ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் / ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை –

திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –
-ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் -நாச்சியார் திருமொழி தனியன் –
இதில் ஆண்டாளுடைய ஐஸ்வர்யம் தொடக்கமாக -ஆபிஜாத்ய பர்யந்தமான வைபவம் சொல்லுகிறது-
புருஷகாரத் தன்மை -ஐஸ்வர்யம் -சௌந்தர்யம் -எம்பெருமான் உடன் உள்ள ஆநுரூப்யம் –
நல் குடிப் பிறப்பு -முதலிய வைபவம் சொல்லுகிறது-

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு-

அல்லி நாள் தாமரை -இதழ்கள் உடைய அப்போது அலர்ந்த தாமரைப் பூவிலே
மேல் ஆரணங்கின் ஆர்-பொருந்தி இரா நின்ற -அணங்கின்-தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு-
இன் துணைவி—இஷ்ட சகி  யாகவும்-
மல்லி நாடாண்ட மடமயில் -மல்லி நாட்டை குணத்தாலே ஈடுபடுத்தி ஆளா நின்ற அழகிய மயில் போன்றவளாயும்
மெல்லியலாள்-மென்மைத் தன்மையும் உடையவளுமான ஆண்டாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-இடைக் குலத்துக்கு தலைவனான கண்ணபிரானுடைய திரு மேனியில் பொருத்தம் உடையவளாயும்
தென் புதுவை-அழகிய ஸ்ரீ வில்லி புத்தூரிலே
வேயர் பயந்த விளக்கு-வேயர் குலத்தில் உதித்தவரான பெரிய ஆழ்வாராலே பெறப்பட்ட விளக்கையும் இரா நின்றாள் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி-
தாதுவும் வண்டுவும் உடைய தாமரை நாட்பூவை வாஸஸ் ஸ்தானமாக உடையவளாய்
அப்ராக்ருத ஸ்வ பாவையான பெரிய பிராட்டியாருக்கு இஷ்டமான சகியாய்
மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திரு விருத்தம் -3-
உத்புல்ல பங்கஜ தடாக மிபோபயாநி -ஸ்ரீ ரெங்க ராஜ மிஹ தஷிண சவ்யசீம்நோ –
லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்சீம் –சாயா மிவாப் யுதயி நீ மவ நீஞ்ச தசா –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-63-
ஏவம் பூத பூமி நீளா நாயக -ஸ்ரீ சரணாகதி கத்யம் -5–என்னக் கடவது இறே-ஆகையால் சம சகியாய் இருக்கை –
சாஷாத் ஸ்ரீ லஷ்மிக்கு சகியாய்த்து இவள் இருப்பது -இத்தால் புருஷகார பூதை என்றது ஆயிற்று –

மல்லி நாடாண்ட மட மயில் –
அவளோட்டை சேர்த்தியாலே வந்த செல்வம் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மட மகள் –ஆளும் உலகமும் மூன்றே —
துணைவி -மயில் -என்கையாலே -ஒருத்திக்கு சகியுமாய் ஒரு தேசத்துக்கு சிகியுமாய் இருக்குமவள் என்றது ஆயிற்று –
இவள் தான் பேடை மயில் சாயல்  பின்னை -பெரியாழ்வார் -3-3-3–என்று சொல்லப் பட்டாள் அன்றோ
புன மயிலே -திருப்பாவை -11- என்கிற காட்டு மயிலாய் இருக்கை  அன்றிக்கே நாட்டு மயிலாய் இருந்தது –
தன்  குணத்தாலே -நாடாக ஈடுபடும் படி பண்ணி அத்தை ஆளுமவள் என்கை-
மயில் என்றது அளகபாரத்தையும் பெண்மையும் இட்டுப் பேசுகிறது –
இது தான் பராபிமானத்தில் ஒதுங்கி வளரும் இறே -இவளும் பட்டர்பிரான் அபிமானத்தில் ஒதுங்கி வளருமவள் ஆயத்து-

மெல்லியலாள்-
மிருது ஸ்வ பாவை -என்றபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும்-8-7-என்னும்படி-விஸ்லேஷ அசஹமான மார்த்தவம் –

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் –
அந்த மார்த்தவம் தான் -பொன்னாகம் புல்குதற்கு -8-4-ஸ்வ பாவத்தாலே பிரிவாற்ற மாட்டாமல்
ஆயர் குல வேந்தனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பொன்னாகம் புல்கி இருக்குமவள் ஆயத்து –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தனை -13-9-தழுவி முழுசி புகுந்து  என்னைச் சுற்றிச் சுழன்று  இருப்பது -13-5-

இனி ஆபிஜாத்யத்தாலும் அநு ரூபை என்கிறது-
தென் புதுவை வேயர் பயந்த விளக்கு-
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் கோதை இறே
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் -5-4-11 /வேயர் புகழ் வில்லி புத்தூர் கோன் கோதை 6-11/விட்டு சித்தன் கோதை-14-10-
குல ப்ரதீபையாய் இருக்கை-
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்குக்கு-திருப்பாவை -5- அநு ரூபமாய் இறே வேயர் பயந்த விளக்கும் இருப்பது –
ஸ்ரீ கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணின குடி இறே
ஆகையால் குலத்திலும் சத்ருசையாய் இருக்கை

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் -2-ஐஸ்வர்யம் -3–சௌந்தர்யம் -4-பிரிவாற்றாமை -5-நல்  குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று
முன்னவள் -1-தென் புதுவை தெரிவை திருமகள் –2-தாரணி என்பவள் -3-நாரணன் தன்  உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் -5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

——————————

இதில் பகவத் ப்ரத்யா சன்னரைக் குறித்து -தத் போக்யதையை பிரச்னம் பண்ணும் படியையும்-
தத் தேச வாசத்தால் உண்டான ப்ராசச்யத்தையும்-
பர்த்ரு வசீகரண ஹேதுவான வால்லப்யத்தையும்-சொல்லி
ஏவம்வித ஆகாரையான ஆண்டாள் திருவடிகளே அநந்ய கதிகளுக்குத் துணை என்கிறது

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் -தென் திரு மல்லி நாடி -செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

கோலச் சுரி சங்கை-
அழகையும் சுரியையும் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை நோக்கி
மாயன் செவ்வாயின் குணம் வினவும்-ஸ்ரீ கண்ணபிரானுடைய சிறந்த திரு அதரத்தின்
அதிசயத்தை கேட்க்கும் சீலத்தனள்-தன்மை உடையவளும்-
தென் திரு மல்லி நாடி –
தென் திசையில் உள்ள திரு மல்லி நாட்டுக்குத் தலைவியும்
செழும் குழல் மேல்-
செழுமை தங்கிய தனது திருக் குழல் கற்றையிலே சூட்டப் பெற்ற
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய
கலம்பக மாலையை அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்கும் படியான மேன்மை உடையவளும்
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-
சோலையிலே வளரும் கிளி போலே இனிய மொழியையும் உடையவளான ஆண்டாளுடைய-
பாவனமும் போக்யமுமான திருவடி இணைகளே நமக்கு தஞ்சம்

கோலச் சுரி சங்கை-
கோலப் பெரும் சங்கே -7-3- என்றும்
சுரியேலும் சங்கும் -என்றும் –
சுரி சங்கு-திருவாய் -7-3-1- என்றும் சொல்லப் படுகிற அழகையும் சுரியையும் உடைத்தான சங்கை —

மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு -9-9-ஆகையாலே
மது சூதன் வாயமுதம் பன்னாளும் உண்டு -7-5-இறே போருவது-
வெண் சங்கமூதிய வாய் –முதல் திரு -37-
சங்கம் வாய் வைத்தான் -பெரிய திருமொழி -6-7-8-என்னும் படி இறே சங்கு வாய் வைப்பது —
அத்தாலே வாய் விடாத சாதியைக் கேட்கிறாள் –
மாயன் செவ்வாயின் குணம் வினவுகையாவது –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-7-1-என்னும் படியான குணம் –
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வரக் கோல நறும் பவளச் செந்துவர் வாய்-1-5-9- என்று
இறே இவள் திருத் தமப்பனார் அருளிச் செய்தது —
மாயன் -என்றது -சௌந்தர்ய சீலாதிகளால் ஆச்சர்ய பூதனான ஸ்ரீ கிருஷ்ணன் என்றபடி –
ஆயமாயன் -திருவாய் -4-3-4- ஆயன் மாயோன் -திருவாய் -9-9-2-என்றார் இறே
வினவுகை யாவது -விருப்புற்று கேட்கை -7-1-
சீலத்தினள் ஆவது -இதுவே ஸ்வ பாவமாய் இருக்கிறவள் -என்கை –
சர்வ கந்த சர்வ ரச -சாந்தோக்யம் -3-14-2-என்னும் வச்துவுடன் சர்வ கால அனுபவ அபேஷை இவளுக்கு ஸ்வ பாவம் என்றபடி-

-தென் திரு மல்லி நாடி –
இவளுக்கு இந்த ஸ்வ பாவம் நாட்டு நலத்தாலே வந்தது -கோசல தேசத்தில் உள்ளாருக்கு போலே-
திரு மல்லி நாடு -என்று அதுவே நிரூபகமாம் படியான அதிசயத்தை உடையவள் –
தென் திரு மல்லி நாடி —
தெற்குத் திக்கிலேயாய் –
தர்ச நீயமாய் இருக்கிற -திருமல்லி நாடு-
ஸ்ரீ வில்லி புத்தூரை அடுத்து அணித்தான நாட்டுக்கு திரு மல்லி நாடு என்று இறே திரு நாமம்-

இனி பர்த்ரு வால்லப்யத்தைச் சொல்லுகிறது
செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி -என்று
மாலைத்தொடை -பெரியாழ்வார் கட்டின கலம்பகன் மாலைத் தொடையை
தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி —
ராம சீதொப நீதங்களான– ஹேமாம் போஜைங்களை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –விரும்பிச் சாத்தி அருளும் அவர்க்கு –
பெரியாழ்வார் கட்டின மாலையை சூடிக் கொடுத்தது வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ -பெரிய பெருமாளுக்கு அன்றே என்னில் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் -70- என்றும்
தலை யரங்கம் -இரண்டாம் திருவந்தாதி -70-என்று
எல்லா திருப்பதிகளையும் அவயவமாக உடைத்தாய்-
அகில திவ்ய தேச பிரதானமாய் இருக்கையாலும்-
திரு மணம் புணர்ந்ததும் அழகிய மணவாளப் பெருமாளை யாகையாலும் –
இனித் தான் கண் வளர்ந்து அருளுகிற ஆகாரமும் ஒத்து போக ஸ்தானமாய் இருக்கையாலும்-
தர்மையைக்யத்தாலும் -அப்படிச் சொல்லலாம் இ றே
ஸ்ரீ மாலா காரர் மகள் ஆகையாலே –அரங்க மாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்னும் படியான மாலுக்கு மாலையை வழங்கினாள் –
இப்போதும் இது நம் பெருமாள் ஆறாம் திருநாள் ஆனை ஏற்றத்தின் அன்று அனுபவ சித்தம் –
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் -6-10- என்று இறே இவள் அபேஷை இருப்பது –
தென்னரங்கர்கீயும் -மதிப்புடைமை யாவது –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமானான-
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்க்கு -11-3-சூடிக் கொடுத்த மதிப்பு இறே –

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே-என்று
சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்-திருப் பல்லாண்டு -9- படி யாய்த்து –
அண்டர்கோன் அணி யரங்கன் –அமலனாதி -10—படியும் –அவன் தான் பரம பிரணயி இறே
மதிப்புடைய சோலைக் கிளி –
பெரியாழ்வார் திருமகள் -என்னும் மதிப்பை யுடைய கிளி –
கிளி மொழியாள்– திருவாய் -4-8-5- இ றே
எல்லே இளம் கிளியே –திருப்பாவை -15-என்றாளே இவளும்
பெரியாழ்வார் -தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமத்தாலே வளர்த்து எடுத்த கிளி -பெரிய திரு -6-10-6-
மெய்ம்மை பெரு வார்த்தை -11-10-கற்ப்பித்தாரும் இவரே
திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக் கிளியை கை கூப்பி-வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14–என்று
வளர்த்து எடுப்பார்க்கும் காலிலே வணங்க வேண்டும்படியான கிளி –
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரமகல்மஷம்-பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதிம் -என்னுமா போலே-
பெற்றோர்களை விஞ்சி யாய்த்து ஸூகம் இருப்பது
சோலைக் கிளி -<
ஆழ்வார் ஆஸ்ரமத்தில் கிளி –இத்தால் பராபிமாநத்தே வளர்ந்தமை தோற்றுகிறது-

அவள் தூய நற் பாதம் -துணை நமக்கே-
ஏவம் வித ஆகாரையாய் -பாவநத்வ போக்யத்வங்களை யுடையவள் -திருவடிகள் –
அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் -பெரியாழ்வார் -3-10-2- என்றும் –
செம்மை யுடைய திருக் கையால் தாள் பற்றி -6-8-என்றும்-
சேஷ சேஷிகள் இருவருக்கும் தாம்தாம் ஸ்வரூப அநு குணமாக-சேஷைத்வ பிரணியித்வ -குணமாக இழியும் துறையை இருக்கும் திருவடிகள் –
அது தான் <பாடகம் சேர் மெல்லடி -பெரிய திரு -4-8-7-யாய் இருக்கும்
பாடகக் காலிணை தானே பரம பதம் தருமே –
திருவடிகள் -இங்கு இருக்கும் நாளைக்குத் துணையாய் –
மேலே வழித் துணையாய்
அதுக்கு மேலே கைங்கர்யத்துக்கு துணையாய் –
கைங்கர்ய வர்த்தகமுமாய் இருக்கும்-
பண்டு ஏனமாய் உலகை யன்று இடந்த பண்பாளா -என்று நின்று தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன்-பெரிய திரு -7-4-6-
ஞாலப் பொன் மாது -திரு விருத்தம் -40-இ றே
ஆகையால் கோலத் திருவடிகளோ பாதி ஞாலப் பொன் மாதான ஆண்டாள் திருவடிகளும் உத்தேச்யம் என்றது ஆயத்து –

——————————————————————

ஸ்ரீ மத்  கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா

அவதாரிகை –

பிராப்ய ச்வீகாரமும் பண்ணி -உன் தன்னைப் பிறவி பெரும்தனைப் புண்ணியம் யாமுடையோம் -28-என்று உபாயமாக எம்பெருமானைப் பற்றி
ப்ராப்யத்தையும் -நிஷ்கர்ஷித்தாராய் -நின்றார் கீழ் –
உனக்கே நாம் ஆட செய்வோம் -29- என்று அவன் உகப்புக்காக கைங்கர்யம் -இப்பிரதி பத்தி இ றே இத்தலைக்கு வேண்டுவது-
இத்தலையிலே கண்ணழிவு அற்று இருந்தது –
அவன் பக்கலிலே அபி நிவேசம் கரை புரண்டு இருந்தது
அநந்தரம்-அபி நிவேச அநு ரூபமாக பெற்றுக் கொடு நிற்கக் கண்டது இல்லை
இத்தலையிலே ஒரு ஹேதுவை கொள்ளில் இறே -அது பக்வமாய் பெறுகிறோம் என்று ஆறி இருக்கலாவது-
அதுக்கு அங்கன் ஓன்று இன்றிக்கே இருந்தது –
இனி பரிக்ரஹித்த சாதனம் –பலத்தோடு வ்யபிசாரம் இல்லாத படி சித்தமாய் இருந்தது –
இங்கனே இருக்கச் செய்தே பலிக்கக் காணாமையாலே யுக்த  அயுக்த நிரூபண ஷமம் அல்லாதபடி கலங்கி -அபிமத விஷயத்தை
பிரிந்தார் திரியட்டும் கூடுகைக்கு மடல் எடுக்குமா போலே
பிரிந்தாரைக் கூட்டிப் போருகையே- ஸ்வ பாவமாக உடையான் ஒருவன் என்னும் இதுவே பற்றாசாக
காம சமாஸ்ரயணம் பண்ணிப் பெறுகையிலே உபக்ரமிக்கிறாள் –
பெருமாளை அல்லது அறியாத திரு அயோத்யையில் உள்ளார் அவருக்கு நன்மையை எண்ணி
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண் யஸ்ய சாயம் ப்ராதா சமாஹிதா -சர்வான் தேவான் நமஸயந்தி-ராமச்யார்த்தே யசஸ் விந -அயோத்யா -2-52–என்று
தேவதைகள் காலிலே விழுந்தார்கள் இறே
இவ்வஸ்துவை தன்னை -பாவோ நான்யத்ர கச்சதி பர தசையிலும் வேண்டேன் என்ற திருவடி-
நமோஸ்ஸ்து வாஸஸ் பதயே -சுந்த -32-14-என்றான் இ றே
கீழ் நாம் செய்து நின்ற நிலை இது -தவிர்ந்தது இது -என்று அறியாதபடி கலங்கினார் உடைய வியாபாரம் இருக்கும் படி இறே இது-
யயௌ ச காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-19–என்கிற
பிரேமத்தால் வந்த மருட்சி படுத்துகிற பாடு இறே இது —
ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் -ஸ்ரீ கீதை -14-7-என்கிறபடியே
சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள் ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என்-என்னில் –
அநபாயிநியான பிராட்டி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் – பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
-சர்வான் தேவான் நமஸயந்தி -என்று -எல்லா தேவதைகள் காலில் விழுந்தால் போலேயும்-
இவளுடைய திருத் தமப்பனாரான நம்மாழ்வார் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -உபதேசரத்ன மாலை -24–அபிமான புத்ரி தானே –
தெய்வங்காள் -என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய் மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தைவந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே -5-4-8- என்று
தேவதைகளை முன்னிட்டால் போலேயும் -இவளும் அயர்த்துக் கலங்கின படி –
இப்படிப் பட்ட கலக்கத்தாலே பிரிந்தாரைக் கூட்டும் என்னும் இதுவே கொண்டு காம சமாஸ்ரயணம் பண்ணுகிறாள்-
தன்  உடலை அழிய மாறி நின்று இறே இவன் தான் பிரிந்தாரைச் சேர்ப்பது-
இது தான் இவளுடைய ப்ராப்ய த்வரை இருக்கிற படி –
அதாவது பெரியாழ்வார் ப்ராப்ய ருசியாலே ஒரு கருமுகை மொட்டாகிலும் வட பெரும் கோயில் உடையானுடைய திருக் குழலிலே
வெடிக்க வேணும் என்று கருமுகையை ஸூஸ்ருஷையா நிற்பர் –
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு -1-3-இவளுடைய பிராப்ய த்வரை இருக்கும் படி –
காமன் காலிலே ஒரு மத்த மலராகிலும் முருக்கம் மொட்டாகிலும் வெடிக்க வேணும் என்று மத மத்தம் முருக்கு இவற்றை ஸூஸ்ரூஷியா நிற்கும் –
கடகர் உகந்ததே தேடி இட வேணும் இறே

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: