சாஷாத் மன்மத மன்மதா -நோக்கி கிடக்கும் நந்த உள்ள வைத்தமா நிதி -எடுத்த பேராளன் நந்த கோபன் 8-1-3-இவன்
நிதி எடுத்தால் போலே -அடிக் கரும்பு – நுனி கரும்பு நந்த கோபர் அனுபவித்த- நடு கரும்பு காவல் காக்க வேண்டுமே –
கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலில் -உம் குறை தீர்க்க வந்தோம்–நீர் உறங்குவது
உதாரா -கண்ணன் தனது கையில் வாங்குவாரை சொன்னது உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ – கேட்கிறவர்கள் வள்ளல் கொடுக்கும்படி செய்ததால் –
பெற்றாலும் அங்கனேயோ பெறா விட்டாலும் தரிக்க முடியாத வஸ்து கொடுக்கும் வேண்டுவார்க்கு வேண்டியது எல்லாம் கொடுக்கும்

அம்பரமே தண்ணீரே சோறே –
புடைவையோடு–தண்ணீரோடு–சோறோடு–வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –
ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –

எங்கள் தாரகம் போஷகம் போக்கியம் ஒன்றாக இருந்தால் தர லாகாதோ உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் கொடுக்க கூடாதா
காஞ்சி தாசரதி சுவாமி -கைங்கர்யம் செய்பவர் ஒவ் ஒருவருக்கும் பல கொடுத்து – பகவத் விஷயம் ஸ்ரீ பாஷ்யம் வேத அத்யயனம் தேவ பெருமாள் கைங்கர்யம்
நாலும் இருந்தால் கொடுக்க மாட்டாயா காஞ்சி சுவாமி கேட்டார் வடகலையாருக்கு மட்டும் கொடுத்தவர்-புரிந்து உடனே கொடுத்தார் – நாலுக்கும் சேர்த்தா ஒன்றுக்கும் மட்டுமா -கேட்டார்
சர்வ லாபாயா கேசவா -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -எங்களுக்கு கண்ணனை எடுத்த பேராளான் பெற்று தந்த சுவாமி-

கார்ய குணம் காரணம் –
இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை சுரந்ததும்–இனிது மறித்து நீரூட்டி -பாண்டவர் பாண கங்கை
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து பக்த விலோசனம் -சோறு வாங்கி இட்டது – இவர் வயிற்றில் பிறந்ததால்

அறம் செய்யும் –
பால அபிசந்தி ரஹிதமாக–ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –
இத்தால்
நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ —எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –
அறம் செய்யும் -கொடுக்கும் சொல்லாமல் —சாத்விக தானம் –

எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் –
எங்களுக்கு தாரக போஷாக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி

எழுந்திராய் –
வாசுதேவ சர்வம் இதி–உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இ றே கிருஷ்ணன் –
எம்பெருமான்-
நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை–தானம் கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே –
வாசுதேவ சர்வமிதி என்று இருக்கிற எங்களுக்கு கிருஷ்ணனைத் தரப் புகுகிற நீ விசேஷித்து எங்கள் நாயகன் அன்றோ –
உணர்ந்து அவன் அனுமதி பண்ணினபடி தோற்றிக் கிடக்க –
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-
ஆத்மா ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்–தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத்தேதுவான கைங்கர்யத்தையும்–ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –

அம்பரமே இத்யாதி அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கக் கற்றது என்னும்படி இருக்கையும்
அது தானே புஷ்கலமாய் கொடுக்கையும் தோன்றும்
எம்பெருமான் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -அவனை தந்து எங்கள் சத்தையை நோக்கும்
கண்ணால் காண்பதற்கு மேற்பட ஒன்றும் அறியாத இடைப் பெண்கள் என்பதால் யசோதை பிராட்டியை
முதலில் பள்ளி உணர்த்த வில்லை யசோதை அறியவே அமையும் பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை -என்று இருக்கிறார்கள்

முலையால் அணைக்கவும் முலைப்பால் கொடுக்கவும் நடுவில்
பிராட்டி சர்வேஸ்வரனையும்-உபய விபூதியையும் -பிரதம பதம் அகாரம் மகாரம் நடுவில் உகார ரூபம்-யசோதையை போலே -அங்கே திருஷ்டாந்தம்
விபூதி த்வயம் – ஸ்ரியதே ஸ்ரேயதே ஆஸ்ரியிக்கிறாள் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் –
ராமஸ்ய மன காந்த பிராதச்ய தேவதை பிராணன் விட உயர்ந்த சீதை-உன் திரு நங்கள் திரு
திவ்ய மகிஷி அகல ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்-ஜனன பவன் ப்ரீத்யா திருப்பாற்கடலையும் விடாமல்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே
இரண்டுக்கும் கடவ -பிராப்யம் பிராபகம் நந்த கோபர்-ஒன்றுக்கு கடவ நீ உறங்க கடவையோ புருஷகாரம்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்-
பிராட்டி முன்னாக அவனை எழுப்புமா போலே–இவள் முன்னாக ஸ்ரீ நந்த கோபரை எழுப்பா விட்டது என் என்னில்
பிள்ளை மேல் சங்கத்தாலே அணித்தாக உள் கட்டிலே கிடைக்கையாலே–பிற்பட அவளை எழுப்பு கிறார்கள் –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே
பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே–கொம்பனார்–கொம்பு -வஞ்சிக் கொடி
அனார் அத்தை அளையவர்கள்-ஒத்தவர்கள்

குல விளக்கே –
இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே-பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -என்னவுமாம்

கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது

எம்பெருமாட்டி –
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே

யசோதாய்
ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –
அறிவுறாய் –
நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-
அவள் சம்வாதத்தாலே உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –

எம்பெருமானை பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்
அதிதி -பெற்ற அன்றே அழுது–கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே
குல விளக்கே -எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கை தர வேண்டாவோ

உன் கை பார்த்து இருக்கும் படி -எம்பெருமாட்டி–கோபி ஜன வல்லபன்–பிரதான மகிஷிகளும் யேத்தும்படி
ருக்மிணி சத்ய பாமை நப்பின்னை மூவரும் -உன்னை சேவிக்க–பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் இவள் அறிவாள் பிரிய காமர்
கண்ணனுக்கு இஷ்டம் அஞ்ச உரைப்பாள் யசோதை–இது பற்றாசாக வந்தோம்
புகார் -ஏதேனும் ஒரு படி செய்து கண்ணன் சந்தோஷமே அமையும்
தீம்புக்கு–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை உடைக்கும் உன் மகனை கூவாய்–அசல அகத்தார் பரிபவிப்பார் செய்ய தரிக்க கில்லேன்
அஞ்ச உரைப்பாள்–வருக -வருக -பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே —துதிக்கைக்கு உடலாகும் அவனுக்கு
அறிவுறாய்–எழுந்திராய் நந்த கோபன்–இவள் நெஞ்சில் உணர்த்தியே போதுமே

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக தங்களை அமைத்து வைக்கும் பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய்
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி
சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் – திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக-ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க-ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –
உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே-இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே திருவடிகளை குளிர வைத்தபடி –
உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி —நித்ய சூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே-இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –
ஆண்களுமாய்–பிரயோஜனாந்த பரருமாய் வேணுமோ முகம் கொடுக்கைக்கு –
அநந்ய பிரயோஜனைகளுமாய்–அபலைகளுமானால் ஆகாதோ எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பறுப்பதாக வேணுமோ –
இருந்தபடியே காட்ட அமையாதோ உன் வாசி அறியாதே அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை-உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ
உறங்காது எழுந்திராய்
எங்களை உறக்கம் எழுப்ப வந்த நீ உறங்கக் கடவையோ அழகாய் இருந்ததீ-நீர் விழுந்த வாறே விம்ம வளைந்து வரையாதே இந்த்ராதிகளை எழுதிக் கொண்ட தலைவன்
இரு விசும்பு -மண் முழுதும் அகப்படுத்தி –ரஷண ப்ரீதியால் வளர்ந்து இருந்ததே குடியாகா தாயார் அணைக்கும் குழந்தை -அறியாதே இருக்க செய்தே
உறங்காது ரஷகன் தேவர்கள் அனுக்ரகம் இப்பொழுது சொல்வான் என்
ஆண்களுமாய் பிரயோஜனாந்த பரர்-அபலைகள் அநந்ய பிரயோஜன பற்றுக்கு உதவ கூடாதா
உகப்பாரையும் உகவாதாரையும் வரையாதீ தீண்டி-ஆசைப் பட்ட எங்களை தீண்ட கூடாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்ய நாங்கள் அர்த்திகளாய்-நிபுணர் இந்த்ராதிகள் இடைப் பெண்கள்
உறங்குவாரை தழுவிய நீ உணர்ந்து வந்த எங்களை-விபூதிக்காக உன்னைக் கொடுத்தாய் உன்னை அறிந்த எங்களுக்கு
மண்ணை ஆசைப் படாமல் உன்னை ஆசைப் பட்டது தப்பா-வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப -ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா
முதலை வாயில் விழாமல் தபஸ் வாயில் விழுந்தோம் வெட்கி-உம்பர் கோமானே நித்யஸூ ரிகளுக்கு-சிரோ பூஷணம் திருவடிகளை காடும் மோடும் அளப்பதோ-தோற்கும் படி-சதா பச்யந்தி -இருப்பார் -இமையோர் -துடிக்க விட்டு இங்கே வந்து தூங்கி எங்களை துடிக்க விட வேண்டுமோ-இங்கே இரக்கவும் அளக்கவும் வேண்டா-வடிவை அனுபவிக்க அமையும் –
உலக்கு அளந்த இளைப்பால் உறங்குகிறாய் வயிறு எரிச்சல் தீர்ந்தால் போதும்-நடந்த கால்கள் நொந்தவோ -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே
இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ-தாளால் —உறங்காது எழுந்திராய்-பாண்டவர் -ரிணம் பிரவர்த்தம் புண் பட்டவன்
பெருமாள் ஒருத்தி பிரிந்து தூங்காமல்-கோவிந்தா சொல்லோடு அவள் முன்னே நிற்க பெற்றிலோம்-செறுக்கு அடைய பிரணயிகள் இடம் காட்டவோ –

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
நிரீஸ்வர வாதம் பண்ணுபவர்களுக்கு–அவகாசம் அறும்படி அபிவிருத்தனாய்
இவ் விபூதியைத் தன் திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்ட நித்ய சூரி நிர்வாஹகன் ஆனவனே-சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ உறங்காது ஒழிய வேணும்

இப்படிச் சொல்லவும் எழுந்திராமையாலே-முந்துற நம்பி மூத்த பிரானை எழுப்பாதே முறை கேடாக செய்தோம் என்று அவனை எழுப்புகிறார்கள்-
செம் பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –
உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –
உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-முன்னே பொற் கால் பொலிய விட்டு -ஸ்ரீ மான்-இளைய பெருமாள் பின் பெற்று பெற்ற சம்பத் முன் பிறந்து
கைங்கர்ய ஸ்ரீ–நோக்கும் நடமாடும் மதிள் போலே-கண்ணன் பெண்களையும் சேர விடும் பலராமன்-மதுரா வந்ததும் திரு ஆய்ப்பாடி -பலராமன் சொல்லி அவதார ரகசியம்
ஆச்வாசம் இனிமை ப்ரேமம் தெரியும்படி பொருந்த விட்டான் பலதேவா-பலத்துக்கு ஒரே தாமம் -ஆதி சேஷன் ஒரே இருப்பிடம் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து–ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்யப் வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்
இப்படி சம்பன்னனான பல தேவனே-உறங்காது ஒழிய வேணும்-எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-நான்கு வித பக்தி -நந்தகோபர் -யசோதை -கண்ணன் -பலராமன் -ஆச்சார்ய  -மந்த்ர -மந்த்ர தேவதை -பாகவத பக்தி –நான்கையும் காட்டும் -அம்பரமே -பாசுரத்தால் –

இளைய பெருமாளை பிரிந்து அமுது செய்திலர் தம்பி போன வழியே போவேன்
பிராட்டி பிரிந்து இருந்தாலும் படுக்கையும் உறங்கலாமா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய விட்டு பிறந்த சீமானே
அவனுக்கு படுக்கையான நீயும் எங்களுக்கு படுக்கையான அவனும் உறங்காது உணர வேணும்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனுக்கு படுக்கை
கண்ணபிரான் பிரணயத்தாலே இவர்களுக்கு படுக்கை-பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் கால் கட்டும் பொழுதே எழுந்திராதே
எங்கள் திருவடி கட்ட நீ புகுவாய் தீ முகத்து நாகணை ஊடலிலும் கோபத்திலும் நாகணை மிசை நம்பிரான்

அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –
க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யார்
அப்பரமபதத்தை ஊடறுத்தவர் இடைச்சுவர் தள்ளி
ஆசார்யன் கை புகுரவே மற்றது கை யதுவே -பிராப்ய பூமி
தண்ணீரே -விரஜா நதி ஸ்நானம் சூஷ்ம ஒட்டு நீரிலே கழித்து உமி தவிடு இரண்டும் போக்க வேணுமே
அன்னம் ப்ரஹ்மேதி -பரப்ரஹ்மமே அன்னம் -அனுபவிக்கப்படுகிறோம் –
அறம் செய்யும் நந்ததீதி -நம்பிள்ளை -எங்கே வரும் தீ வினைகள் -ப்ரஹ்மானந்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-

உறங்கா மாலை -சாற்றி அருளுகிறாள்
உம்பியும் நீயும் உறங்கேல்
நந்த கோபன் -ஆச்சார்யன் -அம்பரம் -பரம ஆகாசம் -தண்ணீர் -விரஜா நதி -அன்னம் ப்ரஹ்மேதி வியாஜா நாத் -ப்ரஹ்ம அனுபவம்
எடுத்த பேராளான் -நிதி எடுத்தால் போலே
யசோதை -திரு மந்த்ரம் -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை – பெரிய திருமந்தரம் பிரதானம்
கண்ணபிரான் -திரு மந்தார்த்தம் -சர்வ வ்யாபகத்வம் -மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -அநந்தரம்
ஒண் மிதியில் புனலருவி -என்று அருளிச் செய்தார் இ றே
பலராமன் -திருமந்த்ரார்த்த சாரம் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை
பகவத் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாது என்பதை உணர்த்தவே உம்பியும் நீயும் உறங்கேல்
யஸ் சப்த பர்வ வ்யவதான துங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன்முராரே-பாதுகா சஹச்ரம்

ஸ்வாபதேசம் –
ஆசார்யர் -நந்த கோபாலன் -ஆனந்தம் கொடுத்து
அடுத்து திரு மந்த்ரம் கொம்பனார் மந்த்ரங்கள் எல்லாரையும் ரஷிக்கும் தாய் போலே
குலம் தரும் குல விளக்கு
யசஸ் தரும் யசோதை
திருவிக்கிரம அபதானம் வியாப்தி -மந்த்ரத்தை -அடுத்து ஒண் மிதியில் –
ஸ்வரூப வியாப்தி விக்ரக வியாப்தி மூலம் காட்டி
தாத்பர்யம் பாகவத சேஷத்வம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
விஷ்வக்சேன -நாயகன் /அம்பரமே பிரம்பின் கீழே வளருவது போலே
வான மா மலை ஜீயர் செம் பொற் கழல் அடி ஸ்ரீ மான் மா முனிகள் பொன்னடிக்கால் ஜீயர்-பொன்னடியாம் செங்கமல போது இவர் தானே-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ  அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — நாயகனாய் நின்ற — வியாக்யானம் .தொகுப்பு –

August 21, 2015

கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப எல்லாரும் கூடி வந்து -ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை -வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும் பெரியாழ்வார் திருமகள் இறே இவள்
த்வதீய கம்பீரம் -ஸ்ரீ வைஷ்ணவர் -மன அனுசாரின விதிகள் பின் செல்லும் –
நஞ்சீயர் ரசவாதம் கை பட்டவன் இரும்பு பொன் ஆவது போலே பிரமேயம் கை பட்டவன் சொன்னது எல்லாம்-சாஸ்திரம் ஆகும் நம்பிள்ளைக்கு சொல்லி முமுஷுவைஅஹம் சரணம் பிரபத்யே -அபய பிரதானம் நிவேதய மாம்-
ததீயர் மூலம் -காட்டி அருளி ஆகாசம் வரை வந்து நின்றவன் -வானர முதலிகள் முன்னிட்டு —10 பாகவதர்கள் கீழே புருஷகாரம்
கடகரே சேஷி என்று இருக்கிறவர்கள் இவர்கள் ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் நாதாயா பிதா மஹிம் நாத முனையே முதலிலும் கடைசியிலும்
ரத்னம் விலை அறிய அறிய கொடுத்தவன் பக்கலில் ப்ரீதி விஷயம் கூடும் இ றே –மணி வண்ணன் இ றே-
கர்ம யோகாதிகள் பலம் தராதே எம்பெருமான் கிருபை ஒன்றே பலம் கொடுக்கும் வேண்டியவர்கள் முன்னிட்டு போனால் பேற்றுக்கு உடல்
பெரிய முதலியார் நாதமுனிகள் ஆளவந்தார் இருவரையும் சொல்லுவார்
மற்று அவரை சாற்றி இருப்பார் தவம் வெல்லுமே -ஏத்தி இருப்பாரை–அடியார்க்கு ஆட்படுத்தாய் ஆட் படுத்திய விமலன்
உடன் கூடுவது என்று கொலோ அடியரோடு இருந்தமை பலம் ஈஸ்வரன் கிருஷி பாகவத பக்தி –
பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் -பட்டர் நஞ்சீயருக்கு அருளிச் செய்தார்
இப்பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி-பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இ றே –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் – இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன – பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக -தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை தேடித் போக வேண்டி இருக்கை அன்றிக்கே
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –
வாசு தேவன் பெற்றிலன் நந்தன் பெற்றனன் -ராஜ குலங்களில் பிரசித்தம் இ றே
உந்தை யாவர் என்று உரைப்ப கடைக்கண்ணிலும் விரலிலும் காட்ட நந்தனன் பெற்றனன்
வானவர் நாடு இவன் அவர்கள் மடியில் கிடப்பது வான் இளவரசு
வானவர் நாடு முடியுடை வானவர் நித்யர் விண்ணாட்டவர் மூதுவர் பழையவர்
இவன் அவர்கள் மடியில் பிரம்புக்கு அஞ்சி சேனை முதலியார் –தத் சதா -அவை அவை அப்படியே அனுஜானம் உதார வீஷனை
இளவரசன் – விருத்த மந்த்ரிகள் -ராஜ்ஜியம் நடத்த – திருவாய்மொழி பிள்ளை நடத்தினது போலே அரரசன் இளையவன் ஆக இருந்ததால்
சிறகில் ஒதுங்கி பிரம்பில் கீழும் திரு அநந்த ஆழ்வான் மடியிலும் மேலாப்பின் கீழ் வருவான் வினதை சிறகின் அநந்த போக பர்யங்கே

நாயகன் நந்தகோபருக்கும் கோயில் காப்பானுக்கும்–கடகர் இ றே நாயகர்
ஆளவந்தார் நாத முனிகள் ஆச்சார்யர்களை துதித்து இழிந்தால் போலே
சீற ஒண்ணாதபடி புருஷாகாரமாக
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் -என்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும்
நம்முடை நாயகனே -என்றும்–இருந்தாலும்
உந்தம் அடிகள் முனிவர் -அந்த கண்ணபிரானுக்கும் நாயகர் நந்தகோபர் என்றது இ றே
கண்ணபிரான் கோயில் காப்பானே என்னாமல் நந்தகோபர் கோயில் காப்பானே
பரமபதத்தில் ஸ்வ தந்த்ரனாய் பட்ட பாடு தீர–நந்த கோபர்க்கு பிள்ளையாய் பிறந்து பாரதந்த்ரம் பேணினான்

நாயகன் ஆய நின்ற–பிதா -புத்ரேன பித்ருமான் ஆக்கி வைத்தான் மகன் ஒருவருக்கு அல்லாத –
கோயில் காப்பான் தொழில் இட்டு மௌக்யத்தாலும் அவன் உகப்பதாலும் சேஷ வ்ருத்தி பெயரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பெயர்
ஆதி சேஷன் என்றே –
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே -யசோதை —நாயகன் முழு எழு உலகுக்கும் நாதன்
பிரத்யீயம் வளையம் ஆக்கி பாணினி சூத்ரம் –நாயகன் ஆனான் இல்லை நாயகனே ஆகி நின்றான்
கண்ணன் முற்றம்கண் நல் முற்றம் -விசாலம் அர்த்தம் இல்லை–பிறந்த உடனே தன்னுடையது ஆனதே -உபய விபூதி நாதன் –
திருப்பாவையில் யார் உடைய பெயர் அதிகம் –நந்தகோபன்
நந்த கோபன் குமரன் -நாயகனாய் -அம்பரமே -உந்து /ஏற்ற கலங்கள் -ஆற்ற படைத்தான் மகனே –ஐந்து தடவை

க்ரம குலத்தால் சொல்லாமல் விஷ்ணு சம்பந்தம் இட்டே காக்கும் இயல்வினன்
எங்கள் நிதியை காப்போடு சேர்த்து காக்கும் திருமாளிகை ரத்னதுடன் காக்கும்
போய் பாடுடைய நந்தன் தாழ்த்தான் -காப்பாறும் இல்லை கடல் வண்ணா -வயிறு எரிச்சல் தீர்க்கும் நீ லோகம் தூங்கும் ஞானிகள் விழித்து
ரஷகத்வம் இவர்கள் தலையில் வைத்து தான் உறங்கா நிற்கும் காப்பானே –
எண்மர் -உலோக பாலீர்கள் பறவை அரையா–திரு அநந்த ஆழ்வான் சொல்ல வில்லை
உறங்காதவரை சொல்ல வேண்டாமே —அவர் தானே எம்பெருமானார் மா முனி கள்–ஆங்கு ஆராவாரம் அது கேட்டு

நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து பரிமாற வி றே இவன் இங்கு வந்து அவதரித்தது –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இ றே இருப்பது –
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய
கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் -சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்–அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –

கோயில் காப்பானே என்று ஷேத்ராபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியை சொல்லிற்றாகவுமாம்
ஆராலே விக்நம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலில் விழச் சொல்ல வேணுமோ

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் –கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் – ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –
கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள–அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-

ஸ்ரீ பரத ஆழ்வான் -சித்ர கூடம் கொடி கண்டு தரித்தால் போலே--தண்ணீர் பந்தல் கொடி கட்டி -விடாயருக்கு காட்டுமா போலே
அடையாளம் எங்களுக்கு–வாசத் தடம் உள்ளே கிடப்பதை காட்டும் கொடி–க்ரீஷ்மே -சீதம் -தண்ணீர் –
கொடி வாசலில் வானவர் அங்கும்–தசரதன் பெற்ற மணித் தடாகம் கொடியும் காவலும் உண்டே
கொடி தோரணம் அசேதனம் அழைக்க அனுமதிக்க தெரியாதே–அர்ஜுனன் சுமத்ரை கொண்டு போக கடவன் -சொல்லி வைத்தது போலே
இவளுக்கும் சொல்லி வைத்து இருப்பான்

மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே புகுவாரை தன் அழகாலே கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –
பாகவதர் மணிக் கதவம் சாம்யம் கொடுத்து அருளி–உள்ளு புக்கால் மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும்
தாள் திறவாய் -என்றவாறே அவன் பயமுள்ள தேசத்தில் மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன – இருந்த இடத்தில் பயம் என் என்ன – காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய் பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய் மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய் பயம் அற்று இருக்கிறதோ –
காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம் தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் – இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி கம்சன் சத்ரு எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள் பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –
பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன சூர்பணகை -பெண் அன்றோ என்ன – அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த வர்கள் அன்றோ -என்ன –
பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும் தவிர்த்து அருளாய்-

ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் –
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதரான பாலர்களான நமக்கு -என்ன வார்த்தையிலே அறியலாம் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –

அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்-அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன-புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன
ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து தருவிக்கிறேன் -என்ன

மாயன் –
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று பரிமாறின படி –

மணி வண்ணன் –
தாழ நில்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை ஒஷ்ட ஸ்புரணம் -பிரகாசம் -என்னவுமாம் -வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே

மாயன்
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று கையை காலை பிடித்து பரிமாறின படி
மணி வண்ணன்
தாழ நில்லாதே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவழகை உடையவன்
இவர்களை கிடந்த இடத்தே கிடக்க ஒட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு
தூயோமாய் வந்தோம்
பல்லாண்டு பாடுகையே பரம பிரயோஜனம் -புருஷார்த்தம்
தமது ரஷணத்துக்கு அவனே கடவன் என்கிற அத்யாவசாயம் கொண்டவர்கள்
பிரயோஜனாந்த பரர் இ றே ஓலக்கத்தில் புகுவார்
அநந்ய பிரயோஜனர் இ றே கண் வளரும் இடத்திலே புகுரப் பெறுவார் –

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம் ஒரு நாளே -என்றார்கள் —ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம்
நென்னலே -ஏவகாரம் அதுவும் ஒரு நாள் கொண்டாடி
இன்று உன் காலை பிடிக்க–நேற்று அவன் எங்கள் காலைப் பிடிக்க–வாய் நேரந்தான் சர்வ ஸ்தானம்-வாய் நேரந்தான்
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்-மெய்யாக வேணுமோ -என்ன
ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில் பழுதாய்த்தாகில் அன்றோ
இவ்வார்தையும் பழுதாவது -என்ன – சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –
ஸ்மிதம் பூ அலர்ந்தது போலே–வாக்மி ஸ்ரீ மான் சோதி வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் —அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய–தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-
பறை என்றது வியாஜ்ய மாதரம்–நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் —அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –
தூயோமாய் வந்தோம்–ஆராய வேண்டாம்–அவன் ரஷையும் அவனே பிரயோஜனம்
உபாயாந்தரம் கொண்டு பெற மாட்டோம்–அவனே உபாயம் அவனே பலம்–பிரயோ ஜனாந்தரம் கொண்டு எழுவார் அல்லோம்-
ராவண பவனம் விட்டு வந்தவன் முழுகி வர வில்லை
நீசர் நடுவில் அர்ஜுனன்
அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் புறம் தூய்மை நீரால்

வந்தோம்
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை- நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் என் என்ன –
வந்தோம் –வரவிலே தெரியாதோ எங்கள் பாவ சுத்தி–அவன் பதறி துடித்து ஓடி வர நாங்கள் வந்தோம்–கஜேந்த்திரன்
நாங்கள் அல்லவோ வந்தோம்

துயில் எழ பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்–பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்-அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –
எழுப்புமவர்களோட்டை சம்பந்தம்–பெரியாழ்வாரோட்டை குடல் துவக்கத்தால்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் -நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –அவன் கையது இ றே வாழ் நாள்–அவன் சத்தை பெற
வாய் சொல்லே தண்ணீர் பந்தல்–மாற்றாதே -நியமிக்கலாமா–சேஷ பூதர் -தடுக்கலாமோ

அம்மா -ஸ்வாமி–த்வார சேஷி தான் எங்களுக்கு கடவர்கள் —அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் கட்டுபவர் நீ
வத்யதாம் மம அபி சித்தம் வேத்தி விபீஷணன் சுக்ரீவன் அஸ்மாத் துல்ய பவத் சொல்ல வைத்தான் –
நீ புக விட்டால் தான் அவன் உகப்பான்–ஐயர் சொன்னால் சீதை கொள்வேன் என்றாரே பெருமாள்

அம்மா –
பச்சை இடுகிறார்கள்–உள் இருக்கிறவனோ நாதன்–நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –

நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
நேசமுடைய நிலையையும் கதவையும்–நிலை நேசம் கதவம் -நிலையோடு பொருத்தம் உடைய கதவம்-
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு–எங்களால் தள்ளப் போகாது–நீயே திறக்க வேணும் – என்கிறார்கள்
சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –கம்சன் படை வீட்டில் எல்லாம் பிரதிகூலமாய் இருக்குமா போலே –
நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –
நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் – உன்னிலும் பரிவு உடையது
இவர் விலக்குவது சிநேகத்தால் கதவு திறக்காதது சிநேகம்
திறந்து கொள்வார் மூக்கில் அறையும் நீயே கதவை திறந்து விட வேண்டும்
அகால காலத்தில் செடி கொடிகள் பூத்து சகடத்தில் அசுரர்
நித்யர் கதவில் இருக்கலாம் படியாய் கிடந்தது -உன் பவள வாய் நிலையும் கதவுமாய் இருக்கலாமே
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் நேச நிலை கதவு நடுவில் இடை வெளி இல்லை
அவனை முன்னிட்டே எம்பெருமானை பற்ற வேண்டும் –

நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய் -நீ எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே -ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை -மறைக்கக் கடவதாய் இ றே இருப்பது-

நாயகனும் எம்பெருமானும்-எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே-எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை

கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது

மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்

நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்

நின்றான் -யாத்ரை போகாமல் நின்றார் ராமானுஜர்
தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ –
யதிராஜ சம்பத் குமாரா செல்வ பிள்ளை -நந்த கோபன் கண்ணனை -பெயர் தகும்
ஆனந்தப் படுத்தியவர் –
உடைய கோயில் -உடைய பதம் இந்த பாசுரத்தில் மட்டுமே -உடையவர் –
கோயில் காப்பான் திருவரங்கா -புரி மாமலை மற்றும் உவந்திடும் நாள் -திருத்தி பணி கொண்டார்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –
கடல் வண்ணன் கோயிலே என்னும் –
மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்

கோயில் காப்பான் -எம்பெருமானார்
உடையவர் உபய விபூதியும் கையிலே உடையவர்
கொடி தோன்றும் தோரண வாயில் -நித்ய விபூதி
கோபுரம் -நடுதோரணம் நிறைத்து -கொடி அணி
எம்பெருமானார் சம்பந்தமே கொடுக்கும்

மணிக்கதவம் ரத்னம் நவ ரத்னம் -அருளி தாள் திறவாய் –
அனந்த- பிரதம ரூபம்–லஷ்மனச்து பல பத்ரன் கலௌ கச்சித் பவிஷ்யதி -அவதரிக்கப் போகிறார் –
சேஷாம் -யாதவ பிரகாசர் இடம் பிரம்ம ரஜஸ் சொல்லி -ராமானுஜா நீ சொல் –
நென்னலே வாய் நேரந்தான்
தர்மஸ்ய கிலாது ததா ஆத்மாநாம் -ஞானி து ஆதமைவ மே மதம்
சம்பவாமி ஆத்மா மாயா சொல்லாமல் ஆத்மாவை உண்டு பண்ணுகிறேன்
ஆத்மா யார் ஞானி
கீதையிலே சொல்லி அருளி
தூயோமாய் வந்தோம் -சாஷாத் நாராயணன் நினைக்கிறோம்
நமக்கு துயில் எழ பாடுவான் -சம்சார நித்தரை
பாடுவான் ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னாதோ பாட்டு கேட்கும் இடம் -கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்
நேசக் கதவு இரட்டை–பிரணவம் -மந்திர சேஷம் -திரு மந்த்ரம்–பூர்வ கண்டம் உத்தர கண்டம் -த்வயம்–பூர்வார்த்தம் உத்தரார்தம் சரம ஸ்லோகம்

நேய மாலை –
நேச நிலைக்கதவம் நீக்கேலோ
நடு நாயகம் -எம்பெருமானார் -யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இ றே
கோயில் காப்பான் -தென்னரங்கள் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன ஸ்ரீ ரெங்க ஸ்ரிய மனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பவர்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
பரமபத வாசலையையும் தமது ஆளுக்கைக்க் கீழ் வைத்து இருக்கும் ஸ்வாமி

மணிக்கதவம் தாள் திறவாய்
மணி ரத்னம் -நவ கிரந்தங்கள் -அறிவிலி ஆயர் சிறிமியோர் எமக்கு மணிக் கதகம் தாள் திறவாய்
நென்னலே வாய் நேரந்தான் -கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத -என்றும்–கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தர்சின –
நேய மாலை
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு

கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நேசக்கதவம்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — எல்லே இளம் கிளியே – — வியாக்யானம் .தொகுப்பு –

August 20, 2015

அவதாரிகை-
எல்லாருடைய திரட்சியையும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில் பாகவத கோஷ்டியைக் காண ஆசைப்பட்டு இருப்பாரை எழுப்பு கிறார்கள்

உக்தி-பிரதி உக்தி- ஸ்பஷடமாக இந்த பாசுரம் – முக்த கண்டம் -வெளிப்படையாக சொல்லுகிறது –திருப்பாவை ஆகிறது இப்பாட்டு ஆகிறது -நானே தான் ஆயிடுக-
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை என்று வாதல் செய்யாமல் இருக்கிறது என்று இசைந்து அனுஷ்டானம் பர்யந்தம் -காட்ட
தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-
சிற்றம் சிறு காலை பகவத் விஷயம் இது பாகவத விஷயம்-நடு நாயகமான பாசுரம் –இறுதி பாசுரம் தானான தன்மை சொல்லி -நிகமம்ரத்ன ஹாரம் –
எட்டு வரி -எல்லோர் எம்பாவாய் விட்டு –பாசுரத்திலும் நட்ட நடுவில் நானே தான் ஆயிடுக –
மகா பாரதம் -சரம ச்லோகத்துக்காக -கீதை -அர்ஜுனன் யுத்தம் -எதனால் செய்ய –
விபீஷண மித்ர பாவேன அதுக்காகா ஸ்ரீ ராமாயணம் மேம்பொருள் போக விட்டு சொல்ல திருமாலை மேலில் பாட்டில் பாகவத வைபவம்
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனை பாட -என்று
அசல் அகத்து பெண்பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவள் அந்த பாசுரத்தை தன மிடற்றிலே இட்டு பாட-எழுப்புகிறவர்கள் -அந்த த்வனி வழியே கேட்டுச் சென்று இவள் பேச்சின் இனிமையாலே – எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
அது தானும் இவர்களுக்கு அத்யந்தம் ஆகர்ஷகமாய் இருக்கையாலே அவரை கொண்டாடுவதற்கு முன்பே –எல்லே-என்று ஆச்சர்யப் படுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது – கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை – பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை
இவ்விடத்தில் பருவம் எனபது அபிநிவேசத்தை அவற்றுக்கு அபிநிவேச பூர்வகமாக வார்த்தை சொல்ல வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இ றே –
பசுமைக்கும் பேச்சுக்கும் ஒப்பு பருவத்துக்கு ஒப்பு ஆகாதே – ஆஹலாதகரத்வம் -ஆகர்ஷணத்வம் – மனோஹரத்வம் தாமரை –
பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பு ஆக மாட்டாதே
இவர்கள் கிளி தாம் இளம் கிளி மென் கிளி போலே மிக மிழற்றும் கிளி மொழியாள்
இளம் கிளி– கிளி போன்றவளே இல்லை முற்று உவமை –தாவி வையம் கொண்ட தாமரைகட்கே -போல

எல்லே –என்னே –சம்போதனம் ஆகவுமாம் – எல்லே ஏடி சாழலே
ஹலா -ஹஞ்சே -ஹண்டே சமஸ்க்ருதம் – ஏலே -திரு நெல்வேலி -பாஷை -அடே சப்தம்
எல்லே என்று பேச்சின் இனிமையாலே ஆச்சர்யப் படுகிறார்கள் –

யின்னம் உறங்குதியோ –
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க – இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் –
கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும் உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் –
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன
உத்தேச்யம் உன் வீட்டு  வாசலில் பழி கிடக்க கிருஷ்ணன் உதறி இங்கே வர வேண்டாமோ
வையம் மன்னி வீற்றி இருந்து மண்ணும் விண்ணும் ஆழ்வார் ஸ்ரீ வைஷ்ணன் பாகவத கோஷ்டி மிக உத்தேச்யம்
தனித் தனியே அனைவரையும் காண பெறுதல் பேர் சொல்லப் பெறுதல்
விரல் தொட்டு எண்ணப் பெறுதல் ஸ்பர்ச சுகம் அனுபவிக்கப் பெறுதல்
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் ஆகையாலே எண்ணி முடிக்கும் அளவும் அவளை பிரியாதே காணப் பெறுதல் முதலிய பல பேறுகளை பெறுதல்
பிரத்யஷம் கிடக்க அனுமானம் கொள்ளவோ–இது சித்தம் பாகவதர் கைப்பட்டு கிடக்க
ஆனை வந்து போன பின்பு காலடி -ஆனை வந்து போனதே -அனுமானத்தால் நையாகிகனை கிண்டல் பண்ணி அனுமானம் கட்டி அழுவான்

மாணிக்க வாசகர் திருவாசகம் 4 பாசுரம் இதை ஒட்டி –
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுவோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உண்ணெக்கு நின்று உருக யா மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையிற்று யிலேலோரேம்பாவாய் –

சில்லென்று அழையேன்மின் –
தன் அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிறது விக்நம் ஆகையாலே சிலுகிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அசஹ்யமோ -என்னில் – திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அசஹ்யமாம் போலே –

நங்கைமீர் போதர்கின்றேன் –
நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்த படி என் -என்ன சிவிட்கென்ன கூசி – நங்கைமீர் போதர்கின்றேன் —
நம் பாசுரத்தை மிடற்றிலே வைத்துப் பாடுகிற இவ் வனுபவதிற்கு விரோதம் பண்ணலாகாதே என்று எழுப்பாதே இருக்க வேண்டி இருக்க
அது பொறாதே எழுப்புகிற நீங்கள் அன்றோ பூரணை கள் –
நீங்கள் வாய் திறவாது இருக்க வல்லிகோள் ஆகில் நான் புறப்படுகிறேன் -என்ன

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும் –
நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம் நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
நீர் கட்டு வார்த்தை சொல்ல சமர்த்தர் –
சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் பண்டே அறியோமோ -என்றுமாம் —

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ என்றும் – வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன
உன் வாசலில் வந்து எழுப்ப சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன
அது என் குற்றம் அன்று -அதுவும் உங்கள் குற்றமே நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள் நம் வார்த்தை அசஹ்யமாம் படி இ றே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –
உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி
அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன –
அது கிடக்க ஸ்வரூபம் இருப்பதால்

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் – இல்லை செய்யாதே இசைகை இ றே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –
பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான்
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
இல்லாத குற்றத்தை உண்டு என்றாலும்இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்து -உத்தமன் இருக்கிற குற்றம் மத்யமன்
மத்பாபமே -நிமித்தம் வனபிரேவசம் – மந்தரை கைகேயி தசரதர் ராமர் -யாருமே இல்லை – பிள்ளையாக பிறந்ததே காரணம் –
கௌரவியர்-குணம் அபதானதுக்காக நிர்பந்தம் பண்ணி – அதி ரமணீயமான – தோஷ துஷ்டியான நான்
குற்றம் இசைந்த பின்பு செய்ய வேண்டியது என்ன
பட்டர் -குரட்டு மணியக்காரர் -ஏலம் விட்டு ஸ்ரீ ரெங்கம் -50 லஷம் கொடுத்து மாலை -வரும் -1000 rs விற்பார் ரசிது போட்டி வசூல் பண்ணி கொள்கிறார்
பட்டரை குறை சொல்ல -நம்முடைய தோஷம் -விண்ணப்பித்தது என்ன கைம்மாறு செய்வேன் சால்வை போதினாராம்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் கொக்கை –பொறை சிரிப்பு கிருபை உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டும்

ஒல்லை நீ போதாய் –
எங்களுக்கு ஒரு ஷணமும் உன்னை ஒழியச் செல்லாமையாலே எங்கள் திரளிலே சடக்கென புகுந்து கொடு நில்லாய் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே -என்று அவர்களுக்கும் இத் திரள் இ றே பிராப்யம் –வைகுந்தம் புகுவார் போலே
இப்படி பழியை தம் மேலே ஏறிட்டுக் கொண்ட இவரை சடக்கென இக் கோஷ்டியிலே பிரவேசியாய் -என்கிறார்கள்
ஸ்ரீ ரெங்கம் அத்யாபகர் -சாது கோஷ்டி–

யுனக்கென்ன வேறுடையை-
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே உனக்கு வேறு சில உண்டோ –
வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பாகவத விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –
நீ ஒருவருக்கு விரோதி அல்லை நீ புக்குத் திருவடி தொழு -என்ற ஆழ்வான் வார்த்தையை நினைப்பது
உனக்கு என்ன வேறுடையாய் –
உன் படுக்கையில் கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய் –இட்டு வைத்து -ஒதுக்கி வைத்து –
அஞ்சு லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்திலையோ எங்கள் பெரும் பானை கண்ட பின்பும்
புருஷார்த்தமான இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அனர்த்தம் உண்டோ
விஷயங்களை விட்டு புறம்பாக இருக்கலாம்
ஈஸ்வரனை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
ஆத்மாவை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
அடியார்களை விட்டும் புறம்பாய் இறுக்கக் கடவையோ
அரை ஷணம் வைஷ்ணவ கோஷ்டியை பிரிய நின்று வரும் மத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய என்கிற ஸூப்ரஹ்மணய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது
கங்கை கொண்ட சோழ புரத்தில் அமைச்சர் -புரோஹிதராகவும் இருந்தவர்
உத்தேச்யமான நம்பெருமாள் திருப்புன்னை கீழ் எழுந்து அருளி இருக்க அங்கு சென்று தண்டன் இடாது எம்பெருமானார் திருவடி இணைகளையே
போற்றித் தண்டன் இடுகிறார்களே-சந்நியாசியான இவரும் அங்கீ கரிக்க லாமோ
எம்பெருமானார் -தாம் அரங்கன் திருவடி நிலை என்று உணர்த்த உணர்ந்தார்

எல்லாரும் போந்தாரோ –
எனக்கு உங்களை ஒழிய சுகம் உண்டோ உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்பட இருந்தேன் – எல்லாரும் போந்தாரோ -என்ன –

போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன
ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –

போந்து எண்ணிக் கோள் –
புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்- மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் –
நாம் எல்லாம் கூடினால் செய்வது என் என்ன –

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தைக் கொன்று -நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
எதிரிட்ட கம்சாதிகளை அனாயேசேன நசிப்பித்து அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை-
சுபாகு மாரீசன் -தொலைக்காமல் விட்ட -இராவணனை திருத்துவானோ நப்பாசை அகம்பனன் விட்டு மிச்சம் வைத்து அனர்த்தம்
கண்ணன் அப்படி இல்லை கச்ச என்று விடாதே கஞ்சன் மயிரை பிடித்து மதிப்பு அறுத்து குஞ்சி பிடித்து மாற்றாரை மாற்று அழிக்க வல்லான்

மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை பெண்கள் கையில் படுமவனை –

வல் ஆனை கொன்றானை –
அங்கே குவலயா பீடத்தை கொன்றாப் போலே நம்முடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தைப் போக்கினவனே-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை —
சாணூர முஷ்டிகாதிகளை நிரசித்தாப் போலே நம்மை தம்மோடு சேர ஒட்டாத இடையர் உடைய சங்கல்பத்தை போக்கினவனே –எதிரிகளை தான் தோற்பிக்குமா போலே நம் கையிலே தோற்ற ஆச்சர்ய பூதனை –

பாட –
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்கு தோற்றுப் பாட – நம்முடைய தோல்வியும் அவனுடைய வெற்றியையும் பாடி –
தடம் பொங்கத்தம் தோற்றவர்கள் பாடி வாயினால் பாடி அவதார விஷயங்கள் பாடி கேசவனை பாடி -விரோதி நிவர்தகம்
முகில் வண்ணன்பாடி -வடிவு அழகு பாடி சங்கோடுசக்கரம் ஏந்திய தடக் கையன் பாடி -திவ்ய ஆயுதம் சேர்த்தி அழகை பாடி
வெறும் கையுடன் மல்லரை வென்ற படி பேச்சும் உத்தேச்யம் எல்லே -இளம் கிளியே -பாகவதர்

ஸ்வ யத்னத்தால் கடக்க அரிதாய் பிராயச்சித்த விநாச்யமுமாய் இன்றிக்கே இருக்கிற அஹங்கார நிவர்தகனாய்
மற்றும் உள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகனாய் ஆஸ்ரித பரதந்த்ரனைப் பாட ஒல்லை நீ போதாய் – இத் அந்வயம்-
வேறோர் பாடல் மாலை–சாற்றி அருளுகிறாள்
முந்தியது பங்கயக் கண்ணானைப் பாடல் மாலை இது மாயனைப் பாடல் மாலை
வெண்ணெய் திரண்டதனை வேறோர் கலத்திட்டு -திருமங்கை ஆழ்வார் -அதனால் வேறொரு பாடல் மாலை இதற்குப் பெயர் பொருந்துமே
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை பாடும் மாலை
எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களையும் செய் எல்லையிலா மாயன் கண்ணன்
கண்ணன் முடித்தது ஒரு யானை ஆச்சார்யர்கள் முடித்ததோ பல யானைகள்
வாரி சுருக்கி மதக் களிற்று ஐந்தினையும் சேரி திரியாமல் –பொய்கையார் -47-ஜிதேந்த்ரியர்கள்
கலியும் கெடும்
தீயவன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடியும் நேமிப்பிரான் தமர் போந்தார்
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவான போல் தடம்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் –
பொலிக பொலிக –
அண்ணல் ராமானுசன் தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினரே
இரும்பைப் பொன்னாகுவது போலே நித்ய சம்சாரிகளையும் வெள்ளுயிர் ஆக்கி நித்ய சூரி பரிஷத்தில் வைக்கும் ஆச்சார்யர்கள் மாயம் –
கலியன் அருளிச் செய்யும் வேறொரு பாடல் மாலை அசாதாராணம் –
நல்லீர் அறிவீர் தீயோர் அறிவீர் என்னை அறியீரே
வாழ்ந்தே போம் இந்தளூரிரே

உனக்கு என்ன வேறுடையை -எம்பெருமானார் தர்சனம் என்றே
மாற்றாரை மாற்றழிக்க பாஷண்ட –தற்கச் சமணரும் –சாறுவாக மதம் நீறு செய்த –
நாவுடையாய் -நாத முனிகள்

எல்லே -இளம் கிளியே -கிளி மொழியாள் ஸ்ரீ மதே சடகோபாயா நம -வானமா மலை ஜீயர் காட்டி அருளி –

மென் கிளி போலே மிக மிழற்றும் என் பேதையே திரு மங்கை ஆறங்கம் கூற அவதரித்தார்
அடி சுவட்டில் பேசிற்றே பேசின் கடைக்குட்டி இளம் கிளி-
திரு வெஃகாவில் மடக்கிளி -வருவதை -திரு தேசிகர் திருவவதாரம் -ஸூ சிப்பித்தாரே
பிஷை-பார்வதி ஸ்ரீ மகா லஷ்மி -வாமனன் தாண்டவன் -கூத்தாடி எங்கே மன்யே பிருந்தாவனம் -இன்று கூத்தாடி –
மன்னில் மரக்கால் கூத்தாடினான் காணேடி – மடியில் மான் குட்டி இங்கே பன்றி எங்கே போனது பரார்த்தம் கறவை எருது பார்த்தாயா
இடையனை போய் கேளு என்றாளாம சல்லாபம் சம்பாஷணம் கவி வைத்து – எல்லே நீசாம் -அண்டே மத்யம் -ஹந்தே சகி -ஹலா -சாகுந்தல நாடகம் –
அது போலே
காடுறைந்த பொன்னடி –மலர் கண்டாய் சாழலே எல்லே -ஏடி -சாழலே –
நீசமான சரித்ரம் ஏடி -மலர் கண்டாய் சாழலே -சம்வாதம்
கடுமையாக பேச கற்றவர் – வாழ்ந்தே போம் –
வேம்பேயாக வளர்த்தாளே
குறும்பு செய்வானோர் மகனை
அவன் மார்பில் எறிந்து அழலை தீருவேனே -கொங்கை தன்னை கிழங்கோடு -வல்லீர்கள் நீங்களே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய்
ஆழ்வார் தனி வழி மடல் பண்ணி அருளி –
சொல்லிவிடுவேன் –
அதில் நின்றும் வாராது ஒழிவது உண்டோ
12 -மதுரகவி ஆண்டாள்
நல் செல்வன் தங்காய்
நல் செல்வன் -நம் ஆழ்வார் -தம் கை மதுரகவி ஆழ்வார்
எம்பெருமானார் -கணித்து -தங்காய் -பிள்ளான் –
எல்லாரும் போந்தாரோ எண்ணிக் கொள் –
வீரத்தில் ஈடுபட்ட ஆனைகளை அடக்கி ஆடல்மா குதிரை யானை வாகனம் கடமா களிறு -யானை வல்லான்
மாற்றாரை விரோதிகளை பொடி படுத்தி
மாயன் -ஆசார்யம் –புத்த விகாரம் தங்கம் நாகை ஈயத்தால் ஆகாதோ மாயப் பொன் வேணுமோ – வைதிகம் ஆக்கி -அவைதிகமான த்ரவ்யம்
நீர் மேல் நடப்பான் -நால்வர் ஆச்சர்யமான கார்யங்கள்
யந்த்ரம் -சில்பி வீட்டில் சென்று -கைங்கர்யம் செய்து –
திருட முடியாதே
கத்தி கழுத்தை அறுக்கும்
ரகசியம் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது
கண்ணனும் ஆச்சர்யமான ஈடுபாடு-
எல்லாரும் போந்தார் -குண அனுபவம் ருசி உள்ளார் எண்ணிக் கொள் -எண்ணாத மானிடத்தை எண்ணாத பொய்கை ஆழ்வார் தொடங்கி-

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-பொன்னானாய் –புகழானாய் — என்னானாய் — உலகம் ஏத்தும் தென்னானாய் -வட வானாய் -குடபாலனாய் -குண பாலானாய்- இமையோர்க்கும் என்றும் முன்னானாய் –என்று அருளிச் செய்தவர் அன்றோ
போதருகின்றேன் -திரு மங்கை ஆழ்வார் கிளி -சொன்னத்தை சொல்லுமாம் கிளிப்பிள்ளை
கிளி பூவை ஒரே ஜாதி -பொன் உலகு ஆளீரோ -தீ வினையேன் வளர்க்க -கன்மின்கள் -யாம் கற்பியாத மாற்றம் உனக்கு என்ன வேறு உடையை –
மடலூரில் -சர்வ ரஷகனை பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழிவேன் யாம் மடலூர்த்தும் நம் ஆழ்வார் –
கலங்கின திரு உள்ளம் உடைய நம் ஆழ்வார் முதல் ஸ்லோகம் யதிராஜ விம்சதி
பிரசன்னம் சத்வித்யார் திரு உள்ளம் வால்மீகி பிரேம விலாசாயா ஸ்ரீ மாதவாங்கிரி நித்ய சேவா -ஞான விபாகத்தால் வந்த அஞ்ஞானம் அடிக் களைஞ்சு பெரும்
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்கு த்வரிக்கையும் உனக்கு என்ன வேறு உடையை
அறிந்த சொல்லில் -நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை –
சீதை பிராட்டி பரத ஆழ்வானை போலே அன்றோ நீர் என்னை எண்ணி நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் ஈதே அறியீர்
வாசி வல்லீர் வாழ்ந்த போம் –உம்முடைய உடம்பு உனக்கு அன்று பக்தாநாம் – ந தே ரூபம் நசா ஆகார ந ஆயுதம் ந ஆபரணம் ஜிதந்தே –
உம் உடம்பை நீரே அனுபவித்து கொள்ளும்
சதுஷ்கவி சித்ரா கவி -வேடிக்கை
மதுர கவி பத்தராவி பெருமாள் பெரும் புறக் கடல் கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -கவியின் பொருள் தானே
விஸ்தார கவி
ஆசு கவி உடனே அருளும் வல்லமை
251 பெரிய திருமொழி பகல் பத்து ஏழாம் நாள் தூ விரிய மலர் உழுக்கி -திருவாலி திருநகர் எம்பெருமான்
பாட்டு கேட்கவும் பெருமாள் முன்னும் பின்னும் சேவிக்க அபேஷை-என்றார் வரம் தரும் பெருமாள் அரையர் -தாளத்துடன் சிகை உடன் பாட
ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலை உரையாயே பசலை நோய் உரையாயே –குறிப்பறிந்து கூறாயே
தானாக நினையாமல் தன் நினைந்து நலிவேற்கு – மீனாய கொடிநெடுவேள் வலி செய்ய மெலிவேனோ -என்னும் அளவும் வந்தவாறே
காம சரங்கள் -உதவிற்றாகிலும் பட்ட புண் -ஆற்ற வரலாகாதோ வித்தராக அருளினார்
ஒ மண் அளந்த தாளாலா -அடுத்த பாசுரம் நம் பெருமாள் மண் அளந்து அருளின படி என் என்னில்
கதை -சொல்லுவர் மத்யானம் -வாமன திரு விக்ரமன் சேஷ்டிதம் தண் குடந்தை நகராளா -அப்புறம் சொல்லி பதிகம் முடிப்பார்கள் –
இந்த பாட்டில் மிகவும் ஈடுபட்டு – மூன்று பதிகங்கள் நடு பதிகம் வந்து என்அடியேன் -தூ விரிய -கள்வன் கொள்
நஞ்சீயர் -நோவு சாத்தி பெற்றி நம்பிள்ளை கூட ச சிஷ்யர்

எல்லே இளங்கிளியே என்கிறது –திரு மங்கை ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக -ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் -பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் -நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –
நீராடப் போதுவீர் -என்றத்தை -பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் -சந்த மலர்க குழல் –பூம் கோதை –
-எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –
பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி -அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்
-மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் -இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –
வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் -இப்பாட்டில் வல்லானை கொன்றானை என்கிற வித்தை ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
-கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — உங்கள் புழைக்கடை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 19, 2015

அவதாரிகை
இவை எல்லாவற்றுக்கும் தானே கடவளாய்–எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாய்ச் சொல்லி வைத்து
அது செய்யாதே உறங்குகிறாள் ஒருத்தியை–எழுப்புகிறார்கள் –
இப்பாட்டில்–உங்கள் பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய் இவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி-
ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே பூரணரான பாகவதரை எழுப்புகிறார்கள் –
பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய் அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் -எல்லாருக்கும் முன்னே எழுப்ப மறந்து வாய் பேசும் நங்காய் வாயாலே பேசி கார்யம் செய்யாமல் உறங்கும்
மூன்று பிரமாணங்கள் -பிரத்யஷம் அனுமானம் சப்தம் நமக்கு சாஸ்திரம் பிரதான பிரமாணம்
கண்ணின் தோஷம் பிரத்யஷம் தப்பாகலாம் காமாலை கண்ணால் சங்கு மஞ்சள் ஆகலாமே அந்த வேதாந்த அர்த்தம் இதில் காட்டி-
செங்கழு நீர் புழக்கடை தோட்டம் மலர -அனுமானம் கொண்டு சொல்லி
திருக் கோவில் சங்கிடப் போகின்றார் பிரத்யஷம்
வாய் பேசும் ஆப்த வாக்கியம் சப்தம் சாஸ்திரம் –
மூன்றையும் காட்டி பாசுரம் –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி–போது விடிந்தது உறங்குவதே இன்னம் -என்ன –
அல்லிக் கமலம் முகம் காட்டும் – தோ ட்டத்து வாவியுள் –
நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன – புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –
அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன –உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
எங்களுக்கு புகுர ஒண்ணாதே அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே கால பாகத்தாலே -என்கை -இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா பொழில்கள் திரு வல்லிக்கேணி
காலத்தின் பரிபாகத்தால் அலர்ந்தும் மொட்டிதவையும்–அனுமானத்தால் சொல்கிறார்கள்
இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச் சொல்கிறார்கள்

அஹங்காரம் த்யாஜ்யம் பகவத் சம்பத்தால் வரும் அஹங்கார உத்தேச்யம் மம அஹம் ஏகாஷரம்-மிருத்யு தள்ளும் ஆத்மா நாசம் நீர் நுமது வேர் முதல் வாய்த்து -நாம் எனது சொல்லாமல்-யானே என் தனதே என்று இருந்தேன் த்யாஜ்யம் இவை இவர்கள் உணர்ந்தவர்கள் உங்கள் எங்கள் சொல்வது வ்ருத்தம்
பாகவத சம்பந்தம் -அஹங்காரம் அபிமான துங்கன் -செல்வனைப் போல சாத்விக அஹங்காரம்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -மின்னிடை மடவார் பதிகம் அச்சுதச்ய பக்தன் அஹம் –
ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் நாம் அடியேன் சொல்வது நான்
எம்பார் கொண்டாட்டம் இசைந்து -எம்பெருமானார் கடாஷத்தால் வந்த பெருமை
கால கத பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருமே

ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே-பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

செங்கழு நீர் –ஆம்பல் -என்றது
பரதந்த்ர ஞானம் பிறந்து -ஸ்வ தந்திரம் போக -புழக்கடை வேதம் -அதர்வண வேதம் -அஷ்டாக்ஷர மந்த்ரம் -ஓமித்யேகாஷாரம் –நாராயணா பஞ்சாக்ஷராணி -நாராயண உபநிஷத்தில் வரும் –

அலரப் புகுகிற அளவிலே கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறி கோள் வேறு அடையாளம் உண்டோ என்ன –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவத்விஜரும் கூட தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலம் ஆய்த்து-
திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே சங்கு -என்றது ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் – குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –
சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து என்றுமாம் –
தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இ றே-
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்- சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி

சக்கரவர்த்தி திருமகன் அந்தபுர காவல்
காஷாய வேத்திர பாணி -கொம்பு கையில் காவல் -அலங்காரம் காஷாயம் அணிந்த வயசான கிழவர்கள் –
வ்ருத்தாம் – கைங்கர்ய த்வரையால் வஸ்த்ரம் பேண அவகாசம் இல்லாமல் –
நீர் காவி ஏறி காஷாயம் வைராக்கியம் விரக்தி – சகரவர்த்தியோபாதி பழையவர்
சக்கரவர்த்தி திருமகன் தழுவி குங்குமப் பூ சந்தனம் அலங்காரம் – வெண் பல் போக்ய த்ரவ்யங்களில் விரக்தி
தவா தவா என்பர் தவத்தவர் –யானே நீ என் உடைமையும் நீயே — கண்டபேர் இடம் பல்லைக் காட்டாமல் வெண் பல் தவத்தவர்-குறடு வேறு ஏறோம்-
சத்தம் கீர்த்தி யந்தாம்-எப்பொழுதும் ஸ்தோத்ரம் நித்ய யுக்தர் – அனவரதம் -விடிவுக்கு அடையாளம் இல்லை

ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்-தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது–உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –
வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை – கிருஷ்ணன் உடன் பழகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி ஸ்ரீ சூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பிரத்யஷமும் பிரமாணம் இல்லை சாஸ்திரம் பிரதிகூலமாக இருந்தால் வாய் பேசும் -வாய் மட்டும் சொல்லி
மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் ஆப்த வாக்கியம் தர்மஞ்ஞாச்ய நடவடிக்கை வேதாஸ் ச கூட அபிரதானம் -ஆபஸ்தம்ப சூத்திரம் –
யச்தய தாசரதி ச்ரேஷ்டா -யதா ததே அவர்கள் போலே செய்ய வேண்டும் – சொன்னது செயலிலே கண்டிலோம் -அனுஷ்டான பர்யந்தம்
உக்தி மாதரம் ஹிருதயத்தில் நினைவும் செயலும் வேவேறே கண்ணன் ஸ்வபாவம் கடைக் கணித்து–அவளுக்கு
பாம்பணையாருக்கும் நாவு இரண்டு மனஸ் ஏகம்- வசஸ் ஏகம் வாய்-செயல் ஒன்றாக

நங்காய் –
பூரணை இ றே–எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இ றே – சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை – பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு நாணமும் இன்றிக்கே ஒழிவதே இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என்பக்கல் சாபேஷராய் வருவது என்ன –

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன உன் பேச்சின் இனிமை கேட்க இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீருடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
வாக் மாதுர்யமுடையவரே நீர் அஹ்ருதமாய் சொல்லிலும் பேச்சின் இனிமையைப் பார்த்தால் ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நா வும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம் நா வீறுடைமை-பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே-
ந ரிக் வேத -ந யஜுர் வேத -சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடைவலானோ கம்பர் –
மதுரம் வாக்கியம் -திரு நாராயண ஐயங்கார் மதுரம் இனிமை தமிழ் பேசினார் தேவ பாஷை பேச மாட்டேன் -ராவணன் ஆள் என்று நினைக்கலாம்
வால்மீகியும் தமிழும் -வால்மீகி தமிழ் அறிவார்

நாணாதாய் –
நாணினார் போல் இறையே செய்யும் -திரு நெடும் தாண்டகம் பூணி —நாண் இத்தனையும் இல்லார் நப்பின்னை காணில் சிரிக்கும் –

புள்ளை கடாவுகின்ற -தென் திருப்பேரை 7-3-10-
கங்குலும் பகலும் வட்கிலள் இரையும் மணி வண்ணா என்னும் கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் வெட்கம் இல்லாதவள் –
பகவானை ஆஸ்ரையித்தவர் வெட்கம் – தலையினோடு ஆசனம் தட்ட வீதி யார ஆடி உலோகர் சிரிக்க
திரு சங்கணி துறை -ஆழ்வார் திருநகர் தாந்தன் -சாபம் -தீர தாமர பரணி தினம் நீராடி பரிகாசம் செய்தவர் கண் போக
சம்பந்தம் சங்கன் திரு செந்தூர் – ஆறு கடலில் கலக்கும் இடத்தில் சங்கமாக இரவில் பகலில் இங்கே மனிஷனாக வர –
வைகாசி மாசி விசாகம் தீர்த்தவாரி –
நாண் எனக்கு இல்லை தோழி மீர் காள் -சிகரம் அணி –மாயன் –
சோநேபூர்- கபிஸ்தலம் -கஜேந்திர வரதன்-அஷ்ட புஜ -ஓன்று பணித்தது உண்டு -காதல் -நெருங்க நோக்கி –
தொட்ட படை -குட்டத்து கோள் முதல் அஞ்ச தாளே சார்வு –

இடை -மத்திய -நமஸ் -மத்யமாம் பதம் போலே -என்னை நான் ரஷிக்க கூடாதே உன் இடையை காக்க தான் என்னுடைய எட்டுகைகள் என்றானாம் –
வெறும் வாய் பேச்சு இல்லை -ஓன்று பணித்தது உண்டு -மகா விசுவாசம் – உளன் எனில் உளன் உளன் அலன் எனில் உளன்
இலன் எனில் சொல்லாமல் வாக் அமர்த்தம் – நாஸ்தி -முன்பு வேறு இடத்திலோ வேற வஸ்து இருப்பதை காட்டுமே
ஏணி இல்லை -கதை நாஸ்தி -உளன் அலன் அவன் அருவம் விசிஷ்ட பிரமம் -இரு தகைமையோடு உளன் –

போதரிக் கண்ணினாய் கடாஷம் நா வுடையாய் உபதேசம்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தா;லே வளர்ந்த திருக் கைகளை உடையவனாய்
-ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே–நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே-பெருமாள் சங்கு சக்கரம் காட்டி அருளினை இடங்கள் நிறைய இல்லை -கண்ணனோ பிறக்கும் பொழுதே தாய் தந்தைக்கு காட்டி அருளினான் –சங்கு சக்கரம் -சூர்ய சந்திரன் -நாபி கமலம் அலரும் குவியும் -சந்த்ர மண்டலம் போல் -சங்கரய்யா -விருப்புற்று கேட்க்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –

வாவியுள் பங்கயக் கண்ணானை -திரு மேனியே வாவி திருக்கண்கள் பங்கயம் –கப்யாசம் புண்டரீகம் அஷிணி-
கப் ஆயாசம் -கவி ஆயாசம் குரங்கின் பின் பகுதி இல்லையே

திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம் எழுந்திராய் -என்கிறார்கள் –

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இ றே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற
திருக் கண்களையும் உடையவனை பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு அது பெண்களுக்கு தோற்றும்–அல்லாதார்க்கு தோற்றாது –இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இ றே
சங்கோடு சக்கரம் ஸ்பர்சத்தால் வளர்ந்த திருக் கைகள் தடக்கை ஆழ்வார்கள் அளவும் அலை எரியும் திருக் கண்கள்
பொன்னார் சார்ங்கம் அடிகள் -இன்னார் என்று அறியேன் மயக்க வைக்கும் அழகு கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
பங்கயக் கண்ணன் தன்னை எழுதி கொடுத்து வாங்கப்படும் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி மயக்கி
விடலை தனம் விடவே செய்து குறும்பு காண பார்த்து
ஜிதந்தே
தாமரைக் கண்ணனை விண்ணோர் தோற்று பரவும் தோற்க வைத்து – உபய விபூதியையும் தோற்பிக்கும் திருக் கண்கள்
சந்திர ஆதித்யன் -திங்களும் ஆதித்யன் போலே அலருவதும் மொட்டி
உந்தி தாமாரை -சங்கு சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் ஆங்கு மலரும் குவியும் மால் உந்தி வாய் கமலத்தின் பூ பேய் ஆழ்வார்
திருக் கண்களும் அலருவதும் மொட்டுவதும் கிருஷ்ணன் கையில் உண்டோ -மறைத்து கொண்டது
பெண்களுக்கு தோற்றும் உகவாதாருக்கு கூசி மறைத்து நெய்த்தலை நேமியும் கை தலம் வந்து காணீரே மெச்சூடு சங்கம் இடத்தாம் அப்பூச்சி காட்டி –
பரதவ சின்னம் காட்டாமல் பெருமாள் போலே இல்லையே கண்ணன்

பாடல் மாலை -சாற்றி அருளுகிறாள்
பங்கயக் கண்ணானைப் பாட -கரிவவாகி படை –நீண்ட அப்பெரியவாய கண்கள் என்றாரே
சங்கோடு சந்க்கரம் ஏந்தும் தடக்கையையனையும் பங்கயக் கண்ணானனையும்
தமஸ பரமோதாதா சங்க சகர கதாதரா – மண்டோதரி -யுத்த -114-15
ஆயதாஸ்ஸ ஸூ வ்ருத்தாஸ்ஸ பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -திருவடி -கிஷ்கிந்தா -3-15-
ஜாதோசி தேவதேவேச சங்கு சக்ர கதாதர — உப சம்ஹர விச்வாத்மன் ரூபமேதச் சதுர்புஜம்
ஜாநாதும் அவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1/10 வசுதேவர் தேவகி –
மெச்சூது பதிகம் அப்பூச்சி காட்டுகின்றான் – நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நானுயிர் வாழ்ந்து இருந்தேன் –
தேனைவ ரூபேண சதுர்புஜேந -அர்ஜுனன் ஸூஜாத ரேகாமய சங்கசக்ரம் தாம்ரோதரம் தஸ்ய கராரவிந்தம் -நாகப் பழக்காரி
பங்கயத் தாமரைக் கண்ணனே கண்ணா நீள் நயனத்து அஞ்சன மேனியனே க புண்டரீகநயன புருஷோத்தம க-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி–எம்பெருமானார் பரமான வியாக்யானம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தத்வமஸி-ஸ்வாமி அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர் போல்வார் மூடிக் கொண்டது போலே
செங்கல் பொடிக் கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசநா-யதிராஜ சப்தத்தி
வெண் பல் -அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-என்னும்படி மகா விரகத சார்வ பௌமர்
தவத்தவர் -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் ஆதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக் கோயில் என்னும்படி
சங்கிடுவான் -திறவு கோல்-ஆழ்வான் மூலமாக திரு கோவிலைப் பெற்ற இதிகாசம்-

ஞானம் பக்தி விரக்தி நம்பிகளுக்கு பூர்த்தி நாண் மடம் அச்சம் பயிர்ப்பு பூர்த்தி நங்காய்
அந்தணர் மாடு -செல்வம் -வேதாந்தாம் – தபோ தனம் ரிஷிகள் பிராமணர் வேததனம் ஸ்திரீகள் லஜ்ஜா தனம்
தெரிந்தும் தெரியாமல் பாவித்தல் மடம் –
நங்காய் -நாணாதாய் விரோதம் அடுத்து சொல்கிறார்களா -இல்லை –
நாண் கௌரவம் -அர்த்தம் -உண்டே –

வாசா தர்ம -பெருமாள் இடம் சிபார்சு செய்ய -பிராட்டி அவாப்நுகி -வாக்காலே தண்ணீர் பந்தல் வைக்க -நா வுடைமை –
நாவினில் நின்று மலரும் – உளன் சுடர் மிகு சுருதியுள் உளன் -பிரமாணம் -வைதிகர் வேதமே பிரமாணம்
ஸ்ருதி ஸ்மரதி மமை வாக்யா என்னுடைய கட்டளை மனு பராசராதிகள் வெளி இட்டாலும் சாஸ்திர யோநித்வாத் -சப்தமே பிரமாணம்
பிரத்யஷகம் சப்தம் விருத்தம் இல்லாத அனுமானம் பிரமாணம் -ஒரே ஜ்வாலையா -இரண்டு மூன்றா -திரி எண்ணெய் -குறைவதால் அனுமானத்தால் –
ஜ்வாலா பேதம் அனுமானத்தால் -இயம் ஜ்வாலா பூர்வ ஜ்வாலா -பின்னா –
மூன்று தண்டர் ஒன்ற்னர் அம் தண் அரங்கமே -சந்நியாசி பற்றி திரு மழிசை ஆழ்வார் மட்டுமே அருளி –
எம்பெருமானார் எதிகளை ஏற்படுத்தி -700 பேரை ஏற்படுத்தி -தவா சாத்திக்கு கொண்டே மம சாதிக்காமல் ஒரே சித்தாந்தம் -ஒன்றினார் –
என் கண்ணனுக்கே என்று ஈரியாய் -நெஞ்சு கசிந்து இருப்பார் வெண் பல் தவத்தவர் -தவ தவ சொல்லி

தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி பரிசுத்தம் ஆக்குமே
திருப்புன்னை மரத்தில் சந்தை சொல்வார்களாம் -காலை -இத்தாலே வளர்ந்ததாம்
தர்சயம் தந்த பந்தி -அரங்கன் கையை இப்படி மறித்தாலும் அவன் குறடு தவிர வேறு எங்கும் ஏற மாட்டோம் –
வெண் பல் தவத்தர் –
த்ருநீக்ருத -ராமானுஜ பதாம் புஜ சமாஸ்ரையான சாதினாக –
சதுரா சதுரஷரீ -ராமானுஜ திவாகரா –
வெண் பல் -நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –
இனிப் பொய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை உன் சாயிக்கு அழிவு கண்டாய்
உனக்கு அவத்யம் -ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணி ஜீவிக்கும் காட்டில் ராஜாவுக்கே அவத்யம் –
தங்கள் திருக் கோயில்
தங்கள் இல்
திரு இல்
கோ இல்
திருமந்த்ரார்தம் -ஸ்வரூபம் பிரகாசித்து -தங்கள் -ஆத்மாவாலே பேறு 
த்வயத்தில் பெரிய பிராட்டியால் பேறு -திரு இல்
சரம ஸ்லோகம் ஈஸ்வரனால் பேறு என்கிறது –
முமுஷ்வுக்கு அறிய வேண்டும் ரகஸ்யங்கள் இவை –
சங்கிடுவான் -அர்த்தம் உள்ள ரத்னம் அருள –
ஞானக் கை தா காலம் களவு செய்யேல்
எங்களை முன்னம் சம்சாரிகளை எழுப்புவான் வாய் பேசும்
பசப்படும் -பேசின வார்த்தை பேசின ராமன் இரண்டு இடத்திலும் அன்வயிக்கும் –
உத்தரிப்பிக்க வந்து இருக்கிறோம் –
அபயபிரதானம் கேட்ட பிள்ளை உறங்கா வல்லி தாசர் அழ –
உம்மை நாம் கூட்டியே போவோம்
உனக்கு நான் உண்டு
எனக்கு பெரிய நம்பி உண்டு
ஆளவந்தார் உண்டு தொடர் சங்கிலி உண்டே –
ஆவதரிக்கப் போகிறார்கள் தத்வ தர்சனிகள் கீதை –
பேசப்படுபவர்கள் ஆசார்யர்கள்
சிஷ்யாசார்யா க்ரமம் குரு பரம்பரை அவனே கொடுத்து அருளி
உபேதசந்தி  ஞானம் –
அடுத்த வருஷம் என்ன சொல்லப் போகிறேன்  -ஸ்வாமி தள தள குரலில்
சங்கு சக்கரம் -உள்ளவரை உள்ள விட -கண்ணனே சொல்லி அருளி –
ந முத்தரை ந பிரவேஷ்டத்வய –
சங்கு போலே அவன் திருவடிகளில் இருந்து
சக்கரம் சுழன்று தீர்தகரராய் திரீந்து
பங்கய கண் -ஆசார்ய கடாஷமே உத்தாராகம் –

திருப்பாண் ஆழ்வார்
புழக்கடை தோட்டம் காலை எழுந்து பாட
லோக சாரங்க மகா முனி -செங்கல் பொடி -திருக் கோயில் சங்கு இடுவான் போனாரே
நங்காய் -பூர்த்தி நைச்யம் தான் பூர்த்தி -ஜன்ம சித்தம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நாணாதாய்
நாண் கௌரவம் நாடுவோம் நாமே தேசிகன்
அஹங்காரம் படாமல் அடியார்க்கு ஆட்படுத்திய விமலன்
தோள் மேலே உட்கார லஜ்ஜை இன்றி
நா வுடையாய் சொல்ல வந்த விஷயம் -சுருக்கமாக
காண்பனவும் -கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பல மறையின் பொருள் -நாண் பெரியோம் அல்லோம் நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே விநயத்துடன் இருப்பவள் நாணாதாய்
நாவுடையாய் – நா அசைந்தால் நாடு அசையும்-நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே -தேசிகன் -முனிவாகன போகம் –

பிரணவம் சகாரம் பாதுகை
முன்னம் எழுப்புவான் அடியார்க்கு ஆட்படுத்த விமலன்
ஜன்ம சித்தம்
திருத் துழாய் திரு முடியில் இருந்தால் சேஷத்வம் குறையுமா ஏழு விசேஷணம் திருக் கண்ணுக்கு சொல்லி
கரிய வாகி -நீண்ட அப்பெரிய அ -சுட்டு பேதைமை செய்தன-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — புள்ளின் வாய் கீண்டானை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 19, 2015

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில் தானே வருகிறான் என்று கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில்-நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில் அவன் தானே வருகிறான் என்று நிர்ப்பரராய் இருக்கும்வரை எழுப்புகிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பள்ளத்தில் மேயும் -இத்யாதி – பகாசுரனைப் பிளந்தபடி –
ஸ்வ ஆஸ்ரிதருக்கு–ஸ்வ அனுபவ விரோதியான –காமாதி தோஷ நிவர்தகனாய்

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் —சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இ றே
அத்தாலே இ றே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இ றே –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்–ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹந்காரத்துக்கு நன்மை யாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது – அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

புள்ளின் வாய் கீண்டான் -கிருஷ்ண அவதாரம்
மனத்துக்கு இனியான் பாசுரம் கேட்டு–அசல் மாளிகை–அபராதம் தீர வார்த்தை சொல்ல-
பெண்காள் இங்கே ராம வ்ருத்தாந்தாம் சொன்னார் உண்டோ–ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ பாரதமும் பாஞ்சராத்ரம் வியூகம் சொன்னோம்
ராம விருத்தாந்தமும் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்–வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்
பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு–பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான கிருஷ்ணாவதாரமும் தன்னைப் போலே பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தான் என்று ராமாவதாரமும்
கண்ணனுக்கு யுட்பட்ட விரஜை பூமி–இனியானை பாடவும் உம்மை சொல்லி -கண்ணன் பாடினால் தூங்கலாமா-
பெரியவர் சின்னவன் சண்டை -உனக்கு கூடவா மூளை இல்லை வாய் மூடி இரு–வார்த்தைபாடு அதிகம் ஆனதால் விபரீதம்
கண்ணனை இங்கே வையலாமா–பெண்களை படு கொலை–அவளுக்கும் மெய்யன் அல்லை
ஒருத்தி தன்னை புணர்த்தி ஐந்து பெண்களை சொல்லி–உண்ணாது உறங்காது ராமன் ஒரு பெண்ணுக்காகா
வேம்பெயாக வளர்த்தாள்–குறும்பு செய்வானோர் மகள்–வைதாலும் கண்ணன் நாமம் -ஏசியே யானாலும் பேசியே போக்கே
ராமன் நாமம் சொல்லவா–சீதைக்கு தான் செய்தான்–கண்ணன் ஏக தார வ்ரதன் இருந்தால் நாம் எல்லாரும் போக முடியுமா
பிறர் மனை நோக்காத–பிராப்தியே இல்லையே நமக்கு அவனுடன்–இரண்டு கோஷ்டியாக பிரிந்து
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாராணம் பிடுங்கி–கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மான்

ஸ்வாஹா சொல்ல மறந்து ஆஹா என்பர் கண்ணனை பார்த்து–பிராப்தி இல்லையே -ராமன் இடம் என்றாளாம்
வேம்பின் புழு வேம்பு அன்று உண்ணாது–வேம்புக்காக இட்டு பிறந்தோம்–கண்ணன் ராமன் —வருக வருக வாமன நம்பி காகுத்தன் வருக
சீத வாய் அமுதம் உண்டாய் சிற்றில்–தர்மி ஐக்கியம் உண்டே சமாதானம் பண்ண–கிருஷ்ண கோஷ்டியார் சமாதானம் அடைய வில்லை
இருவரும் சொல்லிப் போவோம் -என்ன–இரண்டு கோஷ்டி
காஞ்சி வடகலை தென் கலை -இருவரும் தனி கோஷ்டியாக போக கலெக்டர்–ராமன் நாமம் கிருஷ்ணன் நாமம்
எந்த நாமம் கோஷ்டி முன்–அவதாரம் ராமர் -முன் போகட்டும்–அயோதியை இல்லை விரஜை கிரிஷ்ணனுக்கு பிரதானம்
காஞ்சி யார் முன்னால் போக —மிராசு -சமஸ்க்ருதம் தாத்தாச்சார்யர் தொடங்கி முன்னால் போக –
அப்படியே திரும்பி தென்கலை முன்னாக போக சொன்னானாம்–புள்ளின் வாய் கீண்டானை -முன்னால்–கிள்ளிக் களைந்தானை பின்னால்-

எந்த சரித்ரம் சொல்லி இருக்க வேண்டும்–பொல்லா அரக்கன் ராவணனை கிள்ளிக் களைந்தான்–இவர்கள் கொக்கு சுட்ட கதை
புள்ளின் வாய் கீண்டானை–பள்ளத்தில் மேயும் -கலகல அசுரன் -புள் இது என்று பொதுக்கோ சடக்கென பெரியாழ்வார் -பேச்சு வழக்கு
சாமான்யமான சரித்ரம்--இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி -அவ்வளவு பெரிய கதை–அதே சுலபம் ராமனுக்கு –
உசந்த தாழ்ந்த சரித்ரம் எனபது இல்லை–வதுவை –நப்பின்னை -மாய மா கேசி -குரவை அது இது உது என்னாலாவது இல்லை-உன் செய்கை என்னை நைவிக்கும்–நீ செய்தாய் என்பதே —அது -ஏழு எருதுகள்–இது -கேசி–உது -குரவை கூத்து
மாதவ புத்திரன் பிள்ளைகள் பரிஷித் மீட்டது உசந்த–கோவர்த்தன நடு–
கண்ணை மூடி பண்ணின கார்யம் கண்ணை திறந்து பண்ண முடியுமா -மண்ணை -அல்பம்–நவநீத சரித்ரம்
குணாய குணீனாம் -உன்னை சேர்ந்ததால் குணங்களுக்கு பெருமை
கோபாலன் குணம் மாடு மேய்க்க தான் லாயக்கு சொல்வார் வசவு–அதே கண்ணன் -உயர்ந்த ஆ மருவி அப்பன் மன்னார்குடி
எங்க கண்ணன் பகாசுரன் கீண்டிசெய்தது அதற்க்கு சமம்–நம்முடைய சக்தி கொண்டு–சர்வசக்தன் எல்லாம் சடக்கு
ராவணன் திருந்த வாய்ப்பு கொடுத்து 14 நாள் சண்டை–இத்தலைக்கு அனுமதி ஒன்றே வேண்டுவது–தன்னை கொடுக்க விரோதி போக்கி
இச்சை ஒன்றே வேண்டுவது–எந்த விரோதியாக இருந்தாலும் போக்கி–அனுமதி சாதனம் இல்லை ஸ்வரூபத்தில் புகும்
அனுமதி ஈடுபாடு பக்தி சாத்திய பக்தி–அனுமதி உபாயம் இல்லை–ராமவிருத்தாந்தம் கீழும் சொல்லி இங்கும் சொல்லி
தங்கள் பள்ள மடை கிருஷ்ண விருத்தாந்தம்–பொல்லா அரக்கன்–நல்ல அரக்கனும் உண்டே–தாய் தமப்பன் பிரித்த பையல் உயிர் உடம்பை
முன் பொலா ராவணன்–திருவினை பிரித்த தண்மை-கொடுமையின் கடுமிசை அரக்கன்–நீசன் —விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டே
பாராட்டா வசவா -நம்பிள்ளை–வசுவு என்கிறார்–லோகம் அழ வைப்பவன் ராவணன் சொல்லி அப்புறம் அவள் பாவத்தில்
சூர்பணகை அசடு என்கிறாள் —கடலை ஜகத் தலை கீழே திருப்ப போகிறேன் -ராவணன் இடம் காட்டி–அரக்கர் மாயா சிரஸ் காட்டி மாய மான் காட்டி -கிர்த்ரிமத்தால் பிரித்து–ராவணன் போலே இவர்களும் பொல்லா அரக்கர் —கிள்ளிக் களைந்தான் —நாக
திரு விளையாடக் சூழல் சோலை-நோவு பட்ட இடம் — இலை கிள்ளி களைந்தது போலே–வீர பத்னி
கல் எடுத்து கல் மாரி காத்தாய் —பார்த்தா எவ்வளவு பெரிய கார்யம் செய்தாலும் -பத்னி–மலை எடுத்தாலும் கல் தானே -நேராக சொன்னால்
பிறர் இடம் விட்டுக் கொடுக்காமல் இது சாதாராணம் என்பர் —சம்சாரத்தில் விட்டு வைத்தால் தோஷ அம்சம் கிள்ளி களைந்தான்
எதிரிகள் ரஞ்சநீயச்ய விக்ரம் -வீரம் கொண்டாட -சாமர்த்தியம் அழகு–உகவாதார்க்கும் விட ஒண்ணாத வீரம் பத்னிக்கு
நமோ நாராயண சிதம் பிடரி பல்லாண்டு -தோல்விக்கும் ரஷணத்துக்கும் மேல் எழுத்து இடும்–
ராவணன் வீரம் இலக்கானான்–தங்கை அழகில் கலங்கி–தம்பி சீலத்தில் இலக்கானான்

பாடிப் போய்-பாட்டே தாரகமாக போனார்கள் விரஹ தாபம் போக்க பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தனம் அம்ர்தம்–கட்டு சோறு -ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் நர ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-நால்வரையும் பாடி என்றவாறு – 

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி–பாடி போய் பகவானால் கொடுக்கப் பட்ட பலம்-
பாடுகையாலே பலம் ஏற்பட்டு–உபன்யாசம் செய்தால் தான் பலம் வரும் காஞ்சி சுவாமிகள்
மற்றவர் உஜ்ஜீவனம் அடைய வைக்கும் சந்தோசம்–பிள்ளைகள் -பாவை களம் புக்கார்
சிறுவர்களும்–மெய்க் காட்டு கொள்ளும் சங்கேத ஸ்தலம் பாவை களம்–நெல் களம் போர் களம் போலே பாவை களம்-பாலைகள் அறியாமல் போனார்கள்-போனேன் வல்வினையேன் என்பர் பரகால நாயகி –

கீர்த்திமை –
எதிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை – உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –
ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் தங்கை அழகிலே கண் கலங்கினாள் தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

-பாடிப் போய் –
இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி – வழிக்கு தாரகம் இ றே திரு நாமம் தன் தாள் பாடி -என்னக் கடவது இ றே –
கல்யாண குணங்களை ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி அதுவே தாரகமாய் போய்

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும் –உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் -நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் —சங்கேத ஸ்தலம் புக்கார்கள் – அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் —அதாவது காலஷேப கூடம்–அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
வெள்ளி உச்சிப் பட்டது–வியாழம் அஸ்தமித்தது–உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இ றே இருப்பது என்ன-அதுவே யன்றி –
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்–அஞ்ஞானம் தலை மடிந்தது –
சுக்ரன் -வெள்ளி -சுக்ரோதயம் அருணோதயம் சூர்யோதம்–ப்ரஹச்பதி மறைந்து வெள்ளி எழுந்து
நின்ற குன்றம்நோக்கி நெடுமால் சொல்வீர்–விடிவுக்கு உடல் இல்லை–திரளாக நாங்கள் வந்தோம்–ஈட்டம் கண்டால் கூடுமே
பிரியவே இல்லையே–புள்ளும் சிலம்பின–அது கூட்டில் எழுந்து இருக்கும் பொழுது–ஆகாரம் தேடும் பொழுது சிலம்பின
திர்யக் விருத்தாந்தம் கொண்டோ கால நியதி–நாங்கள் சொல்லவதற்கு விபரீதம்

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும் மான் போலேயும் இருந்துள்ள கண்–அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்–பூவோடு சீறு  பாறு  என்னும் கண் என்னவுமாம் –
ஸ்வச்சமாய் ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

குள்ளக் குளிரக் –
ஆதித்யத்து நீர் கொதிப்பதற்கு முன்னே -அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி -கண் அழகை நினைத்து கௌரவம் அவன் உபாசகன் -தேடி வர வேண்டும் அஸி தீஷணை புண்டரீகாஷன்
நெடு நீண் கண் -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் ஒரு மூலையில் -அவனும் அவன் விபூதியும்
தாயார் கடாஷம் விழிக்க போகாதே போது அரி கண்ணினாய் பூ /மான் போன்ற கண்
பூவில் படிந்த வண்டு போன்ற கண் ஹரதி பூவுடன் சீறு பாறு வென்ற கண் போதுகின்ற அரி உலாவும் மான்
குள்ளக் குளிர -அடுக்குத் தொடர் அதிகமாக செக்க சிவந்து-மீமிசை சொல் -மிகவும் குளிர்ந்து ஆதித்ய கிரணம் பட்டு கொதிக்கும் முன்பே
ஆழ முழுகி விரஹ தாபத்தால் குளிருமே என்று அறியாமல்
முதல் கோபி விரஹ அக்னியால் யமுனை நீர் வற்றி போகுமே -ஒன்றாகவே போகலாம் கிருஷ்ண விரஹ தாபம்-

நீராடாதே –கிருஷ்ண குணங்கள் சேஷ்டிதங்கள் அவஹாகித்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
வசந்த உத்சவம் -தீர்த்தவாரி இரவில் காஞ்சி – தென்கலை குளிக்க வழக்கம் இல்லை காஞ்சி சுவாமி -ஸ்நான வஸ்த்ரம் –
போய் தீர்த்தம் ஆடாதே -பாசுரம் வர -செய்யாதன செய்யோம் தீர்த்தம் ஆடாமல் வந்தாராம் நீராடாமல் பள்ளி கிடத்தியோ
கண்ணாலே -இருவர் கண்ணுக்கும் இலக்கு உன்னுடைய சௌந்த்ர்யம் எங்கள் பேற்றுக்கு உடல்
அவன் படுக்கை மோந்து கிடக்கிறாயே கண்ணன் மடியல் இருக்காமல் பார்த்த பார்த்த இடம் நெல் இருக்க உஞ்ச விருத்தி பண்ணுவையோ

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆர- நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து–பகவத் அனுபவத்தைப் பண்ணாதே -தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து–அவன் கண்ணாலே குமிழி நீர் உண்ணப் பண்ணாதே–நெடுங்கண் இள மான் இவள்
அணைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்–இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை–மோந்து கொடு கிடக்கிறாயோ-விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ -தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ
பாவாய் -கொல்லி அம் பாவை -பதி விரதை நிருபாதிக ஸ்த்ரீத்வம்

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து–அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து–படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –
நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இ றே-சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –
நல் நாள் காலம் போய் கொண்டே இருக்கும் -கிருஷ்ண அனுபவம் பெரியவர் கொடுத்து இருக்க வீணாக கழிப்பதே
பரம பதத்தில் உள்ளாறும் கைங்கர்யம் துடிக்க கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -ஆறி இருக்கிறது என்ன
மேய்ச்சல் கடையிலே அசை இடுவார் உண்டோ
நல் நாள்
ஆண்டாள் -பட்டர் இடம் தீர்த்தம் தாரும் பெரிய திரு நாளில் இந்த ஏகாதசி எங்கே தேடி கண்டு பிடித்தீர்கள் –
கைங்கர்யம் செய்ய உடம்பில் பலம் வேண்டும் ஏகாதசி உபவாசம் கைங்கர்ய விரோதி
நித்யம் பெருமாள் அனுபவம் ஏகாதசி நினைவு எப்படி வரும் – நல் நாள்

கள்ளந்தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண சே ஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை–அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற–ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்–சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –குற்றம் நின்றே போம் இத்தனை —கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற களவை விட்டு எங்களோடு ஒரு நீராக கலந்து எங்கள் சத்தையை உண்டாக்காய்

கள்ளம் தவிர்ந்து-
தனியே கிருஷ்ண குணங்களை நினைந்து இருப்பது கள்ளம் – பாகவதர்கள் -இவ்வளவு பேர் எங்கள் உடன் கலந்து
அவன் உடன் கலந்த உடம்பை காண ஆசைப் படும் பரமாத்மா அபஹாரம் இங்கே ஏகாந்த அனுபவம்
சேஷத்வத்தை பொதுவாக உண்பதனை நீ தனியே உண்ண புக்கால் சேஷி இடம் ஷமை கொள்ளலாம் சேஷித்வத்தை அபஹரித்தால்
சேஷித்வத்தை அபஹரித்தால் யார் இடம் விண்ணப்பிக்க குற்றம் நின்றே போம் உன்னுடைய திரு மேனி காட்டாமல் இருந்தால் பெரிய குற்றம் ஆகும்

கள்ளம் தவிர் மாலை-சாற்றி அருளுகிறாள்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ – கள்வா என்று கூறாதே உன்னைக் கச்சிக் கள்வா என்று ஓதுவது என் கொண்டு
கள்ளம் தவிர்ந்து நந்தன் மதலையையும் காகுத்தனையும்–வருக வருக காகுத்த நம்பி வருக இங்கே
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா —தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
என்றும் என் மனதுக்கு இனியானை மணி வண்ணனை -ஆண்டாள் யசோதை பாவத்தில் பெரியாழ்வார் இருவரும் ஒருவரே -கள்ளம் தவிர் என்றுமாம் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் தனி வ்யக்தியாய் இருக்கட்டும் நாம் எல்லா அர்ச்சா பெருமாளையும் அனுபவிக்கலாம் என்றுமாம்

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று–நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும் பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் -ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன்வேதமையன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை--மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பாவைக்களம்--பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்ற--சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை எடுத்து
புள்ளும் சிலம்பின வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர–தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஆத்மா அபஹாரி–இனியது தனி அருந்தேல்–பாவைக்களம்-கால ஷேப மண்டபம் -ஆசை உடையோரை எல்லாம் புக்க விட்டாரே-எம்பெருமானார்

வானமா மலை -சுவாமிகள் –
கோவலர் தம் பொற் கோடி -யாமுனமுனி
நற் செல்வன் தங்கை -ராம மிஸ்ரர் -திரு குமாரத்தியார் சேற்றில் படியாய் கிடந்தது -மணக்கால் நம்பி -மணல் கால் பட்டாதால் –
மனத்துக்கு இனியான் ராம மிஸ்ரர்–போதரிக் கண்ணினாய் புண்டரீகாஷர் உய்யக் கொண்டார்
பிணம் கிடக்க மணம் புணர்ந்தார் உண்டோ–யோக ரகசியம் வேண்டாம் தான் மட்டும் கலந்து அனுபவம் வேண்டாம்-உலகம் உஜ்ஜீவிக்க வைக்க நினைத்த -உய்யக் கொண்டார் –

அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் -நல் செல்வம்–ராமாத்வைதம் ஆனதே அயோதியை ராமோ ராமோ
கண்ணன் அல்லால் இல்லை கண்டீரே சரண் திருவாய்ப்பாடி–சீதவாய் அமுதம் உண்டாய் சிற்றில் வந்து சிதையேல்
போதரிக் கண்ணினாய் பாவாய்–கொல்லி அம் பாவாய் -திருவிட எந்தை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
போதம் -ஞானம் அறிவு ஞாய போதினி தத்வ போகினி–போதில் கமலவன்நெஞ்சம் -பெரியாழ்வார் -போதத்துக்கு இல் ஸ்தானம் ஆன கமலம் –
ஞானம் அரிக்கும் கண்ணினாய் -மகா ஞானம் மிக்கவள் –
மாதவத்தோன் புத்திரன் -மீண்ட -பிறப்பகத்தே-வேத வாய் -உன் மக்கள் -ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
சுடர் ஒளியாய் தன்னுடைச் சோதி —பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -500 பாசுரம் திருவாய்மொழி -ஆறு மாசம் மோகித்த –
வதுவை வார்த்தை -அதமம் மத்யமமுத்தமம் எது கேட்டானாம் கண்ணன் ஆழ்வார் இடம் -கொக்கு சுட்ட கதை —கீழ் வானம் வெள்ளென்று–வெள்ளி இப்பொழுதா எழும்–சாஸ்த்ரார்த்தம்சொல்ல
சுக்ரோ தைத்ய குரு–வியாழன் தேவதைகளுக்கு வாத்யார்–நல்லவர் காலம் இல்லை–அசுரர்கள் -தலை விரித்து ஆடுகிறார்
கலி கோலாகலம்–அரக்கர் அசுரர்கள் உள்ளீரேல் -பொலிக பொலிக -பொலிக –
புள்ளும் சிலம்பின காண் -சேர்ப்பார்களை பஷி –
குயில் கொக்கு ஹம்சம் கருடன் -நான்கு பறவைகள் –
குட்டி காக்கை கூண்டில் போடுமாம்
பங்குனி 30 -வசந்த காலம் -குயில் கூவும் பஞ்சம ராகம் —அசலாரால் வளர்க்க
உப நயனம் -ஆசார்யர் இடம் கொண்டு சேர்ப்பதே -வேதம் அத்யயனம் முடிந்ததும் க்ரகாச்ரமம் அனுப்புவார் –
கொக்கு -வியாபாரம் -ஓடி மீனோட உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் –
சாஸ்த்ரார்த்தம் அல்பம் அஸ்தரம் பலன் விஷயம் அசாரம் அல்ப -சார தரம்
அசாரம் அல்பம் சாரம் சார தரம் விட்டு சார தமம் -கொள்ள வேண்டும் –
ஹம்சம் -ஷீரம்-சார பூதம் -வடி கட்டி ஜலம் கொண்டு —கொள்ளும் காலத்தில் பரிஷை பண்ணி கொண்டு-நீரை தள்ளி பாலை கொள்ளுவது போலே
கருடன் –
சாஸ்திர அனுபவம் படுக்கை–கள்ளம் தவிர்கை -பாகவதர் உடன் சேர்ந்து

தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
கிருஷ்ணன் ராம–சிலையினால் இலங்கை செற்ற தேவனே–கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை இருவரையும் சொல்லி அருளி
வச்த்ராபரணம் -துகில் உடுத்தி ஏறினர் பள்ளி எழுந்து அருளாய்–அயோத்தி அம் அரச -கண்ணன் ராமன்
நம் பெருமாள் -வசிஷ்டர் விநயம் எல்லாம் தோற்ற –
பெரிய பெருமாள் யசோதை பிராட்டி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் காணலாம் –
நஷத்ர கதி–பறவைகள் ஒலி- அடையாளம் கதிரவன் வசுக்களும் வந்து ஈண்டி
பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் புள்ளும் சிலம்பின காண் – போதை அரிவதில் கண்ணை உடையவர்-புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் —
குள்ளக் குளிர குளித்து -அந்தணமை ஒழித்திட்டேன்
பழியாக தாசி வீட்டில் மாதரார் -கயலில் பட்டு பாவாய் -அரங்கனை தவிர பாடாத பதி விரதை
நல் நாள் மார்கழி திங்கள் மதி -மார்கழி கேட்டை
கள்ளம் தவிர்ந்து கலந்து -வட்டில்
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து கள்ளம் தவிர்ந்து -தொண்டர் அடி பொடி –
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் -கச்சி நடக்க போவதை திரு மங்கை ஆழ்வார்
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் –
இரவியர் -வந்து வந்து ஈண்டி -வம்பவர் -அனைவரும் வந்தனர் -சுந்தரர் நெருக்க
வெள்ளி வியாழன் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி -புள்ளும் சிலம்பின –தோட்டம் வாழ்ந்த ஆழ்வார்கள்
போதரிக் கண்ணினாய் புஷ்பத்தை பறிப்பதில் கண்ணை உடையவர் குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன்
பள்ளிக் கிடத்தியோ அரக்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயோ பாவாய் பதி வ்ரதை இவர் தானே
பதின்மர் பாடும் பெருமாள் -பாக்கியம் இல்லையே ஜீயர் அரையர் இடம் சொல்ல
சோழியன் கெடுத்தான்
உச்சி குடுமி பெரியாழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் மூவரும்
நல் நாள் -மார்கழி கேட்டை -மன்னிய சீர் மார்கழி கேட்டை கள்ளம் தங்க வட்டில் திருடி – ஆழ்வார் கோஷ்டியில் கலந்து –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — கனைத்திளம் கற்று எருமை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 18, 2015

அவதாரிகை
கிருஷ்ணனைப் பிரியாமல் –இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன் -தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்
இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இப்பாடலில்–பாகவத அபிமான நிஷ்டரை எழுப்புகிறார்கள்-

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
நற் செல்வன் தங்காய்-
பால் சேறாக கறவாமல் -நோற்று ஸ்வர்க்கம் -வாழும் சோம்பர் செய்த வேள்வியர் கற்று கறவை -கறந்து ஜாதி உசித அனுஷ்டானம்
இங்கே கறவாமல் -தானாக விட்டு போனதே -அந்தரங்க கைங்கர்யம் -கர்ம அனுஷ்டானம் அவகாசம் இல்லாமல்
பெரிய கோயில் -க்ரஹனம் -ஆரம்பம் தொடக்கி முடியும் வரை திரு மஞ்சனம் சேர்த்து –
அரையர் -பட்டர் -ச்தாநீகர் -அர்ச்சகர் -கிரகண தர்ப்பணம் -எப்பொழுது செய்வார்கள் – முடிந்த பின்பு பின்னால் செய்வார்கள் –
பிடிக்கும் பொழுது நடுவில் செய்ய முடியாதே தேவதாந்தர –கைங்கர்யம் – அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும்
ஆஸ்தானம் சேவகம் நழுவும் -விடுவான் சொல்ல வில்லை உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் -மா முனிகள்
கைங்கர்ய பரருக்கு உபவாசமே வேண்டாம் – கோவலர் பன்மை கீழே நற் செல்வன் -ஒருமை விசேஷ வ்யக்தி இவன்

செல்வம்-கைங்கர்யம்–அந்தரிஷ கத ஸ்ரீ மான் லஷ்மண சம்பன்னன் கஜேந்த்திரன் போலே –
சாமான்ய தர்மங்கள் விட்டு அந்தரங்க கைங்கர்யம் எம்பெருமானை பற்றி இருப்பது வேற எம்பெருமானுக்கு கைங்கர்யம் வேற –
பெரிய திருநாளிலும் சந்த்யா வந்தனம் விடாதவர் – கண்ணனை கட்டிப் போட்டு யசோதை கார்யம் செய்தாள் –
இளைய பெருமாளை போலே -கிருஷ்ணன் பின்னே சென்று அவனை அல்லது அறியாதே -அவனுக்கே பரிந்து
தோழன் மார் -சுரி கையும் தெறி வில்லும் செண்டு கோலும் -மேலாடையும் ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி -நற் செல்வன் –
ஸு தர்மத்தை அனுஷ்டித்த -கீழ் இங்கு ஸு தர்மம் விட்டவன் – அவர்கள் உடைய அனுஷ்டானமும் இவன் அஅனுஷ்டானமும் உபாய கோடியில் சேராது –
தேவதாந்தர பஜனம் -எம்பெருமான் திருவடி கைங்கர்யம் ஒன்றே கேட்க வேண்டி இருக்க -அவன் இடம் தானே கேட்க வேணும்
அல்ப அஸ்த்ர பலன் உதாசீனம் பண்ண வில்லை நமக்கு கார்யம் இல்லை அங்கே–எம்பெருமான் அனுமதி தான்
உபேயம்-தானே உபாயம்- விடுவித்து பற்றுவிக்கும்  –அவனே உபாயம் நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி விடுகையும் பற்றுகையும் உபாயம் இல்லை-

ஜாதி ஆஸ்ரமம் தீஷை கர்மங்கள் நழுவும் கொண்டிப் பசுவுக்கு தடி கட்டுவாரைப் போலே – சமிதா தானம் -அக்னி கோத்திரம் -ஆஸ்ரமம் மாறி
தீஷா காலத்தில் வேற அனுஷ்டானம் தீட்டு இல்லை தீஷா காலத்தில் காப்பு கட்டிக் கொண்டால் தீட்டே இல்லை
காப்பு அவிழ்த்து வைத்த உடன் தீட்டு வரும் மூன்றும் ஒரே -வ்யக்தி இடம் இருக்குமே-

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே–முலை கடுத்து கதறுகை –
ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று வியசனப் பட்டு –
கனைத்து
கறக்க வில்லை–வேதனையால் கனைக்கிறது–உதாரார் கொடுக்கா விட்டால் கதறுவது போலே –
வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆஸ்ரிதர் -ரிணம் பிரவர்தம் -கோவிந்தா குரலுக்கு -செய்ய வில்லையே எல்லாம் செய்த பின்பு – வாசலிலே கன்று காலியாய் நான் பட்டதோ
குமுறி – இளைய பெருமாளுக்கு அக்னி கார்யம் அன்வயம் ஆகும் பொழுது இவன் கறப்பான்-
கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே சாஸ்திரம் -ஒத்து கொள்ளுமா பக்தி யோகம் -தைல தாராவது –
தபஸ் – நித்ய கர்மாநுஷ்டானம் உண்டா இப்படிப் பட்டவனுக்கு -பிரேமத்தால் பிரிய மாட்டாதவன் –
ஆலச்யத்தால் விட கூடாது – தொல்லை மால் நாமம் ஏத்தவே பொழுது – ஈக்காடு தாங்கல்-இரவு 1 மணி கிளம்பி மத்யானம் —
கெடும் இடர் ஆயன வெல்லாம் கேசவா – சந்த்யா வந்தனம் – யமன் கணக்கு எழுதுவானோ -பட்டர் –
இவன் தன்னை நேராக விட்டிலன் கர்மம் கைங்கர்யத்தில் புகும்

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே பாடாற்றாமை –பால சந்தானமுடைய சிஷ்யர்
கறவா மட நாகு -தன கன்று உள்ளினால் போலே வெறுத்து வார்த்தை திருமங்கை ஆழ்வார் மறவாது அடியேன் உன்னையே அமுதனார் –
தாய் பசு -ஆழ்வார் எம்பெருமான் -கன்று விபரீதம் பட்டர் -நாகு தன் கன்று –சேர்த்து நாகு தன்னுடைய கன்று இல்லை –
தர்க்கம் பட்டர் -விதுஷா அன்னம் பட்டேன் பாதம் கூட வில்லை -7 திருப்பி போட மனைவி சொல்ல -தோசை செய்து கொண்டே அன்னம் பட்டேனே விதுஷா
முலைக் கடுப்பு வேதனை விட கன்றை நினைந்து -இரங்கி ஏழை எதலன் கீழ் மகன் இரங்கினால் போலே
கோபிகள் கன்று ஸ்தானம் வாசலில் -கறவாத எருமை ஸ்தானம்

கன்றுக்கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க – கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இ றே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

நினைத்து முலை வழியே நின்று பால் சோர
கன்றை நினைத்து பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்—மீன்  -பார்வையாலே -/ பறவை- ஸ்பரிசத்தால் /ஆமை நினைத்த மாத்திரத்தாலே போஷணம் -என்பர் தேசிகர் சங்கல்ப ஸூர்யோயதத்தில் –
முலை வழியே – கை வழி தவிர – நின்று பால் சோர – நினைவு பாராமையாலே
திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை
இவன் எருமை கறவாமை ஒழிவது என் என்னில் இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு உறுப்பாம் அன்று இறே
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது அது என் என்னில் கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-
நினைத்து-ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –
பாவன பிரகர்ஷத்தாலே ஸ்வாசாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –

நினைத்து -தானே பால் பொழிய – கஜேந்த்திரன் நினைக்க பாகவதா த்வராயா நம-வேகத்துக்கு நமஸ்காரம்
அவன் வேகம் போலே பால் சொரிய மனசா சிந்தயந்தே ஹரிம் நினைத்த பாவனா பிரகர்ஷத்தால் கன்று வழியே இன்றி பாத்ரம் வழியே அன்றி
முலை வழியே நின்று பல் சோர –மேகம் கடலில் சென்று புக்கு வர்ஷிக்க வேண்டும் நினைவு மாறாமல் திரு மலை அருவி போலே
திருமலை -சப்தம் பேயாழ்வார் -இரண்டு பாசுரம் -மற்றவர் திருவேம்கடம் திருமலை -திருக் குறும் தாண்டகம் காட்டி
திருமலை அதுவே சார்வு -நம் ஆழ்வார் திரு மால் இரும் சோலை – ஆழ்வார் தீர்த்தம்-இப்பொழுது கபில தீர்த்தம்
பெரிய ஜீயர் மடம் அருகில் ஒரு நம் ஆழ்வார் பகவத் விஷயம் தனது செல்லாமையால்
அர்ஜுனன் கேளாமல் பூயயோகோ மகா யோ ஸ்ருனு-18 அத்யாயம் 700 ஸ்லோகம் –மறுபடியும் சொல்கிறேன் – எடுப்பும் சாய்ப்புமாக –
கரிஷ்யே வசனம் தவ -நீ சொன்னதை கேட்கிறேன் சொல்வதை நிறுத்து
பால் வெள்ளம் இல்லம் சேறாக்கும் மேட்டிலும் கடலை அகழி
படகு கட்டி -சேற்றுக்கு அடைப்பு போட்டு-காலில் தடவி சேற்று புண் வராமல்மிருக்க
கண்ண நீர் –அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் பொன்னி நீர் போலே –பால் சோறு அப்புறம் இங்கே பால் சேறு – கர்மம் ஐஸ்வர்யம் அந்தவத் தேதான்தரர் மூலமும் அந்தவத்
இளைய பெருமாள் ஐஸ்வர்யம் -நற் செல்வம் நிரந்தர சேவை போல கைங்கர்ய ஸ்ரீ பிராப்ய விரோதி -தோற்றி மாறி -இம்மையிலே தாம் பிச்சை கொள்வர்
ஒரு கையால் ஒருவன் தன் தோளை தன்னை போல் அவன் பேரே தாரே பிதற்றி – தெனாச்சார்யா சபை 70 பேருக்கு சந்தை சொல்லி –
எம்பெருமான் அனுக்ரகம் தான் காரணம் ஊர் அவிசேஷஞ்ஞர் நாடு விசேஷஞ்ஞர் திருவாய்ப்பாடி சீர் மல்கும் ஆனது இவனால்

தங்காய் –
ரஷ்ய வர்க்கம் நோக்காமல் -ஜன்ம சித்தம் ராவணச்ய அனுஜோ பிராதா விபீஷணன் பின் பிறந்த தம்பி -அதே கர்ப்பத்தில் இருந்தேன் -நிகர்ஷம்
நீ நற் செல்வன் தங்காய் திரிஜடை-அவன் பெண் – பிராட்டிக்கு அடிமை செய்து நீ கைங்கர்யம் செய்ய வேண்டாமா எனக்கு-
விபீஷணன் கன்னிகா -அனலா முத்த புத்ரி –
கிருஷ்ணன் ரஷ்யம் என்றால் நாங்களும் அந்தர்பூதர் மேலே வர்ஷம் பனி வெள்ளம் கீழே பால் வெள்ளம்-
தண்டியம் பிடித்து தொங்கி இருக்கிறோம் பிராப்ய பூமியில் இங்கே ஐஸ்வர்யம் இனியே அங்கே தேட போவது
ஈஸ்வரன் அபிநிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடந்தாள் விடுகை விள்ளாமை விரும்பி -பாசுரம் –

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் – அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால் சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி – குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

நற்செல்வன் –
தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து – அதாகிறது -கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை
லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே கைங்கர்ய லஷ்மி இ றே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –
லஷ்மி சம்பன்ன -என்றது ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி
தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை -ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய

தங்காய்-
குணத்துக்கு தமையனில் தன்னேற்றமுடையவள் -என்கை –
நற்செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட – கீழ் பால் வெள்ளம் இட – நடுவு மால் வெள்ளம் இட நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில் தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –
பனியானது தலை மேல் சொரிய–அதாவது–மயர்வற மதிநலம் அருளப் பெற்ற–ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ சூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும் பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன – மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய-அருளிச் செயலால் வரும் குணானுபவ பிரவாஹம் என்ன – நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –
இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம் உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வாரவர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி-
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி -இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –
சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் – ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இ றே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் அவர் அழுத போது கூட அழுதார் இ றே –
கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து

சினத்தினால் தென் இலங்கை -ராமனை பாடும் பொழுது சேர்க்கை -கிருஷ்ணன் நாமம் சொல்லி
பெண்களை நெஞ்சாரல் -தீரா -எரிச்சல் – ராமன் நினைத்தால் நெஞ்சு சில்லாகும் உண்ணாது உறங்காது –
பெண்ணை பிரிந்தால் படு பாடு படுவான்–ராம விருத்தாந்தம் சொல்லி ஆஸ்ரித விரோதி போக்குவது தனது பேறாக-தனது கோபம் தீரும் படி –
சினத்தினால் – ராமனுக்கு சினம் உண்டோ ஜித குரோத கக- திருவடி மேலே அம்புபட்ட பொழுது சீறினார்-மனத்துக்கு இனிய சினம் -பகவான் இடம் இருந்து -ஹிதம் அருளி நம்மை நியமித்து அருளுவான் -சீறி அருளாதே -என்பார்களே –
தம் மேல் அம்பு பட்டால் அமைதி கோபம் வசம் -ஆனார் – நீரிலே நெருப்பு எழுந்தால் போலே –
வர்ஷம் காண -கோபமிட்ட வழக்கு திருவடி ராவணன் அம்புக்கு வசப்பட்டது போலே
மகாராஜர் சிற்றம் வாலி அவன் அழ இவரும் அழுது – பையல் செய்த பாபம் திக்கும் தென்னிலங்கை கோமானை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் தென் -இனிமை -அழகு-திருவடி -அகோ வீர்யம் அகோ தைர்யம் மதித்த ஐஸ்வர்யம்-

செற்ற
படை புத்திர பௌத்ர அரக்கர் தம் கோன் போலும் அஹங்காரம் அழித்து-
பட்டர் அனுபவம்
தாம் போலும் -என்று எழுந்தான் -கோன் போலும் – இயலை ஒரு தடவை கேளா –
சந்தை கூட சொல்லிக் கொள்ள வில்லை – ராவணன் வார்த்தை காண் என்று விட்டார் –
தான் போலும் -தாரணி யாளன்
மனிஷா பையல் -தான் என்று யுத்தம் வர அரக்கர் கோன் பூ பறித்தால் போலே இருப்பேனா -என்று எழுந்தவன்
அஹங்காரம் மனத்து இனியான் செற்ற காலத்தில் இன்று போய் நாளை வா சொன்ன இனிமை –
சசால சாபஞ்ச -முமோஷ வில்லையும் கீழே போட்டான் வெறும் கை வீரன் ஆனான் –
சிங்கம் கண்ட யானை கருடன் கண்ட பாம்பை போலே ஆனான்
இரவுக்கு அரசன் தூக்கம் வராது கையும் வில்லுமாகா கையும் அஞ்சலியுமாக வர வேண்டுமா
திருவினைப் பிரிந்த கடு விசை அரக்கன் – செற்ற காலத்தில் மனத்துக்கு இனியான்
பெண்களை ஹிம்சை கண்ண நீர் அடிக்கும் தீம்பன் இல்லை சத்ருக்களுக்கும் கண்ணநீர் பெருக்கும் கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர்
மிருத சஞ்சீவனம அனந்தாழ்வான் -திருவேம்கடத்தான் எம்பெருமானார் -வடுக நம்பி நம் ஆழ்வார் உயிர்க்கு அது காலன் –
பட்டர் ராம அவதாரம் போர பஷித்து – வேம்பே ஆக வளர்த்தாள் -பெற்ற தாயையும் குற்றம்
கௌசல்யா சுப்ரஜாராம் உண்ண புக்க வாயை மறந்தால் போலே பாடவும் -உம்மை

செற்ற –
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே படையைக் கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து
தான் போலும் -இத்யாதி -கோன் போலும் என்று எழுந்து கிளர்ந்து வந்த மானத்தை அழித்து நெஞ்சாரல் பண்ணிக் கொன்ற படி –

மனத்துக் கினியானைப் –
வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே
ஏகதார வ்ரதனாய் இருக்கை – பெண்களை ஓடி எறிந்து துடிக்க விட்டு வைத்து பின் இரக்கமும் இன்றிக்கே இருக்கும்
கிருஷ்ணனை ஒழிய சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாயுமவனை என்றுமாம் -அத ஏவ மனத்துக்கு இனியானை – சக்கரவர்த்தி திருமகனை –

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில் கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ – எழுந்து இராய்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை – ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ – எழுந்திராய் –
உன்னுடைய மகிழ்ச்சிக்காக எழுந்து ஆர்த்திக்கு உணராவிடில் உனது பேற்றுக்கு இது என்ன பேர் உறக்கம் – வைதிக உறக்கம்
லௌகிக உறக்கம் 19 பாஷை பிறர் ஆர்த்திக்கு த்வரித்து – பனி பட்ட மூங்கில் போலே பர சம்ருத்தி ஏக பிரயோஜனம் –
உன் வாசலில் எழுப்ப இத்தால் வந்த மதிப்பு இனி தான் எழுந்திராய் –

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே இருப்பதே உன்னுறக்கம் –
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –
இனி எழுந்திராய் பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் – எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்

பால் வெள்ளம் பனி வெள்ளம் மால் வெள்ளம் –மூன்றும் –
சரபம் சலபமானதே கூரத் ஆழ்வான் 19 புராணம் சரபேஸ்வரர் கல்பனை விட்டில் பூச்சி -பிரத்யங்கா தேவி சரபம் கோபம் குறைக்க
மதி விகற்ப்பால் அவரவர் தமதம தறிவகை–17 பரமத கண்டனம் ஸ்ரீ ய பதி-நம்பிள்ளை – பாஹ்யர் -11குத்ருஷ்டிகள் -6 சங்கர பாஸ்கர -தங்கள் மதம் –
கணங்கள் பல ஒரே கோவலன் -பர ஸ்வரூபம் ஒன்றே – அர்த்த பஞ்சகம் -உள்ளே உள்ளே பிறிவு உண்டே
சிபி சக்கரவர்த்தி 3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து -திரு வெள்ளறை-திவய தேசம் – ஆடுக செங்கீரை பதிகம் –
ஸ்வதிகா திருக் குளம் -வராக ஷேத்ரம் -ரிஷி தபஸ்- யுகமாக -அரசன் வர காட்சி
பாலால் புற்றில் அபிஷேகம் வடக்கே குடி ஏற்ற ஆணை – என்னையும் சேர்த்து 3700 தானே இருந்து நடத்தில்-திருச் சித்ர கூடம் – சில்லி காவல் ஸ்ரீ மூஷ்ணம் காவல் தெய்வம் இன்றும் தில்லி தில்லிகா வனம் தில்லை நகர்
தஞ்சகன் சகோதரிகள் இவர்கள் இருவரும் சித்ர கூடம் நாட்டிய அரங்கம் திருவடி ஸ்பர்சத்தில் ஆட்டம்
3000 அந்தணர் ஏத்த -குல சேகரர் -அரி ஆசானத்தே 16108 ஒரே பதி
56 படிக்கட்டு ஏறி கோமதி த்வாரகை 56 கோடி யாதவர்கள் 52 கஜம் நீல கொடி – 27 நஷத்ரங்கள் 12 ராசி நவ கிரகங்கள் நாலு நிலை கோபுரம்
7 நிலை விமானம் சப்த ரிஷிகள் ஒரே ஈஸ்வரன் நியமன சாமர்த்தியம் -உண்மையான சொத்து கல்யாண குண யோகம்

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப்பாட்டில் சொல்லாமையாலே அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி ஸ்வரூப விரோதம் என்கிறது
இவன் எருமை கறவாமைக்கு இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு தத் சாதன அனுஷ்டானத்தில் அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே

அறிவு மாலை
அனைத்தில்லத்தாரும் அறிந்து –
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -முதல் திருவந்தாதி -தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –
சிற்றில் இளைத்தவன் கண்ணனாய் இருக்க சீதை வாய் அமுதுண்டாய் என்று சிற்றில் நீ சிதையேல் என்னலாமோ
வளையல்கள் துகில்கள் கைக்கொண்டு வேண்டவும் தாராதான் -கண்ணனாய் இருக்க இரக்கமே ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -என்னலாமோ-

கனைத்து இளம் கற்று எருமை – ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிக்கும் பாசுரம்
நற் செல்வன் -ஸ்வாமி யை குறிக்கும் லஷ்மி சம்பன்ன -அஹம் சர்வம் கரிஷ்யாமி விபவம் போலே இவர் அர்ச்சையில் -நித்ய கிங்கரோ பவாதி
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –
எம்பெருமானார் உகந்த பாசுரம் இதுவும் —பெரும்பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே-
பொய்கை ஆழ்வார் -இந்த பாசுரம் –
செல்வன் லஷ்மனோ லஷ்மி சம்பன்னன் -மண் வெட்டி கையில் இருக்கும் பொழுது – அந்தரிஷா கத ஸ்ரீ மான் -விபீஷண ஆழ்வான்
நாகவர ஸ்ரீ மான் -மூவரையும் சொல்லிய கைங்கர்ய செல்வம்
துஞ்சும் போது அழைமின் -துயர் வரில் நினைமின் – துயர் இனில் சொல்லில் நன்றாம் –இளைய ஆழ்வான் விபீஷண ஆழ்வான் கஜேந்திர ஆழ்வான் -எம்பெருமானார் -கைங்கர்யம் –
ஜாதி ஆஸ்ரம தீஷா தர்மங்களில் பேதிக்கும் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானவை கை நழுவும்-புத்தி பூர்வகமாக இவன் விட வேண்டாம் உறங்குவான் கை பண்டம் போலே தன்னடையே நழுவும்
கனைத்து -உபதேசிக்க பெறாவிட்டால் -தரிக்க மாட்டாத ஆசார்யர்கள் -திணறி
நீரால் நிறைந்த ஏரி- பரபக்தி -பால் நெய் அமுதாய் -தானும் நானும் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் வாய்கரை -வழியே – ஞானாம்ர்தம்ம் –
பொய்கை ஆழ்வார்
நற் செல்வன் தங்காய் தாமரை பூவில் அவதரித்த சந்த மாமா -பாற்கடலில் லோக மாதா –பொய்கை-பூவில் ஆவிர்பாவம் -தமிழ் மறை செய்ய -நான்முகன் நாபி கமலத்தில்  போலே – தேக சம்பந்தம் -இளம் கற்று எருமை -லஷிய ளஷனை கழுக்காணி கண்ணன் புண்டரீகாஷன் –
சக்கரத்து ஆணி -வேங்கை மரம் -செடி புலி – புலிக்கு புண்டரீகம் நினைத்து
சுவாமிநாத ஐயர் தம் வாத்தியார் த்யாகராஜ செட்டியார் வடக்கு சித்ர வீதி குடி இருந்து –
இந்த அர்த்தம் கேட்டு உகந்தாராம் –
தங்கையான பார்வதி உடன் அமுது செய்ய வேனும் வேதம் ருத்ரனுக்கு
பகினி -சௌபாக்யவதி -அம்பிகையா சகா -தாவி தாவி அர்த்தம் –
எருமை மகிஷி தேவதேவ்ய திவ்ய மகிஷி -பொய்கை ஆழ்வார்
வனசமரு கருவதனில் பிராட்டி போலே தாமரை மலரில் அவதாராம் – இளம் கற்று எருமை முதல் ஆழ்வார்-முதலில் கனைத்து பேச ஆரம்பித்து – கன்றுக்கு இரங்கி நம் போல்வாருக்கு-கனைத்து முதல் முதலில் பேச-
இளம் -நம் போல்வார் நினைத்து
முலை வழியே கிருபை மூலம்
நின்று முதல்திருவந்தாதி
பாலே போலே சீரில்
கல்யாண குணங்கள்
பழுதே -அஞ்சி அழுதேன்
கண்ண நீர்
பனித்தலை
சக்கரவர்த்தி திரு மகன் -பூ மேய -நீண் முடியை பாதத்தால் எண்ணினான் – சரித்ரம் ஆமே அமரக்கு அறியா நாமே அறிவோம்
இனித் தான் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற பின் மறையின் குருத்தின் பொருளையும் அனைத்து இல்லத்தாரும் அதி கிருதா அதிகார்யம் இல்லை தமிழ் –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை — கற்றுக் கறவைக் கணங்கள் – — வியாக்யானம் .தொகுப்பு –

August 18, 2015

அவதாரிகை –
எல்லாவற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்-ஒருத்தியை எழுப்புகிறார்கள் -ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-
இப்பாட்டில் ஈச்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீயவிஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கற்றுக் கறவைக் -ஸ சந்தானரான சிஷ்யர்-
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை —இதுக்கு ஹேது
நித்ய சூரிகள் பகவத் ஸ்பர்சத்தாலே பஞ்ச விம்சதி வார்ஷிகராய்–இருக்குமா போலே
இப்பசுக்களும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கிப் பிராயம் புகுகை–பகவத் ஸ்பர்சம் இளகிப் பதிக்கப் பண்ணும் இ றே –

கணங்கள் பல -அவர்கள் உடைய பலவான சமூகங்களை
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே–சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை–ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இ றே–பசுக்களுக்கு தொகை உள்ளது –

கறந்து -அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக ஜ்ஞானப் பிரதானம் பண்ணி
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்–நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்–பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி-சம்ருத்தம் ஆகையாலே–முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –

-கற்றுக் கறவை கணங்கள் பல கறக்கும் -கோவலர் தம் பொற் கொடியே – வர்ணாஸ்ரம தர்மம் -அனுஷ்டிக்கும் கோவலர் -பன்மை
அடுத்த பாசுரம் நற் செல்வன் தங்கை -ஒருமை இட்ட கர்மாக்காள் சாஸ்திர விதி பின் பற்றி –
விட்டு -காம கார்யம் விஷயாந்தரங்களில் இழிந்து -ந சித்தி -அவாப்நோயதி -ந சுகம் ந பராம்கதி -கீதை -வேத அத்யயனம் –
எம்பெருமானார் -சந்த்யா வந்தனம் –ஊருக்கு எல்லாம் ஒரே கண்ணன் போலே இடைக் குலத்துக்கு ஒரே பெண் பிள்ளை –
பருவம் -பதி சம்யோக -ஜனகன் கப்பல் கவிழ்ந்தால் போலே -சோகச்ய பாரம் கத -சீதை பிராட்டி 6 வயசில் –
பெண்ணை தமப்பன் மடியில் வைத்து கல்யாணம் –அவனே நோற்று என்னை பெறட்டும் என்று கிடக்குமவள் இந்த பொற் கொடி-

கன்றாகிய கறவை கற்று கறவை –சிறுமை எருமை சிற்றெருமை –கறக்கும் பருவமாக இருக்கச் செய்தே கன்று நாகு பசுக்களாக
முக்தர் பஞ்ச விம்சதி பிராயர் கீழ் நோக்கி வயசு புகுமா போலே-இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரதவ அனுசந்தானத்தாலே-இவை மனுஷ்யத்வ பரனான கிருஷ்ணன் ஸ்பர்சத்தாலே-அனுபவம் ஆழ மோழையாக செல்ல –
முலை சரிந்த பெண்ணை பாராத ராஜ குமாரனை போலே–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -நம் ஆழ்வார்–திவத்திலும் -திவத்தை காட்டிலும் -பரம பதத்தை காட்டிலும்–திவதில் சேர்ந்தாலும் -அங்கும் பசு
சிம்ஹாசனம் இருந்து டியோ டியோ -நித்ய சூரிகள் என்ன கேட்பார்களாம்
பசு மேய்க்க மந்த்ரம் சொல்வான்–சப்த மாதரம்–ஹாவு ஹாவு சொல்கிறீர்களே அதுக்கு என்ன அர்த்தம் ஆஹா ஆஹா சந்தோஷம் வெளிப்பாடு –

ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்டாதவரையே அவன் இனிது உகப்பான் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -லஜ்ஜை சுய வியாபாரம் சக்தி விட்டு
இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே-கஜேந்த்திரன் -ஆதி மூலமே கதறின பின்பே ஓடி வந்தான்
பசுக்கள் புல் மேய அறியும்–இவை தீர்த்தம் குடிக்க தெரியாமல்-நதி கரைக்கு -சென்று
திரு கடல் மலை -கன்று மேய்த்து -வல்லான் –-தடம் பருகு கரு முகில்-வெறும் மேகம் இல்லை –
வரை மீ கானில் தடம் -மலையில் தாழ் வரையில் தீர்த்தம் பருகும் மேகம்-பெரிய திரு மொழி -2-5-3- பாசுரம் –
வேத பரிஷை -கல்லை அடுக்கி -குழந்தை -அந்த பஞ்சாயதி சொல்ல வேண்டுமாம்
பட்டர் –கன்று மேய்த்த விளையாட வல்லான்-இத்தையும் சேர்த்து வியாக்யானம்
மலை தாழ் வரை தடாகம் —தாகம் -கன்று குட்டி தீர்த்தம் உன்ன தெரியாதே-உறிஞ்சி -ச்ரேஷ்டன் செய்வதை லோகத்தார் பண்ணி –
இதை அறிந்து கீதையிலும் அருளினான் –இட்டமான பசுக்களை இனிது மறுத்தி நீரூட்டி-இஷ்டமான பசு கன்று
கன்றுகள் கிடைத்தால் பசுக்களை நித்ய சூரி போலே நினைப்பானாம்
காளாய் -இளமை யௌவனம்
அவற்றை இளகிப் பதிப்பித்து அத்தை கண்டு தானும் இளகி-பாலம் –தசரதன் -வா போ -ராமன் த்ர்ஷ்ட்வா புனர் யுவா பவ –
முன்னொட்டு கொடுக்க வற்றாய்-இவனுக்கு கண் ஜாடை காட்டலாம் படி-புக்க இடத்தே புக்கு -இவனுக்கு ஒதுங்க நிழல் கொடுத்து –
கறவைகள் பின் சென்று -புல் தேடி அது போக –எங்களுக்கும் வழி காட்டி போகுமே -அவ்வளவே எங்கள் ஞானம்
கணங்கள் பல –
பசு பசுக்கள் பசு -கணம் கணங்கள் கணங்கள் பல -என்னவே முடியாதே-சமூகங்களும் என்ன முடியாதே
ரத குஞ்சல வாஜி மான் தசரதன் -சைன்யம் போலே-நாரா-ஆத்மா சமூகங்கள் போலே-ரின்க் ஷயா அழிக்க கூடுய வஸ்து
நர — அழியாத வஸ்து–நர நாரா நாரா பல நரங்கள்–கல்யாண குணங்களை எண்ணினாலும் இவற்றை எண்ண முடியாதே

தேங்காதே புக்கு இருந்து வாங்க
கறந்து -ஒருவனே–வேதம் அடைய அதிகரிக்குமா போலே
ஷத்ரியன் யுத்தம்–ஈஸ்வரன் ஒருவனே நாம ரூபம் கொடுப்பது போலே–ஜாதி மேம்பாட்டாலும் -உசித தர்மம் –
அரியன செய்ய வல்லோம் -அவன் இடம் சென்று–உன்னை அல்லது அறியாத எங்களுக்கு நீயே அருள்
ஜாதி உசித வ்ருத்தி
கற்று கற்பித்து -பிராமணர் —மோஷம் சாதனம் இல்லை–பஞ்ச தந்திர கதை கழுதை நாய் பேச–கூடவே சென்று
மூட்டை சுமந்து பாரம்–திருடன் வர காவல் தூங்காமல்–கார்யம் மாத்தி பார்க்கலாம்–திருடன் வர கழுதை கத்த சாத்தி படுதுண்டான்
திருடு போக–விபரீதம் அது அதன் கார்யம் செய்யாமல்

ஜாதியில் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை
தொண்டர் குலம்–ஏகலைவன் துரோணர் -பிறவியில் ஷத்ரியனுக்கு பாடம் சொல்லுவேன் -மேலே கதை-ஏகலைவன் தபஸ்–அடுத்த ஜன்மம் சத்ரியன் ஆக–வரம் பெற்றான்–துரோணர் college pirincipal-இப்பொழுது வேடனாக இருந்தால் sheduled tribe கற்று கொடுப்பேன் -வேடிக்கை கதை seat கிடைக்கவில்லையே –
நாய் வீட்டு நாய் போலீஸ் ஸ்டேஷன் நாய் வெவேற கார்யம் ஜாதி உசிதமான கார்யம்

செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்–கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –திறலழியச்
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு–புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –
செற்றார் உண்டு-உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்–அவர்களுடைய திறல் உண்டு –ஸ்வார்த்த பரதை-அழிய=நசிக்கும்படி

சென்று செருச் செய்யும் -தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி அவர்களோடு வர்த்திக்கிற -எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே–இருந்த இடங்களிலே சென்று பொருகை —சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –

செற்றார் திறல் அழிய சென்று -விரோதிகள் இருக்கும் இடம் – கம்சனே நுழைய முடியாத
அசுரர்களும் மாறு வேஷத்தில் கப்பம் ஒரு நாழி பாலில் வீணாக போவதை கொடுக்க
கஞ்சன் கடியன் கரவு -கப்பம் வரி எட்டு நாள் கைவலத்து யாதும் இல்லை -நீயே உண்டாய்-படை எடுத்து போக வில்லையே வீரம் அறிந்து –

குற்றமொன்றில்லாத -பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்–செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்
அவன் படி அறிந்து நடப்பவர்கள் –

குற்றம் ஒன்றும் இலாத-செற்றார் கிருஷ்ணன் மினுக்கம் பொறாதவர்கள் அங்கதன் – -நம் விரோதி கோஷ்டி வந்தான் என்றானே –
சம்ருத்தி பொறாதவர்-சத்ருக்கள் பாகவத விரோதிகள் இவனுக்கு
விதுரன் திருமாளிகை அமுது செய்து–பீஷ்ம த்ரனவ் அதிகிரமம் ஞானம் அந்தணர் குலம் இருவரும் மாம் ச ஏவ என்னையும் ஒட ஐஸ்வர்யா வ்ருத்தர்
கிம் அர்த்தம் புண்டரீகாஷா-வைய வந்த வாயால் உண்டதால் விகசித்த திருக் கண்கள்
விரோதிகள் வீட்டில் சாப்பிட கூடாது சாதம் போடக் கூடாதே -பாண்டவா -த்வேஷிக்கிராய் மம பிராணா நீ விரோதியாக நினைக்க வில்லை நான் நினைக்கிறன்
சாதி சனத்தை நலியும் தீய புஞ்சி கம்சன் மாயன் ராவணன் செவ்விப் போரை அறியாத பையல்
கம்சன் -ஒத்து சொல்லும் ப்ரஹ்ம-பச்ம தாரி ருத்ரன்
apasaras மெய்க்காட்டு கொள்ளும் attendance எடுப்பவர் இந்த்ரன் -அந்ய பரனாய் கிடந்தது உறங்கும் விஷ்ணு யாரும் சமம் இல்லை அஹங்காரம்
சென்று செருச் செய்யும் உத்தமன் -சக்கரவர்த்தி திரு மகன் போலே எதிரிகள் ஆயுதம் போகட்ட பின்பு யுத்தம் செய்யும் குற்றம் இல்லை
அடை மதிள் படுத்தின பின்பு எதிரிகளை -குற்றம் இல்லாத நாங்கள் வர உறங்குவதோ
விரோதிகள் போலே அந்தபுரத்திலும் துராசாராம் -என்னை வணங்கி சாது -இழி குலத்தவர் ஆகிலும் என் அடியார்க்க ஆகில் கொள்மின் கொடுமின் –
பூர்வ வ்ருத்தம் பகவத் பக்தி வந்த பின்பு செய்ய மாட்டான் – என்னுடைய வழி பாட்டிலோ நிலை நின்றவனாய் துராசாரம் விட்டவனாய்
நிர்தோஷம் ஆகிறான் – ஜனக குலத்துக்கே பெருமை – ஏழ் படி கால் தொடங்கி
-கொடி-வளர்ந்ததும் உபக்னம் வேண்டுமே – பெண்கள் பருவம் -புருஷன் -மரம் பதி சம்யோகம் -ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகிலேன்
மால் தேடு ஓடும் மனம் ஆசார்யர் பாகவதர் சுள்ளுக் கால் நட்டுவாரைப் போலே – கொள் கொம்பு கிருஷ்ணன்

கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை —பொற் கோடி தர்சநீயமாய் இருக்கையும் பார்த்தா வாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இ றே இருப்பது –
அவனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பவர்களுக்கு-ஸ்ப்ருஹ ணீ யமான பொற்கொடி போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம் பக்தியை சொல்லி மேலே

புற்றரவல்குல்-ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது
தன்னிலத்தில் சர்ப்பம் போலே–ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்–பெண்களை ஆண்களாக்கும் அழகு இ றே–அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –
புற்றரவு அல்குல் -உடம்பை மெல்லியதாக ஆக்கிக் கொள்ளும் பாம்பு -ஸ்திரீ லஷணம்-உடுக்கை போலே இடை -கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –

புனமயிலே –
தன்னிலத்திலே மயில் —கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல–அளகபாரத்தை உடையாளாகை-
பொற்கொடியே -என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே–வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான–பிரேம ரூப ஞானம் ஆகையாலே புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

புன மயிலே -அழகான தன்னிலத்தில் வர்த்திக்கும் -சஜாதீய பெண்களும் நாயக பாவத்தில்
த்ரௌபதி ஸ்திரீகள் அனுபவிகிக்க ஆணாக பிறவாமல் போனோமே ரிஷிகள் மனசா ஸ்திரீ -சக்கரவர்த்தி பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம்
ரிஷிகள் கோபிகளாக தோகை மா மயில் சமுதாய சோபை பொற் கொடு புற்றரவு லாவண்யம்

போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்- தாரகமாக நாலடி நடந்து பின்னே சென்று நடை அழகு காண கிருஷ்ணனை கூட்டி செல்ல வேண்டாம்
தண்டகாரண்யம் சோபை ஆக்கினது போலே புனத்தை மயில் சிறப்பிக்கும் ஸ்திரீ வனத்தை நீ சிறப்பிக்க வேண்டும்

புன மயிலே போதராய் -இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்

நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது-இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே-உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரானபாகவதர் எல்லாரும் வந்து –
உறவினரும் தோழி அனைவரும் இவள் தன்னை போலே அநந்ய பிரயோஜனர் கைங்கர்யம் செய்யும் கோஷ்டி

நின் முற்றம் புகுந்து -பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் —முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே–சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
விசாலமான பிராப்ய ஸ்தானம் முற்றம் புகுந்து பரமபதம் முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து சேஷிக்கு பிராப்யம் ஏக ரூபமாய் உள்ளவனையும் முறுவல் –

புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன -முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்–அவன் அழகிலும்–ஔதார்யத்திலும் ஈடுபட்டு–அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –
பரம உதாரனும் ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –
முகில் வண்ணன் பேர் பாட -மேக சியாமம் எனக்கே தன்னை தந்த ஔதார்யம் இரண்டையும்
உன் பக்கல் நீ உகக்கும் அவன் வடிவு ஔதார்யம் பாடியும்

சிற்றாதே பேசாதே-பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே வார்த்தையும் சொல்லாதே –
முகில் வண்ணன் என்றவாறே–அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்
சிற்றாதே -சிற்றுதல் -சிதறுதல் —உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே–இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் சேவிக்கும் போக்கியம் ஆகையாலே-இன்னாதாகிறார்கள்
சிற்றாதே அங்கங்கள் அசையாமல் -சேஷ்டிதம் வாக்கு – கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வேண்டுமே

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ–கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –இல்லையாகில் –
செல்வப் பெண்டாட்டி--உன்னை நீ பிரிந்து அரியாய் உன்னுடன் கூடினால் எல்லா ஐஸ்வர்யமும் உன்னுடையா உத்தேச்யம் உனக்கு கிடைக்க
என்னுடைய உத்தேச்யம் எங்களுக்கு வேண்டாவோ

பின்னை எற்றுக்கு உறங்கும்--கூடு பூரித்து பூர்ண அனுபவம் – அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ

எற்றுக்குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ —அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு–கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்
உறங்கும் பொருள் எற்றுக்கு உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது – எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா சொல்லாய் -என்கிறார்கள் –

எற்றுக்குறங்கும் பொருள்-பகவத் குணங்களை ஒரு மடை செய்து புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ –
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே —எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே–கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்

என்று இருக்கும் படி அழகிதாக இருந்தது–அவனை தனியாக அனுபவிப்பது கைவல்யம்–எங்கள் ஆற்றாமை பாராதே
உன்னுடைய உத்தேச்யம் பாராதே–கிருஷ்ணன் நிரதிசய போக்யதை–ஒன்றையும் பாராமல்
அவனை உகப்பிக்க பார்த்தாய் ஆகில்–அவன் உகந்தார் எங்களை உகப்பிக்க வேண்டாமோ-சு பிரயோஜன கைங்கர்யம் போலே கூடாதே
மற்றை நம் காமங்கள் மாற்று —உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேண்டும் -கடகர் ஸ்தானம் பாகவதர்
எடுத்து கை நீட்ட நாங்கள் வேணும்–விஸ்லேஷ தசையில் -போதயந்த பரஸ்பரம் வருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கை நாங்கள் வேணும்

இப்பாட்டில்-ஜாதி உசிதமான தர்மத்தை-சாதனா புத்தி அன்றிக்கே கைங்கர்ய புத்யா அனுஷ்டித்தால் குற்றம் இல்லை என்கிறது-கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

பொருள்மாலை -சாற்றி அருளுகிறாள்
எற்றுக்கு உறங்கும் பொருள் தமோ குணத்தால் சம்சாரிகள் உறக்கம் யோக நித்தரை பாற் கடல் நாதன்-
நடந்த கால்கள் நொந்தவோ மடியாது –துயில் மேவி மகிழ்ந்தது அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
அன்று இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ தொல்லை மாலைக் கண்னாரா கண்டு காதல் உற்றார் கண்கள் துஞ்சாரே-சதா பஸ்யந்தி சூரய-எற்றுக் குறங்கும் பொருள்

எம்பார் உகந்த பாசுரம் –
திருமலை நம்பி கால ஷேபம் கடை போட்டு
2-2- பரத்வம் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தகாது தகாது இனி அங்கீகரித்து அருள வேணும் -ஸ்ரீ சைல பூர்ணாயா -ஸ்ரீ ராமாயணம் -சம்மானம் எம்பாருக்கு – ஆசார்யாய பிரியம் தனம் நான் தர எமபாரைத் தந்து அருள வேணும் -கோவிந்தர் -எம்பார் -உடம்பு தேமல் – தேசாந்தாரம் இருக்க மனம் இருக்க மாட்டாதே -விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -கதவையும் திறக்காமல்
இரண்டு நாள் காத்து மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – சௌக்யமாக இருக்கிறாயா கூட கேட்க மாட்டாயா மாமா

நாராயணன் -திருப்பாவையில் மூன்று நாராயணனே நமக்கே நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் நாற்றத் துழாய் முடி நாராயணன் இங்கும்-துழாய் முடி நாராயணன் ராமன் – சீதவாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் -ஒரே தர்மி ஐக்கியம்
திருத் துழாய் -அணைத்து புஷ்பங்களுக்கும் உப லஷணம் நீ பிறந்த திரு வோணம் நீராட வேண்டும் ரோஹிணி – திருவோணம் என்று ஏழு நாள் –
எந்தை -திருவோணத் திரு விழாவில் அந்தியம் போது அரி உருவாக்கி சுவாதி –
சரவணம் நஷத்ரம் விஷ்ணு தேவதா சரவணா அம்சம் எந்த புஷ்பம் சூடிக் கொண்டாலும் திருத் துழாய் அம்சம் –
ஆளவந்தார் -உணர்த்தப்படுகிறார்-எமுனைத் துறைவன் வானமா மலை ஜீயர் கோவலர் தம் பொற் கொடி-சுற்றத்தார் தோழிமார் ஐஞ்சு சிஷ்யர்கள் உண்டே–பவிஷ்யதா ஆசார்யர் ஆ முதல்வன் கடாஷிக்க வேண்டாவோ
கா பிஷா தர்க்க பிஷா – குற்றம் ஒன்றும் இல்லாத நஞ்சீயர் ஆக்கி மைப்படி மேனியான் -நஞ்சீயர் பட்டருக்கு எடுத்துக் காட்டி –
ஞான பக்தி விரக்தி – புற்று அரவு அல்குல் -ஆசார்ய பரமான அசிந்த்ய அத்புத ஞான பக்தி விரக்த்தியா-அகாத பகவத் பக்தி சிந்தையே-நாதமுனியை கொண்டாடுகிறார் ஆளவந்தார்-

கற்று கறவை கணங்கள்
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் –
பஞ்சாச்சார்ய பதாச்சித- பெரிய நம்பி -சமாஸ்ரயணம் -மந்த்ரார்த்தம் –திருக் கோட்டியூர் நம்பி -ரகச்யார்த்தம்
திருமலை ஆண்டான் -திருவாய்மொழி திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் ஆழ்வார் -அருளிச் செயல்கள்
கோ வல்லவர் -மகா வித்வான்கள் -அவர் தம் பொற் கோடி கோ அல்லர் -ஸ்வ தந்த்ரர் அல்லர்-

பூதத் ஆழ்வார்-
திருக் கோவலூர்–மூவரும் நடு நாயகம்–கோல் தேடி -கொடியாக சொல்லிக் கொண்டவர்
செற்றார் -ஓடித் திரியும் யோகிகள் மூவரும்–கன்றாகிய கறவை சின்ன பாசுரம் வெண்பாவில் வேதாந்த அர்த்தங்களை கொடுத்து
குற்றம் ஓன்று இல்லாத கர்ப்ப வாசம் இல்லாத அயோநிஜர்
ஞானம் பக்தி வைராக்கியம்
இடை–புன மயில் கடல் கரை பிரதேசம் திரு கடல் மலை
சுற்றத்தார் பொய்கை பேய் ஆழ்வார்கள் –தோழி மற்ற ஆழ்வார்கள்
முகில் வண்ணன் முதலில் இவர் பாட–மேகம் கண்டால் மயில் சந்தோஷிக்கும்–யோகி நிலை மாறி சிற்றாதே பேசாதே
தீர்தகரராம் திரிந்து
கோவலர் தம் பொற் கொடியே-வல்லி-கொடி போலே
ஆழ்வார்களை காட்டில் ஆண்டாளுக்கு ஏற்றம் பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே
-பள்ளமடை காதல் சஹஜம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று
பாரதந்த்ர்யம் அசாதாராண லஷணம் ஸ்திரீகளுக்கு கொண்டானை அல்லால் அறியா குலமகள் போலே –
புன மயிலே போதராய் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் -இவர்களையும் இப்படி பண்ணும் அழகு
தண்டா பூபிகா நியாயம் அபூபிகா பாஷனம் -கைமுதிக நியாயம்
எம்பார் -தாசிகளுக்கு சொல்லிக் கொடுக்க எம்பெருமான் – அறையில் ஆடி அம்பலத்தில் ஆட -காவேரி செல்லும் பொழுது கேட்டு பாடி
பற்பம் என திகள் பல்லவமே விரலும் –இல்லை எனக்கு எதிர் -பாட்டு பாட –
வாக் மாத்ர்யம் -வடிவை ஆசை உடன் நோக்குமவன் –
பீஷ்ம துரோணர் மாம் ஏவ அதிக்ரமித்து விதுர போஜனம் – மம பிராணா பாண்டவ -செற்றார் திறல் அழிய-சென்று

நச புன ஆவர்த்ததே -சொல்லி இருப்பதால்
பகவானை சொல்ல விசேஷணங்கள் சொல்லி ஸ்ரீ பாஷ்யம்
உயர்வற உயர்நலம்
பக்தி ஒன்றாலேயே –
ஞானம் பக்தி விரக்தி -மால் பால் மணம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
சட்டி சுட்டதால் கை விடுவான்
ராஜ்ஜியம் அபிஷேகம் -தசரதர் வயற்றில் பிறந்து –
பரமாத்மானோ விரக்தய -விஷயாந்தர
புற்றரவல்குல் நடுவான பாகம் பக்தி
இத்தால் தான் ஞானம் விரக்தி
புன மயிலே -ஆசார்யர் உள்ள இடம்
யாத்ரா அஷ்டாஷார சம்சித்தா -மகா பாஹோ ந சஞ்சரித்து வியாதி திருபிஷா பஞ்சம் திருடன்
விசாதி பகை -தீயன வெல்லாம் நேமிப்பிரான் தமர் போந்தார் -நம் ஆழ்வார்
சுற்றத்தார் தோழிமார் தேக ஆத்மா பந்துக்கள் இருவரும் உத்தேச்யம்
குற்றம் ஓன்று இல்லாத -குருக்கத்தி தாமரை அல்லி பூ –
யோனி குற்றம் இல்லாத –
தீர்தகரராய் திரிந்து –
கோவலர்
கோ பிறப்பு அல்லர் தாச பூதர் பரதந்த்ரர்
கோபாலர் இடையர்
திருக் கோவலரில் தம் பொற் கொடி
மூவரில் -இவர் கொடி
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம் இவர் அருளி –
ஸ்ரீ ரெங்க கல்ப வல்லி -ஸ்ரீ ய பதி கல்பக வ்ருஷம்
பக்தி மிக்கவர் -அன்பே தகளியே
எந்தன் அளவல்லால் யான் உடைய அன்பு -என்றார் இவர்

முற்றும் வணங்கும் முகில் வண்ணன் –இருந்தாரை ஏற்றும் என் நெஞ்சு பாண்டவ தூதர் -பூதத் ஆழ்வார்
சிற்றாதே பேசாதே சிலை இலங்கு பொன் ஆழி வாயைத் திறவாமல் சப்தோச்மி வேத வாக்கியம்
கண்டால் கொலோ கேட்டவனாலே பேச முடியவில்லை கண்டவள் பேசி தத்வ தர்சனி – செல்வப் பெண்டாட்டி –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திருவடிகளே சரணம் –